Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் களம்புக காத்திருக்கும் மகிந்த!

Featured Replies

மீண்டும் களம்புக காத்திருக்கும் மகிந்த!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு செயல்திட்டமொன்றை வகுத்து, அதனை முன்னெடுத்துச் செல்வதாக கொழும்பு அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 08ஆம் திகதி நடைபெற்ற தோல்வியடைந்த பின்னர், பொதுத் தேர்தலில் பிரதமர் பதவியைக் குறிவைத்து போட்டியிட்ட போதிலும் அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

பொதுத் தேர்தலில் மகிந்தவை பிரதமராக்குவோம் என்ற கோஷத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களில் ஏராளமானோர் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் சுமார் 45 உறுப்பினர்கள் வரை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற கன்னி அமர்வின் போது இந்தத் தரப்பினர் மகிந்த ராஜபக்சவிற்கு அமோக வரவேற்பை வழங்கியிருந்தனர். அத்துடன், மகிந்த சபையை விட்டு வெளியேறும் போதும் அவரை சூழ ஒரு கூட்டம் இருந்தது. 

இந்தத் தரப்பினர் மகிந்த ராஜபக்சவின் புதிய அரசியல் வேலைத் திட்டங்கள் குறித்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்குவைத்து இந்தத் தரப்பினர் தற்போது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். இதில் ராஜபக்ச தரப்பினருக்கு சுதரந்திரமாக செயல்பட முடியாது போனால் தனியான கட்சியொன்றின் ஊடாக அல்லது தனியான பிரிவொன்றின் ஊடாக பயணிக்க இந்தத் தரப்பு தீர்மானித்துள்ளது. இதற்கான தொகுதிவாரியான பணிகள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தொடர்ச்சியான மக்கள் சந்திப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்போது அடுத்த நான்கு வருடங்களில் நிச்சயமாக மகிந்த ராஜபக்ச தரப்பில் அரசாங்கமொன்று நிறுவப்படும் எனவும் அதற்குத் தயாராகுமாறும் மகிந்த தரப்பினர் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், மகிந்த ராஜபக்சவின் இந்த புதிய அரசியல் வியூகத்திற்கு அவரது சகோதரர்களான பசில், கோதாபய ஆகியோர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறைந்தது அடுத்த இரண்டு வருடங்களுக்கேனும் அமைதி காத்து, பின்னர் இந்த அரசியல் வியூகத்தை முன்னெடுக்க வேண்டும் என ராஜபக்ச சகோதரர்கள் கருதுகின்றனர்.

தற்போது தீவிர அரசியலில் ஈடுபடுவது தமக்கெதிரான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு, சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

எனினும், மகிந்த ராஜபக்ச தீவிர அரசியலலை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என நாமல் ராஜபக்சவும், சிரந்தி ராஜபக்சவும் கருதுகின்றனர். விமல், உதய கம்பன்பில ஆகிய மகிந்தவாதிகளும் மகிந்த தொடர் தீவிர அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

இந்தத் தரப்பினர் நாடாளுமன்றத்தில் சுயாதீன எதிர்க்கட்சியாக செயற்பட எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ஒருவரை தமது தலைவராக பெயரிடவும் இந்தத் தரப்பினர் எதிர்பார்த்துள்ளனர்.

தினேஷ் குணவர்தன, விமல் வீரவங்ச, உதய கம்பன்பில ஆகியோரின் கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இவர்களினால் கலந்துகொள்ள முடியாமல் இருக்கின்றன.

இதுவும் அவர்களுக்கு தற்போது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

http://www.tamil.srilankamirror.com/news/item/4304-2015-09-07-05-37-38

Edited by Kashni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.