Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'உன்பிறப்பில் பிசகிருக்கிறது' - வாக்குக்காக வசைபாடும் சிறிதரன் -

Featured Replies

உலகின் விழிகள் மொய்த்துக்
கிடக்கிறது எங்கள் முற்றம்.
எங்கள் அம்மணங்களை அவசரமாய்
பொத்துவதற்கு காலம் கட்டளையிடுகின்றது.
பூமியை பனையடிக்கு வருகவென 
தவங்கிடந்த தேவர்களின் வலிமைக்கு
அவனி அசைகின்ற போது
வாசலை ஓவென்ற திறந்து வைத்துவிட்டு
கட்டிப்புரண்டு ஒட்டு மானத்தையும்

ஊருக்கு அறிவிக்கின்றது
எங்கள் உதவாக்கரைகள்
சீ! எப்படி இருந்தோமய்யா
குண்டு விழுந்தாலும் கொழுத்த
விளக்கில்லையென்றாலும்
என்ன தெளிவோடு நடந்தோம் தினமும்.
முள்ளிவாய்க்கால்வரை
எங்கள் பட்டணங்களில் கனவுகளில்

ஒரு கறுப்புப்புள்ளி இருந்ததில்லையே
இப்பொழுது பிரபாகரன் இல்லையென்றவுடன்
பெருச்சாளிகள் எல்லாம் புறப்பட்டு நிற்கின்றன.
தமிழ் தேசியத்தை
மூக்குச்சளி துடைக்கிற துண்டுபோல நினைத்து
ஆளாளவுக்கு தூக்கிக்கொண்டு
அலைகின்றன அசிங்கங்கள்.
 
தலைவன்
எங்கள் தீர்க்கதரிசி
உலகின் முற்றத்தில் எங்களை ஏற்றி வைத்த
உலகத்தமிழரின் ஒளிவிளக்கு பிரபாகரன்
உன்னத நோக்கோடு கட்டியமைத்த
தமிழ் தேசிய கூட்டமைப்பை
வெட்டி எறிந்து அதன் வேரை
பிடுங்கி வீழ்த்திவிட்டு
கதிரை ஏறத்திரிகிற காலச்சனியன்கள்
அணிவகுத்து நிற்கின்றன.
ஏய்! ஈழத்தமிழா
உன்னை இழிச்சவாயர்கள் என்று இதுவரையும்
சிங்கள இனமும்
அண்டை அயல்நாடுகளும் நினைப்பதற்கு
என் குறுக்குப் புத்திதான் காரணம்.
சுதந்திரம் என்பது தாய்மண்ணுக்கு வராமல்
தள்ளி நிற்பது

உன் பரம்பரையில் இன்னும் சாகாமல் இருக்கும்
சோரம்போகும் சொறிக்குணத்தால்தான்.
பல்லாயிரம் குருத்துக்களை
விடுதலையின் பேரால் பாடையில் வைத்தபின்னும்
பல இலட்சம் சொந்தங்களை காவு கொடுத்த பின்னும்
இன்னும் சாராயப்போத்தலுக்கும்
சல்லாபங்களுக்கும்
காசு  நோட்டுக்களுக்குமாய் நீ
கட்சி மாறி நிற்கிறாய் எனில்
உன் பிறப்பில் பிசகிருக்கிறது.
உன் ஆத்தாளையும் அப்பனையும் விசாரி
உன் இனம் எது வேர் எது என்பதற்கு விடைதேடு!
 
பிரபாகரன் பெரிய ஞானி
வரலாற்றில் ஊறித்திளைத்த வல்லவன்
அதனால்தான் அவன்
சைக்கிளையோ
சிலந்தி வலையையோ
பானையையோ பூனையையோ
தமிழா உன் சின்னமாய் கொள் என்று
தேர்ந்தெடுத்துப்போகவில்லை.
பெருந்தலைவன் தந்தைசெல்வாகண் மூடியபொழுது 
தந்தையின் புகழுடலை
இளைஞர் தனயன் பிரபாகரன் சுமந்துசென்றான்
தந்தையின் தமிழரசையும்
தளர்ந்துவிடா அதன் சின்னத்தையும்
தானில்லா காலத்தில்
தமிழர் பலமாக காத்திடுக என்று
தம்பி பிரபாகரன்
நெஞ்சங்களில் எல்லாம் நெடுவேரறிய
விதைத்துப்போனான்.
வீடு என்பது பிரபாகரன் சின்னம்
மாவீரர்களின் நினைவுச்சின்னம்.
இதில் தமிழன் வெற்றிபெறுவதுதான் விடுதலையின் வெற்றி
தன் மானத்தின் வெற்றி
மாவீரர்களின் வெற்றி.
 
சந்திக்கு சந்தி
சைக்கிள் முன்னணி திறந்து
வாய் ருசிக்கு தேசியத்தை
வளைத்துக் கொண்டு
இருநாடு ஒரு தேசம் என்று இடர்படுகிறார் சிலர்.
சைக்கிளில் இருக்கிற அம்மணி!
முன்னொரு முறை பார்லிமென்ற் போய்
நீ வாங்கி தந்த பெண் விடுதலையை 
வைக்க இடமில்லாமல் அந்தரப்படுகின்றோம்.
போதும் அம்மணி
பென்சன் வருமென்று நினைக்கின்றேன்
சிதம்பரியோடு சேர்ந்து
வேறு ஏதாவது செய்யலாம் முயற்சி.
வித்தியா கொல்லப்பட்டபோது
உன் பெண்ணியம்
எங்கேபோனதென்று தெரியவில்லை.
பிரபாகரன் போன பின்பு பொங்கு
தமிழையும் காணவில்லை
எமது நிலம் எமக்கு வேண்டும்
கோஸ்டியையும் காணவில்லை.
மண்ணில் புரண்டு
காயம் சுமந்து
வலிகள் ஆயிரம் ஏந்தி
உயிர் கரைத்து
நம் இளையவர்கள் ஆக்கிய தேசியத்தை
கடைச்சரக்காக்கி காவடி ஆடாதீர்கள்.
தலைவர்கள் ஆகிற போதையும்
பாராளுமன்றம் போகிற ஆசையும்
தம்பிகளை தலை கால் தெரியாமல்
தடுமாற வைத்துள்ளன.
மாமனிதன் ஒருவனின்
மரியாதையை வாங்காமல்
இனியாவது திருந்தி ஓரணிக்கு வா
அறிவுடைவரெனில்!
 
என்ன கொடுமை சரவணா!
தாய் மண்ணில் தவறிப்பிறந்த
தரித்திரங்களுக்கு
வகுப்பெடுக்க வேண்டியதாய் போயிற்று
காற்று நம் பக்கம் வீசும்வேளை
இடையில் நாறல் மீனை வைத்து
கொண்டிருக்கும் பூனைகளாய்
தேர்தலில் சந்திக்கு சந்தி
எங்கள் மந்திகள் இறங்கியிருக்கின்றன.
அடுத்த வீட்டு அன்னலச்சுமியும்
எதிர்த்த வீட்டு கோகிலாவும்
பாராளுமன்ற ஆசைவந்து
பாழ்ங்கிணற்றுக்குள் தலைகுப்புற விழுந்து கிடக்குதுகள்
பக்கத்து வீட்டுக்கே தெரியாத
சுப்பிரமணியங்களும் குலசிங்கங்களும்
சக்திவேல்களும் தேவதாசுகளும் மல்லிகாக்களும்
ரம்பை ஊர்வசிகளும் குத்திக்கரணமடிச்சு
சுயேச்சைக்குழு எண்ட சுரியுக்குள்ள மாட்டியிட்டுதுகள்.
என்ன செய்ய தேசியத்தை உடைக்க
தீய சக்திகளிடம் வாங்கிய பணத்துக்காய்
புதுசா கொஞ்ச உடுப்பு வாங்கி
பேசியல் செய்து
பிரசுரங்களில் கொஞ்சம் எடுப்பாய்
விறுத்தமாய் இருக்குதுகள்.
இலுப்பண்ணையில் சுட்ட
பணியாரம் போல இருந்தவரெல்லாம்
தேசியத்துக்கு எதிரான கட்சிகளில் சேர்ந்து
பத்திரிகைகளில் பல்லை காட்டும்பொழுது
வெளுப்பண்டா உனக்கெண்டு சொல்ல
வேண்டும் போலுள்ளது.
 
என்ன இத்தனையும் பேசிவிட்டு
அடிவருடுவதில் சீனியர் பற்றி
ஒன்றும்பேசவில்லையே என்ற 
ஆதங்கம் வருமன கருதி
வீணையில் வந்து புதிய முகவரி கொடுக்கும்
மகிந்தராஜபக்சவின் தன்னிகரற்ற சாமரம்
தேவானந்தராஜபக்ச  சந்திரகுமாரராஜபக்ச பற்றியும்
கம்பனை அழைத்து
ஒரு கடைசிப்பாடல் எழுத வேண்டுமென்று நினைத்தேன்.
கம்பனிடம் கால்சீட் கேட்டேன்
கவியரசு கம்பன்
கருணா அம்மானுக்கும்
சிலந்திவலை புகழ் வித்திக்கும்
ஒரு சேடபுராணம் எழுதுவதால்
முடியாதென மறுத்துவிட்டார்.
எதிர்வரும் 18நாள் தேவானந்தராஜபக்சவினருக்கு
முனியம்மா தலைமையில் ஒரு
ஒப்பாரி பாடல் கச்சேரிக்காக 
ஒத்திகை நடந்துகொண்டிருப்பதை
என் மக்களுக்கு மகிழ்வுடன் அறியத்தருவது என்கடமை.
 
இரத்த சொந்தங்களே
இழப்பதற்கு ஏதுமின்றி தேச விடுதலைக்காய்
தேய்ந்துபோன எங்கள் தெய்வங்களே
மாசற்ற மண் விடுதலைக்காய்
இத்தனை தசாப்தங்களாய்
இலட்சியம் சுமக்கும் மனிதர்களே
புலம்பெயர்ந்தபோதும்
போராடும் என் தாய்பெற்றெடுத்த தமிழறவுகளே
தலைவர் பிரபாகரன் உருவாக்கிய
உன்னத பயணத்தின் அடையாளங்களை
உடைத்தெறிவதற்கு இங்கு யாருக்கும் உரிமை இல்லை.
தவறுகளை  உள்ளிருந்துபேசி
ஒரு குடும்பம்போல எங்கள் ஒற்றுமை காப்பதே
எம் பலம்

மண் விடுதலை பெறும்வரையும்
ஒரு அணியின் கீழ் கரிகாலன் காட்டிய 
வீட்டுச்சின்னத்தின் கீழ் எங்கள் உரத்த குரலையும்
பலத்தையும் வெளிப்படுத்துவது இலட்சியம்.
மகிந்தராஜபக்சவின் இனவாத கூட்டம்
தமிழரை அடியோடு விழுங்கும் வெறியில் இருக்கும்போது
நாம் புதிய தலைமைகளை உருவாக்குகின்ற
விளையாட்டுப்பிள்ளைகள் ஆகி விடக்கூடாது.
வரலாற்றுத்தருணத்தில் வழி தவறிப்போன
தவறை நாம் செய்துவிடக்கூடாது.
இன்னும் அரசியல் கைதிகளாய்
எங்கள் தியாகிகள் சிறைகளில்
பல ஆண்டுகளாய் சிதையும் போது
புலிகளை தேர்தலில் இறக்குகிறார்கள் எனில்
அந்தப் பூச்சாண்டி விளையாட்டை உணர்க மக்களே!
கூரை வீட்டுக்குள்  மூலைக்குள் இருக்கிற
புலுமைச்சிலந்தியை
அம்மா செருப்பாலோ
தும்புத்தடியாலோ அடித்துக்கொல்லத்தான் 
நான் சிறுவயதிருந்து பார்த்திருக்கிறேன.;
அது கையில் எடுத்து வைத்து கொஞ்சி விளையாடும்
மங்கலப்பொருள் அல்ல
மகா விசம் கடித்தால் கண் செருகும்
இதை விட நான் வேறு என்ன சொல்ல
வியாக்கியானங்கள்.
தமிழருக்கு விடுதலை கிடைத்து விட்டதாய்
நினைத்துக்கொண்டுதான்
இந்தத்தேர்தலில்
எங்கள் செம்மறிக்கூட்டங்கள் சில
சுயேச்சைகளாயும் நிற்கின்றன.

உலகத்தின் உச்சிவரை எட்டிவிட்ட தமிழனின்
சுதந்திர தாகத்தை கண்டு வெருண்டுபோன கயவர்
எப்பாடுபட்டாவது
தமிழர் தேசிய சக்தியை சரிக்கவேண்டுமன
சோறு தண்ணியின்றி
திரை மறைவில் நின்று கொண்டு
நயவஞ்சக வலை விரித்து
கொஞ்ச நரிகளை வீழ்த்தியுள்ளான்;.
சுரியில் மாட்டியுள்ளன
சுடுகாட்டுக்கு அனுப்பவேண்டிய சொறிநாய்க்கூட்டம்.
மானத் தமிழா
மறந்தும் வீட்டுக்கு புள்ளியிடாமல்
வேறெதிலும் மயங்கிவிடாதே
கிறங்கினாய்
மீண்டும் வரலாற்றில் வேறு சந்தர்ப்பம் வராது.
தங்கள் மானசீக எஜமான்
மகிந்த வரவேண்டுமென மனதார விரும்பும்
ஒரு கும்பல் சைக்கிளில் ஒரு சந்தர்ப்பம் கேட்கிறது
கவனம்!

உயிர் கொடுத்த உத்தமர்கள் பேரால்
தாங்கள் மட்டுமே வாழ்வதாக வழிவார்கள்
உருகுவார்கள் கசிவார்கள்
இது கயவர்கள் அவர்களுக்கு காட்டிக்கொடுத்த யுக்தி
ஏமாந்துவிடாதே தமிழா
இத்தனை வரலாறு கண்ட இனத்துக்கு
அன்னிய சூழ்ச்சிகள் பற்றியும்
அதற்காக எங்களுக்குள் இருந்து
பிரித்தெடுத்து பலவீனப்படுத்தும் முயற்சிகள் பற்றியும்
ஞானம் இல்லாது இருக்க முடியாது என நம்புகின்றேன்.
பதின்நான்கு கட்சிகளையும்
ஆறு சுயேட்சைக்கு குழுக்களையும்
எங்கள் தன் மானத்தின் சின்னமான 
வீட்டுக்கு வாக்களித்து தோற்கடிப்போம்.
விடுதலையை மிக விரைவில் வரவழைப்போம்.
எதிர்வரும் 17 
தமிழ் பெருமக்கள் தங்கள் ஒற்றுமையை
தேசிய சுயநிர்ணய சுயாட்சி அபிலாசையை
வெளிப்படுத்த வரும்  இறுதி சந்தர்ப்பம்.
மீண்டும் சொல்கின்றேன்

ஒற்றுமை ஓரணி
ஒரு கட்சியின் பெருவெற்றி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி
உலகத்தையும் நாம் தீர்மானிக்கின்ற
பெரும் பலத்தை கொடுக்கும்
இலட்சியத்துக்காய் ஒன்று திரள்வோம்
ஒரு முறை ஒரே ஒரு முறை
உன் வரலாற்றில் முதன்முறையாய்
ஒற்றுமையாய் இருந்துபார் தமிழா!
அந்த தேவசுகத்தை நீ ஒரு போதும் கைவிட மாட்டாய்!

 

11229321_610068869132960_613395171164346

சிறிதரனின்தேசத்தின் குரல் பத்திரிகையில் சிறிதரனின் செயலாளர் பொன்.காந்தனால் எழுதப்பட்ட கவிதை

Edited by கலையழகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.