Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மத்திய கல்லூரி மாணவன்

Featured Replies

தங்கம் வென்று அசத்தியது யாழ்மத்தியகல்லூரி

12108032_10153285563768823_6004432818440

 

இந்திய புனேயில் நடைபெற்ற பொதுநலவாயநாடுகளுக்கு இடையிலா பளுதூக்கும் போட்டியில்S. விஷ்ணுகாந்த் 227Kgமொத்த நிறையினை தூக்கி தமிழ்  வீரர் ஒருவர் பெற்ற அதி உச்ச சாதனையை பதிவு செய்துள்ளா இவருக்கான பயிற்சிகளை விதன் வழங்கி இருந்தார்.

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்...!

தமிழன் என்பதில் எனக்கு என்றைக்குமே பெருமை...!

  • தொடங்கியவர்

வாழ்த்துகள்...!

  • தொடங்கியவர்
பொதுநலவாய பளு தூக்கல் போட்டி பூனே–2015 யாழ். மத்திய கல்லூரி மாணவன் விஷ்ணுகாந்திற்கு தங்கம் வேம்படி மகளிர் மாணவி டினேஜாவுக்கு வெண்கலம்
 

 

1273352.jpgஇந்­தி­யாவின் பூனே நகரில் நடை­பெற்ற பொது­ந­ல­வாய கனிஷ்ட மற்றும் இளை யோர் பளு­தூக்கல் போட்­டி­களில் இலங்­கைக்கு 5 தங்கப் பதக்­கங்­களும் 2 வெள்ளிப் பதக்­கங்­களும் 9 வெண்­கலப் பதக்­கங்­களும் கிடைத்­துள்­ளன.

 

யாழ். மத்­திய கல்­லூரி வீரர் சத்­தி­யராஜ் விஷ்­ணுகாந்த் தங்கப் பதக்­கத்­தையும் வேம்­படி மகளிர் உயர்­தரக் கல்­லூ­ரியைச் சேர்ந்த ஜே.ஜே.பி. டினோஜா வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்­றெ­டுத்­தனர்.

 

சர்­வ­தேச போட்டி ஒன்றில் முதல் தட­வை­யாக பங்­கு­பற்றி பதக்­கங்கள் வென்­றமை பெருமை தரு­வ­தாக பூனே­யி­லி­ருந்து தொலை­பேசி வாயி­லாக இவ்விரு­வரும் தெரி­வித்­தனர். 

 

ஆண்­க­ளுக்­கான 85 கிலோ கிராம் எடைப் பிரிவில் மொத்­த­மாக 227 கிலோகிராம் எடையைத் தூக்­கி­யதன் மூலம் விஷ்ணு­காந்த் தங்கப் பதக்­கத்தை வென்­றெ­டுத்தார்.

 

இவர் ஸ்னெச் முறையில் 102 கிலோ கிராம் எடை­யையும் க்ளீன் அண்ட் ஜேர்க் முறை யில் 125 கிலோ கிராம் எடை­யையும் தூக்­கினார்.

 

பெண்­க­ளுக்­கான 63 கிலோ கிராம் எடைப் பிரிவில் டினோஜா மொத்­த­மாக 122 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெண்­கலப் பதக்­கத்தை வென்றார்.

 

இவர் ஸ்னெச் முறையில் 54 கிலோ கிராம் எடை­யையும் க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 68 கிலோ கிராம் எடை­யையும் தூக்­கினார்.

 

இதே­வேளை, பெண்­க­ளுக்­கான 48 கிலோ கிராம் எடைப்­பி­ரிவில் டி.டி.அபே­சே­கர  (மொத்தம் 145 கி.கி.) தங்கப் பதக்­கத்­தை யும் 44 கிலோ கிராம் எடைப் பிரிவில் யூ. ஆர். குண­தி­லக்க (101 கி.கி.) வெள்ளிப் பதக்­கத்­தையும் ஆண்­க­ளுக்­கான 77 கிலோ கிராம் எடைப் பிரிவில் எஸ். என். அபே­வர்­தன (210 கி.கி.) வெள்ளிப் பதக்­கத்­தையும் ஆண்­க­ளுக்­கான 56 கிலோ கிராம் எடைப் பிரிவில் சி.எம்.வீர­ரட்ன (171 கி.கி.), 62 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஆர். ஜய­சிங்க (210 கி.கி.), 77 கிலோ கிராம் எடைப் பிரிவில் டி.எம்.சென­ரத்ன (195 கி.கி.) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

 

இவர்களை விட மேலும் ஏழு பேர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12733#sthash.GuEbmrLg.dpuf

Edited by நவீனன்

  • 7 months later...
  • தொடங்கியவர்

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சும் கல்விஅமைச்சும் மைலோ அனுசரணையுடன் சர்வதேச போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு நடாத்திய வர்ணவிருது வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க மண்டபத்தில் நடைபெற்ற போது பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான இளைஞோர் பளுதூக்கும் போட்டியில் யாழ்மத்தியின் ச.விஷ்ணுகாந்த் தங்கம் வென்றதற்காக கௌரவிக்கப்பட்டார்

13406790_1090423780993534_15384119004314

13413090_1090423820993530_83937130516505

13269266_1090423854326860_41668776879454

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.