Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் தீவிரமடைந்துள்ள அலரி விதை கலாசாரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாணத்தில் அலரி விதை கலாசாரம் தீவிரமாக பரவி வருவதாக,யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர்.க.நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.தேசிய விஷ ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நச்சுத்தன்மையுடைய வீட்டுப் பாவனைப் பொருட்களால் அநாவசியமாக ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்போம் எனும் தொனிப்பொருளில் விசேட பத்திரிகையாளர் மாநாடு ஒன்று இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் அலரி விதை கலாசாரம் தீவிரமாக பரவி வருவதாக,யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர்.க.நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.தேசிய விஷ ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நச்சுத்தன்மையுடைய வீட்டுப் பாவனைப் பொருட்களால் அநாவசியமாக ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்போம் எனும் தொனிப்பொருளில் விசேட பத்திரிகையாளர் மாநாடு ஒன்று இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

   

யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர்.க.நந்தகுமாரன் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. பொது வைத்திய நிபுணர்களான ந.சுகந்தன், எஸ்.சிவன் சுதன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு, வீட்டுப்பாவனைப் பொருட்களால் ஏற்படும் நஞ்சூட்டல்கள் தொடர்பாகவும் அவற்றை தவிர்ப்பது தொடர்பாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் இங்கு கருத்து தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலையின் கடந்த அரையாண்டு அறிக்கையின்படி, நஞ்சூட்டலினால் 328 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர், அவர்களில் 8பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தவறுதலான மருந்துப் பாவனைகளால் 73 பேர், அலரி விதை அருந்தி 106 பேர், மண்ணெண்ணை இருந்தி 50 பேர் இதில் சிறுவர்களே அதிகம் மற்றும் மின்கலம் உள்ளிட்ட ஏனை நஞ்சுப் பதார்த்தங்கள், கிருமிநாசினிகள் கோன்றவற்றை அருந்தி சுமார் 50பேர் அடங்குகின்றனர்.

இவற்றில் தவறுதலாக இடம்பெற்றவையும் அடங்குகின்றன, தற்கொலை முயற்சிளிலும் கூடுதலானவை அலரி விதையை உண்டதால் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற தற்கொலை முயற்சிகளால் வைத்தியசாலையின் செலவீனமும் இயங்குதலும் வீணாகின்றது. குறிப்பாக இவ்வாறு தவறுதலாகவோ அல்லது தற்கொலை முயற்சியிலோ ஒருவர் வைத்தியசலைக்கு வரும்போது அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டும். இதனால் உண்மையான தேவையுடையவர்களும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான சிகிச்சைகள் செய்வதில் காலதாமதம் ஏற்படுகின்றது.

இவ்வாறான தவறுதலான மற்றும் தற்கொலை முயற்சிகளை தவிர்த்தால் நிச்சயம் எமது சேவையை நாம் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முடியும் என்றார்.

இதில் பொது வைத்திய நிபுணர் என்.சுகந்தன் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் 2013ம் ஆண்டு தரவுகளின்படி வீட்டில் விஷம் உட்கொண்ட 32 ஆயிரத்து 363 பேர் சிகிச்சைக்கென வைத்திய சாலைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 173 பேர் மரணடைந்துள்ளனர். இவர்களும் 1 தொடக்கம் 14 வயது வரையிலான சிறுவர்களே அதிகம் உள்ளார். தற்கொலை தவறுதலானவை மற்றும் எம்மை அறியாமல் நடந்தவை ஆகியன இதில் அடங்குகின்றன.

போதிய விழிப்புணர்வின்மை விஞ்ஞானபூர்வ தகவல்கள் போதாமை ஆகியனவையே இவை ஏற்பட காரணமாகியுள்ளது. வீடுகளில் குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் நாம் விழிப்புனர்வை ஏற்படுத்துவது அவசியம். குறிப்பாக வீட்டுப்பாவனைப் பொருட்களில் நஞ்சுத்தன்மையுடவையான மண்ணெண்ணை, நுளம்பு சுருள், சலவைத்தூள், மினகலங்கள் ஆகிய ஆபத்தான பொருட்கள் தொடர்பில் நாம் கவனமாக இருத்தல் அவசியமாகிறது. மேலும் இதேபோல் விலங்குகளால் நஞ்சூட்டப்படுதலென்பதும் கடந்த காலங்களை விட யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது.

பாம்பு தீண்டுதல், குளவி கொட்டுதல் போன்றவையாலும் பெரும்பாலான நஞ்சூட்டல்கள் இடம்பெறுகின்றது.மேலும் சமூகப்பிறழ்வுகள் காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்களிலும் பெரும்பாலானோர் விஷம் உட்கொண்டு தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.இதற்கு சமூக மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே நாம் தீர்வு காணமுடியும் என்றார்.

Jaffna-hospital-doctors-170915-seithy%20

Jaffna-hospital-doctors-170915-seithy%20

http://www.seithy.com/breifNews.php?newsID=140714&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.