Jump to content

ஆப்பிளின் புது வரவுகள் இன்று அறிமுகம் : ஆர்வத்தில் மக்கள்


Recommended Posts

பதியப்பட்டது
ஆப்பிளின் புது வரவுகள் இன்று அறிமுகம் : ஆர்வத்தில் மக்கள்
 
 
 
Tamil_News_large_1337577.jpg
 
 

நியூயார்க்: புது வகை ஐபோன்கள், ஐபேட் ப்ரோ, ஆப்பிள் டிவி, ஆப்பிள் வாட்ச், ஹோம் கிட் என ஆப்பிள் நிறுவனம், இன்று எந்த பொருளை அறிமுகப்படுத்த இருக்கிறேதோ என்று உலகமே காத்துக்கொண்டிருக்கிறது.

 

எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம், ஒரு முறைக்கு ஏதாவது ஒரு தயாரிப்பை மட்டும் அறிமுகம் செய்வது வழக்கம்.இன்று (செப்.9ம் தேதி) நடைபெற உள்ள நிகழ்ச்சியில், ஒன்றுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆப்பிள் நிறுவனம், இதுவரை சான்பிரான்ஸ்சிஸ்கோ மாஸ்கோன் சென்டரில், தனது தயாரிப்புகளுக்கான அறிமுக நிகழ்ச்சிகளை நடத்திவந்தது. இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியை, பிரமாண்டமாக நடத்த எண்ணி, பில் கிரகாம் சிவிக் ஆடிட்டோரியத்தை தேர்வு செய்துள்ளது.

 

இந்நிகழ்ச்சியில், 2 புதிய வகை ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 3டி டச் டிஸ்பிளே, போர்ஸ் டச் டிஸ்பிளே வசதியுடன் கூடிய இந்த ஐபோன்களுக்கு ஸ்டான்டர்ட் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் மாடல் என்று பெயர் வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஐஓஎஸ் 9 அப்டேட் உடன் மல்டி விண்டோ மல்டிடாஸ்க்கிங் திறன் பெற்ற ஐபேட் ப்ரோவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

சுபிரீயர் ஏ8 புராசசர், டச் பேடுடன் கூடிய ரிமோட் மற்றும் புதிய யூசர் இன்டர்பேஸ் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ஆப்பிள் டிவியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

இதேபோன்று, ஆப்பிள் வாட்ச், ஹோம் கிட் என மேலும் சில புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1337577

 

Posted

ஐபேட் புரோவை வெளியிட்டது ஆப்பிள்

 சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் புதிய வகை ஐபேடுகளை வெளியிட்டது. ஐபேட் புரோ என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

 

இதன் முக்கிய அம்சங்களில் சில;

 

* ஐபேட் புரோ, 22 மடங்கு வேகமானது. இதனை ஆப்பிள் பென்சில், விரல்கள் மூலம் பயன்படுத்தலாம்.

* இதில் 4 ஸ்பீக்கர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

* 12.9 இஞ்ச் அகலம் கொண்டது.

* தொடர்ச்சியாக 10 மணி நேரம் பயன்படுத்தும் பேட்டரி திறன் கொண்டது

* இது சிறியவகை கம்ப்யூட்டர்களான லேப்டாப் உள்ளிட்டவைகளை விட 80 சதவீதம் வேகமானது.

* ஆப்பிள் பென்சில் தானாக சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* ‛ஸ்மார்ட் வகை கீபோர்ட்' வசதிஉள்ளது.

* இந்த ஐபேட் புரோவுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் கை கோர்த்துள்ளது.

* ஐபேட் புரோவில், அலுவலக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் எம்.எஸ்., ஆபிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

* இந்த ஐபேட்கள் வரும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது.

* புதிய ஐபேட் மினி-2 மாடல் 269 அமெரிக்க டாலர், ஐபேட் மினி-4 மாடல்- 399 அமெரிக்க டாலர், ஐபேட் ஏர் 2 மாடல் -499 அமெரிக்க டாலர், ஐபேட் புரோ மாடல் 799 அமெரிக்க டாலர் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1338525

ஆப்பிள் டிவியின் சிறப்பம்சம் செயலிகள்
 
 
 
 

சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் புதிய வகை டிவியை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பம்சமாக செயலிகளை டிவிக்கள் மூலம் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் டிவி, கேம், ஷாப்பிங் போன்று மொபைல் செயலிகளை டிவியில் பயன்படுத்தலாம். புது வடிவில் டிவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யோகமாக செட் டாப் பாக்ஸ், டச் பேட் வசதி கொண்ட ரிமோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஸ்ரியின் துணை கொண்டு குரல் மூலம் டிவியை கட்டுப்படுத்தலாம்.

*டிவியில், 64 பிட் ஏ8 சிப், புளூடூத், ஓய்பை, ஆகியவை உள்ளன.

*ரிமோட்டில் புளுடூத் வசதி, வால்யயூம் கன்ட்ரோல் உள்ளன.

*ரிமோட்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் மூலம் 3 மாதம் பயன்படுத்தலாம்.

*மொபைல் போல இந்த ரிமோட்டை சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1338532

அக்டோபரில் புதிய வகை ஆப்பிள் கடிகாரம்

சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனத்தின் மற்றொரு அறிமுகமாக புதிய வகை கடிகாரங்கள் அக்டோபர் மாதம் முதல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரங்களுக்காக 10 ஆயிரம் செயலிகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தவிர, மொபைல் போன்களில் மட்டும் செயப்படுத்தப்பட்டு வந்த பேஸ்புக் மெசஞ்சர் செயலியை தற்போது ஆப்பிள் கடிகாரத்திலும் பயன்படுத்தலாம். புது கடிகாரம் முற்றிலும் மாறுப்பட்ட வடிவத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1338526

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.