Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளர்ச்சியைத் தூண்டிவிட சிலர் முயல்கிறார்கள் - கடும் நடவடிக்கை ஜனாதிபதி அறிவிப்பு

Featured Replies

கிளர்ச்சியைத் தூண்டிவிட சிலர் முயல்கிறார்கள் - கடும் நடவடிக்கை ஜனாதிபதி அறிவிப்பு
கிளர்ச்சியைத் தூண்டிவிட  சிலர் முயல்கிறார்கள் - கடும் நடவடிக்கை ஜனாதிபதி அறிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் சபை அறிக்கையை வைத்துக் கொண்டு பாதுகாப்புப் படைகள் மத்தியில் இனக்குரோத உணர்வுகளைச் சிலர் தூண்டி விட திட்டமிட்டுச் செயற்படத் தொடங்கியிருப்பது தொடர்பாக நம்பகமான தகவல் தமக்குக் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துத் தடுப்பதில் தாம் தயக்கம் காட்டப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்தார்.

கடந்த வாரம் புதன்கிழமை இரவு அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சில விளக்கங்களை அளித்து முடித்ததின் பின்னர் அமைச்சர்கள் தமது பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார்கள்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் எவரும் தண்டிக்கப்படுவதாக  இருந்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் விதத்தில் தனிநபர் தீர்மானம் ஒன்றைத் தாம் நாடாளுமன்றத்தில் கொண்டு வருவார் என்பதாக கொழும்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியிருப்பதாக பத்திரிகைகளில் பரவலாக  பரப்புரை செய்யப்பட்டுள்ள விடயம் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

அவ்வாறு எதுவும் நடை பெறாத நிலையில் இவ்வாறான கருத்துக்களுக்கு அடிப்படை எதுவும் கிடையாது என்று விளக்கமளிக்கப்பட்டது. அவரது கருத்துக்கள் இனக்குரோதத்தைக் கிளப்பி விடும் நோக்கத்தைக் கொண்டது என்றும் கருத்து வெளியிடப்பட்டது.

ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு :-

இந்தக் கட்டத்தில் ஜனாதிபதி  ஒரு முக்கியமான விடயத்தை வெளியிட்டார். ஒரு முன்னாள் அரசியல் தலைவர், ஒரு முன்னாள் உயர் அதிகாரி, ஒரு முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மனித உரிமைகள் சபை அறிக்கையை வைத்து  பாதுகாப்புப் படையினர் மத்தியில் ஆத்திரமூட்டலை உருவாக்கி விடச் செயற்பட்டு வருகிறார்கள் என்பது குறித்து நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன என்று  தெரிவித்தார் ஜனாதிபதி.

சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும் வெளியிட்டார். என்ன நடக்கிறது என்பது குறித்து நான் அறிவேன். அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து அதனைத் தடுப்பதற்கு நான் தயங்கப் போவதில்லை என்றார் ஜனாதிபதி. இந்த மாதிரி யான செயற்பாடுகளைத் தாம் சகித் துக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாத இறுதியில் ஐ.நாவின் 70 ஆவது மாநாட்டில் உரை நிகழ்த்த இருக்கிறார். மனித உரிமைகள் சபையின்  அறிக்கை மீது அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைகளை அவர் தமது உரையில் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இராணுவத்தை அமைதிச் செயற்பாடுகளில் பயன்படுத்துவது தொடர்பான ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்ட சில தலைவர்களில் அதிபர் ஒபாமா அழைப்புக்கமைவாக சிறிசேனவும் கலந்து கொள்ள இருக்கிறார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் அவன்ட் கார்ட் மற்றும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமரன் பத்மநாதன் தொடர்பாகவும் சில அமைச்சர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். சட்டமா அதிபர் திணைக்களத்தின்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது குறித்து அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனரத்ன, சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர மற்றும் ரவி கருணா நாயக்க முதலியவர்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள்.

நம்பகத்தன்மையில் சம்பந்தன் சந்தேகம் :-

இலங்கை அரசு தெரிவித்துவரும் நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும் என்ற கருத்தை தமிழர் சார்பான இரண்டு முக்கிய பிரமுகர்கள் நிராகரித்துள்ளார்கள். அவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்  இரா. சம்பந்தனும் ஒருவர். திரு கோணமலை யில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமை மற்றும்  மூதூரில் உதவி நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை தொடர்பாக உடலகம ஆணைக் குழுவுக்கு  என்ன  நேர்ந்தது என்பதை நாங்கள் அறிவோம்.

உடல கம ஆணைக் குழுவுக்கு உதவி புரிவதற்கென நியமிக்கப்பட்ட சர்வதேச தகுதி வாய்ந்த பிரமுகர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் விலகிக் கொண்டார்கள். விசாரணைகளை சர்வதேச தரத்துக்கேற்ப நடத்துவதற்கோ, மிகமோசமான மனித உரிமை மீறல்களை விசாரிப்பதிலோ அரசுக்கு அரசியல் விருப்பமோ அர்ப்பணிப்போ கிடையாது என்ற அவர்கள் கூறியிருந்தார்கள் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரிட் டனிலுள்ள உலகத் தமிழர் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் கூறுகையில்; முற்றிலும் உள்ளக விசாரணை செயற்பாடானது பல பத்து வருடகாலமாக இடம்பெற்று வந்துள்ள வன்கொடுமைகள், துர் நடத்தைகள் மற்றும் வாக்குறுதி மீறல்களினால் ஏற்பட்டுள்ள சகல மட்டங்களிலும் நியாயமான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதென்பது சாத்தியமற்றதாகும் என்று  தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிபதிகள்  வழக்குதொடுநர்கள், சட்டத்தரணிகள் மற்றும் புலனாய்வாளர்களைக் கொண்ட உயர்மட்ட கலப்பு சிறப்பு நீதிமன்றம் நியமிக்கப்படுவதைத் தங்கள் அமைப்பு வரவேற்பதாக அவர் கூறியுள்ளார்.
உயர் மட்டக் கலப்பு சிறப்பு நீதி மன்றம் அமைக்கப்படுவதை ஜனதா விமுக்தி பெரமுனவும் எதிர்த்துள்ளது. உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தாங்கள் கருதுவ தாக ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.

முன்னதாக உள்ளக விசாரணை நடத்தும் இலங்கை யோசனையை ஆதரிப்பதாக தெரிவித்திருந்ததோடு இலங்கையோடு இணைந்து அது தொடர்பான பிரேரணையயான்றையும் மனித உரிமைகள் சபையில் கொண்டு வருவதாகவும் அமெரிக்கா அறிவித்திருந்தது. அதன் மீதான உறுப்பு நாடுகளுடனான கலந்துரையாடல்களை கடந்த வியாழக்கிழமை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தக் கலந்துரையாடல் 23ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கையின்மீது இந்தப் பிற்போடல் நடைபெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் வொ´ங்டனிலுள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களமும் லண்டனிலுள்ள வெளி நாட்டு மற்றும் கொமன் வெல்த் காரியாலயங்களின் அதிகாரிகளும் வெளியுறவு அமைச்சர் சமரவீரவுக்கு அனுப்பியுள்ள செய்தியயான்றில் மனித உரிமைகள் சபையின் பரிந்துரைகளின் காரணமாக தாங்களும் சிறப்புக் கலப்பு நீதிமன்றங்களின் விசாரணையையே ஆதரிக்கும் நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா தயாரித்துள்ள 5 பக்கங்களைக் கொண்ட தீர்மானவரைவில்  அமெரிக்காவின் இந்தப் புதிய நிலைப்பாடு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. உள்ளக விசாரணை பொறி முறை அல்லது உயர்மட்ட கலப்பு சிறப்பு நீதிமன்றங்கள் என்றும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் சர்வதேச புலனாய்வாளர்கள், வழக்கு தொடுநர்கள் மற்றும் நீதிபதிகளை இலங்கையின் நீதி விசாரணையில் தொடர்புபடுத்திக் கொள்ளுமாறு கேட்கப்பட்டிருந்தது. அதைத் தான் மனித உரிமை சபையானது உயர் மட்ட சிறப்பு கலப்பு நீதி மன்றங்களின் மிக முக்கிய அம்சமாக வலியுறுத்தியுள்ளது. இந்தத் தீர்மான முன்வரைவு உறுப்பு நாடுகளால் ஆராயப்படும் போது சில மாற்றங்களுக்குள்ளாகலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகின்றது.

மங்களவின் கருத்து:-

இந்த நிலையில் இலங்கை அரசு உத்தேசித்துள்ள உள்ளக பொறி முறையில் உயர்மட்ட கலப்பு சிறப்பு நீதிமன்ற விசாரணையையும் உள்ளடக்குமா அல்லது அதனை நிராகரிக்குமா என்ற கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஒரு பேட்டியில் விடையளித்திருந்தார். இதுவும் கூட நாம் ஆராயக் கூடிய விடயங்களில் ஒரு சாத்தியப்பாடான  அம்சமாகக் காணப் படுகின்றது. இந்தக் கருத்துக்கள் அனைத்துக்கும் நாம் எமது கதவு களை மூடிக் கொண்டிருக்க வில்லை என்றார்  அமைச்சர். நாம் இறுதியில் செய்யக்கூடியவை எம்மில் ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் இருக்க முடியாது. சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்வதற் கான நம்பகமான பொறி அமைப் பாக அது இருக்க வேண்டும்  என்றார்.

இலங்கை அரசு எடுத்துள்ள முடிவுகள் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள தகவல்களில் மேலும் சில வருமாறு; காணாமற்போன வர்கள் தொடர்பாக கவனம் செலுத் துவதற்கான நிரந்தர காரியாலயம் ஒன்றை விரைவாக நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.  இவை தொடர்பாக பல சட்டவரைவுகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன. வெறுப்பைத் தூண்டுவதற்கு எதிரான சட்டங்கள், தகவல்கள் அறியும் சட்டங்களும் ஆலோசனையில் உள்ளன.

இலங்கை இராணுவத்தை ஐ.நா. அமைதிப் படையணிகளில் சேர்ப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. இராணுவத்துக்கு அதிக பொறுப்புள்ள கெளரவமான பணிகளை ஒதுக்க ஆலோசிக்கப்படுகின்றது. இல்லையயனில் அவர்கள் அரசியல்வாதிகளுக்கு பணிபுரிபவர்களாய் இருக்க முடியாது. கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளின் சேவகர்களாய் நாய்களைக் குளிப்பாட்டுவது, மரக்கறிகளை விற்பது, துணிமணிகளை துவைப்பது மற்றும் சமையல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். புதிய நடைமுறையில் இவர்கள் கெளரவமாக நடத்தப்பட முடியும்.

http://onlineuthayan.com/article/28

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.