Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வஸீம் தாஜுதினை சித்திரவதை செய்தபோது தொலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்தார் காதலி

Featured Replies

waseem

வஸீம் தாஜுதினை கடத்தி கொலைசெய்ய முன் சித்திரவதை செய்யும்போது, அவர் எழுப்பிய அழுகையை , அவரின் காதலியை தொலைபேசியில் கேட்கச் செய்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளதாகப் பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். 
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் இதுவரை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் எவரும் முழுமையாகத் தீப்பிடித்து எரிந்து இறந்ததில்லை. அப்படியே தீப்பிடித்து எரிந்திருந்தாலும் ரகர் வீரரான வஸீம், சாரதியின் ஆசனத்தில் எரியும் வரை அமர்ந்திருக்க வாய்ப்பில்லை. இது தேர்தலை முன்வைத்து நடத்தப்படும் விசாரணை என குற்றஞ்சாட்டப்படுகிறது. அதில் உண்மையில்லை. வஸீமின் பெற்றோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவே இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் குறித்த கொலை தொடர்பான விசாரணைகள் திட்டமிட்டே மூடி மறைக்கப்பட்டன. இப்போது அவர்கள் கடும் பயத்துக்குள்ளாகியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களால் கொலை செய்யப்பட்டதாகக் சந்தேகிக்கப்படும் இலங்கையின் ரகர் விளையாட்டு வீரரான வஸீம் தாஜுதினின் சடலம் நேற்றைய தினம் விசாரணைகளுக்காக தோண்டியெடுக்கப்பட்டது.

ஆயினும் இந்தக் கொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லையென மஹிந்த ராஜபக்ச தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.colombomirror.com/tamil/?p=5378

 

தாஜுதீன் கொலை: சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கப் பணிப்பாளரிடம் 6 மணிநேரம் விசாரணை

AUG 12, 2015 | 1:00by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

SLRC-emblemசிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெகத் அபேநாயக்கவிடம், ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வசீம் தாஜுதீனைக் கடத்திச் சென்று கொலை செய்வதற்கு, சிராந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய என்ற அரசசார்பற்ற நிறுவனத்துக்குச் சொந்தமான டிபென்டர் வாகனமே பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம் ஏற்கனவே சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சிராந்தி ராஜபக்சவின் கோரிக்கையின் பேரில், இந்த வாகனத்தை, சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கம் சிரிலிய சவிய நிறுவனத்துக்கு வழங்கியிருந்தது.

இதனை சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கம் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியிருந்த அதேவேளை, தாம் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தயார் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்தநிலையில், சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெகத் அபேநாயக்கவிடம், செஞ்சிலுவைச் சங்க வாகனத்தை எவ்வாறு சிரிலிய சவிய நிறுவனத்துக்கு வழங்க முடியும் என்று ஆறு மணி நேரமாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் சட்டவிதிகளின் படி ஒரு வாகனத்தை மற்றொரு நிறுவனத்துக்கு வழங்க முடியாது என்று குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2015/08/12/news/8622

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை ஆயிரம் கொலைகளைப் பண்ணிவிட்டார்கள். ஆனால் எல்லாவற்றையுமே தாம் செய்யவில்லை என்று மறுத்தே வருகிறார்கள். ரக்பி வீரர் தஜுயுதீன், பத்திரிக்கையாளர் எக்னெலியெகொட..இவர்கள் மட்டும்தான் கொல்லப்பட்டவர்களா? இதுவரை சிங்களம் தொடர்ச்சியாக மறுத்துவரும் லட்சக்கணக்கான தமிழர்களின் கொலைகள் பற்றி யார் விசாரிப்பது ?

லட்சக்கணக்கில் தமிழர்களைக் கொன்று குவித்தவர்கள் யாரென்று காட்டிக் கொடுக்க மாட்டோம், சர்வதேச விசாரணையை அனுமதிக்கமாட்டோம் என்று இன்றிருக்கும் சிங்கள அரசு கூட கூறுகிறதே? தஜுயுதீனின் பெற்றோருக்கு நீதிகிடைக்க முயற்சிப்பதாகக் கூறும் இந்த அரசு கொல்லப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் பெற்றோர்களுக்கும் , குடும்பங்களுக்கும் நீதி வழங்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.