Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவுதியில் தமிழக பெண்ணின் கை துண்டிப்பு: வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்துக்கு மத்திய அரசு கண்டனம்

Featured Replies

சவுதியில் தமிழக பெண்ணின் கை துண்டிப்பு: வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்துக்கு மத்திய அரசு கண்டனம்

 
 
கஸ்தூரியை மீட்க உடனடி நடவடிக்கைக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆ.நந்தகோபாலிடம் கண்ணீர் மல்க முறையிட்ட உறவினர்கள். | படம்: சி.வெங்கடாசலபதி
கஸ்தூரியை மீட்க உடனடி நடவடிக்கைக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆ.நந்தகோபாலிடம் கண்ணீர் மல்க முறையிட்ட உறவினர்கள். | படம்: சி.வெங்கடாசலபதி

சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற தமிழக பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்துக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் வேலூர் மாவட்டம் மூங்கிலேரியைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் (55) எனத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்துவந்த இந்தியாவைச் சேர்ந்த 55 வயது நிரம்பிய கஸ்தூரி முனிரத்தினம் என்ற பெண்ணின் கையை அவரது வீட்டு உரிமையாளர் துண்டித்துள்ளார்.

இச்செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. சவுதி அரேபியாவில் இந்தியருக்கு நேர்ந்த இந்த துயரம் மிகக் கொடுமையானது. இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இச்செயலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.

சவுதி அதிகாரிகளிடம் இவ்விவகாரம் குறித்து பேசி வருகிறோம். பெண்ணின் கையை துண்டித்த நபர் மீது கொலை குற்றம் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இந்திய அரசாங்கம் தொடர்பில் இருக்கிறது" என்று சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து கஸ்தூரியின் குடும்பத்தினர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, "கஸ்தூரி வேலை செய்த வீட்டின் உரிமையாளர் அவரை பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளார். இதனால், கஸ்தூரி அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். இதனை அறிந்த உரிமையாளர் கஸ்தூரியின் வலது கையை துண்டித்துள்ளனர்" என்றனர்.

கதறும் சகோதரி:

"கஸ்தூரியை எப்படியாவது பத்திரமாக என்னிடம் கொண்டுவந்து சேருங்கள்" எனக் கதறுகிறார் அவரது சகோதரி விஜயகுமாரி.

அவர் மேலும் கூறும்போது, "எங்கள் சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தின் மூங்கிலேறி. 3 மாதங்களுக்கு முன்னர்தான் என் சகோதரி சவுதியில் வேலைக்குச் சென்றார். ஏஜென்ட் மூலமாகவே அவரை வேலைக்கு அனுப்பினோம். அங்கு சென்ற நாள் முதல் அவர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். சரிவர உணவுகூட தரவில்லை என எங்களிடம் கூறுவார். கஸ்தூரி வேலை செய்த வீட்டின் உரிமையாளர் (பெண் உரிமையாளர்) வேலை சரியாக பார்க்கவில்லை எனக் கூறி கஸ்தூரியை பல முறை அடித்திருக்கிறார்.

கடந்த 29-ம் தேதி இரவு கஸ்தூரி அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அப்போது அதை அறிந்த வீட்டு எஜமானி கஸ்தூரியின் வலது கையை துண்டித்துள்ளார். கீழே விழுந்ததில் கஸ்தூரியின் முதுகு எலும்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது சவுதி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவரை எப்படியாவது இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவந்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு உதவ வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்" எனத் தெரிவித்துள்ளார்.

கனிமொழி கடிதம்:

இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்று உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

அவரை உடனடியாக தமிழகத்துக்கு திருப்பி அழைத்துவர வெளியுறவு அமைச்சகம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சார்பில் இக்கோரிக்கையை நான் முன்வைக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தகவல்:

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறும்போது "ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சவுதி வெளியுறவு அலுவகத்துடன் தொடர்பில் இருக்கிறது.

இச்சம்பவத்துக்கு காரணமானவர் மீது துரித நடவடிக்கை எடுக்குமாறும் கடும் தண்டனை வழங்குமாறும் இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக தனி விசாரணை நடத்த வேண்டும், பெண்ணின் கையை துண்டித்த நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்திவருகிறோம்" என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/சவுதியில்-தமிழக-பெண்ணின்-கை-துண்டிப்பு-வீட்டுப்-பணிப்பெண்ணுக்கு-நேர்ந்த-கொடூரத்துக்கு-மத்திய-அரசு-கண்டனம்/article7742389.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை எடுத்தாலும் அடிமுட்டாள்களும் இஸ்லாமியக் காட்டுமிராண்டிகளும் வாழும் நாடுகளுக்குப் போகக் கூடாது.  அந்தப் பெண்ணுக்காக வருந்துவதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை. இந்திய அரசாங்கம் கண்டனம் செய்வதோடு நிறுத்தி விடும். தமிழக அரசு குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உறுதியாக நின்றால்தான் ஏதவது நியாயம் உண்டு. ஆனால் தமிழகம் தமிழருக்கானது இல்லையே. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது அனுபவத்தில் நடந்தது மரியாதை கருதி இதுவரை எவருக்கும் கூறவில்லை, 

அப்போது நௌபியாவினது மரணதண்டனை அனைவராலும் பேசப்பட்டகாலம், அவ்வேளையில் பகுதிநேரமாக நான் ஒரு உணவகத்தில் வேலையிலிருந்தேன், அந்தநேரம்பார்த்து ஒரு உனவுக்கான ஹோம் டிலிவரி வந்தது, கொண்டுபோய் வாசில கதவைத் தட்டினால் சவூதித் தூதரகத்தில் வேலைசெய்யும் இரண்டு நடுத்தர வேலையாட்கள் முதலில் எனக்குத் அவர்கள் யார் எனத் தெரியாது ஆனால் அவர்களே நீ இந்தியனா+ உனக்கு ஹிந்திதெரியுமா எனக்கேட்டார்கள். இல்லை எனக்குஎதுவும் தெரியாது ஆனால் நீங்கள் எந்தநாடு எனக்கேட்டேன் அதுக்கு சவூதி என்றார்கள் 

நான் நௌபியாவின் விடையத்தைக்கூறி இனிமேல் உணவுடிலிவரிக்கு நான் வேலைசெய்யும் கடைக்கு தொலைபேசியில் அழைக்காதே என .

அடுத்தநாள் அந்தவேலை போயிற்றுது.

  • தொடங்கியவர்

தமிழக பெண்ணின் கையை நான் வெட்டவில்லை: சவூதி அரேபிய நபர் மறுப்பு!

 

saudi.jpgரியாத்: சவூதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற தமிழக பெண் கஸ்தூரி முனிரத்னத்தின் கையை நான் வெட்டவில்லை என்று குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் அந்நாட்டு நபர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் (55), சவூதி அரேபியாவில் வேலைக்கு சென்ற இடத்தில் அவரது கையை அந்த வீட்டின் உரிமையாளர் துண்டித்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்தச் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தச் சம்பவத்தை கொலை முயற்சியாக வழக்குப்பதிவு செய்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்று சவூதி அரேபிய அரசை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக 'அரபு நியூஸ்' பத்திரிகைக்கு அந்த நபர் அளித்துள்ள பேட்டியில், ''எனது தாயார் கடந்த வியாழக்கிழமை பிரார்த்தனையில் ஈடுபட்ட நேரத்தில், அந்தப் பெண் தனது அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டார். பிறகு, 3வது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக வெளியேறும் திட்டத்துடன் அறையில் இருந்த துணிகளை கயிறு போல திரித்து, அதை ஜன்னல் வழியாக தொங்கவிட்டு அவர் கீழே குதித்தார்.

அப்போது, கீழிருந்த 2 மின்சாரப் பெட்டிகளின் மீது அவர் விழுந்தார். இதில் அந்தப் பெண்ணின் வலது கையில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. அவர் குதிப்பதையும், மின்சாரப் பெட்டிகளின் மீது விழுந்ததையும் அப்பகுதியில் இருந்த வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் பார்த்து போலீசுக்கு தகவல் அளித்திருக்கிறார். அதன் பின்னர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரது வலது கை அறுவை சிகிச்சை செய்து துண்டிக்கப்பட்டது.

எனது தாயாருக்கு உதவி செய்வதற்காக அந்தப் பெண், 2 மாதத்துக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார். ரியாதில் உள்ள தனி இல்லத்தில் அவர் வசித்தார். அவரது கை துண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் முழு விசாரணை நடத்தினர். இதில், அந்தப் பெண் ஜன்னல் வழியாக கீழே குதித்ததை போலீசார் உறுதி செய்தனர்" என்று குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், அவரது பெயர் தெரியவரவில்லை. பேட்டியிலும் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.

http://www.vikatan.com/news/article.php?aid=53589

  • 1 month later...
  • தொடங்கியவர்

'கைநிறைய சம்பளம் எதிர்பார்த்தேன், கையை இழந்தேன்...!'- 'சவுதி ரிட்டர்ன்' கஸ்தூரி கண்ணீர் பேட்டி

 

kasthuri%20250.jpgகாட்பாடி அருகே மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரியை எளிதில் மறந்திருக்க முடியாது.

சவுதிக்கு வீட்டு வேலைக்கு சென்று, மொழியறியாத தேசத்தில் பல மாதம் கஷ்டங்களை அனுபவித்ததோடு, தன் ஒரு கையையும் பறிகொடுத்து, குற்றுயிரும் குலையுமாக நாடு திரும்பியவர். சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து, தன் சொந்த ஊருக்கு வந்திருந்த அவரை சந்தித்தோம்.

வலது காலும் முறிந்துள்ளது. முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சவுதி அனுபவங்கள் அவர் மனதிலிருந்து  இன்னும் முழுவதுமாக விலகவில்லை என்பதை அவரது முகம் காட்டுகிறது.

எழுந்து நடக்கவே சிரமப்பட்டவரிடம், "என்ன நடந்தது?" என்றோம்.

"எனக்கு மூணு பொண்ணுங்க, ஒரு பையன். வீட்டுக்காரர் ஒழுங்கா வேலைக்கு போகலை. பையன் கட்டட வேலைக்கு போய் குடும்பம் நடத்தவேண்டியதா இருந்துச்சு. ஒருநாள் வேலைசெய்றபோது தடுமாறி விழுந்து அவனுக்கு கால் உடைஞ்சு, தொடர்ந்து வேலைக்கு போக முடியாம ஆகிவிட்டது.

குடும்பத்துக்கு வருமானமே இல்லாம போச்சு.  கடன் வாங்கி பொண்ணுங்களை கட்டிக்கொடுத்திட்டு அந்த கடனையும் திருப்பி கட்ட முடியல. சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமையிலதான் பையனுக்கு தெரிஞ்ச ஒருத்தர்,  'வெளிநாட்டுல வீட்டு வேலைக்கு நல்ல சம்பளம் தராங்க'னு சொல்ல, சரின்னு அங்க போறதுக்கு முடிவு செய்தேன்.

புருஷனும் வேலைக்கு போறதில்லை. பையனுக்கும் அடிபட்டுப்போச்சு. நாமதான் இனி குடும்பத்தை கரைசேர்க்கணும்னு வெளிநாட்டு வேலைக்கு போனேன். நல்ல சம்பளம் தருவாங்க. நம்ம வாழ்க்கை வறுமையும் போயிடும்னு நம்பிப்போனேன். ஆனா கையை இழந்து, காலும் செயல்படாமபோய், இப்போ என்னோட வேலைகளையே என்னால செஞ்சுக்க முடியலை."- கதறி அழுகிறார் கஸ்துாரி.

மெல்ல தன்னை ஆசுவாசப்படுத்தியவரிடம் "அங்கு வேலைச் சூழல் எப்படி இருந்தது?"  என்றோம்.

" ரியாத்ல எனக்கு வேலை. அரபிக்காரங்க ஒருத்தங்களோட 65 வயசு அம்மாவ பாத்துக்கணும். அவங்க வீட்டு வேலையை எல்லாம் செய்யணும். துணி துவைக்கறது, வீட்டை சுத்தம் பண்றது, அவங்களுக்கு தேவையானதை செய்து தரணும். காலைல எந்திரிக்கறதுல இருந்து ராத்திரி தூங்குற வரை வேலை இருக்கும். ஒருநிமிடம் கூட ஓய்வு கிடைக்காது. ஜூலை மாசம் போனேன். போன நாள்ல இருந்து ஒரு நாள் கூட நல்ல சாப்பாடே எனக்கு போட்டதில்லை.

kasthuri%20600%2011.jpg

மூணு நாளுக்கு முன்னாடி செஞ்ச கெட்டுப்போன சாப்பாட்டைதான் கொடுத்தாங்க. சரி சம்பளத்துக்குன்னு இவ்ளோ தூரம் வந்துட்டோம். சகிச்சுகிட்டு இருப்போம்னு இருந்தேன். மாசம் 300 டாலர் சம்பளம்னு சொல்லியனுப்பினாங்க. அங்க 900 ரியால் கொடுத்தாங்க. முதல் மாசம் சம்பளம் கொடுத்திட்டு என் பையனுக்கு போன் போட்டு கொடுத்தாங்க.

அவன்கிட்ட 'சம்பளம் வாங்கிட்டேன்பா என்று சொல்லிவிட்டு, 'சரியான சாப்பாடு போடறதில்லைன்னு' மனக்குறையாக சொன்னேன். அவ்வளவுதான், மறுநாள் எனக்கு கொடுத்த காசையும் புடுங்கிட்டாங்க. என் செல்லையும் வாங்கிகிடுச்சு அந்த வீட்டம்மா.

சாப்பாடு போடலைன்னாலும் சம்பளமாவது தந்தா போதும்னு இருந்தேன். கொடுத்த சம்பளத்தையும் புடிங்கிகிட்டதால பயம் வந்துவிட்டது. வீட்டுக்கும் பேச முடியாது. அவங்க பேசுறதும் எனக்கு புரியாது. அந்தம்மா கூட சைகையில்தான் பேசுவேன்.  'எனக்கு இங்க இருக்க புடிக்கலை... ஊருக்கே அனுப்பி வச்சிடுங்கமா' ன்னு ஒருமுறை அழுதுட்டே சைகையால கெஞ்சினேன்.

கோபமான அந்தம்மா,  'கழுத்தை அறுத்திடுவேன்' னு சைகை காட்டினாங்க. எனக்கு பகீர்னு ஆகிடுச்சு. இங்க இனி இருந்தா நம்மளை எதாவது பண்ணிடுவாங்கன்னு, அவங்க பையன் வீட்ல வேலை செய்த நெய்வேலிக்காரர் ஒருத்தர்ட்ட நடந்த விஷயத்தை சொல்லி, 'என்னை போலீஸ் ஸ்டேஷன்ல விட்டுருப்பா நான் அவங்க மூலமா ஊருக்கு போய்டுறேன்' னு அழுதேன்.

kasthuri%20600%202.jpg

ஆனா அந்த பையன் நான் சொன்னதை அப்படியே அந்த வீட்டுக்காரங்ககிட்ட சொல்லிட்டான். அப்புறம் சித்ரவதை ஆரம்பிச்சிட்டது. என்னை எதாவது பண்ணிடுவாங்களோன்னு பயந்து, ஒருநாள் அந்த வீட்டின் மாடியில் இருந்து சேலையை கட்டி இறங்கப் பார்த்தேன். அப்போ அங்க இருந்த ஜெனரேட்டர்ல கை சிக்கிக்கிடுச்சு. ரத்தம் வெளியேறினதால் நான் மயங்கி கீழ விழுந்துட்டேன். அப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது. கை ரொம்ப நசுங்கினதால வெட்டி எடுத்துட்டதா சொன்னாங்க." என்று பறிகொடுத்த கையின் தோள்பட்டையை தடவிப்பார்த்து கண்ணீர் சிந்தினார்.

"குடும்ப வறுமைக்கு ஒரே தீர்வாக வெளிநாட்டு வேலை அமையும்னு நம்பிதான் அங்க போனேன். இந்த மாதிரி கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்னு தெரியாது. இனி அப்படி யாரும் போகக்கூடாது. அதுக்கு நானே நேரடி உதாரணம். குறைவான சம்பளத்துக்கு ஒரு ஆட்களை அனுப்ப இத்தனை லட்சம்,  இத்தனை ஆயிரம்னு ஏஜெண்டுங்க கமிஷன் வாங்கிக்கறாங்க.

வீட்டுக்காரங்க அவ்ளோ செலவு செய்வதால், நமக்கு வேலை புடிக்கலைன்னாலும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குறது நடக்குது. வீட்டை விட்டு எங்கயும் அனுப்பாததால், மற்ற இடங்கள்ல இருக்க நம்ம பொம்பளைங்க நிலை தெரியலை. ஆனால் அவங்களும் இப்படிதான் கொடுமை அனுபவிக்கறாங்கன்னு நினைக்கிறேன்." என்றார் கம்மிய குரலில்.

kasthuri%20600%201%281%29.jpg

கஸ்துாரிக்கு தமிழக அரசு சார்பில் பத்து லட்சம் நிவாரணத் தொகையாக வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து மாதம் ரூ. 8000 வட்டிப்பணமாக வருவதாக சொல்கிறார். ஆனால் தற்போதைய நிலையில் அவரின் மருத்துவ செலவை கவனித்துக்கொள்வதற்கே அந்த தொகை சரியாகி விடுகிறது என்கிறார்.

மத்திய அரசு மற்றும் சவுதி அரசிடமிருந்து நஷ்ட ஈடு  கேட்டு கோரிக்கை மனு அனுப்பிக்கொண்டிருக்கிறார்.

வெளிநாட்டு வேலையில் விருப்பம் இருப்பது தவறில்லை. சரியான தகுதிகளோடு, அனுபவம் வாய்ந்த,  முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் செல்வதே சரியாக இருக்கும்.  எதையும் ஆராயாமல் அதிக சம்பளம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தைகளை நம்பிபோனால் துயரங்களை சந்திக்கவேண்டிதான் இருக்கும்.

கஸ்துாரியின் வாழ்க்கை சொல்லும் படிப்பினை இதுதான்!

http://www.vikatan.com/news/tamilnadu/55720-interview-with-kasthuri-torchured-saudi.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.