Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேட்டாரே ஒரு கேள்வி இராசகுமாரன்

Featured Replies

நியாயங்கள் நிமிரும்! வேடங்கள் கலையும்!

rasakumaran

கேட்டாரே ஒரு கேள்வி இராசகுமாரன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வேட்பாளராகப் போட்டியிடுபவரும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவருமான இராசகுமாரன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

இது வெறும் பதிலை மட்டும் தேடும் கேள்வியல்ல, எங்கள் ஒவ்வொருவரின் மனச்சாட்சியை இடித்து உலுப்பும் கேள்வி

கடந்துபோன காலத்தில் நாம் நடந்துவந்த பாதையில் பதிந்து கிடந்த. தடங்களை மீள்பரிசீலனை செய்யவும் புதிய பயணத்தைத் தொடங்கவும் எங்கள் சிந்தனை வானில் இடிமுழக்கம் எழுப்பிய கேள்வி.

எமது மண்ணினதும் மக்களதும் விடிவுக்காகத் தம்மை அர்ப்பணித்துப் போராடியவர்களும் அவர்களுக்கும் உணவோ உறைவிடமோ வழங்கியவர்களும் ஆண்டுக்கணக்கில் சிறைகளில்வாட அவர்கள் உறவுகள் பிரிவுத்துயரிலும் வறுமைப் பிடியிலும் துடிக்க, போரில் உடலுறுப்புக்களை இழந்தோர் நலிந்து துயர் சுமக்க தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் சக்திகள் எனத் தம்மை இனம்காட்டுபவர்கள் இலங்கையின் சுதந்திர தின விழாவில் பங்குகொண்டு இலங்கையின் ஆட்சியாளர்களுக்குத் தங்கள் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினர்.

எமது மக்கள் இலங்கையின் ஆட்சியாளர்களால் கொடும்துயரில் அமுக்கப்பட்டுத் திணற அதே ஆட்சியாளர்களுடன் நல்லெண்ண வெளிப்பாட்டுடன் உறவுகொள்ளும் அவர்களை நாம் இனியும் தலைவர்களாக ஏற்கவேண்டுமா? தடம்மாறியப்போகும் இவர்களின் பயணத்தை ஏற்று இவர்களுக்கு வாக்களிக்கவேண்டுமா?

தந்தைசெல்வாவால் ஆரம்பிக்கப்பட்டு 34 வருடங்கள் பேணப்பட்டு வரும் இலங்கையின் சுதந்திரதினத்தைப் பகிஸ்கரிக்கும் மரபைத் தன்னிச்சையாக மீறிய சம்பந்தனையும், சுமந்திரனையும் அவர்களால் தலைமைதாங்கப்படும் தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் இனியும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டுமா?

இதுதான் இராசகுமாரனின் கேள்வி! அன்று மட்டும் நான் தவறு செய்துவிட்டு மனம் திருந்தமுடிந்தால் மன்னித்துவிடலாம். தவறு என்ற எல்லை கடந்து துரோகி என்ற பாதையில் இறங்கிவிட்டால் மன்னிக்கமுடியுமா?

மஹிந்தவுடன் கிரிக்கட் விளையாடியதையும், இரவு நேரத் தேனீர் விருந்துகளில் கலந்துகொண்டு உறவாடியபோதும் போனால் போகட்டும் என மன்னித்தோம்.

2014ல் இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையைக் கொண்டிராத முதலாவது முன்வரைவை தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என அழுத்தம் கொடுத்ததை மன்னிக்கமுடியுமா? இலங்கையின் சுதந்திரதின விழாவில் 34 வருட மரபை மீறி பங்குபற்றியமையை மன்னிக்கமுடியுமா? 2015 மார்சில் வரவேண்டிய ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தடுத்து வைக்கப்பட்டதை மன்னிக்கமுடியுமா? விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் எனவும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறியதை மனின்னிக்கமுடியுமா?

இராசகுமாரனே!
உங்கள் கேள்வி நியாயமான கேள்வி
எங்கள் பதிலை நாங்கள் எதிர்வரும் 17ம் திகதி வழங்குவோம்!

அன்று

நியாயங்கள் நிமிரும்! வேடங்கள் கலையும்!

அரசியல் பலம் கோரும் அமைச்சர் டக்ளஸ்

dougls_afp_304

2015 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு அரசியல் ஆரவாரம் ஆர்ப்பரிக்க ஆரம்பித்துவிட்டது. பரப்புரை முழக்கங்கள் வடக்குக் கிழக்கு மண்ணையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டன.

பரம்பரை அரசியல்வாதிகள், தேருக்குத் தேனீர்க்கடைபோடவருபவர்கள், தேசியக் கட்சியின் முகவர்கள், மக்களைக் குழப்பியடிக்கக் கூலிக்கு களமிறங்கிய வேட்பாளர்கள், சமூக சேவை செய்ய நாடாளுமன்றப் பதவிகோரும் விசித்திரரர்கள் எனப் பல தரப்பினரும் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டனர்.

அதேவேளையில் தமிழ் மக்களின் இரத்தத்தில் நீச்சலடித்தவர்களும் எங்கள் உயிர்களைக் குடித்து பசியாறியவர்களும் விடுதலை விரும்பிகளை அழித்துக்கொண்டு பயங்கரவாதிகளை ஒழிப்பதாகப் பெருமைப்பட்டவர்களும் புனிதர்களாக தேர்தல் களத்தில் வந்துவிட்டனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டுவர தமிழ் மக்களிடம் அரசியல் பலம் கோரி வந்துள்ளார். அரசியல் பலம் மட்டுமன்றி அதிகார பலமும் கொண்டு அமைச்சராக அட்டகாசம் புரிந்த காலத்தில் கொண்டுவராத மாற்றத்தைப் புதிய அரசியல் பலம் மூலம் கொண்டுவரப்போகிறாராம். வெற்றிலையில் சிம்மாசனம் ஏறி வீற்றிருந்தபோது ஏற்படுத்தமுடியாத புதிய மாற்றத்தை அவர் முன்பு வீசியெறிந்த வீணையை எடுத்து மீண்டும் மீட்டிக்கொண்டு வரப்போகிறாராரம்.

அவருக்கு தமிழ் மக்களின் ஞாபகமறதியில் அவ்வளவு நம்பிக்கை. எப்படியிருப்பினும் அவர் புதிய ஒப்பனைகளுடன் தேர்தல் அரங்கில் மேடையேறிவிட்டார்.

அவர் மறந்துபோய்விட்ட மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கோசத்தை மீண்டும் உரத்துக்கூவ ஆரம்பித்துவிட்டதுடன் புதிதாக வரலாற்று வாழ்விடம், தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்பனவே தனது இலட்சியம் எனவும் பிரகடனம் செய்துள்ளார். அதிகார பலம், அரசியல் பலம் எல்லாமே இருந்தபோது செய்யமுடியாததை செய்ய விரும்பாததை நிறைவேற்று இப்போ பேரம் பேசும் தமிழ் மக்களிடம் அரசியல் பலம் கோருகிறார்.

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் கோரி ஆயுதப்போராட்டம் நடத்திய விடுதலைப்புலிகளை அழிக்க, மஹிந்த அரசுடன் இணைந்து இவர் நடத்திய வேட்டைகள் மறக்கப்படக்கூடியவையா? விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எனக் அறியப்பட்டவர்களை வீடுவீடாகவும் வீட்டு முற்றங்களிலும் சுட்டுக்கொண்றதை மறக்கமுடியுமா? இராணுவப் புலனாய்வாளர்களுடன் இணைந்து வெள்ளைவானில் மக்களைக் கடத்திச்சென்று நரபலி எடுத்ததை மறக்கமுடியுமா? தமிழ்த் தேசியத்துக்காகக் குரல்கொடுத்த ஊடகவியலாளர்களைக் கொலைசெய்ததை மறக்கமுடியுமா? ஊடகங்களின் செயலகங்கள்மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி, எரியூட்டி ஊடகப்பணியாளர்களைக் கொன்று படுகாயப்படுத்தி வெறியாட்டம் போட்டதை மறந்துவிடமுடியுமா? மாவீரர் தினத்தன்று மோட்ச பூசை நடத்திய பூசகரும் தமிழில தேசியகீதம் பாடவேண்டும் என வலியுறுத்திய உதவிக் கல்விப் பணிப்பாளரும் புனர்வாழ்வில் இருந்து திரும்பிய குடும்பஸ்தரும் கொல்லப்பட்டதை மறக்கமுடியுமா? கப்பம் கோரிக் கடத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவன் கொன்று புதைக்கப்பட்டதை மறகக்முடியுமா? அப்படியான ஒரு யுகம் மீண்டும் உருவாகி உறுதி பெறவா டக்ளஸ் மக்களிடம் அரசியல் பலம் கோருகிறார்?

சந்திரிக்கா அமைச்சரவையில் ரணில் அமைச்சரவையில், மஹிந்த அமைச்சரவையில் எனப் பதினைந்து வருடங்களுக்கு மேலாக அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சராக இவர் பதவி வகிக்கிறார். இவரிடம் அரசியல் பலம் இருந்தது அதிகார பலம் இருந்தது.

அத்தனை பலத்தையும் அவர் தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் எதிராகப் பிரயோகித்தார்.

இப்போது இவரால் துன்பதுயரங்களுக்குள்ளும் இழப்புகளுக்குள்ளும் தள்ளப்பட்ட எம்மிடமே அரசியற்பலம் கோருகிறார்.

இவர் கோரும் அரசியல் பலம் அவர் அதை அடுத்துவரும் ஆட்சியாளரிடம் காட்டி அமைச்சரவைப் பதவி எடுத்து அதிகார பலததைப் பெறுவதற்காகவே! அந்த அதிகார பலம் மீண்டும் தமிழ் மக்களுக்கு எதிராகவே பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

இன்று தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையாளர்களிடமிருந்து மட்டுமல்ல துரோகிகள் கூட்டத்திடமிருந்தும் விடுதலை பெற வேண்டியுள்ளது. எனவே டக்ளஸ் தேவானந்தாவையும், அவரது ஈ.பி.டி.பியினரையும் முற்றாக நிராகரிக்க வேண்டியது தமிழ் மக்களின் அடிப்படைத் தேவையாகும்.

எதிர்வரும் பொதுத்தேர்தலுடன் ஈ.பி.டி.பி. என்ற தமிழ் மக்கள் விரோதக் கும்பலை அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றுவது என திட்டவட்டமாக முடிவுசெய்வோம்.

“எதிரிகளை விடத் துரோகிகளே ஆபத்தானவர்கள்”
-தேசியத்தலைவர். வே. பிரபாகரன்

http://tamilleader.com/?p=50558

 

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு ஓட்டுகள் வாங்கி பதவிக்கு வருவது எதிர் நீச்சல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.