Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஆசிட்டிற்கு எதிரான சிறு புன்னகை!

 

ழு மாதங்களுக்கு முன்பு டெல்லி மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறந்தது. பிகு எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் பெண் குழந்தை, சாதாரண குழந்தை அல்ல; ஒரு பெரும் சமுதாய மாற்றத்திற்கான சிறு அடையாளம். அதை தெரிந்து கொள்வதற்கு முன் கொஞ்சம் வரலாற்றை திரும்பி பார்ப்போம்.

a4%281%29.jpg

2005-ம் ஆண்டு டெல்லியில் 30 வயது நிரம்பிய ஆண் ஒருவர், தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளாததால் லட்சுமி அகர்வால் என்ற 16 வயது பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் ஊற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அந்தப் பெண் தன்னுடைய விடா முயற்சியால் உச்ச நீதிமன்றத்தில் போராடி, நாடு முழுவதும் ஆசிட் விற்பனைக்கு எதிரான தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

அதுமட்டுமல்லாமல், சென்ற வருடம் உலகின் துணிவான பெண்மணி என்ற விருதை, அமெரிக்க அதிபர் மாளிகையில் மிட்செல் ஒபாமா கையால் பெற்றார். மேலும், ஆசிட் வீச்சுக்கு எதிராக போராடியதன் மூலம் சிறந்த இந்திய குடிமகள் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.

a2%281%29.jpg

2014 ஜனவரியில் அலோக் தீக்சித் என்ற சமூக செயல்பாட்டாளர் மேல் காதல் கொண்ட லட்சுமி, திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த இரண்டு வருடமாக அவருடன் வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் பிகு.

பிகு-வை பற்றி லட்சுமி கூறும்போது, ''நான் ரோட்டுல நடந்து போறப்ப எல்லோரும் என்னை வித்தியாசமா பாப்பாங்க. சிலர் என்னை ரொம்ப பரிதாபமாக பாப்பார்கள். சிலர் பயப்படுவாங்க. இதேபோல் என்னோட குழந்தையும் என்ன பார்த்து பயப்படுமோன்னு நினைத்திருந்தேன். ஆனா அவ, என்னை பார்த்து ரொம்ப அழகா சிரிப்பா. யாரும் என்ன பார்த்து அப்படி சிரிச்சதில்ல.

a3%281%29.jpg

பிகு என்னை ஏற்றுக் கொள்வாளா என பார்த்துவிட்டு, குழந்தை பிறந்ததை பற்றி எல்லாருக்கும் தெரிவிக்கலாம் என்றிருந்தேன். பிகுவுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு; அதான் இப்ப எல்லோருக்கும் சொன்னேன்" என்கிறார்.

கல்யாண வாழ்க்கை பற்றிய கேள்விக்கு, "கடைசி வரை கல்யாணம் செய்து கொள்ளாமலேயே அலோக் தீக்சித்துடன் வாழ வேண்டும்" என சந்தோசமா சிரிக்கிறார்.

உண்மைதான்... உலகில் ஒவ்வொரும் சந்தோமாக வாழ்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்தக் காரணத்தைக் கண்டுபிடிப்பது மட்டும்தான்!

http://www.vikatan.com/news/miscellaneous/55428-small-smiling-against-acittirku.art

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்று

1989 - ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.

 

2007 - கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டு 10 பேர் படுகாயமடைந்தனர்

2007 - இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டம், ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

1850 - ஜோர்ஜ் வில்லியம் இலங்கை ஆளுனராக நியமிக்கப்பட்டார்.

 

 

 

1850 - ஜோர்ஜ் வில்லியம் இலங்கை ஆளுனராக நியமிக்கப்பட்டார்.

 

1929 - பிறைட் ஹென்றி இலங்கையின் காலனித்துவ செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

 

1935 - விமானம் முதல் முறையாக ரத்மதான விமான நிலையத்தை வந்தடைந்தது.

2011 - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெற்கு அதிவேக பாதையை திறந்து வைத்தார்.

 

2013 - இலங்கையின் முதலாவது செயற்கை கோளான சுப்ரீம் சட் செட் - 1 சீனாவின் விண்வெளி தளத்திலிருந்து ஏவப்பட்டது

1975 - கின்னஸ் உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரிஷ் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

   

1983 - கொலம்பியாவின் போயிங் 747 விமானம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே வீழ்ந்து நொருங்கியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நவம்பர் மாதங்களில் பொன்னிற இலைகளை தூவும்மரம்

 

கிங்கோ மரம் சுமார் 1400 ஆண்டுகளாக நவம்பர் மாதங்களில்தனது பொன்னிற இலைகளைத் தூவுவதை தனது வழக்கமாக வைத்துள்ளது.

ginkgo%20tree.jpg

சீனாவின் ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள புத்த துறவிகளின் மடத்தில் இருக்கிறது இந்த கிங்கோ மரம்.

இந்த மரம் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக இனம் மாறாமல், அழியாமல் இருந்து வருகிறது. இதனால், இவை வாழும் படிமங்கள் எனவும் இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்றன.

இந்த மரத்தை பார்வையிட இப்பகுதிக்கு மக்கள் திரளாக படையெடுப்பதாக தெரியவந்துள்ளது.

http://www.virakesari.lk/articles/2015/11/27/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

சிக்சர் மன்னன் சுரேஷ் ரெய்னா பற்றி 12 ஹிட்ஸ்!

 

ந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன், ஃபீல்டிங் கில்லி, ஐ.பி.எல் சூரன் ரெய்னாவுக்கு இன்று (27-ம் தேதி) பிறந்த நாள். அவர் பற்றி அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய (?) விஷயங்கள்.

1) சுரேஷ் ரெய்னாவுக்கு தினேஷ், நரேஷ், முகேஷ் என மூன்று சகோதரர்களும் ரேணு என ஒரு சகோதரியும் உள்ளனர்.

2) வீட்டில் ரெய்னாவின் செல்லப் பெயர் 'சோனு'!

3) 'ரெய்னா உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில் மிக முக்கியமானவர்!’ எனப் பாராட்டியிருப்பவர் யார் தெரியுமா... ஜான்டி ரோட்ஸ்!

4) 2010-ல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட்டில் முதன்முதலாக களமிறங்கி, அறிமுகமான போட்டியிலேயே சதமடித்து அசத்தினார்.

Suresh%20raina01.jpg

5) 2011-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 29 பந்துகளை எதிர்கொண்டு ரெய்னா டக்-அவுட் ஆனார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இத்தனை பந்துகளை சந்தித்து டக்-அவுட் ஆன வீரர் ரெய்னா தான்.

6) இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற இரண்டாவது இளம் வயது வீரர் ரெய்னா. அப்போது அவருக்கு வயது 23.

8) 2014 வங்கதே சுற்றுப்பயணத்துக்கு ரெய்னா இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அத்தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 104 ரன்களுக்கே ஆல்-அவுட். ஆனால், சளைக்காத ரெய்னா களத்தில் ஒவ்வொரு பந்துக்கும் வியூகம் வகுத்து, ஒவ்வொரு பவுலரிடமிருந்தும் ‘பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்’ கொண்டு வந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைக் கொய்தார்.

9) 50 ஓவர் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, ஐ.பி.எல், சாம்பியன் லீக் என இந்தப் போட்டித் தொடர்கள் அனைத்திலும் சதமடித்த ஒரே இந்திய வீரர் ரெய்னாதான். சர்வதேச டி20 அரங்கில் சதமடித்த முதல் இந்திய வீரரும் கூட!

10) ரெய்னா அவ்வளவு ஃப்ரெண்ட்லி. களத்தில் அரைசதம் அடிக்கும் வீரருக்கு முதல் க்ளாப்ஸ், விசில் கிளம்புவது ரெய்னாவிடமிருந்துதான்.

11)  ஒரு முறை பாகிஸ்தான் அணியை விமர்சித்து ட்வீட்டி சர்ச்சையில் சிக்கினார் ரெய்னா. பின்னர், "இந்த போஸ்டை என் உறவினர் எனக்கு தெரியாமல் போட்டு விட்டார். நான் ஒரு விளையாட்டு வீரன், யாரையும் மரியாதை குறைவாக நினைக்கமாட்டேன்" என வருந்தி மீண்டும் ட்வீட் செய்தார். இதை நெட்டிசன்கள் #Rainanephew #replacemovietitilewithnephew என கலாய்த்து டிரெண்டாக்கினர்.


12) மீருதியா கேங்க்ஸ்டர்ஸ் என்ற பாலிவுட் படத்தில் 'து மிலி சப் மிலா' என்ற பாடல் பாடியிருக்கிறார் ரெய்னா.

களத்தில் மட்டுமல்ல, டிரெஸ்ஸிங் ரூமிலும் 'டீம் ஸ்பிரிட்’ தக்க வைப்பதுதான் ரெய்னாவின் மேஜிக்!

http://www.vikatan.com/news/sports/55684-sureshrainashits.art

  • தொடங்கியவர்

நோபல் வின்னர்ஸ்!

 

 

வ்வோர் ஆண்டும் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் விருதுகளில் முக்கியமானது, நோபல். இந்த ஆண்டு நோபல் விருது பெற்றவர்கள் பற்றிய ‘நறுக்... சுருக்’ வரிகள்...

பொருளாதாரம்  

p16.jpg

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆங்கஸ் டீட்டன் (Angus Deaton), ஸ்காட்லாந்தில் பிறந்தவர்.  மக்கள் நலத் திட்டங்களை வடிவமைப்பதிலும் வறுமையை ஒழிப்பதிலும் பொருட்களை வாங்கும் மக்களின் தன்மை தொடர்புடையதாக இருக்கிறது, என்ற இவரது ஆய்வின் முடிவு, வளர்ச்சியை நோக்கிய பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் நுண் பொருளாதாரவியல் துறைகளில் பெரும்  மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன.

இலக்கியம்

p16b.jpg

அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, புனைவு அல்லாத (Non fiction) எழுத்துக்காக, ‌பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் (Svetlana Alexievich) விருது பெற்றிருக்கிறார். போர்க்களங் களில் பெண்கள் மீதான வன்முறை, செர்னோபில் அணு உலை விபத்து, ஆப்கானிஸ்தானில் பழைய சோவியத் யூனியனின் போர் ஆகியன பற்றி இவர் எழுதியிருக்கிறார். நோபல் பரிசு அறிக்கையில், “நம் காலத்தின் துயரங்கள் மற்றும் அவற்றை எதிர்த்த துணிச்சலின் நினைவுச் சின்னமாக ஸ்வெட்லானாவின் எழுத்துகள் உள்ளன” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம்

p16c.jpg

ஒட்டுயிரிகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  தாவரங்கள், விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒட்டுயிரிகளால் ஏற்படும் நோய்களில் யானைக்கால் நோய், மலேரியா போன்றவை, பல ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்தன. சீனாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி, யுயூ டு (Youyou Tu), சித்த வைத்தியம் போன்ற சீனாவின் பாரம்பரிய மூலிகை மருத்துவ முறையில் ‘அர்டமைசினின்’ (Artemisinin) என்ற மருந்தைக் கண்டறிந்தார். மலேரியாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததற்கு இந்த மருந்து முக்கியக் காரணம். மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெறும் 12 - வது பெண் யுயூ டு. இவரோடு யானைக்கால் நோய் மற்றும் பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தும் உருளைப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் மருந்தைக் கண்டறிந்த ஜப்பானைச் சேர்ந்த சடோஷி ஓமுரா (Satoshi omura) மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் கேம்பெல் (William Campbell) ஆகியோரும் நோபல் பரிசைப் பெறுகின்றனர்.

p16g.jpg

வேதியியல்

p16e.jpg

நம் உடலின் அடிப்படைக் கூறான செல்களைப் பற்றிய முக்கியமான ஆய்வுக்கு, இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சுகள், நோய்கள், புற்றுநோய் போன்றவற்றாலும் சில சமயங்களில் மரபணுக்களின் டி.என்.ஏக்கள் இயல்பாகவே பழுதடைந்துவிடும். நம் உடலின் செல்கள், அவற்றை எவ்வாறு சரிசெய்கின்றன என்பதைப் பற்றிய ஆய்வுக்காக ஸ்வீடனைச் சேர்ந்த, தாமஸ் லிண்டால் (Tomas Lindahl), அமெரிக்காவைச் சேர்ந்த, பால் மாட்ரிச் (Paul Modrich) மற்றும் அஸிஸ் சன்கர் (Aziz Sancar) ஆகியோர் பெறுகின்றனர். இந்த ஆய்வுகள், ஒட்டுமொத்தமாக டி.என்.ஏ பழுதுகளைப் பற்றிய தெளிவான பார்வையை வழங்கியுள்ளன.இதன் மூலம், புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

p16h.jpg

இயற்பியல்

p16d%281%29.jpg

அடிப்படை அணுத்துகளான நியூட்ரினோ பற்றிய ஆய்வுகளுக்காக, ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானி டகாகி கஜிடா (Takaaki Kajita) மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆர்தர் பி.மெக்டொனால்டு (Arthur B. McDonald) ஆகியோர் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். பிற அடிப்படை அணுத்துகள்களைப் போல அல்லாமல், நியூட்ரினோ துகள்களை ஆய்வுச்சூழலில் பிடித்துவைத்து ஆய்வுகளைச் செய்ய முடியாது. பிரபஞ்சத்தில் பயணம் செய்யும் நியூட்ரினோத் துகள்களும், சூரியனில் இருந்து வெளிப்படும் நியூட்ரினோ துகள்களும் பூமியைத் துளைத்துச் செல்லக்கூடியவை. எனவே, அதனுடைய பயணத்திலேயே ஆய்வுசெய்ய வேண்டும். இதற்காக, பல ஆய்வுக் கூடங்கள் உலகின் பல இடங்களில் உள்ளன. ஜப்பான் ஆய்வகத்தை மையமாகக்கொண்டு டகாகி கஜிடாவும், கனடா ஆய்வகத்தை மையமாகக்கொண்டு ஆர்தர் மெக்டொனால்டும் மேற்கொண்ட ஆய்வுகளில் நியூட்ரினோ துகள்கள் அடிப்படைப் பண்புகளில் மாற்றம் பெற்று வேறு வகையான அடையாளங்களைப் பெறுகின்றன என்பதனைக் கண்டறிந்துள்ளனர்.

அமைதி

p16f.jpg

2011-ம் ஆண்டு, துனிசியா மக்கள் அனைவரும் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த மல்லிகைப் புரட்சியின் (Jasmine revolution) முடிவில், துனிசியா நாடே வன்முறைக் காடாக மாறியது. இனி,  துனிசியாவில் ராணுவ ஆட்சிதான் நடைபெறும் எனப் பலரும் பயந்தார்கள். இந்த நிலையில் துனிசியா நாட்டின் தொழிலாளர் சங்கம், தொழில்துறைக் கூட்டமைப்பு, மனித உரிமைகள் கழகம் மற்றும் வழக்கறிஞர்கள் குழு ஆகிய நான்கு அமைப்புகளும் ஒருங்கிணைந்து, ‘துனிசியா தேசிய ஆலோசனைக் குழு’வை அமைத்தது. ஆரோக்கியமான ஜனநாயகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றது. துனிசியா தேசிய ஆலோசனைக் குழுவின் இந்தச் செயல்பாட்டுக்காக, இந்த அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=111989&sid=3411&mid=4&utm_source=facebook&utm_medium=ChuttiVikatan&utm_campaign=6

  • தொடங்கியவர்

புரூஸ் லீயைப் பற்றிய இந்த 7 உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?

 

ளமைப் பருவத்தில் அனைத்து உலக இளைஞர்களின் ஆதர்சமாக இருக்கும் புருஸ் லீயின் பிறந்தநாள் இன்று. இன்றும் நாம் புருஸ் லீயைக் கொண்டாட பின்வரும் காரணங்கள் சின்ன சாம்பிள்! 

1. புரூஸ்லி தன்னுடைய டீன் வயதில்  'Tigers Of Junction Street' என்ற பெயரில் இயங்கிவந்த ஹாங்காங்கின் கேங்ஸ்டர் குழுவில் இணைந்தார். எங்கே சண்டை என்றாலும் சும்மா தேடித் தேடிவந்து இந்தக்  குழு உறுப்பினர்களைத்தான் மொத்தியிருக்கிறது மற்ற பெரிய சைஸ் குழுக்கள். இதுக்கும் மேலயும் பாடி தாங்காது என்ற உண்மை உறைத்த பிறகுதான், தன் தாயிடம் சொல்லி கராத்தே வகுப்பில் சேர்ந்திருக்கிறார்.

bruslie_vc1.jpg



2. கத்தி, சைக்கிள் செயின் சகிதம் வளையவந்த லீ, ஒருசமயம் லோக்கல் கவுன்சிலரின் மகனை பெண்டு நிமிர்த்திவிட்டார். தொடர்ச்சியாக நிறைய வம்புகளில் மாட்டிவந்த லீயை அமெரிக்கா அனுப்பிவிட பெற்றோர் முடிவு செய்தனர். அவர்மீதான சில சில்லறை வழக்குகளுக்காக போலீசாருக்கு 'கப்பம்' கட்டி வெற்றிகரமாக விசாவை சேஸ் செய்தனர்.

3. புரூஸ்லி  சண்டை போட்டு பார்த்திருப்பீங்க, பஞ்ச் பண்ணி பார்த்திருப்பீங்க, டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா... பார்த்திருக்கீங்களா? 

கராத்தே வகுப்புக்குச் சென்ற அதேநேரத்தில், 'காதலியை கரெக்ட் பண்ண உதவும்’ என்ற ஒரே காரணத்துக்காக புரூஸ் லி 'சா சா' நடனமும் கற்றிருக்கிறார். 18- வயதில் அவர் ஹாங்காங்கின்  'சா சா' சாம்பியன். அமெரிக்காவுக்கு வண்டி கட்டியபோது அவரிடம் இருந்தது 100 டாலர்கள் மட்டுமே. உடன் பயணித்த பயணிகள் சிலருக்கு சா சா நடன உத்திகளை சொல்லிக்கொடுத்து ஃப்ளைட் தரைதொடும் முன்னே சில எக்ஸ்ட்ரா டாலர்களை சம்பாதித்தார்.
 
 

 

 

4. அமீர்கானை அறைந்தால் ஒரு லட்சம், அந்த சவால் விட்டவரை அறைந்தால் பதிலுக்கு ஒரு லட்சம் என இங்கே கும்மியடிப்பதுப் போல ஒரு சவால் புரூஸ் லீக்கும் வந்தது. சீனர்களுக்கு மட்டுமே உரிய குங்ஃபூவை அமெரிக்கர்களுக்கு கற்றுத் தந்த புரூஸ் லீயிடம் சீன பழமைவாத குரூப் ஒன்று உரண்டை இழுத்தது. தங்களுடன் புரூஸ் லீ சண்டையிட்டு தோற்றால், சீனர்களைத் தவிர வேறு யாருக்கும் குங்ஃபூவை கற்றுத்தரக்கூடாது என்பதுதான் போட்டியின் முடிவு. போட்டிக்கான நாள் குறித்தனர். களத்தில் லீயும் எதிராளியும். போட்டி ஆரம்பிப்பதற்கான நேரம் தோராயமாக‌ காலை பத்து மணி என்று வைத்துகொள்வோமே. பத்து மணி மூன்று நிமிடங்களில் அடுத்தடுத்த தன்னுடைய குங்ஃபூ வகுப்புகளுக்கு அமெரிக்ககர்களிடம் சந்தா வசூலிக்க ஆரம்பித்தார் லீ. விளம்பர இடைவேளைக்குக்கூட நேரம் தராமல் போட்டியை முடித்துவிட்டார் லீ.

bruslie_vc2.jpg



5. 'உத்யோகம் புருஷ லட்சணம்' என்ற பழமொழிக்கு இணையான சீன பழமொழி ஒன்றையும், மேலும் சில புத்திமதிகளையும் சொல்லித்தான் லீயை வேலைத்தேடச்சொல்லி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர். லீ பார்த்த வேலை என்ன தெரியுமா? அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள், நடிகர்கள் என பலருக்கும் குங்ஃபூவை சொல்லிக் கொடுத்தார். 'உத்யோகம் புருஷ லட்சணம்' என்பது 'உதையோகம் புரூஸ் லீ லட்சணமா'கிற அளவுக்கு பிரபலமானார்.

6. 'என்டர் த ட்ராகன்' படத்தில் லீ ஹீரோ. 'யெஸ் பாஸ்' என்று சொல்லி ஹீரோவிடம் அடிவாங்கும் ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட் கேரக்டரில் ஜாக்கி சான். ஒரு சண்டை காட்சியில் கையில் இருக்கும் தடியால் சானின் முகத்தில் விழுகிறது ஒரு கும்மாங்குத்து. 'கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன், அது பஞ்ச்சானாலும் புரூஸ் லீ கையால் பஞ்சராவேன்' என்று லீ புகழ் பாடிச்சென்றார் சான்.

bruslie_vc3.jpg



7. புரூஸ் லி இறந்தபோது 'கேம் ஆஃப் டெத்' என்ற படம் நிறைவடையாமல் இருந்தது. லீயின் பழைய படங்களில் இருந்து சில காட்சிகள், நிறைய டூப்கள் என ஒருவழியாக படத்தை எடுத்து முடித்து வெளியிட்டபோது வாங்கிக்கட்டிக்கொண்டது தயாரிப்பாளர் தரப்பு.  காரணம், புரூஸ் லியின் இறுதி ஊர்வலத்தில் இடம்பெற்ற சில உண்மை காட்சிகளையும் படத்தில் இணைத்து வசூல் செய்யப் பார்த்ததால்!

உலகம் எப்போதும் மிஸ் செய்யும் நபர்கள் பட்டியலில் புரூஸ் லீக்கு எப்போதும் இடம் இருக்கும்!

http://www.vikatan.com/news/miscellaneous/55680.art

  • தொடங்கியவர்

இன்று

2012 - யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கை பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.

1893 - நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.

   

1942 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 491 பேர் இறந்தார்கள்.

   

1990 - ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.

  • தொடங்கியவர்

நாம் 10 மாதம் தங்கிய தாய் வீடு...

 

  • தொடங்கியவர்

வாடஸ் அப் கலக்கல்:

 
t1_2636532f.jpg
 

 

2_2636535a.jpg

எம் கொடியை சரிசெய்யவே இப்படி!

 

1_2636536a.jpg

3_2636534a.jpg

4_2636533a.jpg

 

ஜாலி ட்விட்டர்

t2_2636531a.jpg

 

t3_2636530a.jpg

t4_2636529a.jpg

  • தொடங்கியவர்

காதில் ஹெட்போன்...கையில் ஐபோன்...அதிசயித்துப் பார்க்கும் 44 ஆண்டுகளை சிறையில் கழித்த அமெரிக்கர்!

 

கரங்களில் எல்லோரும்  ரோபோக்களைப் போல, முகத்தில் உணர்ச்சி அற்றவர்களாகவே திரிகின்றனர். எவ்வளவு கூட்ட நெரிசல் இந்த நியூயார்க் நகரில் என்று கேட்டால்,கேட்பவரை வேற்றுகிரக வாசியைப் போலத்தான் பார்க்க தோன்றும்.

ஆனால் உண்மையில் ஒருவருக்கு நியூயார்க் அவரச வாழ்க்கைக்குப் பழகிய மனிதர்களைப் பார்க்க வேற்றுக் கிரக மனிதர்களை நினைவுபடுத்துகிறதாம். அதே நேரத்தில் இவரும் பலருக்கு வேற்றுக்கிரக வாசியாகத் தோன்றலாம். அவர் பெயர் ஒடிஸ் ஜான்சன்.அமெரிக்கர்.

பல வருடங்கள் முன்பு இந்த சமூகத்தின் தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்ட அவர், மீண்டும் பரபரக்கும் இந்த சமூகத்தில் இணைந்துள்ளார்.அதனால் அவருக்கு வேற்றுக் கிரக உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க இயலாதது தானே.

newyork_vc_400%281%29.jpg



விண்வெளிக்குச்  சென்று திரும்புவது போல் இவர் நியூயார்க் நகரில்  இருந்து நீக்கப்பட்டது 1975 ஆம் ஆண்டு. அப்போது அவருக்கு வயது 25. மீண்டும் இந்த சமூகத்திலே இணைந்து கொண்டது 2014 இல், 69 ம் வயதில்.இளைஞராக சிறை சென்றவர் முதியவராக வெளியே வந்துள்ளார்.காலம் சிறைக்கு வெளியே பல்வேறு மாற்றங்களைப் புதுமைகளைக் கொண்டு வந்துள்ளது.இவை எதுவுமே அறியாத மனிதராக ஜான்சன் வாழ்ந்துள்ளார்.

தனது வாழ்நாளின் இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்த ஒடிஸ் ஜான்சன், ஒரு காவலரைக்   கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக 44  ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து தற்போது திரும்பி உள்ளார். சிறையில் இருந்து திரும்பிய ஜான்சனிடம் வழங்கப்பட்டது 2 பஸ் டிக்கெட் மற்றும் நாற்பது டாலர்களுடன் அவரது வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் அவரது ஐடி கார்டு. தன் குடும்பம், சொந்தம் பற்றிய மொத்த விபரங்களும் மறந்து,தொடர்புகள் அறுந்து அனாதையாக தெருவில் நின்ற ஜான்சனுக்கு அடைக்கலம் கொடுத்தது, ஹார்லெமில் உள்ள ஃபர்ட்டியூன் சொசைட்டி என்கிற நிறுவனம். இது வாழ்நாட்களை சிறையில் கழித்து மீண்டவர்களுக்காக நடத்தப்படும் ஒரு லாப நோக்கமற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜான்சன் தனது அன்றாட பணிகளை, ஒரு வியப்பான அதிசய நோக்கோடுதான் செய்து வருகிறார்.உலகம் அவருக்கு கணம்தோறும் வியப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. தினமும் மசூதியில் தொழுகை செய்கிறார். உடலின் வலுவைக் காக்க "தாய்ச்சி" என்ற உடற்பயிற்சி செய்கிறார்; தியானம் செய்கிறார். பிறகு நியூயார்க் நகர வீதிகளிலே காலாற நடந்து விட்டு தன் வசிப்பிடம் வந்து சேர்கிறார். பெண்களுக்கான ஒரு பாதுகாப்பான இடம் உருவாக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற பணம் திரட்டும் பணியிலும் தீவிரமாக இயங்கி வருகிறார் ஜான்சன்.

newyork_vc_2%281%29.jpg



இதே போன்று பல நூறு ஜான்சன்கள் நியூயார்க் நகர வீதிகளிலே என்ன செய்வது என்றே தெரியாமலே திரிந்துவருகின்றனர் என்கிறது புள்ளி விவரங்கள். ஆம், 2013 ல்  –ஏறத்தாழ 3,900 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறையில் கழித்தவர்கள்!

அடுத்த ஆண்டு நவம்பரில் 6,000  கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா சிறைக்  கைதிகளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கையாக, விடுதலை செய்யும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகம் ஒன்றில் பேசிய ஒபாமா, " இப்பொழுதும்  காலம் ஒன்றும் கடந்துவிடவில்லை. ஒரு காலத்தில் அவர்கள் தவறு இழைத்துவிட்டனர்.அது அவர்களுக்கு ஒரு மோசமான நேரம். உதவி கிடைக்கப்பெற்றால் அவர்கள் நல்ல வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்" என்று குறிப்பிட்டார்.

2014 ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி அமெரிக்காவின் மக்கள் தொகை 2005 ல் சரிவைக் கண்டுள்ளது. அதே நிறத்தில், 1999  முதல்  2014 வரை 55 வயது நிரம்பிய  சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 250  சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் 55  வயதிற்கு குறைவான சிறை கைதிகளின் எண்ணிக்கை 8  சதவீதமே கூடியுள்ளது. 1999 ல் மொத்த சிறை கைதிகளில் 3 சதவிகிதமாக இருந்த முதுமை வயது கைதிகளின் எண்ணிக்கை, 2014  ல்  10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் போதை பொருள் சமந்தமான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த புதிதான நடைமுறையினால் 1,00,000 பேரில் 46,000 பேர் முன்னதாக விடுதலை செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் போதை பொருள் சமந்தப்பட்ட வழக்கில் தண்டனை குறைக்கப்பட்டுள்ளதுடன், கிரிமினல் குற்றத்திற்கான தண்டனையும் குறைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஜான்சனைப் போன்ற முதுமை அடைந்த முன்னாள் சிறை வாசிகள் என்ன செய்வார்கள் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவர்களுக்கு ஒருவேளை, ஜான்சனைப் போல் ஒரு வசிப்பிடம் இல்லாமல் போகலாம். அல்லது அவர்களது பிள்ளைகளிடம் திட்டுக்களை வாங்கிக் கொண்டே போக்கிடம் இல்லாமல் வாழ்ந்து வரலாம். பசியைப் போக்கிக்கொள்ள ஏதாவது வேலை பார்த்து வரலாம். ஏன் என்னை விடுதலை செய்தார்கள் என்று தனிமையில் மனம் நொந்து வாடலாம். விரக்தி முற்றி தற்கொலை செய்ய கூட முயலலாம்.

வலுவான கம்பிகளுக்குப் பின்னால் தன் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த பல முன்னால் சிறை வாசிகளை பேட்டி கண்டுள்ள மரியக் லியம் என்ற ஆய்வாளர், வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் கடைகளில் காய்கறிகள் வாங்குவது வரை இவர்கள், பல்வேறு சிரமத்திற்கு ஆளாவதாகக்  கூறுகிறார். சிறையில் ஒவ்வொரு நாளின் வேலைகளும் முன்னரே தீர்மானித்து இருக்கும் பழக்கத்திற்கு வாழ்ந்த இவர்களுக்கு, தாங்களே ஒவ்வொரு நாளையும் முடிவு செய்வது கடினமானதாக இருக்கும் என்றும் கூறுகிறார்.


 

சிறை கைதிகளை விடுதலை செய்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது என்பது நல்ல விஷயமானாலும், அவர்களுக்கு சரியான போக்கிடம் இல்லாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் அவர்களை,நிற்கதியில்  விடுவதற்கு சிறைவாசம் எவ்வளோ மேல் என்று அவர்களை எண்ண வைக்காமல் அவர்களின்  புனர்வாழ்வுக்கான வழிவகைகளும் செய்யப்பட வேண்டும்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியது போல் சிலர் போதாத காலத்தின் காரணமாக தவறு செய்து சிறை அனுபவித்தாலும், அவர்கள் திருந்தி வாழ ஒரு வழிவகை செய்தால் தான் சமூகம் மாறும்!

http://www.vikatan.com/news/world/55698.art

  • தொடங்கியவர்

கிரிக்கெட் பந்து எப்படி உருவாகின்றது என்று தெரியுமோ - வீடியோ

  • தொடங்கியவர்

இன்று

1917 - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் முதலாம் உலகப் போரில் ஈடுபட்டு இறந்தார்.

 

1845 - எமர்சன் ரெனநட் இலங்கையின் காலனித்துவ செயலாளராக நியமிக்கப்பட்டார்.

 

1986 - ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அமைக்கப்பட்டது.

1877 - தோமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.

   

1987 - கொரிய விமானம் தாய்-பர்மிய எல்லைக்கருகில் வெடித்துச் சிதறியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.

  • தொடங்கியவர்

ரூ.55 கோடி திருமணம் : யார் இந்த ரவி பிள்ளை?

 

ண்மையில் கேரளத்தில் ரூ. 55 கோடியில் ஒரு திருமணம் நடைபெற்றது. மகள் திருமணத்தை பிரமாண்டமாக மட்டும் நடத்தவில்லை. இதையொட்டி பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்துள்ளதாக ரவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

ravi%20.jpg

நாட்டில் பல திருமணங்கள் கோடி கணக்கில் செலவழித்து நடத்தப்பட்டாலும் அண்மையில் நடந்த திருமணங்களில் அனைவரையும் ஈர்த்தது, இந்த திருமணம்தான். சரி யார் இந்த ரவி பிள்ளை என்பவர் யார்?

கேரளத்தில் கொல்லம் அருகேயுள்ள சாவாரா என்ற கிராமத்தில் சாதாரண விவசாயிக்கு மகனாக பிறந்த இவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் டிகிரி படித்தார். பின்னர் கொச்சியில் எம்.பி.ஏ படிப்பு.சேமிப்பில் அக்கறை கொண்ட கேரள மக்களை பார்த்து முதலில் சீட்டு தொழிலில்தான் ரவி பிள்ளை இறங்கினார். தொடர்ந்து கான்டிரக்ட் தொழில், கட்டுமானத் தொழிலில் கால் பதித்த ரவி பிள்ளை, திருவாங்கூர் பெர்டிலைசர், ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் மற்றும் கொச்சின் ரிஃபெரனைரிஸ் நிறுவங்களுக்காக சில பணிகளை மேற்கொண்டார். 

எனினும் தொழிலாளர் பிரச்னை காரணமாக இந்த தொழில்களை கைவிட்டு விட வேண்டிய நிலை.  பின்னர் 1978ஆம் ஆண்டு சவுதிக்கு சென்ற ரவி பிள்ளை, முதலில் சவுதியில் நாஸர் அல் ஹாஜ்ரி என்ற கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து தொழிலை தொடங்கினார். 150 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்தது. பின்னர்  ஆர்.பி என்று பெயர் மாற்றப்பட்டு, இன்று 70 ஆயிரம் ஊழியர்கள் பணி புரியும் ஆர்.பி குழுமமமாக வளர்ந்து நிற்கிறது. பஹ்ரைன்,கத்தார், அமீரகம் மற்றும் கிழக்காசிய நாடுகளில் 26க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இன்று வளைகுடா நாடுகளிலேயே, இவரது ஆர்.பி குழுமம்தான் முன்னணி கட்டுமான நிறுவனம் ஆகும்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ், உலகின் 988ஆவது பணக்காரராக இவரை தேர்வு செய்தது. இந்தியாவை பொறுத்தவரை 30வது பணக்காரர் ஆவார். வளைகுடா நாடுகளை பொறுத்தவரை மிகவும்  சக்தி வாய்ந்த 4வது இந்திய பிரமுகர் ஆவார். கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தற்போது 62 வயது நிரம்பிய ரவி பிள்ளை கீதா தம்பதியருக்கு கணேஷ், ஆர்த்தி என இரு குழந்தைகள். இதில் ஆர்த்தி- மருத்துவர் ஆதித்யா விஷ்ணு திருமணம்தான்  கொல்லத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் நடைபெற்றது.

marr%20.jpg

இந்த திருமணத்திற்காக கொல்லம் ஆஷ்ரம் மைதானத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 3.50 லட்சம் சதுரடியில் பிரமாண்டமான செட் போடப்பட்டது. 'பாகுபலி 'பட புகழ் ஆர்ட் டரைக்டர் சாபு சிரில், மூன்று மாதங்களாக உழைத்து இந்த பிரமாண்ட செட்டினை வடிவமைத்தார். இதற்காக மும்பையில் முதலில் இந்த செட்கள் அனைத்தும் களிமண்ணால் வார்படமாக உருவாக்கப்பட்டது. பின் ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ‘மூலம் அவைகள் இணைக்கப்பட்டன. இதற்கே 40 நாட்கள் பிடித்துள்ளது.

திருமண செட் போடுவதற்கு மட்டுமே ரூ.23 கோடி செலவாகியுள்ளது. அதோடு 30 ஆயிரம் விருந்தினர்கள் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தலும் போடப்பட்டிருந்தது. மணமேடை மட்டும் விரிந்த தாமரை இதழ் போல அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சவுதி, அமீரகம், குவைத்,கத்தார் அரச குடும்பத்தினர் பலர் தனி விமானங்களில் திருமணத்தில் பங்கேற்க வந்திருந்தனர். மற்றும் ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகளும் திருமணத்தில் பங்கேற்றனர். ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் மம்முட்டி உள்ளிட்ட கேரள நட்சத்திரங்களும் திருமணத்தில் பங்கேற்றனர். நடிகைகள் மஞ்சு வாரியார், ஷோபனா ஆகியோரது நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. கர்நாடக இசை புகழ் காயத்ரியின் பக்தி இசை கச்சேரியும் நடைபெற்றது.

திருமணத்திற்காக பாதுகாப்புக்காக மட்டும் கேரள போலீசாருடன் இணைந்து தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருமண விருந்தில் உள்நாட்டு உணவுவகைகளுடன் வெளிநாட்டு உணவுகளும் இடம் பெற்றிருந்தன.இந்ததிருமணத்திற்காக மொத்தம் ரூ.55 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ரவிபிள்ளை கூறுகையில், ''எனது மகள் திருமணத்தை பிரமாண்டமான நடத்தி காட்ட வேண்டுமென்பது மட்டும் எனக்கு நோக்கமில்லை. இந்த திருமணத்தையொட்டி பல்வேறு மக்கள் நலப்பணிகளையும் மேற்கொண்டுள்ளேன். முக்கியமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டைகள், பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரு.10 கோடிக்கு மேல் நிதியுதவி அளித்துள்ளேன்'' என்றார்.

http://www.vikatan.com/news/article.php?aid=55754

  • தொடங்கியவர்

தாய்லாந்தில் 'குரங்குத் திருவிழா': உண்டு மகிழ்ந்த குரங்குகள்

 

தாய்லாந்தில் இந்த ஆண்டும் குரங்குகளை போற்றும் வகையிலான திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

151129122622_thai_monkey_festival_512x28
 திருவிழாவில் உண்டு மகிழும் குரங்குகள்

லொப்புரி மாகாணத்தில் இந்த திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தாய்லாந்தின் இந்த குரங்குத் திருவிழா சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் ஒரு நிகழ்வாகும்.

151129123059_thailand_monkey_festival_51சில சமயங்களில் குரங்குகள் ஆட்களை கடிக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன

இந்தத் திருவிழா நாளன்று அங்கு குரங்குகளுக்கு சீனர்களின் முறைப்படியான விருந்தோம்பல் நடைபெறுகிறது.

இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான குரங்குகள் கூடி, உண்டு உறவாடி மகிழ்கின்றன.

151129122841_thailand_monkey_festival_51  உண்டபிறகு இறைவனுடன் இளைப்பாறல்

குரங்குகளுக்கு உணவு வழங்குவதால் தங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என அங்குள்ள சமூகத்தினர் நம்புகின்றனர்.

'தோ சின் லிங்’ என்று அழைக்கப்படும் குரங்குகளுக்கான இந்தப் பண்டிகை, வெளிநாட்டவர்களையும் வெகுவாக கவர்ந்தாலும், சில சந்தர்ப்பங்களில் தமக்கே உரிய குணங்களை காட்டும் வகையில், மனிதர்களை கடிப்பதும் அவர்களிடமுள்ள பொருட்களை பறித்துச் செல்வதும் நடைபெறவே செய்கின்றன.

http://www.bbc.com/tamil/global/2015/11/151129_thailand_monkeyfestival

  • தொடங்கியவர்

உன்னைப் போல் இருவர்!

இந்த உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கனு பலர் சொல்லிக் கேட்டிருப்போம். எல்லோருக்கும் நம்மைப் போன்றே உருவம்கொண்ட மீதமுள்ள ஆறு பேரில் ஒருவரையாவது பார்க்க வேண்டும் என ஆசை இருக்கும். அப்படி ஒரே மாதிரி உருவ ஒற்றுமைகொண்ட, ஒருவருக்கு ஒருவர் துளியும் சம்பந்தமில்லாத இருவர் சந்தித்துக்கொண்ட நிகழ்வு இணையத்தில் இப்போ தாறுமாறு வைரல்.

நீல் தாமஸ் டாகுலஸ் என்ற ஸ்காட்லாந்து புகைப்படக் கலைஞர் ஒருவர் அயர்லாந்து நாட்டுக்குச் செல்ல விமானம் ஏறியிருக்கிறார். விமானத்தில் தன் பக்கத்து சீட்டில் வந்து அமர்ந்தவரைப் பார்த்து ஸ்தம்பித்துப் போனாராம் டாகுலஸ். காரணம், வந்தவர் அப்படியே அச்சு அசலாக டாகுலஸைப் போன்றே இருந்திருக்கிறார். அவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் ஸ்டிர்லிங். சக பயணிகளும் விஷயம் தெரிந்ததும் செம ஹேப்பியாம். டாகுலஸும், ராபர்ட்டும் சேர்ந்து தட்டிய செல்ஃபிதான் இப்போ செம பிரபலம். இதற்குப் பின் சென்ற வேலை முடிந்து டாகுலஸ் ஹோட்டலுக்குத் திரும்ப ராபர்ட்டும் அதே ஹோட்டலில் ரூம் எடுக்க வந்திருக்கிறார். ட்விட்டரில் இவர்கள் எடுத்துப் போட்ட செல்ஃபியைப் பார்த்த அயர்லாந்தைச் சேர்ந்த நேதன் என்பவர் ஆச்சர்யத்துடன் அவரும் ஒரு செல்ஃபி ட்விட்டியிருக்கிறார். இதில் என்ன ஆச்சர்யம்னா, அந்தப் பயபுள்ளையும் பார்க்க இவர்களைப் போலவே இருப்பதுதான். மிச்சம் நாலு பேர் எங்கேப்பா இருக்கீங்க?

11147848_1029665720425551_59199201589876

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 30
 
 

article_1448853944-0.jpg1700: 8500 பேர் கொண்ட சுவீடன் படைகள் பாரிய ரஷ்ய படையை எஸ்டோனியாவின் நார்வா நகரில் தோற்கடித்தன.

1782: அமெரிக்க புரட்சி யுத்தத்தில் அமெரிக்க, பிரித்தானிய பிரதிநிதிகள் பாரிஸில் முன்னோடி சமாதான ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

1872: உலகின் முதலாவது சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது.

1908: அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுரங்கமொன்றல் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் 154 பேர் பலி.

1934: நீராவி ரயிலொன்று முதல் தடவையாக உத்தியோகபூர்வமாக 100 மைல் வேகத்தை அடைந்தது.

1954: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் எரிகல்லொன்று வீடொன்றின் கூரைவழியாக வீழ்ந்து, உறங்கிக்கொண்டிருந்த பெண்ணொருவரை தாக்கியது. விண்ணிலிருந்து விழுந்த பொருளொன்றினால் மனிதர்களுக்கு காயம் ஏற்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட ஒரேயொரு சம்பவம் இது.

1966: பிரிட்டனிடமிருந்து பார்படோஸ் சுதந்திரம் பெற்றது.

1967: பிரிட்டனிடமிருந்து தெற்கு யேமன் குடியரசு சுதந்திரம் பெற்றது.

1967: பாகிஸ்தான் மக்கள் கட்சி ஸுல்பிகார் அலி பூட்டோவினால் உருவாக்கப்பட்டது.

1995:  குவைத் மீதான குவைத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட 'பாலைவனப் புயல்' யுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவுற்றது.

1999: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பூகோள மயமாக்கலுக்கு எதிரானோரின் ஆர்ப்பாட்டம் காரணமாக, உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டு ஆரம்ப வைபவம் ரத்து செய்யப்பட்டது.

- See more at: http://www.tamilmirror.lk/160229/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.WM5Tz8D0.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
தொழில் முனைவோர்களுக்கு இருக்க வேண்டிய பத்து மைண்ட்செட்!
 
தில்லைராஜன்-பேராசிரியர், ஐஐடி சென்னை

 

சோதனை முயற்சிக்கு பயப்படக் கூடாது!

 தொழிலில் சில நேரங்களில் சில சோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். அதுபோன்ற நேரங்களில் சோதனை முயற்சிகளை செய்யத் தயங்க கூடாது. இதனைச் செய்தால் நஷ்டம் ஏற்படுமா, ஏற்படாதா என்கிற கேள்விகளுக்கு இடம் தராமல் சில சோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டும். தயங்காமல் சோதனை முயற்சிகளில் ஈடுபடுவது தொழில்முனைவோருக்கு முடிவெடுக்கும் திறனையும், தொழில் மீது அவருக்குத் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.

தொடங்குவதில் தாமதம் வேண்டாம்!

ஒரு தொழிலை தொடங்க நினைத்தாலோ அல்லது விரிவாக்க நினைத்தாலோ தொழில்முனைவோரது மனதுக்குச் சரியென்று தோன்றினால் உடனே அதனைச் செய்துவிட வேண்டும். தாமதப்படுத்தி இதனை இன்னமும் கொஞ்ச நாள் கழித்துச் செய்யலாமே அல்லது இன்னும் இதற்கான நேரம் வரவில்லை என்று சொல்லி கொண்டிருக்காமல், சரியென்று நினைத்த செயலை உடனடியாகச் செய்து முடிக்க வேண்டும். அதனைத் துவங்குவதில் தாமதம் காட்டினால், நிச்சயம் அதன் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது.

p65a.jpg

அதிகமான மதிப்பீடு தேவையில்லை!

வங்கியில் தொழில் கடன் பெறுவதற்காக தனது நிறுவனத்தின் மதிப்பை அதிகமாகக் கூறுவதும், தன் நிறுவனத்தின் மதிப்பீட்டை மிகைப்படுத்திக் கூறுவதும் தேவையில்லை. ஏனெனில், உங்கள் அதிக மதிப்பீட்டுக்கு கடன் கிடைத்தால், உங்களால் அதனைச் சரியான முறையில் திருப்பித் தரமுடியுமா என்பது கேள்விக்குறியாகிவிடும். தன் தொழில் பற்றி உள்ளதை உள்ளபடி சொல்லும் தொழில்முனைவோரே என்றும் நிலைத்து நிற்பார்.

போட்டிகளை அணுகுங்கள்!

தொழிலில் போட்டி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. உங்களுக்குப் போட்டியாக ஒரு சிறிய அல்லது பெரிய நிறுவனம் வந்தால், அதனைக் கண்டு ஒதுங்காதீர்கள். அவற்றால் உங்கள் தொழிலில் தொய்வு ஏற்படுமோ என்ற பயத்தைப் போக்கி அவற்றை வித்தியாசமான முறையில் அணுகும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங் கள். போட்டி நிறுவனம் வளரும்போது வணிக வாய்ப்புகளும் அதிகரிக்கும். அப்போது அந்த வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்ற நிலையைத் தெரிந்து, அதற்கு ஏற்றவாறு உங்கள் உத்திகளை வகுத்துக்கொள்ளுங்கள், அது உங்களைப் போட்டியில் முன்னிருத்தும்.

ரிஸ்க் எடுங்கள்!

தொழிலில் முடிவெடுக் கும்போது நீங்கள் ஒரு சில முடிவுகளுக்குப் புள்ளி விவரங்களையும், மற்றவர் களது கருத்தையும் கேட்க நேரிடும். அப்போது வெவ்வேறு தகவல்கள் உங்களுக்குப் பதிலாகக் கிடைக்கும். அதில் எதனைத்  தேர்ந்தெடுப்பது என்ற நிலை உருவாகலாம். அதுபோன்ற நேரங்களில் நீங்கள் எடுத்த முடிவை கைவிடக்கூட நினைப்பீர் கள். ஆனால், உங்களுக் குள் ஒரு குழப்பம் இருந்தே வரும். அதுபோன்ற நேரங் களில் உங்களால் சமாளிக்க முடிந்த ரிஸ்க்கை எடுங்கள். அதனைப் பொறுத்து உங்கள் தொழிலை அமையுங்கள். ஏனெனில், அனைத்து நேரங்களிலும் புள்ளிவிவரங்கள் சரியானதாக அமைவதில்லை. அதனால் தொழில்முனை வோர்கள் ரிஸ்க் எடுக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்வது அவசியம்.

ஃபர்ஸ்ட் மூவர் வாய்ப்பைப் பயன்படுத்த தயங்காதீர்!

p65b.jpgஒரு பொருள் அல்லது சேவையை ஃபர்ஸ்ட் மூவர் எனும், முதலில் அறிமுகம் செய்பவராக நீங்கள் இருந்தால், அதனை உடனடியாகத் துவங்க தயங்காதீர்கள். யாராவது ஒருவர் இதனைத் தொடங்கட்டும்.  அதில் அவருக்கு உண்டாகும் அனுபவத்தைப் பார்த்து அதன்பின் நான் தொடங் குகிறேன் என்று நினைக்காதீர்கள். எப்போதும் முதலில் ஒரு விஷயத்தை ஆரம்பிப்பவர்தான் நீண்ட நாட்கள் வாடிக்கையாளர்கள் மனதில் இடம் பெறுவார். நீங்கள் முதலில் அறிமுகப்படுத்தும் பொருளுக்குப் பின்னர் போட்டி நிறுவனங்கள் வந்தாலும் அது உங்கள் பொருளை போன்ற பொருள் என்றே மக்கள் நினைக்கக்கூடும் என்பதால், கூடுதல் பிராண்டிங் கிடைக்கும். அதனால் ஃபர்ஸ்ட் மூவராக இருந்தால் அந்த வாய்ப்பைத் தள்ளிப்போடாதீர்கள்.

உங்களை நம்புங்கள்!

தொழில்முனைவோருக்கு அவசியம் இருக்க வேண்டியது, அவர் அவரை நம்ப வேண்டும். என்னதான் உத்திகள், அதனைச் செயல்படுத்தும் குழு, சிறப்பான தயாரிப்பு, விற்பனை ஆகியவை இருந்தாலும் ஒரு தொழில்முனைவோர் அவரால் இந்தத் தொழிலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற மனநிலையை பெற்றிருத்தல் அவசியம்.

அப்படி இருக்கும்போது அவரது செயல்முறையில் எந்த இடத்தில் தொய்வு ஏற்பட்டாலும் அவர் முடங்கிவிடாமல், அந்தத் தொழிலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அவர்மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கை உதவும்.

ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும்!

உங்கள் தொழிலில் ஓர் இலக்கை நிர்ணயித்துச் செயல்படுகிறீர்கள் என்றால், குறுகிய கால மதிப்பீட்டில் அதன் ரிசல்ட் குறைவாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அடைய நினைத்தது நீண்ட நாள் இலக்கு.

அதனை அடைய இந்தக் குறுகிய கால இலக்கில் ஏற்பட்ட சரிவை மீதமுள்ள நாட்களில் எப்படி சரி செய்வது என்பதை யோசிக்க வேண்டும். இந்த மாதம் நாம் இலக்கை அடையவில்லையே என்று சோர்ந்துவிடக் கூடாது. குறுகிய காலச் செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து அடுத்த இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும்.

தொழிலில் ஈடுபாடு அவசியம்!

உங்கள் தொழிலை வேலையாகப் பார்க்கும் மனநிலையில் நீங்கள் இருந்தால், அந்தத் தொழில் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் லாபத்தைத் தருவதாக இருக்காது. நீங்கள் துவங்கும் அல்லது நீங்கள் அறிமுகம் செய்யும் தொழில் உங்களின் கனவுத் தொழிலாக இருந்தால், அது எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தைத் தரும். உங்கள் ஈடுபாடு அதுதான் எனில், அதில் நீங்கள் சாதாரணமாகச் செயல்படுவதைவிட இரண்டு மடங்கு அதிகமாக செயல்படுவீர்கள். அந்த மனநிலை உங்கள் தொழிலையும், அதனால் உங்களுக்கு அதிக லாபத்தையும் தருவதாக இருக்கும்.

p65c.jpg

எமோஷனலாக இருக்காதீர்கள்!

நீங்கள் செய்யும் தொழிலில் சில விஷயங்களில் எமோஷனாலாக இருப்பதைத் தவிருங்கள். ஒருவேளை நீங்கள் செய்யும் தொழிலில் ஒரு புதிய தொழில்நுட்ப மாறுதல் வந்திருக்கலாம். ஆனால், அதனைத் தவிர்த்து எனக்கு இதுதான் சரியாகத் தோன்றுகிறது. மேலும், இதனை நான் 20 வருடங் களாகப் பயன்படுத்தி வருகிறேன். இந்த முறையி லிருந்து மாறமாட்டேன் என்று இருக்காதீர்கள். அதனால் உங்களைவிட மற்றவர்கள் முன்னேற வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.  அதேபோல், எனக்கு வயதாகிவிட்டது, இளம் போட்டியாளர்களை எப்படிச் சமாளிப்பது என்றோ அல்லது நான் இளம் நபர் இதில் அனுபவம் உள்ளவரை எப்படி எதிர்கொள்வது என்ற எமோஷனலான விஷயங்களை உங்கள் தொழிலில் அனுமதிக்காதீர்கள்.''

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=103655&sid=3122&mid=6&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

  • தொடங்கியவர்

இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

 

ரு புகைப்படம் நாம் விருப்பட்டது போல எடுக்க எவ்வளவு தூரம் முயற்சி செய்வோம்...?  ஒரு பத்து முறை... அதிகபட்சம் ஒரு ஐம்பது முறை. ஆனால் ஆலன் மெக்ஃபேட்யென் என்பவரோ, ஆறு முழு ஆண்டுகளில் 4200 மணி நேரங்கள் செலவழித்து, 7,20,000 படங்கள் எடுத்ததன் விளைவாக,  அவர் எதிர்பார்த்த படம் கிடைத்திருக்கிறது.

kingfisher_vc2.jpg

மீன்கொத்தி பறவை ஒன்று மேலிருந்து கீழாக பறந்து வந்து,  தண்ணீரின் மேல் பரப்பில் தன் அலகை வைக்கும் நொடியில் ஆலன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். அத்தனை ஆண்டுகளில் அவ்வளவு படங்களிலும் அவர் எதிர்பார்த்த அந்த ஷாட் கிடைக்கவில்லை. பிறகுதான் அப்படி ஒரு அருமையான படம் கிடைத்திருக்கிறது!

“நான் எதிர்பார்த்த ஷாட் கிடைத்திருக்கிறது. இந்த ஒரு படத்திற்காக நான் எவ்வளவு படங்கள் இதற்கு முன் எடுத்திருக்கிறேன் என்று பார்க்கும் போது எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்று உணர்கிறேன். நான் ரொம்ப லக்கி” என்கிறார் ஆலன்.

kingfisher_vc1.jpg

தன் தாத்தாவை ரோல்மாடலாக கொண்டிருக்கும் ஆலன், சிறுவயதில் அவர் தன்னை மீன்கொத்திகளை பார்க்க அழைத்து சென்றதையும் நினைவுகூர்கிறார். புகைப்படக்கலைஞரான பிறகு,  அதுவே மீன்கொத்திகளை புகைப்படம் எடுக்க அவருக்கு ஊக்கம் அளித்துக்கொண்டிருப்பதாகவும் ஆலன் சொல்கிறார்.

http://www.vikatan.com/news/world/55777-photographerspent-six-years-one-shot.art

  • தொடங்கியவர்

12311204_1848669142026154_46341280843173

100 ஆண்டுகள் கடந்த தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி

இந்த மாதத்தோடு, ஐன்ஸ்டின் தன் தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டியின் இறுதி வடிவத்தை பெர்லின் நகரில் உள்ள ப்ரஷ்யன் அகாடமி ஆஃப் சைன்ஸில் சமர்ப்பித்து 100 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு பொருளின் விசை, வேகம் என எந்த ஒரு தன்மையாக இருந்தாலும் அது மற்றொரு தன்மையோடு தொடர்புடையதாக இருக்கும் என்பது தான் உலகை மாற்றிய இந்த தியரியின் அடிப்படை

  • தொடங்கியவர்
உணவாக வழங்கப்பட்ட உயிருள்ள ஆட்டை தனது நண்பனாக்கிக் கொண்ட புலி
 

ரஷ்­யாவில் புலி­யொன்­றுக்கு உண­வாக அனுப்­பப்­பட்ட உயி­ருள்ள ஆடொன்றை அப்­புலி தனது நண்­ப­னாக்கிக்  கொண்­டுள்­ளது.

 

1351311.jpg

 

ரஷ்­யாவின் சைபீ­ரிய பிராந்­தி­யத்தில் ஜப்­பா­னிய கடல் மற்றும் வட­கொ­ரி­யா­வு­ட­னான எல்லைப் பகு­தி­யி­லுள்ள மிரு­கக்­காட்சி சாலை­யொன்றில் இப்­புலி உள்­ளது. 

 

அமுர் என அழைக்­கப்­படும் இப்­பு­லிக்கு உண­வாக உயி­ருள்ள ஆடு ஒன்றை ஊழி­யர்கள் அனுப்­பினர். இந்த ஆட்டை இப்­புலி வழக்கம் போல வேட்­டை­யாடி உட்­கொள்ளும் என ஊழி­யர்கள் கரு­தினர். 

 

1351312.jpg

 

ஆனால், அந்த ஆட்டை கொல்­வ­தற்குப் பதி­லாக அத­னுடன் நட்­பாக பழக ஆரம்­பித்­தது புலி.

 

“ஆடு­க­ளையும் முயல்­க­ளையும் எப்­படி வேட்­டை­யா­டு­வது என்­பதை இப்­புலி நன்­றாக அறிந்­துள்­ளது.

 

1351313.jpg

 

ஆனால்,  இந்த ஆட்டை வேட்­டை­யா­டு­வ­தற்கு இப்­புலி மறுக்­கி­றது. தைமூர் என பெய­ரி­டப்­பட்ட இந்த ஆடும் புலியும் நண்­பர்­க­ளாக விளங்­கு­கின்­றமை எமக்கு பெரும் வியப்­ப­ளிக்­கி­றது” என இம்­மி­ரு­கக்­காட்சி சாலையின் ஊழியர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

 

ஆட்டின் அருகில் ஊழி­யர்கள் யாரும் சென்றால், எச்­ச­ரிக்கும் விதத்தில் புலி உறு­மு­கி­றது. இதற்­குமுன் ஊழி­யர்­க­ளிடம் இப்­புலி இவ்­வ­ளவு ஆக்­ரோ­ஷ­மாக நடந்­து­கொண்­ட­தில்லை” எனவும் அவர் கூறி­யுள்ளார். 

 

இப்­பு­லியும் ஆடும் நட்­புடன் பழ­கு­கின்­ற­போ­திலும், ஆட்டின் பாது­காப்பு கருதி அதை புலி­யி­ட­மி­ருந்து பிரிக்க வேண்டும் என மிரு­கக்­காட்சி சாலை அதி­கா­ரி­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். 

 

ஆனால், ஆட்டை பாதுகாக்கும் வகையில் புலி செயற்படுவதால் இவ்விரு மிருகங்களையும் பிரிப்பது கடினமானது என மேற்படி ஊழியர் தெரிவித்துள்ளார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=13513#sthash.Anwc8gE8.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தண்ணீர் ஊற்றாமல் வளர்ந்த ரோஜா செடி!

 

லவகை மரபணு ரீதியான தாவரங்களை  விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள நிலையில்,  தற்போது ஸ்வீடன் நாட்டு லின்கோபிங் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள்,  ஆச்சரியத்தக்க  வகையில் புதிய மின்னணு முறையில் ரோஜா செடியை உருவாக்கியுள்ளனர்.

செடியின் வாஸ்குலார் தொகுப்பில் மின்னணு சுற்று ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இந்த சுற்று,  அச்செடிக்கு தேவையான தண்ணீர் மற்றும் இதர தாவர வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை விநியோகம் செய்கின்ற வகையில், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வயர்கள், சுற்றுகள் மற்றும் கண்காணிப்பு திரையை இதனுடன் இணைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.

தாவரங்கள் சிக்கலான இயற்கை வடிவமைப்பு கொண்ட உயிர்கள். பல அயனிக் சிக்னல்களை மற்றும் ஹார்மோன்களை தன்னகத்தே கடத்துகிறது. ஆய்வாளர்களால் பிரத்யேக முறையில் தயாரிக்கப்பட்ட மின்னணு சிக்னல்கள்,  தாவரங்களின் வேதியியல் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.
ஒளிச்சேர்க்கைக்கென பிரத்யேக எரிபொருள் மின்கலம், சென்சார்கள், வளர்ச்சி ரெகுலேட்டர்கள் போன்ற சாதனங்கள் தாவரங்களின் வினைகளை கட்டுப்படுத்தவும், இடைமுகப்படுத்தவும், உள்ளே நடக்கும் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

rose_vc1.jpg

இதற்காக கடத்தக்கூடிய சிறப்பு வகை பாலிமர்களான PEDOT-S ரோஜாவின் ஸ்டெம் செல்களில் உருவாக்கியுள்ளனர். தண்ணீர் மற்றும் சத்துக்களை கடத்தக்கூடிய வகையில் 10 செ.மீ ஆன வயர்கள் ஸ்டெம் செல்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வயர்கள் எலக்ட்ரோலைட்டுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரோ கெமிக்கல் டிரான்ஸிஸ்டரை டாக்டர். எலினி ஸ்ராவிந்தோ என்பவர் உருவாக்கியுள்ளார் இச்சாதனம் அயானிக் சிக்னலை மின்னணு சிக்னலாக மாற்றுகிறது. PEDOT எனும் வேறுபட்ட பாலிமர் இலையில், vaccum infiltration முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது பல 'பிக்செல்கள்' எலக்ட்ரோ கெமிக்கல் செல்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை அளிக்கக் கூடிய மின்னழுத்தம்,  இலையில் உள்ள அயனிகளுடன் தொடர்பு கொள்ள செய்கிறது. இதுவரை மின்னணு தொடர்பாக யாரும் செய்யாத புரட்சியை, தங்களது ஆராய்ச்சிக் குழு செய்துள்ளதாக  டாக்டர்.எலியட் கோமட்ஸ் கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/information-technology/55485.art

  • தொடங்கியவர்
 
 

வர­லாற்றில் இன்று

டிசம்பர் - 01

 

614varalaru1.jpg1420 : இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னனினால் பாரிஸ் நகரம் முற்றுகையிடப்பட்டது.

 

1640 : போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. 

 

1768 : அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று நோர்வேக்கு அருகில் மூழ்கியது.

 

1822 : முதலாம் பீற்றர் பிரேஸிலின் பேரரசரானார்.

 

1875 : வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார்.

 

1918 : ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.

 

1918 : சேர்பிய, குரோஷிய, ஸ்லோவேனிய இராச்சியம் (பின்னர் யூகோஸ்லாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.

 

1919: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக பெண்ணொருவர் (அஸ்டர்) நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆசனத்தில் அமர்ந்தார். 


1924 : எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

 

1934 : சோவியத் ஒன்றியத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

1958 : பிரான்ஸிடமிருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது.

 

1958 : அமெரிக்காவின் சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.

 

1959 : அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

 

1960 : கொங்கோவில் பதவி கவிழ்க்கப்பட்ட பிரதமர் பட்ரிஸ் லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுக்கு விசுவாசமான படையினரால்  கைது செய்யப்பட்டார்.

 

1961 : இந்தோனேஷியாவின் மேற்கு நியூகினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.

 

1963 நாகாலாந்து இந்தியாவின் 16 ஆவது மாநிலமானது.

 

1965 : இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.

 

1973 : அவுஸ்திரேலியாவிடம் இருந்து பப்புவா நியூ கினி   சுயாட்சி பெற்றது.

 

1981 : யூகோஸ்லாவியாவின் விமானம் ஒன்று மத்தியதரைக் கடலிலுள்ள கோர்சிக்கா தீவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ்செய்த 180 பேரும் கொல்லப்பட்டனர்.

 

1981 : கோர்சிக்கா தீவில் விமான விபத்தினால் 180 பேர் பலி

 

1982 : முதலாவது செயற்கை இதயம் அமெரிக்காவின்  யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து.

 

1989 :  கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு ஜேர்மனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.

 

1989 : பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி  கொரசோன் அக்கியுனோவை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

 

1991 :  சோவியத் ஒன்றியத்தில் இருந்து யுக்ரைன் முற்றாக வெளியேறுவதற்கு ஆதரவாக  யுக்ரைன் மக்கள் வாக்களித்தனர்.

 

2006 : இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக் ஷ மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.

 

2013: சந்திரனின் தரையில் பயணிப்பதற்கான சீனாவின் முதலாவது வாகனமான யுட்டுவை  சந்திரனை நோக்கி சீனா ஏவியது.
 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=614#sthash.XEHV7Fs0.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12241773_948850735163621_689069991290095

இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த முன்னாள் அணித்தலைவர்களில் ஒருவரும், 1996ஆம் ஆண்டு இலங்கை உலகக்கிண்ணம் வென்ற போது தலைமை தாங்கியவருமான அர்ஜுன ரணதுங்க இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

வாழ்த்துக்கள் அர்ஜுன.

இலங்கை டெஸ்ட் அந்தஸ்து பெற்று விளையாடிய முதல் போட்டியில் பள்ளி மாணவனாக விளையாடி அரைச் சதம்
பெற்றிருந்தார் அர்ஜுன.

 

  • தொடங்கியவர்

 

 

12308154_943003022456991_644623213194050

  • தொடங்கியவர்

12240039_527997044025689_813395555007236

 

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.

பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.