Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது ஏன்?

Featured Replies

TNPF-LOGO

நடைபெறவிருக்கும் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள இந்த இறுதிக்கட்ட நேரத்தில் தமிழர் தரப்பின் பரப்புரைகள் இரு கட்சிக்களுக்கிடையிலான போராக வெடித்துள்ளது. சிலவிடங்களில் ஆரோக்கியமாகவும் சிலவிடங்களில் வரைமுறையற்ற வெற்று வசைபாடல்களாகவும் இவை பரிமாறப்படுகின்றன.

இந்நிலையில் இக்கட்டுரையாசிரியர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை முன்வைத்து எழுதும் பத்தியிது. இந்நிலைப்பாட்டை நியாயப்படுத்த விரிவான தளத்தில் உரையாட வேண்டும். நிறைய விடயங்கள் தர்க்கரீதியாக விவாதிக்கப்பட வேண்டும். எனினும் ஓரிரு முக்கிய விடயங்களை வைத்து இக்கட்டுரை சுருக்கமாக வனையப்படுகின்றது. இதுபோல் ஏனைய விடயங்களையும் குறிப்பிட்டு சிறு கட்டுரைகள் தொடர்ந்தும் எழுதப்படலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற வகையில் தமிழரின் தேர்தல் அரசியல் வந்துவிட்டதால் இந்த வட்டத்துள் நின்றுகொண்டு சில அடிப்படைகளை அலசலாம். கடந்தகாலத்தில் இவர் செய்தது, செய்யத் தவறியது, அவர் செய்தது, செய்யத் தவறியது என்ற விமர்சனங்களை விட்டு பொதுத்தளத்தில் சில கூறுகளை நாம் அலசலாம்.

அவ்வகையில் சமூக மேம்பாட்டுத் தளத்தில் இவ்விரு அணிகளும் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்கின்றன என்பதைப் பார்ப்போம். சமூக மேம்பாடு என்று வருகின்றபோது பெண்ணிய விடுதலை முதன்மை பெறுகின்றது.

ஒப்பீட்டளவில் த.தே.ம.முன்னணி பெண்களுக்கான பிரதிநிதித்துவம் என்பதில் இயன்றளவு தன்னை வருத்தி உழைத்திருக்கிறது. இன்னும் அதிக பிரதிநிதித்துவத்தை அளிக்கத் தயாராக இருந்தபோதும் சிலவிடங்களில் பெண்கள் முன்வந்து பங்குகொள்ளும் தன்மை குறைவாக இருந்தமையையும் கட்சித்தலைமை சுட்டிக்காட்டியிருக்கின்றது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்கள் இவ்விடையூறை எதிர்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் ஏனைய நான்கு தேர்தல் மாவட்டங்களிலும் மொத்தம் ஒன்பது பெண் வேட்பாளர்களை, அதுவும் ஏனோ தானோவென்று நிறுத்தாமல் மக்கள் செல்வாக்குள்ளவர்களை நிறுத்தியிருக்கிறார்கள்.

இவ்விடயத்தில் த.தே.கூ. சரிவரச் செயற்படவில்லை. பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அது வேண்டா வெறுப்பாகவே கையாண்டிருக்கிறது. மக்கள் செல்வாக்குள்ள அரசியல் போராளியாக இனங்காணப்பட்ட அனந்தி சசிதரனை தமது சொந்த நலன்களுக்காக பகடைக்காயாக உருட்டி விளையாடிவிட்டு அவரை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாவண்ணம் பார்த்துக் கொண்டது தமிழரசுக்கட்சி. அவருக்கான வாய்ப்பை அளிக்க முன்வந்த சக கட்சிக்குக்கூட அந்த உரிமையை வழங்க தமிழரசுக்கட்சி முன்வரவில்லை.

இந்நிலையில் பெண் பிரதிநிதித்துவத்தைக் கையாண்டவகையில் தமிழ்த் தேசியப் போராட்டத்தில் சமூக விடுதலைக் கையாளும் தன்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முற்போக்கான நிலைப்பாட்டை எடுத்தமையை நாம் நிச்சயம் கருத்திற்கொள்ள வேண்டும்.

அதைவிட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இன்னொரு முக்கிய விடயத்தையும் கையாண்டுள்ளது. மலையகத்திலிருந்து பெயர்ந்து வந்து வன்னி மண்ணில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது வன்னிமாவட்ட வேட்பாளர் பட்டியலில் வழங்கியுள்ளது. இது மிகமுக்கியமான ஒரு படிநிலை.

மூன்றாவது விடயமாக, முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பு உறுப்பினர்களைக் கையாள்வது தொடர்பில் இரு அணிகளுக்குமிடையிலான நிலைப்பாடுகள். இதிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு நடந்துகொண்டது என்பதை இங்கு விவரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது முன்னாள் உறுப்பினர்களை அரவணைத்து அவர்களையும் வேட்பாளராக்கிக் களமிறக்கியுள்ளது. கொள்கையளவில் ஒன்றித்த, மக்கள் பணியாற்ற விருப்புள்ள, அரசியல் தெளிவுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அறுவர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் த.தே.ம.முன்னணி சார்பில் போட்டியிடுகிறார்கள்.

ஈழத்தமிழ்ச் சமூகத்தில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்போர் சில ஆயிரங்களாக இருக்கின்றார்கள். அவர்களின் குடும்பத்தினர் என்று எடுத்துக்கொண்டால் சில பத்தாயிரங்கள். ஆகவே ஈழத்தமிழ்ச் சமூகத்தில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களைப் புறந்தள்ளி ஒரு மக்கள் கூட்டத்தைக் காண முடியாது. ஈழத்தின் எக்கிராமத்தை நோக்கினும் குறைந்தது ஒரு போராளியையோ மாவீரனையோ இப்போராட்டத்துக்குத் தந்ததாகவே இருக்கும். ஆகவே முன்னாள் புலி உறுப்பினர்கள் என்போர் புறந்தள்ளக்கூடிய சிறுகுழுவன்று. மாறாக எங்கும் வியாபித்திருக்கும், ஈழத்தமிழ்ச் சமூகத்தில் இரண்டறக் கலந்துவிட்ட ஒரு பகுதியேதான். ஆகவே இப்பகுதியைப் புறந்தள்ளி அரசியற்பயணம் செய்வதென்பது இயல்பாகவே தமிழர்க்கான அரசியற்பயணம் அன்று என்றாகிவிடும்.

இவ்வகையிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் முன்னிலை வகிக்கின்றது.

இயன்றவரை சமூகம்சார்ந்து, ஒப்பீட்டளவில் சற்று முற்போக்காகச் சிந்தித்து தனது வேட்பாளர் நியமனங்களைச் செய்துள்ள அணியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே திகழ்வதால் ‘சமூக மேம்பாடு’ என்ற தளத்தில் த.தே.ம.முன்னணியை ஆதரிப்பதே சரியென்பது இக்கட்டுரையாளரின் நிலைப்பாடாகும்.

குறிப்பு: முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்படாமை குறித்து இக்கட்டுரையாளருக்குக் கருத்துண்டு. உண்மையில் இரு அணிகளும் முஸ்லிம்களை உள்ளடக்கவில்லை. த.தே.கூட்டமைப்பு முஸ்லிம்களை உள்வாங்குவதில் எப்பிரச்சனையும் இருக்கப் போவதில்லை. ஆனால் த.தே.ம.முன்னணில் இணைந்து போட்டியிடுவதில் முஸ்லிம்களுக்குச் சிக்கல் இருக்கிறது. இதுபற்றித் தனியாக எனது கருத்தை எழுத வேண்டும்.

-வசந்தன்

http://tamilleader.com/?p=50586

 

  • கருத்துக்கள உறவுகள்

அடடே வசந்தன் எண்டும் இன்னும் ஒரு அரசியல் கதை எழுத்தாளர் இருக்கிறார். :grin:

அட திரும்பவும் அந்த புளுகு மூட்டை தமிழ் லீடர்?

திருந்த்வாங்க என நினைத்து எத்தனையோ தாயக கட்டுரைகளை இணைத்தேம் அனா வாசிச்சாதானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.