Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

நான் நாடமாட்டேன் .....!!!

என்னவனின் ....
அழகு மார்பை ....
நான் வெறுக்கிறேன் .....
வீதியில் வந்தவர்கள் ....
ரசித்த அந்த மார்பை 
வெறுக்கிறேன் .....!!!

எச்சில் 
பட்ட என்னவனின் .....
மார்பை இனிமேல் நான் ...
நாடமாட்டேன் .....!!!


+
குறள் 1311
+
புலவி.
+
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் 
நண்ணேன் பரத்தநின் மார்பு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 231

  • Replies 390
  • Views 39.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யார் நினைக்கிறார்களோ...?


என்னவனோடு .....
ஊடல் செய்தேன் .....
தும்மினான் ....
நான் நூறு என்று ....
வாழ்த்துவேன் ....
என்று நினைத்தார் ....!!!

நன்றாக நான் ....
வாழ்த்துவேன் ...
யார் நினைகிறார்களோ...?
என்றாலும் மனம் ...
தன்னை அறியாமல் ...
வாழ்த்தியது ....!!!

+
குறள் 1312
+
புலவி நுணுக்கம் 
+
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை 
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 232

மனதில் ஒரு சஞ்சலம் ....

பூத்து குலுங்கிய ....
மலர்களை பறித்து ....
பூமாலை சூடினேன் ....
என்னவனுக்கு .....!!!

மனதில் ஒரு சஞ்சலம் ....
என்னவன் மாலையுடன் ....
செல்கையில் எவளோ ....
ஒருத்தி கண்ணில் படுவாரே ....
கோபம் கொள்கிறேன் மனமே
+
குறள் 1313
+
புலவி நுணுக்கம் 
+
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் 
காட்டிய சூடினீர் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 233

  • தொடங்கியவர்

அத்தனை அன்பு உயிரே ....

யாரைகாட்டிலும் ....
என்னவளே உன்னில்தான் ....
அத்தனை அன்பு உயிரே ....
ஊடலின் போது பேசிவிட்டான் ....!!!

சினங்கொண்டாள்.....
யாரை காட்டிலும் என்றால் ...?
அந்த யார் யாரென்று ....
கேட்டு கேட்டே ஊடல் கொண்டாள்...!!!

+
குறள் 1314
+
புலவி நுணுக்கம் 
+
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் 
யாரினும் யாரினும் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 234

கண்ணீருடன் நின்றாள் ....!!!

இந்த ஜென்மத்தில் ....
உன்னை பிரியேன் உயிரே ....
என்றான் அவன் .....!
அப்போது அடுத்த ஜென்மம் ...
ஒன்று உண்டோ என்றாள்....?

அப்போ இந்த ஜென்மத்தில் 
பிரிவதற்கு வாய்ப்பு உண்டோ ...?
கேட்டபடியே கண் நிரம்பி ...
வழியும் கண்ணீருடன் நின்றாள் ....!!!

+
குறள் 1315
+
புலவி நுணுக்கம் 
+
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் 
கண்நிறை நீர்கொண் டனள்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 235

  • தொடங்கியவர்

புத்தகத்தின் நடுவில்
புதைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்...
இறகு கொடுத்த உன் நினைவோ
'குட்டி மேல் குட்டி'!

தனிமை என்பதே இல்லை ....
நினைவுகள்இரு(ற)க்கும் வரை,,,,,
நீ பேசிய அன்பின் வார்த்தையையும்
சிரித்த சிரிப்பும் என் உயிரோடு ....
கலந்துவிட்டன ....!!!

வந்து போகின்ற நினைவலைகளில்
நீ சொன்ன பொய்யான
வார்த்தைதான் கனக்கிறது மனதை ....!!!
கடைசி வரை சேர்ந்தே வாழ்வோம்,
சேர்ந்தே சாவோம் என்று,,,,!!!

  • தொடங்கியவர்
"ர " சொல்லுகிறது ... 

நீ என்னைப்போல் முன்னோக்கி காலை வைத்தால் வளர்ச்சி "நக ர ம் " 
பினோக்கி காலை வைத்தால் வீழ்ச்சி "ந ர கம் "
 
  • தொடங்கியவர்

தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை 

முயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால்
முடிவுகள் இனிமையானவை .

.முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன் 
''இருந்தாலென்ன ''''செத்தாலென்ன ''

முயற்சி தோற்றதே இல்லை

முயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே

  • தொடங்கியவர்

நிச்சயம் வெற்றி 

மனிதா.....................................!!!

"வெற்றி" 
பெற வேன்டும் என்றால் ....
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் ....!!!

"சாதனை" 
செய்ய வேண்டுமென்றால் ,,,,,
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் ....!!!

"உலகம் உன்னை திரும்பி பார்க்க "
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருங்கள் ....!!!


இவை கடினம் தான் ,,,,,
ஆனால் நான் அவதானித்த சாதனையாளர் ....
வெற்றியாளர்கள் வாழ்கை வரலாற்றில் ....
இதையே நான் அவதானித்தேன் ,,,,,!!!

நீங்களும் அவதானித்து பாருங்கள் .....
அனுபவித்தும் பாருங்கள் ....!!!

  • தொடங்கியவர்

என் இதயத்தில் காதல் என்னும் 
அத்தியாயம் தந்தது நீ.....

என் வாழ்க்கை என்னும் பாடத்தில் 
வலிகள் நிறைந்த கண்ணீரை 
தந்ததும் நீ தான்....!

  • தொடங்கியவர்

உன் நினைவில்லாமல் ....

உயிரே ....
எப்போதும் உன்னையே ....
நினைத்திருப்பேன் .....
உன் நினைவில்லாமல் ....
நான் வாழ்வதே இல்லை ....!!!

எப்போதும் என்னையே ....
நினைப்பேன் என்றால் ....
அவ்வப்போது மறக்கிறீர்கள் ....
மறந்தால் தானே நினைவுவரும் ....
செல்ல சண்டை இட்டுபடி ....
ஊடல் செய்தால் என்னவள் ....!!!

+
குறள் 1316
+
புலவி நுணுக்கம் 
+
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் 
புல்லாள் புலத்தக் கனள்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 236

  • தொடங்கியவர்

உம்மை யார் நினைகிறார்கள் ....?

தும்மினேன் .....
யாரும்மை நினைகிறார்கள் ....
இப்போதானே உம்மை ....
வாழ்த்தினேன் - அதற்குள் ....
உம்மை யார் நினைகிறார்கள் ....?

அப்போ எனை விட்டு ....
உம்மை நினைக்கும் உள்ளமும் ....
உமக்கு உண்டோ ....?
கேட்டபடி அழுதால் -மனம் ...
மாறி அழுதமுகத்துடன் ....
ஊடல் செய்தாள் ....!!!
+
குறள் 1317
+
புலவி நுணுக்கம் 
+
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் 
யாருள்ளித் தும்மினீர் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 237

ஓகோ ..உம்மை நினைப்பதற்கு ....

என்னவனுக்கு .....
தும்மல் வந்தது -நான் ...
சந்தேகம் கொள்வேன் ..
என்பதற்காக தும்மலை ....
அடக்கினான் .....!!!

ஓ .....ஓகோ ...
உம்மை நினைப்பதற்கு ....
நிறையப்பேர் உள்ளனரோ ....
எனக்கு மறைக்கிறீரோ....
என்று அழுதபடியே ஊடல் ...
செய்தாள்....!!!

+
குறள் 1318
+
புலவி நுணுக்கம் 
+
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் 
எம்மை மறைத்திரோ என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 238

  • தொடங்கியவர்

ஓ ..நீர் இப்படித்தானோ ...?

நான் பணிந்து ....
என்னவளை சமாதான ...
படுத்தினேன் .....!!!

ஓ ....
நீர் இப்படித்தான் ....
மற்ற பெண்களையும் ...
இப்படிதான் சமாதானம் ....
செய்வீரோ ..-கேட்டபடியே ....
ஊடல் செய்தாள்....!!!

+
குறள் 1319
+
புலவி நுணுக்கம் 
+
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் 
இந்நீரர் ஆகுதிர் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 239

என்னை அப்படி பார்க்கவேண்டாம் ...

பேசினால் தானே ...
பிரச்சனை பேசாமல் ....
இருந்து அவளின் அங்கத்தை ....
பார்த்துகொண்டிருந்தான் ....!!!

ஓ ...யாருடைய மேனிபோல் ....
என் மேனி இருக்கிறது என்று ....
பார்க்கிறீரோ ....? சீ சீ சீ 
என்னை அப்படி பார்க்கவேண்டாம் ...
சினங்கொண்டாள் அவள் ....!!!

+
குறள் 1320
+
புலவி நுணுக்கம் 
+
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் 
யாருள்ளி நோக்கினீர் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 240

  • தொடங்கியவர்

பகுத்தறிவு
ஆராயும் உச்சம்
உயிர்
****************

உயிர் கொண்டு எழுதுகிறேன்
உயிராய் நினைக்கிறேன்
கவிதை
***************

ஞானிக்கு மூலாதாரத்தில்
காதலனுக்கு இதயத்தில்
உயிர்
**************

உடல் வேறுபடும்
எல்லாம் சர்வமயம்
உயிர்
**************

காலன் எடுக்க துடிக்கிறான்
காதலன் சேர துடிக்கிறான்
உயிர்
*************

உடல் இயங்குகிறது
அவள் செல்லப்பெயர்
என் உயிர்
*************
இருந்தால் வீடு
போனால் கூடு
உயிர்
*************

இருவரால் வரும்
ஒருவரால் போகும்
உயிர்
**************
பூக்களுக்கு மகரந்தம்
தேனீக்களுக்கு பூக்கள்
உயிர்
**************

ஆடாத ஆட்டம் ஆடும்
ஆறடிக்குள் அடங்கிவிடும்
உயிர்
*************

ஓரறிவு தாவரம்
ஆறறிவு மனிதன்
இயக்குவது உயிர்
************

வருவதும் தெரியாது
போவதும் தெரியாது
உயிர்

  • தொடங்கியவர்

நீ என்ன 
இருதய மாற்று சிகிசையா 
செய்துவிட்டாய் ..?

இத்தனைகாலம் பழகி ....
எத்தனையோ நினைவுகளை....
தந்துவிட்டு .......
எதுவுமே இல்லததுபோல் ..
தலையை குனிந்துகொண்டோ 
செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று சிகிச்சையா 
செய்து விட்டாய் ?

  • தொடங்கியவர்

இதய 
மாற்று சிகிச்சைதான் ....
கேள்விப்பட்டேன் ...
நீ இதயம் மாற்றும் ....
வித்தையை எங்கே ....
கற்றாய் .....?

இறைவா உனக்கு நன்றி ....
ஒரு இதயத்தை தந்ததற்கு ....
இரு இதயத்தை தந்திருந்தால் ....
இன்னொருத்தியும் வந்து ....
குடியிருந்திருப்பாள் .....!!!

  • தொடங்கியவர்

images?q=tbn:ANd9GcTFB4MfCEeft0jJSsRv6jV

கொடுமையிலும் கொடுமை .....
சிறுவர் துஸ்பிரயோகம் .....
இரக்கமற்ற அரக்கர்களால் ....
நடந்தேறும் கொடுமை .....!!!

பிஞ்சென்றும் பாராமல் .....
கொடூர குரலாம் அதட்டுவதும் ....
தம்பிள்ளை தானே என்றும் ....
தகுதிக்கு மீறி தண்டிப்பதும் .....
போதையில் வந்து பேசாத ...
வார்த்தைகளை பேசுவதும் ....
போதையை தன் பிள்ளைக்கு ...
தலைமுறையாய் கடத்துவதும் .....
வீட்டுக்குள் நடந்தேறும் 
சிறுவர் துஸ்பிரயோகம் ....!!!

உல்லாச பிரயாணம் .....
உள்ளத்துக்கே இருக்கவேண்டும் ....
உடலுக்கல்ல - பணம் படைத்த ....
நாடுகளில் இருந்து வந்தது ....
பட்டினி நாடுகளின் பலவீனத்தை ....
பக்கபலமாக பயன்படுத்தி ....
பாலகரை பயன்படுத்து வெறியர்களே 
உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!
 

  • தொடங்கியவர்


+
பச்சிளம் குழந்தைக்கு ....
என்னபுரியும் ....?
அம்மாவின் தூக்கத்திலும் ....
பால் குடித்த அந்த குழந்தைக்கு ....
என்ன புரியும் .....?

முளையில் பாலாக ......
வெளியேறவேண்டியது....
தலையில் இரத்தமாக .....
வெளியேறுவது .....
பச்சிளம் குழந்தைக்கு ....
எப்படி புரியும் .....?

ஈழத்தில் 
நடந்த கொடூரங்களில் ......
உலகை உலுக்கிய பலகொடூரம் ....
வடுவாக வலுவாக இருந்தாலும் ....
உலக மனசாட்சி இன்னும் ...
இருட்டு இரும்பு அறைக்குள் ....
கவனமாய் உறங்குகிறது ....!!!

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நல்லவர்போல் நடித்தாலும் ....

காக்கை 
அன்னநடை நடந்தாலும் ....
காக்கை காக்கைதான் ...
அதுபோல் கெட்டவர்கள்....
நல்லவர்போல் நடித்தாலும் ....
கெட்டவரே......!!!

அறிந்தேன் ....
நீ பேசிய வார்த்தையில் ....
எவ்வளவோ நல்லவன் போல் .....
நடித்தாலும் உன் முகமூடி ....
கிழிந்ததை கண்டேன் நட்பே ....!!!

+
குறள் 826
+
கூடாநட்பு
+
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் 
ஒல்லை உணரப் படும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 46

  • தொடங்கியவர்

வேஷங்கள் அடுத்தநொடி அழிந்துவிடும் .....!!!

வேஷம் 
போட்டு ராஜாவானாலும் ...
ஓட்டாண்டி ஓட்டாண்டிதான் ....
வேஷங்கள் அடுத்தநொடி .......
அழிந்துவிடும் .....!!!

வில் 
வளைவது அம்பை ....
எய்வதற்கே -அழகாயினும்...
வில் ஆபத்தானதே .....
கெட்டவர்கள் நல்லவார்த்தை ....
பேசினாலும் கேட்டவரே ....!!!

+
குறள் 827
+
கூடாநட்பு
+
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் 
தீங்கு குறித்தமை யான்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 47

  • தொடங்கியவர்
பகைவரின் நட்பு கொலைகருவி

பகைவன் ....
கையெடுத்து கும்பிட்டாலும் ....
கைக்குள் துப்பாக்கி ...
மறைந்திருக்கும் ......!!!

பகைவரின் ...
கண்ணீருக்குளும் ...
ஒரு கொலைக்கருவி ...
நிச்சயம் மறைந்திருக்கும் ....
பகைவரின் நட்பு கொலை...
கருவிக்கு ஒப்பானதே .....!!!

+
குறள் 828
+
கூடாநட்பு
+
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் 
அழுதகண் ணீரும் அனைத்து.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 48
 
பகைவரின் நட்பு கொலைகருவி

பகைவன் ....
கையெடுத்து கும்பிட்டாலும் ....
கைக்குள் துப்பாக்கி ...
மறைந்திருக்கும் ......!!!

பகைவரின் ...
கண்ணீருக்குளும் ...
ஒரு கொலைக்கருவி ...
நிச்சயம் மறைந்திருக்கும் ....
பகைவரின் நட்பு கொலை...
கருவிக்கு ஒப்பானதே .....!!!

+
குறள் 828
+
கூடாநட்பு
+
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் 
அழுதகண் ணீரும் அனைத்து.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 48
 
பசுத்தோல் போர்த்த புலிபோல் ....

பசுத்தோல் போர்த்த புலிபோல் ....
வெளியில் மென்மையும் ...
உள்ளே கொடுமையும் ....
கொண்ட நட்பு வேண்டாம் ....!!!

முகம் சிரிப்பை காட்டி பேசும் ....
அகம் சாக்கடைக்குள் இருக்கும் ....
நாமும் அதுபோல் இருதலையாய் ....
பழகுவது போலி நட்பு .....!!!
+
குறள் 829
+
கூடாநட்பு
+
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து 
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 49
  • தொடங்கியவர்
முகத்தால் பழகி அகத்தால் வெறு....

நெல்லோடு இணைந்து ....
புல்லும் சமமாக வளரும் ....
நெல் எது ,,,? புல் எது ...?
கண்டறிவது கடினம் .....!!!

தீயவரோடு நட்பு .....
வைத்தால் நானும் ......
ஓடும் புளியம் பழம் போல் ,,,,
பழகிடனும் முகத்தால்....
பழகி அகத்தால் வெறுப்பதே ....
அறிவான நட்பு ....!!!

+
குறள் 830
+
கூடாநட்பு
+
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு 
அகநட்பு ஒரீஇ விடல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 50
 
  • தொடங்கியவர்

தூறலும் இல்லை..... 
மழை சாரலும் இல்லை.....
ஆனாலும் நனைகிறேன் ....
உன் காதல் கண்ணின் ....
ஈரத்தில் ......!!!

+
இன்றைய sms கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

உன் ......
உதடுகள் நேசிப்பதை
நீ மறந்து விடலாம்......!!!

உன் ......
உள்ளம் பேசியதை ....
நீ உயிருள்ளவரை ....
மறக்கவே முடியாது .....!!!

+
இன்றைய sms கவிதை 
கவிப்புயல் இனியவன்

@@@

பிரிவு என்பது யாராலும்
பிரிக்க முடியாத நிகழ்வு ....
தவிர்க்க முடியாத வலி ....!!!

நினைவு என்பது யாராலும்
நிறுத்த முடியாத நிகழ்வு ....
தடுக்க முடியாத பரிசு ....!!!

+
இன்றைய sms கவிதை 
கவிப்புயல் இனியவன்

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

அலைகள் ஆசான்கள்*
கரைக்கு ஒதுங்கும் நண்டுகளுக்கு ....
தன்னம்பிக்கையை கொடுக்கும் ....
கடல் ஆசான் ....!!!

அலையால் தூக்கி எறியப்படும் ....
நண்டுகள் தன்னம்பிக்கையை ....
இழக்கவில்லை .....
தம் வாழ்விடத்தையும் ,,,,,
மாற்றுவதில்லை .....!!!

+
இன்றைய sms கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

என்னவளின் கொலுசு
சத்தம் காதலை 
கொண்டுவந்தது.....!!! 

என்னவளின்
மெட்டி சத்தம் கேட்டு ....
இதயம் கல்லறையானது ....!!!

+
இன்றைய sms கவிதை 
கவிப்புயல் இனியவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.