Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: விளாசித்தள்ளிய சசி தரூர் உரை

Featured Replies

பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: விளாசித்தள்ளிய சசி தரூர் உரை

shashi_2486946f.jpg

எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சசி தரூர். 189 ஆண்டு பாரம்பரியம் மிக்க 'ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி'யில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆற்றிய உரைதான் இணைய உலகில் இந்த வாரத்தின் வைரல். பிரிட்டனால் காலனியாதிக்க நாடுகள் பலன் பெற்றனவா, சுரண்டப்பட்டனவா எனும் விவாதப் பொருளில் நடந்த விவாதம் அது. காலனியாதிக்கத்தால் பிரிட்டன் எவ்வளவு சுரண்டியது என்று பேச ஆரம்பித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தன்னுடைய 15 நிமிஷ உரையில், அன்றைய இந்தியாவை அப்படியே கண் முன் கொண்டுவந்த நிறுத்தியதோடு, பிரிட்டனின் சுரண்டல்களையும் அம்பலப்படுத்தினார்.

இணையத்தில் லட்சக்கணக்கானோரால், பார்க்கப்பட்ட / கேட்கப்பட்ட / பேசப்பட்ட சரி தரூரின் உரை இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி வெளிப்படையாக சசி தரூரைப் பாராட்டினார்.

உலகின் 10-ல் 9 பங்கு நிலப்பரப்பை ஆக்ரமித்திருந்த மேற்கத்திய காலனியாதிக்க அராஜகங்களை இன்று நினைவுகூர்வது வெறும் வரலாற்றுப் பக்கங்களை புரட்டி பார்க்கும் நிகழ்வு மட்டும் அல்ல. ஒருவகையில், காலனியாதிக்கம் மீதம் விட்டுச்சென்றுள்ள ஆதிக்க மனோபாவங்கள், அரசியல் திட்டங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை ஆய்வுக்குள்ளாக்குவதோடு தொடர்புடையது.

சசி தரூர் உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான பகுதிகள் இவை:

* "எனக்கு 8 நிமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 பேச்சாளர்களில் நான் 7-வதாக உரையாற்ற வந்துள்ளேன். ஏற்கெனவே மிக நீண்ட மாலைப்பொழுதாக உங்களுக்கு அமைந்துள்ள நிலையில், நான் 8-ம் ஹென்றியின் கடைசி மனைவியாக என்னை உணர்கிறேன். எதிர்த் தரப்பினர் காலனியாதிக்கத்தினால் நாடுகளின் பொருளாதாரம் சிறப்படைந்தது என்று முன்வைத்த கருத்தைக் கேள்விக்குட்படுத்த விரும்புகிறேன்.

* காலனியாதிக்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரச் சூழ்நிலைகள் மோசமடைந்தன என்பதே உண்மை. பிரிட்டன் ஆதிக்கவாதிகள் இந்தியாவுக்குள் நுழையும்போது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 23%. பிரிட்டன் நாட்டைவிட்டு வெளியேறியபோது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 4%. இதைவிடச் சான்று வேண்டுமா?

* பிரிட்டனின் 200 ஆண்டு கால காலனியாதிக்கம் அவர்களது வளர்ச்சியை முன்னிறுத்தியே தொடர்ந்தது. பிரிட்டனின் வளர்ச்சியாக விதந்தோதப்படும் தொழிற்புரட்சி, இந்தியத் தொழில் துறையை அழித்ததன் மூலமே உருவானது.

* இந்தியாவின் பருத்தி உற்பத்தி நசுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு பிரிட்டன் பொருளாதாரம் வளர்ந்தது. கச்சாப் பொருட்களை இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்து பிரிட்டன் கொண்டுசென்று உற்பத்திசெய்து, ஆடைகளாக அவற்றை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவந்து விற்றது பிரிட்டன். இதன் மூலம் இந்தியாவைத் தன் சந்தையாக்கியது. இந்திய நெசவாளர்கள் பிச்சைக்காரர்களாக மாறினர், உலகத் தரம் வாய்ந்த பருத்தி ஆடைகளின் ஏற்றுமதியாளராகக் கோலோச்சிய இந்தியா, இறக்குமதி நாடானது. உலக பருத்தி ஏற்றுமதியில் 27% பங்களிப்பு செய்த இந்தியாவின் ஏற்றுமதி 2% ஆகக் குறைந்தது.

* ராபர்ட் கிளைவ் இந்தியிலுள்ள 'லூட்' (கொள்ளை) எனும் சொல்லை ஆங்கில அகராதிக்கு அளித்தார். கூடவே கொள்ளையிடும் பழக்கத்தையும் பிரிட்டனுக்கு அளித்தார். அவரை 'கிளைவ் ஆஃப் இந்தியா' என்று பிரிட்டன் வர்ணித்தது, ஆனால், நாடே கிளைவின் கொடூர வலைப் பின்னல்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டது.

* 19-ம் நூற்றாண்டின் முடிவில் இந்தியா, பிரிட்டனின் மிகப் பெரிய கறவை மாடானது, பிரிட்டன் பொருட்களின் நுகர்வுச் சந்தையாக மாற்றப்பட்டது.

* பிரிட்டிஷ் அரசு ஊழியர்களுக்கு நாம் பெரிய அளவில் சம்பளம் கொடுத்தோம், எங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த நாங்களே கொடுத்துக்கொண்ட சம்பளம் அது.

* இந்த விவாத அரங்கில், ஏற்கெனவே குறிப்பிடப் பட்டதுபோல, செல்வ வளம் கொழித்த விக்டோரிய இங்கிலாந்தின் செல்வந்தர்கள், அடிமைப் பொருளாதாரத்தின் மூலமே தங்களது செல்வங்களை ஈட்டியுள்ளனர். அடிமைப் பொருளாதாரம் மூலம் ஐந்தில் ஒரு பங்கு இங்கிலாந்து மக்கள் பணக்காரர்களானார்கள்.

* 1833-ல் அடிமை முறை ஒழிக்கப்பட்டபோது இழப்பீடாக 20 மில்லியன் பவுண்டுகள் தொகை அளிக்கப்பட்டது. யாருக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீடு தெரியுமா இது? அடிமைச் சுரண்டல்களால் உயிரிழந்தவர்களுக்கோ, அடக்குமுறை துன்பம் அனுபவித்தவர்களுக்கோ அல்ல; அடிமை முறை ஒழிப்பினால் சொத்துகளை இழந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீடு இது.

* இந்த யூனியனின் வைஃபை கடவுச்சொல் கிளாட்ஸ்டோன் என்ற 'லிபரல் ஹீரோ'வாகக் கருதப்பட்டவரின் நினைவைக் கொண்டாடுவதற்காக வைக்கப்பட்டதாக அறிந்ததைக் கண்டு திகைத்தேன். காரணம் மேற்கூறிய 20 மில்லியன் பவுண்டுகள் இழப்பீட்டுத் தொகையால் பலன் அடைந்த குடும்பங்களில் அவருடையதும் ஒன்று.

* பிரிட்டிஷ் ஆட்சிக் காலப் பெரும் பஞ்சத்துக்கு 1.5 கோடி முதல் 2.9 கோடி மக்கள் மடிந்தனர். வங்காள வறட்சிக்கு மட்டும் 40 லட்சம் மடிந்தனர். காரணம், வின்ஸ்டன் சர்ச்சிலின் கொடூரமான கொள்கைகள். இரண்டாம் உலகப் போரின்போது அத்தியாவசியப் பொருட்கள் பிரிட்டன் ராணுவத்துக்காகப் பதுக்கப்பட்டன. இதற்கான உத்தரவைப் பிறப்பித்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். மக்கள் இந்தியாவில் உணவின்றிச் செத்து மடிகின்றனர் என்று ஓரளவு ஈரமுள்ள பிரிட்டன் அதிகாரிகள் சர்ச்சிலுக்கு எழுதினார்கள். அந்தக் கோப்பின் விளிம்பில் சர்ச்சில் எழுதினார்: "ஏன் காந்தி இன்னும் சாகவில்லை?"

* காலனியாதிக்க அனுபவம் மூலம் பெறப்பட்டதெல்லாம் வன்முறையும் நிறவெறியும் மட்டுமே. இதுதான் காலனியாதிக்க இயந்திரத்தின் நடைமுறை. பிரிட்டன் பேரரசில் சூரியன் அஸ்தமிக்கவில்லை என்று கூறப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, காரணம், கடவுள்கூட ஆங்கிலேயர்களை இருட்டில் நம்பத் தயாராக இல்லை.

* இங்கு எனக்கு முன்னால் பேசிய எதிர்த் தரப்பாளர் அடக்குமுறையையும், இழப்பையும் எண்ணிக்கைக்குள் கொண்டுவர முடியாது என்றார். பல உதாரணங்களில் ஒன்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.. இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் படையில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். 54,000 இந்தியர்கள் போரில் பலியாகியுள்ளனர். 65,000 பேர் காயமடைந்தனர். 4000 பேர் கதி என்னவென்று தெரியவில்லை; இவர்கள் சிறையில் இருந்திருக்கலாம்.

* இரண்டாம் உலகப் போருக்காக இந்திய வரிசெலுத்துவோர் அன்றைய மதிப்பின்படி 100 மில்லியன் பவுண்டுகளை இழந்தனர். இந்தியா 70 மில்லியன் ஆயுதங்களை வழங்கியது. 600,000 துப்பாக்கிகள், மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் 42 மில்லியன் ஆடைகள் இந்தியாவிலிருந்து சென்றன. 13 லட்சம் இந்தியர்கள் இந்தப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இதோடு 173,000 விலங்குகள், 370 மில்லியன் டன்கள் பொருட்கள் அனுப்பப்பட்டன.

* இந்தியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்ட நிலையில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட பொருட்களின் மதிப்பு இன்றைய மதிப்பின்படி 8 பில்லியன் பவுண்டுகள்.

* ஸ்காட்லாந்தை வறுமையிலிருந்து மீட்க இந்தியாவில் செய்த சுரண்டல்களே உதவின.

* காலனி ஆதிக்க நாடுகளில் பிரிட்டன் அரசு ரயில் பாதைகளையும் சாலைகளை அமைத்ததைப் பற்றிப் பிரமாதமாகப் பேசுகிறார்கள். பிரிட்டனின் தொழில் துறைத் தேவைகளுக்காக, கொள்ளைக்காகக் கொண்டுவரப்பட்டவைதான் ரயில்வேயும், சாலைகளுமே தவிர, உள்ளூர் மக்களின் பயன்பாடுகளுக்காக அல்ல. கச்சாப் பொருட்களை உள்ளூரிலிருந்து துறைமுகத்துக் கொண்டுசெல்ல வேண்டும். அதற்காகவே போக்குவரத்து பெரிதும் பயன்பட்டது.

* இந்தியாவில் ரயில்வேயை உருவாக்க பிரிட்டன் முதலீட்டாளர்களை அழைத்தபோது, இந்தியாவிலிருந்து கிடைக்கும் பெரிய தொகையை, அதாவது இந்திய வரிப்பணம் என்ற ஆசையையும், உத்தரவாதத்தையும் அளித்தது. இதனால் ஒரு மைல் தூர பால வேலைகள் நடக்க இரு மடங்கு செலவானது. அதாவது கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இந்தத் தொலைவுக்கு ஆகும் செலவைவிட இரு மடங்கானது. இந்தியப் பொதுமக்களைத் துன்பத்தில் ஆழ்த்தி, பிரிட்டன் தனியார் துறைகள் ரயில்வே, சாலைகள் திட்டம் மூலம் கொழுத்து வளர்ந்தன.

* ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்றெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிபற்றிப் பேசப்படுகிறது. சித்ரவதைகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், வன்முறைகள்… இப்படி 200 ஆண்டு காலம் ஓட்டிவிட்டு எல்லாம் முடிந்ததும் 'ஜனநாயகம்' பற்றி எப்படிப் பேச முடிகிறது என்று தெரியவில்லை. எங்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டது. அதை நாங்கள் உங்களிடமிருந்து பறிக்கப் போராட வேண்டியதாக இருந்தது.

* இவற்றையெல்லாம் மீறி பிரிட்டன், இந்தியாவுக்கு நிதியுதவி அளித்தது என்று பேசப்படுகிறது. ஆம் உதவி அளிக்கப்பட்டது. எவ்வளவு அளிக்கப்பட்டது? அந்த உதவியை எங்கள் உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் ஒப்பிட்டால், வெறும் 0.4%. நாங்கள் உரங்களுக்குக் கொடுக்கும் மானியம் மட்டும் இதைவிடப் பல மடங்கு அதிகமானது.

* இதற்கெல்லாம் பிரிட்டன் கடன்பட்டிருக்கிறது என்றும் அதற்கான நிதி இழப்பீடு எவ்வளவு என்றெல்லாம் இந்த விவாதத்தில் பேசப்பட்டது. ஆனால், காலனியாதிக்க காலத்தில் எம் மக்கள் அனுபவித்த பயங்கரங்களுக்கு எந்தத் தொகை ஈடாகும்? வீட்டுக்குள் நுழையும் கொள்ளைக்காரர் வீட்டைச் சூறையாடிவிட்டுச் செல்கிறார் என்றால் இருதரப்பிலும் 'தியாகங்கள்' இருக்கின்றன என்ற வாதம் அறரீதியாக சரியானதாக இருக்க முடியுமா?

* பிரிட்டன் கடன்பட்டிருக்கிறது என்பதைக் கொள்கை ரீதியாக ஒப்புக்கொள்ள ஒரு 'மன்னிப்பு' போதும். அதை விடுத்து நிதியுதவி, இழப்பீடு என்ற வாதங்களை ஏற்க முடியாது. ஆனால் 'நாம் கடன்பட்டிருக்கிறோம்' என்ற குற்ற உணர்வு வேண்டும்!"

தொகுப்பும் மொழியாக்கமும்ஆர்.முத்துக்குமார்

http://tamil.thehindu.com/opinion/columns/பிரிட்டனுக்கு-வேண்டும்-குற்றவுணர்வு-விளாசித்தள்ளிய-சசி-தரூர்-உரை/article7466772.ece?homepage=true&theme=true

 

நமக்கு கடன்பட்ட 'கொள்ளை' பிரிட்டன்: நெட்டிசன்களை நிமிரவைத்த சசி தரூரின் தெறிப்புப் பேச்சு

http://www.yarl.com/forum3/topic/160717-நமக்கு-கடன்பட்ட-கொள்ளை-பிரிட்டன்-நெட்டிசன்களை-நிமிரவைத்த-சசி-தரூரின்-தெறிப்புப்-பேச்சு/

 

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் நியாயப் பிளப்பில் முதல் ஓட்டை: பிரிட்டிஷ் காரர் வந்த போது இந்தியாவின் பொருளாதாரம் பங்களிப்பு 23%. இது எப்படி சரியாகும்?

இந்தியா என்ற நாடே உருவானது பிரிட்டிஷ் காரரால். அதற்கு முன்னர் பல ராஜிஜங்களாக பிரிந்தே இருந்தது. அதை ஒவ்வொன்றாக விழுத்தி வென்று ஒன்று சேர்ந்த நாடாக இந்தியாவினை உருவாகினார்கள். கட்ட பொம்மன், திப்பு, மொகலாயர்கள்... சமஸ்தானங்கள்....( நம்ம இம்சை அரசர் 23ம் புலிகேசி :grin:) என எத்தனையோ

எனவே இந்த 23% கணக்கு எப்படி வந்தது?

இன்றைய இந்தியாவின், பொருளாதாரத்தின் அடித்தளமே, ஆங்கில மொழிதான். :(

Edited by Nathamuni

இவரின் நியாயப் பிளப்பில் முதல் ஓட்டை: பிரிட்டிஷ் காரர் வந்த போது இந்தியாவின் பொருளாதாரம் பங்களிப்பு 23%. இது எப்படி சரியாகும்?

இந்தியா என்ற நாடே உருவானது பிரிட்டிஷ் காரரால். அதற்கு முன்னர் பல ராஜிஜங்களாக பிரிந்தே இருந்தது. அதை ஒவ்வொன்றாக விழுத்தி வென்று ஒன்று சேர்ந்த நாடாக இந்தியாவினை உருவாகினார்கள்.

எனவே இந்த 23% கணக்கு எப்படி வந்தது?

இன்றைய இந்தியாவின், பொருளாதாரத்தின் அடித்தளமே, ஆங்கில மொழிதான். :(

பாஸ் நீங்க எ.................       .................ள்

அப்படியிருந்தால் பிரிட்டிஷ் காரர் ஒரு மறுப்பு அறிக்கைய விடலாம் தானே

சசிதருருக்கு இந்தியபிரதமரே வாழ்த்து தெரிவித்துள்ளராம்

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ் நீங்க எ.................       .................ள்

 

இந்திய உப கண்டத்தின் பொருளாதாரம் அனைத்துமே, உள்ளூர் போர்களினால் நாசமாகின. பிரிட்டிஷ்காரர், சண்டைகள் இல்லா உறுதியான நிலைப் பாடுள்ள ஒரு நாடாக உருவாக்கியதால் தான் இன்று உலகின் முன்னணி பொருளாதாரமாக உயர்ந்து செல்கிறது. 

அமெரிக்காவின் 50 மாநிலங்களும் ஒன்றிணைந்த படியால் தான், ஸ்பானிய, பிரெஞ்சு, டச்சு ஆதிக்கம் இல்லா, ஆங்கில ஆதிக்கம் கொண்டதாக, இன்று உலகின் பொருளாதார, ராணுவ பலமிக்க நாடாக உள்ளது. 

பிரிட்டிஷ் காரர் இந்த 'பாக்கிகளின்', அலம்பரைகள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை.

ஒன்றுக்கு மறுத்தான் கொடுத்தால், கடைசீல, நம்ம லோக்கல், கப்டன் விஜயகாந்த் அறிக்கைக்கு கூட மறுத்தான் கொடுக்க வேண்டி வருமே.

இந்திய பிரதமர் குஜராத்தியர், தரூர் கேரளாக்காரர். இருவரையுமே இந்தியராகியது, பிரத்தானியா தானே. மிக முக்கியமாக, பிரிடிஷ்காரர் வாரவிடில், இந்தியா, மொகாலயர்களினால் முஸ்லிம் நாடாக மாறி இருந்திருக்கும் என்பது பல அறிவார்ந்த இந்தியர்களின் கருத்து. 

சசி தரூருக்கு, அங்கே மனைவி சுனந்தா கொலை தொடரில் சட்டத்தின் கைகள் நெருங்குகின்றது. அதற்காக இவர் இந்த விளையாட்டுக் காட்டி, பிரதமரிடம் நல்ல பெயர் வாங்கி விட்டார்.

Edited by Nathamuni

 

இந்திய உப கண்டத்தின் பொருளாதாரம் அனைத்துமே, உள்ளூர் போர்களினால் நாசமாகின. பிரிட்டிஷ்காரர், சண்டைகள் இல்லா உறுதியான நிலைப் பாடுள்ள ஒரு நாடாக உருவாக்கியதால் தான் இன்று உலகின் முன்னணி பொருளாதாரமாக உயர்ந்து செல்கிறது. 

அமெரிக்காவின் 50 மாநிலங்களும் ஒன்றிணைந்த படியால் தான், ஸ்பானிய, பிரெஞ்சு, டச்சு ஆதிக்கம் இல்லா, ஆங்கில ஆதிக்கம் கொண்டதாக, இன்று உலகின் பொருளாதார, ராணுவ பலமிக்க நாடாக உள்ளது. 

உண்மை தான்...

அதை விட உண்மை என்னவெனில்...எல்லாரையும் சீனா போட்டுதள்ளும் என்பது தான்

ராஜீவ் கொலையால் இந்தியா விடுதலைப்புலிகளை அளித்ததாக வெளிவேஷம் போட்டாலும், மகிந்த சீனாவுக்கு யானையை கொடுத்து தொடங்கிய உறவுதான் காரணம்

அது ஒருபுறமிருக்க,

இராமர் தொடங்கி கடாளம் வென்ற சோழன் வரை அத்தனைபேரும் இந்தியாவிற்கு ஒன்றும் சேர்த்து வைக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

சீனா?

ம்.ம்ம்ம் 

இந்தியா, சீனாவின் பொருளாதார பலத்தினை அதிகரிக்க வைத்ததே மேற்குலகு. மறுபுறம், அவர்களை தமது பொருள்களை வாங்க வைப்பதே நோக்கம். (Increasing their purchasing power to make them to by goods from them )

இந்திய வான்வெளியில் உள்ளூர் சேவையில் பறக்கும் அமெரிக்க, ஐரோப்பிய விமானங்களைப் பாருங்கள்.

இந்திய படங்களைக் திரையிட இங்கே அனுமதி கொடுக்கின்றனர். பதிலுக்கு விஜயும், சிம்புவும், தயாரிப்பாளர் சங்கரும், தனுசும் ஓடும் கார்களைப் பாருங்கள். 

ஆகவே சீனாவின், மேற்குலகு தங்கிய பொருளாதாரம், ஆட்டம் காணவைக்கும் சக்தி, யார் கையில் இருக்கிறது? 

  

Edited by Nathamuni

சீனா?

ம்.ம்ம்ம் 

இந்தியா, சீனாவின் பொருளாதார பலத்தினை அதிகரிக்க வைத்ததே மேற்குலகு. மறுபுறம், அவர்களை தமது பொருள்களை வாங்க வைப்பதே நோக்கம். (Increasing their purchasing power to make them to by goods from them )

இந்திய வான்வெளியில் உள்ளூர் சேவையில் பறக்கும் அமெரிக்க, ஐரோப்பிய விமானங்களைப் பாருங்கள்.

இந்திய படங்களைக் திரையிட இங்கே அனுமதி கொடுக்கின்றனர். பதிலுக்கு விஜயும், சிம்புவும், தயாரிப்பாளர் சங்கரும், தனுசும் ஓடும் கார்களைப் பாருங்கள். 

ஆகவே சீனாவின், மேற்குலகு தங்கிய பொருளாதாரம், ஆட்டம் காணவைக்கும் சக்தி, யார் கையில் இருக்கிறது? 

  

அண்ணை அப்பவென்னத்திட்கு சீனாக்காரன் கொங்கொங்கை குடுத்து அமத்தினவன் தெரியுமோ?

அது இருக்கட்டும்...அமேரிக்காவில Lenova லப்டப்பே சீனா மேக்...அதில என்னபெரிய விற்பனை கிடக்கு?

TATAவுக்கு என்ன நடந்தது?

அண்ணை காலம் மாறிக்கொண்டு வருகுது...உங்கட பிள்ளையள் திருப்பி எங்கடை ஏரியாவிற்குள் மைக்ரேட் பண்ணவேண்டி வந்தாலும் வரும்.....

அப்படி வந்தால் கொத்து குடுத்து வரவேற்க Surveyor இருப்பார்...lol

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.