Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

வியக்க வைக்கும் சூரிய மண்டல மாதிரி: யூடியூப் (வீடியோ)


Recommended Posts

பதியப்பட்டது

வியக்க வைக்கும் சூரிய மண்டல மாதிரி: யூடியூப் (வீடியோ)

 

சூரிய மண்டலம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.ஆனால் உண்மையில் சூரிய மண்டலம் எத்தனை பிரம்மாண்டமானது, அதில் நம்முடைய பூமி எத்தனை சிறியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அமெரிக்க இயக்குனர்கள் வைலி ஓவர்ஸ்டிரீட் மற்றும் அலெக்ஸ் போரோஷ் உருவாக்கியுள்ள சூரிய மண்டல மாதிரியை நீங்கள் பார்க்க வேண்டும்.

இவர்கள் இருவரும் இணைந்து, சூரிய மண்டலத்தின் பரப்பிற்கு நிகரான அளவில் உருவாக்கப்பட்ட முதல் மாதிரியை உருவாக்கி இருக்கின்றனர்.இந்த மாதிரியும் சரி, இது உருவான விதத்தை விவரிக்கும் யூடியூப் வீடியோவும் வியக்க வைக்கிறது.

sun_vc_1.jpg

சூரிய மண்டலத்தில் பூமி உள்ளிட்ட கோள்களின் இருப்பிடத்தை உணர்த்தும் எண்ணற்ற படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அவை எல்லாமே உத்தேசமானவையே தவிர துல்லியமானவை அல்ல; அதாவது கோள்களின் அமைப்பையும் இருப்பிடத்தையும் அவை சித்தரிக்கின்றனவே தவிர, அவற்றுக்கு இடையே உள்ள தொலைவை உணர்த்துவதில்லை.

sun_vc_3.jpg


உதாரணமாக, இந்த படங்களில் பூமிக்கு மிக அருகில் அதன் நிலவான சந்திரன் சிறியதாக இடம் பெற்றிருக்கும். ஆனால், பூமிக்கும் ,சந்திரனுக்கும் இடையிலான உண்மையான தொலைவை கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப அவற்றின் இடைவெளியை உணர்த்த முயன்றால் பூமியின் இடத்தில் இருந்து சந்திரனை வெகு தூரத்தை காண்பிக்க வேண்டும். இப்படி சூரியன் உள்ளிட்ட ஒவ்வொரு கோளையும் அவற்றின் அளவு மற்றும் அவற்றுக்கு இடையிலான தொலைவுக்கு ஏற்ப வரைபடத்தில் காண்பிக்க முற்பட்டால் ஒன்று அவை வரைபடத்தில் குறிப்பிட முடியாத அளவுக்கு  மிகப்பெரியதாக ஆகிவிடும்;அல்லது கண்ணுக்குத்தெரியாத அளவுக்கு கடுகினும் சிறியதாகி விடும்.

ஆக, பூமி உள்ளிட்ட கோள்களை அவற்றின் நிகரான அளவுக்கு ஏற்ற வகையில் சுருக்கி காண்பிக்க கூடிய வரைபடமே சூரிய மண்டலத்தின் சரியான மாதிரியாக இருக்கும். இத்தகைய மாதிரி இதுவரை உருவாக்கப்படவில்லை.

இந்த மாதிரியை தான் ,வைலி ஓவர்ஸ்டிரீட் மற்றும் அலெக்ஸ் போரோஷ்  உருவாக்கி காட்டியுள்ளனர். சூரிய மண்டலத்தின் சரியான மாதிரியை பார்க்க வேண்டும் என்றால் அதை உருவாக்குவது தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டபடி வைலி ஓவர்ஸ்டிரீட் இந்த முயற்சியை தனது வீடியோவில் விவரிக்கிறார்.

இவர்கள் உருவாக்கிய மாதிரி காகிதத்தில் இல்லை. அமெரிக்காவின் நெவேடா பாலைவனப்பகுதியில் அமைந்துள்ளது. ஏனெனில் காகிதத்தில் எல்லாம் சூரிய மண்டலத்தை குறிப்பால்தான் உணர்த்த முடியும். அந்த பிரம்மாண்டத்தை அப்படியே சுருக்கி, மனித கண்களுக்கு புரியும் வகையில் காட்ட வேண்டும் என்றால் 7 மைல் பரப்பிலான இடம் தேவை.

sun_vc_2.jpg



அதனால் தான் பாலைவனத்தை தேர்வு செய்தனர். இந்த இடத்தில் நடுவே சூரியனை வைத்து, அதைச்சுற்றி ஒவ்வொரு கோளாக இடம்பெற வைத்துள்ளனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், இந்த மாதிரியில் சூரியனின் அளவு பெரிய பலூன் அளவில் இருக்கிறது என்றால் பூமியின் அளவு சின்ன கோலி குண்டு அளவில்தான் இருக்கிறது. வியாழன் கிரகம் ஒரு பெரிய அளவு தர்ப்பூசணி போல இருக்கிறது.

கோள்களின் சுற்றுப்பாதையை வரைவதற்காக காரில் வட்டமிட்டு அதற்கான பாதையை உருவாக்கியுள்ளனர். இதற்காக காரின் பின்னே ஒரு கேனில் விளக்கு வெளிச்சத்தை கொண்டு படம் பிடித்திருக்கின்றனர். ( வீடியோவில், இரவு நேரத்தில் சூரிய மண்டலம் உருவாகும் காட்சி பிரமிக்க வைக்கிறது).

இந்த வீடியோ முழுவதையும் பார்க்கும் போது ஏழு மைல் பரப்பிலான இடத்தில் சுற்றுப்பாதைகளில் சூரியன், பூமி, வியாழன், நெப்டியூன் ( புளோட்டோ இல்லை) கோள்களை பார்க்கும் போது கோலி குண்டு அளவிலான பூமி விண்வெளியில் பூமியின் இடம் எத்தனை சிறியது என சிந்திக்க வைக்கும்.
வீடியோவின் நடுவே இளைஞர் ஓவரிஸ்டிரீட்,  ஒவ்வொரு கோளாக பொருத்திக்கொண்டிருக்கும் போது, உலகம் என் பாக்கெட்டில்தான் எங்காவது இருக்க வேண்டும் என நகைச்சுவயாக குறிப்பிடுவது ரசிக்கும்படி இருக்கிறது.

இந்த வீடியோ ஃபேஸ்புக் மற்றும் யூடியூப்பில் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கானோரால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோ...

 

http://www.vikatan.com/news/article.php?aid=52665

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவே இவ்வளவு பிரமாண்டமென்றால் , அண்டப் பகிரண்டத்தை நினைக்க மலைப்பாய் இருக்கு...!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.