Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அரசுக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி! - இரண்டாகிறது ஐ.ம.சு.மு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தேசிய அரசுக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி! - இரண்டாகிறது ஐ.ம.சு.மு
[Friday 2015-08-21 09:00]
தேசிய அரசு அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கு மஹிந்த ஆதரவு அணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மைத்திரி ஆதரவு அணியினரின் முடிவே இதுவென்று தெரிவித்துள்ள வாசுதேவ நாணயக்கார, சுதந்திரக் கட்சியில் உள்ள மஹிந்த ஆதரவு அணியினர் எதிரணியில் இருந்தபடி செயற்படப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசு அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கு மஹிந்த ஆதரவு அணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மைத்திரி ஆதரவு அணியினரின் முடிவே இதுவென்று தெரிவித்துள்ள வாசுதேவ நாணயக்கார, சுதந்திரக் கட்சியில் உள்ள மஹிந்த ஆதரவு அணியினர் எதிரணியில் இருந்தபடி செயற்படப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  

மஹிந்தவுடன் கைகோர்த்து எதிரணியில் செயற்படுவதற்கு 60 இற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் தயாராகவே இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைவதற்கு முடிவெடுத்துள்ளதால்,சுதந்திரக் கட்சியின் தலைமையிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டாக உடையும் நிலை உருவாகியுள்ளது. விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியன இணைந்து நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கும் எனத் தெரியவருகின்றது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் இடம்பிடித்துள்ள லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான டியூ குணசேகர ஆகியோர் தேசிய அரசுக்குத் தமது ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமக்குரிய தேசியப் பட்டியல் நியமனத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இவர்கள் மைத்திரி பக்கம் நிற்கவேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.

http://www.seithy.com/breifNews.php?newsID=138675&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தேசிய அரசாங்கம் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்து
news

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையிலான தேசிய அரசாங்கம் தொடர்பான உடன்படிக்கை  கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
 
இலங்கையின் 16வது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=637274209721164919#sthash.WlKqgQbq.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.