Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சிலகேள்விகள்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசியகூட்டமைபிடம் சில கேள்விகள்!!!!!!

JULY 25, 2015 4:42 PM

imageதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சிலகேள்விகள்!!!
Kailayapillai jeyakanthan

1.தமிழ்மக்களிற்கு எதிராக சிங்களவர்களால் கடந்த 60 ஆண்டுகாலத்திற்கு மேலாக நடத்தப்பட்டு வருவது இனச்சுத்திகரிப்பு என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?முன்பு ஒருபேட்டியில் அதை நிரூபிப்பது கடினம் என்று(சுமத்திரன்) கூறியிருந்தீர்கள்.இப்பொழுதும் அந்தநிலைப்பாட்டில்தான் இருக்கிறீர்களா?
2.ஒற்றையாட்சியின் கீழ் முழுமையான சுயநிர்ணயஉரிமை சாத்தியமா? உதாரணம் தர முடியுமா?(கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணயஉரிமை என்ற சொல் கட்டாயம் வாக்குகளுக்காகஉள்நுழைக்கப்படும்).

3.ஒன்று பட்ட ஐக்கிய இலங்கை என்பதற்கும்ஒற்றையாட்சி என்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம்என்ன?

4.தமிழரும் சிங்களவரும் இலங்கைத்தீவில் ஒற்றுமயாகவாழ முடியுமா?. வாழ முடியுமாயின் எந்தப் பட்டறிவில்இதனைச் சொல்கிறீர்கள்?

5. உங்களால் தயாரிக்கப்படும் தேர்தல் விஞ்ஞாபனம்உண்மையிலேயே திறந்த மனத்துடன் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உழைப்பீர்கள் என்றநம்பிக்கையில் உருவாக்கப்பட்டதா?அல்லது தேர்தலில்வாக்குகளைப் பெறும் தந்திரத்திற்காகஉருவாக்கப்பட்டதா?

6.கூட்டமைப்பு ஒரு கட்சியில்லை அதற்கான யாப்பும்இல்லை. அப்படி இருக்கையில் நீங்கள் ஏன் அந்தப்பெயரில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.தமிழரசுக்கட்சியிலேயே ஏனைய கட்சிகளை கூட்டணியாகச்சேர்த்துக் கொண்டு போட்டியிடலாமே?

7.1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனித்தமிழீழத்திற்கானஒப்புதலை தமிழ்மக்களிடமிருந்து பெற்ற நீங்கள்அவர்களின் அனுமதியில்லாது மாற்ற முடியாது. ஆகவே தமிழீழம் சாத்தியமில்லை.ஒன்று பட்ட ஐக்கியஇலங்கைக்குள் தீர்வு கிடைத்தால் போதும் என்று தேர்தல் விஞ்ஞhபனத்தில் குறிப்பிட்டு மக்களின்ஆணையை ஏன் பெற முடியாது?

8.நீங்கள் சுதந்திரமாக இயங்க முடியாது வெளிஅழுத்தங்களுக்கு உட்பட்டு இருக்கிறீர்களா? குறிப்பாகஇந்தியாவின் அழுத்தங்களுக்கு உட்பட்டுஇருக்கிறீர்களா?அவ்வாறாயின் மக்கள் முன் ஏன் அதைச்சொல்லக் கூடாது?

9.தேர்தலின் பின் தேசிய அரசு அமையும் பட்சத்தில்அதில் இணைவீர்களா? அமைச்சர் பதவிகளைப்பெறுவீர்களா?

10.அண்மையில் இலண்டனில் நடந்த கூட்டம் மக்களின்உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகக்கூட்டப்பட்டது என்று கூறியிருக்கிறீர்கள். உங்களால்தீர்க்கப்பட்ட மக்களின் உடனடித் தீர்வுகள் பற்றியபட்டியல் ஒன்றைத் தர முடியுமா? குறைந்த பட்சம்ஒன்றையாவது குறிப்பிட முடியுமா?

11.மக்களின் உடனடித் தேவைகளைத் தீர்ப;பதற்குதனியாக இருப்பதிலும் பார்க்க அரசுடன் சேர்ந்துஅமைச்சுப் பதவிகளைப் பெற்றால் விரைவாகவும்கூடுதலாகவும் மக்களுக்குப் பணியாற்ற முடியும் என்றுதேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டு மக்களின்ஆணையை ஏன் பெற முடியாது?

12. 47 வருடங்களாக தந்தை செல்வா உட்பட அனைத்துதமிழ் தலைவர்களாலும் புறக்கணிக்கப்பட்டசிறிலங்காசுதந்திர தினத்தில் பங்கு கொண்டதன் மூலமும். சிங்கக்கொடியைத் தூக்கிப் பிடித்ததன் மூலமும் நீங்கள்மக்களுக்குச் சொல்லும் செய்தி என்ன? நீங்கள் ஏன்டக்ளஸ் தேவானந்தாவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை? அல்லது டக்ளஸ் உங்களைச் சேர்க்கவிரும்ப வில்லையாயின் நீங்கள் ஏன் சிங்களக் கட்சிஒன்றுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடக் கூடாது.?

13. டக்ளஸ் தேவானந்தாவின் அரசியலுக்கும் நீங்கள்தற்போது செய்யும் அரசியலுக்கும் கட்சிப் பெயரைத்தவிர குறைந்த பட்ச வித்தியாசங்களைச் சொல்லமுடியுமா?

14. முன்னாள் போராளிகள் தேர்தலில் நின்றுபோட்டியிட்டுத் தோற்றால் அது புலிகளை மக்கள்விரும்பவில்லை வெறுத்து விட்டார்கள் என்று சிங்களஅரசு சர்வதேசத்திற்கு புலிகளைப் பற்றி தவறாககூறுவார்களே என்று கழிவிரக்கப்படும் நீங்கள் ஏன்முன்னாள் போராளிகளுக்கு கூட்டமைப்பில் இடங்கொடுத்து வெற்றி பெற்று சர்வதேசத்துக்கு மக்கள் இன்னும் புலிகளை நேசிக்கிறார்கள் என்று சொல்லவிரும்பவில்லை.

15.புலிகள் இரக்கற்ற கொடிய பயங்கரவாதிகள்அவர்களின் எச்ச சொச்சங்களுக்கும் எங்களுக்கும்தொடர்பில்லை என்று அறிக்கை விட்ட நீங்கள்அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ற பெயரை மட்டும் ஏன் கைவிடமறுக்கிறீர்கள்?

16.அடுத்த வருடத்திற்குள் தீர்வு என்று எந்தநம்பிக்கையில் கூறுகிறீர்கள்? தீர்வு கிடைக்காதபட்சத்தில் 17.08.2016 ஆம் ஆண்டு அனைத்துகூட்டமைப்பு உறுப்பினர்களும் பதவி துறப்பீர்கள் என்றுதேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட முடியுமா?

18.மகிந்த 2 தடவைக்கு மேல் அதிபர் தேர்தலில்போட்டியிடுவது தவறு என்று விமர்சித்த நீங்கள் எத்தனைதடவைகள் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டுள்ளீர்கள்.இன்னும் எத்தனை தடவைகள் போட்டியிட உத்தேசித்துள்ளீர்கள்?

19. இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேட்பாளர்தெரிவில் அதிக இடம் ஏன் ஒதுக்கப் படவில்லை.?

20.நீண்ட காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து ஈபிடிபியின் ஆட்சிக்குள் இருந்தும் கடந்தமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு துணிந்துவாக்களித்த தீவக மக்களிற்கான ஒரு வேட்பாளரைத்தெரிவு செய்யாமல் புறக்கணித்த அதேவேளைவடமராட்சியில் 3 வேட்பாளர்களைத் தெரிவு செய்ததன்நோக்கம் என்ன?(அதில் 2 மக்களுக்கு அறிமுகமற்றவேட்பாளர்களைத் தெரிவு செய்ததன் மூலம்கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் மக்கள் வேறு தெரிவின்றிசுமத்திரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றதூரநோக்கில் செய்யப்பட்டதா? அல்லது தீவகத்தில்தகுதியான வேட்பாளர்கள் உங்கள் கட்சியில்இல்லையா?

21ஒற்றுமை ஓற்றுமை என்று வரிக்கு வரி முழங்கி விடும்நீங்கள் கருணாவும்இடக்ளசும் உங்களுடன் இணையவந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?அவர்களும் தமிழர்கள்தானே.புலிகளுக்கு எதிரானவர்கள் எல்லாம்கூட்டமைப்புக்குள் உள் வாங்கிய நீங்கள் அவர்களைஉள்வாங்குவதில் என்ன பிழை?

22.வாக்குகள் பிரியக் கூடாது என்று கூறும் நீங்கள்எல்லோரையும் அரவணைத்துச் செல்லாமல் சிலரைத்திட்டமிட்டு வெளியேற்றியது ஏன்?

23.வடமாகாணசபை முதலமைச்சர் வெளிப்படுத்தும்மட்டும் அரசிடமிருந்து நீங்கள் நிதி பெற்ற விடயத்தைஏன் பகிரங்கமாகச் சொல்லவில்லை. குட்டுவெளிப்பட்டதால் இறுதியில் ஒத்துக்கொண்டீர்கள். நீங்களே நிதியைப் பெற்றால் மாகாண சபை எதற்கு? அதற்கு அதிகாரம் இல்லை என்றாலும் இருக்கின்றஅதிகாரத்தையும் புடுங்குவதற்கு யார் உங்களுக்குஅனுமதி கொடுத்தது. முன்னைய காலங்களைப் போலமாகாண சபைத் தேர்தலைப் புறக்கணித்திருக்காலாமே?

24.ஜெனிவாவில் அமெரிக்காவால் சிறிலங்கா அரசுக்குஎதிராகக் கொண்டு வரப்பட்ட முதலாவது தீர்மானத்தின்பொழுது ஜெனிவாவுக்கே போகாத நீங்கள் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினர் ஜெனிவாத் தீர்மானத்தைஎதிர்த்தவர்கள் இப்போது போர்க் குற்ற விசாரணை பற்றிகருத்துக் கூற அருகதை அற்றவர்கள் என்று எப்படிக்கூறலாம். (அவர்கள் அது போர்க்குற்ற விசாரணை அல்லஇனப்படுகொலை எனத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றே எதிர்த்தார்கள் என்பது வேறு விடயம்.)

25.உங்களில் இருந்து பிரிந்து சென்ற தமிழ்த் தேசியமக்கள் முன்னணியினர் தங்கள் தேர்தல்விஞ்ஞாபனத்தின் பிரதான கருப்பொருளாக ஒரு நாடுஇரு தேசம் என்ற தெளிவான கொள்கையைவகுத்துள்ளார்கள். உங்கள் தெளிவான இலக்கு என்ன? 13 பிளஸ?பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கை?ஒற்றையாட்சிக்குள் இணக்க அரசியல்?திம்புக்கோட்பாட்டை மையமாக வைத்தே தீர்வுக்கானபொறிமுறை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றமுதலமைச்சரின் கருத்து கருத்திற்கெடுக்கப்படுமா?

26.சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலின் போது எது விதநிபந்தனைகளுமின்றி மைத்திரியை ஆதரித்த நீங்கள் கரையைக் கடக்கு முன் கப்பலைக் கவிழ்க்காதீர்கள்என்று கேட்டுக் கொண்டீர்கள் ஆனால் இப்பொழுதுமைத்திரியே தமிழ் மக்களால் கடலில் தள்ளி விடப்பட்டமகிந்தவுக்கு கை கொடுத்து படகில் ஏற்றி விட்டார். இப்போது சொல்லுங்கள் படகைக் கவிழ்க்க உதவியதுயார்?

26.மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தில்போர்க்குற்றவாளி சரத்பொன்சோகவுக்கு சகலஉரிமைகளையும் கொடுத்து கௌரவப்பட்டமும்வழங்கப்பட்டது.ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு நீதிகிடைத்து விட்டது. தமிழருக்கு என்ன கிடைத்தது?தமிழருக்கான நீதி எங்கே?

27.போர்க் குற்ற விசாரணை தொர்பான ஜெனிவாத்தீர்மானத்திற்கு தொடர்ந்து முட்டுக் கட்டை போட்ட இந்தியாவை தொடர்ந்தும் நம்புகிறீர்களா?அல்லதுதமிழக தொப்புள் கொடி உறவுகளுடன் சேர்ந்துவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கப்போகறீர்களா? அல்லது சிங்களம் தருவதை ஏற்றுக்கொண்டு வாழச் சொல்லப் போகிறீர்களா?

எழுத எழுத கேள்விகள் புதிது புதிதாக வந்து கொண்டேஇருக்கின்றன. முதலில் இந்தக் கேள்விகளுக்கு பதில்சொல்லுங்கள். உங்கள் பதிலை அறிந்து தமிழ்மக்கள்வாக்களிக்கப் போவது வீட்டுக்கா?அல்லதுசைக்கிளுக்கா எனத் தீர்மானிக்கட்டும்

பிரித்தானியாவிலிருந்து
Kailayapillai jeyakanthan

http://yarljothy.com/?p=1137

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.