Jump to content

அனைத்து கன்னிப் பெண்களுக்கும், முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது... இரத்தம் கசியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

17-1439805960-2-5seventhingshappycouples

அனைத்து கன்னிப் பெண்களுக்கும், முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது... இரத்தம் கசியுமா?

முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது, பெண்ணிற்கு இரத்தம் கசிந்தால் தான், அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்று பல ஆண்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், ஓர் பெண் கன்னித்தன்மையுடன் உள்ளாள் என்பதை முதல் முறையாக உடலுறவில் ஈடுபடுவதைக் கொண்டு கூற முடியாது.

முதல் முறை உடலுறவு கொள்வதை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!! மேலும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும்.

இந்த மாதிரியான கருத்து அக்கால பெண்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் இக்கால பெண்களுக்கு இது நிச்சயம் பொருந்தாது.

தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!! ஏனெனில் அக்காலத்தில் வயதிற்கு வந்த பின் பெண்கள் அவ்வளவாக ஓடியாடி விளையாடுவதில்லை. சொல்லப்போனால் அக்கால பெண்கள் 'அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு' என்பதற்கேற்றாற் போல் இருந்தனர். ஆனால் இக்காலத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும், குறிப்பாக விளையாட்டுத் துறையில் ஆண்களுக்கு நிகராக இருக்கின்றனர். சரி, விளையாட்டிற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்.

உடலுறவு எப்படி உடலை வலுவாக்குகிறது? நிச்சயம் சம்பந்தம் உள்ளது. இங்கு அதைப் பற்றித் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கன்னிச்சவ்வு: பெண்கள் பிறக்கும் போது பிறப்புறுப்பின் நுழைவாயிலில், ஹைமன் எனப்படும் மென்மையான படலம் போன்ற ஓர் கன்னிச்சவ்வுடன் பிறப்பார்கள். இந்த கன்னிச்சவ்வானது பெண் முதன் முதலில் உடலுறவு கொள்ளும் போது கிழிந்து, இரத்தக்கசிவு ஏற்படும்.

கன்னித்தன்மை கன்னிச்சவ்வில் இல்லை: கன்னிச்சவ்வானது சில பெண்கள் கடினமாகவும், சிலருக்கு மெல்லியதாகவும் இருக்கும். ஆனால் இன்னும் சில பெண்கள் இந்த கன்னிச்சவ்வு இல்லாமலேயே பிறப்பார்கள். எனவே ஓர் பெண்ணின் கன்னித்தன்மையை முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது கண்டுபிடிக்க முடியாது.

விளையாட்டு: கன்னிச்சவ்வு மிகவும் மெல்லிய திசு என்பதால், இது எளிதில் கிழியக்கூடியது மற்றும் எந்நேரத்தில் வேண்டுமானாலும், இது கிழியலாம். அதிலும் ஓர் பெண் ஓட்டம், சைக்கிளிங், நீச்சல் அல்லது வேறு ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுபவராயின், அவர்களுக்கு கன்னிச்சவ்வு கழிந்திருக்கும்.

டேம்பான்/ சுய இன்பம்: இறுதியாக, ஓர் பெண் சுய இன்பம் கண்டாலோ அல்லது மாதவிடாய் காலத்தில் டேம்பானைப் பயன்படுத்தி இருந்தாலோ, அதன் காரணமாகவும், கன்னிச்சவ்வு கிழிந்திருக்கும்.

வலி ஏற்படுவதற்கான காரணம்: முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்தக்கசிவு ஏற்படுகிறதோ இல்லையோ, கட்டாயம் கடுமையான வலியை உணர்வார்கள். இதற்கு அவ்விடத்தில் லூப்ரிக்கேசன் பற்றாக்குறை மட்டுமின்றி, சில பெண்கள் முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது அச்சமடைவார்கள். இப்படி அச்சம் கொள்ளும் போது, பிறப்புறுப்பு இறுக்கமடைந்து, லூப்ரிக்கேசன் குறைந்து வலி ஏற்படும்.

நன்றி தற்ஸ் தமிழ்.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் நமக்கு சரிவராது.. இனி கன்னித்திரை ஆராய்ச்சி என்று தமிழ் சிறி அண்ணா முடிவெடுத்திட்டார் போல:wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கின சைக்கிளோட நிண்ட மனுசனை காணவில்லை எண்டு அங்க, தேர்தல் முடிவு திரியில சனம் தேடுது.

உவரை எனென்னடா உங்க பிஸியா நிக்கிறார். அது சரியான பிஸி தான்.

அங்கின போய், உவர் இங்க நிக்கிறார் எண்டு சொல்லிப் போட்டு வாறன், பொறுங்கோ கிருபன். :grin:


 

அரசியல் நமக்கு சரிவராது.. இனி கன்னித்திரை ஆராய்ச்சி என்று தமிழ் சிறி அண்ணா முடிவெடுத்திட்டார் போல:wink:

உங்கின சைக்கிளோட நிண்ட மனுசனை காணவில்லை எண்டு அங்க, தேர்தல் முடிவு திரியில சனம் தேடுது.

உவரை எனென்னடா உங்க பிஸியா நிக்கிறார். அது சரியான பிஸி தான்.

அங்கின போய், உவர் இங்க நிக்கிறார் எண்டு சொல்லிப் போட்டு வாறன், பொறுங்கோ கிருபன். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.