Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூடியூப் பகிர்வு

Featured Replies

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: தரங்கிரி- ஆசியாவின் மிகப் பெரிய வாழை சந்தை!

 

 
banana_3008769f.jpg
 

வாழை- உலகத்தில் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயப்பொருட்களில் ஐந்தாம் இடத்தைப் பிடித்திருக்கும் பழம். இந்தியாவில் இதற்கான சில்லறை வணிக மதிப்பு மிக அதிகம். ஆசியாவின் மிகப்பெரிய வாழை சந்தை தரங்கிரியில்தான் இருக்கிறது.

தரங்கிரி எங்கிருக்கிறது என்கிறீர்களா? அஸ்ஸாம் மாநிலத்தின் கோல்பாரா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. வருடந்தோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வாழை சீசன் தொடங்கி விடுகிறது. சுமார் 50 லாரிகள் முழுதும் ஏற்றப்பட்ட வாழைப்பழங்கள் விற்பனையாகின்றன.

வாழை வளர்ப்பவர்கள் தொடங்கி, விற்பவர்கள் வரை சுமார் 15 ஆயிரம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வாழைப்பழங்கள் பூடான், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் மாம்பழத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது முக்கிய பழப் பயிராக விளங்குவது வாழை. தரங்கிரியின் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா? ரூபாய் நான்கு கோடி.

வாழை சந்தை தொடர்பான காணொலியைக் காண

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-தரங்கிரி-ஆசியாவின்-மிகப்-பெரிய-வாழை-சந்தை/article9103937.ece?homepage=true&relartwiz=true

  • Replies 158
  • Views 29.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: பேக்வாட்டர்ஸ்- பெரும் திரை அனுபவம் தரும் குறும்படம்!

 

 
shor_movie_002_3010840f.jpg
 

இன்றுவரும் குறும்படங்களைப் பார்த்து ''இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்'' என்ற அமுதபாரதியின் கவிதை வரிகளாக ஒரு கேள்வியை கேட்டுக்கொள்ளவேண்டியுள்ளது. அந்த வகையில், 'Backwaters' எனும் குறும்படம் ''இதோ நாங்கள்'' என்கிற நம்பிக்கையை தருவதாக உள்ளது.

எங்கோ சென்றுவிட்டு படகுத்துறைக்கு (மம்முட்டி அறிமுகமானபோதிருந்த முகஜாடையுடன்) ஒரு அந்நிய இளைஞன் வருகிறான். படகோட்டியைப் பார்த்து தான் போகும் இடத்துக்கு கொண்டுபோய்விடச் சொல்லி கேட்கிறான். மலையாளக் கரையோரத்தின் அடர் சோலைவனமிக்க முகத்துவாரத்தின் நீர்த்தடங்களில் படகும் செல்கிறது.

பேச்சுவாக்கில் தான் எழுத்தாளன் என்று அவன் சொல்ல ''அப்போ ஒரு கதை சொல்லுங்கள்'' என படகுக்காரர் கேட்கிறார். ''தோழி பிரிந்தபிறகு இப்போதெல்லாம் எழுதுவதே நின்றுவிட்டது, நீங்கள்தான் படகுப் பயணத்தில் நிறைய பேரை பார்த்திருப்பீர்களே ஒரு கதையை சொல்லுங்களேன்'' என அந்நிய இளைஞன் கேட்கிறான். ஒரு தாழ்வான பழைய பாலம் வருகிறது... படகுக்காரர் குனிகிறார்... மெல்ல அந்த பிரேம்களின் ஒளிகுன்ற... வேறொரு நீரின்பொலிவுமிக்க பழைய நினைவுகளாக காட்சி மாறுகிறது....

இயற்கையின் புத்தெழிலை சுவாசிக்கும் பரவசரத்தோடு, வளரிளம் பெண்ணொருத்தியும் வருகிறாள்... தன் பயணியாக வந்த அவள் வாழ்விலும் ஒரு சம்பவம். படகோட்டி காலத்தின் சாட்சியாக முகத்துவார நீரில் துடுப்பைச் செலுத்திக்கொண்டிருக்கிறான்.

ஆட்களும் காலங்களும் மாறக்கூடுமே தவிர, சில விஷயங்கள் எப்போதுமே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த பூமி எப்போதும் சுற்றும் நியதியைப் போன்றது. இளம்பெண்ணைப் பற்றி இப்படம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.

இதை குறும்படம் என்று சொல்ல மனம் வரவில்லை. நம்புங்கள் 14 நிமிடக் கதைதான். என்றாலும் ஒரு பெரிய திரைப்படத்தைப் பார்த்ததுபோன்ற பிரமை. கட்ஷாட்களை அள்ளிக்குவிப்பதுதான் ஒளிப்பதிவு என்றும் அதுதான் இயக்கம் என்றும் வேகமான உலகத்தின் இன்னுமொருபோக்கை புறம்தள்ளி முற்றிலும் மாறுபட்ட ஒளிப்பதிவை சி.ஜே.ராஜ்குமார் வழங்கியிருக்கும் லாவகம். சார்லஸின் பின்னணி இசையில் தகுந்த நேரத்தில் நம் உணர்வுகளை மீட்டிச் செல்கிறது. குருவிகள் காகங்கள் கீறிச்சிடும், கரையும் சப்தங்கள்.. வானம்பாடி, குயில்களின் ரீங்காரங்கள், கூவல்கள், நீரைக்குத்தி கிழித்துச் செல்லும் துடுப்பின் ஓசை என மெல்லிய பதிவுகளைச் செய்த அகிலேஷ் ஆடியோகிராபிக்கு ஒரு சல்யூட்.

படகோட்டியாக உதயகுமார், இளம் எழுத்தாளராக அலோசியஸ் ஆன்ட்ரூ, கதையின் வளரிளம் பெண்ணாக ஆர்ய பிரகாஷ் உள்ளிட்ட இப்படத்தின் குழுவினர் 1take media.com பாக்கெட் பிலிம்ஸ் ஒத்துழைப்பில் உள்ளடக்கத்தை உள்வாங்கி உழைத்திருக்கிறார்கள்.சக மனிதர்களோடு பகிரப்படும் நிகழ்வை இயக்குநர் அருண் கார்த்திக், சில தீற்றல்களில் வெளிப்படும் சிறந்த ஓவியனின் வலிமிக்க புதிய சொல்முறை ஒன்றில் முயற்சித்திருக்கிறார். வாழ்வோடு நெருக்கமாக உணர வைப்பதோடு மூங்கில் காட்டில் ஒரு புல்லாங்குழலைக் கண்டுபிடித்த உணர்வு எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-பேக்வாட்டர்ஸ்-பெரும்-திரை-அனுபவம்-தரும்-குறும்படம்/article9110808.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: தேடிச் சோறு நிதம் உண்ண 'பாரதி'

 

 
04DCMYPR_BHARATHI__3008847f.jpg
 

தங்கும் விடுதிகளில் ஆரம்பித்து உணவகங்கள் வரை எதை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பமும், தயக்கமும் தலைநகர வாழ்க்கையில் ஏற்படுவது இயல்புதான்.

உணவைப் பொறுத்தவரையில் தேவையானது குறைவாகக் கிடைப்பதும், தேவையற்றது அதிகம் கிடைப்பதுதான் சென்னையின் ஆகப் பெரிய வரம், சாபம், எல்லாம். ஆனால், விரைவில் செரிக்காத பரோட்டா போன்ற உணவுகளையும், அவசர கதியில் நின்று கொண்டே சாப்பிட்டு விட்டு ஓடும் வகையில் இருக்கும் ஃபாஸ்புட் வகை உணவுகளும் பசிக்காகவும், ருசிக்காகவும் மட்டுமே சாப்பிடுகிறோம். ஆனால், செரிக்கக் கூடிய வயிற்றுக்கு கெடுதல் இல்லாத உணவை சாப்பிடுகிறோமா?

இந்த சூழலில் மேன்ஷன்வாசிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வீட்டு உணவு கொடுக்கும் மெஸ்களில் பாரதி மெஸ் முதன்மையானது, முக்கியமானது என்பதை திருவல்லிக்கேணி சூழ் நல்லுலகம் சொல்லும். தரமான உணவை நியாயமான விலையில் கொடுக்கும் பாரதி மெஸ்ஸில் சாப்பிடாத மேன்ஷன்வாசிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

பாரம்பரிய உணவுடன், இயற்கை உணவையும் சேர்த்து வழங்கும் பாரதி மெஸ்ஸில் மட்டும் வாடிக்கையாளர்களை குடும்ப உறுப்பினர்களாகவே பார்க்கிறார்களே ஏன்? அப்படி என்ன பாரதி மெஸ் மட்டும் மற்ற உணவகங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது?

இவற்றை அவசியம் அறிந்து கொள்ள மாவீரன் சோமசுந்தரம் இயக்கிய ஆவணப்படத்தை பாருங்கள்:

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-தேடிச்-சோறு-நிதம்-உண்ண-பாரதி/article9104225.ece?ref=relatedNews

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: அசாமின் பாரம்பரிய 'முகா' பட்டு!

 

 
s_3028990f.jpg
 

அசாம் மாநிலத்தின் பாரம்பரிய அடையாளம் முகா பட்டு. பெரும்பாலான அசாம் மக்களின் பரம்பரைத் தொழிலும் அதுதான். இத்தொழில் 600 வருடங்களுக்கு மேல் அசாமை ஆண்ட அஹோம் வம்சத்தின் கீழ் பெரும் வளர்ச்சி அடைந்தது.

முகா பட்டு தயாரிப்பு அசாமின் வருமானம் கொழிக்கும் தொழில்களில் ஒன்றாகும். இத்தொழில் முழுக்க முழுக்க அசாம் பட்டுப்பூச்சிகளை சார்ந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான பூச்சிகளால்தான் ஒரு பட்டை உருவாக்க முடியும்.

பட்டு தயாரிப்பு

முதலில் பெண் தொழிலாளர்கள் பருவமடைந்த இரண்டு பூச்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைக் குச்சியில் கட்டுகின்றனர். அவைகளோடு ஒரு ஆண் பூச்சியையும் சேர்த்துக் கட்டுவிடுகின்றனர். இதுபோல ஏராளமான பூச்சிகள் ஓரிடத்தில் திரட்டப்பட்டு கட்டப்படுகின்றன.

இரண்டு நாட்களுக்கு பெண் பூச்சிகள் முட்டையிடத் தொடங்குகின்றன. இரு நாட்களில் லார்வாக்கள் தோன்றத் தொடங்குகின்றன. பட்டுப்பூச்சிக் கூடுகள் ஒரு குறிப்பிட்ட முறையில், செங்குத்தாகக் கட்டப்படுகின்றன. இதன்மூலம் பூச்சிகள் அதிக சிரமமின்றி வெளியே வரமுடியும். பட்டுக்கூட்டில் இருந்து தேவையான அளவு பட்டு கிடைக்கும் வரை தொடர்ந்து இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

இத்தொழில் குறித்து அசாம் தொழிலதிபர்களும், பட்டுப்பூச்சி உற்பத்தியாளர்களும் என்ன சொல்கிறார்கள்? காணொலியைக் காண:

முகா பட்டுக்கு 2007-ல் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முகா பட்டின் தொழில் மதிப்பு சுமார் 200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. முறையான வழிகாட்டல் இருந்தால் இது இன்னும் 10 மடங்கு உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-அசாமின்-பாரம்பரிய-முகா-பட்டு/article9168071.ece

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: சித்ரகோட் அருவி... இந்தியாவின் நயாகரா!

 

 
ss_3033478h.jpg
 

இயற்கையின் அதிசயங்களில் ஒன்று தண்ணீர். அதுவே ஏரியாகவும், குளமாகவும், ஆறாகவும், அருவியாகவும், கடலாகவும் மாறி காண்பவர் உடலையும் மனதையும் குளிர்விக்கிறது.

சத்தீஸ்கர் - அடர்ந்த காடுகளைக் கொண்ட மத்திய இந்திய மாநிலம். இங்குள்ள பாஸ்டர் மாவட்டத்தில் மழைக்காலம் ஜூலையில் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கிறது. அங்கு பாயும் இந்திராவதி நதி மழைக்காலத்தில் தன் பாய்ச்சலில் வேகமெடுக்கிறது.

பாய்ந்தோடும் இந்திராவதி நதி, சித்ரகோட்டில் சுமார் 980 அடியில் அருவியாக உருவெடுக்கிறது. இதனால் சித்ராகோட் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் அகன்ற அருவியாகவும் கருதப்படுகிறது. குதிரை லாட வடிவில் இதன் பள்ளத்தாக்கு அமைந்திருப்பதால் இது இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மிக்கத்தக்க வகையில் பாயும் இந்திராவதி நதி கடைசியில் கோதாவரியுடன் சென்று கலக்கிறது.

பிரம்மாண்ட நீர்வீழ்ச்சியின் பிரவாகத்தைக் காண

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-சித்ரகோட்-அருவி-இந்தியாவின்-நயாகரா/article9184269.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: சிறகுகளின் ரணத்தை மாற்றும் ஸ்ருதி!

 

maxresdefault_3046113f.jpg
 

ஸ்ருதி ஹாசன் தான் ஒரு நடிகை என்பதைத் தாண்டி சுயசிந்தனையோடு வளர்ந்து சமூகத்தை அணுகுபவர் என்பது அவரது செயல்களிலேயே அவ்வப்போது தெரியக் கூடும். தந்தையின் மிகப்பெரிய ஒரு நட்சத்திர அந்தஸ்தை சலுகையாக எடுத்துக்கொள்ளாத தனித்த ஆளுமை என்பதாலேயே கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஸ்ருதியால் தன் இருப்பைப் பதிவு செய்ய முடிகிறது.

சொந்தக்காலில் நின்று பாலிவுட்டில் கவனம் ஈர்க்கும் ஸ்ருதி ஹாசன் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போதுகூட ஒரு பறவையின் சிறகடிப்பைப் போல விருப்பமான ஆடைகளில் வருபவர். அதுகூட கலைமனதின் ஓர் அழகுதான் என்று அங்கீகரிக்கத் தெரியாத இடத்தில் மனிதர்கள் இருப்பதுதான் சோகம். அவரது செல்போனுக்கு தவறான அழைப்புகளும் யூடியூப்களில் அவரது பொதுநிகழ்ச்சி ஆடை சுதந்திரத்தையும் படம்பிடித்துப்போடுவதும் இன்னும் நமது மக்களில் ஒரு பகுதியினர் வளர்ச்சியடையவில்லையோ என்றே எண்ணவேண்டியுள்ளது.

சுயநிர்ணய தேடலில் ஒரு முன்னுதாரணமாகத் திகழும் ஸ்ருதி Shruti Haasan Unblushed | Be The Bitch வீடியோவில் பொதுவாழ்வில் எதிர்கொள்ளும் தனது சவாலை வெகுநுட்பமாகப் பேசியுள்ளார்.

உலகம் எவ்வளவோ மாறியிருந்தாலும்கூட உலகின் பார்வையில் ஒரு பெண், அவள் எவ்வளவு சாதித்தாலும் அவள் பெண்தான் என்று ஒரு புள்ளியில் நிறுத்தி அவளைச் சுற்றி கோலம்போடுவதை இதைவிட யாராலும் கண்டிக்கமுடியாது.

அவர் வாக்கியத்துக்கு வாக்கியம் கெட்டதாக கருதப்படும் அந்த வார்த்தையை உதிர்ப்பது நம்மில் பலருக்கும் நெளிவடையச் செய்யலாம்.

ஆனால், தன் மனவலியின் விளைவாக தன்னை அறியாது கொட்டும் வெளிப்பாடு என்பதால் அதைக் கேட்பதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்!

அவரவர் சுதந்திரத்தின் எல்லை எது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். குறுகிய கண்ணோட்டத்திலிருந்து வெளியே வந்து பரந்துவிரிந்த பார்வையோடு கலைஞர்களைப் பார்க்கவேண்டும் என்று ஏங்கும் குரலை இந்த வீடியோவில் சன்னமாக நம் இதயத்தோடு பேசுவதை கேட்டுப்பாருங்கள் நிச்சயம் உங்கள் மனம் மாறும்.

இணைப்பு:

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-சிறகுகளின்-ரணத்தை-மாற்றும்-ஸ்ருதி/article9224524.ece?homepage=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: பல்லேலக்காவும் பிரிட்டன் கலைஞர்களும்!

 

 
3_3049025f.jpg
 

வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ் பாடல்களைப் பாடுவதில் எந்த அதிசயமும் இல்லை. ஆனால், அதே வெளிநாட்டினர் பாடும்போது அது பலரது கவனத்தை ஈர்க்கிறது. அதைப் பார்க்கும் தமிழர்களுக்கு, நம்மூர் பாடல் ஒன்று உலகளவில் பிரபலமாகியுள்ளதே என்ற பெருமையும் சேர்ந்து கொள்ளும். யூடியூப் போன்ற தளங்களும், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களும் பிரபலமான பிறகு இப்படி நம்மூர் பாடல்களை அயல் நாட்டினர் குரலில் அடிக்கடி கேட்க முடிகிறது.

ஆஸ்கருக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் சர்வதேச கவனம் பெற்றுவரும் ஒரு இசையமைப்பாளர். அவரது இந்திய பாடல்கள் பலதரப்பட்ட மக்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி, தமிழில், சிவாஜி படத்தில் அவர் இசையமைத்த பல்லேலக்கா பாடல் ஏற்கனவே பல வெளிநாட்டு இசைக்கல்லூரி மாணவர் குழுக்களால் மேடையேற்றப்பட்டுள்ளது. அது யூடியூபிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்த வரிசையில், தற்போது பிரிட்டனின் தேசிய இளைஞர் இசைக் குழுவும் (the National Youth Choirs of Great Britain), பிரிட்டனின் இந்திய கலை மேம்பாட்டு அமைப்பின் மிலாப்ஃபெஸ்ட் ( Milapfest, the UK’s national Indian Arts Development Trust) குழுவும் சேர்ந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர்.

அடுத்த நான்கு வருடங்கள் தெற்காசிய கண்டத்தின் இசையின் அற்புதமான திறனை கண்டறிந்து கொண்டாடும் பொருட்டு ஒரு புது முயற்சி தொடங்கப்படவுள்ளது. அதன் ஆரம்பமாகவே இந்தப் பாடலை, இரு வேறு இசைக்குழுக்கள் சேர்ந்து பாடி அதை படம்பிடித்தும் உள்ளது.

பாடலை இந்த பிரிட்டன் இளைஞர்கள் குழு பாடியதோடு அதை படமாக்கிய விதமும் கண்களுக்கு வண்ணங்களாலான விருந்தாக இருக்கிறது. திறந்த புல்வெளியில் பல்வேறு தேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும், யுவதிகளும் மகிழ்ச்சியோடு ஆடி, பாடி ஒருவர் மீது ஒருவர் வண்ணம் அடித்து கொண்டாடி மகிழும் காட்சிகளைப் பார்க்கும்போது நமக்கும் அந்த குதூகலம் தொற்றிக்கொள்ளும்.

பாடலை அப்படியே பாடாமல் நடுவில் இந்திய பாரம்பரிய வாத்தியங்களை சேர்த்து சிற்சில மாறுதல்களை புகுத்தி நமக்கு பழகிய பாடலுக்கு புதிய தோற்றத்தைத் தந்துள்ளனர்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-பல்லேலக்காவும்-பிரிட்டன்-கலைஞர்களும்/article9234739.ece?widget-art=four-rel

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: அழிவின் விளிம்பில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள்!

 

 
rhinos_3049922f.jpg
 

இந்தியா சுமார் 3000 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்குத் தாயகமாக விளங்கி வருகிறது. அவற்றில் 90 சதவீத காண்டாமிருகங்கள் அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் வசித்து வருகின்றன.

காசிரங்கா பூங்கா, பிரம்மபுத்ராவின் வெள்ளச் சமவெளியில் அமைந்திருக்கிறது. இப்பூங்கா யுனெஸ்கோ வரலாற்றுப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

இந்த ஆண்டு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால், ஏராளமான காண்டாமிருகங்கள் நீரில் மூழ்கிவிட்டன. சில இடம்பெயர்ந்துவிட்டன. வெள்ளத்தால் தங்கள் வாழ்விடத்தை இழந்த காண்டாமிருகங்கள் அதைக்காட்டிலும் முக்கியப் பிரச்சனையைச் சந்தித்து வருகின்றன. அது காண்டாமிருக வேட்டை.

கெரட்டின் என்னும் பொருள் நிறைந்துள்ள காண்டாமிருக கொம்புகளுக்கு கள்ளச்சந்தையில் ஏகப்பட்ட கிராக்கி. இவை மருந்து தயாரிக்கவும், குத்துவாள், கத்தி உள்ளிட்டவைகளை அலங்காரப் பொருள்களாக உருவாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் இவை முறைகேடான வழியில் விற்கப்படுகின்றன.

கடந்த 10 வருடங்களில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை சுமார் 27% உயர்ந்திருந்தாலும், அவை இன்னமும் ஆபத்தான சூழலிலேயே இருக்கின்றன. தொடர்ந்த மிருக வேட்டை, நகரமயமாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றால், காண்டாமிருகங்கள் அழியும் விளிம்பில் இருக்கின்றன.

இதுகுறித்த தகவல் தொகுப்புக் காணொலி

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-அழிவின்-விளிம்பில்-ஒற்றைக்கொம்பு-காண்டாமிருகங்கள்/article9239239.ece

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: இதயத்தைத் திறக்கும் 'கண்ணோடு' பாடல்

 

 
video_song_3051108f.jpg
 

வாழ்வில் எதிர்பாராமல் நேரும் சங்கடங்களுக்கும் தோல்விகளுக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல என்கிறது 'கண்ணோடு கண்ணீரே' எனும் வீடியோ பாடல். இறுதித் தீர்ப்பை நமக்கு நாமே எழுதிக்கொள்ள வேண்டியதில்லை என்ற செய்தி சற்று வித்தியாசம்தான்.

புரமோஷன், காதல் தோல்வி, டைவர்ஸ், வாழ்க்கைத் துணையின் இழப்பு போன்ற காரணங்கள் எதுவாக இருந்தாலும், திராணியோடு எதிர்கொள்ளச் சொல்கிறது இந்த வீடியோ.

பெரியபெரிய தோல்விகள் அல்ல, கவலைப்படும் மனம்தான் நம் வாழ்வை மேலும் மேலும் கீழே தள்ளக்கூடியது. தற்கொலையை நோக்கி நகரும் ஒவ்வொருவரின் உணர்ச்சிமிக்க காட்சிகளும் பார்வையாளரை தவிக்க வைக்கின்றன.

இல்லறத்தில், அன்பின் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களில் தவிக்கும் பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைத்துவகை மனிதர்களையும் கணக்கில்கொண்டு நம்பிக்கையை விதைத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் முத்துசாமி!

'மனம் உடைந்திட மரணம் தூண்ட தடைகள் தாண்டி உயர வா', 'மீண்டும் வாழ வாழ பிறக்கிறேன் நானே... 'கண்ணோடு கண்ணீரே....வாழ்க்கை ஒருமுறைதான் தற்கொலை வேண்டாம்', 'சூழ்நிலை கடந்துபோ' போன்ற டானிக் வரிகளுக்கு சித்தார்த்தா மோகன் தந்துள்ள இசை, மூடியுள்ள இதயத்தின் கதவுகளை முட்டித் திறக்கிறது. ஒரு முழு ஆல்பத்தை இவர் வழங்கமாட்டாரா என ஏங்கவும் வைத்திருக்கிறார்.

பாடல்வரிகள் தருவது நம்பிக்கையைத்தான். அப்படியிருக்க தோல்விக்கான உணர்ச்சிமிக்க காட்சிகள் மட்டும் ஏன்? அதை மீறிவாழும் சில மனிதர்களின் நம்பிக்கைக் காட்சிகளையும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம். 4 நிமிட வீடியோ பாடலில் கொஞ்சம் ஓவர் என்றாலும் எதிர்ப்பார்ப்புதானே தவிர இது விமர்சனமல்ல.

ஒரு பெரிய ஆல்பத்தின் தனிப்பாடலைப் போன்ற இச்சிறு குறும்படத்தை நீங்களும் காண....

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-இதயத்தைத்-திறக்கும்-கண்ணோடு-பாடல்/article9244399.ece?homepage=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?

 

 
nalla_seithy2_3054581f.jpg
 

திருமணம் முடிந்த புதிதில் அம்மா, உறவினர், நண்பர் என எல்லோரும் கேட்கும் கேள்வி ஏதாவது நல்ல செய்தி இருக்கா? அல்லது ஏதாவது விஷேசம் உண்டா? என்பதுதான்.

நாம் கூட பல திரைப்படங்களில் இந்த வசனம் இடம்பெறுவதைப் பார்த்திருப்போம். அதாவது தனது மகள் கருவுற்று இருக்கிறாளா? என்பதை அம்மாக்கள் நாசுக்காக கேட்கிற கேள்வியாம். இந்தக் கேள்வியை மையமாக வைத்துக் கொண்டு 3 நிமிடங்களுக்கு ஓடக்கூடிய Any Good News என்ற ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார் சோபியா அஷ்ரப். இவர் ஏற்கெனவே கொடைக்கானல் வோன்ட் (Kodaikkanal Won’t) காணொளியில் பங்காற்றிய அதிர்வை ஏற்படுத்தியவர்.

யூனிலீவர்க்கு எதிராக சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக வரிகள் எழுதி பாடிய சோபியா, இந்தக் காணொளியில் பெண்களின் நிலையை உண்மையாகப் பதிவு செய்துள்ளார். பெண்கள் எவ்வளவுதான் சாதித்தாலும் அவர்கள் கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை எனில் சமூகமும் சரி அப்பெண்ணின் குடும்பமும் சரி அவரது சாதனைகளை அங்கீகரிக்காது. ஏன் அவரது அம்மாவான மற்றொரு பெண்ணால் கூட இச்சாதனைகள் புறந்தள்ளப்படும் என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லியுள்ளார் சோபியா அஷ்ரப். இந்த 3 நிமிடக் காணொளியில் அவரே பாடி நடித்துள்ளார்.

காணொளியின் ஆரம்பத்தில் அம்மா தன் மகளிடம் ஏதாவது நல்ல செய்தி இருக்கிறதா? என்று கேட்கிறார். அதற்கு அவரது மகள் அன்றாட வாழ்க்கையில் தனக்கு நேர்ந்த நல்ல விஷயங்களை தான் செய்து மகிழ்ந்த தருணங்களைக் கூற அவரது அம்மா மகள் கூறிய எதற்கும் பதில் பேசாமல் மறுபடியும் நல்ல செய்தி இருக்கிறதா? எனக் கேட்கிறார். இப்பொழுது மகளோ தனது அலுவலகம், பதவி உயர்வு பற்றியெல்லாம் சொல்கிறார். இவற்றையும் அவரது அம்மா கணக்கில் கொள்ளாமல் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்க இப்பொழுதோ சற்று ஆவேசமாக உலக அரசியல் பிரச்சினைகளிலும் அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் வறுமை ஒழிப்பிலும் தான் முக்கியப் பங்கெடுத்ததாக கூறும் மகள் ஆணாதிக்கத்தை முற்றிலும் ஒழித்ததாகவும் கூறுகிறார். இவை எல்லாவற்றிற்கும் அமைதியாக இருந்துவிட்டு மறுபடியும் அதே கேள்வியை அதே ஒலியில் கேட்கிறார் அவரது அம்மா.

அந்த நாசுக்கான கேள்விக்கு கடைசியாக இல்லை என்ற பதிலைச் சொல்கிறார் மகள். அந்தப் பதிலுக்கு அம்மாவின் முகபாவனை பாவம் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்தக் காணொளியானது இசை நாடகம் போன்றே இருக்கிறது, அவரது அம்மா கேட்கும் கேள்விகெளுக்கெல்லாம் தன்னிடம் உள்ள சின்ன கிடாரை இசைத்துக் கொண்டே பதிலைப் பாடலாகச் சொல்கிறார் மகள்.

உண்மையில் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் மகளிடம் தொடர்ந்து அந்த ஒரே கேள்வியையே கேட்கிறார் அம்மா. அப்பெண்ணின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது? அலுவலகச் சூழல் எப்படி இருக்கிறது? உண்மையில் அவளுக்கன பிரச்சினைகள் என்ன? என்பதைப் பற்றி அறிந்துகொள்ள அவரது அம்மாவுக்கு ஆர்வம் இல்லை. அவரது ஆர்வம் எல்லாம் தனது மகள் கருத்தரித்துவிட்டாளா? இல்லையா? என்பதுதான். அப்படியே இல்லை என்ற பதில் வந்தபோது கூட தனது மகளுக்காக அவர் வருத்தப்படவும் இல்லை மாறாக பாவப்படுகிறார். நீ என்ன சாதித்து என்ன பயன்? என்பது போன்ற முகபாவனையை வெளிப்படுத்துவது அப்பெண்ணின் அத்தனை சாதனைகளையும் மகிழ்ச்சிகளையும் கேள்விக்குட்படுத்துகிறது.

தற்போதைய சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்வது, திருமணத்தில் தனக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுப்பது, பிடித்ததைப் படிப்பது என பல விஷயங்களிலும் சுதந்திரமாக செயல்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. உண்மையில் இவ்வாறு இருக்கும் பெண்களின் சதவீதமே குறைவாகத்தான் உள்ளது.

இத்தகைய பெண்கள் திருமண வாழ்க்கைக்குப் பின் அதே நிலையைத் தொடர முடிகிறதா? என்பதும் கேள்விதான். இது போன்ற நிலையில் பெண்கள் என்னதான் சாதித்தாலும் அவரது அங்கீகாரம் என்பது குழந்தையைப் பெற்றெடுப்பதில்தான் இருக்கிறது. பெண் என்பவள் முதலில் தாயாகத்தான் சமூகத்தில் சித்தரிக்கப்படுகிறார். அதன் விளைவே அவளுக்கு குழந்தை பிறந்தால்தான் அவளுக்கான் அங்கீகாரம் கிடைக்கும் என்பதும். பல பெண்களின் அம்மாக்களே இதனை செய்வது உண்டு. இவ்வளவு முக்கியமான கருத்தை கொஞ்சம் ஜாலியாக இந்தக் காணொளியில் காணலாம்.

இணைப்பு:

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-ஏதாவது-நல்ல-செய்தி-இருக்கா/article9256099.ece?homepage=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: மாற்றுக் காதல் ஜாக்கிரதை!- நீரஜ் பாண்டே குறும்படம்

 

 
neeraj2_3059954f.jpg
 

மாற்றுக் காதலுக்கும் மாட்டிக்கொண்ட காதலுக்கும் வித்தியாசத்தைச் சொல்லும் நீரஜ் பாண்டேவின் புதிய குறும்படம்.

'எ வெட்னஸ்டே' என்ற மிகச் சிறந்த படத்தை இந்தியாவுக்கு, மன்னிக்கவும் உலகுக்குத் தந்த இயக்குநர் நீரஜ் பாண்டே எடுத்த குறும்படம் இது.

தீவிரவாதத்த்தையும் சமூகக் கோபத்தையும் சமூக அக்கறையையும் சரிவிகிதத்தில் அணுகிய ஓர் இயக்குநரின் குறும்படம் 'OUCH' (அடச்சே அல்லது அடக்கடவுளே!) சாதாரணமாகவா இருக்கும்?

ஐந்து நட்சத்திர ஓட்டல் அறைக்கு ஓர் ஸ்மார்ட் குடும்பஸ்தர் வருகிறார். அவர் யாருக்காக காத்திருக்கிறாரோ அந்த நபர் ஒரு பெண். ஒரு புத்தம் புது சூட்கேஸோடு வருகிறார். அப்படியென்றால், என்னதான் அவர்கள் திட்டம் என்ற எதிர்பார்ப்பும் தூண்டத் தொடங்குகிறது.

ஏற்கெனவே திருமணமாகி குடும்பத்துடன் இருக்கும் அந்தப் பெண்ணை நம்பி, தன் மனைவியைகூட விவாகரத்து செய்யப்போவதாக சொல்லிவிட்டு வந்துவிட்டார் அந்த நபர்.

ஆனால் நடந்தது என்ன?

எக்குத்தப்பாக சில உறவுகள் சிக்கிக்கொள்கின்றன வாழ்க்கையென்னும் கடலில். அது சிலநேரங்களில் விடுகதையாகவும் வேறு சில நேரங்களில் சிறுகதையாகவும் மலர்வதுண்டு. பலநேரங்களில் அது தொடர்கதையாகவும் டிவி சீரியல்களாகவும் கூட ஆகிவிடுகின்றன.

இந்தக் குறும்படத்தில் வருவது அந்த மாதிரி ஓர் உறவுச்சிக்கலில் மாட்டிக்கொண்ட இருவரின் முக்கியப்பொழுது ஒன்று மட்டுமே. மனோஜ் பாஜ்பாயின் துறுதுறு நடிப்பிலும் பூஜா சோப்ராவின் பக்குவப்பட்ட பாவனைகளிலும் வெளிப்படும் வசனங்கள் 10 நிமிட ஒரே காட்சியில் சிரிப்பை அள்ளிக்கொட்டுகிறது. அவர்களின் உரையாடல்கள் வழியே கதாபாத்திரங்களின் வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவந்துவிட்டார் இயக்குநர்.

திருமண வாழ்க்கைக்கு வெளியே நிகழும் நல்ல உறவுகளையும் நல்ல உள்ளங்களையும்கூட நாம் கொச்சைப் படுத்திவிடமுடியாது. ஆனால், குடும்பத்தை அம்போவென்று விட்டுவிட்டு எகிறத் துடித்து எக்ஸ்பிரஸையே பிடிக்க நினைக்கும்போது ப்ரண்ட் வீல் மட்டுமல்ல, பேக்வீல்கூட ஒத்துழைக்க வேண்டும் என நினைப்பதில்தான் நிறைய சிக்கல்கள்.

மாற்றுக் காதலுக்கும், உரிய சொந்தங்கள் பார்க்கவில்லை என்பதற்காக வீட்டில் ரொம்ப நாள் பொய் சொல்லித் திரியும் காதலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை உணரவைத்த பாண்டே சார் உங்க ஒர்க் சூப்பர்.

ஒரு நிமிஷம் இருங்க, எங்க வாசகர்களும் உங்கப் படத்தைப் பாக்க விரும்பறாங்க.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-மாற்றுக்-காதல்-ஜாக்கிரதை-நீரஜ்-பாண்டே-குறும்படம்/article9275833.ece

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: வியப்பில் ஆழ்த்தும் 'வீரம்' பட டீஸர்!

 

 
veeram_3_3058586f.jpg
 

எது எப்படியோ டீஸரும் ட்ரெய்லரும் முதலில் நன்றாக இருக்கிறதா என ரசிகர்கள் தேடும் காலம் இது. அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற, படம் வெளியானதும் முதல் 3 நாட்கள் கல்லா கட்ட அவசியமானது நல்ல டீஸரும் ட்ரெய்லரும். இந்த ட்ரெண்டில், தற்போது இணைந்திருப்பது 'வீரம்' படத்தின் டீஸர்.

இது அஜித் நடித்த வீரம் அல்ல. மலையாளத்தின் பிரபல இயக்குநர் ஜெயராஜ் இயக்கியிருக்கும் வீரம். ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் இந்தியத் தழுவலாக தயாராகியுள்ளது. அந்த நாடகத்தின் கதையை ஒரு மலையாள பாரம்பரிய வரலாற்று சித்தரிப்பாக ஜெயராஜ் உருவாக்கியுள்ளார்.

புகழ்பெற்ற '300' என்கிற ஹாலிவுட் படத்தை வீரம் படத்தின் ட்ரெய்லர் நினைவுபடுத்திகிறது. காட்சியமைப்பு, நடிப்பு, வசனம், கிராஃபிக்ஸ், சண்டைக் காட்சிகள் என பார்க்கும் ஒவ்வொரு சினிமா ஆர்வலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது வீரம்.

ஜெயராஜ் பற்றி...

ஒட்டாள், சாந்தம், களியாட்டம், தேசாடனம் ஆகிய படங்களுக்காக தேசிய விருது வென்ற இயக்குநர் ஜெயராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரெ நேரத்தில் உருவாகியிருக்கும் வீரம், ப்ரிக்ஸ் திரைப்பட விழாவில் ஏற்கெனவே திரையிடப்பட்டுள்ளது. நவரசங்களைக் மையமாக வைத்து ஜெயராஜ் இயக்கிய சாந்தம், கருணம், பிபத்ஸா, அத்புதம் ஆகிய படங்களின் வரிசையில் இது 5-வது படம்.

http://tamil.thehindu.com/cinema/south-cinema/யூடியூப்-பகிர்வு-வியப்பில்-ஆழ்த்தும்-வீரம்-பட-டீஸர்/article9270975.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: காதலே வாழ்க்கையா?- 'அந்த நொடி' குறும்படம்

 

antha_nodi_3065841f.jpg
 

வாழ்வதற்கு எவ்வளவோ நல்ல காரணங்கள் தேவைப்படுகிறது. ஆனால் நினைத்தவுடனே சாவதற்கு மட்டும் ஒரு சொத்தைக் காரணம் கைவசம் இருக்கிறது நமக்கு? ஏன் இப்படி? வாழ்வைப் புரிந்துகொள்ளாத இன்றைய தற்கொலைகள் தேவைதானா எனக் கேட்கிறது 'அந்த நொடி' குறும்படம்.

பொதுவாக தற்கொலைகளைப் பற்றிய படங்களில் நீண்ட அறிவுரைகள் சொல்லப்படும், சில நேரங்களில் இந்த மாதிரி அறிவுரைகளைவிட அதற்கு பதிலாக சாவதே மேல் என்றுகூட நமக்குத் தோன்றிவிடும். 'அந்த நொடி' குறும்படம் அந்த மாதிரியான அசட்டுத்தனங்கள் எதையும் செய்யவில்லை. மாறாக இலக்கியத்தரம் மிக்க ஒரு சிறுகதையைப் படித்த திருப்தியைத் தந்துள்ளனர் ஆன்லைன் மீடியா பிரிண்டர் கியூ டிவி தமிழ் டாட் காம் மற்றும் ஹெச் 5 ஸ்டூடியோ இரு குழுவினரும் இணைந்து உருவாக்கியுள்ள இக்குறும்படத்தில்.

இளவயதிலிருந்து ஒரு நண்பனே இவனை கண்டுகொண்டு பலருக்கும் அடையாளப்படுத்துபவனாக இருக்கிறான். ஆனால் காலம் கரைந்தோட சமூக அந்தஸ்துக்காக இவனுக்கு நிறைய வேஷங்கள் வேண்டியிருந்தது. இதனால் அந்த முக்கிய நண்பனுக்கு ஆறுதல் கூறி அவன் சாவைத் தடுக்கக்கூட அவனால் முடியவில்லை.

காதல், வேலை, நட்பு, தாய் தந்தையர்கள், சமூகம் என்பதெல்லாம் நமது வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்தின் வெவ்வேறு அங்கங்கள் என்பது புரிய நிறைய பட வேண்டியுள்ளது. அதை புரிந்துகொள்ளவிடாமல் சுயசிந்தனைக்குக்கூட தகுதியற்றவர்களாகவே இன்றைய உலகம் பலரையும் வடிவமைக்கிறது.

கோகுல் பிரசாத், வைஷூ ராகவ், லோகேஷ், கௌதம், அசோக், மணி, யோகேஷ் என அனைவரின் பங்களிப்பும் குழந்தை நட்சத்திரங்களான அஷ்வின் கிரண், உஷேர் போன்றவர்களின் பங்களிப்போடும் அலட்டலில்லாமல் வந்துள்ள இக்குறும்படம் 2015ல் நாம் இழந்த நண்பர்களுக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

காதல் மட்டுமே உலகம் என்று சினிமாவை நோக்கியே இன்றைய குறும்படங்கள் உருவாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் காதல் மட்டும் இல்லை அதற்கும் மேலும் பல விஷயங்கள் இருக்கின்றன என அழுத்தமாக சொன்னதோடு நம்பிக்கையையும் வாரி வழங்கியிருக்கும் இயக்குநர் மதுசூதனுக்கு ஒரு பலமான கைகுலுக்கல்.

குறும்படத்தைக் காண:

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-காதலே-வாழ்க்கையா-அந்த-நொடி-குறும்படம்/article9295430.ece

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: மாற்றம் வீச கோரும் 'கக்கூஸ்' முன்னோட்டம்

 

 
 
 
kakoos_3088206f.jpg
 
 

சாலையில் செல்லும்போது குப்பை லாரி எதிரே வந்தாலே மூக்கைப் பிடித்துக்கொள்கிறவர்கள் நாம். அந்த வேலையையே வாழ்க்கையாகக் கொண்டவர்களை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? குப்பை லாரி குறுக்கே வந்ததற்கே ''ஐயோ தாங்கமுடியவில்லை'' என்று தள்ளி ஓடும் நாம் மலம் அகற்றும் வேலையில் ஈடுபடுத்தப்படுபவர்களை மனிதர்கள்தான் என்று எண்ணியிருக்கிறோமா?

சமீபத்தில் வெளிவந்துள்ள 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் இவர்களது குரல்கள் ஒலிக்கின்றன. கழிவகற்றுபவர்களின் அந்த ஆதங்கக் குரல்கள் நம்மை தூக்கமிழக்கச் செய்கின்றன.

ஒரு துப்புரவுத் தொழிலாளி தான் அணிந்திருக்கும் காக்கிநிற உடுப்பைப் பற்றி சொல்கிறார்... ''இந்த துணியோட போனா யாரும் என்னை மதிக்கமாட்டாங்க.'' இன்னொரு தொழிலாளியோ, ''லெட்டின் பாத்ரூம் கழுவுற வேலையைப் பாத்திங்கன்னா செத்துர்றலாம்...'' என்கிறார்.

''இங்க பாருங்க நானும் மனுஷன்தானே'' என்று தனது பணியிடத்தின் மோசமான நிலையைக் காட்டிக் கதறுகிறார் பிறிதொரு தொழிலாளி. கழிவகற்றும் பணிபுரியும் ஒரு தாய் ''இந்த வேலை செய்யும்போது என் பையன் என்ன அம்மான்னுகூட கூப்பிடமாட்டான் என்பது கொடுமையிலும் கொடுமை. அதைவிட கொடுமை இன்னொரு தாய்மார், ''அந்த மாதிரி குப்ப அள்றதைப் பாத்து என் பையன் என்னத் தொடாதம்மா கையைக் கழுவிட்டு என்னைத் தூக்கும்மா'' என்று கூறும்போது நம் நெஞ்சம் கிழிபடுகிறது.

சாதி அமைப்புமுறை தகர்க்கப்பட்டால் ஒழிய இந்நடைமுறை விளிம்பு நிலை மக்களை அழுத்திக்கொண்டுதான் இருக்கும் என்ற குரலையும் உணரமுடிகிறது. இத்தகைய கொடிய நடைமுறை எப்பொழுது வந்தது என்ற கேள்வி ஆராய்ச்சி வரலாறு எழுத வேண்டுமானால் உதவும். ஆனால் இப்பொழுதும் தொடர்கிறதே இதை மாற்ற என்னதான் செய்கிறார்கள் என்பதுதான் கேள்வி...

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ என்று மகாகவி பாரதி கேட்டு ஒரு நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. நம் கண்ணெதிரே மனிதர்கள் நோகும் இந்த அவலம் இன்னமும் தொடர்வதை இதயம் உள்ளவர்கள் பார்த்தால் நிச்சயம் குற்ற உணர்ச்சி ஏற்படும். மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிவு தொடரத்தான் வேண்டுமா? என்ற கேள்வி பிறக்கும்.

இந்திய சமுதாயம் எவ்வளவோ முன்னேறிவிட்டது என்று பெருமைபேசிக்கொள்கிறோம். யார் சொன்னது? 4 நிமிட முன்னோட்டத்திலேயே கழிவகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய சமூகத்தின் இன்றைய சாட்சிகள் 40 பேரை நம் கண்முன் நிறுத்திவிட்டார் இயக்குநர் திவ்யபாரதி. ட்ரெயிலரே இப்படியென்றால் மெயின் பிக்சர்? மாற்றம் தேடும் சமூகப் பணியில் களம் இறங்கியுள்ள இயக்குநர் திவ்ய பாரதியின் இம்முயற்சி நிச்சயம் தூண்டுகோலாய் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை...

நீங்களும் பாருங்கள்.... ''கக்கூஸ்'' ஆவணப்பட முன்னோட்டத்தை!

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-மாற்றம்-வீச-கோரும்-கக்கூஸ்-முன்னோட்டம்/article9370332.ece

  • தொடங்கியவர்
20 hours ago, நவீனன் said:

யூடியூப் பகிர்வு: மாற்றம் வீச கோரும் 'கக்கூஸ்' முன்னோட்டம்

 

 
 
 
kakoos_3088206f.jpg
 
 
 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-மாற்றம்-வீச-கோரும்-கக்கூஸ்-முன்னோட்டம்/article9370332.ece

”எங்களை சாகடிப்பதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்” - கேள்வி எழுப்பும் ’கக்கூஸ்’ ஆவணப்படம்!

 

கக்கூஸ்

"நாங்கள் சாகவில்லை. நீங்கள் தான் எங்களை கொன்றுவிடுகிறீர்கள்... எங்களை சாகடிப்பதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?" என்ற கேள்வியை நம்மிடம் எழுப்புகிறது “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தின் டிரெய்லர் வீடியோ. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது மிகவும் கொடுமையானது. துப்புரவுத் தொழிலாளிகளுக்கு தமிழகத்தில் நிகழ்த்தப்படும் கொடுமைகளை 2 மணிநேரத்திற்கு முழுமையான ஆவணப்படமாக இயக்கியிருக்கிறார் திவ்யா பாரதி.  யாரும் துணித்து எடுக்க யோசிக்க முடியாத தளத்தில் செயல்பட்டிருக்கிறார் என்பதே பாராட்டுதலுக்குரியது.

ஒன்றரை வருடத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் சுற்றித்திரிந்து, துப்புரவுத் தொழிலாளிகளைப்பற்றி முழுமையாக ஆவணப்படுத்தியிருக்கிறார். பழனிகுமாரு மற்றும் கோபாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, க்ரவுட் ஃபண்டிங் முறையில் முகநூல் நண்பர்களின் பணஉதவுயிடன் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார் திவ்யா பாரதி. இந்த டிசம்பரில் வெளியிட முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 

இந்த ஆவணப்படம் பற்றியும், துப்புரவுத் தொழிலாளிகளின் தற்போதைய வாழ்க்கை பற்றியும் ஆவணப்பட இயக்குநர் திவ்யாவிடம் கேட்டோம், “ 2013 சட்டத்திற்குப் பிறகு துப்புரவுத்தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எப்படியிருக்கு என்பதற்கான ஆய்வு. கடந்த அக்டோபர் முதல் இந்த அக்டோபர் வரை 20க்கும் மேற்பட்ட செப்டிக் டேங் க்ளீனர்கள் விஷவாயு தாக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். இதையெல்லாம் பேசக்கூடிய ஆவணப்படம் தான் இது.

மொத்தமாக 1009  கையால் மலம் அள்ளும் தொழிலாளிகள் தமிழகத்தில் இருப்பதாக, கடந்த வருடங்களில் தமிழக அரசு திவ்யா பாரதிபொய்யான தகவல்களை தந்துகொண்டிருக்கிறது. அந்த புள்ளிவிவரம் தவறு என்றும், ஒவ்வொரு துப்புரவுத்தொழிலாளியும் ஓர் மலம் அள்ளும் தொழிலாளி தான் என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவுவதற்கான முயற்சி தான் இந்த கக்கூஸ் ஆவணப்படம்.கையால் மலம் அள்ளக்கூடாது என்று 2013ல் சட்டம் இயற்றப்பட்டும் தோல்வியடைந்த நிலையிலே அது இருக்கிறது. 2014ல் உச்சநீதிமன்ற  தீர்ப்புப்படி, செப்டிக் டேங் க்ளீன் செய்யும் போது, இறப்பவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்ற தீர்ப்பும் கூட உயிரற்றுக் கிடக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதற்கான நஷ்ட ஈடு சென்று சேர்வது இல்லை. 

நான் ஒன்பது வருடங்களாக சமுக சேவையிலும், அரசியலிலும் இருந்துவருகிறேன். ஆனால் ஒருநாள் கூட துப்புரவுத் தொழிலாளிகளின் வாழ்வியல் பற்றி சிந்தித்துப்பார்த்ததில்லை. 2015 அக்டோபரில் மதுரையில் இரண்டு துப்புரவுத்தொழிலாளிகள் விஷவாயு தாக்கி இறந்ததாக செய்திகள் வெளியானது.  அந்த மரணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி சிந்திக்காமல் விட்டது எவ்வளவு கேவலம் என்ற குற்ற உணர்ச்சியில் தான் இந்த ஆவணப் படத்தை கையில் எடுத்தேன். 

இந்த ஒரு வருடத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சுற்றிவிட்டோம். அதில் 22க்கும் மேற்பட்ட மரணங்கள், அதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வலி என்னவாக இருக்கிறது என்பதையும் வலியுடன் ஆவணப்படுத்தியிருக்கிறோம். அவர்கள் வேலை செய்யும் விதம், மலத்தை கையாளுவதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் நம்மால் பல நாட்கள் தூங்கவோ, சாப்பிடவோ முடியாது. 

துப்புரவு தொழிலில் இருக்கும் நபர் இறந்துவிட்டால், அவரின் பிள்ளைகளின் படிப்பு போய்விடும். தந்தையின் வேலைக்கு பிள்ளைகள் வரவேண்டிய கட்டாயம் ஏற்படும். குடும்ப சூழலுக்காக இந்த தொழிலுக்கு வந்து தான் ஆகவேண்டும். அவர்களுக்கு வேறு இடத்தில் வேலையும் தரமாட்டார்கள். டிகிரியே முடித்தாலும், ஹோட்டல்களில் துப்புரவு பணிகளில் தான் வேலைப்பார்த்தாகவேண்டும்.

ஆனா, இந்தப் பிரச்னையைப் பற்றி யாரும் பேசமுன்வரவில்லை, அவர்களின் பணிகளில் உள்ள சங்கடம் நம்மை உறுத்தவில்லையென்றால் அதற்கு நம்மிடம் இருக்கும் சாதி தான் காரணம். இது அவங்களுக்கான வேலை தானே, என்ற எண்ணம் நம் மனதில் ஏற்றப்பட்டுள்ளது. அரசும் கூட அவர்களுக்கான சலுகைகளையும், நஷ்டஈடுகளை சரிவர கொடுப்பதில்லை. விஷவாயு தாக்கி இறந்த குடும்பத்திற்கு, விரல் விட்டு எண்ணும் அளவிற்கு, பெரும் போராட்டங்களுக்கு நடுவே தான் அவர்களுக்கான நஷ்ட ஈடு கொடுக்கப்படுகிறது. 

சென்னையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் செப்டிங் டேங்க் க்ளீன் செய்யும் போது ஒருத்தர் இறந்தார். அவரின் மூத்த பையன் படிப்பை விட்டுட்டு, அந்த வேலைக்கு இப்போ அவனே வந்துட்டான். இரண்டாவது பெண் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கிறாள். அரசிடமிருந்து 10 லட்சம் வந்தால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம் மாறும் சூழ்நிலை. ஆனால் அரசும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. 

fdsdfsdf_14545.jpg

இந்த 11 மாத பயணத்தின் மூலம், என்னிடம் மொத்தமாக 90 மணிநேரத்திற்கான ஆவண வீடியோ கையில் இருக்கிறது. இதைச் சுருக்கி 1.45 மணிநேர ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். அவர்கள் வேலை செய்வதை காட்சிப்படுத்துவதற்கு துப்புரவுத் தொழிலாளிகளே முன்வரமாட்டார்கள், ஏனெனில் அவர்களின் வேலை போவதற்கான வாய்ப்பு உண்டு.  அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்திய பின்னரே இந்த ஆவணப்படத்தை உருவாக்கினோம். முதல்கட்டமாக டிசம்பரில் மக்களின் முன் இந்த ஆவணப்படத்தை சென்னையில் திரையிடவிருக்கிறோம். அதன்பின்னர், ஒவ்வொரு ஊருக்கும் சென்று  திரையிட திட்டமிட்டிருக்கிறோம். ஆவணப்படம் எடுப்பது மட்டுமே என் கடமை, அதை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல நெட்டிசன்கள் தான் முன்னெடுக்கவேண்டும்” என்று கூறினார் ஆவணப்பட இயக்குநர் திவ்யா பாரதி. 

துப்புரவுப் பணியாளர்களின் வறுமையை இந்த சமுதாயமும், அரசாங்கமும் சுயநலத்துடன் பயன்படுத்திக்கொள்கிறது என்பதற்கான வாழும் சாட்சிகளே இவர்கள்...  மனித மலத்தை மனிதனே அப்புறப்படுத்தும் நிலை மாறவேண்டும் என்பதை உரக்கசொல்லும் இந்த மாதிரியான ஆவணப்படங்களை நாம் வரவேற்க வேண்டும்.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/73247-activist-kavitha-talks-about-her-kakkoos-documentary.art

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை

 

 
 
fish_3089299f.jpg
 
 

வடகிழக்கு இந்தியப் பகுதி அது. அசாம் மாநிலத்தில் உள்ள கார்பி கிராமம். பல்வேறு விதமான உயிரினங்கள் அங்கே வாழ்கின்றன. சுமார் 19,000 கி.மீ. நீளத்துக்கு ஓடைகளும், ஆறுகளும் பாய்கின்றன.

அங்கிருக்கும் அரிய வகை கெண்டை மீன்களைப் பிடிக்க புதுவித முறையைக் கையாளுகின்றனர் கிராமத்தினர். என்ன முறை அது? தூண்டில் மூலமா? இல்லை. கையால் மீன்பிடிப்பது? ம்ஹூம். வலை மூலம்? நோ. ஈட்டி மூலம் குத்திப் பிடிப்பதா? அதுவும் இல்லை. பொறி வைப்பதன் மூலமாகவா? இல்லை என்பதுதான் பதில். வேறு எதன் மூலமாகத்தான் பிடிக்கிறார்கள்?

வாருங்கள்.. காணொலி மூலமாகக் களத்துக்குச் சென்று காண்போம்.

ஆம் மக்காச்சோளத்தைக் கொண்டுதான் கிராம மக்கள் மீன் பிடிக்கிறார்கள். என்ன வகை மீன் தெரியுமா? பூமீன் கெண்டை. பெரிய வாயைக் கொண்ட மீன் இது. 9 அடி வரை வளரும் தன்மையும், 50 கிலோ எடை வரை வரும் தன்மையும் கொண்டது. இது பெரும்பாலும் இமாலய நதிகளில் மட்டுமே காணப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் விளையாட்டுக்கு இந்த மீன் பயன்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய சமஸ்தான அரசு இலச்சினைகளில் இவ்வகை மீன்களின் உருவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வாழ்விட இழப்பு, மாசுபாடு, மீன்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டன. தற்போது இவ்வகை கெண்டை மீன்கள் அழிந்து வரும் பட்டியலில் இணைந்துள்ளன.

ஆனால் கார்பி இன மக்களுக்கு இவ்வகை மீன்கள் அதிகம் பிடிக்குமாம். அவற்றைப் பிடிக்க மழைக்காலங்களில் ஆற்று நீரினுள் மக்காச் சோளத்தை வீசுகின்றனர். தினந்தோறும் பல மாதங்களுக்கு காலையிலும் மாலையிலும் மக்காச்சோள விதைகள் வீசப்படுகின்றன. மீன்கள் அதிகமாக இருந்தால் அவை நீரினுள் விழும்முன்பே அவை எம்பிக்குதித்து இரையைப் பிடிக்கின்றன. பின்னர் மீன்கள் கிடைக்கும் வரை காத்திருக்கும் படலம் தொடர்கிறது.

வெடி வைத்துப் பிடிப்பது உள்ளிட்ட காரணிகளால் இவ்வகை கெண்டைகள் மறைந்துவருகின்றன என்பது கவலைக்குரிய விஷயம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-அசாமின்-புதுவித-மீன்-பிடித்தல்-முறை/article9374167.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு தொடருங்கள் .

  • தொடங்கியவர்

ஒரே காட்சியில் படமாக்கப்பட்ட இந்தியாவின் முதல் குறும்படம்: யூடியூபில் வெளியானது

 
 
 

இந்தியாவில் முதன்முறையாக ஒரே காட்சியில் படப்பதிவு செய்யப்பட்ட ‘மகள்’ என்ற குறும்படம் பிரபல பொழுதுப்போக்கு வலைத்தளமான யூடியூபில் வெளியாகியுள்ளது.

 
 
 
 
ஒரே காட்சியில் படமாக்கப்பட்ட இந்தியாவின் முதல் குறும்படம்: யூடியூபில் வெளியானது
 
திருவனந்தபுரம்:

கே.எம்.ஆர். ரியாஸ் என்பவரின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மகள்’ குறும்படம் சிறுமிகள் மற்றும் இளம்வயது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வல்லுறவு போன்ற சமூகக் கொடுமைகளை கண்டும்காணாமல் போகும் இன்றைய சமுதாயத்தின் அவலத்தை சித்தரிக்கும் விதமான கதையம்சத்துடன் படைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த குறும்படம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அடர்த்தியான காட்டுக்குள் நடக்கும் ஒரு கொடூரமும் (கதை சொன்னால் குறும்படங்களின் மீதான ஈர்ப்பு குறைந்துவிடும். கீழேயுள்ள ‘லிங்க்’கில் சென்று பார்த்து தெரிந்துகொள்வதுதான் அந்த படைப்புக்கும், படைப்பாளிகளுக்கும் நாம் செய்யும் கைமாறாக அமைய முடியும்) அந்த கொடூரத்தை தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ முன்வராத ஒருவனின் மனசாட்சி பேசும் குரலும் சுமார் ஆறுநிமிட காட்சியாக ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரே காட்சியில் படமாக்கப்பட்ட இந்தியாவின் முதல் குறும்படம் என்ற பெருமைக்குரிய இந்த முயற்சியில் சமூகத்துக்கு சொல்லப்பட்டிருக்கும் சங்கதி என்ன என்பதை அறிய..,

https://www.youtube.com/watch?v=SMURMrJLu94

 

http://www.maalaimalar.com/News/TopNews/2016/11/28094444/1053063/India-first-one-scene-short-film-released-on-Youtube.vpf

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: சாகசத்தின் எல்லை சொல்லும் '4 இடியட்ஸ்'

 

 
 
four_idiats_3098384f.jpg
 
 
 

தொழில்நுட்பம் எவ்வளவுக்கெவ்வளவு புதுசுபுதுசாக உருவாகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு மனிதன் நாளுக்குநாள் மாறிக்கொண்டேயிருக்கிறான். நேற்று நாம் பெற்ற அனுபவம் இன்று வேறொன்றாக இருக்கிறது... நமது அன்றாடங்களை தொழில்நுட்பங்களே தீர்மானிக்கத் தொடங்கிவிட்டன...

இன்றைக்கு இளவட்டங்களை பைத்தியமாக்கிவரும் ஒரு பிரச்சனையை மையப்படுத்தியே '4 இடியட்ஸ்' பேசுகிறது. சிஎல்ஏ சினிமாவுக்காக லலிதா செல்லதுரை தயாரித்திருக்கிறார். ஜானிஷ், பிரதீஷ் குமார், ப்ரவீண் குமார், அனிஷ் ஆகிய இளைஞர்களின் நடிப்பென்றே தெரியாத அளவுக்கான அவர்களது தற்செயலின் மெல்லிய இயல்புகளும். செல்லத்துரையின் ஒளிப்பதிவும் கௌஷிக்கின் படத்தொகுப்பும் ஒரு எட்டு நிமிடக் குறும்படம் என்ற உணர்வைமீறிய அனுபவத்தை நமக்கு வசப்படுத்துகிறது.

பசுமை அடர்ந்த நகரின் அமைதியில் நான்கு இளைஞர்களின் சந்திப்போடு படம் தொடங்குகிறது. அது கன்னியாகுமரி மாவட்டத்துக் கதை என்பது அவர்கள் பேச்சிலேயே பளிச். சமீபத்தில் கல்லூரியை முடிந்திருந்த அந்த இளைஞர்களின் கண்களில் எதிர்காலம் பற்றிய ஏக்கங்கள், அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் அவர்களது சந்திப்புகள் ஒவ்வொன்றுமே சாகசங்களாக வேண்டும் எனும் ஆசை...

திட்டமிட்டபடி அவர்கள் ஒருநாள் சந்திக்கிறார்கள். கன்னியாகுமரியிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடுகரை என்ற இடத்திற்குச் செல்கிறார்கள். பைக் பயணமும், மலையேற்றமும் எப்போதும் உற்சாகம் அளிக்கக்கூடியவைதான். அந்த உற்சாகத்தின் எல்லையை மிக கவனமாகச் சொல்கிறார் இயக்குநர் செல்லதுரை.

சமூகத்துக்கு உபயோகமான செய்தியை சொல்லியிருக்கும் இக்குறும்படத்தை நீங்களும் பார்க்கலாமே....

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-சாகசத்தின்-எல்லை-சொல்லும்-4-இடியட்ஸ்/article9408698.ece

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: மீறலின் வதைகளை தேடிக் கண்டறியச் சொல்லும் 'மா' குறும்படம்

 
ma_short_movie_3101473f.jpg
 
 
 

டிசம்பர் 10 - மனித உரிமைகள் தினம்

சாதி, மதங்களில் தொடங்கி பால்பேதம், இனபேதம், நாட்டில் வசிப்பதற்கு மறுக்கப்படும் உரிமை, போர்ச்சூழலில் மறுக்கப்படும் மனித உரிமைகள் என உரிமைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதெல்லாம் வெளியே தெரிந்தபோது, உலகம் கவனிக்கும்போது தெரியவரும் மறுக்கப்படும் மனித உரிமைகள்.

வெளிஉலகத்திற்கு கடைசி வரை வெளியே தெரியாமலே முடிந்து, மடிந்து போகிற உரிமைகள் ஏராளம். நமக்கு இருக்கிற அவசர உலகத்தில் இதெல்லாம் தெரிந்துகொள்ள நேரமில்லை நமக்கு. அலுவலகங்களில் பொதுஇடங்களில் கூட மனித உரிமைகள் மீறப்படுவதையும் கேள்விப்படுகிறோம்.

முக்கியமாக பெற்றோர்கள். அவர்கள் கவனிக்கப்படாமல் தவிக்கும்போது அதற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டங்களை இயற்றியுள்ளது. அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டு கொடுமை செய்தால் அதை எப்படி கண்டுபிடிக்கமுடியும்? 'மா' என்ற திரைப்படம் மிகவும் நுட்பமாக இப்பிரச்சனையை பேசியுள்ளது.

தர்னுஜா ட்ரூ டெய்ல்ஸ்க்காக புரொடக்ஷன் மற்றும் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்காக தேப் ஜோதி மாஹாடோ இயக்கியுள்ள இப்படத்திற்கு நல்லதொரு ஒளிப்பதிவை கார்த்திக் வாலியா செய்துள்ளார்.

நம்மையறியாமலே சில சமயம் அப்படி நடந்துகொள்ளவும் செய்கிறோம் என்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறோமோ என்பதை இப்படம் கேள்வி எழுப்புகிறது. உண்மையில் நாம் வாழும் இந்த உலகத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்றும் சுட்டிக்காட்டுகிறது.

அப்படி அவதியுறும் மனிதர்கள் இன்னார் என்றுதான் நமக்கு உடனே அடையாளம் தெரியாது பிரத்யோக அக்கறையெடுத்துத்தான் அதைக் கண்டறிய வேண்டும் என்பதை மிக அழுத்தமாக இப்படம் பேசுகிறது. அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் இல்லாமல் இருக்கும் மனிதர்கள் பலர் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும் என்பதைச் சொன்ன இயக்குநர் தேப் ஜோதி மாஹாடோ அன்ட் குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும்.

மனிதஉரிமை மீறல் வதைகளின் நூதனமானதொரு போக்கை நீங்களும் பாருங்களேன்...

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: பாராட்டில் கனிந்த 'காக்கி' இதயங்கள்

 

 
 
police_admire_3103637f.jpg
 
 
 

கடந்தவாரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது சென்னையே அதிர்ந்தது. எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதுதான் அதில் ஆறுதல். தமிழக காவல்துறையும் அதற்கு ஒரு காரணம் என்கிறது சென்னை. ஒரு குரல், சில குரல் அல்ல, திரை நட்சத்திரங்களிலிருந்து நேரில் பார்த்த பத்திரிகையாளர்களிலிருந்து பொதுமக்கள் வரை பலரும் காவல்துறையினரின் பணி சிறப்பு என்கின்றனர்...

அந்த கூட்டுமனநிலைகளின் பிரதிநிதிகளாய் 'தி 6 டாட் இன்' அமைப்பினர் காவலர்களை நேரில் சந்தித்து பாராட்டிய வீடியோ முகநூல், வாட்ஸ்அப் என பரவிக்கொண்டிருக்கிறது...

ஏதாவது ஒன்று என்றால் போலீஸ்காரர்கள்தான் காரணம் என்று விரல்களை சுட்டும் நாம், வெயில், மழை என நேரம் காலமில்லாமல் புரியும் சேவை அவர்களுடையது என்பதை பலநேரங்களில் ஏனோ நாம் மறந்துவிடுகிறோம். புயல்பாதிப்புக்கு மறுநாள் செவ்வாய் அன்றுகூட சென்னையின் சாலைகளில் எங்கும் விழுந்துகிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

போலீஸ், போக்குவரத்து ஊழியர்கள், பத்திரிகை ஊழியர்கள், ஆவின் ஊழியர்கள் என பலரின் சேவைகளையும் குறிப்பிடும்போது அது அவர்கள் கடமை இதில் பாராட்ட என்ன இருக்கிறது என்று சொல்பவர்கள்தான் அதிகம். ஆனால் சிறுகுழந்தையைக் கூட அடுத்த அடிஎடுத்துவைக்க ஒரு பாராட்டைக் கொடுத்துதான் பெறவேண்டியுள்ளது. நாம் பெற்ற குழந்தையின் வளர்ச்சிக்கே பாராட்டு ஒரு பூங்கொத்து!

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று நமக்காக அல்லும்பகலும் உழைக்கும் காவலர்களை பாராட்டுவதில் நமக்கு தயக்கம் அதிகம். இந்த விஷயத்தில் காவலர்களைப் பாரட்டுவதில் முந்திக்கொண்டு விட்டனர் 'தி 6 டாட் இன்' அமைப்பினர்!

'தி 6 டாட் இன்' அமைப்பினரின் ஷொட்டு கிடைத்து மகிழ்வில் திளைத்தவர்கள் நிறைய. பள்ளி மாணவர்கள், வெளிநாட்டு வேலைநிமித்தம் சென்ற பிரிந்த மகளை பிரிந்த பெற்றோர், காதலர்கள் என பலவகையினரை இவர்கள் பிறந்தநாள், பண்டிகை என முக்கிய தினங்களில் அவர்களே எதிர்பார்க்காத வேளையில் திடீரென சென்று வியப்பில் ஆழ்த்துகின்றனர்... இங்கு குறிப்பிட்டுள்ள 'Keep Calm & Respect Police' எனும் இரண்டேகால் நிமிட வீடியோவும் அத்தகையதுதான். கடுகடுப்பான அந்த காக்கிச் சட்டைகள் பாராட்டும் இதயங்களைக் கண்டு, ஒரு முள்ளில்ரோஜாவாக புன்னகை பூப்பதை நீங்களும் பாருங்களேன்....

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-பாராட்டில்-கனிந்த-காக்கி-இதயங்கள்/article9425979.ece?homepage=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: குதூகல குடும்பத்துக்கு 'குறும்பட' யோசனை

 

 
short_movie_002_3105875f.jpg
 
 
 

குதிரைக்கு குர்றம் என்றால் யானைக்கு அர்றம் என்பது. அதாவது நீங்கள் ஒன்று சொன்னால் நான் ஒன்று சொல்வது... அப்புறம் எப்படி குடும்பம் விளங்கும்? குடும்பங்கள் மகிழ்ச்சிபெறவேண்டும் என்றால் முதலில் அன்பு முக்கியம். இதற்காக கவலைப்பட்டு எடுத்ததுதான் 'புருஷன் வெட்ஸ் பொண்டாட்டி' குறும்படம். கவலைப்பட்டு என்றால் ஏதோ கண்ணீர் சிந்தி அல்ல. சிரிக்கசிரிக்க என்று எடுத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே 'கண்ணாடி முன்னாடி ஒரு கிறுக்கன்' தந்த அதே நவீன்குமார்தான் இக்குறும்படத்தையும் நகைச்சுவையாக தந்திருக்கிறார்.

புதிதாக திருமணம் ஆன சில மாதங்களில் சண்டையாகவே மாறும் கருத்துவேறுபாடுகள் என்று சில வரத்தான் செய்கிறது. அதைக் களைவதற்கு இப்படத்தில் புது ஐடியா ஒன்று சொல்லியிருக்கிறார்கள். அதை செயல்படுத்தும் விதத்தையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் அது ஒர்க்அவுட் ஆகும் போலத்தான் தெரிகிறது.

அப்படியானால் இப்படத்தின் செய்தி இளந்தம்பதிகளுக்கு மட்டுந்தானா என்றால் இல்லை. பொதுவாகவே அன்பின் வாசலில் காத்திருக்கும் இளைய உள்ளங்கள் யாவருக்கும் இது அழகாக பொருந்தக்கூடியதுதான்.

இப்படத்தில் முன்மொழியப்பட்ட யோசனை ஏதோ நகைச்சுவைக்காக மட்டும் அல்ல. திருமண உறவுகள், சம்பிரதாயங்களின் பிடியில் மட்டுமே அமைந்தாலும் அது இதயங்களின் பிணைப்புகளிலிருந்தும் மலர வேண்டும். இதற்காக ஒரு திருமணமான இணைகள், இரண்டு திருமணமாகாத, அதற்கான முன்முயற்சிகளில் அலைபாயும் இரண்டு வெவ்வேறு இணைகள் என ஆறுபேரை வைத்து ஒரு மினி சினிமாவையே தந்துவிட்டார் இயக்குநர் நவீன்குமார்.

வினு அரவிந்த், ஜெயப்பிரகாஷ், வைரம், சுஜா, பவானி, தேவிகா ஆகியோரின் நடிப்பில், கேமரா ரத்தினக்குமார், இசை சாந்தன் உள்ளிட்டோரின் ஆர்வமிக்க பங்களிப்பில் குறும்படம் எளிமையாக அழகாக வந்துள்ளது. சர்வானி பிக்சர்ஸ் மற்றும் ராம சஞ்சீவ ராவ் புரொடெஷ்ன்ஸ் தயாரித்துள்ளது.

குடும்பங்கள் கலகலத்துப் போய்விடக்கூடாது என்பதற்காக கலகலப்பாக எப்படி சொல்லியுள்ளார்கள் என்பதை நீங்களும் பாருங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ம் தொடருங்கள்

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: பணத் துயரைக் கலாய்க்கும் குறும்புப் படங்கள்!

 

 
summna_nachchiki_3109036h.jpg
 

ஊழலுக்கு எதிராக ராணுவப் படை போல் செயல்பட வேண்டும் என்று நேற்றுகூட வானொலி உரையில் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். பணமில்லா பரிவர்த்தனையை எப்படித் தெரிந்துகொள்வது என மக்கள் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தனது உரையில் நாட்டு மக்களிடம் மேலும் தெரிவித்தார்.

மக்கள் நிலையை அறிய ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டாதநிலையில், அரசுக்கு எப்படி விளக்குவது என பெரிய பெரிய பொருளாதார நிபுணர்கள் கடுமையான ஆராய்ச்சிகளில் இறங்கி மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் 'சும்மாநாச்சிகி' அமைப்பினர் அந்த வேலையை மிக எளிதாக்கிவிட்டார்கள். பணமில்லா பரிவர்த்தனையால் மக்கள் படும் அவதிகளை கத்தி கத்திப் பேசிக்கொண்டிருந்தால் வேலைக்காகாது என நிறைய குறும்படங்களை மிகவும் அரிய முயற்சிகளோடு தந்துகொண்டிருக்கிறார்கள்.

'பணம் ப்ரம்மாஸ்மி' குறும்படம் என்ற நிலையைத் தாண்டி நாம் கந்தலாகிப் போன கதையை இப்படத்தின் வழியே பார்க்கும்போது சிரிப்பில் கண்கலங்கிவிடுகிறது. நம் ஊனோடும் உயிரோடும் கலந்துவிடுகிறது.

காலையில் வெளியே புறப்படும் தந்தையிடம் சின்னஞ்சிறு மகள் பூஜா குட்டி, ''ப்ளம்கேக் வாங்கி வாங்கப்பா'' எனக் கேட்க அந்த அன்புத் தந்தை ஆசையோடு வங்கி ஏடிஎம் கார்டு தன் பேன்ட் பாக்கெட்டில் உள்ள பர்சில் இருப்பதை உறுதிசெய்துகொண்டு கிளம்புகிறார்... உற்சாகத்தோடு கிளம்பும் அவர் ஏடிஎம் கியூவில் நின்றாரா? பணம் எடுத்தாரா? ப்ளம்கேக் வாங்கினாரா? போன்ற லௌகீக கேள்விகளைத் தாண்டி ஏடிஎம் கார்டு எனும் தெய்வீக மனம் கமழும் ஏகாந்த வெளியில் சஞ்சரிக்கும் மனிதர்களை காட்டியுள்ளமுறை ரணகளம்.

பிரச்சன்னா பாலச்சந்திரனின் திரைக்கதைக்கு செல்லா, தனம், லெனின் ஷெர்லின், அருண்குமார், சசிக்குமார், பிரச்சன்னா பாலச்சந்திரன், கவிதா எலிஸபெத், நிஷா சதீஷ், பொன்மலர் பமீலா, மயில்ராஜ், நெல்சன், சுபாஷ் சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். இக்குறும்படத்தைத் தயாரித்தது சவீதா சண்முகம்... தயாரிப்புப் பணிகளை நிர்வாகம் செய்தது சிவ சண்முகம். எஸ்.சுஜித் ஒளிப்பதிவில் ராஜேஸ்வர் சுஜித் இருவரது படத்தொகுப்பில், ராஜேஸ்வர் இயக்கத்தில் படம் அதகளம்.

அடுத்ததாக இன்னொரு குறும்படம் 'காலைப் பொழுதின் கலக்கத்திலே' படம் மற்ற படங்களைப் போல இருக்காது. கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். அதாவது காதில் கேட்முடியாத வார்த்தைகள், காரணம் வீட்டில் கழிவறை வசதிகூட இல்லாத நிலையில் இருப்பவர்களின் நிலையைச் சொல்லும்போது தவிர்க்கமுடியாத நிலையில் நின்று பேசவேண்டிய நிலை.

குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம். இவ்விரு படங்களிலும் நடித்துள்ளவர்களின் பங்களிப்பு ஏதோ படம் போலவே தெரியவில்லை. அதற்குக் காரணம் இதில் பங்கேற்றவர்கள் அன்றாடம் படும் அவதிக்காகவே தங்களை மீறி ஈடுபாட்டோடு நடித்துள்ளதுபோல் தெரிகிறது. அதேநேரத்தில் யதார்த்த நிலையை சுட்டிக்காட்டி வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் மொத்தபேருமே 'சும்மாநாச்சிகி' என்ற யூடியூப் தளத்திலிருந்தே இயங்குகிறார்கள். ஆனால் சார் உங்களைப் பார்த்தால் ''சும்மாநாச்சிகி'' என்பதுபோல தெரியவில்லையே....

நாட்டு மக்களை ஒரே ராத்திரியில் ஓட்டாண்டியாக்கிய இத்திட்டத்தை ஆரம்பத்தில் சிலர் எதிர்த்து பலர் ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்... சேகர் ரெட்டி முதலானோரின் வீடுகளில் கட்டுக்கட்டாக புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைப் பார்த்தபிறகு அவர்கள் சொல்லும் ஊழலை ஒழிப்போம், கறுப்புப் பணத்திற்கு எதிரான போர், ஏழைகளின் வளர்ச்சி என்பதெல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காய் என்பது தெரியவந்தது. இப்போது ஆதரிப்பவர்கள் சிலராகவும் எதிர்ப்பவர்கள் பலர் கிட்டத்தட்ட நாட்டு மக்கள்.

அனைவருமாகவே மாறிக்கொண்டிருக்க வாட்ஸ்அப்பில் வைரலாகிக்கொண்டிருக்கிறது இக்குறும்படங்கள். நாட்டின் வளர்ச்சியில் நாமும் பங்கெடுக்க 'பணமில்லாத பரிவர்த்தனை'யே என்று திரும்பத் திரும்ப சொல்பவர்களின் தலையில் நங்கென்று ஓங்கி ஒரு குட்டு வைக்கிறது. இந்த மாதிரி புரிதல் ஒன்றல்ல ஆயிரம் படங்கள் வந்தாலும் ஆட்சியாளர்கள் உணர்வாளர்களா என்பது இன்னொரு பிரச்சினை.

நாட்டோட வளர்ச்சியில் பங்கெடுக்கணும்னு நினைக்கறீங்களா நீங்களும் பாருங்க.... பயப்படாதீங்க சும்மா பாருங்க... இதுக்கு பணமெல்லாம் மன்னிக்கணும், கார்டுலாம் எதுவும் கேக்க மாட்டோம்.

 
 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-பணத்-துயரைக்-கலாய்க்கும்-குறும்புப்-படங்கள்/article9443957.ece?homepage=true

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: தடைக்கு தடைகேட்கும் சல்லிக்கட்டு'டா பாடல்

 
sallikattuda_3118594f.jpg
 
 
 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வெவ்வேறு மனநிலைகள் சிதறிக் கிடந்தாலும் 'நம்ம ஊர் விளையாட்டுக்கு யார்யாரெல்லாமோ வந்து தடைசொல்றாங்களே' என்று நினைக்கும்போது கோபம் வரத்தான் செய்கிறது.

ஜல்லிக்கட்டை தங்கள் வாழ்க்கையோடு வாழ்க்கையாக கொண்டவர்களின் ஆதங்கத்தை அவர்கள் பேச்சின் வழியே புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அதை எதிர்க்கும் அறிவுபூர்வமான வாதங்களை வைப்பதாக நினைத்துக்கொண்டு செயல்படும் அமைப்புகளும் அரசியல்வாதிகளும் வாதங்களை வைத்தாலும் புரிந்துகொள்வதில் சிக்கல் இல்லை.

ஆனால் அவர்கள் வைக்கும் வாதம் அறிவு மற்றும் அதிகாரத்தின் கணுவிலிருந்து முளைத்த பிறிதொரு கொம்புஆகவே பார்க்கவேண்டியதாக இருக்கிறது.

''எதிலும் அரசியல் செய்யும் ஓட்டுக்காரனே கொஞ்சம் இங்கே வந்து உண்மை நிலை அறிவாயா?'' என்று கேட்கிறது ஒரு பாடல். சல்லிக் கட்டுடா என்று பெயரிடப்பட்ட அந்தப் பாடல் சமீபத்தில்தான் யூடியூப் தளத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது.

''அவன் யாரு இவன் யாரு சொல்ல! அவன் என்ன இவன் என்ன தடைபோட?'' என்று தொடங்கும்போதே ''அதானே'' நம்மையறியாமல் முணுமுணுத்தபடி முழுப்பாடலையும் கேட்க நிமிர்ந்து உட்காருகிறோம்.

தொகுக்கப்பட்ட சில புகைப்படங்களைக்கொண்டே முழுப்பாடலையும் பார்க்க வைத்துள்ளது இதன் சிறப்பு.... அதிலும் காளையைக் குளிப்பாட்டி அதன் நெற்றியில் முத்தமிடும் அந்த இளைஞனின் ஈடுபாடுதான் எவ்வளவு இனிமை! நடுகல்லில் மட்டுமே தற்போது வாழும் ஏறுதழுவிய இன்னொரு இளைஞனின் வீரம் எவ்வளவு அழகு!

ஷ்வரன் இசையில் வடிவரசு வரிகளில், தமிழரின் உயிரில், உணர்வில் கலந்திட்ட சல்லிக்கட்டினை பாதுகாக்கத் துடிக்கும் அந்தப் பாடலை நீங்களும் கேளுங்களேன்.

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.