Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

உலகின் முதல் தலைமாற்று அறுவை சிகிச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
சீனா - இத்தாலி மருத்துவர்கள் குழு, 2017ல், உலகிலேயே முதன் முதலாக, தலைமாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளது. சீனாவின் ரென் ஜியோபிங், இத்தாலியின் செர்ஜியோ கானவரோ ஆகியோர் தலைமையிலான குழு, 2013ல், உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை, 2016ல், நடைபெறும் என, அறிவித்தது. ஏராளமான இடர்பாடுகள், ஆய்வுகளில் ஏற்பட்ட தாமதம் போன்றவற்றால், இது மேலும் ஓராண்டு தள்ளிப் போடப்பட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த, வலேரி உஸ்பிரினோனோவ், 30, என்பவரின் தலை தான் மாற்றப்பட உள்ளது. இவர், தீராத 'வெர்ட்னிக் ஹாப்மேன்' என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வலேரிக்கு, யாருடைய தலை பொறுத்தப்பட உள்ளது என்ற விவரத்தை மருத்துவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். சீனாவில், மனித உறுப்புகளுக்கான தேவை அதிகமாக உள்ளது.

சீனா - இத்தாலி மருத்துவர்கள் குழு, 2017ல், உலகிலேயே முதன் முதலாக, தலைமாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளது. சீனாவின் ரென் ஜியோபிங், இத்தாலியின் செர்ஜியோ கானவரோ ஆகியோர் தலைமையிலான குழு, 2013ல், உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை, 2016ல், நடைபெறும் என, அறிவித்தது. ஏராளமான இடர்பாடுகள், ஆய்வுகளில் ஏற்பட்ட தாமதம் போன்றவற்றால், இது மேலும் ஓராண்டு தள்ளிப் போடப்பட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த, வலேரி உஸ்பிரினோனோவ், 30, என்பவரின் தலை தான் மாற்றப்பட உள்ளது. இவர், தீராத 'வெர்ட்னிக் ஹாப்மேன்' என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வலேரிக்கு, யாருடைய தலை பொறுத்தப்பட உள்ளது என்ற விவரத்தை மருத்துவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். சீனாவில், மனித உறுப்புகளுக்கான தேவை அதிகமாக உள்ளது.

   

அங்கு, பல ஆண்டுகளாக, மரண தண்டனை கைதிகளின் உடல் உறுப்புகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன.இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, சீன அரசு, 2007ல் வர்த்தக ரீதியில் உறுப்பு தானம் செய்ய தடை விதித்தது. இருந்தபோதிலும், சீனாவில், நன்கொடை என்ற பெயரிலும், சட்டப் புறம்பாகவும், மனித உறுப்புகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

'வெர்ட்னிக் ஹாப்மேன்':இது, மரபணு கோளாறு தொடர்பான, அரிய நோய். பெற்றோரிடம் இருந்து, கரு உருவாகும் போதேகுழந்தைக்கும் பரவும். அமெரிக்காவில், 2,500 தம்பதியரில் ஒரு ஜோடிக்கு, இந்த கோளாறு உள்ளது. குழந்தைகளின் தண்டுவடத்தில் உள்ள நியூரான் செல்களில், இந்த மரபணுக்கள் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக, மூளையின் கட்டளை நரம்புகள், தன்னிச்சையான தசை இயக்கம் ஆகியவை பாதிக்கப்படும். இதனால், குழந்தையால், தவழவோ, நடக்க வோ முடியாது. தலை, கழுத்து ஆகியவற்றின் இயக்க மும் பாதிக்கப்படும். உணவை விழுங்குவதற்கு கூட, நோயாளிகள் சிரமப்படுவர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=140408&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.