Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஒலிம்பிக்: ஒரு வேளை சாப்பாட்டுக்காக உலகச் சாம்பியன் ஆன உசேன் போல்ட்!

குட்டி உசேனுக்கு ஓட மட்டும்தான் தெரியும். எங்கே சென்றாலும் ஓட்டமும் சாட்டமும்தான். ஒருநாள் பள்ளிக்கு புறப்படுகிறான் உசேன். லஞ்ச் பேக்கை மறந்து விடுகிறான். வழி நெடுகிலும் ஓட்டம்தான். உசேனை விரட்டிய நாய் தோற்றுப்போய் விடுகிறது. போகிற போக்கில்  கால்பந்து களத்திற்குள் புகுந்து, மின்னல் வேக 'கிக்' விடுகிறான் உசேன்.

மீண்டும் பள்ளியை நோக்கி ஓட்டம். பள்ளிக்கருகில்,  விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் மீது மோதி விட்டு நொடியில் மறைந்து விடுகிறான்.  உசேனின் வேகத்தை பார்த்து ' வாவ் ' என மிரண்டு போகிறார் அவர். அவருக்கு ஏதோ  பொறி தட்டுகிறது.

             

மதிய வேளை. லஞ்சுக்கு பெல் அடித்தாகி விட்டது. உசேன் பையை பார்க்கிறான். லஞ்ச் பேக் இல்லை. மற்ற குழந்தைகள் சாப்பிட,  உசேனுக்கு பசி காதை அடைக்கிறது. காலையில் அவனை பார்த்த கோச், உணவு பேக்குடன் சாப்பிட வருகிறார். உணவு பேக்கைத் திறக்கிறார். உசேன் மூக்கை வாசம் துளைக்கிறது. ஆனாலும் என்ன செய்ய... பரிதாபமாக ஒரு மூலையில் போய் உட்காருகிறான்.

காலையில் இருந்தே அந்த கோச், உசேனின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார். உசேன் சோர்வுடன் அமர்ந்திருப்பது தெரிகிறது. உசேனிடம் போகிறார் . ''என்ன உசேன் சாப்பாடு கொண்டு வரவில்லையா..." எனக் கேட்கிறார். உசேன் பரிதாபமாக முழிக்கிறான்.  அப்போது அருகில் நிற்கும் ஓட்டப்பந்தய வீரரைக் காட்டி, ''சரி...  அந்த ஓட்டப்பந்தய வீரரை நீ முந்தி விட்டால், உனக்கு  எனது உணவைத் தருகிறேன் '' என்கிறார். உசேன் ஒப்புக் கொண்டு அந்த வீரனுடன் ஓடத் தொடங்குகிறான்.

முதலில் உசேனால் முடியவில்லை. திரும்பிப் பார்க்கிறான். அப்போதும் கோச்  உணவைக் காட்ட,  உற்சாகமாகி உசேன் மீண்டும் ஓடுகிறான். இந்த முறை அவனால் ஜெயிக்க முடிகிறது . கோச், உணவுத் தட்டை அவனை நோக்கி நீட்டுகிறார். இந்தமுறை அவனிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்.  ''உசேன் நீ ஒரு ஜாம்பவானாக உருவெடுக்க வேண்டுமா அல்லது இந்த உணவுத் தட்டுடன் அடங்கி விடுகிறாயா'' என்கிறார்.

குட்டி உசேனுக்கு அவரது கேள்வி உறுத்துகிறது. உணவைத் திருப்பி கொடுத்து விடுகிறான். மீண்டும் ஓடத் தொடங்குகிறான். ஓடிக்கொண்டேயிருக்கிறான்.

ஒலிம்பிக் சாம்பியன் உசேன் போல்ட்டின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும், ''The boy who learned to fly ''என்று குறும்படத்தின் கதை இது. இந்த அனிமேஷன் குறும்படம்  நிச்சயம் பல குழந்தைகளை கவரும்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13730890_1089847954397231_15879241639415

சர்வதேச கிரிக்கெட்டில் இன்று வரை உலகின் மிகச் சிறந்த சகலதுறை வீரராகக் கருதப்படும் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான சேர். கார்ஃபீல்ட் சோபர்ஸின் பிறந்தநாள் இன்று.

8032 Test runs and 235 wickets

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற ஆட்டமிழக்காத 365 ஓட்டங்கள் மிக நீண்ட காலமாக ஒரு இன்னிங்க்சில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.
முதல்தரப் போட்டிகளில் ஒரு ஓவரில் ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர் அடித்த சாதனையும் இவர் வசமுள்ளது.

இலங்கை டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆரம்பகாலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் சோபர்ஸ் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

வாழ்த்துக்கள் கிரிக்கெட்டின் சரித்திர புருஷருக்கு.
Sir Garfield Sobers
 
  • தொடங்கியவர்

வைரல் போட்டோஸ்#bestoftoday

இது  எமி ஜாக்சன் க்ளிக்!

V_1.jpg

 

அருண் விஜயின் தெய்வத் திருமகள்!

V_2.jpg

 

பில் கிளின்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிலாரியைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்...

V_3a.jpg

 

நேற்று சந்தோஷ் சிவனின் அம்மாவுக்கு ஹேப்பி பர்த்டே...

V_4.jpg

 

நந்திதா..சும்மா ஒரு பிரிஸ்மா செல்ஃபி...

V_5.jpg

 

ஃபிலடெல்ஃபியாவில் பிரசாரத்தின் போது ஒபாமா...

V_6.jpg

 

போலந்தில் போப் பிரான்ஸிஸ் தவறி விழுந்தது வைரல் ஆனது.

V_7.jpg

 

பிரகாஷ்ராஜ் தனது கிராம மக்களுக்கு உதவிகள் வழங்குகிறார்.

V_8.jpg

 

புத்தகயாவில் ராதிகா சரத்குமார்...

V_9.jpg

 

அரிய வகை திமிங்கலம் கண்டுபிடிப்பு

V_10.jpg

 

சச்சின் தனது ஐஃபோனுடன் ஜாலி கிளிக்...

V_11.jpg

 

உலகின் சோகமான போலார் பியர், சீனாவில் பார்வைக்கு...

V_12.jpg

 

சவுந்தர்யா ரஜினிகாந்த், தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி ட்விட்டிருந்தார்.

V_13.jpg

 

தென்னாப்பிரிக்காவின் விலங்கியல் பூங்காவில் ஒரு டைமிங் கிளிக்...

V_14.jpg


டெனாசியஸ் என்ற இந்த கப்பல்தான் உலகின் மிகப்பெரிய மரக்கப்பல். பிரிட்டனில் இருந்து சிட்னிக்கு ஒன்பது மாதத்தில் பயணம் செய்து முடித்திருக்கிறது.

V_15.jpg

 

தெலுங்கு 'தீக'  படத்தில் தனுஷைத் தொடர்ந்து சிம்புவும் பாடியிருக்கிறார்.

V_16.jpg


வியட்னாமில் கடும் மழைக்காரணமாக சுமார் 500 மரங்கள் வீழ்ந்திருக்கின்றன...

V_17.jpg

 

vikatan

  • தொடங்கியவர்

சர் கார்ல் ரைமன்ட் பொப்பர்

 
10_2949167h.jpg
 

ஆஸ்திரிய - பிரிட்டன் தத்துவ அறிவியலாளர்

ஆஸ்திரிய - பிரிட்டன் தத்துவவாதியும், பேராசிரியரும் 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவ அறிவியலாளர்களில் ஒருவருமான சர் கார்ல் ரைமன்ட் பொப்பர் (Sir Karl Raimund Popper) பிறந்த தினம் இன்று (ஜூலை 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l வியன்னாவில் யூதக் குடும்பத்தில் பிறந்தவர் (1902). தந்தை தொழில் முறையில் பாரிஸ்டராக இருந்தாலும் பாரம்பரிய மொழிகள் மற்றும் தத்து வத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். தனது தனிப்பட்ட நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார்.

l சமூகம் மற்றும் அரசியல் பிரச்சினை களில் தன் மகனுக்கும் ஆர்வம் ஏற்படச்செய்தார். தாய் தன் மகனுக்கு இசை ஆர்வத்தை விதைத்தார்.

l 16 வயதில் பள்ளிப் படிப்பு முடித்த இவர், வியன்னா பல்கலைக்கழகத் தில் கணிதம், இயற்பியல், தத்துவம் பயின்றார். 1919-ல் மார்க்சியக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பள்ளி மாணவர்களின் சோஷலிசக் கழகத்தில் சேர்ந்தார். ஆஸ்திரிய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியிலும் இணைந்தார். பின்னர் அதிலிருந்து வெளியேறி தாராளவாத ஜனநாயகத்தின் தீவிர ஆதரவாளராக மாறினார்.

l சிறுவயது முதலே எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். சமூகவியல் திறனாய்வுக் (சோஷியல் கிரிடிசிசம்) கொள்கைகளை ஆதரித்தார். 1928-ல் தத்துவப் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்குவதில் இவருக்குத் தடுமாற்றம் இருந்தது.

l சிறுவர்களுக்கான உளவியல் நிபுணர் ஒருவரின் மருத்துவமனையில் உதவியாளராகச் சில காலம் பணியாற்றினார். தொடக்கக் கல்வி டிப்ளமோ பட்டம் பெற்றார், பின்னர் மேல்நிலைப் பள்ளிகளில் கணிதம், இயற்பியல் கற்பிப்பதற்கான தகுதிப் படிப்பையும் முடித்தார்.

l உளவியலில் அதுவரை நிலவிவந்த உளநிலைப் பகுப்பாய்வுக் கொள்கை அறிவியல் அடிப்படையில் இல்லை எனக் கூறி அதை ஏற்க மறுத்து, அதற்குப் பதிலாக அறிவியல் முறையில் நிரூபிக்கத்தக்க கோட்பாட்டை முன்வைத்தார். 1934-ல் ‘தி லாஜிக் ஆஃப் சயின்டிஃபிக் டிஸ்கவரி’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். இதில் அறிவியலையும், அறிவியல் அல்லாதவற்றையும் வேறுபடுத்திக்காட்டும் (demarcation) கோட்பாட்டை நிறுவினார்.

l 1937 முதல் 1945 வரை நியூசிலாந்தில் உள்ள சென்டர்பரி பல்கலைக்கழகக் கல்லூரியில் தத்துவப்பாட ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போதுதான் ‘தி ஓபன் சொசைட்டி அன்ட் இட்ஸ் எனிமீஸ்’ என்ற தனது உலகப் புகழ் பெற்ற நூலை எழுதினார். 1946-ல் இங்கிலாந்து திரும்பிய இவர், லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் விரிவுரையாளராக நான்காண்டுகள் பணியாற்றினார்.

l இந்தக் காலகட்டத்தில் அறிவியல் தத்துவவாதியாகவும் சமூக சிந்தனையாளராகவும் புகழ்பெற்றார். ‘லாஜிக் அன்ட் சயின்டிஃபிக் மெத்தட்’ பேராசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். 1969-ல் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார்.

l தன் சிந்தனைகளை நூல்களாக வடித்தார். ‘ஓபன் சொசைட்டி அன்ட் இட்ஸ் எனிமீஸ்’, ‘தி பாவர்ட்டி ஆஃப் ஹிஸ்டோரிசிசம்’, 3 தொகுதிகளாக வெளிவந்த ‘போஸ்ட்ஸ்கிரிப்ட் டு தி லாஜிக் ஆஃப் சயின்டிஃபிக் டிஸ்கவரி’ உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். 1965-ல் இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது.

l 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவவாதிகளுள் ஒருவரான சர் கார்ல் ரைமன்ட் பொப்பர் 1994-ம் ஆண்டு 92-வது வயதில் மறைந்தார். இவரது மரணத்துக்குப் பிறகு இவரது கையெழுத்துப் பிரதிகள் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டன. இவரது நூலகத்தில் இருந்த நூல்கள் ஆஸ்திரிய கிளாகன்புர்ட் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டன.

tamil.thehindu

  • தொடங்கியவர்

சுட்டது நெட்டளவு: சாமர்த்தியம்

 

 
 
net_2947935f.jpg
 

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சுக்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவுக்கு சிறந்த வீரன்.

அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான். மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது எலி. மனம் உடைந்து போனான் இளவரசன்.

அப்போது அங்கு வந்த அரசர் “ஏன் சோகமாக இருக்கிறாய்?” எனக் கேட்க, “இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!” என்றான்.

மன்னர் சிரித்துவிட்டு “எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டுவந்தாலே போதுமே!” என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்துச் சென்றது. இப்போது இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். “என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அரசர் நடந்ததைக் கூறினார். அதற்கு, “நம் நாட்டு பூனைகள் எதற்கும் லாயக்கில்லை. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலியளவு உயரம் கொண்டவை. எனவே அங்கிருந்து வரவழைப்போம்” என்றார் மந்திரி. உடனே அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக் கப்பட்டன.

ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. ‘எலிக்கு இவ்வளவு திறமையா!’ என அனைவரும் வியந்தனர். அப்போது அங்கே இருந்த அரண்மனைக் காவலன் “இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதற்கு? எங்கள் வீட்டுப் பூனையே போதும்” என்றான்.

மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. “அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது, சாதாரண வீட்டுப் பூனையால் முடியுமா?” என்றார்.

இளவரசர் அவரை இடைமறித்து, “சரி... எடுத்து வா உனது பூனையை” என்றார்.

வீட்டுக்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் ‘லபக்’ என்று கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம்.

ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது என்று வியந்தார். இதுபற்றி காவலனிடம் கேட்டார்.

அதற்குக் காவலாளி “என் பூனைக்கு பெரிதாக திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்” என்றான்.

உடனே இளவரசருக்கு சுரீர் என்றுரைத்தது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்றால் என்னவெற்று தெரிய வாய்ப்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்க முடியும்?.

ஆக, எந்த ஒரு வேலையையும் வெற்றி கரமாகச் செய்து முடிக்க வேண்டுமென் றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும் என்பதை இளவரசர் தெரிந்து கொண்டார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

வெப்பத்தைத் தணிக்கும் பலே பறவை!

 

  • ______________1_2947902g.jpg
     
  • _______________2947903g.jpg
     

வெப்பநிலை ஒரு செல்சியஸ் கூடினாலும்; குறைந்தாலும் அதை உடனே கண்டுபிடித்துவிடும் ஒரு பறவை இருக்கிறது. அந்தப் பறவை எது என்று உங்களுக்குத் தெரியுமா? அந்தப் பறவையின் பெயர் ஃபிரஸ் டர்க்கி. நம்மூரில் வான்கோழி என்று சொல்வோமில்லையா? அந்தப் பறவையின் வகைதான் அது!

‘ஃபிரஷ் டர்க்கி’ பறவைகள் ஆஸ்திரேலியாவில் நிறைய உள்ளன. இந்தப் பறவை முட்டைகளை மிகச் சரியாக 33 டிகிரி செல்சியஸில் வைத்துப் பாதுகாக்கும். இதற்காகவே பெண் பறவை ஒரு மண் மேட்டை உருவாக்கும். அதைச் சுற்றித்தான் முட்டை போடும். முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளியே வர ஆறு மாதங்கள் வரை ஆகிவிடும். இந்த ஆறு மாதங்களும் மண் மேட்டின் வெப்பநிலையை இரவும், பகலும் சீராக வைத்துக்கொள்ளும்.

கோடை காலமாக இருந்தாலும் சரி; குளிர்காலமாக இருந்தாலும் சரி வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்வது ஆண் பறவையின் கடமை. வெப்பம் கூடும்போது மண்மேட்டில் காற்றுத் துளைகளை ஆண் பறவை இடும். இன்னும் வெப்பம் கூடினால் முட்டையைக் குளிர்ந்த மணலால் மூடிவைக்கும்.

இந்தப் பறவை வெப்பநிலையை எப்படி உணர்ந்துகொள்கிறது? தன் தலை, பாதங்கள், அலகினால் தட்ப வெப்பநிலை மாற்றத்தை உணருவதாகச் சொல்கிறார்கள். இதுபற்றி ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

நம் நாட்டில் இந்தப் பறவை முட்டை போட்டால், அதைப் பாதுகாக்க, குளிர்சாதனப் பெட்டிதான் வேண்டும் போல!

tamil.thehindu

  • தொடங்கியவர்
ஆதிக்க வெறி ஆபத்தானது
 
 

article_1469678990-article_1468156964-3.முற்காலத்திலிருந்து எல்லா அரசர்களும் தங்கள் மேலாண்மையை வலியுறுத்த யுத்தங்களை வலிந்து வரவழைத்து மக்களைக் கொன்று குவித்துப் பேரரசுகளை உருவாக்கினார்கள்.

இந்தக் கோர நிலை இன்றும் தொடர்கின்றது. வெளிநாட்டு வல்லரசுகளிடையே மட்டுமல்லƒ உள்நாட்டு யுத்தங்களும் ஆளும் வர்க்கத்தினர் தங்களை ஸ்திரப்படுத்த யுத்தங்களை அரங்கேற்றுகின்றனர்.

பெரும் வனங்களிலும் இதே நிலைதான். இந்தக் காடுகளில் புலிகள், கரடிகள், நரிகள் என மிருக இனங்கள் அழிந்து போக சிங்கங்களே காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தச் சிங்கங்கள் இவைகளை சாப்பிடுவதற்காகக் கொல்வதில்லை. தங்கள் ஆதிக்கத்தை வலியுறுத்தவே இவ்வாறு செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆதிக்க வெறி ஆபத்தானதுƒ எய்தவரையும் கொல்லும். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 29
 

1%282791%29.jpg1948: இரண்டாம் உலக யுத்தம் காரணமாக, 1936 ஆம் ஆண்டுக்குப் பின் நடைபெறாதிருந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டி லண்டனில் மீண்டும் ஆரம்பமாகியது.

1957: சர்வதேச அணுசக்தி முகவரகம் ஸ்தாபிக்கப்பட்டது.

1958: நாசா நிறுவனத்தை அமைப்பதற்கான சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டி.ஐசனோவர் கையெழுத்திட்டார்.

1967: வெனிசூலாவில் பூகம்பத்தினால் 400 பேர் பலி.

1981: பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் - டயானா திருமணம் நடைபெற்றது.

1987: ஆங்கிலக்கால்வாய்க்கு அடியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தல் பிரித்தானிய பிரதமர் மார்கரெட் தட்சர், பிரெஞ்சு ஜனாதிபதி மிட்டரான்ட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

1987: இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான இந்திய -இலங்கை ஒப்பந்தத்தில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் கையெழுத்திட்டனர்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூலை 29: உலக புலிகள் தினம் இன்று..

உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன

மனிதச் செயற்பாடுகளின் காரணமாக எடுத்துக்காட்டாக வேட்டையாடுதல், வாழிடங்களை அழித்தல் போன்றவற்றால் புலிகள் உலகில் அழிந்து வரும் விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு புலிகளைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

2010ம் ஆண்டு இந்தியாவில் 1,706 புலிகள் இருந்தன. தற்போது பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் பயனாக 30% அதிகரித்து 2,226 புலிகள் உள்ளன. உலக புலிகள் எண்ணிக்கையில் இது 60% ஆகும்

13620219_1188659351192853_45904928802506

  • தொடங்கியவர்

தினசரி இந்த 10 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்! #DailyMotivation

வேலை, குடும்பம், சமூகம் என பல வேலைகளில் நாம் பிஸியாக இருக்கிறோம். இதுபோன்ற சமயங்களில் நாம் செய்யும் சில செயல்கள் நம் உடல் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கிறது. இதனை எளிதாக தவிர்க்கலாம். இதனை தவிர்க்க 10 வழிகள் இதோ...

1. வேலை செய்யும் இடத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காதீர்கள். கொஞ்சம் ரிலாக்ஸாக அலுவலகத்துக்குள் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். காபி மிஷினில் காபி அருந்துவது. க்ளைண்ட் அழைப்பை ரிலாக்ஸ் ரூமில் இருந்த படி பேசுவது போன்றவைகளை உங்கள் இருக்கையை விட்டு நகர்ந்து செல்வதற்கான காரணங்களாக்கி கொள்ளுங்கள்.

mrw animated GIF


 

2. அலுவலகத்தில் லிஃப்ட் வசதி இருந்தால் தயவு செய்து காலையில் மட்டும் அதனை பயன்படுத்தாதீர்கள். முடிந்த வரை சீக்கிரம் வந்து படிகளில் ஏறி செல்வதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களை முழு கவனத்தையும் வேலையில் செலுத்த உதவி செய்யும்.

 

stairs animated GIF


3. மாலை வீட்டுக்கு செல்லும் போது உங்கள் வாட்டர் பாட்டில் காலியாக உள்ளதா என்பதை செக் செய்யுங்கள். இல்லை என்றால் உங்கள் உடலுக்கு கட்டாயம் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னை வரும். அதனால் அதிகமாக தண்ணீர் அருந்துங்கள்.


water animated GIF

4. முழு கவனத்துடன் பணிபுரிய வேண்டும் என்று எப்போது ஹெட்போனுடன் இருக்காதீர்கள். அது உங்கள் கேட்கும் திறனை பலவீனமாக்கும். ஹெட்போனை தவிப்பது நல்லது.

 

scissors animated GIF

5.இரவு பணி முடிந்து அதிக நேரம் கழித்து உறங்க செல்லாதீர்கள். குறைந்த பட்சம் 7-8 மணி நேர தூக்கத்தை உறுதி செய்யுங்கள்.

The Grinder animated GIF

6. உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பணி செய்யும் இடத்திலேயே சாப்பிடாதீர்கள் அது முதுகு தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அதனால் அமைதியாக‌ உணவருந்துங்கள். கூடிய மட்டும் வீட்டு உணவை சாப்பிடுங்கள் வெளி உணவை தவிர்ப்பது நல்லது.

 

seinfeld animated GIF

7. அதிகமாக யோசிக்காதீர்கள். வேலை, குடும்பம், நண்பர்கள், காதல் இந்த விஷயங்களில் எல்லாம் அதிகமாக யோசித்து வெறுப்பாகாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்தது போல் யாரும், எதுவும் நடக்கவில்லை என்றால் கூலாக விடுங்கள். அதிகம் யோசித்தால் மூளையின் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

Party Down South animated GIF

 

8. புதிய பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள், புத்தகம் படிப்பது, படம் வரைவது, வாக்கிங் செல்வது போன்ற தொழில்நுட்பம் தொடர்பில்லாத விஷயங்களாக இருக்க வேண்டும் அது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பெருக்கும்.


cat animated GIF

9. உங்கள் உணவில் ஒரு பழத்தை கண்டிப்பாக சேர்த்து கொள்ளுங்கள். அது சிற‌ந்த உணவு முறைகளில்  ஒன்று. 

food animated GIF


10. சமூக வலைதளங்களுக்கு குட் நைட் சொல்ல பழகுங்கள். இரவு 9 மணியோடு சமூக வலைதளங்களைவிட்டு குடும்பத்தோடு செலவிட வேண்டும் என முடிவெடுங்கள். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிறிய இடைவேளைகளில் சமூக வலைதளங்களை அணுகுங்கள். அது உங்களை கிரியேட்டிவாக சிந்திக்க வைக்கும்.

 

facebook animated GIF

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நீங்கள் கடைசியாக எப்போது மழையில் நனைந்தீர்கள்?

vijivc1.jpg

நீங்கள் கடைசியாக எப்போது மழையில் நனைந்தீர்கள்? கடைசியாக எப்போது ஒரு செடிக்கான விதையை மண்ணில் விதைத்தீர்கள்? கடைசியாக எந்த ஞாயிற்றுக் கிழமை ஆசுவாசமாய் சமைத்து சாப்பிட்டுவிட்டு குட்டித் தூக்கம் போட்டீர்கள்? கடைசியாக என்று குடும்பத்துடன் மொட்டைமாடி நிலவொளியில் பேசி மகிழ்ந்தீர்கள்? கடைசியாக என்று வேப்பமரத்தடி நிழலில் இளைப்பாறினீர்கள்? கேள்விகளுக்கும் இதைத் தொடரும் பல நூறு கேள்விகளுக்கும் நம்மிடையே இருக்கும் பதில் ஞாபகமில்லை என்பதுதான்.

அந்தளவிற்கு நம்முடைய வாழ்க்கையை செல்போன்களும், சமூக வலைதளங்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. காலையில் எழுந்து, பேப்பரில் அன்றைய செய்திகளைப் படித்துவிட்டு, சில இட்லிகளைப் பிய்த்து வயிற்றுக்குள் போட்டுவிட்டு, கையில் ஒரு தயிர் சாதத்தையோ, பிரியாணியையோ கட்டிக் கொண்டு வேலைக்குச் சென்றதெல்லாம் இனி கதைகளில் மட்டுமே சாத்தியம்.

ரோட்டில் நடந்து போகும், காரில், பேருந்தில், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் எல்லோருக்குமே வங்கியில் கணக்கிருக்கிறதோ இல்லையோ ஃபேஸ்புக்கில் கண்டிப்பாக ஒரு அக்கவுன்ட் இருந்தே தீரும். இங்கு எல்லோருமே நாட்டாமைகள், எல்லோருமே நியாயவாதிகள், எல்லோருமே தீர்க்கதரிசிகள், எல்லோருமே கருத்துக் கணிப்பாளர்கள்.

நான்கிற்கு நான்கு அடி சிறைக்குள் அடைப்பட்டு கிடக்கும் கைதிகளை விட,  இன்றைக்கு நாமெல்லோருமே கணினியின் ஊடே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கற்பனை உலகிற்குள்தான் சிக்கிக் கொண்டிருக்கின்றோம். 

பொய்கள், புரளிகள், எதிர்மறைக் கருத்துகள், எல்லாவற்றுக்கும் சண்டை என நிலைத்தகவல்களால் ஏற்படும் மோதல்களை பார்த்தால்,  வடிவேலு  பட காமெடியைப் போல, ‘தம்பி இது ரத்த பூமி’ என்றுதான் தினம்தினம் சமூக வலைதளத்தின் பொழுது விடிகிறது.

HF_1.jpg

எளிமையாக வாழ்வினை அணுகாமல், அதைச் சிக்கலாக்கிக் கொள்ளும் வகையிலான நட்புகளும், தோழமைகளும்தான் இன்றைய டிஜிட்டல் உலகில் அதிகம். 'சமூக வலைதளங்களால் எத்தனையோ நன்மைகளும் நடக்கின்றன என்பது உங்களுக்கு தெரியாதா' என்று கேட்கலாம் நீங்கள். அவையெல்லாம் ஒரு சோற்றுப் பதமாக அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடைபெறுபவை. நூற்றுக்கு 90 சதவீதம் இவற்றால் தீமைகள்தான் அதிகம்.

பக்கத்து வீட்டினருடன் அன்பாய் பழகிய நாட்களையும், தீபாவளி, பொங்கல் என்று குடும்பத்துடன் செலவழிக்கப்பட்ட விஷேச விடுமுறை தினங்களையெல்லாம் நாம் பழங்கதையாக்கி பலநாட்கள் ஆகிவிட்டன. கிட்டதட்ட எல்லோருமே இன்று அவரவருக்கான தனிமை உலகொன்றில்தான் தினசரி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றோம். எல்லோருடைய முகமும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்கின்ற ஆசையில், எத்தனையோவிதமான கோமாளித்தனங்களையெல்லாம் செய்கின்றோம்.

ஃபேஸ்புக்கும், ட்விட்டரும், பிரிஸ்மாவும், வாட்ஸப்பும் நம்மை வெறும் தலையாட்டிப் பொம்மைகளாய் மாற்றி வைத்திருக்கின்றன. கெளரவமான பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் கூட இந்த விளையாட்டுத் தனங்களில் இருந்து தப்புவதே இல்லை. மழை நேரத்தில் சொட்டச் சொட்ட நனைந்துவிட்டு, அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே, சூடாக பஜ்ஜியும், காப்பியும் சாப்பிட்ட நாட்கள் இனி திரும்பி வரப் போவதே இல்லை. கடைசிவரையில் ‘ஐ அம் என்ஜாயிங் ரெயின்’ என்ற ஸ்டேட்டஸ்கள் மட்டுமே  மழை நாளை, இறந்துபோன வைக்கோல் அடைக்கப்பட்ட கன்றுக்குட்டியாய் உலகின் முன்னே நிற்கவைக்கப் போகின்றது.

பக்கத்து வீட்டினருடன் கதை பேசி பொழுதைக் கழித்த அம்மாக்களும், காக்கா கதையும், முல்லா கதையும் சொன்ன பாட்டிமார்களும், சைக்கிளில் உட்கார வைத்து ஊர் சுற்றிக் காட்டிய மாமாக்களும், கிணற்றில் கயிறு கட்டி நீச்சல் பழகித் தந்த சித்தப்பாக்களும், மருதாணி அரைத்து கையில் வட்டவட்டமாய் இட்டு விட்டு அழகு பார்த்த அக்காக்களும் இனி கதை மாந்தர்களாகதான் இருப்பார்கள்.

சோஷியல் மீடியா அவசியமானது மட்டுமே...அத்தியாவசியம் அல்லவே அல்ல. இதை உணர்ந்தால் வாழ்க்கை, கை நிறைய நிரம்பி வழிந்த தேன்மிட்டாயாய் இனிக்கும். அல்லாது போனால், அலுமினியத் தாளில் சுற்றிய, என்றாவது ஒருநாள் மட்டுமே சாப்பிடத் தோதான சாக்லெட்டாக மட்டுமே வாழ்க்கை மாறிப் போகும்...திரும்பிப் பார்க்கும் போது அதுவும் கரைந்தோடி வழிந்து போயிருக்கும்...! 

மறுபடியும் முதல் பத்தியை படியுங்கள்.

 

vikatan

  • தொடங்கியவர்

கிங்சவூத் கிரிஷானுடன் Jaffna Boy


 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

p36a.jpg

* ரித்து ராணி. 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிக்கு இந்தியப் பெண்கள் அணி தகுதிபெற இவர்தான் காரணம். 24 வயதாகும் இந்த வீராங்கனை, சில நாட்களுக்கு முன்னர் வரை இந்தியப் பெண்கள் அணியின் கேப்டன். ஆனால், திடீரென ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மட்டும் அல்லாமல், அணியில் இருந்தே ரித்துவை நீக்கிவிட்டது இந்திய ஹாக்கி கமிட்டி. `என்னை அணியில் இருந்து நீக்கியதற்கு எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை. சிறந்த ஃபார்மில் முழுமையான ஃபிட்னஸுடன் இருக்கும் என்னை ஏன் அணியில் இருந்து நீக்கினார்கள் எனப் புரியவே இல்லை. ஹாக்கி கனவுகளோடு வளர்ந்த என்னை, இந்த அறிவிப்பு சிதைத்திருக்கிறது' எனப் புலம்புகிறார் ரித்து. ஆனால், ரித்து நீக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவே இல்லை. வேஸ்டட் டேலன்ட்!


p36b.jpg

*  கடந்த வாரம் முழுக்க அமெரிக்காவின் ட்விட்டர் ட்ரெண்டிங் பிரபலம் மெலானியா ட்ரம்ப். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியான மெலானியா, கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தில் பேசினார். அப்போது 2008-ம் ஆண்டு ஒபாமாவுக்காக அவரது மனைவி மிச்சேல் பேசிய அதே பேச்சை நடுவில் வார்த்தை பிசகாமல் மெலானியா பேச, சமூக வலைத்தளங்கள் எங்கும் மீம்ஸ்கள் பறந்தன. ஆரம்பத்தில் நான் காப்பி அடிக்கவில்லை. அவரது எண்ணமும் என் எண்ணமும் ஒன்றுபோல இருக்கிறது என மெலானியா சமாளிக்க, `தவறுதலாக நான்தான் மிச்சேல் ஒபாமாவின் பேச்சை, மெலானியாவின் பேச்சில் இணைத்துவிட்டேன்' என மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஸ்கிரிப்ட் ரைட்டர். மெலானியா கவனியா!


p36c.jpg

*  முதல் இந்தியராக `மிஸ்டர் வேர்ல்டு' பட்டம் வென்றிருக்கிறார் ரோஹித். 26 வயதான ரோஹித், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். ‘இந்த வெற்றியை என்னால் இன்னும் நம்ப முடிய வில்லை. என்னுடைய பல நாள் கனவு நனவாகியுள்ளது. இனி கொஞ்ச நாளுக்கு டயட்டை மறந்துவிட்டு நன்றாகச் சாப்பிடலாம்' என உற்சாகமாகியிருக்கிறார். மிஸ்டர் வேர்ல்டு பட்டம் வென்ற ரோஹித்துக்கு, 33 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. கூடவே இன்டர்நேஷனல்  விளம்பரங்களில் நடிக்க வாய்ப்புகளும் குவிகின்றன. அடுத்து டோலிவுட்டா... பாலிவுட்டா?


*  லகிலேயே அதிக பணியாளர்கள் கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது அமெரிக்கப் பாதுகாப்புத் துறை. 32 லட்சம் பேர் வேலைசெய்கிறார்கள். அடுத்தபடியாக சீன மக்கள் விடுதலை ராணுவத்தில் 23 லட்சம் பேர் இருக்கிறார்கள். உலகம் எங்கும் கிளைகள் கொண்டிருக்கும் வால்மார்ட் நிறுவனம், 21 லட்சம் பணியாளர்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்தியன் ரயில்வே, 14 லட்சம் ஊழியர்களுடன் எட்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய ராணுவம் 13 லட்சம் வீரர்களுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. வொர்க்ஃபோர்ஸ் வொண்டர்ஸ்!


p36d.jpg

* யூரோ கோப்பையை வென்ற உற்சாகத்தில் உலகின் செம காஸ்ட்லி காரான புகாட்டி வேரான் காரை வாங்கியிருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 12 கோடி ரூபாய் விலைகொண்ட இந்த கார்தான் உலகின் வேகமான காரும்கூட. இதன் டாப் ஸ்பீடு, மணிக்கு 420 கிலோமீட்டர். `இதை நான் கார் எனச் சொல்ல மாட்டேன். இது ஒரு மிருகம். வெற்றியைக் கொண்டாட நல்ல மிருகத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். கிடைத்துவிட்டது' என ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் ரொனால்டோ. விவேகமா வண்டி ஓட்டுங்க!


p36e.jpg

*  சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு பெளலிங் அட்வைஸர் இம்ரான் கான். பாகிஸ்தானுக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர்களுக்கு நெட் பெளலர் அர்ஜுன் டெண்டுல்கர். அங்கே அர்ஜுனின் பெளலிங்கைப் பார்த்த இம்ரான் கான், நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார். `அர்ஜுன், சரியான லைனில் பெர்ஃபெக்ட்டாக வீசுகிறார். நான் வலதுகை பந்துவீச்சாளர்; அவர் இடதுகை பந்துவீச்சாளர் என்பதுதான் வித்தியாசம். விரைவில் இந்திய அணியில் அர்ஜுனைப் பார்க்க ஆவலோடு இருக்கிறேன்' எனச் சிலிர்த்திருக்கிறார் இம்ரான் கான். ப்ரெளடு ஃபாதர்!


p36f.jpg

*  ஸ்திரேலியாவின் சூப்பர் மாடல் மிராண்டா கெர்கும், ஸ்னாப்சாட் அப்ளிக்கேஷனை உருவாக்கிய எவன் ஸ்பீகெல்லுக்கும் திருமணம். 26 வயதே ஆன எவன், அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க், ஸ்னாப்சாட்டை வாங்குவதற்காக பல கோடி டீல் பேசியபோதும் மறுத்த தில்லான இளைஞர் எவன், மிராண்டா கெர் மீது கண்டதும் காதல் கொண்டிருக் கிறார். `இரண்டு வருஷத்துக்கு முன்னர் ஒரு பார்ட்டியில் மிராண்டாவைப் பார்த்தேன். அவரது அழகும் பேச்சும் எனக்குப் பிடித்துவிட்டது' என, தனது காதலைச் சொல்லியிருக்கிறார் எவன். மகிழ்ச்சி!


*  `வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் பஞ்சாப் மாநிலத் தேர்தலில், ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்' எனக் கருத்துக் கணிப்புகள் வெளியாகிவரும் நிலையில், பா.ஜ.க-வில் இருந்து விலகியிருப்பதோடு, எம்.பி பதவி யையும் ராஜினாமா செய்திருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. `முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்காகத்தான் சித்துவை அழைத்துவந்திருக்கிறது.சொந்தக்கட்சியில் இருந்து வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் மாற்றுக்கட்சியில் இருந்து ஆள் பிடிக்கும் கட்சியா ஆட்சியைப் பிடிக்கப்போகிறது?' என ஆம் ஆத்மியை காங்கிரஸ், பா.ஜ.க இரண்டு கட்சிகளும் கண்டபடி விளாசுகின்றன. சித்து=சர்ச்சை!

vikatan

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: 'கபாலி' வெளியீடும் தமிழ் ராக்கர்ஸ் மன்னிப்பும்!

 

 
2_2951111f.jpg
 

 

9_2951101a.jpg

8_2951104a.jpg

7_2951105a.jpg

5_2951108a.jpg

4_2951109a.jpg

3_2951110a.jpg

1_2951112a.jpg

 

tamil.thehindu

  • தொடங்கியவர்

p32a.jpg

ம்பை, ஊர்வசி, மேனகையாக மூன்று (சினிமா) லோக தேவதைகள் இவர்கள்..!

டோலிவுட் நிஹாரிகா கொனிடெலா

ந்த தெலங்கானா தென்றல், டி.வி தொகுப்பாளினியாகி சினிமாவுக்கு வந்தது. ஈ டி.வி-யில் ‘தி ஜூனியர்ஸ் சீசன் 1’ மற்றும் ‘தி ஜூனியர்ஸ் சீசன் 2’ எனப் பட்டையைக் கிளப்பிய ஷோக்களுக்கு மேடம்தான் காம்பியரிங். ‘பிங் எலிபென்ட் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘முத்தபப்பு ஆவக்காய்’ என்ற டெலிஃபிலிம் எடுத்து யூ டியூபில் ஹிட் அடித்தார். நாக சௌர்யாவோடு ‘ஒக்க மனசு’ என்ற படம் கடந்த ஜூனில் ரிலீஸாகித் தோல்வி கண்டது. ஆனாலும், படத்தில் அம்மணியின் தாராளமயமான கனவுக் காட்சிகளால் இப்போது அரைடஜன் படங்கள் கைவசம். அதில் பெயரிடப்படாத தமிழ்ப்படமும் ஒன்று. எங்க மனசு நிஹாரிகாவுக்குத்தான்!

சாண்டல்வுட் ரக்‌ஷர் மிர்

p32b.jpg

பெங்களூரில் சமையல் கலை விற்பன்னராக முயற்சி செய்தவரை காலம் சினிமாவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் மாடலிங்கில் ஆர்வம் இருந்தவரை வீட்டில் படிக்கச் சொல்ல ‘ஹோட்டல் மேனேஜ்மெண்ட்’ படித்தார். சமீபத்தில் எக்கச்சக்க கன்னடப் படங்கள் வாய்ப்பு வந்தாலும் ‘ரோடு கிங்’ என்ற படம் மறக்க முடியாத அனுபவமாம் பொண்ணுக்கு. ஆம். முழுக்க ஸ்கைப்பில் எடுக்கப்பட்ட வித்தியாச சினிமா என்றால் சும்மாவா? கிடைத்த கேப்பில் ரிலீஸான ‘கட்டே’ என்ற கன்னடப்படம் தந்த பரபர வெற்றியில் இப்போது ரக்‌ஷருக்கு சாண்டல்வுட்டில் மவுசு. க்யூட் பேபி டால்!

மல்லுவுட் ஸ்ரீந்தா அர்ஹான்

p32c.jpg

கொச்சின் தேவதை. உதவி இயக்குநராய் சினிமாவுக்குள் வந்து நடிகையான குட்டி வரலாறு கொண்டவர். அதற்கு முன் டி.வி-யில் காம்பியரிங் பண்ணியவருக்கு ஏதோ ஒன்று போரடிக்க, வேலையை விட்டுவிட்டு வீட்டில் ஒருவருடம் சும்மாவே இருந்தாராம். ‘சினிமாவில் நடித்தால் என்ன?’ என்ற யோசனையில் தடாரென குதித்தவர் தன் நண்பர் மூலம் வாய்ப்பு வேட்டையாடினார். முதல் படமே ஆஷிக் அபுவின் ‘22 ஃபீமேல் கோட்டயம்’. படத்தில் இவருக்கு நாயகி பாத்திரம் இல்லை என்றாலும் நடிப்பில் கலக்க, வரிசையாகப் படங்கள். ‘தட்டத்தின் மறயத்து’, ‘அன்னாயும் ரசூலும்’, ‘ஆர்ட்டிஸ்ட்’, ‘1983’, ‘ஆடு’, ‘லோஹம்’, ‘குஞ்சி ராமாயணம்’, ‘அமர் அக்பர் ஆன்டனி’  என எல்லாமே படா ஹிட் படங்கள். முக்கியமான விஷயம், திருமணமாகி விவாகரத்து ஆன பிறகுதான் தன் கேரியரையே சினிமாவில் ஆரம்பித்தார் ந்தா அர்ஹான். வெல்டன்!

vikatan

  • தொடங்கியவர்

பாலஸ்தீன கலை விழா: கலையைப் போரால் தோற்கடிக்க முடியாது!

 

 
 
kalai_2951121f.jpg
 

‘காஸா 51’ என்ற பாலஸ்தீனக் கலை விழா , சென்னையின் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமீபத்தில் நடைபெற்றது. ஜூலை 14-ம் தேதியிலிருந்து 26-ம் தேதி வரை நடைபெற்ற இந்த விழாவில் பாலஸ்தீன இளைஞர்களின் கலைப் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. காஸாவின் மீது 2014 -ல் இஸ்ரேல் 51 நாட்கள் நடத்திய படையெடுப்பின் தாக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தக் கலைப் படைப்புகள் ஒவ்வொன்றும் மனித வன்முறையான போரின் கோரமுகத்தையும், அன்பின் வலிமையையும், கலையின் வீச்சையும் உணரவைக்கின்றன.

இந்தக் கலை விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காட்சியில் பதினொரு வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரையுள்ள பாலஸ்தீனச் சிறுவர்களும் இளைஞர்களும் உருவாக்கிய படைப்புகள் இடம்பெற்றிருந்தன. பென்சில் ஓவியங்கள், ஒளிப்படங்கள், வண்ண ஓவியங்கள், டிஜிட்டல் ஆர்ட், சிறுகதைகள், குறும்படங்கள், இசை, மின்னஞ்சல்கள் (கடிதங்கள்) எனப் பல விதங்களில் இந்த இளைஞர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சியில், மஹ்மூத் அல்குர்து (Mahmoud Alkurd) என்ற 22 வயது இளைஞரின் டிஜிட்டல் ஆர்ட் படைப்புகள் பாலஸ்தீன இளைஞர்களின் வாழ்வின் மீதான ஏக்கங்களையும் மனஉறுதியையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருந்தன.

பாலஸ்தீனத்தில் 25 ஆண்டுகள் நாடக சிகிச்சையாளராக (Drama Therapist) பணியாற்றிய ஹைதராபாதைச் சேர்ந்த மஹ்நூர் யார் கான் இந்தக் கலை விழாவை இந்தியாவுக்குக் கொண்டுவந்திருக்கிறார். ‘தி கல்ச்சர் அண்ட் ஃப்ரீ தாட் அசோசியேஷன்’ (The Culture and Free Thought Association) என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த விழாவை மஹ்நூர் ஒருங்கிணைத் திருக்கிறார். இந்தியாவில் பெங்களூரு, சென்னையைத் தொடர்ந்து இன்னும் ஆறு நகரங்களுக்கு இந்த ‘காஸா-51’ கலை விழா பயணிக்கவிருக்கிறது.

சென்னையில் ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி, சென்னைப் பல்கலைக்கழகம், லொயோலா கல்லூரி, காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி, ஸ்பேஸஸ் உள்ளிட்ட இடங்களில் இந்தக் கலை விழா நடைபெற்றது. “இந்தத் திருவிழாவில் பாலஸ்தீனத்தின் முப்பது இளம் படைப்பாளிகளின் ஐம்பதுக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. 2014-ல் இஸ்ரேலின் படையெடுப்பு காஸாவின் சிறுவர்களையும், இளைஞர்களையும் எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை இந்தப் படைப்புகள் ஆழமாக நமக்கு உணர்த்துகின்றன. காஸாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்கள் வாழ விரும்புகிறார்கள். அங்கிருக்கும் இளைஞர்களும், சிறுவர்களும் ஆயுதங்களால் ஏற்பட்ட காயத்தைத் தூரிகைகளால் குணப்படுத்த முயற்சி செய்துவருகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்தக் கலைப் படைப்புகள். இந்த விழாவுக்கு ஆல்காட் பள்ளி மாணவர்கள் அளித்த வரவேற்பு அளப்பரியது. ஒரு சிறுவன், எங்களிடம் வந்து, ‘பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடக்கிறது என்றால் அந்தச் சிறுவர்களை இங்கே வந்துவிடச் சொல்லுங்கள். அவர்களை என் பெற்றோரும், தாத்தா பாட்டியும் பார்த்துக்கொள்வார்கள்’ என்று சொன்னான். இதைக் கேட்ட பிறகு, அங்கிருந்த எல்லோரும் நெகழ்ச்சியடைந்துவிட்டார்கள். சென்னை மாணவர்கள், காஸா சிறுவர்களுக்காக வரைந்த ஓவியங்களுடன் அவர்களுக்காக எழுதிய செய்திகளையும் மொழிபெயர்த்து அங்கிருக்கும் சிறுவர்களிடம் சேர்க்கவிருக்கிறோம்” என்று சொல்கிறார் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தீபா ராஜ்குமார்.

பாலஸ்தீன இளைஞர்களின் படைப்புகள் மட்டுமல்லாமல் பாலஸ்தீனச் சூழலைப் பற்றிய விரிவுரைகள், கலந்துரையாடல்கள், திரையிடல்கள், தமிழ், ஆங்கிலம், அரேபிக் உள்ளிட மொழிகளில் கவிதை, சிறுகதை வாசிப்பு, நாடக அரங்கேற்றம் போன்றவையும் இடம்பெற்றிருந்தன. “கவிஞர் சுஹேர் ஹமீதின் கவிதைகளை ‘ஐ வில், ஐ வில் நாட்’ (I will, I will not) என்ற தலைப்பில் நாடக வடிவில் இந்தக் கலைத் திருவிழாவுக்காக உருவாக்கியிருக்கிறோம். இந்த நாடகத்தை பெங்களூரு திருவிழாவிலும் செய்தேன். இப்போது சென்னையிலும் செய்திருக்கிறேன். இதை வன்முறைக்கு எதிரான ஒரு நடனம் என்றும் சொல்லலாம்” என்கிறார் நாடகக் கலைஞர் திரிபுரா கஷ்யப்.

பாலஸ்தீன இளைஞர்களின் படைப்புகள் மட்டுமல்லாமல் பாலஸ்தீனச் சூழலைப் பற்றிய விரிவுரைகள், கலந்துரையாடல்கள், திரையிடல்கள், தமிழ், ஆங்கிலம், அரேபிக் உள்ளிட மொழிகளில் கவிதை, சிறுகதை வாசிப்பு, நாடக அரங்கேற்றம் போன்றவையும் இடம்பெற்றிருந்தன. “கவிஞர் சுஹேர் ஹமீதின் கவிதைகளை ‘ஐ வில், ஐ வில் நாட்’ (I will, I will not) என்ற தலைப்பில் நாடக வடிவில் இந்தக் கலைத் திருவிழாவுக்காக உருவாக்கியிருக்கிறோம். இந்த நாடகத்தை பெங்களூரு திருவிழாவிலும் செய்தேன். இப்போது சென்னையிலும் செய்திருக்கிறேன். இதை வன்முறைக்கு எதிரான ஒரு நடனம் என்றும் சொல்லலாம்” என்கிறார் நாடகக் கலைஞர் திரிபுரா கஷ்யப்.

இந்நாடகம் மட்டுமல்லாமல் இந்தத் திருவிழாவுக்காக, ‘ஜூலையின் துயரங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை அரபி மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் பி.கே. அப்துல் ரஹிமான். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஜே.பி.ஏ.எஸ் இஸ்லாமிய ஆய்வு மையத்தின் துறைத் தலைவர். இந்தச் சிறுகதைகள் அனைத்தும் போருக்குப் பின், பாலஸ்தீன இளைஞர்களால் எழுதப்பட்டவை.

2014 இஸ்ரேல் படையெடுப்புக்குப் பிறகு, காஸாவில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை என்பது மஹ்நூர் யார் கான் சொல்லும் செய்திகளால் உறுதியாகின்றன. “கிழக்கு ஜெருசலேமில், இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் பாலஸ்தீனர்களின் வீடுகளை இஸ்ரேல் கைப்பற்றிவிடுகிறது. அத்துடன், காஸாவின் மேற்குப் பகுதியில் வசிப்பவர்களையும் கிழக்கு ஜெருசலேமில் வசிப்பவர்களையும் திருமணம் செய்ய அனுமதிப்பதில்லை” என்கிறார் அவர்.

இந்த ‘காஸா 51’ பாலஸ்தீனக் கலை விழா , பாலஸ்தீன இளைஞர்களின் வாழ்க்கை மீதான உறுதியை எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை உலகுக்குப் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.

kalai1111_2951116a.jpg

மலக் மட்டரின் ஓவியம்

kalai111_2951118a.jpg

கற்களின் கோபம் - மஜீதா அல் மஜைய்தா ஓவியம்

kalai1_2951120a.jpg

குழந்தைப் பருவம் - லாமா சக்சக்கின் ஓவியம்

kalai11_2951119a.jpg

சுதந்திரமே எங்கள் சுவாசம் - மஹ்மூத் அல்குர்து

‘ஜூலையின் துயரங்கள்’ சிறுகதைத் தொகுப்பில் இருந்து சில பகுதிகள்

மீண்டும் கித்தானுக்கு - ஆசிரியர்: ஹெலன் மு’அமர்

“என்னுடைய பென்சில்கள், நிறங்கள், வரையும் தாள்களென எல்லாவற்றையும் எடுத்துச் சிறிய பையில் மறைத்து வைத்திருந்தேன். எங்கள் வீடு இலக்காகப் போகிறது என்று தெரிந்தவுடன் என்னுடைய பையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடப் பார்த்தேன். துரதிர்ஷ்டவசமாக, குண்டுவீச்சு என்னைவிட வேகமாக நடந்து முடிந்தது. இஸ்ரேலின் தாக்குதல் என்னுடைய கனவுகளை எடுத்துக்கொண்டு வெளியேற நேரம் கொடுக்கவில்லை”

- லாமா சக்சக், பதினைந்து வயது ஓவியர்

என்னுடைய குருவிகள் இறந்துவிட்டன - ஆசிரியர்: முகமத் ரமதான்.

என்னுடைய லவ் பேர்ட்ஸ் இறந்துவிட்டன. அவற்றைச் சுதந்திரமாகப் பறக்க விட எவ்வளவு ஏங்கியிருந்தேன். நான் பணத்தை மிச்சப்படுத்தி அவற்றை வாங்கி வந்தேன். ஆனால் அவை இஸ்ரேலால் கொல்லப்படும் என்பதை அறியாமல் இருந்துவிட்டேன். அவற்றை முன்னரே வெளியே விட்டிருக்க வேண்டும்”

- அவாத் குதய், ஒன்பது வயது சிறுவன்

நாங்க இன்னும் எங்க விளையாட்ட முடிக்கல - ஆசிரியர்: வாதின் அல் ஃபக்காவி

“நான் நேத்துதான் தெருவில இப்ராஹிமோட கால்பந்து ஆடினேன். இன்னிக்கு கால் துண்டாகி மருத்துவமனைல அவன் இருக்கான். நாங்க இன்னும் ஒரு ஆட்டத்த முடிக்கல. இப்ராஹிம் இல்லாம நாங்க எப்படி முடிப்போம்?”

- அபு சார்க், பன்னிரண்டு வயதுச் சிறுவன்

tamil.thehindu

  • தொடங்கியவர்
உள்ளம் விரிந்தால் செருக்கு சுருங்கி ஒடுங்கும்
 
 

article_1469769382-euyiu.jpgசெருக்குடன் சனங்களை நோக்குபவர்களை விருப்பத்துடன் எவருமே நெருங்க மாட்டார்கள்.   

ஆற்றல்கள், வலிமை, செல்வம் இவற்றுடன் அறிவாளியாக இருப்பவர்கள் கூட செருக்குடன் உலா வருகின்றார்ககள்.   

செருக்குடையவர்கள் தங்களைத் தாங்களே தரக்குறைவாக நடத்துபவர்கள் ஆவார். ஆனால், துஷ்டர்கள்முன் தன்னை நிலைநிறுத்தும் வீரன் செருக்குடன் அவர்களை அடக்கி ஒடுக்குதல் தவறு அல்ல.

எல்லாச் சமயங்களிலும் அநியாயம், அட்டகாசம் செய்பவர்கள் முன் பணிவுடன் பேசமுடியாது. பணிவை இத்தகையோர் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.   

எத்தகைய உயர் பதவிகளை வகிப்பவர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட எத்தரத்தில், மேம்பட்ட நிலையில் உள்ளவர்கள் கூட செருக்குடன் மக்கள் முன் நிற்கமுடியாது.   

பதவிக்குரிய ஆளுமையுள்ளவர்கள் பணிவுடனேயே பழகுவார்கள். உள்ளம் விரிந்தால் செருக்கு சுருங்கி ஒடுங்கும்.   

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 15

சுசி திருஞானம்தொடர்

 

சார்லஸ் டார்வின்

ந்த உலகில் விதவிதமான உயிரினங்கள் எங்கிருந்து, எப்படி வந்தன என்ற அறிவியல் புதிருக்கு விடை கண்ட மகத்தான விஞ்ஞானி சார்லஸ் டார்வின். 150 ஆண்டுகளுக்கு முன், எண்ணற்ற ஆதாரங்களுடன் அவர் எழுதிய ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற நூல் அறிவியல் உலகில் பெரும் புரட்சியை உண்டாக்கியது. நுட்பமான உபகரணங்கள் இல்லாத காலகட்டத்தில், காடுகள் மற்றும் கடல் வழிகளில் பயணித்து அவர் நடத்திய தீவிர ஆய்வுகள் இன்றும் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.

னிதகுல சிந்தனைப் போக்கையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட இந்த மகத்தான விஞ்ஞானி, வாழ்க்கை முழுவதும் பல தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்தவர்.

இங்கிலாந்து நாட்டில் 1809-ம் ஆண்டு பிறந்தார் சார்லஸ் டார்வின். அவரது தாத்தாவும், தந்தையும் அவரவர் காலகட்டத்தில் பிரபல மருத்துவர்கள். டார்வினுக்கு எட்டு வயதாகும்போது தாய் இறந்துவிட்டார். பள்ளிப் படிப்பின்போது மிகவும் சிரமப்பட்டார் டார்வின். பல நாட்கள் பாதியிலேயே வீட்டுக்கு வந்துவிடுவார். படிக்காத சில நண்பர்களோடு சேர்ந்துகொண்டு அடிக்கடி வேட்டைக்குப் போய்வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

டார்வினின் அப்பா ஒருமுறை அவரைக் கூப்பிட்டு இப்படிக் கடுமையாக கடிந்துகொண்டார்: ‘‘உனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. எலி பிடிப்பது, வேட்டையாடுவது - இதுதான் வாழ்க்கை என்று திரிந்துகொண்டிருக்கிறாய். உன்னை நீயே அவமானப்படுத்திக் கொள்ளப் போகிறாய். நம் குடும்பத்துக்கும் உன்னால் அவமானம்தான் மிஞ்சும்.’’

p30.jpg

பள்ளிப் பாடங்களின் மனப்பாட அணுகுமுறையை டார்வின் வெறுத்தார். அதேவேளையில், ஆய்வு மனப்பான்மை கொண்ட கல்வியில் பெரும் நாட்டம் கொண்டிருந்தார். ஜியாமெட்ரி படிப்பதிலும், கெமிஸ்ட்ரி படிப்பதிலும் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. தனது அண்ணனுடன் சேர்ந்து வீட்டின் பின்பகுதியில் ஒரு ரசாயன ஆய்வகத்தையே உருவாக்கினார். ஆனால், அது பள்ளிப் பாடத்திட்டத்தில் வரவில்லை. டார்வினின் தலைமை ஆசிரியர், ‘‘உனது நேரத்தையெல்லாம் கெமிஸ்ட்ரியில் வீணடிக்கிறாய்’’ என்று கடிந்துகொண்டார்.

பள்ளியில் படிக்கும்போது அவருக்குக் கிடைத்த ‘விந்தைமிகு உலகம்’ என்ற பயண நூல் அவருக்குள் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. விந்தைமிக்க பறவைகள், விலங்குகளைப் பார்வையிட நீண்ட கடல் பயணம் மேற்கொள்ளும் ஆவல் அவரின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.

தான் படித்த புகழ்பெற்ற எடின்பர்க் பல்கலைக்கழக மருத்துவப் படிப்பில், தனது மகன் டார்வினை சேர்த்துவிட்டார் அவரது தந்தை. ஆராய்ச்சி மனப்பாங்குகொண்ட டார்வினுக்கு, அங்கு எடுக்கப்பட்ட சலிப்பூட்டும் விரிவுரைகள் கசப்பைத் தந்தன. மருத்துவமனை வார்டுகளுக்குச் சென்று வருவது, அறுவைச்சிகிச்சைகளை உடனிருந்து கவனிப்பது போன்ற அனைத்தையும் டார்வின் வெறுத்தார். கல்லூரியில் இருந்து அடுத்தடுத்த எச்சரிக்கைகள் வந்தன.

தன்னைப்போல மகனும் டாக்டர் ஆகிவிடுவான் என்று கனவுகண்ட தந்தைக்கு, டார்வினின் போக்கு எரிச்சலைத் தந்தது. வேறு எதிலும் தேறாத மகனுக்கு, பாதிரியார் வேலை பாதுகாப்பானதாக இருக்கும் என்று எண்ணிய அவர், தனது மகனின் மருத்துவப் படிப்பை பாதியில் நிறுத்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலை பட்டப்படிப்பில் சேர்த்துவிட்டார். கேம்பிரிட்ஜ் வளாகம் டார்வினுக்குப் பிடித்திருந்தது. நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அவ்வப்போது வேட்டையாடச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. வேட்டையாடப் போகும்போது விதவிதமான வண்டுகள், பறவைகள் போன்றவற்றைக் கவனித்து ஒப்பிட்டுப் பார்ப்பது டார்வினின் வழக்கமாக மாறியது.

p30b.jpg

உயிரினங்களின் ஒப்பீட்டு ஆய்வை தற்செயலாகத் தொடங்கிவிட்ட டார்வின், எவ்வளவு ஈடுபாட்டுடன் அதனைச் செய்தார் என்பதற்கு அவர் விவரிக்கும் இந்தச் சம்பவம் ஒரு சான்று. ‘‘ஒருமுறை, மரப்பட்டை ஒன்றை நான் உரித்துக் கொண்டிருந்தபோது விதவிதமான வண்டுகளைக் கவனித்தேன். வலது கையில் ஒருவகை வண்டு, இடது கையில் மற்றொரு வகை வண்டு எனப் பிடித்து வைத்திருந்தேன். அப்போது மூன்றாவது வகை வண்டு வெளிவரவே, எனது வலது கையில் இருந்த வண்டை வாயில் போட்டுக்கொண்டு, மூன்றாவது வகை வண்டைக் கையில் பிடித்தேன். வாயில் இருந்த வண்டு ஏதோ ஒரு நச்சுத் திரவத்தை வீசியடித்ததால் என் நாக்கு வெந்ததுபோல் ஆகிவிட்டது. உடனே அதை உமிழ்ந்துவிட்டேன். அந்த வண்டு தப்பிப் பறந்துவிட்டது.”

கேம்பிரிட்ஜ் நாட்களில் டார்வின் வாசித்த இரண்டு நூல்கள், அவருக்குள் பெரும் ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருந்தன. அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் எழுதிய, ‘எனது பயணங்கள்’ என்ற நூலும், ஜான் ஹெர்சல் எழுதிய, ‘இயற்கையின் தத்துவம்’ என்ற நூலும், உலகப் பயணம் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்யும் வேட்கையைத் தூண்டின.

டார்வின் பட்டப்படிப்பை முடித்திருந்த வேளையில், அவர் தேடிக்கொண்டிருந்த வாய்ப்பு ஒன்று அவரைத் தேடி வந்தது. ‘ஹெச்.எம்.எஸ் பீகிள்’ என்ற பிரிட்டிஷ் கடற்படை கப்பலில் 5 ஆண்டுகள் உலக நெடும்பயணம் மேற்கொண்டு ஆய்வுகள் செய்து திரும்பும் வாய்ப்பு அது. பயணக் கட்டணத்தை அவரே செலுத்த வேண்டும். ஆனால், அவர் விரும்பிய ஆராய்ச்சிகளைச் செய்துகொள்ளலாம். ‘‘உலகப் பயணம் செல்கிறேன்’’ என்று டார்வின் சொன்னபோது, ‘‘வேண்டவே வேண்டாம்’’ என்றார் அவரது தந்தை. ‘‘5 ஆண்டுகள் வெட்டிப் பயணம் செய்து வாழ்க்கையை வீணடிக்கப் போகிறாயா?’’ என்று கோபப்பட்டார். தந்தையைச் சமாதானப்படுத்தி, கட்டணம் செலுத்தச் செய்து பயணம் புறப்பட்டார் டார்வின்.

பயணம் தொடங்கிய உடனே அவருக்கு கடல் காய்ச்சல் வந்தது. மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். எழுந்திருக்க முடியவில்லை. ‘‘திரும்பிப் போய்விடு’’ என்று பலர் ஆலோசனை கூறினார்கள். டார்வின் உறுதியாக இருந்தார். உடல்நலம் தேறினார். விந்தைகள் நிறைந்த உயிரினங்களின் உடல் கூறுகளையும், பண்புகளையும் தேடித்தேடி ஆய்வுசெய்வதையும், அதைக் குறிப்புகளாக எழுதித் தள்ளுவதையும் தவமாகச் செய்தார். ஆப்பிரிக்காவை ஒட்டிய தீவுகள், தென் அமெரிக்க நாடுகள், கலாபகஸ் தீவுகள், ஆஸ்திரேலியா, மொரிசியஸ் என தென் கடலில் மொத்த உலகத்தையும் சுற்றி வந்தது பீகிள். பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள், நன்னீர்வாழ் உயிரினங்கள், தரைவாழ் உயிரினங்கள், காடுவாழ் உயிரினங்கள் அனைத்தையும் தேடித்தேடி ஆய்வு செய்தார் டார்வின். கலாபகஸ் தீவுகளின் விநோதமான உயிரினங்கள் அவருக்குப் பெரும் வியப்பை உருவாக்கின. தான் எழுதிய குறிப்புகளையும், சில விலங்கின மாதிரிகளையும் அவ்வப்போது இங்கிலாந்தில் உள்ள தனது பேராசிரியருக்கு அனுப்பிவைத்தார். டார்வினின் ஆராய்ச்சி குறித்து, அறிவியல் உலகில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

சாதாரணப் பட்டதாரி இளைஞராகப் பயணம் புறப்பட்ட டார்வின், 5 ஆண்டுப் பயணம் முடித்து திரும்பியபோது, மதித்துப் போற்றப்படும் விஞ்ஞானியாகத் திரும்பி வந்தார். தனது ஆராய்ச்சி அனுபவங்களைத் தொகுத்து ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற நூலை அவர் 1859-ம் ஆண்டில் வெளியிட்டபோது, அறிவியல் உலகில் பெரும் பரபரப்பு. அத்தனைப் பிரதிகளும் உடனே விற்றுத் தீர்ந்தன.

p30a.jpg

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி, இயற்கைத் தேர்வு மூலமாக நடந்துவருவதை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் நிரூபித்து அவர் இப்படி எழுதினார். ‘‘சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் மட்டுமே தாக்குப்பிடித்து வாழ்கின்றன. உயிரினங்களின் வளர்ச்சியில், சாதகமான மாற்றங்கள் பாதுகாக்கப்படுகின்றன. பாதகமான மாற்றங்கள் அழிந்து போகின்றன. இந்த மாற்றங்களால், ஒரு கட்டத்தில் புதிய உயிரினம் பரிணமிக்கிறது.’’

‘‘மனிதனும், பரிணாம வளர்ச்சியில் பண்பட்டு வளர்ந்த ஒரு விலங்குதான்’’ என்றும், ‘‘மனிதனுக்கும் குரங்குக்கும் ஒரே மூதாதையர்’’ என்றும் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு ஆன்மிகவாதிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. டார்வினைக் குரங்குபோல் சித்தரித்து கார்ட்டூன் படங்கள் வெளியிடப்பட்டன. கல்லெறியும், சொல்லெறியும் அந்த அறிவியலாளரை அசைக்க முடியவில்லை. உண்மையான அறிவியலாளர்கள் அவருடன் நின்றனர். மகத்தான அறிவியல் விருதுகள் அவரைத் தேடிவந்தன. தான் வாழ்ந்த காலத்திலேயே பெரும் புகழ்பெற்ற டார்வின் 1882-ம் ஆண்டில் காலமானார். அவர் உருவாக்கிய பரிணாமக் கொள்கை உயிரியல் பாடமாக இன்றும் உலகம் முழுவதும் கற்பிக்கப்படுகிறது.

See Also: தோற்றவர்களின் கதை - 14

சிறு வயதில் வேட்டையாடுவதிலும், வெட்டி அரட்டையிலும் பொழுதைப் போக்கியதற்காக தனது தந்தையிடம் கடுமையாகத் திட்டு வாங்கிய சார்லஸ் டார்வின், தனது குறிக்கோளை உருவாக்கிக்கொண்டதும் வெறித்தனமாக உழைத்து உலகப் புகழ்பெற்றார். வாழ்க்கை என்பதே நேரத்தால் ஆனது என்பதை அவர் பல முறை வலியுறுத்தினார். நாம் அனைவரும் நெஞ்சில் நிறுத்த வேண்டிய அவரது அறிவுரை இதுதான்: ‘‘ஒரு மணி நேரத்தை நீங்கள் வீணடிக்கிறீர்கள் என்றால், வாழ்க்கையின் மதிப்பை இன்னும் நீங்கள் உணரவில்லை என்று பொருள்.’’

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யுட்யூப்... அடிமைகளா நாம்?

அதிஷா, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

 

p20a.jpg

2004-ம் ஆண்டில் ஃபேஸ்புக் தொடங்கப்பட்டபோது அந்த நிறுவனத்தில் வேலைபார்த்தவர்கள் மூன்றே பேர்தான். 2016-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தில் வேலைபார்க்கிறவர்களின் எண்ணிக்கை 13,598. மலைக்கவைக்கிற அபார வளர்ச்சி. ஆனால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டதும் பாடுபடுவதும் மார்க் ஸூக்கர்பெர்க்கும் அவருடைய சகாக்களும் மட்டுமே அல்ல... அதில் நமக்குத்தான் நிறையவே பங்கு இருக்கிறது.

உலகம் எங்கும் ஃபேஸ்புக் வளர்ச்சிக்குப் பாடுபடுகிற தோழர்களின் எண்ணிக்கை மாதத்துக்கு 165 கோடி.இவர்களில் 98 கோடி பேர், தினமும் செல்போன் மூலமாக மார்க் ஸூக்கர் பெர்க்குக்கு உதவுகிறார்கள். அதில் நீங்களும் நானும் இருக்கிறோம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரித் தோழி ஒருவரைச் சந்தித்தேன். ஹோட்டலில் விதவிதமான உணவுகளைச் சின்னச் சின்னக் கோப்பைகளில் கொண்டுவந்து வைத்தனர். ஒரு கோப்பையில் கையை வைக்க... `டேய்... இர்ரா இர்ரா!' - எதிரில் இருந்த தோழி என் கையைப் பிடித்துத் தடுத்தார். மொபைலை எடுத்து உணவுப் பண்டங்களை விதவிதமாகப் படம் பிடிக்கத் தொடங்கினார். நிறையப் படங்களை எடுத்து முடித்தவர், அதை அந்த இடத்திலேயே ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்யத் தொடங்கினார். பசி தாளாமல் நான் அன்னாரின் அனுமதியோடு சாப்பிடத் தொடங்கினேன். ஒரு கையில் மொபைலும் இன்னொரு கையில் ஸ்பூனுமாகச் சாப்பிட ஆரம்பித்தார் தோழி. எதிரில் உட்கார்ந்திருக்கும் என்னோடு அதிகம் பேசவில்லை. என் கேள்விகளுக்கும் மொபைலைப் பார்த்துக்கொண்டே ஏதோ  பதில் சொன்னார்.

உணவு காத்திருந்தது. அவரோடு பேச எனக்கு ஏராளமான விஷயங்கள் இருந்தன. நான் சாப்பிட்டு முடித்திருந்தேன். அநேகமாக தன் பால்ய நண்பனுடனான உணவகச் சந்திப்பு குறித்து பெருமிதமாக ஃபேஸ்புக்கில் நீண்ட கட்டுரை ஒன்றை அன்றைய இரவில் அவர் எழுதியிருக்கலாம்.

எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அதை உடனுக்குடன் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவது அல்லது அதைப் பற்றி எழுதிவிடுவது. எந்தச் செய்தி வந்தாலும் அதன் உண்மைத்தன்மையைக்கூட ஆராயாமல் உடனுக்குடன் பகிர்ந்துகொள்வது அல்லது அதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றுவது, கேலிசெய்வது. மலை ஏறுகிறோமோ, மாரத்தான் போட்டியோ, ரயிலில் பயணமோ, சினிமா பார்க்கிறோமா, சில்லறை வாங்க அலைகிறோமோ, இழவு வீட்டுக்குப் போனாலும் அதையும் உடனுக்குடன் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எதிலாவது போட்டுவிட வேண்டும்.

நமக்கு அருகில் இருக்கிறவர்கள் லைக் பண்ணுகிற மாதிரி வாழ்கிறோமோ... இல்லையோ, முகம் தெரியாதவர் களின் லைக்குகளுக்காக வாழப் பழகிவிட்டோம்.

அரிய தருணங்கள் நிகழும்போது படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தது மாறிவிட்டது. போட்டோ எடுப்பதற்காகவும் சமூக வலைத்தளங்களில் தன்னை வெளிக்காட்டிக்கொள்வதற்கான தருணங்களை உருவாக்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். சுயகழிவிறக்கம் மேலோங்கி சமூக வலைத்தளங்களில் ஆறுதல் தேடி அலைகிறோம். வெள்ளத்தில் மிதக்கும்போதும் மீட்கும்போதும் எங்கும் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் மனிதர்களை சகஜமாகக் கடக்கிறோம். கடவுளே நேரில் வந்து தரிசனம் தரும் ஒரு நாளில், அந்த நொடியில் `செல்போன் எங்கே... சீக்கிரம் செல்ஃபி எடுத்துடுவோம்' என்ற எண்ணம்தான் நமக்கு எழுமோ!

நாம் ஏன் சமூக வலைத்தளங்களுக்கு அடிக்ட்டுகளாக மாறியிருக்கிறோம்? எது நம்மை அப்படி மாற்றியிருக்கிறது?

இந்தக் கேள்விகளுக்கு விடையளியுங்கள்!

1. காலையில் தூக்கத்தில் இருந்து கண் விழித்ததும் அலைபேசியைத் தேடி எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர் பார்க்கும் பழக்கம் உண்டா?

2. நாள் முழுக்கக் காரணமே இல்லாமல் அடிக்கடி அலைபேசியில் சமூக வலைத்தளங்களை நோண்டுகிறீர்களா?

3. எதிரில் ஒரு நபர் பேசும்போது, அவரை அவமதிப்பதைப்போல வாட்ஸ்அப் குரூப் அப்டேட்ஸ் பார்க்கிறவரா?

4. அசரவைக்கிற எதைப் பார்த்தாலும் அதற்குப் பக்கத்தில் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் போடவேண்டும் எனத் தோன்றுகிறதா?

5. வீட்டிலோ, மொபைலிலோ இணைய இணைப்பு வேலை செய்யாதபோதும், பேட்டரி டவுண் ஆகும்போதும் பதற்றமும் கோபமும் கொண்டது உண்டா?

6. புத்தகங்கள் படிக்கும்போது, திரைப்படம் பார்க்கும்போது, பயணம் செய்யும்போது விடாமல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அதுகுறித்து அப்டேட் செய்யும் பழக்கம்கொண்டவரா?

7. ஆறாவது பாயின்ட்டில் சொன்னதை எல்லாம் சமூக வலைத்தளங்களை நோண்டாமல் நிறுத்தி நிதானமாகக் கடைசியாக ரசித்து செய்தது எப்போது?

8. எந்நேரமும் சமூக வலைத்தளங்கள் பார்ப்பதற்காக செல்போனை நோண்டிக்கொண்டே இருப்பதால், வீட்டில் சச்சரவுகள் உண்டாகி சண்டையாக வெடித்திருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கு மார்க்குகள் கிடையாது. ஆனால், இந்தப் பழக்கங்களில் உங்களுக்குப் பாதி இருந்தாலும் உடனடியாக விழித்துக்கொள்ளுங்கள். நீங்கள் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக இருக்கிறீர்கள்.

 பதற்றப்பட வேண்டாம். நல்லவேளையாக நாம் எல்லாம் தனியாக இல்லை, உலகம் எங்கும் கோடிக்கணக்கானோர் இப்படி சமூக வலைத்தளங்களின் பிடியில் சிக்கியுள்ளனர். செல்ஃபி தொடங்கி ஸ்டேட்டஸ், கமென்ட்ஸ், வீடியோ பதிவு, மீம்ஸ் என இந்த அடிக்‌ஷன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் பாதிப்பை உண்டாக்கிவருகிறது.

இதற்கு நாம் மட்டுமே காரணம் இல்லை. சமூக வலைத்தள நிறுவனங்கள், தங்களுக்குள் தொடர்ந்து மறைமுகமாக ஒரு போரை நிகழ்த்தி வருகின்றன. யார் அதிகப் பயனாளர்களைக் கொண்ட வலைத்தளம், யாருடைய வலைத்தளத்தில் மக்கள் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்பதில் நடக்கும் வியாபாரப் போட்டி இது. அதனாலேயே இங்கே வருகிறவர்களை எப்படி மேலும் மேலும் கவர்ச்சிகரமான விஷயங்களைப் காட்டி தக்கவைப்பது என்பதைக் கண்டறிந்து செயல்படுத்துகின்றன. அதற்காக பல கோடிகளில் புதிய விஷயங்களையும் புதுப்புது உத்திகளையும் ஒவ்வொரு நாளும் புகுத்திக்கொண்டே இருக்கின்றன. ஃபேஸ்புக் நிறுவனம் 2012-ம் ஆண்டில் பல ஆயிரம் கோடிகளுக்கு இன்ஸ்டாகிராமை விலைக்கு வாங்கியதும், ட்விட்டர் நிறுவனம் வீடியோ பகிர்வு சமூக வலைத்தளமான பெரிஸ்கோப்பை விலை பேசி முடித்ததும் இதற்குத்தான். அவர்களுடைய லாப வேட்கைக்கான கச்சாப் பொருட்கள்தான் நாம்.

p20f.jpg

`99 Days of freedom' என்ற இணையதளத்தில் நம்மைப் பற்றி விவரங்களைப் பதிவு செய்துகொண்டு, 99 நாட்களுக்கு நாம் ஃபேஸ்புக் உபயோகிக்கக் கூடாது. ஒவ்வொரு 33  நாட்களுக்கும் ஒருமுறை ஃபேஸ்புக் இல்லாத வாழ்க்கை குறித்த நம்முடைய உணர்வுகளை அப்டேட் செய்ய வேண்டும். இந்த ஆய்வில் உலகம் எங்கும் இருந்து பல ஆயிரம் பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆனால், கலந்துகொண்ட பலராலும் 99 நாட்களுக்கு ஃபேஸ்புக் இல்லாமல் இருப்பது சாத்தியப்படவில்லை. காரணம், அது அவ்வளவு எளிதாக இல்லை என்பதே. இதற்கு, இவர்கள் எல்லோருமே சொன்ன ஒரே காரணம், `ஃபேஸ்புக் பார்க்காம இருக்க முடியலை' என்பது மட்டும்தான்.

`நம்மால் சமூக வலைத்தளங்களின் பிடியில் இருந்து ஏன் விடுபட முடிவதில்லை?' என்பதற்கு மனநல நிபுணர்கள் சில காரணங்களை முன்வைக்கின்றனர்.

1.FOMO (Fear Of Missing Out)

ஒரு செய்தியை அல்லது தகவலைத் தவறவிட்டுவிடுவோம் என்ற அச்சம். ஒரு தகவலை/அனுபவத்தை இன்னொருவர் அடைந்துவிடுவார். அதன்மூலம் அவர் நம்மைவிட ஒரு படி முன்னே இருப்பார் என்ற குழப்பமான மனநிலை. எல்லோரும் `கபாலி' படம் பற்றி விமர்சனம் செய்யும்போது, நாமும் அதைப் பற்றி ஏதாவது சொல்லியாக வேண்டும் என உருவாகிற சோஷியல் நிர்பந்தம். அதைச் சொல்லவில்லை என்றால், இந்தச் சமூகக் குழுவில் இருந்து விலக்கப்படுவோமோ என்ற அச்சம். நீங்கள் சமூக வலைத்தளங்களுக்கு செல்லாமல் இருந்தாலும் உங்களை சமூக வலைத்தளங்கள் விடாது. தினமும் உங்களுடைய மின்னஞ்சலுக்கே வந்துவிடுவார்கள். பாருங்கள், உங்க நண்பர்கள் என்ன போட்டிருக்கிறார்கள்... இதை எல்லாம் தவறவிட்டீர்கள் என விடாமல் மெயில் அனுப்பி ஈர்க்க முயற்சிக்கும். இது ஃபோமோவைத் தூண்டக்கூடிய செயல்களில் ஒன்று.

2. Peer Pressure

எல்லோரும் செய்வதாலே நாமும் ஒரு காரியத்தைச் செய்தே ஆகவேண்டிய அழுத்தம். ``ஒருமுறை உள்ளே வந்துவிட்டால் இந்த பிரஷர் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். சுற்றிச் சுற்றி எண்ணற்ற விஷயங்கள்... எல்லோரும் படிக்கிற லிங்க்குகள், பார்க்கிற வீடியோக்கள், கிளிக் பண்ண ஆரம்பித்தால் ஓய மாட்டீர்கள். எல்லாவற்றையும் படித்தும் பார்த்தும் தெரிந்துகொள்ள துடிப்பீர்கள். அதற்குப் பிறகு அது தொடர்ச்சியான பழக்கமாக மாறி அடிமைப்படுத்த ஆரம்பிக்கும்'' என்கிறார் இன்ஸ்டாகிராமை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான ஹோச்முத்.

3. Notification

சமூக வலைத்தளங்களின் மிக முக்கியமான தூண்டில் இது. நம்முடைய டைம்லைனின் உச்சந்தலையில் பூத்திருக்கும் இந்தச் சிவப்பு நிறப் பூவைப் பார்த்ததும் நமக்கு உள்ளம் பூரிக்கிறது. நமக்கே நமக்கான செய்திகள் அவை. எத்தனை லைக்கு வந்ததோ, என்ன கமென்ட் வந்ததோ என்ற பேரார்வம். நாம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாதபோதும்  உள்ளுக்குள் எத்தனை நோட்டிஃபிகேஷன் வந்திருக்கும்  என்ற  எண்ணம்  உள்ளாடிக்கொண்டே இருக்கும். அதனாலேயே தினமும் ஒருமுறையாவது ஒரு விசிட் அடித்து நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்கத் தூண்டப்படுகிறோம்.

4. Algorithmic Filtering

ஃபேஸ்புக்கோ ட்விட்டரோ உள்ளே நுழைந்ததும் வரிசையாக நம் மனசுக்கு ஏற்ற வீடியோக்கள், இணையதள லிங்க்குகள், படங்கள், நண்பர்களின் ஸ்டேட்டஸ்கள் டைம்லைனில் முன்னணியில் எப்படி வருகிறது என யோசித்தது உண்டா? சமூக வலைத்தளங்கள் தொடர்ச்சியாக நம் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளையும் நமக்குத் தெரியாமல் கூர்ந்து கவனிக்கின்றன. நாம் எதை வாசிக்கிறோம், எந்த மாதிரியான விஷயங்களில் அதிக நேரத்தைச் செலவழிக்கிறோம், எந்த மாதிரியான வீடியோக்கள் பார்க்கிறோம், எதைத் தேடுகிறோம் என்பதை எல்லாம் அலசி ஆராய்கின்றன. இந்த முறைக்கு `அல்காரித்மிக் ஃபில்டரிங்' என்று பெயர். இணையதளத்தின் உள்ளே நுழைந்ததும் தொடர்ச்சியாக அதிக நேரம் உங்களைத் தக்கவைக்க நடக்கும் சின்ன சூது இது.

இவை அல்லாமல் வேறு சில விஷயங்களும் நம்மை சமூக வலைத்தளங்களில் இருந்து தப்பவிடாமல் செய்கின்றன.

வீடியோ ஆபத்து!

வீடியோ போதையில் சிக்குகிறவர்கள் பெரும்பாலும் 20 வயதுக்கும் குறைவானவர்கள் என்கிறது ஆய்வு. எந்தவித விஷயங்களும் இல்லாமல் தனிமனிதர்கள் நேரடியாகப் பேசுவது போன்ற வீடியோக்கள் அதிக அளவில் நம்மை ஈர்க்கக்கூடியவை என்றும், அது பயனுள்ளதோ இல்லையோ, ஆனால் அதைப் பார்த்துக்கொண்டே இருப்பதை நாம் விரும்புகிறோம் என்றும் கண்டறிந்துள்ளனர். ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரை வீடியோக்கள் பத்து மடங்கு அதிக கமென்ட்களையும் லைக்குகளையும் பெறுகின்றன என்கிறது ஃபேஸ்புக் தரப்பு. ``வீடியோதான் இணையத்தின் எதிர்காலம். ஐந்து ஆண்டுகளை ஃபாஸ்ட் ஃபார்வேர்டு செய்தால், நாம் ஃபேஸ்புக்கில் பார்க்கும் விஷயங்களில் 90 சதவிகிதம் வீடியோவாக மாறிவிடும். இப்போதே அந்த மாற்றம் வர ஆரம்பித்துவிட்டது'' என்கிறார் மார்க் ஸூக்கர்பெர்க். இந்தியாவில் இந்த வீடியோ சுழலில் அதிகம் சிக்கியிருப்பது 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள். இந்தியாவின் டாப் டென் வீடியோ சேனல்களில் மூன்றாம் இடம் பிடித்த சேனல் `CHUCHU TV '. இது முழுக்க குழந்தைகளுக்கான வீடியோக்கள் அடங்கிய சேனல்.

519 கோடி ஹிட்ஸ் வாங்கிய அதிபயங்கர சேனல். ஒவ்வொரு நாளும் இந்த சேனலுக்கு 7,000 பேருக்கும் அதிகமான குட்டிப்பயல்கள் இணைகிறார்கள். குழந்தைகள் சேனல்களின் வெற்றிக்குக் காரணம் நாம்தான். குழந்தைகளைச் சாப்பிடவைக்க குறும்பு பண்ணாமல் உட்காரவைக்க யூடியூபுக்குப் பழக்குகிறோம். இடைவிடாமல் ஓடும் இந்த வீடியோக்களை அவர்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் உண்டாகும் பாதிப்புகளைப் பற்றி நாம் கருத்தில்கொள்வதே இல்லை.

புகைப்பட போதை!

நம் எல்லோருக்குள்ளும் கொஞ்சம் நார்ஸிசக் கூறுகள் எப்போதுமே இருக்கின்றன. `அதென்ன நார்ஸிசக் கூறு?' தன்னைத்தானே சிலாகித்துக்கொள்ளும் குணம். அதற்கு சரியான தீனி போடக்கூடிய இடமாக இருப்பவை சமூக வலைத்தளங்கள். புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் இருப்பதிலேயே நார்ஸிச மனநிலையைத் தூண்டுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஒவ்வொரு நாளும் 200 கோடி புகைப்படங்கள் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் பகிரப்படுகின்றன என்ற தகவலே இதற்கு சாட்சி.

p20b.jpg

`நம் புகைப்படங்களுக்குக் கிடைக்கும் லைக்குகள் நம் அடையாளத்துக்கும் அழகுக்கும் கிடைக்கும் ஒன்றாகக் கருதுகிறோம். இதனால் நம் இணைய அடையாளங்களில் புதிதாக சில பாசிட்டிவ் விஷயங்களைச் சேர்க்க ஆரம்பிக்கிறோம். அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் நண்பர்கள் நமக்கு இன்னும் அதிகமாக மரியாதை கொடுப்பார்கள்; கௌரவிப்பார்கள் என நம்புகிறோம். அது இன்னும் இன்னும் புதிய விஷயங்களோடு புகைப்படங்களை வெளியிட நம்மைத் தூண்டுகிறது. நாம் அந்தத் தருணத்தில் இருப்பதைவிடவும், நம் நோக்கமும் கவனமும் இந்தத் தருணத்தை எப்படி உபயோகித்து நம் முகத்தை, உடலை காட்சிவடிவமாக சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்திக்கொள்ளலாம் என்பதிலேயே இருக்கிறது' என `சைக்காலஜி ஆஃப் டிஜிட்டல் ஏஜ்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்காவின் மனோதத்துவப் பேராசிரியர் சூலர். இப்போது புரிகிறதா, ஏன் ஃபேஸ்புக் தளம் இன்ஸ்டாகிராமை ஒரு பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது என்று!

இன்று அமெரிக்காவில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 53 சதவிகிதம் பேர் இன்ஸ்டாகிராமில்தான் பழியாகக் கிடக்கிறார்கள். `மில்லெனியல்ஸ்' எனப்படும் 1985-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த தலைமுறைக்கு இன்ஸ்டாகிராம்தான் இனிக்கிறது. காரணம், இப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துகொள்வதுதான் ட்ரெண்ட்.

டோபோமைன் எமன்

எலி ஒன்றை கூண்டில் அடைத்து, அதற்கு முன்னால் On-OFF சுவிட்ச் ஒன்று வைக்கப்பட்டது. எலி அந்த சுவிட்சைத் தொட்டு ஆன் பண்ணினால், அதன் மூளையில் டோபோமைன் என்ற வேதிப்பொருள் தூண்டப்படும். சுவிட்சைப் போடும்போது எல்லாம் அதற்கு டோபோமைன் உதவியால் உள்ளுக்குள் பேரானந்தம் உண்டாகும். ஒருகட்டத்தில் ஒவ்வொரு நாளும் விடாமல் அந்த டோபோமைன் பட்டனைத் தட்ட ஆரம்பித்துவிட்டது. விடாமல்... மணிக்கணக்கில், சோறு, தண்ணீர் இல்லாமல் எந்நேரமும் அது டொக்கு டொக்கு எனத் தட்டிக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் முழுமையாக அந்த பட்டனுக்கே அடிமையாகிவிட்டது. சமூக வலைத்தளங்களின் வழி நமக்குள் நடப்பது இது மாதிரியான ஒரு மாற்றம்தான்.

p20c.jpg

டோபோமைன் என்பது, நம்முடைய மூளையின் பல்வேறு பகுதிகளில் உண்டாகும் கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய வேதிப்பொருள். சிந்திப்பது, நகர்வது, தூங்குவது, ஊக்கம் அளிப்பது என மூளையின் பல செயல்பாடுகளுக்கு அவசியமான வினையூக்கி இந்த டோபோமைன். இந்த வேதிப்பொருள் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது என்பதுதான் இதுவரை நம்முடைய புரிதலாக இருந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வுகள் டோபோமைன் `தேடல் குணத்தை' (Seeking Behaviour)உருவாக்கவல்லது எனக் கண்டறிந்துள்ளனர். இதன் தூண்டுதலால்தான் நாம் ஒரு குறிக்கோளை நோக்கிச் செயல்பட ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். பரிணாம வளர்ச்சியில் இது மிக முக்கியமான பண்பாக இருக்கிறது. கற்றுக்கொள்வதிலும் பிழைத்திருப்பதிலும் இது அவசியமானது. ஆனால், இந்தத் தூண்டுதல் என்பது உடல் தேவைகளான உணவு மற்றும் செக்ஸ் என்பதைத் தாண்டி நவீன யுகத்தில் தகவல்களைத் தேடுவதாக முன்னேறியுள்ளது. எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு தகவல்களைக் கண்டடைவது என முதிர்ச்சி அடைந்துள்ளது. இந்தத் தேடல் குணத்தை சமூக வலைத்தளங்கள் இலகுவாக்கிவிட்டன.

டோபோமைன் எப்போதும் ஒரே ஷாட்டில் அமைதியாவது இல்லை. அது எப்போதும் இன்னும் இன்னும் இன்னும் என நம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் கூகுளிலும் விக்கிபீடியாவிலும் ஃபேஸ்புக்கிலும் எதையாவது தேடப்போய் அல்லது பார்க்கப்போய் என்னென்னவோ தேடிப் படித்து லைக் பண்ணி மணிக்கணக்கில் மெய்மறந்து அந்த டோபோமைன் சுழலில் சிக்கிக்கொள்வது நேர்கிறது.

p20e.jpg

தேடல் மட்டும் அல்ல, எதிர்பார்ப்பு மூலமாகவும் டோபோமைன் தூண்டப்படுகிறது என்கிறார்கள்.  ஒரு பரிசு  கிடைப்பதைவிடவும் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும், அந்தப் பரிசு என்னவாக இருக்கும் என்ற சஸ்பென்ஸும் மூளையில் அதிக டோபோமைன் தூண்டுதலை ஏற்படுத்தக்கூடியது. இதை சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு நொடியும் நமக்கு அளிக்கின்றன. ``இப்படி தொடர்ச்சியான டோபோமைன் தூண்டுதல்களுக்கும் ஒரு எல்லை உண்டு. ஒருகட்டத்தில் டோபோமைன் வேதிப்பொருள் தீரும்போதோ அல்லது குறையும்போதே நாம் கடுமையான மன உளைச்சலுக்கும் உள்ளார்ந்த தனிமைக்கும் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு'' என்கிறார் சூசன் வெய்ன்செங்க் என்கிற உளவியல் நிபுணர்.

எப்படி மீள்வது?

சோஷியல் மீடியா அடிக்‌ஷன் என்பது, இருக்கிறது என்பதை முதலில் நம்ப வேண்டும் (இருப்பதிலேயே அதுதான் சிரமமான காரியம்!). அது நம்முடைய வாழ்க்கையில், தொழிலில், பணியில், கல்வியில் பெரிய பாதிப்புகளையும் மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அதில் இருந்து விலகி தள்ளி நின்று அது என்ன மாதிரியான பாதிப்புகளை நமக்குள் உருவாக்குகிறது என்பதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர, வேறு வழி இல்லை. ஒவ்வொரு நாளும் எத்தனை மணி நேரம் சமூக வலைத்தளங்களில் வீணடிக்கிறோம் என்பதைக் கணக்கிட்டு, அந்த நேரத்தைப் படிப்படியாகக் குறைக்க முன்வர வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறைதான் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது என சுயக்கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம்.

வெளிநாடுகளில் `டிஜிட்டல் ஃபாஸ்டிங்' எனப்படும் இ-விரதங்கள்தான் இப்போது ட்ரெண்ட். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் அம்மனுக்கு விரதம் இருந்து அன்றைய நாள் மட்டும் எந்தவித சமூக வலைத் தளங்களையும் நான் கைதொட மாட்டேன் என உறுதிபூண்டு தவ வாழ்க்கை வாழலாம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஃபேஸ்புக் பக்கமே வர மாட்டேன் என முடிவெடுத்து ஓடிவிடலாம்.
கொஞ்ச கொஞ்சமாக நிகோட்டினில் இருந்து வெளியேறுவதன் மூலம் சிகரெட் பழக்கத்தைக் கைவிடுவதைப்போலவே. முடிந்தவரை செல்போனில் சமூக வலைத்தளங்களைப் பின்தொடர்வதைத் தவிர்த்தாலே பல பாதிப்பு களைத் தவிர்த்துவிட முடியும் அல்லது 2ஜி மாதிரியான குறைந்த வேகம் உள்ள இணைய வசதிகளை செல்போனில் பயன்படுத்துவது பலன் தரும்.

p20d.jpg

நண்பர்களோடு உரையாட வேண்டுமா, நேரடியாகச் சந்தியுங்கள். பணியில் சந்தேகமா, சீனியர்களிடம் உதவி கேளுங்கள். அங்கும் கிடைக்கவில்லை என்றால், மட்டும் கூகுளை நாடுங்கள். நூல்கள் படிக்கும்போதும், சினிமா பார்க்கும்போதும் மொபைலை சைலன்ட்டில் வையுங்கள். வெளியூர் பயணமா, மொபைலில் படம் எடுக்காமல் டிஜிட்டல் கேமராவில் படம் எடுங்கள். செல்ஃபி எடுப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சி, நம்மை எந்த இடத்தில் இருந்தும் எதையும் செய்வதற்கான ஆற்றலை வழங்கியிருக்கிறது. ஆனால், அது நம்முடைய ஆற்றலை உறிஞ்சும் வேலையையும் சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கின்றன. தொழில்நுட்பத்தால் நமக்குக் கிடைத்திருக்கிற சாதகமான அம்சங்களை நாம் வியந்து கொண்டாடு கிறோம். நாம் எந்த இடத்தில் இருந்தும் எதையும் செய்யும் ஆற்றலைப் பெற்று விட்டோம். ஆனால், கூட்டத்திலும் தனித்திருக்கப் பழகிவருகிறோம். இந்தத் தகவல்தொடர்பே நிரந்தரமான தனிமைக்குள் நம்மை ஆட்படுத்திவைத்திருகிறது. தொழில்நுட்பத்தில் முன்னேற முன்னேற... நம்முடைய உணர்வுகளில் நாம் சறுக்க ஆரம்பித்திருக்கிறோம். அதை முதலில் உணரவேண்டும்.


p21a.jpg

`ஹிப் ஹாப்' ஆதி (இசையமைப்பாளர்): ``சோஷியல் மீடியாங்கிறது தீக்குச்சி மாதிரிதான். தீக்குச்சியால வீட்டைக் கொளுத்தவும் செய்யலாம்...  நான் `ஹிப் ஹாப்' தமிழாவா வெளியில தெரியறதுக்கு  உதவியது சோஷியல் மீடியாதான். அதே நேரம் போட்டோ ஷேர் போன்ற விஷயங்களால் தற்கொலைகளைத் தூண்டுறதும் இதே சோஷியல் மீடியாதான்.''


p21b.jpg

ஷான் கருப்பசாமி (கவிஞர்): ``நிறையத் திறமைகள் இருக்கிறவங்க மக்களுக்கு வெளியில தெரியும் வகையிலான ஒரு பிளாட்ஃபார்மா சோஷியல் மீடியாக்கள் இருக்கு. ஆனால், சோஷியல் மீடியா பத்தி முழுசா தெரியாம உள்ளே வந்து யார் யாரையோ ஃபாலோ பண்றது, சாட் பண்றது சில நேரங்களில் தப்பா போய் முடியுது. அதனால சோஷியல் மீடியாவை எப்படி யூஸ் பண்ணணும்னு முதலில் எல்லோரும் தெரிஞ்சுக்கிறது நல்லது.''


p21c.jpg

அராத்து (எழுத்தாளர்): ``நான் சோஷியல் மீடியாவில் அடிக்ட்டா இருக்கேன்னு சொல்ல முடியாது. ஆனா, அடிக்கடி யோசிப்பேன்... `இதுக்கு இவ்ளோ டைம் செலவழிக்கவேண்டியிருக்கே’னு. நான் ஒரு வாரம் போஸ்ட் போடலைன்னாலே தேட ஆரம்பிச்சுடுறாங்க; தொலைந்துபோன ஒரு மனிதனா நினைச்சுடுறாங்க. அதனாலேயே எவ்ளோ பிரச்னைகள் இருந்தாலும் கடமைக்காக ஒரு போஸ்ட் போடவேண்டியிருக்கு. ஆனா, நான் மொபைலில் ஃபேஸ்புக், ட்விட்டர் இன்ஸ்டால் பண்ணிவைக்கலை. என் நண்பர்கள் நிறையப் பேர் ஒரு டிஸ்கஷன் நடக்கிறப்போகூட மொபைலில் சாட் பண்ணிட்டிருக்கிறதைப் பார்த்திருக்கேன்.''


p21d.jpg

ஆர்.ஜே பாலாஜி (பண்பலைத் தொகுப்பாளர்): ``இதை அடிக்‌ஷனா நான் நினைக்கலை. ஆனா, என் வாழ்க்கையில இது ஒரு நியூசென்ஸா ஆகிடுச்சோனு ஃபீல் பண்றேன். ஒரு விஷயத்துக்குப் போராடுறதுனா நேரடியாப் போய் அதைச் செய்யணும். ரியல் லைஃப்ல கோபத்தைக் காட்ட முடியாம, உதவி செய்ய முடியாம சோஷியல் மீடியாவில் மட்டும் போஸ்ட் போடுறது என்னைப் பொறுத்தவரையில் நியூசென்ஸ்தான்.''


p21e.jpg

லீனா மணிமேகலை (கவிஞர்): ``சோஷியல் மீடியா, எனக்கு ஒரு அடிஷனல் மீடியம் அவ்ளோதான். இது இல்லைன்னா அடுத்து அதுக்கு வழிகாட்ட வேற  ஒரு  விஷயம் கிடைக்கும். தொழில்நுட்பங்கள் நாம் சார்ந்த விஷயங்களை மத்தவங்களுக்கு எடுத்துப் போற வாகனம். இது இல்லாட்டி இன்னொண்ணு அவ்ளோதான்.''


p21f.jpg

வித்யா விஜயராகவன் (மாணவி): ``சோஷியல் மீடியா இல்லாட்டியும் நான் ஜாலியா ஊர் சுத்திட்டுத்தான் இருப்பேன். ஃப்ரெண்ட்ஸ்கூட வெளியில போவேன். புக்ஸ் படிப்பேன். அங்கே பேசுறதை இங்கே ஃப்ரெண்ட்ஸ்கூடப் பேசுவேன்.''

vikatan

  • தொடங்கியவர்

செல்ஃபியைத் தடுப்பது எப்படி?

 

p58f.jpg

நாம் இஷ்டத்துக்கு செல்ஃபி சுட்டுதள்ளி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்னு போட்டுத்தள்ளுறதை நிறுத்த நம் ஊர் அப்பாக்கள் செய்றது இதுதான். ‘செல்ஃபியால் வந்த விபரீதம்’, ‘செல்ஃபி எடுத்தால் கேன்சர் வருமாம்’ போன்ற செய்திகளை நம்மகிட்ட திகிலா படிச்சுக்காட்டிப் பயமுறுத்துவாங்க, ‘போனைத் தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க’னு மிரட்டுவாங்க. இல்லைனா ஸ்டாலின் மாதிரி செல்ஃபி எடுக்கும்போது செவிட்டிலேயே கொடுப்பாங்க.  ஆனால், வாஷிங்டனைச் சேர்ந்த கிறிஸ் மார்டின் என்பவரோ தனது மகள் செல்ஃபி எடுத்துப் போடுவதைத் தடுக்க வித்தியாசமான முறையைக் கையாண்டு வருகிறார். இந்த மேட்டரும் இப்போ இணையத்தில் வைரல்.

p58a.jpg

p58b.jpg

p58cv.jpg

p58d.jpg

p58e.jpg

p58.jpg

‘செல்ஃபி எடுக்கிறதை நிறுத்துனு அவங்ககிட்ட நேரடியா சொல்ல வேண்டாம்னு யோசிச்சுதான், இந்த ஐடியாவைக் கையில் எடுத்தேன்’ என்கிறார். அப்படி என்ன பண்ணியிருக்கார்னு நீங்களே போட்டாவைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க மக்களே. இனி அந்தப் புள்ள செல்ஃபி எடுக்கும்போது இதெல்லாம் கண்ணு முன்னாடி வந்துபோகுமா இல்லையா?

 

vikatan

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

p40a.jpg

கேட்பாரற்ற நதி... 

யாருக்கும் தெரியாமல்

நதியொன்றை அழைத்துவந்திருக்கிறேன்

என் அறைக்கு.

அது எனக்கு நீச்சல் பழக்கிவிடுகிறது

மீன்பிடிக்கக் கற்றுத்தருகிறது

படகோட்ட சொல்லிக்கொடுக்கிறது

அந்த நதி நீரில்தான்

இப்போது தினமும் குளிக்கிறேன்

என் துணிகளைத் துவைக்கிறேன்

எனக்கான தேநீர் தயாரிக்கிறேன்

அறையைவிட்டு வெளியே செல்லும்போது

ஆணியடித்து சுவரில் மாட்டிவிடுகிறேன்

அந்த நதியை.

மீண்டும் தன் இருப்பிடம் செல்ல

இறைஞ்சிய நதியை

நான் அனுமதிக்கவே இல்லை

நதியைக் காணோம் என்று

யாரும் தேடி வரவும் இல்லை

எனக்குத் தெரியும்

யாரும் தேடி வர மாட்டார்கள்.

 -  சௌவி 

ஒத்தையடி பாதையிலே...

சாராய நெடியடிக்க சாவு வீட்டில்

’ஒத்தையடி பாதையிலே...

ஊரு சனம் தூங்கையிலே...’ என

சாவு மேள இசைக்கு காற்றில் தலையசைத்து

இடுப்பை வளைத்துக் குறுக்கி நீட்டியாடும்

முனியனின் வழக்கமான ஆட்டம் பார்த்து,

துக்கம் விசாரித்துப்போகும்போது

ஊர்த் தலைவர் கொடுத்த பத்துரூபாயை

கக்கத்தில் துண்டை செருகி குனிந்து வாங்காமலும்,

’ஏலேய் முனியா காலையிலேயே

பட்டையைப் போட்டுட்டியாடா..?’ எனக் கேட்கும்

அவரின் குரலுக்குத் தலைசொறிந்து  

பழுப்பேறிய புகையிலைக் கறை பற்கள் தெரிய

சிரிப்பதுவுமின்றி

நீண்டு கிடத்தப்பட்டிருந்த முனியனின் உடல்,

குளிப்பாட்ட நிமிர்த்துகையில் ஒருபக்கமாய்ச்

சரிந்துவிழுகிற தலை,

உச்சஸ்தாயில் பறையதிர ஒலித்த

’ஒத்தையடி பாதையிலே...’வுக்குத்

தலையசைப்பதாகவே பட்டது!

 - ந.கன்னியக்குமார் 

பக்தி...

இங்கு செருப்பு பாதுகாக்கப்படும் என

எழுதிய சிலேட்டை

தலைக்கு மேல் மாட்டிவைத்து

மஞ்சள் சேலையில்

ஈரம் காயா தலையுடன்

அம்மனின் கருணைபோல்

அமர்ந்திருக்கும்

பெரிய பொட்டுக்காரியிடம்

செருப்பைக் கழற்றிவிட்டு  

நகர்கிறது வரிசை.

நம் கைபடாத செருப்புகளை

பூப்போல் தூக்கி

மர அடுக்குகளில் அடுக்கி

டோக்கன் கொடுத்தணுப்பும்

அவள் கைகளில்

ஆயிரமாயிரம் கால் தடங்கள்.

கழற்றிய செருப்பைத்

திரும்பப் பெறுகையிலும்

கை தீண்டிடாமல்

கவனமாய்க் கால் நுழைக்கும்

நம்மவர்களுக்கு

வசதியாக காலுக்கருகிலேயே

செருப்பு வைக்கும்

கனிந்த அவள் கைகளில்

நாணயம் ஒன்றைத் திணிப்போம்.

அதைக் கண்ணில் ஒற்றி

காணிக்கை என்பவளது

தொழில் பக்தியைத்தான்

நாம் காலில் அணிந்து

வீடு வருகிறோம்!

 - மு.மகுடீசுவரன்

 

குரங்கு உண்டியல்...

அப்பாவின் கைப்பை

அம்மாவின் அஞ்சறைப்பெட்டி

அண்ணனின் சட்டைப்பை

அக்காவின் பென்சில் டப்பா

தாத்தாவின் வெற்றிலைப்பெட்டி

பாட்டியின் சுருக்குப்பை

சுற்றியது போதுமென

கடவுள் சிலைக்குப் பின்புறம்

இளைப்பாற இடம் தேடியது

குட்டி தேவதையின்

குரங்கு உண்டியல்!

மீ.மணிகண்டன்

vikatan

  • தொடங்கியவர்
சவாரி...
 
 

article_1467465602-35E0DA3A00000578-0-im

இந்தோனேஷியா, ஜகார்த்தாவிலுள்ள தோட்டமொன்றில் தவளையொன்றும் ஆமையொன்று நட்பாகப் பழகுவதை புகைப்படக் கலைஞரொருவர் இவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளார்.

article_1467465612-35E0DA4700000578-0-imarticle_1467465620-35E0DA6200000578-0-imarticle_1467465629-35E0E17000000578-0-im

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அஜித்தின் புது லுக்! - வைரல் புகைப்படங்கள் #BestOfToday #Viralphotos

ஜாக்கிஜான் இன்று பிரபுதேவாவின் 'தேவி' படத்தின் ஹிந்தி போஸ்டரை வெளியிட்டார்

 11.jpg


அஜித்தின் ரீசன்ட் லுக்!

21.jpg


நேற்று சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு சுதர்சன் பட்நாயக் என்ற கலைஞர், டெல்லியில் உருவாக்கிய மணல் சிற்பம்

31.jpg

பிரபல தயாரிப்பாளர் ராஜ்ஜாத், நேற்று திடீரென்று காலமானார். சல்மான்கான், ட்விட்டரில்  தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்

41.jpg

சாமுவெல் ஜாக்சனுடன் தீபிகா படுகோனே

51.jpg

வீக் என்ட் பார்ட்டி! #aliabutt

61.jpg


  63 வருட திருமண வாழ்க்கையைக் கொண்டாடும் தனது தாத்தா, பாட்டியை கேண்டிட் எடுத்திருக்கிறார் பிரபல ஃபோட்டோகிராஃபர் ஷாலின் நெல்சன்! செம்ம க்யூட்...

7.jpg


  நேற்று டிவி ஷோ ஒன்றில் பங்குபெற்ற ரித்திக் ரோஷன் ,  காம்பியரர் சித்தார்த் கண்ணனுடன் பிரேக்கில் ஹாலி க்ளிக்!

8.jpg


சீனாவில் இன்று பிறந்தநாள் கொண்டாடிய மூன்று பாண்டாக்கள்தான் வைரல்... ( வீடியோ வைரல் கார்னரில்)

9.jpg


மக்கள் கூட்டத்தைப் பார்த்த உற்சாகத்தில் ஹிலாரி!

10.jpg


எகிப்த் நாட்டில் ஒட்டக சந்தையில் ஒட்டகங்களை ஏற்றும் காட்சி...

111.jpg


பார்க்க ஏதோ ரயில் நிலையம் போல் உள்ளது. ஆனால் இது பிலிப்பைன்ஸ் நாட்டின் சிறை. இடப்பற்றாக்குறையால் அவதிப்படும் கைதிகள்...

12.jpg

vikatan

  • தொடங்கியவர்

ஹென்றி ஃபோர்டு 10

 

ஹென்றி ஃபோர்டு
ஹென்றி ஃபோர்டு

பிரபல அமெரிக்க கார் தயாரிப்பாளர்

அமெரிக்கப் போக்குவரத்துத் துறையில் கார் உற்பத்தி மூலம் புரட்சியை ஏற்படுத்திய ஹென்றி போர்டு (Henry Ford) பிறந்த தினம் இன்று (ஜூலை 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்தார் (1863). சிறுவயதில் அப்பா தனக்குத் தந்த பாக்கெட் வாட்சை கழற்றிப் பழுது பார்க்கக் கற்றுக்கொண்டார்.

* 16 வயதில் டெட்ராய்ட் நகரில் ஒரு கனரகத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 3 ஆண்டுகளுக்குப் பின்னர் மிச்சிகன் திரும்பினார். அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த நீராவி இயந்திரங்களை இயக்குவதிலும், அக்குவேறு ஆணி வேறாக கழற்றி மாட்டி, அவற்றைப் பழுது பார்ப்பதிலும் நேரத்தைச் செலவிட்டார்.

* 1891-ல் எடிசன் இல்லுமியேடிங் கம்பெனியில் தலைமைப் பொறியாளராகச் சேர்ந்தார். அடுத்த 2 ஆண்டுகள் பெட்ரோலில் இயங்கக் கூடிய கார் தயாரிக்க அயராது உழைத்தார்.

* 1896-ம் ஆண்டு, பல்வேறு உதிரிப் பாகங்களையும் பல்வேறு உலோகங்களையும் கொண்டு தன் வீட்டில் பின்புறம் இருந்த ஒரு செங்கல் கூடாரத்தில் ஒரு வாகனத்தை வடிவமைத்தார். பார்ப்பதற்கு சைக்கிள் போன்று தோற்றமளித்த நான்கு சக்கரங்கள், ஒரு இருக்கையும் கொண்ட அதற்கு ‘க்வாட்ரி சைக்கிள்’ என்று பெயரிட்டார். அதை ஓட்டிப் பார்க்க எண்ணியபோது கூடாரத்தின் கதவு சிறிதாக இருந்ததால் அதை வெளியே கொண்டு வர முடியாது என்பதை உணர்ந்தார்.

* ஆனால், தான் தயாரித்த வாகனத்தை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கோடரியை எடுத்து அந்தச் செங்கல் சுவற்றைத் தகர்த்து, வாகனத்தை வெளியே கொண்டு வந்து வீதிகளில் வலம் வந்தார். எடிசன் நிறுவனத்துக்காக 1898-ல் இரண்டாவது மாடலை உருவாக்கினார்.

* 1903-ல் மிச்சிகனில் ஃபோர்ட் மோட்டார் கம்பெனி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். எப்படியும் கார்களுக்கான தேவை அதிகரிக்கும் என்ற தொலைநோக்குடன் கடுமையாக உழைத்து 1908-ம் ஆண்டு, ‘மாடல் டி’ என்ற காரை உருவாக்கினார்.

* சாமான்யர்களும் கார் வாங்க வேண்டும் என்று அவர் விரும்பியதால் தயாரிப்பு செலவு அதிகமாகாமல் பார்த்துக்கொண்டார். தற்போதைய நவீன கார்களின் முன்னோடியான ‘மாடல் டி’ கார்கள் ஆயிரக் கணக்கில் விற்பனையாகின. 18 ஆண்டுகளில் 15 மில்லியன் கார்களை விற்றது இவரது நிறுவனம்.

* உலகின் மிகப் பெரிய செல்வம் கொழிக்கும் தொழிலதிபராக இவர் உயர்ந்தார். ஊழியர்களுக்கு அதிக சம்பளம், வாரம் ஐந்து நாள் வேலை, டீலர்களை மதித்து நடத்துதல், வேலை நேரத்தைக் குறைத்தது, புதுமையான விளம்பர உத்தி, கார் கடன் வழங்குதல் என அமெரிக்கத் தொழில்துறைக்கு இவர் பல விஷயங்களை அறிமுகப்படுத்தினார்.

* தான் வாழ்ந்த க்ரீன் ஃபீல்ட் கிராமத்தை அருங்காட்சியகமாக மாற்றினார். செல்வம் பெருகப் பெருக அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும் பெருகியது. 1936-ம் ஆண்டு தன் மகன் தலைமையில் ‘ஃபோர்ட் ஃபவுன்டேஷன்’ என்ற அமைப்பை உருவாக்கி பல தர்மகாரியங்களுக்கு உதவினார்.

* கார் தயாரிப்பின் பெரும் உற்பத்திக்கான ‘அசெம்ளி லைன்ஸ்’ உத்தியை மேம்படுத்தியதால், ‘அசெம்ளி லைன்ஸ் தந்தை’ எனப் போற்றப்பட்டார். கார் ஜாம்பவான் எனப் புகழ்பெற்ற ஹென்றி ஃபோர்டு 1947-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

அமெரிக்க புகைப்பட கலைஞரின் 'நிர்வாண' நிகழ் கலை: (புகைப்படத் தொகுப்பு)

 

பிரிட்டிஷ் துறைமுக நகரமான ஹல் நகரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆடைகளின்றி, தங்கள் உடல்களில் தண்ணீரை குறிக்கும் வகையில் நீல நிற சாயத்தை பூசிக்கொண்டு நிகழ் கலையின் ஓர் அங்கமாக இதில் பங்கேற்றார்கள். சீ ஆஃப் ஹல் என்ற தலைப்பின் கீழ் இந்த நிகழ் கலையை அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் டுனிக் ஏற்பாடு செய்திருந்தார். அதன் புகைப்படத் தொகுப்பு.

160730110607_tunick_624x624_getty_nocred

 

அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் டுனிக்

160730110837_tunick_640x360_getty_nocred

160730111313_tunick_640x360_bbc_nocredit

160730111415_tunick_640x360_bbc_nocredit

160730111501_tunick_640x360_bbc_nocredit

160730111547_tunick_640x360_bbc_nocredit

160730111134_tunick_640x360_bbc_nocredit

160730111026_tunick_640x360_bbc_nocredit

bbc.com/tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.