Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவப் புலனாய்வு அதிகாரிகளைக் கைது செய்த சிஐடி பணிப்பாளருக்கு அழைப்பாணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் நால்வரைக் கைது செய்த, குற்றப் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட ஆறு பேருக்கு நீதிமன்றினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 9ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் நால்வரைக் கைது செய்த, குற்றப் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட ஆறு பேருக்கு நீதிமன்றினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 9ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

   

எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் மனைவியரினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களது கணவர்மாரை உடனடியாக விடுதலை செய்யுமாறு மனுவில் கோரியுள்ளனர்.

இராணுவ சார்ஜன்ட் ஆர்.எம். பிரியந்த குமார, லெப்டினன் கேணல் பிரபோதா சிறிவர்தன, லெப்டினன் கேணல் எஸ்.ஏ. குமாரரட்ன, கோப்ரல் அனுர ஜயலால் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நதிகா சமந்தி வர்னசூரிய, மெதிலா ஆன் குமாரகே, ஐ.எம். சுதர்சீ, எல்.எம். நயோமி துசார ஜயசேகர ஆகிய குறித்த இராணுவ அதிகாரிகளின் மனைவியர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

எக்னெலிகொட காணாமல் போன சம்பவத்துடன் தமது கணவருக்கு தொடர்பில்லை என நான்கு பேரும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி பொலிஸார் தமது கணவரை கைது செய்த போதிலும், கைதுக்கான காரணங்கள் இதுவரையில் கூறப்படவில்லை. எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய விபரங்கள் கூட கூறப்படவில்லை. நபர் ஒருவரை கைது செய்தால் 24 மணித்தியாலத்திற்குள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டுமென்ற போதிலும் எமது கணவர்மார் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமது கணவன் மார் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது பல்வேறு நடடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவிற்கான அளப்பரிய சேவைகளை செய்துள்ளதாகவும் மனுவில் குறித்த அதிகாரிகளின் மனைவியர் குறிப்பிட்டுள்ளனர்.

சமூகத்தில் மிக முக்கியமான ஓர் நபரின் காணாமல் போதல் சம்பவத்தின் போது தவிர இராணுவ அதிகாரிகளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்க முடியாது. எக்னெலிகொட ஓர் சாதாரண ஊடகவியலாளர் அவர் காணாமல் போன சம்பவத்திற்காக இராணுவ அதிகாரிகளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=141337&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.