Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மசாலா

Featured Replies

  • தொடங்கியவர்

உலக மசாலா: நல்லவேளை இவர் இங்கிலாந்தில் இருக்கிறார்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
05chkanSanta-Muerte1
 
 

மக்கள் கொண்டாடும் மரண தேவதை!

மெக்சிகோவிலும் மத்திய அமெரிக்காவிலும் சான்டா முயர்ட், மரணத்தின் தேவதையாகக் கொண்டாடப்படுகிறார். இவரை, ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் வணங்கி வருகிறார்கள். அஸ்டெக் மக்களால் கொண்டாடப்பட்ட இந்த மரண தேவதைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் திருவிழா நடத்துகிறார்கள். தோற்றம் எலும்புக்கூடுபோல் இருந்தாலும் கன்னி மேரி போலவே ஆடை, அலங்காரங்கள் செய்கிறார்கள். இவரது கையில் விவசாய அரிவாளும் உலக உருண்டையும் இருக்கின்றன. கடவுளால் மனிதர்களிடம் சமநிலையை உருவாக்க இயலாது. ஆனால் மரண தேவதையால் எல்லா மனிதர்களையும் சமமாகப் பார்க்க முடியும் என்கிறார்கள். கேட்பதைக் கொடுக்கிறார். மனிதர்களைப் பாதுகாக்கிறார். நோய்களை குணமாக்குகிறார். பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறார் என்கிறார்கள். “மரணத்தில் மட்டும்தான் ஏழை, பணக்காரன், வலிமையானவன், வலிமையற்றவன் என்ற பாகுபாடு கிடையாது. இவரை வணங்கும்போது மரணம் குறித்த பயம் வருவதில்லை” என்கிறார் மதங்களை ஆராயும் ரெஸா அஸ்லான். 16-ம் நூற்றாண்டில் மெக்சிகோ, ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் வந்த பிறகு, கிறிஸ்தவ விடுமுறை தினத்தை ஒட்டி இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியாக இது உருவானது. சான்டா முயர்ட் அஸ்டெக் மக்கள் வணங்கிய கடவுளின் மறு அவதாரமாகக் கருதப்படுகிறது. 2013-ல் வாட்டிகன் அதிகாரப்பூர்வ கண்டனத்தை வெளிப்படுத்தியது. கத்தோலிக்க திருச்சபைகள், ‘சாத்தானின் இன்னொரு வடிவமே சான்டா முயர்ட்’ என்கின்றன. திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் போன்று சமூகத்தால் புறக்கணிக்கப்படுபவர்களும் மரண தேவதையை விரும்புகிறார்கள். “சான்டாவைப் பின்பற்றுவோர் அதிகரித்து வருவதால் பலரும் பதற்றமடைகிறார்கள். அதனால் தவறாக சித்தரிக்கிறார்கள். நான் நீண்ட காலமாக இவரை வணங்கி வருகிறேன். இவர் கடவுளின் கட்டளைகளை ஏற்று மனிதர்களுக்கு உதவக்கூடிய தேவதை” என்கிறார் டேனியல் சான்டனா.

நல்லவேளை இவர் இங்கிலாந்தில் இருக்கிறார்!

இங்கிலாந்தைச் சேர்ந்த 87 வயது ரான் கோல்ட்ஸ்பிங் காதில் எப்போதும் தேசிய கீதம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மியூசிகல் இயர் சிண்ட்ரோம் என்ற மிக அரிய வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார் இவர். இவரது காது, கேட்கும் சக்தியை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் ஒரு வாரத்துக்கு 1,700 தடவை தேசிய கீதத்தைக் கேட்பதாகச் சொல்கிறார். “3 மாதங்களுக்கு முன்புதான் எனக்கு இந்தப் பிரச்சினை ஆரம்பித்தது. முதல் நாள் தேசிய கீதத்தை அடுத்தடுத்து கேட்டபோது கோபம் வந்தது. உடனே பக்கத்து வீட்டுக்காரரிடம் தேசிய கீதத்தை நிறுத்தும்படி சண்டையிட்டேன். ஆனால் அவர் தங்கள் வீட்டில் எந்தப் பாடலையும் ஒலிக்கவிடவில்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் பாடல் கேட்டுக்கொண்டே இருந்தது. என் மகனிடம் முறையிட்டேன். மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். இது அரிய குறைபாடு என்றும் மருத்துவம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறிவிட்டார். ஆனால் இந்தத் தொல்லையிலிருந்து நான் எப்படி விடுபடுவது?” என்கிறார் ரான் கோல்ட்ஸ்பிங்.

http://tamil.thehindu.com/world/article19986467.ece

  • Replies 1k
  • Views 150.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மசாலா: ஓர் உயிரைக் காப்பாற்றிய பார்வையாளர்களுக்குப் பாராட்டுகள்!

 

 
07chskomasalapic

ரஷ்யாவின் கலினிங்க்ராட் உயிரியல் பூங்காவில், பெண் ஊழியர் ஒருவர் சைபீரிய புலிக்கு உணவளிக்கச் சென்றார். அப்போது பார்வையாளர்கள் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆண் புலி இருக்கும் கூண்டின் கதவு தவறுதலாகத் திறந்திருந்ததை அந்தப் பெண் கவனிக்கவில்லை. திடீரென்று அந்தப் பெண்ணின் மீது பாய்ந்தது புலி. பயத்தில் கத்தினார். மேலே இருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் கற்களை எடுத்து புலி மீது வீசினர். ஆனாலும் அந்தப் பெண்ணை விடுவதாக இல்லை புலி. அருகிலிருந்த உணவகத்திலிருந்து நாற்காலிகளை எடுத்துவந்து வீசினார்கள். புலியின் கவனம் திசை திரும்பியது. அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, வேகமாக வெளியேறினார் அந்தப் பெண். சக பூங்கா ஊழியர்கள் இந்தச் சம்பவத்தின்போது அருகில் இல்லை. பார்வையாளர்களே ஆம்புலன்ஸை வரவழைத்து, அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். “இது மோசமான சம்பவம். இந்தப் பூங்கா ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதே இல்லை. யாரோ புலியின் கூண்டைத் திறந்து, பூட்ட மறந்துவிட்டனர். அந்தப் பெண் மிக மோசமாகப் புலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை. குணம் பெற நீண்ட காலம் ஆகும். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தப் புலிக்கு 16 வயதாகிவிட்டது. அன்று நல்ல மனநிலையில் புலி இல்லை என்று தெரியவந்திருக்கிறது” என்கிறார் பூங்காவின் செய்தித் தொடர்பாளர்.

ஓர் உயிரைக் காப்பாற்றிய பார்வையாளர்களுக்குப் பாராட்டுகள்!

தாய்லாந்தின் காவோ டின் என்ற கிராமத்தில் வசிக்கிறார் 24 வயது அருனீ ஜேயங்க்ரசங். இவரும் 26 வயது பூன்யாங் சவாட்டீயும் 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். கடந்த அக்டோபர் 22 அன்று இவர்களின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை குடும்பத்தினரும் மணமகள் குடும்பத்தினரும் சந்தித்து, சில சடங்குகளைச் செய்தனர். பிறகு மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற மணமகன் குடும்பத்தினர், வரவே இல்லை. மணமகள் குழப்பமடைந்தார். மாப்பிள்ளை கிராமத்துக்குத் தேடிச் சென்றனர். அங்கே வீடு பூட்டப்பட்டிருந்தது. மணமகனை மொபைலில் அழைத்தபோது, அவர் நீண்ட நேரம் எடுக்கவில்லை. பிறகு திருமணத்தை காலை 9 மணிக்கு வைப்பதற்குப் பதில், மாலை 6 மணிக்கு வைத்துக்கொள்ளலாம் என்றார். உறவினர்கள் காத்திருந்தனர். ஆனால் மாலையும் வரவில்லை. அதற்குப் பிறகு அவரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. பிறகு சிலரை விசாரித்தபோதுதான், மாப்பிள்ளையின் குடும்பத்துக்கு மணமகள் குடும்பத்தினர் கேட்ட வரதட்சணை கொடுக்க முடியவில்லை என்று தெரியவந்தது. திருமணத்துக்கு நகைகளும் பணமுமாகச் சுமார் 4 லட்சம் ரூபாய் அளவுக்கு மணமகள் வீட்டார் கேட்டிருந்தனர். அதைத் தாங்கக்கூடிய சக்தி இல்லாததால், ஊரை விட்டுச் சென்றுவிட்டனர். இறுதிவரை நம்பிக்கை அளித்து ஏமாற்றிவிட்டுச் சென்றதுக்கும் திருமண ஏற்பாடுகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கும் மணமகன் வீட்டார் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.

வரதட்சணையால் முறிந்துவிட்டதே இந்த 6 வருடக் காதல்!

http://tamil.thehindu.com/world/article19995386.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: புதுமையான தேவாலயம்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
08chskomasalapic
 
 

எப்படியோ காதலர்கள் மீண்டு வந்தால் சரி!

வியட்நாமில் உள்ள ‘ஓல்ட் ஃப்ளேம்ஸ்’ சந்தையில் காதலில் தோல்வியடைந்தவர்கள், தங்களின் காதல் பரிசுகளை விற்பனை செய்துவிடுகிறார்கள்! காதல் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், கிடார், துணிகள், வாசனைத் திரவியம், மெழுகுவர்த்தி, பணப்பை, புத்தகங்கள் என்று ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. இன்றைய இளைஞர்களும் இளம் பெண்களும் தோல்வியடைந்த காதலின் வலியைச் சுமந்துகொண்டு இருக்க விரும்புவதில்லை. வலியிலிருந்து விரைவில் விடுபடவே விரும்புகிறார்கள். அதனால் உண்மையை ஏற்றுக்கொண்டு, தங்களிடமிருக்கும் பரிசுப் பொருட்களைக் கொண்டுவந்து விற்றுவிடுகிறார்கள். இதன்மூலம் அவர்கள் அந்தத் துன்பத்திலிருந்து வெளிவந்துவிடுகிறார்கள். “என் காதல் உடைந்தபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன். என்னால் சாப்பிடவோ, எதுவும் குடிக்கவோ முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு துன்பத்திலிருந்து வெளிவர முடிவெடுத்தேன். துணிகள், பணப்பைகள், பற்பசை என்று அனைத்தையும் விற்றுவிட்டேன். இப்போது பாரம் குறைந்துவிட்டது” என்கிறார் 29 வயது பு தை. பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருக்கிறது. “போன தலைமுறை வரை பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணங்கள்தான் அதிகம். இன்றைய இளைஞர்கள் 30 வயது வரை சுதந்திரமாக இருந்துவிட்டு, பிறகே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். காதல் தோல்வியடைந்தாலும் அதிலிருந்து விரைவில் மீண்டுவிட நினைக்கிறார்கள். ” என்கிறார் இந்தச் சந்தையை ஆரம்பித்த டின் தாங்.

புதுமையான தேவாலயம்!

தேவனைப் பிரார்த்தித்தபடி தெய்வீக பானத்தைப் பருகுங்கள்’ என்ற கோட்பாட்டின்படி இயங்கிவருகிறது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு தேவாலயம். ஜோஹன்னஸ்பர்கில் இயங்கும் கபோலா தேவாலயம், பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துவதோடு, மது பானங்களையும் அளித்து வருகிறது. ஆப்பிரிக்காவில் இதுபோன்று வித்தியாசமான தேவாலயங்கள் பல இயங்கி வருகின்றன. டிசெய்ட்சி மகிடி என்ற பிஷப் இந்தத் தேவாலயத்தை உருவாக்கியிருக்கிறார். “பொதுவாகத் தேவாலயங்களில் மதுபானங்களை அனுமதிப்பதில்லை. மனிதன் மகிழ்ச்சியாகக் கடவுளை வணங்குவதில் என்ன தவறு? இந்தத் தேவாலயம், பிரார்த்தனை செய்துகொண்டே மது அருந்துவதற்குப் பாதுகாப்பான இடமாக இருக்கிறது. ஆரம்பித்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் 500 பேர் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஞானஸ்நானம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் குறிப்பிட்ட நபர்களைத் தேர்வு செய்து, தென்னாப்பிரிக்கா முழுவதும் இதுபோன்ற தேவாலயங்களை ஆரம்பிக்க இருக்கிறோம். பியர், விஸ்கி என்று விதவிதமான மதுபானங்கள் இங்கே இருக்கின்றன. பிரார்த்தனைக்கு முன்பு மதுபானங்களை வழங்குகிறோம். தேவன் எங்களுடன் இருப்பதால் எல்லோர் மனதிலும் அன்பும் மரியாதையும் அதிகரித்திருக்கிறது. இந்தப் பகுதியில் குற்றச் செயல்கள் குறைந்திருக்கின்றன. தற்போது ஆண்களுக்கான தேவாலயமாக இது இருக்கிறது. எதிர்காலத்தில் பெண்களையும் அனுமதிக்கும் எண்ணம் இருக்கிறது ” என்கிறார் மகிடி.

http://tamil.thehindu.com/world/article20002470.ece

  • தொடங்கியவர்
13 hours ago, நவீனன் said:

உலக மசாலா:

புதுமையான தேவாலயம்!

தேவனைப் பிரார்த்தித்தபடி தெய்வீக பானத்தைப் பருகுங்கள்’ என்ற கோட்பாட்டின்படி இயங்கிவருகிறது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு தேவாலயம். ஜோஹன்னஸ்பர்கில் இயங்கும் கபோலா தேவாலயம், பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துவதோடு, மது பானங்களையும் அளித்து வருகிறது. ஆப்பிரிக்காவில் இதுபோன்று வித்தியாசமான தேவாலயங்கள் பல இயங்கி வருகின்றன. டிசெய்ட்சி மகிடி என்ற பிஷப் இந்தத் தேவாலயத்தை உருவாக்கியிருக்கிறார். “பொதுவாகத் தேவாலயங்களில் மதுபானங்களை அனுமதிப்பதில்லை. மனிதன் மகிழ்ச்சியாகக் கடவுளை வணங்குவதில் என்ன தவறு? இந்தத் தேவாலயம், பிரார்த்தனை செய்துகொண்டே மது அருந்துவதற்குப் பாதுகாப்பான இடமாக இருக்கிறது. ஆரம்பித்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் 500 பேர் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஞானஸ்நானம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் குறிப்பிட்ட நபர்களைத் தேர்வு செய்து, தென்னாப்பிரிக்கா முழுவதும் இதுபோன்ற தேவாலயங்களை ஆரம்பிக்க இருக்கிறோம். பியர், விஸ்கி என்று விதவிதமான மதுபானங்கள் இங்கே இருக்கின்றன. பிரார்த்தனைக்கு முன்பு மதுபானங்களை வழங்குகிறோம். தேவன் எங்களுடன் இருப்பதால் எல்லோர் மனதிலும் அன்பும் மரியாதையும் அதிகரித்திருக்கிறது. இந்தப் பகுதியில் குற்றச் செயல்கள் குறைந்திருக்கின்றன. தற்போது ஆண்களுக்கான தேவாலயமாக இது இருக்கிறது. எதிர்காலத்தில் பெண்களையும் அனுமதிக்கும் எண்ணம் இருக்கிறது ” என்கிறார் மகிடி.

http://tamil.thehindu.com/world/article20002470.ece

 

Walker on water: Bishop Tsietsi Makiti of Gabola Church begins his weekly sermon after sipping on a dram of whisky at a tavern outside Johannesburg in South Africa

Bongs of praise: Bishop Tsietsi of Gabola Church raises a five-litre keg of beer as he preaches during his weekly sermon while congregants drink 'blessed' alcohol
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: இங்கே என்றால் தேச விரோதி முத்திரை கிடைத்திருக்கும்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
09chkanMarriage-proposal
 
 

ஆடம்பரமான புரபோசல்!

சீனாவின் ஷென்ஸென் பகுதியைச் சேர்ந்த சென் மிங், வீடியோ கேம் டிசைனராக இருக்கிறார். கடந்த நவம்பர் 3-ம் தேதி புதுமையான முறையில் தன்னுடைய திருமண கோரிக்கையை லீயிடம் வைத்தார். சமீபத்தில் அறிமுகமான ஐபோன் எக்ஸ், ஸ்மார்ட்போன்கள் என்று மொத்தம் 25 போன்களை வாங்கினார். ஒரு பொது இடத்தில் இதய வடிவில் ரோஜா இதழ்களைத் தூவி, போன்களை வரிசையாக வைத்துவிட்டார். நடுவில் ஒரு மோதிரமும் வைக்கப்பட்டிருந்தது. அந்த இடம் வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நண்பர்களின் உதவியுடன் லீயை அழைத்து வரச் சொன்னார். லீ இதை எதிர்பார்க்காததால் ஆச்சரியமடைந்தார். உடனே மோதிரத்தை நீட்டி, தன்னுடைய திருமணக் கோரிக்கையை வைத்தார் சென் மிங். லீயும் சம்மதம் தெரிவித்துவிட்டார். “நானும் லீயும் 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தோம். இருவருக்குமே வீடியோ கேம்கள் மீது அதிக ஆர்வம் இருந்ததால் நல்ல நண்பர்களாக மாறினோம். திருமண ஆசை வந்தது. லீயின் வயது 25. அதனால் 25 ஸ்மார்ட்போன்களை வாங்கினேன். 20 லட்சம் ரூபாய் செலவு செய்ததற்கு பதில் ஒரு கார் வாங்கிக் கொடுத்திருக்கலாம், ஒரு வீடு வாங்கியிருக்கலாம் என்கிறார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். ஆனால் எங்கள் வாழ்க்கையின் முக்கியமான தருணத்தை நான் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்ததில் தவறில்லை” என்கிறார் சென் மிங்.

 

இங்கே என்றால் தேச விரோதி முத்திரை கிடைத்திருக்கும்!

ஜப்பானுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடக்கப் போவதாக நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. அரசியல் சூழ்நிலை இப்படி இருக்கும்போது, ஜப்பானிய இளம் பெண்கள் ஓர் இசைக் குழுவை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். இதில் வடகொரிய இசையை இசைக்கிறார்கள், பாடல்களைப் பாடுகிறார்கள், ராணுவச் சீருடை அணிந்துகொண்டு நடனம் ஆடுகிறார்கள், ஃபேஷன் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இவர்களின் நிகழ்ச்சிகளில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அவரது தந்தையின் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதைக் கண்டு சக ஜப்பானியர்கள் இணையதளங்களில் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். ‘இவர்கள் வடகொரியாவின் உளவாளிகள்’ என்றும் குற்றம் சுமத்துகிறார்கள். “ஜப்பானுக்கும் வடகொரியாவுக்கும் நீண்டகால பந்தம் இருக்கிறது. வடகொரிய இசையும் அவர்களின் கலாச்சாரமும் இங்கே கலந்திருக்கிறது. ஒரு நாட்டின் இசை, கலாச்சாரம், அரசியல் மீது ஆர்வமாக இருந்தால், அவர்களை உளவாளிகள் என்று சொல்லிவிடுவதா? இங்கே அமெரிக்கர்களைப் போல் உடை அணிபவர்களும் தென்கொரியர்களைப்போல் உடை அணிபவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களிடம் ஏன் யாரும் தேசப்பற்றுக் குறித்து கேள்வி எழுப்பவில்லை? சூழலுக்கு ஏற்றவாறு அரசியலை மாற்றிக்கொள்வார்கள். அரசியலுக்காக சாதாரண மக்கள் தங்கள் விருப்பங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டுமா?” என்கிறார் சுன்ஹுன்.

http://tamil.thehindu.com/world/article20008708.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: கண்களை மூடி வண்ணம்

 

 
vannam1jpg

நேபாளத்தைச் சேர்ந்த 11 வயது தீப்தி ரெக்மியால் கண்ணை மூடிக்கொண்டே ஒரு பொருளின் நிறத்தைக் கண்டுபிடிக்க முடிகிறது! கண்களைக் கட்டிவிட்டு, இவரிடம் ஒரு பொருளைக் கொடுத்தால் சில நொடிகள் தடவிப் பார்க்கிறார், சில நொடிகள் முகர்ந்து பார்க்கிறார். பிறகு சரியாக நிறத்தைச் சொல்லிவிடுகிறார். அதேபோல் செய்தித்தாளில் உள்ள எழுத்துகளின் வண்ணத்தையும் கையால் தடவி, முகர்ந்து பார்த்துச் சொல்லிவிடுகிறார். தீப்தியின் பெற்றோர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். தங்கள் மகளின் திறமையைக் கண்டு பெருமை கொள்கிறார்கள். “யாராலும் செய்ய முடியாததை என் மகள் செய்கிறாள்! அவளின் பெற்றோராக இருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. சிலர் இது ஏதோ சினஸ்தீசியா குறைபாடு என்று சொல்கிறார்கள். இதுவரை நாங்கள் மருத்துவரிடம் செல்லவில்லை. அவள் மிக நன்றாகப் படிக்கிறாள். புத்திசாலியாகவும் இருக்கிறாள். இத்துடன் வண்ணம் அறியும் திறனையும் பெற்றிருக்கிறாள்” என்கிறார் தீப்தியின் அம்மா. சினஸ்தீசியா மரபணுக் குறைபாட்டால் ஏற்படுகிறது. இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆண்களைவிடப் பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்தக் குறைபாடுடையவர்கள் படைப்புத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கண்களை மூடி வண்ணம் அறியும் சிறுமிக்கு வாழ்த்துகள்!

தாய்லாந்தைச் சேர்ந்த 65 வயது சோம்போங் சோம்புபிரபெட் என்ற பெண்மணி, தனக்கு ஓர் இணை வேண்டும் என்று வீட்டு வாசலில் விளம்பரம் வைத்திருக்கிறார். இவருக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்தும் நிம்மதியான வாழ்க்கை அமையவில்லை. முதல் கணவர் குடிகாரர். ஒருகட்டத்தில் அவரை விட்டுவிட்டு, வேலை தேடி ஜெர்மனிக்குச் சென்றுவிட்டார் சோம்போங். அங்கே இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, அந்தத் திருமணமும் முடிவுக்கு வந்தது. தாய்லாந்து திரும்பியவருக்குத் தனிமை மிகவும் கொடுமையாக இருந்தது. இரண்டு திருமணங்களால் கிடைக்காத அன்பும் அரவணைப்பும் மூன்றாவது திருமணத்திலாவது கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். “70 வயதுக்குள் இருக்கும் ஒருவரை என் துணையாக எதிர்பார்க்கிறேன். அவர் நிச்சயம் ஓய்வூதியம் பெறுபவராக இருக்க வேண்டும். ஏனென்றால் நான் திருமணம் செய்துகொண்டால், என் பிள்ளைகள் பணம் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். என்னுடைய ஓய்வூதியம் 15 ஆயிரம் ரூபாய். தாய்லாந்தில் இதை வைத்துக்கொண்டு ஒருவர்தான் வாழமுடியும். அதனால் ஓய்வூதியக்காரரை எதிர்பார்க்கிறேன். நான் விளம்பரம் வைத்து ஒரு வாரத்தில் இரண்டு விண்ணப்பங்கள் வந்தன. ஓய்வூதியம் இல்லாததால் இரண்டையும் நிராகரித்துவிட்டேன். விளம்பரத்தைப் பார்த்து ஒருவர் என்னிடம் வந்து பேசினார். அதைப் படம் எடுத்து, எனக்கு இணை கிடைத்துவிட்டதாக தகவல் பரப்பிவிட்டனர். இன்னும் நான் தனியாகத்தான் இருக்கிறேன். விரைவில் இணை கிடைப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்கிறார் சோம்போங்.

உங்களுக்கு அன்பான இணை விரைவில் கிடைக்கட்டும்!

http://tamil.thehindu.com/world/article20176621.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: கற்கை நன்றே.. கற்கை நன்றே

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
12chskomasalapic
 
 

அர்ஜென்டினாவைச் சேர்ந்த 25 வயது மவுரிசியோ ஒஸ்ஸோலா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய 91 வயது அத்தையைத் திருமணம் செய்துகொண்டார். அத்தை இறந்த பிறகு, மனைவியை இழந்தவருக்கான ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்காக இந்தத் திருமணத்தை செய்திருக்கிறார்! 8 ஆண்டுகளுக்கு முன்பு மவுரிசியோவின் அப்பாவும் அம்மாவும் விவாகரத்து செய்துகொண்டனர். அதனால் அம்மா, தம்பியுடன் யோலண்டா அத்தையின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவருக்கும் வயதான காலத்தில் பார்த்துக்கொள்வதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர். அதனால் மகிழ்ச்சியுடன் இந்தக் குடும்பத்தை ஏற்றுக்கொண்டார். மூவரில் மவுரிசியோ, அத்தை மீது அளவற்ற அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். அவரை மிகவும் நன்றாகக் கவனித்துக்கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டக் கல்லூரியில் படித்துகொண்டிருந்தவருக்கு, கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியவில்லை. படிப்பை விடவும் மனமில்லை. வேறுவழியின்றி அத்தையிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படிக் கேட்டுக்கொண்டார். அத்தை அதிர்ந்துபோனார். அவருக்குப் பிறகு கிடைக்கும் ஓய்வூதியத்தை வைத்து, தன்னால் படிப்பை முடிக்க முடியும் என்று சொன்னவுடன் அவரும் சம்மதித்துவிட்டார். இருவரும் சட்டப்படி 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். எளிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

“பெற்றோர் பிரிந்தவுடன் என்னுடைய படிப்பை முடிக்க முடியாது என்று பயந்தேன். ஆனால் அத்தை எப்போதும் எனக்கு நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் படிப்புக்காகத்தான் இந்தத் திருமணத்தைச் செய்துகொண்டோம். மற்றபடி அரசாங்கத்தை ஏமாற்றி, பணம் பெறுவது என் நோக்கமல்ல. திருமணம் முடிந்து 4 மாதங்கள் வரை அத்தை உயிருடன் இருந்தார். பிறகு நாங்கள் திட்டமிட்டபடி, மனைவியை இழந்த கணவருக்கான ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பித்தேன். நான் எதிர்பார்க்காத வகையில் ஏராளமான சிக்கல்கள் தோன்றின.

91 வயது பெண்ணை எப்படித் திருமணம் செய்யமுடியும் என்று கேட்டனர். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு இந்தத் திருமணம் குறித்து ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டனர். இதனால் எங்களின் திருமணத்தை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டனர். நாங்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்திருக்கிறோம். அதனால் ஒரு கணவனுக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை விஷயங்களும் பெறுவதற்கு நான் சட்டப்படி தகுதியானவன் என்று கூறினேன். நீதிமன்றம் என்னுடைய விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. ஆனால் சட்டப்படி என்னிடம் எல்லா ஆவணங்களும் இருக்கின்றன. நான் அத்தையின் ஓய்வூதியத்தைப் பயன்படுத்தி, என் படிப்பை முடித்துவிடுவேன் என்று நம்பிய அந்த நல்ல ஆன்மாவின் ஆசையை நிறைவேற்றாமல் இருக்கப் போவதில்லை.

உச்ச நீதிமன்றத்தில் எனக்கு நியாயம் கிடைக்கும்” என்கிறார் மவுரிசியோ. சிலர் இவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். சட்டப்படி கணவர், மனைவியின் ஓய்வூதியத்தைப் பெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. நீதிமன்றத்தில் மவுரியோவுக்கு நியாயம் கிடைத்துவிடும் என்கிறார்கள். இன்னும் சிலர் இது ஏமாற்று வேலை, இந்தச் செயலை அங்கீகரித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்கிறார்கள்.

கற்கை நன்றே.. கற்கை நன்றே

http://tamil.thehindu.com/world/article20303012.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: இல்லத்தரசரின் கொடுமையால் விவாகரத்து

 

 
14chskomasalapic

எகிப்தைச் சேர்ந்த 28 வயது சமர், திருமணம் நடந்து இரண்டே வாரங்களில் விவாகரத்து கேட்டிருக்கிறார். இவரது கணவர் 31 வயது முகம்மது துணிக்கடை வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தகுதியான நபர்களை வேலைக்கு வைத்திருப்பதால், எந்த வேலைக்கும் அவர்கள் முகம்மதுவை எதிர்பார்த்திருப்பதில்லை. எல்லா வேலைகளும் அந்தந்த நேரம் முறையாக நடந்துவிடும். அதனால் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் இருப்பார்.

“என் கணவர் மற்ற ஆண்களைப்போல் இல்லை. குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டுமே தொழிலைக் கவனிக்கச் செல்கிறார். மீதி நேரம் முழுவதும் வீட்டிலேயே இருக்கிறார். அவரே மூன்று வேளை உணவையும் சமைக்கிறார். எங்கள் இருவரின் துணிகளையும் துவைக்கிறார். இஸ்திரி போடுகிறார். பாத்திரங்களைச் சுத்தம் செய்கிறார். வீட்டைச் சுத்தம் செய்கிறார். ஒரு சிறிய வேலையைக் கூட என்னைச் செய்ய அனுமதிப்பதில்லை. அவருக்கு உதவி செய்யக்கூட விடுவதில்லை. நான் சும்மா அமர்ந்து அவர் செய்யும் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஒருவர் வேலை செய்ய, இன்னொருவர் பார்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானது? என்னுடைய ஆதங்கத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன். இந்த வீட்டில் நான் வாழ விரும்பினால், அவருடைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார். இதைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். இவரை நீண்ட காலமாகத் தெரியும். இரண்டு ஆண்டுகளாக இவரைக் காதலித்துதான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் இரண்டே வாரங்களில் விவாகரத்து கேட்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அவர் ஒரு முழு நேர இல்லத்தரசராக இருக்க விரும்புகிறார். வீட்டிலுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் அவர் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைக்கிறார். எனக்கு காபி வேண்டும் என்றால்கூட அவரிடம்தான் கேட்க வேண்டும். சிறை வாழ்க்கை வாழ்வதாக தோன்றுகிறது.

என் மாமியாரிடம் சென்று முறையிட்டேன். அவரால் நான் சொல்வதை நம்பவே முடியவில்லை. அவர் பெற்றோருடன் இருந்தபோது வீட்டு வேலைகள் எதையுமே செய்ததில்லை என்றார். என் பெற்றோருக்கோ, அவர் பெற்றோருக்கோ கணவரின் நடவடிக்கைகள் அசாதாரணமாகவோ, கொடுமையாகவோ தெரியவில்லை. எல்லோரும் இப்படி ஒரு கணவன் கிடைத்தும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லையே என்று நினைக்கிறார்கள். குளிர்சாதனப் பெட்டியில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துணிகள், வீட்டின் தூய்மை எல்லாவற்றையும் பார்த்து முகம்மது மீது இன்னும் மதிப்பை உயர்த்திக்கொண்டனர்.

ஆனால் எனக்கோ ஒரு விருந்தாளிபோல் இங்கே தங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. சுதந்திரமும் உழைப்பும் இல்லாத வீட்டில் வாழ முடியாது என்றுதான் விவாகரத்துக்குத் தயாராகிவிட்டேன். பெண்களுக்கு வரதட்சணை கொடுத்துதான் திருமணம் செய்வது இங்கே வழக்கம். நான் விவாகரத்து செய்தால் வரதட்சணையைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன். விரைவில் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் தாக்கல் செய்வேன்” என்கிறார் சமர்.

கணவர் பிசினஸை நீங்கள் கவனித்துக் கொள்ளலாமே சமர்!

http://tamil.thehindu.com/world/article20442539.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: பாவம் இந்தக் குழந்தை!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
15chskoboxer
15chskowife
 
 

அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் குத்துச்சண்டை பயிற்சியாளராக இருக்கிறார் 50 வயது ராமோன் சோஸா. இவரது மனைவி மரியா லூலூ, ஆள் வைத்து தன்னைக் கொல்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக அறிந்தார். உடனே புலன் விசாரணை பணியகத்தில் (எப்பிஐ) முறையிட்டார். அவர்களும் துப்பறிவாளர்களும் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தி, மரியா லூலூவைக் கைது செய்தனர். “மரியா என்னைக் கொல்வதற்குத் திட்டமிட்டதை நான் தற்செயலாகத்தான் அறிந்தேன். முதலில் என்னால் நம்ப முடியவில்லை. பிறகு புகார் அளிக்க முடிவெடுத்தேன். யாருமற்ற இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கே துப்பாக்கியால் சுடப்பட்டு, நான் இறந்ததுபோல் ஒப்பனை செய்யப்பட்டது. என் உடல் முழுவதும் ரத்தமும் அழுக்குமாக மாற்றப்பட்டது. பிறகு விதவிதமாகப் படங்கள் எடுக்கப்பட்டன. என்னை ஒரு விடுதியில் யாருக்கும் தெரியாமல் தங்க வைத்தனர். மரியாவிடம் சென்று இந்தப் படங்களைக் காட்டியபோது, அவர் தன்னையறியாமல் மகிழ்ச்சியை வெளிக்காட்டிவிட்டார். உடனே அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். இறுதியில் தான் ஆள் வைத்து என்னைக் கொல்லத் திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார். என்னைக் கொல்ல இருந்தவரும் என்னுடைய மாணவர்தான். சமீப காலமாக அவர் என்னிடம் வம்பு செய்துகொண்டிருந்தார். ஒன்றே கால் லட்சம் ரூபாய் கொடுத்து, கொல்லச் சொல்லியிருக்கிறார் மரியா. இவர்களின் உரையாடல்களை கொலை செய்ய இருந்தவர் பதிவு செய்திருந்தார். அதனால் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடித்துவிட்டனர். நான் விவாகரத்து பெற்றவன். 3 குழந்தைகள் இருக்கிறார்கள். 7 ஆண்டுகளுக்கு முன்புதான் நான் மரியாவைத் திருமணம் செய்தேன். ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தார். சமீப காலமாக பொருளாதாரப் பிரச்சினை. அதனால் இருவருக்கும் இடையே சண்டைகள் வர ஆரம்பித்தன. ஆனால் கொலை செய்யத் திட்டமிடுவார் என்று நான் நினைத்ததில்லை. 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார்” என்கிறார் ராமோன் சோஸா.

பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடலாமே?

மெக்

சிகோவைச் சேர்ந்த இசபெல் பன்டோஜா, உலகிலேயே அதிக எடை கொண்ட குழந்தையின் தாயாக அறியப்படுகிறார். லூயி மேனுவல் பிறக்கும்போது 3.5 கிலோ எடை இருந்தான். பத்தே மாதங்களில் 28 கிலோவாக அதிகரித்துவிட்டான்! “எல்லாக் குழந்தைகளையும்போல் இவனும் தாய்ப்பாலைத்தான் குடித்து வளர்கிறான். ஆனால் இவ்வளவு எடை எப்படி வரும் என்று ஆச்சரியமாக இருந்தது. தொட்டில் எடை தாங்காமல் உடைந்துவிடுகிறது. பத்து மாதக் குழந்தை என்பதால் இவனால் நடக்கவும் முடியாது. எங்களால் தூக்கிச் செல்லவும் முடியவில்லை. மருத்துவரிடம் காண்பித்தோம். அரிய மரபணுக் குறைபாடு என்று தெரிந்தது. இதைச் சரி செய்ய வேண்டும் என்றால் வாரம் ஒருமுறை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு தடவைக்கும் 35 ஆயிரம் ரூபாய் செலவாகும். என் கணவரின் மாத வருமானமே 13 ஆயிரம் ரூபாய்தான். நாங்கள் எப்படி மருத்துவம் பார்க்க முடியும்? எங்களுடைய நிலையை எடுத்துச் சொல்லி, நிதி திரட்டி வருகிறோம்” என்கிறார் இசபெல்.

பாவம் இந்தக் குழந்தை!

http://tamil.thehindu.com/world/article20448847.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: அமிர்தமாக இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும்...

TAMILTHTemplateLibrarynation21clIMG2
16chkanAlergy
 
 

அரிசோனாவின் பாலைவனப் பகுதியில், ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். வாசனை திரவியம், சிகரெட் புகை, புதுத் தாள், புதுத் துணி, பிளாஸ்டிக், பூக்களின் நறுமணம், ரசாயனங்கள் என்று எத்தனையோ வித ஒவ்வாமைகள் தோன்றுகின்றன. இவர்களால் மற்றவர்களைப்போல் இயல்பாக இருக்க முடிவதில்லை. காலப் போக்கில் மனநலம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் மருத்துவத்தை நாடாமல், தாங்களே சரிசெய்துகொள்ள விரும்புகிறார்கள். அதனால் மக்கள் வசிக்கும் இடங்களைத் தவிர்த்து, தனியாக வசித்து வருகிறார்கள். தங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்த்துக்கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். 1988-ம் ஆண்டு ப்ரூஸ் மெக் க்ரியரி ரசாயன ஒவ்வாமை ஏற்பட்டதால், பாலைவனத்தில் வந்து தங்கிவிட்டார். 1994-ம் ஆண்டு சூசி மோல்லோய் தனக்கு ஏதோ பிரச்சினை என்று உணர்ந்தார். தனியாக வசிக்க முடிவெடுத்து, இந்தப் பகுதிக்குக் குடியேறினார். இன்றுவரை தன்னுடைய காரில் தான் வசித்து வருகிறார். காகிதங்களைத் தொடும்போது கைகளுக்கு உறை மாட்டிக் கொள்கிறார். புகை பிடிக்காததால் முகமூடி அணிகிறார். இப்படி உலகத்தை விட்டு ஒதுங்கி வாழ்பவர்களுக்கு குடும்பத்தினரும் நண்பர்களும் நிதியுதவி செய்கிறார்கள். அதனால் இவர்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தங்களுக்குள் உரையாடிக்கொள்கிறார்கள். உதவி செய்துகொள்கிறார்கள். சுமார் 30 பேர் இப்படி வசித்து வருகிறார்கள்.

தள்ளி வைக்கும் ஒவ்வாமை…

ரஷ்யாவைச் சேர்ந்த 21 வயது கிரில் டெரெஷினுக்கு வித்தியாசமான பாடி பில்டராக வேண்டும் என்று லட்சியம். அதனால் தன் புஜங்களை மட்டும் பெரிதாக்க நினைத்தார். எடை தூக்கும் உடற்பயிற்சியோடு புரதம் நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொண்டார். ஆனாலும் அவர் நினைத்ததுபோல் புஜங்கள் பெரிதாகவில்லை. அதனால் சின்தால் என்ற ரசாயனத்தை, 250 மி.லி. அளவுக்கு புஜங்களில் செலுத்தினார். அவருடைய தசை ஓர் அங்குலம் வளர்ந்தது. உடனே மிகவும் மகிழ்ந்துபோனார். பிறகு லிட்டர் கணக்கில் ரசாயனத்தை செலுத்த ஆரம்பித்தார். உப்பிய புஜங்களை படம்பிடித்து, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போட ஆரம்பித்தார். இவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வேகமாக 35 ஆயிரத்தை எட்டியது. உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் அதைப் பற்றி அவர் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ரசாயனத்தை செலுத்தி வந்தார். ஒரு நாள் பாடி பில்டிங் துறையில் இதுவரை இருக்கும் உலக சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று எண்ணினார். சக கலைஞர்கள் இவரை எச்சரித்தனர். ஆனால் தான் எந்த விதத்திலும் அசவுகரியத்தை உணரவில்லை என்று பதிலளித்தார். சமீபத்தில் புஜங்களின் நிறம் மட்டும் மாறியது. தோலில் கோடுகள் தோன்றின. கவலையடைந்த கிரில், மருத்துவரை சந்தித்தார். பொதுவாக சின்தாலை வெகு குறைவாகவும் அரிதாகவும்தான் பாடி பில்டர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் இவர் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம், மாரடைப்பு ஏற்படலாம், புண்கள் தோன்றலாம்… என்று மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

அமிர்தமாக இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும்...

http://tamil.thehindu.com/world/article20464515.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: இப்படி ஓர் அப்பா கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
17chskomasala%202
 

கலிபோர்னியாவில் வசிக்கும் 62 வயது முகமது ப்ஸீக், கடந்த இருபதாண்டுகளாக நோயுற்றக் குழந்தைகளை வளர்த்து வருகிறார். இந்தக் குழந்தைகள் ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்தவர்கள். மிகக் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இல்லங்களால் கைவிடப்பட்டவர்கள். இவர்களைத் தன் வீட்டில் வைத்து மருத்துவம் பார்க்கிறார், அன்பு செலுத்துகிறார், தன்னம்பிக்கை ஊட்டுகிறார், மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸில் ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ப்புத் தந்தையாக இவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார்! “எங்கள் அமைப்பில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, கவனிக்கப்பட வேண்டிய குழந்தைகள் இருந்தால் நாங்கள் உடனே முகமதுவைத்தான் தொடர்புகொள்வோம். எத்தனை குழந்தைகளைக் கொடுத்தாலும் அன்புடன் அழைத்துச் செல்வார். இவரைப் போன்ற ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை” என்கிறார் குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்த மெலிஸா டெஸ்டர்மென்.

1978-ம் ஆண்டு லிபியாவிலிருந்து கல்லூரி மாணவராக, கலிபோர்னியா வந்தார் முகமது. 1987-ம் ஆண்டு டான் என்ற பெண்ணைச் சந்தித்தார். அவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடிய பணியில் முழுமையாக ஈடுபட்டிருந்தார். இருவரும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் வீட்டுக் கதவு ஆதரவற்ற குழந்தைகளுக்காக எந்த நேரமும் திறந்திருந்தது. ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் வரைகூட வீட்டில் வைத்து கவனித்து வந்தனர். ஆண்டு முழுவதும் குழந்தைகள் இருந்துகொண்டே இருப்பார்கள். இருவரும் சிறிதும் சலிப்பின்றி குழந்தைகளை அன்போடு பராமரிப்பார்கள். கலிபோர்னியாவிலேயே மிகவும் போற்றக்கூடிய வளர்ப்புத் தாயாக அறியப்பட்டார் டான்.

“நாங்கள் வளர்த்த குழந்தைகளில் ஒன்றை 1991-ம் ஆண்டு இழந்தோம். எங்களால் அந்தத் துயரத்தைத் தாங்க முடியவில்லை. இனி வாழ்நாள் முழுவதும் நோயுற்ற குழந்தைகளுக்காகவே வாழவேண்டும் என்று முடிவெடுத்தோம். மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்வரை அன்பும் மகிழ்ச்சியும் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். 1997-ம் ஆண்டு எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு எலும்பு நோய் தாக்கியிருந்தது. அவனது துணியை மாற்றினால் கூட எலும்பு உடையும் அபாயம் இருந்தது. மரபணுக் குறைபாடு என்பதால் அந்த நோய்க்கு மருத்துவமும் அப்போது இல்லை. மற்ற குழந்தைகளைப் போலவே அவனையும் கவனித்துக்கொண்டோம். 12 ஆண்டுகளுக்கு முன்பு என் மனைவி இறந்துபோனார். அதற்குப் பிறகு நான் தனியாளாக குழந்தைகளைக் கவனித்து வருகிறேன். காது கேட்காத, வாய் பேசாத, பார்வையற்ற, மூளை வளர்ச்சியற்ற 6 வயது குழந்தை என்னிடம் இருக்கிறாள். அவளுடன் நான் பேசிக்கொண்டே இருப்பேன். விளையாடுவேன். அவளுக்கு எப்போதும் நான் அருகில் இருக்க வேண்டும். கைகளை விடவே மாட்டாள். பெரும்பாலான நேரத்தை அவளுக்கே செலவிட வேண்டியிருக்கிறது. ஒரு மாதக் குழந்தையாக இவள் என்னிடம் வந்தபோது, சில வாரங்கள்தான் உயிருடன் இருப்பாள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 6-வது பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டாள். மருத்துவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். பெயர் கூட இல்லாமல்தான் குழந்தைகள் எங்களிடம் வருகிறார்கள். அவர்களுக்கு அழகான பெயர்களை வைத்துதான் அழைப்பேன். 40 குழந்தைகளின் பெயர்களும் அவர்களைப் பற்றிய தகவல்களும் எனக்கு அத்துப்படி. இவர்களில் 10 பேர் என் நினைவுகளில் மட்டுமே இப்போது வாழ்ந்துவருகிறார்கள்” என்கிறார் முகமது.

இப்படி ஓர் அப்பா கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும்!

http://tamil.thehindu.com/world/article20497064.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: இது, சீனாவின் இன்னோர் அதிசயம்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
18chskomasalapic
 
 

சீனாவில் மிக அழகான, பிரம்மாண்டமான நூலகம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது. டியான்ஜின் பகுதியில் அமைந்திருக்கும் பின்ஹாய் நூலகம் 34 ஆயிரம் சதுர மீட்டர்களுக்குப் பரந்து விரிந்திருக்கிறது. 5 மாடிகளைக் கொண்ட இந்த நூலகத்தின் மேற்கூரையிலும் புத்தக அலமாரிகள் இருக்கின்றன! இதில் 12 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலகத்துக்குள் நுழைந்தால் அதன் அழகையும் பிரம்மாண்டத்தையும் கண்டு பிரமித்துப் போகாமல் இருக்க முடியாது. கீழ்த்தளம் முழுவதும் படிப்பதற்கும் நடுவில் இருக்கும் தளங்களில் அலுவலகங்களும் மேல் தளத்தில் கணினி அறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. டச்சு கட்டிடக் கலைஞர்களால் 3 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

இது, சீனாவின் இன்னோர் அதிசயம்!

இந்தோனேஷியாவின் செமராங் பகுதியில் அசாதாரணமான இடத்தில் இயங்கிவருகிறது ஓர் உணவகம். இந்தப் பகுதியில் ஒரு மாதத்துக்கு 1,600 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் மூன்று வேளை உணவின்றி பசியால் வாடிவருகின்றனர். இவர்களின் பசியைப் போக்குவதற்காகவே சார்மின்னும் அவரது மனைவி சுயட்மியும் இந்த உணவகத்தை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். உணவகம் இருப்பது மலைபோல் குவிந்திருக்கும் குப்பைக் கிடங்குக்கு அருகில். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பிளாஸ்டிக், கண்ணாடி, காகிதம் போன்று மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளைச் சேகரித்து, இவர்களிடம் கொடுக்க வேண்டும். அந்தக் குப்பையின் அளவுக்கு ஏற்ப மதிப்பு அளவிடப்படும். அந்த மதிப்புக்கு ஏற்ற வகையில் விரும்பிய உணவைச் சாப்பிடலாம். மீதிப் பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். “பிளாஸ்டிக் கழிவுகளால் நிலமும் இயற்கை வளங்களும் பாழாகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் நூறு ஆண்டுகள் ஆனாலும் மட்கப் போவதில்லை. பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியாது. ஆனால் மறுசுழற்சி செய்து பயன்பாட்டை ஓரளவு குறைக்க முடியும். செமராங் பகுதி மக்கள் பசியால் வாடுவதை அறிந்துகொண்டு, திட்டத்தை அமல்படுத்தினோம். அவரவர் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கணக்கிட்டுச் சொல்லிவிடுவோம். எங்கள் உணவகத்தில் 25 ரூபாயிலிருந்து 50 ரூபாய்வரை பல்வேறு விதமான உணவுகள் கிடைக்கின்றன. சாப்பிட்டது போக, மீதிப் பணத்தை வாங்கிக்கொள்ளலாம். இதன்மூலம் பசியைப் போக்கி வறுமையின் கொடுமையைக் குறைத்திருக்கிறோம். சுற்றுச்சூழலுக்கும் உதவிவருகிறோம். குப்பைகளிலிருந்து கிடைக்கும் மீத்தேன் வாயு மூலம் உணவகத்துக்கு எரிபொருள் கிடைத்து விடுகிறது. கழிவையும் பயன்தரக்கூடிய வகையில் மாற்றமுடியும் என்ற சிந்தனை மக்களிடம் வரவேண்டும். அப்படி வந்தால் சுற்றுச்சூழல் மாசுவும் குறையும். எங்கள் உணவகம் வந்தபிறகே சுவையான, ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதாக மக்கள் சொல்லும்போது மனம் நிறைகிறது” என்கிறார் சார்மின்.

அட! நல்ல திட்டமாக இருக்கிறதே!

http://tamil.thehindu.com/world/article20549637.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: நிஜ சதுரங்கவேட்டை!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
19chskomasalapic
 
 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மிகவும் பிரபலமான ஏமாற்றுப்பேர்வழி ஜிம்மி சபாட்டினோ. சமீபத்தில் 67.5 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இவர் ஏற்கெனவே சிறையில்தான் வேறொரு குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து வருகிறார். சிறைக்குள் இருந்துகொண்டே, சிலரின் உதவியோடு வெளியில் 67.5 கோடி ரூபாயை ஏமாற்றிச் சம்பாதித்துவிட்டார். விசாரணை நடைபெற்றபோது, தன்னால் ஏமாற்றுவதை நிறுத்த முடியாது என்றும் சூப்பர்மேக்ஸ் தனிச் சிறையில் அடைக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அமெரிக்காவில் இருக்கும் சிறைச்சாலைகளில் மிகவும் கடுமையானது சூப்பர்மேக்ஸ். இங்கே ஜிம்மி அடைக்கப்பட்டால் வெளியுலகத்திலிருந்து யாரும் தொடர்புகொள்ள முடியாது. 19 வயதில் ஒரு மதுபான விடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே மோசடி செய்த குற்றத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்டவர், 2014-ம் ஆண்டுதான் வெளியே வந்தார். அவர் சிறையில் இருந்தபடியே மோசடிச் செயல்கள் மூலம் ஏராளமான பணத்தைச் சம்பாதித்திருப்பது பிறகுதான் தெரிந்தது. விசாரணையில் சிறைச்சாலையில் இரண்டு அதிகாரிகள் ஜிம்மிக்கு 5 மொபைல் போன்களைக் கொடுத்து உதவியது தெரியவந்தது. உடனே இரண்டு அதிகாரிகளும் வேலையைவிட்டு நீக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் தொடரப்படவில்லை. இந்த மோசடியில் ஜார்ஜ், வலெரி கே ஹன்ட், டெனிசி சிக்ஷா லெவிஸ் மூவரும் பங்கேற்று இருக்கிறார்கள். புகழ்பெற்ற இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளை இமெயில், போன் மூலம் தொடர்புகொண்டு நகைகள், கடிகாரங்கள், விலை மதிப்பு மிக்கப் பொருட்களை ஏமாற்றி வாங்கியிருக்கிறார்கள். அவற்றைப் பணமாக மாற்றி, தங்களுக்கு உரிய பங்கை எடுத்துக்கொண்டு மீதியை ஜிம்மியின் வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறார்கள். விசாரணையின் இறுதியில் யாரிடமாவது மன்னிப்புக் கேட்க விருப்பமா என்று நீதிபதி கேட்டார். “நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். சிறையில் இருந்தபடியே என்னால் இவ்வளவு தூரம் சம்பாதிக்கமுடிகிறது என்றால் இந்த அரசு நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை நினைத்து அரசாங்கம்தான் வெட்கப்பட வேண்டும்” என்றார் ஜிம்மி.

நீதிபதி அதிகபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறையில் இருக்கும்படி தீர்ப்பளித்தார். ஜிம்மியின் விருப்பப்படி கொலோராடாவில் உள்ள சூப்பர்மேக்ஸ் தனிச் சிறையில் அவரை அடைக்கவும் உத்தரவிட்டுள்ளார். அங்கே மற்ற கைதிகளை அவரால் பார்க்கக்கூட முடியாது. யாருக்கும் கடிதம் எழுத முடியாது. தொலைபேசியில் உரையாட முடியாது. இவரது அம்மா மற்றும் 2 வழக்கறிஞர்கள் மட்டுமே அரிதாகச் சந்திக்க இயலும். தினமும் சிறிது நேரம் சூரிய வெளிச்சம் கிடைக்க மட்டும் அனுமதிக்கப்படுவார். இவரது வழக்கறிஞர்கள், “ஜிம்மிக்கு மோசடி செய்வது ஒரு பொழுதுபோக்கு. அவரால் அப்படிச் செய்யாமல் இருக்கவே முடியாது. இந்த அரசு அமைப்பை உடைக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்” என்கிறார்கள். அமெரிக்காவின் மிக முக்கியமான, மோசமான குற்றவாளிகள் இந்த சூப்பர்மேக்ஸ் சிறைச்சாலையில்தான் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நிஜ சதுரங்கவேட்டை!

http://tamil.thehindu.com/world/article20555206.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: 30 வயதுக் குழந்தை

 

 
21chskomasalapic

சீனாவில் வசிக்கும் வாங் டியான்ஃபாங் 4 வயது குழந்தையைப் போன்று தோற்றம் அளிக்கிறார். ஆனால் இவருக்கு 30 வயது. இவரால் பேச முடியாது, சில நிமிடங்களே எழுந்து நிற்க முடியும். 24 மணி நேரமும் கவனித்துக்கொள்கிறார் இவரது அம்மா. “இரண்டு வயதிலேயே என் மகனின் உடல் வளர்ச்சியும் மூளை வளர்ச்சியும் நின்றுவிட்டது. ஏராளமான மருத்துவர்களைப் பார்த்தோம். இன்றுவரை இவனுக்கு என்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. மூன்று வயதில் இவனுக்காக நான் படும் சிரமங்களைப் பார்த்த குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் புத்தர் ஆலயத்தில் இவனை விட்டு விடும்படிச் சொன்னார்கள். இன்னொரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தினார்கள். அவர்கள் சொன்னதை நான் மறுத்துவிட்டேன்.

இவனது நோய் குணமாகாது என்று எனக்கும் தெரியும். அதற்காக இவனை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். 30 வயதுக்கு மேல் இவன் உயிருடன் இருக்க மாட்டான் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருந்தாலும் இவனைப் பார்த்துக்கொள்வேன். இன்று எங்களுக்கு யாரும் இல்லை. நான் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து சம்பாதிக்கிறேன். ஒரு வீட்டிலும் வேலை செய்கிறேன். நான் வேலைக்குச் செல்லும்போது, இவனை வீட்டு வாசலில் உட்கார வைத்துவிடுவேன். அக்கம்பக்கத்தினர் பார்த்துக்கொள்கிறார்கள்” என்கிறார் சு ஸியாவோபிங்.

அம்மாவை தெய்வம் என்று சும்மாவா சொன்னார்கள்!

Lethal autonomous weapons (LAWS) என்பது ராணுவத்துக்காக உருவாக்கப்பட்ட ஒருவகை ரோபோ. இதை இயக்கி, எதிரிகளின் கருவிகளை மட்டுமின்றி மனிதர்களையும் எளிதாகத் தாக்கி அழித்து விடமுடியும். ரோபா ஆயுதங்கள், கொலைகார ரோபோக்கள் போன்ற பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன. இவற்றை நீர், நிலம், ஆகாயம், கடல் என்று சகல இடங்களிலும் செலுத்தமுடியும். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் குறிப்பிட்ட மனிதரையோ, இலக்கையோ மிகத் துல்லியமாக அடையாளம் கண்டு அழித்துவிடும் ஆற்றல் இதுக்கு உண்டு! மனிதன் ஒரே ஒரு கட்டளை கொடுத்தால் போதும், வேலையைக் கச்சிதமாக முடித்துவிடும்.

இந்தத் தானியங்கி கொலைகார ரோபோக்களால் ஒரு நகரத்தைக் கூட விரைவில் அழித்துவிடமுடியும், மனிதனைப்போல் 100 மடங்கு விரைவாகச் செயல்படுகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். மனிதனின் கட்டளை என்ற ஒரே ஒரு பாதுகாப்பு மட்டுமே தற்போது இந்த ரோபோக்களைத் தடுத்துக்கொண்டிருக்கிறது. விரைவில் அல்லது எதிர்காலத்தில் தானாகவே செயல்பட ஆரம்பித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் எச்சரிக்கிறார்கள். உலகம் முழுவதிலுமிருந்து கொலைகார ரோபோக்களுக்கு எதிராகப் போராட்டங்களும் கையெழுத்து இயக்கங்களும் நடைபெற்று வருகின்றன. த

டை செய்ய வேண்டும் என்று ஸ்டீபன் ஹாகிங், நோம் சோம்ஸ்கி போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். உலகில் இருக்கும் ஆயுதங்களைக் குறைத்தல் மற்றும் அழித்தல் அமைப்பின் தூதுவர் அமன்தீப் கில், “ரோபோக்களால் உலகைக் கைப்பற்றிக்கொள்ள முடியாது. இன்றும் மனிதனே மகத்தானவன். அதனால் அளவுக்கு அதிகமாகப் பயப்படத் தேவை இல்லை” என்கிறார். இவ்வளவு பெரிய ஆபத்து இல்லை என்றாலும் கூட குற்றச் செயல்கள் இந்த ரோபோக்களால் அதிகரிக்கும் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.

ரோபோக்களே, ஐசக் அசிமோவ் சொன்ன மூன்று விதிகளைக் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ப்ளீஸ்…

http://tamil.thehindu.com/world/article20609265.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஐயோ... பாசத்துக்காகப் பட்டினி கிடந்து உயிர்விட்டுவிட்டதே இந்த நாய்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
22chskodog
 
 

கொலம்பியா விமானநிலையத்தில் ஒரு நாய், மனம் உடைந்து போனதால் மரணம் அடைந்துவிட்டது. கடந்த மாதம் உரிமையாளருடன் விமான நிலையத்துக்கு வந்தது இந்த இரண்டு வயது நாய். உரிமையாளர் ஏனோ இந்த நாயை அழைத்துச் செல்லாமல், விமானம் ஏறிவிட்டார். உரிமையாளரை நீண்ட நேரமாகக் காணவில்லை என்றதும் நாய் சிறிது பதற்றமடைந்தது. விமான நிலையத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தேடிப் பார்த்தது. புதிதாக உள்ளே வருபவர்களில் ஒருவர் தன் உரிமையாளராக இருக்கலாம் என்ற ஆர்வத்துடன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. நாட்கள் நகர்ந்தன. ஆனால் உரிமையாளர் மட்டும் திரும்பி வரவேயில்லை. மனம் உடைந்து போன நாய், விமான நிலைய ஊழியர்களும் பயணிகளும் கொடுத்த உணவுகளைச் சாப்பிடாமல் புறக்கணித்தது. தண்ணீர் பருகுவதையும் கைவிட்டது. நாளுக்கு நாள் உடல் மெலிந்தது. மன அழுத்தத்துக்கு உள்ளானது. நடக்கக்கூடத் தெம்பு இல்லாத நிலையிலும் உரிமையாளர் வந்துவிட மாட்டாரா என்று ஏங்கிக்கொண்டிருந்தது. இறுதியில் நாயின் நிலையைக் காணச் சகிக்காமல், கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே நாய்க்கு மருந்தும் திரவ உணவும் செலுத்தப்பட்டன. ஆனால் 48 மணி நேரத்தில் நாய் இறந்துவிட்டது. “இது இளம் நாய். எந்தவித நோயும் இந்த நாய்க்கு இல்லை. மன அழுத்தம் ஒன்று மட்டுமே அதுவும் சமீப காலங்களில் இருந்திருக்கிறது. மன அழுத்தம் காரணமாகக் கூட முரட்டுத்தனமோ, கோபமோ இந்த நாயிடம் பார்க்க முடியவில்லை. மிகவும் அன்பான நாய். ஒருவரின் அன்புக்காக ஏங்கி, மனம் உடைந்து, தன் இறப்பைத் தானே தேடிக்கொண்டது வருத்தமளிக்கிறது” என்கிறார் கால்நடை மருத்துவர் சோட்டோமோன்ட்.

ஐயோ... பாசத்துக்காகப் பட்டினி கிடந்து உயிர்விட்டுவிட்டதே இந்த நாய்!

கிங் ஆஃப் க்ளோரி என்ற ஆன்லைன் விளையாட்டு மிகவும் பிரபலம். இதை உலகம் முழுவதும் தினமும் 8 கோடி பேர் விளையாடுகிறார்கள். 20 கோடி பேர் மாதம் ஒருமுறை விளையாடுகிறார்கள். சீனாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் இந்த விளையாட்டின் மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். தினமும் இரவு விளையாட ஆரம்பித்தால் மறுநாள் காலை வரை, 9 மணி நேரம் தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டிருப்பார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த நவம்பர் 2-ம் தேதி விளையாடிய பிறகு, இவர் காணாமல் போனார். இவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு இந்த இளைஞர் மரணம் அடைந்த செய்தி வெளிவந்தபோது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிகாரப்பூர்வமாக இளைஞரின் மரணத்துக்கான காரணத்தை இன்னும் வெளியிடவில்லை என்றாலும் ஆன்லைன் விளையாட்டில் தொடர்ச்சியாக மூழ்கியதே காரணமாக இருக்க முடியும் என்கிறார்கள். உடல் நலம், சுற்றுப்புறம் மறந்து ஒரே விஷயத்தில் மணிக்கணக்காக இருக்கும்போது உடல்நலம் மட்டுமின்றி, மனநலமும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒரு விளையாட்டுக்காக உயிரைக் கொடுக்கலாமா?

http://tamil.thehindu.com/world/article20631782.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: கொலைகாரக் காளான்கள் இயற்கையின் விந்தை!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
23chkanmush
 
 

அமெரிக்காவின் கிழக்கு ஓரிகன் மலைப் பகுதிகளில் உலகிலேயே மிகப் பழமையான ஆச்சரியம் அளிக்கக்கூடிய ஓர் உயிரினம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அது Armillaria Ostoyae என்ற தேன் காளான். 2,200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் காளான்கள் பரந்து விரிந்திருக்கின்றன. இவை அனைத்தும் கண்களுக்குத் தெரியாத ஒரே ஒரு வித்திலிருந்துதான் உருவாகியிருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தக் காளான் உருவாகி குறைந்தது 2,400 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 8,000 ஆண்டு கள் ஆகியிருக்கலாம் என்கிறார்கள். தேன் காளான்கள் மெதுவாகப் படர்ந்து, தான் செல்லும் வழியில் உள்ள உயிரினங்களைக் கொன்றுவிடுகின்றன. ஒவ்வோர் இலையுதிர் காலத்தின்போதும் மஞ்சள் வண்ணக் காளான்களாகக் கூட்டம் கூட்டமாகத் தங்கள் இருப்பை வெளிக்காட்டிக்கொள்கின்றன. ஒரு சில வாரங்களில் தங்களுடைய உருவத்தை மாற்றி, வெள்ளை நிறமாக மாறி சுண்ணாம்புபோல் சாதாரணமாகக் காட்சியளிக்கின்றன. இந்தத் தேன் காளான்கள் மரங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவித்துவிடுகின்றன. மரத்தின் வேர்களில் இருந்து சத்தை மெதுவாக உறிஞ்சி தங்களை வளர்த்துக்கொள்கின்றன. இதனால் மரங்கள் மெதுவாக சத்துகளை இழக்க ஆரம்பிக்கின்றன. 20, 30 ஆண்டுகளில் தேன் காளான்களை எதிர்த்து நிற்க முடியாமல் இறக்கும் நிலைக்கு சென்றுவிடுகின்றன.

“காளான்களால் ஒரு மரத்தைக் கொலை செய்ய இயலும் என்பதை மக்களால் நம்ப முடிவதில்லை. மரத்துக்குத் தேவையான சத்துகளும் தண்ணீரும் தொடர்ச்சியாகக் கிடைக்காவிட்டால் அவை காலப்போக்கில் மடிந்துதான் போகவேண்டும். தேன் காளான்கள் இப்படித்தான் அனைத்தையும் அபகரித்துக்கொண்டு, மரங்களை வீழ்த்திவிடுகின்றன” என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த நோய் இயல் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் க்ரெக் ஃபிலிப்.

1988-ம் ஆண்டு வனத்துறையைச் சேர்ந்த க்ரெக் விப்பில் என்பவர் முதல்முறையாக இந்தக் காளான்களைக் கண்டுபிடித்தார். பல காளான்கள் சேர்ந்த தொகுப்பாக இருக்கும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால் மரபணு பரிசோதனையில் ஒரே ஒரு வித்திலிருந்து உருவானது என்பது தெரியவந்துள்ளது. இந்தக் காளான்களை எல்லாம் ஒன்று சேர்த்தால் குறைந்தது 7,500 டன்களிலிருந்து அதிகபட்சம் 35,000 டன்கள் வரை எடை இருக்கலாம் என்கிறார்கள். இதே தேன் காளான்கள் அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியிலும் ஜெர்மனியிலும் கூட உள்ளன. ஆனால் ஓரிகனில் வாழ்வதுபோல் அவை மிகப் பெரிய உயிரினமாகவும் இல்லை, மிகப் பழமையான உயிரினமாகவும் இல்லை.

ஓர் ஆண்டுக்கு தேன் காளான்கள் ஓர் அடியிலிருந்து மூன்று அடி தூரம் வரை பரவுகின்றன. இந்தக் காளான்கள் குறித்து ஆச்சரியமும் ஆராய்ச்சியுமாக உலகம் இருக்க, மர வியாபாரிகள் நீண்ட காலம் வளரக்கூடிய அற்புதமான மரங்களை சேதப்படுத்தி அழித்து விடுவதால் வெறுக்கிறார்கள். ஆனால் மரங்கள் அழிந்து, மீண்டும் மண்ணுக்கே உரமாகி மறுசுழற்சி நடைபெறுவதால் தேன் காளான்களைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கொலைகாரக் காளான்கள் இயற்கையின் விந்தை!

http://tamil.thehindu.com/world/article20670738.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: எதுக்கு இவ்வளவு ரிஸ்க்?

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
24chskomasalapic
 
 

இங்கிலாந்தைச் சேர்ந்த நடாலி ரெனால்ட்ஸ், தன் வீட்டில் நாய், பூனைகளுடன் ஒரு நரியையும் வளர்க்கிறார்! “பிறந்த இரண்டாவது நாள், தாய் இல்லாததால் இந்த நரி என்னிடம் வந்தது. ஒரு குழந்தையைப்போல் இரவும் பகலும் பால் கொடுத்து கவனித்துக்கொண்டேன். 8 மாதங்களாகிவிட்டன. ஓரளவு வளர்ந்தும்விட்டது. என் 5 வயது மகளுக்கும் 3 வயது மகனுக்கும் மிகச் சிறந்த நண்பன் இந்த நரிதான். வீட்டுக்குள்ளும் தோட்டத்திலும் நரிக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் நான் விதிக்கவில்லை. ஒரு நாயைப்போல நரியும் மிகவும் அன்பாக இருக்கிறது. சொல்வதைப் புரிந்து கொள்கிறது. சில நாட்கள் நாய், பூனை, குழந்தைகளோடு நரியையும் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வேன். பார்ப்பவர்கள்தான் மிரள்வார்கள். எங்களின் பாதுகாப்புக்காக இரவில் மட்டும் நரியை ஒரு தனி அறையில் அடைத்துவிடுவேன். இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு காட்டில் விட்டுவிடும் எண்ணம் இருக்கிறது” என்கிறார் நடாலி. “வன விலங்குகளை வீட்டில் வளர்ப்பது தவறு. எந்த நேரமும் அவற்றால் நமக்கு ஆபத்து ஏற்படலாம். ஏதாவது அசம்பாவிதம் நடந்த பிறகு வருந்துவதைவிட, வரும்முன் தடுத்துவிடுவதே புத்திசாலித்தனம். காட்டில் வளரும் விலங்குகள் காட்டில் வளர்வதே விலங்குகளுக்கும் நல்லது, நமக்கும் நல்லது” என்கிறார் கால்நடை மருத்துவர் லிடியா பாரி.

எதுக்கு இவ்வளவு ரிஸ்க்?

 

நெதர்லாந்தைச் சேர்ந்தவர் 68 வயது விம் க்ருய்ஸ்விக். இவரது முக்கிய பொழுதுபோக்கு கடற்கரையில் ஒதுங்கும் பொருட்களைச் சேகரிப்பதுதான். கடந்த 34 ஆண்டுகளாக ஸான்ட்வூர்ட் கடற்கரையில் 1,200 கடிதங்களைச் சேகரித்து இருக்கிறார்! கடிதங்களை எழுதி, அதைத் தண்ணீர்ப் புகாத ஒரு புட்டியில் வைத்து, கடலுக்குள் விடும் பழக்கத்தை உலகம் முழுவதும் பலரும் காலம் காலமாக மேற்கொண்டு வருகிறார்கள். கடற்கரையில் இப்படி ஒதுங்கும் புட்டிகளைச் சேகரித்து, அவற்றில் உள்ள கடிதங்களைப் பத்திரமாகக் காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார் இவர். “1983-ம் ஆண்டு முதல் முறையாக மூன்று புட்டிகளைக் கடற்கரையில் இருந்து எடுத்தேன். திறந்து பார்த்தபோது ஆச்சரியமடைந்தேன். ஒவ்வொரு புட்டியிலும் ஒரு கடிதமும் ஒரு முகவரி எழுதப்பட்ட கடிதமும் வைக்கப்பட்டிருந்தன. மூன்று கடிதங்களுக்கும் அவரவர் முகவரிக்குக் கடிதங்கள் எழுதி அனுப்பினேன். மூவரும் பதில் கடிதங்களை எழுதியபோது நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டேன். அன்றிலிருந்து கடற்கரையில் ஒதுங்கும் புட்டிகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். கடலுக்குள் புட்டிகளில் கடிதங்களை அனுப்பும்போது ஒருவர் கையில் கிடைக்க சில நாட்களோ, சில வாரங்களோ, சில மாதங்களோ கூட ஆகலாம். யாரிடமும் கிடைக்காமல் கூடப் போகலாம். இன்றைய இணைய உலகில் இதுபோன்ற விஷயங்களில் மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிட்டதாலும் கடற்கரைகளைச் சுத்தம் செய்வதாலும் புட்டிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதுவரை 600 கடிதங்களுக்குப் பதில் எழுதியிருக்கிறேன்” என்கிறார் விம் க்ருய்ஸ்விக். நூலகராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒவ்வொரு புட்டியையும் அழகாக அடுக்கி, குறிப்புகளையும் எழுதி சிறிய அருங்காட்சியகம் ஒன்றை வைத்திருக்கிறார்.

அட, சுவாரசியமான பொழுதுபோக்கு!

http://tamil.thehindu.com/world/article20746566.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஒருவர் ’சிங்கிள்’ என்று நிரூபிக்க போராட்டமா

 

 
25chskomeera

பாகிஸ்தானைச் சேர்ந்த 40 வயது இர்டிஸா ரூபாப் என்ற மீரா, திரைத்துறையில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளாகத் தனக்குத் திருமணம் இன்னும் நடைபெறவில்லை என்பதை நிரூபிப்பதற்காகப் போராடி வருகிறார். பாகிஸ்தான் திரையுலகில் வெற்றிகரமான நடிகையாக வலம்வருபவர், இந்தியத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அடிக்கடி இவரைப் பற்றியச் செய்திகள் இணையதளங்களில் வந்துகொண்டே இருக்கும். சமீபக் காலமாக அடீக் ரஹ்மான் என்ற தொழிலதிபர், தான் மீராவின் கணவர் என்று கூறிவருகிறார். பிரபலங்களைப் பற்றிச் சிலர் இப்படிக் கூறிவருவது வழக்கம் என்பதால் முதலில் யாரும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் 2009-ம் ஆண்டு விஷயம் பெரிதானது. பத்திரிகையாளர்களை அழைத்து, தனக்கும் மீராவுக்கும் 2007-ம் ஆண்டு திருமணமாகிவிட்டதாகவும் அவர் தன் திருமணத்தை மறைக்கிறார் என்றும் புகார் கூறினார். அத்துடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.

“நாங்கள் மிகவும் எளிய முறையில் சில உறவினர்களுக்கு முன்னால் திருமணம் செய்துகொண்டோம். ஆனால் திருமணத்துக்குப் பிறகும் அவர் தன்னை, திருமணமாகாதவர் என்று சொல்லிக்கொண்டிருந்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மீரா திருமணமானவர் என்பதை நிரூபிக்க மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். என்னை விவாகரத்து செய்யாமல், இன்னொருவரை அவர் திருமணம் செய்யக் கூடாது. அவர் வெளிநாடுகள் செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும். அவர் வாழும் வீட்டை எனக்கு அளிக்க வேண்டும்” என்ற பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார் ரஹ்மான். ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள முடியாது எனவும் ரஹ்மானின் வழக்கில் அடிப்படை ஆதாரம் இல்லை என்றும் கூறி, லாகூர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

“என் நண்பர் மூலம் ரஹ்மான் அறிமுகம் ஆனார். அவருடன் சேர்ந்து சில பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறேன். திடீரென்று கிராபிக்ஸ் செய்யப்பட்ட சில படங்களைக் காட்டி, எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்ததாகக் கூறினார். நான் அதிர்ந்து போய்விட்டேன். இப்படிப்பட்ட ஒரு மனிதர் என்னை மனைவி என்று அழைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 2010-ம் ஆண்டு நான் அவர் மீது வழக்குத் தொடர்ந்தேன். வழக்கு இன்னும் முடியவில்லை. எனக்கும் 40 வயதாகிவிட்டது. திருமணம் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ரஹ்மானால் என் வாழ்க்கையும் மனநிலையும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வழக்குக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்காததால் பல ஆண்டுகளாக இழுத்துக்கொண்டே இருக்கிறது” என்கிறார் மீரா.

வழக்கு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. மீரா வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்க முடியாது என்று கூறிய நீதிமன்றம், திருமணச் சான்றிதழ் உண்மை என்று நிரூபணமானால் மீரா பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியிருக்கிறது. டிசம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்க இருக்கிறது.

ஒருவர் ’சிங்கிள்’ என்று நிரூபிக்க போராட்டமா

http://tamil.thehindu.com/world/article20860969.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: சே, ஓர் ஊழியரை இப்படியா நடத்துவது?

 
26chskomasalapic

மலேசியாவைச் சேர்ந்த செவ்ரோன் எண்ணெய் நிறுவன ஊழியர் ஃபாட்ஸிலா அப்துல் ஹமீத், தன் கையில் பசையைத் தடவி, தரையில் பதித்து புதுமையான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் கால்டெக்ஸ் பெட்ரோல் ஸ்டேஷனில் 17 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த மே மாதம் திடீரென்று 30 நாட்களுக்குள் வேலையைவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்று நோட்டீஸ் வந்தது. அதற்கான காரணத்தைக் கேட்டார் ஹமீத். ஆனால் நிர்வாகம் அவருக்குப் பதில் அளிக்கவில்லை. “எண்ணெய் நிறுவனத்தில் தானியங்கி இயந்திரங்களை நிறுவி விட்டதால், மனிதர்களின் தேவை இல்லாமல் போய்விட்டது.

ஒரு நிறுவனம் தனக்காக அர்ப்பணிப்புடன் 17 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியரை இப்படியா நடத்துவது? திடீரென்று வேலையை விட்டு நீக்கினால் அவரால் என்ன செய்யமுடியும்?” என்று கேட்கிறார் சமூக ஆர்வலர் முஹம்மது யூசுப் ஆஸ்மி. தன்னை வேலையில் இருந்து நீக்கியதை எதிர்த்துப் போராட முடிவெடுத்தார் ஹமீத். கோலாலம்பூரில் உள்ள தலைமையகத்தில் உயர் அதிகாரிகளைச் சந்திக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. வேறுவழியின்றி அந்த அலுவலகத்திலேயே பசையைக் கையில் தடவி, தரையில் பதித்தபடி அமர்ந்துவிட்டார். வேலையில் இருந்து நீக்கி 175 நாட்களுக்கு மேலாகியும் இன்றும் நிர்வாகம் உரிய பதிலை அளிக்கவில்லை.

ஹமீதும் இடத்தைவிட்டு அகலவில்லை. அவரது மனைவி தினமும் உணவும் உடைகளும் கொண்டுவந்து கொடுக்கிறார். இந்த எண்ணெய் நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். ஆனால் வெளியேற்றப்பட்டவர்களில் முதல் ஆளாகவும் மோசமான வழியிலும் வெளியேற்றப்பட்டவர் ஹமீதுதான்.

சே, ஓர் ஊழியரை இப்படியா நடத்துவது?

சீனாவில் ’மியாவோ ஏ’ அல்லது ’செகண்ட்ஸ்’ என்ற பெயரில் புதிய அப்ளிகேஷன் ஒன்று வெளிவந்திருக்கிறது. இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்துகொண்டால் விரும்பும் பிரபலங்களிடம் உரையாடலாம், வீடியோவில் பார்க்கலாம். ஒவ்வொரு நொடிக்கும் பணம் செலவாகும். ஒரு நொடியை வாங்கினால் மெசேஜ் கூட அனுப்ப முடியாது. பேசுவதற்கும் வீடியோ மூலம் உரையாடுவதற்கும் குறைந்தது 600 நொடிகளாவது தேவைப்படும். அதற்குரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திவிட வேண்டும்.

இதுவரை 30 லட்சம் நொடிகள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த அப்ளிகேஷனில் 500 பிரபலங்களை இணைத்திருக்கிறார்கள். நடிகர்கள், மாடல்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், இசைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பாடகர்கள், தொழிலதிபர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இந்த அப்ளிகேஷன் மூலம் பிரபலங்களைத் தொடர்புகொள்ளலாம். ஒரு பங்குச் சந்தையைப்போல பிரபலங்கள் தங்கள் நேரத்தை வியாபாரம் செய்கிறார்கள் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் மியாவோ அப்ளிகேஷனை உருவாக்கியவர்கள், ஒரு சாதாரண மனிதரால் கூட மிகப் பெரிய பிரபலங்களிடம் எளிதாகப் பேச முடியும் என்பது அவர்களின் கோணத்தில் எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் என்கிறார்கள்.

பணத்தைக் கறக்க இன்னும் எத்தனை திட்டங்கள்…

http://tamil.thehindu.com/world/article20930825.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: வாழ்க்கையை மாற்றிய ப்ளாஸ்டிக் சர்ஜரி

 

 
28chskomasalapic

தாய்லாந்தைச் சேர்ந்தவர் 22 வயது நோப்பஜித் மோன்லின். சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டவரை, அவரது அம்மாவால் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை! மாடல்போல் இருக்கும் ஒருவரைத் தன் மகன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். மோன்லின் ஒரு தொழிற்சாலை யில் வேலை செய்து வந்தார். இவரது தாடைகள் விலகியிருந்தன. முகம் முழுவதும் புள்ளிகள். பார்ப்பதற்கே பரிதாபமான தோற்றத்தில் இருந்ததால் யாருடனும் பேச மாட்டார்.

தென் கொரியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று, பிளாஸ்டிக் சர்ஜரியைப் பிரபலப்படுத்தி வருகிறது. அதைப் பார்க்கும்போது தானும் இப்படி ஓர் அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டால் பிறரைப்போல் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைப்பார். ஆனால் அவ்வளவு வசதி இல்லை. திடீரென்று அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட மோன்லினுக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

உடனே தென் கொரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே 3 மாதங்கள் பலவித அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தாடை, முன் நெற்றி, இமைகள் போன்றவை சரிசெய்யப்பட்டன. தோலுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முழுமையாக மாற்றம் அடைந்த பிறகு, மோன்லினைக் கண்ணாடியில் காட்டினர். அவருக்குத் தன்னையே அடையாளம் தெரியவில்லை. மகிழ்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை. கண்ணீர் பெருகியது.

தாய்லாந்துக்கு அழைத்து வரப்பட்டார். ஓர் உணவகத்துக்கு அவரது அம்மாவை வரவழைத்தனர். அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுக்கப்பட்டது. சிரித்துக்கொண்டே வந்த மோன்லினை அவரது அம்மாவுக்கே அடையாளம் தெரியவில்லை. அம்மாவுக்குக் கை கொடுத்தார், கட்டிப்பிடித்தார். அப்போதும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு குடும்ப விஷயங்களைக் கேட்டபோதுதான், தன் மகன் என்பதை நம்பினார் அந்தத் தாய். “என் மகனை அப்போதும் இப்போதும் ஒரே மாதிரிதான் பார்க்கிறேன். அவனது தோற்றம் குறித்து ஒருநாளும் நான் வருந்தியதில்லை. அவனுக்கு ரொம்ப நல்ல குணம்” என்று சொல்லும்போதே கதறி அழுதுவிட்டார்.

“எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. அம்மாவுக்கு எப்படித் தெரியும்? இன்று ஏராளமானவர்கள் தாங்களாகவே வந்து என்னை நண்பனாக ஏற்றுக்கொள்கிறார்கள். தென் கொரிய மாடல் போலிருப்பதால் மாடலிங் வாய்ப்புகளும் தேடிவருகின்றன. தோற்றம்தான் மாறியிருக்கிறேனே தவிர, என் மனம் அப்படியேதான் இருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு டோப் என்ற திருநங்கையின் நட்பு பேஸ்புக் மூலம் கிடைத்தது. என் மீது அளவுக்கு அதிகமான அன்பும் அக்கறையும் காட்டி வருபவர். நாங்கள் காதலிக்க ஆரம்பித்திருக்கிறோம். அவருடன்தான் வாழப் போகிறேன்” என்கிறார் மோன்லின்.

“பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பிறகு மோன்லின் என்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று எல்லோரும் கூறிவருகின்றனர். அவர் என்னைவிட்டுச் சென்றுவிடுவார் என்ற பயம் எனக்கு இல்லை. நாங்கள் இருவருமே ஒருவர் மீது இன்னொருவர் உண்மையான அன்பை வைத்திருக்கிறோம்” என்கிறார் டோப்.

உள்ளம் மிக அழகாக இருக்கிறது மோன்லின்!

http://tamil.thehindu.com/world/article21020986.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: செயற்கையாக உருவாக்கப்பட்ட நெருக்கடி...

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
29chskomasalapic
 
 

ஜெர்மனியில் உள்ள ஸ்டாஃபென் நகரம் மெதுவாக அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. 8,100 வீடுகள் கொண்ட இந்த நகரத்தில், 2007-ம் ஆண்டு நிலத்தடி நீர் எடுப்பதற்கான பெரிய திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தால்தான் இன்று நகரில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நகரம் மென்மையான மண் அடுக்கின் மீது அமைந்திருக்கிறது. தண்ணீர் அடுக்கும் அதற்குக் கீழே இருக்கும் ஜிப்சம் அடுக்கும் கலந்து மண்ணின் தன்மையை மாற்றிவிட்டன. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 270 கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன. நகரின் சில இடங்களில் கட்டிடங்கள் 62 செ.மீ. உயரத்துக்கு உயர்ந்துவிட்டன. பக்கவாட்டில் 45 செ.மீ. தூரத்துக்கு நகர்ந்துவிட்டன. இதில் இரண்டு வீடுகள் முற்றிலுமாக இடிந்துவிட்டன. இந்தப் பகுதியில் இருக்கும் ஒவ்வொரு கட்டிடத்துக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை. அதனால் இவற்றைப் பழுது பார்ப்பதற்கான வாய்ப்பும் இல்லை. “ஒவ்வொரு நாளும் திகிலுடனே கழித்துக்கொண்டிருக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடியலாம், நிலத்துக்குள் புதையலாம். இயற்கை எழிலோடு மிக அழகான நகரமாக ஒரு காலத்தில் இருந்தது இந்தப் பகுதி. அதனால்தான் குடியேறினோம். அமைதியாகச் சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில், நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்காக மிகப் பெரிய இயந்திரங்கள் பூமியைத் துளைக்க ஆரம்பித்தன. அன்று முதல் எங்களின் நிம்மதி பறிபோனது. மெதுவாக ஒரு நகரம் அழிந்துவருவதைக் கண்டு வருகிறோம். சிலர் வேறு நகரங்களுக்குச் சென்றுவிட்டனர். ஆனால் எல்லோராலும் போக முடியாது. என்ன செய்வதென்று புரியவில்லை” என்கிறார் இந்த நகரில் வசிக்கும் பீட்டர் காஸ்பர்.

செயற்கையாக உருவாக்கப்பட்ட நெருக்கடி...

சைபீரியாவின் இர்குட்ஸ்க் காட்டுப் பகுதியில் வசித்த 57 வயது வேட்டைக்காரரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகளைத் தூக்கிச் சென்றுவிட்டது ஒரு கரடி. மனிதர்கள் வசிப்பிடத்திலிருந்து சில மைல் தொலைவில் ஒரு மர வீட்டில் வசித்து வந்தார் இந்த வேட்டைக்காரர். கடந்த வாரம் வேட்டைக்குச் சென்று திரும்பியபோது, விநோதமான குரல் கேட்டது. மர வீட்டுக்குள் ஒரு பழுப்புக் கரடி இருப்பதைக் கண்டார். பல மணி நேரம் கரடி செல்வதற்காகக் காத்திருந்தார். இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு, கரடி சென்றுவிட்டது. உடனே நகரத்துக்கு ஓடினார். தன்னுடைய துப்பாக்கிகளைக் கரடி எடுத்துச் சென்றுவிட்டதாகவும், துப்பாக்கியைக் கரடி கையாண்டால் மனிதர்களுக்கு ஆபத்து என்றும் காவல் துறையில் புகார் அளித்தார். அவர் பயப்படுவதிலும் அர்த்தம் இருக்கிறது. 2012-ம் ஆண்டு ஒரு வேட்டைக்காரரின் துப்பாக்கியைக் கரடி எடுத்துச் சுட்டதில், ஒரு மனிதர் அந்த இடத்திலேயே மடிந்துபோனார். எனவே கரடியால் ஆபத்து நேரலாம் என்று அஞ்சுகிறார். ஒரு கரடி தற்செயலாகத் துப்பாக்கியைக் கையாண்டிருக்கலாம். கரடிகள் எல்லாம் துப்பாக்கிகளைக் கையாளும் என்று சொல்ல முடியாது என்கிறார்கள் வன அதிகாரிகள்.

துப்பாக்கி கலாச்சாரம் கரடிக்கும் பரவிவிட்டதா!

http://tamil.thehindu.com/world/article21044515.ece

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

அத்தான் துவக்கை துலைச்சிட்டார், இப்ப எல்லோருக்கும் கரடி விடுகிறார்....!  tw_blush: 

  • தொடங்கியவர்

உலக மசாலா : உலகின் கடைசி தாய்வழிச் சமூகம் தப்பிப் பிழைக்குமா?

 

kinhu
Kihnu-Island-Estonia
Kihnu-girls
kinhu
Kihnu-Island-Estonia

எஸ்தோனியா நாட்டின் ஒரு பகுதியில் பெண்கள் மட்டுமே வசிக்கிறார்கள். பால்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள கினு தீவு முழுமையாகப் பெண்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. இங்கே மிக அரிதாகத்தான் ஒன்றிரண்டு ஆண்களைப் பார்க்க முடியும். 400 பேர் வசிக்கும் இந்தத் தீவில் உலகின் கடைசி தாய்வழிச் சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. பெண்கள் மட்டும் வசிக்கும் தீவு என்பதால், இவர்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள் என்று எண்ணிவிடக் கூடாது. இந்தத் தீவைச் சேர்ந்த ஆண்கள் காலம் காலமாகத் தொலைதூரத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். அதனால் வீடுகளையும் தீவையும் நிர்வகிக்கும் பொறுப்பு பெண்கள் கைகளுக்கு வந்துவிட்டது. பெண்கள் மீன் பிடிக்கிறார்கள். துணி நெய்கிறார்கள். காய்கறி, பழங்களை விளைவிக்கிறார்கள். கால்நடைகளையும் பறவைகளையும் வளர்க்கிறார்கள். குழந்தைகளை வளர்த்து, கல்வி புகட்டுகிறார்கள்.

கினு கலாச்சார மையத்தின் தலைவராக இருக்கும் மேரி மட்டாஸ், “தீவிலேயே தங்கியிருந்தால் ஒரு குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது. அதனால்தான் ஆண்கள் பல நூற்றாண்டுகளாக நகரங்களில் வேலை செய்துவருகிறார்கள். ஆண்டுக்கு ஒன்றிரண்டு தடவைதான் குடும்பத்தைப் பார்க்க வருவார்கள். ஆண்களின் சுமையை குறைக்கவும் குடும்பம், குழந்தைகளை கவனிக்கவும் பொறுப்புகளைச் சுமக்க ஆரம்பித்தோம். இங்கே இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் மிகவும் வலிமையானவராகவும் சுதந்திரமானவராகவும் இருப்பார். எங்களால் கினுவின் கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எங்கள் கலாச்சாரம் மிகவும் சுவாரசியமாக இருக்கும். இன்றும் தினசரி அணியும் ஆடைகளை நாங்களே நெய்து, பாரம்பரிய முறைப்படிதான் அணிகிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த இசையையும் நடனத்தையும் இன்றும் வாழவைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இவற்றை எல்லாம் காப்பாற்ற முடியும் என்று தெரியவில்லை. இன்றைய குழந்தைகள் படிப்பதற்காகவும் வேலைக்காகவும் நகரங்களுக்குச் செல்கிறார்கள். அவர்கள் யாரும் மீண்டும் இந்தத் தீவில் வசிக்க விரும்புவதில்லை. அவர்களை குறை சொல்ல முடியாது. கோடைகாலத்தில் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் கொஞ்சம் வருவார்கள். மற்றபடி இந்தத் தீவில் வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு எதுவும் கிடையாது. நான் ஒவ்வொரு நாளும் என் கண் முன்னே எங்களது தனித்துவமான கலாச்சாரம் மறைந்து போவதைக் காண்கிறேன். எனினும், நாங்கள் இருக்கும்வரை இந்தத் தீவு தன் அடையாளத்தைத் தொலைக்காது” என்கிறார்.

கினுவின் கலாச்சாரம், முக்கியமாக திருமணச் சடங்குகளை ‘உலகப் பாரம்பரியச் சின்னமாக’ அங்கீகரித்திருக்கிறது யுனெஸ்கோ. அதனால் அரசாங்கம் இவர்களின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தி வருகிறது. இங்கிருக்கும் அருங்காட்சியகத்தைப் புதுப்பித்து, தீவின் வரலாற்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் கினுவின் எதிர்காலம் சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும். பிழைப்பதற்கு வழியில்லாததால் இங்கே இனி புதிதாக யாரும் குடியேறப் போவதில்லை. எஞ்சியிருக்கும் பெண்கள் உலகிலேயே மிகச் சிறந்த இடத்தில் தாங்கள் வசிப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

உலகின் கடைசி தாய்வழிச் சமூகம் தப்பிப் பிழைக்குமா?

http://tamil.thehindu.com/world/article21191124.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: நியாயம் வெற்றி பெற காலம் பதில் சொல்ல வேண்டும்..

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
01chskomasalapic
 

வியட்நாமைச் சேர்ந்த 22 வயது நிகுயென் வான் ஹோவா, பத்திரிகையாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு ஃபார்மோசா நிறுவனத்தின் கழிவுகள் கடற்கரையில் கலக்கப்பட்டதை ஆதாரத்துடன் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். தொடர்ச்சியாக ஒளிப்படங்கள், வீடியோக்கள் என்று ஆதாரங்களையும் வெளியிட்டு வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட வான் ஹோவாவுக்குத் தற்போது 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தைவானைச் சேர்ந்த ஃபார்மோசா பிளாஸ்டிக் தொழிற்சாலை ஹா டின் நகரில் செயல்பட்டு வருகிறது. ஆலையில் இருந்து வெளியேறும் சயனைட் உட்பட நச்சு ரசாயனக் கழிவுகளை, சாதாரண கழிவு வெளியேற்றும் குழாய் வழியாக கடற்கரையில் வெளியேற்றி வந்தனர். கடற்கரையில் 120 மைல் தூரத்துக்கு இந்தக் கழிவுகள் பரவிவிட்டன. 115 டன் மீன்கள் இறந்து மிதந்துள்ளன. இதனால் மீன்பிடித் தொழிலும் நலிவடைந்துவிட்டது. சுற்றுலாத்துறையும் வீழ்ச்சியடைந்துவிட்டது. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நிலமும் நீர் ஆதாரங்களும் மாசு அடைந்திருக்கின்றன. இதைத் தட்டிக் கேட்ட வான் ஹோவாவை, அரசு ஆதரவு ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார் என்று குற்றம் சுமத்தின. அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இறுதியில் நீதிமன்றம், வான் ஹோவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதற்குப் பிறகு 3 ஆண்டுகள் வீட்டுக் காவலிலும் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

வழக்கறிஞர் காங் டின், “இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. எந்தக் குற்றவாளிக்கும் தன் தரப்பைச் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. வான் ஹோவாவுக்கு வழக்கறிஞரை வைத்துக் கொள்ள வாய்ப்பு தரப்படவில்லை. இவருக்கு எதிராக எல்லா ஆதாரங்களும் கற்பனை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. வான் ஹோவா மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் ஒரு நிரபராதியைக் குற்றவாளியாக மாற்றமுடிகிறது என்பதை நினைக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. ரசாயனத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்களையும் கூட இந்த வழக்கில் நுழையவிடாமல் பார்த்துக்கொண்டன சர்வதேச ரசாயன நிறுவனங்கள்” என்கிறார்.

ஃபார்மோசா நிறுவனம் நச்சு ரசாயனத்தை வெளியிட்டது நிரூபிக்கப்பட்டால், சுமார் 500 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கமுடியும். ஆனால் அரசாங்கம், நிறுவனத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. அவர்கள் தொழிற்சாலையை ஆரம்பிக்கும்போதே பிரத்தியேகமான ஓர் ஒப்பந்தத்தை அரசாங்கத்துடன் செய்துகொண்டிருப்பார்கள் என்கிறார்கள் விமர்சகர்கள்.

மனித உரிமை ஆணையத்தின் ஆசியாவுக்கான பொறுப்பாளர் பில் ராபர்ட்சன், “வான் ஹோவாவின் தண்டனையானது அரசாங்கத்தின் பரந்த மனப்பான்மையையும் நீதிமன்றங்களை அரசாங்கங்கள் எவ்வளவு தூரம் நிர்பந்திக்கின்றன என்பதையும் காட்டுகிறது. நச்சுக் கழிவால் நான்கு மாநிலங்களின் கடல் சார்ந்த பொருளாதாரம் அழிந்துவிட்டது” என்கிறார். ஏற்கெனவே இந்தத் தவறைச் சுட்டிக்காட்டிய மி நாம் என்பவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

நியாயம் வெற்றி பெற காலம் பதில் சொல்ல வேண்டும்..

http://tamil.thehindu.com/world/article21239296.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஐயோ, பிரபலமாவதற்காக இந்த அளவுக்கா இறங்குவது?

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
02chskomasalapic
 
 

ஈரானைச் சேர்ந்தவர் 22 வயது சாஹர் டபார். இவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் மிகத் தீவிரமான ரசிகை. அவர்போலவே தன்னை மாற்றிக்கொள்வதற்காக இதுவரை 50 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்! வெகு விரைவில் எடையை 40 கிலோவாகக் குறைத்து, பிளாஸ்டிக் சர்ஜரிகள் மூலம் ஏஞ்சலினா சாயலைப் பெற்றுவிட்டார். தன்னுடைய ஒளிப்படங்களை இன்ஸ்டாகிராமில் போட ஆரம்பித்தார். அவரது ரசிகர்கள் இந்த மாற்றத்தை மிகவும் வரவேற்று, பாராட்டினார்கள். ஆனால் சில மாதங்களில் என்ன ஆனது என்று தெரியவில்லை. திடீரென்று ஸோம்பி (மிருதன்) போன்று ஒப்பனை செய்துகொண்டு, விதவிதமான ஒளிப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். பார்ப்பவர்கள் பதறுகின்றனர். பிளாஸ்டிக் சர்ஜரியால் சாஹரின் முகம் இப்படி ஆகிவிட்டது என்று செய்திகள் பரவிவிட்டன. ஆனால் இவரது ரசிகர்கள், இது ஒப்பனைதான் என்று கூறுகிறார்கள். ஏஞ்சலினா போன்று பெரிய உதடுகளும், நீளமான தாடையும், ஒட்டிய கன்னங்களும், மெல்லிய மூக்குமாகக் காட்சியளிக்கிறார். ஆனாலும் இந்தப் படங்களுக்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பின்தொடரவில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு, செலவு செய்து ஏஞ்சலினாவாக மாறியும் பலன் குறைவாக இருக்கிறதே என்று நினைத்த சாஹர், ஸோம்பி அவதாரத்துக்கு மாறினார். விதவிதமான இடங்களில் படங்கள் எடுத்து, தொடர்ச்சியாக வெளியிட்டார். பலன் கிடைத்துவிட்டது. 3,18,000 பேர் இப்போது இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். “பிளாஸ்டிக் சர்ஜரியால் நான் இந்தத் தோற்றத்தைப் பெறவில்லை. ஒப்பனை மூலமே ஸோம்பி போன்று காட்சியளிக்கிறேன்” என்று சாஹர் தெரிவித்திருக்கிறார்.

ஐயோ, பிரபலமாவதற்காக இந்த அளவுக்கா இறங்குவது?

அயர்லாந்து தீவில் உள்ள அஷ்லேம் கடற்கரை 2005-ம் ஆண்டு மிக மோசமான புயலில் காணாமல் போனது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புயலில், ஒரே இரவில் திரும்ப வந்துவிட்டது! இந்தக் கடற்கரை மணலும் கரும்பாறைகளுமாக அழகாகக் காட்சியளிக்கும். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒருகாலத்தில் வந்துகொண்டிருந்தார்கள். ஒருநாள் கடற்கரை மறைந்துபோனது. பிறகு இங்கே சுற்றுலாப் பயணிகள் வருவதை நிறுத்திவிட்டனர். அருகில் இருப்பவர்கள் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுச் செல்வார்கள். “இந்தக் கடற்கரை மிகவும் வித்தியாசமானது. கடந்த சில நூற்றாண்டுகளாகவே 7 வருடங்களுக்கு ஒருமுறை கடற்கரை மறைந்துபோகும். மீண்டும் 7 வருடங்களுக்குப் பிறகு திரும்பிவந்துவிடும். ஆனால் 2005-ம் ஆண்டு காணாமல்போன கடற்கரை, திரும்பி வருவதற்கு நீண்ட காலம் எடுத்துகொண்டுவிட்டது. இது இயற்கையின் விளையாட்டு. இனி இங்கே சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பிப்பார்கள்” என்கிறார் உள்ளூர்க்காரர் மோல்லோய்.

கண்ணாமூச்சி விளையாடும் கடற்கரை!

http://tamil.thehindu.com/world/article21247263.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.