Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஐரோப்பாவின் 'வைல்ட் வெஸ்ட்'
----------------------------------------------------

ஹங்கேரியின் பெருஞ்சமவெளிப் பிரதேசம் தான் , அமெரிக்காவின் ‘வைல்ட் வெஸ்ட்’ ( Wild West) என்றழைக்கப்படும் 17ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டுக்கிடையிலான காலகட்டத்தில் மிசிசிபி ஆற்றுக்கு மேற்கே இருந்த குடியேற்றங்களில்லாத வனாந்தரப் பிரதேசத்துக்கு இணையான ஐரோப்பிய பிரதேசம் . கிளிண்ட் ஈஸ்ட்வுட் போன்றோர் நடித்த சில ஹாலிவுட் படங்களில் வரும் காட்சிகளில் வருவது போன்ற குதிரைகள் மற்றும் குதிரை மேய்ப்பவர்கள் எல்லாம் காணப்படும் ஒரு பகுதி இது.
இந்தப் படம் ஹோர்டோபேகி என்ற பகுதியில் உள்ள சமவெளியில் அந்தி சாயும் நேரத்தில் குதிரைகளை ஒரு மேய்ப்பவர் வழி நடத்திச் செல்லும் காட்சியைக் காட்டுகிறது.

13615334_10153558282755163_5585929547251

BBC

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க - பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் சென்னை ரசிகர்கள் ..

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் சகாப்தம்: கறுப்பு வைரம்

 
 
karuppu_vairam_2921821h.jpg
 

ஒலிம்பிக் என்றதும் நினைவுக்கு வரும் சாதனை முகங்களில் முதன்மையானது ஜெஸ்ஸி ஓவன்ஸ். ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் பெரும்பாலோரது பாராட்டுகளை யாராவது ஒருவர் ஒட்டுமொத்தமாக அள்ளிச் செல்வார். அப்படி உச்சபட்ச சாதனை புரிந்தவர்களில் முதன்மையானவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஓவன்ஸ்.

1936-ம் ஆண்டில் ஹிட்லர் ஆட்சியிலிருந்தபோது ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அப்போதுதான் ஓவன்ஸ் உலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.

வறுமையான குடும்பத்தில் பிறந்த ஓவன்ஸ், சிறு வயதில் வாழ்க்கை நடத்த மிகவும் கஷ்டப்பட்டவர். அவரது தாத்தா அமெரிக்கர்களிடம் அடிமையாக இருந்தவர். 10 வயதாவதற்கு முன்பே சின்னஞ்சிறுவனாக வயலில் பருத்தி எடுத்தல், பெட்ரோல் நிரப்புதல், மளிகைப் பொருட்களை கொண்டு போய்க் கொடுக்கும் வேலை என பல்வேறு வேலைகளை ஓவன்ஸ் செய்துவந்தார்.

அமெரிக்காவில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஒஹையோ மாகாணப் பல்கலைக்கழத்துக்காகப் பங்கேற்றபோது, வெறும் 45 நிமிடங்களில் நான்கு புதிய உலக சாதனைகளைப் படைத்தார். பொதுவாகவே கறுப்பினத்தவரை இளக்காரமாகப் பார்க்கும் அமெரிக்கர்களால், ஓவன்ஸின் உலக சாதனைகளை உடனடியாக ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

ஹிட்லர் ஆட்சியின் கீழ் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்றுதான் அமெரிக்கா முதலில் நினைத்திருந்தது. ஆனால், ஓவன்ஸின் மேற்கண்ட அதிரடி சாதனைகள், பெர்லின் ஒலிம்பிக்கில் அமெரிக்கா பங்கேற்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

அதில் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 400 மீ. தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய நான்கு போட்டிகளில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கேற்றார். பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் தங்கப் பதக்கத்தை அள்ளினார். இது ஒலிம்பிக் வரலாற்றில் முதன்மைச் சாதனையாகக் கருதப்படுகிறது.

இன்னொரு விஷயத்துக்காகவும் ஓவன்ஸ் நினைவுகூரப்படுகிறார். நீளம்தாண்டுதல் தகுதிச் சுற்றுக்கு முன்னதாக வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஹிட்லர் வந்திருந்தார். அனைவருடனும் கைகுலுக்கிய ஹிட்லர், ஓவன்ஸிடம் மட்டும் கைகுலுக்கவில்லை. ஆப்பிரிக்கர்கள் வெற்றி பெறுவதை அவர் விரும்பாமல் இருந்ததே காரணம். ஆனால், ஆடுகளத்தில் ஹிட்லருக்கு சரியான பதிலடி கொடுத்தார் ஓவன்ஸ்.

இன்றளவும் உடல்திறனை மட்டுமே நம்பி விளையாடப்படும் தனிநபர் போட்டிகளில், ஆப்பிரிக்கர்களே பெருமளவு வாகை சூடி வருவது குறிப்பிடத்தக்கது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

ஜுலை - 08

 

1497 : ஐரோப்­பா­வி­லி­ருந்து இந்­தி­யா­வுக்­கான முதல் நேரடி கடல்­வழி பய­ணத்தை போர்த்­துக்­கேய மாலுமி வாஸ் கொட காமா ஆரம்­பித்தார்.

 

1730 : சிலியில் ஏற்­பட்ட 8.7 ரிச்டர் அள­வி­லான ப+கம்பம் மற்றும் சுனா­மி­யினால் சிலியின் கரை­யோ­ரத்தில் 1000 கிலோ­மீற்­றர்­க­ளுக்கும் அதி­க­மான கரை­யோரப் பகுதி அழிந்­தது.

 

76317b5varalru_07072016_P62_CMY.jpg1947 : மெக்­ஸி­கோவில் பறக்கும் தட்­டொன்று நொருங்கி விழுந்­த­தாக செய்தி வெளி­யா­னது.

 

1948 : அமெ­ரிக்க விமானப் படையில் முதல்­த­ட­வை­யாக பெண்கள் சேர்க்­கப்­பட்­டனர். 

 

1966 : புரூண்­டியில் 4 ஆம் எம்­வம்­புட்­ஸாவை அவரின் மகன் சார்ள்ஸ் என்­டிஸி ஆட்­சி­யி­லி­ருந்து  அகற்றி தானே மன்­ன­ரானார்.

 

1985 :  இலங்கை அர­சுக்கும் தமிழர் போராட்ட அமைப்­பு­க­ளுக்கும் இடையில் பூட்டான் தலை­நகர் திம்­புவில் பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­ப­மா­யின.

 

1988 : இந்­தி­யாவின் பெங்­களூ­ரி­லி­ருந்து கன்­னி­யாக்­கு­மரி நோக்கி சென்ற பய­ணிகள் ரயில் பால­மொன்­றி­லி­ருந்து ஏரியில் விழுந்­ததால் 105 பய­ணிகள் பலி­யா­கினர்.

 

1994 : வட­கொ­ரிய ஜனா­தி­பதி கிம் இல் சுங் கால­மா­ன­தை­ய­டுத்து அவரின் மகன், கிம் ஜோங் இல் ஆட்­சிக்கு வந்தார்.

 

2003 : சூடா­னிய விமானம் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 117 பேர் கொல்­லப்­பட்­டனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்­பி­யது.

 

2014 : இஸ்ரேலிய இளைஞர்கள் மூவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தின் மீது பாரிய தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்தது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஜேர்மன் தேசிய கொடியின் நிறங்களால் மூடப்பட்டுள்ள தேவாலயம்
 

ஜேர்­ம­னி­யி­லுள்ள தேவா­ல­ய­மொன்று அந்­நாட் டின் தேசிய கொடியின் நிறங்­களைக் கொண்ட ஷீட்­க­ளினால் மூடப்­ப­ட­டுள்­ளதைப் படங்­களில் காணலாம். 

 

1786161.jpg

 

தேசிய கொடியின் நிறங்­களில் தேவா­ல­யத்தை மூடு­வ­தற்­கான காரணம் என்­ன­வென பலர் வியப்­ப­டைந்­தனர். 

 

1786162.jpg

 

ஆனால், இத்­தே­வா­லயக் கட்­ட­டத்தில் பலகை­களில் ஏற்­பட்­டுள்ள தொற்­று­களை நீக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கையின் ஒரு பகு­தி­யாக இவ்­வாறு மூடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13568961_1076945522354141_55018526116054

 
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சிறந்த துடுப்பாட்ட வீருமான சௌரவ் கங்குலியின் பிறந்தநாள்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட கங்குலி, ரசிகர்களால் இன்றும் 'தாதா' DADA என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

Happy Birthday Saurav Ganguly
 

கங்குலி - இந்திய‌ கிரிக்கெட்டின் கபாலி

sriramsathiyamoorthy

 

‘தாதா’ – இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு பெயர். இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய பெயர். இந்திய கிரிக்கெட்டிற்கு முகவரி அளித்த பெயர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப்போகும் பெயர். சினிமா ரசிகனை ஆட்டுவிக்க பாட்ஷா, கபாலி என்று எத்தனையோ தாதாக்கள் இருக்கலாம், ஆனால் கிரிக்கெட் ரசிகன் உச்சிமுகரும் ஒரேயொரு தாதா – சவுரவ் கங்குலி. ‘பெங்கால் டைகர்’, ‘கொல்கத்தா பிரின்ஸ்’, ‘காட் ஆஃப் ஆஃப்சைடு’ என இவரைக் கொண்டாடிய ரசிகர்களெல்லாம் இன்னும் இவரது ரசிகர்கள் தான். இவரது ஓய்வுக்குப் பிறகு தோனியின்  பின்னாலோ, கோலியின் பின்னாலோ அவர்கள் செல்லவில்லை. தாதாவின் கிரிக்கெட் வர்ணனையை கேட்க‌, அவரது ஆளுமையை ஏன் அவரது பேட்டிகளைக் கூட இன்னுமும் ரசித்துக் கொண்டிருக்கின்றனர் கங்குலி வெறியர்கள். ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் அடித்த சிக்ஸரை பார்த்த பலரது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் கடவுள் இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனான கங்குலி, கேப்டன் என்பதையும் தாண்டி, இந்திய அணியின் காட்ஃபாதராய் விளங்கியவர். ஓய்வுபெற்று 8 ஆண்டுகளாகியும், இந்தியாவில் கிரிக்கெட் மட்டைகள் சுழலும் இடங்களிலெல்லாம் ‘தாதா என்ற கோஷம் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்று 44வது பிறந்தநாள் கொண்டாடும் தாதாவை ஏன் ரசிகர்கள் இந்த அளவிற்கு நேசிக்கிறார்கள்.  தாதாவை இந்திய கிரிக்கெட் ரசிகனால் மிஸ் செய்ய முடியாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளது அவற்றில் சில இதோ...


அசத்தல் அறிமுகம்:

    கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் தான் கங்குலியின் டெஸ்ட் பயணம் தொடங்கியது. பலம் வாய்ந்த இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்ட சவுரவ், அறிமுக போட்டியிலேயே 131 ரன்கள் குவித்து அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான். அதுமட்டுமின்றி தனது இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்து கிரிக்கெட் உலகிற்கு தனது வருகையை அறிவித்தார். அந்தத் தொடரிலேயே சச்சினுடன் இணைந்து 255 ரன்கள் எடுத்து அச்சமயத்தில் இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு பார்ட்னர்ஷிப்பை அமைத்தார் தாதா. உலக பந்துவீச்சாளர்கள் அனைவரையும் அசர வைக்கும் ஒரு காம்போவிற்கான அஸ்திவாரத்தை தனது முதல் தொடரிலேயே ஏற்படுத்தினார் கங்குலி.

84629.jpg

களம் தாண்டிய பந்துகள்

    இன்று கெயிலோ, வார்னரோ 100 மீட்டருக்கு சிக்சர் அடித்தாலே வாய்பிளக்கும் நாம், ஷார்ஜாவில் கங்குலி அடித்த அடிகளைப் பார்த்திருந்தால்?! ஜிம்பாப்வே நிர்ணயித்த 197 ரன் டார்கெட்டை சச்சினும் கங்குலியுமே ரவுண்டு கட்டி அடித்தனர். அதிலும் கிரான்ட் பிளவர் வீசிய ஒரு ஓவரில் மூன்று முறை பந்துகளை கூறையின் மீது பறக்கவிட்டார். ஒவ்வொரு முறையும் பந்து ஸ்டாண்டுகளைத் தாண்டிப் பறந்த போது ரசிகர்கள் மிரண்டே போயினர். கெயில் போன்று பலம் கொடுக்காமல், வெறும் கிளாசிக்கல் ஷாட்களால் சிக்சர் அடிக்கும் கங்குலியின் ஸ்டைலைக் காணக் கண் கோடி வேண்டும். அதாவது பரவாயில்லை 2003 உலகக்கோப்பையில் கென்யாவுக்கு எதிராக இரண்டு முறை பாலை ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்பி வைத்தார். பந்தை அவுட் ஆஃப் ஸ்டேடியம் அனுப்புவதிற்கு கங்குலியை விட்டால் சிறந்த ஆளில்லை.கங்குலி ஆடியது இன்று உள்ளது போல் பேட்ஸ்மேன் ஃப்ரெண்ட்லி பிட்ச்களில் அல்ல...பந்துகள் எகிறும் பவுன்ஸி பிட்ச்களில்...

அவுட்ஸ்டேண்டிங் ஆல் ரவுன்டர்

    கங்குலி ஃபார்மில் இருக்கும்போது உண்மையிலேயே அவர் பெங்கால் டைகர் தான். எதிரணியை கடித்துக் குதறிவிடுவார். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் 1997ல் நடந்த சஹாரா கோப்பை. பாகிஸ்தானுக்கு எதிரான அத்தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வாங்கி அசத்தினார் தாதா. பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் அசத்திய தாதா அந்த 4 போட்டிகளில் மட்டும் 11 விக்கெட்டும் 205 ரன்களும் எடுத்து அல்ரவுண்டராக ஜொலித்து, அந்தத் தொடரைத் தனக்கான இரையாக்கினார். இதுநாள் வரையில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் கங்குலி தான்.

கேப்டன் அல்ல லீடர்

189707.jpg

   

கேப்டன் – ஒரு அணியை வழிநடத்துபவர். ஆனால் கங்குலியோ இந்திய அணியை வடிவமைத்தவர். சூதாட்டப் புகாரால் சின்னா பின்னமான அணியை ஒருங்கிணைத்து உலக அரங்கில் ஒரு கம்பீர நடை போட வைத்தார் தாதா. அதுவரை இந்தியாவிற்கு என்று இருந்த முகத்தை மாற்றினார். மற்ற அணிகளெல்லாம் பார்த்துச் சிரித்த இந்திய அணியை ஆங்க்ரி பேர்டு மோடுக்கு மாற்றினார் தாதா. அதில் தானே முன்மாதிரியாகவும் விளங்கினார். ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு அதன் சொந்த மண்ணிலேயே சவால் விடுமளவு அணியை சிறப்பாக்கினார் தாதா. அதுமட்டுமின்றி இளம் வீரர்களை ஊக்குவித்து, அவர்களை நட்சத்திரங்களாக்கியவர் கங்குலி. சேவாக், யுவி, ஜாகிர், பாஜி என அந்தப்படை நீண்டு கொண்டே போகும். மிடில் ஆர்டரில் தவித்த சேவாக்கின் திறமையறிந்து, தனது ஓப்பனிங் ஸ்லாட்டையே அவருக்காக விட்டுக்கொடுத்தார் தாதா. அதுதான் தாதா. அணிக்காக எதையும் செய்யக் கூடியவர் அவர். எப்படிப்பட்ட அதிரடி முடிவுகளையும் எடுக்க அவர் தயங்கியதில்லை. வெற்றிகளை கூலாக அணுகும் தோனிக்கும், மைதானத்தில் ஆக்ரோஷம் காட்டும் கோலிக்கும் இன்ஸ்ப்ரேஷன் தாதா தான்.

ஆஸியை ஸ்விட்ச் ஆஃப் செய்தவர்:

    அன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் என்பது ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஸ்லெட்ஜிங்கால் எதிரணியை மனதளவில் தாக்கி வந்த ஆஸி வீரர்களையும், அவர்கள் கேப்டன் ஸ்டீவ் வாக்கையுமே கலங்கடித்தவர் தாதா. 2001 ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸி அணியை வீழ்த்தி அவர்களது 16 போட்டி தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது தாதா அண்ட் கோ. மேலும் அத்தொடரில் டாஸ் போடுவதற்கு லேட்டாக வந்து பிறரை எரிச்சலூட்டும் ஸ்டீவ் வாக்கையே எரிச்சலூட்டினார் தாதா. அப்போதுதான் வெற்றியாலும் தலைகனத்தாலும் பறந்து கொண்டிருந்த ஆஸி அணி தரை தொட்டது. 2004ம் ஆண்டு ஆஸியில் நடந்த டெஸ்ட் தொடரை முதல் முறையாக தாதாவின் தலைமையில் தான் டிரா செய்தது நம் அணி. அதுமட்டுமின்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவின் கடைசிப் போட்டியில் ஆஸியை வீழ்த்தி பேரதிர்ச்சி கொடுத்தது டீம் இந்தியா.


மெக்காவை மெரசலாக்கியவர்

    தாதா என்றாலே இங்கிலாந்து நாட்டவர்களுக்கு 2002 நாட்வெஸ்ட் கோப்பை தான் நினைவிற்கு வரும். கிரிக்கெட்டின் மெக்காவாகக் கருதப்படும் மிகவும் மரியாதைக்குரிய லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்ற பிறகு தாதா சட்டையக் கழற்றி சுற்றிய காட்சி இன்னும் நம் கண் முன்னர் வந்து போகும். தாதாவின் வெறித்தனமான ரசிகனுக்கு அதுதான் மெய்சிலிர்க்கும் தருனம். பிளின்டாப் வான்கடே மைதானத்தில் செய்ததற்காகத் தான் இப்படிச் செய்ததாக தாதா விளக்கம் கூறியிருப்பார். அதற்கு இங்கிலாந்து லெஜெண்ட் பாய்காட், “ என்ன இருந்தாலும் லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா. அங்கு இப்படி செய்யலாமா?” என்று கேட்டிருப்பார். அதற்கு “லார்ட்ஸ் உங்களுக்கு மெக்கா என்றால், வான்கடே தான் எங்களுக்கு மெக்கா” என்று கவுன்டர் சொன்னதெல்லாம் தாதாவின் எவர்கிரீன் ஸ்பெஷல்.

132816.jpg

உலக நாயகன்!

எத்தனையோ வீரர்கள், பிற போட்டிகளில் சிறப்பாக ஆடிவிட்டு உலகக்கோப்பை போன்ற மிகமுக்கிய தொடர்களில் சொதப்புவார்கள். ஆனால் தாதாவோ வோர்ல்டு கப் என்ற பிரஷெரை ஃபீல் செய்ததே இல்லை. இதுவரை 21 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள தாதா 1006 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரியோ 50க்கும் மேல். அதுமட்டுமின்றி 4 சதங்களும் அடித்துள்ள தாதா தான் ஒரு உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன் எடுத்த இந்தியர் (183), ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக சதம் அடித்தவர் (3) என்ற சாதனைகளையெல்லாம் தன்வசப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி தான் கேப்டனான போது தரவரிசையில் எட்டாவது இடத்திலிருந்த அணியை 2003 உலகக்கோப்பையின் இறுதிவரை அழைத்துச் சென்றவர்  இந்த கொல்கத்தா பிரின்ஸ்.

நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்

“இவர் டெஸ்ட் போட்டிகள் விளையாடவெல்லாம் லாயக்கற்றவர். கேப்டன் பதவியை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்” என்று பலரும் தாதாவின் டெஸ்ட் பேட்டிங்கை தூற்றினார்கள். சிங்கத்தின் பிடரியைப் பிடித்துவிட்டு சும்மா இருந்துவிட முடியுமா? எதுக்குமே கவுண்டர் கொடுத்து பழகிய தாதா இதற்கும் பதில் சொல்லக் காத்திருந்தார். அவரிடம் அடிபட பாகிஸ்தானும் அணியும் காத்திருக்க , அவர்களை வேட்டியாடியது வங்க‌ சிங்கம். யுவியோடு இணைந்து 300 ரன்கள் குவித்த தாதா, அந்த இன்னிங்சில் 239 ரன்கள் குவித்து, தன்னை சந்தேகித்தவர்களிடம் திரும்ப வந்துருக்கேன்னு போய் சொல்லு என்று  தன்னை நிரூபித்தார். அவ்வாண்டில் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் கங்குலி தான் இரண்டாம் இடத்தில். அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், அவரது சராசரி 40க்குக் குறைந்ததில்லை என்று சொல்லும்போதே அவரது திறமை நமக்குத் தெரிய வேண்டும்.

கண்கள் கலங்கிய கடைசி தருணம்

95952.jpg


    இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டார். 2008ம் ஆண்டு ஆஸி அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய தாதாவிடம், ஒரு சில ஓவர்கள் கேப்டனாக இருக்கும்படி கூறினார் அப்போதைய தற்காலிக கேப்டன் தோனி. அதன்படி கேப்டனாக சில நிமிடங்கள் விளையாடிய கங்குலி வெற்றி கேப்டனாகவே கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். ஒரு அணியை உருவாக்கி அழகாக்கிய அம்மாமனிதன் தனது கடைசி இன்னிங்சில் டக் அவுட் ஆனது தான் சோகம். ஆனால் கிரிக்கெட்டின் பிதாமகன் பிராட்மேன் கூட தனது கடைசி இன்னிங்சில் டக் தானே!

நோ கங்குலி நோ கிரிக்கெட்

    கொல்கத்தா – கங்குலியின் கோட்டை. மும்பையில் சச்சினுக்கு இருக்கும் ஆதரவை விட கங்குலிக்கு இங்கு இரண்டு மடங்கு ஆதரவு. 2011 ஐ.பி.எல் ஏலத்தில் கங்குலியை புறக்கணித்த கே.கே.ஆர் அணிக்கு கொல்கத்தா ரசிகர்கள் ஆதரவளிக்க மறுத்தனர். தங்களிம் சொந்த ஊர் அணியாக இருந்தாலும் பரவாயில்லை, தங்கள் நாயகனுக்கான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என் நினைத்தார்கள். ‘NO DADA NO KKR’ என்ற கோஷத்தோடு தொடர்ச்சியாக கொல்கத்தா அணியின் போட்டிகளை புறக்கணிக்க, கங்குலியின் செல்வாக்கை உலகறிந்தது. ஒருமுறை ரவி சாஸ்திரி விளையாட்டாக கங்குலியிடம், “மைதானத்தின் ஒரு கேலரிக்கு உங்கள் பெயர் வைக்கப்படவில்லை என்று வருத்தம் இருக்கிறதா?” என்று கேட்க “அந்த மைதானமே என்னுடையது” என்று கொக்கரித்தவர் தாதா.அது உண்மைதான். கொல்கத்தா ஒருகாலத்தில் எப்படி சுபாஷின் கோட்டையாக விளங்கியதோ அப்படி இப்போது இவரின் கோட்டையாக விளங்குகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கழற்றிவிடப்பட்டார் கங்குலி மொத்த மைதானமும் தென்னாபிரிக்காவுக்கு ஆதரவளித்து இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணை கவ்வ வைத்தது. இவர்கள் தாதா ரசிகர்கள் அல்ல தாதா வெறியர்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம். கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சினுக்கு கூட இப்படி டை ஹார்டு ரசிகர்கள் இல்லை.

69844.gif

தாதா – இந்திய கிரிக்கெட்டின் கபாலி

    இந்தியா பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி மழையால் கிட்டத்தட்ட ரத்தாகும் நிலைக்குத் தள்ளப்பட, மைதானத்தற்குள் களம்புகுந்த பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் கங்குலி, துரிதமான நடவடிக்கைகள் மூலம், மைதானத்தை உடனடியாக சீரமைத்தார். அவரது செயல்பாட்டை வேறு எந்த ஒரு நபரும் இதுவரை செய்ததில்லை. கிரிக்கெட்டே கங்குலியை ஒதுக்க நினைத்தாலும், தாதாவிடமிருந்து கிரிக்கெட்டை ஒதுக்கிவிட முடியாது. அதனால் தான் இப்பொழுதும் ஐ.பி,எல் குழுவிலும், பி.சி.சி.ஐ ஆட்சி மன்றக் குழுவிலும் தன்னை இணைத்துக்கொண்டு இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறார்.

தைரியத்தின் மறுபெயர்

    புலியைப் பற்றிக் கூறும்போது அதன் வரியைப் பற்றிக் கூறாமல் விட்டால் எப்படி? தாதா – தைரியத்தின் மறுபெயர். எதற்காகவும் எப்பொழுதும் அஞ்சாதவர். உடனுக்குடன் எதையும் எதிர்க்கும் மனதைரியம் கொண்டவர். அதனால் தான் சூதாட்டப் புகாரில் சிக்கிய ஒரு அணியை அவரால் மீட்டெடுக்க முடிந்தது. முன்னாள் பயிற்சியாளர் சேப்பலுடன் ஏற்பட்ட தகராறாகட்டும், லார்ட்ஸ் நிகழ்வாகட்டும்  அங்கு தாதாவின் சீற்றம் குறைந்ததில்லை. தாதாவின் சொற்கலெல்லாம் அவரது ஆஃப் சைடு கவர் டிரைவ் போலத்தான் அவ்வளவு நேர்த்தியானவை. அதற்கு எடுத்துக்காட்டாக போன வாரம் நடந்த இந்தியப் பயிற்சியாளர் தேர்வு சம்பவம். கங்குலி நேர்கானலில் பங்குபெறவில்லை என்று ரவி சாஸ்திரி குற்றம் சாட்ட, கூலாக பாங்காக்கில் விடுமுறை கழித்தவர் என்று ரவியை ஆஃப் செய்துவிட்டார்.

 

197177.jpg

இன்றைக்கு அவரது ஆளுமைகளை ரசித்தாலும், மனதில் ஏதோ ஒரு மூலையில் மீண்டும் கங்குலி மட்டையோடு மைதானத்தில் நுழைந்து பந்தை மைதானத்துக்கு வெளியே விரட்ட மாட்டாரா என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. 11 வீரர்களையும் ஆஃப் சைடில் நிற்க வைத்து ஒரு பந்தை வீசிப்பாருங்கள். ஆஃப் சைடில் ப்ந்து பவுண்டரிக்கு செல்லும்.  ஒருசமயம் தாதா கூறிய வார்த்தை “ எனது சுயசரிதை வெளிவந்தால் பலருடனும் பல பிரச்சனை எழும். பெரிய பூகம்பங்கள் வெடிக்கும். அதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறினார். நீங்கள் மட்டுமல்ல தாதா நாங்களும் தான்! ஹேப்பி பர்த்டே டு தி காட்ஃபாதர் ஆஃப் இந்தியன் கிரிக்கெட்!

 

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 8

சுசி திருஞானம்

 

p18a.jpg

இன்று பல நாடுகளையும் சுற்றிவரும் ஒரு பெரும் தொழிலதிபர், பேச்சாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகங்கள் கொண்ட வீ.கே.டி.பாலனின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடம். எவ்வளவு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த மனிதனும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டால் சாதனைகள் படைக்கலாம் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்.

ந்த இளைஞரின் சொந்த ஊர் திருச்செந்தூர். மிகவும் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் மிகமிக ஏழ்மையான குடும்பம். எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. அந்தக் கிராமத்தில் அடிமைகளைப்போல் தொழில் செய்துவந்த முன்னோர்கள் வழியைப் பின்பற்ற அவருக்கு மனம் இல்லை. வேறு தொழிலும் தெரியாது. அங்கே வாழப் பிடிக்காமல் வித்-அவுட் டிக்கெட்டில் ரயிலேறி, 1981 ஜனவரி 26-ல் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

சென்னையில் யாரையுமே அவருக்குத் தெரியாது. பிளாட்பாரம்தான் அவரது வீடு ஆனது. கையில் காசு கிடையாது. எழும்பூரைச் சுற்றி உள்ள ஹோட்டல்கள், ட்ராவல் ஏஜென்ஸிகளில் வேலை கேட்டார். கிடைக்கவில்லை. ‘யாருடைய அறிமுகமாவது இல்லாமல் வேலை தர முடியாது’ என்று துரத்திவிட்டர்கள். தோல்விமேல் தோல்வி. பசியுடன் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், பிக்பாக்கெட்காரர்கள் என விளிம்புநிலை மனிதர்களுடன் படுத்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் இரவு பசி மயக்கத்தில் எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் படுத்திருந்தபோது படாரென்று ஓர் அடி விழுந்தது. எழுந்து பார்த்தால், அங்கே படுத்திருந்தவர்களை எல்லாம் சந்தேக கேஸ் போடுவதற்காக போலீஸ்காரர்கள் சுற்றிவளைத்துக் கொண்டிருந்தனர். அடுத்து ஜெயிலுக்குப் போகப்போவது நிச்சயமானது. அவர், சடாரென்று ஓட்டம்பிடித்தார். போலீஸ்காரர் ஒருவர் துரத்தினார். போலீஸ்காரரால் அந்த இளைஞரைப் பிடிக்க முடியவில்லை.

அவரது ஓட்டம் அண்ணாசாலையில் ஓரிடத்தில் வந்து நின்றது. அங்கே பிளாட்பாரத்தில் சிலர் படுத்திருந்தனர். இந்த இளைஞரும் பாதுகாப்புக்காக அவர்கள் அருகிலேயே படுத்துக் கொண்டார். அசதியில் தூங்கியும்விட்டார். விடியற்காலை நேரம். ஒருவர் அந்த இளைஞரை எழுப்பினார். ‘‘தம்பி... இந்த இடத்தை எனக்குத் தர்றியா? பணம் தருகிறேன்’’ என்றார். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. தயக்கத்துடன் ‘‘எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘ரெண்டு ரூபாய்’’ என்றார் புதியவர்.

என்ன பகுதி இது என்று நிமிர்ந்து பார்த்தார் இவர். ‘அமெரிக்கத் துணைத் தூதரகம்’ என்ற போர்டு இருந்தது. அமெரிக்க விசாவுக்காக வருபவர்களுக்கு பிளாட்பார கியூவில் இடம்பிடித்துக் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொண்டதும் அவருக்கு இன்ப அதிர்ச்சி. அந்த இரண்டு ரூபாய்தான் சென்னையில் அவரது முதல் வருமானம். அந்த ரெண்டு ரூபாயில் பசியாறச் சாப்பிட்டச் சாப்பாடுதான் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ருசியான சாப்பாடு.

பிளாட்பாரத்தில் இடம்பிடித்துக் கொடுப்பதையே தொழிலாகச் செய்ய முடிவெடுத்தார். சாயங்காலமே வந்து இடம்பிடித்துக் கொடுத்தார். ஆங்காங்கே துண்டுபோட்டு இடம்பிடித்தார். ரெண்டு ரூபாய், நான்கானது. நான்கு, எட்டானது... பத்தானது. இப்படித்தான் ஆரம்பித்தது அவரின் வாழ்க்கை.

ட்ராவல் ஏஜென்டுகளிடமிருந்து பயண டிக்கெட் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டார். தூதரகத்தில் வரிசையில் நிற்பவர்களிடம் பேச்சுக்கொடுத்து, பயணச்சீட்டை வாங்க அவர்களை டிராவல்ஸுக்கு அழைத்துச் செல்வார். தனக்குக் கிடைத்த கமிஷனில் சிறிது மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை வாடிக்கையாளருக்கே கொடுத்துவிடுவார். இதனால் பல பயணிகள் அவரைத் தேடிவர ஆரம்பித்தார்கள்.

ட்ராவல் ஏஜென்டுகளுக்கு நம்பிக்கையான ஊழியராகவும், பயணிகளுக்கு ஓடி ஓடி உதவும் நண்பராகவும் நம்மவர் வளர்ந்துவந்தார். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் அவர் வெறித்தனமாக உழைத்தார்.

அப்போது நடந்த ஒரு நெஞ்சைத் தொடும் சம்பவத்தை அவரே விவரிக்கிறார், படியுங்கள்: ‘‘1980-களில் இலங்கைக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கப்பல் போக்குவரத்து நடந்தது. பயணிகளுக்கான விசா, பாஸ்போர்ட், டிக்கெட் போன்றவற்றை ராமேஸ்வரத்தில் சென்று கொடுக்கும் பணியை ஒரு ட்ராவல்ஸ் நிறுவனம் எனக்கு வழங்கியது. ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் கிளம்பினேன். ரயில், மண்டபம் ஸ்டேஷனில் நின்றுவிட்டது. வண்டி, மேலே போகாது என்று சொல்லிவிட்டார்கள். நான் போய் அங்குள்ள ஏஜென்டிடம் விசா, பாஸ்போர்ட், டிக்கெட் போன்றவற்றை கொடுத்தால்தான் பயணிகள் கப்பல் ஏற முடியும். விடியற்காலை மணி ஐந்தானது. திடீரென ஒரு யோசனை வந்தது.

பாம்பன் பாலத்தில் இரண்டு பக்கமும் தண்டவாளம் இருக்கும். நடுவில் ஸ்லீப்பர் கட்டை இருக்கும். கருங்கல் ஜல்லி இருக்கும். அதில் காலைவைத்து நடந்தால் இரண்டு மணி நேரத்தில் போய்விடலாம் என்று தோன்றியது. தைரியத்தில் பையை முதுகில் சுமந்துகொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன். பார்த்தால், உயரமான பாலத்துக்கு இடையே தூண்கள், ஸ்லீப்பர் கட்டை, தண்டவாளம் எல்லாம் இருக்கிறது. ஆனால் கருங்கல் ஜல்லி இல்லை. இடைவெளிதான் இருக்கிறது. சரி, ஸ்லீப்பரில் நடக்கலாம் என நினைத்து, பாலம் இரண்டாகப் பிரியும் பகுதிவரை வந்துவிட்டேன். அதற்கு மேல் ஸ்லீப்பர் கட்டைகளில் ஒரே க்ரீஸ். கால் வழுக்குகிறது. காற்று வேறு, புயல்போல வீசுகிறது. கீழே அலை உயரமாக எழும்பித் தண்டவாளத்தைத் தாக்குகிறது. உடல் எல்லாம் நனைந்துவிட்டது. முதுகில் பாரம் வேறு. என்னால் நிற்கவே முடியவில்லை. கொஞ்சம் சறுக்கினாலும் அவ்வளவுதான். வாழ்க்கையே முடிந்துவிடும்.

என்ன ஆனாலும் சரி என்ற உறுதியுடன் அப்படியே தண்டவாளத்தின் மீது படுத்து, அதில் கைகளையும் ஸ்லீப்பரில் கால்களையும்வைத்து மாறிமாறித் தண்டவாளத்தைப் பற்றிக்கொண்டு தவழ்ந்து செல்ல ஆரம்பித்தேன். அப்படியே தவழ்ந்து தவழ்ந்து பாம்பன் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்து பஸ் பிடித்து நான் துறைமுகம் செல்லும்போது மணி 11 ஆகிவிட்டது. 12 மணிக்கெல்லாம் கப்பல் புறப்பட்டுவிடும். 

என்னைப் பார்த்ததும் எங்கள் ஏஜென்ட் ஓடிவந்தார். நான் பையைக் கொடுத்ததும் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் அங்கே காத்துக்கொண்டு இருந்தவர்களிடம் கொடுத்து, அவர்களைக் கப்பலில் ஏற்றினார். மற்ற ஏஜென்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டனர். நான் நடந்ததைச் சொன்னேன். அவர்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சர்யம். என் முகவரியைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். எனக்கு வணிக வாய்ப்புகளை வாரி வழங்கினார்கள். சோதனைகள்தான் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்த நாள் அது.’’

தான் கற்றுக்கொண்ட அனுபவங்களை படிக்கட்டுகளாக்கி 1986 ஜனவரி 17-ல் சென்னை, மண்ணடியில் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார் ‘மதுரா டிராவல்ஸ்’ அதிபர் வீ.கே.டி.பாலன். 1,500 ரூபாய் வாடகையுடன் தனது நிறுவனத்தைத் தொடங்கிய அவர் இன்று சொந்தக் கட்டடத்தில் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வணிகம் செய்யும் மாபெரும் நிறுவனமாகத் தனது நிறுவனத்தை வளர்த்துள்ளார். மதுரா டிராவல்ஸ் இப்போது IATA Approved Travel Agency. எல்லா நாடுகளின் தூதரகங்களும் இந்த நிறுவனத்தை அங்கீகரித்து உள்ளன.

 p18b.jpg

1981-ல் சென்னைக்கு ரயிலில் ‘வித்-அவுட்’ டிக்கெட்டில் வந்தார் பாலன். இன்றும் அவர் ‘வித்-அவுட்’ டிக்கெட்தான் - ஆனால் விமானத்தில். ஆம். அவர் இன்று எந்த நகருக்குச் செல்வதாக இருந்தாலும், டிக்கெட் தேவைப்படாத சிறப்பு விருந்தினராக அவரை ஏற்றிச்சென்று எல்லா விமான நிறுவனங்களும் கெளரவிக் கின்றன.

முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன என்று அவரிடம் கேட்டபோது, நொடியும் தயங்காமல் அவர் சொன்னார்: ‘‘நாணயம் - நன்றி இவை இரண்டும் எனது மந்திரச் சொற்கள். நாணயம் என்பது ‘சொன்னதைச் செய், செய்வதைச் சொல்.’ உதவி செய்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேடித்தேடி நன்றியுடன் உதவுவது மற்றொரு முக்கியமான பண்பு. நாணயம், நன்றி என்ற இரண்டும் உங்களிடம் இருந்தால், தோல்விகள் எல்லாம் உங்களிடம் தோற்று ஓடிவிடும். தோல்விகளைத் தோற்கடியுங்கள்.’’

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்

உடல்களே ஓவியங்களாக...

 

 
painting_2924794f.jpg
 

மூலிகளைச் சாறு பிழிந்து குகைகளில் ஓவியம் தீட்டினான் ஆதி காலத்து மனிதன். கொஞ்சம் காலம் வரை உடலில் எழுத்துகளையும் ஓவியங்களையும் பச்சை குத்திக்கொண்டு திரிந்தான் நவீன காலத்து மனிதன். ஆனால், ஒட்டுமொத்த உடலையே வண்ணமயமான ஓவியக் கூடமாக்கி அசர வைத்துக்கொண்டிருக்கிறான் டிஜிட்டல் காலத்து மனிதன். இந்த வகையான ஓவியத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது ஆஸ்திரியாவில் நடைபெற்றுவரும் உலக உடல் ஓவியத் திருவிழா!

கடந்த 1998-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் வாரத்தில் ஆஸ்திரியாவில் ‘உலக உடல் ஓவியத் திருவிழா’ நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூலை 1 முதல் 3 வரை கர்ந்தியாவில் நடைபெற்றது. இந்தத் திருவிழா விதவிதமாகக் கலைகளை நேசிக்கும் ஓவியப் பிரியர்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் மேக்கப் அப் பொருட்களுடன் ஓவியப் பிரியர்கள் ஆஸ்திரியாவில் ஆஜராகிவிடுவார்கள். இந்த ஆண்டு கொஞ்சம் கூடுதலாக இந்தியா உள்பட 50 நாடுகளிலிருந்து ஓவியர்கள், ஓவியப் பிரியர்கள் ஆஸ்திரியாவில் குவிந்திருந்தார்கள்.

தூரிகை, காற்றுத் தூரிகை, ஸ்பாஞ்ச் உதவியுடன் உடலில் வரையப்படும் ஓவியங்களுடன் யார் வேண்டுமானாலும் இந்தத் திருவிழாவில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் உலகப் புகழ் ஓவியர்கள் முதல் கத்துக் குட்டி ஓவியர்கள் வரை பலரும் கலந்துகொண்டார்கள். விசித்திரமான தோற்றங்கள், விதவிதமான ஒப்பனைகள், விநோதமான அலங்காரங்கள் என உடலில் வண்ணம் தீட்டிக்கொண்டு இவர்கள் அணிவகுத்து வந்தனர்.

painting3_2924791g_2924797a.jpg

விலங்குகள், வாகனங்கள், மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணக் குவியலால் ஆன ஓவியங்கள் என உடலையே ஓவியத் திரையாக்கி இளைஞர்களும் யுவதிகளும் மேடையில் வலம்வந்தபோது ஓவியத்துக்குக் கால் முளைத்து வந்தால் எப்படி இருக்குமோ அதுபோல இருந்தது. குறிப்பாக இருட்டாக்கப்பட்ட அரங்கில் புற ஊதாக் கதிர் செலுத்திய உடல் ஓவியங்கள் பார்வையாளர்களுக்குப் பரவசம் ஏற்படுத்துபவை. மேலும் ஓவியத் திருவிழாவையொட்டிப் போட்டியும் நடைபெற்றது. இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள உடல் ஓவியங்கள் போட்டியில் சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவைதான்.

painting1_2924793g_2924798a.jpg

ஓவியர்கள், ஓவியப் பிரியர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரையும் ஒருசேர ஈர்க்கும் இந்த உடல் ஓவியத் திருவிழாவுக்கு ஆஸ்திரியாவில் பலத்த வரவேற்பு இருக்கிறது. அதே அளவுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. குறிப்பாக உடலைத் திரைச் சீலையாக்கிப் பல வண்ணக் குவியல்களை உடலில் கொட்டுவதால் தோல் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.

ஆனால், உடல் ஓவியங்கள் மூலம் உலகின் முக்கியப் பிரச்சினைகளைப் பேசுவது, மனித உரிமைகளைப் பேசுவது, சமூகப் பிரச்சினைகளைப் பேசுவது, வெற்றிகளைக் கொண்டாடுவது, உடல் பாகங்களின் வழியே வண்ண அழகியலைப் படைப்பது என்று உலகம் முழுவதும் உடல் ஓவிய கலை இன்று பிரபலமாகிவருகிறது. அதன் வழியாகவே ஆஸ்திரியாவில் நடைபெற்றுவரும் உடல் ஓவியத் திருவிழாவும் ஓவியர்களின் அங்கமாகவே மாறிவிட்டது. அதனால், மருத்துவ விளைவுகளைப் பற்றியெல்லாம் இவர்கள் யாரும் கவலைப்படுவதில்லை.

painting2_2924792g_2924799a.jpg

அதனால், வண்ணமயமான ஓவியங்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் உலக உடல் ஓவிய திருவிழாவும் ஆஸ்திரியாவில் மெருகேறிவருகிறது!

tamil.thehindu.

 

 


 
 

உடலே ஓவியமாக: ஆஸ்திரியாவில் ‘உலக உடல் ஓவியத் திருவிழா’ (Photos)

 

1 2 3 4 5 6 8 9 10 11 12 14 15

  • தொடங்கியவர்

13640895_1076946182354075_27075274390585

தமிழ்த் திரையுலகில் 80 கள், 90களில் தரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய கதாநாயகி ரேவதியின் பிறந்தநாள்.

இன்றும் குணச்சித்திர நடிகையாகவும் சின்னத்திரை இயக்குனராகவும் முத்திரை பதித்து வருகிறார்.

  • தொடங்கியவர்

ஒரு தியேட்டர்... ரெண்டே ரசிகர்கள்; மனைவிக்கு சந்தோஷ சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்!

salmankhanc.jpg

மாச்சலப்பிரதேசம்; மனைவி தனக்கு பிடித்த நடிகரின் படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக ஒரு தியேட்டரின் மொத்த டிக்கட்டுகளையும் கணவர் 'புக்' செய்த சம்பவம் இமாச்சலபிரதேசத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாசலப் பிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் நகரில் வசிப்பவர் சங்கர் முசாஃபிர். இவருக்கும் கீதாஞ்சலி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. மனைவியின் மீது சங்கர் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். தனது அன்பை வெளிப்படுத்த அவர் செய்த விஷயம், இப்போது கீதாஞ்சலியை நெகிழ வைத்துவிட்டது. ஆம் ஹிந்தி நடிகர் சல்மான்கானின் தீவிர ரசிகையான தனது மனைவி கீதாஞ்சலியை மகிழ்விப்பதற்காக சங்கர் ஒரு திட்டம் தீட்டினார்.

சல்மான்கானின் நடிப்பில் சமீபத்தில் 'சுல்தான்' திரைப்படம் ஹமிர்பூர் நகரில் ஒரு திரையரங்கில் நேற்று வெளியானது. அந்தப் படத்திற்காக திரையரங்க உரிமையாளரை இரண்டு தினங்களுக்கு முன்பே சந்தித்து, முதல்நாள் காட்சிக்காக அனைத்து டிக்கெட்டுகளையும் சங்கர் முசாஃபிர் 'புக்' செய்துகொண்டார்.

salmankhan6001.jpg

 

சங்கர் தனது உறவினர்களை அழைத்து வருவார் என திரையரங்க உரிமையாளர் நினைத்துக்கொண்டார். ஆனால் படம் பார்க்கச் சென்றது சங்கரும் அவரது மனைவி கீதாஞ்சலி மட்டுமே. இதனால் திரையரங்க உரிமையாளர் ஆச்சர்யமடைந்து விசாரிக்க, அப்போதுதான் தன் மனைவியை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதற்காக இப்படி செய்ததாக சங்கர் தெரிவித்தார். ஆச்சர்யமடைந்த தியேட்டர் உரிமையாளர் மனைவி மீது இத்தனை பாசம் கொண்ட சங்கரை பாராட்டினார். 

"திரையரங்குக்கு 120 பேரையாவது சங்கர் அழைத்து வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், தனது மனைவியை மட்டும் அழைத்து வந்து சுல்தான் படத்தை அவர் கண்டு ரசித்தார். இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு கணவர்' என ஆச்சயர்யம் கொள்கிறார் தியேட்டர் உரிமையாளர்.

vikatan

  • தொடங்கியவர்

13584982_1076945965687430_27879271263969

பல மிகப் பெரிய வெற்றிப் படங்களில் நடித்த, முன்னணிக் கதாநாயகியாகத் திகழ்ந்த தமிழ்த் திரைப்பட நடிகை சுகன்யாவின் பிறந்தநாள் இன்று...

 
  • தொடங்கியவர்
நிதானமான பேச்சு பயபக்தியைத் தரும்
 
 

article_1467861476-ugyig.jpgநேர்மையுடனும் சத்திய வாழ்வுடனும் வாழும் மேன்மக்கள் வாயால் உதிர்க்கும் வார்த்தைகள் தீட்சண்யமாக இருக்கும். இத்தகையவர்களின் வார்த்தைகள் மாறுபாடு இன்றி நிதானமாக இருப்பதால் கேட்பவர்கள் பயபக்தியுடன் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

மேலும், தீர்க்கதரிசனத்துடன் உரைப்பதால் மக்களும் அதனை மிகவும் நம்பிக்கையுடன் செவிமடுக்கின்றனர். இது வெறும் பொழுதுபோக்கிற்கானதல்ல; எழுச்சியூட்டலுக்கானதே‚

நாவன்மையுடன் துணிச்சல் மேலோங்கியிருக்கும் இத்தகையவர்களுடன் மோதி எவருமே இலகுவில் வெற்றி பெற்றுவிட முடியாது.

நல்ல விஷயங்களை, உள்ளதை உள்ளபடி, சொல்ல வேண்டிய முறையில் பக்குவமாகச் சொன்னால் இதனை விட மக்கள் சேவை வேறு ஏது?

சேவை மனப்பான்மையுடனும் பொறுப்புடனும் உரையாற்றியவர்களில் பலர் தேசத்தலைவர்களாகி இருக்கின்றார்கள். ஆன்ம சுத்தியே நல்ல சிந்தனைகளையும் உரைகளையும் உருவாக்கும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூலை 9: இயக்குனர் சிகரம் இயக்குனர் கே. பாலச்சந்தர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு - பொக்கிஷ பகிர்வு
 

தமிழ் சினிமாவின் பீஷ்மர். உறவுகளுக்கு, உணர்வுகளுக்குப் புது வண்ணம் பூசிய பிதாமகன். செஞ்சுரி போட்ட சிகரம் கே.பாலசந்தரின் பெர்சனல் பக்கங்கள்.

தஞ்சைத் தரணியின் நன்னிலம் - நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் நமக்காகப் பிறந்தது 9, ஜுலை 1930-ல். கே.பி-யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில்தான் ஆரம்பம்!

சென்னை ஏ.ஜி. ஆபீஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்துகொண்டே, நாடகங்கள் நடத்திவந்தார். 'மேஜர் சந்திரகாந்த்' மிகப் பிரபலமான நாடகம். 'எதிர் நீச்சல்', 'நாணல்', 'விநோத ஒப்பந்தம்' போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்!

கமல், ரஜினி, சிரஞ்சீவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவாராம் ரஜினி!

100க்கும் மேல் படங்களை இயக்கி இருக்கிறார். முதல் படம், 'நீர்க்குமிழி'.

ஆரம்ப காலத்தில் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்துக்கு அருகே, மூன்றாவது தெருவில். கலைஞரைச் சந்திக்க நினைத்து, நாடகங்களில் பிரபலமான பிறகுதான் அந்தக் கனவு நனவானது!

தேசிய விருது, மாநில விருது, பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைஞர் விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர், பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என ஏராளமான அங்கீகரிப்புகள் பாலசந்தருக்கு உண்டு!

பி.எஸ்சி., முடித்துவிட்டு முத்துப்பேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். 'தென்றல் தாலாட்டிய காலம்' என அதை ஆசையாகக் குறிப்பிடுவார்!

தோட்டக் கலையில் ஆர்வம். யார் உதவி யையும் எதிர்பார்க்காமல், வீட்டையும் தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக்கொள்ள விரும்புவார்!

ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என பாலசந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளின் பட்டியல்

எம்.ஜி.ஆரின் 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிவாஜியைவைத்து 'எதிரொலி' என ஒரே ஒரு படம் இயக்கியிருக்கிறார். அடுத்து, இவரே ஹிட் ஹீரோக்களை உருவாக்கியது வரலாறு!

மலையருவியும் கடற்கரையும் பாலசந்தரின் படங்களில் நிச்சயம் இடம்பெறும். 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் மலையருவியின் பெயரையும் சேர்த்தவர்!

கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 50க்கும் மேற்பட்ட படங்கள் தயாரித்து இருக்கிறார். ரஜினியில் ஆரம்பித்து, ஜீவன் வரைக்கும் அவர் தயாரிப்பில் நடிக்காதவர்களை எண்ணிவிடலாம்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படங்கள் இயக்கி இருக்கிறார் பாலசந்தர். 'ஏக் துஜே கேலியே' மூலம் கமல் ஹிந்திக்குப் போனார். எஸ்.பி.பி. பாடிய 'தேரே மேரே பீச் மே' இன்றைக்கு வரைக்கும் ஆல் டைம் ஹிட்!

பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்!

அண்ணா அவர்களை பாலசந்தருக்குப் பிடிக்கும். 'இரு கோடுகள்' படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலைவைத்து படமாக்கிய காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது!

படங்கள் பார்த்து, அவை மனதைப் பாதித்துவிட்டால், உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவார். '16 வயதினிலே' பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிவிட, பதறிவிட்டார் பாரதிராஜா!

ஒரே ஒரு தடவை பெப்ஸி தலைவராக இருந்திருக்கிறார். நீண்ட நாள் பிரச்னைகளைக்கூட சுமுகமாகத் தீர்த்துவைத்த பெருமை உண்டு!

தூர்தர்ஷனில் 1990-ல் வெளிவந்த இவரது 'ரயில் சிநேகம்' இன்றளவும் பேசப்படும் தொடர். கை அளவு மனசு, ரகுவம்சம், அண்ணி போன்றவையும் இவரது பரபரப்பான தொடர்களாகும். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் ஆரம்ப விதை போட்டார்!

இந்திய திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை இந்திய அரசு 2010 ஆம் ஆண்டு அளித்தது.

 
Vikatan EMagazines Foto.

vikatan

  • தொடங்கியவர்

இணையத்தில் தூங்கலாம் வாங்க!

 
net_bed_room_2924734f.jpg
 

இணையத்தில் தகவல்கள் தேடலாம், ஷாப்பிங் செய்யலாம், வேலைவாய்ப்புக்கு வலைவீசலாம், வீடியோ பார்க்கலாம், இசை கேட்கலாம், அரட்டை அடிக்கலாம். எல்லாம் சரி, இணையத்தில் தூங்க முடியுமா?

இணையத்தில் தூங்கலாம் வாங்க என்று அழைப்பு விடுப்பதற்காகவே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்காக என்றே ஒரு இணையதளமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இணையதளத்தின் பெயர், வேறென்ன? இணைய படுக்கையறைதான் - Internet Bedroom!

இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பிரிண்ட் ஸ்கிரீன் கண்காட்சியின் ஒரு பகுதியாக, இந்த இணையப் படுக்கயறை அமைக்கப்பட்டிருந்தது. ஆர்வம் உள்ளவர் வாருங்கள், வீடியோ அரட்டை அடியுங்கள், அப்படியே தூங்கிவிடுங்கள், அவ்வளவுதான் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தின் இணை நிறுவனரான கென்சுகி செம்போ (Kensuke Sembo ) இணையம் ஒரு போதும் தூங்குவதில்லை என்று அறிந்தபோதுதான் இந்த யோசனை பிறந்ததாக மதர்போர்டு இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். “ ஜப்பானிய மக்கள் தூங்கத் தொடங்கும்போது, நியூயார்க்கில் உள்ளவர்கள் விழித்துக்கொள்கின்றனர்” என்று கூறுபவர், “ இணையத்திற்குத் தூக்கம் தேவை, அப்போதுதான் இயல்பான இடமாக இருக்கும் என நினைத்தோம்” என்கிறார்.

எல்லாம் சரி, இணையத்தில் எப்படித் தூங்குவது என்று கேட்கலாம். எப்படி என்றால் வெப்கேம் வழியாகத்தான். நிகழ்ச்சி நடைபெற்ற கண்காட்சி அரங்கில் தூங்குவதற்கு என்றே அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. நேரடியாக வர முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே கூகுள் ஹாங்கவுட் மூலம் தூக்கத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.- http://idpw.org/bedroom/000002 /

இந்த அமைப்பின் முதல் இணையத்தில் தூக்கம் நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. கடந்த மாதம் இஸ்ரேலில் நடைபெற்றிருக்கிறது. நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்துவிட்டது என இண்டெர்நெட் பெட்ரூம் இணையதளம் தெரிவிக்கிறது.

இரவு உடை அணிந்து வாருங்கள், ரிலாக்ஸ்டாக இருங்கள், உங்கள் லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தில் நுழைந்து கூகுள் ஹாங்கவுட் மூலம் இணையப் படுக்கையறையில் தூங்குங்கள் என, இணையத் தூக்கத்துக்கான வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

net_bed_room1_2924733a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

p24a.jpg

ந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்குத் திருமணம். கூடைப்பந்து வீராங்கனை பிரத்திமா சிங்கை மணக்கிறார். மணமகளின் சகோதரிகள் நான்கு பேருமே கூடைப்பந்தாட்ட வீராங்கனைகள்தான். பிரத்திமா சிங்கின் அக்கா பிரஷாந்தி, தற்போது இந்தியக் கூடைப்பந்து அணியின் கேப்டன். `கூடைப்பந்து ஆட்டத்துக்கு ஒருமுறை சிறப்பு விருந்தினராக வந்தார் இஷாந்த். கண்டதும் காதல்தான். ஐந்து ஆண்டு காதல், இப்போது திருமணத்துக்கு வந்திருக்கிறது' எனச் சிரிக்கிறார் பிரத்திமா.


p24b.jpg

`கடந்த வாரம், ஆன்லைன் தொடர்பாக சில விஷயங்கள் என் கவனத்துக்கு வந்தன. அதில் இந்தியாவில் வரி செலுத்துவது எப்படி, வழிமுறைகள் என்ன என்பதை ஏழு கோடிப் பேர் தேடிப் படித்திருக்கிறார்கள். ஆனால், வரி செலுத்தாமல் தப்பிப்பது எப்படி என்பதை 12 கோடிப் பேர் படித்திருக்கிறார்கள். இதுபற்றி ஐடியாக்கள் தர பல வலைதளங்களில் சிறப்புக் கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். வருமான வரி கட்டுவது குடிமக்களின் கடமை. அதில் இருந்து தப்பிக்க நினைப்பது குற்றம் என்பதுகூடத் தெரியாதா?' என உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் பிரதமர் மோடி.


சிறையில் இருந்தபடி படித்து ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார் பியூஷ் கோயல். பியூஷின் தந்தை கொலைவழக்கில் கைதாகி ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரச் சிறையில் ஆயுள்தண்டனைக் கைதியாக இருக்கிறார். `ஓப்பன் ஜெயில்' எனப்படும் இங்கே, பகலில் வெளியே சென்று வேலைசெய்துவிட்டு, மாலை திரும்பிவரும் வாய்ப்பு உண்டு. அப்படி வேலைசெய்து தனது மகனைப் படிக்கவைத்தார் பியூஷ். விடுதிக் கட்டணம் அதிகம் என்பதால், தந்தையுடன் சிறையிலே தங்கி இதைச் சாதித்திருக்கிறார் பியூஷ்.


p24c.jpg

தாலிபான்களை எதிர்த்துப் போராடிய மலாலா யூசுஃப்சாய் எழுதிய `ஐ'யம் மலாலா' புத்தகம், இதுவரை 18 லட்சம் பிரதிகள் விற்று சாதனைப்படைத்திருக்கிறது. உலகம் எங்கும் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு விற்பனையான இந்தப் புத்தகத்தின் மூலம் வந்த ராயல்டி தொகை மட்டும் 10 கோடி ரூபாய். `இதை என் தொண்டு நிறுவனம் மூலம் ஏழைக் குழந்தைகளின் படிப்புக்குச் செலவிடுவேன்' என்கிறார் மலாலா.


p24d.jpg

யக்குநர் சேகர் கபூரின் 15 வயது மகள் காவேரி கபூர்தான் கடந்த வார ஆன்லைன் சென்சேஷன். ஆறு வயதில் இருந்து இசை பயின்றுவரும் காவேரி, தானே எழுதி இசையமைத்துப் பாடிய `டிட் யூ நோ..?' என்ற பாடல் யூடியூபில் ரிலீஸான வேகத்தில் ஐந்து லட்சம் வியூஸை அள்ளியிருக்கிறது. ஷாரூக், ஹ்ரித்திக், அபிஷேக் என பாலிவுட் உலகமே காவேரிக்கு லைக்ஸ் தட்டியிருக்கிறது!


யோபிக் சீஸனில் அடுத்து சினிமாவாக இருப்பது அண்ணா ஹஜாரேவின் வாழ்க்கை. `கடந்த பன்னிரண்டு வருடங்களில் என் கிராமத்தை லட்சக்கணக்கான மக்கள் வந்து பார்வையிட்டு, என் பணிகளைப் பற்றி தெரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் இது இன்னும் நிறையப் பேருக்குச் சென்றடையும்' என, படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவில் தெரிவித்திருக்கிறார் அண்ணா ஹஜாரே. `அண்ணா கிசான் பாபுராவ் ஹஜாரே' என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இயக்கி, அண்ணாவாகவும் நடித்திருக்கிறார் ஷஷாங்க்.

vikatan

  • தொடங்கியவர்

பிரபல புகைப்படக் கலைஞரின் நிகழ் கலைக்காக ஆடைகளின்றித் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

பிரபல புகைப்படக் கலைஞரின் நிகழ் கலைக்காக ஆடைகளின்றித் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

பிரிட்டிஷ் துறைமுக நகரமான ஹல் நகரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆடைகளின்றி, தங்கள் உடல்களில் தண்ணீரை குறிக்கும் வகையில் நீல நிற சாயத்தைப் பூசிக்கொண்டு நிகழ் கலையின் ஓர் அங்கமாக அதில் பங்கேற்றார்கள்.

”சீ ஆஃப் ஹல்” என்ற தலைப்பின் கீழ் இந்த நிகழ் கலையை அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஸ்பென்சர் டுனிக் ஏற்பாடு செய்திருந்தார்.

2017 ஆம் ஆண்டில் சிட்டி ஆஃப் கல்ச்சர் ( கலாசார நகரம் ) என்ற பெருமையை ஹல் நகரம் பெரும் போது இந்த புகைப்படங்களை ஸ்பென்சர் வெளியிடுவார்.

ஸ்பென்சர் டுனிக் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தொடங்கி மெக்ஸிக்கோ வரை இதே போன்ற நிர்வாண நிகழ் கலை படைப்புகளை ஏற்கனவே நடத்தியிருக்கின்றார்.

 

2933 3000

1468062080_spencer-tunick-hull

 

நன்றி – பிபிசி

  • தொடங்கியவர்

கே.பாலசந்தர்

 
BALACHANDER_2245070f.jpg
 

கே.பாலசந்தர் - பிரபல திரைப்பட இயக்குநர்

தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த இயக்குநர் கே.பாலசந்தர் (K.Balachander) பிறந்த தினம் இன்று (ஜூலை 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 

* தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார் (1930). தந்தை, கிராம அதிகாரி. அதே ஊரில் பள்ளிப் படிப்பு பயின்றார். சிறு வயதிலேயே நாடகம், சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். 12 வயது முதலே நிறைய நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்க ஆரம்பித்தார். இதனால் சினிமா ஆசை விழுதுவிட்டது.

* சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. விலங்கியல் முடித்தார். கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது ஆகிய திறன்களை பட்டை தீட்டிக்கொண்டதால், கல்லூரி விழாக்களில் இவரது நாடகம் தவறாது இடம்பெறும். சென்னை ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் 12 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

* ஓய்வு நேரங்களில் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக் கொண்டார். ஆங்கிலத்தில் வெளியான 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து இயக்கினார். இந்த நாடகம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. 'நீர்க்குமிழி', 'நாணல்', 'விநோத ஒப்பந்தம்' உள்ளிட்ட நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

* எம்.ஜி.ஆர். நடித்த 'தெய்வத்தாய்' திரைப்படத்துக்கு வசனம் எழுதி, சினிமா வாழ்க்கையை 1964-ல் தொடங்கினார். அடுத்த ஆண்டில் இவரது கதை, வசனம், இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் நீர்க்குமிழி மகத்தான வெற்றி பெற்றது. 1981-ல் 'கவிதாலயா' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

* தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறைந்த செலவில் நிறைவானப் படங்களைக் கொடுத்தவர். ரஜினி, நாசர், டெல்லி கணேஷ், சார்லி, விவேக், எஸ்.பி.பி., சரிதா, சுஜாதா, பிரகாஷ்ராஜ் உள்பட ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

* 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 'பொய்', 'ரெட்டைச் சுழி', 'உத்தம வில்லன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது பெரும்பாலான படங்களில் மனித உறவு முறைகளுக்கு இடையேயான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் கருப்பொருளாக விளங்கின.

* கலைஞர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் கை தேர்ந்தவர். 'தண்ணீர் தண்ணீர்', 'அபூர்வ ராகங்கள்', 'எதிர் நீச்சல்', 'வறுமையின் சிறம் சிவப்பு', 'அக்னி சாட்சி', 'வானமே எல்லை', 'உன்னால் முடியும் தம்பி', 'சிந்துபைரவி' உள்ளிட்ட ஏராளமான படங்கள் இவரைப் புகழேணியின் உச்சியில் ஏற்றின.

* 'இயக்குநர் சிகரம்' எனப் போற்றப்பட்டார். திரைத் துறையில் கமல், ரஜினி உள்ளிட்ட பலர் இவரை குருவாகப் போற்றினர். 'ரயில் சிநேகம்', 'கை அளவு மனசு' உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். சின்னத்திரையில் நெடுந்தொடர் முறையை அறிமுகம் செய்தவர் இவர்தான்.

* இயற்கையை நேசித்தவர். மலையருவியும் கடற்கரையும் இவரது படங்களில் நிச்சயம் இடம்பெறும். 1995-ல் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2010-ல் தாதா சாகேப் பால்கே விருது, எட்டு முறை தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், பத்ம அண்ணா விருது, கலைமாமணி, 12 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஆந்திர அரசின் நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகள் வென்றவர்.

* அரை நூற்றாண்டுக்கும் மேல் திரையுலகில் வெற்றி உலா வந்தவரும், திரைப்பட 'உலக பிரம்மா', 'கலையுலக பாரதி' என்றெல்லாம் போற்றப்பட்டவருமான கே.பாலசந்தர் 2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 84-வது வயதில் மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

13613559_1077705102278183_75836561460505

சகலவிதமான பாடல்களையும் சளைக்காமல் பாடி அசத்தும் இனிய பாடல்கள் பல பாடிய அனுராதா ஸ்ரீராமின் பிறந்தநாள் இன்று...
Happy Birthday Anuradha Sriram

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

 

p201.jpg

சிலைத்திருட்டு

`இந்தச் சிலை எத்தனை வருடப் பாரம்பர்யம் கொண்டது?' - விசாரித்த வெளிநாட்டவரிடம், அதன் பல்லாயிரமாண்டு பழைமையைச் சொல்லத் தொடங்கினார், சிலைத்திருட்டு கேங் லீடர்!

- பாப்பனப்பட்டு வ.முருகன்


p202.jpg

சுருங்கிய ஏரி!

ஏரியை ஆக்கிரமித்துக் கட்டிய கட்டடத்தில், `இங்கு மழைநீர் சேமிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது' என்ற பலகையை மாட்டினார்கள்.

- தினேஷ் சரவணன்.


p203.jpg

பாசம்

`எந்த வம்புதும்பும் வராம, நீதான்யா எம் புள்ளையைப் பார்த்துக்கணும்' - கடவுளிடம் வேண்டிக்கொண்டு போலீஸ் வேலை கிடைத்த மகனை வழியனுப்பினாள் மரகதம்மாள்.

- வேம்பார் மு.க.இப்ராஹிம்


p204.jpg

அவுட் ஆஃப் ஆர்டர்

``பணத்தை எண்ணுறது, பேலன்ஸைத் திரும்ப செக் பண்றதுனு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. ஏ.டி.எம் மெஷின் தப்பு பண்ணாது'' என்றபடியே தன் பணத்தை மெஷினில் போட்டார் பேங்க் ஊழியர். பணம் உள்ளே போனதும் `அவுட் ஆஃப் ஆர்டர்' என்றது மெஷின்.

-ஆதி


p205.jpg

யானை

காட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு, முகாமுக்கு வந்தது கோயில் யானை!

 - பெ.பாண்டியன்


p207.jpg

ஒன்லைன் எபிசோட்

உதவியாளரிடம் கதையின் ஒன்லைன் கேட்டதும், ``அருமை.

300 எபிசோட் ஓட்டிடலாம்'' என்றார் சீரியல் இயக்குநர்!

- பெ.பாண்டியன்


p206.jpg

புத்தக செல்ஃபி!

புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களின் பின்னணியில் பிரமோத் எடுத்த செல்ஃபிக்கு, ஃபேஸ்புக்கில் லைக்ஸ் குவிந்தன.

- ராம்ஆதிநாராயணன்


p208.jpg

தொழில்முனைவோன்

உலக அளவில் தொழில்முனைவோருக்கான மாநாட்டு பார்க்கிங்கில் கரும்புச்சாறு ஸ்டால் போடும் சுந்தர், தன் திட்டமிடலைத் தொடங்கினான்.

- ஆதி


p209.jpg

ஆப்... அழகு!

``இந்த போட்டோவுல நீ ரொம்ப அழகா இருக்கியே, எந்த ஆப் யூஸ் பண்ற?'' என்றான் சிவா.

- அபிசேக் மியாவ்.


p2010.jpg

ஆற்று வழி!

ஆற்றின் பாதையை அடையாளம் காட்டுகிறது, மணல் லாரி!

- பெ.பாண்டியன்

vikatan

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: மொறப்பொண்ணுங்க ஏன் இப்படி இருக்காங்க?

 
 
whats_app_5_2924787f.jpg
 

 

whats_app_1_2924778a.jpg

whats_app_2_2924779a.jpg

whats_app_3_2924781a.jpg

whats_app_4_2924782a.jpg

whats_app_6_2924784a.jpg

whats_app_7_2924785a.jpg

whats_app_8_2924786a.jpg

 
  • தொடங்கியவர்

13575868_1077706055611421_82838253779860

ஒஸ்கார் விருதுகள் குவித்த நாயகன், ஹொலிவூட் பிரபல நடிகர் டொம் ஹாங்க்சின் பிறந்தநாள் இன்று
Happy Birthday Tom Hanks

  • தொடங்கியவர்

13580451_1077703442278349_10158387626839

 
 
மனம் உருகும் அற்புத கானங்கள் பாடிய இனிய பாடகர், முதல் திரைப்பாடல்களின் மூலமே விருதுகள் குவித்த உன்னி கிருஷ்ணனின் பிறந்த நாள் இன்று..
  • தொடங்கியவர்
‘பே வோட்ச்’ போஸ்டரில் பிரியங்கா சோப்ரா
 

நடி­கை­யான பிரி­யங்கா சோப்­ராவும் காணப்­படும் பே வோட்ச் ஹொலிவூட் திரைப்­ப­டத்தின் போஸ்டர் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

 

17877priyanka.jpg

 

பொலிவூட் நடி­கை­யான பிரி­யங்கா சோப்ரா, பே வோட்ச் திரைப்­ப­டத்தில் நடித்து வரு­கிறார்.

 

17877priyanka2.jpgஇத்­ தி­ரைப்­ப­டத்தின் போஸ்டர் சில வாரங்­க­ளுக்கு முன் வெளி­யா­கி­யது.

 

எனினும் அதில் பிரி­யங்கா காணப்­ப­ட­வில்லை.


இந்­நி­லையில் அமெ­ரிக்க சுதந்­திர தின­மாக கடந்த 4 ஆம் திகதி பே வோட்ச் புதிய போஸ்டர் ஒன்றை தனது சமூக வலைத்­தளப் பக்­கங்­களின் ஊடாக பிரி­யங்கா வெளி­யிட்டார்.


பிர­தான பாத்­தி­ரத்தில் நடிக்கும் நடிகர் ட்வைன் ஜோன்ஸன், நடிகர் ஸாக் எவ்ரோன், நடி­கைகள் அலெக் ஸாண்ட்ரே டெடா­ரியோ, இல்­பெனெஸ் ஹெடேரா, கெல்லி ரோர்பாச், ஆகி­யோரும் இந்த போஸ்­டரில் இடம்­பெற்­றுள்­ளனர்.

 

இப்­ போஸ்­டரில் ஏனைய நடி­கைகள் பிகினி ஆடையில் தோன்­று­கின்ற போதிலும் பிரி­யங்கா சோப்ரா வெள்ளை நிற கவுண் அணிந்­த­நி­லையில் காணப்­ப­டு­கிறார்.


சேத் கோர்டன் இயக்கும் பே வோட்ச் படம் 2017 மே 17 ஆம் திகதி வெளியிடப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சொர்க்கத்திற்கு ஒரு பயணம்...மாஞ்சோலை எனும் மலை சுற்றுலாத்தலம்! #WhereIsMyGreenWorld

manjolai6001.jpg

"சொர்க்கம்" என்று ஒன்று வானில் எங்கோ இருப்பதாகவும், அங்கு பாலாறு, தேனாறு என நாம் நினைத்துப் பார்த்திடாத பல அதிசயங்கள் இருப்பதாகவும் சிறு வயது முதலே கேட்டிருப்போம். ஆனால், நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம் இல்லையா? சொர்க்கம் எப்படி இருக்கும் தெரியுமா? சொர்க்கம் என்றுமே ஒரே இடத்தில் இருப்பதில்லை, மாறாக உலகம் முழுக்க சிதறிக் கிடக்கிறது. அப்படியான சொர்க்கத்தின் ஒரு கீற்றுதான் 'மாஞ்சோலை'!

சொர்க்கத்திற்கு ஒரு பயணம் சென்று வரலாமா?

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறுக்கு அருகில் இருக்கும் ஒரு மலை சுற்றுலாத் தலம்தான் மாஞ்சோலை. கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவியைத் தாண்டி பல கொண்டை ஊசி வளைவுகளை கடந்து பயணித்தால் 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம். இந்த பாதை முழுவதும் உள்ள மரங்கள் நிறைந்த தேயிலைத் தோட்டங்களைக் கடந்து செல்வதும் ஒரு ரம்மியமான அனுபவம்!

மாஞ்சோலை வெறும் தேயிலைத் தோட்டமோ, சுற்றுலாத் தலமோ மட்டுமன்றி, இது புலிகள் சரணாலயம் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

manjolai6003.jpg

கல்லிடைக்குறிச்சியைத் தாண்டி மலை ஏற ஆரம்பித்ததும் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தையும், அருவியையும் தாண்டி மாஞ்சோலை செல்ல வேண்டும். இங்கு அருவி மிக முக்கியமான இடம். பளிங்கு போன்ற சுத்தமான நீரை இங்கு காண முடியும். சொர்க்கத்தின் தேனாறு, பாலாறு எல்லாம் தோற்றுவிடும் இந்த நீருக்கு முன்னால்.

அருவிக்கு மேல் பயணித்தால் மாஞ்சோலை. சுட்டெரிக்கும் வெயில் மெல்ல மெல்ல தணிந்து, குளிர் காற்று நம் தேகத்தைத் தழுவுவதை உணர முடியும். அதுவரை கிடைக்கும் செல்போன் டவர் தடுமாறி மெல்ல உயிரிழந்து விடும். இயற்கை உலகிற்கு நுழைந்துவிட்டோம் என்பதற்கு அதுதான் முதற் சமிக்ஞை. அதன்பிறகு செல்ஃபோன் நச்சரிப்புக்கு பதில்  நம் காதுகளுக்கு சில்வண்டுகளின் ஓசைதான் கேட்கும்.
போகும் பாதை எங்கும் கண்ணுக்கு குளுமையான பச்சை, பச்சை, பச்சை மட்டுமே. புலிகள், யானைகள், கரடிகள் போன்ற மிருகங்கள் இரவு நேரத்தில் உலாவுவது சகஜம் என்றாலும், பகலில் நம் கண்ணுக்குத் தென்படுவது அரிது.

அணிலுக்கு 'ஹாய்'

அப்படி முதலில் நம்மை வரவேற்பது "மர அணில்". அணிலுக்கு "ஹாய்" சொல்லிவிட்டு மேலும் அடர்ந்த காட்டிற்குள் சென்றால், மயிலின் அகவல் சத்தம் நம்மை வரவேற்கும். அழகிய தோகையை தோரணமாக தொங்கவிட்டுக் கொண்டு மரத்தில் ஆண் மயில் அமர்ந்திருக்க, எங்கிருந்தோ பெண் மயில் அகவும் சத்தம் கேட்டது. "வந்தவங்கள வாங்கன்னு சொல்லுங்க" என்ற தொனியில் ஒரு குரல். நம் கலாச்சாரம் வாழும் ஒரே இடம் காடு என்பதை உணர்த்தியது மயில்!!!

peacock6001.jpg

வெயிலே ஊடுருவாத காட்டில் சென்றுகொண்டே இருக்க, திடீரென தலைவாழை இலையை விரித்து நமக்காய் வைக்கப்பட்ட விருந்தாய் ஒரு அகண்ட புல்வெளி. அருகில் ஒரு ஏரி. ஆனால், அங்கு மனிதர்களுக்குத் தடை.  தடை மட்டும் இல்லையெனில் அங்கேயும் நீருக்குப் பதிலாக மனிதர்கள் பிளாஸ்டிக்கை மிதக்க விட்டிருப்பார்கள்.

செருப்பைக் கழற்றிவிட்டு புல்லில் நடந்து செல்லும்போது ஏற்படும் ஒரு சுகத்தை அனுபவித்திருக்கிறீர்களா. காலில் படும் புல்லின் ஈரம் நம் இதயம் வரை ஊடுருவும் அந்த சுகத்தை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும். திகட்டவே செய்யாத இயற்கையின் விருந்தை நன்கு புசித்து விட்டு மேலும் பயணிக்கலாம்.

சாலையில் விளையாடும் குழந்தைகள் நம்மைக் கண்டதும்  இரு கைகளையும் கூப்பி "வாங்க" என்று ஆச்சர்யப்படுத்துகிறார்கள். "பசங்களா, ஒரு போட்டோ எடுத்துக்கலாமா", என்றால் " எதுக்கு அக்கா ஃபோட்டோ? எங்கள ஞாபகம் வெச்சுக்கோங்க. போட்டோ எடுத்தா இங்க உள்ள பூச்சி, பறவைக்கெல்லாம் ஆகாதாம்" என்றாள் ஒரு சிறுமி. இயற்கை மீதான அந்த குழந்தைகளின் பரிவு நம்மை ஆச்சர்யப்படுத்தியது.

manjolai6002.jpg

புகைப்படம் எடுக்கையில் வெளியாகும் ஒரு வகை கதிர்வீச்சு வன உயிரிகளுக்கு நரம்பு தளர்ச்சி நோயை ஏற்படுத்தும் என்பதுதான் அந்த குழந்தைகள் மறுத்ததற்கான அறிவியல் காரணம். இந்த விவரம் அவர்களுக்கு தெரியவில்லை என்றாலும், விழிப்புணர்வு இருக்கிறது. நவநாகரீக உலகில், படித்து பட்டதாரிகளான நமக்கு அது இருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. சிந்தித்துக் கொண்டே மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களைப் பார்த்த படியே சென்றால் ஊத்து எனும் பகுதியை அடையலாம்.

இங்குதான் வெகுதூரத்திற்குப் பிறகு ஒரே ஒரு உணவு கிடைக்கும் இடமும், தபால் அலுவலகமும், சில வீடுகளும் உள்ளன. இன்று மனிதர்களிடம் அரிதாகிப்போன ஒன்றின் ஊற்றை இங்கு காண முடிந்தது. அது மனிதநேய ஊற்று!

ஆம்...நம்மைப் பார்த்ததும், "வாங்க வாங்க, எப்படி இருக்கீங்க? எங்க வீட்டுக்கு வாங்க, மாஞ்சோலை டீ குடிச்சுட்டு போங்க...", என்று ஒவ்வொருவரும் அழைத்து ஆச்சர்யம் அளிக்கின்றனர். கடையில் குடித்துக் கொள்கிறோம் என்று கூறினால், " நம்ம வீடு இருக்கும்போது எதுக்கு கடை", என்று அழைத்துச் சென்று உபசரிக்கின்றனர். வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தாலே, டிவி சீரியலை விட்டுக் கண்களை எடுக்காத நமக்கு இது சற்று அதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஒரு நிமிடம் நாம் இந்த உலகில்தான் இருக்கிறோமா என்று தலைசுற்றி விடும்! வீடு மிகவும் சிறிதுதான். 10×10 அடியில்தான் மொத்த வீடே. ஆனால், அவர்கள் உள்ளம்தான் எவ்வளவு விசாலமானது.

manjolai3.jpg

இவர்களுக்கு செல்ஃபி பற்றித் தெரிந்திருக்கவில்லை. ஆனால் வந்தவர்களை உபசரிக்கவேண்டும் என்ற நாகரிகம் தெரிந்திருக்கிறது. வந்தவர்களை  வணக்கம் சொல்லி, 'வாங்க' எனக் கூறும் நம் கலாசாரம் பிஞ்சுகளுக்குக் கூடத் தெரிந்து இருக்கிறது. இங்குள்ளவர்கள் பிளாஸ்டிக் உபயோகிப்பதில்லை. சாக்கடை இல்லை. இதனால் கொசு, நோய்கள் என எதுவுமே இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கின்றனர். வீட்டில் மின்விசிறி கூட கிடையாது, ஆனாலும் ஏ.சி போட்டதைப் போன்ற ஒரு குளுமை நிலவுகிறது!

மாடாகப் பிறந்தாலும் யோகம் செய்ய வேண்டும் என்பது இங்கு சென்ற பிறகே தெரிகிறது. காரணம், பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகளையும் உண்டு நோய்வாய்ப்பட்ட  நம் ஊர் மாடுகளைப்போலல்லாமல் இங்கு ஆரோக்கியமான மாடுகளைக் காணலாம். புல், பச்சை இலை, தழைகளை உண்டு, செழிப்பாக இருக்கின்றன. இந்த மாடுகளின் சாணத்தின் வாசம் காற்றில் கலந்திருந்தாலும், மூக்கை மூடவைக்கவில்லை. காரணம், ஒரு மூலிகை வாசனைதான் வரும்.

மாஞ்சோலைக்கும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் செழிப்பான ஒரு வரலாறு உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மருக்கு உதவி செய்ததன் பொருட்டு, சிங்கம்பட்டி ஜமீன் பரிசாகப் பெற்ற நிலத்தை Bombay Burma Trading Corpoation என்ற நிறுவனத்துக்கு 99 வருடங்களுக்குக் குத்தகைக்கு விட்டார். தற்போது வரை, இந்நிறுவனமே இந்த தோட்டத்தைப் பராமரித்து வருகிறது.

manjolai6004.jpg

மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என்பதால், மனமில்லா மனதுடன் கிளம்ப வேண்டும். வந்த பாதையிலேயே மீண்டும் ஒரு பயணம். வரும் போது "வா" என்று அழைப்பது எவ்வளவு முக்கியமோ, "போய்ட்டு வாங்க" என்று கூறுவது அதைவிட முக்கியம். வாசல் வரை வந்து, "திரும்ப வந்தா நம்ம வீட்டுக்கு வந்து சாப்டுட்டுதான் போகணும்", எனக் கூறி வழி அனுப்பி வைக்கிறார்கள். காட்டின் எல்லையை அடைந்ததும், முக்கியமான ஒருவர் வழியனுப்பக் காத்திருக்கிறார். வேறு யாரும் இல்லை குரங்குதான்!

மாஞ்சோலைக்கு செல்ல வனத்துறையிடம் முன் அனுமதி பெறவேண்டும். இங்கு பிளாஸ்டிக், மது போன்றவற்றைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. "உள்ளே மிருகம் பறவைகள்லாம் நிறைய இருக்கும், பாட்டு போடாதீங்க", என்று கூறித்தான் நுழைவாயிலில் உள்ள பாதுகாவலர்கள் அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், நம் மக்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? பாட்டை சத்தமாக வைத்து செல்கிறார்கள். பிற உயிர்கள் மீது கொஞ்சம் கூட அக்கறையோ, அன்போ இல்லாத இந்த சுயநலக்காரர்களை யார் திருத்த முடியும்?

manjolai600123.jpg

மெல்ல மெல்ல இறங்கி மீண்டும் இந்த நவநாகரிக உலகிற்குள் பிரவேசித்து விட்டோம். டவர் கிடைத்துவிட்டது. முகநூலில் ஒரு பதிவையும், சில செல்ஃபிக்களையும் போட்டு விட்டு வாட்ஸ் அப்பில் சாட் செய்ய ஆரம்பிக்கலாம். ஆனாலும், அருவியின் மேளச் சத்தம் காதிலும், புல்லின் ஈரம் காலிலும், பச்சை நிறம் கண்ணிலும் எஞ்சி நிற்கும். அனைத்திற்கும் மேலாக மனிதம் உங்களை தொற்றியிருக்கும். அது சிந்திக்கவும் வைக்கும். யாருக்குத் தெரியும், உங்களால் மீண்டும் மனிதம் நம் நாகரிக உலகில் துளிர்விடலாம்!

vikatan

  • தொடங்கியவர்
16 இலட்சம் ரூபாவுக்கு விற்பனையான திராட்சைக் குலை
 

17874grapes2.jpgஜப்­பானில் திராட்சைக் குலை­யொன்று 11 இலட்சம் யெண்­க­ளுக்கு (சுமார் 16 இலட்சம் ரூபா) விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது.


ஜப்­பானின் மத்­திய பிராந்­தி­யத்­தி­லுள்ள கன­ஸாவா நகரில் வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற ஏல விற்­ப­னையில் இப் ­பெருந் தொகைக்கு மேற்­படி திராட்சைக் குலை விற்­ப­னை­யா­கி­யது.


ரூபி ரோமன் எனும் வகையைச் சேர்ந்த இத்­ தி­ராட்­சைகள் இஷி­கவா பிராந்­தி­யத்தில் அறு­வடை செய்­யப்­பட்­ட­தாகும். இஷி­கவா பிராந்­திய அர­சாங்­கத்­தினால் கடந்த 14 வரு­டங்­க­ளாக மேற்­படி ரூபி ரோமன் திராட்­சைகள் விசேட மாக உற்­பத்தி செய்­யப்­பட்டு வரு­கின்­ற­னவாம்.
 

அங்கு உற்­பத்­தி­யாகும் திராட்­சைக் ­கு­லை­களில் ஒவ்­வொரு பழமும் 20 கிரா­முக்கு குறை­வாக இருந்தால் அக்­ குலை விற்­ப­னைக்கு அனுப்­பப்பட மாட்­டாது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


ஜப்­பானில் வரு­டாந்தம் முதல் அறு­வ­டை­களின் பின் இத்­த­கைய ஏல விற்­ப­னைகள் நடை­பெ­று­வது வழக்கம். இந்த ஏல விற்­ப­னையில் பொருட்­களை வாங்­கு­வது பெரும் சமூக அந்­தஸ்­தாக கரு­தப்­ப­டு­கி­றது.


17874grapes1.jpg

 

இந்­நி­லையில், நேற்று இந்த திராட்சைக் குலையை சுப்பர் மார்கெட் ஒன்றின் உரி­மை­யா­ள­ரான டொகா­மாரு கோனிஷி என்­பவர் 11 இலட்சம் யெண்­க­ளுக்கு வாங்­கினார்.


இது தனக்கு கிடைத்த கௌவ­ர­மாகக் கரு­து­வ­தாகக் கூறிய டொகா­மாரு கோனிஷி, தனது வர்த்­தக நிலையத்தில் காட்சிப்படுத்திய பின்னர் வாடிக்கையாளர்களுக்கு திராட்சைப் பழங்களை இலவசமாக வழங்க வுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  

metronews.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.