Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

இலங்கை மண்ணில் இந்தியா வென்றதில்லை

 
 

கிரிக்­கெட்டில் பல்­வேறு சாத­னைகள் படைத்­துள்ள இந்­திய அணி, இலங்கை மண்ணில் கடந்த 22 ஆண்­டு­க­ளாக டெஸ்ட் தொடரை வென்­ற­தில்லை என்ற கவலையை நீடித்­துக்­கொண்டே இருக்­கி­றது.

indian-test-cricket.jpg

தலை­சி­றந்த சுழற்­பந்து வீச்­சாளர் கும்ப்ளே, ஹர்­பஜன் சிங் உட்­பட பல்­வேறு சிறந்த பந்து வீச்­சா­ளர்­களை கொண்ட இந்­திய அணி தரவரிசையில் முத­லி­டத்தை எட்­டிப்­பி­டித்­துள்­ளது. வெளி­நா­டு­களில் தங்­க­ளு­டைய சுழற்­பந்து மற்றும் வேகப்­பந்து வீச்சால் அசத்­தி­யுள்ள இந்­திய அணி இலங்­கையில் மட்டும் ஜொலித்­த­தில்லை.

சுழற்­பந்து வீச்­சுக்கு சாத­க­மான இலங்­கையில் இந்­திய அணி 6 முறை சுற்­றுப்­ப­யணம் செய்­துள்­ளது. இதில் கடந்த 1993ஆ-ம் ஆண்டு மட்­டுமே டெஸ்ட் தொடரை வென்­றுள்­ளது. அதற்­குப்பின் டெஸ்ட் தொடரை வென்­ற­தில்லை.

இலங்கை அணியின் முத்­தையா முர­ளி­தரன், அதன்பின் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் இந்­திய அணியை நிலை­கு­லையச் செய்­தனர். 2008-ஆம் ஆண்டு சுற்­றுப்­ப­ய­ணத்தின் போது சேவாக் இரட்டை சதம் அடித்­தாலும், மறு­மு­னையில் உள்ள வீரர்­களை அஜந்த மெண்டிஸ் ஆட்டம் காண வைத்தார்.

தற்­போது இந்­திய அணி மூன்று சுழற்­பந்து வீச்­சா­ளர்­க­ளுடன் களம் இறங்க திட்­ட­மிட்­டுள்­ளது. கோலி 34 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டி­யி­ருந்­தாலும், இதுவரை இலங்கை மண்ணில் விளையாடியது கிடையாது. இது அவருக்கு பெரும் சவாலாக இருக்கும்.

http://www.virakesari.lk/articles/2015/08/04/இலங்கை-மண்ணில்-இந்தியா-வென்றதில்லை

  • Replies 77
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஏன் இந்திய அணிக்கு கடினம்? - புள்ளிவிவர அலசல்

 
படம்: ஏ.எப்.பி.
படம்: ஏ.எப்.பி.

இந்திய அணி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கை, இந்திய அணிகள் டெஸ்ட் மட்டத்தில் 2011-க்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரே நிலையில்தான் உள்ளது. இதில் சிறந்த டெஸ்ட் அணியாக பாகிஸ்தானே உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மே, 2011-க்குப் பிறகு இந்தியா, இலங்கை இரண்டு அணிகளுமே 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளன. இதில் இந்தியா 13-ல் வென்று 17-ல் தோல்வி கண்டுள்ளது. இலங்கை அணி 11-ல் வென்று 16-ல் தோல்வி தழுவியது.

ஆனால் இதே காலக்கட்டத்தில் பாகிஸ்தான் 17 டெஸ்ட்களில் வென்று 12-ல் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.

அயல்நாட்டு மண்ணில் வெற்றி என்ற தீரா ஆசையை எடுத்துக் கொண்டால், இதே 4 ஆண்டுகளில் 25 அயல்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2-ல் மட்டுமே வென்றுள்ளது. ஒன்று பரிதாப மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக மற்றொன்று லார்ட்ஸில் பெற்ற அந்த பிரசித்தியான வெற்றி.

இலங்கை அணி 21 அயல்நாட்டு டெஸ்ட்களில் 4-ல் வென்று, 10-ல் தோல்வி தழுவியுள்ளது. எனவே இரு அணிகளுக்கும் அயல்நாட்டு வெற்றி என்பது எட்டாக்கனியே. ஆனால் தென் ஆப்பிரிக்காவில், இங்கிலாந்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அயல்நாட்டில் அஜிங்கிய ரஹானேயின் உயர் சராசரி:

அணிகளின் நிலைமை இவ்வாறு இருக்கிறது என்றால் இந்திய பேட்ஸ்மென்களில் அஜிங்கிய ரஹானே மட்டுமே அயல்நாடுகளில் சிறந்து விளங்குகிறார். இவர் ஒரு போட்டியில்தான் உள்நாட்டில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அயல்நாடுகளில் இவர் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சதம் எடுத்ததோடு தென் ஆப்பிரிக்காவில் 96 ரன்களை அடித்துள்ளார். இதன் மூலம் இவரது அயல்நாட்டு டெஸ்ட் சராசரி 50.73 என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இன்று ஆஸ்திரேலியா திணறும் இங்கிலாந்து டிரெண்ட் பிரிட்ஜ் பிட்சோ, அல்லது அதற்கு முந்தைய எட்ஜ்பாஸ்டன் பிட்சோ, ரஹானே சதம் அடித்த லார்ட்ஸ் முதல் நாள் பிட்சை விட அபாயகரமானது அல்ல என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும், அன்று லார்ட்ஸில் இவர் அடித்த சதமே இந்திய அணிக்கு வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

விராட் கோலி, விஜய் ஆஸ்திரேலியாவில் அபாரமாக ஆடினர். இங்கிலாந்தில் விராட் கோலியின் பார்ம் படுமோசம். ஆனாலும் இவர்கள் பரவாயில்லை.

ஷிகர் தவண், புஜாரா, ரோஹித் சர்மா நிலைமை படுமோசமாக உள்ளது. தவானின் அயல்நாட்டு பேட்டிங் சராசரி 35, அதாவது வங்கதேசத்துக்கு எதிராக அடித்த 173 ரன்களினால் பரவாயில்லை போல் தெரிகிறது. இது இல்லையெனில் 20 அயல்நாட்டு இன்னிங்ஸ்களில் இவரது சராசரி 29-ஐ தாண்டவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. புஜாரா அயல்நாட்டு சராசரி 24 இன்னிங்ஸ்களில் 32க்கும் குறைவு. ரோஹித் சர்மாவும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

இலங்கையில் இந்திய பேட்ஸ்மென்களை எடுத்துக் கொண்டால் 2000-ம் ஆண்டிலிருந்து பார்த்தால் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 44.09 என்ற சராசரி வைத்துள்ளார், ராகுல் திராவிட், கங்குலி உட்பட யாரும் இங்கு அதிகம் சோபித்ததில்லை.

எனவே இந்த இலங்கை தொடர் புள்ளிவிவர நோக்கில் இந்திய அணிக்கு சவாலாக அமையும் என்று தெரிகிறது, ஆனால் இலங்கை அணியின் சமீபத்திய பார்ம் பாகிஸ்தானுக்கு எதிராக அம்பலமாகியுள்ளதால், பாகிஸ்தான் ஆடிய அதே தீவிரத்துடன் இந்தியா ஆடினால் ஒருவேளை ஒரு அரிய அயல்நாட்டு டெஸ்ட் தொடர் வெற்றி சாத்தியமாகலாம்.

http://tamil.thehindu.com/sports/இலங்கைக்கு-எதிரான-டெஸ்ட்-தொடர்-ஏன்-இந்திய-அணிக்கு-கடினம்-புள்ளிவிவர-அலசல்/article7512351.ece?homepage=true

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் முரளி விஜய் அவுட்!

 

லங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக முரளி விஜய் விளையாட மாட்டார்.

mur.jpg

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி,  வரும் 12ஆம் தேதி காலேவில் தொடங்குகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்  முரளிவிஜய், தொடையில் தசைபிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

எனினும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் தயாராகி விடுவார் என்று நம்பப்பட்டது. ஆனால் இன்னமும் தசைபிடிப்பு குணமடையாததால், முதல் டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் விளையாட மாட்டார் என்று அணி இயக்குனர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

முரளி விஜய்க்கு பதிலாக லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது.  புஜரா,ரோகித் சர்மா, ரஹானே ஆகியோர் மத்திய களத்தில் இறங்குவார்கள். கேப்டன் விராட் கோலி 5வது விக்கெட்டுக்குதான் களமிறங்கப் போகிறார்.

வெளிநாட்டு மண்ணில் முரளி விஜய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். முதல் டெஸ்ட் போட்டியில் விஜய் விளையாட முடியாமல் போனது இந்திய அணிக்கு பெரும் இழப்புதான். வங்கதேச அணிக்கு எதிராக ஃபாதுல்லாவில் நடந்த போட்டியில் முரளி விஜய் 150 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/article.php?aid=50787

  • தொடங்கியவர்
இலங்கை டெஸ்ட் குழாமில் புதுமுகம் விஷ்வா
2015-08-10 11:42:28

11504vishwa.jpgஎதிர்­கா­லத்தில் சிறந்த அணி­களைக் கட்­டி­எ­ழுப்பும் பொருட்டு மறு­ரூபம் (ட்ரான்ஸ்­போர்மிங்) அடை­வ­தற்­கான முயற்­சியில் இறங்­கி­யுள்ள இலங்கை கிரிக்கெட் மற்­று­மொரு புது­மு­கத்தை டெஸ்ட் குழாமில் இணைத்­துக்­கொண்­டுள்­ளது.

 

இந்­தி­யா­வுக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள டெஸ்ட் தொடரை முன்­னிட்டு புளூம்ஃபீல்ட் கழ­கத்தின் வேகப்­பந்­து­வீச்­ச­ாளரும் புனித செபஸ்­தியார் கல்­லூ­ரியின் முன்னாள் வீர­ரு­மான விஷ்வா பெர்­னாண்டோ என்ற வீரரே இலங்கை குழாமில் இடம்­பெறும் புதிய வீர­ராவார்.

 

5 அடி 10 அங்­குலம் உய­ரமும் இட­துகை வேகப்­பந்­து­வீச்­சா­ள­ரு­மான 23 வய­து­டைய விஷ்வா பெர்­னாண்டோ 34 முதல் தர போட்­டி­களில் 98 விக்­கெட்­களைக் கைப்­பற்­றி­யுள்ளார்.

 

இதற்கு முன்னர் 2014இல் டெஸ்ட் குழாமில் இவர் இடம்­பெற்ற போதிலும் இலங்கை தொப்­பியை அணி­வ­தற்­கான சந்­தர்ப்பம் கிடைக்­க­வில்லை.

 

இதே­வேளை, சுரங்க லக்மால், ஷமிந்த எரங்க ஆகியோர் உபாதை கார­ண­மாக குழாமில் சேர்த்­துக் ­கொள்­ளப்­ப­ட­வில்லை.

 

தம்­மிக்க பிரசாத், நுவன் ப்ரதீப் ஆகிய வேகப்­பந்­து­வீச்­சா­ளர்கள் குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

 

துடுப்­பாட்­டத்­திலும் சுழல்­பந்­து­வீச்­சிலும் பெரி­ய­ளவில் மாற்­றங்கள் செய்­யப்­ப­டா­த­போ­திலும் கித்­ருவன் வித்­தா­ன­கே­வுக்கு வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை.

 

துடுப்­பாட்ட வீரர்­க­ளான குசல் ஜனித் பேரேரா மீண்டும் குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் ஜெஹான் முபாரக், உப்புல் தரங்க ஆகி­யோரும் குழாமில் இடம்­பெ­று­கின்­றனர்.

 

சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளான ரங்­கன ஹேரத், டில்­ருவன் பெரேரா, தரிந்த கௌஷால் ஆகியோர் குழாமில் இடம்­பெ­று­வ­துடன் தினேஷ் சந்­திமால் விக்கெட் காப்­பா­ள­ராக குழாமில் பெய­ரி­டப்­பட்­டுள்ளார்.

 

குமார் சங்­கக்­கா­ர­வுக்கு இந்தத் தொடர் பிரி­யா­விடை தொட­ராக அமை­ய­வுள்­ளது. கொழும்பில் நடை­பெ­ற­வுள்ள இந்­தி­யா­வுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யுடன் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து குமார் சங்­கக்­கார விடை­பெ­ற­வுள்ளார்.

 

முத­லா­வது டெஸ்ட் போட்டி காலி சர்­வ­தேச விளையாட்­ட­ரங்கில் நாளை­ம­று­தினம் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

இலங்கை டெஸ்ட் குழாம்:
ஏஞ்­சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), லஹிரு திரி­மான்ன, கௌஷால் சில்வா, திமுத் கரு­ணா­ரட்ன, குமார் சங்­கக்­கார, தினேஷ் சந்­திமால், உப்புல் தரங்க, ஜெஷான் முபாரக், குசல் ஜனித் பெரேரா, ரங்கன ஹேரத், டில்ருவன் பெரேரா, தரிந்து கௌஷால், நுவன் ப்ரதீப், தம்மிக்க பிரசாத், விஷ்வா பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர (தேகாரோக்கியத்தைப் பொறுத்து).

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11504#sthash.gsdVrCsR.dpuf
  • தொடங்கியவர்

வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரவி சாஸ்திரி

 
விராட் கோலி, ரவிசாஸ்திரி. | கோப்புப் படம்.
விராட் கோலி, ரவிசாஸ்திரி. | கோப்புப் படம்.

இந்திய கிரிக்கெட் அணியின் கற்றல் காலக்கட்டம் முடிந்து விட்டது என்றும் அயல்நாடுகளில் 20 எதிரணி விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை வீரர்கள் கண்டுபிடித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்றும் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

புதன் கிழமையன்று இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் ரவி சாஸ்திரி கூறியதாவது, “கிரிக்கெட் மைதானத்துக்கு வருவது டெஸ்ட் போட்டிகளை டிரா செய்வதற்கல்ல. ஆட்டத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று, 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது மிக முக்கியம். அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை வீரர்கள் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.

டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெறத் துவங்குவது அவசியம். தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் கற்றல் காலகட்டம் முடிந்து விட்டது. இப்போது இந்திய வீரர்கள் அயல்நாட்டில் நிறைய போட்டிகளில் விளையாடுகின்றனர், ஆகவே தங்களுக்கு பழக்கப்பட்ட ஒரு சூழலில் அனுபவம் என்பது கைகொடுக்கும்.

இதற்காக கூடுதல் பவுலரை அணியில் எடுப்பதும் கைகொடுக்கும். பெரிய அளவில் ரன்கள் குவிப்பது மட்டுமல்ல, 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதே வெற்றிக்கு இன்றியமையாதது.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை பாருங்கள். பந்துவீச்சில் நிறைய வாய்ப்புகள் இருப்பதால் வெற்றிகள் தானாக வருகின்றன” என்றார்.

1993-ம் ஆண்டு இலங்கையில் இந்திய அணி தொடரை வென்றதோடு சரி. அதன் பிறகு தொடர் வெற்றி அங்கு சாத்தியமாகவில்லை. இந்நிலையில் புதுமுகங்கள் கொண்ட இலங்கை அணியை பற்றி சாஸ்திரி கூறும் போது, “கடந்த காலங்களில் சிறந்த வீரர்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் எப்போதும் ஒரு அணியாகத் திரண்டு ஆடுவதில் சிறந்து விளங்குபவர்கள்.

நான் முதன்முதலில் இங்கு 80-களில் வந்தபோது இலங்கை அணி 1-0 என்று தொடரை வென்றனர். அவர்களிடம் ஓரளவுக்கு நல்ல பந்துவீச்சு உள்ளது. பிறகு முத்தையா முரளிதரன் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். மகேலா, சங்கக்காரா இருந்தனர், ஆனாலும் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதில் முரளியின் பங்களிப்பே அதிகம்.

மற்ற ஸ்பின்னர்களும் அதனைச்செய்ய முரளிதரன் ஒரு தூண்டுகோலாக இருந்துள்ளார். அதனால்தான் இந்தப் பகுதியில் அந்த அணி ஒரு சக்தியாக விளங்குகிறது. எனவே இந்தத் தொடர் ஒரு சவால்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/வெளிநாடுகளில்-இந்திய-அணி-வெற்றி-பெற-வேண்டிய-நேரம்-வந்துவிட்டது-ரவி-சாஸ்திரி/article7522110.ece

  • தொடங்கியவர்

மாற்றத்தில் உள்ள இந்திய அணியை அனுபவம் குறைவான இலங்கை அணி எதிர்கொள்கிறது

 
எம்.எஸ்.தோனி காலக்கட்டத்திலிருந்து இன்னமும் மீளாத இந்திய அணி விராட் கோலியின் அணுகுமுறையில் இலங்கையை எதிர்கொள்கிறது. | படம்: சிறப்பு ஏற்பாடு.
எம்.எஸ்.தோனி காலக்கட்டத்திலிருந்து இன்னமும் மீளாத இந்திய அணி விராட் கோலியின் அணுகுமுறையில் இலங்கையை எதிர்கொள்கிறது. | படம்: சிறப்பு ஏற்பாடு.

சங்கக்காரா என்ற நட்சத்திர வீரர் இந்தத் தொடருடன் ஓய்வு பெறுகிறார். எனவே கடைசி முறையாக அவர் கால்காப்பைக் கட்டுவது இந்தத் தொடரில் இலங்கை ரசிகர்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான தருணம்.

“ஆக்ரோஷம், அனுபவமின்மை, மாற்றம்” போன்ற வார்த்தைகள் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை (புதன்) தொடங்கும் சூழலில் ரீங்காரமிட்டு வருகின்றன.

கடந்த டிசம்பரில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் ஆக்ரோஷமான இன்னிங்ஸினால் இந்தியா வெற்றிக்கு 48 ரன்கள் அருகில் வந்து தோல்வி கண்டது. 364 ரன்கள் இலக்கை துரத்துவதே லட்சியம் என்றார் அப்போது விராட் கோலி.

அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லகிலேயில் இலங்கை அணி கடும் ஆக்ரோஷத்துடன் ஆடியது, ஆனால் சமயோசித புத்தி சாதுரியமற்ற தாக்குதல் ஆட்டம் தோல்வியையே பெற்றுத் தந்தது.

இந்த இரண்டு தருணங்களிலும் ஆக்ரோஷம் பற்றிய நோக்கம் சரியாகவே பாராட்டப்பட்டது. பாதுகாப்பாக ஆடுவது, டிராவுக்கு ஆடுவது என்பது முந்தைய விளையாட்டுப் பண்பாட்டின் எச்ச சொச்சம் என்றவாறு இப்போது பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நோக்கம் தக்க வைக்கக் கூடியதுதானா?

திங்களன்று ரவி சாஸ்திரி கூறும்போது, “அடிலெய்டில் விளையாடியது போன்று ஆடி தோல்வி தழுவுவது பிரச்சினையல்ல. ஏனெனில் அத்தகைய கிரிக்கெட் ஆட்டத்தின் மூலம்தான் வெற்றி பெறுவதற்கான உத்வேகம் கிடைக்கும்” என்றார்.

ஆனால் கோலியிடம் உள்ள அணியோ பெரும்பாலும் தோனியின் அணியே. அணுகுமுறையில் கூர்மையான மாற்றம் சொல்வதற்கு எளிது, சாதிப்பது கடினம்.

பேட்டிங் வரிசை மாறிக் கொண்டேயிருக்கிறது, பந்துவீச்சு வரிசையில் உத்தரவாதங்கள் இல்லை.

இலங்கை அணியில் 2-வது போட்டியுடன் சங்கக்காரா ஓய்வு பெறுகிறார். இலங்கை அணி மேத்யூஸ் தலைமையில் எழுச்சியுற விரும்பும் அணி, இந்திய அணியும் கோலியின் தலைமையில் ‘வெற்றி’ என்ற தாரகமந்திரத்துடன் களமிறங்குகிறது.

எனவே ரவி சாஸ்திரி கூறுவது போல், இலங்கைக்கு வரும் இளம் இந்திய அணி இது, இலங்கை அணியிலும் இளம் திறமைகள் உள்ளனர், எனவே இளம் வீரர்களுக்கு இடையிலான ஒரு சவாலாக இந்தத் தொடர் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியாயினும், ஒரு நல்ல விறுவிறுப்பான டெஸ்ட் ஆட்டத்தை இரு அணிகளும் வழங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/மாற்றத்தில்-உள்ள-இந்திய-அணியை-அனுபவம்-குறைவான-இலங்கை-அணி-எதிர்கொள்கிறது/article7526010.ece

  • தொடங்கியவர்

3-ம் நிலையில் கோலி இறங்க வேண்டும், ரோஹித் கூடாது: சுனில் கவாஸ்கர்

 
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா நன்றாக ஆடுவது அவசியம் என்கிறார் சுனில் கவாஸ்கர். | படம்: பிடிஐ.
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா நன்றாக ஆடுவது அவசியம் என்கிறார் சுனில் கவாஸ்கர். | படம்: பிடிஐ.

புதன்கிழமை தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3-ம் நிலையில் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக விராட் கோலி களமிறங்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

"புஜாராவைக் காட்டிலும் ரோஹித் சர்மா நல்ல தெரிவுதான், ஆனால் என்னைப் பொறுத்தவரையில் விராட் கோலிதான் 3-ம் நிலையில் களமிறங்க வேண்டும். இப்படித்தான் மற்ற வீரர்களுக்கு அவர் உத்திகளை வகுக்க முடியும்.

தொடரை நல்ல முறையில் தொடங்குவது அவசியம், முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடையாதீர்கள். நடப்பு ஆஷஸ் தொடரிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது அவசியம்.

இதனைக் கூறும்போதே இலங்கை அணிக்கு அழுத்தம் அதிகம் என்பதையும் நான் கூறிவிடுகிறேன், சங்கக்காராவுக்கு ஒரு சிறப்பான வழியனுப்புதலை செய்ய இலங்கை வீரர்கள் முனைப்பு காட்டுவர்.

ஆக்ரோஷமும் கொஞ்சம் எதார்த்த சிந்தனையும் தேவை, இதுதான் இந்திய அணிக்கு முக்கியமானது என்று நான் கருதுகிறேன்” என்றார் சுனில் கவாஸ்கர்.

http://tamil.thehindu.com/sports/3ம்-நிலையில்-கோலி-இறங்க-வேண்டும்-ரோஹித்-கூடாது-சுனில்-கவாஸ்கர்/article7526792.ece

  • தொடங்கியவர்

இலங்கை - இந்தியா முதல் டெஸ்ட் போட்டி நாளை

 
 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

Angelo-Mathews_8.jpg

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் மிகமுக்கிய போட்டியாக அமைந்துள்ளது. 

ஏனெனில் இலங்கை அணியை பொறுத்தவரை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதால் இப்போட்டியில் வெற்றிபெற்று அவருக்கு அதை சமர்ப்பணம் செய்வதாக அமையும் அதேவேளை, இந்திய அணி கடந்த 22 வருடங்களாக இலங்கை மண்ணில் எந்தவொரு டெஸ்டிலும் வெற்றி பெற்றதில்லை.

எனவே இரு அணிகளுக்கும் இது முக்கிய போட்டியாக அமையும் அதேவேளை இரு நாட்டு அணி ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

http://www.virakesari.lk/articles/2015/08/11/இலங்கை-இந்தியா-முதல்-டெஸ்ட்-போட்டி-நாளை

  • தொடங்கியவர்
டெஸ்ட் தரப்படுத்தலில் தரமுயர்வுக்காக இந்தியாவும் இலங்கையும் முயற்சிக்கும்
2015-08-12 09:47:12

சர்­வ­தேச டெஸ்ட் கிரிக்கெட் அந்­தஸ்­துக்­கான தரப்­ப­டுத்­தலில் உய­ர­வேண்டும் என்ற நோக்­கத்­துடன் மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முத­லா­வது போட்­டியில் இந்­தி­யாவும் இலங்­கையும் இன்று கள­மி­றங்­கு­கின்­றன.

 

11529VRA-20150811-M01-MED.jpg

 

காலி சர்­வ­தேச கிரிக்கெட் விளை­யாட்­ட­ரங்கில்  இப்­போட்டி நடை­பெ­று­கி­றது.

 

இரண்டு நாடு­களும் எதிர்­கால அணி­க ளைக் கட்டி எழுப்­பு­வ­தற்­கான முயற்­சியில் இறங்­கி­யுள்ள நிலையில் இந்த டெஸ்ட் தொடர் இரண்டு அணி­யி­ன­ருக்கும் பலத்த சவா­லாக அமை­யப்­போ­கின்­றது.

 

மேலும் இலங்­கையின் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கா­ர­வுக்கு இந்தத் தொடர் பிரி­யா­விடை தொட­ராக அமை­வதால் வெற்­றி­வா­கை­யுடன் அவ­ருக்கு விடை­ய­ளிக்க இலங்கை அணி முயற்­சிக்கும் என ஏஞ்­சலோ மெத்யூஸ் ஏற்­க­னவே கூறி­யி­ருந்தார்.

 

இதே­வேளை, பூரண டெஸ்ட் தொடர் ஒன்­றுக்கு முதல் தட­வை­யாக இந்­திய அணித் தலை­வ­ராக விளை­யாடும் விராத் கோஹ்லி என்ன விலை­கொ­டுத்­தேனும் தொடரைக் கைப்­பற்ற முயற்­சிப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராகக் கடந்த வருடம் நடை­பெற்ற முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் தோனி விளை­யா­டா­ததன் கார­ண­மா­கவும் மூன்­றா­வது டெஸ்­டுடன் அவர் திடீர் ஓய்வை அறி­வித்த பின்னர் கடைசி டெஸ்ட் போட்­டி­யிலும் கோஹ்லி அணித் தலை­வ­ராக விளை­யா­டி­யி­ருந்தார்.

 

அண்­மையில் பங்­க­ளா­தே­ஷு­டனான ஒற்றை டெஸ்ட் போட்­டி­யிலும் கோஹ்லி தலை­வ ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

 

இப்­போது முழு­மை­யான டெஸ்ட் தொட­ருக்கு அணித் தலை­வ­ராக விளை­யா­ட­வுள்ளார்.

 

தரப்­ப­டுத்­தலில் ஐந்தாம் இடத்­தி­லுள்ள இந்­தியா, இந்தத் தொடரில் முழு­மை­யாக வெற்­றி­பெற்றால் மூன்றாம் இடத்­திற்கும் ஏழாம் இடத்­தி­லுள்ள இலங்கை முழு­மை­யாக வெற்­றி­பெற்றால் ஐந்தாம் இடத்­திற்கும் முன்­னேறும்.

 

எவ்­வா­றா­யினும் இங்­கி­லாந்­து­டான கடைசி டெஸ்டில் அவுஸ்­தி­ரே­லியா வெற்­றி­பெற்றால் மாத்­தி­ரமே இந்­தியா மூன்றாம் இடத்­திற்கு முன்­னேறும்.

 

இந்­தியா 2–1 என வெற்­றி­பெற்றால் அதே இடத்தில் இருக்கும்.

 

இலங்கை 2–1 என வெற்­றி­பெற்றால் இந்­தி­யாவை முந்திச் செல்லும். 

 

இலங்கை குழாம் :

 

கௌஷால் சில்வா, திமுத் கரு­ணா­ரட்ண, குமார் சங்­கக்­கார, லஹிரு திரி­மான்ன அல்­லது உப்புல் தரங்க, ஏஞ்­சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), தினேஷ் சந்­திமால், ஜெஹான் முபாரக், தம்­மிக்க பிரசாத், தரிந்து கௌஷால், ரங்­கன ஹேரத், நுவன் ப்ரதீப்.

 

இந்திய குழாம்:  

 

கே. எல். ராகுல், ஷிக்கர் தவான், ரோஹித் ஷர்மா, விராட்; கோஹ்லி (அணித் தலைவர்), அஜின்கியா ரெஹானே, ரிதிமான் சஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர் பஜன் சிங், இஷாந்த் ஷர்மா, வருண் ஆரோன், உமேஷ் யாதவ்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11529#sthash.XfRTq9ot.dpuf
  • தொடங்கியவர்

இலங்கை துடுப்பெடுத்தாட முடிவு : முதலாவது டெஸ்ட் தொடர் சற்றுநேரத்தில் ஆரம்பம்

 

இலங்கை – இந்­திய அணிகள் மோதும் முத­லா­வது டெஸ்ட் போட்டி இன்னும் சற்றுநேரத்தில் காலி சர்வதேச கிரிக் கெட் அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

sanka.jpg

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி துடுப்பெடுத்தாட முடிவுசெய்துள்ளது.

 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யா­டு­வ­தற்­காக இந்­திய கிரிக்கெட் அணி இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்­ளது.

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் அணிக்கு எதி­ரான 3 நாள் பயிற்சி ஆட்­டத்தில் இந்­திய அணி விளை­யா­டி­யது. இதில் சிறப்­பான ஆட்­டத்தை இந்­திய அணி வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அதே­வேளை இலங்கை அணி சமீ­பத்தில் பாகிஸ்­தா­னிடம் தொடரை இழந்­தது. அந்த தோல்­வியின் கார­ண­மாக வெற்­றி­பெற்றே ஆக வேண்­டிய நிலையில் இலங்கை அணி உள்­ளது. 
விராட் கோலி தலை­மை­யி­லான இந்­திய அணி தற்­போது தான் முழு­மை­யான டெஸ்ட் தொடரில் விளை­யா­டு­கி­றது. இதனால் இந்­திய அணித் தலை­வ­ருக்கு மிகப்­பெ­ரிய சவால் காத்­தி­ருக்­கி­றது.

அத்­தோடு இலங்கை அணியின் நட்­சத்­திர வீரர் குமார் சங்­கக்­கார இந்தத் தொட­ருடன் சர்­வ­தேச கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்வு பெறு­கிறார். இது தான் தற்­போ­தைய கிரிக்கெட் ரசி­கர்­களின் பெரிய கவ­லை­யாக அமைந்­துள்­ளது.

அதேபோல் இந்தத் தொடரை வென்று அந்த வெற்­றி­யோடு சங்­கக்­கா­ரவை சர்­வ­தேசக் கிரிக்­கெட்­டி­லி­ருந்து வழியனுப்புவோம் என்று இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்திருக்கிறார். எது எப்படியோ கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தத் தொடர் கிரிக்கெட் விருந்து படைக்கும் என்பது நிச்சயம்.

http://www.virakesari.lk/articles/2015/08/12/இலங்கை-துடுப்பெடுத்தாட-முடிவு-முதலாவது-டெஸ்ட்-தொடர்-சற்றுநேரத்தில்-ஆரம்பம்

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா 34/3  14.2 ஓவர்களில்

  • தொடங்கியவர்

அஸ்வின் அபாரம்: ஸ்லிப் இலங்கையிலும் ஸ்லிப் ஆகுது!

 

ந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 183 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அஸ்வின் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அதே வேளையில் இந்திய அணியின் ஸ்லிப் பகுதி பீல்டிங், மீண்டும் சொதப்பலாகவே அமைந்தது.

sangs.jpg

பொதுவாகவே இந்திய அணியின் பீல்டிங் சற்று மேம்பட்டு இருந்தாலும்,  ஸ்லிப் பகுதியில் கேட்ச்சுகளை கோட்டை விடுவது இன்னமும் தொடரத்தான் செய்கிறது. இன்றைய முதல் நாள் ஆட்டத்தில், குஷால் சில்வா,  ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். குஷால் சில்வா பேட்டில் பட்டு, பந்து எட்ஜ் ஆகி நேராக ஷிகர் தவானிடம்  சென்றது.

ஷிகர் தவான் இதனை கோட்டை விட்டார். இதே போல் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தவான், ஸ்லிப் கேட்ச்சுகளை கோட்டை விட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது. தொடர்ந்து ஆட்டத்தின் 25வது ஓவரில் சண்டிமால், ஸ்லிப்பில் நின்ற சகாவுக்கு ஒரு கேட்ச் கொடுத்தார். அவராலும் அந்த கேட்சை பிடிக்க முடியவில்லை.

ravi.jpg

பொதுவாக முதல் ஸ்லிப்பில் நிற்பவர், பந்துவீச்சாளர் கையில் இருந்து பந்தை ரிலீஸ் செய்தவுடன், அலார்ட் ஆகி விட வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது ஸ்லிப்பில் நிற்பவர்கள் பேட்டில் பட்டு எட்ஜாகிறதா என்பதை கவனித்து செயல்பட வேண்டும். இந்த அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால்தான் ஸ்லிப்பில் கேட்ச் பிடிப்பது சாத்தியமாகும். ஆனால் இன்னும் இந்திய அணியின் ஸ்லிப் பகுதி பீல்டிங், பலவீனமாகவேதான் உள்ளது.

இலங்கையின் தொடக்க வீரர்கள் கருண ரத்னேவை இஷாந்த் சர்மாவும், குஷால் சில்வாவை ஆரோனும் வெளியேற்றினர். அடுத்து அஸ்வின் பந்துவீச்சில் இலங்கை பேட்டிங் சிதறத் தொடங்கியது. திரிமண்ணே, சங்கக்காரா ஆகியேரை அஸ்வின்  வெளியேற்றினார்.

ஏஞ்சலா மேம்யூஸ் , சண்டிமால் ஆகியோர் தாக்குபிடித்து ஆடினர். 64 ரன்கள் எடுத்திருந்த ஏஞ்சலா மேத்யூசையும் அஸ்வின் அவுட் ஆக்கினார்.  சண்டிமால் 59 ரன்களில் வெளியேறினார். 49.4 ஓவரில் இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின்
46 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

http://www.vikatan.com/news/article.php?aid=50902

  • தொடங்கியவர்

முதல் டெஸ்ட்: ஷிகர் தவண், விருத்திமான் சஹா நழுவவிட்ட கேட்ச்கள்

 

 
இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் ஷாட் ஆடும் காட்சி. பின்னால் விருத்திமான் சஹா. | படம்: ராய்ட்டர்ஸ்.
இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் ஷாட் ஆடும் காட்சி. பின்னால் விருத்திமான் சஹா. | படம்: ராய்ட்டர்ஸ்.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஸ்லிப் பீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றே கூற வேண்டும்.

ஆனால் மட்டைக்கு அருகில் முன்புறம் அருமையான பீல்டிங் திறனை லோகேஷ் ராகுலும் சற்று முன் மேத்யூஸை வீழ்த்திய ரோஹித் சர்மாவின் கேட்சும் வெளிப்படுத்தினாலும்.ஸ்டம்புக்குப் பின்புறம் அணியின் கேட்சிங்கில் இன்னமும் முன்னேற்றம் தேவை என்ற நிலையே உள்ளது.

இன்று காலை வருண் ஆரோனும், இசாந்த் சர்மாவும் அற்புதமாக வீசினர், குறிப்பாக இசாந்த் சர்மா, 138-140 கிமீ வேகம் வரை இருவரும் வீசினாலும் இசாந்த்தின் அளவு மற்றும் திசை அபாரமாக அமைந்தது. ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே குட் லெந்த்தில் பிட்ச் செய்து பந்தை வெளியே கொண்டு சென்ற விதம் இலங்கை பேட்ஸ்மென்களின் கால் நகர்த்தல்களை கடும் சந்தேகத்துக்குரியதாக்கியது.

இந்நிலையில் குஷல் சில்வா என்ற தொடக்க வீரருக்கு ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முதல் ஸ்லிப்பில் கேட்ச் ஒன்றை கோட்டை விட்டார். நல்ல வேகத்தில் ஆஃப் ஸ்டம்பில் ஒரு பந்து எகிற அதனை குஷல் சில்வா கட் ஆட முயன்றார், எட்ஜ் நேராக, எளிதாக ஷிகர் தவணிடம் சென்றது. அவர் அதனை நழுவ விட்டார், ஒரு நேரடியான எளிதான கேட்ச் நழுவவிடப்பட்டது. அடுத்ததாக அவர் ஆட்டமிழந்தாலும், அது அதிர்ஷ்டமே. பந்து அவரது ஆர்ம் கார்டில் பட்டுச் சென்றதற்கு அவுட் கொடுக்கப்பட்டது. இவர் பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக விளையாடினார்.

உணவு இடைவேளையின் போது 65/5 என்று இலங்கை தடுமாறிக் கொண்டிருந்தது. சந்திமால், மேத்யூஸ் களத்தில் இருந்தனர், இந்நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு, ஆட்டத்தின் 25-வது ஓவரில் சந்திமாலுக்கு இசாந்த் சர்மா ஓவரை வீச, 2-வது பந்து சந்திமாலை ஆட இழுத்தது, ஆடினார் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு சஹாவுக்கு வாகாகச் சென்றது, ஆனால் கேட்சை தட்டி விட்டார் சஹா. ஒரு வாய்ப்பு நழுவ விடபப்ட்டது.

அதே சந்திமால் தற்போது அதிரடியாக ஆடி 68 பந்துகளில் 55 ரன்களுடன் ஆடி வருகிறார். மேத்யூஸ் (64), பிரசாத் (0) ஆகியோரை அஸ்வின் வீழ்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. சந்திமாலுடன் ரங்கனா ஹெராத் இருக்கிறார்.

ஸ்லிப் பீல்டிங் தோனி கேப்டன்சியின் போதே பலவீனமடைந்தது. காரணம் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது அவருக்கு நம்பிககையில்லாமல் இருந்தது. முதல் ஒரு மணிநேரத்திலேயே அயல்நாட்டு பிட்சாக இருந்தாலும் 2 ஸ்லிப், ஒரு ஸ்லிப் என்று பின்னடைந்து விடுவார் தோனி, பிறகு துணைக் கண்ட பிட்ச்களாக இருந்தால், அதுவும் 2-வது இன்னிங்ஸாக இருந்தால் தொடக்கத்திலேயே அஸ்வினிடம் பந்தைக் கொடுப்பார். அயல்நாட்டில் உணவு இடைவேளை முடிந்து ஒரு முனையில் ஒரு ஸ்லிப்புடன் வேகப்பந்து வீச்சையும் இன்னொரு முனையில் லாலிபாப் பவுலர் ரெய்னாவையும் அழைத்து வீசச் செய்வார் தோனி.

இதனால் ஸ்லிப் பீல்டிங்கின் தரம் கீழிறங்கி விட்டது. இதனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் தனது கிரிக் இன்போ கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஞ்சி போட்டிகளில் விளையாடிய அனுபவமற்ற தோனி, ஸ்லிப்பை நிறுத்தும் இடமும் தவறாகவே அமைந்திருந்ததாக ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டார். ஒன்று ஒரு ஸ்லிப்புக்கும் இன்னொரு ஸ்லிப்புக்கும் இடையே அதிக இடைவேளி இருக்கும் அல்லது அதிக நெருக்கமாக நிறுத்தப்படுவர்.

குறிப்பாக திராவிட், லஷ்மண் போன பிறகு ஸ்லிப் திசை பீல்டிங் படுமோசமானதற்கு போதிய பயிற்சியின்மையும் கேப்டன் தோனியின் களவியூக அனுபவமின்மையுமே காரணமாகும் என்று நிபுணர்கள் பலர் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருப்பது இந்திய அணி இந்தத் துறையில் இன்னமும் முன்னேற்றமடையவேண்டும் என்பதையே உணர்த்துகிறது.

http://tamil.thehindu.com/sports/முதல்-டெஸ்ட்-ஷிகர்-தவண்-விருத்திமான்-சஹா-நழுவவிட்ட-கேட்ச்கள்/article7529952.ece?homepage=true&ref=tnwn

  • தொடங்கியவர்
ஸ்ரீலங்கா  183
இந்தியா   235/2 (69.0 ov)
  • தொடங்கியவர்

தவான் வீறுநடை...!- சதத்துடன் நடையை கட்டினார் கேப்டன்!

 

dhawan%20test%202.jpgகாலே: காலேவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான், கேப்டன் கோலி ஆகியோர் சதம் அடித்தனர். 103 ரன்னில் கோலி ஆட்டம் இழந்தார். இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து, 255 ரன்கள் எடுத்து 72 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முதலில் விளையாடிய இலங்கை அணி வீரர்கள், இந்திய வீரர்களின் சுழல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 183 ரன்னுக்கு அந்த அணி ஆட்டம் இழந்தது.

சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின்,  6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிஸ்ரா 2 விக்கெட்டும், இசாந்த் சர்மா, ஆரோன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 28 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் ராகுல் 7 ரன்னிலும், ரோகித் சர்மா 9 ரன்னிலும் வீழ்ந்தனர். பின்னர் மற்றொரு தொடக்க வீரர் தவானும், கேப்டன் கோலியும் இணைந்து அணியை நிமிர வைத்தனர்.

நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து,  128 ரன்கள் எடுத்திருந்தது. தவான் 53 ரன்னிலும், கோலி 45 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. 28 ரன்னில் இருந்தபோது கண்டத்தில் இருந்து தப்பிய தவான், இன்றைய ஆட்டத்தில் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இது இவருக்கு 4வது சதம்.  பின்னர் கேப்டன் கோலியும் சதம் அடித்தார். 103 ரன்கள் எடுத்திருந்தபோது குஷால் பந்தில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார் கோலி.

தற்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து,  255 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணியை விட 72 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=50946

  • தொடங்கியவர்

தவான், கேப்டன் சதத்தால் இந்தியா 375 ரன்கள் குவிப்பு: 192 ரன் முன்னிலை!

 

காலே: காலேவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 375 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. தவான், கோலி சதத்தால் இந்திய அணி 192 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

dhawan%20test%20long.jpg

முதலில் விளையாடிய இலங்கை அணி வீரர்கள், இந்திய வீரர்களின் சுழல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், 183 ரன்னுக்கு அந்த அணி ஆட்டம் இழந்தது.

சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின்,  6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிஸ்ரா 2 விக்கெட்டும், இசாந்த் சர்மா, ஆரோன் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் ராகுல் 7 ரன்னிலும், ரோகித் சர்மா 9 ரன்னிலும் வீழ்ந்தனர். பின்னர் மற்றொரு தொடக்க வீரர் தவானும், கேப்டன் கோலியும் இணைந்து அணியை நிமிர வைத்தனர்.

நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து,  128 ரன்கள் எடுத்திருந்தது. தவான் 53 ரன்னிலும், கோலி 45 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

Kohli%20test%20long.jpg

இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. 28 ரன்னில் இருந்தபோது கண்டத்தில் இருந்து தப்பிய தவான், இன்றைய ஆட்டத்தில் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இது இவருக்கு 4வது சதம்.  பின்னர் கேப்டன் கோலியும் சதம் அடித்தார். 103 ரன்கள் எடுத்திருந்தபோது குஷால் பந்தில், ஆட்டம் இழந்து நடையை கட்டினார் கோலி.

பின்னர் வந்த ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து சஹா களம் கண்டார். மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த தவான், 134 ரன்னில் ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் அசத்திய அஸ்வின், 7 ரன்னில் நடையை கட்டினார். ஹர்பஜனும் 14 ரன்னில் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து மிஸ்ரா 10 ரன்னிலும், சஹா 60 ரன்னிலும், ஆரோன் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். முடிவில் இந்திய அணி 375 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணி, தற்போது இலங்கை அணியை விட 192 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 3வது நாள் ஆட்டம் தொடர்கிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=50946

  • தொடங்கியவர்
ஸ்ரீலங்கா   183 & 5/2 (4.0 ov)
இந்தியா  375
  • தொடங்கியவர்

IMG_1813_zpsvzldoye7.jpg

இலங்கை அணி தோல்லியை நோக்கி...

  • தொடங்கியவர்
தவான், கோஹ்லி சதம் குவிப்பு ; கௌஷல் சில்வா 5 விக்கெட்களை வீழ்த்தினார்
2015-08-13 21:42:11

இலங்கை அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஷிகர் தவான் ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 375 ஓட்டங்களைக் குவித்தது.

 

11574kohli-dhawan-.jpgகாலி சர்வதேச அரங்கில் நடைபெறும் இப்போட்டியில் முதல்நாள் ஆட்டமுடிவின்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்ட்களைப் பெற்றிருந்தது. போட்டியின் இரண்டாவது நாளான இன்று  தமது ஆட்டத்தை தொடர்ந்து ஷிகர் தவானும் அணித்தலைவர் விராட் கோஹ்லியும் சதங்களைக் குவித்தனர்.

 

கோஹ்லி 11 பௌண்டரிகள் உட்பட 103 ஓட்டங்களைக் குவித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரின் 11 ஆவது சதமாகும். ஷிகர் தவான்  13 பௌண்டரிகள் உட்பட 134 ஓட்டங்களைக் குவித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர் பெற்ற 3 ஆவது சதமாகும்.


இவ்விருவரும் ஆட்டமிழந்தபின் இந்திய அணி தடுமாறத் தொடங்கியது.


 தேநீர் இடைவேளையின்போது  இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவ்வணி 375 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

 

11574_kaushal2.jpg

இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் கௌசல் சில்வா, 134 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர்  5 விக்கெட்களை கைப்பற்றுவது இது இரண்டாவது தடவையாகும்.


 நுவன் பிரதீப் 98 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தம்மிக்க பிரசாத் 54 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும்  ஏஞ்சலோ மெத்யூஸ் 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


இன்று  தனது இரண்டாவதுஇன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி  ஆட்டமுடிவின்போது 2 விக்கெட் இழப்பிற்கு 5 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


திமுத் கருணாரட்ன அஸ்வின் பந்துவீச்சிலும் கௌஷல் சில்வா மிஸ்ராவின் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். தம்மிக பிரசாத் 3 ஓட்டங்களுடனும் குமார் சங்கக்கார ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11574#sthash.aQMmwP0f.dpuf

இனி சொறி லங்கா சொறிஞ்சுக்கிட்டே இருக்க வேண்டியதுதான் :grin:

 

  • தொடங்கியவர்

இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் சாதனைத் துளிகள்...

 
dhawan_2509753f.jpg
 

3

நேற்று சதமடித்ததன் மூலம் அந்நிய மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த 3-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஷிகர் தவன். முன்னதாக கடந்த ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சதமடித்திருந்தார். சுனில் கவாஸ்கர், ராகுல் திராவிட் ஆகியோர் மேற்கண்ட சாதனையை செய்த மற்ற இந்தியர்கள் ஆவர்.

227

கோலி-தவன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இலங்கைக்கு எதிராக 3-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த இந்திய ஜோடி என்ற பெருமையை தட்டிச் சென்றது.

8

இந்திய அணியின் 8 பேட்ஸ்மேன்கள் எல்பிடபிள்யூ அல்லது போல்டு முறையில் ஆட்டமிழந்தனர். இதுபோன்று இந்தியர்கள் ஆட்டமிழப்பது 5-வது முறையாகும்.

1

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கருணா ரத்னே, ஜே.கே.சில்வா ஆகியோர் முறையே அஸ்வின், மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். டெஸ்ட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் ஓர் அணியின் இரு தொடக்க வீரர்களும் ரன் ஏதுமின்றி சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழப்பது இதுவே முதல்முறையாகும்.

4

கேப்டனாக பதவி வகித்த முதல் 4 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்துள்ளார் கோலி. இந்த சாதனையை செய்த 3-வது வீரர் கோலி ஆவார். இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக், முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆகியோர் மற்ற இருவர். இதில் குக், கேப்டனாக பதவி வகித்த முதல் 5 போட்டிகளில் சதமடித்துள்ளார்.

2

இலங்கை மண்ணில் டெஸ்ட் போட்டியில் 50 ரன்களுக்கு மேல் குவித்த 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை விருத்திமான் சாஹா (60) பெற்றுள்ளார். முதல் விக்கெட் கீப்பர் தோனி ஆவார். 2010-ல் கொழும்பில் நடைபெற்ற போட்டியில் தோனி 76 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/இந்தியா-இலங்கை-முதல்-டெஸ்ட்-சாதனைத்-துளிகள்/article7538243.ece

  • தொடங்கியவர்

நடுவரின் மோசமான தவறுகளினால் சந்திமால், திரிமானே பிழைக்க, இலங்கை முன்னிலை

 
சங்கக்காராவுக்கு அப்பீல் செய்யும் இந்திய வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி.
சங்கக்காராவுக்கு அப்பீல் செய்யும் இந்திய வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி.

கால்லே டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை எதிர்கொண்ட இலங்கை அணி தற்போது தினேஷ் சந்திமால், திரிமானே ஆட்டத்தினால் முன்னிலை பெற்றுள்ளது.

சற்று முன்வரை இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. சந்திமால் 77பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 78 ரன்களுடனும், திரிமானே 44 ரன்கள் எடுத்து சற்று முன் அஸ்வின் பந்தில் ரஹானேயின் அருமையான கேட்சுக்கு அவுட் ஆனார்.

இவர்கள் இருவரும் இணைந்து 125 ரன்களைச் சேர்த்து இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து அணியை மீட்டனர். சில நெருக்கமான முறையீடுகள் இவர்களுக்கு எதிராக எழுப்பப் பட்டது, ஆனால் அது அவுட் இல்லை என்ற தீர்ப்பையே பெற்றுத் தந்தது.

இன்று காலை 5/2 என்று தொடங்கிய இலங்கை அணி வந்தவுடனேயே தம்மிக பிரசாத் விக்கெட்டை வருண் ஆரோனின் அதிவேக துல்லிய பவுன்சருக்கு இழந்தது. அவர் ஆஃப் திசையில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகு சங்கக்காரா, அஞ்சேலோ மேத்யூஸ் இணைந்து ஸ்கோரை 92 ரன்களூக்குக் கொண்டு சென்றனர். மேத்யூஸ் அஸ்வினையும் கூட அடித்து ஆடினார்.

சங்கக்காரா அருமையான ஒரு இன்னிங்ஸிற்கு அடித்தளமாக சில அற்புதமான ஷாட்களை ஆடினார், ஆனால் அஸ்வினின் பந்து ஒன்று ஸ்பின் ஆகி எழும்ப சங்கக்காரா தடுத்தாடினார் பந்து விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் ரஹானேவுக்கு இடது புறம் சென்றது அவர் அபாரமாக டைவ் அடித்து ஒரு கையில் கேட்ச் எடுத்தார்.

இவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்திற்கெல்லாம் 39 ரன்கள் எடுத்து ஆடிவந்த அபாய மேத்யூஸ், அமித் மிஸ்ராவின் எழும்பிய லெக் ஸ்பின் பந்தை முன்னால் வந்து தடுத்தாட ராகுலிடம் கேட்ச் ஆனது.

உணவு இடைவேளையின் போது 108/5 என்று இருந்தது இலங்கை.

நடுவரின் மிகப்பெரிய பிழைகள்:

தினேஷ் சந்திமால் அஸ்வினை தொடர்ந்து ஸ்வீப் ஆடிவந்தார். இந்நிலையில் ஒரு பந்தை அவர் ஸ்வீப் செய்ய அது மட்டையில் பட்டு ஹெல்மெட்டில் பட்டு கேட்ச் ஆனது, நடுவர் ஆக்சன்போர்ட் நாட் அவுட் என்றார். ஆனால் ரீப்ளேயில் மட்டையின் பங்கு இருந்தது தெளிவாகத் தெரிந்தது.

இதற்கு அடுத்த ஓவரிலேயே திரிமானே உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அவுட் ஆகியிருக்க வேண்டும்,. மிஸ்ரா பந்தில் மட்டை உள் விளிம்பில் பட்டு சில்லி பாயிண்டில் கேட்ச் ஆனது. ஆனால் அவுட் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. டிஆர்எஸ். இருந்திருந்தால் இந்த இருவரும் அவுட்.

3-வது முறை, சந்திமாலுக்கு மிஸ்ரா வீச, சந்திமால் ஆடிய பந்து சிலி மிட் ஆஃப் பீல்டர் பூட்ஸில் பட்டு எழும்பியது மிஸ்ராவே கேட்ச் பிடித்தார் மீண்டும் பெரிய அப்பீல், பிறகு ரிவியூ. மிக நீண்ட ரிவியூவுக்குப் பிறகு நாட் அவுட் என்று தீர்ப்பானது.

பந்து தரையில் பட்டு ஷூவில் பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது, ஆனால் தரையில் பட்டிருந்தால் நெருக்கமான் ரீப்ளேயில் மண் கொஞ்சமாவது பெயர்ந்தது தெரிந்திருக்கும், ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லை. எனவே இதுவும் அவுட்.

இதனால் இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 125 ரன்களைச் சேர்த்தனர்.

அஸ்வின் அளவுக்கு ஹர்பஜன் பந்துகளில் தாக்கம் இல்லை. பந்துகள் திரும்பும் இந்தப் பிட்சில் கூட அவர் விக்கெட்டுகளைக் கைப்பற்ற திணறி வருகிறார்.

http://tamil.thehindu.com/sports/நடுவரின்-மோசமான-தவறுகளினால்-சந்திமால்-திரிமானே-பிழைக்க-இலங்கை-முன்னிலை/article7539965.ece

  • தொடங்கியவர்

Screenshot%202_zpswrborto3.png

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு 176 ரன் வெற்றி இலக்கு: ரஹானே உலக சாதனை!

 

காலே: காலேயில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை அணி. அஸ்வின் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரஹானே 8 கேட்சுகளை பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
 

indian%20test%20team.jpg

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 183 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக மேத்யூஸ் 64 ரன்களும், சண்டிமால் 59 ரன்களும் எடுத்தனர். இந்திய வீரர் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 375 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் தவான் (134), கேப்டன் கோலி (103) ஆகியோர் சதம் அடித்தனர். சஹா 60 ரன் விளாசினார். இந்திய அணி 192 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை தரப்பில் குஷால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி,  367 ரன்கள் குவித்தது. சண்டிமால் அபாரமாக விளையாடி, 162 ரன்கள் எடுத்தார். சங்கக்கரா 40 ரன்களும், மேத்யூஸ் 39 ரன்களும், திரிமேனி 44 ரன்களும், முபாரக் 49 ரன்களும் எடுத்தனர்.

இந்திய வீரர் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், மிஸ்ரா 3 விக்கெட்டும், ஹர்பஜன், ஆரோன், இசாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கி விளையாடியது. ராகுல் மீண்டும் சொதப்பினார். 5 ரன்னில் ஹெராத் பந்தில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து இசாந்த் சர்மா களம் இறங்கினார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, ஒரு விக்கெட்டை இழந்து 23 ரன்கள் எடுத்தது. நாளை 4வது நாள் ஆட்டம் தொடர்கிறது.

டெஸ்ட் போட்டியில் 8 கேட்சுகளை பிடித்து ரஹானே உலக சாதனை

cricket.jpg



இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் ரஹானே 8 கேட்சுகளை பிடித்து உலக சாதனை படைத்துள்ளார். விக்கெட் கீப்பர் இல்லாமல் ஒருவர் டெஸ்ட் போட்டியில் 8 கேட்சுகளை பிடித்த வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தி உள்ளார் ரஹானே. முதல் இன்னிங்ஸில் 3 கேட்சுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 கேட்சுகளையும் பிடித்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த கிரக் சேப்பல் 7 கேட்சுகள் பிடித்ததுதான் சாதனையாக இருந்தது.

http://www.vikatan.com/news/article.php?aid=51009

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.