Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனுக்கு சிலை அமைப்பதற்காக சிங்களவர்கள் வெளியேற்றப்படுகின்றனராம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரனுக்கு சிலை அமைப்பதற்காக சிங்களவர்கள் வெளியேற்றப்படுகின்றனராம்!
[Wednesday 2015-08-26 07:00]
பிரபாகரனின் சிலை அமைக்கப்பட வேண்டுமென்பதற்காக வடக்கிலிருந்து சிங்களவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என்று பியகம சுசில தேரர் தெரிவித்தார்.  பிட்டகொட்டே பாகொட வீதியில் தூய்மையான ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் ஆலோசகர் பியகம சுசில தேரர் இவ்வாறு தெரிவித்தார். தேரர் இங்கு மேலும் உரையாற்றுகையில்-

வடக்கிலுள்ள ஹசலக காமினி என்ற நாட்டுக்காக உயிர் நீத்த சிங்கள இளைஞனின் சிலை உடைக்கப்பட வேண்டும். இராணுவ நினைவுச் சின்னங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என நல்லாட்சிக்காக குரல் கொடுத்த பௌத்த குருமார் மற்றும் சிவில் அமைப்பினர் இன்று வடக்கில் பிரபாகரனின் சிலை நிறுவ வேண்டும் விஜயகலா மகேஸ்வரனின் என்ற கனவை நனவாக்குவதற்காக அங்கிருந்து சிங்களவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்கின்றனர்.

நாக விகாரைக்கு போகும் சிங்களவர்கள் தாக்கப்படுகின்றனர். இது தொடர்பில் நல்லாட்சிக்கு குரல் கொடுத்தவர்கள் சொல்லும் பதில் என்ன? இதுவா நல்லாட்சி? ஜனவரி 8ம் திகதி வெளிநாட்டு சதிகாரர்கள் மஹிந்த ராஜபக்சவின் வெற்றியை தடுத்தார்கள் இன்று மஹிந்தவின் வெற்றியை ஜனாதிபதி மைத்திரிபால தடுத்துள்ளார். வடக்கிலிருந்து சிங்களவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். ஆனால் அதனை வெளியில் தெரியாமல் அரசு மூடி மறைக்கின்றது.

நாய்க்கு கல்லடித்தால் அது குரைக்கும் சிங்கத்திற்கு கல்லடித்தால் அது சீறும் எனவே தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி யெழுப்ப வேண்டாம் எழுப்பினால் விளைவுகள் விபரீதமாகும். இந்த ஆட்சியை முன்னெடுக்க இடமளிக்க மாட்டோம் என்றும் தேரர் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=139063&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு கல்லடித்தால் அது குரைக்கும் சிங்கத்திற்கு கல்லடித்தால் அது சீறும் எனவே தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி யெழுப்ப வேண்டாம் எழுப்பினால் விளைவுகள் விபரீதமாகும். இந்த ஆட்சியை முன்னெடுக்க இடமளிக்க மாட்டோம் என்றும் தேரர் தெரிவித்தார்.

 நடிகர் விவேக்கின் படங்களை அதிகம் பார்பவர் போல கிடக்கு,......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.