Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜியினால் முன்மொழியப்பட்ட பிரேரணையை நிராகரித்தார் அவைத்தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜியினால் முன்மொழியப்பட்ட பிரேரணையை நிராகரித்தார் அவைத்தலைவர்

news
இலங்கை தீவில் உள்ள தமிழ்,சிங்கள மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் சபை அமர்வில் முன்மொழியப்பட்ட பிரேரணை அவைத் தலைவரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
வடக்கு மாகாண சபையின் 33ஆவது அமர்வு இன்று  கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.
 
அதன்போது ஆரம்பத்தில் சிவாஜிலிங்கம் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தாமதமாக சபைக்கு வருகை தந்த அவர் குறித்த பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 
அதன்படி அவர் தனது பிரேரணையை முன்வைத்த போது அதனை எவரும் வழிமொழியாத காரணத்தினால் அந்த பிரேரணையை அவைத் தலைவர் நிராகரித்துள்ளார்.
 
எனினும், குறித்த பிரேரணையை மீண்டும் அடுத்த அமர்விலும் சமர்ப்பிக்கவுள்ளதாக சிவாஜிலிங்கம் சபையில் தெரிவித்துள்ளார். ஆனால், எதிர்வரும் ஆறு மாதக் காலத்திற்கு அந்த பிரேரணையை சபையில் முன்வைக்க முடியாது என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com

இனி இப்படி ஏதும் செய்தால் தான் சிவாஜிலிங்கம்    செய்திகளில் வருவார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.