Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயகப் போராளிகள் கட்சி மாற்று அரசியல் சிந்தனையைச் சிதைக்கும் நோக்கம் கொண்டது! – குணா கவியழகன்

Featured Replies

kaviyalahan

இலங்கையில் இடம்பெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து, முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஜனநாயகப் போராளிகள் கட்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும், கட்சி, ஈழத்தமிழ் அரசியல் தளத்தில் மாற்று அரசியல் தலைமைத்துவத்தைச் சிதைக்கும் உள்நோக்கம் கொண்டதென எழுத்தாளர் குணா கவியழகன் பொங்குதமிழ்.கொம் இணையத் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மே 2009 வரை தாயகத்தில் வசித்துவந்த திரு.குணா கவியழகன் தற்போது புலம்பெயர் நாடொன்றில் வசித்துவருகின்றார். கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளிவந்த ‘நஞ்சுண்ட காடு’ நாவல் மூலம் தமிழ் இலக்கியப் பரப்பில் கவனிப்பிற்குரிய ஒரு எழுத்தாளராக அறியப்பட்டுள்ளார். அவருடைய ‘விடமேறிய கனவு எனும்’ 2வது நாவல் கடந்த ஜூன் மாதம் வெளியாகியுள்ளது.

தமிழர்களின் மாற்று அரசியல் தலைமைத்துவத்தை உடைப்பது, சிதைப்பது தான் முன்னாள் போராளிகளை முன்னிறுத்திய கட்சியின் நோக்கமே தவிர இது கூட்டமைப்புக்கு எதிரான ஒரு முன்னிறுத்தல் அல்ல எனவும் குணா கவியழகன் கூறியுள்ளார்.

இக்கட்சியின் உருவாக்கத்தின் பின்னணி, அதன் விளைவுகள் தொடர்பான கேள்விக்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

ஜனநாயகப் போராளிகள் என்று சொல்லப்படும்; கட்சியினுடைய உருவாக்கம் இத்தகைய ஒரு அரசியல் சதிவலையைக் கொண்டது. அது உண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிரானது. தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய மாற்று தலைமைத்துவத்தை சிதைக்கவல்லது. அதை நாங்கள் பிழையாக விளங்கக்கூடாது. இதில் தமிழ் மக்களுக்கு இன்று போதிய தெளிவுவேண்டும்.

அத்தோடு போராளிகளை ஜனநாயக ரீதியாக ஈடுபடுத்தி விட்டோமென்ற ஒரு ஜனநாயக மாயையையும் இலங்கை அரசாங்கம் கட்டமைத்துவிடும். அந்த மாயைக்குள் ஏதோ தமிழ் மக்களுக்கும் முற்றிலுமான ஒரு நடைமுறை சுதந்திரத்தை இப்போதைக்கு வழங்கிவிட்டதாக மாயை ஏற்படுவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது.

இதை எந்த அளவுக்கு மக்களும் ஏனைய சம தரப்பாக உள்ள கட்சிகளும் புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஜனநாயகப் போராளிகள் கட்சி என்று ஒன்றை நிறுத்தியது மிகப் பெரும் அரசியல் அயோக்கியத்தனம் என்று தான் நான் சொல்வேன். அதற்கான அடிப்படை காரணம் மிகவும் ஆழமானது. அதை இங்கு நான் சொல்லத்தான் விரும்புகின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் இன்றளவும் தமிழ் மக்களுடைய ஜனநாயகத் தலைமைத்துவமாக இருக்கின்றது. அவர்கள் ஒரு இயக்கமாக, அரசியல் அமைப்பாக இயங்கும் வரைக்கும் தலைமைத்துவமாக இருக்கலாம். ஆனால், அரசியல் அதிகாரம் என்று வந்துவிட்டால் அந்தத் தலைமைத்துவ காலத்துக்கு ஒரு அளவு உண்டு, ஒரு வரையறை உண்டு. மக்கள் மாற்றத்தை விரும்புவார்கள்.

உலகளாவிய ஜனநாயக அனுபவத்தை, அதாவது, மொத்த உலகமும் கொண்டிருக்கிற ஜனநாயக அனுபவத்தை நாங்கள் எடுத்து நோக்கினால்;, ஒரு அரசியல் அதிகாரத்திற்கு ஒரு கட்சி வருமாக இருந்தால் இரண்டு தேர்தல் முறையை விடவும் மேலதிகமாக மூன்றாவது தரம் அந்தக் கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஏது நிலைகள் தொண்ணூறு விகிதம் இல்லை. இது உலகளாவிய ஒருபடிப்பினை. மாகாண சபை என்பது ஒரு அரசியல் அதிகாரம். கூட்டமைப்பு இன்று அரசியல் அதிகாரத்திற்கு வந்துவிட்டது. மாகாண சபை அதிகாரம் இன்று கூட்டமைப்பினுடைய கையில் இருக்கிறது. எனவே, இந்த மாகாண சபையை இயக்குகின்ற பொழுது இரண்டுதேர்தல் முறைக்குப் பின்னான காலம் என்பது மிக மிக முக்கியமானது. அந்தக் கட்டத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புவார்கள்.

இன்று மாகாண சபை உருவாகி ஒரு கால எல்லை (Terms) முடிவதற்கு இடையிலேயே மக்களின் மனோநிலையில் அதிருப்தி உருவாகி விட்டது. ஆகவே, ஒரு காலத்திற்குப் பிறகு, அதாவது, இரண்டு தேர்தல் முறை காலம் என்பதற்குப் பிறகு மாற்றம் தவிர்க்கப்பட முடியாது. அப்படி வந்தால் மாற்று அரசியல் தலைமை யார்? அந்தக் கேள்வி இருக்குமானால், அதற்கான விடை தற்போதைய சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாகத்தான் இருக்க முடியும்.

அயல்நாடான இந்தியாவுக்கோ, அல்லது மேற்கு அணி நாடுகளுக்கோ நிச்சயமாகத் தெரியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற டக்ளஸ் தேவானந்தாவைத் தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்பு ஒருபோதும் தமிழ் மக்களுடைய தேசியத் தலைமைத்துவமாக உருவாக முடியாது. இது ஏற்கனவே அவர்கள் தங்களின் ஆய்வின் மூலம் தீர்மானித்துவிட்டார்கள அப்படியென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்று அரசியல் தலைமைத்துவமாக உருவாகக்கூடிய கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணி தான்.

அப்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த இடத்திற்கு வருமாக இருந்தால் அது சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆபத்தானது என்று அவர்கள் பார்க்கிறார்கள்.

அடுத்தது, இந்தியா இதை எப்படி நோக்குகின்றது என்பதாகும். இந்தியா தனக்கு கைக்கடக்கமான ஒரு அரசியல் தலைமைத்துவம் வடகிழக்கில் இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறது.

எனவே, தமிழ் தேசிய மக்கள் முன்னணி வந்தால் தனக்கு கைக்கடக்கமான ஒரு அரசியல் தலைமைத்துவமாக அவர்கள் இயங்கமாட்டார்கள் என்ற அச்சம் இந்தியாவினுடைய மனோபாவத்தில் உண்டு. எனவே, இவர்கள் அந்த மாற்று அரசியல்தலைமைத்துவமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உருவாகக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

எனவே, அந்த மாற்றை தாங்களே உருவாக்குகிறார்கள் என்று தான் ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’யின் உதயத்தினைப் பார்க்கவேண்டும். அதாவது, தீவிர தமிழ் தேசியம் கதைப்பவர்களாக தமிழ் தேசிய முன்னணி இருக்கும் பட்சத்தில், அதைவிட தீவிரமான ஒன்றை நாங்கள் நிறுத்துகிறோம். விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக இயங்கக்கூடியவர்கள் நாங்களே என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணி கதைத்துக்கொண்டு மக்களுடைய ஆதரவைப் பெற முடியுமென்றால், நாங்களே விடுதலைப்புலிகள் என்று சொல்லக்கூடிய முன்னாள் போராளிகளை நிறுத்திவிட்டால் அவர்களுடைய வாக்கைச் சிதைத்துவிட முடியும். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சிதைத்துவிட்டால் மாற்று அரசியலை சிதைத்துவிட முடியும். மாற்று அரசியலைச் சிதைத்துவிட்டால் இலங்கை அரசாங்கத்திற்கோ, அண்டை நாடான இந்தியாவிற்கோ ஒரு கையாளக்கூடிய ஒரு அரசியல் தான் அங்கே இருக்கும் என எழுத்தாளர் குணா கவியழகன் தெரிவித்துள்ளார்.

நன்றி : பொங்குதமிழ்.கொம்

http://tamilleader.com/?p=50455

  • கருத்துக்கள உறவுகள்

எங்க எங்கட கஜே கோஸ்டி வாலுகளை இன்னும் காணம்?:unsure:

மாற்றுப் போராளிகள் போட்டியிடுவது பற்றிய... கள நிலைமையை, நன்கு  ஆராய்ந்து எழுதப் பட்ட கட்டுரை.
மூத்த பத்திரிகையாளர், வித்தியாதரனுக்கு தேவையில்லாத வேலை.
இத் தேர்தலில் முன்னாள் போராளிகள், எவ்வளவு சத விகித வாக்குகளைப் பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான்... பார்க்க வேண்டும்.
தேர்தல் களத்தில், அவர்களுக்கு ஆதரவான அலையை... காண முடியவில்லை.
மக்கள் அவர்களை, நிராகரித்தால்..... விடுதலைப் புலிகளின் பெயருக்கும் இழுக்கு.
இதனை... வித்தியாதரன் செய்ய முனைந்தது தவறு.

அவர்கள் யார் என்பதை மக்களுக்கு காட்டவேண்டிய அவசியம் இருக்கின்றது, ஆகவே காலம் தாழ்த்தியிருக்கலாம். பாப்பா குழுவினர் கட்டுநாயக்கா எயார்போர்ட்டில் நின்று காட்டிய கூத்து, இன்னும் சில முன்னால் உருப்பினர்களின் கீழ்தரமானவேலைகள் மக்களுக்கு சந்தேகத்தை விளைவித்தாலும் இவர்களுக்கு மக்களின் ஆதரவு எப்படியிருக்கபோகுதென்பது 18ம் திகதிதான் தெரியும்.

என்னைப்பொறுத்தவரை ததேமமுவை விட இவர்களுக்கு போடலாம். வித்தியை நேர்மையான மனிதன் என்று கூறமாட்டேன். ஆனால் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் வண்ணம் அவரது நடவடிக்கைகள் இருக்க மாட்டாது என நினைக்குறேன்.

யாரை நம்புவது?????????????????

நம்ப நட நம்பி நடவாதே என்ற வாசகம் எனது தந்தையாரின் அச்சக வாசலில் இருந்தது. சிறுவயதில் என்னப்பா நம்ப நட நம்பி நடவாதே என்று கேட்டால், அப்பா உடனை இந்தியாக்காரனை தான் இழுப்பார். ஏன் நேற்றுக்கூட ஸ்கைப்பில் கேட்டேன் அப்பா உவங்கள் என்ன புதுபுது கட்சியை கொணர்ந்து விசர் வேலை பார்குறாங்கள் என்று.....அப்பா உடனை இந்தியாக்காரனை தான் திட்டினார். என்னைப்பொறுத்த வரை இந்தியாக்காரன் எங்களை உருப்பட விடமாட்டான்.

இதை விட எனது தந்தையாரில் எனக்கொரு மரியாதை அதிகம் வந்தது கடந்த ஜெனாதிபதி தேர்தலில்.... நான் கொழும்பில் தான் நின்றேன். சகோதரரின் மேற்படிப்புக்காக எனது குடும்பமும் கொழும்பில்தான் இருக்கின்றது. அப்ப அப்பாவிடம் கொஞ்சம் சீற்றத்துடன் கேட்டேன் ஏன் நீங்கள் எங்களது வோட்லிஸ்டை கொழும்புக்கு மாத்தவில்லை, மனிசருக்கு உதுக்காக அலையேலாது என்று.... அப்பா சொன்னார் எட பேயா உனக்கு என்ன தெரியும்....இப்படி எல்லாரும் மாத்தினால் யாழ்பாணத்தில் MPக்களின் எண்ணிக்கை குறைஞ்சிடும் தெரியுமோ????  எனக்கு பொக்கென்றுவிட்டது. என்ன பேந்து கொழும்புக்கு வோட்லிஸ்டை மாத்தலாமே என்று கேட்டவர்களுக்கு....எனது வீர விளையாட்டை காட்டினேன்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.