Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இல்லத்தை புனரமைக்க 18 கோடி ரூபா கேட்கிறது அரசாங்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 இல்லத்தை புனரமைக்க 18 கோடி ரூபா கேட்கிறது அரசாங்கம்! 
[Wednesday 2015-10-07 07:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய இல்லத்தை புனரமைப்பதற்கு 18 கோடி ரூபா தேவைப்படுவதாக நாடாளுமன்றில் குறைநிரப்புப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் புதிய இல்லத்தை புனரமைத்தல், கட்டிட நிர்மானம் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு வாகனக் கொள்வனவு ஆகியனவற்றுக்காக மொத்தமாக 25 கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்ய குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று நாடாளுமன்றில் இந்த குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க இந்த யோசனையை முன்வைத்திருந்தார். கொழும்பு பெஜட் வீதியின் இலக்கம் சீ 61 மற்றம் சீ 62 ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தின் சுற்றுச் சுழலை நவீனமயப்படுத்தல், புனரமைத்தல் ஆகியனவற்றுக்கு ஒன்பது கோடி ரூபாவும், உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதிகளில் கட்டடங்களை அமைப்பதற்கு எட்டு கோடி நாற்பது லட்ச ரூபாவும் தேவைப்படுவதாகத் தெரிவித்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிற்கு பி.எம். டபிள்யூ ரக கார் ஒன்றையும், பிம்.எம்.டபிள்யூ.ஆர் ரக மோட்டார் சைக்கிள்கள் 12ம் கொள்வனவு செய்வதற்காக ஏழு கோடியே ஆறு லட்ச ரூபா தேவைப்படுவதாகவும் குறைநிரப்புப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது வாசஸ்தலத்தை தேவையற்ற வகையில் ஆடம்பரமாக்கியதாகவும், விரயமாக செலவிட்டுள்ளதாகவும் இந்த அரசாங்கம் குற்றம்சுமத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.http://www.seithy.com/breifNews.php?newsID=141809&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.