Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சபை செயற்றிறனற்ற ஒன்று - வடக்கு விவசாயிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விளைச்சலின் கழிவு முறையை நீக்க 2 வருடங்களாகியும் முயற்சி இல்லை

 

வடக்கு மாகாண சபை செயற்றிறனற்ற ஒன்று என்று கடுமையாக விமர்சிக்கின்றனர் வடக்கு விவசாயிகள். சந்தைகளில் விளைபொ ருள்களுக்கு கழிவு வழங்கப்படுவதை தடுத்து நிறுத்துவதாக வடக்கு மாகாணசபை அறிவித்தபோதும் கடந்த இரண்டு வருட காலங்களில் ஒரு நாள்கூட அது நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வடக்கில் உள்ள பெருஞ் சந்தைகளுக்கு விவசாயிகள் தமது விளை பொருள்களைக் கொண்டு வரும் போது வியாபாரிகள் அவற்றுக்குப் பெரும் கழிவுகளைக் கோருகின்றனர். இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். உடல் உழைப்பில் பெரும் பகுதி கழிவாகவே வீணாகிறது எமக்கு. ஆனால், வியாபாரிகள் அதனையும் விற்றுக் காசாக்கி விடுகிறார்கள்'' என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக சந்தைகளில் கழிவு வழங்கப்படும் முறைமை உடனடியாக நீக்கப்படும் என்று வடக்கு மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் 2013 டிசெம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட போது, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் அறிவிக்கப்பட்டது. 2014 ஜனவரி மாதம் முதல் அது நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பு வந்தபோது நம்பிக்கை ஏற்பட்டது.மகிழ்ச்சி அடைந்தோம். விவசாயிகளுக்கு வடக்கு மாகாண சபையால் விடிவு ஏற்படும் என்று நினைத்தோம். ஆனால் எல்லாம் மண்ணாகிவிட்டது. அறிவிப்போடு அந்த விடயத்தைக் கைவிட்டுவிட்டார் அமைச்சர். அவருக்கு சொகுசுக் கார் கிடைத்த பின்னர், விவசாயிகளின் துன்பத்தைக் கைவிட்டுவிட்டார் போலும்'' என்று சூடாகக் கருத்துத் தெரிவித்தார் நீர்வேலியைச் சேர்ந்த விவசாயி என்.ரவீந்திரன். கழிவு முறையை அகற்ற இனியாவது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அவர் உட்பட விவசாயிகள் பலரும் கோருகின்றனர்.

வடபகுதிச் சந்தைகள் பலவற்றிலும் பத்துக்கு ஒன்று என்ற ரீதியில் கழிவு  முறைமை நேற்று வரையில் நடை முறையில் இருப்பதை உதயன் செய்தியாளர்கள் சந்தைகளுக்கு நேரில் சென்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். தென்னிலங்கையில் இருந்து வரும் மரக்கறிகளுக்கு கழிவு முறைமை பொருந்தலாம்.

நீண்ட தூரப் பயணத்தில் அவை நசுங்கி உருக்குலைந்து விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால் அவற்றுக்கு கழிவு கேட் பதில் நியாயம் உண்டு. ஆனால், உள்ளூர் விளைபொருள்களுக்கும் அதேபோன்று கழிவு கேட்பது நியாயம் அல்ல. மற்ற எல்லா இடங்களிலும் பார்க்க யாழ்ப்பாணத்தில் விவசாயச் செய்கைக்கு அதிக செலவு பிடிக்கும் நிலையில் கழிவு முறையால் விவசாயிகள்தான் முழுப் பாதிப்பையும் எதிர்கொள்கிறார்கள்.

மாகாண சபை எதுவும் செய்யாமல் சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறது. விவசாய அமைச்சர் கடந்த இரண்டு வருடத்தில் இது பற்றி ஒரு தடவைகூட வாய் திறக்கவில்லை. கழிவு முறை நீக்கம் என்று அறிவித்ததோடு சரி.''
இப்படி மூச்சுவிடாமல் கோபத்துடன் சீறினார் செ.அருமைத்துரை. அரச சம்பளம் போதாது என்று தனது பெரிய குடும்பத்தின் செலவுகளை ஈடுகட்ட பரம்பரைக் காணியில் விவசாயம்  செய்கிறவர் அவர்.

""மரக்கறிக்கு மட்டுமல்ல வெங்காயத்துக்கும்கூட கழிவு கேட்கிறார்கள்'' என்றார் பருத்தித்துறையைச் சேர்ந்த விவசாயி தங்கவேல்.சந்தைகளில் கழிவு முறையை நீக்க முடியாமற்போனமைக்கு உள்ளூராட்சி சபைகள்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டுகிறார் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கர நேசன். ""கழிவு முறையை நீக்க சந்தைகளின் ஆளுகையைத் தம்வசம் வைத்திருக்கும் உள்ளூராட்சிச் சபைகளின் ஊடாக நாம் முயற்சிகளை மேற்கொண்டோம்.

இருப்பினும் சந்தைகளைக் குத்தகைக்கு விடும் பணிகள் அப்போது முடிந்திருந்தன. எனவே உடனடியாக புதிய முறையை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என்று பிரதேச, நகர சபைகள் தெரிவித்தன. புதிய குத்தகை ஆண்டில் இருந்தே இதனைநடைமுறைப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தன. இந்த ஆண்டு ஆரம்பத்தில் நாம் இதனை நடை முறைப்படுத்த முயன்றபோதும் இதுவே நிகழ்ந்தது. அனால் இதனை இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அடுத்த ஆண்டில் இதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தற்போது முயற்சிகள் இடம் பெறுகின்றன''  என்றார் அமைச்சர். 

கழிவு முறையை நிறுத்தும்படி கோரும் கடிதம் ஒன்று விவசாய அமைச்சிடம் இருந்து கிடைக்கப் பெற்றது. ஆனால், அதற்கான பொறி முறை ஒன்றையும் அமைச்சுப் பரிந்துரைக்கவில்லை. நீண்ட காலமாக நடைமுறையில் இருக்கும் இந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது எப்படி என்பது தொடர்பாக விவசாய அமைச்சோ அமைச்சரோ எந்த ஆலோசனையையும் முன்வைக்காமையால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது'' என்று தெரிவித்தார் வலி. தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஸ்.

மருதனார்மடம் பிரதான சந்தை வலி. தெற்குப் பிரதேச சபையின் கீழ் வருகிறது. அங்கும் கழிவு முறைமை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.      

 

http://www.onlineuthayan.com/news/555

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.