Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் தென்ஆப்ரிக்கா T20, ஒரு நாள் போட்டி செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

ஏமாற்றத்தை வெளிப்படுத்த வேறு வழிகள் உள்ளன: ரசிகர்களுக்கு சச்சின் வேண்டுகோள்

 
TENDULKAR_2575052f_2575130f.jpg
 

கட்டாக் டி20 போட்டியில் மைதானத்தில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது கிரிக்கெட் ஆட்டத்துக்கு நன்மை பயக்காது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

“அன்றைய தினம் ஆட்டத்தின் போது நடந்தவை நிச்சயமாக கிரிக்கெட்டுக்கு நன்மை பயக்கக்கூடியது அல்ல. இதற்கு முன்பாகவும் இப்படி நடந்துள்ளது. நாம் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் கிரிக்கெட் ஆட்டத்தின் மீது நிறைய நேசம் கொண்டுள்ளோம். நாம் இந்த ஆட்டத்தை அதிகம் நேசிப்பதால்தான் அதிக ஏமாற்றமும், வெறுப்பும் ஏற்படுகிறது.

ஏமாற்றத்தையும் அதிருப்தியையும், வெறுப்பையும் வெளிப்படுத்தும் விதங்கள் உள்ளன. கட்டாக்கில் காண்பிக்கப் பட்டது போன்ற உணர்வுகள் விரும்பத் தகாதது.

எனவே ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி காட்ட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஏமாற்றங்களையும், வெறுப்பையும் வேறு வழிகளில் கையாள முடியும்” இவ்வாறு கூறினார் சச்சின்.

http://tamil.thehindu.com/sports/ஏமாற்றத்தை-வெளிப்படுத்த-வேறு-வழிகள்-உள்ளன-ரசிகர்களுக்கு-சச்சின்-வேண்டுகோள்/article7734827.ece

நாளைய போட்டி காம்ப்ளி அழுத கொல்கத்தால... பார்த்து விளையாடுங்க பாஸ்! ( வீடியோ)

 

ந்திய அணிக்கும் தென்ஆப்ரிக்க அணிக்குமிடையேயான 3வது டி20 போட்டி, கொல்கத்தா நகரில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக,  இந்திய அணி வீரர்கள் கொல்கத்தா சென்றடைந்தனர். கட்டாக்கில் நடந்த 2வது டி20  போட்டியின்போது, இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

 

 

                                 

 

தற்போது கடைசி போட்டி நடைபெறும் கொல்கத்தா ரசிகர்களும் கட்டாக் ரசிகர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை. மோகன்பகான்-  ஈஸ்ட் பெங்கால் கால்பந்து மோதலின் போது, கொல்கத்தா ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது வாடிக்கைதான்.

கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி மோசமாக விளையாடி, தோல்வி கண்டது. அந்த சமயத்தில் ஈடன் கார்டனில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். வினோத் காம்ப்ளி அழுது கொண்டே மைதானத்தை விட்டு வெளியே வந்தது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் சொதப்பும்பட்சத்தில், கொல்கத்தா ரசிகர்களும் கலவரத்தில் ஈடுபட வாய்ப்பு அதிகமுள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=53374

  • Replies 70
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ரஹானே, அமித் மிஸ்ராவை தொடக்க வீரர்களாக களமிறக்க எண்ணியிருந்த தோனி

கோலி, தோனி. | படம்: ஏ.எஃப்.பி.
கோலி, தோனி. | படம்: ஏ.எஃப்.பி.

கொல்கத்தாவில் நேற்று 3-வது டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது குறித்து தோனி ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார். ஏனெனில் இந்தப் போட்டியில் சில பரிசோதனை முயற்சிகளை அவர் மேற்கொள்வதாக இருந்தார்.

இதுகுறித்து தோனி கூறும்போது, “ஒருநாள் போட்டித் தொடர் வருவதை முன்னிட்டு சில பரிசோதனை முயற்சிகளையும், மாற்றங்களையும் செய்யவிருந்தோம். பந்து வீச்சு, பேட்டிங் என்று பலவித புதுமுயற்சிகளை செய்ய எண்ணியிருந்தோம், ஆனால் ஆட்டம் நடைபெறாமல் போனது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

அஜிங்கிய ரஹானேயுடன் அமித் மிஸ்ராவை தொடக்க வீரராக களமிறக்க எண்ணியிருந்தோம்.

கொல்கத்தாவில் ஆடுவது எப்போதும் மகிழ்ச்சியாந்து, ரசிகர்களின் ஆரவாரம் அபாரமானது. அதனால் ஆட முடியாமல் போனது ஏமாற்றமளிக்கிறது.

ஒருநாள் போட்டியில் நாங்கள் எந்த பிட்சைக் கொடுத்தாலும் ஆடுவதுதான் வழக்கம். ஆனால் உள்நாட்டுத் தொடரை முழுதும் பயன்படுத்திக் கொள்ள விளையாடுவோம்.

ஒருநாள் தொடர் நன்றாக இருக்கும். எந்தமாதிரியான பிட்ச்கள் அமைகிறது என்பதைப் பொறுத்து ஆட்டத்தின் விறுவிறுப்பு தீர்மானிக்கப்படும்.

சில மைதனாங்களில் டாஸ் ஒரு முக்கியமான விஷயம். முதல் ஒருநாள் போட்டி நடைபெறும் கான்பூர் அத்தகைய மைதானம்” என்றார்.

அணி இயக்குநர் ரவி சாஸ்திரி கூறும்போது, “அதிக டி20 போட்டிகளில் ஆடாததே தோல்விக்குக் காரணம். ஆனால் சாக்குப் போக்குகள் கூற விரும்பவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்க அணி எப்போதும் கடினமானது.

ஒருநாள் கிரிக்கெட்டில் நமது அணி சிறப்பாக உள்ளது, எனவே ஒரு நல்ல ஒருநாள் தொடரை நாம் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/ரஹானே-அமித்-மிஸ்ராவை-தொடக்க-வீரர்களாக-களமிறக்க-எண்ணியிருந்த-தோனி/article7742898.ece

  • தொடங்கியவர்

தோனிக்கு ‘அக்னிப்பரீட்சை: ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

dhoni, india

கான்பூர்: இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இது,  தோனியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தொடராக கருதப்படுகிறது. 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள், நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் நடந்த ‘டுவென்டி–20’ தொடரை இந்திய அணி 0–2 என இழந்தது. இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டி உ.பி., மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது.

தோனிக்கு நெருக்கடி:

கடந்த ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி இழந்தது. அதன்பின் மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்த தோனி, சமீபத்தில் முடிந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் களமிறங்கினார். இருப்பினும் சொந்த மண்ணில் தொடரை இழக்க நேரிட்டதால் தோனியின் கேப்டன் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருநாள் தொடரை கைப்பற்றாவிட்டால், கேப்டன் பதவி விராத் கோஹ்லியிடம் சென்றுவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ரகானே வாய்ப்பு:

இந்திய அணிக்கு வழக்கம் போல ஷிகர் தவான், ரோகித் சர்மா துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். ‘டுவென்டி–20’ தொடரில் சிறந்த துவக்கம் தந்த ரோகித் சர்மாவின் பொறுப்பான ஆட்டம் ஒருநாள் போட்டியிலும் தொடரலாம். இவருக்கு தவான் ஒத்துழைப்பு தர வேண்டும். முதலிரண்டு ‘டுவென்டி–20’ போட்டியில் ‘டக்–அவுட்டாகி’ ஏமாற்றிய அம்பதி ராயுடுவுக்கு பதில அஜின்கியா ரகானேவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இதன்மூலம் ‘மிடில்–ஆர்டர்’ வலுவடையும். விராத் கோஹ்லி, ரெய்னா, கேப்டன் தோனி உள்ளிட்டோர் அதிரடியாக ரன் சேர்க்கும் பட்சத்தில் இமாலய ஸ்கோரை பதிவு செய்யலாம். ‘ஆல்–ரவுண்டருக்கான’ இடம் காலியாக இருப்பதால் குர்கீரத் சிங் மன் அறிமுகம் செய்யப்படலாம்.

அஷ்வின் நம்பிக்கை:

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு கேப்டன் தோனிக்கு கவலை அளிக்கிறது. உமேஷ் யாதவ் வரவால் வேகத்தின் பலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஷ்வர் குமார், மோகித் சர்மா உள்ளிட்ட ‘வேகங்கள்’ எழுச்சி காண வேண்டும். ‘சுழலில்’ அஷ்வின் நம்பிக்கை அளிக்கிறார். இவரது பந்துவீச்சு தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் தொல்லையாக அமையும். இவருக்கு அமித் மிஸ்ரா, அக்சர் படேல் ஒத்துழைப்பு தந்தால் தென் ஆப்ரிக்காவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தலாம்.

ஸ்டைன் வருகை:

தென் ஆப்ரிக்க அணிக்கு ஹசிம் ஆம்லா நல்ல துவக்கம் தர வேண்டும். ‘டுவென்டி–20’ போல கேப்டன் டிவிலியர்ஸ், டுமினியின் அதிரடி ஆட்டம் மீண்டும் தொடரலாம். ‘மிடில்–ஆர்டரில்’ டுபிளசி, குயின்டன் டி காக், டேவிட் மில்லர் உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.

மார்னே மார்கல், ஸ்டைன் வரவால் தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்துவீச்சு வலுவடைந்துள்ளது. கிறிஸ் மோரிஸ், கைல் அபாட், ரபாடா, பெகார்டியன் உள்ளிட்ட ‘வேகங்கள்’ எழுச்சி கண்டால் இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும். தென் ஆப்ரிக்க அணியில் இம்ரான் தாகிர், ஆரோன் பங்கிசோ என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர். இருப்பினும் ‘டுவென்டி–20’யில் அசத்திய தாகிர், ஒருநாள் தொடரிலும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கலாம். பகுதிநேர ‘சுழலில்’ டுமினி கைகொடுத்தால் நல்லது.

ரகனோவுக்கு ‘நோ’

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்காத ரகானேவுக்கு இன்று இடம் கிடைக்காது எனத்தெரிகிறது. இது குறித்து கேப்டன் தோனி கூறுகையில்,‘‘ அணியில் ரோகித், தவான், கோஹ்லி என முதல் 3 இடத்திற்கு வீரர்கள் உள்ளனர். ரோகித்தை எடுத்துக் கொண்டால், உள்ளூர் போட்டியில் ‘மிடில்–ஆர்டரில்’ களம் காண்பார். சர்வதேச போட்டியில், துவக்க வீரராக இருப்பார். ரகானேவுக்கு துவக்கம்தான் பொருத்தமாக இருக்கும். இந்நிலையில், ரகானே ‘லெவன்’ அணியில் இடம் பிடிப்பது கடினம்தான்,’’ என்றார். 

வருகிறது ‘கும்கி’ குரங்கு

கான்பூரில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனை விரட்ட நீண்ட வாலுடைய ‘கும்கி’ எனப்படும் ‘லங்கூர்’ வகை குரங்குகள் இரண்டை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.

இந்த ‘கும்கி’ குரங்கு, சாதாரண குரங்குளை பயமுறுத்தி விரட்டி அடிக்குமாம். இதனால் ரசிகர்கள் குரங்கு தொல்லை இல்லாமல் போட்டியை ரசிக்கலாம். இந்த குரங்கு ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 1000 முதல் ரூ. 1500 வரை தரப்படுகிறது.

சென்னையில் எப்போது

 

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடருக்கான அட்டவணை:

நாள் போட்டி இடம்

அக். 11 முதல் ஒருநாள் கான்பூர்

அக். 14 2வது ஒருநாள் இந்துார்

அக். 18 3வது ஒருநாள் ராஜ்கோட்

அக். 22 4வது ஒருநாள் சென்னை

அக். 25 5வது ஒருநாள் மும்பை

* முதல் ஒருநாள் போட்டி காலை 9 மணிக்கும், மற்ற நான்கு போட்டிகள் மதியம் 1.30 மணிக்கும் துவங்கும்.

மழை வருமா

இன்றைய போட்டி நடக்கவுள்ள கான்பூரில் வெப்பநிலை அதிகபட்சமாக 38, குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் தெளிவாக காணப்படும் என்பதால் மழை வர வாய்ப்பு இல்லை. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

நிலைக்குமா ‘நம்பர்–2’

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா (127 புள்ளி), இந்தியா (115), தென் ஆப்ரிக்கா (110) அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

* இந்திய அணி ‘நம்பர்–2’ இடத்தை தக்கவைத்துக் கொள்ள குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியம்.

* இந்திய அணி 5–0 என தொடரை முழுமையாக கைப்பற்றினால், 119 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கும். தென் ஆப்ரிக்க அணி 107 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு தள்ளப்படும்.

* தென் ஆப்ரிக்க அணி 5–0 என தொடரை வென்றால், இந்திய அணி 110 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்படும். தென் ஆப்ரிக்கா 115 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறும்.

* தென் ஆப்ரிக்க அணி 4–1 என தொடரை வென்றால், 113 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறும். இந்திய அணி 112 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்படும்.

* தென் ஆப்ரிக்க அணி 3–2 என தொடரை வென்றால், இந்திய அணி 114 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கும். தென் ஆப்ரிக்க அணி 112 புள்ளிகளுடன் 3வது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும்.

* ஒருவேளை தொடர் 2–2 என சமன் ஆனால் இந்தியா 115 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், தென் ஆப்ரிக்கா 111 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் நீடிக்கும்.

ஆடுகளம் எப்படி

கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதான ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இந்திய அணியில் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பிடிக்கலாம்.

http://sports.dinamalar.com/2015/10/1444492461/dhoniindia.html

  • தொடங்கியவர்

கடைசி 5 ஓவர்களில் பவுண்டரி, சிக்சர் மழை; டிவில்லியர்ஸ் சதம்: தென் ஆப்பிரிக்கா 303 ரன்கள் குவிப்பு

 
  • சத நாயகன் டிவில்லியர்ஸ் பந்தை விளாசும் காட்சி. இடம்: கான்பூர். முதல் ஒருநாள் போட்டி. | படம்: ஏ.எஃப்.பி.
    சத நாயகன் டிவில்லியர்ஸ் பந்தை விளாசும் காட்சி. இடம்: கான்பூர். முதல் ஒருநாள் போட்டி. | படம்: ஏ.எஃப்.பி.
  • விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடும் உமேஷ். | படம்: ஏ.பி.
    விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடும் உமேஷ். | படம்: ஏ.பி.

கான்பூரில் இன்று தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி டிவில்லியர்ஸின் அற்புதமான விளாசல் சதத்துடன் 50 ஒவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது.

ஏ.பி.டிவில்லியர்ஸ், ஃபர்ஹான் பெஹார்டீன் ஜோடி கடைசி 4.5 ஓவர்களில் 65 ரன்களை விளாசித் தள்ளினர், பின்னி, புவனேஷ், உமேஷ் யாதவ் ஆகியோர் மிக மோசமாக கடைசி ஓவர்களை வீசினர். யார்க்கர் வீசும் முயற்சியில் புல்டாஸ்களை வாரி வழங்கினர். மற்ற பந்து வீச்சு முறைகள் எதுவும் இவர்களுக்குக் கைகூட வில்லை.

இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு அஸ்வின் 4.4 ஓவர்களே வீச முடிந்ததுதான், அவர் காயம் காரணமாக வீச முடியவில்லை. அவரும் முதல் ஓவரிலேயே டி காக்கை வீழ்த்தினார். ஒரு ஓவருக்குப் பிறகு அஸ்வினை தோனி கட் செய்தார். அப்போது ஏன் என்று விளங்கவில்லை, பிறகுதான் அவர் மைதானத்துக்கு வெளியே போவதும் வருவதுமாக இருந்தார், பிறகுதான் அவருக்குக் காயம் என்று தெரியவந்தது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது.

ஆனாலும் 23.2 ஓவர்களில் 104/2 என்று தென் ஆப்பிரிக்கா சற்றே ரன் எடுக்க முடியாமல் தவித்து வந்தது. அந்த நிலையில் அஸ்வின் இருந்து 2 விக்கெட்டுகளைக் குறிப்பாக டிவில்லியர்ஸை சாய்த்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். ஆனால்... டிவில்லியர்ஸை நிற்க விட்டால் என்ன நடக்குமோ அது நன்றாகவே நடந்தது.

புவனேஷ் குமார், ஸ்டூவர்ட் பின்னியையெல்லாம் தோனி எந்த தைரியத்தில் டிவில்லியர்ஸுக்கு எதிராக வீச அழைக்கிறார் என்பது புரியவில்லை. விளாசலைத் தொடக்கி வைத்தவர் ஸ்டூவர்ட் பின்னி. 45-வது ஓவரை அவர் வீச, ஆமை வேகப்பந்து புல் லெந்தாக விழ டுமினி ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் அடித்தார். பிறகு 1 ரன் எடுத்து டிவில்லியர்ஸ் கையில் ஸ்ட்ரைக்கைக் கொடுக்க, டிவில்லியர்ஸுக்கு ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார் பந்து பவுண்டரிக்கு பறந்தது. மீண்டும் ஒரு ஃபுல் பந்தை லெக் அண்ட் மிடிலில் வீச சற்றே ஒதுங்கிக் கொண்டு அலட்சியமாக லாங் ஆனில் சிக்சர் அடித்தார் டிவில்லியர்ஸ். அடுத்த பந்தை மேலும் அலட்சியமாக மேலேறி வந்து ஒரே அடி எக்ஸ்ட்ரா கவரில் பந்து கிழித்துக் கொண்டு சென்றது. 21 ரன்கள் அந்த ஓவரில். இதுதான் தொடக்கம்.

46-வது ஓவரில் ஒரு சிக்சர் அடித்து ஆடிவந்த அபாய வீரர் டுமினியை மிகவும் வைடாக ஒரு பந்தை வீசி வீழ்த்தினார் உமேஷ் யாதவ், அது விக்கெட் பந்தேயல்ல, வைடு பந்து, அதனை துரத்தி தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டுமினி. 46-வது ஓவர் முடிவில் 241/5 என்றே இருந்தது தென் ஆப்பிரிக்கா.

அதன் பிறகு நடந்தது உரியடி சாத்துமுறை. 47-வது ஓவரில் குமார் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் கொடுத்தார். 48-வது ஓவரை உமேஷ் வீச, அழகாக பேட்ஸ்மெனுக்கு வாகாக இன்ஸ்விங்கர், புல் லெந்தில் வீசப்பட பெஹார்டீன் 2 பவுண்டரிகளை விளாசினார். பிறகு புல்டாஸை டிவில்லியர்ஸ் பவுண்டரிக்கு விரட்டினார்.

49-வது ஓவரில் புவனேஷ் குமாரின் பூப்பந்து வீச்சுக்கு டிவில்லியர்ஸ் அடிகொடுத்தார். யார்க்கர் தவற, ஃபுல்டாஸ் பவுலர் தலைக்கு மேல் சிக்சர். பிறகும் வேகமற்ற ஒரு ஃபுல் லெந்த் பந்து லாங் ஆனில் ரெய்னா தலைக்கு மேல் ஒரு சிக்சர். மீண்டும் புல்டாஸ் 2 ரன்கள், பிறகும் ஒரு புல்டாஸ் இம்முறை பவுண்டரி. 19 ரன்கள் வந்தது.

50-வது ஓவரை வீச உமேஷ் வந்தார். டிவில்லியர்ஸ் 98 ரன்களில் இருந்தாலும், பெஹார்டீன் மீண்டும் புல் லெந்த், புல்டாசில் 2 பவுண்டரிகள் மற்றும் ஸ்லோ பந்தை லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார். 4-வது பந்துதான் சிங்கிள் எடுத்தார். 5-வது பந்து டிவில்லியர்ஸ் சுழற்ற சிக்கவில்லை. ஆனால் கடைசி பந்து மீண்டும் ஒன்றுமில்லாத வெற்றுப் பந்தாக அமைய லாங் ஆனில் சிக்ஸ், டிவில்லியர்ஸ் 73 பந்துகளில் சதம் கண்டார். அணியும் 300 ரன்களைக் கடந்தது. பெஹார்டீன் 19 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து நாட் அவுட், டிவில்லியர்ஸ் 73 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 104 நாட் அவுட்.கான்பூரில் 300 ரன்களைக் கடந்த முதல் அணியானது தென் ஆப்பிரிக்கா.

முன்னதாக டி காக் 29 ரன்களில் அஸ்வினிடம் வீழ்ந்தார். ஹஷிம் ஆம்லா 37 ரன்கள் எடுத்து மிஸ்ராவின் அபாரமான பந்தில் பவுல்டு ஆனார். டுபிளேசிஸ் 77 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ்விடம் எல்.பி.ஆனார். பிறகு அபாய வீரர் மில்லர் 13 ரன்களில் மிஸ்ராவை மேலேறி வந்து அடிக்க முயன்று ஸ்டம்ப்டு ஆனார்.

மிஸ்ரா இன்று அருமையாக வீசினார். அவர் 10 ஓவர்கள் 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள். உமேஷ் யாதவ் 10 ஓவர்கள் 71 ரன்கள் 2 விக்கெட். புவனேஷ் குமார் கடைசி 5 ஒவர்களில் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்து 67 ரன்கள் விக்கெட் இல்லை. ஸ்டூவர்ட் பின்னி 8 ஓவர்களில் 63 ரன்கள். இடையில் அஸ்வின் வீச முடியாத காரணமாக ரெய்னா 7 ஓவர்களை வீசி 37 ரன்களை விட்டுக் கொடுத்தார், கட்டுப்படுத்தினார், ஆனால் விக்கெட்டுகள் எடுக்க வேண்டிய கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஒன்று, இரண்டு என்று ஸ்கோரை நகர்த்தி தனது விக்கெட்டைப் பாதுகாத்து பிற்பாடு விளாசினார்.

24-வது ஓவரில் இறங்கிய டிவில்லியர்ஸ் 35-வது ஓவரில்தான் முதல் பவுண்டரி அடித்தார், அது ரெய்னாவை அடித்த சிக்சராக அமைந்தது. 34 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த டிவில்லியர்ஸ், கடைசி 39 பந்துகளில் 77 ரன்களை விளாசித் தள்ளினார். மொத்தத்தில் அருமையாக கட்டமைத்த ஒரு இன்னிங்ஸ் ஆகும் இது.

மிகவும் கடினமான துரத்தலை இந்தியா செய்து முடிக்குமா என்பதப் பார்க்க வேண்டும், தென்னாப்பிரிக்காவிடம் அவர்கள் 300 ரன்களுக்கும் மேல் குவித்த பிறகு எதிரணியினர் வென்ற தருணங்கள் மிக மிக அரிதே.

http://tamil.thehindu.com/sports/கடைசி-5-ஓவர்களில்-பவுண்டரி-சிக்சர்-மழை-டிவில்லியர்ஸ்-சதம்-தென்-ஆப்பிரிக்கா-303-ரன்கள்-குவிப்பு/article7749733.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
South Africa 303/5 (50.0 ov)
India 163/1 (29.1 ov)
  • தொடங்கியவர்

ரோஹித் சர்மாவின் 150 வீண்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா பரிதாப தோல்வி

 
  • கடைசி ஓவரில் தோனி, பின்னியை அடுத்தடுத்து வீழ்த்திய ரபாதாவை வெற்றி மகிழ்ச்சியில் பாராட்டும் ஆம்லா. | படம்: ஏ.எஃப்.பி.
    கடைசி ஓவரில் தோனி, பின்னியை அடுத்தடுத்து வீழ்த்திய ரபாதாவை வெற்றி மகிழ்ச்சியில் பாராட்டும் ஆம்லா. | படம்: ஏ.எஃப்.பி.
  • ரோஹித் சர்மா எக்ஸ்டா கவரில் பந்தை தூக்கி அடிக்கும் காட்சி. கான்பூர் ஒருநாள் போட்டி. | படம்: ஏ.பி.
    ரோஹித் சர்மா எக்ஸ்டா கவரில் பந்தை தூக்கி அடிக்கும் காட்சி. கான்பூர் ஒருநாள் போட்டி. | படம்: ஏ.பி.

கான்பூர் ஒருநாள் போட்டியில் 304 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய இந்திய அணி கடைசியில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து பரிதாபத்தோல்வி தழுவியது.

முதலில் இந்திய ‘வேக’ பந்து வீச்சாளர்களின் அசிரத்தையான இறுதி ஓவர்களால் கடைசி 4.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 65 ரன்களைக் குவித்தது. இதனால் ஒருநேரத்தில் 270 அல்லது அதிகம் போனால் 280 ரன்களையே தென் ஆப்பிரிக்கா எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிவில்லியர்ஸை வீழ்த்த எந்த ஒரு உத்தியும் கடைபிடிக்கவில்லை, அஸ்வின் 4.4 ஓவர்கள் மட்டுமே வீசியதும் பின்னடைவுக்குக் காரணமாக தென் ஆப்பிரிக்கா 303 ரன்களைக் குவிக்க முடிந்தது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 176/1 என்று வெற்றியை நோக்கி அபாரமாகவே சென்று கொண்டிருந்தது. அப்போது வெற்றிக்கு ஒரு ஓவருக்குத் தேவை 6.6 ரன்களே. அங்கிருந்து எப்படி தோல்வியடைய முடிந்தது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

இந்தியா ரன் குவிப்பு விவரம்:

முதல் 10 ஓவர்கள் முடிவில்: 59/1

20 ஓவர்கள் முடிவில்: 116/1

30 ஓவர்கள் முடிவில்: 176/1

40 ஓவர்கள் முடிவில்: 214/3

50 ஒவர்கள் முடிவில்: 298/7

இதில் தவறு எங்கு நடந்திருக்கது என்பது தெளிவாகத் தெரிந்திருக்கும். 30-40 ஓவர்களுக்கு இடையில் 38 ரன்களே எடுக்கப்பட்டது, அதாவது ரஹானே அவுட் ஆன பிறகு விராட் கோலி பவுண்டரியும் அடிக்காமல் சொதப்பினார், ரோஹித் அடிப்பார் என்று இவர் சிங்கிளையும் இவர் அடிப்பார் என்று ரோஹித் சர்மா சிங்கிளையும் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஷிகர் தவணுக்கு மோசமாக அவுட் கொடுத்த நடுவர்

தொடக்கம் ஓரளவுக்கு நம்பிக்கையாக அமைந்தது. ரபாதாவை ரோஹித், தவண் ஒவ்வொரு பவுண்டரி அடிக்க பிறகு ஸ்டெய்ன் ஓவரில் தவண் 2 பவுண்டரிகளை அடித்தார். பிறகு ரபாதாவின் ஷார்ட் பிட்ச் பந்தையும் அருமையாக புல் ஷாட் அடித்து 28 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அதில் 5 பவுண்டரிகளுடன் நன்றாகவே ஆடிவந்தார்.

அப்போது 8-வது ஓவரை மோர்கெல் வீச ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பந்தை ஆங்கிளாக மோர்கெல் வீச பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி கோணத்துடன் உள்ளே சென்று தவண் கால்காப்பைத் தாக்கியது. பந்து ஒன்று லைனில் இல்லை, பந்து கால்காப்பைத் தாக்கும்போது பந்தின் கோணம் நிச்சயம் லெக்ஸ்டம்புக்கு வெளியே செல்வதாகத்தான் இருந்தது.

ஆனால் நடுவர் அவுட் கொடுத்தார். இது மிகவும் மோசமான தீர்ப்பு. பொதுவாக உள்ளூர் லீக் ஆட்டங்களில்தான் நடுவர் சீக்கிரம் போட்டியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக இத்தகைய அபத்த அவுட்களை கொடுப்பது வழக்கம். ஆனால், இது சர்வதேச போட்டி என்பதை மறந்து விட்டார் போலும், கையை உடனடியாக உயர்த்தினார். அவருக்கு சந்தேகமே வரவில்லை.

ரோஹித் சர்மா அஜிங்கிய ரஹானே அபாரமான ஆட்டம்:

அதன் பிறகு விராட் கோலி இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் ரஹானே களமிறக்கப்பட்டார். இது பெரிதும் கை கொடுத்தது. வந்தவுடன் ரபாதாவை ஒரு கவர் பவுண்டரி அடித்தார். பந்து தரையில் பட்டு கவர் பீல்டர் தலைக்கு மேல் எகிறியது என்றால் அந்த ஷாட்டின் தாக்கம் புரிந்திருக்கும். மோர்கெலை ரோஹித் 2 பவுண்டரிகள் விளாசினார். 10 ஓவர்களில் இந்தியா 59 ரன்கள்.

டுமினியை கொண்டு வந்தவுடன் ரோஹித் சர்மா முறையாக இறங்கி வந்து அவரை லாங் ஆனுக்கு மேல் சிக்சர் தூக்கினார். ஆட்டத்தின் 18-வது ஓவரில் மோர்கெல் பந்தை அழகாக காலியான் பேக்வர்ட் பாயிண்டில் தட்டி விட்டு பவுண்டரி அடித்து 48-வது பந்தில் அரைசதம் கண்டார் ரோஹித். அடுத்த பந்தை அரைசதக் கொண்டாட்டமாக மிட்விக்கெட் பவுண்டரிக்கு விரட்டினார்.

இவர் அடித்து ஆடினாலும் ரஹானே ஒரு முனையில் நிதானத்தைக் கடைபிடித்தார், ஒருவேளை கொஞ்சம் அதிகமாகவே நிதானத்தைக் கடைபிடித்தது போல் தெரிந்தது. அதனால்தான் 30 பந்துகளில் 19 ரன்களுடன் அவர் கொஞ்சம் தடுமாறினார். அதன் பிறகு கொஞ்சம் உயிர்பெற்ற ரஹானே, தாஹிர், பெஹார்டீன் ஆகியோரை 2 பவுண்டரிகள் அடித்தார். அதன் பிறகு ரோஹித் சர்மா டுமினியை தனது 2-வது சிக்சருக்கு விரட்டினார். அதுவும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்தை ஸ்கொயர்லெக்கில் ஸ்லாக் ஸ்வீப் செய்தார், இது மிகவும் கடினமான ஷாட், ஆனால் மைதானம் சிறிதாக இருந்ததால் சிக்சருக்குச் சென்றது.

25-30 ஓவர்களுக்கு இடையில் கொஞ்சம் ரன் விகிதம் சுணக்கம் காண்பது போல் தெரிய, 30-வது ஓவரில் இம்ரான் தாஹீரை ரோஹித் சர்மா ஒரு எக்ஸ்ட்ரா கவர் பவுண்டரியும், பிறகு அதே திசையில் சிக்சரையும் அடிக்க ஸ்கோர் 176/1 என்று ஆனது. இந்த நிலையில் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. ரஹானே 67 பந்துகளில் அரைசதம் கண்டார். இதில் 4பவுண்டரிகள். அடுத்த 3 ஓவர்களில் 14 ரன்களே வந்தன. 34-வது ஓவரில் 60 ரன்கள் எடுத்த ரஹானே ஒதுங்கிக் கொண்டு பெஹார்டீனின் சாதாரண ஒரு பந்தை அடிக்க முயன்று கவரில் கேட்ச் கொடுத்தார்.

ரஹானே-ரோஹித் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக மிக அருமையாக மேட்ச் வின்னிங் 149 ரன்களைச் சேர்த்தனர், மிகவும் திட்டமிட்ட விரட்டலாக இது இருந்தது.

கோலி சொதப்பல்:

34 ஓவர்களில் 192/2 என்ற நிலையில் விராட் கோலி களமிறங்கினார் ரோஹித் சர்மா 97 ரன்களில் சதத்தை எண்ணத் தொடங்கினார். அப்போதுதான் மோர்கெலின் ஒரு ஓவரில் 2 ரன்கள் மட்டுமே வந்தது. 35 ஓவர்கள் முடிவில் 194/2. 15 ஒவர்களில் தேவை 110 ரன்கள், எடுக்கக் கூடியதுதான், விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் போது தோற்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது. 36-வது ஓவரில் பெஹார்டீனை மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாசி ரோஹித் சர்மா 98 பந்துகளில் அபாரமான சதம் கண்டார். 38-வது ஓவரை ஸ்டெய்ன் வீச கோலி 3 பந்துகளை சாப்பிட்டார் ரோஹித்தால் ரன் எடுக்க முடியவில்லை 3 ரன்களே அந்த ஓவரில் வந்தது.

இப்படியாக நெருக்கடி அதிகரிக்க 40-வது ஓவரில் 18 பந்துகளில் 11 ரன்களையே எடுத்த விராட் கோலி, ஸ்டெய்ன் வீசிய ஆகச் சுலபமான லெக் சைடு ஹாஃப் வாலியை ஒங்கி அடிக்காமல் அரைகுறையாக பிளிக் செய்ய ஷார்ட் பைன் லெக்கில் மோர்கெல் கேட்ச் பிடித்தார். அது நல்ல கேட்ச் என்றாலும் அந்தப் பந்தை அப்படியா ஆடுவது கோலி? இவரது ஆக்ரோஷம் குறித்த பேச்சு அந்த இடத்தில் சப்பையானது.

40-வது ஓவரில் 214/3 என்று ஆனது, 10 ஓவர்களில் 90 ரன்கள் என்று நெருக்கடி அதிகரித்தது. ரோஹித் மட்டுமே களத்தில் இருக்கிறார். தோனி இறங்கினார்.

ரோஹித் சர்மா இம்ரான் தாஹீரை ஒரு சிக்சர் அடித்தார். பிறகு ரபாதாவை ஒரு பவுண்டரி. அதன் பிறகு ரன் ஓடுவதில் நீயா நானா போட்டி போட்டு ஒன்று தோனி அவுட் ஆகியிருப்பார் அல்லது ரோஹித் அவுட் ஆகியிருப்பார், இருவரும் ஒரே இடத்தில் இருந்தனர், ஆனால் பாங்கிசோ த்ரோவுக்கு டிகாக் ஸ்டம்புக்கு வரவில்லை இதனால் ரோஹித் தப்பினார். பிறகும் ரோஹித் சர்மாதான் அடித்தார், ரபாதாவை ஒரு பவுண்டரியும், மோர்னி மோர்கெலின் ஒரு பந்தை ஆஃப் திசையில் நகர்ந்து லெக் திசையில் பிளிக் சிக்ஸ் அடித்தார், பிறகு டேல் ஸ்டெய்ன் ஷார்ட் பிட்ச் வீச அதனை அபாரமாக ஸ்கொயர்லெக்கில் சிக்சருக்குத் தூக்கினார். இதே ஓவரில்தான் ஒரு சிங்கிள் எடுத்து 132 பந்துகளில் 13 பவுண்டரி, 56 சிக்சர்களுடன் அவர் 150 ரன்களை எடுத்தார், இந்த 3-வது அரைசதம் 34 பந்துகளில் வந்தது.

46-வது ஓவரில் ஸ்கோர் 269/3. இருவருக்கும் இடையே அரைசத கூட்டணி அமைந்தாலும் தோனியின் பங்களிப்பு வெறும் 8 ரன்களே, இதற்கு அவர் 14 பந்துகளை எடுத்துக் கொண்டார். கடைசியில் 47-வது ஓவரில் ரோஹித் சர்மா இம்ரான் தாஹிரை மேலேறி வந்து அடிக்க முயன்றார் பந்து நல்ல பந்து மட்டைக்கு தோதாக வரவில்லை தொட்டு ஆடினார் அது நேராக இம்ரான் தாஹிரிடமே கேட்ச் ஆனது. அடுத்த அதிர்ச்சி அதே ஓவரில் ரெய்னா 3 ரன்களில் கூக்ளியை மிட்விக்கெட்டில் மேலேறி வந்து அடிக்க முயன்றார் அது மிஸ்-ஹிட் ஆக அது டுமினியிடம் லாங் ஆனில் மிக எளிதான கேட்ச் ஆனது. இம்ரான் தாஹிர் ஒரே ஓவரில் 2 திமிங்கிலங்களை வேட்டையாடினார்.

47- ஓவர்களில் ஸ்கோர் 273/5. இப்போது இது எப்பக்கமும் சாயும் ஆட்டமாக இருந்தது. ஆனால் தோனி பினிஷராயிற்றே முடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் பெரிய ஹிட்டிற்குச் செல்லாமல் நிறைய 2 ரன்களை ஓடி ஓடி எடுத்தார். மூச்சிறைக்க மூச்சிறைக்க ஓடினார். பரிதாப ஓட்டம், பந்தை இவர் அடித்து நொறுக்கினால் மைதானம் பத்தாது. ஆனால் இவர் 2 ரன்களுக்கக பேய் மாதிரி ஓடியது பார்க்க பரிதாபமாக இருந்தது. தான் எதிர்கொண்ட 25-வது பந்தில்தான் ஸ்டெய்ன் பந்தை ஒரு ‘தில் ஸ்கூப்’ செய்து முதல் பவுண்டரியை அடித்தார். அந்த ஓவரில் 11 ரன்கள் வர கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவை 11 ரன்கள், தோனியால் முடியாததா? என்றே ரசிகர்கள் ஆவலுடன் ஆரவாரம் செய்தனர்.

ஆனால் அவரோ ரபாதா வீசிய அந்த கடைசி ஓவரின் முதல் பந்தில் உயிரை வெறுத்து 2 ரன்கள் ஓடினார். பெஹார்டீன் பவுண்டரி அருகே பந்தை மிஸ்பீல்ட் செய்ததால் 2-வது ரன் இல்லையெனில் அது ஒரு ரன் மட்டும்தான். அடுத்த பந்து இறங்கி வந்து சுற்றினார் ரூம் கிடைக்கவில்லை 1 ரன். ஸ்டூவர்ட் பின்னி ஒரு ரன் எடுத்தார், இவரது அடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. மீண்டும் தோனி ஸ்ட்ரைக்கு வந்தார் ரபாதாவை இலக்கற்ற முறையில் சுற்றினார் கொடியேற்றினார் ரபாதாவே கேட்சைப் பிடித்தார். பின்னி கிராஸ் செய்து அடுத்த பந்தை புல் செய்தாரா என்ன செய்தார் என்று தெரியவில்லை பந்து கொடியேற்றப்பட்டது ஆம்லா கேட்ச் பிடித்தார். இவையெல்லாம் 24 அடி பிட்சில் நடந்தவை. ஹேட்ரிக் பந்தை குமார் 1 ரன் எடுக்க தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

31 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்த தோனியின் ஒருமாதிரியான தடவல் இன்னிங்ஸ் வரும் காலங்களில் பெரும் விவாதங்களைக் கிளப்பும், அதே போல் நன்றாக இருந்த ஸ்கோர் நிலவரம் 30-40 ஓவர்களில் ஏன் வெறும் 38 ரன்களாகக் குறைந்தது, இதில் விராட் கோலி என்ன செய்து கொண்டிருந்தார்? என்பதும் சர்ச்சைக்குரிய விஷயமாகும்.

ஆட்ட நாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

மொத்தத்தில் கடைசி ஓவர்களில் இந்தியப் பந்து வீச்சு, மற்றும் விராட் கோலி, தோனி, ரெய்னா ஆகியோரின் இயலாமையும் இந்திய தோல்விக்குக் காரணமாகியுள்ளன

http://tamil.thehindu.com/sports/ரோஹித்-சர்மாவின்-150-வீண்-பரபரப்பான-ஆட்டத்தில்-இந்தியா-பரிதாப-தோல்வி/article7749983.ece

  • தொடங்கியவர்

இந்திய அணியில் ஹர்பஜன் சிங்

 
 
ஹர்பஜன் சிங் | கோப்புப் படம்: வி கணேசன்
 

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயமடைந்ததை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்பஜன் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தூரில் நடக்கவுள்ள 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக அவர் இந்திய அணியுடன் சேர்ந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/இந்திய-அணியில்-ஹர்பஜன்-சிங்/article7752886.ece

  • தொடங்கியவர்

தோனிக்கு எப்படி வீசக்கூடாது: ரபாதாவுக்கு டிவில்லியர்ஸ் அளித்த அறிவுரை

 
 
கடைசி ஓவரை அபாரமாக வீசி வெற்றி தேடித் தந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாதா. | படம்: ஏ.பி.
கடைசி ஓவரை அபாரமாக வீசி வெற்றி தேடித் தந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாதா. | படம்: ஏ.பி.

தோனியின் அதிரடி பேட்டிங்கை தனது சிறுவயது முதலே பார்த்து வருவதாக தெரிவித்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாதா, டிவில்லியர்ஸ் அளித்த அறிவுரை தோனியை வீழ்த்த உதவியதாக தெரிவித்தார்.

கடைசி ஓவரை திறம்பட வீசி தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி தேடிக் கொடுத்த ரபாதா தெரிவித்தது: “ஏ.பி. (டிவில்லியர்ஸ்) கூறினார், எம்.எஸ். (தோனி) முழு லெந்த் பந்தை நிச்சயம் அடித்து நொறுக்குவார் என்று, இதனால் அவ்வாறு வீசக்கூடாது என்று திட்டமிட்டோம். இது பெரிய அளவில் கைகொடுத்தது.

பேக் ஆஃப் லெந்த் பந்தை வீசினோம், ஏனெனில் ஆட்டம் நகர நகர அந்த பந்துகளை அடிப்பது கடினமாகிக் கொண்டே வந்தது. இந்தப் பிட்சில் பந்துகள் வரும் வேகம் குறையத் தொடங்கியது.

கடைசி ஓவரில் என்ன செய்ய வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தோம். சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டது உதவி புரிந்தது.

பள்ளி நாட்களிலிருந்தே நான் கடைசி ஓவர்களை வீசி பழக்கப்பட்டுள்ளேன். ஆனால், இது மிகப்பெரிய தருணம், தோனி போன்ற உலகின் தலை சிறந்த வீரருக்கு பந்து வீச வேண்டும். எனவே தெளிவான மனநிலை அவசியம்.

ஏ.பி.டிவில்லியர்ஸ் மற்றும் பிறரின் அறிவுரை உதவியது. இந்தப் போட்டி போல் எனக்கு அதிக அழுத்தம் கொடுத்த போட்டி வேறு எதுவும் இருக்க முடியாது, ஏனெனில் வீரர்களின் பரிமாணம், மற்றும் விளையாடும் கிரிக்கெட்டின் உயரிய நிலை. ரசிகர்கள் ஆரவாரம், பெரிய போட்டி, மிகவும் உணர்ச்சிகரமான கட்டம்”

இவ்வாறு கூறினார் ரபாதா

http://tamil.thehindu.com/sports/தோனிக்கு-எப்படி-வீசக்கூடாது-ரபாதாவுக்கு-டிவில்லியர்ஸ்-அளித்த-அறிவுரை/article7753370.ece

  • தொடங்கியவர்

தோல்வியடைந்த விரட்டல்: பொறுப்பேற்கும் தோனி

 

 
தோனி அவுட் ஆன ஷாட். கான்பூர் ஒருநாள் போட்டி. | படம்: ஏ.பி.
தோனி அவுட் ஆன ஷாட். கான்பூர் ஒருநாள் போட்டி. | படம்: ஏ.பி.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கான்பூரில் வெற்றி பெறும் நிலையிலிருந்து இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து தோனி ஏமாற்றம் தெரிவித்ததோடு, தான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்காதது குறித்தும் வருந்தினார்.

ஒரு ஓவர், வெற்றிக்குத் தேவை 11 ரன்கள், வீசுவது 20 வயது, அனுபவக் குறைவான ரபாதா, பேட்டிங் முனையிலோ பினிஷிங்குக்கு 'பெயர் போன' கேப்டன் தோனி. அனைவரும் எதிர்பார்த்தது என்ன? நிச்சயம் தோனி வென்று விடுவார் என்றே. ஆனால் அதுவரையில் ஸ்கோர் போர்டை நகர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் பவுண்டரி பந்துகளையும் ஏன் புல்டாஸ்களையும் கூட ஒன்று அல்லது 2 ரன்கள் என்று எடுத்தார் தோனி. அப்படியிருந்தும் அவரால் சிக்சர்களை அடித்திருக்க முடியும், ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் பேட்டிங் முறைகளை படம்பிடித்து வைத்துள்ளனர், எனவே அவருக்கு எப்படி வீசுவது என்பது இப்போதெல்லாம் புதிய பவுலர்களுக்கும் அத்துப்படியான ஒன்று. தோனி தனது அடி முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் விரும்பும் அளவில் இனி ஒருவரும் அவருக்கு பந்து வீசப்போவதில்லை, குறைந்தது விவரம் தெரிந்த அணிகள் இனி தோனி விரும்பும் அளவில் வீசாது என்பது உறுதி. சரி தோனி கூறியதற்கு வருவோம்:

"ஆம்! குறிப்பாக பின்னால் களமிறங்கும் போது தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டியதுதான், ஏனெனில் நிறைய போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்திருக்கிறோம், இந்நிலையில் வெற்றிகரமாக முடிக்க முடியாத போட்டிகளை ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பர். ஒன்று இங்கிலாந்துக்கு எதிராக பிறகு இந்த ஆட்டம், மற்றொன்று சில ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கைக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டி.

தனிப்பட்ட முறையில் கூற வேண்டுமென்றால், 40-வது ஓவர் நெருங்கும் தறுவாயில் அதற்கு முன்னதான சில ஓவர்களில் ரன்கள் அவசியம். பெரிய ஷாட்களை ஆடியிருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை, ஆனால் இன்னும் கொஞ்சம் கூடுதல் ரன்களை அந்த ஓவரில் எடுத்திருக்க வேண்டும்...

அஸ்வின் காயம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து...

அஸ்வினின் பந்து வீச்சை இழந்தது மிக முக்கியமானதாகும். அவர் காயமடைந்தார், அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் ஆட்டம் அப்போதுதான் சூடுபிடித்துக் கொண்டிருந்தது, நாங்கள் ரன்களை விட்டுக் கொடுக்காமல் வீசிக் கொண்டிருந்தோம். ஆனால் அதன் பிறகு ஸ்டூவர்ட் பின்னி, ரெய்னா ஆகியோர் ஓவர்களில் அதிகம் என்று கூற முடியாவிட்டாலும் ஓரளவுக்கு ரன்கள் எடுக்கப்பட்டது. பிறகு இறுதி ஓவர்கள் நன்றாகவே இல்லை.

இன்னிங்ஸை தொடங்கியது, ரோஹித், ரஹானே பார்ட்னர்ஷிப், சதம் அடித்த பிறகு ரோஹித் ஆடிய விதம், எல்லாம் பாசிட்டிவ்வாக பார்க்க வேண்டிய அம்சங்கள்.

பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் 30-35 ஓவர்கள் நன்றாக அமைந்தன. 35 ஓவர்களுக்கு அருகில் வரை நன்றாக பேட் செய்தோம். ஆனாலும் இன்னும் சில பகுதிகளில் உழைக்க வேண்டிய தேவை உள்ளது.

கடைசியில் சுலபமான பணியாக அமையவில்லை. எப்போதும் ஷாட்கள் நமக்கு சாதகமாக அமையாது. அதுவும் பெரிய ஷாட்கள் ஆடும் போது எப்போதும் நமக்கு சாதகமாக இருக்காது. சில சமயங்களில் நல்ல பிட்சாக இருக்கும், பந்துகள் மட்டையை நோக்கி நன்றாக வரும், வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி அடித்து ஆடலாம், ஆனால் கான்பூர் விக்கெட்டில் சராசரி பவுன்ஸ் என்பது தாழ்வாக இருந்தது. பந்துகள் பவுன்ஸ் ஆகவில்லை.

பந்துவீச்சு இறுதி ஓவர்களில் சரியாக அமையாதது ஏமாற்றமளிக்கிறது. ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. யார்க்கர்களை இன்னும் கொஞ்சம் நன்றாக வீசியிருக்கலாம் ஏன், ஷார்ட் ஆஃப் லெந்த் கூட வீசியிருக்கலாம், பந்தின் தையலை களத்தில் பட்டு எகிறுமாறு வீசியிருக்கலாம், ஆனால் இவற்றை நம்மால் செய்ய முடியவில்லை.

பிட்சில் ஏதோ விதத்தில் உதவி இருந்தால் அதிக ரன்கள் கொடுக்கக் கூடாது என்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும், 2 ஒவர்களில் 40 ரன்கள் பக்கம் வந்தது. இது மிகப்பெரிய ரன்கள், இது எந்த வடிவமாக இருந்தாலும் சரி.

ஆனால் பேட்டிங் நன்றாகவே உள்ளது, ரஹானே 3-ம் நிலை, பிறகு விராட் கோலி, பிறகு நான், ரெய்னா, பின்னி, இது ஒரு செட்டில் ஆன வரிசையாகவே எனக்குப் படுகிறது. அனுபவமும், ஆற்றலும் உள்ள இந்த வரிசை பெரிய இலக்குகளை விரட்ட முடியும் என்றே நான் கருதுகிறேன். ரஹானே 3-ம் நிலையில் இறங்குவது பலம் கூட்டியுள்ளது”

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/தோல்வியடைந்த-விரட்டல்-பொறுப்பேற்கும்-தோனி/article7753337.ece

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

தோல்வியடையும் போட்டிகளே மக்கள் நினைவிலிருக்கும்: டோணி

 

 

 
 
Comments

INCRISSDhoni.jpg

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தமைக்கு, பந்துவீச்சாளர்களையும் துடுப்பாட்ட வீரர்களையும் டோணி குற்றஞ்சாட்டினார்.

இப்போட்டியில், தென்னாபிரிக்க அணியின் 304 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 33 ஓவர்களின் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 190 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்டது. எனினும், அடுத்த ஓவரில் ரஹானே ஆட்டமிழக்க, இந்திய அணி தடுமாறியிருந்தது.

இறுதி 4 ஓவர்களில் 35 ஓட்டங்கள் தேவைப்பட, றோகித் ஷர்மாவின் ஆட்டமிழப்பின் பின்னர் இந்திய அணி தடுமாறியது. அண்மைக்காலமாகத் தடுமாறிவரும் டோணி, அதிரடியாக ஆடத் தவறினார்.

எனினும், கருத்துத் தெரிவித்த அவர், தொடர்ந்து நீண்டகாலமாக போட்டிகளை முடித்து வைத்திருந்தாலும், முடித்து வைக்காத போட்டிகளையே மக்கள் நினைவில் வைத்திருப்பர் எனக் குறிப்பிட்டார்.

 

விராத் கோலியைச் சுட்டிக்காட்டுவது போல கருத்துத் தெரிவித்த டோணி, 40ஆவது ஓவருக்கு முன்னர் காணப்பட்ட 4, 5 ஓவர்களில் இன்னமும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றிருக்கலாம் எனத் தெரிவித்தார். 34ஆவது ஓவரில் களமிறங்கி 40ஆவது ஓவரில் ஆட்டமிழந்த கோலி, 18 பந்துகளில் 11 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.

தவிர, பந்துவீச்சாளர்களும் இன்னமும் சிறப்பாகச் செயற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த டோணி, றிவேர்ஸ் ஸ்விங் காணப்பட்டதாகவும், அதனை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

http://tamil.wisdensrilanka.lk/article/2120

  • தொடங்கியவர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோனியின் குறைவான சராசரி: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

 

 
 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

நாளை இந்தூரில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது. குறிப்பாக அஸ்வின் காயமடைந்துள்ளதால் அணிக்கு இன்னும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும், தோனி, விராட் கோலி ஆகிய முக்கிய வீரர்களின் பார்மும் இந்திய அணிக்கு கவலையளிப்பதாக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோனியின் பேட்டிங் சராசரி வெறும் 27.30 ரன்களே. 23 இன்னிங்ஸ்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோனி எடுத்துள்ள ரன்கள் 546. மற்ற அணிகளுக்கு எதிரானதை விடவும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோனியின் சராசரி குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக டிசம்பர் 2011-இல் இந்தோரில் போட்டி நடைபெற்ற போது மே.இ.தீவுகளை புரட்டி எடுத்த சேவாக் 219 ரன்களை விளாசினார். இந்தியா 400 ரன்களுக்கும் மேல் குவித்து வெற்றி பெற்றது. இந்த இன்னிங்ஸை விளையாட்டாக வர்ணித்த கிறிஸ் கெயில் “சைல்ட் அப்யூஸ்” என்று குறிப்பிட்டது நினைவுகூரத் தக்கது.

அதன் பிறகு இங்கு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. மைதானம் சிறியது, நேர் பவுண்டரிகளும் சிறியது. எனவே ரன்விருந்து உண்டு, ஆனால் அது டிவில்லியர்சிடமிருந்தா அல்லது கோலி, ரெய்னா, தோனி, ரோஹித், தவண் ஆகியோரிடமிருந்தா என்பதுதான் தெரியவில்லை.

இந்த மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது, எனவே இந்த புள்ளிவிவரம் இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும்.

அஸ்வினுக்கு பதிலாக ஹர்பஜன், அமித் மிஸ்ராவுடன் ஸ்பின் பந்து வீச்சை பகிர்ந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா நீங்கலாக அனைவரும் தங்களது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்கா போல் ஆக்ரோஷமாக வீசுவதில்லை. புவனேஷ், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் பூ போல பந்து வீசுகின்றனர். உமேஷ் யாதவ் லைன் மற்றும் லெந்த் மேம்பாடு அடைய வேண்டிய தேவையிருக்கிறது. யார்க்கர்களை வீசுவதில் திறமை போதவில்லை.

டிவில்லியர்ஸுக்கு எதிராக ஏதாவது உத்தியை வகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியிலேயே அவர் சதம் கண்டுள்ளதால் இந்திய அணிக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக திகழ்வார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதே வேளையில் ஹஷிம் ஆம்லா, இந்தியாவுக்கு எதிராக 3 தொடர் சதங்களை அடித்த குவிண்டன் டி காக் -ஐயும் நாம் குறைவாக எடைபோட முடியாது. டுபிளெஸ்ஸிஸ் டி20 மற்றும் முதல் போட்டியில் நன்றாக ஆடியுள்ளார். டுமினி எப்போதுமே ஆபத்தான வீரர்.

பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 2015-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக திகழ்கிறார். மிட்செல் ஸ்டார்க், டிரெண்ட் போல்ட்டுக்குப் பிறகு 32 விக்கெட்டுகளுடன் இம்ரான் தாஹிர் உள்ளார்.

தோனியின் கேப்டன்சியும், டி20, மற்றும் கான்பூர் தோல்விகளுக்குப் பிறகு கடுமையாக கேள்விக்குட்பட்டு வருகிறது. பவுலர்களை இவர் பயன்படுத்தும் விதம் தென் ஆப்பிரிக்க அணியின் மீதான பிடியை நழுவ விட்டு விடுகிறது என்பதே உண்மை. தொடரை சமன் செய்ய வேண்டுமெனில் தோனி நிச்சயம் ஆக்ரோஷமாக கேப்டன்சி செய்து பேட்டிங்கிலும் கடும் ஆக்ரோஷம் காட்டுவது அவசியமாகியுள்ளது.

ஒன்று, இரண்டு ரன்களில் கவனம் செலுத்தும் வீரர்களிடத்தில் உள்ள பிரச்சினை என்னவெனில் பவுண்டரி, சிக்சர் அடிக்க வேண்டிய பந்துகளை இவர்கள் கவனிக்கத் தவறிவிடுவார்கள், இவ்வாறாகத்தான் ஒரு காலத்தில் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் தலை சிறந்த வீரராகக் கருதப்பட்ட மைக்கேல் பெவன் மீது விமர்சனம் எழுந்தது. அவரால் தேவைப்படும் போது பவுண்டரி, சிக்சர்களை அடிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது தோனியினால் பெரிய ஷாட்களை அடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிரணி பவுலர்கள் அவர் கைவசம் வைத்துள்ள குறைந்த ஷாட்களை எளிதில் கட்டுப்படுத்தி வருகின்றனர், எனவே தோனி புதிய ஷாட்களை ஆட வேண்டும்.

இதனால் கடும் நெருக்கடி நிலையில் இந்திய அணி நாளை களமிறங்குகிறது. ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

http://tamil.thehindu.com/sports/தென்-ஆப்பிரிக்காவுக்கு-எதிராக-தோனியின்-குறைவான-சராசரி-வெற்றி-நெருக்கடியில்-இந்திய-அணி/article7757773.ece

  • தொடங்கியவர்

ரஹானே அரைசதம் அவுட்: 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா சரிவு

 
  • ரபாதா பந்தில் ரோஹித் ஆஃப் ஸ்டம்ப் பறந்தது. | படம்: பிடிஐ.
    ரபாதா பந்தில் ரோஹித் ஆஃப் ஸ்டம்ப் பறந்தது. | படம்: பிடிஐ.
  • அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்து வெளியேறிய ரஹானே. | படம்: சந்தீப் சக்சேனா.
    அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்து வெளியேறிய ரஹானே. | படம்: சந்தீப் சக்சேனா.

இந்தூரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வரும் 2-வது ஓருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்து வரும் இந்திய அணி 25 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.

ரஹானே தனக்குக் கொடுத்த 3-ம் நிலை பணியை சிறப்பாகச் செய்து வருகிறார். ரஹானே 62 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிர் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். ரெய்னா, ரன் எடுக்காமல் மோர்னி மோர்கெல் வீசிய லெக் ஸ்டம்ப் ஷார்ட் பிட்ச் பந்தை தொட்டார், விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்தார். தோனி 11 ரன்களுடனும், அக்சர் படேல் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கடுமையான வெயிலில் தென் ஆப்பிரிக்கா பந்து வீசி வருகிறது.

ரோஹித் சர்மா முதல் ஓவரை வீசிய ஸ்டெய்னின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆகிவிடுமாறு 1 ரன் எடுக்க, அடுத்த ரபாதா ஓவரைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த ஓவரின் 4-வது பந்தில் ஆஃப் ஸ்டம்ப் பறந்தது. 3 ரன்களில் ரோஹித் சர்மா அவுட். ஃபுல் லெந்த் பந்து, நல்ல வேகம், பிளிக் ஆட முயன்றதில் சற்றே தாமதம், பந்து பேடில் பட்டு ஆஃப் ஸ்டம்ப் சில அடிகள் தள்ளி போய் விழுந்தது.

அடுத்ததாக ஷிகர் தவண் ரபாதாவை ஒரு அருமையான கவர் டிரைவ் ஆடி பவுண்டரி அடித்தார். ஆனால் அதே ஓவரில் ஒரு எல்.பி. முறையீடு எழுந்தது. பலத்த முறையீடு அது தப்பினார் தவண்.

ரஹானே, ஸ்டெய்னின் ஓரே ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். 2 கவர் டிரைவ்களை தூக்கி அடிக்க, ஒரு பந்து மிட்விக்கெட்டில் பவுண்டரிக்குப் பறாந்தது. மீண்டும் மோர்கெலை கவர் திசையில் தூக்கி அடித்து ஒரு பவுண்டரி அடிக்க, தவண் மிக அருமையாக மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி மோர்கெலை அடித்தார். கடைசியில் 34 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த தவண், கவன இழப்பினாலும், மோர்கெல்லின் அருமையான ஏமாற்று ஸ்லோ பந்தினாலும் ஷார்ட் கவரில் கேட்ச் கொடுக்க நேரிட்டது.

தனது பார்மை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆடிய விராட் கோலி 18 பந்துகளில் பவுண்டரி இல்லாமல் 12 ரன்கள் எடுத்த நிலையில் மோசமான புரிதலினால் ரன் அவுட் ஆனார்.

ரஹானே மிட் ஆஃபில் அடித்த ஷாட் கேட்சாகச் செல்ல அதனை பெஹார்டீன் நழுவ விட்டார். கடினமான வாய்ப்பு நழுவ விட்டார். இதனைப் பயன்படுத்தி ஒரு ரன் எடுத்தனர். ஆனால் விராட் கோலி 2-வது ரன்னுக்காக ஓடி வந்தார், ரஹானே வேண்டாம் என்றார். இருவரும் ஒரு முனையில் நிற்க, பேட்டிங் முனையில் விக்கெட் கீப்பர் பைல்களை அகற்றினார், கோலி ரன் அவுட்.

ரஹானே அருமையான 6 பவுண்டரிகளுடன் தன்னம்பிக்கையுடன் ஆடி வந்த நிலையில் இம்ரான் தாஹீர் பந்து ஒன்று லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆக ஸ்வீப் ஆட முயன்றார் பந்து சிக்கவில்லை, பந்து ஸ்டம்ப்களை தொந்தரவு செய்தது. அருமையான பந்து ரஹானே பவுல்டு ஆனார். ஆனால் சிறிது நேரம் ரஹானேயால் நம்ப முடியவில்லை.

கடைசியாக ரெய்னாவை ஷார்ட் பிட்ச் பந்துகளாக வீசி மோர்கெல் தொந்தரவு செய்தார், ரெய்னாவும் அதிகமாக நகர்ந்து நகர்ந்து ஆடினார். ஒரு பந்து ஸ்டம்புக்கு அருகில் சென்றது. இந்நிலையில் மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை லெக் ஸ்டம்பில் வீச ரெய்னா அதனை ஆட முயல எட்ஜ் எடுத்து கீப்பரிடம் கேட்ச் ஆனது, ரெய்னா 5 பந்துகள் ரன் எதுவும் இல்லை. அவுட்.

12-வது ஓவரின் முதல் பந்தில் அடித்த பவுண்டரிக்குப் பிறகு 22-வது ஓவரின் 4-வது பந்திலேயே அடுத்த பவுண்டரி வந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்கெல் 2 விக்கெட்டுகளையும் ரபாதா, இம்ரான் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/ரஹானே-அரைசதம்-அவுட்-5-விக்கெட்டுகளை-இழந்து-இந்தியா-சரிவு/article7761292.ece

 

 
  • தொடங்கியவர்

தோனி சிறப்பான ஆட்டம் : தென்ஆப்ரிக்காவுக்கு 248 ரன்கள் வெற்றி இலக்கு!

 

ந்தூரில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி , தென்ஆப்ரிக்க அணிக்கு 248 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

doni.jpg

இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. ரோகித்தும், தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித், இந்த ஆட்டத்தில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் 21 ரன்களில் வெளியேறினார். அடுத்து 3வது வீரராக களமிறங்கிய ரஹானே, இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அதேவேளையில் துணை கேப்டன் விராட் கோலி, 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். விராட் கோலிக்கு பிறகு களமிறங்கிய தோனி, ரஹானேவுடன் இணைந்து அணியின் ரன்களை உயர்த்த போராடினார். ரஹானே 51 ரன்களில் அவுட் ஆனார். அதற்கு பின் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ஜொலிக்கவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணி 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

அந்த சமயத்தில், கேப்டன் தோனி மட்டுமே நிலைத்து  விளையாடி ரன்களை சேகரித்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கடைசி கட்டத்தில் ஹர்பஜன் சிங், அதிரடியாக விளையாடி ஒரு சிக்சர் 2 பவுண்டரிகள் விளாசி,  22 ரன்கள் எடுத்தார். 

இறுதியில் இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு, 247 ரன்கள் எடுத்தது. தோனி 86 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.

http://www.vikatan.com/news/article.php?aid=53737

  • தொடங்கியவர்

கிரிக்கெட்: 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

  • தொடங்கியவர்

நிறைய பேர் வாளைத் தீட்டியபடி காத்திருந்தனர்: வெற்றி குறித்து தோனி

 

இந்தூர் ஒரு நாள் போட்டியில் வென்ற பிறகு ஆட்ட நாயகன் தோனி மற்றும் அணி வீரர்கள். | படம்: பிடிஐ.
இந்தூர் ஒரு நாள் போட்டியில் வென்ற பிறகு ஆட்ட நாயகன் தோனி மற்றும் அணி வீரர்கள். | படம்: பிடிஐ.

இந்தூர் ஒருநாள் போட்டியில் 92 ரன்களை எடுத்து பிறகு அருமையாக பந்து வீச்சு மாற்றங்கள், களவியூகங்கள் அமைத்து குறைந்த இலக்கை கையில் வைத்துக் கொண்டு தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திக் காட்டிய கேப்டன் தோனி ஆட்டம் முடிந்த பிறகு வெற்றி குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனி சில கருத்துகளை பரிமாறிக் கொண்டார்.

அதாவது வெற்றி பெற முடியாது போயிருந்தால், “நிறையபேர் வாளைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தனர், அதாவது நிறைய பேர் நான் தவறுகள் செய்வதற்காகக் காத்திருந்தனர். ஆனால் சுலபமான ஆட்டம் அல்ல இது. இன்னும் கொஞ்சம் ரன்களை சேர்த்திருக்க வேண்டும்.

பந்து வீச்சையும் நன்றாகத் தொடங்கவில்லை. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக வீச, பிற்பாடு வேகப்பந்து வீச்சும் இணைந்து கொண்டது. ஒட்டுமொத்தமாக திருப்திகரமான வெற்றியல்ல, ஆனால் நல்ல வெற்றி. இன்னும் கூட சிறப்பாக ஆட வேண்டும்.

திறனுக்கேற்ப விளையாடுவதில்லை, பந்துவீச்சு பேட்டிங் இரண்டிலுமே 80% கூட திறமை வெளிப்படவில்லை. ஒரு முழுமையான பேட்டிங் வரிசையாக இன்னும் சரியாக ஆடவில்லை. ஆனால் மீண்டு வந்து வென்றுள்ளோம்.

தாஹிர், ரபாதா பேட் செய்து கொண்டிருந்த போது அவர்களை வீழ்த்த 2 நல்ல பந்துகளை வீசவேண்டும் என்று நினைத்தோம். ஆட்டம் எங்கள் கையில் இருந்தது என்று நான் கூற மாட்டேன். ஆனால் சரியான இடத்தில் வீசினால் இரண்டு பந்துகள் போதும் அவர்களை வீழ்த்த.

கடந்த 2 அல்லது இரண்டரை ஆண்டுகளாக டாப் ஆர்டர் வரிசை சிறப்பாக பேட் செய்து வந்தபோது பின்வரிசை வீரர்களுக்கு பேட்டிங் வாய்ப்பு குறைவாகவே கிடைத்து வந்தது. சுரேஷ் ரெய்னா தவிர வேறு எவரும் இறங்கியவுடன் பெரிய ஷாட்களை ஆடுவதில் விருப்பம் காட்டவில்லை.

அக்சர் படேல் குறித்து...

அக்சர் படேல் பந்தை பெரிய அளவில் திருப்புபவர் அல்ல. ஆனால் அவர் சரியான லெந்தில் வீசினார். ஹர்பஜன் அனுபவஸ்தர், ஆனால் இருவரும் பந்துவீச்சு முறைகளில் சோதனை முயற்சிகளில் இறங்கவில்லை, அதாவது ஓவர் பிளைட் அல்லது குறைந்த பிளைட் என்பது தேவைப்பட்டது, ஒட்டுமொத்தமாக அவர்கள் நல்ல முறையில் செயல்பட்டனர்.

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/நிறைய-பேர்-வாளைத்-தீட்டியபடி-காத்திருந்தனர்-வெற்றி-குறித்து-தோனி/article7765536.ece?homepage=true

  • தொடங்கியவர்

WR_20151017185249.jpeg

  • தொடங்கியவர்
இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி நடக்காது: ஹர்திக் மிரட்டல்
 
 
 
 
Tamil_News_large_1366209.jpg
 
 

அகமதாபாத் / ராஜ்கோட்: ''இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியில், வீரர்கள் பங்கேற்க முடியாதபடி, சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்,'' என, குஜராத்தில், படேல் இனத்தவரை, இதர பிற்பட்டோர் வகுப்பில் சேர்க்க வலியுறுத்தி வரும், ஹர்திக் படேல் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான, மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, குஜராத்தில், ராஜ்கோட் நகரில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில், நாளை நடைபெற உள்ளது. 'இப்போட்டியின் போது, விளையாட்டு மைதானத்தில், படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவர்' என, 'படிதான் அனாமத் அந்தோலன் சமிதி' அமைப்பாளரான ஹர்திக் படேல் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று தன் திட்டத்தை மாற்றிக் கொண்ட ஹர்திக், இந்திய, தென்னாப்பிரிக்க வீரர்களை மைதானத்திற்குள் நுழையவிடாமல், சாலை தடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளார். இதையடுத்து, மைதானத்தை சுற்றிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, ராஜ்கோட் போலீஸ் ஐ.ஜி., படேல் கூறியதாவது:இரண்டாயிரத்திற்கும் அதிகமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபவர். சிறிய ரக, ஆளில்லா உளவு விமானங்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். இதுதவிர, ஆங்காங்கே, 90 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அசம்பாவிதம் ஏதுமின்றி, போட்டி நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1366209

  • தொடங்கியவர்
3வது ஒரு நாள்: இந்திய அணி பவுலிங்
 
India, South Africa, Rajkot, One Day International, Cricket

ராஜ்கோட்: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பவுலிங் செய்கிறது. 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என சமநிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி இன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா மைதானத்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் உமேஷ் நீக்கப்பட்டு அமித் மிஸ்ரா வாய்ப்பு பெற்றார். 

http://sports.dinamalar.com/2015/10/1445095809/IndiaSouthAfricaRajkotOneDayInternationalCricket.html

  • தொடங்கியவர்

SA 242/6 

  • தொடங்கியவர்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3-வது ஒரு நாள்: இந்தியாவுக்கு 271 ரன்கள் இலக்கு

 
சதமடித்த டி காக் | படம்: ஏ.எஃப்.பி
சதமடித்த டி காக் | படம்: ஏ.எஃப்.பி

இந்தியா - தென் ஆப்பிரிகா இடையே ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 270 ரன்களை எடுத்துள்ளது.

ஒரு கட்டத்தில் 300 ரன்களுக்கும் அதிகமாக சேர்க்கும் என்ற நிலையிலிருந்த தென் ஆப்பிரிகா, கடைசி 10 ஓவர்களில் இந்தியாவின் கட்டுப்பாடான பந்துவீச்சால்,அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நினைத்ததை விட குறைந்த ரன்களையே எடுத்தது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய மில்லர் - டி காக் ஜோடி இந்தியப் பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்டது. இந்த இணை 72 ரன்கள் எடுத்திருந்த போது மில்லர் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆம்லாவும் 5 ரன்களுக்கு வீழ்ந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த டி காக் - ப்ளெஸ்ஸி ஜோடி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரான வேகத்தில் ரன்கள் சேர, ஒரு முனையில் பெள்ஸ்ஸி அரை சதமும், மறு முனையில் டி காக் சதத்தையும் கடந்தனர். தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது.

39-வது ஓவரில் மொஹித் சர்மா வீசிய பந்தை, டிவில்லியர்ஸ் போல பேட்டை வளைத்து பின்னால் அடிக்க முயன்ற ப்ளெஸ்ஸி, கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதுவரை ஏறுமுகமாக இருந்த தென் ஆப்பிரிக்காவின் ஆட்டம் இதற்குப் பிறகு சற்றே தடுமாறியது.

அடுத்த ஓவரில் டி காக் 103 ரன்களுக்கு ரன் அவுட் ஆக, அதற்கடுத்த ஓவரில் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் அக்ஸர் படேலின் சுழலுக்கு பெவிலியன் திரும்பினார். இதற்குப் பிறகு வந்த டுமினியும், பெஹார்டைனும் ஏனோ அதிரடி ஆட்டம் ஆடாமல் பொறுமையை கடைபிடித்தனர்.

கடைசி இரண்டு ஓவர்களில் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டமாக இருந்தது. முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்களை தென் ஆப்பிரிக்கா எடுத்தது. இந்திய தரப்பில் அக்சர் படேல், ஹர்பஜன், மிஷ்ரா என சுழற்பந்து வீச்சாளர்கள் மூவருமே கட்டுப்பாடான பந்துவீச்சில் அசத்தினர்.

http://tamil.thehindu.com/sports/இந்தியா-தென்-ஆப்பிரிக்கா-3வது-ஒரு-நாள்-இந்தியாவுக்கு-271-ரன்கள்-இலக்கு/article7777321.ece

  • தொடங்கியவர்
கிரிக்கெட்: தென் ஆப்ரிக்க அணி வெற்றி

ராஜ்கோட்: மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் 'பேட்டிங்' செய்ய முடிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 252 ரன்கள் மட்டும் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என தென் ஆப்ரிக்கா அணி முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி வரும் 22ல் சென்னையில் நடக்கிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1367038

  • தொடங்கியவர்

சரிந்தது இந்திய அணி: தென் ஆப்ரிக்கா வெற்றி


 

rohit, india
ராஜ்கோட்: ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது’ போல   மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அநியாயமாக தோற்றது. ரோகித் சர்மா, விராத் கோஹ்லியின் அரைசதம் வீணானது. தென் ஆப்ரிக்க அணி அசத்தல் வெற்றி பெற்று, தொடரில் 2–1 என முன்னிலை பெற்றது.            

 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்தன. மூன்றாவது போட்டி நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.                                        

நல்ல துவக்கம்: தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக், டேவிட் மில்லர் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த போது, ஹர்பஜன் ‘சுழலில்’ மில்லர் (33) சிக்கினார். அடுத்து வந்த ஹசிம் ஆம்லா (5), அமித் மிஸ்ராவிடம் சரணடைந்தார்.                        

குயின்டன் சதம்: பின் இணைந்த குயின்டன் டி காக், டுபிளசி ஜோடி, இந்திய அணி பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. புவனேஷ்வர் குமார் வீசிய 9வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த குயின்டன் டி காக், மோகித் சர்மா பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஒருநாள் அரங்கில் தனது 7வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த டுபிளசி, புவேனஷ்வர் பந்தில் பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த போது மோகித் சர்மா ‘வேகத்தில்’ டுபிளசி (60) அவுட்டானார். அபாரமாக ஆடிய குயின்டன் டி காக் (103) ‘ரன்–அவுட்’ ஆனார்.                        

டிவிலியர்ஸ் ஏமாற்றம்: கேப்டன் டிவிலியர்ஸ் (4) ஏமாற்றினார். டுமினி (14) நிலைக்கவில்லை. மோகித் சர்மா பந்தில் ஒரு சிக்சர் அடித்த ஸ்டைன் (12) ‘ரன்–அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய பெகார்டியன், புனேஷ்வர் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்சர் விளாசினார்.                        

தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்தது. பெகார்டியன் (33), ரபாடா (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் மோகித் சர்மா 2, ஹர்பஜன், அமித் மிஸ்ரா, அக்சர் படேல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.                            

ரோகித் அரைசதம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (13) ஏமாற்றினார். பின் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி நிதானமாக விளையாடினர். ஸ்டைன், இம்ரான் தாகிர் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ரோகித் அசைதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த போது டுமினி ‘சுழலில்’ ரோகித் (65) சிக்கினார்.                  

கோஹ்லி மந்தம்: கேப்டன் தோனி– கோஹ்லி இணைந்து மந்தமாக விளையாடினார். இருவர் இடையிலும் ‘புரிதல்’ இல்லாததல், ஸ்கோர் விரைவாக உயரவில்லை. கோஹ்லி, 12 போட்டிகளுக்கு பின் அரைசதத்தை எட்டினார். 41வது ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. அப்போது 54 பந்துகளில் வெற்றிக்கு 84 ரன்கள் தான் தேவைப்பட்டன. இந்த நேரத்தில் மார்னே மார்கல் பந்தில் தோனி (47 ரன், 61 பந்து, ‘ஸ்டிரைக் ரேட்’ 77.04) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதற்கு பின் சரிவு ஆரம்பமானது.

ரெய்னா ஏமாற்றம்: அடுத்து வந்த ரெய்னா (0) இம்ரான் தாகிர் பந்தில் அவுட்டானார். ஆட்டத்தின் 46வது ஓவரை வீசிய மார்னே மார்கல், கோஹ்லி (77 ரன், 99 பந்து, ‘ஸ்டிரைக் ரேட்’ 77.77), ரகானே (4) ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாக்கி இரட்டை ‘அடி’ கொடுத்தார். பின் இணைந்த அக்சர் படேல், ஹர்பஜன் சிங் முயற்சித்த போதும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.            

இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 252 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. அக்சர் படேல் (15), ஹர்பஜன் சிங் (20) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் மார்னே மார்கல் 4 விக்கெட் கைப்பற்றினார்.            

இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1–2 என பின்தங்கியது. இவ்விரு அணிகள் மோதும் நான்காவது போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் வரும் அக்., 22ல் நடக்கவுள்ளது.

 

‘பேட்டிங் ஆர்டர்’ குழப்பம்

இந்திய அணியின் நேற்றைய தோல்விக்கு ‘பேட்டிங் ஆர்டர்’ குழப்பம் முக்கிய காரணம். கோஹ்லிக்கு நான்காவது இடம் தான் என போட்டிக்கு முன் தோனி உறுதியாக கூறினார். ஆனால், தனக்கு பிடித்த 3வது இடத்தில் களமிறங்கி ஆச்சரியம் அளித்தார் கோஹ்லி. சற்றும் எதிர்பாராதவிதமாக தோனி 4வது வீரராக வந்தார். கடைசி கட்டத்தில் ‘பினிஷிங்’ செய்வதில் வல்லவரான இவர், பொருந்தாத இடத்தில் வந்து ரன் சேர்க்க தடுமாறினார். முன்னதாக களமிறங்கி பழக்கப்பட்ட ரகானே, கடைசியில் வந்ததால் சோபிக்க முடியவில்லை. இப்படி தோனி–கோஹ்லி இடையிலான நீயா...நானா போட்டி மற்றும் ‘ஈகோ’ பிரச்னை காரணமாக அணியின் வெற்றி பறிபோனது.

ஹர்திக் கைது                                    

குஜராத்தில் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டு ‘படிதான் அனாமத் அந்தோலன் சமிதி’ அமைப்பின் தலைவர் ஹர்திக் படேல் போராடி வருகிறார். இதற்காக இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியை திட்டமிட்டபடி நடத்தவிடமாட்டோம் என மிரட்டல் விடுத்தார். நேற்று அறிவித்தபடி போராட்டத்தில் ஈடுபட வந்த ஹர்திக் படேல் மற்றும் அவரது ஆதரவாளர்களரை மைதானத்தில் இருந்து 2 கி.மீ., துாரத்துக்கு முன்னதாகவே குஜராத் போலீசார் கைது செய்தனர்.                                    

137                              

தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லாவின் விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட தோனி, டெஸ்ட், ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகளில் 137வது முறையாக ‘ஸ்டெம்பிங்’ செய்தார். இவர், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ‘ஸ்டெம்பிங்’ செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இலங்கையின் சங்ககரா (139 முறை) நீடிக்கிறார்.                              

பவுலர்கள் அசத்தல்                              

தென் ஆப்ரிக்க அணி 39 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. குயின்டன் டி காக், டிவிலியர்ஸ், டுமினி போன்றவர்கள் இருப்பதால் 300 ரன்களை சுலபமாக கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இந்திய பவுலர்கள் அசத்த டிவிலியர்ஸ், டுமினி சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். இதனையடுத்து கடைசி 11 ஓவர்களில் 65 ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இதில் மூன்று ஓவர்களில் மட்டுமே 6 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுக்கப்பட்டன.                              

7                        

பேட்டிங்கில் அசத்திய இந்தியாவின் ரோகித் சர்மா 65 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்த ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கி அதிக முறை 50 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை தென் ஆப்ரிக்காவின் ஆம்லாவுடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 7 முறை இந்த இலக்கை எட்டினர். முதலிரண்டு இடங்களில் நியூசிலாந்தின் மார்டின் கப்டில் (10 முறை), இலங்கையின் தில்ஷன் (8) உள்ளனர்.                        

4                        

இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான், ஒருநாள் அரங்கில் தென் ஆப்ரிக்காவின் மார்னே மார்கல் ‘வேகத்தில்’ நான்காவது முறையாக அவுட்டானார். தற்போதைய ஒருநாள் தொடரில் மூன்று முறை இவரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.                        

2            

பொறுப்பாக ஆடிய தோனி, ஒருநாள் அரங்கில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங்கை (6295 ரன்கள், 218 போட்டி) முந்தி 2வது இடம் பிடித்தார். தோனி, இதுவரை 184 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 6313 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (8497 ரன்கள், 230 போட்டி) உள்ளார்.

http://sports.dinamalar.com/2015/10/1445095809/IndiaSouthAfricaRajkotOneDayInternationalCricket.html

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.