Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இந்தியா கட்டுக்கோப்பான பந்துவீச்சு: இலங்கை 3 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள்

 
சங்ககாராவை ‘ஒர்க் அவுட்’ செய்து வீழ்த்திய அஸ்வின். | படம்: ராய்ட்டர்ஸ்.
சங்ககாராவை ‘ஒர்க் அவுட்’ செய்து வீழ்த்திய அஸ்வின். | படம்: ராய்ட்டர்ஸ்.

கொழும்பு டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இந்தியாவின் 393 ரன்களுக்கு எதிராக இலங்கை தனது முதல் இன்னிங்சில் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்டத்தின் இந்த நிலையில் இந்தியா ஆரோக்கியாமன 253 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. முக்கியமான விஷயம் என்னவெனில் இந்திய பவுலர்கள் கட்டுக்கோப்புடன் வீசியதே, குறிப்பாக பேட்டிங்கில் சொதப்பிய ஸ்டூவர்ட் பின்னி 11 ஓவர்கள் 3 மெய்டன்களுடன் 24 ரன்களை விட்டுக் கொடுத்தார், விக்கெட்டையும் கைப்பற்றியிருக்க வேண்டும் ஆனால் அது நோபாலாக அமைந்தது.

சில்வா அப்போது 14 ரன்களில் இருந்தார், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சற்றே குத்தி எழுப்பிய பின்னியின் பந்து சில்வாவின் மட்டை விளிம்பைத் தொட்டு சென்றது சஹா கேட்ச் பிடித்தார், பின்னி முதல் விக்கெட்டை வீழ்த்தியதாக வாழ்த்துக்கள் வரத் தொடங்கிய நிலையில் நோ-பாலுக்காக சரிபார்க்கப்பட்டது, இதில் பின்னி நோ-பால் வீசியது தெள்ளத் தெளிவானது. ஆனால் தொடர்ந்து அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சில பிரச்சினைகளைக் கொடுத்தபடியே இருந்தார். பவுண்டரி பந்துகள் அதிகம் வீசவில்லை.

முன்னதாக உமேஷ் யாதவ் இடது கை தொடக்க வீரர் கருண ரத்னேவுக்கு இன்ஸ்விங் வீசி எல்.பி. செய்தார். சங்கக்காரா இறங்கி கொஞ்சம் தடுமாறி பிறகு செட்டில் ஆனார். அவர் 87 பந்துகளில் 32 ரன்களை எடுத்து அஸ்வின் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய ஆஃப் ஸ்டம்ப்புக்கு நேராக வந்த பந்தை முன்னால் வந்து தடுத்தாடினார் பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு ரஹானேயிடம் சென்றது இடது புறம் பாய்ந்து பிடித்தார், அருமையான கேட்ச். முன்னர் கடினமான கேட்சை சங்கக்காராவுக்கு விட்டதை ஈடு செய்தார்.

சங்கக்காரா வீழ்ந்ததற்குக் காரணம், அஸ்வினின் பந்து ஸ்பின் ஆகி வெளியே செல்லுமா அல்லது ஸ்டம்புக்கு நேராக வந்து கால்காப்பைத் தாக்கி எல்.பி. ஆகிவிடுமா, அல்லது பவுல்டு ஆகி விடுமா என்ற சந்தேகமே. அந்த சந்தேகத்தை சங்கா மனதில் ஏற்படுத்தினார் அஸ்வின். அதனால்தான் பார்ப்பதற்கு அது ஏதோ மிகவும் சாதாரணமாக வீழ்த்தியது போல் தெரிந்தாலும் அதன் பின்னணியில் நிறைய மனோவியல் நாடகங்கள் நடைபெற்றதை அவ்வளவு சுலபமாக மேலோட்டமாக பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியாது. சங்காவை ஓரளவுக்கு ‘ஒர்க் அவுட்’ செய்தார் அஸ்வின் என்றே கூற வேண்டும்.

நடுவில் சங்ககாரா, சில்வா 2-வது விக்கெட்டுக்காக 74 ரன்களைச் சேர்த்தாலும் அஸ்வினும், பின்னியும் இருவரையும் சோதனைக்குள்ளாக்கினர் என்றால் மிகையாகாது. சில்வா தனது அரைசதத்தை எடுத்து முடித்தவுடன் 51 ரன்களில் அமித் மிஸ்ராவின் லெக் ஸ்பின் பந்தை திரும்பும் திசைக்கு நேர் எதிராக ஸ்வீப் செய்தார் சில்வா ஆனால் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு இதற்காகவென்றே ஷார்ட் ஃபைன் லெக்கில் நிறுத்தப்பட்டிருந்த அஸ்வின் கையில் கேட்ச் ஆனது.

ஆட்ட முடிவில் திரிமானே 28 ரன்களுடனும், அஞ்சேலோ மேத்யூஸ் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 53 ஓவர்களில் இலங்கை 140 ரன்களையே எடுக்க முடிந்தது. பிட்சில் சில பந்துகள் திடீரென திரும்புகின்றன, சில பந்துகள் திடீரென குட் லெந்திலிருந்து எழும்புகின்றன.

உமேஷ் யாதவ், சில பந்துகளில் மேத்யூஸை ஆட்டிப்படைத்தார், ஆனால் விக்கெட்டைக் கைப்பற்ற முடியவில்லை. கடந்த டெஸ்ட் போட்டியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டது போல் தெரிகிறார் கோலி, பீல்டிங் நிலை சரியாக இருந்தது, பவுண்டரிகளை அடிக்க இலங்கை பேட்ஸ்மென்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர்.

சுலப பவுண்டரிகளை பவுலர்களும் அனுமதிக்கவில்லை. நாளை 3-ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்தியா முன்னிலை பெறுமா என்பதை பார்க்க வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/இந்தியா-கட்டுக்கோப்பான-பந்துவீச்சு-இலங்கை-3-விக்கெட்டுகளை-இழந்து-140-ரன்கள்/article7566250.ece

  • Replies 77
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அஸ்வினிடம் வீழ்ந்தார் சங்ககாரா; இறங்கும் போது கரகோஷ மரியாதை செய்த இந்திய வீரர்கள்

 
 
பிட்சிற்கு பேட் செய்ய வந்த சங்கக்காராவுக்கு கரகோஷ மரியாதை செய்த இந்திய வீரர்கள். | படம்: ராய்ட்டர்ஸ்.
பிட்சிற்கு பேட் செய்ய வந்த சங்கக்காராவுக்கு கரகோஷ மரியாதை செய்த இந்திய வீரர்கள். | படம்: ராய்ட்டர்ஸ்.

தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடும் சங்ககாரா இன்று பேட்டிங்கிற்காக களமிறங்கியபோது ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் இலங்கை வீரர்கள் அனைவரும் கரகோஷம் செய்தனர்.

களத்துக்குள் இறங்கி பிட்ச் அருகே வரும் போது இந்திய வீரர்கள் வரிசையாக நின்று சங்ககாராவுக்கு கரகோஷ மரியாதை செய்தனர்.

திமுத் கருணரத்னே, உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறிய பிறகு சங்ககாரா களமிறங்கினார்.

அப்போது பிட்ச் நோக்கி வரும்போது இந்திய வீர்ர்கள் அனைவரும் வரிசையாக நின்று கரகோஷ மரியாதை செய்தனர், கிரீஸிற்குச் சென்று கார்டு எடுக்கும் முன் விராட் கோலியுடன் கைகுலுக்கினார் சங்ககாரா.

இந்நிலையில் சற்று முன் அவர் 32 ரன்களில் மீண்டும் ஒரு முறை அஸ்வினிடம் சிக்கினார், பந்து திரும்ப சங்ககாரா மட்டை விளிம்பில் பட்டு ரஹானே பாய்ந்து பிடித்தார். 87 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 32 ரன்களை எடுத்தார் சங்ககாரா.

தற்போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது, சில்வா 41, திரிமானே 0, களத்தில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/அஸ்வினிடம்-வீழ்ந்தார்-சங்ககாரா-இறங்கும்-போது-கரகோஷ-மரியாதை-செய்த-இந்திய-வீரர்கள்/article7565732.ece

  • தொடங்கியவர்

ஏஞ்சலா மேத்யூஸ் சதத்தால் வலு பெற்றது இலங்கை!

 

கொழும்பு: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஏஞ்சலா மேத்யூசின் சதத்தால் இலங்கை அணி சற்று வலு பெற்றது.

ang.jpg

கொழும்புவில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் எடுத்தது. இளம் வீரர் லோகேஷ் ராகுல் 108 ரன்கள் அடித்து அசத்தினார். தொடர்ந்து இலங்கை அணி முதன் இன்னிங்சை தொடங்கியது. கருணரத்னே ஒரு ரன்னில் வெளியேறினார்.குஷால் சில்வா 51 ரன்களும் சங்ககாரா 32 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அடுத்து ஜோடி சேர்ந்த திரிமண்ணே, ஏஞ்சலா மேத்யூஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. திரிமண்ணே 62 ரன்கள் எடுத்த நிலையில், இஷாந்த் சர்மா பந்தில் வீழ்ந்தார். ஏஞ்சலா மேத்யூஸ் 167 பந்துகளில், 12 பவுண்டரிகள் உதவியுடன் சதம் அடித்தார்.

ஏஞ்சலா மேத்யூஸ் சர்வதேச அரங்கில் அடிக்கும் 6வது சதம் இதுவாகும். இந்தியாவுக்கு எதிராக முதல் சதமும் கூட.மேத்யூஸ் மேலும் 2 ரன்கள் சேர்த்த நிலையில், பின்னி பந்துவீச்சில் முரளிவிஜயிடம் பிடிகொடுத்தார். இலங்கை அணி 306 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

http://www.vikatan.com/news/article.php?aid=51366

  • தொடங்கியவர்

கொழும்பு டெஸ்ட் 3-ம் நாள்: விஜய், ரஹானேயின் உறுதியில் இந்தியா 157 ரன்கள் முன்னிலை

 
கட் ஷாட் ஆடும் முரளி விஜய். | படம்: ஏ.எஃப்.பி.
கட் ஷாட் ஆடும் முரளி விஜய். | படம்: ஏ.எஃப்.பி.

கொழும்புவில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் ராகுல் விக்கெட்டை இழந்து 70 ரன்கள் எடுத்துள்ளது.

கே.எல்.ராகுல் 2 ரன்களில் தம்மிக பிரசாத்தின் முதல் ஓவரிலேயே இன்ஸ்விங்கர் ஒன்றுக்கு முன்னங்காலை நன்றாகக் குறுக்கே போடாமல் அரைகுறையாக முன்னங்கலை கொண்டு வந்தார், பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பை தாக்கியது. முதல் இன்னிங்ஸ் சதம் எடுத்தவரிடமிருந்து இத்தகைய தளர்வான தடுப்பாட்ட உத்தியை இலங்கை பவுலர் பிரசாத்தே எதிர்பார்க்கவில்லை, ஒரு விதத்தில் விக்கெட்டை ராகுல் தானம் செய்தார் என்றே கூற வேண்டும்.

அதன் பிறகு சுமார் 29 ஓவர்களை முரளி விஜய்யும், ரஹானேயும் உறுதியுடன் தடுத்து ஆடினர். பதட்டத்துடன் ஆடவில்லை, நல்ல தன்னம்பிக்கையுடனேயே ஹெராத், கவுஷால் ஆகியோரை நெருக்கமான களவியூகத்திலும் தடுத்தாடினர்.

முரளி விஜய் 39 ரன்களுடனும், அஜிங்கிய ரஹானே 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருவரும் சேர்ந்தே மொத்தம் 3 பவுண்டரிகளையே இந்த இன்னிங்ஸில் அடித்துள்ளனர், அதுவும் கடைசி 80 பந்துகளில் பவுண்டரியே வரவில்லை. அவ்வளவு உன்னிப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

முன்னதாக இலங்கை அணி 306 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தேநீர் இடைவேளையின் போது 298/7 என்று இருந்த இலங்கை, வந்தவுடன் 22 ரன்களில் இருந்த ஜெஹன் முபாரக் விக்கெட்டை மிஸ்ராவின் அருமையான லெக் ஸ்பின் பந்துக்கு இழந்தது. அவர் பவுல்டு ஆனார்.

பந்து காற்றில் கூக்ளி போல் லேசாகத் திரும்பியது இதனையடுத்து முபாரக் ஆஃப் ஸ்டம்பை கவர் செய்யும் உத்தியைக் கடைபிடித்தார். அதாவது பந்து கூக்ளியாகவே மட்டையை கடந்து செல்லும் என்று நினைத்தார், ஆனால் லெக் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆகி லெக்ஸ்பின் ஆனது, தடுப்பு மட்டையைக் கடந்து கில்லியைத் தட்டியது, மிகவும் அருமையான பந்து, ஷேன் வார்ன் போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அடிக்கடி வீசும் ஒரு பந்தாகும் இது.

ஹெராத்துக்கு ஒரு முறை பிளம்ப் எல்.பி. கொடுக்கப்படாமல் கடைசியில் அஸ்வின் பந்தை ஸ்வீப் ஆடமுயன்று 1 ரன்னில் எல்.பி.ஆகி வெளியேறினார். தாரிந்து கவுஷால், மிஸ்ரா பந்தில் சஹாவிடம் ஸ்டம்ப்டு ஆனார். இலங்கை 306 ஆல் அவுட். 241/3 என்ற நிலையிலிருந்து அடுத்த 65 ரன்களுக்கு இந்தியா 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது. கட்டுக்கோப்பான, பொறுமையான பந்து வீச்சுக்கு கிடைத்த வெற்றியாகும் இது. களவியூகமும் பவுண்டரிகள் அடிக்க முடியாதவாறு அபாரமாக அமைந்தது.

மிஸ்ரா அதிகபட்சமாக 21 ஓவர்கள் வீசி 3 மெய்டன்களுடன் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் இசாந்த் சர்மா மதியம் வீசிய அருமையான பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற பின்னி, யாதவ் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்தப் பிட்சில் பந்துகள் அவ்வப்போது திரும்பினாலும் பேட்டிங்கும் செய்ய வாய்ப்புள்ளதாகவே அமைந்துள்ளது, எனவே இந்திய அணி 300 ரன்களுக்கும் மேல் முன்னிலையைக் கொண்டு சென்றால் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

  • தொடங்கியவர்

ரஹானே அருமையான சதம்: இந்தியா 300 ரன்கள் முன்னிலை

 
ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும் ரஹானே அருமையான சதம் எடுத்தார். | படம்: ஏ.பி.
ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும் ரஹானே அருமையான சதம் எடுத்தார். | படம்: ஏ.பி.

கொழும்பு டெஸ்ட் போட்டியில் அஜிங்கிய ரஹானே சதம் எடுத்து ஆடி வருகிறார். இந்தியா 300 ரன்கள் முன்னிலை பெற்றது.

உணவு இடைவேளியின் போது 182 ரன்களில் இருந்த ரஹானே, உணவு இடைவேளை முடிந்து சற்று முன் கவுஷாலின் ஆஃப் ஸ்பின்னை பைன் லெக் திசையில் தட்டிவிட்டு 1 ரன் எடுத்து தனது 4-வது டெஸ்ட் சதத்தை எடுத்து முடித்தார்.

213 பந்துகளைச் சந்தித்த ரஹானே அதில் 7 பவுண்டரிகளை அடித்தார். மறு முனையில் ரோஹித் சர்மா 17 ரன்களுடன் ஆடி வருகிறார்.

3-ம் நிலை என்ற சவாலை எதிர்கொண்ட ரஹானே முதல் இன்னிங்சில் சரியாக ஆடாததை கவனத்தில் கொண்டு 2-வது இன்னிங்சில் மிக முக்கியமான சதத்தை அணிக்காக எடுத்துள்ளார்.

ரஹானேயை 99 ரன்களில் நெருக்கடி கொடுத்தார் மேத்யூஸ், நெருக்கமான பீல்டிங் அமைப்புடன் இறுக்கமான பந்து வீச்சும் அமைய, பொறுமை காத்தார் ரஹானே.

பிட்சில் பந்துவீச்சுக்கும் உதவி இருந்தாலும், நின்று நிதானம் காண்பித்தால் பேட்டிங்கும் ஆடமுடியும் என்ற நிலையே உள்ளது.

  • தொடங்கியவர்

412 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணி டிக்ளேர்

 
சதம் அடித்த ரஹானே. இந்தியா 325 ரன்களுக்கு டிக்ளேர். | படம்: ஏ.பி.
சதம் அடித்த ரஹானே. இந்தியா 325 ரன்களுக்கு டிக்ளேர். | படம்: ஏ.பி.

கொழும்பு டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று இந்திய அணி தன் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 412 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்று இன்னமும் 27 ஓவர்களும் நாளை 90 ஓவர்களும் மீதமுள்ள நிலையில் 117 ஓவர்களில் இலங்கையை வீழ்த்த முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இன்று 70/1 என்று தொடங்கிய இந்திய அணி முரளி விஜய் (82), ரஹானே (126) ஆகியோரது அபார ஆட்டத்தினால் எழுச்சி பெற்றது. ரோஹித் சர்மா 34 ரன்கள் பங்களிப்பு செய்து மிகப்பெரிய ஸ்லாக் ஸ்வீப் ஆட முயன்று பவுண்டரி அருகே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரஹானே 243 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து கவுஷாலின் பந்தை டிரைவ் ஆடும் போது மட்டை விளிம்பில் பட்டு சண்டிமாலிடம் கேட்ச் ஆனது.

சஹா களமிறங்கி ஒரு ரன் ஓடி என்ன காரணத்தினாலோ ஆட முடியாமல் பெவிலியன் சென்றார், பிறகு மீண்டும் இறங்கினார், இந்தக் குழப்பம் தீருவதற்குள் கே.எல்.ராகுல் கீப்பிங் செய்வார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது தற்போது.

பின்னி ரிவர்ஸ் ஸ்வீப்களாக அடித்து 17 ரன்களில் சோம்பேறித்தனமான ஷாட்டுக்கு பிரசாத் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அஸ்வின், சமீராவை ஒரு டாப் எட்ஜ் சிக்ஸ் மற்றும் அருமையான ஆஃப் டிரைவ் ஆகியவற்றின் மூலம் 19 ரன்கள் எடுத்து பிரசாத் பந்தில் சண்டிமாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மிஸ்ரா 10 ரன்களில் பிரசாத்திடம் ஆட்டமிழக்க சஹா 13 நாட் அவுட். உமேஷ் யாதவ் நாட் அவுட் 8. இந்தியா 325/8 டிக்ளேர் செய்தது.

இலங்கை தரப்பில் பிரசாத் மற்றும் கவுஷால் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்

http://tamil.thehindu.com/sports/412-ரன்கள்-முன்னிலை-பெற்று-இந்திய-அணி-டிக்ளேர்/article7571915.ece

  • தொடங்கியவர்

கடைசி டெஸ்ட் இன்னிங்சில் சங்ககாரா 18 அவுட்; மீண்டும் அஸ்வினிடம் வீழ்ந்தார்

 
 
சங்கக்காரா 18 ரன்களில் தனது கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தார். | படம்: ஏ.எஃப்.பி.
சங்கக்காரா 18 ரன்களில் தனது கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தார். | படம்: ஏ.எஃப்.பி.

கொழும்பு டெஸ்ட் போட்டியில் தனது கடைசி இன்னிங்ஸில் சங்ககாரா 18 ரன்களில் அஸ்வினிடம் ஆட்டமிழந்தார். களத்தை விட்டுச் செல்லும் முன்னர் இந்திய வீர்ர்கள் சங்ககாராவுடன் கைகுலுக்கினர்.

அவர் மட்டையை உயர்த்திய படி உணர்ச்சிகளை அடக்கியபடி பெவிலியன் நோக்கி சென்றார். பலத்த கரகோஷம் எழுந்தது.

413 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடும் இலங்கை அணி முதலில் அஸ்வினிடம் சில்வா விக்கெட்டை இழந்தது. இது தேவையில்லாத விக்கெட், புல்டாஸை நேராக பின்னி கையில் கேட்ச் கொடுத்து அவர் 1 ரன்னில் வெளியேறினார்.

சங்கக்கார களமிறங்கி அவரது டிரேட் மார்க் பிளிக் பவுண்டரியுடன் 3 பவுண்டரிகள் அடித்து 18 ரன்களில் இருந்த போது அஸ்வினின் ஒரு பந்து அருமையாக திரும்ப சங்ககாராவின் தடுப்பு மட்டையின் விளிம்பை கடைசியாக ஒரு முறை பந்து முத்தமிட்டுச் சென்றது, முரளி விஜய் கல்லியில் கேட்ச் பிடித்தார்.

இந்தத் தொடரில் அஸ்வினுக்கு எதிராக சங்ககாரா 43 பந்துகளைச் சந்தித்து 22 ரன்களை மட்டுமே எடுத்து 4 முறை ஆட்டமிழந்துள்ளார். சராசரி 5.5.

பொதுவாக கடைசி டெஸ்ட் போட்டியில் நெருக்கடி நிலைமைகளை ஓய்வு பெறும் வீரர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் சங்கா விளையாடிய வரை உற்சாகமாகவே விளையாடினார். துரதிர்ஷ்டவசமாக அஸ்வினின் பந்து வீச்சு மீண்டும் ஒரு முறை அவரை வீழ்த்தியது.

இலங்கை அணி இன்னமும் 12 ஓவர்களை இன்று சந்திக்க வேண்டிய நிலையில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்துள்ளது.

மேத்யூஸ் 13 ரன்களுடனும், கருணரத்னே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அஸ்வின் 7 ஓவர் 3 மெய்டன் 15 ரன்கள் 2 விக்கெட்.

http://tamil.thehindu.com/sports/கடைசி-டெஸ்ட்-இன்னிங்சில்-சங்ககாரா-18-அவுட்-மீண்டும்-அஸ்வினிடம்-வீழ்ந்தார்/article7571936.ece

  • தொடங்கியவர்
இலங்கை அணிக்கு 413 ஓட்ட இலக்கு
2015-08-23 20:26:30

இந்­தி­யா­வுக்கு எதி­ராக பி. சர­வ­ண­முத்து விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் 413 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இரண்­டா­வது இன்­னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தா­டி­வரும் இலங்கை, போட்­டியின் நான்காம் நாளான இன்றைய ஆட்ட நேர முடி­வின்­போது 2 விக்கெட் இழப்­புக்கு 72  ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

 

11692rehane1.jpg


திமுத் கரு­ணா­ரட்ன 25 ஓட்­டங்­க­ளு­டனும் ஏஞ்­சலோ மெத்யூஸ் 23 ஓட்­டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்­தனர்.

 

கௌஷால் சில்வா (01), குமார் சங்­கக்­கார (18) ஆகிய இரு­வரே ஆட்­ட­மி­ழந்­த­வர்­க­ளாவர். வீழ்ந்த இரண்டு விக்­கெட்­க­ளையும் அஷ்வின் கைப்­பற்­றினார்.


தனது இரண்­டா­வது இன்­னிங்ஸை ஒரு விக்கெட் இழப்­புக்கு 70 ஓட்­டங்கள் என்ற நிலை­யி­லி­ருந்து இன்று காலை தொடர்ந்த இந்­தியா, 8 விக்­கெட்­களை இழந்து 325 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­த­போது துடுப்­பாட்­டத்தை நிறுத்­திக்­கொண்­டது.


ஆரம்ப வீரர் முரளி விஜய் (82), அஜின்­கியா ரஹானே (126) ஆகிய இரு­வரும் இரண்­டா­வது விக்­கெட்டில் 168 ஓட்­டங்­களைப் பகிர்ந்து இந்­திய இன்­னிங்ஸை பலப்­ப­டுத்­தினர்.


தனது 17ஆவது டெஸ்ட் போட்­டியில் விளை­யாடும் அஜின்­கியா ரெஹானே, நான்­கா­வது டெஸ்ட் சதத்தைப் பெற்றார்.


ஏனைய துடுப்­பாட்ட வீரர்­களில் ரோஹித் ஷர்மா மாத்­தி­ரமே ஓர­ளவு திற­மையை வெளிப்­ப­டுத்தி 34 ஓட்­டங்­களைப் பெற்­ற­துடன் மேலும் ஐவர் இரட்டை இலக்க எண்­ணிக்­கை­களைப் பெற்­றனர்.
இலங்கை பந்­து­வீச்சில் தம்­மிக்க பிரசாத், தரிந்து கௌஷால் ஆகிய இரு­வரும் தலா 4 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினர்.


எண்­ணிக்கை சுருக்கம்:


இந்­தியா முதல் இன்: 393 (லோக்கேஷ் ராகுல் 108, ரோஹித் ஷர்மா 79, விராத் கோஹ்லி 78, ரிதிமான் சஹா 56, ரங்­கன ஹேரத் 81  – 4 விக்., ஏஞ்­சலோ மெத்யூஸ் 24 – 2 விக்.)


இலங்கை 1ஆவது இன்: 306 (ஏஞ்­சலோ மெத்யூஸ் 102, லஹிரு திரி­மான்ன 62, கௌஷால் சில்வா 51, குமார் சங்­கக்­கார 32, அமித் மிஷ்ரா 43 – 4 விக்.)


இந்­தியா 2ஆவது இன்: 325 க்கு 8 விக். டிக்­லயார்ட் (அஜின்­கியா ரஹானே 126, முரளி விஜய் 82, ரோஹித் ஷர்மா 34, தம்­மிக்க பிரசாத் 43  – 4 விக்., தரிந்து கௌஷால் 118 க்கு 4 விக்.)


இலங்கை 2ஆவது இன்: 72  – 2 விக். (திமுத் கருணாரட்ன 25 ஆ.இ., ஏஞ்சலோ மெத்யூஸ் 23 ஆ.இ., அஷ்வின் 23 –2 விக்.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11692#sthash.IqsW5nEd.dpuf
  • தொடங்கியவர்

இலங்கை பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றிய இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்

 

லங்கை பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றும் விதத்தில் களத்தில் செயல்பட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 65 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ish.jpg

கொழும்பு நகரில் இந்திய- இலங்கை அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதற்கிடையே முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா இலங்கை பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றும் விதத்தில் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. அப்போது இஷாந்த் சர்மா தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.


கடந்த சனிக்கிழமை திரிமண்ணேவையும் தொடர்ந்து சண்டிமாலையும் இஷாந்த் அவுட் செய்தார். அப்போது அவர் நடந்து கொண்ட விதம் விதிமுறைகளுக்கு எதிரானது என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது. திரிமண்ணேவை ஸ்லெட்ஜிங் செய்யும் வகையில் நடந்து கொண்டதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதமும் சண்டிமாலை வெறுப்பேற்றியதற்காக 50 சதவீதமும் இஷாந்த் சர்மாவுக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2வது டெஸ்ட் போட்டிக்கான கட்டணத்தில் 35 சதவீதம் மட்டுமே இஷாந்த் சர்மாவுக்கு சம்பளமாக கிடைக்கும்.

இந்த போட்டியில் இஷாந்த் சர்மா பந்தில்  திரிமண்னே விக்கெட் கீப்பர் சகாவிடன் பிடி கொடுத்தார். நடுவர் 'அவுட்' என கை உயல்த்தியும் திரிமண்னே வெளியேறாமல் களத்திலேயே நின்றார். கடைசியில் தலையை அசைத்தபடியே வெளியேறினார். இவரின் இந்த செயல் ஐ.சி.சி.யின் வீரர்களின் நடத்தை விதிமீறல் ஆகும். இதற்காக திரிமான்னேவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

http://www.vikatan.com/news/article.php?aid=51408

2-வது டெஸ்ட்: 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை - வெற்றியை நெருங்கும் இந்தியா

 
மாத்யூஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் உமேஷ் யாதவ் | படம்: ஏஎஃப்பி
மாத்யூஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் உமேஷ் யாதவ் | படம்: ஏஎஃப்பி

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று, இலங்கை அணி மதிய உணவு இடைவேளையின்போது 9 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.

இந்தியா நிர்ணயித்த 413 ரன்கள் இலக்கை விரட்டிய இலங்கை அணி நேற்றே இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்றைய ஆட்டத்தின் முதல் பந்திலேயே கேப்டன் மாத்யூஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அந்த விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து தினேஷ் சந்திமல் 15 ரன்களுக்கு மிஷ்ராவின் அற்புதமான சுழலில் வீழ்ந்தார்.

அடுத்தடுத்து வந்த திரிமன்னே, முபாரக், கருணரத்னே என இலங்கை வீரர்கள் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, இலங்கை அணி 128 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கிட்டத்தட்ட இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் மதிய உணவு இடைவேளை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே எடுக்கப்பட்டது. இந்திய அணியின் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

முரளி விஜய் - சாஹா விலகல்

முன்னதாக, இன்றைய நாள் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே, காயம் காரணமாக இந்திய வீரர்கள் முரளி விஜய் மற்றும் விருத்தமான் சாஹா இருவரும் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இன்றைய போட்டியில் சாஹாவுக்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பிங் பொறுப்பை கவனித்து வருகிறார்.

http://tamil.thehindu.com/sports/2வது-டெஸ்ட்-9-விக்கெட்டுகளை-இழந்த-இலங்கை-வெற்றியை-நெருங்கும்-இந்தியா/article7574688.ece

  • தொடங்கியவர்

இந்தியா வெற்றி - விடை பெற்றார் சங்கா

இந்தியா வெற்றி - விடை பெற்றார் சங்கா

 

 
 
 

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முன்னதாக இடம்பெற்ற முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த 20ம் திகதி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அந்த அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய முரளி விஜய் ஒட்டம் எதனையும் பெறாது வௌியேறி ஏமாற்றமளித்தார்.

எனினும் அதிரடியாக ஆடிய மற்றுமொரு ஆரம்ப வீரர் லோகேஷ் ராகுல் 108 ஓட்டங்களை விளாசினார்.

மேலும் விராட் கோலி (78), ரோஹித் சர்மா (79) ஆகியோரும் சிறப்பாக ஆட இந்திய அணி 393 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து, முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன ஒற்றை ஓட்டத்துடன் வௌியேற, குஷல் சில்வா நிலைத்து ஆடி 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

அத்துடன் அணித் தலைவர் மெத்தியூஸ் சிறப்பாக ஆடி 102 ஓட்டங்களையும் லகிரு திரிமானே 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க இலங்கை 306 ஓட்டங்களைப் பெற்ற போது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பின்னர் 87 ஓட்டங்களால் முன்னலையில் இருந்த இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.

சிறப்பாக ஆடிய அந்த அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை 2வது இன்னிங்சை இடைநிறுத்தி, இலங்கைக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பை வழங்கியது.

அந்த அணி சார்பில் ரெஹானே 126 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி 413 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இன்றைய ஐந்தாம் நாளில் அடுத்ததடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து 278 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் 43.4 ஓவர்கள் மட்டுமே நின்றுபிடித்த இலங்கை அணி 134 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதேவேளை இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கலந்து கொள்ளும் இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்டில் சங்கக்கார முதல் இன்னிங்சில் 32 ஓட்டங்களையும் 2வது இன்னிங்சில் 18 ஓட்டங்களையும் மட்டுமே பெற்றார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=71944

  • தொடங்கியவர்

கொழும்பு வெற்றி: அஸ்வின், இந்திய அணி சாதனை துளிகள்

 
2-வது முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின். | படம்: ஏ.பி.
2-வது முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின். | படம்: ஏ.பி.

கொழும்பு டெஸ்ட் போட்டியில் ராகுல், ரஹானே சதங்களை எடுக்க அஸ்வின், மிஸ்ரா தலா 7 விக்கெட்டுகளை இந்த டெஸ்ட் போட்டியில் கைப்பற்ற இந்திய அணி மிகப்பெரிய அயல்நாட்டு டெஸ்ட் வெற்றி ஒன்றைப் பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தின் புள்ளி விவரங்கள் சில வருமாறு:

27 டெஸ்ட் போட்டிகளில் 12-வது முறையாக அஸ்வின் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார். முதல் 27 டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவு 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் கைப்பற்றியவர்கள் சிட்னி பார்ன்ஸ் (24), வகார் யூனிஸ் (16), இயன் போத்தம் (14), கிளாரி கிரிம்மெட் (14), ஹியூ டேபீல்ட் (13), ஃபாசல் மஹ்மூத் 27 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் போலவே 12 முறை இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை சுபாஷ் குப்தே 11 முறை கைப்பற்றியுள்ளார், தற்போது அஸ்வின் அவரைக் கடந்துள்ளார்.

இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி உள்ள நிலையில் 2 டெஸ்ட்டில் அஸ்வின் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை இலங்கைத்தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த இந்திய பவுலர் என்ற பெருமையை பெற்றுத் தந்துள்ளது. 2008 இலங்கை தொடரில் ஹர்பஜன் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார், அதனை தற்போது முறியடித்தார் அஸ்வின். மேலும் இலங்கை தொடரில் ஒரு இந்திய பவுலர் இருமுறை 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் கைப்பற்றுவதும் இதுவே முதல் முறை.

வெற்றிகளில் அஸ்வினின் 5 விக்கெட்டுகள் பங்களிப்புகள் இது 9-வது முறையாகும். அனில் கும்ளே 20 முறையும் ஹர்பஜன் 14 முறையும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போது இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்ப்பிடத்தக்கது.

இலங்கையை அணியை 278 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது, இன்னிங்ஸ் வெற்றிகள் இல்லாமல் 4-வது பெரிய வெற்றியாகும். ஹெடிங்லேயில் 1986-ம் ஆண்டு 279 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு பெரிய வெற்றியாகும் இது. மொத்தமாக 10-வது மிகப்பெரிய வெற்றியாகும் இது.

இதற்கு முன்பாக இலங்கையில் முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று 2-வதில் வெற்றி பெற்றது 2001 மற்றும் 2008-ல் இருமுறை நடந்துள்ளது. மொத்தமாக இந்தியா இத்தகைய வெற்றிகளை 10 முறை கண்டுள்ளது.

அயல்நாட்டில் முதல் வெற்றி பெறும் இந்திய கேப்டன்களில் கோலி 5-வது அயல்நாட்டு டெஸ்ட் போட்டியிலேயே வெற்றி கண்டு சாதித்துள்ளார். அசாருதீன் 18 முயற்சிகளுக்குப் பிறகே முதல் அயல்நாட்டு வெற்றியை ஈட்டினார், கபில்தேவ் 12 முயற்சிகளுக்குப் பிறகே முதல் அயல்நாட்டு வெற்றியை ஈட்டினார்.

http://tamil.thehindu.com/sports/கொழும்பு-வெற்றி-அஸ்வின்-இந்திய-அணி-சாதனை-துளிகள்/article7575243.ece

  • தொடங்கியவர்

சஹா, முரளி விஜய் காயம்: 3-வது டெஸ்ட் போட்டியில் இல்லை

 
  • காயம் காரணமாக விஜய் 3-வது டெஸ்ட் போட்டியில் இல்லை. | கோப்புப் படம்.
    காயம் காரணமாக விஜய் 3-வது டெஸ்ட் போட்டியில் இல்லை. | கோப்புப் படம்.
  • தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக 2-வது இன்னிங்ஸ் சதம் அடித்து இந்தியா ஏ-வை தோல்வியிலிருந்து மீட்ட கருண் நாயர், கட் ஆடும் காட்சி. | கோப்புப் படம்.
    தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக 2-வது இன்னிங்ஸ் சதம் அடித்து இந்தியா ஏ-வை தோல்வியிலிருந்து மீட்ட கருண் நாயர், கட் ஆடும் காட்சி. | கோப்புப் படம்.

கொழும்பு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தாலும், இன்னமும் ஒரு டெஸ்ட் உள்ள நிலையில் விக்கெட் கீப்பர் சஹா மற்றும் முக்கிய பேட்ஸ்மென் முரளி விஜய் ஆகியோர் காயம் காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விருத்திமான் சஹாவுக்கு பதிலாக நமன் ஓஜாவும், முரளி விஜய்க்கு பதிலாக கருண் நாயரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் கெண்டைத் தசை காயம் காரணமாக விளையாட முடியாது போன முரளி விஜய், 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார், முதல் இன்னிங்ஸில் ரன் எடுக்காவிட்டாலும் 2-வது இன்னிங்ஸில் அருமையாக விளையாடி 82 ரன்கள் எடுத்திருந்தார், இது இந்திய வெற்றியில் பெரும் பங்காற்றியது என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது அதே காயம் கொஞ்சம் அதிகரித்துள்ளது, எனவே அவருக்கு ஓய்வு தேவை என்று கருதியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. சஹாவும் இதே காயம் காரணமாகவே தற்போது விலகியுள்ளார், இந்த டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸ் முழுதும் லோகேஷ் ராகுல்தான் விக்கெட் கீப்பிங் செய்தார், அதோடு, இன்று காலை மேத்யூஸுக்கு அட்டகாசமான டைவிங் கேட்ச் ஒன்றையும் பிடித்து அசத்தியுள்ளார் ராகுல்.

தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக அருமையான சதம் அடித்து தோல்வியிலிருந்து காப்பாற்றிய இந்தியா ஏ அணி வீரர் கருண் நாயர் அணிக்கு வந்துள்ளார்.

ரஞ்சி இறுதியில் முச்சதம் கண்டவர் கருண் நாயர், அதே போல் நமன் ஓஜாவும் உள்நாட்டு தொடர்களில் ரன்களை பெருமளவு குவித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/சஹா-முரளி-விஜய்-காயம்-3வது-டெஸ்ட்-போட்டியில்-இல்லை/article7575118.ece

  • தொடங்கியவர்

இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்பதை நன்கு அறிவோம்: ஆஞ்சேலோ மேத்யூஸ்

இலங்கை கேப்டன் மேத்யூஸ். | படம்: ஏ.எஃப்.பி.
இலங்கை கேப்டன் மேத்யூஸ். | படம்: ஏ.எஃப்.பி.

முதல் இன்னிங்ஸ் பேட்டிங் சொதப்பியதால் தோல்வியுற்றோம் என்று இலங்கை கேப்டன் ஆஞ்சேலோ மேத்யூஸ் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “நாங்கள் சரியாக பேட்டிங் ஆடவில்லை. நேர்மையாகக் கூற வேண்டுமெனில் பிட்ச் இன்னும் கொஞ்சம் பொறுமையான பேட்டிங்கை கோருவது. அஸ்வின் பிரமாதமாக வீசினார், அவர் ஒரு முனையில் கடும் நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். மறுமுனையில் மற்ற பவுலர்களும் எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இறுதி நாளில் சாதிக்கக் கூடிய இலக்கு அல்ல இது. ஆனால் இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கையுடன் ஆடியிருக்கலாம். நாங்கள் சரியான டெஸ்ட் போட்டியை ஆடவில்லை, முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் சோடை போனோம், அதுதான் டெஸ்ட் தோல்விக்குக் காரணமானது. இந்திய அணிக்கு ஆரோக்கியமான முன்னிலை கொடுத்தோம், இதனால் அவர்கள் 2-வது இன்னிங்ஸில் பயனடைந்தனர்.

இந்திய அணியினர் ஆக்ரோஷமாக ஆடினர், 400 ரன்கள் இலக்கை அவர்கள் நிர்ணயித்த பிறகே கடினம்தான். ஆனாலும் நாங்கள் இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாக ஆடியிருக்கலாம் ஆனால் 2-வது இன்னிங்ஸிலும் எங்கள் பேட்ஸ்மென்கள் சொதப்பிவிட்டனர்.

இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் எழுச்சிபெறுவார்கள் என்பதை அறிந்திருந்தோம். நாங்கள் அவ்வாறே எதிர்பார்த்தோம், அவர்களும் அதையே செய்து காட்டினர். எங்களை விட சிறப்பாகவே ஆடினர். பிட்சில் பந்துகள் கொஞ்சம் திரும்பின பயமுறுத்தும் அளவுக்கு அதில் எதுவும் இல்லை.

அஸ்வின் அடிப்படைகளைத் துல்லியமாகச் செய்தார். பந்துகளை அசவுகரியமான லெந்தில் திருப்பினார். இந்தியாவுக்கு அவர் பிரமாதமான பவுலராக சில காலமாக திகழ்ந்து வருகிறார், இங்கும் அதனைத் தொடர்ந்துள்ளார். அவரை அடித்து ஆடுவதற்கான வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

சும்மா நின்று அவரை ஆட முடியாது, ஏனெனில் திடீரென ஒரு விக்கெட் பந்தை அவர் வீசிவிடுவார், எனவே அந்தப் பந்து விழாதவாறு அவரை அடித்து ஆடும் வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும். அவருக்கு எதிராக ரன்களை எடுக்க ஆட வேண்டும்” என்றார் மேத்யூஸ்.

http://tamil.thehindu.com/sports/இந்திய-அணி-பதிலடி-கொடுக்கும்-என்பதை-நன்கு-அறிவோம்-ஆஞ்சேலோ-மேத்யூஸ்/article7575425.ece

  • தொடங்கியவர்

இன்று SSC மைதானத்தில் தொடங்கிய 3 வதும் கடைசி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிறிலங்கா அணி தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார். இந்திய அணி 50/2  ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை எடுத்துள்ளது.

தற்சமயம் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

இந்தியா 126 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்துள்ளது.

  • தொடங்கியவர்

2 வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 292 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை இழந்துள்ளது.

  • தொடங்கியவர்

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா 312 ரன்கள் குவிப்பு- இலங்கை 201 ரன்களுக்கு சுருண்டது

 
5 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா. படம்: ராய்ட்டர்ஸ்.
5 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா. படம்: ராய்ட்டர்ஸ்.

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 100.1 ஓவர்களில் 312 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 52.2 ஓவர்களில் 201 ரன்களுக்கு சுருண்டதால், முதல் இன்னிங்ஸில் 111 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா.

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 95.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 135, இஷாந்த் சர்மா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி, மேலும் 20 ரன்கள் சேர்த்த நிலையில் 312 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இஷாந்த் சர்மா 6 ரன்களிலும், உமேஷ் யாதவ் 4 ரன்களிலும் ரங்கனா ஹெராத் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தனர். சேதேஷ்வர் புஜாரா 289 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 145 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந் தார். இலங்கை தரப்பில் தமிகா பிரசாத் 4 விக்கெட்டுகளையும், ரங்கனா ஹெராத் 3 விக்கெட்டு களையும் சாய்த்தனர்.

இலங்கை தடுமாற்றம்

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, இந்தி யாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது. தொடக்க வீரர் களான உபுல் தரங்கா 4, ஜே.கே.சில்வா 3, பின்னர் வந்த சன்டிமல் 23, மேத்யூஸ் 1, கருணா ரத்னே 11, திரிமானி 0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 18.2 ஓவர்களில் 47 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை.

இதையடுத்து அறிமுக வீரர் குசல் பெரேராவுடன் இணைந் தார் தமிகா பிரசாத். தான் சந்தித்த முதல் பந்திலேயே (இஷாந்த் பந்துவீச்சில்) கையில் காயமடைந்த தமிகா பிரசாத் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இதையடுத்து பெரேராவுடன் இணைந்தார் ரங்கனா ஹெராத். அசத்தலாக ஆடிய இந்த ஜோடி இலங்கையை பெரும் சரிவிலிருந்து மீட்டது.

பெரேரா அரை சதம்

9 ரன்களில் இருந்தபோது உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை ராகுல் கோட்டைவிட்டதால் தப்பிப் பிழைத்த பெரேரா, அதிரடியாக ஆடி 49 பந்துகளில் அரைசதம் கண்டார். 56 பந்துகளில் 9 பவுண் டரிகளுடன் 55 ரன்கள் குவித்த குசல் பெரேரா, இஷாந்த் சர்மா பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் ஆனார். பெரேரா-ஹெராத் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து வந்த தரின்டு கவுஷல் 16 ரன்களில் வெளியேற, தமிகா பிரசாத் மீண்டும் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஹெராத் 1 ரன்னில் அரை சதத்தை நழுவவிட்டார். அவர் 84 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டாக தமிகா பிரசாத் 27 ரன்களில் ஆட்டமிழக்க, இலங் கையின் முதல் இன்னிங்ஸ் 52.2 ஓவர்களில் 201 ரன்களோடு முடிவுக்கு வந்தது. நுவான் பிரதீப் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணியின் கடைசி 4 விக்கெட்டுகள் 154 ரன்கள் சேர்த்தன. இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டு களையும், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டு களையும் சாய்த்தனர்.

இந்தியா-21/3

முதல் இன்னிங்ஸில் 111 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே புஜாராவின் விக்கெட்டை இழந்தது. முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 145 ரன்கள் குவித்த புஜாரா, இந்த முறை ரன் ஏதுமின்றி தமிகா பிரசாத் பந்துவீச்சில் போல்டு ஆனார். அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 2 ரன்களிலும், அஜிங்க்ய ரஹானே 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.

இதையடுத்து கேப்டன் கோலியும், ரோஹித் சர்மாவும் ஜோடி சேர்ந்தனர். இந்தியா 8.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோஹித் சர்மா 14, கோலி 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி 132 ரன்கள் முன்னிலை பெற் றுள்ளது. நேற்று ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/3வது-டெஸ்ட்-கிரிக்கெட்-இந்தியா-312-ரன்கள்-குவிப்பு-இலங்கை-201-ரன்களுக்கு-சுருண்டது/article7599156.ece

  • தொடங்கியவர்

தொடரை வசப்படுத்துமா இலங்கை? இலக்கு 386

தொடரை வசப்படுத்துமா இலங்கை? இலக்கு 386

August 31, 2015  04:23 pm

 
இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 274 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்தியா மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் பெற்று சமநிலையில் உள்ளன.

இந்த நிலையில் வெற்றியை நிர்ணயிக்கப் போகும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த 28ம் திகதி ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய அணி சார்பில் புஜாரா ஆட்டமிழக்காது அதிரடியாக ஆடி 145 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

ஏனைய வீரர்களில் அமிட் மிஸ்ரா (59) தவிர வேறு எவரும் அரைச் சதம் கூட பெறாது ஆட்டமிழந்து வௌியேறினர்.

இதனால் 312 ஓட்டங்களைப் பெற்ற அந்த அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.

இதனையடுத்து துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குஷல் பெரேரா 55 ஓட்டங்களையும் ரங்கன ஹேரத் 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்காத நிலையில் 201 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் இலங்கை அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்படி 111 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இந்தியா தனது 2வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

அந்த அணி 274 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சற்று முன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இந்தியா சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 58 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து இலங்கை அணி 386 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.
  • தொடங்கியவர்

கோலிக்கு பிறகு அருமையான பேட்டிங்: இந்தியா 274 ஆல் அவுட்; 385 ரன்கள் முன்னிலை

 

ரோஹித் சர்மா - விராட் கோலி. | படம்: ஏ.பி.
ரோஹித் சர்மா - விராட் கோலி. | படம்: ஏ.பி.

கொழும்பு டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று இந்திய அணி தன் 2-வது இன்னிங்சில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 385 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

386 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இலங்கை களமிறங்கி தரங்கா, கருணரத்னே விக்கெட்டுகளை இழந்தது. இன்று இன்னமும் குறைந்தது 20 ஓவர்களையாவது இலங்கை அணி எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

ரோஹித் சர்மா அரைசதம் எடுத்து தேவையில்லாத ஷாட்டில் அவுட் ஆன பிறகு, பின்னி (49), நமன் ஓஜா (35), அமித் மிஸ்ரா (39), அஸ்வின் (58) ஆகியோரது அபாரமான ஆட்டத்தினால் இந்தியா 274 ரன்களை எடுக்க முடிந்தது.

இன்று காலை 21/3 என்ற நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா களமிறங்கினர். தம்மிக பிரசாத், நுவான் பிரதீப் இன்றும் அருமையாக வீசினர், குறிப்பாக பிரசாத், ஆஃப் ஸ்டம்ப்புக்கு சற்று வெளியே பிட்ச் செய்து உள்ளேயும், வெளியேயும் ஸ்விங் செய்தது இந்திய பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி கொடுத்தது, குறிப்பாக கோலி சவுகரியமாக ஆடவேயில்லை.

ரோஹித் சர்மா அருமையான டிரைவ்களையும் புல்ஷாட்களையும் ஆடினார். ஆனாலும் 25-வது ஓவரில் அவர் அடித்த 2 பவுண்டரிகள் அவரது ரன் எடுப்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. கோலி, பிரசாத்தை ஒரு அருமையான பவுண்டரியும் பிறகு மேத்யூஸை ஒரு லெக் திசை பவுண்டரியும் அடித்தார்.

இந்நிலையில் இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 57 ரன்கள் சேர்த்த நிலையில் 21 ரன்கள் எடுத்த கோலி நுவான் பிரதீப் நன்றாக தள்ளி வீசிய ஆஃப் ஸ்டம்ப் வெளியே சென்ற பந்தை தடுத்தாடும் எண்ணத்தோடு ஆட பந்து மட்டையின் விளிம்பில் பட்டு தரங்காவிடம் கேட்ச் ஆனது. முதல் இன்னின்ஸில் ஆட்டமிழந்தது போலவே இப்போதும் ஆட்டமிழந்தார். தடுத்தாடும் போது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துக்கு மட்டையை ஒருமாதிரி திருப்பி வைத்தே ஆடுகிறார் கோலி இதுதான் அவரது பிரச்சினை. தடுத்தாடும் போது மட்டை லெக் ஸ்லிப் திசையிலிருந்து வர வேண்டும், ஆனால் கோலிக்கு மட்டை ஆஃப் திசையில் ஸ்லிப் திசையிலிருந்து வருகிறது, இதுதான் அவரது கோணலான தடுப்பாட்டத்துக்குக் காரணம்.

பிறகு பின்னி களமிறங்கி மிட்விக்கெட்டில் ஒரு அருமையான பவுண்டரி அடிக்க, அதே நுவான் பிரதீப் ஓவரில் ரோஹித் 2 பவுண்டரிகளை அடித்தார்.

ரோஹித் சர்மாவும், பின்னியும் இணைந்து 54 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். 72 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்திருந்த ரொஹித் சர்மா பிரசாத் வீசிய லெக் திசை ஷார்ட் பிட்ச் பந்தை சரியான நிலையில் இல்லாது புல் ஆட அது நேராக லாங் லெக் திசையில் கேட்ச் ஆனது, பிரதீப் தலைக்கு மேல் அதனை பிடித்தார். உணவு இடைவேளையின் போது இந்தியா 132 ரன்களில் இருந்தது, அதாவது 21/3 என்பதிலிருந்து 111 ரன்களை எடுத்தது இந்தியா.

பின்னி, நமன் ஓஜா இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 42 ரன்களைச் சேர்த்தனர். பின்னி 62 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து பிரசாத்தின் விட்டு விட வேண்டிய பந்தை நன்றாக முன்னால் வந்து ஆட பந்து மட்டையின் விளிம்பில் பட்டு பின்னால் கேட்ச் ஆனது.

நமன் ஓஜா மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆடினார், உறுதியுடன் ஆடினார், அவரது பேட்டிங்கில் அழுத்தம் தெரியவில்லை, அவர் கவலைப்படாமல் ஆடி 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் பங்களிப்பு செய்து ஹெராத் பந்தில் அவுட் ஆனார்.

அதன் பிறகு மிஸ்ரா, அஸ்வின் இணைந்து மிக முக்கியமாக 8-வது விக்கெட்டுக்காக 55 ரன்களை 16 ஓவர்களில் சேர்த்தனர். மிஸ்ரா மீண்டும் தனது உறுதியான பேட்டிங்கை காண்பித்து 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். சில்வாவின் த்ரோவுக்கு இரையானார்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு அஸ்வின் சில பிரமாதமான, களவியூகத்தை நகைப்புரியதாக்கும் சில பவுண்டரிகளை அடித்து 58 ரன்களில் கடைசியாக பிரசாத்திடம் அவுட் ஆனார். உமேஷ் யாதவ் பிரதீப் பந்தில் 4 ரன்களில் வீழ்ந்தார். இந்தியா 274 ரன்களுக்கு சுருண்டது.

மொத்த முன்னிலை 385 ரன்கள். பிரசாத் 4 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சர்ச்சையில் இசாந்த் சர்மா:

இடையே இசாந்த் சர்மாவுக்கும் இலங்கை வீரர்களுக்கும் இடையேயான கசப்புணர்வு தலை தூக்கியது, இசாந்த் சர்மா பேட்டிங் செய்த போது, 1 ரன்னுக்காக ஓடினார், அப்போது தனது ஹெல்மெட்டைக்காட்டி, ஹெல்மெட்டுக்கு வீசுமாறு பிரசாத்த்துக்கு சுட்டிக்காட்டியது போல் தெரிந்தது. உடனே இசாந்தை தம்மிக பிரசாத் முறைக்க, சந்திமால், அஸ்வின் ஆகியோர் அருகில் வர மேத்யூஸ் நடுவர்கள் என்று விவகாரமானது. இந்திய அணி ஆல் அவுட் ஆன பிறகும் கூட நடுவர்கள் மேத்யூஸிடம் சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தனர். இசாந்த் நாட் அவுட்டாக பெவிலியன் திரும்பிய போது அவருடன் பேசுவதற்காக தம்மிக வேகமாகச் சென்றார்.

ஏற்கெனவே மோசமான நடத்தைக்காக இசாந்த் மீது புகார் இருக்க, நேற்று மற்றும் இன்றைய அவரது நடத்தை விவகாரமாகியுள்ளது. நடுவர்கள் கோலியுடன் கூட நீண்ட நேரம் விவாதித்தனர். இதுவும் இசாந்த் சர்மா விவகாரமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உப்புல் தரங்கா, ரன் எடுக்காமல், இசாந்தின் அருமையான பந்துக்கு நமன் ஓஜாவிடம் எட்ஜ் செய்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் கருண ரத்னேயை, உமேஷ் யாதவ் சற்று முன் வீழ்த்தினார். ஓஜாவின் கேட்ச்சுக்கு அவர் ஆட்டமிழந்தார்.

தொடக்கத்தில் இறங்கிய கவுஷல் சில்வா 1 ரன்னுடன் களத்தில் உள்ளார். சண்டிமால் இறங்கியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/கோலிக்கு-பிறகு-அருமையான-பேட்டிங்-இந்தியா-274-ஆல்-அவுட்-385-ரன்கள்-முன்னிலை/article7599823.ece

  • தொடங்கியவர்
கடைசி டெஸ்டில் இக்கட்டான நிலையில் இலங்கை
2015-08-31 20:55:41

இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் எஸ். எஸ். சி. மைதா­னத்தில் நடை­பெற்­று­வரும் மூன்­றா­வதும் தீர்­மான ­மிக்­க­து­மான டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் இலங்கை மிகவும் இக்­கட்­டான நிலையை எதிர்­கொண்­டுள்­ளது.


386 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு இரண்­டா­வது இன்­னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தாடும் இலங்கை நாளான இன்றைய ஆட்ட நேர முடி­வின்­போது 3 விக்­கெட்­களை இழந்து 67 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

 

11837kohli-3red-test.jpg


ஆரம்ப வீரர்­க­ளான உப்புல் தரங்க முத­லா­வது ஓவ­ரிலும் திமுத் கரு­ணா­ரட்ன நான்­கா­வது ஓவ­ரிலும் ஓட்டம் பெறாமல் ஆட்­ட­மி­ழந்­தனர்.

 


தினேஷ் சந்­திமால் 18 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­த­போது ஆட்­ட­மி­ழக்க, இலங்கை அணி 3 விக்­கெட்­களை இழந்து 21 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றி­ருந்­தது.


இந் நிலையில் ஜோடி சேர்ந்த திமுத் கரு­ணா­ரட்­னவும் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்­யூஸும் நிதா­னத்­து­டனும் பொறுப்­பு­ணர்­வு­டனும் துடுப்­பெ­டுத்­தாடி முறையே 24 ஓட்­டங்­க­ளு­டனும் 22 ஓட்­டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்­தனர்.


போட்­டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்­டா­வது இன்­னிங்ஸை 3 விக்கெட் இழப்­புக்கு 21 ஓட்­டங்கள் என்ற மோச­மான நிலை­யி­லி­ருந்து தொடர்ந்த இந்­தியா மிகவும் நிதா­னத்­துடன் துடுப்­பெ­டுத்­தாடி இலங்கை பந்­து­வீச்­சா­ளர்­களை பெரும் சோத­னைக்­குள்­ளாக்கி இறு­தியில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 274 ஓட்­டங்­களைப் பெற்­றது.


மூன்றாம் நாள் ஆட்­டத்தில்இரு தரப்பிலும் மொத்தமாக 15 விக்கெட்கள் வீழ்ந்­ததால் நான்காம் நாளிலும் விக்­கெட் கள் சீரான இடை­வெ­ளி­களில் சரி­யலாம் என எதிர்­பார்க்­கப்­ பட்­டது.


ஆனால் அணித் தலைவர் விராத் கோஹ்லி, ரோஹித் ஷர்மா ஆகிய இரு­வரும் நான்­கா­வது விக்­கெட்டில் 57 ஓட்­டங்­களைப் பகிர்ந்து இந்­திய அணிக்கு பலம் சேர்த்­தனர்.


கோஹ்லி 21 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்த பின்னர், ரோஹித் ஷர்­மா­வுடன் ஜோடி சேர்ந்த ஸ்டுவர்ட் பின்னி ஐந்­தா­வது விக்­கெட்டில் 54 ஓட்­டங்­களைப் பகிர்ந்த நிலையில் ரோஹித் ஷர்மா 50 ஓட்­டங்­க­ளுடன் நடையைக் கட்­டினார்.


ஆறா­வது விக்­கெட்டில் நாமன் ஓஜா­வுடன் மேலும் 42 ஓட்­டங்­களைப் பகிர்ந்த பின்னி 49 ஓட்­டங்­க­ளுடன் களம் விட்­ட­கன்றார். அவரைத் தொடர்ந்து ஓஜா 35 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.


எனினும் சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளான அமித் மிஷ்ரா (39), ரவிச்­சந்­திரன் அஷ்வின் (59) ஆகிய இரு­வரும் எட்­டா­வது விக்­கட்டில் 55 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தனர்.


இலங்கை பந்­து­வீச்சில் நுவன்பிரதீப் 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தம்மிக்க பிரசாத் 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.       

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11837#sthash.ojrLrufE.dpuf
  • தொடங்கியவர்

சதமடித்து அசத்திய மெத்தியூஸ்

சதமடித்து அசத்திய மெத்தியூஸ்

September 1, 2015  02:46 pm

 
 
 
இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் சற்று முன்னர் தனது 7வது டெஸ்ட் சதத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலேயே அவர் சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்சில் தற்போது துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வந்த நிலையில் மெத்தியூஸ் மற்றும் குஷல் பெரேரா ஜோடியே நிதானமான ஆட்டத்தை வௌிப்படுத்தி அணியை வலுப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • தொடங்கியவர்

இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

 
 
வெற்றிக் கொண்டாட்டத்தில் கேப்டன் கோலி. | படம்: ராய்ட்டர்ஸ்
வெற்றிக் கொண்டாட்டத்தில் கேப்டன் கோலி. | படம்: ராய்ட்டர்ஸ்

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி.

கொழும்பு டெஸ்ட் போட்டியின் 5-ம் நாளான இன்று 386 ரன்கள் வெற்றி இலக்கை எதித்து ஆடிய இலங்கை 268 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. முன்னதாக 1993-ல் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, இலங்கை மண்ணில் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது விராட் கோலி தலைமையில் 2-1 என்று வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது.

இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் அபாரமாக விளையாடி 110 ரன்கள் எடுத்து இசாந்த் சர்மாவின் 200-வது டெஸ்ட் விக்கெட்டாக வீழ்ந்தார். அவர் இசாந்த்தின் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இடையில் மேத்யூஸ், அறிமுக விக்கெட் கீப்பர் குசால் பெரேரா (70) இணைந்து மிகச்சிறப்பாக ஆடி 135 ரன்களை 6-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். குசால் பெரேரா 106 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய வீரர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டு கவனம் சிதறினார்.

இதனையடுத்து தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் அஸ்வின் பந்தை கோபத்தில் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் செய்து ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு மேத்யூஸ் 110 ரன்களில் அவுட் ஆக, ஹெராத் இறங்கி 2 பவுண்டரிகள் அடித்தார். அதுவும் யாதவ் பந்து வீச்சில் அதன் பிறகு அஸ்வினின் ஒரே ஓவரில் ஹெராத், தம்மிக பிரசாத் இருவரும் ஆட்டமிழந்தனர். கடைசியில் நுவான் பிரதீப் விக்கெட்டை அமித் மிஸ்ரா வீழ்த்த இலங்கை தேநீர் இடைவேளை முடிந்து எடுக்கப்பட்ட புதிய பந்தில் விறுவிறுவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 268 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த்து. இந்தியா 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் இசாந்த சர்மா 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வெற்றி பெற்ற இந்திய அணியின் மற்ற வீரர்கள் கரகோஷம் எழுப்ப புஜாரா, இசாந்த் வழிநடத்தி ஓய்வறைக்கு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

புஜாரா அருமையான சதம் எடுக்கவில்லையெனில் இந்த வெற்றி சாத்தியமில்லை. அதே போல் இசாந்த் சர்மா 5/54 என்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இலங்கையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வீசும் சிறந்த பந்து வீச்சாகும்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு 4 மணி நேர ஆட்டத்தை ஒழுங்காக ஆடியிருந்தால் இந்த தொடர் முழுதையும் கைப்பற்றியிருக்கலாம், ஆனால் அன்று சண்டிமால் வேறு வகையான ஆட்டத்தை ஆடினார்.

2-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அபார பந்து வீச்சு, இந்திய பேட்டிங் இணைந்து வெற்றியை ஈட்டித் தந்தது. 3-வது டெஸ்ட் போட்டி புஜாரா, இசாந்த் சர்மா, மற்றும் 2-வது இன்னிங்சில் கோலிக்குப் பிறகு அபார பேட்டிங் செய்த பின்வரிசை வீரர்கள் என்று ஒரு அணியாக இந்த வெற்றி சாதிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/இலங்கை-மண்ணில்-22-ஆண்டுகளுக்குப்-பிறகு-டெஸ்ட்-தொடரை-வென்றது-இந்தியா/article7603594.ece

  • தொடங்கியவர்

போராடி வீழ்ந்தது இலங்கை: 22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் இந்தியா சாதனை வெற்றி

 
 

 

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணி சாதனை வெற்றியை ஒன்றை பதிவு செய்தது.Sri-Lanka-v-India%2C-3rd-Test.jpg

அந்தவகையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற  மூன்றாவது மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, 22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 

முன்னதாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசியது. 

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 312 ஓட்டங்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 201 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இந்திய பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட் கைப்பற்றி  அசத்தினார்.

இதையடுத்து 111 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2வது இன்னிங்சில் 274 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதைத் தொடர்ந்து, 386 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நான்காம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 67 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இன்று இலங்கை அணி 268 ஓட்டங்களக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. 

ஒரு கட்டத்தில் மெத்தியூஸ் மற்றும் குசேல் ஜனித்பெரேரா ஆகியோரின் இணைப்பாட்டம் இந்தியாவின் வெற்றியை இலங்கை அணி பக்கம் திருப்புவது போன்று காணப்பட்டது. எனினும் குசேல் பெரேரா 70 ஓட்டங்களுடனும் இறுதிவரை போராடிய மெத்தியூஸ் டெஸ்ட் அரங்கில் 7 ஆவது சதத்தை கடந்து 110 ஓட்டங்களை பெற்றும் ஆட்டமிழக்க இந்தியாவின் வெற்றி உறுதியானது.

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை நழுவ விட்ட இந்திய அணி, அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் விராட் கோலி தலைமையில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்டநாயகனா புஜாராவும் தொடர் ஆட்டநாயகனாக அஸ்வினும் தெரிவு செய்யப்பட்டனர். 

http://www.virakesari.lk/articles/2015/09/01/போராடி-வீழ்ந்தது-இலங்கை-22-ஆண்டுகளுக்கு-பிறகு-இலங்கை-மண்ணில்-இந்தியா-சாதனை

  • தொடங்கியவர்

டெஸ்ட் தொடரில் 0-1 என்று பின்தங்கிய பிறகு தொடரை வென்றுள்ளோம்: கோலி பெருமிதம்

 

  • வெற்றி பெற்றவுடன் கொண்டாடும் இந்திய அணி வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி.
    வெற்றி பெற்றவுடன் கொண்டாடும் இந்திய அணி வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி.
  • கோப்பையுடன் விராட் கோலி. | படம்: ஏ.எஃப்.பி.
    கோப்பையுடன் விராட் கோலி. | படம்: ஏ.எஃப்.பி.

இளம் இந்திய அணி இலங்கையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்றிருப்பது தன்னளவில் ஒரு மைல்கல்லே என்று கேப்டன் விராட் கோலி பெருமிதம் அடைந்துள்ளார்.

ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, “22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு டெஸ்ட் தொடரை வெற்றி பெறுவது சாதனைதான். 0-1 என்று பின் தங்கிய பிறகு இங்கு இதற்கு முன் வந்த எந்த இந்திய அணியும் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்று என்னிடம் தெரிவித்தனர். ஆகவே நாங்கள் வரலாறு படைத்துள்ளோம் என்றே கருதுகிறேன்.

இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாத புவனேஷ் குமார், வருண் ஆரோன், ஹர்பஜன் சிங் ஆகியோரும் அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தனர். இது ஒரு கூட்டு முயற்சி. இந்த வெற்றிதான் எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை மேலும் கட்டமைப்பதற்கான அடித்தளம்.

காயங்கள் எப்பவுமே அணிக்கு பெரிய வெறுப்பைத் தரக்கூடியவைதான். ஆனால் அணுகுமுறை அபாரமாக இருந்தது. விஜய் காயமடைந்த காரணத்தினால் புஜாராவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை புஜாரா ஒரு வாய்ப்பாக கருதினார், கடினமானதாகக் கருதவில்லை. இந்த அணுகுமுறையினால்தான் நாங்கள் இவ்வாறு விளையாட முடிந்தது.

வெற்றி பெற்றாலும், இன்னும் பல துறைகளில் முன்னேற்றம் தேவை. எவ்வளவு மணி நேர ஆட்டத்தில் நாங்கள் மோசமாக இருந்தோம் என்பதை எண்ணிவிடலாம், ஆனால் வெற்றி பெற்றுத் தந்த வீரர்கள் குறித்து பெருமை அடைகிறேன்”

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/டெஸ்ட்-தொடரில்-01-என்று-பின்தங்கிய-பிறகு-தொடரை-வென்றுள்ளோம்-கோலி-பெருமிதம்/article7603948.ece?homepage=true

ஸ்ரீலங்கா  63 ஓட்டங்களால் வெற்றி :)

ரங்கன ஹேரத் 7 விக்கெட்களையும்  kaushal 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்

:shocked::grin:

 

சொறிலங்கா  சொரிஞ்சிட்டு இருக்கா

இதுதான் ஆரம்பம் இனி சொரிஞ்சிட்டு இருக்க வேண்டியதுதான் <_<

 

நியானி: சில சொற்கள் நீக்கப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.