Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்கின் சில பகுதிகள் விரைவில் மக்கள் பாவனைக்கு வலி.வடக்கின் சில பகுதிகள் விரைவில் மக்கள் பாவனைக்கு

Featured Replies

வலி.வடக்கின் சில பகுதிகள் விரைவில் மக்கள் பாவனைக்கு
வலி.வடக்கின் சில பகுதிகள் விரைவில் மக்கள் பாவனைக்கு

ஒட்டகப்புலம் ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் வறுத்தலைவிளானில் உள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபை வீட்டுத் திட்டக்காணிகள் என்பவற்றை பொதுமக்களின் பாவனைக்கு கையளிப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் இணங்கியுள்ளது என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

1990 ஆம் ஆண்டு வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்தனர். இதன் பின்னர் வலி.வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் படிப்படியாக மீள்குடியமர்வு நடவடிக்கைகள் 2012 ஆம் ஆண்டு வரையில் இடம் பெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென 6 ஆயிரத்து 384 ஏக்கர் காணி, வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு படைத்தரப்பின் தேவைக் காக நிரந்தரமாக சுவீகரிக்கப்பட்டது. 


இதன் பின்னர் குறித்த காணிகளின் உரிமையாளர்களினால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும் மகிந்த அரசின் காலத்தில் எந்தவொரு காணித் துண்டும் மேலதிகமாக விடுவிக்கப்பட வில்லை. மாறாக உயர் பாதுகாப்பு வலயப் பகுதி பலப்படுத்தப்பட்டு, அந்தப் பிரதேசத்தினுள் இருந்த வீடுகள் இராணுவத்தினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
கடந்த ஜனவரி மாதம் ஆட்சி மாற் றம் ஏற்பட்ட பின்னர் அமைந்த அர சால், வலி.வடக்கில் காணிகள் மூன்று கட்டங்களாக ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்டது. இவ்வாறு காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பிரதேசத்திலுள்ள பொதுக் கட்டடங்கள்,வீதிகள் என்பன பாதுகாப்புத் தரப்பினரால் தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. 


இதனால் மக்களின் மீள்குடியமர்வு முழுமையாகப் பூர்த்தியாகாத நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்த லுக்கு முன்னதாக, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர். 


இதன் பின்னர் யாழ்.மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் நடத்தினர். குறித்த கலந்துரையாடலில் பாதுகாப்புத் தரப்பினரும் பங் கெடுத்திருந்தனர். இதன் போது, பொதுமக்களாலும் மக்கள் பிரதி நிதிகளாலும், சில காணி விடுவிப்புத் தொடர்பாக படைத்தரப்புக்கு வேண்டுகோள் முன்வைக்கப்பட் டிருந்தது.  அதற்குத் தற்போது மாவட்டச் செயலகத்துக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது. 


சாந்தைச் சந்தியிலிருந்து செல்லும் 150 மீற்றர் நீளமான வீதியை விடுவிப்பதற்கும், அச்சுவேலியிலிருந்து வசாவிளான் சந்திக்கும் வரும் பாதையில் இடையில் அமைந்துள்ள மயான வீதியை விடுவிப்பதற்கும், ஒட்டகப்புலம் ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையை விடுவிப்பதற்கும், வறுத்தலை விளானில் ஏற்க னவே பகுதியாக விடுவிக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான வீட்டுத் திட்டக்காணியில் எஞ்சிய 60 வீட்டுத் திட்டக் காணியை விடுவிப்பதற்கும் படைத்தரப்பினர் இணங்கியுள்ளனர்.


தற்போது உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பகுதியிலுள்ள 7 ஆலயங்களில், விசேட பூசை வழிபாடுகள் நடத்துவதற்கான அனுமதியும் படைத் தரப்பால் வழங்கப்பட் டுள்ளது என்றும் மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.    

http://onlineuthayan.com/news/581

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.