Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் உரையினை உதாசினப்படுத்தி எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டாம் - அனுரா

Featured Replies

பிரபாகரனின் உரையினை உதாசினப்படுத்தி எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டாம் - அனுரா தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் வாய்மூலமாக யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். இதனூடாக சிக்கலான நிலைமைகளை எதிர்கொள்ளப்போகின்றோம் என்பது மட்டும் உண்மை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க சபையில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக சிறி லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலேயே பிரபாகரன் வாய்மூலம் யுத்த பிரகடனத்தை விடுத்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் பிரபாகரன் மீண்டும் பேச்சுக்கு வருவாரா? என்பது சந்தேகமே. பிரபாகரனின் உலகளாவிய பேச்சுக்கு சிறி லங்கா ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆக குறைந்தது ஒரு சொல்லைக்கூட ஒலி, ஒளிபரப்பு செய்யவில்லை. ஆனால், பிரபாகரனின் உரை வெளிநாட்டு ஊடகமொன்றில் ஒளிபரப்பு செய்தபோது நான் பார்த்து கொண்டிருந்தேன். பிரபாகரன் தனதுரையில் வாய்மூலமாக யுத்தத்தை பிரகடனப்படுத்தியதுடன் மிகவும் நிதானத்துடன் நம்பிக்கையுடன் உரையாற்றிக்கொண்டிருந்தார்..

இனப்பிரச்சினைக்கு "அதிகாரபகிர்வு' முறையூடாக என்றோ அல்லது வேறு எந்த சொல்லை வைத்துக்கொண்டு முரண்டுபிடிக்காமல் ஏதாவது ஒரு முறையில் தீர்வு கண்டேயாக வேண்டும். இல்லையென்றால் சிக்கலான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். எதிர்கொள்ள போகின்றோம்..

பேச்சுக்கு வரவழைக்க வேண்டும் பிரபாகரன் தனது உரைக்கு பின்னர் மீண்டும் பேச்சுக்கு வருவாரா? என்பது சந்தேகமே. எவ்வாறெனினும் இந்தியா அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு தமிழீழ புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு எப்படியாவது வரவழைக்க வேண்டும்..

பேச்சுமூலம் தீர்வு காண்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டு சமாதானத்தை ஏற்படுத்துவதனூடாக மட்டுமே நாட்டை முன்னேற்றமடையச் செய்யமுடியும். கடந்த காலத்தை மறந்து விட்டு எந்த நாட்டையாவது அழைத்துக் கொண்டு விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து பேச்சின் மூலமாக தீர்வு காண வேண்டும்.

பிரபாகரனின் மாவீரர் தின உரைக்கு முக்கியத்துவம் கொடுக்காத சிறி லங்கா ஊடகங்கள் பிரபாகரன் சுனாமியால் பலியாகிவிட்டார், அவருக்கு உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டன. ஆனால், அவர் திடகாத்திரத்துடன் ஆரோக்கியமுடனே இருந்து கொண்டிருக்கின்றார். தயவு செய்து இனிமேலும் இப்படி முட்டாள்த்தனமான பொய்யான நகைச்சுவையான செய்திகளை பரப்பாதீர்கள்..

சிறி லங்காவில் எந்தவொரு அரசியல் தலைவர் கூட பிரபாகரனை சந்தித்ததில்லை. ஆனால், பல தலைவர்களை இழந்துவிட்டோம். ஐ.தே.க. தலைவர்களை கூட கொலை செய்தனர் என்பதனால் அவர் தொடர்பான ""புரட்டுகளை'' நிறுத்துங்கள்.

இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணாவிட்டால் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய முடியாது. முதலீடுகள் கிடைக்காது என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். யுத்த நிலைமையை மாற்ற வேண்டும். யுத்த நிலைமை தோன்றினால் வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்காது. சுற்றுலாதுறை வீழ்ச்சியடையும். நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதனால் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண வேண்டும். அத்துடன் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு ஒதுக்கப்படுகின்ற நிதிகள் முதலீடுகள் பரவலாக்கப்படல் வேண்டும் என்பதுடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. கடந்த கால செயற்பாடுகளை மறந்துவிட்டு ஏதோ ஒரு நாட்டினை அழைத்து தமிழீழ விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து அர்த்மான விவேகமுடையவர்களை மட்டும் வைத்து பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும். எந்த அமைச்சராக இருந்தாலும் அமைச்சினூடாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். சுனாமியினால் உல்லாச பிரயாணத்துறை பாதிப்படைந்தது. அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகளும் உல்லாச பிரயாணத்துறையின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முன்னெடுக்கப்படுகின்ற சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதனூடாக மட்டுமே உல்லாச பிரயாணத்துறையை வளர்ச்சியடைய செய்ய முடியும்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் புத்தியெல்லாம் சந்திரிக்கா காலத்தில் அனுராவிற்கு ஏன் வரவில்லையாம்?

Dont you understand what Anura is trying to do? He is trying to attract minority Tamil and muslim voters with his statments for a personal agenda in his mind.

Anura has tried to win tamils sympathy by showing he is concerned of Tamils grievances and has tried to win srilankan muslim's sympathy by criticising American President George Bush's stand on Iraq.

I think his agenda is, when he breaks away from Mahinda, He will try to show as an envoy of peace and try to come to power by combining Tamil and muslim minority votes with his permanent bandaranayake sinhalese vote bank support.

He has been deleivering this kind of statements often these days with future presidential dreams in his mind.

Former Racists cannot suddenly become saviours of Tamils. Anura is the person who gave birth to JVP and Chandrika alliance, with thinkg JVP will support him on his presidential dream after Chandrikas period. He is the one who arranged JVP leader Somavansa to come to Sri Lanka from his exile in London, by persuading Chandrika to make null and void of Somavansa's past crime on Srilanka's Regime.

Why Anura did not raise his voice on federal infrustructure or any other models of power devolution for Tamils during the period of his sister Chandrika's regime?

Bandaranayake family is the curse to SriLanka. They bulit their political dynasty, based on discriminations against minorities of SriLanka. Anura's father SWRD.Bandaranayake IS THE GOD FATHER OF SINHALA CHAUVINISM.

Sorry for writing in English. I will write in Tamil after i install tamil fonts.

இந்தப் புத்தியெல்லாம் சந்திரிக்கா காலத்தில் அனுராவிற்கு ஏன் வரவில்லையாம்?

:lol::lol::lol: thalaivar nalum arintha manithar...Nallathu thirinthu seiyum nallavr...parvikal avaroda thanakurankal....intha perunchali eppidithan....komali mathiri kathikum....don't take it serious...but this time he was correct any how...ethiriku eithiri nanpan....when the USA comes in we need another premadasa to do the same repulse....who knows...so we will let him swim closest to us and if he swims without tired then we will help him otherwise we will too use him now...to attract the countries whoes mind were poluted by SL govenrment. ta anura...jthanniya porduviddu ennum aliya ennum kathikalamunko...

இனப்பிரச்சினை இவர்களின் சொத்து இனப்பிரச்சினையை தூபமிட்டது உவரின் குடும்பம்தான் இப்ப நொந்து அறிவுரை செய்யமுதலில் உவரின் தந்தைக்கு ஞானம் வந்திருந்தால் நாட்டுக்கு எவ்வலவோ நல்லதாய் இருந்திருக்கும் தன் நலனுக்காக எதையும் செய்யும் குடும்பம் பண்டாரநாயக்கா குடும்பம்

பிரபாகரன் வாழ்க

மகிந்தா ஒழிக உமது நல்ல காலம் பிழைத்து போ.... :lol:

களத்தின் புதிய உறுப்பினர்கள் தயவு செய்து ஆங்கிலத்தில் கருத்து எழுதுவதை தவிர்த்து கொள்ளுங்கள். தமிழில் எழுத வேண்டும் என்பது இந்த கருத்து களத்தின் விதிமுறைகளில் ஒன்று. ஆங்கிலத்தில் எழுத விரும்பும் நண்பர்கள் யாழ் களத்தின் ஆங்கில கருத்துகளத்தில் இணைந்து எழுதலாம்.

யாழின் ஆங்கில கருத்துகள முகவரி http://www.eelamist.com/forum/

புதிய உறுப்பினர்களுக்கு தமிழில் எழுதுவதில் சிரமம் ஏதும் இருந்தால் தனிமடல் மூலம் அல்லது வரவேற்பு பிரிவில் அறிய தாருங்கள்.

அனுரா இண்டைக்கு இப்பிடி சொல்லுரான், நாளைக்கு வேறமாதிரி சொல்லுவான்! பொறுத்திருந்து பாருங்கோ....

அடை மடையா நீ முன்னம் சந்திரிகவுடன் உலக வலம் வந்தீர் தான் நம்மலுக்கு விலன்கும் எல்லாம் மவுனை....

முதல் தன்ன்னீயை அடி பின்பு ஒரு கோல் தா பிரகு கதைப்பம்.... :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கி கட்டிய அனுபவம் பேசுகிறது.. எல்லோரும் நல்ல பாடம் கற்றபின்னர்தான் எல்லாவற்றையும் உணர்ந்துகொள்கின்றீர்கள்..

அதையேன் மற்றவர்களின் அனுபவங்களின் ஊடாக கற்றுக்கொள்ள முனைகின்றீர்கள் இல்லை என்பதுதான் இப்ப உள்ள கேள்விக்குறி?

என்ன உங்களுடைய உந்த திமிர் பிடித்த ஆணவத்தினால் உங்கள் இராணுவத்திலும் எங்கள் இராணுவத்திலும் பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றனவே.. மற்றது எமது விடுதலைக்கான காலமும் பின்போடப்பட்டுகொண்டே இருக்கின்றது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.