Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவின் மீள் வருகை தோல்வி இந்தியாவிற்கு பெரும்நற்செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமர் மோடியின் அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிரான ஐக்கிய அரபு இராச்சியத்தின் உறுதியான நிலைப்பாட்டால் மகிழ்ச்சியடைந்திருந்த தருணத்தில்.இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் மீள் வருகை தடுக்கப்பட்டது இந்தியாவிற்கு மற்றுமொரு மகிழ்ச்சியான விடயமாக காணப்படும்.

இ;வ்வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெளியான முடிவுகளை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.அந்த தேர்தலில் மகிந்தராஜபக்ச சிறிசேனவிடம் தோல்வியடைந்தார்.

இலங்கையின் அடுத்த பிரதமராவதற்கு மகிந்த ராஜபக்ச பொதுத்தேர்தலில் பெரும் பெற்றியை பெறவேண்டிய நிலை காணப்பட்டது, ஆனால் அவரது கட்சியால் அதனை பெற முடியவில்லை-ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அமையும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியா ராஜபக்சவின் மீள்வருகை குறித்து அச்சம் கொண்டிருந்தது-அவர் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றினால் இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்த முன்னைய காலம் மீண்டும் திரும்பலாம் என இந்தியா கருதியது.

ராஜபக்சவின் தோல்வி சீனாவின் இராஜதந்திரத்திற்கு கிடைத்ததோல்வி என்கிறார் தந்திரோபாய விடயங்கள் குறித்த நிபுணர் பிரஹ்மா செல்லானே.சீனா தனது புதிய பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் இலங்கையை தனது முக்கிய தளமாக மாற்றுவதற்கு முயன்றது.

குறி;ப்பிட்ட நாடு ஓன்று வெளிநாடு ஓன்றின் பிராந்திய தந்திரோபாயத்தில் சிக்குண்டு தனது இறைமையை பறிகொடுப்பதை தடுக்கும் சக்தியாக தேர்தல்கள் விளங்குகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமராக யாரை நியமிக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை கொண்டிருந்த சிறிசேன தனது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றால் மகிந்தராஜபக்சவை நியமிக்கப்போவதில்லை என கடந்த வாரமே கடிதமொன்றில் அவரிற்கு தெரிவித்திருந்தார்.

எனினும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருந்தால் சிறிசேனாவினால் தனது அதிகாரங்களை பயன்படுத்த முடியாத நிலைகூட உருவாகியிருக்கலாம்,


ஜனவரி தேர்தலிற்கு பின்னரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் மகிந்த ராஜபக்சவின் செல்வாக்கு குறையாததன் காராணமாகவே அவரால் பாராளுமன்ற தேர்தலில் போடடியிட முடிந்தது.

இலங்கை;குள்ளேயே ராஜபக்சவின் மீள்வருகையை விரும்பாத பலர் உள்ளனர்.இலங்கையின் மத்தியவங்கி ஆளுநர் ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் பதவி துறப்பேன் என தெரிவித்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் தோல்வியை சீனாவிற்கு கிடைத்த இரண்டாவது இராஜதந்திர தோல்வியாக கருதவேண்டும். அந்த நாடு ராஜபக்ச அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதையே விரும்புகின்றது.


ராஜபக்ச ஏன் சீனாவை இவ்வளவு தீவிரமாக ஆதரித்தார் என்பதை இந்தியாவால் ஓருபோதும் ஊகிக்கமுடியவில்லை,- இந்தியா கடுமையாக எதிர்த்தபோதிலும் சீனாவின் அணுநீர்மூழ்கிகளை கொழும்புதுறைமுகத்திற்குள் அனுமதித்தார்,சீனா பெருஞ்செலவில் அபிவிருத்தி திட்டங்களை மிகமோசமான முறையில் முன்னெடுத்த போதிலும் அது ராஜபக்சவை பாதிக்கவி;ல்லை,

முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் ஊழல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள அதேவேளை ராஜபக்ச குடும்பத்தினர் சேர்த்த அளவுக்கதிகமான சொத்துக்கள் தென்கிழக்காசியாவை சேர்ந்த நிறுவனங்கள் ஊடகாவே இலங்கையை மீண்டும் வந்தடைந்தன என இந்திய அதிகாரிகள் நீண்ட காலமாக சந்தேகம்கொண்டிருந்தனர்.

தற்போதைக்கு இந்திய அதிகாரிகள் இலங்கை குறித்து கவலையடைவதை நிறுத்திவிட்டு தனது நாட்டில் சீனாவிற்கு நிலங்களை வழங்கியுள்ள மாலைதீவு குறித்து கவனம் செலுத்தலாம்.


மாலைதீவில் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளது கரிசனைக்குரிய விடயம்,இலங்கையில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் சீனா மாலைதீவு குறித்து அதிக கவனம் செலுத்தும் என்கிறார் பிரமஹா செல்லானே
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123107/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.