Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மசாலா

Featured Replies

  • தொடங்கியவர்

உலக மசாலா: இரண்டு குழந்தைகளின் எடையில் ஒரு குழந்தை!

 

 
baby_3173206f.jpg
 
 
 

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் வசிக்கும் கிறிஸ்ஸி கார்பிட், 6 கிலோ எடையுள்ள பெண் குழந்தையைப் பிரசவித்திருக்கிறார்! “இது எனக்கு நான்காவது பிரசவம். வழக்கத்தைவிட இந்த முறை என் வயிறு மிகவும் பெரியதாக இருந்தது. இரட்டைக் குழந்தைகளாக இருக்கலாம் என்று நினைத்திருந்தோம். என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள் இயற்கையான பிரசவத்துக்கு வாய்ப்பு இல்லை. அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றனர். ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர்களும் செவிலியர்களும் குழந்தையை வெளியே எடுத்தபோது அதிர்ந்து விட்டனர். பிறகு சிரிக்க ஆரம்பித்தனர். குழந்தை எவ்வளவு எடை இருப்பாள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றியதைப் பகிர்ந்துகொண்டனர். மயக்க மருந்து கொடுத்திருந்தாலும் எல்லா விஷயங்களும் என் காதில் விழுந்தன. சிறிது நேரத்தில் குழந்தையை என்னிடம் கொடுத்தபோது, 6 கிலோ எடை என்றார்கள். எனக்கு மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கடந்த 3 வாரங்களாக என் எடை ஏறவே இல்லை. ஆனால் குழந்தையின் எடை ஏறிவிட்டது. ஒரு வாரம் கழித்துப் பிறந்திருந்தால், இன்னும் அரை கிலோ எடை அதிகரித்திருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். எடை அதிகமாக இருந்தாலும் குழந்தைக்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. குழந்தைக்காக வாங்கி வைத்திருந்த துணிகளைப் போட முடியாது. 9 மாதக் குழந்தைக்குரிய துணிகள் தான் இவளுக்குச் சரியாக இருந்தது. என் மகளை வீடியோவாக எடுத்து ஆவணப்படுத்தி வைத்திருக்கிறேன்” என்கிறார் கிறிஸ்ஸி. “எந்தத் தாய்க்கும் 6 கிலோ எடையுள்ள குழந்தையைப் பிரசவிப்பது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும். கிறிஸ்ஸி தைரியமானவர்” என்கிறார் கணவர் லாரி.

இரண்டு குழந்தைகளின் எடையில் ஒரு குழந்தை!

பிலடெல்பியாவிலுள்ள பயோக்வார்க் என்ற பயோடெக்னாலஜி நிறுவனம் மூளைச் சாவு அடைந்தவரை மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியும் என்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இதயத் துடிப்பு நின்றுவிட்டால் மரணம் அடைந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் தொழில்நுட்பத்தின் உதவியால், செயற்கை சுவாசம் மூலம் இன்று இதயத்தைத் தொடர்ந்து துடிக்க வைக்க முடிகிறது. இதன் மூலம் உடலின் முக்கியமான உறுப்புகள் வேலை செய்யும் நிலையில் வைத்திருக்க முடிகிறது. இன்று பெரும்பாலான நாடுகளில் மூளைச் சாவு அடைந்த மனிதர் உயிரிழந்தவராகவே கருதப்படுகிறார். ஆனால் மூளைச் சாவு ஏற்பட்டவர்களுக்கு அவர்களது ஸ்டெம்செல்லை உடலுக்குள் செலுத்தி, முதுகெலும்புக்குள் மருந்துகளைச் செலுத்தி, 15 நாட்கள் லேசர் சிகிச்சை மூலம் நரம்புகளைத் தூண்டினால் மீண்டும் உயிர் பிழைக்க முடியும் என்கிறது இந்த நிறுவனம். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் 12 - 65 வயது நோயாளிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, தடை செய்யப்பட்டது. பிறகு லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்தப் பரிசோதனைகளைத் தொடர்ந்தனர். தற்போது தங்களால் மூளைச் சாவு அடைந்தவரை உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று அறிவித்திருக்கிறது பயோக்வார்க்.

முயற்சி அங்கீகரிக்கப்படும் வரை காத்திருப்போம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இரண்டு-குழந்தைகளின்-எடையில்-ஒரு-குழந்தை/article9723284.ece?homepage=true&relartwiz=true

  • Replies 1k
  • Views 150k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மசாலா: ஒரு தொழிலதிபர் பன்றி வளர்த்த கதை!

 

 
 
 
pandri_3173670f.jpg
 
 
 

உலகிலேயே விலையுயர்ந்த பன்றித் தொடையை விற்பனை செய்துவருகிறார் ஸ்பெயினைச் சேர்ந்த எட்வார்டோ டோனட்டோ. பாரம்பரிய முறைப்படி வளர்க்கப்படும் இந்தப் பன்றி இறைச்சியில் சுவையும் சத்துகளும் அதிகம். ஒரு பன்றித் தொடை 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1989-ம் ஆண்டு வரை கட்டிடத் தொழிலில் பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார். திடீரென்று அவரது நண்பர்கள் இருவர் புற்றுநோயிலும் மாரடைப்பிலும் இறந்து போனார்கள். இவரது மனமும் மாறியது. “எப்போதும் பரபரப்பாக நகரில் தொழில் செய்யும்போது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. வாழ்வதற்காகத்தான் தொழில் செய்கிறோம். ஆனால் தொழிலிலேயே வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறோம். போதும் இந்த ஆரோக்கியமற்ற வாழ்க்கை என்று முடிவு செய்தேன். எல்லாவற்றையும் விற்றுவிட்டு, ஹுயல்வா கிராமத்துக்கு வந்து சேர்ந்தேன். மலை, காடுகள், மழை, உயிரினங்கள் என்று ரம்மியமாக இருந்தது. 5 ஆண்டுகளை இயற்கையைக் கற்பதிலும் ரசிப்பதிலும் செலவிட்டேன். பிறகு நான் சாப்பிடுவதற்காகப் பன்றி வளர்க்க ஆரம்பித்தேன். 2005-ம் ஆண்டு புது வகை பன்றியை வளர்க்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டது அரசாங்கம். மிக மெதுவாக வளரும், கறியும் குறைவாகக் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் யாரும் அதை வளர்க்க விரும்பவில்லை. நான் வளர்த்தேன். என்னுடைய பன்றி களும் அந்தப் பன்றிகளும் சேர்ந்து இன்னொரு புது வகை பன்றி களாக உருவாகின. அப்போது பணம் சம்பாதிக்கும் எண்ணமில்லை. ஆனால் இன்று உலகிலேயே அதிக விலைமதிப்புமிக்க பன்றிக் கறியை விற்பவனாக மாறிவிட்டேன். ஆண்டுக்கு 80 பன்றித் தொடை களை மட்டுமே விற்பனை செய்கிறேன். பன்றிகள் தினமும் 14 கி.மீ. தூரம் நடந்து சென்று இரை தேடுகின்றன. தூய்மையான காற்றை சுவாசிக்கின்றன. அருவி நீரைப் பருகுகின்றன. சாதாரண பன்றிகள் 18 மாதங்களில் முழு வளர்ச்சியடைந்துவிடுகின்றன. என் பன்றிகள் 3 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகின்றன. பத்து வயதை அடைந்த பிறகே இறைச்சிக்குப் பயன்படுத்துகிறேன். உலகிலேயே சுவையான பன்றி இறைச்சி என்று மிகச் சிறந்த சுவைஞர்கள் 10 பேர் சான்றளித் துள்ளார்கள். உணவுக் கண்காட்சியில் 130 நாடுகளைச் சேர்ந்த 2.300 பொருட்களில் மிகச் சிறந்த சுவை கொண்ட பன்றி என்று 45 ஆயிரம் பேர் தேர்வு செய்திருக்கிறார்கள். ‘உலகின் விலையுயர்ந்த பன்றித் தொடை’ என்று கின்னஸ் சான்றிதழ் வழங்கியது. அதை நான் விரும்பவில்லை. ‘உலகின் மதிப்புமிக்க பன்றித் தொடை’ என்று வழங்குமாறு கேட்டுக்கொண்டேன்’’ என்கிறார் எட்வார்டோ.

ஒரு தொழிலதிபர் பன்றி வளர்த்த கதை!

தென்கொரியாவின் புஸன் நகரில் ஒரு பெண்ணிடம் வளர்ந்துவந்தது ஃபு ஷிய் என்ற நாய். திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டார் அந்த பெண். ஒரு செவிலியர் அவரைக் கவனித்துக்கொண்டார். ஒருநாள் நிலைமை மோசமாக, பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதற்குப் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. மூன்று ஆண்டுகளான பிறகும் அவர் வளர்த்த நாய், அவரை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் உணவளிக்கிறார்கள்.

வளர்த்த பாசம் விடாது!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஒரு-தொழிலதிபர்-பன்றி-வளர்த்த-கதை/article9724129.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்
On 19.5.2017 at 8:56 AM, நவீனன் said:

உலக மசாலா: ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது சீனா!

 

 
 
op_3166067f.jpg
 
 
 

சீனாவின் வேய்ஃபாங் நகரின் பைலாங் நதி மீதுள்ள பாலத்தில் அமைந்திருக்கிறது மிகப் பெரிய ஃபெர்ரி சக்கரம். இதில் 36 கூண்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூண்டிலும் 10 பேர் அமர முடியும். இந்த கூண்டுக்குள் தொலைக்காட்சிப் பெட்டி, வைஃபை, செல்ஃபி எடுப்பதற்கான வசதிகள் உள்ளன. 475 அடி உயரமுள்ள இந்தச் சக்கரத்தில் அமர்ந்து, ஒருமுறை சுற்றி வருவதற்கு 28 நிமிடங்களாகின்றன. சக்கரம் மெதுவாகச் சுற்றும். நான்கு புறமும் நகரின் அழகை பறவை கோணத்தில் பார்த்து ரசிக்கலாம். புகைப்படங்கள், செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். அரை மணி நேரத்தில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அற்புதமான அனுபவம் கிடைத்துவிடும். 4,600 டன் இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்ட சக்கரம், விரைவில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிட இருக்கிறது. பொறியியல் வல்லுநர்களின் அபாரமான திறமைக்கு சான்றாக இது கருதப்படுகிறது.

ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது சீனா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஆச்சரியத்தில்-ஆழ்த்திக்கொண்டே-இருக்கிறது-சீனா/article9707544.ece?homepage=true&relartwiz=true

 

  • தொடங்கியவர்

உலக மசாலா: அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த மகள்!

 

 
 
ulaga_3173852f.jpg
 
 
 

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் இருக்கும் பெர்கன் பிராகன் ஐரோப்பாவிலேயே மிக அழகான கிராமம். எந்தத் திசையில் திரும்பினாலும் இயற்கை எழில் கொஞ்சுகிறது. எங்கும் பச்சை மலைகள். சற்றுத் தூரத்தில் பனி போர்த்திய மலை உச்சிகள். அருவிகள். மஞ்சள் பூக்கள் நிறந்த பள்ளத்தாக்குகள். அழகிய பழங்காலக் கோட்டைகள். வீடுகள், கால்நடைகள், மரங்கள், ரயில் நிலையம் என்று எதைப் பார்ப்பது, எதை விடுவது என்று குழப்பம் தரும் விதத்தில் அழகு கொட்டிக் கிடக்கிறது. தற்போது இந்தக் கிராமத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்கள் எடுப்பதைத் தடை செய்திருக்கிறது கிராம நிர்வாகம். “புகைப்படம் எடுப்பதற்குத் தடை என்றால் உலகமே சிரிக்கிறது. ஆனால் நாங்கள் புதிதாகச் சட்டமே கொண்டு வந்துவிட்டோம். புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைகிறது. அதற்காகவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். எங்கள் அழகிய கிராமத்தைப் பார்க்க வேண்டுமென்றால் நேரில் வாருங்கள். சிறப்பு அனுமதி பெற்று புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். ஸ்மார்ட்போன் வந்த பிறகு புகைப்படங்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. நூற்றுக்கணக்கில் படங்கள் எடுத்து தள்ளிவிடுகிறார்கள். இந்தப் படங்கள் எங்கள் கிராமத்தின் அழகைக் குறைத்துக் காட்டிவிடுகின்றன. அனுமதியில்லாமல் படங்கள் எடுத்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். கட்டுப்பாடும் கட்டணமும் இருந்தால்தான் நேர்த்தியாகப் படம் எடுப்பார்கள். நாங்கள் ரசிக்கும் அழகை உலக மக்களும் ரசிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் வரலாம். அனுமதியோடு புகைப்படங்கள் எடுக்கலாம்” என்கிறது சுற்றுலாத்துறை. இந்த விஷயம் வெளியில் பரவியவுடன் சமூக வலைதளங்களில் அதிக அளவில் புகைப்படங்கள் பகிரப்பட்டுவருகின்றன. “எதிர்ப்புகளே விளம்பரமாகிவிட்டது! சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துவிட்டது!” என்கிறார் பாரான்டன். பெர்கன் சுற்றுலாத்துறை தன் வலைதளம், ஃபேஸ்புக் போன்றவற்றிலிருந்து புகைப்படங்களை நீக்கிவிட்டது.

இது நியாயமா?

மெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தைச் சேர்ந்த 12 வயது ஜேசீ டெல்லபேனா மருத்துவருடன் இணைந்து, தன் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறாள்! பிரசவ அறைக்குள் அம்மா சென்றதும் ஜேசீ அழ ஆரம்பித்துவிட்டாள். மருத்துவர் வால்டர் உல்ஃப் காரணம் கேட்டார். தன் தம்பி பிறக்கும்போது தான் அருகில் இருக்க வேண்டும் என்றாள் ஜேசீ. குழந்தை பிறப்பு குறித்து விளக்கிய மருத்துவர், சீருடை, கையுறை அணிவித்து அவளை அழைத்துச் சென்றார். அம்மாவின் பிரசவத்தை நேரடியாகப் பார்த்தாள். மருத்துவருக்கு உதவி புரிந்தாள். குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டினாள். பயம், ஆச்சரியம், அழுகை எல்லாம் கலந்த கலவையாக இருந்த ஜேசீயை அவளது அப்பா புகைப்படங்கள் எடுத்தார். “என் அம்மா மறுத்தார். ஆனால் மருத்துவர் என்னை அனுமதித்தார். தம்பி உலகத்தை எட்டிப் பார்க்கும்போது முதல் ஆளாக அவனைப் பார்த்துவிட்டேன். குழந்தை எப்படிப் பிறக்கிறது என்பதையும் அறிந்துகொண்டேன். தம்பி மீது அன்பு அதிகரித்துவிட்டது” என்கிறாள் ஜேசீ.

அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த மகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அம்மாவுக்குப்-பிரசவம்-பார்த்த-மகள்/article9724532.ece?homepage=true&relartwiz=true

  • கருத்துக்கள உறவுகள்
On 2016-7-18 at 2:48 PM, நவீனன் said:

ஆஸ்திரேலியாவிலும் செய்து பார்த்தபோது, இந்த உத்தி நன்றாக வேலை செய்வது உறுதியானது’’ என்கிறார் நீல் ஜோர்டன்

:unsure:சிங்கம் திரி

  • தொடங்கியவர்

இப்பதான் ஒரு வருடத்துக்கு முன் போட்ட பதிவில் நிக்கிறீர்கள் போல புத்தன்.tw_blush:

On 11.6.2017 at 11:04 AM, putthan said:

:unsure:சிங்கம் திரி

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நவீனன் said:

இப்பதான் ஒரு வருடத்துக்கு முன் போட்ட பதிவில் நிக்கிறீர்கள் போல புத்தன்.tw_blush:

 

 

3 minutes ago, நவீனன் said:

:10_wink:

பின்ன யாழில் இருக்கிற எல்லாத்தையும் வாசிக்க இன்றொரு நாள் போதுமா நான் வாசிக்க இன்றொரு நாள் போதுமா...ஊர்புதினமும் கதையும் உடனுக்கு உடன் வாசிப்பேன் .....யாழ் ஒரு கடல்....:10_wink:

  • தொடங்கியவர்

உண்மைதான்,

இந்த திரியை பலர் பார்கிறார்கள் நாளாந்தம் என்பது தெரியும். அதில் நீங்களும் ஒருவர் என்பதில் சந்தோசம்.tw_blush:

 

6 minutes ago, putthan said:

 

பின்ன யாழில் இருக்கிற எல்லாத்தையும் வாசிக்க இன்றொரு நாள் போதுமா நான் வாசிக்க இன்றொரு நாள் போதுமா...ஊர்புதினமும் கதையும் உடனுக்கு உடன் வாசிப்பேன் .....யாழ் ஒரு கடல்....:10_wink:

 

  • தொடங்கியவர்

உலக மசாலா: இதெல்லாம் ரொம்பவே அநியாயம்...

 

 
naigal_3174458f.jpg
 
 
 

மனிதர்களின் மிகச் சிறந்த தோழனான நாய்களுக்கு பிரிட்டனைச் சேர்ந்த ஹேகேட் வெரோனா நிறுவனம் ஆடம்பர மாளிகைகளைக் கட்டிக் கொடுத்து வருகிறது. 26 லட்சம் முதல் 1 கோடியே 28 லட்சம் வரைக்கும் மாளிகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பளிங்குத் தரைகள், மர வேலைப்பாடுகள் நிறைந்த வீட்டு அலங்காரம், மாளிகைக்குள்ளும் வெளியிலும் வண்ண அலங்கார விளக்குகள், தானியங்கி உணவு மற்றும் தண்ணீர் இயந்திரங்கள், டிவி, எந்த நேரமும் கேட்கும் மெல்லிய இசை என்று வசதிகளும் ஆடம்பரங்களும் மாளிகையில் கொட்டிக் கிடக்கின்றன. “பெரும்பாலானவர்கள் தங்கள் செல்ல நாய்களைக் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகின்றனர். நாய்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கின்றனர். அவர்களுக்காகவே இந்த மாளிகைகளை உருவாக்கியிருக்கிறோம். இந்த மாளிகைகளில் உரிமையாளர்களும் வசிப்பதற்கு ஏற்ப குளிர் சாதன வசதி, இணைய வசதி போன்றவற்றைச் செய்திருக்கிறோம். இது நாய் வீடுகளை விடப் பெரியதாகவும் மனிதர்களின் வீடுகளைவிடச் சிறியதாகவும் இருக்கும்” என்கிறார் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ஆலிஸ் வில்லியம்ஸ்.

இதெல்லாம் ரொம்பவே அநியாயம்…

ஹைதி நாட்டின் தலைநகர் போர்ட் ஓ பிரின்ஸில் மருந்துகளையும் கூடைகளில் வைத்து வீடு தேடி வந்து விற்பனை செய்கிறார்கள்! ஹைதியில் மருந்துக் கடைகளைப் பார்ப் பது அரிதானது. அதனால் பெரும்பாலான மக்கள் வீடு தேடி வரும் மருந்துகளையே எளிதாக வாங்கிக்கொள்கிறார்கள். பிளாஸ்டிக் வாளிகளில் எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும்படி அழகாக மாத்திரைகளை அடுக்கி வைத்திருக்கிறார்கள் மருந்து வியாபாரிகள். பச்சை மாத்திரைக்கு அடுத்து மஞ்சள், சிவப்பு மாத்திரைக்கு அடுத்து வெள்ளை என்று விதவிதமான மாத்திரைகளை அழகாக அடுக்கி, கட்டி வைத்து விடுவதால், மருந்துக் கோபுரங்கள் கீழே விழுவதில்லை. இப்படி மருந்துகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். ஆனால் எப்பொழுதாவதுதான் அரசாங்கத்திலிருந்து நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருந்துகளைப் பற்றிய முறையான புரிதலோ, பயிற்சியோ இல்லாத இந்த வியாபாரிகளிடம் கருக்கலைப்பு மாத்திரையிலிருந்து வயாகரா மாத்திரை வரை கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலான ஜெனரிக் மருந்துகள் சீனா விலிருந்தும் காலாவதியான மருந்துகள் டொமினிகன் குடியரசி லிருந்தும் வாங்கப்படுகின்றன. “மக்கள் எங்களிடம் எந்த ரகசியத் தையும் மறைப்பதில்லை. தொற்று, அஜீரணம், பாலியல் பிரச்சினை கள் என்று எந்தப் பிரச்சினைக்கும் எங்களிடம் மாத்திரைகள் இருக்கின்றன. அவரவர் பிரச்சினைகளைச் சொல்லி, தேவையான மருந்துகளை வாங்கிக்கொள்கிறார்கள்” என்கிறார் ரெனால்ட் ஜெர்மைன் என்ற மருந்து வியாபாரி. மருத்துவர் பரிந்துரை இல்லாமல், இப்படி வியாபாரிகளிடம் மருந்துகளை வாங்குவது தவறு என்று தன்னார்வ அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் வியாபாரிகளிடம் மருந்துகளை வாங்குவது எளிதாகவும் செலவு குறைவாகவும் இருப்பதால் மக்கள் இவற்றையே நாடுகிறார்கள்.

உயிரோடு விளையாடும் மருந்து விற்பனை…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இதெல்லாம்-ரொம்பவே-அநியாயம்/article9725792.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: அப்படியே குடிக்கலாம்!

 

 
masala_3174842f.jpg
 
 
 

பஸ் டி க்ரூட், பால் மீது அளவற்ற ஆர்வம் கொண்டவர். காய்ச்சாத பாலை சுவைத்த பின்னர், ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் பாலைக் குடிக்க ஆரம்பித்துவிட்டார். காய்ச்சாத பாலைக் குடிக்கும்போதுதான் பாலின் உண்மையான சுவை தெரிகிறது. ஒவ்வொரு மாட்டுக்கும் பாலின் சுவை வேறுபடுகிறது. நெதர்லாந்தின் பல பகுதிகளுக்கும் சென்று பாலைச் சுவைத்து, ஆராய்ச்சி செய்துவிட்டார். தற்போது உலகம் முழுவதும் சென்று, காய்ச்சாத பாலைச் சுவைக்கும் முயற்சியிலும் பாலைப் பற்றிய பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். “நான் பாலின் சுவைக்கு அடிமை. மூன்றுவேளையும் காய்ச்சாத பாலைக் குடித்துவிட்டு உயிர் வாழ்ந்துவிடுவேன். ஒவ்வொரு மாடும் பிரத்யேக சுவை கொண்ட பாலைத் தருகிறது. நிலம், அதில் விளையும் புற்கள், தீவனம் போன்றவையும் பாலுக்கு சுவையளிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. புல் சாப்பிடும் மாட்டின் பாலுக்கும் சோளம் சாப்பிடும் மாட்டின் பாலுக்கும் கொழுப்பிலும் சத்துகளிலும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கடைகளில் கிடைக்கும் பாலை நான் வெறுக்கிறேன். பாலைப் பதப்படுத்துவதற்காக கொழுப்பையும் சத்துகளையும் அதிகரிக்கிறார்கள், குறைக்கிறார்கள். இதனால் பாலுக்கு சுவையே கிடைப்பதில்லை. பதப்படுத்தப்பட்ட பாலை, பால் என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு பானம். பால் அதிக அளவில் சுரப்பதற்கு ஊசி போடாத மாடுகளின் பாலை, காய்ச்சாமல் குடிக்கலாம். நோயாளிகள், கர்ப்பமாக இருப்பவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் காய்ச்சாத பாலைக் குடிப்பது பாதுகாப்பானது” என்கிறார் க்ரூட்.

காய்ச்ச வேண்டாம்; அப்படியே குடிக்கலாம்!

பிரேசிலைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் மேகான் வெஸ்லி கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது இளைஞர் ஒருவரை சித்திரவதை செய்து, நெற்றியில் ‘நான் ஒரு திருடன்’ என்று டாட்டூ போட்டிருக்கிறார். இந்த விஷயம் வீடியோ எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவி, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. “இருவர் என்னிடம் வந்து, 17 வயது இளைஞருக்கு நெற்றில் டாட்டூ போடச் சொன்னார்கள். அந்த இளைஞர் மிகவும் பரிதாபமாக இருந்தார். அவர் சைக்கிளைத் திருடி விட்டதால், ‘நான் ஒரு திருடன்’ என்று நெற்றியில் எழுதும்படி கேட்டுக்கொண்டனர். நான் மறுத்தேன். ஆனால் அவர்கள் என்னை விடவில்லை. வற்புறுத்தி செய்ய வைத்தனர்” என்கிறார் மேகான் வெஸ்லி. வீடியோவைப் பார்த்த இளைஞரின் குடும்பம் அதிர்ந்து போனது. காவல் துறையில் புகார் செய்தது. மே 31 அன்று காணாமல் போன இந்த இளைஞருக்கு போதைப் பழக்கம் இருந்தது என்றும் மனிதாபிமானம் இன்றி டாட்டூ வரைந்த கலைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. மேகான் வெஸ்லியும் டாட்டூ வரையச் சொன்ன இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சைக்கிள் திருடியவனுக்கு பாடம் புகட்டவே இந்தச் செயலை மேற்கொண்டதாகத் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட இளைஞர், தான் சைக்கிள் திருடவில்லை என்று சொல்லிவிட்டார். அவரின் டாட்டூவை அழிப்பதற்கும் அவரது உடல், மன நிலையைத் தேற்றுவதற்கும் பொதுமக்களே நன்கொடை வசூலித்து வருகின்றனர்.

மனிதாபிமானமில்லாத செயல்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அப்படியே-குடிக்கலாம்/article9726647.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய அதிசய வீடுகள்!

 
 
yuop_3175207f.jpg
 
 
 

ஜப்பானில் நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய வகையில் ஸ்டைரோஃபோம் (Styrofoam) வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஸ்டைரோஃபோம் என்றவுடன் நாம் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தட்டு, தம்ளர், பார்சல் கட்டும் தெர்மகோல்தான் நினைவுக்கு வரும். வீடு கட்டக்கூடிய ஸ்டைரோஃபோம் தொழில்நுட்பத்தில் மேம்பட்டது. இதில் கட்டப்படும் வீடுகள் நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடியவை. விலை குறைந்தவை. வெப்பத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவை. மிக வேகமாகவும் எளிதாகவும் வீட்டைக் கட்டி முடித்துவிட முடியும். கடந்த பத்து ஆண்டுகளாகவே ஸ்டைரோஃபோம் வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும் மக்கள் அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்ட பிறகு மக்களின் கவனம் இந்த வீடுகள் மீது திரும்பியிருக்கிறது. வீட்டின் எடை 80 கிலோ. பசையால் அரைக் கோள வடிவில் வீடுகள் கட்டப்படுகின்றன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய வகையில் வீட்டின் உத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே வாரத்தில் மூன்று மனிதர்களால் இந்த வீட்டை உருவாக்கிவிட முடியும். 387 சதுர அடி பரப்பளவும் 9.8 அடி உயரமும் இருக்கிறது. இந்த வீடு துரு பிடிப்பதில்லை, கரையான்களால் அரிக்கப்படுவதில்லை, நீண்ட காலம் உழைக்கக்கூடியது. வீட்டுக்குள் குளிர்ச்சி நிலவுவதால் குளிர்சாதன பயன்பாடும் குறைந்துவிடுகிறது. 44 லட்சத்திலிருந்து 55 லட்சம் வரை வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் நிரந்தரமாகவும் தங்கிக்கொள்ளலாம். அல்லது ஆபத்து ஏற்படும் காலங்களில் மட்டும் தங்கிச் செல்லலாம். ஜப்பான் டோம் ஹவுஸ் நிறுவனம் ஆண்டுக்கு 100 ஸ்டைரோஃபோம் வீடுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய அதிசய வீடுகள்!

புத்துணர்வு பெறுவதற்காகத்தான் காபி, தேநீர் கடைகளை மக்கள் நாடுகிறார்கள். அந்த வகையில் தென் கொரியாவிலுள்ள மிஸ்டர் ஹீலிங் கஃபேயில் வசதியான மசாஜ் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கலாம். சிறிதுநேரம் தூங்கலாம். மெல்லிய இசையை ரசிக்கலாம். அவசரம் இல்லாமல் காபியை அருந்திவிட்டு, புத்துணர்வோடு கிளம்பலாம். இந்த ஹீலிங் கஃபேவுக்கு தென் கொரியாவில் மிகப் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. தற்போது ஆசியாவிலுள்ள பல நாடுகளில் 47 இடங்களில் ஹீலிங் கஃபே ஆரம்பிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. “கொரிய மக்கள் அளவுக்கு அதிகமாக உழைக்கிறார்கள். தூங்குவதற்கு அதிக நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கு உதவும் விதத்தில்தான் இந்த ஹீலிங் கஃபேயை ஆரம்பித்திருக்கிறோம். வேலைகளுக்கு நடுவில், இடைவேளைகளில் இங்கே வந்து நிம்மதியாக ஓய்வெடுத்துச் செல்ல முடியும். விருப்பமுள்ளவர்கள் மசாஜ் செய்து கொள்ளலாம். காபி உட்பட அனைத்துக்கும் சேர்த்து 20 நிமிடங்களுக்கு 240 ரூபாய், 30 நிமிடங்களுக்கு 440 ரூபாய், 50 நிமிடங்களுக்கு 580 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள், பயணிகள், முதியவர்களால் எங்கள் கஃபே எப்பொழுதும் நிறைந்திருக்கிறது” என்கிறார் கஃபே மேலாளர்.

புத்துணர்வு அளிக்கும் ஹீலிங் கஃபே!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நிலநடுக்கத்தைத்-தாங்கக்கூடிய-அதிசய-வீடுகள்/article9727479.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: சூப்பர் ஸ்டாரான வாங்

 

 
wang_3175566f.jpg
 
 
 

சீனாவில் வசிக்கும் 81 வயது வாங் டேஷன், விளம்பரங்கள், ஃபேஷன் ஷோக்கள், திரைப்படங்கள் என்று சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். முதியவர்களைப் பற்றிய பார்வையையும் மாற்றியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை சாதாரண மனிதராகத்தான் வாங் வாழ்க்கை நடத்தி வந்தார். திடீரென்று ஒரு ஃபேஷன் டிசைனரிடமிருந்து வாங்கின் மகள் மூலம் அழைப்பு வந்தது. வெண் தாடி, நீளமான தலைமுடியுடன் சட்டை அணியாமல் சில நிமிடங்கள் மாடல்கள் சூழ ஃபேஷன் ஷோவில் நடந்து வந்தார். ஒரே இரவில் சீனாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார். இவர் என்ன சாப்பிடுகிறார், உடலைக் கட்டுக்கோப்பாக எப்படி வைத்துக்கொள்கிறார் என்றெல்லாம் தெரிந்துகொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டினர். “முதல்முறை சட்டையின்றி ஃபேஷன் ஷோவில் நடந்தபோது ஆபாசமாக வலம் வந்த குற்றத்துக்காகக் கைது செய்யப்படுவேன் என்று தான் நினைத்தேன். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களில் வாய்ப்புகள் வந்து குவிந்துவிட்டன. சட்டென்று மக்கள் என்னை ஒரு பிரபலமாக ஏற்றுக்கொண்டுவிட்டனர். சீனாவிலும் வெளிநாடுகளிலும் இன்று அறியக்கூடிய மனிதனாக இருக்கிறேன். ‘சீனாவின் ஹாட்டஸ்ட் க்ரான்ட்பா’ என்ற பட்டமும் கிடைத்துவிட்டது. புகழும் பணமும் பெருகிவிட்டது. ஆனால் என் வாழ்க்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே மாதிரிதான் இப்போதும் இருக்கிறது. ஒரு கிண்ணம் சாதமும் கொஞ்சம் டோஃபுவும் தான் என் உணவு. இயற்கை நம் வயதைத் தீர்மானிக்கிறது, நீங்கள்தான் மனநிலையைத் தீர்மானிக்கிறீர்கள். நல்ல சிந்தனையாலும் செயல்களாலும் இளமையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இறப்பைத் தவிர்க்க இயலாது. இறந்த பிறகு என்ன ஆகும் என்பதும் தெரியாது. அதனால் அமைதியாகவும் சந்தோஷமாகவும் பயனுள்ளதாகவும் வாழ்கிறேன். இறந்த பிறகு என் உடலை மருத்துவப் பயன்பாட்டுக்கு எழுதி வைத்துவிட்டேன்” என்கிறார் வாங் டேஷன்.

ஒரே இரவில் சூப்பர் ஸ்டாரான வாங்குக்கு வாழ்த்துகள்!

தாய்லாந்தைச் சேர்ந்த சிலா சுதாரத் சூரிய வெப்பத்தில் கோழி இறைச்சியைச் சமைக்கிறார். ஆயிரம் சிறிய கண்ணாடிகளை உலோகக் கம்பிகளில் இணைத்து, அதன்மூலம் சூரிய சக்தியை இறைச்சி மீது குவித்து, வேக வைக்கிறார். “1997-ம் ஆண்டு பேருந்து கண்ணாடி மூலம் சூரிய வெப்பம் என்னைச் சுருக்கென்று தாக்கியது. அப்போதுதான் இந்த யோசனை வந்தது. ஆனால் எல்லோரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள். விரைவில் என் முயற்சியில் வெற்றி பெற்றேன். கண்ணாடிகளின் மூலம் சூரிய வெப்பத்தைக் குவித்து, 10 முதல் 15 நிமிடங்களில் ஒன்றரை கிலோ இறைச்சியை வேக வைத்துவிடுவேன். 300 டிகிரி செல்சியஸில் இயற்கை வெப்பம் கிடைக்கிறது. இறைச்சியை இதைவிட வேகமாக வேறு எப்படியும் சமைத்துவிட முடியாது. சுவையும் பிரமாதமாக இருக்கும். சூரிய ஒளியில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சியைச் சாப்பிடுவதற்காகவே தொலைதூரத்தில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்” என்கிறார் சிலா சுராத்.

சூரிய ஒளியில் சமையல்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சூப்பர்-ஸ்டாரான-வாங்/article9728260.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஊழியர்கள் கொண்டாடும் முதலாளி!

 
masala1_3175977f.jpg
 
 
 

மொன்டெனக்ரோ நாட்டின் வெற்றிகரமான தொழிலதிபர் ரடோமிர் நவகோவிக் ககன். இவரை ‘பால்கன் நாடுகளின் மிகச் சிறந்த முதலாளி’ என்றும் ‘அண்ணன்’ என்று ஊழியர்கள் கொண்டாடுகிறார்கள். ‘ககன் ஸ்போர்ட்ஸ்’ என்பது மிகப் பெரிய விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம். இதன் உரிமையாளரான ரடோமிர் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கிறார். சமீபத்தில் அரசியலிலும் நுழைந்திருக்கிறார். உண்மையாக உழைக்கக்கூடிய தன்னுடைய ஊழியர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருந்தால்தான், தனது நிறுவனம் மேலும் செழித்து வளரும் என்று உறுதியாக நம்புகிறார். அதற்காகவே நம்ப முடியாத பரிசுகளை வழங்கி வருகிறார். 2012-ம் ஆண்டு தனது நிறுவனத்தில் வேலை செய்யும் மூத்த ஊழியர்களுக்கு கார்களை பரிசாக அளித்தார். விலையுயர்ந்த கார்களை பார்த்த ஊழியர்கள் இவ்வளவு பெரிய பரிசு எதற்கு என்று தயக்கத்துடன் கேட்டனர். “இனிமேல் தாமதமாக வருவதற்குக் காரணம் சொல்ல முடியாது” என்று சிரித்தார். 2014-ம் ஆண்டு ஊழியர்களை பிரேசிலில் நடைபெற்ற கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார். சென்ற ஆண்டு 14 ஊழியர்களை பஹாமாஸ், செஷல்ஸ் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா அனுப்பி வைத்தார். சமீபத்தில் ஏராளமான ஊழியர்களை ஆடம்பர கப்பலில் தங்க வைத்தார். “ஊழியர்களை ஊக்கப்படுத்த கொஞ்சம் பணம் கொடுத்தால் போதுமே என்று கேட்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. பணம் வரும், போகும். ஆனால் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும். என் நண்பர் டிராவல் ஏஜென்ஸி நடத்துகிறார். அவர் சலுகைக் கட்டணத்தில் சுற்றுலா அறிவிப்புச் செய்யும்போது அதை எங்கள் ஊழியர்களுக்குப் பயன்படுத்திக்கொள்வேன். சுற்றுலா சென்று வந்த பிறகு ஊழியர்கள் இன்னும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் வேலை செய்கிறார்கள். எல்லோரும் ஓரிடத்தில் சேர்ந்து வேலை செய்கிறோம். மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம்” என்கிறார் ரடோமிர். கடந்த ஆண்டு அரசியலில் இறங்கி கவுன்சிலராக பொறுப்பேற்றுக்கொண்டு மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்து வருகிறார். பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்குத் தன் தொழில் மூலம் கிடைக்கும் பணத்தை நன்கொடைகளாக அளித்து வருகிறார்.

ஊழியர்கள் கொண்டாடும் முதலாளி!

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இயங்கிவரும் எவர்யங் தொழில்நுட்ப நிறுவனம் 55 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. 4 ஆண்டுகளில் 55 83 வயதுக்கு உட்பட்ட முதியவர்கள் 420 பேருக்கு வேலை கொடுத்திருக்கிறது. “தென் கொரியாவில் 60 வயதானவர்கள் ஓய்வு பெற்றுவிடுவார்கள். இன்றைக்கு பொருளாதாரம் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஆயுட்காலம் அதிகரித்திருக்கிறது. வேலை செய்யக் கூடியவர்கள் தங்களால் முடிந்த வரை வேலை செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம். முதியவர் களின் அனுபவ அறிவு எங்கள் நிறுவனத்துக்கும் பயன்படும். முதியவர்கள் ஆர்வத்துடன் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள் கிறார்கள். சிறப்பாக வேலை செய்கிறார்கள். உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு போன்ற அம்சங்களையும் அவர்களுக்காக வைத்திருக்கிறோம்” என்கிறார் நிறுவனர் சங் என்சங்.

முதியவர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஊழியர்கள்-கொண்டாடும்-முதலாளி/article9729031.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: பொறுப்பான ஆண் சிங்கம்

 

 
masal_3176274f.jpg
 
 
 

இங்கிலாந்தில் உள்ள பிளாக்பூல் உயிரினப் பூங்காவில் வசித்து வரும் வாலஸ், ஆண் சிங்கத்தைப் பற்றிய கருத்துகளை மாற்றியமைத்திருக்கிறது! ரேச்சலும் வாலஸும் குடும்பம் நடத்தி 2015-ம் ஆண்டு காரி என்ற ஆண் குட்டியைப் பெற்றெடுத்தன. 9 மாதங்களில் ரேச்சல் இறந்து போனது. பொதுவாக ஆண் சிங்கங்கள் இனப் பெருக்கம் செய்வதோடு கடமையை முடித்துக்கொள்கின்றன.

பெண் சிங்கம்தான் குட்டிகளை வளர்த்து, வேட்டையாடக் கற்றுக் கொடுத்து, பராமரிக்கும். பெண் சிங்கம் இல்லாதபோது கழுதைப் புலி, போட்டி ஆண் சிங்கங்கள் குட்டியைத் தொந்தரவு செய்தால் விரட்டும் பணியை மட்டும் ஆண் சிங்கம் மேற்கொள்ளும். மற்றபடி குழந்தை வளர்ப்பில் ஆண் சிங்கங்கள் பங்களிப்பைச் செலுத்துவதில்லை. காரியைத் தவிர வேறு குட்டிகளோ, பெண் சிங்கங்களோ இல்லாத காரணத்தால் வாலஸிடம் குட்டியை விட்டது பூங்கா நிர்வாகம்.

கண் முன்னே மனைவி இறந்த சோகத்தில் இருந்த வாலஸ், சில நாட்களிலேயே காரியை அன்புடன் கவனிக்க ஆரம்பித்தது. தனக்கு அளிக்கும் உணவைக் கொடுத்து சாப்பிட வைத்தது. காரியுடன் சேர்ந்து விளையாடியது. தாயின் பிரிவு தெரியாமல் பார்த்துக்கொண்டது. அதனால் காரியும் அம்மாவை மறந்து அப்பாவுடன் நெருக்கமானது. வாலஸ் செல்லும் இடங்களுக்கெல்லாம் காரியும் சென்றது. அப்பா கர்ஜிப்பதைப் பார்த்து, வெகு விரைவிலேயே மகனும் கர்ஜிக்கத் தொடங்கியது. வேட்டையாடும் வித்தையைக் கற்றுக்கொண்டது. “பொதுவாக ஆண் சிங்கங்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில்லை.

வாலஸைப் பார்த்து எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆண் சிங்கங்களுக்குப் பொறுமையோ, சகிப்புத்தன்மையோ இருப்பதில்லை. ஆனால் காரி என்ன செய்தாலும் சிறிதும் எரிச்சலடையாமல் வாலஸ் பொறுமை காக்கிறது. அம்மாவைப் போல அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறது. அப்பாவும் மகனும் ஒன்றாக நடந்து செல்வதையும் ஒரு பாறை மீது அமர்ந்திருப்பதையும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். காரி பெரிய துண்டு இறைச்சியை எடுத்துக்கொண்டாலும் அமைதி காக்கும். மகன் சாப்பிட்ட பிறகு மிச்சமிருப்பதைச் சாப்பிட்டுக்கொள்ளும். காரியின் ஹீரோ வாலஸ்தான்!” என்கிறார் உயிரினப் பூங்காவின் அதிகாரி ஆடம்.

ஆண் சிங்கத்துக்கு தந்தையர் தின வாழ்த்துகள்!

 

3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் டெக்சாஸ் வீதியில் நின்றுகொண்டிருந்தார் விக்டர் ஹப்பார்ட். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரை அவரது அம்மா வீதியில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். நாள் முழுவதும் அம்மாவுக்காகக் காத்திருந்தார் விக்டர். “நான் நான்கு முறை இந்த வழியே சென்றபோதும் விக்டர் அதே இடத்தில் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

விசாரித்தபோது அவரது குடும்பத்தினர் கைவிட்ட விஷயம் தெரிந்தது. அவரை அழைத்து வந்து, மருத்துவம் பார்த்தேன். அவரது வேலைகளை அவரே பார்த்துக்கொள்ளக் கற்றுக் கொடுத்தேன். சிலர் விக்டருக்காக நன்கொடைகள் அளித்தனர். அவருக்கு ஆசிரியர் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தேன். நான் சமையல் கலைஞர் என்பதால் என்னுடன் சேர்ந்து சமையலும் கற்றுக்கொண்டார்.

என் நிறுவனத்தில் தற்போது சமையல் வேலையும் செய்கிறார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். விக்டரைப் பற்றி சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்தேன். அவரது குடும்பத்தினர் விக்டரைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். அவர்களோடு செல்ல விக்டர் மறுத்துவிட்டார்” என்கிறார் ஸ்ப்ரோஸ்.

உயர்ந்த உள்ளம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பொறுப்பான-ஆண்-சிங்கம்/article9729580.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: வாழ்நாள் முழுவதும் சேமித்தாலும்...!

 

 
 
train_3176872f.jpg
 
 
 

ஜப்பானில் மிக ஆடம்பரமான ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. 30 பேர் இந்த ரயிலில் முதல் முறை பயணத்தை மேற்கொண்டனர். 2 இரவுகள், 3 பகல்களைக் கொண்ட இந்தச் சுற்றுப் பயணத்தில் பசுமையான வயல்வெளிகள், கடற்கரைகள், பழங்காலப் புனிதத் தலங்கள் போன்றவற்றைத் தரிசிக்கலாம். இருவர் தங்கும் விதத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட ஆடம்பரமான அறைகள் இருக்கின்றன. 5 நட்சத்திர விடுதிகளைப் போன்று மார்பிள் தரை, குளியல் தொட்டி, மிகப் பெரிய படுக்கைகள், அலங்காரம், குளிர்சாதன வசதி, இணைய வசதி போன்றவை செய்யப்பட்டிருக்கின்றன. புகழ்பெற்ற சமையல் கலைஞர்களால் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. உணவை ருசித்துக்கொண்டே கண்ணாடிகள் வழியே இயற்கை எழிலை ரசிக்கலாம். இரவு உணவுக்குப் பிறகு பியானோ இசையைக் கேட்கலாம். பார் வசதியும் உண்டு. விலை அதிகமாக இருந்தாலும் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கும் ஆட்கள் காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. “இருவருக்கு 14 லட்சம் ரூபாய் கட்டணம். வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத இந்தப் பயணத்துக்குக் கட்டணம் பெரிய விஷயமில்லை” என்கிறார் அயக் கோபாயாஷி. 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியைக் கருத்தில் கொண்டு இந்த ஆடம்பர ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளைக் காண வரும் வெளிநாட்டினரை இந்த ரயில் அதிகம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்நாள் முழுவதும் சேமித்தாலும்...!

இத்தாலியைச் சேர்ந்த 21 வயது இலரியாவும் இந்தோனேஷியாவிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஜுஃபில்கரும் சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகி, காதலித்து வந்தனர். தன் காதலரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக, உணவகத்தில் வேலை செய்யும் இலரியா, இரண்டு ஆண்டுகள் பணத்தைச் சேமித்து வந்தார். தேவையான பணம் சேர்ந்தவுடன் தன் பெற்றோரிடம் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு, இந்தோனேஷியா கிளம்பினார். நீண்ட பயணத்துக்குப் பிறகு, காதலர் வசிக்கும் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஜுஃபில்கர் காத்திருந்தார். இருவரது காதல் கதையை அறியாத கிராம மக்கள் குழப்பமடைந்தனர். அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இலரியா தான் திருமணம் செய்துகொள்ள வந்திருப்பதாகச் சொன்னார். வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் முறையான அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்ய முடியும் என்றார்கள். சில வாரங்கள் காத்திருந்து, முறையான அனுமதி பெற்று, மே மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ஜெயித்த காதல்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வாழ்நாள்-முழுவதும்-சேமித்தாலும்/article9730927.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: கோடீஸ்வரராக மாற்றிய ஓவியம்!

 

 
 
oviyam_3177273f.jpg
 
 
 

நியுஜெர்சியை சேர்ந்த கார்ல் சபடினோ, மரணப் படுக்கையிலிருந்த தன்னுடைய அத்தையைப் பார்க்க வந்தார். தையல் இயந்திரத்தைத் திறந்து பார் என்றார் அத்தை. தையல் இயந்திரத்துக்குள் ஓர் ஓவியம் மட்டும் இருந்தது. அத்தையின் இளம் வயது ஓவியமாக இருக்கும் என்று நினைத்து, அப்படியே வைத்துவிட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு, அத்தை மீண்டும் தையல் இயந்திரத்தை மறக்காதே என்று கூறிவிட்டு, இறந்துபோனார். அந்த ஓவியத்தில் ஏதோ இருக்கிறது என்று அப்போதுதான் கார்லுக்குப் புரிந்தது. அதை நிபுணர்களிடம் காட்டினார். பாப்லோ பிகாசோவின் அரிய ஓவியம். அவரது கையெழுத்தும் அதிலிருந்தது. 10 டாலர்களுக்கு வாங்கப்பட்ட இந்த ஓவியம், இன்று 30 மில்லியன் டாலர்களுக்கு விலை போகும் என்கிறார்கள்.

கோடீஸ்வரராக மாற்றிய ஓவியம்!

தன்னை மொன்டெனெக்ரோ நாட்டின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறி வந்த 57 வயது ஸ்டீபன் செர்னாடிக், மோசடி குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். மொன்டெனெக்ரோவின் இளவரசர் என்றும் தங்கள் குடும்பம் அல்பேனியாவிலும் செர்பியாவிலும் கூட ஒரு காலத்தில் ஆட்சி செய்து வந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார். தங்கள் குடும்பம் பல நூற்றாண்டுகளாக எப்படி ஆட்சி செய்து வந்தது, யார் யார் ஆண்டனர் என்ற குறிப்புகள், ஓவியங்கள், புகைப்படங்களை புத்தகமாக போட்டு வைத்திருக்கிறார். பதக்கங்கள், முத்திரைகள், போர்க் கருவிகள் போன்றவற்றையும் தன்னுடைய பங்களாவில் காட்சிப்படுத்தி இருக்கிறார். பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவர், அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு அதற்குரிய மரியாதை, வசதி, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆடம்பர விருந்துகளில் கலந்துகொண்டிருக்கிறார். உலகப் பிரபலங்களுக்கு விருந்தும் விருதும் கொடுத்திருக்கிறார். பமீலா ஆண்டர்சன் கூட இவரிடமிருந்து, ’மொன்டெனக்ரோவின் சிறந்த பெண்மணி’ என்ற விருதைப் பெற்றிருக்கிறார். குறிப்பாக, ஐரோப்பா முழுவதும் சென்று தான் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நம்ப வைத்து, அனைத்து வசதிகளையும் அனுபவித்து வந்திருக்கிறார். கடந்த ஆண்டு இத்தாலியில் உள்ள ஆடம்பர விடுதியில் தங்கியிருந்தார். விடுதிக்கான கட்டணத்தை மொன்டெனெக்ரோ தூதரகத்துக்கு அனுப்பிவிடும்படி சொல்லிவிட்டார். ஆனால் தூதரகம் இப்படி ஓர் இளவரசர் தங்கள் நாட்டில் இல்லை என்றும் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்றும் தெரிவித்துவிட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரகசிய விசாரணை தொடங்கியது. அந்த நபர் கூறிய அத்தனை விஷயங்களும் பொய் என்று தெரியவந்தது. போலி ஆவணங்கள், போலி முத்திரைகளைப் பயன்படுத்தி பல நாட்டினரையும் அவர் சாமர்த்தியமாக ஏமாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கும் அரசக் குடும்பத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இவரது உண்மையான பெயர் மெளரிஸ் அன்ட்ரோலி, இத்தாலியைச் சேர்ந்தவர். சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருந்தார். அடிக்கடி புகைப்படங்களையும் அரசக் குடும்பத்து நிகழ்ச்சிகளையும் பகிர்ந்துகொண்டார். இவரை இத்தாலி காவல் துறை கைது செய்துள்ளது. திட்டமிட்டு ஒருவரால் எப்படி உலகத்தையே ஏமாற்ற முடிந்தது என்று நினைக்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.

இப்படியும் ஒருவரால் ஏமாற்ற முடியுமா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கோடீஸ்வரராக-மாற்றிய-ஓவியம்/article9731767.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: அலங்காரத்துக்கு மரியாதை தரும் உலகம்!

 

 
 
brazil_3177700f.jpg
 
 
 

உலகிலேயே மிக நேர்த்தியான தெரு வியாபாரியாக இருக்கிறார் பிரேசிலைச் சேர்ந்த 43 வயது அயில்டன் மேனுவல் சில்வா. வெள்ளைச் சட்டை, கறுப்பு பேண்ட், தொப்பி, குளிர்க் கண்ணாடி, ஷூ சகிதம் நொறுக்குத் தீனிகளையும் குளிர்பானங்களையும் விற்பனை செய்து வருகிறார். தினமும் அதிகாலை 5.30 மணிக்கு போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதிக்கு வந்து, குளிர் பானங்களைத் தயார் செய்கிறார். 7 மணிக்கு விற்பனையை ஆரம்பிக்கிறார். மாலை 5.30 மணி வரை வியாபாரம் செய்து, சுமார் 8 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.

“நான் ஒரு பட்டறையில் வேலை செய்து வந்தேன். அந்த வருமானத்தை வைத்து மனைவி, 3 குழந்தைகளைப் பாதுகாக்க முடியவில்லை. வேறு நல்ல வேலை கிடைக்கும் வரை இந்த வேலையைச் செய்யலாம் என்று ஆரம்பித்தேன். ஆனால் மக்களுக்கு தெரு வியாபாரிகள் மீது வெறுப்பு இருந்தது. கார் கண்ணாடியைக் கூடத் திறக்க மாட்டார்கள். ஏன் இந்த வியாபாரத்துக்கு வந்தோம் என்று நினைத்தேன். பிறகு உடை, ஷூ, குளிர்க் கண்ணாடி, தொப்பி என்று நேர்த்தியாகவும் நளினமாகவும் விற்பனையை ஆரம்பித்தேன். எல்லோரும் பாப்கார்ன், சிப்ஸ், குளிர்பானங்களைக் கேட்டு வாங்க ஆரம்பித்தனர். இரண்டு ஆண்டுகளாக வியாபாரம் நன்றாகப் போகிறது. எனக்கென்று அன்பான வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர். இந்த வருமானத்தை வைத்து குழந்தைகளைப் பள்ளியிலும் மனைவியைக் கல்லூரியிலும் படிக்க வைக்கிறேன். எனக்கு இந்தத் தொழிலில் முக்கியமான பிரச்சினை வெயில்தான். நாள் முழுவதும் வெயிலில் அலைந்தால் தோல் புற்றுநோய் வரும் என்று மனைவி பயப்படுகிறார். இந்தத் தொழிலில் போட்டியில்லை. வருமானமும் கிடைக்கிறது. எல்லோரும் மரியாதை கொடுக்கிறார்கள். என் மனைவியின் படிப்பு முடிந்தவுடன் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு, ஒரு கடை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன்” என்கிறார் சில்வா.

அலங்காரத்துக்கு மரியாதை தரும் உலகம்!

இஸ்ரேலின் மத்தியப் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக இருக்கிறார் உலா ஆஸ்ட்ரோவ்ஸ்கி ஜாக். கார் விபத்தில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம் மோசமாக பாதிக்கப்பட்டது. இதில் 9 மாதக் குழந்தை யாமன் அபு ரமிலாவும் அவனது அத்தையும் உயிர் பிழைத்தனர். அப்பா இறந்து போனார். அம்மா படுகாயமடைந்திருந்தார். உலாவின் மருத்துவமனையில் ரமிலாவின் அம்மாவைச் சேர்த்திருந்தார்கள். குழந்தை பசியால் அழுதது. உலா பாட்டில் மூலம் பால் கொடுக்க முயன்றார். ஆனால் குழந்தை அதைப் பருகவில்லை. மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தானே பால் கொடுக்க முடிவெடுத்தார். அத்தை சம்மதத்துடன் பாலூட்டி, பசி போக்கினார். மருத்துவமனையில் இருந்தவரை குழந்தைக்கு பல தடவை பாலூட்டினார். விஷயம் சமூக வலைதளங்களில் பரவியது. உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் உலாவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். “எந்தத் தாயும் இதைச் செய்வார். குழந்தையின் அத்தை பலமுறை என்னிடம் நன்றி சொல்லி, சங்கடப்படுத்திவிட்டார். ஒரு சாதாரண மனிதாபிமானம் எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தருவது வியப்பாக இருக்கிறது” என்கிறார் உலா.

பாலஸ்தீன குழந்தைக்குப் பாலூட்டிய யூதர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அலங்காரத்துக்கு-மரியாதை-தரும்-உலகம்/article9732647.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: புத்திசாலி நாய்!

dog1_3178130h.jpg
 

சியாட்டிலில் வசிக்கும் எக்லிப்ஸ் என்ற கறுப்பு லாப்ரடார் நாய், தினமும் பேருந்தில் தனியாகப் பயணம் செய்து வருகிறது. எக்லிப்ஸின் உரிமையாளர் ஜெஃப் யங் வீட்டிலிருந்து சற்று தொலைவிலிருக்கும் பூங்காவுக்கு பேருந்தில் அழைத்துச் செல்வார். 4 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் இருவரும் காத்திருந்தனர். பேருந்து வர தாமதமானதால் யங் ஒரு சிகரெட்டைப் புகைக்க ஆரம்பித்தார். அப்போது பேருந்து வந்துவிட்டது. அடுத்த பேருந்தில் செல்லலாம் என்று நினைத்தார். ஆனால் பொறுமையிழந்த எக்லிப்ஸ் பேருந்தில் ஏறிவிட்டது. யங் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார், அது திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பேருந்து கிளம்பிவிட்டது. அன்று முதல் இன்று வரை யங் வந்தாலும் வராவிட்டாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்து நிறுத்தத்துக்கு வந்து காத்திருக்கிறது. இந்த வழியே செல்லும் அனைத்துப் பேருந்து ஓட்டுநர்களுக்கும் எக்லிப்ஸை மிகவும் பிடிக்கும் என்பதால், எந்தப் பேருந்திலும் ஏறிச் சென்றுவிடுகிறது. ஜன்னல் ஓர இருக்கையைப் பார்த்து அமர்ந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டே பூங்கா நிறுத்தம் வந்தவுடன் இறங்கிக்கொள்கிறது. கூட்டம் அதிகம் இருக்கும் நாட்களில் ஜன்னல் ஓர இருக்கைக்காகக் காத்திருக்கிறது. யாராவது இறங்கினால் தாவி ஏறி விடுகிறது. சிலர் எக்லிப்ஸை பார்த்தவுடனே இருக்கையைக் காலி செய்து கொடுத்து விடுகிறார்கள். “எக்லிப்ஸின் அழகையும் புத்திசாலித்தனத்தையும் பார்ப்பவர்கள், இது தங்களது நாய் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். 2015-ம் ஆண்டு எக்லிப்ஸின் பேருந்து பயணம் சர்வதேச அளவில் செய்திகளில் இடம்பிடித்தது. அதிலிருந்து ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். பலரும் போட்டோ எடுத்து, ஃபேஸ்புக்கில் போடுவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். எல்லோரிடமும் அன்பாகப் பழகுகிறது” என்று பெருமிதப்படுகிறார் யங். “நாங்கள் எல்லோருமே எக்லிப்ஸ் வருகைக்காக காத்திருப்போம். பூங்கா நிறுத்தம் வரும் வரை எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்” என்கிறார் சக பயணி டேவிட்.

பேருந்தில் தனியாகப் பயணம் செய்யும் புத்திசாலி நாய்!

பென்சில்வேனியாவில் வசிக்கும் ஜெர்ரி லின், ஒரு விநோத பிரச்சினையால் சங்கடப்படுகிறார். 13 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டும்போது இரண்டு சுவர்களுக்கு இடையே எப்படியோ ஒரு கடிகாரம் விழுந்துவிட்டது. அதை எடுக்க முடியாததால், சுவரைக் கட்டி முடித்துவிட்டனர். தினமும் அந்தக் கடிகாரம் இரவு 8 மணிக்கு அலாரம் அடிக்க ஆரம்பித்து விடுகிறது. “ஆரம்பத்தில் கடிகாரத்தின் அலாரம் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ விநோத சத்தம் என்று பயந்தேன். பிறகுதான் சுவரிலிருந்து தினமும் இரவு 8 மணிக்கு அலாரம் அடிப்பதைக் கண்டுபிடித்தோம். கடிகாரம் தானே என்று அலட்சியமாக விட்டுவிட்டோம். 13 ஆண்டுகளாக இந்த அலார சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அமைதியான வீட்டில், இரவு நேரத்தில் இப்படி அடித்தால் என்னவோ செய்கிறது. சாதாரணமாக எந்த கடிகாரத்தின் பேட்டரியும் இவ்வளவு காலம் வேலை செய்யாது. ஆனால் இத்தனை ஆண்டுகளாக ஒரு கடிகாரம் வேலை செய்வதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பத்து நிமிடங்கள் தொடர்ந்து அடிப்பதால் வீட்டுக்கு வருபவர்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. சுவரை இடித்து, அந்த அதிசய கடிகாரத்தைப் பார்த்துவிடப் போகிறேன்” என்கிறார் ஜெர்ரி லின்.

இவ்வளவு காலம் உழைக்கும் பேட்டரி எது என்று பார்க்கணும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-புத்திசாலி-நாய்/article9734199.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஜப்பானைக் கலக்கும் ஒயிட் ஜுவல் ஸ்ட்ராபெர்ரி!

 

 
straw_3178527f.jpg
 
 
 

பெரும்பாலான மக்கள் வெள்ளை ஸ்ட்ராபெர்ரியைப் பார்த்திருக்கவோ, சுவைத்திருக்கவோ வாய்ப்பில்லை. ஜப்பானில் விலை உயர்ந்த பழங்களில் ஒன்றாக இருக்கிறது ஒயிட் ஜுவல் என்று அழைக்கப்படும் வெள்ளை ஸ்ட்ராபெர்ரி. இது மிகவும் அரிய வகை. மிகக் குறைவாகவே விளைவிக்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு யாசுஹிட்டோ டெஷிமா, ஒயிட் ஜுவல் ஸ்ட்ராபெர்ரியைத் தன்னுடைய தோட்டத்தில் விளைவித்தார். இந்தப் பழத்துக்கு இணையாக இன்னொரு ஸ்ட்ராபெர்ரி உலகில் இல்லை என்கிறார்கள். நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து, இதை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பழத்தின் உட்புறமும் வெளிப்புறமும் வெள்ளையாக இருக்கும். சாதாரண சிவப்பு ஸ்ட்ராபெர்ரிகளை விட உருவத்தில் பெரியது. “நிழலிலேயே இவற்றை விளைவிக்கிறேன். கொஞ்சம் சூரிய வெளிச்சம் பட்டாலும் சிவப்பு நிறமாக மாறிவிடும். முதிர்ந்த பிறகு நிறம் மாறுவதில்லை. ஒயிட் ஜுவல் ஒன்றின் விலை 650 ரூபாய். பழத்தின் மணத்திலேயே இனிப்புச் சுவை தெரியும். தோல் மெல்லியதாக இருக்கும். முதல் கடியில் அன்னாசிப் பழம் போன்று தோன்றும். ஆனால் சில நொடிகளில் புதிய சுவை கிடைத்துவிடும். இன்னொரு பழம் சுவைக்கத் தோன்றும்” என்கிறார் யாசுஹிட்டோ டெஷிமா.

ஜப்பானைக் கலக்கும் ஒயிட் ஜுவல் ஸ்ட்ராபெர்ரி!

நியூயார்க்கில் வசிக்கும் ரேச்சலும் மைக்கும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். தேனிலவுக்காக ஐரோப்பா செல்லத் திட்டமிட்டனர். வெனிஸ் செல்லும் விமானத்தில் அமர்ந்தனர். ரேச்சலின் மனம் மகிழ்ச்சியாக இல்லை. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று அவருக்குத் தோன்றியது. விமானம் மெதுவாகக் கிளம்பியது. ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபோது, விமானத்தின் இறக்கைப் பகுதியிலிருந்து புகை வந்துகொண்டிருந்தது. உடனே மைக்கிடம் விஷயத்தைச் சொன்னார். உடனடியாக பைலட்டுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. எரிபொருள் வெளியேறும் விஷயத்தை விமானத்தளத்துக்குத் தெரிவித்தார் பைலட். விமானம் உடனடியாகத் தரையிறக்கப்பட்டது. 170 பேரின் உயிரும் ரேச்சலால் காப்பாற்றப்பட்டது. எல்லோரும் நன்றி சொன்னார்கள். விமானச் சேவை ரத்து செய்யப்பட்டதால், மறுநாள் வேறு விமானத்தில் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். அடுத்த விமானத்தில் ஏறும் வரை உணவுகளை மட்டுமே வழங்க முடியும், தங்குவதற்கு இடம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டனர். வேறு வழியின்றி விமான நிலையத்தின் தரையில் படுத்து ஓர் இரவு முழுவதும் தூங்கியிருக்கிறார் ரேச்சல். ’நாங்கள் இந்த இரவை வெனிஸில் மகிழ்ச்சியாகக் கழித்திருக்க வேண்டும். ஒரு விபத்தைத் தடுத்து, உயிர்களைக் காப்பாற்றியவர்களுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறது விமான நிறுவனம்’ என்று வேதனையைப் பகிர்ந்திருக்கிறார் மைக்.

ஐயோ… பாவம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஜப்பானைக்-கலக்கும்-ஒயிட்-ஜுவல்-ஸ்ட்ராபெர்ரி/article9735507.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

 

உலக மசாலா: ஜப்பானைக் கலக்கும் ஒயிட் ஜுவல் ஸ்ட்ராபெர்ரி!

  • தொடங்கியவர்

உலக மசாலா: சிலிர்ப்பூட்டும் சிகை சிற்பங்கள்!

 

mudi_3179020f.jpg
 
 
 

வரி கோஸ்ட்டில் ஃபேஷன் டிசைனராக இருக்கிறார் லேட்டிடியா. சமீபத்தில் தன்னுடைய தலைமுடியை விதவிதமான வடிவங்களில் சிற்பம் போல உருவாக்கி, புகைப்படங்கள் எடுத்து காட்சிக்கு வைத்திருந்தார். தலை முடியை வைத்து மனித கைகள், பொம்மை, மரம், ஆப்பிரிக்கக் கண்டம் ஆகியவற்றை உருவாக்கி அசத்தியிருந்தார். இவற்றில் ஸ்மார்ட்போன் பிடித்திருந்த கை, புத்தகங்கள் பிடித்த கைகள், கிதார் வாசித்த கைகள் எல்லாம் மிக அழகான கற்பனை. “எனக்கு சிகை அலங்காரத்தில் ஆர்வம் அதிகம். எங்கள் ஆப்பிரிக்க பழங்குடி பெண்கள் இயல்பாகவே ரசனையாக அலங்காரம் செய்து கொள்வார்கள். அவற்றையெல்லாம் பார்த்து நானும் ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். ஒரு வருஷத்துக்கு முன்புதான் இதுபோன்ற விஷயங்களைச் செய்ய ஆரம்பித்தேன். அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு அபாரமாக இருந்தது. என்னுடைய நீளமான சுருள் முடி என் கற்பனைக்கெல்லாம் ஈடு கொடுத்து வருகிறது. இந்த சிற்பங்களை உருவாக்குவதற்கு சில நிமிடங்கள்தான் எடுத்துக்கொள்வேன். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வேன். ஆப்பிரிக்கர்களின் தலைமுடியைப் பற்றி நல்லவிதமான எண்ணம் உலகில் இல்லை. அதை மாற்றும் விதத்தில் என்னுடைய படைப்பு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார் லேட்டிடியா.

சிலிர்ப்பூட்டும் சிகை சிற்பங்கள்!

ன்ஜா ஹாலண்டர் அமெரிக்காவில் வசிக்கிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ஃபேஸ்புக் நண்பர்களை நேரில் சந்திக்க முடிவு செய்தார். ‘நீங்கள் என்னுடைய உண்மையான நண்பரா?’ என்ற பெயரில் ஒரு பிராஜக்டை ஆரம்பித்தார். மாதத்தில் 2 வாரங்கள் நண்பர்களை சந்திப்பதற்கு ஒதுக்கினார். ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, சில மணி நேரங்களை அவர்களுடன் செலவிட்டார். புகைப்படங்களும் வீடியோவும் எடுத்துக்கொண்டார். 5 ஆண்டுகள் முடிவில் 4 கண்டங்களிலுள்ள 12 நாடுகளுக்கும் அமெரிக்காவின் 43 மாகாணங்களுக்கும் சென்று நண்பர்களை சந்தித்து முடித்திருந்தார். “ஆன்லைன் நட்புக்கும் ஆஃப்லைன் நட்புக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. எல்லோருமே நீண்ட காலம் பழகியவர்களைப் போல அன்பு காட்டினர். மகிழ்ச்சி, சோகம், பொருளாதார சூழல், சமூகப் பார்வை என்று அத்தனை விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்துகொண்டனர். நேரில் பார்க்காத ஒருவரை எல்லோருமே மகிழ்ச்சியோடு தங்கள் வீட்டில் தங்க வைத்து, உபசரித்ததை என்னால் மறக்க முடியாது. விதவிதமான பழக்கவழக்கங்கள், உணவுகள் என்று இந்தப் பயணம் ரசனையாக அமைந்தது. 2010-ல் ஆரம்பித்த இந்தப் பயணம் 2016-ல் முடிவுற்றது. 400 வீடுகளுக்குச் சென்று 626 நண்பர்களை சந்தித்துவிட்டேன். ஒவ்வொருவரிடமும் பேசி விட்டுக் கிளம்பும்போது, அவர்கள் உண்மையான நண்பர்கள் என்று உணர்ந்துகொண்டேன். இந்த சந்திப்புகளை ஆவணப்படமாக உருவாக்கி, கடந்த மார்ச் மாதம் வெளியிட்டேன். இந்த பிராஜக்ட் எனக்கு ஏராளமான விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது” என்கிறார் டன்ஜா ஹாலண்டர்.

நட்புக்காக பெரும் பயணம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சிலிர்ப்பூட்டும்-சிகை-சிற்பங்கள்/article9736763.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: பொம்மைகளுக்கு வீடு கட்டியவர்!

 
kitty_3179612f.jpg
 
 
 

ஹலோ கிட்டி இளம் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொம்மை. ஆனால் ஜப்பானைச் சேர்ந்த 67 வயது மாசோ குன்ஜி, கடந்த 30 ஆண்டுகளாக இந்தப் பொம்மைகளைச் சேகரித்து வருகிறார். உலகிலேயே அதிக அளவில் ஹலோ கிட்டி பொம்மைகளைச் சேகரித்ததற்காக சமீபத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். மாசோ ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி. “முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா சென்ற இடத்தில் ஹலோ கிட்டியைப் பார்த்தேன். சட்டென்று என்னைக் கவர்ந்துவிட்டது. ஒரு பொம்மையை வாங்கி வீட்டில் வைத்தேன். நான் கடினமான பணியைச் செய்வதால் மன அழுத்தத்தோடு வீட்டுக்கு வருவேன். ஆனால் கிட்டியின் சிரிப்பைக் கண்டதும் என் மனம் லேசாகிவிடும். கிட்டி மீது கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகரித்தது. எங்கே கிட்டியைப் பார்த்தாலும் வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன். டிபார்ட்மென்ட் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், தெருவோரக்கடைகள் என்று எதையும் விடுவதில்லை. ஒருகட்டத்தில் வீட்டில் இடமில்லை. அதனால் ஹலோ கிட்டி ஹவுஸ் என்ற பெயரில் ஒரு வீட்டை உருவாக்கினேன். இந்த வீட்டின் சுவரில் கூட கிட்டி உருவம் கொண்ட காகிதங்களைத்தான் ஒட்டி வைத்திருக்கிறேன். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதைப் பார்த்துவிட்டு, அவர்களும் கிட்டியை வாங்கிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது 10 ஆயிரம் கிட்டி பொம்மைகள் என்னிடம் இருக்கின்றன. 4,519 பொம்மைகள்தான் முந்தைய கின்னஸ் சாதனை என்பதால், கின்னஸுக்கு 5,250 பொம்மைகளை மட்டும் எடுத்துச் சென்றேன். 8 மணி நேரம் கின்னஸ் அதிகாரிகள் எண்ணினார்கள். 81 பொம்மைகளை ஏற்க மறுத்துவிட்டார்கள். 5,169 பொம்மைகளுடன் கின்னஸ் சாதனை பட்டத்தைக் கொடுத்துவிட்டனர். என் மனைவிக்கு இதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்” என்கிறார் மாசோ.

பொம்மைகளுக்கு வீடு கட்டியவர்!

மெக்சிகோவில் ஐஸ் க்ரீம் சாண்ட்விச் வேகமாகப் பரவி வருகிறது. வேஃபருக்குள்ளோ, பிஸ்கட்களுக்குள்ளோ வைத்து இந்த ஐஸ் க்ரீம் சாண்ட்விச்சை உருவாக்குவதில்லை. மிகப் பெரிய பன்னைப் பாதியாக வெட்டி, அதற்குள் விதவிதமான ஐஸ் க்ரீம்களையும் ஒரு ஸ்பூனையும் வைத்து மூடிக் கொடுத்துவிடுகிறார்கள். இதை யார் கண்டுபிடித்தது என்று தெரியவில்லை. 60 ஆண்டுகளுக்கு முன்பே சாண்ட்விச் ஐஸ் க்ரீம் உருவாகிவிட்டது. ஆனால் சமீபத்தில்தான் மக்கள் இதைச் சுவைக்க அதிக ஆர்வம்காட்டி வருகிறார்கள். “பெரியவர்களும் சிறியவர்களும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். நாம் கேட்கும் சுவைகளில் ஐஸ் க்ரீம்களை வைத்துக் கொடுப்பார்கள். முழுமையாக உருகி, பன் ஈரமாவதற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். சிலர் உப்பு தூவியும் ஐஸ் க்ரீம்களை வழங்குகிறார்கள். மெக்சிகோவில் மட்டும்தான் சாண்ட்விச் ஐஸ் க்ரீம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பிலிப்பைன்ஸ், வியட்நாமில் பிரெட் துண்டுகளுக்குள் ஐஸ் க்ரீம் வைத்து விற்பனை செய்கிறார்கள்” என்கிறார் மேரி ஆன்.

மக்களை ஈர்க்கும் சாண்ட்விச் ஐஸ் க்ரீம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பொம்மைகளுக்கு-வீடு-கட்டியவர்/article9738139.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: பலருக்கு வாழ்நாள் கனவு, இவருக்கு தினசரி நடவடிக்கை!

 
po_3180009f.jpg
 
 
 

 

கலிபோர்னியாவில் வசிக்கும் 44 வயது ஜெஃப் ரெய்ட்ஸ் தினமும் டிஸ்னிலேண்டுக்குச் சென்று வருகிறார். விமானப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், கடந்த 2 ஆயிரம் நாட்களாக தொடர்ந்து டிஸ்னிலேண்ட் சென்று வருகிறார். ஆனாலும் டிஸ்னி மயக்கத்திலிருந்து இன்னும் தெளியவில்லை என்கிறார். “2012-ம் ஆண்டு ஜனவரி மாதம், எனக்குப் பரிசாக வருடம் முழுவதும் டிஸ்னிலேண்ட் செல்வதற்கான அனுமதி கிடைத்தது. இதை யாராலும் தினமும் பயன்படுத்த இயலாது. ஆனால் நான் தினமும் செல்ல ஆரம்பித்தேன். அப்போது எனக்கு வேலை இல்லை. அதனால் அங்கு செல்வதை மட்டுமே ஒரே வேலையாக வைத்திருந்தேன். பிறகு ஒரு வேலை கிடைத்தபோதும் நான் தினமும் செல்வதை நிறுத்தவில்லை. மாலையில் சிறிது நேரமாவது போய்விட்டு வந்துவிடுவேன். மழை, வெயில் எதுவும் என்னுடைய திட்டத்தை மாற்றவில்லை. டிஸ்னிலேண்டில் இதுதான் பிடிக்கும் என்று என்னால் சொல்ல முடியவில்லை. எல்லாமே பிடித்திருக்கின்றன. சும்மா நடந்து செல்வதுகூட அத்தனை இன்பமாக இருக்கும். வாடிக்கையாளர்கள், ஊழியர்களிடம் உரையாடுவேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கிறது. 5 ஆண்டுகளில் 2 ஆயிரம் நாட்கள் சென்றிருக்கிறேன். இங்கேதான் எனக்கு காதலி கிடைத்தார். நிறைய நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். இங்கே தினமும் வருவதால் குடும்பத்திலும் நண்பர்களின் வீடுகளிலும் நடைபெறும் திருமணம், இறுதி காரியம் போன்ற நிகழ்ச்சிகளில் என்னால் பங்கேற்க முடிவதில்லை. பணமும் செலவாகிறது. 2018-ம் ஆண்டுடன் என்னுடைய அனுமதி முடிவடைகிறது. அதற்குப் பிறகும் செல்ல வேண்டுமா என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் தினமும் டிஸ்னிக்கு செல்வதாகப் பலரும் சொல்கிறார்கள். இங்கே வருவதால்தான் உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் இருக்கின்றன. இங்கிருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மீது எனக்கு ஆர்வம் இல்லை. நீண்ட வரிசையில் நின்று தினமும் செல்வதும் இயலாத காரியம். டிஸ்னிக்குள் இருப்பது மட்டுமே என் விருப்பம். டிஸ்னி நிறுவனத்திலிருந்து என் வருகைக்காக நான் எந்தவிதமான சிறப்புச் சலுகையும் இதுவரை பெற்றதில்லை” என்கிறார் ஜெஃப் ரெய்ட்ஸ்.

பலருக்கு வாழ்நாள் கனவு, இவருக்கு தினசரி நடவடிக்கை!

சீனாவில் வசிக்கும் 26 வயது ஜாங் அசாதாரணமான உணவு வகைகளைச் சாப்பிடும் நிகழ்ச்சிகளை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவருக்கு சில நூறு பார்வையளர்கள் இருக்கிறார்கள். நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு பெரிய இலைகளைப் பச்சையாகச் சாப்பிட ஆரம்பித்தார். நடுநடுவே கற்றாழையின் பலன்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். கற்றாழை என்று நினைத்துக்கொண்டு, செஞ்சுரி தாவரத்தின் இலையை உண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. இது விஷத்தன்மையுடையது. ”ரொம்பக் கசப்பாக இருந்தபோதே சந்தேகம் வந்தது. நாக்கு மரத்துவிட்டது. தொண்டை பயங்கரமாக எரிந்தது. வயிற்றிலிருந்த இலைகளை முழுவதுமாக மருத்துவர்கள் எடுத்ததால் பிழைத்தேன்” என்கிறார் ஜாங்.

அடக் கொடுமையே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பலருக்கு-வாழ்நாள்-கனவு-இவருக்கு-தினசரி-நடவடிக்கை/article9739709.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: உலகின் மிக இளமையான குடும்பம்!

 

taiwan_3180429f.jpg
 
 
 

தைவானைச் சேர்ந்த லூர் சூ சகோதரிகளும் இவர்களது அம்மாவும் மிகவும் இளமையாகக் காட்சியளிக்கிறார்கள். லூர் சூ 41, ஃபேஃபே 40, ஷரோன் 36 வயதுகளில் இருக்கிறார்கள். ஆனால் இவர்களது வயதைப் பாதியாக மதிப்பிடும் அளவுக்கு இளமையாக இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற நடன ஆசிரியரான இவர்களது அம்மாவுக்கு 63 வயது. அவர் 30 வயது பெண்ணைப் போலிருக்கிறார்! இந்தக் குடும்பத்தை ‘the family of frozen ages’ என்று தைவான் மீடியாக்கள் அழைக்கின்றன. “என் அப்பா கூட 74 வயது தோற்றத்தில் இருக்க மாட்டார். ஆனால் அவர் புகைப்படம் எடுக்க எங்களை அனுமதிப்பதில்லை. அதனால் நாங்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறோம். எங்கள் இளமைக்குப் பிரத்யேகமான விஷயங்களைக் கடைபிடிப்பதில்லை. இரவு 9 மணிக்கு தூங்கச் சென்றுவிடுவோம். அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிடுவோம். ஒருநாளும் காலை உணவைச் சாப்பிடாமல் இருந்ததில்லை. மூன்று வேளையும் ஆரோக்கிய மான உணவுகளைச் சாப்பிடுகிறோம். நேரத்துக்கு உணவைச் சாப்பிட்டாலே உடல் எடை அதிகரிக்காது. அதிகாலை ஒரு பெரிய தம்ளர் நிறைய வெதுவெதுப்பான நீரைப் பருகுகிறோம். தண்ணீர் அதிகம் பருகினால் உடல் நீர்ச்சத்தை இழக்காது. இனிப்பு, கரியமில வாயு கலந்த குளிர்பானங்களைக் குடிப்பதில்லை. காலையில் பால் கலக்காத காபி மட்டும் குடிப்போம். நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இளமையும் ஆயுளும் அதிகரிக்கும்” என்கிறார் லூர் சூ. இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரும் ஃபேஸ்புக்கில் 3 லட்சத்து 41 ஆயிரம் பேரும் இவர்களைப் பின்தொடர்கிறார்கள்.

உலகின் மிக இளமையான குடும்பம்!

பிரான்ஸைச் சேர்ந்த ஒயின் தயாரிப்பாளர்கள் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆண்டுகள் செல்லச் செல்லதான் ஒயின் ருசிக்கும். வெளியில் ஒயினைப் பாதுகாப்பதைவிட கடலுக்குள் ஒயினைப் பாதுகாத்தால் அவற்றின் தரமும் ருசியும் அதிகரிக்கிறதா என்று ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 120 பாட்டில்களில் சிவப்பு, வெள்ளை, இளஞ் சிவப்பு ஒயின்களை நிரப்பி, மத்தியத்தரைக்கடல் பகுதியில் 40 மீட்டர் ஆழத்தில் வைத்திருக்கின்றனர். தேன் கூடு போன்று செய்யப்பட்ட அலமாரிக்குள் பாட்டில்கள் பத்திரமாக இருக்கின்றன. இதே போல 120 ஒயின் பாட்டில்கள் நிலத்திலும் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் நில, நீர் ஒயின் பாட்டில்களை எடுத்துச் சுவைத்துப் பார்க்கப் போகிறார்கள். “நிலத்தைவிட கடலில் எப்பொழுதும் ஒரே விதமான வெப்பநிலை நிலவுகிறது. அதனால் கடலில் வைக்கும் ஒயின்களின் சுவைகளில் ஆரோக்கியமான மாற்றம் தெரிகிறதா என்பதைத் தெரிந்துகொள்வதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம். கடலுக்குள் நீண்ட காலம் பாட்டில்களை வைத்திருப்பதிலும் சிக்கல். கடல் கொள்ளை யர்கள் இவற்றை எடுத்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். செலவும் அதிகமாகிறது. இதற்கு முன்பும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் செய்யப் பட்டிருக்கின்றன. ஆனால் அந்த முடிவுகள் சொல்லப்படவில்லை. இந்த ஆராய்ச்சியில் எதிர்பார்த்த மாற்றம் கிடைத்தால் கடலுக்குள் ஒயினைத் தொடர்ந்து பாதுகாப்போம்” என்கிறார் பிலிப் ஃபார் பிராக்.

கடலுக்குள் ஒயின் ஆராய்ச்சி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகின்-மிக-இளமையான-குடும்பம்/article9740996.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: அஜாக்கிரதையின் விலை 17 லட்சம்!

 

 
 
 
masala_3180892h.jpg
 

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இயங்கி வருகிறது மிகப் பெரிய ருய்லி ஜிகாவோ நகைக் கடை. விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட ஆபரணங்களுக்குப் புகழ்பெற்ற கடை இது. ’நகைகளை உடைத்தால், அதை நீங்களே வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்று ஆங்காங்கே எச்சரிக்கையும் எழுதி வைத்திருக்கிறார்கள். பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் நகைக் கடைக்கு வந்தார். விதவிதமான நகைகளை எடுத்துப் போட்டுப் பார்த்தார். பச்சை மாணிக்கக் கற்களால் செய்யப்பட்ட வளையல் அவரை மிகவும் ஈர்த்தது. வழவழப்பான அந்த வளையலை எடுத்துப் போடும்போது, கைதவறி கீழே விழுந்து, இரண்டாக உடைந்துவிட்டது. பொதுவாக வாடிக்கையாளர் உடைத்த பொருட்களை, அவர்களே வாங்கிக்கொள்ள வேண்டும் என்று சொன்னாலும் உரிமையாளர்கள் அதைப் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் இது மிகப் பெரிய இழப்பு. ஒரு வளையலின் விலை 28 லட்சம் ரூபாய். விலையைப் பார்த்தவுடன் சுற்றுலாப் பயணி மயங்கி விழுந்துவிட்டார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. “நல்லவேளை, அவருக்குப் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. பத்து நிமிடங்களில் எழுந்துவிட்டார். அவரிடம் வளையலுக்குரிய 28 லட்சத்தையும் நாங்கள் நஷ்ட ஈடாகக் கேட்கவில்லை. உடைந்த வளையலுக்கு உரிய 17 லட்சத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டோம். இது அவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று நினைக்கிறோம்” என்கிறார் கடையின் உரிமையாளர் லின் வெய். விஷயம் சமூக வலைதளங்களில் பரவியது. இவ்வளவு பெரிய தொகையை அந்தப் பெண்ணால் கொடுக்க இயலுமா, கடையின் உரிமையாளர் செய்தது அநியாயம் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சிலர், அந்தப் பெண் கூடுதல் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். இவ்வளவு விலையுயர்ந்த வளையலைப் போட்டுப் பார்க்க நினைத்தார் என்றால், அவரால் இந்த இழப்பீட்டைக் கொடுக்க முடியும் என்கிறார்கள்.

அஜாக்கிரதையின் விலை 17 லட்சம்!

நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தால் சாப்பிட வேண்டியதில்லை என்ற கருத்தை வைத்து உருவாகியிருக்கிறது ஸ்லீபிங் பியூட்டி டயட். உலகம் முழுவதும் எடை குறைப்புக்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்கினால் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம் என்பது. விழித்திருக்கும் சிறிது நேரத்துக்கு மட்டும் வெகு குறைவாகச் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பதால் உடல் எடை குறையும் என்கிறார்கள். ஆனால் இந்த ஸ்லீபிங் டயட்டை மருத்துவ உலகம் நிராகரிக்கிறது. இதில் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் இருப்பதாகச் சொல்கிறது. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்குவதே ஆரோக்கியமான விஷயம் இல்லை. தூக்க மாத்திரைகள் இல்லாமல் இவ்வளவு நேரம் தூங்கவே முடியாது. இப்படி மாத்திரைகளுடன் தூங்கும்போது நாளடைவில் மாத்திரை போட்டால்தான் தூக்கம் வரும் என்ற நிலைமைக்குச் சென்றுவிடுவார்கள். இயல்பு வாழ்க்கை பாதிப்பதோடு, மனநலத்தையும் கெடுத்துவிடும். குறைந்த உணவு வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இவ்வளவு நேரம் தூங்கி உடல் இளைத்து, எதைச் சாதிக்கப் போகிறார்கள்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அஜாக்கிரதையின்-விலை-17-லட்சம்/article9742619.ece?homepage=true&relartwiz=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.