Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களது கைகளைப் பலப்படுத்துங்கள்!- தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

Featured Replies

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களது கைகளைப் பலப்படுத்துங்கள்!- தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களது கைகளைப் பலப்படுத்துங்கள் என கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது தொடர்பில் அவ் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை அப்படியே வருமாறு,  மே 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ்மக்களுக்கு இருக்கிற ஓரே அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) விளங்கி வருகிறது.  2010 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதற்குப் பின்னரும் நடந்த தேர்தல்களிலும் தமிழ்மக்கள் ததேகூ க்கே ஆதரவு தெரிவித்து வந்திருக்கிறார்கள். இந்த ஆதரவு தேர்தலுக்குத் தேர்தல் வளர்பிறையாக வளர்ந்து வந்துள்ளதை கீழ்க்கண்ட அட்டவணை எடுத்துக் காட்டுகிறது.  மக்கள் அளித்த பேராதரவு காரணமாக இன்று சர்வதேச சமூகம் தமிழ்மக்கள் சார்பாகப் பேசக் கூடிய கட்சியாக ததேகூ ஐ அங்கீகரித்துள்ளது. தமிழ்மக்கள் தொடர்பான அரசியல், மனித உரிமை சிக்கல்கள் பற்றி இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம், தென்னாபிரிக்கா, சுவிஸ் போன்ற நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இராஜதந்திரிகள் ததேகூ உடன்தான் பேசுகிறார்கள்.  கடந்த சனவரி 8 ஆம் நாள் நடந்ந சனாபதி தேர்தலில் தமிழ்மக்கள் ததேகூ இன் வேண்டுகோளுக்கு இணங்க மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து வாக்களித்ததன் மூலம் இலங்கை அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தினார்கள்.  ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்துக்கு அத்திவாரம் இட்டார்கள். இராஜபக்ச நடத்திய குடும்ப ஏதேச்சதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். நாட்டில் நல்லாட்சி பிறக்க வழிசமைத்தார்கள். சட்டத்தின் ஆட்சி, பேச்சுச் சுதந்தரம், எழுத்துச் சுதந்திரம் போன்றவற்றை மதித்து நடக்கிற ஒரு சனநாயக ஆட்சி இப்போது ஆட்சியில் உள்ளது.  தமிழ்மக்களைப் பொறுத்தளவில் வெள்ளைவான் கடத்தல், கிறீஸ் பூதம், கழிவுஎண்ணெய் வீச்சு, நாய்களின் தலைகளை வெட்டி வீட்டு வாசலில் நட்டு வைக்கும் கெடுபிடிகள் நின்றுவிட்டன. இராணுவத்திற்கு இருந்த பொலீஸ் அதிகாரம் பறிக்கப்பட்டதன் விளைவாக இராணுவ நெருக்குவாரம் பேரளவு குறைந்துள்ளது.  வலிகாமம் வடக்கில் தமிழர்களிடம் இருந்து இராணுவம் பறித்த 6,382 ஏக்கர் காணியில் 1,033 ஏக்கர் காணி திருப்பி சொந்தக்காரர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. சம்பூரில் இராணுவம் பறித்த 816 ஏக்கர் காணி அதன் சொந்தக்காரர்களிடம் திருப்பி கையளிக்கப்பட்டுள்ளது.  கடற்படை 237 ஏக்கர் காணியில் உருவாக்கிய முகாமை வேறு இடத்துக்கு மாற்ற சம்மதம் தெரிவித்துள்ளது. நீண்ட, இடைவிடாத போராட்டம் காரணமாகவே இந்தக் காணிகள் மீட்கப்பட்டன. இருந்தும் வலிகாமம் வடக்கில் எஞ்சிய 5,349 ஏக்கர் காணி தொடர்ந்தும் இராணுவத்தின் பிடியில் உள்ளது. இது விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும்.  மேலும் அரசியல் கைதிகளது விடுதலை, 89,000 கைம்பெண்களின் மறுவாழ்வு, காணாமல் போனோர் பற்றிய விசாரணை போன்ற சிக்கல்களுக்கு எதிர்காலத்தில் தீர்வு காணப்பட வேண்டும்.  கடந்த தேர்தல்களில் வாக்களித்தது போன்று இந்தத் தேர்தலிலும் நாடாளுமன்றப் பிரதிநித்துவத்தை அதிகரிக்க தமிழ்மக்கள் ததேகூ க்கு வாக்களிக்க வேண்டும்.  ஆயுத பலத்தை இழந்து போன எங்களுக்கு இருக்கும் ஒரே பலம் வாக்குரிமையாகும். இதனை மக்கள் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி இருபதுக்கும் குறையாத ததேகூ வேட்பாளர்களை தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.  அதன் மூலம் இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஒரு உரத்த செய்தியைச் சொல்ல வேண்டும்.  அடுத்த ஆண்டில் எப்படியும் தமிழர்களது நீண்ட கால இனச் சிக்கலுக்கு தீர்வு கண்டேயாக வேண்டும். இனச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் தென்னிலங்கை கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை காணப்படுகிறது.  எப்படியான தீர்வு என்பதில்தான் அந்தக் கட்சிகளுக்கு இடையே முரண்பாடு நிலவுகிறது.  மகிந்த இராஜபக்சா 13 ஏ சட்ட திருத்தத்துக்கு அப்பால் போகாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்கிறார். இரணில் விக்கிரமசிங்கி மாகாண சபைகளுக்குக் கூடிய அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் இனச் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்கிறார்.  ததேகூ “ஒன்றுபட்ட வடக்கு-கிழக்கு அலகைக்கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பிற்குள்ளே அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கின் வரலாற்றுக் குடிகளான தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் மேற்கொள்ளப்படும் அனைத்து அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளினதும் நன்மைகளைப் பெற உரித்துடையவர்கள்.  இது வடக்கு- கிழக்கில் வாழும் எந்த ஒரு மக்கள் மீதும் எவ்வித முரண்பட்ட தாக்கத்தையும் ஏற்படுத்தா வண்ணம் இருத்தல் அவசியம்” எனக் கேட்கிறது.  இராணுவம் ஆக்கிரமித்த தனியார் காணிகளை மீட்பதில் பெரும்பங்காற்றியவரும், ஜெனிவாவில் அமெரிக்கா சிறிலங்கா நாட்டுக்கு எதிராகக் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானங்களின் பின்னால் பாடுபட்டவரும் மும்மொழிப் புலமை வாய்ந்தவரும் அரசியல் யாப்பு மன்றும் மனித உரிமை சட்டத் துறைகளில் வல்லவருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பி வையுங்கள். அவரின் சேவை எமக்குத் தேவை.  உங்களது வாக்குகளை சுயேட்சைகளுக்கும், தென்னிலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கும் குறிப்பாக தேர்தலைப் புறக்கணிப்பதையும் குறை சொல்வதையும் குற்றம் கண்டு பிடிப்பதையும் தமிழர்களின் ஒற்றுமையை சிதறடித்து சின்னாபின்னமாக்கும் கட்சிக்கு வாக்களித்து உங்கள் பொன்னான வாக்குகளை மண்ணாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.  எனவே தாயகத்தில் உள்ள எமது உறவுகள் ததேகூ இன் வேட்பாளர்களுக்குத் தங்கள் வாக்குகளை அளித்து அவர்களை பெருவெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  தொடர்புகளுக்கு: 416 281 1165, 416 708 6813'

TNA Canada 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களது கைகளைப் பலப்படுத்துங்கள்!- தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களது கைகளைப் பலப்படுத்துங்கள் என கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை அப்படியே வருமாறு,

மே 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ்மக்களுக்கு இருக்கிற ஓரே அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) விளங்கி வருகிறது.

2010 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதற்குப் பின்னரும் நடந்த தேர்தல்களிலும் தமிழ்மக்கள் ததேகூ க்கே ஆதரவு தெரிவித்து வந்திருக்கிறார்கள்.
இந்த ஆதரவு தேர்தலுக்குத் தேர்தல் வளர்பிறையாக வளர்ந்து வந்துள்ளதை கீழ்க்கண்ட அட்டவணை எடுத்துக் காட்டுகிறது.

மக்கள் அளித்த பேராதரவு காரணமாக இன்று சர்வதேச சமூகம் தமிழ்மக்கள் சார்பாகப் பேசக் கூடிய கட்சியாக ததேகூ ஐ அங்கீகரித்துள்ளது. தமிழ்மக்கள் தொடர்பான அரசியல், மனித உரிமை சிக்கல்கள் பற்றி இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம், தென்னாபிரிக்கா, சுவிஸ் போன்ற நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இராஜதந்திரிகள் ததேகூ உடன்தான் பேசுகிறார்கள்.

கடந்த சனவரி 8 ஆம் நாள் நடந்ந சனாபதி தேர்தலில் தமிழ்மக்கள் ததேகூ இன் வேண்டுகோளுக்கு இணங்க மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து வாக்களித்ததன் மூலம் இலங்கை அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தினார்கள்.

ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்துக்கு அத்திவாரம் இட்டார்கள். இராஜபக்ச நடத்திய குடும்ப ஏதேச்சதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். நாட்டில் நல்லாட்சி பிறக்க வழிசமைத்தார்கள். சட்டத்தின் ஆட்சி, பேச்சுச் சுதந்தரம், எழுத்துச் சுதந்திரம் போன்றவற்றை மதித்து நடக்கிற ஒரு சனநாயக ஆட்சி இப்போது ஆட்சியில் உள்ளது.

தமிழ்மக்களைப் பொறுத்தளவில் வெள்ளைவான் கடத்தல், கிறீஸ் பூதம், கழிவுஎண்ணெய் வீச்சு, நாய்களின் தலைகளை வெட்டி வீட்டு வாசலில் நட்டு வைக்கும் கெடுபிடிகள் நின்றுவிட்டன. இராணுவத்திற்கு இருந்த பொலீஸ் அதிகாரம் பறிக்கப்பட்டதன் விளைவாக இராணுவ நெருக்குவாரம் பேரளவு குறைந்துள்ளது.

வலிகாமம் வடக்கில் தமிழர்களிடம் இருந்து இராணுவம் பறித்த 6,382 ஏக்கர் காணியில் 1,033 ஏக்கர் காணி திருப்பி சொந்தக்காரர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. சம்பூரில் இராணுவம் பறித்த 816 ஏக்கர் காணி அதன் சொந்தக்காரர்களிடம் திருப்பி கையளிக்கப்பட்டுள்ளது.

கடற்படை 237 ஏக்கர் காணியில் உருவாக்கிய முகாமை வேறு இடத்துக்கு மாற்ற சம்மதம் தெரிவித்துள்ளது. நீண்ட, இடைவிடாத போராட்டம் காரணமாகவே இந்தக் காணிகள் மீட்கப்பட்டன. இருந்தும் வலிகாமம் வடக்கில் எஞ்சிய 5,349 ஏக்கர் காணி தொடர்ந்தும் இராணுவத்தின் பிடியில் உள்ளது. இது விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

மேலும் அரசியல் கைதிகளது விடுதலை, 89,000 கைம்பெண்களின் மறுவாழ்வு, காணாமல் போனோர் பற்றிய விசாரணை போன்ற சிக்கல்களுக்கு எதிர்காலத்தில் தீர்வு காணப்பட வேண்டும்.

கடந்த தேர்தல்களில் வாக்களித்தது போன்று இந்தத் தேர்தலிலும் நாடாளுமன்றப் பிரதிநித்துவத்தை அதிகரிக்க தமிழ்மக்கள் ததேகூ க்கு வாக்களிக்க வேண்டும்.

ஆயுத பலத்தை இழந்து போன எங்களுக்கு இருக்கும் ஒரே பலம் வாக்குரிமையாகும். இதனை மக்கள் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி இருபதுக்கும் குறையாத ததேகூ வேட்பாளர்களை தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

அதன் மூலம் இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஒரு உரத்த செய்தியைச் சொல்ல வேண்டும்.

அடுத்த ஆண்டில் எப்படியும் தமிழர்களது நீண்ட கால இனச் சிக்கலுக்கு தீர்வு கண்டேயாக வேண்டும். இனச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் தென்னிலங்கை கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை காணப்படுகிறது.

எப்படியான தீர்வு என்பதில்தான் அந்தக் கட்சிகளுக்கு இடையே முரண்பாடு நிலவுகிறது.

மகிந்த இராஜபக்சா 13 ஏ சட்ட திருத்தத்துக்கு அப்பால் போகாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்கிறார். இரணில் விக்கிரமசிங்கி மாகாண சபைகளுக்குக் கூடிய அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் இனச் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்கிறார்.

ததேகூ “ஒன்றுபட்ட வடக்கு-கிழக்கு அலகைக்கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பிற்குள்ளே அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கின் வரலாற்றுக் குடிகளான தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் மேற்கொள்ளப்படும் அனைத்து அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளினதும் நன்மைகளைப் பெற உரித்துடையவர்கள்.

இது வடக்கு- கிழக்கில் வாழும் எந்த ஒரு மக்கள் மீதும் எவ்வித முரண்பட்ட தாக்கத்தையும் ஏற்படுத்தா வண்ணம் இருத்தல் அவசியம்” எனக் கேட்கிறது.

இராணுவம் ஆக்கிரமித்த தனியார் காணிகளை மீட்பதில் பெரும்பங்காற்றியவரும், ஜெனிவாவில் அமெரிக்கா சிறிலங்கா நாட்டுக்கு எதிராகக் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானங்களின் பின்னால் பாடுபட்டவரும் மும்மொழிப் புலமை வாய்ந்தவரும் அரசியல் யாப்பு மன்றும் மனித உரிமை சட்டத் துறைகளில் வல்லவருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பி வையுங்கள். அவரின் சேவை எமக்குத் தேவை.

உங்களது வாக்குகளை சுயேட்சைகளுக்கும், தென்னிலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கும் குறிப்பாக தேர்தலைப் புறக்கணிப்பதையும் குறை சொல்வதையும் குற்றம் கண்டு பிடிப்பதையும் தமிழர்களின் ஒற்றுமையை சிதறடித்து சின்னாபின்னமாக்கும் கட்சிக்கு வாக்களித்து உங்கள் பொன்னான வாக்குகளை மண்ணாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

எனவே தாயகத்தில் உள்ள எமது உறவுகள் ததேகூ இன் வேட்பாளர்களுக்குத் தங்கள் வாக்குகளை அளித்து அவர்களை பெருவெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு: 416 281 1165, 416 708 6813

https://www.facebook.com/tna.canada?pnref=story

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.