Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

அம்மாவிற்கு திருமணம் செய்துவைத்த அழகு மகள்கள்!...கேரளாவில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்

loversdaylefttt.jpg90 களில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற இந்தித் திரைப்படத்தில் தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடும் தனது தந்தைக்கு அவருடைய பழைய காதலியை தேடிச் சென்று தந்தைக்கு திருமணம் செய்து வைப்பார் 8 வயது மகள். சினிமாவில் பார்த்து ரசித்துப் பார்த்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், கேரளாவில் நிஜத்திலும் அரங்கேறியிருக்கிறது.

கேரளா மாநிலம் கொல்லத்தில் வசிக்கும் அனிதா செம்புவில்யால், தனது இளம்வயதில், ஜி.விக்ரம் என்ற தனது பத்தாம் வகுப்பு ஆசிரியர் மீது காதல்வயப்பட்டார். கம்மாக்கரையிலும் கடல்மணல்வெளியிலும் தங்கள் காதலை நாள்தோறும் வளர்த்தனர். ஆனால் தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்தபோது, அப்படி ஒரு எதிர்ப்பை சந்திப்போம் என இருவரும் நினைத்துப்பார்க்கவில்லை. அனிதாவின் காதலுக்கு அவரது பெற்றோரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. துணிந்து ஒருநாள் அனிதாவை பெண் கேட்டு வந்த விக்ரமை அவமானப்படுத்தியதோடு நில்லாமல் தன் அதிகாரத்தைக்காட்டி அந்த ஊரைவிட்டே வெளியேறச் செய்தார் அனிதாவின் தந்தை. நொறுங்கிப்போனார் அனிதா.

அனிதாவின் தந்தை அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அனிதாவின் படிப்பை பாதியில் நிறுத்தி அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். கொஞ்சகாலம்தான் அந்த வாழ்க்கை இனித்தது. அனிதாவின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஒருநாள் எதிர்பாராதவிதமாக இறந்தார். அதன்பின் தனது 2 குழந்தைகளுடன் தன் வாழ்க்கையை மீண்டும் துவக்கினார் அனிதா. அனிதாவின் 2 மகள்களும் வளர்ந்து கல்லுாரிக்கு செல்லும் வயதை எட்டினர். கணவரின் மறைவுக்கு பிறகு பல சிரமங்களுக்கு இடையே தன் 2 மகள்களையும் வளர்த்து படிக்கவைத்து திருமணம் செய்துவைத்தார் அனிதா. 

இந்த சமயத்தில்தான் அந்த எதிர்பாராத சம்பவம் அனிதாவின் வாழ்வில் நிகழ்ந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் பணிக்காக சென்ற இடத்தில் தனது பழைய காதலன் ஜி.விக்ரமை சந்திக்க நேர்ந்தது. அனிதாவின் பிரிவிற்குப்பின் அவரது நினைவாக விக்ரம் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்துவருவது தெரிந்து உருகிப்போனார் அனிதா. ஊர் திரும்பியபின் தன் வளர்ந்த மகள்களிடம் ஒருநாள் இதை சாதாரணமாக சொல்லி அழுதார்.

kerala6002.jpg

அனிதா இதை சொல்லிவிட்டு வேறு வேலையில் மூழ்கிப்போனார். ஆனால் அம்மாவின் சோகக் கதையைக் கேட்ட மகள்களால் துாங்க முடியவில்லை. அவர்களுக்கு அது கண்ணீரை வரவழைத்தது. தீர்மானமாக ஒரு முடிவெடுத்தனர் சகோதரிகள்.

விக்ரமை நேரில் சந்தித்து தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். அவரது குடும்பத்தினரிடம் பேசி அனுமதி பெற்று அதை தன் தயாரிடமும் தெரிவித்தனர். முதலில் இதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இறுதியாக தன் இரண்டு மகள்களின்  ஆசையின்படி , 32 வருடங்கள் கழித்து, அனிதா தன் தனது காதலர் ஜி.விக்ரமை கடந்த வாரம் வியாழனன்று கரம்பிடித்தார்.

தனது தாயாரின் இளம்வயது நிறைவேறாத விருப்பத்தை அவரது இறுதிக்காலத்தில் நிறைவேற்றிவைத்த மகள்களின் செயல் கேரளாவில் ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
'பணி நிமித்தமாக சென்ற இடத்தில் தனது காதலரை சந்தித்த என் அம்மா, தனது வெற்றிபெறாத காதலைப்பற்றி துயரத்துடன் பகிர்ந்துகொண்டார். அம்மாவின் நினைவாக விக்ரம் திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்வது ஆச்சர்யமளித்தது. எனக்கு கண்ணீரை வரவழைத்தது.

kerala6001.jpg

 

இதுபற்றி என் அக்கா மற்றும் குடும்பத்தினரிடம் பேசி அவர்களை சேர்த்து வைக்க முடிவு செய்தேன்.  நானே இதற்கான வேலையில் இறங்கினேன். திருமணத்துக்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர். எனது அம்மாவை நினைத்து வாழ்ந்து வந்த ஜி.விக்ரமுக்கும் என் அம்மாவுக்கும் கடந்த 21ந்தேதி திருமணம் செய்து வைத்தோம்.” என்று தனது முகநூலில் தனது தாயாரின் திருமணம் குறித்து ஆதிரா குறிப்பிட்டிருக்கிறார்.

இதைவிட சுவாரஸ்யம் ஒன்றும் இந்த திருமணத்தில் உண்டு. அதையும் ஆதிரா தனது முகநுால் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். “நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமணத்தில் முழு மன நிறைவோடு ஆசியோடும் தாலி எடுத்து கொடுத்தவர் யார் தெரியுமா?... இதே ஜோடியை 32 வருடங்களுக்கு முன்பு பிரித்து வைத்த என் தாத்தா தான்.”

பெற்றோர்கள் பிள்ளைகளின் காதலை எதிர்க்கும் இந்தக் காலத்தில், பிள்ளைகளே பெற்றோரின் காதலை தேடிச் சேர்த்து வைத்திருப்பது, சபாஷ் சொல்லத்தான் வைக்கிறது

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
அமெரிக்காவில் ரியோ குதூகலம்
 

பிரேஸிலின் ரியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அமெரிக்க வீர வீராங்கனைகள் குழுவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வைபவம் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

 

146797211-01-02.jpg

 

146797462-01-02.jpg

 

இந்த அறிவிப்புக்கு முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளை பிரதிபலிக்கும் விளையாட்டுக்களில் பார்வையாளர்கள் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

 

146797431-01-02.jpg

 

146797446-01-02.jpg

 

சம்பா நடனக் கலைஞர்களின் நடனங்களும் இந் நிகழ்வில் இடம்பெற்றன.

 

146797436-01-02.jpg

 

146797459-01-02.jpg

 

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவின் சார்பில் 292 பெண்கள் உட்பட 550 பேர் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இவங்களைத் தெரியுமா?

 

p128a.jpg

டெஸ்ட் அணியில் ஆரம்பித்து, கிளப் அணிகள் வரை நமது நாட்டில் உள்ள கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களை நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், நம்மில் எத்தனைப் பேருக்கு நமது நாட்டின் கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட அணிகளின் கேப்டன்களைத் தெரியும்? தெரிஞ்சுக்குவோமா...

அம்ரித்பால் சிங்

இந்திய ஆண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டன். அம்ரிஸ்டரில் பிறந்த ஏழடி ஈஃபிள் டவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்து நெடுநெடுவென வளர்ந்து, அணியின் கேப்டனாக உயர்ந்திருக்கும் இவரை வாழ்த்தலாமே ஃப்ரெண்ட்ச்.

பி.ஆர்.ஸ்ரீஜேஷ்

p128b.jpg

‘பரட்டு ரவீந்திரன் ஸ்ரீஜேஷ்’ சுருக்கமாக பி.ஆர்.ஸ்ரீஜேஷ். இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன். நம் அணியின் கோல் கீப்பரும்கூட. மலையாள மண்ணைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஸ்ரீஜேஷ், தனது சிறுவயதில் ஓட்டம், நீளம் தாண்டுதல், வாலிபால் என பெரிய ரவுண்டே அடித்திருக்கிறார். 30 வயதான ஸ்ரீஜேஷ் ஹாக்கி விளையாடுவதோடு ஒரு பொதுத்துறை வங்கியில் பணியாற்றியும் வருகிறார். ஒலிம்பிக்கில் ஜெயிச்சு தங்கப்பதக்கத்தோடு வாங்க ஸ்ரீஜேஷ்.

சுனில் சேத்ரி

p128c.jpg

இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் கேப்டன். இவரது அப்பாவும் கால்பந்து வீரர், அம்மாவும் கால்பந்து வீராங்கனை. எனவே, சிறுவயதில் இருந்து பந்தும் காலுமாகவே திரிந்திருக்கிறார். இதுவரை 90 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 90 கோல்கள் அடித்திருக்கும் சுனில்தான் இந்தியாவின் டாப் கோல் ஸ்கோரர்.

அனூப் குமார்:

p128d.jpg

கபடி விளையாட்டில் சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய ஆண்கள் கபடி அணியின் கேப்டன். ப்ரோ கபடி லீக்கில் ‘யு மும்பா’ அணியையும் தலைமை தாங்கி வருகிறார். இவர் கோட்டைத் தாண்டி ரைட் வந்தாலே எதிரணிக்கு அள்ளுவிடும். ஏன்னா, இவர் சாதாரண ரைடர் அல்ல, ‘கோஸ்ட் ரைடர்’. நங்கூரம் மாதிரி ’நச்’னு இருந்துச்சாண்ணே...

குரீந்தர் சிங்

p128e.jpg

இந்திய ஆண்கள் கைப்பந்து (வாலிபால்) அணியின் கேப்டன். ஆறரை அடி உயரம் வளர்ந்த பஞ்சாப் சிங்கம். 2004-ம் ஆண்டு முதல் நமது நாட்டுக்காக விளையாடிவரும் இவருக்குக் காவல்துறையில் பதவி வழங்கி பஞ்சாப் அரசு இவரை கௌரவப்படுத்தியுள்ளது.

முகமது அகூப்

p128f.jpg

இந்திய ஆண்கள் த்ரோபால் அணியின் கேப்டன். 27 வயதான இவர் பல போட்டிகளில் இந்திய அணிக்காகவும், தனது மாநில அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். இந்திய அணிக்குத் தலைமையேற்று தனது மாநிலத்திற்குப் பெருமை தேடித் தந்த இவருக்கு சென்ற ஆண்டு கர்நாடக அர்சு கர்நாடக கிரீட ரத்னா விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது.

யாதும் விளையாட்டே, யாவரும் நட்சத்திரங்களே...

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகின் பழைய சட்டை!

 

 
dress_2776573f.jpg
 

எகிப்தில் பீட்ரி என்ற பெயரில் தொல்லியல் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கே கந்தலான V கழுத்து லினன் சட்டை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டைதான் உலகின் மிகப் பழமையான சட்டையாம்!

1913-ம் ஆண்டு டர்கன் என்ற இடத்திலிருந்த கல்லறைகளைத் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்தார்கள். அப்போது இந்தச் சட்டை கிடைத்தது. டர்கன் கல்லறைகள் எகிப்தை ஆண்ட முதல் வம்சத்தினரைச் சேர்ந்தவை. கல்லறைக்குள் நுழைந்தபோது ஏராளமான கலைப் பொருட்கள் இருந்தன. இந்த லினன் துணி மண்ணோடு மண்ணாகத் தரையில் கிடந்தது. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். எதிர்கால ஆய்வுக்காக ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்தார்கள். பிறகு மறந்தும் போய்விட்டார்கள்.

65 ஆண்டுகளுக்குப் பிறகு ஷெய்லா லாண்டி என்ற துணி ஆராய்ச்சியாளர், இந்தச் சட்டையில் உள்ள களிமண்ணை நீக்கியபோது ஆச்சரியத்தில் மூழ்கினார். V வடிவ கழுத்து, மடிப்புகள் வைத்து தைத்த விதத்தைப் பார்த்து அவரது கண்கள் விரிந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கல்லறையிலிருந்து எடுத்த சட்டையாக அது தெரியவில்லை. கந்தலாக இருந்தாலும் இப்போது பயன்படுத்தும் சட்டை போலவே இருந்தது! சட்டை 3 பாகங்களாகக் கத்தியால் வெட்டப்பட்டு, கையால் தைக்கப்பட்டிருந்தது.

வெளிர் சாம்பல் வண்ண லினன் துணியாக இருந்தது. சட்டை முழுவதுமாக இல்லாததால், இது ஆண்கள் அணியும் சட்டையா, பெண்கள் அணியும் சட்டையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், சட்டையின் வடிவமைப்பைப் பார்க்கும்போது இன்றைய இளம் பெண்ணுக்குப் பொருந்துவதாக உள்ளது!

40 ஆண்டுகளுக்கு முன் துணியின் வயதைக் கண்டுபிடிக்கக்கூடிய ரேடியோகார்பன் இல்லை. டர்கன் கல்லறையின் வயது கி.மு.3100. அதனால் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சட்டையாக இருக்கலாம் என்று கணித்தனர்.

பீட்ரி அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் ஆலிஸ் ஸ்டீவன்சன், “இதுவரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான துணிகள்தான் கிடைத்திருக்கின்றன. அதுவும் தாவர நார்கள், விலங்குகளின் தோல்களால் செய்யப்பட்ட துணிகள்தான். உடலைச் சுற்றிக்கொள்ளும் துணியாக மட்டுமே அவை இருந்தன. ஆனால் இந்தச் சட்டை லினன் துணியில் அழகாக வெட்டப்பட்டு, கைகளால் தைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலத் துணி தைக்கப்பட்டது போலவே இருக்கிறது!’’ என்று சொன்னார்.

2015-ம் ஆண்டு நவீன ரேடியோ கார்பன் பரிசோதனைக்கு இந்தத் துணியிலிருந்து சிறிய பகுதி அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி துணியின் வயது 95 சதவீதம் துல்லியமாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. 5,100 முதல் 5,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்கிறார்கள். அந்தக் கால எகிப்தியர்கள் நீண்ட அங்கி அணிந்திருந்ததால் இது சட்டையாக இல்லாமல், நீண்ட அங்கியின் மேல் பகுதியாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.

உலகின் மிகப் பழமையான கம்பளியால் செய்த கால் சட்டை, இன்றைய சீனாவின் மேற்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நாடோடி தலைவர் ஒருவரின் கல்லறையில் இருந்து இந்தக் கால் சட்டை எடுக்கப்பட்டிருக்கிறது. பேண்ட் கம்பளியில் டிசைன்கள் போடப்பட்டு மிக அழகாக இருக்கிறது!

இவற்றை எல்லாம் பார்க்கும்போது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இன்றைய நாகரிகத்துடன் போட்டி போடும் அளவுக்கு இருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறதல்லவா? எந்த வித இயந்திரங்களும் இல்லாமல், துணிகளை நெய்து, வெட்டி, கைகளால் அழகான ஆடைகளை வடிவமைத்திருக்கிறார்கள் என்றால் முன்னோர்களின் திறமைகளை என்னவென்று சொல்வது?!

tamil.thehindu

  • தொடங்கியவர்

சென்னை ஏர்போர்ட்டில் ரஜினி, பிக்காசூ பிடிக்க ட்ரோன்! #viralvideos #BestOfToday

சென்னை ஏர்போர்ட்டில் ரஜினி...

 


கல்யாண கலாட்டா..! #விபுசி

 

 

ஒபாமா தம்பதியுடன் நடனமாடும் ஜார்ஜ் புஷ்!

 

 

இன்னும் இந்த விளையாட்டால என்னவெல்லாம் நடக்கப்போகுதோ..#pokedrone

 

 

 

ரியல் டார்ஜான்... மின்னல் வேகத்தில் மரம் ஏறும் மனிதன்!

 

அமெரிக்காவில் நிஜ பிக்காச்சூ... போக்கிமான் அட்ராசிட்டி!

 

vikatan

  • தொடங்கியவர்

ஆல்ஃபிரட் மார்ஷல்

britain_2946907f.jpg
 

பிரிட்டன் பொருளாதார நிபுணர்

பிரிட்டனைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும் மரபுசார் பொருளாதார சிந்தனையை உருவாக்கியவருமான ஆல்ஃபிரட் மார்ஷல் (Alfred Marshall) பிறந்த தினம் இன்று (ஜூலை 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் பிறந்தார் (1842). தந்தை வங்கி ஊழியர். ஆரம்பக் கல்வி முடித்ததும், கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரி யில் தனக்குப் பிடித்த கணிதம் மற்றும் அறிவியல் பயின்றார்.

l கல்லூரியில் படித்தபோது உளவியல் ரீதியாக சில பிரச்சினைகளை எதிர்கொண்டதால் தத்துவப் படிப்புக்கு மாறினார். மாறாநிலை வாதம் குறித்து ஆர்வம் கொண்டார். இதுதான், பொருளாதாரம் குறித்து பயில்வதற்கான தூண்டுதலாக அமைந்தது. தாராளவாதம், சோசலிசம், தொழிற்சங்கங்கள், பெண் கல்வி, வறுமை மற்றும் முன்னேற்றம் ஆகிய விஷயங்களில் ஆர்வம் காட்டினார்.

l 1868-ல் கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் தார்மீக அறிவியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1875-ல் அமெரிக்காவில் நடைபெற்ற வர்த்தகப் பாதுகாப்பு ஆய்வில் கலந்து கொண்டார். அமெரிக்கா சென்று கட்டணக் கட்டுப்பாடுகளால் எழும் தாக்கத்தை அளவிடும் ஆய்வுகளில் ஈடுபட்டார்

l இங்கிலாந்து திரும்பியவுடன் கேம்பிரிட்ஜில் அரசியல் பொருளியல் பாடத்தை மேம்படுத்துவதில் தீவிர முனைப்புடன் ஈடுபட்டார். 1885-ல் அரசியல் பொருளியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஒரு சில ஆண்டுகளில் நாட்டிலேயே மிகச் சிறந்த பொருளியல் நிபுணராக உயர்ந்தார்.

| ஹென்றி சிட்க்விக், பெஞ்சமின் ஜோவெட் உள்ளிட்ட தனது சம காலத்திய சிந்தனையாளர்கள் பலருடன் இணைந்து, ‘கேம்ப்ரிட்ஜ் ஸ்கூல்’ என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். பொருளாதாரம் குறித்த தனது சிந்தனைகளை 1881-ல் ஒரு நூலாக எழுதத் தொடங்கினார். உலகப் புகழ்பெற்ற ‘பிரின்சிபல்ஸ் ஆஃப் எகனாமிக்ஸ்’ என்ற இவரது நூல் 1890-ல் வெளியானது.

l பல்வேறு பொருளியல் நிலைப்பாடுகளில் (வாங்குபவர் - விற்பவர், உற்பத்தியாளர் -நுகர்வோர், சேமிப்பாளர் - முதலீட்டாளர், முதலாளி - தொழிலாளி) மனிதன் மேற்கொள்ளும் பணிகளை ஆராய்வதே பொருளாதாரப் பாடம் என இவர் வரையறுத்தார். பொருளாதாரம் குறித்த இவரது விளக்கம் நலப் (வெல்ஃபேர்) பொருளாதாரம் எனப்பட்டது.

l பல தலைமுறைகளாக இவரது பிரின்சிபல்ஸ் ஆஃப் எகனாமிக்ஸ் நூல் பொருளாதார மாணவர்களுக்கான பாடப் புத்தகமாக உள்ளது. பொருளாதாரம் கற்றுக்கொடுக்கும் முறையில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இந்த நூலில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள் இவரது அசலான சிந்தனையில் தோன்றியவை.

l ‘தி எகனாமிக்ஸ் ஆஃப் இண்டஸ்ட்ரி’, ‘எலிமன்ட்ஸ் ஆஃப் எகனாமிக்ஸ் இண்டஸ்ட்ரி’, ‘இண்டஸ்ட்ரி அண்ட் டிரேட்’, ‘மணி, கிரெடிட் அண்ட் காமர்ஸ்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். 1890-ல் ‘பிரிட்டிஷ் எகனாமிக்ஸ் அசோசியேஷன்’ என்ற அமைப்பை உருவாக்கினார். பிறகு அது ராயல் எகனாமிக்ஸ் சொசைட்டியாக மாறியது.

l விலை நிர்ணயம், தங்கம், வெள்ளி, சர்வதேச வர்த்தகம் ஆகியன தொடர்பான அரசாங்க கொள்கைகளில் இவர் கருத்துக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. பிரிட்டனின் பொருளாதார சிந்தனையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

l டிமான்ட் - சப்ளை வரைபடம், மார்ஜினல் யுடிலிட்டி உள்ளிட்ட பல கருத்துருக்களை மேம்படுத்தினார். புதிய மரபுசார் (நியு கிளாசிக்கல்) பொருளாதார சிந்தனையை உருவாக்கியோரில் முக்கியமானவராகக் கருதப்படும் ஆல்ஃபிரட் மார்ஷல், 1924-ம் ஆண்டு 82-வது வயதில் மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்
1978 : அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார்
 

1549 : ஸ்பெய்னை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்­பானை சென்­ற­டைந்தார்.

 

778Alfred_Duraiappah.jpg1794 : பிரெஞ்சுப் புரட்­சியின் எதி­ரி­க­ளாகக் கரு­தப்­பட்ட 17,000 பேரைத் தூக்­கி­லிட ஆத­ரித்­த­மைக்­காக மாக்­சி­மி­லியன் ரோப்ஸ்­பியர் கைது செய்­யப்­பட்டார்.

 

1862 : அமெ­ரிக்­காவின் சான் பிரான்­சிஸ்­கோவில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்­ஸிக்­கோவில் தீப்­பி­டித்து மூழ்­கி­யதில் 231 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1880 : இரண்­டா­வது ஆங்­கி­ல-­ ஆப்­கா­னியப் போர் மாய்வாண்ட் என்ற இடத்தில் பிரித்­தா­னிய படை­களை மொஹம்மத் அயூப்கான் தலை­மை­யி­லான ஆப்­கா­னியப் படைகள் வென்­றன.

 

1921 : பிரெட்றிக் பாண்டிங் தலை­மையில் டொறொண்டோ பல்­க­லைக்
­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளினால் இன்­சுலின் கண்­ட­றி­யப்­பட்­டது.

 

1929 : போர்க் கைதிகள் நடத்­தப்­பட வேண்­டிய முறை தொடர்­பான ஜெனீவா உடன்­ப­டிக்­கையில் 53 நாடுகள் கையெ­ழுத்­திட்­டன. 

 

1941 :  பிரெஞ்சு இந்­தோ-­சீ­னாவை ஜப்­பா­னி­யர்கள் கைப்­பற்­றினர்.

 

1953 : கொரியப் போர் முடிவு; ஐக்­கிய அமெ­ரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகி­ய­வற்­றுக்­கி­டையில் போர் நிறுத்த உடன்­பாடு ஏற்­பட்­டது. 

 

1955 : அவுஸ்­தி­ரி­யாவில் மே 9, 1945 முதல் நிலை கொண்­டி­ருந்த இரண்டாம் உலகப் போரின் நட்பு நாடு­களின் படைகள் அங்­கி­ருந்து வில­கின.

 

1975 : தமி­ழீழ விடு­த­லைப்­ பு­லி­களின் முத­லா­வது ஆயுதத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. யாழ்ப்­பாணம் மாந­கர மேயர் அல்­பிரட் துரை­யப்பா சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

 

778Welikada_TC.jpg1983 : கொழும்பு வெலிக்­கடை சிறையில் இரண்­டா­வது நாளாக இடம்­பெற்ற தாக்­கு­தல்­களில்  18 தமிழ்க் கைதிகள் கொடூ­ர­மாகக் கொலை செய்­யப்­பட்­டனர். (1983 ஜூலை 25 ஆம் திகதி 35 தமிழ் கைதிகள் படு­கொ­லை­செய்­யப்­பட்­டி­ருந்­தனர்)

 

1990 :  சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்து சுதந்­தி­ர­ம­டை­வ­தாக  பெலாரஸ் பிர­க­டனம் செய்­தது.

 

1990 : ட்ரினிடாட் டொபா­கோவில் யாசின் அபுபக்கர் தலை­மை­யி­லான தீவி­ர­வா­திகள் நடத்­திய ஆட்சிக் கவிழ்ப்பு சதிப்­பு­ரட்­சியில் ஈடு­பட்டு பிர­தமர் ஏ.என்.ஆர். ரொபின்ஸன் மற்றும் அமைச்­சர்­களை பணயக் கைதி­க­ளாக தடுத்­து­வைத்­தனர். ஆறு நாட்­களின் பின்னர் தீவி­ர­வா­திகள் சர­ண­டைந்­தனர்.

 

1997 :  அல்­ஜீ­ரி­யாவில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

 

2002 : யுக்­ரைனின் லுவிவ் நகரில் வான் களி­யாட்ட நிகழ்ச்­சியின் போது போர் விமானம் ஒன்று மக்­களின் மீது வீழ்ந்­ததில் 85 பேர் கொல்­லப்­பட்­டனர். 100 பேர் காய­ம­டைந்­தனர்.

 

2007 : பீனிக்ஸ், அரி­ஸோ­னாவில் இரண்டு ஹெலிகொப்டர்கள் வானில் மோதின.

 

2012 : லண்டன் ஒலிம்பிக் ஆரம்ப விழா நடைபெற்றது.

 

2015 : இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பொலிஸ் நிலையமொன்றை ஆயுதபாணிகள் தாக்கியத்தில் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 14

சுசி திருஞானம்தொடர்

 

ஆபிரகாம் லிங்கன்

p30a.jpg

மெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிக அதிகப் புகழ் பெற்றவர் அவர். கறுப்பர் இன அடிமைகளின் விடுதலையைச் சாதித்துக் காட்டியவர்.

உள்நாட்டுப் போரில் அமெரிக்க மாகாணங்கள் சிதறிவிடாமல் காத்தவர். ‘மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி’ என்று ஜனநாயகத்துக்கு மிகச் சிறந்த விளக்கம் சொன்ன பேராசான். இவை எல்லாம் ஆபிரகாம் லிங்கன் பற்றி அதிகம் பேசப்பட்ட  செய்திகள்.

ஆனால், அவர் பிறப்பு முதல் இறப்பு வரை சந்தித்த அடுக்கடுக்கான தோல்விகள் பற்றி நிறையப் பேருக்குத் தெரியாது. ‘தோல்விகளின் செல்லக் குழந்தை’ என்றே அவரை வரலாறு பதிவு செய்தது. அமெரிக்க ஜனாதிபதி ஆனபின்னரும்கூட காங்கிரஸில் வைத்தே அவமானப் படுத்தப்பட்டார் அவர். “அவமானகரமான தோல்விகளை நான் சந்தித்த போதெல்லாம், அதைப்பற்றி நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அங்கீகாரத்துக்குத் தகுதியானவனாக என்னைத் தயார்படுத்திக்கொண்டே வந்தேன்” என்று, தான் கடந்துவந்த பாதை குறித்து பின்னாட்களில் குறிப்பிட்டார் ஆபிரகாம் லிங்கன்.

அமெரிக்காவில் உள்ள கெண்டுகி மாகாணத்தில் 1809-ம் ஆண்டு பிறந்தார் ஆபிரகாம் லிங்கன். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர், செருப்புத் தைக்கும் தொழிலாளர். தாய் நான்ஸி. ஒரேஒரு அறைகொண்ட பண்ணை வீட்டில் வசித்த விவசாயக் குடும்பம் அது. சட்டப் பிரச்னைகளால் அங்கிருந்து அவரது குடும்பம் விரட்டப்பட்டது. இண்டியானாவில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு வந்தபோது, காட்டைத் திருத்தி ஒரு சிறிய வீட்டை உருவாக்கும் பணியில் தனது தந்தையோடு சேர்ந்து பாடுபட்டார் ஆபிரகாம் லிங்கன்.

p30.jpg

ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்துபோனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். காடுகளுக்கிடையே பல மைல்தூரம் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். பள்ளியில் அவர் முறையாகப் படித்தது ஒரு வருடம் மட்டுமே. ஆனால், ஒரு நல்ல புத்தகத்தைக் கடன் வாங்கிவந்து படிப்பதற்காக மைல் கணக்கில் நடந்து போய்வருவார்.

பள்ளிப் படிப்பை முறையாகக் கற்காததால் அவரது இளமைக்காலம் கடினமானதாக இருந்தது. 6 அடி 4 அங்குல உயரம் கொண்ட லிங்கன், சிறிதுகாலம் விறகு வெட்டும் வேலைக்குப் போனார். பின்னர் தினக் கூலியாக ரயில்வேயில் வேலி அமைக்கும் வேலைக்குப் போனார். அதுபோன்ற உடல் உழைப்பை ஒருபுறம் செய்தபோதும், தனது வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்திக்கொண்டே இருந்தார்.

இல்லினாய்ஸ் மாகாணத்துக்கு அவரது குடும்பம் இடம்பெயர்ந்தபோது, அங்குள்ள பலசரக்குக் கடையில் சிறிதுகாலம் வேலைபார்த்தார். அதன்பின் அஞ்சல்காரராக வேலைபார்த்தார். அதுவும் நிலைக்கவில்லை. கடன் வாங்கி டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றைத் தொடங்கினார். விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. பெரும் நஷ்டத்துடன் கடையை மூடிவிட்டார். ஆனால் அந்தக் கடனை அடைக்கப் பல ஆண்டுகாலம் அவர் போராட வேண்டியிருந்தது. எனினும், இப்படி பல வேலைகளில் பல பேருடன் பழக நேர்ந்ததால் அவருக்கு அரசியல் ஆர்வம் வந்தது.

அடிமைகளாகக் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதைக் கண்ட போதெல்லாம் அவர் மன வேதனை அடைந்தார். அவர்கள் இரும்புக் கம்பிகளால் கட்டப்படுவதையும்  சாட்டையால் அடிக்கப்படுவதையும் கண்டு, அவர் மனம் துடித்தது. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு காணவேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அரசியலில் ஈடுபடுவதன் மூலமே இதுபோன்ற அடிமைத் தனங்களை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்தார்.

1832-ம் ஆண்டில் அமெரிக்காவின் ஆதி மனிதர்களுக்கும், புதிதாகக் குடியேறியவர்களுக்கும் இடையிலான பெரும் கலகம் வெடித்தது. அந்தக் கலகத்தின்போது உள்ளூர் பகுதித் தலைவராக லிங்கன் தேர்வு செய்யப்பட்டார். துடிப்போடு செயல்பட்டு அமைதியை நிலைநாட்டிய லிங்கன் அந்தப் பகுதி மக்களிடம் பிரபலமானார். அடுத்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டார். எனினும், அவரது பேச்சுத் திறனை கவனித்த  விக் கட்சித் தலைவர், அவருக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார். வெற்றிபெற்று பேரவை உறுப்பினரான லிங்கன், இன சமத்துவம், வளர்ச்சித் திட்டங்களின் முக்கியத்துவம் போன்றவற்றைத் தனது பணிகளில் முன்னிறுத்தினார். அரசியல் பணிகளுக்கு அவசியம் என்பதால் சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.

1846-ம் ஆண்டில் முதன் முதலாக லிங்கன் அமெரிக்க காங்கிரஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைகள் விடுதலை, மெக்சிகோவுடன் போர் நிறுத்தம் போன்ற கொள்கைகளை அமெரிக்க காங்கிரஸில் அவர் வலியுறுதிப் பேசியதால், லிங்கன் தேசப்பற்று இல்லாதவர் என்ற விஷமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 1848-ல் லிங்கன் அங்கம் வகித்த விக் கட்சித் தலைவரே அமெரிக்க ஜனாதிபதி ஆனபோதும், லிங்கனது சொந்த மாவட்டத்திலேயே அவருக்கு எதிராகத் தீவிர எதிர் பிரசாரம் நடந்து வந்தது. ஆரிகான் மாகாண கவர்னர் பதவியை அவரது கட்சி சிபாரிசு செய்தபோதும், வேண்டாம் என்று மறுத்துவிட்டு, வழக்கறிஞர் வேலைக்குத் திரும்பிவிட்டார் லிங்கன். அவரது அரசியல் வாழ்க்கையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டதாக எதிரிகள் மகிழ்ந்தனர். அவமானங்களை சகித்துக்கொண்டார் லிங்கன்.

p30v.jpg

அடுத்த 10 ஆண்டுகளில் லிங்கன் வழக்கறிஞர் தொழிலில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார். அதேவேளையில் அமெரிக்க நாடு அரசியல் நெருக்கடிகளில் தத்தளித்துக் கொண்டிருந்தது. தென் மாநிலங்களில் இருந்த பலர், அடிமை முறை என்பது அவரவர் உரிமை என்று பேசிவந்தனர். வட மாநிலங்களில் இருந்த பலர், அடிமை முறை என்பது அநீதி என்று பேசிவந்தனர். இந்தச் சர்ச்சை தீவிரமடைந்தபோது லிங்கன் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டியதாயிற்று. அடிமை முறை என்பது தார்மிக ரீதியிலும், சமூக ரீதியிலும் தவறானது என்று அவர் முழங்கினார். லிங்கனின் புகழ் ஓங்கிவந்த நிலையில், லிங்கன் போட்டியிட சீட் கொடுக்காமல் ஏமாற்றியது விக் கட்சி. நம்பிக்கைத் துரோகத்தால் மீண்டும் தோல்வி.

அப்போது, புதிதாக உதித்த ரிபப்ளிகன் கட்சியில் சேர்ந்துகொண்டார் லிங்கன். 1856-ம் ஆண்டில் ரிபப்ளிகன் மெம்பராகத் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வி கண்டார். எனினும், ரிபப்ளிகன் கட்சியின் முக்கியப் பிரமுகராக அங்கீகாரம் பெற்றார்.
1860-ல் ஆபிரகாம் லிங்கனை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ரிபப்ளிகன் கட்சி தேர்வு செய்தது. லிங்கனை எதிர்த்தவர்கள் தங்கள் பணபலத்தாலும், ஆள் பலத்தாலும் வெற்றியைக் கைப்பற்ற முயன்றனர். இறுதியில், 1861-ம் ஆண்டு ஆபிரகாம் லிங்கனே அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

லிங்கன் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவருடைய காரை அவரே ஓட்டிச் செல்வது வழக்கம். அவரது புள்ளிகள் விழுந்த ஒடுங்கிய முகத்தோற்றத்தையும், கீச்சுக் குரலையும் எதிரிகள் எள்ளி நகையாடினர். அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு செல்வந்தர் ஆபிரகாம் லிங்கனை கேலி செய்து, “திரு.லிங்கன் அவர்களே, எங்கள் குடும்பத்துக்குச் செருப்புத் தைத்துக் கொடுத்தவர் உங்கள் தந்தை என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்” என்று பேசினார். அவரது பேச்சுக்கு ஆதரவாகச் சிலர் கைதட்டிச் சிரித்தனர். லிங்கன் கம்பீரமாக எழுந்து இப்படி பதிலளித்தார்:
“ஐயா, உங்கள் குடும்பத்துக்கு எனது தந்தை செருப்புத் தைத்துக் கொடுத்தது உண்மை. இங்கு அமர்ந்திருக்கும் வேறு சில உறுப்பினர்களின் குடும்பங்களும் அவர் தைத்த செருப்பைப் பயன்படுத்தி இருக்கக் கூடும். ஏனெனில், அவரைப்போல் யாரும் அத்தனை அக்கறையுடன் செருப்புத் தைக்க முடியாது. அதில், ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள். நான் சரிசெய்து தருகிறேன். எனக்கும் அந்தக் கலை தெரியும். ஆனால், நான் அறிந்தவரை என் தந்தை தைத்த செருப்பில் யாரும், எந்தக் குறையும் காண முடியாது. அந்த எளிமையான தொழிலில் அவர் ஒரு மகா கலைஞன். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்”  லிங்கனின் பதிலைக் கேட்டதும் மொத்தச் சபையிலும் நிசப்தம். கேலி செய்தவர்கள் தலைகுனிந்தனர்.

p30c.jpg

பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர் என்றும் அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என்றும் பிரகடனம் செய்தார் ஆபிரகாம் லிங்கன். இதை எதிர்த்து உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்பட்டன. ‘அடிமைகளை
வைத்திருப்பது எங்கள் உரிமை’ என்று அடிமைத்தனத்தால் பயன் பெற்றவர்கள் பிரசாரம் செய்தனர். அமெரிக்காவிலிருந்து தென் மாநிலங்கள்  பிரிந்து சென்றுவிடலாம் என்று தெற்கில் உள்ள சில பழமைவாதிகள் முடிவெடுத்தனர். கலவரத்தையும் தூண்டிவிட்டனர். உள்நாட்டுப் போர்மூண்டது.

கலவரம் இவ்வளவு பெரிதாகும் என்று லிங்கன் முதலில் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. பழமைவாதக் கலவரத்துக்கு எதிராக வெகுண்டு எழுந்தார் லிங்கன். ராணுவத் தளபதிகளை மாற்றி அமைத்தார். ராணுவ நுட்பங்களைத் தானே கற்றறிந்து ராணுவத்தைத் தைரியமாக வழிநடத்தினார். கலவரம் ஒடுக்கப்பட்டது. நாட்டின் ஒற்றுமை காக்கப்பட்டது. கறுப்பர் இன அடிமைகள் அனைவரையும் விடுவித்தார். “பிறப்பால் அனைவரும் சமம். அனைத்து மனிதர்களும் சுதந்திர மனிதர்களே” என்று பிரகடனப்படுத்தினார்.

1864 தேர்தலில் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உள்நாட்டுப்போர் முடிவுற்றிருந்த வேளையில், நாட்டின் மறுநிர்மாணப் பணிகளை வேகமாக அவர் செயல்படுத்த முனைந்த காலகட்டத்தில், வெறிபிடித்த ஒரு மனிதனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவை
வலிமையான, சுதந்திர உணர்வு மிக்க தேசமாக மாற்றியதில் ஆபிரகாம் லிங்கனின் பங்கு அளப்பரியது. லிங்கனின் இன சமத்துவக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும் அமெரிக்க மக்களிடம் எழுச்சியை உண்டாக்கின. அமெரிக்காவை வலிமைமிக்க நாடாக மாற்றுவதற்கான பலமான அடித்தளம் அமைத்தவர் அவரே.

வெற்றிபெற என்னவெல்லாம் வேண்டும் என்று ஓர் இளைஞன் ஆபிரகாம் லிங்கனிடம் கேட்டபோது, அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்: “வேறு எல்லாவற்றையும் விட முக்கியமாக ஒன்று வேண்டும். ‘வெற்றிபெற்றே தீருவேன்’ என்ற வெறி உன்னிடம் இருக்க வேண்டும்”

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்

13781948_1089159107799449_65430867145079

மூன்று தசாப்தங்களாக காற்றுவெளியைத் தன் இனிக்கும் குரலால் ரசிக்க வைக்கும் சின்னக்குயில் சித்ராவின் பிறந்த நாள்

  • தொடங்கியவர்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறக் காத்திருக்கும் உலகின் மிகப்பெரிய நாய் (Photos)

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறக் காத்திருக்கும் உலகின் மிகப்பெரிய நாய் (Photos)

உலகின் மிகப்பெரிய நாயாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கக் காத்திருக்கிறது கிரேட் டேன்.

மூன்று வயதுடைய இந்த கிரேட் டேன் நாய், அதன் பின்னங்கால்களைத் தூக்கினால் 7 அடி உயரத்திற்கு மேலாகவும் 12 கல் எடையுள்ளதாகவும் உள்ளது.

நாளொன்றுக்கு 22 மணித்தியாலங்கள் இந்நாய் உறங்குவதாகவும் பெரியவர்கள் படுத்துறங்கக்கூடிய மெத்தையே இதற்கும் தேவைப்படுவதாகவும் நாயின் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் வசிக்கும் ப்ரையன் மற்றும் ஜூலி வில்லியம்ஸ் ஆகியோரே இந்நாயின் உரிமையாளராவர்.

தமது நாய் குழந்தைகளுடன் நன்றாகப் பழகுவதாகவும் தனது நிழலைப் பார்த்து தானே அச்சமடைவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

36986A6B00000578-3708979-Down_boy_The_pet_could_be_named_as_the_tallest_dog_in_the_world_-a-2_1469557869951

36986BE600000578-3708979-Dog_s_life_He_sleeps_for_22_hours_on_a_huge_mattress_and_roams_a-a-4_1469557869956

36986BFC00000578-3708979-Heck_of_a_hound_Mr_Williams_says_his_pet_may_look_intimidating_b-a-5_1469557869958

369859D800000578-3708979-Massive_appetite_Major_eats_chicken_and_rice_and_enjoys_wanderin-a-3_1469557869954

369859F900000578-3708979-Sit_Major_relaxes_on_a_garden_swing_with_Mr_and_Mrs_Williams_who-a-6_1469557869960

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

ஃபீல்டிங்கிற்கு இன்று பிறந்த நாள் : ஜான்டியை மறக்க முடியுமா?

கிரிக்கெட் அரங்கில் இப்படி ஒரு ஃபீல்டர் இருந்ததுமில்லை... இனியும் வரப் போவதுமில்லை. எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கியதும் இல்லை. இருக்கும் வரை இருந்த இடம் தெரிந்ததும் இல்லை. அப்படி ஒரு கிரிக்கெட் வீரர்  உண்டாவென்றால் சத்தமில்லாமல் ஜான்டியை நோக்கி கை காட்டலாம். ஏபிடிக்கு முன்னர் இவர்தான் கிரிக்கெட் உலகின் 'ஏலியன்'. இன்று அவருக்கு 47 வது பிறந்தநாள். இந்த தருணத்தில் அவரைப் பற்றிய சில அரிய தகவல்கள்.

jonts.jpg

ஜான்டி ரோட்ஸ் தென் ஆப்ரிக்க அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகளிலும் 245 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். எல்லா ஃபார்மட்டிலும் சரசாரி 35 க்கு மேல்.

டெஸ்ட் போட்டியில் 2,532 ரன்களை அடித்துள்ளார்.இதில் 3 சதங்களும் 17 அரை சதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில்  5,935 ரன்கள் சேர்த்துள்ளார். 33 அரை சதங்களும் 2 சதங்களும் ஜான்டியின் கணக்கில் உண்டு.

                                 

1992ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக்கை,  ஜான்டி  ரன்அவுட் செய்தவிதம் கிரிக்கெட் உலகையே பிரமிக்க வைத்தது. ஜான்டியின் ஜிம்னாஸ்டிக்  ரக கேட்ச்சுகளை காண கோடி கண்கள் வேண்டும்.

ஜான்டி விளையாடிய கால  கட்டத்தில் தென் ஆப்ரிக்காவிலேயே விளம்பரம் மூலம் அதிகம் சம்பாதித்த கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான்டி கிரிக்கெட் மட்டுமல்ல ஹாக்கியிலும் அசத்துபவர். 1996ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த தென் ஆப்ரிக்க ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால் காயம் காரணமாக அவரால் ஒலிம்பிக்கில் அவரால் பங்கேற்க முடியாமல் போய் விட்டது.

1999 ம் ஆண்டு விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

jonty.jpg

கடந்த 2003ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஜான்டிக்கு விரல்களில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சர்வதேச  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனாலும் கவுண்டி கிரிக்கெட்டில் தொடர்ந்து  விளையாடினார். அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற பின், ஜான்டி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் அக்கவுண்ட் எக்ஸிகியூடிவ் பணியில் சேர்ந்தார்.

இப்பாதும் தென்ஆப்ரிக்க அணிக்கு ஃபீல்டிங் பயிற்சி அளிப்பதுண்டு. ஐபிஎல்  தொடரில் விளையாடும் மும்பை அணியினருக்கு ஃபீல்டிங் பயிற்சியாளராக இருக்கிறார்.

ruds.jpg

 

ஜான்டி ரோட்ஸின் மனைவி கடந்த ஆண்டு மும்பையில் பெண் குழந்தை பெற்றெடுத்தார். குழந்தை நம் நாட்டில் பிறந்ததால், அந்த குழந்தைக்கு 'இந்தியா ' என ஜான்டி பெயர் சூட்டினார்.

vikatan

  • தொடங்கியவர்

அப்துல் கலாமை அசர வைத்த ஈரான் மாணவர்!

abdulkalamleft.jpgனது இறப்புக்கு பின், தான் வாழ்ந்த இல்லத்தை செவித்திறன் குறைந்த குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பள்ளியாக மாற்ற வேண்டும் என உயில் எழுதி, அதன்படியே செயல்பட வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.  சென்னை, ராமாபுரம் தோட்ட இல்லத்தில் இயங்கி வரும் இப்பள்ளியின் 23 வது ஆண்டு விழா, கடந்த 2012 ம் வருடம், ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மறைந்த  முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்,  அந்த குழந்தைகள் மத்தியில் ஆற்றிய நீண்ட உரை, மகத்தானதொரு உரையாக அமைந்தது.

தனது ஏழரை வயது முதல் சொல்லமுடியாத துயரங்களை சந்தித்து, ஏழ்மையில் உழன்று, தன் உழைப்பால் 40 வயதில் ஒரு உயர்ந்த நிலையை எட்டுவதற்கு, தான் சந்தித்த அவமானங்களையும் கஷ்டங்களையும் படிக்கற்களாக்கிக்கொண்டவர் எம்.ஜி.ஆர். சோதனைகளையும் சாதனைகளாக்கி வாழ்க்கையில் வெல்ல முடியும் என்பதற்கு அவரது வாழ்க்கை ஒரு உதாரணம்.

அன்றைய நிகழ்வில், " நண்பர்களே வணக்கம்...!" என அவர் தம் பேச்சை துவங்க, பெரும் கைதட்டல் குழந்தைகளிடமிருந்து.

" குழந்தைகளா... எல்லோரும் நான் சொல்றதை திரும்பச் சொல்றீங்களா...",  என ஒரு ஆசிரியரைப் போல மாணவர்களிடத்தில் தம் உரையைத் துவங்கிய அப்துல்கலாம், 'கெட்டதை பார்க்காதே’ ‘கெட்டதை கேட்காதே’ ‘கெட்டதை பேசாதே’ எனச் சொல்லச் சொல்ல அதை திரும்பக் கூறினர் மாணவர்கள். "இப்போ நல்லதைதான் கேட்கப்போறீங்க" என டைமிங்கோடு சொல்ல, கலகலப்பானது அந்த இடம்.

" நண்பர்களே... தமிழக மக்களின் உள்ளங்களில் எல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் இல்லத்தில், அவர் உருவாக்கிய பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் வந்து உங்களை சந்தித்து, உரையாட கிடைத்த வாய்ப்புக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 23 ஆண்டுகளை கடந்த பள்ளி என்றால் என்ன ? இந்த பள்ளி பூமியில் உள்ளது. பூமி சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் ஆகும். அந்த கணக்கின்படி இந்த பள்ளி 23 முறை சூரியனை சுற்றி விட்டது என்று அர்த்தம்.

நான் உங்கள் மத்தியில் உரையாடப்போகும் தலைப்பு ‘வெற்றியடைந்தே தீருவேன்’. (இந்த தலைப்பினை திரும்பத் திரும்ப மாணவர்களை சொல்ல வைத்து கேட்கிறார் கலாம்). எம்.ஜி.ஆரைப் பற்றி சொல்வதற்கு பல விஷயங்கள் உள்ளபோதிலும், ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். ஏழையாகப் பிறந்து, உழைப்பால் உயர்ந்து, கலைத்துறையில் இருந்து, தம் சுய உழைப்பால் சம்பாதித்தவற்றை எல்லோருக்கும் வாரி வாரி வழங்கியவர் எம். ஜி.ஆர். அவரது பெயரை தாங்கி நடக்கும் பள்ளியின் மாணவ மாணவிகளிடம் உரையாற்றுவதில் மகிழ்ச்சி.

abdulkalammgr6001.jpg

மாணவர்களே நமது வாழ்க்கையில் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். தன்னம்பிக்கை வெற்றியின் முதற்படி.  நான் குடியரசு தலைவராக இருந்தபோது நடந்த 2 சம்பவங்களைக் கூறி அதை விளக்கலாம் என நினைக்கிறேன். ஒரு சமயம் வெளிநாடுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி  மாணவர்கள் 1000 பேர், அத்லடிக் போட்டியில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்தனர். ஒருநாள் அவர்கள், குடியரசுத் தலைவர் மாளிகையை பார்க்க ஆர்வம் கொண்டு, அனுமதிப் பெற்று வந்தனர். நான் அவர்கள் மத்தியில் படிக்க, ஒரு கவிதை தயார் செய்து வைத்திருந்தேன். அந்த கவிதையை இப்போது வாசிக்கிறேன். திரும்பச் சொல்லுங்கள்

'நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்

எங்களது மனம் வைரத்தை காட்டிலும்  பலமானது

எங்களது தன்னம்பிக்கையால் எப்போதும் வெற்றிபெறுவோம்.

கடவுள் எங்களோடு இருக்கும்போது எங்களுக்கு எதிரி என்று யாரும் கிடையாது!'


-இதை  வாசித்து முடித்ததும், ஈரான் நாட்டை சேர்ந்த முஸ்தபா என்ற மாணவன் என்னிடம் வந்தான். அவனுக்கு இரண்டு கால்களும் இல்லை. என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தான். அதில் ஒரு அழகான கவிதை இருந்தது. அதற்கு அவன் வைத்திருந்த தலைப்பு ‘மன தைரியம்’. படிக்கிறேன் கேளுங்கள் குழந்தைகளே...

‘எனக்கு கால்கள் இரண்டும் இல்லை
அழாதே அழாதே என்று என் மனசாட்சி சொல்கிறது
ஆம்! என் மனசாட்சி சொல்கிறது
நான் மன்னன் முன்பாக கூட மண்டியிட்டு வணங்கவேண்டியதில்லை மகனே என
நான் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டுவேன்!'


-அசந்துபோனேன் நான். என்ன ஒரு மனஉறுதி அவனுக்கு. 2 கால்களையும் இழந்தபின்னும் அவனுக்குள்தான் என்னவொரு தன்னம்பிக்கை. அப்படிப்பட்ட ஒரு தன்னம்பிக்கையை இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் மனதிலும்  நாம் விதைக்கவேண்டும்.

abdulkalammgr6002.jpg

இன்னொரு சம்பவம். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்தபோது ஹைதராபாத் மலைவாழ் பகுதியை சேரந்த நுாற்றுக்கணக்கான மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடையே பேசும்போது, ‘யார் யார் என்னன்னவாக ஆவீர்கள்’ எனக் கேட்டேன். ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களை சொல்லிக்கொண்டிருந்தனர். 9 ம் வகுப்பை சேர்ந்த பார்வையற்ற மாணவன் ஒருவன், தன் முறை வந்தபோது கையை தூக்கினான். அவன் பெயர் ஸ்ரீகாந்த். ‘சார் என் ஆசை, நான் ஒருநாள் இந்த நாட்டின் பார்வையற்ற முதல் குடியரசு தலைவனாவேன்’ என்றான். அவன் தன்னம்பிக்கையைக் கண்டு பிரமித்துப் போனேன். அவனை வாழ்த்திவிட்டு ‘உனது எண்ணம் பெரிது. ஆனால் விடாமுயற்சியோடு அறிவை தேடிப்பெற்று, கடுமையாக உழைத்தால் உன் லட்சியம் நிறைவேறும்' என வாழ்த்தினேன்.

வாழ்க்கையில் வெற்றி பெற 4 செயல்கள் அவசியம். முதலாவது, வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியத்தை வகுத்துக்கொள்வது. இரண்டாவது, அந்த லட்சியத்தை அடைய அறிவாற்றலை தொடர்ந்து பெருக்கிக் கொள்ள வேண்டும். அறிவை பெருக்குவது என்றால் நல்ல புத்தகங்களை வாசிப்பதும், சான்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை ஊன்றிக்கேட்பது. மூன்றாவது, கடின உழைப்பு . நான்காவது, விடாமுயற்சி. அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையும்படி தொடர்ந்து முயற்சிப்பது.

abdulkalammgr6003.jpg

இந்த நான்கையும் கடைபிடித்தால் வாழ்க்கையில் வெற்றிபெறுவீர்கள். இது தொடர்பாக நான் எழுதிய கவிதை ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். நீங்களும் திரும்பச் சொல்லுங்கள்.

'நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன்
நான் வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர; எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழமாட்டேன்.
தவழவேமாட்டேன்.
ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன் பறப்பேன்
வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்
.'

– ( கவிதையை முடித்துக்கொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தும் தொனியில்
எத்தனை பேர் பறப்பீங்க சொல்லுங்க.? என கலாம் கேட்க,  ‘பறப்போம் பறப்போம்' என மாணவர்கள் மத்தியில் இருந்து முழக்கமாய் கேட்டது பதில். 

 

அப்போ எல்லாருமே பறப்பீங்களா? கேட்டபடி சிரிக்கிறார் அப்துல்கலாம்)

வெற்றி என்பது என்ன? வெற்றி என்பது இறுதிப்புள்ளி, தோல்வி என்பது இடைப்புள்ளி. இடைப்புள்ளிகளின் துணையின்றி இறுதிப்புள்ளியை அடைதல் சாத்தியமல்ல. வெற்றியை கொண்டாடத் தவறினாலும் தோல்வியை கொண்டாடத் தவறக்கூடாது.ஏனென்றால் தோல்விகள்தான் நம்மை வலுப்பெறச் செய்பவை. அதுதான் நம் பயணத்தை முழுமை பெறச் செய்பவை. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்கள் பிள்ளைகள் நல்ல செயல்களை செய்தாலோ வெற்றிபெற்றாலோ அல்லது சாதனை புரிந்தாலோ அவர்களுக்கு பரிசாக புத்தகத்தை தாருங்கள். பள்ளி வயதிலேயே புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

உறக்கத்தில் வருவதல்ல கனவு
உங்களை உறங்க செய்யாமல் செய்வதுதான் கனவு.


- அந்த கனவை ஒவ்வொருவரும் நனவாக்கும் வகையில் உழைக்கவேண்டும். செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கான ஆசிரியப்பணி ஒரு தெய்வீக பணிக்கு சமமானது. அவர்களுக்கு என் வாழ்த்துகள். அவர்களிடம் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். செவித்திறன் குறைந்தவர்களுக்கான ‘காக்ளியர் இன்ப்ளேன்ட்’ ( cochlear implant ) என்ற கருவி, மேலை நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. அதை பயன்படுத்தினால் செவித்திறன் குறைந்தவர்களுக்கு இயல்பான கேட்கும்திறனை உருவாக்கலாம்.

abdulkalammgr300.jpgபல லட்சங்கள் மதிப்புள்ள  இந்தக் கருவியை நம் நாட்டிலும் உருவாக்கும் முயற்சி,  பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறையினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஓர் ஆண்டில் புழக்கத்திற்கு வந்து விடும்  என்பதோடு; விலையும் குறைவாக நிர்ணயிக்கப்படலாம். அது உங்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்." என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் ஒரு தகவலை பகிர்ந்தார். ஆச்சர்யமான அந்த பகிர்வு இதுதான்...

' இந்த விழா ஏற்பாட்டுக்கு முன் நடந்த ஆச்சர்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த விழா குறித்துப் பேச, ஒரு நாள் இந்தப் பள்ளிக்கு நான் வந்தபோது, பள்ளி முதல்வர் திருமதி லதா, அப்துல்கலாம் அவர்களை இந்த பள்ளிக்கு அழைத்துவரவேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தார். அடுத்த நிமிடம், என் மொபைல் ஒலித்தது. யாரென்று பார்த்தால் இன்ப அதிர்ச்சி. லைனில் வந்தது, வேறு யாருமல்ல, அப்துல்கலாம் அவர்களேதான். இருவரும் ஆச்சர்யமடைந்தோம். அது எந்த விதமான தெய்வீக லிங்க் எனத் தெரியவில்லை.

ஒருவேளை எம்.ஜி.ஆர் சொல்லித்தான் அப்துல் கலாம் போன் செய்தாரோ என்னவோ. (கலாமின் முகத்தில் நமுட்டுச் சிரிப்பு). லதா அவர்களின் விருப்பத்தையும் பள்ளியின் பெருமைகளையும் அப்போதே எடுத்துச்சொன்னேன். எந்த மறுப்புமில்லாமல் ‘நானும் அந்தப் பள்ளிக்கு செல்ல விரும்புகிறேன். அடுத்த முறை சென்னை வரும்போது கண்டிப்பாக எம.ஜி.ஆரின் வீட்டுக்கும் பள்ளிக்கும் வருவேன்’ எனச் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். சொன்னபடியே இதோ வந்துவிட்டார்.
” என்றார்.

vikatan

  • தொடங்கியவர்

13653414_1089368781111815_68061993932175

அதிக டெஸ்ட் ஓட்டங்கள் பெற்ற உலக சாதனையை முன்னர் படித்திருந்த, உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும், மிக சாமர்த்தியமான அணித் தலைவர்களில் ஒருவருமான அவுஸ்திரேலிய கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் அலன் போர்டரின் பிறந்தநாள்.
1987இல் அவுஸ்திரேலியா உலகக்கிண்ணம் இவரது தலைமையிலேயே வென்றது.

Happy Birthday Allan Border

  • தொடங்கியவர்

பெண் சிங்கம்!

 

p60a.jpg

ரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அடுத்த வீட்டுக்குக் கேட்கும்படி அலறித் துடிக்கும் பெண்கள் வாழும் இதே உலகில்தான் கர்ஜிக்கும் சிங்கத்தை மடியில் படுக்கப்போட்டுத் தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கும் பெண்ணும் இருக்கிறார்.

'ஆர் லாஷ்மி' என்னும் பெண் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். நாம் சிங்கத்தைத் தூரத்தில் பார்த்தாலே நடுநடுங்கிப்போய் டவுசரை நனைத்துவிடுவோம். ஆனால், இந்தப் பெண், சிங்கங்களைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சிக் குலாவுகிறார். வன விலங்குகள் பூங்கா ஒன்றில் வசிக்கும் அதி பயங்கர விலங்குகளுக்குப் பராமரிப்பாளராக இருக்கும் ஆர் லாஷ்மியைப் பார்த்ததும் பாய்ந்துவரும் சிங்கங்கள் ரொமான்ஸ் மூடுக்கு மாறி கன்னத்தோடு கன்னம் வைத்து உரசிக்கொள்கின்றன.

p60b.jpg

நம் ஊரில் பெண்கள் அதிகபட்சமாக நாய்க்குட்டிதான் வளர்ப்பார்கள். இந்தப் பெண் எப்படிப் பயப்படாமல் சிங்கத்தோடு விளையாடுகிறார் என எல்லாரும் ஆச்சரியத்தோடு பார்த்துச் செல்கிறார்கள். அவரிடம் இதைப்பற்றிக் கேட்டால், “அவைகளும் அன்பான விலங்குகள்தான். நாம் மரியாதையோடும், உண்மையான அன்போடும் பழகினால் அவைகள் நம் மீது பல மடங்கு பிரியத்தைக் காட்டும். பார்த்ததும் அஞ்சும் அளவுக்கு மனிதர்களைப் போல அவை மோசமானவை அல்ல'' என்கிறார்.  தன்னைப்போலவே விலங்குகளைக் காதலிக்கும் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்வாராம்.

p60c.jpg

தன் வீட்டிலேயே நாய், சிங்கம், புலி ஆகியவற்றை ஒன்றாக வைத்துப் பராமரித்து வருகிறார். அவைகளும் ஒன்றுக்கொன்று நண்பர்களைப் போலப் பழகிவருகின்றன. மெத்தையில் ஏறி லாஷ்மியோடு விளையாடிவிட்டுக் கட்டிப்பிடித்தபடியே உறங்குகின்றன. காலையில் எழுந்ததும் குட்மார்னிங் சொல்வதுபோல் காலைத் தூக்குகின்றன.

புலி, சிங்கம்னா மட்டும்தாங்க பயம். மத்தபடி ஐ லவ் யூ ங்க!

vikatan

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு - 16: போலீஸ்காரர் தந்த தேசிய கீதம்!

 
mo_2947921f.jpg
 

இயற்கை கொட்டிக் கிடக்கும் ஓர் அழகான நாடு மொரீஷியஸ். அரிய வகைத் தாவரங்கள் பல அடர்த்தியாக உள்ள இந்தியப் பெருங்கடலின் தீவு தேசம்.

1638-ல் டச்சுக்காரர்கள் வரும்வரை இங்கே மக்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். 1710-ல் டச்சுக்காரர்கள் சென்ற பிறகு பிரெஞ்சுக்காரர்கள் வந்தார்கள். 1810-ல் இத்தீவு பிரிட்டிஷார் கைக்குப் போனது. அதன் பின்னர் 1968-ம் ஆண்டுவரை, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது.

குடியரசு

1968-ம் ஆண்டு மார்ச் 12 அன்று, இந்நாடு சுதந்திரம் பெற்றது. 1992 மார்ச் 12 அன்ற்கு மொரீஷியஸ் குடியரசு நாடானது. 1983-ல் மொரீஷியஸில், உள் நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அ

ப்போது ராணுவ உதவி செய்ய இந்தியா ஒத்துழைத்தது. அன்று முதல் இந்தியாவுக்கும் மொரீஷியஸுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது.

கீதம்

‘அன்னை பூமி' என்று அழைக்கப்படும் மொரீஷியஸின் தேசிய கீதத்தை எழுதியவர் கவிஞர் ஜீன் ஜார்ஜஸ் ப்ராஸ்பர். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பிலிப் ஜெண்ட்ல். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மொரீஷியஸ் நாட்டுக் காவல் துறையின் இசைக் குழுவில் பணிபுரிந்தவர். இசையில் மட்டுமல்லாமல், நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் இவர் கில்லாடி.

தவறு

மொரீஷியஸ் 1968 மார்ச் 12 அன்று சுதந்திரம் பெற்றபோது, தேசிய கீதத்துக்கு இசையமைத்தவர் ‘ஃபிலிப் ஓ சான்' என்ற பெயரும் புகைப்படமும் பத்திரிகையில் தவறாக வெளியானது. அன்றைய தினமே, அச்சடிக்கப்பட்ட பிரதிகள் திரும்பப் பெறப்பட்டன.

பெருந்தன்மை

பத்திரிகையில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்ட ஃபிலிப் ஓ சான், காவல் துறையின் இசைப் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர். அவரின் கீழ்தான் ஃபிலிப் ஜெண்ட்ல் வேலை செய்துவந்தார். தவறுதலாகத் தனது பெயர் இடம் பெற்றுவிட்டதில், சானும் வருத்தமடைந்தார்.

சில மாதங்கள் கழித்து தேசிய கீதத்தைத் தேர்வு செய்யக் குழு அமைக்கப்பட்டது. போட்டி ஒன்றும் அறிவிக்கப்பட்டது. தேர்வுக் குழுவில் சான் இடம் பெற்றிருந்தார். தன்னுடைய பாடலிசையை அனுப்பிவைக்கும்படி ஜெண்ட்லிடம் வற்புறுத்திப் பெற்றார் சான். அந்தப் பாடலே தேசிய கீதமாக அறிவிக்கப்பட பெரிதும் காரணமாக சான் இருந்தார். இந்தக் கீதத்தைப் பாடி முடிக்க ஆகும் நேரம் - சுமார் 52 வினாடிகள்.

இப்பாடல் இப்படி ஒலிக்கும்:

க்ளோரி டு தீ

மதர்லேண்ட் ஓ மதர்லேண்ட் ஆஃப் மைன்

ஸ்வீட் இஸ் தை பியூட்டி

ஸ்வீட் இஸ் தை ஃப்ரேக்ரன்ஸ்

அரௌண்ட் தீ வி கேதர்

அஸ் ஒன் ப்யூபிள்

அஸ் ஒன் நேஷன்

இன் பீஸ், ஜஸ்டிஸ் அண்ட் லிபர்ட்டி

பிலவ்ட் கன்ட்ரி மே காட் ப்ளெஸ் தீ

ஃபார் எவர் அண்ட் எவர்!

இதன் உத்தேச தமிழாக்கம்:

நினக்கு மகிமை உண்டாகட்டும்!

தாய் நாடே! எனது தாய் நாடே!

நினது அழகு - இனிமை;

நினது சுகந்தம் - இனிமை.

நின்னைச் சுற்றி

நாங்கள் கூடுகிறோம் -

ஒரே மக்களாக!

ஒரே தேசமாக!

அமைதி, நீதி, சுதந்திரம் இவற்றுடன்

எம் நேசத்துக்குரிய தேசமே,

இறைவன் நின்னை ஆசீர்வதிக்கட்டும்

என்றும் என்றென்றும்.

(தேசிய கீதம் ஒலிக்கும்)

police_2947922a.jpg - ஃபிலிப் ஜெண்ட்ல்

tamil.thehindu

  • தொடங்கியவர்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

 
 
kavimani_2947888f.jpg
 

தமிழக மறுமலர்ச்சிக் கவிஞர்

தமிழ்நாட்டின் 20-ம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (Kavimani Desika Vinayagam Pillai) பிறந்த தினம் இன்று (ஜூலை 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l

குமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார் (1876). ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். எம்.ஏ. பட்டம் பெற்றார்.

l

திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றார். கோட்டாறு, நாகர்கோவில் பாடசாலைகளில் ஆசிரியர், திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் என 36 ஆண்டுகள் கல்விப் பணியாற்றினார்.

l

இவரது இலக்கிய வெளிப்பாட்டில் ஒரு அறிவியல் கண்ணோட்டம் பிரதிபலித்தது. நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். சுதந்திர போராட்டத்தில் காந்தியத்துக்கு ஆதரவாகக் கவிதைகளை எழுதியதால் ‘விடுதலைக் கவிஞர்’ எனவும் போற்றப்பட்டார்.

l

‘ஆங்கிலத்தில் உள்ளதுபோல தமிழில் குழந்தைப் பாடல்கள் இல்லையே என்றுதான் நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் பாடல்கள் எழுதினேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

l

‘மலரும் மாலையும்’, ‘ஆசிய ஜோதி’, ‘உமர்கய்யாம் பாடல்கள்’, ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’, ‘அழகம்மை ஆசிரிய விருத்தம்’, ‘கதர் பிறந்த கதை’, ‘குழந்தைச் செல்வம்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவரது ‘தேவியின் கீர்த்தனங்கள்’ என்ற இசைப்பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பல பாடல்களை, இசைக் கலைஞர்கள் மேடைகளில் விரும்பிப் பாடினார்கள்.

l

இவரது சொற்பொழிவுகள் ‘கவிமணியின் உரை மணிகள்’ என்ற நூலாக வெளிவந்தது. சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர் எட்வின் ஆர்னால்டின் ‘தி லைட் ஆஃப் ஏஷியா’ என்ற படைப்பைத் தழுவி ‘ஆசிய ஜோதி’ என தமிழில் எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.

l

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராகப் பணியாற்றினார். ‘கம்பராமாயணம் திவாகரம்’, ‘நவநீதப் பாட்டியல்’ உள்ளிட்ட பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்துள்ளார். ‘தேசியக் கவிஞர்’, ‘குழந்தைக் கவிஞர்’, ‘சமுதாயக் கவிஞர்’, ‘விடுதலைக் கவிஞர்’, ‘உணர்ச்சிக் கவிஞர்’ என்றெல்லாம் போற்றப்பட்டார்.

l

‘பைத்தியக்காரன்’, ‘மணமகள்’, ‘தாயுள்ளம்’, ‘வேலைக்காரன்’, ‘கள்வனின் காதலி’, ‘கண்ணின் மணிகள்’, ‘நன் நம்பிக்கை’ ஆகிய திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

l

‘தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை’ என நாமக்கல் கவிஞர் பாராட்டியுள்ளார். 1940-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உமாமகேஸ்வரம் பிள்ளை இவருக்கு ‘கவிமணி’ பட்டம் வழங்கினார்.

l

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞர்களுள் ஒருவருமான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954-ம் ஆண்டு, 78-வது வயதில் மறைந்தார். இவர் பிறந்த ஊரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இவர் நினைவாக 2005-ல் தபால் தலை வெளியிட்டது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

p74a.jpg

காமெடிப்பேய் வரிசையில் ஹாலிவுட்டில் இந்த மாதம் வெளியான திரைப்படம் ‘கோஸ்ட்பஸ்டர்ஸ்’. 1984-ம் ஆண்டு வெளியான ‘கோஸ்ட்பஸ்டர்ஸ்’ படத்தைதான் மறுபடியும் ரீமேக் செய்து இருக்கிறார்கள். படத்தில் காமெடி நடிகையான மெலிஸா மெக்கர்த்திதான் கதாநாயகி. ‘‘படத்தில் பேயாக நடிப்பவர்களை, நமக்கு முன்னமே தெரிந்து இருந்தாலும், அந்த மேக்-அப்போடு ஷூட்டிங்கில் நடிக்கும்போது பயமாக இருக்கிறது’’ என பேட்டியளித்து இருக்கிறார். நம்ம மேக்-அப் பார்த்துப் பேய்க்கு ஒண்ணும் ஆகாது!

p74b.jpg

வேற்று மொழிப் படங்களில் நடிப்பவர்களுக்கு, ஆஸ்கரின் சிறந்த நடிகர், நடிகை விருது கிடைப்பது மிகவும் கடினம். அதையும் கடந்து, ‘லா வி யென் ரோஸ்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றார் பிரெஞ்சு நடிகை மரியன் காட்டிலார்டு. தற்போது அவருக்கு, ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘லீஜியண்டி’ஹானரை’ வழங்க இருக்கிறது ஃபிரான்ஸ் அரசு. காட்டிலார்டு காட்டில் விருதுமழை!

p74c.jpg

டேனியல் க்ரெய்க், இனி ஜேம்ஸ் பாண்டாக நடிக்க முடியாது என அறிவிக்க, அடுத்த பாண்டிற்கான தேடலை ஆரம்பித்து இருக்கிறார்கள் பாண்ட் திரைப்படக் குழு. கறுப்பு நிறத்தவர்களை முதன்முறையாக பாண்ட் நடிகராகத் தேர்வு செய்ய முடிவு செய்து இருக்கிறது தயாரிப்பு நிறுவனம். 26 வயது அமெரிக்க நடிகையான கிறிஸ்டென் ஸ்டீவர்ட், ‘‘அது ஏன் பாண்ட் ஆணாகத்தான் இருக்க வேண்டுமா? பெண்ணாக இருக்கக் கூடாதா?’’ எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். நல்லாத்தான் இருக்கும்!

p74d.jpg

ந்த ஆண்டு ஹாலிவுட்டில், அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘சூசைட் ஸ்குவாட்’. நடிகர் ஜேர்ட் லேடோ, படத்தில் கொடூரமான வில்லனாக நடிக்க, நடிகை மார்கட் ராபி, ஷாக் ஆகி இருக்கிறார். ஷூட்டிங் சமயத்திலும், லேடோவிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பாராம். லேடோவின், உண்மையான மனநிலையை அறிய இப்படிச் செய்தாராம் ராபி. வில்லன் மாதிரி நடிச்சாதான் பேசுவீங்க போல!

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: ஜூலை 28
 
 

article_1469679513-1976.jpg1941: சேர்பியாவின் மீது ஆஸ்திரிய-ஹங்கெரிய பேரரசு போர்ப் பிரகடனம் செய்தது.

1943: ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் பிரித்தானிய படையினரின் குண்டுவீச்சினால் சுமார் 42,000 பேர் பலி.

1945: அமெரிக்க போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் (படம்) 79ஆம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14பேர் கொல்லப்பட்டனர்.

1957: ஜப்பானில் கடும் மழையினால் 992 பேர் பலி.

1976: சீனாவில் ஏற்பட்ட இரு பாரிய பூகம்பங்களினால் 242,769 பேர் பலி.

2005: வட அயர்லாந்தில் 35 வருடகால யுத்தத்தை நிறுத்துவதாக ஐ.ஆர்.ஏ. இயக்கம் அறிவித்தது.

2005: பிரிட்டனில் டோர்னடோ சுழற்காற்றினால் 39 பேர்பலி.

2010: பாகிஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்தில் 152 பேர்பலி.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஆதிக்க வெறி ஆபத்தானது
 
 

article_1469678990-article_1468156964-3.முற்காலத்திலிருந்து எல்லா அரசர்களும் தங்கள் மேலாண்மையை வலியுறுத்த யுத்தங்களை வலிந்து வரவழைத்து மக்களைக் கொன்று குவித்துப் பேரரசுகளை உருவாக்கினார்கள்.

இந்தக் கோர நிலை இன்றும் தொடர்கின்றது. வெளிநாட்டு வல்லரசுகளிடையே மட்டுமல்லƒ உள்நாட்டு யுத்தங்களும் ஆளும் வர்க்கத்தினர் தங்களை ஸ்திரப்படுத்த யுத்தங்களை அரங்கேற்றுகின்றனர்.

பெரும் வனங்களிலும் இதே நிலைதான். இந்தக் காடுகளில் புலிகள், கரடிகள், நரிகள் என மிருக இனங்கள் அழிந்து போக சிங்கங்களே காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தச் சிங்கங்கள் இவைகளை சாப்பிடுவதற்காகக் கொல்வதில்லை. தங்கள் ஆதிக்கத்தை வலியுறுத்தவே இவ்வாறு செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆதிக்க வெறி ஆபத்தானதுƒ எய்தவரையும் கொல்லும்.    

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஏறக்குறைய முழு நிலவின் ஒளியில் குளிர்காயும், இந்த ராயல் ஸ்பூன்பில் பறவையின் புகைப்படம் 2016 ஆம் ஆண்டிற்கான இன்ஸைட் ஆஸ்ட்ரோனமி புகைப்படக் கலைஞருக்கான போட்டியில் குறும்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்று.

இது ஆண்ட்ரூ கால்ட்வெல் என்னும் புகைப்படக் கலைஞரால் நியூசிலாந்தின் ஓக் பேயில் எடுக்கப்பட்டது.

13620763_10153600719470163_8164522340742

BBC

  • தொடங்கியவர்
வங்கிக்குள் புகுந்த காளை
 

வங்கியொன்றுக்குள் காளை மாடொன்று புகுந்த சம்பவம் ஸ்பெய்னில் இடம்பெற்றுள்ளது.

 

18238bulf.jpg

 

ஸ்பெய்னில் வலேன்சியா நகருக்கு அருகில் நடைபெற்ற பாரம்பரிய காளையோட்ட விழாவொன்றில் காளைகளை மக்கள் துரத்திச் சென்றபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

வீதியில் சென்று கொண்டிருந்த இந்த காளை திடீரென வங்கியொன்றின் கதவை தனது கொம்பினால் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது.

 

பாரிய காளையொன்று வங்கிக்குள் நுழைந்ததைக் கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அக் காளை அங்கிருந்து வெளியேறிய தன்னை துரத்தி வந்த இளைஞர்களை நோக்கித் திரும்பியது.

 

இதையடுத்து மேற்படி இளைஞர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தோல்வியை வெறுக்கும் தலைமுறையா நீங்கள்? #DailyMotivation

mill.jpg

ஒரு முயற்சியில் தோற்றுவிட்டால் அதிலேயே மூழ்கி விடுவதோ, அல்லது அதிலிருந்து போராடி மீண்டு வருவது என்பதெல்லாம் இதுவரை நாம் அறிந்த ஒரு விஷயம்தான். இந்த மீண்டு வரும் காலம் என்பது தோல்வியின் வீரியத்தை பொருத்து அமையும். ஆனால் மில்லினயல் தலைமுறை இந்த தோல்விகளை ஏற்காத தலைமுறையாக இருக்கிறது. இப்போது 30 வயதுக்குள் இருக்கும் தலைமுறையினர் அனைவருமே தோல்வியை கண்டு துவளுவதோ, அதிலிருந்து மீண்டு வர காலம் எடுத்து கொள்வதோ இல்லை என்கிறது ஆய்வு.

தோல்விகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அதனை விரும்பத்தகாத விஷயமாகவே பார்க்கத் துவங்கி விட்டனர். ஒருவேளை அதனையும் மீறி தோற்றுவிட்டால் அடுத்த நிமிடமே அதனை சரி செய்யும் வேலைகளில் இறங்கி விடுகின்றனர்.  அதைவிட அதிகமான செயல்திறனோடு அதனை வெற்றி கொள்ளும் மனநிலைக்கு தங்களை பழக்கப் படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் இப்படி இருப்பதற்கு என்ன காரணம்? இதில் இவர்களுக்கு உள்ள சாதக, பாதகங்கள் என்ன? என பல கேள்விகளுக்கு மில்லினியல்களின் பதில் இது தான்.

தொழில்நுட்பம் தரும் பாடம்:

இவர்கள் அதிகமாக தொழில்நுட்பத்தோடு இணைந்து காணப்படும் தலைமுறையாக உள்ளனர். இவர்களது மனநிலை கிட்டத்தட்ட தொழில்நுட்ப கருவிகள் போலவே மாறி இருக்கிறது. ஒரு மென்பொருள் ப்ரோக்ராம் வேலை செய்யவில்லை என்றால் அதிலுள்ள பிரச்னை சரிசெய்து ரன் செய்வது போலவே இவர்கள் தங்கள் தோல்வியை அணுக ஆரம்பித்து விட்டார்கள். இது வேலை, செயல்பாடுகளில் மட்டுமல்ல சில நேரங்களில் காதல், நட்பு போன்ற தங்களது தனிப்பட்ட விஷயங்களையும் ஃபார்மெட் செய்து திரும்ப பதிவேற்றும் ஹைடெக் சமூகமாக மாறியுள்ளனர். இதனால் தோல்வி இவர்களை பெரிதும் பாதிப்பதில்லை.

அக்கறையான தலைமுறை;

தன்னைப் பற்றியும், தன்னை சுற்றியுள்ளவர்களை பற்றியும் மிகுந்த அக்கறையுள்ள தலைமுறையாக இந்த தலைமுறையுள்ளது. இவர்கள் தோல்விகளுக்காக தவறான முடிவுகளை கையில் எடுக்கமாட்டார்கள். தன்னை மனரீதியாக மிக அதிகமாக பலப்படுத்தி கொள்கிறார்கள். தங்களது தோல்விகளை சமூக வலைதளங்களில் ஒற்றை போஸ்டில் உடைத்தெறியும் திறன் இவர்களிடம் உள்ளது. தங்களை மீட்டெடுக்கும் நேரத்தை மிக சொற்ப நேரங்களில் இவர்களால் செய்ய முடிகிறது.

millenial.jpg

அக்ரஸிவ் ஜெனரேஷன்:

தோல்விகளால் நிறைந்த ஒரு வேலையை தானாக முன்வந்து எடுத்து அதனை ஒரு 'கேம்' போல அணுகி அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல இவர்களால் எளிதில் முடிகிறது. இதற்கு சில நேரடி உதாரணங்களும் உள்ளன. உலகத்தை ஒரே இடத்தில் இணைப்பது, பகிர வைப்பது கடினம் என்பதை உடைத்தது மார்க் சக்கர்பெர்க் எனும்  ஒரு மில்லினியல்தான். 'வெளிநாடுகளில் தோற்கும் அணி இந்தியா' என்பதையெல்லாம் கேட்கப் பிடிக்கவில்லை, தோல்வி பிடிக்கவில்லை என இந்திய கிரிக்கெட் அணியை வெற்றிப் பாதைக்கு மாற்றிய விராட் கோலியும் மில்லினியல்தான். காதல் தோல்விகள், சர்ச்சைகள் என நிறைந்த வாழ்க்கையில் இசைக்காக ஒரு கூட்டத்தை தன் பக்கம் ஓடி வரவழைத்த ஜஸ்டின் பைபர், மில்லினியல்தான்.  இந்த அக்ரஸிவ் மனிதர்களின் உதாரணங்கள் மட்டுமல்ல. இந்த தலைமுறையும் கிட்டத்தட்ட அப்படிதான் இருக்கிறது.

ப்ளஸ்:

1. மேலைநாட்டு கலாசாரம், உணவு, உடையில் மட்டுமல்ல, எளிதில் தோல்விகளை விட்டு வெளியேறும் பக்குவம் மில்லினியல் தலைமுறையினரிடம்தான் அதிகமாக உள்ளது.

2. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதில் உலக அளவில்  75% உங்கள் தலைமுறை வெற்றி பெறுகிறது. செல்ஃபி தலைமுறை என வர்ணிக்கப்பட்டாலும் சுயநலமில்லாத தலைமுறையாக உலகத்தின் பார்வையில் இந்த தலைமுறை இருக்கிறது. அடுத்தக்கட்டத்துக்கு எளிதில் நகரும் தலைமுறை.

3. அடுத்த தலைமுறைக்கான தேவை, அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு முடிவெடுக்கும் வேலையை இந்த  தலைமுறைதான் முடிவு செய்கிறது. இதற்கு முந்தைய தலைமுறையில் அந்த பழக்கமில்லை.

 

millennia.jpg

மைனஸ்:

1. தோல்விகளை ஏற்காமல் அதனை சரி செய்யும் வேலைக்கு மாறும்போது. இந்த வேகம் தெரியாத முந்தைய தலைமுறையை கோபத்துடன் அணுகுவது.

2. முந்தைய தலைமுறையின் அனுபவத்தை புறக்கணிப்பது.

3. அனைத்து உணர்ச்சிகளையும் உடனடியாக வெளிப்படுத்தி உறவுகளில் பலமற்று இருப்பது. காதல், நட்பு உள்ளிட்ட‌ தோல்விகளில் இருந்து உடனடியாக வெளியே வந்தாலும் திடமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் தவிப்பது.

தோல்விகளை ஏற்காமல் இருப்பது, அதிலிருந்து வேகமாக வெளிவருவது எல்லாம் நல்ல விஷயம்தான். தோல்விகளை சரியாக புரிந்து கொள்ளாமல் போனால் மீண்டும் சரிவு இவர்களை நோக்கி வரும். இதனை இவர்கள் புரிதலோடு அணுகினால் இந்த நூற்றாண்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்யும் தலைமுறை இவர்களாகத்தான் இருப்பார்கள்.

vikatan

  • தொடங்கியவர்

13686779_1089847561063937_74222505134442

நடிகராக ஆரம்பித்து பாடகராக 'கொலைவெறி' மூலம் உலகப்புகழ் பெற்ற தனுஷ் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

ஆடுகளம் மூலம் அற்புதமான நடிகராக நிரூபித்து இந்தியத் தேசிய விருதையும் பெற்றுள்ள தனுஷுக்கு சூரியனின் இனிய வாழ்த்துக்கள்.
Happy Birthday Dhanush

 

’பெரிய தனுஷ்ன்னு நெனைப்பு!’ - இதுதான் தனுஷிசம்! #HBDDhanush

DhanushCollage1LS.jpg

து ஒரு பொங்கல் சீசன். கமலின் விருமாண்டியும் இன்னும் சில படங்களும் வெளியாக திட்டமிட்டிருந்தார்கள். அப்போது கமல் “அந்த பையன் படமும் ரிலீஸ் ஆகுதாமே.. நாம வேணும்ன்னா 26ல வரலாமா” எனக் கேட்டாராம். அந்த பையன் நடித்து வெளியாகியிருந்த மூன்று படங்களுமே சில்வர் ஜூப்ளி. கமல் அப்படி கேட்டது உண்மையா இல்லையா என்பது சீக்ரெட் தான். ஆனால், அந்த பையனின் மார்க்கெட் அன்று அந்த ரேஞ்சுதான் என்பது மட்டும் சத்தியமான உண்மை. பின்னாளில் “என்னை மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது. பாக்க பாக்கத்தான் பிடிக்கும்” என அவர் பேசிய பன்ச் ஹிட் தான். ஆனா, அந்தப் பையனை பார்த்த உடனே தமிழ் ரசிகனுக்கு பிடித்துப் போனது.

* 2002 மே மாதம். அந்த வருடத்தில் அதுவரை வெளியாகி இருந்த படங்களில் கன்னத்தில் முத்தமிட்டாலும், ஜெமினியும் மட்டுமே கவனம் ஈர்த்திருந்த நிலையில் பெரிய ஸ்டார் காஸ்ட் இல்லாமல், பப்ளிசிட்டி இல்லாமல் ஒரு படம் வெளியானது. ஆனால் விமர்சகர்களின் கழுகுக் கண்களில் இருந்துதான் எதுவுமே தப்பாதே. படத்தை கால் மேல் கால் போட்டுக்கொண்டு குத்திக் கிழித்தார்கள். 'Soft Porn' என கெளரவ பட்டம் கொடுத்தார்கள். அடல்ட்ஸ் ஒன்லி கன்டென்ட் மீதான விமர்சனம் ஒரு கட்டத்தில் அபத்த விமர்சனமாகிப் போனது. 'யார்றா இவன்? ஆளும் மூஞ்சியும். ச்சை!' என படத்தில் நடித்த இளைஞனை வசை பாடினார்கள் விமர்சன சிகாமணிகள். பொதுமக்களும்தான். பின்னர் வழக்கம் போல தங்கள் ஜோலியை பார்க்கத் தொடங்கினார்கள்.

* ஒரு வருடம் கழித்து அதே இளைஞன் நடித்து மற்றொரு படம் ரிலீஸானது. யுவனின் புண்ணியத்தில் இந்த முறை பப்ளிசிட்டிக்கு பிரச்னையில்லை. ஓராண்டில் அந்த இளைஞனை பற்றிய மதிப்பீடு கொஞ்சமும் மாறாமல் தியேட்டருக்குள் வந்தமர்ந்தனர் ஒயிட் காலர் க்ரிட்டிக்ஸும், பொதுஜனமும். 'என்கிட்ட நிறம் இல்ல, களை இல்ல, பாடிபில்டர் கெட்டப் இல்ல. ஆனா வேற ஒண்ணு இருக்கு' என மொத்த ஃப்ரேமையும் ஆக்ரமித்தான் அந்த ராட்ஷசன். ஒரு காட்சியில் கொட்டும் மழையில் வெறி பிடித்தவனாய் 'திவ்யா திவ்யா' என அவன் கதற, தியேட்டரின் ஒரு மூலையில் சன்னமாய் எழுந்த கைதட்டல் சத்தம் சீக்கிரமே மொத்த தமிழகத்திற்கும் பரவியது. 'யார்றா இவன்?' என்றவர்கள் 'தனுஷ் சார்' என்றார்கள். தமிழ் சினிமா இந்த தலைமுறையின் ஆகச் சிறந்த கலைஞனை கண்டெடுத்த தருணம் அது.

Dhanushcollage3.jpg

* இந்தக் கலைஞனை, அடுத்த வீட்டு இளைஞனாக்கிய பெருமை சுப்ரமணிய சிவாவிற்கும் தீனாவிற்குமே சேரும். 'மன்மத ராசா' வைரஸ் தமிழகத்தைப் பாடாய் படுத்தியது. போதாக்குறைக்கு காமெடி, சென்டிமென்ட் என பின்னிப் பெடலெடுத்தார் தனுஷ். படம் ஆல் க்ளாஸ் ஹிட். மூன்றே படங்களில் கோலிவுட்டின் முக்கிய ஸ்டார். இருபது வயதில் எவரும் இப்படியான இமாலய உயரத்தை தொட்டதில்லை என மீடியாக்கள் லைம்லைட் பாய்ச்சின.

* 'தனுஷ் தொடர்ந்து 7 படங்கள்ல கமிட் ஆயிருக்காராம். அடுத்த அஞ்சு வருஷத்துக்கு கால்ஷீட் இல்லயாம்' என கோடம்பாக்கக் காற்றில் எக்கச்சக்க தகவல்கள். இதற்கு நடுவில் 'எங்க படம்தான் முதல்ல ரிலீஸாகணும்' என்ற தயாரிப்பாளர்களின் போட்டி வேறு. 2004-ல் இப்படி மூன்று படங்கள் வெளியாகின. அவற்றில் 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தில் மட்டுமே கொஞ்சம் 'தனுஷ்' இருந்தார். மற்ற இரண்டு படங்களும் வந்த வேகத்தில் பெட்டிக்குள் பவுன்ஸாகின.

* அதே ஆண்டில் ஒரு சின்ன பிரஸ்மீட். சில பல பத்திரிக்கையாளர்கள் கூடியிருந்த அந்த அரங்கிற்குள் விறுவிறுவென வந்த தனுஷ் 'நானும் ஐஸ்வர்யா ரஜினியும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்' என சொல்லிவிட்டு சடாரென வெளியே பறந்தார். இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரத்துக்கு இவர் மருமகனா? புருவங்கள் வில்லாய் வளைந்து தெறித்தன. எக்கச்சக்க தனிநபர் தாக்குதல்கள் வேறு. தகுதி ஒப்பீட்டில் தொடங்கி கொச்சையான சொற்கள் வரை அவரை பதம் பார்த்தன. ரியாக்ட் செய்யவே இல்லை தனுஷ்.

* 'தனுஷ் கதை தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். முதிர்ச்சி இல்லை. ரஜினி மருகமகனாயிட்ட திமிரு' என விமர்சன வேதாளம் விறுவிறு வேகத்தில் மரம் ஏறியது. அந்நேரத்தில் அந்த மிராக்கிள் நடந்தது. பாலு மகேந்திராவின் கலைக் கண்கள் கமலை கதறியழவும் வைக்கும், சொக்கலிங்க பாகவதரை கதை நாயகனாக நடை பயிலவும் வைக்கும். 'அது ஒரு கனாக்காலம்' படத்தை தொடங்கினார் பாலு மகேந்திரா. 'இவன்கிட்ட ஒரு ப்ரெஞ்சு மாடலுக்கான எல்லாத் தகுதியும் இருக்குய்யா, பெரிய ஆளா வருவான் பாருங்க' - தன் சீடர்களிடம் அவர் உதித்த தீர்க்கதரிசன வார்த்தைகள் இவை. சும்மாவா அவர் ஆசான்?

* தமிழ் சினிமாவில் ஒரு ரவுடி எப்படி இருப்பான்? பல்க் பாடியும், முரட்டு மீசையுமாய். அவன்தான் ஹீரோ என்றால் கொஞ்சம் ஆடை அலங்காரங்களும் தூள் பறக்கும். இது எதுவுமே இல்லாமல் தனுஷ் புதுப்பேட்டையில் அருவாளை தூக்கிக் கொண்டு வந்தபோது எப்படி ஒர்க் அவுட் ஆகும்? என சிரித்தவர்கள்தான் அதிகம். 'எதுக்கு சிரிக்குறீங்கனு தெரியுது. நக்கலு. சிரிக்க வேணாம்னு சொல்லு' என அந்த படத்திலேயே அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். 'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என்பதைப் போன்ற கெத்து இது.

* திமிரு, வெயில், பருத்திவீரன் என தமிழ் சினிமாவே தென் தமிழகத்தை சலித்துக் கொண்டிருந்த நேரத்தில் தலைநகரை மையமாக வைத்து இரண்டு சினிமாக்கள் வெளியாகி வெற்றி நடை போட்டன. ஒன்று சென்னை 28, மற்றொன்று பொல்லாதவன். முதலாவதன் வெற்றிக்கு யுவன், வெங்கட் பிரபு, நட்சத்திர பட்டாளம், புதுவகை ட்ரீட்மென்ட் என பல காரணங்கள். பொல்லாதவனுக்கு தனுஷும், வெற்றிமாறனும். விரட்டிக் காதலிப்பவனாய், அப்பாவை தொட்டவனை அடிப்பவனாய் - யதார்த்த இளைஞன் அவன்.

* கொஞ்ச நாளைக்கு கமர்ஷியல் குதிரையில் பயணம். பின் மீண்டும் வெற்றிமாறன். இம்முறை மதுரை மண். பார்த்துச் சலித்த புழுதியில் கிடைத்த உலக சினிமா. கோட்டை தாண்டினால் சேவல் தோற்றுவிடும் என்பதைப் போல கொஞ்சம் மிஸ்ஸானாலும் போரடித்து விடக்கூடிய கனமான கதை. மொத்த கனத்தையும் அழுக்கேறிய பனியனோடு சுமந்தார் தனுஷ். விளைவு, தேசிய விருது. தன் மீதான எதிர்மறை விமர்சன சுனாமியில் ஸ்விம்மிங் செய்து தனுஷ் வாங்கிய தங்கமெடல் அது. 

* அதே ஆண்டின் இறுதியில் ஒரு சுபயோக சுபத்தினத்தின் நள்ளிரவில் பாடல் ஒன்று இணையத்தில் லீக்கானது. தமிழும் இல்லாமல் இங்கிலீஷும் அல்லாமல் தங்க்லீஷில் வெளியான அந்தப் பாடல் விடிந்தவுடன் உலக ஹிட் ஆகும் என அந்த ராத்திரியில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 'நடிக்கவே லாயக்கு இல்ல' என இகழப்பட்ட இளைஞன் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் எல்லாம் கலை குறித்து கெஸ்ட் லெக்சர் கொடுக்கக் காரணமாக அமைந்தது அந்த சிங்கிள் ட்ராக்.

DhanushCollage2.jpg

* உலக மீடியாவே மொய்க்கத் தொடங்கிய பிறகு பாலிவுட் மட்டும் சும்மா இருக்குமா என்ன? கொத்திக் கொண்டு பறந்தார்கள். சுறுசுறு துறுதுறு இளைஞனாய் ராஞ்சனாவில் அவர் அசத்த, கிடைத்தது இமாலய வாய்ப்பு. பிக் பியுடன் பாலிவுட் படம். ஷமிதாப். எந்த சீனிலும் அமிதாப் மட்டும் தெரிந்துவிடாதபடியான நேர்த்தியான நடிப்பு அது. வாய்பேச முடியாதவராய் இவர் நடித்த நடிப்பில், ஊமையாய் நின்றார்கள் பாலிவுட் பாட்ஷாக்கள்.   'நாம் விமர்சித்த மீசை இல்லா இளைஞன் இல்லை இது' என விமர்சகர்கள் இப்போது உணர்ந்திருந்தார்கள்.

* மயக்கம் என்ன, 3, மரியான் என க்ளாசிக் இன்னிங்க்ஸ் ஆடியாயிற்று. இறங்கி அடிக்க வேண்டிய நேரமிது. வேலை இல்லா பட்டதாரியாய் வந்தார். இன்ஜினியரிங் படித்த வேலை இல்லா இளைஞன், வீட்டில் வசவு வாங்கிவிட்டு வெளியே உதார் விடும் தோரணை, பக்கத்துவீட்டு ஏஞ்சலை ஏக்கமாய் பார்ப்பது, வாய்ப்பு மட்டும் கிடைக்கட்டும், அப்புறம் பாரு என்ற வீராப்பு என திரையில் இருந்தது சாட்சாத் நாங்கள்தான். தனுஷ் ஒவ்வொரு அடிக்கும் திமிறும்போதெல்லாம் குதித்தது எங்கள் குருதியும்தான்.

* 'கலர் முக்கியமில்ல, களையும் திறமையும் இருந்தா போதும்' என சூப்பர் ஸ்டார் போன தலைமுறையில் மாற்றி அமைத்த விதியை 'அட.. எதுவும் தேவையில்ல, திறமை இருந்தா போதும்' என நவீனப்படுத்தியது தனுஷ். 'நான் ஹீரோவானது ஆட்டோக்காரரும், ரிக்‌ஷாக்காரரும் ஹீரோ ஆன மாதிரி' - இது அவரது வார்த்தைகள். சாமானியனும் ஹீரோவாய் உணரத் தொடங்கியது இந்த மாற்றத்தினால்தான்.

* நடிச்சாச்சு, சம்பாதிச்சாச்சு, செட்டில் ஆயாச்சு என்றில்லாமல் நண்பனான சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கி எதிர்நீச்சல் தயாரித்தது முதல் காக்கா முட்டை, விசாரணை போன்ற புதிய முயற்சிகளுக்கும் தயாரிப்பாளராய்த் தோள்கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

* தேனிக்காரர், தேர்ந்த நடிகர் என்பதை எல்லாம் தாண்டி தனுஷை பிடிக்கக் காரணம் இருக்கிறது. ஒல்லியாய் கன்னம் ஒட்டி திரிபவர்களை கொஞ்ச காலம் முன்புவரை 'ஓமக்குச்சி நரசிம்மன், தயிர்வடை தேசிகன்' என்றுதான் கிண்டலடிப்பார்கள். அப்போதெல்லாம் கூனிக் குறுகிய உடல் இப்போது, 'மனசுக்குள்ள பெரிய தனுஷுனு நினைப்பு' என பிறர் சொல்லும்போது நிமிர்ந்து அமர்கிறது. அதற்காகவே 'லவ் யூ தனுஷ்'.

உங்களிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம் தனுஷ்!

பிறந்தநாள் வாழ்த்துகள் ப்ரோ!

 

vikatan

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

 

p201.jpg

ஒப்புதல்:

``நான்தான் இந்தக் கொலையைப் பண்ணேன்’’ - போலீஸ் அடியைத் தாங்க முடியாமல் ஒப்புக்கொண்டான் முருகன். 

- அபிசேக் மியாவ்.


p202.jpg

காரணம்:

``படம் நல்லாதானே இருக்கு. ஏன் ஓடலை?’' என்றார் குமார், திருட்டு சி.டி-யில் படம் பார்த்துவிட்டு. 

- விகடபாரதி


p203.jpg

அந்த ஒருவன்:

``பைக்ல மூணு பேர் போகக் கூடாது, இறங்குங்கடா!'' என டிராஃபிக் போலீஸ் சொன்னவுடன் அதிர்ச்சியடைந்த மூவரில் ஒருவன் சொன்னான், ``மச்சி, நம்ம குமார் எங்கேயோ விழுந்துட்டான்போலடா.” 

- ஜெய்


p204.jpg

வேகம்:

`தூக்குத் தண்டனை குறித்த கருணை மனு மீது வேகமாக முடிவெடுக்க வேண்டும்’ என அரசுக்கு உத்தரவிட்டது, தூக்குத் தண்டனை விதிக்க பதினெட்டு வருடங்கள் எடுத்துக்கொண்ட நீதித் துறை.

- அஜித்


p205.jpg

சாக்லேட்:

டிக்கெட் கொடுத்துவிட்டு மீதி சில்லறைக்கு சாக்லேட் கொடுத்த கண்டக்டரை ஏறிட்டுப் பார்த்தான், மெடிக்கல் ஷாப் மகேந்திரன்.

- சி.சாமிநாதன்


p206.jpg

விளையாட்டு:

``ஒரு கேம்கூட முழுசா விளையாட முடியலை. சார்ஜ் இறங்கிடுது. வேற செல் மாத்துப்பா’’ என்றது குழந்தை.

- பெ.பாண்டியன்


p207.jpg

மறந்த கதை:

``நான் இந்தக் கதையை அப்பவே யோசிச்சேன். ஆனால், அனுப்ப மறந்துட்டேன்’’ என டீ குடித்தபடி `10 செகண்ட் கதை’யில் வந்த கதையைப் படித்துவிட்டுச் சொன்னான் முத்தமிழரசன்.

 - டி.கிருஷ்ணகுமார்


p208.jpg

நடுக்கம்:

குழந்தை, பேய் பட சி.டி-யைக் கையில் எடுத்ததும், தாத்தாவும் பாட்டியும் நடுங்கினர்... `மறுபடியும் பார்க்க வேண்டுமே!' என.

- கி.ரவிக்குமார்


p209.jpg

லைக்ஸ்:

கணவன் `நல்லாவே இல்லை’ எனச் சொன்ன சமையலுக்கு, ஃபேஸ்புக்கில் 500 லைக்ஸ் வாங்கினாள் மாலினி.

- அபிசேக் மியாவ்


p2010.jpg

பில்டிங் கணக்கு:

`ஸ்கூல் யூனிஃபார்மை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு கலர்னு மாத்திட்டா, யூனிஃபார்ம் சேல்ஸ்ல அடுத்த பில்டிங்கே கட்டிடலாம்’ - கணக்கு போட்டார் பள்ளி முதலாளி.

- கி.ரவிக்குமார்

vikatan

  • தொடங்கியவர்
பலஸ்தீன பாரம்பரிய ஆடைகள் மற்றும் மரபுரிமைத் தின நிகழ்வுகளில்...
 

பலஸ்தீன பாரம்பரிய ஆடைகள் மற்றும் மரபுரிமைத் தின நிகழ்வுகள் பலஸ்தீனத்தின் மேற்குக் கரையிலுள்ள ஹத்தாத் கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றன.

 

1472016-07-25T142150Z_440827919_D1BETRPW

 

1472016-07-25T142250Z_1651063691_D1BETRP

 

1472016-07-25T142606Z_1709130571_D1BETRP

 

1472016-07-25T142613Z_502343074_D1BETRPW

 

இந் நிகழ்வில் நடனக் கலைஞர்கள் நடனமாடுவதையும் பெஷன் ஷோ ஒன்றில் பங்குபற்றிய பெண்கள் சிலரையும் படங்களில் காணலாம்.

 

147135540213_13107039511n.jpg

 

147135540213_13107039531n.jpg

metronews.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.