Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆங்கிலப்பெயர்கள் சூடும் கிறிஸ்தவ தமிழர்கள்

Featured Replies

90 வீதமான கிறிஸ்தவர்கள் ஐரோப்பிய மொழிப் பெயர்களை வைக்கிறார்கள்.

99.99 வீதமான இந்துக்கள் வடமொழிப் பெயரை வைக்கிறார்கள்.

தமிழர்களில் கிறிஸ்தவர்கள் 5 வீதத்திற்கும் குறைவு.

கணக்குப்படி நூறு முறை இந்துக்கள் பற்றி பேசுகின்ற பொழுது ஒரு முறை கிறிஸ்தவர்கள் பற்றி பேசினால் போதும். அது கூடத் தேவை இல்லை.

இந்துத் தமிழர்கள் தமது பெயர்களை தூய தமிழில் வைக்கின்ற பொழுது, கிறிஸ்தவர்களும் தாமாகவே தூய தமிழில் பெயர் வைப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியர்கள் யாராவது மகாலிங்கம் என்ற பெயரை வைத்திருக்கிறார்களா?. வல்லைக்குமரன், முல்லைக்குமரன்(முருகக் கடவுளின் பெயர்), பிரபாகரன், மனோகரன், திலீபன், மோகன், சபேசன், கந்தப்பு, பிரணவன்(பிள்ளையாரின் இன்னொமொரு பெயர்), சரவணன்(முருகனின் பெயர்) என்ற பெயர்கள் வட இந்தியர்கள் யாருக்கும் உண்டா?. அந்தோணிப்பிள்ளை, அருளப்பர் என்ற பெயர் வெள்ளைக்காரர்களுக்கு உண்டா?

கடவுள் நம்பிக்கை யாருக்கும் இருக்கலாம், இல்லாமல் போகலாம். அது அவர் அவர் விருப்பம். அந்தோணியரைக் கும்பிடுபவர்கள் அந்தோணிப்பிள்ளை என்று ஒரு சிலர் சூடுகிறார்கள். ஏன் மைக்கல் என்று பெயர் வைக்க வேண்டும். சிவனைக்கும்பிடுபவர்கள் சிவனேசன் என்று பெயர் வைக்கிறார்கள். ஆனால் சில இந்துக்கள் கைலாஸ் என்று வட இந்தியர்களின் பெயரைச் சூடி அடையாளத்தினை இழக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவ தமிழர்களின் பெயர்கள் வெள்ளைக்காரரின் பெயரிலே இருக்கிறது. அவுஸ்திரெலியா அணியில் 2002ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ண துடுப்பாட்டப்போட்டியில் ஈழத்தமிழ்ச் சிறுவன் ஒரு போட்டியில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினைப்பெற்றார். ஆனால் அவரின் பெயர் ஆங்கிலப் பெயரில் இருந்ததினால் என்னுடன் வேலை செய்யும் பல வெள்ளைக்காரர்கள் வெள்ளைக்காரர் ஒருவர் தான் அவர் என நினைத்திருந்தார்கள். நான் சொல்லித்தான் விளங்கப்படுத்த வேண்டியதாக இருந்தது.

பெரும்பாலான கிறிஸ்த மதத்தினைச் சேர்ந்த தமிழர்கள் ஐரோப்பியர்களின் பெயரையும், சில இந்துக்கள் வட இந்தியாவில் உள்ளவர்களின் பெயர்களையும் சூடுகிறார்கள்.

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ தமிழர்களையும், இஸ்லாமிய தமிழர்களையும் குறை சொல்லாதையுங்கோ... பிறகு அவர்களை எங்களோட இருந்து பிரிக்கிறதாய் சிலர் சொல்லக் கூடும்...!

தமிழர் பொதுமுறை, வரலாறு என்பதுக்குளே இருந்து அவர்கள் எப்போதும் வெளியிலேயே நிக்கிறார்கள்... அவர்களாய் உள்ள வரட்டுக்கும் அது வரைக்கும் தமிழருக்கு மொழி ரீதியான தொடர்பு மட்டும்தான் அவர்களுடன் எங்களுக்கு இருக்கிறது...!

தமிழர்களின் திரு நாள் தைப்பொங்கலினை தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எத்தனை பேர் கொண்டாடுகிறார்கள். அவர்களைக் கேட்டால் அது இந்துப்பண்டிகை என்று சொல்கிறார்கள். தைப்பொங்கல் தமிழர்களின் பண்டிகை என்றும் இது இந்துக்களின் பண்டிகை இல்லை என்று அவர்களுக்கு தெரிவதில்லை.

தைப் பொங்கல் தமிழர்திருநாள் என்று அவர்களுக்கு தெரியாமல் போனதற்கு நாம்தான் காரணம்.

அதை இந்து மத விழாவாக நாம்தான் மாற்றி வைக்கிறோம்.

குமரன் என்ற பெயர் வடமொழியில் இல்லை. ஆனால் குமார் இருக்கிறது. பிரபாகர், மனோகர், திலீப், மோகன், பிரணவ் என்ற பெயர்களும் இருக்கிறது.

நாங்கள் வடமொழிப் பெயர்களை சிறிது மாற்றி விட்டு, அதை தமிழ் என்று சொல்லமுடியாது.

அதே போன்று அன்ரனி என்பதுதான் அந்தோணி. இங்கே அந்தோணி என்று வைப்பதோ அன்ரனி என்று வைப்பதோ, எல்லாம் ஒன்றுதான்.

மொத்தத்தில் தமிழர்கள் எந்த மதமாக இருந்தாலும், தூய தமிழில் பெயர்களை வைப்பதுதான் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிறிஸ்துவர்கள் தமிழில் வழி பட மக்களை கவர்ந்திழுப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இது என்ர மதம் எண்ட ஒரு பீலிங்கை மக்கள் மத்தியில கொண்டந்து அவையளை கவர்ந்திழுக்க இதொரு தந்திரரமாக கூட இருக்கலாம்.

ஆனால் தமிழர்களள் தமது மதமான இந்து மதத்தின் மூல மொழியான சமஸ்கிரதத்தில் தான் வழி பட வேணும் என்றது... சரியில்லை.. அப்படியானால் தமிழ் சமஸ்கிரதத்தில் இருந்து பிரிந்த தொன்றாகும் என்றே கருத வேணும்..

அல்லது இந்து சமயத்துக்கு முதல் தமிழன் வேறொரு மதத்தை பின்பற்றிக்கொண்டிருந்தான் என்று எண்ணலாம்.

ஆனால் தூயவன்.. தமிழில் வழிபடச் சொல்வது இந்து சமயத்தை உடைகஇக என்று எப்படி சொலஇகிறீர்கள். அப்ப சமஸ்கிருதம் இந்த சமயத்தை தாங்கிப் பிடிக்கிறது என்று அர்த்தமா.. ?

என்ன இருந்தாலும் அவரவர் நம்பிக்கையை தங்கள் சொந்த மொழியிலேயே பின்பற்றலாம். நம்பிக்கை தான்..

மற்றும்படி எல்லா மதங்களிலும் காதில் மலர் சுற்றும் விடயங்கள் தான் காலா காலமாய் கொள்ளப்படுகின்றன..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் வழிபாடு வேண்டாம் என்று சொல்லவில்லை காவடி. ஆனால் இவர்கள் தமிழில் செய் என்று அடம்பிடிப்பது சூழ்ச்சி மிக்க வார்த்தைகள் என்பதே என் கருத்து. இவர்களுக்கு அங்கே, ஆரிய வெறுப்பு இருப்பதால் தான், அதைத் தூக்கிப் பிடிக்கின்றார்கள். சொல்லுங்கள்! தமிழில் மந்திரம் ஓதுவது என்பது தமிழின் வளர்ச்சிக்கான அடிப்படையா?

தமிழின் வளரச்சிக்கு அதைத் தான் காரணமாகக் காட்டி ஏமாற்ற முனைகின்றார்கள் என்பதே உண்மை.

தமிழில் வழிபாடு செய்வதன் மூலம் தமிழ் வளரப் போவதில்லை. அப்படி நம்புகின்ற அளவிற்கு நாம் மூடர்கள் அல்ல. இது மொழி வளர்ச்சி பற்றிய பிரச்சனை அல்ல.

நாம் கடவுள் வழிபாடு என்பதே தேவையில்லை என்று சொல்கிறோம்.

சிலைகளுக்கு பூசை செய்வதே ஒரு மூட நம்பிக்கை. அதை தமிழில் செய்தாலும், அது மூட நம்பிக்கைதான்.

ஆனால் தமிழர்களுக்கு தாங்கள் நம்புகின்ற கடவுளை தமிழில் வழிபட, பூசை செய்ய உரிமை மறுக்கப்படுகிறது என்பதுதான் இங்கு பிரச்சனை. "தமிழில் வழிபாடு" என்பது உரிமைப் பிரச்சனை.

நீங்கள் யாரும் தடுக்கவில்லை என்று வாதிடலாம்.

ஆனால் ஆகம விதிகளையும், வேதங்களையும் காட்டி மனப் பயத்தை கொடுத்து, கேள்வி கேட்பதை தடுத்து ஒரு மாய விலங்கின் மூலம் தமிழர்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை.

ஆகவே ஒரு இனத்திற்கு அந்த இனத்தினுடைய தாய்மொழியில் வழிபடும் உரிமை மறுக்கப்படுவதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடவுள் வழிபாடு எமக்குத் தேவையா இல்லையா என்று சொல்லும் அளவுக்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என்பது தான் நிலை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது உங்களின் உரிமை. என் உரிமையில் தலையிட உங்களுக்கு உரிமையில்லைத் தானே!

அது மூட நம்பிக்கையா இல்லை என்பது குறித்தும், நீங்கள் வரைவு கொடுக்க உரிமையற்றவரே! எங்களுடைய நம்பிக்கை சரியா, தவறா என்று தீர்மானிக்க உரித்துடையவராகின்றோம். மற்றவர்களின் நம்பிக்கையை, மூட நம்பிக்கை என்றும், உங்களுடைய சிந்தனைகளைப் பகுத்தறிவு என்றும் படம் காட்டுகின்ற வேலை வேண்டாமே!

"தமிழா விழித்தெழு"

கேட்பதும் கேட்காததும் உங்கள் விருப்பம்

"தமிழா போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்" ;

பங்களிப்பதும் பங்களிக்காததும் உங்கள் விருப்பம்

உலகத் தமிழினமே ஒன்றுபடு"

ஒன்றுபடுவதும் படாது இருப்பதும் உங்கள் விருப்பம்

"சிறிலங்கா பொருட்களை புறக்கணி"

புறக்கணிப்பதும் நெக்றோ குடிப்பதும் உங்கள் விருப்பம்.

"தமிழா தாய்மொழியை முன்னிறுத்து"

தாய்மொழியை முன்னிறுத்துவதும், சமஸ்கிருதத்தை முன்னிறுத்துவதும் உங்கள் விருப்பம்

இப்படி பல கருத்துக்களை பலர் சொல்கிறார்கள். சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. முடிவெடுப்பதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு.

எமக்கு சரி என்று படுகின்ற இலக்கை நாம் அடையும் வரை, நாம் அதற்கான பரப்புரைகளை மேற்கொள்வோம். அதை யாரும் தடை செய்ய முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தைப் பொங்கல் தமிழர்திருநாள் என்று அவர்களுக்கு தெரியாமல் போனதற்கு நாம்தான் காரணம்.

அதை இந்து மத விழாவாக நாம்தான் மாற்றி வைக்கிறோம்.

அவர்கள் என்ன வெளி நாட்டில் இருந்து வந்தார்கள்?. அல்லது இடையில் வேறு நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து விட்டார்களா?

காலம் காலமாக தமிழர் பண்டிகையாக தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. வெள்ளைக்காரனின் ஆங்கிலப்பெயர்கள் தெரிகிறது. ஆனால் தமிழனின் தைப்பொங்கல் தெரியவில்லை.

எனக்கும் கோவில்களில் சமஸ்கிருத வழிபாட்டில் உடன் பாடு இல்லை. கனடாவில் ஒரு சைவக்கோவிலில் தமிழ் வழி பாடு நடை பெருகிறது. மற்றைய கோவில்களும் இதனைப்பார்த்தவது திருந்தலாம் தானே. சம்பந்தர் தேவாராம் பாடிய போது சிவபெருமான் காட்சி அளித்ததாகச் சைவர்கள் சொல்கிறார்கள். இது உண்மைச் சம்பவமோ அல்லது கற்பனையோ தெரியாது. ஆனால் தமிழில் பாடிய போது சிவபெருமான் காட்சி அளிக்கும் போது ஏன் சமஸ்கிருத வழிபாடு தேவை?

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...

ஆனால் நல்ல தூய தமிழ் பெயர்களை வைத்திருந்தால், இந்த பெயர் மாற்ற வேண்டிய தேவையே வராது. உதாரணத்திற்கு "தூயவன், மலரவன்" போன்ற பெயர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பெயர்களை எந்த மதத்திற்கு போனாலும் வைத்துக் கொள்ளலாம்.

காரணம் தூய தமிழ் பெயர்கள் மொழியின், இனத்தின் அடிப்படையிலேயே வைக்கப்படுகின்றன. மதத்தின் அடிப்படையில் அல்ல.

ஆகவே இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு நாம் இனியாவது நல்ல தமிழ் பெயர்களை வைப்பதுதான்.

சபேசன,் அப்ப வேலவன், சேயோன், வல்லி, முருகன், முக்கண்ணன், பிறைசூடியன், பரிமேலழகர், ஆனைமுகன், பிள்ளையார், வேழமுகன், மாயவன், திருமால், திருமகள், மலைமகள், கலைமகள், நான்முகன், ஐயனார், முதலிய பெயர்களெல்லாம் இனத்தின் அடிப்படையில் வைக்கப்படும் பெயர்களோ, சமய அடிப்படையில் வைக்கப்படவில்லையோ? :rolleyes:

தமிழர்களின் திரு நாள் தைப்பொங்கலினை தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எத்தனை பேர் கொண்டாடுகிறார்கள். அவர்களைக் கேட்டால் அது இந்துப்பண்டிகை என்று சொல்கிறார்கள். தைப்பொங்கல் தமிழர்களின் பண்டிகை என்றும் இது இந்துக்களின் பண்டிகை இல்லை என்று அவர்களுக்கு தெரிவதில்லை.

கந்தப்பு, தமிழ்க்கிறிஸ்த்தவர்களில் பெரும்பாலான கத்தோலிக்கர்கள் தைப்பொங்கல் கொண்டாடுவதாக கேள்விப்பட்டுள்ளேன்.

தூய தமிழிலும் மதம் சார்ந்த பெயர்களை வைக்க முடியும் என்கின்ற உங்களுடைய கருத்துச் சரி! அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

பொதுவாக தூய தமிழ் பெயர்கள் என்று பரிந்துரைக்கப்படுகின்ற பெயர்கள் பெரும்பாலும் மதம் சாராத பெயர்களாகவே இருக்கின்றன என்ற அடிப்படையிலேயே என்னுடைய கருத்தை சொன்னேன்.

பிறைசூடியன், பரிமேலழகர், ஆனைமுகன், வேழமுகன், நான்முகன் போன்ற பெயர்கள் பொதுவாக தமிழார்வலர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை.

முருகன், வேலவன், சேயோன், வள்ளி போன்ற பெயர்கள் எம்மிடையே வாழ்ந்த மனிதர்களை குறிக்கவே பயன்படுகிறது. தமிழர்கள் மத்தியில் புகழோடு வாழ்ந்து இறந்து நடுகல் வழிபாட்டு மூலம் வணங்கப்பட்டவர்கள். இதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லை.

புகழ் பூத்த தமிழர்களை குறிக்கின்ற பெயர்கள் என்ற அடிப்படையில் இப்பெயர்களையும் எந்த மதத்தவரும் கொள்ள முடியும்

மற்றையபடி உலகின் அனைத்து மொழியிலும் மதம் சார்ந்த பெயர்களை வைக்க முடியும் என்கின்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூய தமிழிலும் மதம் சார்ந்த பெயர்களை வைக்க முடியும் என்கின்ற உங்களுடைய கருத்துச் சரி! அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இதைத்தான் நானும் சொல்கிறேன். கிறிஸ்தவத்தமிழர்கள் ஆங்கிலப்பெயரில் பெயர் சூடாமல் கிறிஸ்தவமதம் சார்ந்த தமிழ்ப்பெயரிலும்(கிறிஸ்தவ மதப்பெயர் வைக்க விரும்பினால்), இந்துக்கள் சமஸ்கிருதமொழியில் பெயர் சூடாமல், இந்து மதம் சார்ந்த(இந்து மதம் சார்ந்த தமிழ்ப் பெயர் வைக்க விரும்பினால்) தமிழ்ப்பெயரிலும் பெயர் வைத்தால் நல்லது. அல்லது தூயவன்,மலரவன்,அருவி,பூங்கோதை என்ற தூயதமிழ்ப்பெயரில் வைத்தால் நல்லது. என்னுடன் வேலை பார்க்கும் தமிழர் அல்லாத இந்தியர்கள், அவுஸ்திரெலியாவில் சாதனை படைத்து வரும் சில தமிழ்ப்பெயர் இல்லாத ஈழத்தமிழர்களின் சாதனைகளை, இந்தியரின் சாதனையாகச் சொன்னார்கள். நான் அதற்கு அவர் ஈழத்தமிழன் என்று சொல்ல, அவர்கள் சாதனை படைத்தவரின் பெயர் வட இந்தியர் போல் அல்லவா இருக்குது என்று சொன்னார்கள். இதைக்கேட்கக் கவலையாக இருந்தது. இது போலத்தான் ஆங்கிலப்பெயரில் உள்ள ஈழத்து துடுப்பாட்டக்காரரின் சாதனையினை வெள்ளைக்காரர்களுடன் கதைத்தபோது அவர்களுக்கும் அவர் தமிழர் அல்ல என்று நினைத்தது எனக்கு கவலையினைத்தந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.