Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்டாவது உலகக் கிண்ண றக்பி போட்டிகள் இன்று ஆரம்பம்

Featured Replies

எட்டாவது உலகக் கிண்ண றக்பி போட்டிகள் இன்று ஆரம்பம்
 

121691439075368283.jpgசர்­வ­தேச றக்பி சபை­யினால் நான்கு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை நடத்­தப்­படும் உலகக் கிண்ண றக்பி போட்­டி­களின் எட்­டா­வது அத்­தி­யாயம் இங்­கி­லாந்தில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

20 நாடுகள் நான்கு குழுக்­களில் மோதும் உலகக் கிண்ண றக்பி போட்­டிகள் இங்­கி­லாந்­துக்கும் ஃபிஜிக்கும் இடை­யி­லான போட்­டி­யுடன் ஆரம்­ப­மா­கின்­றது. லண்டன், ட்விக்­கென்ஹாம் விளை­யாட்­ட­ரங்கில் இங்­கி­லாந்து நேரப்­படி இன்று இரவு 8.00 மணிக்கு இப் போட்டி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

இறுதிப் போட்டி இதே அரங்கில் ஒக்­டோபர் 31ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

 

உலகக் கிண்ண றக்பி போட்­டிகள் முதன் முதலில் அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் நியூ­ஸி­லாந்­திலும் 1987இல் கூட்­டாக நடத்­தப்­பட்­டது.

 

உலகக் கிண்ண றக்பி போட்­டி­களில் சம்­பி­ய­னாகும் அணிக்கு வில்­லியம் வெப் எல்லிஸ் கிண்ணம் வழங்­கப்­படும்.

 

கால்­பந்­தாட்டப் போட்டி ஒன்­றின்­போது பந்தை கையில் பற்­றிக்­கொண்டு ஓடி எதி­ர­ணியின் கோலினுள் பந்தை வைத்த வில்­லியம் வெப் எல்லிஸ் என்­ப­வர்தான் றக்­பி­கால்­பந்­தாட்­டத்தின் ஆரம்­ப­கர்த்தா என பழங்­கதை ஒன்று கூறு­கின்­றது.

 

12169Rugby_World_Cup_Trophy.jpgஅவ­ரது பெய­ரி­லேயே உலகக் கிண்ண றக்பி போட்­டிகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

 

உலகக் கிண்ண றக்பி போட்­டி­களில் நான்கு நாடுகள் மாத்­தி­ரமே இது­வரை சம்­பி­ய­னா­கி­யுள்­ளன.

 

அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து, தென் ஆபி­ரிக்கா ஆகிய நாடுகள் தலா இரண்டு தட­வை­களும் இங்­கி­லாந்து ஒரு தட­வையும் வில்­லியம்ஸ் வெப் எல்லிஸ் கிண்­ணத்தை சுவீ­க­ரித்­துள்­ளன.

 

1987இலும் 1999இலும் நடை­பெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்­டி­களைத் தவிர்ந்த மற்­றைய ஐந்து உலகக் கிண்ண இறுதிப் போட்­டி­களும் மிகவும் இறுக்­க­மான முடி­வு­களை தந்­துள்­ளதன் மூலம் எத்­த­கைய போட்­டித்­தன்மை உலக றக்­பியில் நில­வுகின்­றது என்­பது புலப்­ப­டு­கின்­றது.

 

முதல் மூன்று உலகக் கிண்ண றக்பி போட்­டி­களில் தலா 16 அணிகள் பங்­கு­பற்­றின. 1999முதல் பங்­கு­பற்றும் நாடு­களின் எண்­ணிக்கை இரு­ப்ப­தாக உயர்ந்­தது.

 

முத­லா­வது உலகக் கிண்ண றக்பி போட்­டி­களில் சர்­வ­தேச றக்­பி­ கால்­பந்­தாட்ட சபையில் அங்கம் வகித்த ஏழு நாடு­களும் சபை­யினால் வர­வேற்­கப்­பட்ட ஒன்­பது நாடுகளும் நான்கு குழுக்­களில் பங்­கு­பற்­றின.

 

எனினும் 1991 முதல் எட்டு நாடுகள் நேர­டி­யா­கவும் மற்­றைய எட்டு இடங்கள் 24 நாடு­க­ளுக்கு இடை­யி­லான தகு­திகாண் சுற்றின் மூல­மா­கவும் தெரி­வாகி பங்­கு­பற்­றின.

 

12169rugby-world-cup-2015-live-free-broa

 

போட்­டி­களின் தற்­போ­தைய நடை­மு­றையின் பிர­காரம் இதற்கு முன்­னைய உலகக் கிண்ண றக்பி போட்­டி­களில் ஒவ்­வொரு குழு­விலும் மூன்றாம் இடம்­வரை பெறும் 12 அணிகள் அடுத்த உலகக் கிண்ணப் போட்­டி­களில் விளை­யாட தகு­தி­பெறும்.

 

மற்­றைய எட்டு நாடுகள் பிராந்­திய ரீதி­யான தகு­திகாண் சுற்­று­களின் மூலம் தெரிவு செய்­யப்­படும்.

 

தகு­திகாண் சுற்றின் மூலம் ஐரோப்பா, அமெ­ரிக்க நாடுகள் ஆகிய பிராந்­தி­யங்­க­ளுக்கு தலா இரண்டு இடங்­களும் ஆபி­ரிக்கா,  ஆசியா, கடல்சூழ் நாடுகள் ஆகி­ய­வற்­றுக்கு தலா ஒரு இடமும் கிடைக்கும். கடைசி இடம் தீர்­மானம் மிக்க (ப்ளே ஓவ்) போட்­டியில் வெற்­றி­பெறும் நாட்­டிற்கு வழங்­கப்­படும்.

 

12169_table.jpg

 

உலகக் கிண்ண றக்பி போட்­டி­க­ளுக்கு முன்னர் றக்­பிக்கு என உலக நாடு­க­ளுக்கு இடை­யி­லான றக்பி போட்­டிகள் நடை­பெற்­ற­தில்லை.

 

மாறாக 1883முதல் இங்­கி­லாந்து, அயர்­லாந்து, ஸ்கொட்­லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் பங்­கு­பற்­றிய ஹோம் நேஷன்ஸ் (உள்­ளக நாடுகள்) கிண்ண றக்பி போட்­டிகள் நடை­பெற்­று­வந்­தன. 

 

இக் குழுவில் பிரான்ஸ் 1910இல் இணைந்த பின்னர் ஐந்து நாடுகள் கிண்ண றக்பி என பெயர் ­மாற்றம் பெற்­றது.

 

1931 முதல் 1939 வரை பிரான்ஸ் பங்­கு­பற்­றா­ததால் பழைய பெய­ரி­லேயே போட்டி நடத்­தப்­பட்­டது. 

 

பிரான்ஸ் மீண்டும் இணைந்த பின்னர் ஐந்து நாடுகள் றக்பி கிண்ணப் போட்டி தொடர்ந்­தது.

 

இத்­தாலி 2000ஆம் ஆண்டில் இணைந்­த­வுடன் ஆறு நாடுகள் கிண்ண றக்பி போட்டி என பெயர் மாற்றம் பெற்­றது.

 

இத­னி­டையே றக்பி போட்­டிகள் ஒலிம்பிக் விளை­யாட்­டா­கவும் ஆரம்ப காலத்தில் அங்­கீ­காரம் பெற்­றி­ருந்­தது.

 

பாரிஸ் 1900 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் றக்­பிக்­கான முத­லா­வது தங்கப் பதக்­கத்தை பிரான்ஸ் வென்­றெ­டுத்­தது.

 

லண்டன் 1908 விழாவில் ஒஸ்ட்­ர­லே­சியா கூட்டு அணியும் அன்ட்வேர்ப் 1920 மற்றும் பாரிஸ் 1924 ஆகிய ஒலிம்பிக் விளை­யாட்டு விழாக்­களில் அமெ­ரிக்­காவும் தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்­தன. அதன் பின்னர் ஒலிம்­பிக்­கி­லி­ருந்து சர்­வ­தேச றக்பி சபை வில­கிக்­கொண்­டது.

 

1950களி­லி­ருந்து உலகக் கிண்ண றக்பி போட்­டிகள் நடத்­தப்­பட வேண்டும் என்­ப­தற்­கான யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்ட போதிலும் சர்­வ­தேச றக்­பி­ கால்­பந்­தாட்ட சபையில் அங்கம் வகித்த பல நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரி­வித்­தன.

 

1983இல் அவுஸ்­தி­ரே­லிய றக்பி ஒன்­றி­யமும் 1984இல் நியூ­ஸி­லாந்து றக்பி ஒன்­றி­யமும் உலகக் கிண்ணப் போட்­டி­களை நடத்­த­வேண்டும் என்ற யோச­னையை தனித்­த­னி­யாக முன்­வைத்­தன.

 

ஒரு வருடம் கழித்து சர்­வ­தேச றக்­பி­ கால்­பந்­தாட்ட சபையில் மீண்டும் முன்­வைக்­கப்­பட்ட யோசனை 10 – 6 வாக்­குகள் என்ற அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்­றது.

 

இதனைத் தொடர்ந்து முத­லா­வது உலகக் கிண்ண றக்பி போட்­டிகள் அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் நியூ­ஸி­லாந்­திலும் கூட்­டாக நடத்­தப்­பட்­டது.

 

அப் போட்­டி­களின் இறுதி ஆட்­டத்தில் பிரான்ஸை 29 – 9 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்ட அவுஸ்­தி­ரே­லியா முத­லா­வது உலக றக்பி சம்­பியன் என்ற பெரு­மையைப் பெற்­றுக்­கொண்­டது.

 

இவ் வருடம் 20 அணிகள் நான்கு குழுக்­களில் போட்­டி­யி­டு­கின்­றன. இவற்றில் அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து, இங்­கி­லாந்து, தென் ஆபி­ரிக்கா ஆகிய நாடு­களில் ஒன்று உலக சம்­பி­ய­னா­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

குழு ஏ: முன்னாள் சம்பியன் அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன்  இங்கிலாந்து, வேல்ஸ், ஃபிஜி, உருகுவே.

 

குழு பி:  முன்னாள் சம்பியன் தென் ஆபிரிக்கா, சமோவா, ஜப்பான், ஸ்கொட்லாந்து, ஐக்கிய அமெரிக்கா.


குழு சி:  நடப்பு சம்பியன் நியூஸிலாந்து, ஆர்ஜன்டீனா, டொங்கா, ஜோர்ஜியா, நமீபியா.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12169#sthash.24eRIrNl.dpuf

12019871_918845824830779_504836369786949

  • தொடங்கியவர்
தென்னாபிரிக்காவைத் தோற்கடித்தது ஜப்பான்
 

article_1442748743-LEAD-1.jpgறக்பி உலகக் கிண்ணப் போட்டிகளின் வரலாற்றிலேயே ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்றாக, இரண்டு தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற தென்னாபிரிக்க அணியை, ஜப்பான் அணி தோற்கடித்துள்ளது.

குழு 'பி"க்கான போட்டியாக இப்போட்டி, சனிக்கிழமை பின்னிரவு இடம்பெற்றிருந்தது.
13ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள ஜப்பான் அணியை, இம்முறை கிண்ணம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாகக் கருதப்படும் தென்னாபிரிக்க அணி சந்தித்த போது, தென்னாபிரிக்க அணிக்கு இலகுவான வெற்றி கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆரம்பம் முதலே இறுக்கமாக இடம்பெற்ற போட்டியில், பாதி நேர முடிவின் போது தென்னாபிரிக்க அணி 12-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. எனினும், இரண்டாவது பாதியில் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்திய ஜப்பான், ஆக்ரோஷமான ஆட்டமுறையைக் கையாண்டது. இறுதியில் அவ்வணி, 34-32 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாபிரிக்காவை வெற்றிகொண்டது.

ஜப்பானின் அயுமு கொரொமரு, 24 புள்ளிகளைப் பெற்றார். இப்போட்டியின் சிறந்த வீரராக, ஜப்பானின் புமியாகி தனாகா தெரிவானார்.

இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், டொங்காவை எதிர்கொண்ட ஜோர்ஜியா, 17-10 என்ற புள்ளிகள் கணக்கிலும் கனடாவை எதிர்கொண்ட அயர்லாந்து, 50-7 என்ற புள்ளிகள் கணக்கிலும் இத்தாலியை எதிர்கொண்ட பிரான்ஸ், 32-10 என்ற புள்ளிகள் கணக்கிலும் வெற்றிபெற்றன

 

- See more at: http://www.tamilmirror.lk/154604#sthash.3X6VcnBi.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
சிரமத்துக்கு மத்தியில் ஆர்ஜன்டீனாவை வென்றது நியூஸிலாந்து
2015-09-22 10:05:02

இங்­கி­லாந்தில் நடை­பெற்­று­வரும் எட்­டா­வது றக்பி உலகக் கிண்ணப் போட்­டி­களில் தென் ஆபி­ரிக்­காவைப் போன்று நடப்பு சம்­பியன் நியூ­ஸி­லாந்தும் எதிர்­பா­ராத தோல்­வியைத் தழுவப் போகின்­றதோ என்ற ஒரு நிலை, வெம்ப்ளி விளை­யாட்­ட­ரங்கில் ஞாயி­றன்று நடை­பெற்ற ஆர்­ஜன்­டீ­னா­வுக்கு எதி­ரான குழு சி லீக் போட்­டியில் காணப்­பட்­டது.

 

12235CRICKET-BAT-AND-BALL.jpg

 

போட்­டியின் முத­லா­வது பகு­தியில் மத்­தி­யஸ்­தரின் மஞ் சள் அட்­டைக்கு இலக்­காகி 2 வீரர்கள் வெளி­யேற்­றப்­பட்­ட­துடன் ஒரு புள்ளி வித்­தி­யா­சத்தில் நியூ­ஸி­லாந்து பின்­னி­லையில் இருந்­தது. 

 

ஆனால், இடை­வே­ளையின் பின்னர் தவ­று­களைத் திருத்­திக்­கொண்டு வீறு­கொண்­டெ­ழுந்து விளை­யா­டிய நியூ­ஸி­ லாந்து 26 (2 ட்ரைகள், 2 கொன்­வேர்­ஷன்கள், 4 பெனல்­டிகள்) க்கு 16 (ஒரு ட்ரை, ஒரு கொன்­வேர்ஷன், 3 பெனல்­டிகள்) என்ற புள்­ளிகள் கணக்கில் வெற்­றி­பெற்­றது.

 

இந்தப் போட்­டியில் மீண்­டெ­ழுந்து நியூ­ஸி­லாந்து வெற்­றி­பெற்­ற­போ­திலும் இவ் வருட றக்பி உலகக் கிண்ணப் போட்­டிகள் கடும்­போட்டித் தன்­மையை கொண்­டி­ருக்கும் என்­பதை இந்தப் போட்டி முடிவு எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

 

அணித் தலைவர் ரிச்சி மெக்கவ், மத்­திய கள வீரர் கொன்ரட் ஸ்மித் ஆகிய இரு­வரும் விதி­களை மீறும் வகையில் முரட்­டுத்­த­ன­மாக விளை­யா­டி­யதன் கார­ண­மாக ஆட்­டத்தின் முத­லா­வது பகு­தியில் மத்­தி­யஸ்­த­ரினால் வெளி­யேற்­றப்­பட்­டி­ருந்­தனர்.

 

இது நியூ­ஸி­லாந்து அணிக்கு பேரி­டி­யாக அமைந்­தது.
சர்­வ­தேச றக்பி வர­லாற்றில் 21 தட­ வைகள் நியூ­ஸி­லாந்தை எதிர்த்­தாடி­ யுள்ள ஆர்­ஜன்­டீனா ஒரு தட­வை­யே னும் வெற்­றி­பெற்­ற­தில்லை.

 

ஆனால் இந்தப் போட்­டியில் 56ஆவது நிமி­டம்­வரை 3 புள்­ளி­களால் முன்­னி­லையில் இருந்த ஆர்­ஜன்­டீனா சரித்­திரம் படைக்­கலாம் என எண்ண வைத்­தது.

 

எனினும் நியூ­ஸி­லாந்து தனது மாற்று வீரர்கள் மூவரை களம் இறக்­கி­யதும் அதன் ஆட்­டத்­தி­றனும் அதி­க­ரிக்கத் தொடங்­கி­ய­துடன் வெற்­றி­யையும் தன­தாக்­கிக்­கொண்­டது.

 

நியூ­ஸி­லாந்து சார்­பாக ஆரோன் ஸ்மித் (ட்ரை 57 நி.), சாம் கேன் (ட்ரை 67 நி.), டெனியல் கார்ட்டர் (4 பெனல்­டிகன் 5 நி., 11 நி., 19 நி., 41 நி., 2 கொன்­வேர்­ஷன்கள் 58 நி., 67 நி.) ஆகியோர் புள்­ளி­களைப் பெற்­றனர்.

 

ஆர்­ஜன்­டீனா சார்­பாக பெட்டி பெக­டி­ஸபால் (ட்ரை 21 நி.), நிக்­கலஸ் சன்ச்செஸ் (3 பெனல்­டிகள் 30 நி., 38 நி., 43 நி., ஒரு கொன்­வேர்ஷன் 23 நி.), 

 

இவ் வருடம் அதிக புள்­ளிகள் 

 

இவ் வருடம் நடை­பெற்­று­வரும் றக்பி உலகக் கிண்ணப் போட்­டி­களில் அதிகூடிய புள்­ளி­களை போட்டி ஒன்றில் பதிவு செய்த பெருமை வேல்ஸ் அணிக்கு இப்­போ­தைக்கு சொந்­த­மா­கி­யுள்­ளது.

 

றக்பி உலகக் கிண்ணப் போட்­டி­களின் மூன்றாம் நாளான ஞாயி­றன்று கார்டிவ், மில்­லே­னியம் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற உரு­கு­வேக்கு எதி­ரான குழு ஏ போட்­டியில் 54–9 என்ற புள்­ளிகள் கணக்கில் வேல்ஸ் வெற்­றி­பெற்­றது.

 

அதற்கு முந்­திய தினத்­தன்று கன­டா­வுக்கு எதி­ரான போட்­டியில் அயர்­லாந்து 50 புள்ளிகளைப் பெற்றிருந்தது.

 

குழு டிக்கான போட்டியில் இத்தாலியை 32–10 என்ற புள்ளிகள் கணக்கில் பிரான்ஸும் ஐக்கிய அமெரிக்காவுக்குஎ திரான போட்டியில் 25–16 என்ற புள்ளிகள் கணக்கில்  சமோ வாவும் வெற்றிபெற்றன.   

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12235#sthash.RcfCjjOY.dpuf
  • தொடங்கியவர்
தென் ஆபிரிக்காவை உலுக்கிய ஜப்பான் இன்று ஸ்கொட்லாந்துடன் மோதுகிறது
2015-09-23 10:10:17

உலகக் கிண்ண றக்பி லீக் தொடரில் தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான போட்­டியில் மிகப் பெரிய தலைகீழ் வெற்­றியை ஜப்பான் பதிவு செய்­ததை அடுத்து ஸ்கொட்­லாந்து கடும் போட்டி ஒன்றை அவ்­வ­ணி­யிடம் இன்று எதிர்­கொள்­ள­வுள்­ளது.

 

122612015-09-19T181811Z_85688291_MT1ACI1

 

குழு பியில் இடம்­பெறும் ஸ்கொட்­லாந்து, இவ் வருட உலகக் கிண்ண றக்பி போட்­டி­களில் முதல் தட­வை­யாக இன்று களம் இறங்­க­வுள்­ளது. 

 

இந்த இரண்டு அணி­க­ளுக்கும் இடை­யி­லான போட்டி க்ளொஸ்­டர்­ஷயர், கிங்ஸ்ஹோம் விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

 

ஜப்­பா­னு­ட­னான இன்­றைய போட்டி தங்­க­ளுக்கு கடும் சவால் மிக்க போட்­டி­யாக அமையும் என ஸ்கொட்­லாந்து றக்பி அணியின் தலைமைப் பயிற்­றுநர் வேர்ன் கொட்டர் தெரி­வித்­துள்ளார்.

 

குழு பியில் முதன்மை அணி­யாகத் திக­ழக்­கூ­டி­ய­தென அனு­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த தென் ஆபி­ரிக்­காவை ப்றைட்­ட னில் கடந்த சனிக்­கி­ழமை முற்­றிலும் எதிர்­பா­ரா­த­வி­த­மாக 34–32 என ஜப்பான் வெற்­றி­கொண்­டி­ருந்­தது.

 

‘‘அந்தப் போட்டி முடி­வா­னது எங்­களை ஆழ சிந்­திக்­க­வைத்­துள்­ளது. ஜப்­பா­னி­யர்கள் வெறு­மனே விளை­யா­ட­வில்லை.

 

மாறாக வெற்­றி­ பெற்­றார்கள். பயிற்­று­நர் கள் என்ற வகையில் அப் போட்டி முடி­வா­னது எங்­களை நிம்­மதி­யாய் உறங்க விட வில்லை.

 

ஸ்கொட்­லாந்தும் ஜப்­பானும் இதற்கு முன்னர் சந்­தித்­துக்­கொண்ட நான்கு போட்­டி­க­ளிலும் ஸகொட்­லாந்து வெற்­றி­பெற்­றுள்­ளது.

 

மறேஃ­பீல்டில் அண்­மையில் நடை­பெற்ற போட்­டி­யிலும் ஸ்கொட்­லாந்து 42 க்கு 17 என வெற்­றி­பெற்­றி­ருந்­தது.

 

ஆனால் தென் ஆபி­ரிக்­காவை வீழ்த்­தி­யதன் மூலம் உலக றக்பி தரப்­ப­டுத்­தலில் முன்­னேறி 11 இடத்தை அடைந்­துள்ள ஜப்பான், தற்­போது 12ஆம் இடத்­தி­லுள்ள ஸ்கொட்­லாந்தை சிந்­திக்­க­வைத்­துள்­ளது.

 

122614148973.jpg

 

உலகக் கிண்ண றக்பி வர­லாற்றில் மிகப் பெரிய தலைகீழ் வெற்­றியைப் பதிவு செய்து ஆசி­யா­வுக்கு பெருமை தேடித்­தந்த ஜப்பான் இன்­றைய போட்­டி­யிலும் திருப்­பத்தை ஏற்­டுத்­தி­னாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

 

இதே­வேளை, கார்டிவ், மில்­லே­னியம் விளை­யாட்­ட­ரங்கில் முன்னாள் சம்­பியன் அவுஸ்­தி­ரே­லி­யாவை குழு ஏ போட்­டியில் ஃபிஜி சந்­திக்­க­வுள்­ளது.

 

இந்த இரண்டு நாடு­களும் இதுவை சந்­தித்­துக்­கொண்ட 19 போட்­டி­களில் 16–2 என அவுஸ்­தி­ரே­லியா முன்­னி­லையில் இருக்­கின்­றது.

 

ஒரு போட்டி வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளது. எனவே இந்த முடி­வு­களின் பிர­காரம் இன்­றைய போட்­டி­யிலும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதா கக் கருதப்படுகின்றது.

 

லண்டன், குவீன் எலிஸபெத் ஒலிம்பிக் பார்க் விளையாட் டரங்கில் பிரான்ஸுக்கும் ருமேனியாவுக்கும் இடையிலான குழு டி போட்டியும் இன்று நடைபெறவுள்ளது. 

(என்.வீ.ஏ.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12261#sthash.DWJxdhdg.dpuf
  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா, ஸ்கொட்லாந்து, பிரான்ஸ் வெற்றி
 
 

article_1443108741-LEAD.jpgஇங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில், 3ஆவது நாள் போட்டிகளில் அவுஸ்திரேலியா, ஸ்கொட்லாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.

அவுஸ்திரேலிய அணிக்கும் பிஜி அணிக்குமிடையிலான போட்டியில், அவுஸ்திரேலிய அணி 28-13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. பாதிநேரத்தின் போது 18-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த அவுஸ்திரேலியா, இரண்டாவது பாதியில் 10 புள்ளிகளைப் பெற்று, 10 புள்ளிகளை விட்டுக் கொடுத்திருந்தது. இறுதியில், 28-13 என்ற புள்ளிகள் கணக்கில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. இப்போட்டியின் நாயகனாக, டேவிட் பொகொக் தெரிவானார்.

தென்னாபிரிக்கா அணியை வென்று அதிர்ச்சியளித்த ஜப்பான் அணி, ஸ்கொட்லாந்துடன் இடம்பெற்ற போட்டியில் படுதோல்வியைத் தழுவிக் கொண்டது. போட்டியின் முதற்பாதியில், 12-7 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்கொட்லாந்து முன்னிலை வகித்த போதிலும், அவ்வணிக்கான நிச்சயமான வாய்ப்பேதும் காணப்பட்டிருக்கவில்லை. ஆனால், இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஸ்கொட்லாந்து, 45-10 என்ற புள்ளிகள் கணக்கில் இறுதியில் வெற்றிபெற்றுக் கொண்டது.

பிரான்ஸ் அணிக்கும் றோமானிய அணிக்குமிடையிலான போட்டியில் பிரான்ஸ் அணி, 38-11 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. ஆரம்பத்தில் இரு அணிகளும் போராடிய போதிலும், முதலாவது பாதியை 17-6 என்ற புள்ளிகள் கணக்கில் நிறைவுசெய்த பிரான்ஸ், இரண்டாவது பாதியில் மேலும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி, 38-11 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

- See more at: http://www.tamilmirror.lk/155009#sthash.9sj9dt29.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஓல் பிளக்ஸ் இன்று நமீபியாவை 58 - 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது.

ஓல் பிளக்ஸ் 54 (9 tries, 10 conversions, 1 penalty goal) 

நமீபியா 14  (1 try, 3 penalty goals) 

 

  • தொடங்கியவர்
தவறான தீர்மானத்தால் வேல்ஸிடம் தோற்றது இங்கிலாந்து: உலகக் கிண்ண றக்பி வரலாற்றில் மற்றொரு அதிர்ச்சி பெறுபேறு
2015-09-28 10:39:35

லண்டன், ட்விக்­கன்ஹாம் விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற மிகவும் பர­ப­ரப்­பான குழு ஏயிற்­கான உலகக் கிண்ண றக்பி போட்­டியில் இங்­கி­லாந்தை 28 (ஒரு ட்ரை, ஒரு கொன்­வேர்ஷன், 7 பெனல்­டிகள்) க்கு 25 (ஒரு ட்ரை, ஒரு கொன்­வேர்ஷன், 5 பெனல்­டிகள், ஒரு ட்ரொப் கோல்) என்ற புள்­ளிகள் கணக்கில் வேல்ஸ் வெற்­றி­பெற்­றது.

 

12347_new.jpg

 

இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான 134 வருட றக்பி வர­லாற்றில் வேல்ஸ் ஈட்­டிய மிகச் சிறந்த வெற்றி இது­வாகும்.

 

இப்போட்­டியை வெற்றி தோல்­வி­யின்றி முடித்­துக்­கொள்­வ­தற்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பை தவ­ற­விட்­டமை இங்­கி­லாந்தின் இத்தோல்­விக்குக் கார­ண­மாக அமைந்­தது.

 

போட்டி முடி­வ­டைய இரண்டு நிமி­டங்கள் இருக்­கையில் வேல்ஸ் அணியின் கோல் எல்­லைக்கு 5 மீற்றருக்கு அரு­கா­மையில் வைத்து இங்­கி­லாந்து அணிக்கு ஒரு பெனல்டி கிடைத்­தது.

 

ஏற்­க­னவே 5 பெனல்­டி­க­ளையும் ஒரு ட்ரொப் கோலையும் போட்­டி­ருந்த இங்­கி­லாந்து வீரர் ஃபரல், தனது அணித் தலைவர் கிறிஸ் ரொப்­ஷோ­வுடன் ஆலோ­சனை நடத்­தி­ய­போது பெனல்டி உதையை எடுப்­ப­தற்குப் பதி­லாக பந்தை வேல்ஸ் அணியின் கோல் எல்­லையில் லைன் அவுட் ஒன்றை எடுத்து அதன் மூலம் ட்ரை வைக்க முடியும் என எண்ணி பெனல்டி வாய்ப்பை தாரை வார்த்­தனர். 

 

12346Scott-Williams-is-taken-from-the-pi

 

மேலும், லைன் அவட்டின் போது பந்து வேல்ஸ் வீரரின் கைகளில் சிக்­கி­யதால் இங்­கி­லாந்தின் வெற்றிக் கனவு கலைந்­தது.

 

அத்­துடன் உலகக் கிண்ண வர­லாற்றில் வர­வேற்பு நாடென்ற வகையில் முதல் சுற்­றுடன் வெளி­யேறும் ஆபத்­தையும் இங்­கி­லாந்து எதிர்­கொண்­டுள்­ளது.

 

போட்­டியின் 44ஆவது நிமி­டத்தில் 19–9 என்ற புள்­ளிகள் கணக்­கிலும் 70ஆவது நிமி­டத்தில் 25–18 என்ற புள்­ளிகள் கணக்­கிலும் முன்­னி­லையில் இருந்த இங்­கி­லாந்து இறு­தியில் எதிர்­பா­ராத தோல்­வியைத் தழு­வி­யது.

 

இப் போட்டியில் வேல்ஸ் அணியைச் சேர்ந்த லியாம் வில்லியம்ஸ், ஸ்கொட் வில்லியம்ஸ் ஹலாம் அமொஸ் ஆகியோரும் உபாதைக்குள்ளாகி களம் விட்டு வெளியேறினர்.

 

வேல்ஸ் சார்­பாக டி. ஜி. டேவிஸ் (ட்ரை 71 நி.), டி. பிகார் (7 பெனல்ட்­டிகள் 3 நி., 18நி., 40 நி., 48 நி., 54 நி., 59 நி., 75 நி., கோன்­வேர்ஷன் 72 நி.) ஆகி­யோரும் இங்­கி­லாந்து சார்­பாக ஜே. ஜே. மே (ட்ரை 27 நி.), ஓ ஓ. ஃபரல் (5 பெனல்­டிகள் 12 நி., 24 நி., 44 நி., 52 நி.,  69 நி., ட்ரொப் கோல் 18 நி., கொன்­வேர்ஷன் 29 நி.)

 

ஏனைய போட்டி முடிவுகள்


ஆர்ஜன்டீனா 54 எதிர் ஜோர்ஜியா 9 (சி)
இத்தாலி 23 எதிர் கனடா 18 (டி)
தென் ஆபிரிக்கா 46 எதிர் சமோவா 6 (பி)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12347#sthash.w8a6zHYT.dpuf
  • தொடங்கியவர்
உலக கிண்ண மைதானத்தில் திருமண நிச்சயதார்த்தம்
2015-09-29 11:11:48

உலகக் கிண்ண றக்பி தொடரில் அயர்­லாந்­துக்கு எதி­ரான போட்­டியில் ருமே­னியா தோல்வி அடைந்த போதிலும் அவ்­வ­ணியின் மாற்று வீரர் ஃப்ளொரின் சுரு­கு­ரு­வுக்கு பொன்­னான தரு­ண­மாக அமைந்­தது. 

 

1237848.jpg

 

லண்டன் வெம்ப்ளி அரங்கில் நடை­பெற்ற இப்­போட்­டி யின் முடிவில் தனது சக வீரர்கள் முன்­னி­லையில் தனது காதலி அலெக்­ஸாண்ட்­ரா­வுக்கு மோதிரம் ஒன்றைப் பரி­சாகக் கொடுத்த ஃப்ளொரின், திரு­ம­ணத்­திற்­கான விருப்­பத்­தையும் முன்­வைத்தார். 

 

1237850.jpg

 

நல்ல வேளையாக, அலெக்­ஸாண்ட்ரா தனது இணக்­கத்தைத் தெரி­விக்க, ஃப்ளொரின் அவரை ஆரத்­த­ழுவி மகிழ்ச்சியை வெளியிட்டார்.

 

1237849.jpg

- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=12378#sthash.1RDBe3Ky.dpuf
  • தொடங்கியவர்
பரபரப்பான உலகக் கிண்ண றக்பி போட்டியில் நமீபியாவை வெற்றிகொண்டது டொங்கா
2015-10-01 10:19:37

எக்ஸ்டர், சண்டி பார்க் விளை­யாட்­ட­ரங்கில் மிகவும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய டொங்­கா­வுக்கும் நமீ­பி­யா­வுக்கும் இடை­யி­லான குழு சி உலகக் கிண்ண றக்பி போட்­டியில் கடும் சவா­லுக்கு மத்­தியில் டொங்கா 35 – 21 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்­றது.

 

12426jack-ram.jpg

 

போட்­டியின் இடை­வே­ளையின் போது 22 – 7 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் டொங்கா முன்­னி­லையில் இருந்­ததால் இப் போட்­டியில் பெரிய வெற்­றியை அந் நாடு பதிவு செய்யும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

 

ஆனால் இடை­வே­ளையின் பின்னர் வீராப்­புடன் விளை­யா­டிய நமீ­பியா எதி­ர­ணிக்கு பெரும் சவா­லாக விளங்­கி­யது.

 

இரண்­டா­வது பகு­தியில் டொங்கா 13 புள்­ளி­க­ளையும் நமீ­பியா 14 புள்­ளி­க­ளையும் பெற்­றன.

 

இன்று இரண்டு போட்­டிகள்
இன்­றைய தினம் இரண்டு உலகக் கிண்ண றக்பி போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

 

குழு ஏ' யில் இடம்­பெறும் வேல்ஸ் அணிக்கும் ஃபிஜி அணிக்கும் இடை­யி­லான போட்டி  கார்டிவ், மில்­லே­னியம் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெ­ற­வுள்­ளது.

 

குழு டி' யிற்­கான பிரான்­ஸுக்கும் கனடாவுக்கும் இடையிலான போட்டி மில்டன் கீன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12426#sthash.DUcNvZEY.dpuf
  • தொடங்கியவர்
ரக்பி உலகக்கிண்ணம்
 
29-09-2015 08:30 PM
Comments - 0       Views - 4

article_1443711685-vimal.jpgரக்பி உலகக்கிண்ண தொடர், இங்கிலாந்தில் அண்மையில் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. கடந்த 18 ஆம் திகதி ஆரம்பித்த இந்த தொடர் ஒக்டோபர் மாதம் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 20 நாடுகள் பங்குபற்றும் இந்த தொடரில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஐந்து அணிகள் ஒரு குழுவில் இடம்பெறுகின்றன. நான்கு குழுக்களிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும். அதன் பின்னர் நொக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும். அரை இறுதிப் போட்டிகள், மூன்றாமிட இறுதிப் போட்டி, இறுதிப் போட்டி என இந்த தொடர் நடைபெறவுள்ளது. காற்பந்தாட்டம் போன்று மிகவும் விறு விறுப்பான, வேகமான போட்டியான ரக்பி உலகில் அதிகம் பேர் பார்க்கும் விளையாட்டுகளில் ஒன்றாக திகழ்கின்றது. 

1987ஆம் ஆண்டு முதலாவது உலகக்கிண்ண தொடர் நடைபெற்றது. 16 அணிகள் பங்குபற்றிய தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இந்த தொடரில் நியூசிலாந்து அணி'29 இற்கு 9 என்ற அடிப்படையில் பிரான்ஸ் அணியை வெற்றி பெற்றது. மூன்றாமிடத்தை ஆஸ்திரேலியாவை 22 இற்கு 21 என்ற அடிப்படையில் வேல்ஸ் வெற்றி கொண்டு தனதாக்கியது. நியூசிலாந்து அணியின் கிரான்ட் பொக்ஸ் 126 புள்ளிகளைப் பெற்று கொடுத்து கூடுதலான புள்ளிகளைப் பெற்றவர் என்ற சாதனையைப் பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது உலகக்கிண்ணம் ஐரோப்பிய கண்டத்தில் ஐந்து நாடுகள் இணைந்து நடத்தின. பிருத்தானிய நாடுகளான   இங்கிலாந்து, வேல்ஸ், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளுடன்  பிரான்ஸும இணைந்து நடாத்தின. 32 அணிகள் பங்குபற்றிய தொடரில் ஆஸ்திரேலியா அணி 12 இற்கு 6 என்ற புள்ளிகளின் படி இங்கிலாந்து அணியை வெற்றி பெற்று சம்பியன் ஆகியது. அப்போதைய நடப்பு சம்பியன் நியூசிலாந்து அணி 13 இற்கு 6 என்ற புள்ளிகளின்  அடிப்படையில் ஸ்கொட்லாந்து அணியை வெற்றி பெற்று மூன்றாமிடத்தை கைப்பற்றியது. அயர்லாந்து அணியின் ரல்ப் கெய்ஸ் 68 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்து கூடுதலான புள்ளிகளைப் பெற்றவராக திகழ்ந்தார்.

மூன்றாவது உலகக்கிண்ணத் தொடர் 1995 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் நடைபெற்றது. சர்வதேச ரக்பி காற்பந்தாட்ட சம்மேளனத்தின் அங்கத்துவ நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளுடன் அழைப்பு நாடுகள் 9 உடன் இணைந்து 16 ஆக நடைபெற்று வந்த தொடர் முதற் தடவையாக தெரிவுகான் போட்டிகளின் அடிப்படையில் 16 நாடுகள் தெரிவு செய்யப்பட்டன. கடந்த இரண்டு தொடர்களிலும் பங்குபற்றி இருக்காத தென் ஆபிரிக்கா அணி தனது சொந்த நாட்டில் சம்பியன் ஆகியது. மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் 15 இற்கு 12 என நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றே சம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பிரான்ஸ் அணி இங்கிலாந்து அணியை 19 இற்கு 9 என்ற புள்ளிகளின் படி வெற்றி பெற்று மூன்றாமிடத்தை தனதாக்கியது. பிரான்சின் தியேறி லகோரிக்ஸ் 112 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டார். 95 ஆம் ஆண்டு தொடரில் இவரே கூடுதலான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது தொடரில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது தடைவையாக சம்பியன் ஆகியது. முதற் தடவையாக 20 நாடுகள் உலகக்கிண்ணத்தொடரில் பங்குபற்றின. வேல்ஸ் உடன் இணைந்து இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து நடாத்தி இருந்தன. 65 நாடுகளில் இருந்து 20 நாடுகள் தெரிவாகி  இறுதித் தொடரில் பங்குபற்றின. ஆஸ்திரேலியா அணி பிரான்ஸ் அணியை 35 இற்கு 12 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் ஆகியது. மூன்றாமிடத்தை நியூசிலாந்தை 22 இற்கு 18 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று தென்ஆபிரிக்கா அணி கைப்பற்றிக் கொண்டது. ஆர்ஜன்டினா நாட்டின் கொன்சலா கியூஸ்டா 102 புள்ளிகளை கூடுதலான புள்ளிகளாகப்பெற்றுக்கொண்டார்.

2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் இங்கிலாந்து அணி மேலதிக நேரத்தில் 20 இற்கு 17 என்ற புள்ளிகளின் படி போட்டிகளை நடாத்திய ஆஸ்திரேலியா அணியை வெற்றி கொண்டு முதற் தடவையாக சம்பியன் ஆனது. நியூசிலாந்து அணி 40 இற்கு 13 என்ற புள்ளிகளின் படி பிரான்ஸ் அணியை வெற்றி கொண்டு மூன்றாமிடத்தை கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் ஜொனி வில்கின்சன் 113 புள்ளிகளை கூடுதலான புள்ளிகளாகப் பெற்றுக் கொண்டார். இந்த தொடரில் 80 நாடுகள் தெரிவுகாண்  போட்டிகளில்  விளையாடி இருந்தன.

2007 ஆண்டு தொடரை பிரான்ஸ் உடன் இணைந்து ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் நடாத்தின. 91 நாடுகள் தெரிவுப் போட்டிகளில் மோதி 20 நாடுகள் இறுதித் தொடரில் விளையாடின. தென் ஆபிரிக்கா 15 இற்கு 6 என்ற புள்ளிகளின் படி இங்கிலாந்து அணியை வெற்றி பெற்று இரண்டாவது தடவையாக சம்பியன் ஆகியது. தென் ஆபிரிக்காவின் பேர்சி மொண்கொமேறி 105 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டார்.   மூன்றாவது இடத்தை முதற் தடவையாக ஆர்ஜன்டினா அணி பெற்றுக்கொண்டது. இந்த தொடரிலேயே ஆரஜன்டினா அணி அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியது. 34 இற்கு 10 என்ற புள்ளிகளினால் பிரான்ஸ் அணியை  ஆர்ஜன்டினா அணி வெற்றி பெற்றது.

2011 ஆண்டு தொடரில் 91 நாடுகள் தெரிவுப் போட்டிகளில் விளையாடின. இவற்றில் இருந்து 20 நாடுகளே இறுதிப் போட்டி தொடரில் விளையாடின. நியூசிலாந்து அணி 14 வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக சம்பியன் ஆகியது. நியூசிலாந்து 8 இற்கு 7 என்ற புள்ளிகளின் அடிப்படையில் பிரான்ஸ் அணியை வெற்றி பெற்றது. மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலியா அணி முதற் தடவையாக மூன்றமிடத்தை பெற்றது. வேல்ஸ் அணியை 21 இற்கு 18 என்ற புள்ளிகளின் படி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்காவின்  மோர்னி ஸ்டைன் 62 புள்ளிகளைப் பெற்று கூடுதலான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டார்.

கடந்த காலங்களில் பலமாக திகழ்ந்த அணிகளே இம்முறையும் பலமாக இருக்கின்றன. 102 நாடுகளில் இருந்து 20 நாடுகள் இம்முறை இறுதி தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. இங்கிலாந்து தனி நாடாக இம்முறை தொடரை நடாத்துகின்றது. உலகக்கிண்ண ரக்பி தொடர் ஆரம்பிக்கின்ற வேளையில் அதிக அக்கறை இலங்கையில் உள்ளவர்கள் மத்தியில் இல்லாது இருந்தது. ஆனாலும் சில போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்போது பலருக்கு இந்த விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உருவாக்கப்பட ரக்பி விளையாட்டின் உலகக்கிண்ண தொடர் பற்றிய கடந்த கால முக்கிய விடயங்களை இங்கே தந்துள்ளோம்.

- See more at: http://www.tamilmirror.lk/155552/ரக-ப-உலகக-க-ண-ணம-#sthash.2mBHIyNe.dpuf
  • தொடங்கியவர்
இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய போட்டி; அவுஸ்திரேலிய அணியில் 14 மாற்றங்கள்
2015-10-02 11:21:53

124502015-live-streaming.jpgஇங்­கி­லாந்­துக்கு எதி­ராக லண்டன் ட்விக்­கன்ஹாம் விளை­யாட்­ட­ரங்கில் நாளை நடை­பெ­ற­வுள்ள மிக முக்­கிய குழு ஏ உலகக் கிண்ண றக்பி போட்­டியை முன்­னிட்டு அவுஸ்­தி­ரே­லிய அணியில் 14 மாற்­றங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

12450_australia-25.jpg


உரு­குவே அணிக்கு எதி­ரா­கவும் வெற்றி ஈட்­டிய அணி­யி­லேயே 14 மாற்­றங்­களை அவுஸ்­தி­ரே­லியா செய்­துள்­ளது. 

 


இங்­கி­லாந்­துக்கு எதி­ரான போட்­டியில் வெற்­றி­பெற்றால் கால் இறுதிச் சுற்றில் விளை­யா­டு­வ­தற்­கான வாய்ப்பை பெற முடியும் என்­பதை கருத்தில் கொண்டு அவுஸ்­தி­ரே­லிய றக்பி அணி முகா­மைத்­துவம் செயற்­பட்­டுள்­ளது. 

 


குழு ஏ யில் இரண்டு வெற்­றி­க­ளுடன் அவுஸ்­தி­ரே­லியா முன்­னி­லையில் இருப்­ப­துடன் வர­வேற்பு நாடான இங்­கி­லாந்து நாளைய போட்­டியில் தோல்வி அடைந்தால் முதல் சுற்­றுடன் வெளி­யேற்­றப்­படும்.

 

இன்­றைய போட்­டிகள்
இன்று நடை­பெ­ற­வுள்ள போட்­டி­களில் குழு சியில் ஜோர்­ஜி­யாவை எவ்­வித சிர­மு­மின்றி நியூ­ஸி­லாந்து வெற்­றி­கொள்ளும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இன்­றைய போட்­டியில் வெற்­றி­பெற்றால் கால் இறுதிச் சுற்றில் விளை­யா­டு­வ­தற்­கான தகு­தியை நியூ­ஸி­லாந்து பெற்­று­விடும். 

 


சமோவா எதிர் ஜப்பான்
தென் ஆபி­ரிக்­காவை தனது ஆரம்பப் போட்­டியில் கதி­க­லங்கச் செய்து வெற்­றி­யீட்டி இரண்­டா­வது போட்­டியில் ஸ்கொட்­லாந்­திடம் தோல்வி அடைந்த ஜப்பான், நாளை நடைபெறவுள்ள சமோவாவுடனான குழு பி போட்டியில் மற்றொரு வெற்றிக்கு குறிவைத்து விளையாடவுள்ளது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12450#sthash.OFbpvldP.dpuf
  • தொடங்கியவர்
ஆஸி.யிடம் தோல்வியுற்ற இங்கிலாந்து வெளியேற்றம், கால் இறுதிச் சுற்றுக்கு இதுவரை நான்கு நாடுகள் தகுதி
2015-10-05 10:36:22

இவ் வரு­டத்­திற்­கான உலகக் கிண்ண றக்பி போட்­டி­களில் வர­வேற்பு நாடான இங்­கி­லாந்து முதல் சுற்­றுடன் வெளி­யேற நேரிட்­டுள்­ளது.

 

1248744.jpg

 

உலகக் கிண்ண றக்பி வர­லாற்றில் வர­வேற்பு நாடொன்று முதல் சுற்­றுடன் வெளி­யே­று­வது இதுவே முதல் தட­வை­யாகும்.

 

லண்டன் ட்விக்­கன்ஹாம் விளை­யாட்­ட­ரங்கில் நேற்று முன்­தினம் இரவு மின்­னொ­ளியில் நடை­பெற்ற குழு ஏ லீக் போட்­டியில் 33–13 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் தோல்வி அடைந்­ததை அடுத்தே இங்­கி­லாந்­துக்கு இந்தக் கதி நேர்ந்­துள்­ளது.

 

ஏற்­க­னவே வேல்ஸ் அணி­யிடம் இங்­கி­லாந்து தோல்வி அடைந்­தி­ருந்­தது. இங்­கி­லாந்து தோல்வி அடைந்­ததன் பல­னாக கால் இறுதிச் சுற்றில் விளை­யாடும் தகு­தியை வேல்ஸ் பெற்­றுக்­கொண்­டது.

 

இக் குழுவில் தலா 3 வெற்­றி­க­ளுடன் 13 புள்­ ளி­களைப் பெற்று முத­லிரு இடங்­களில் இருக் கும் அவுஸ்­தி­ரே­லி­யாவும் வேல்ஸும் எதிர்­வரும் பத்தாம் திகதி தங்­க­ளது கடைசி லீக் போட்­டியில் மோத­வுள்­ளன.

 

இதே­வேளை, கன­டாவை 41–18 என்ற புள்­ளிகள் கணக்கில் வெற்­றி­கொண்ட பிரான்ஸும் ஜோர்­ஜி­யாவை 43–10 என்ற புள்­ளிகள் கணக்கில் வெற்­றி­கொண்ட நியூ­ஸி­லாந்தும். கால் இறு­தி­களில் விளை­யா­டு­வ­தற்கு முதல் இரண்டு அணி­க­ளாக தகு­தி­பெற்­றி­ருந்­தன.

 

இப்­போது அவுஸ்­தி­ரே­லி­யாவும் வேல்ஸும் கால் இறுதிச் சுற்றில் விளை­யாட தகு­தி­பெற்­றுள்­ளன.

 

இது இவ்­வா­றி­ருக்க சமோ­வாவை குழு பிக்­கான லீக் போட்­டியில் நேற்­று­ முன்­தினம் எதிர்­கொண்ட ஜப்பான் 26–5 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்றிகொண்டது.

 

இதே குழுவுக்கான மற் றைய போட்யில் ஸ்கொட்லாந்தை 34–16 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12488#sthash.BlKRawFK.dpuf
  • தொடங்கியவர்
ஐக்­கிய அமெ­ரிக்­காவை பதம் பார்த்­தது தென் ஆபி­ரிக்கா
2015-10-09 11:18:39

லண்டனில் புதன்­கி­ழமை நடை­பெற்ற குழு பயிற்­கான உலகக் கிண்ண றக்பி போட்­டியில் ஐக்­கிய அமெ­ரிக்­காவை 64 – 0 என்ற புள்­ளிகள் கணக்கில் தென் ஆபி­ரிக்கா வெற்­றி­கொண்­டது.

 

12589pic-03.jpg

 

இவ்வருட உலகக் கிண்ண றக்பி போட்­டி­களில் அதிக புள்­ளிகள் வித்­தி­யா­சத்தில் ஈட்­டப்­பட்ட மிகப்­பெ­ரிய வெற்றி இது­வாகும்.

 

எனினும் அதி­கூ­டிய 65 புள்­ளி­களைப் பெற்ற அணி என்ற சாதனை அவுஸ்­தி­ரே­லி­யாவை சாரு­கின்­றது.

 

உரு­கு­வேக்கு எதி­ரான போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா 65 – 3 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் அதா­வது 62 புள்­ளிகள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றி­ருந்­தது.

 

இடை­வே­ளையின் பின்னர் ஒரு­பக்க சார்­பாக அமைந்த தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான போட­டியின் இடை­வே­ளை­யின்­போது தென் ஆபி­ரிக்கா 14 – 0 என்ற புள்­ளிகள் கணக்கில் முன்­னி­லையில் இருந்­தது.

 

தென் ஆபி­ரிக்கா சார்­பாக பி. ஜீ. ஹபான (3 ட்ரைகள்), பி. லவ் (2), டபிள்யூ. டு ப்ளெசிஸ், ஜே. க்ரைல், டி. டி அலெண்டே ஆகியோர் ட்ரைகளை வைத்­த­துடன் ஒரு பெனல்டி ட்ரையும் அவ்­வ­ணிக்கு கிடைத்­தது.

 

எச். பொலார்ட் (4), எம். ஸ்டேன் (3) ஆகியோர் கொன்­வேர்ஷன் புள்­ளி­களைப் பெற்­றுக்­கொ­டுத்­தனர்.

 

ஜோர்­ஜியா ஒரு புள்ளி வித்­தி­யா­சத்தில் வெற்றி

எக்ஸ்டர், செண்டி பார்க் விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­முன்­தினம் மிகவும் விறு­வி­றுப்பை ஏற்­ப­டுத்­திய குழு சியிற்­கான உலகக் கிண்ண றக்பி போட்­டியில் நமீ­பி­யாவை 17 க்கு 16 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் ஜோர்­ஜியா வெற்­றி­யீட்­டி­யது.

 

இறுக்­க­மான இப் போட்­டியின் இடை­வே­ளை­யின்­போது நமீ­பியா 6 க்கு 0 என நமீ­பியா முன்­னி­லையில் இருந்­தது.

 

இவ்வாரத்­துடன் லீக் போட்­டிகள் யாவும் நிறை­வ­டை­ய­வுள்­ளன. எதிர்­வரும் 17ஆம் திக­தி­முதல் நொக் அவுட் சுற்று நடை­பெ­ற­வுள்­ளது
 

இன்று 

நியூ­ஸி­லாந்து எதிர் டொங்கா.
 

நாளை 

சமோவா எதிர் ஸ்கொட்­லாந்து, அவுஸ்­தி­ரே­லியா எதிர் வேல்ஸ், இங்கிலாந்து எதிர் உருகுவே
 

ஞாயிறன்று

ஆர்ஜன்டீனா எதிர் நமீபியா, இத்தாலி எதிர் ருமேனியா, பிரான்ஸ் எதிர் அயர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா எதிர் ஜப்பான். (என். வீ. ஏ.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12589#sthash.6THTMq3b.dpuf
  • தொடங்கியவர்
இவ்வார இறுதியில் உலகக் கிண்ண றக்பி கால் இறுதிகள்
2015-10-16 12:51:36

எட்­டா­வது உலகக் கிண்ண றக்பி அத்­தி­யா­யத்­திற்­கான கால் இறுதிப் போட்­டிகள் நாளையும் நாளை­ம­று­தி­னமும் நடை­பெ­ற­வுள்­ளன.

 

தென் ஆபி­ரிக்­கா எதிர் வேல்ஸ்

 

127361.jpgலண்டன், ட்விக்­கன்ஹாம் விளை­யாட்­ட­ரங்கில் நாளை நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது கால் இறுதிப் போட்­டியில் முன்னாள் சம்­பியன் தென் ஆபி­ரிக்­காவை வேல்ஸ் எதிர்த்­தா­ட­வுள்­ளது.

 

இந்த இரண்டு அணி­களும் சர்­வ­தேச றக்பி வரலாற்றில் நேருக்கு நேர் 30 தட­வைகள் சந்­தித்­துள்­ளன. இதில் 27 – 2 என்ற  ஆட்டக் கணக்கில் தென் ஆபி­ரிக்கா முன்­னி­லையில் இருக்­கின்­றது. ஒரு போட்டி வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளது.

 

இதன் பிர­காரம் நாளைய போட்­டியில் தென் ஆபி­ரிக்­கா­வுக்கு வெற்றி வாய்ப்பு அதி­க­மாகத் தென்­ப­டு­கின்­றது.

 

முதல் சுற்றில் இரண்டு நாடு­களும் தலா 4 வெற்­றி­களை ஈட்­டி­ய­துடன் ஒரு தோல்­வியைத் தழு­வின.

 

12736pic-01.jpgகுழு பி யில் பலம்­வாய்ந்த அணி­யாக கரு­தப்­பட்ட தென் ஆபி­ரிக்கா தனது ஆரம்பப் போட்­டியில் முற்­றிலும் எதிர்­பா­ரா­த­வி­த­மாக ஜப்­பா­னிடம் 
32–34 என தோல்வி அடைந்­தது. 

 

எனினும் அடுத்த மூன்று போட்­டி­களில் சமோவா (46 – 6), ஸ்கொட்­லாந்து (34 – 16), ஐக்­கிய அமெ­ரிக்கா (64 –0) என தென் ஆபி­ரிக்கா வெற்­றி­பெற்று குழு பி யில் முதலாம் இடத்தைப் பெற்று கால் இறு­திக்கு முன்­னே­றி­யது.

 

குழு ஏ யில் இடம்­பெற்ற வேல்ஸ் தனது முதல் மூன்று போட்­டி­களில் உரு­குவே (54 – 9), இங்­கி­லாந்து (28 –25), பிஜி (23 –13) ஆகிய நாடு­களை வெற்­றி­கொண்­ட­போ­திலும் கடைசி லீக் போட்­டியில் அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் (6 – 15) தோல்வி அடைந்­தது.

 

தென் ஆபி­ரிக்க அணிக்கு பி. எவ். டு ப்ரீஸும் வேல்ஸ் அணிக்கு எஸ். வோர்­பேர்ட்­டனும் தலை­வர்­க­ளாக விளை­யா­டு­கின்­றனர்.

 

நடப்பு சம்­பியன் எதிர் பிரான்ஸ்

 

127362.jpgநியூ­ஸி­லாந்­துக்கும் பிரான்­ஸுக்கும் இடை­யி­லான இரண்­டா­வது கால் இறுதிப் போட்டி கார்டிவ், மில்­லே­னியம் விளை­யாட்­ட­ரங்கில் நாளை நடை­பெ­ற­வுள்­ளது.

 

நடப்பு சம்­பியன் என்ற வகையில் சம்­பியன் பட்­டத்தை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­கான முயற்­சியில் நியூ­ஸி­லாந்து இறங்கும் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

நியூ­ஸி­லாந்­துக்கும் பிரான்­ஸுக்கும் இடை யில் நடை­பெற்­றுள்ள றக்பி போட்­டி­களில் 42 – 13 என்ற ஆட்டக் கணக்கில் நியூ­ஸி­லாந்து முன்­னி­லையில் உள்­ளது. ஒரு போட்டி வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தது.

 

நியூ­ஸி­லாந்து அதி­கப்­ப­டி­யான வெற்­றி­களைப் பதிவு செய்­துள்­ள­போ­திலும் அதன் பல வெற்­றிகள் மிகவும் இறுக்­க­மா­கவே முடி­வ­டைந்­துள்­ளன.

 

எனவே நாளைய போட்­டியும் இறுக்­க­மான முடிவைத் தரலாம் என எதிர்­பார்க்­கலாம்.

 

குழு சி யில் இடம்­பெற்ற நியூ­ஸி­லாந்து தான் விளை­யா­டிய நான்கு போட்­டி­க­ளிலும் ஆர்­ஜன்­டீனா (26 – 16), நமீ­பியா (58 – 14), ஜோர்­ஜியா (43 – 10), டொங்கா (47 – 9) வெற்­றி­யீட்­டி­யது.

 

குழு டியில் இடம்­பெற்ற பிரான்ஸ் தனது போட்­டி­களில் இத்­தாலி (32 –10), ருமே­னியா (38 – 11), கனடா (41 –18) ஆகி­ய­வற்றை வெற்­றி­கொண்ட போதிலும் அயர்­லாந்­திடம் (9 – 24) தோல்வி கண்­டது.

 

நியு­ஸி­லாந்து அணிக்கு கே. ஜே. றீட்,  பிரான்ஸ் அணிக்கு டி. எஸ். டுசோட்டொய்ர் ஆகியோர் தலை­வர்­க­ளாக விளை­யா­டு­கின்­றனர்.

 

அயர்­லாந்து எதிர் ஆர்­ஜன்­டீனா

 

127364.jpgஅயர்­லாந்­துக்கும் ஆர்­ஜன்­டீ­னா­வுக்கும் இடை­யி­லான மூன்­றா­வது கால் இறுதிப் போட்டி கார்டிவ், மில்­லே­னியம் விளை­யாட்­ட­ரங்கில் ஞாயி­றன்று நடை­பெ­ற­வுள்­ளது.

 

றக்பி வர­லாற்றில் இந்த இரண்டு அணி­களும் 16ஆவது தட­வை­யாக சந்­திக்­க­வுள்­ளன. 

 

இது­வரை விளை­யா­டப்­பட்ட போட்­டி­களில் 10 – 5 என அயர்­லாந்து முன்­னி­லையில் இருக்­கின்­ற­ போ­திலும் இரண்டு அணி­களும் ஒன்­றுக்­கொன்று சளைக்­காமல் விளை­யா­டி­யுள்­ளதை போட்டி முடி­வுகள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

 

 


குழு டி யில் விளை­யா­டிய அயர்­லாந்து, தனது போட்­டி­களில் கனடா (50 – 7), ருமே­னியா (44 – 10), இத்­தாலி (16 –9), பிரான்ஸ் (24 – 9) ஆகிய நாடு­களை வெற்­றி­கொண்டு தோல்­வி­யு­றாத அணி­யாக கால் இறு­திக்குள் நுழைந்­தது.

 

ஆர்­ஜன்­டீனா குழு சியில் ஆரம்பப் போட்­டியில் நியூ­ஸி­லாந்­திடம் 16 – 26 என தோல்வி அடைந்­தது. அதன் பின்னர் ஜோர்­ஜியா (54 – 9), டொங்கா (45 – 16), நமீ­பியா (64 – 19) ஆகிய அணி­களை வெற்­றி­கொண்டு கால் இறுதி வாய்ப்பைப் பெற்­றது.

 

அயர்­லாந்து அணிக்கு பி. ஜே. ஓ கொனல், ஆர்­ஜன்­டீனா அணிக்கு எம். லண்­டாஜோ ஆகியோர் தலை­வர்­க­ளாக விளை­யா­டு­கின்­றனர்.

 

அவுஸ்­தி­ரே­லியா எதிர் ஸ்கொட்­லாந்து

 

127363.jpgஅவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் ஸ்கொட்­லாந்­துக்கும் இடை­யி­லான கடைசி கால் இறுதிப் போட்டி லண்டன், ட்விக்­கன்ஹாம் விளை­யாட்­ட­ரங்கில் ஞாயி­றன்று நடை­பெ­ற­வுள்­ளது.

 

இந்த இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான றக்பி உற­வுகள் 98 வரு­டங்­களைக் கொண்­ட­தாகும்.

 

12736pic-05.jpgஎனினும் இரண்டு நாடு­களும் 28 தட­வை­களே ஒன்­றை­யொன்று எதிர்த்­தா­டி­யுள்­ளன. 

 

இவற்றில் 19 – 9 என்ற ஆட்டக் கணக்கில் அவுஸ்­தி­ரே­லியா முன்­னி­லையில் இருக்­கின்­றது.

 

கால் இறுதிப் போட்­டியில் முன்னாள் உலக சம்­பியன் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கே அதி­கப்­பட்ச வெற்­றி­வாய்ப்பு இருப்­ப­தாகத் தெரி­கின்­றது.

 

இவ்வருட உலகக் கிண்ண றக்­பியில் குழு ஏ யில் இடம்­பெற்ற அவுஸ்­தி­ரே­லியா சகல போட்­டி­களில் வெற்­றி­பெற்­றது. ஃபிஜி (28 – 13), உருகுவே (65 – 3), இங்கிலாந்து (33 – 13), வேல்ஸ் (15 – 6) ஆகிய அணிகளை அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.

 

குழு பியில் ஜப்பான் (45 – 10), ஐக்கிய அமெரிக்கா (39 – 16), சமோவா 
(36–33) ஆகிய நாடுகளை வெற்றி கொண்ட ஸ்கொட்லாந்து, 16 – 34 என தென் ஆபிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது.

 

அவுஸ்திரேலிய அணிக்கு எஸ். ரீ. முவரும் ஸ்கொட்லாந்து அணிக்கு ஜீ. டி. லெய்ட்லோவும் தலைவர்களாக விளையாடுகின்றனர். 
(என்.வீ.ஏ.)

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12736#sthash.PtFBN3oh.dpuf
  • தொடங்கியவர்
உலகக்கிண்ண ரக்பி: முதல் சுற்று மீள்பார்வை
 
16-10-2015 04:37 PM
Comments - 0       Views - 4

article_1444993755-rug123.JPG

உலகக் கிண்ண ரக்பி தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன. உலகின் முதல் பலமான 8 அணிகளுமே காலிறுதிப்போட்டிகளுக்கு  தெரிவாகியுள்ளன. காலிறுதிப் போட்டிகள் அதிக விறுவிறுப்பைத் தரப்போகின்றன. 

குழு A 
அணி             போ  வெ      ச     தோ    த.பு     எ.பு    பு.வி    ஊ.பு      பு 
அவுஸ்திரேலியா     4    4    0    0    141    35    +125    1             17
வேல்ஸ்         4    3    0    1    111    62    +49    1    13
இங்கிலாந்து     4    2    0    2    133    75    +58    3    11
பிஜி             4    1    0    3    84    101    -17    1    5
உருகுவே         4    0    0    4    30    226    -196    0    0

போட்டி முடிவுகள் - 
இங்கிலாந்து     35 - 11 பிஜி
வேல்ஸ்         54 - 9 உருகுவே
அவுஸ்திரேலியா     28 - 13 பிஜி
இங்கிலாந்து     25 - 28 வேல்ஸ்
அவுஸ்திரேலியா     65 - 3 உருகுவே
வேல்ஸ்         23 - 13 பிஜி
இங்கிலாந்து     13 - 33 ஆஸ்திரேலியா
பிஜி             47 - 15 உருகுவே
அவுஸ்திரேலியா     15 - 6 வேல்ஸ்
இங்கிலாந்து     60 - 3 உருகுவே

article_1444993826-vimal.jpgகுழு A இல் எந்த வித அதிர்ச்சி முடிவுகளும் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த அணிகள் அதே ஒழுங்கில் வென்றுள்ளன. அவுஸ்திரேலியா அணி ஆரம்ப காலம் முதல் பலமான அணி. முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதுவும் போட்டிகளின் புள்ளிகள் வித்தியாசம் 125. ஒவ்வொரு போட்டிகளிலும் பெரிய வித்தியாசத்தில் வென்றுள்ளது. சகல போட்டிகளிலும் வென்று 1 போணஸ் புள்ளி அடங்கலாக 17 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தனதாக்கிக் கொண்டது. இரண்டாமிடத்தை வேல்ஸ் பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து ஆடுகள சார்புத்தன்மை, ரசிகர்களின் ஆதரவு அதிகளவு இருந்தும் கூட முதலிடத்தைப் பெறமுடியவில்லை. 3 வெற்றிகளுடன் 1 போணஸ் புள்ளி அடங்கலாக 13 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தை பெற்றது. போட்டிகளை நடாத்தும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, வேல்ஸ் நாடுகளுடன் தோல்வியடைந்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.

குழு B 
அணி                 போ   வெ     ச     தோ          த.பு      எ.பு    பு.வி    ஊ.பு      பு 

தென் ஆப்பிரிக்கா         4     3     0     1          176     56     +120      4     16
ஸ்கொட்லாந்து         4     3     0     1     136     93     +43     2     14
ஜப்பான்             4     3     0     1     98     100     -2 0     1    2
சமோவா             4     1     0     3     69     124     -55      2     6
அமெரிக்கா             4     0     0     4     50     156     -106     0     0

தென் ஆப்ரிக்கா     32 - 34 ஜப்பான்
சமோவா         25 - 16 அமெரிக்கா
ஸ்கொட்லாந்து     45 - 10 ஜப்பான்
தென் ஆப்ரிக்கா     46 - 6 சமோவா
ஸ்கொட்லாந்து     39 - 16 அமெரிக்கா
சமோவா         5 - 26 ஜப்பான்
தென் ஆப்ரிக்கா     34 - 16 ஸ்கொட்லாந்து
தென் ஆப்ரிக்கா     64 - 0 அமெரிக்கா
சமோவா         33 - 36 ஸ்கொட்லாந்து
அமெரிக்கா         18 - 28 ஜப்பான்

போட்டி மிகுந்த ஒரு குழு எனக் கூறலாம். எல்லாவற்றுக்கும் காரணம் ஜப்பான். பலமான தென் ஆபிரிக்கா அணிக்கு முதற் போட்டியில் அவர்கள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம். இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் ஜப்பான் அணி வெற்றி பெற தென் ஆபிரிக்கா அணியும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஆனால் அதற்க்கு பின்னர் தென் ஆபிரிக்கா அணி அசுரர்கள் போல எழுந்து மிகுதி மூன்று போட்டிகளிலும் பெரிய வெற்றிகளைப் பெற்று 4 போணஸ் புள்ளிகளுடன் 16 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைக் கைப்பற்றினர். ஒரு தோல்வியின் பின்னரும் தென் ஆபிரிக்கா அணியின் போட்டிப் புள்ளிகளின் வித்தியாசம் 120 என்பது பெரு வெற்றியே. தென் ஆபிரிக்கா அணியை வென்ற ஜப்பான் அணியால் ஸ்கொட்லாந்து அணியை வெல்ல முடியவில்லை. ஸ்கொட்லாந்து தென் ஆபிரிக்கா அணியிடம் தோல்வியடைந்து 3 வெற்றிகளுடன் 2 போணஸ் புள்ளிகளைப் பெற்று 14 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றது. 3 வெற்றிகளைப் பெற்ற ஜப்பான் அணியாள் போணஸ் புள்ளிகளைப் பெற முடியாமையால் போனமையே அவர்களின் வெளியேற்றத்துக்கு காரணமாக அமைந்தது.  மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றும் ஜப்பான் அணியின் புள்ளிகள்'வித்தியாசம் - 2 என்பதே அவர்களின் முக்கிய இழப்பாக அமைந்தது.

குழு C 

அணி                 போ   வெ     ச     தோ          த.பு      எ.பு    பு.வி    ஊ.பு      பு
நியூசிலாந்து         4     4     0     0     174     49     +125      3     19
அர்ஜென்டீனா         4     3     0     1     179     70     +109      3     15
ஜோர்ஜியா             4     2     0     2     53     123     -70     0     8
டொங்கோ            4     1     0     3     70     130     -60      2     6
நமீபியா             4     0     0     4     70     174     -104 8      1     1

டொங்கோ 10 - 17 ஜோர்ஜியா
நியூசிலாந்து 26 - 16 அர்ஜென்டீனா
நியூசிலாந்து 58 - 14 நமீபியா
அர்ஜென்டீனா 54 - 9 ஜோர்ஜியா
டொங்கோ 35 - 21 நமீபியா
நியூசிலாந்து 43 - 10 ஜோர்ஜியா
அர்ஜென்டீனா 45 - 16 டொங்கோ
நமீபியா 16 - 17 ஜோர்ஜியா
நியூசிலாந்து 47 - 9 டொங்கோ
அர்ஜென்டீனா 64 - 19 நமீபியா

குழு C இல் முதலிடத்தை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. ரக்பி உலகக்கிண்ணத்திலும் சரி, ரக்பி போட்டிகளிலும் சரி மிகப்பலமான நியூசிலாந்து அணி முதலிடத்தைப் பெற்றது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இம்முறையும் உலகக்கிண்ணத்தை வெற்றி பெற அவர்களே அதிக வாய்புகள் உள்ளவர்கள். உலக பந்தயக்காரர்களின் தரப்படுத்தலிலும் கூட முதலிடம் நியூசிலாந்து அணிக்கே.  குழு நிலைப் போட்டிகளில் 19 புள்ளிகளைப் பெற்று முதல் சுற்றுப்போட்டிகளிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது. 4 போட்டிகளில் 3 போணஸ் புள்ளிகள். போட்டிப்புள்ளிகளிலும் அதிக  வித்தியாசத்தில் முதலிடம். ஆர்ஜன்டீனா அணி இரண்டாமிடம். இரண்டாமிடத்தை நியூசிலாந்து அணியுடன் தோற்று பெற்றாலும் முதல் சுற்று நிறைவில் கூடுதல் போட்டிப் புள்ளிகளைப் பெற்ற அணி. 179 புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள். ஆக இவர்களும் பலமான அணியே. அடுத்த மூன்று அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை நினைக்கவே முடிய இந்த இரு அணிகளும் வாய்ப்பை வழங்கவில்லை.

குழு D 

அணி                 போ   வெ     ச     தோ          த.பு      எ.பு    பு.வி    ஊ.பு      பு

அயர்லாந்து             4     4     0     0     134     35     +99     2     18
பிரான்ஸ்             4     3     0     1     120     63     +57      2     14
இத்தாலி             4     2     0     2     74     88     -14      2     10
ருமேனியாவில்         4     1     0     3     60     129     -69      0     4
கனடா             4     0     0     4     58     131     -73     2     2

அயர்லாந்து 50 - 7 கனடா
பிரான்ஸ் 32 - 10 இத்தாலி
பிரான்ஸ் 38 - 11 ருமேனியா
இத்தாலி 23 - 18 கனடா
அயர்லாந்து 44 - 10 ருமேனியா
பிரான்ஸ் 41 - 18 கனடா
அயர்லாந்து 16 - 9 இத்தாலி
கனடா 15 - 17 ருமேனியா
இத்தாலி 32 - 22 ருமேனியா
பிரான்ஸ் 9 - 24 அயர்லாந்து

குழு D இல் அயர்லாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் முதலிடத்துக்கு போட்டி நிலவிய போதும் பிரான்ஸ், அயர்லாந்து அணிகளுக்கிடையில் குழு நிலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியது. 2 போணஸ் புள்ளிகள் அடங்கலாக 18 புள்ளிகளுடன் அயர்லாந்து அணி முதலிடத்தையும், 3 போட்டிகளில் வெற்றி பெற்று பிரான்ஸ் அணி 2 போணஸ் புள்ளிகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றது.

காலிறுதிப் போட்டி அட்டவணை 

ஒக்டோபர்  17 2015
தென் ஆப்பிரிக்கா Vs வேல்ஸ்
நியூசிலாந்து Vs பிரான்ஸ்

ஒக்டோபர்  18 2015
அயர்லாந்து  Vs அர்ஜென்டீனா
அவுஸ்திரேலியா  Vs ஸ்கொட்லாந்து

தென் ஆபிரிக்கா, வேல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி, தென் ஆபிரிக்காவிற்க அணிக்கு சாதகமான போட்டியாகவே அமைகின்றது. கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆபிரிக்கா அணி இன்னும் எவ்வாறு உலகக்கிண்ணத்தை வெல்ல முடியாமல் தடுமாறுகின்றதோ அதே நிலை இங்கும் உண்டோ என்ற பயம் உள்ளது. வேல்ஸ் அணியிலும் பார்க்க தென் ஆபிரிக்கா அணியின் அரை இறுதிப் போட்டி வாய்ப்பு எல்லா விதத்திலும் அதிகமே. 

நியூசிலாந்து, பிரான்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டி முழுக்க, முழுக்க நியூசிலாந்து அணிக்கு சார்பாகவே உள்ளது. மிக அரிதான வாய்ப்பே பிரான்ஸ் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பியன் நியூ சிலாந்து அணி சம்பியன் ஆகும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் ஓரளவு பலமான பிரான்ஸ் அணி தனக்கான போராடும் வாய்ப்பை ஏற்படுத்த முடியாமல் அமையும் வாய்ப்பு உள்ளது. 

ஆர்ஜன்டீனா, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இந்த உலகக்கிண்ண தொடரின் மிகுந்த விறுவிறுப்பான போட்டியாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சமபலமான அணிகள். இரு அணிகளும் அரை இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகளை கொண்ட அணிகள். இறுதிப் போட்டி வரையும் செல்லும் வாய்புகள் கொண்ட அணிகளும் கூட. எனவே இரு அணியும் மிக ஆவேசமாக போராடும் என நம்பலாம்.

அவுஸ்திரேலியா அணி அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணிகளில் அதிக வாய்ப்பு உள்ள அணியாக பந்தயக்காரர்களினால்  தரப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து அணியை எதிர்கொள்கின்றது. ஸ்கொட்லாந்து அணியும் தடுமாறியே காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. எனவே இந்த வாய்ப்பு என்பதும் ஆஸ்திரேலியாவிற்கு கிடைக்கின்றது என்பது ஆச்சரியப்படுவதற்கும் இல்லை.

அட்டவணை விளக்கம் 
அணி, போட்டிகள், வெற்றி, சமநிலை, தோல்வி, தமது அணியின் போட்டிப் புள்ளிகள், எதிரணியின் போட்டிப் புள்ளிகள், புள்ளி வித்தியாசம், தமது அணிக்கான முயற்சி, எதிரணியின் முயற்சி, ஊக்குவிப்பு புள்ளிகள், புள்ளிகள்

- See more at: http://www.tamilmirror.lk/156731/உலகக-க-ண-ண-ரக-ப-ம-தல-ச-ற-ற-ம-ள-ப-ர-வ-#sthash.po37OhX8.dpuf
  • தொடங்கியவர்
கடைசிக்கட்ட பெனல்டியால் அரை இறுதியில் அவுஸ்திரேலியா
2015-10-20 09:58:25

ஸ்கொட்­லாந்­துக்கு எதி­ரான உலகக் கிண்ண றக்­பிக்­கான கடைசி கால் இறுதிப் போட்­டியின் கடைசி நிமி­டத்தில் பேர்னார்ட் ஃபொலி உதைத்த பெனல்­டியின் உத­வி­யுடன் 35 – 34 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்ற அவுஸ்­தி­ரே­லியா, அரை இறு­தியில் விளை­யாடும் வாய்ப்பை பெற்­றுக்­கொண்­டது.

 

 

12800_ashly-cooper.jpg

 

லண்டன் ட்விக்­கன்ஹாம் விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற இப்­போட்­டியில், 

ஆட்டம் முடி­வ­டை­வ­தற்கு ஒரு நிமிடம் இருந்­த­போது 34 – 32 என்ற புள்­ளிகள் கணக்கில் வெற்­றியை அண்­மித்­துக்­கொண்­டி­ருந்த ஸ்கொட்­லாந்து, கடைசி நிமி­டத்தில் இழைத்த தவறு கார­ண­மாக அரை இறுதி வாய்ப்பை கோட்டை விட்­டது.

 

கடைசி நிமிட பெனல்­டியை பேர்னார்ட் ஃபொலி குறி வைத்­த­போது ஸ்கொட்­லாந்து வீரர்­க­ளி­னதும் ர­சி­கர்­க­ளி­னதும் மட்­டு­மல்­லாமல் அவுஸ்­தி­ரே­லி­யர்­க­ளி­னதும் நெஞ்­சங்கள் பட­ப­டத்­துக்­கொண்­டி­ருந்­தன.

 

ஃபொலியின் இலக்கு சரி­யாக அமைந்­த­போது அவுஸ்­தி­ரே­லி­யர்கள் அடைந்த ஆனந்­தத்­திற்கு எல்­லையே இல்லை. மறு­பு­றத்தில் ஸ்கொட்­லாந்து நாட்­ட­வர்கள் சோகத்தில் ஆழ்ந்­தனர்.

 

தென் ஆபி­ரிக்க மத்­தி­யஸ்தர் கிரெய்க் ஜூபேர்ட்­டினால் வழங்­கப்­பட்ட இந்த பெனல்டி சர்ச்­சைக்­கு­ரி­ய­தாக கரு­தப்­பட்­டது.

 

தொலைக்­காட்சி மீள் காட்­சி­களில் அவ­ரது தீர்­மானம் தவ­றாகக் காணப்­பட்­ட­தாக விமர்­சகர்கள் கூறு­கின்­றனர்.

 

இரண்டு அணி­யி­னரும் சரி­ச­ம­மாக மோதிக்­கொண்ட இப் போட்­டியில் எந்த அணி வெற்­றி­பெறும் என்று கூற­மு­டி­யாத அள­வுக்கு மாறி­மாறி புள்­ளிகள் பெறப்­பட்ட வண்ணம் இருந்­தது.

 

இடை­வே­ளை­யின்­போது ஸ்கொட்­லாந்து 16 – 15 என முன்­னி­லையில் இருந்­தது.

 

போட்­டியின் 54 ஆவது நிமி­டத்தில் 25 – 19 எனவும் 67ஆவது நிமி­டத்தில் 32 – 24 எனவும் அவுஸ்­தி­ரே­லியா முன்­னி­லையில் இருந்­தது.

 

அதன் பின்னர் ஒரு பெனல்டி, ஒரு ட்ரை மற்றும் கொன்­வேர்ஷன் மூலம் புள்­ளி­களைப் பெற்ற ஸ்கொட்­லாந்து 34 – 32 என முன்­னிலை அடைந்து உலகக் கிண்ண றக்பி வர­லாற்றில் சாத­னையை நிகழ்த்த தயா­ரா­கிக்­கொண்­டி­ருந்­தது.

 

ஆனால் கடைசிக் கட்­டத்தில் வழங்­கப்­பட்ட சர்ச்­சைக்­கு­ரிய பெனல்டி, ஸ்கொட்­லாந்தின் கன­வு­களை கலைத்­து­விட்­டது.

 

அவுஸ்­தி­ரே­லியா சார்­பாக மிச்செல் (2), அஷ்லி கூப்பர், எம். கூப்பர், கிய+ரித்­ரனி ஆகியோர் ட்ரைகளை வைத்­தனர். ஃபொலி 2 பெனல்­டி­க­ளையும் 2 கொன்­வேர்­ஷன்­க­ளையும் நிறைவு செய்தார்.

 

128004258673.jpg

 

ஸ்கொட்­லாந்து சார்­பாக சீமோர், ஹோர்ன், பெனெட் ஆகியோர் ட்ரைகளை வைத்­தனர். லெய்ட்லோ 5 பெனல்­டி­க­ளையும் 2 கொன்­வேர்­ஷன்­க­ளையும் போட்டார்.

 

ஆர்­ஜன்­டீனா அபார வெற்றி
கார்டிவ் மில்­லே­னியம் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற மூன்­றா­வது கால் இறுதிப் போட்­டியில் அயர்­லாந்தை எதிர்த்­தா­டிய ஆர்­ஜன்­டீனா 43 – 20 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் அபார வெற்­றி­பெற்று அரை இறு­தியில் விளை­யாட தகு­தி­பெற்­றது.

 

60 ஆவது நிமிடம் வரை இரண்டு அணி­களும் சம­மாக மோதிக்­கொண்ட இப் போட்­டியின் கடைசி 17 நிமி­டங்­களில் 17 புள்­ளி­களைப் பெற்ற ஆர்­ஜன்­டீனா வெற்­றி­யீட்டி பெரும் திருப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

 

ஆர்­ஜன்­டீனா சார்­பாக டியூக்கலெட், இம்ஹொவ் (2), மொரோனி ஆகியோர் ட்ரைகளை வைத்­தனர். சன்ச்செஸ் 5 பெனல்­டி­களைப் போட்­ட­துடன் 4 ட்ரைக­ளுக்­கு­மான மேல­திகப் புள்­ளி­க­ளையும் பெற்­றுக்­கொ­டுத்தார்.

 

ஆர்­ஜன்­டீனா சார்­பாக ஃபிட்ஸ்­ஜெரல்ட், மேர்ஃபி ஆகியோர் ட்ரைகளை வைத்­தனர். இந்த ட்ரைக­ளுக்­கான கொன்­வேர்­ஷன்­களைப் பூர்த்தி செய்த மெடிகன், 2 பெனல்­டி­க­ளையும் போட்டார்.

 

அரை இறு­திகள்
தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் நடப்பு சம்பியன் நியூஸிலாந்துக்கும் இடையிலான முதலாவது அரை இறுதி ஆட்டம் எதிர்வரும் சனிக்கிழமையும் ஆர்ஜன்டீனாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது அரை இறுதி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளன.

 

இந்த இரண்டு போட்டிகளும் லண்டன் ட்விக்கன்ஹாம் விளையாட்டரங்கில் நடைபெறும்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12800#sthash.wL7Mdel0.dpuf
  • தொடங்கியவர்
விறுவிறுப்பை தரவல்ல அரை இறுதிப் போட்டிகள் ;நியூஸி. எதிர் தெ. ஆ., ஆஸி. எதிர் ஆர்ஜன்டீனா
2015-10-23 12:03:06

12882Rugby-World-Cup-2015.jpgஉலகக் கிண்ண றக்பி போட்­டி­களின் எட்­டா­வது அத்­தி­யா­யத்­திற்­கான இறுதி ஆட்­டத்தில் விளை­யா­டப்­போகும் அணி­களைத் தீர்­மா­னிக்கும் இரண்டு அரை இறுதி ஆட்­டங்கள் நாளையும் நாளை­ ம­று­தி­னமும் நடை­பெ­ற­வுள்­ளன.

 

முன்னாள் சம்­பியன் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் நடப்பு சம்­பியன் நியூ­ஸி­லாந்­துக்கும் இடை­யி­லான முத­லா­வது அரை இறுதி ஆட்டம் லண்டன் ட்விக்­கன்ஹாம் விளை­யாட்­ட­ரங்கில் நாளை நடை­பெ­ற­வுள்­ளது.

 

ஆர்­ஜன்­டீ­னா­வுக்கும் முன்னாள் சம்­பியன் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடை­யி­லான இரண்­டா­வது அரை இறுதி ஆட்டம் இதே வினை­யாட்­ட­ரங்கில் ஞாயி­றன்று நடை­பெ­ற­வுள்­ளது.

 

தென் ஆபி­ரிக்கா எதிர் நியூஸி.
தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் நியூ­ஸி­லாந்­துக்கும் இடையில் இது­வரை 90 சர்­வ­தேச றக்பி போட்­டிகள் நடை­பெற்­றுள்­ளன.

 

அவற்றில் 52 போட்­டிளில் நியூ­ஸி­லாந்தும் 35 போட­டி­களில் தென் ஆபி­ரிக்­காவும் வெற்­றி­பெற்­றுள்­ளன. 3 போட்­டிகள் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளன. 

 

இரண்டு அணி­க­ளுக்கும் இடை­யி­லான சர்­வ­தேச றக்பி போட்­டிளில் 36 புள்­ளி­களால் நியூ­ஸி­லாந்து ஈட்­டிய வெற்­றியே மிகப் பெரிய வெற்­றி­யாகும்.

 

இதே­வேளை, பிரான்­ஸுக்கு எதி­ரான கால் இறுதிப் போட்­டியில் 62 க்கு 13 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் நியூ­ஸி­லாந்து வெற்­றி­பெற்­ற­போ­திலும் தென் ஆபி­ரிக்­கா­வு­ட­னான போட்டி இல­கு­வா­ன­தாக அமை­யப்­போ­வ­தில்லை என தனது வீரர்­க­ளுக்கு நியூ­ஸி­லாந்து பயிற்­றுநர் ஸ்டீவ் ஹன்சென் அறி­வுரை வழங்­கி­யுள்ளார்.

 

இவ்வருட உலகக் கிண்ண றக்பி போட்­டி­களில் தோல்வி அடை­யாத மூன்று அணி­களில் ஒன்­றான நியூ­ஸி­லாந்து நாளைய போட்­டி­யிலும் இல­கு­வாக வெற்­றி­பெற்று இறுதி ஆட்­டத்தில் விளை­யாடத் தகு­தி­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

மறு­பு­றத்தில் தனது லீக் சுற்றில் ஜப்­பா­னிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்த போதிலும் மற்­றைய லீக் போட்­டி­களில் வெற்­றி­யீட்­டிய தென் ஆபி­ரிக்கா, கால் இறு­தியில் கடும் சவா­லுக்கு மத்­தியில் கடைசிக் கட்ட ட்ரை ஒன்றின் மூலம் வேல்ஸ் அணியை 23 க்கு 19 என வெற்­றி­கொண்­டி­ருந்­தது.

 

அவுஸ்­தி­ரே­லியா எதிர் ஆர்­ஜன்­டீனா

இவ் வருட உலகக் கிண்ண றக்பி போட்­டி­களில் கால் இறு­தியில் அதி சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்தி பலம்­வாய்ந்த அயர்­லாந்தை 43 க்கு 20 என்ற புள்­ளிகள் கணக்கில் வெற்றி கொண்ட ஆர்­ஜன்­டீனா அரை இறு­தியில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு பெரும் சவால் விடுக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

குழு சியிற்­காக லீக் சுற்றில் நியூ­ஸி­லாந்­துக்கு கடும் சவா­லாகத் திகழ்ந்து தோல்­வியைத் தழு­விய ஆர்­ஜன்­டீனா, அரை இறு­தியில் திருப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­னாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

 

எனினும் இரண்டு தட­வைகள் சம்­பி­ய­னான அவுஸ்­தி­ரே­லியா இந்தப் போட்­டியை இல­குவில் விட்­டுக்­கொ­டுக்­காது என நம்­பலாம். 

 

இரண்டு அணி­க­ளுக்கும் இடை­யி­லான கடந்த கால போட்டி முடி­வு­களும் இத­னையே எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

 

சர்­வ­தேச அரங்கில் இந்த இரண்டு அணி­களும் சந்­தித்­துக் கொண்ட 24 சந்­தர்ப்­பங்­களில் 18 க்கு 5 என அவுஸ்­தி­ரே­லியா முன்­னிலை வகிக்­கின்­றது. ஒரு போட்டி வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளது.              

(என். வீ. ஏ.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12883#sthash.4xR31PHZ.dpuf
  • தொடங்கியவர்

இறுதிப் போட்டிக்கு தகுதியானது நியூஸிலாந்து

இறுதிப் போட்டிக்கு தகுதியானது நியூஸிலாந்து

 
றக்பி உலகக் கிண்ணம் 2015 போட்டிகளின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து 20 க்கு 18 என வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகியுயள்ளது.

இன்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் நியூஸிலாந்து தென்னாபிரிக்காவை எதிர் கொண்டிருந்தது.

நாளை இடம்பெறவுள்ள அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஆஜன்டீனா அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • தொடங்கியவர்

இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் மோதுகிறது அவுஸ்திரேலியா

இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் மோதுகிறது அவுஸ்திரேலியா

 

 
 

றக்பி உலகக் கிண்ணம் 2015 போட்டிகளின் இன்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா 29 க்கு 15 என வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் அவுஸ்திரேலியா அணி மோதவுள்ளது.

முன்னதாக நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து 20 க்கு 18 என தென்னாபிரிக்காவுடன் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா ஆஜன்டீனா ஆகிய அணிகள் மோதியிருந்தன.

http://tamil.adaderana.lk/news.php?nid=73820

  • தொடங்கியவர்
இன்று றக்பி உலகக் கிண்ண மூன்றாமிடத்துக்கான போட்டி
 
30-10-2015 08:02 AM
Comments - 0       Views - 10

article_1446118407-Rugbythirdplacde.jpgறக்பி உலகக் கிண்ணத்துக்கான போட்டிகளில், மூன்றாமிடத்துக்கான போட்டி, இன்று இடம்பெறவுள்ளது. கிறீன்விச் நேரத்தின்படி, இரவு 8 மணிக்கு (இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணி) இப்போட்டி இடம்பெறவுள்ளது. இப்போட்டியில், தென்னாபிரிக்க அணியும் ஆர்ஜென்டின அணியும் மோதவுள்ளன.

இலண்டனின் ஒலிம்பிக் அரங்கில், இப்போட்டி இடம்பெறவுள்ளது.
இக்கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்புகளைக் கொண்ட முன்னணி அணிகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட தென்னாபிரிக்க அணி, குழு 'பி"இல், ஜப்பானுக்கெதிரான அதிர்ச்சித் தோல்வி தவிர, ஏனைய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று, காலிறுதியில் வேல்ஸ் அணியைத் தோற்கடித்திருந்தது. எனினும், அரையிறுதியில் வைத்து நடப்புச் சம்பியன்களிடம் தோல்வியடைந்திருந்தது.

மறுபுறத்தில் ஆர்ஜென்டினா, குழு 'சி"இல், நியூசிலாந்திடம் மட்டும் தோல்வியடைந்து, காலிறுதியில் வைத்து அயர்லாந்தை வெற்றிகொண்டிருந்தது. எனினும், அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்திருந்தது.

அரையிறுதியில் விளையாடிய தென்னாபிரிக்க அணியிலிருந்து, 2 மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காயம் காரணமாக புவரி டு பிறீஸ் விலக, அவருக்குப் பதிலாக றுவான் பியனார் சேர்க்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக, ஹெய்னேகே மெயேர் அறிவிக்கப்பட்டுள்ளார். தவிர, லொடெவைக் டி ஜாகெருக்குப் பதிலாக, விக்டர் மட்பீல்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

மறுபுறத்தில், அரையிறுதியில் பங்குபற்றிய ஆர்ஜென்டின அணியிலிருந்து, 11 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

- See more at: http://www.tamilmirror.lk/157839/இன-ற-றக-ப-உலகக-க-ண-ண-ம-ன-ற-ம-டத-த-க-க-ன-ப-ட-ட-#sthash.CjGFfRxc.dpuf
  • தொடங்கியவர்
உலக கிண்ண றக்பி இறுதி ஆட்டம் நாளை நியூ­ஸி­லாந்தா? அவுஸ்­தி­ரே­லி­யாவா?
2015-10-30 14:58:59

13010The-Rugby-World-Cup1.jpgஉலக கிண்ண றக்பி வர­லாற்றில் மூன்­றா­வது தட­வை­யாக உலக சம்­பியன் பட்­டத்தை சூடப்­போகும் முத­லா­வது நாடு எது என்­பதைத் தீர்­மா­னிக்கும் நியூ­ஸி­லாந்­துக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடை­யி­லான இறுதிப் போட்டி லண்டன் ட்விக்­கன்ஹாம் விளை­யாட்­ட­ரங்கில் நாளை  நடை­பெ­ற­வுள்­ளது.

 

ஏழு மாதங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்­டத்­திலும் இந்த இரண்டு நாடு­களின் அணிகள் பங்­கு­பற்­றி­ய­துடன் அப் போட்­டியில் மிக இல­கு­வாக வெற்­றி­பெற்ற அவுஸ்­தி­ரே­லியா உலக சம்­பி­ய­னா­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இந்த இரண்டு நாடு­களும் உலகக் கிண்ண இறுதி ஆட்ட வர­லாற்றில் சந்­திப்­பது இதுவே முதல் தடவை என்­ப­துடன் உலகக் கிண்ண வர­லாற்றில் சந்­திக்கும் இரண்­டா­வது சந்­தர்ப்பம் இது­வாகும். 

 

ஆக்லண்ட், ஈடன் பார்க் விளை­யாட்­ட­ரங்கில் நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இந்த இரண்டு நாடு­களும் முதல் தட­வை­யாக உலகக் கிண்ண றக்பி போட்­டியில் ஒன்­றை­யொன்று எதிர்த்­தா­டி­ய­போது 20 – 6 என்ற புள்­ளிகள் கணக்கில் நியூ­ஸி­லாந்து வெற்­றி­பெற்­றி­ருந்­தது.

 

13010Rugby-world-cup-2015-Quarter-final-சிட்­னியில் 1903 ஓகஸ்ட் 15 ஆம் திகதி நடை­பெற்ற இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான முத­லா­வது றக்பி போட்­டி­முதல் 112 வருட வர­லாற்றில் இரண்டு நாடு­களும் 154 தட­வைகள் ஒன்­றை­யொன்று எதிர்த்­தா­டி­யுள்­ளன. 

 

இதில் 105 – 42 என்ற ஆட்­டக்­க­ணக்கில் நியூ­ஸி­லாந்து முன்­னிலை வகிக்­கின்­றது. 7 போட்­டிகள் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளன.

 

1987முதல் 2011வரை நிறை­வு­பெற்­றுள்ள ஏழு உலகக் கிண்ண றக்பி அத்­தி­யா­யங்­களில் முத­லா­வது உலக சம்­பியன் என்ற பெரு­மையைக் கொண்­டுள்ள நியூ­ஸி­லாந்து 24 வரு­டங்­களின் பின்னர் மீண்டும் சம்­பி­யா­னது.

 

அவுஸ்­தி­ரே­லியா 1991இலும் 1999 இலும் உலக சம்­பி­ய­னா­கி­யி­ருந்­தது.

 

இவ்வருட உலகக் கிண்ண றக்பி போட்­டி­களில் இந்த இரண்டு நாடு­களும் தோல்வி அடை­யாத அணி­க­ளாக இறுதி ஆட்­டத்தில் மோது­கின்­றன.

 

130104284020%281%29.jpgகுழு ஏ யில் இடம்­பெற்ற அவுஸ்­தி­ரே­லியா லீக் சுற்றில் ஃபிஜி (28 – 13), உரு­குவே (65 – 3), இங்­கி­லாந்து (33 – 13), வேல்ஸ் (15 – 6) ஆகிய நாடு­களை வெற்­றி­கொண்­டி­ருந்­தது.

 

குழு பியில் விளை­யா­டிய நடப்பு உலக சம்­பியன் நியூ­ஸி­லாந்து லீக் சுற்றில் ஆர்­ஜென்­டீனா (26 – 16), நமீ­பியா (58 – 14), ஜோர்­ஜியா (43 – 10), டொங்கா (47 – 9) ஆகிய நாடு­களை வீழ்த்­தி­யி­ருந்­தது.

 

கால் இறு­தியில் ஸ்கொட்­லாந்தை சர்ச்­சைக்­கு­ரிய ட்ரை ஒன்றில் உத­வி­யுடன் 35 – 34 என்ற புள்­ளிகள் கணக்கில் ஸ்கொட்­லாந்தை வெற்­றி­கொண்ட அவுஸ்­தி­ரே­லியா, அரை இறு­தியில் ஆர்­ஜன்­டீ­னாவை 29 –15 என வெற்­றி­கொண்­டது.

 

நியூ­ஸி­லாந்து தனது கால் இறுதிப் போட்­டியில் பிரான்ஸை 62 – 13 என துவம்வம் செய்­த­துடன் அரை இறுதிப் போட்­டியில் கடும் சவா­லுக்கு மத்­தியில் தென் ஆபி­ரிக்­காவை 20 – 18 என வெற்­றி­கொண்­டது.

 

இந்தப் போட்டி முடி­வு­களை வைத்து எந்த நாடு உலக சம்­பி­ய­னாகும் என ஆரூடம் கூறு­வது பொருத்­த­மற்­றது. 

 

பொது­வாக உலகக் கிண்ண இறுதி ஆட்­டங்கள் இறுக்­க­மான முவு­களைத் தந்­துள்­ளதால் இவ் வருட இறுதி ஆட்­டமும் இறு­தி­வரை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தும் என்­பது திண்ணம்.

 

ரிச்சி மெக்கோ தலை­மை­யி­லான நியூ­ஸி­லாந்து அணியில் ஜூலியன் சொவெ, டெனியல் கார்ட்டர், என். மில்னர் ஸ்குட், போடென் பெரெட், பென் ஸ்மித், ஜெரோம் கய்னோ ஆகியோர் முக்­கிய வீரர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர்.

 

130104293775.jpgஎஸ். ரீ. முவர் தலை­மை­யி­லான அவுஸ்­தி­ரே­லிய அணியில் பேர்னார்ட் ஃபொலி, அடம் அஞ்லி கூப்பர், ட்ரூ மிச்செல், பென் மெக்­கல்மான், டேவிட் பொக்கொக், சோன் மெக்­மெஹொன் ஆகியோர் பிர­தான வீரர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர்.

 

இந்த இறுதி ஆட்­டத்தில் வெற்றி பெற்று உலக சம்­பி­ய­னாகும் அணி­யி­ன­ருக்கு கண்­கவர் வெப் எலிஸ் வெற்­றிக்­கிண்­ணத்­துடன் தங்கப் பதக்கங்களும் இரண்டாவம் இடத்தைப் பெறும் அணியினருக்கு வெள்ளிப் பதக்கங்களும் சூட்டப்படும்.

 

மூன்றாம் இடப் போட்டி
மூன்றாம் இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் தென் ஆபிரிக்காவை ஆர்ெஜன்டீனா எதிர்த்தாடவுள்ளது.

இப் போட்டி லண்டன் ஒலிம்பிக் பார்க் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ளது. 

(என். வீ. ஏ.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=13010#sthash.rsOSkTLk.dpuf
  • தொடங்கியவர்

3ம் இடம் தென்னாபிரிக்காவுக்கு

3ம் இடம் தென்னாபிரிக்காவுக்கு

 

 
 
உலகக் கிண்ண றக்பி போட்டிகளில் 3ம் இடத்தைத் தெரிவு செய்வதற்கான போட்டியில் ஆஜன்டீனாவை எதிர் கொண்ட தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

24-13 என்ற கணக்கில் தென்னாபிரிக்க வெற்றியை தனதாக்கியுள்ளது.

இதேவேளை இன்று இரவு றக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.
  • தொடங்கியவர்

றக்பி உலகக் கிண்ணம் நியூஸிலாந்து வசம்

றக்பி உலகக் கிண்ணம் நியூஸிலாந்து வசம்

 

 
 

இன்று இடம்பெற்ற றக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

34-17 என்ற கணக்கில் அந்த அணி வெற்றியைத் தனதாக்கியுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=73987

  • தொடங்கியவர்

12096017_1001145596614769_45388842694379

  • தொடங்கியவர்

 
 
கிரிக்கெட்டில் விட்டதை றக்பியில் பிடித்த நியூசிலாந்து
 
01-11-2015 10:10 AM
Comments - 0       Views - 1

article_1446392661-LEADwcwon.jpgகிரிக்கெட் உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றிருந்த நியூசிலாந்து அணி றக்பியின் உலக சம்பியன்களாக, தங்களை மீண்டும் நிரூபித்துக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான றக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டியை வெற்றிகொண்டு சம்பியனாகியே, நடப்புச் சம்பியன்களான நியூசிலாந்து அணி, தங்களைச் சம்பியன்களாக நிலைநிறுத்திக் கொண்டது.

இலண்டனின் டுவிக்கென்ஹாம் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியைக் காண, 80,125 இரசிகர்கள் அவ்வரங்குக்கு வந்திருந்தனர்.

இப்போட்டியை வெற்றிகொள்வதற்கான அதிக வாய்ப்புகளுள்ள அணியாக நியூசிலாந்து காணப்பட்ட போதிலும், முதல் 30 நிமிடங்களில், 6-3 என்ற புள்ளிகள் கணக்கிலேயே நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது. எனினும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதற்பாதி முடிவில் 16-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து அணி, 52ஆவது நிமிட முடிவில் 21-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் காணப்பட்டது.

எனினும், 53ஆவது நிமிடத்தில் டேவிட் பொகொக்கினால் பெறப்பட்ட பெறப்பட்ட 'ட்ரை" புள்ளிகள் மூலம், 21-8 என்ற நிலைமை காணப்பட்டதோடு, மிகக் கடுமையான போராட்டத்தை அவுஸ்திரேலியா வெளிப்படுத்தியது. இதன் காரணமாக, 66ஆவது நிமிடத்தில், புள்ளிகளின் நிலை 21-17 என்ற நிலைக்கு மாறியது.

தங்களின் சம்பியன் நிலையை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி, அதன் பின்னர் போட்டியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றுக் கொண்டது.

இப்போட்டியின் நாயகனாக, டான் கார்ட்டர் தெரிவானார். 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், உபாதை காரணமாகப் பங்குபெற்றிருக்காத டான் கார்ட்டர், தனது 12 வருடகால றக்பி வாழ்வை, உயரிய விருதொன்றுடன் முடித்துக் கொண்டார்.

இந்த வெற்றியுடன், றக்பி உலகக் கிண்ணத்தை அதிக தடவைகள் கைப்பற்றிய நாடாக நியூசிலாந்து மாறியுள்ளது. அவ்வணி, 3 தடவைகள் இக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்காவும் அவுஸ்திரேலியாவும் தலா 2 சம்பியன் பட்டங்களுடன் காணப்படுகின்றன.

முன்னதாக, நேற்று அதிகாலை (இலங்கை நேரப்படி) இடம்பெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில், ஆர்ஜென்டினா அணியை எதிர்கொண்ட தென்னாபிரிக்கா, 24-13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

- See more at: http://www.tamilmirror.lk/158055#sthash.oxO13dQ5.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.