Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

அம்ரிதா ப்ரீதம்

 
2005120400040101_2993251f.jpg
 

பஞ்சாபி, இந்தி கவிஞர்

பிரபல படைப்பாளியும், சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண்மணியுமான அம்ரிதா ப்ரீதம் (Amrita Pritam) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் (1919) பிறந்தவர். இவருக்கு 11 வயதானபோது தாய் இறந்தார். அந்த சோகமும் தனிமை உணர்வும் கவிதைகள் எழுதத் தூண்டின. தந்தை பள்ளி ஆசிரியர், சீக்கிய மதபோதகர், இலக்கிய இதழ் ஆசிரியர் என்பதால், இவரது படைப்பாற்றல் மேலும் பளிச்சிட்டது. l

*பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறையால் ஏராளமானோர் அகதிகளாகினர். அதில் இவரது குடும்பமும் அடக்கம். லாகூரில் இருந்து டெல்லிக்கு இவர்களது குடும்பம் குடிபெயர்ந்தது.

*இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘அம்ரித் லெஹ்ரான்’ 1936-ல் வெளிவந்தது. ஆரம்பத்தில் காதலும் கற்பனையும் நிறைந்த கவிதைகளைப் படைத்தார். இந்தியா - பாகிஸ்தான் தனித்தனி நாடுகளாகப் பிளவு பட்டபோது நடந்த கலவரங்களும், பல லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் இவரது எழுத்துப் போக்கையே மாற்றின.

*மதக் கலவரங்களால் ஏற்பட்ட அவலங்களைத் தன் படைப்புகளில் பதிவு செய்தார். முற்போக்குக் கொள்கைகளும் இவரது படைப்புகளில் அடிநாதமாக விளங்கின. கவிதை, கதைகள், நாவல்கள் தவிர, நாட்டில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளின்போது தன் கருத்துகளை கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தினார்.

*தனது சொந்த வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களைக்கூட கவிதைகள், கதைகளாக வடித்தார். பெண்ணிய எழுத்தாளர் என்ற பரிமாணமும் இவருக்கு உண்டு. ‘ரசீதி டிக்கெட்’ என்ற இவரது சுயசரிதை நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

*இவரது சில நாவல்கள், திரைப்படங்களாகவும் தயாரிக்கப்பட்டு விருதுகளைப் பெற்றன. ‘நாகமணி’ என்ற இலக்கிய இதழை நடத்தினார். ஓஷோவின் சில நூல்களுக்கு முன்னுரை எழுதியுள்ளார். ஆன்மிகப் படைப்புகளிலும் சிறந்து விளங்கினார்.

*இந்தியிலும் எழுதி, இந்தி இலக்கியத்திலும் தனி முத்திரை பதித்தார். அகில இந்திய வானொலி நிலையத்தில் சில காலம் பணிபுரிந்தார். இந்தியாவில் மட்டுமல்லாது, பாகிஸ்தானிலும் இவரது படைப்புகள் போற்றப்பட்டன.

*பிரபல இசையமைப்பாளர் குல்சார் இவரது கவிதைகளுக்கு இசையமைத்து 2007-ல் ஆல்பம் வெளியிட்டார். இந்தியா, பாகிஸ்தானில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பஞ்சாபி மொழி இலக்கியத்தில் சிறந்த ஆளுமையாக வலம்வந்தார். இவரது படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜப்பான் மற்றும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றன.

*பஞ்சாபி, இந்தி இலக்கியத்தில் இவரது பங்களிப்புக்காக 1982-ல் இந்தியாவின் உயரிய ஞானபீட விருது, பஞ்சாப் ரத்தன் விருது, 1956-ல் சாகித்ய அகாடமி விருது, பத்ம, பத்ம விபூஷண் என பல விருதுகளைப் பெற்றார். டெல்லி, ஜபல்பூர் பல்கலைக்கழகங்கள், விஸ்வ பாரதி அமைப்பு இவருக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கின.

*பல்கேரியா, பிரான்ஸ் நாடுகளின் விருதுகளையும் பெற்றுள்ளர். பஞ்சாபி இலக்கிய விருதை பாகிஸ்தான் அரசு இவருக்கு வழங்கியது. மாநிலங்களவை உறுப்பினராக 1986 முதல் 1992 வரை பதவி வகித்தார். தலைசிறந்த கவிஞரும், பெண்ணியவாதியுமான அம்ரிதா ப்ரீதம் 86-வது வயதில் (2005) மறைந்தார்.

tamil.thehindu

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆகஸ்ட் 31: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீ்நாத் பிறந்த நாள் இன்று

14202786_1216052155120239_10130291229527

  • தொடங்கியவர்

அழகா பிடிங்க அம்சமா எடுங்க! - ஈஸி 'க்ளிக்' டிப்ஸ்

ஆகஸ்ட் 19 சர்வதேச புகைப்பட தினம்

 

p4b.jpg

செல்போனில் கேமரா வந்த பிறகு, நாம் எல்லோருமே புகைப்படக்காரர் ஆகிவிட்டோம். கொசு முதல் விமானம் வரை எதைப் பார்த்தாலும், செல்போன் கேமராவில் 'க்ளிக்' செய்து மகிழ்கிறோம். ஆனாலும், டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் புகைப்படங்களின் அழகுக்கு தனிச் சிறப்பு உண்டு. ஒரு கேமராவை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான சில அடிப்படை விஷயங்கள் இங்கே... கேமராவில் புகைப்படம் எடுக்கும்போது இந்த விஷயங்களைப் பின்பற்றுங்கள். வருங்காலத்தில் சிறந்த புகைப்படக்காரர்களாக ஜொலிக்க வாழ்த்துகள்!

வலது கை விரல் வித்தை! 

எல்லா கேமராவிலும் வலது பக்கமே புகைப்படம் எடுப்பதற்கான ‘ஷட்டர் ரிலீஸ் பட்டன்' (Shutter Release Button)  அமைக்கப்பட்டிருக்கும். கோணம் பார்த்த பிறகு, உங்கள் வலது கை ஆள்காட்டி விரலை, பட்டனில் வைத்து அழுத்தவும்.

முழங்கைகள் முக்கியம்!

p4a.jpg

இரண்டு முழங்கைகளையும் உங்கள் உடம்போடு சேர்த்துவைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் கேமரா ஆடாமல், அசையாமல் இருக்கும்; எடுக்கும் புகைப்படம் சரியாக வரும்.

இடது கை கவனம்!

லென்ஸ் பகுதியை இடது உள்ளங்கையில் தாங்கிப் பிடிக்கவும்.  உங்கள் இடது கையால்தான் லென்ஸின் ஜூம் மற்றும் ஃபோகஸைக் கட்டுப்படுத்த முடியும். அதுபோல, கேமரா        கை தவறிக் கீழே விழாமல் இருக்க, கேமராவின் பட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொள்வது அவசியம்.

புருவம்! 

p4c.jpg

கேமராவில் காட்சியைப் பார்க்கும் 'வியூ ஃபைண்டர்' (View finder) பகுதியை, உங்கள் புருவத்தை ஒட்டி, சாய்த்து வைக்கவும். இது, கேமராவுக்கு மற்றொரு நிலையான ஆதரவைக் கொடுக்கும்.

அகலமும் நீளமும்!

நீளவாக்கு (Portrait position) முறையில் புகைப்படம் எடுக்க கேமராவைப் பிடிக்கும்போது, மேல் பக்கத்தில் ஷட்டர் ரிலீஸ் பட்டன் வரும். வலது கையின் முழங்கை விலகி, உடம்பின் பிடிப்பின்றி இருக்கும். எனவே, இடது கைக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கவும்.

கேமராவுக்குப் பின்னால்...

p4d.jpg

உங்கள் முகத்துக்கு முன்னால் இருக்கும்  கேமராவின் பின்பகுதியை, 'பேக் பேனல்' (Back Panel) என்பார்கள். இங்கேதான் படம்பிடிக்கும் அமைப்புகள் (Shooting setting) உள்ளன. முதல் படத்தில் இருப்பதுபோல அகலவாக்கில்  கேமராவைப் பிடித்தால், வலது கையின் கட்டை விரலால், பேக் பேனலைக் கட்டுப்படுத்தலாம்.

அமர்ந்தநிலையில்...

p4e.jpg

அமர்ந்தநிலையில் புகைப்படம் எடுக்கும்போது, ஒரு காலை தரையில் மண்டியிட்டும், ஒரு காலை மடித்தும், இரண்டு முழங்கைகளையும் உடலோடு  சேர்த்தும் வைக்கவும். உடம்பே, கேமரா ஸ்டாண்ட் போல மாறிவிடும். வெளியிடங்களில் மண்டியிட்டு எடுக்கும்போது, முட்டிப் பகுதிக்கு துணியை மடித்து  வைத்துக்கொள்வது நல்லது.

வேகத்தில் கவனம்!

p4f.jpg

ஷட்டர் ஸ்பீடு (Shutter Speed) குறைவாக வைத்துப் படம் எடுக்கும்போது, கேமரா நிலையாக இருக்க அதிக கவனம் தேவை.   இரண்டு முழங்கைகளையும் மேசையின் மீது அழுத்திவைக்கவும். நின்ற நிலையில் எடுக்கும்போது, கேமராவை இன்னும் அழுத்தமாகப் பிடித்து ஈடு செய்யலாம்.

கால்களைக் கவனி!

p4g.jpg

நின்ற நிலையில் படம் எடுக்கும்போது, இரண்டு கால்களையும் சற்றே விலக்கிவைக்க வேண்டும். எதிர்ப்பக்கமாகச் சாய்ந்து படம் எடுக்கும்போது, உங்களின் இடது காலை சற்றே முன்னோக்கி வைத்து, வலது காலை பின்னால் கொண்டுசெல்ல வேண்டும்.

ஆல் தி பெஸ்ட்!

p4i.jpg

இந்த முறைகளை மறக்காமல் பின்பற்றுங்கள். அழகான புகைப்படங்களை எடுத்து அசத்துங்கள். சின்ன வயதிலேயே கேமரா பிடித்துக் கலக்கும் இரண்டு சுட்டிக் கலைஞர்களின் படங்கள், அடுத்த பக்கத்தில்...

- எம்.உசேன், வி.அன்பரசி  மாடல்: நயிம், லிபா


p4j.jpg

‘‘என் அப்பா ஒரு போட்டோகிராஃபர். அவரைப் பார்த்துதான் நானும் போட்டோ எடுக்கிறதா சொன்னேன். கேமராவைக் கீழே போட்டுருவேன்னு முதலில் பயந்தார். ஆனா, பத்திரமா வெச்சு எடுக்கிறதைப் பார்த்ததும் ஹேப்பி ஆகிட்டார். என் கேமராவின் முதல் மாடல், என் தம்பி வசியன். சினிமா டைரக்டர் சமுத்திரகனி, சேலத்தில் ஒரு

p4m.jpg

p4n.jpg

நிகழ்ச்சிக்கு வந்தப்ப, ‘இப்படிப் பாருங்க... அப்படிப் பாருங்க'னு போட்டோ எடுக்க நான் பண்ணின கலாட்டாவில் சிரிச்சிட்டார்'' என்கிறார், சேலத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் கவின் பூபதி.

p4l.jpg

‘‘எங்க வீட்டுல கேமரா ஒண்ணு இருக்கு. டூருக்குப் போகும்போது அப்பா அதில் போட்டோ எடுப்பார். நானும் எடுக்கிறேன்னு ஆரம்பிச்சதும் என்னக்குனு தனி கேமராவே வாங்கித் தந்துட்டார் அப்பா. மனிதர்களின் முகபாவங்கள், இயற்கைக் காட்சிகளைப் படம் எடுக்கிறதில் ரொம்ப ஆர்வம். என் அக்காதான் என்னோட முதல் விமர்சகர்.

p4k1.jpg

நிறைய ஐடியாஸ் சொல்லுவாங்க'' என்கிறார், புனேயைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் என்.எம்.பரணி.

vikatan

  • தொடங்கியவர்

காதலும் கடந்து போகாதே!

love%2009.jpg

’செம்புலப் பெயல் நீர் போல்’...காதலுக்கான குறுந்தொகையின் வர்ணனை இது. காதலிக்கும் இருமனங்கள் ஒன்றாகி செம்மண்ணில் பெய்த மழைநீர் போல் ஒன்றுகலந்துவிட வேண்டும் என்பதைத்தான் அன்றைய பாடல் வரிகளில் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் மூத்தோர்.

காதல்...ஆதி ஆப்பிளில் தொடங்கிய இந்த நெஞ்சாங்கூட்டின் உணர்வு, ஆப்பிள் ஐபோன் வந்தபிறகும் கூட மனிதனுக்குள்ளும், மிருகங்களுக்குள்ளும், ஏன் சில மனிதமிருகங்களுக்குள்ளும் கூட குறைந்துவிடவில்லை.

சொல்லிப் புரிய வைக்கமுடியாத ஹார்மோன்களின் ஹைக்கூ மொழிதான் காதல். பார்த்த மாத்திரத்தில் சினிமா உலகின் மாய கிராபிக் வேலைகளே தேவைப்படாமல் ஆயிரம் பட்டாம்பூச்சிகளையும், லட்சோபலட்சம் ஆர்கிட் மலர்களையும் குட்டி இதயத்திற்குள் கடை விரிக்க காதலால் மட்டுமே முடியும். 

பார்த்த மாத்திரத்தில் ’பச்சக்கென்று’ நெஞ்சிற்குள் ஒட்டிக் கொள்ளவும், 9 மணி அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய ஒருவனை 10 மணியாகியும் பின்னாலேயே சுற்ற வைக்கவும் அழகோ, அந்தஸ்தோ தேவையில்லை....ஒரு துளிக் காதல் என்னும் உயிர்த் திரவம் போதும்.

love%2005.jpg

இத்தனை வீரியம் மிகுந்த வெளிகளைக் கடந்த வாழ்வாதாரமான காதல், இன்றைக்கும் அப்படியே இருக்கிறதா? இல்லைவே இல்லை. நான்குக்கு நான்கு கணினிப் பெட்டிக்குள் சிக்கிக் கிடக்கும் நமக்கெல்லாம், காதல் கனிரசம் சொட்டுவதே டுவிட்டருக்குள்ளும், பேஸ்புக், வாட்ஸப்புக்குள்ளும்தான்.

உண்மையிலேயே நாம் காதலைத் துளித்துளியாக தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆண்டாண்டு காலம் முகம் பார்த்துக் கிடப்பேன் என்று அடித்துச் சத்தியம் செய்யும் காதலெல்லாம் இன்று சாத்தியமே இல்லை. முப்பது விநாடிகள் முகம் பார்க்க முடிந்தாலே அது அதிசயங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டிய காதல் சாசனம்.

பரபரப்பான இந்த டிஜிட்டல் உலகில் காதல் எதையெல்லாம் தொலைத்திருக்கிறது? ஆண்டாண்டு காலம் உயிர்ப்புடன் இருக்க வேண்டிய காதல் குழந்தைக்கு அளிக்க வேண்டிய காதல் சத்துணவுகள் எவை? கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

நீ வந்த பாதையில்...வளர்ந்தது என் காதல் பூச்செடி:

love%2008.png

இன்று பத்தில் எட்டு பேருக்கு காதலென்பதே என்னவென்று தெரிவதில்லை. பார்த்தவுடன் பத்தே நிமிடத்தில் காதல் சொல்லி, ஐந்தே நாட்களில் அழ வைப்பதே காதல் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் காதல் உள்ளத்தின் அணு உலை உருவாக்கம். ஒருவரைப் பார்க்கும் போது வெடித்துக் கிளம்பி பீறிடும் அதன் வீரியம், வாழ்நாளின் கடைசி வரை கதிர் வீச்சாய் நீடிக்க முதலில் ’இவள்/ன்”தான் என் மீதமிருக்கும் வாழ்க்கை’ என்பதை மனதில் ஆழமாய் கல்வெட்டில் பதித்துக் கொள்வதே காதல். ஆதலால், முதலில் காதலிக்கத் தொடங்குங்கள்.

நேரத்தை உனக்களித்தேன்...காதலை நீ தா:

love%2007.jpg

ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 15 மணி நேரமாவது உழைப்பில் செலவிட வேண்டிய கட்டாய வேலைப்பளு இன்றைக்கு எல்லாத்துறையினருக்குமே இருக்கிறது. ஆனாலும், அதையும் தாண்டி துணையாய் வரப் போகிறவர்களிடம் அவ்வப்போது ‘சாப்ட்டியா? வேலை அதிகமா?’ என்கிற ஒன்றிரண்டு கேள்விகள், ஓராயிரம் அரவணைப்புகள் தராத இன்பத்தை பெற்றுத் தரும். வார இறுதி நாட்களில் ஒரு மணி நேரமாவது செல்போனையும், லேப்டாப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள் காதலுடன் காலத்தைச் செலவிடுங்கள்.

என் குட்டி இதயத்தை பெட்டியில் இட்டுத் தந்தேன்:

love%2004.jpg

ஒருவருக்கொருவர் சின்ன சின்ன பரிசுகள் கொடுத்துக் கொள்ளுங்கள். அது வழியில் கண்டெடுத்த கூழாங்கல்லாகவும் இருக்கலாம்; அம்மாவின் ஞாபகம் சுமந்த புடவையாகவும் இருக்கலாம்; தேநீர் சுவைக்கும் கோப்பையாகவும் இருக்கலாம். விலையோ, அழகோ முக்கியமில்லை. என்றேனும் ஒரு மழை நாளில், தனித்திருக்கும் போது, நினைவுகளை மீட்டெடுக்கும் வீரியம் அந்த பொருளுக்கு இருக்க வேண்டியதுதான் முக்கியம்.

தனிமையில் தவிக்கவிட்டுச் செல்லாதே:

love%2006.jpg
 

நின்று பேசக் கூட நேரமில்லாமல், சக மனிதர்களிடம் அன்பைப் பகிர்ந்து கொள்ளக் கூட அவகாசமின்றி, அலுவலக அகதிகளாய் எல்லோரும் மாறிப் போயிருக்கிறோம். காதல் மட்டுமே, ஏதோ கொஞ்சம் உயிருடன், இரண்டு பேரையாவது இணைத்து வைத்திருக்கின்றது. முடிந்தவரை, காதலிக்கும் ஜீவனையாவது தனிமையில் தவிக்க விடாதீர்கள். தாகத்தில் தவிக்கும் வேளையில் தண்ணீர் அவசியம். தனிமையில் தவிக்கும் வேளையில் காதல் அவசியம். 

உண்ணும் உணவில் உன் காதல் கலந்திருக்கும்:

love%2001.jpg

வாரத்திற்கு ஏழு நாட்கள் இருக்கிறது. ஒரே ஒருநாளை, ஒருவருக்கொருவர் ஒதுக்கி பிடித்த உணவை ஒன்றாக உண்ணுங்கள். பைவ் ஸ்டார் ஹோட்டலெல்லாம் தேவையில்லை. ரோட்டுக்கடையின் இட்லி கூட போதும். ஆனால், அந்த உணவு ஆத்மார்த்தமான அன்போடு பகிர்ந்து சாப்பிடுவதாக இருக்க வேண்டும். 

கடைசியாக ஒன்றே ஒன்று:

love%2002.jpg

காதலென்பது உடல்கள் மட்டுமே இணைந்து பேசும் மொழி கிடையவே கிடையாது. அம்மாவின் அன்பும், அப்பாவின் கண்டிப்பும், தங்கையின் பாசமும், அண்ணனின் அரவணைப்பும் சூழ்ந்த மொத்த உறவுகளின் ஒற்றை வடிவம்தான் காதல். அதை கண்களில் தேடுங்கள்...கைகளைப் பற்றிக் கண்டடையுங்கள்...

அதுதான் காதல்....காதல் மட்டுமே கவிதை...மற்றதெல்லாம் கவிதையை வடிக்கும் மொழிகள்....என்றுமே காதலைக் கடந்து போக விடாதீர்கள்!

vikatan

  • தொடங்கியவர்

 

வியக்கவைக்கும் உலுரு பாறை : பிரத்யேகக் காட்சிகள்
======================================
ஆஸ்திரேலியாவின் உலுரு பாறையை வானில் இருந்து பார்க்கக் கிடைத்தது இதுவே முதல்முறை. ஆஸ்திரேலிய பழங்குடியின மக்களுடன் பணிப்புரியும் ஒரு பயண நிறுவனம் இதனை படம் எடுத்தது. ட்ரோன் மூலம் படமெடுக்க பழங்குடி தலைவர்கள் சிறப்பு அனுமதி வழங்கினர்.இந்த பண்டைய ஒற்றைக்கல் பாறையின்தி கைப்பூட்டும் படங்களை அது படம்பிடித்தது.

  • தொடங்கியவர்

14199489_1116734458375247_76376303852261

இளைய இசை ரசிகர்களின் இதயம் வென்ற இளைய 'இளையராஜா' , தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள்....

Happy Birthday Yuvan Shankar Raja

 
 
 

அறிந்தும் அறியாத யுவன் ஷங்கரின் க்ளாஸிக்ஸ்! #Yuvanism #U1BDay #HBDYuvan

yuvan.jpg

இன்றைய யூத்களின் ஐகானாய் விளங்கும் ஸ்டைலிஷ்  இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா. அரவிந்தனில் ஆரம்பித்து தொடர்கிறது அவரின் யுவனிசம். பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இவரின் ட்ராவல் இருந்திருக்கிறது.  எல்லா இசையமைப்பாளர்களுக்கும் நேர்வதுபோல் மிகவும் அர்ப்பணிப்புடன் பண்ணப்பட்ட யுவனின் சில படங்களின் இசை சரிவர கவனிக்கப்படாமலே போனது இசை ரசிகனின் துரதிருஷ்டம்தான். அந்த வகையில்... 

'வேலை' என்றொரு படம். 'காலத்துக்கேற்ற ஒரு கானா' என்று அப்போதே தனது வெஸ்டர்ன் கலந்த ஃபோக்கில் நாசர் குரலில் பாட வைத்திருப்பார். ஐந்தே பாடல்கள் என்றாலும் ஐந்தும் வெவ்வேறு வெரைட்டி காட்டியவை. விக்னேஷ் ஹீரோவாய் நடித்த இந்தப் படம் யுவனின் ஆரம்பகால ஹிட் ஆல்பத்தில் ஒன்று. படம் கவனிக்கப்படாமல் போனதில் பாடல்களும் பலரின் காதுகளைச் சென்றடையவில்லை. நாசரின் கணீர் குரலில் உதித்த பாடல் கீழே...

 

 

 

'புன்னகைப்பூவே ' . நந்தா, காவேரி நடித்த இந்தப் படம் ஒரு மியூஸிக்கல் ட்ரீட். இந்த ஆல்பத்தில் கிட்டத்தட்ட 10 பாடல்கள். வெஸ்டர்ன், ஃபோக், மெலடி என்று எதற்கும் குறைவில்லாத விருந்து படைத்திருந்தார் யுவன். படம் நன்றாக இருந்தாலும் ஸ்டார் கேஸ்டிங் இல்லாதது , போதுமான விளம்பரம் இல்லாதது என்ற குறையினால் பாடல்கள் பெரிதாய் ரீச் ஆகவில்லை. 

 

 

 

'பாப்கார்ன்'. நாசர் இயக்கத்தில் வந்த மூன்றாவது படம். மோகன்லால், சிம்ரன் போன்ற பெரிய நடிகப் பட்டாளம் இருந்தும் படம் ஓடவில்லை. அதனாலேயே பல எக்ஸ்பரிமென்ட்டுகளை அள்ளித் தெளித்திருந்த யுவன் பாடல்கள் தேவையான செவிகளுக்கு சென்றடையவில்லை.

 

 

 

'அவன் இவன்'. பாலாவின் இயக்கம். ஆர்யா, விஷால் கூட்டணி. நான் கடவுளுக்குப் பிறகு வந்த படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு. ஆல்பம் ரீதியாக எந்தக் குறையும் வைக்கவில்லை யுவன். 'ஒரு மலையோரம்' என்ற டூயட் முழுவதும் தொடரும் மென்சோகம் எப்பவும் விலகாது அமைந்தது. விஷாலின் அறிமுகப்பாடலில் வெறும் 'டீயாடீயாடோலே' என்ற வார்த்தை மட்டும் வைத்து அதகளம் பண்ணியிருப்பார். கடுமையாக உழைத்தும் படம் தந்த ஏமாற்றம்  யுவனின் இசையைக் கவனிக்கப்படாமல் போகவும் அமைந்தது.

 

 

 

'சத்தம் போடாதே'. இயக்குநர் வசந்த் ப்ளஸ் யுவன் கூட்டணியில் வந்த 'பூவெல்லாம் கேட்டுப்பார்'  படம் சுமாராய்ப் போனாலும் பாடல் ஆல்பம் யுவனுக்கு தனிப்பெயரை வாங்கித்தந்தது. ஹீரோயின் அறிமுகப்பாடல், டூயட், பேத்தாஸ் சாங், பிட் சாங்ஸ் என்று சகல ஏரியாவிலும் தான் ராஜா மகன் என்பதை நிரூபித்தார்  யுவன். ஆனால் அதே கூட்டணியில் வெளிவந்த 'சத்தம் போடாதே' வணிக ரீதியான தோவியடைந்தாலும் படத்தில் இடம்பெற்ற நேஹா பாடிய ' பேசுகிறேன் பேசுகிறேன்' பலரின் ரிங்டோன். காலர் டியூன் எனப் பரவியது. 'அழகுக்குட்டிச்செல்லம்', அட்னன் சமி ப்ளஸ் யுவன் காம்பினேஷனில் வந்த ' ஓ இந்த காதல் வந்து என்னைக் கொல்லுகின்றதே' என்ற இசை இன்பம் ஆடியோவில் மட்டுமே நிரம்பி வழிந்தது.

 

 

vikatan

  • தொடங்கியவர்

 

250 மீட்டர் உயர புகைபோக்கியின் உச்சியில் ஒற்றைச்சக்கர சைக்கிள் சாகசம்

ரொமேனியாவின் தர்குஜியு நகரிலேயே மிக உயரமான கட்டிடம் இந்த மிகப்பெரிய புகைபோக்கி. 250 மீட்டர் உயரமான அந்த புகைபோக்கியின் மேல், ஒரு சக்கர சைக்கிளை ஓட்டி சாகசங்கள் செய்தார் சாகசக்கலை நிபுணர்.

  • தொடங்கியவர்

பனிக்காட்டு ராஜா!

 

p76a.jpg

பீட்டர் ஃப்ரியூச்சன் என்பவர் டென்மார்க்கைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சி வல்லுநர். ஆர்க்டிக் பிரதேசங்களில் பனிமலைகளைத் தோண்டி ஆராய்ச்சி செய்து புத்தகங்கள் எழுதிய இவரைத் தோண்டியெடுத்து நாம் அகழ்வாராய்ச்சி செய்வோம் வாருங்கள்... 

இவருக்கு ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், நடிகர், மருத்துவர் எனப் பல முகங்கள் உண்டு. இலக்கிய நாவல், அறிவியல் புத்தகங்கள், தான் பயணித்த நாடுகளின் கலாசாரம், பயணக் குறிப்புகள், சுயசரிதை என எல்லாத் தளங்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார். ஆறு அடி ஏழு அங்குல உயரம் கொண்ட ஃப்ரியூச்சனுக்கு மூன்று திருமணங்கள் நடந்தன. பல வருடங்கள் கிரீன்லாந்தில் வசித்த இவர் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளுக்கும், சைபீரியாவுக்கும் பயணம் செய்து ஆராய்ச்சி செய்திருக்கிறார். தனது 20 வயதில் முதல் அகழ்வாராய்ச்சிப் பயணத்தைத் தொடங்கிய அவர் சாகும்வரை 7,000 மைல்களுக்கும் மேல் பயணம் செய்திருக்கிறார்.

p76.jpg

பத்திரிகையில் நிருபராக சிறிது காலம் பணியாற்றிய பீட்டர் ஒரு சினிமா கம்பெனியைத் தொடங்கி துருவப் பகுதிகள் தொடர்பான சினிமாக்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும், பனிமலைகளில் வாழ்ந்த எஸ்கிமோக்களைப் பற்றிய படமான ‘எஸ்கிமோ’ எனும் திரைப்படத்தில் நடிக்கவும் செய்தார். இந்தத் திரைப்படம் 1933-ம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது படத்தில் தனது இறந்துபோன முதல் மனைவியின் பெயரை ஒரு முக்கியக் கதாபாத்திரத்திற்குச் சூட்டியிருப்பார்.

துருவப் பகுதிகளில் கடும் பனிகளினூடே பயணித்ததால் காலின் கீழ்ப்பகுதி பெரிதாக வீங்கிச் செயலிழந்துவிட்டது. அதை அவரே நீக்கிவிட்டுக் கட்டைகாலைப் பொருத்திக்கொண்டார். 1950-களில் அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற க்விஸ் போட்டியாக இருந்த ‘$64,000’ என்ற போட்டியில் பங்கேற்று அதிகபட்சத் தொகையான 64,000 டாலர்களை வென்றார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனுக்கு எதிராகத் தனது கட்டைக்கால்களோடு சண்டையில் ஈடுபட்டார். முடிவில் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்து தப்பித்தார். இப்படித் தனது வாழ்நாள் முழுக்கப் பனிப் பிரதேசங்களில் பயணம் செய்தவர் தன் 71-வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

பனியிலே கரைந்தது உன் உயிரா?

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

செப்டெம்பர் - 01

 

1715 : பிரான்ஸின் மன்னன் பதினான்காம் லூயி 72 ஆண்­டுகள் ஆட்­சியின் பின்னர் இறந்தார். 

 

1894 : அமெ­ரிக்­காவில் மின­சோட்­டாவில் இடம்­பெற்ற காட்­டுத் தீயில் 400 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1897 : வட அமெ­ரிக்­காவின் முத­லா­வது சுரங்க ரயில் சேவை பொஸ்டன் நகரில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

800varalaru.jpg1902 : முத­லா­வது விஞ்­ஞான கதை­யம்சம் கொண்ட திரைப்­படம் (ஏ ட்ரிப் டு த மூன்) பிரான்ஸில் திரை­யி­டப்­பட்­டது.

 

1914 : ரஷ்­யாவின் சென் பீட்­டர்ஸ்பேர்க் நகரம் பெட்­ரோ­கிராட் என பெயர் மாற்­றப்­பட்­டது.

 

1923 : ஜப்­பா­னிய டோக்­கியோ மற்றும் யோகோ­ஹா­மாவில் இடம்­பெற்ற பூகம்­பத்தில் சுமார் 105,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1928 : அஹமெட் ஸோகு அல்­பே­னியா நாட்டை முடி­யாட்­சி­யாக  பிரகடனப்படுத்தி தன்னை அதன் மன்­ன­ராக அறி­வித்தார்.

 

1939 : இரண்டாம் உலகப் போர்: நாஸி ஜேர்­மனி போலந்தின் மீது படை­யெ­டுத்­தது. ஐரோப்­பாவில் இரண்டாம் உலக யுத்­தத்தின் ஆரம்­ப­மாக இது கரு­தப்­ப­டு­கி­றது. 

 

1951 : ஐக்­கிய அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா மற்றும் நியூ­ஸி­லாந்து ஆகி­யன தமக்­கி­டையே பாது­காப்பு ஒப்­பந்­தத்தை (ஆன்சஸ் ஒப்­பந்தம்) செய்து கொண்­டன.

 

1961 : எரித்­தி­ரிய விடு­தலைப் போர் ஆரம்­ப­மா­னது. ஹமீட் இட்ரிஸ் அவாட்டெ என்­பவர் எத்­தி­யோப்­பியக் காவல்­துறை மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தினார்.

 

1969 : லிபி­யாவில் கேணல் முஅம்மர் கடாஃபி புரட்­சியின் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்­றினார்.

 

1970 : ஜோர்தான் மன்னர் ஹுசெய்னை கொலை செய்­வ­தற்­காக அவரின் வாகனத் தொட­ரணி மீது  தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.  

 

1972 : ஐஸ்­லாந்தில் இடம்­பெற்ற உலக சது­ரங்க (செஸ்) போட்­டியில் அமெ­ரிக்­க­ரான பொபி ஃபிஷர் ரஷ்­ய­ரான பொரிஸ் ஸ்பாஸ்­கியை வென்று உலக சம்­பி­ய­னானார்.

 

1979 : நாஸாவின் பய­னியர் 11 ஆளில்லா விண்­கலம் சனி கோளை –21,000 கி.மீ. தூரத்தில் அடைந்­தது. இதுவே முதன் முதலில் சனி கிர­கத்தை அடைந்த விண்­கலமாகும்.

 

1980 : தென் கொரி­யாவில் ஜனா­தி­பதி சோய் கியூ ஹாஹ் ராஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து புதிய ஜனா­தி­ப­தி­யாக இரா­ணுவ ஜெனரல் சுன் டூ ஹ்வான் பத­வி­யேற்றார்.

 

1981 : மத்­திய ஆபி­ரிக்கக் குடி­ய­ரசில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியின் மூலம் ஜனா­தி­பதி டேவிட் டாக்கோ பத­வியிலிருந்து அகற்­றப்­பட்டார்.

 

1983 : சோவியத் ஒன்­றி­யத்­தினுள் அத்­து­மீறி நுழைந்த கொரிய பய­ணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்­தப்­பட்­டதில் அதில் பயணம் செய்த 269 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

 

1985 : அமெ­ரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்­சியில் டைட்­டானிக் கப்­பலின் சிதை­வுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

 

1991 : உஸ்­பெ­கிஸ்தான், சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்து வெளியேறி சுதந்திரப் பிரகடனம் செய்தது.

 

2004 : ரஷ்யாவில் பெஸ்லான் நகரப் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகளால் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆடைகள்... `ஆப்'கள்... ஆனந்தம்!

அவள் 16

 

‘இந்த டிரெஸ் எனக்கு நல்லாயிருக்குமா?’ - பெண்களுக்குத் தினம் தினம் தோன்றும் தீராத கேள்வி இது. வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் இதற்குப் பதிலளித்து ஓய்ந்துபோயிருப்பார்கள். அல்லது அவர்களின் பதில்கள் கேர்ள்ஸுக்கு திருப்தியில்லாமல் இருந்திருக்கும். இனி, அந்தப் பிரச்னை இல்லை. உங்களுக்குப் பொருத்தமான ஆடைகளைத் தேர்வுசெய்து கொடுக்கும் `ஆப்'கள் இப்போது நிறைய வந்துவிட்டன. அவற்றில் சில இங்கே...

p62.jpg

`ஆப்'ஸை பயன்படுத்துவதற்கு முன்...

உங்கள் டாப்ஸ், பேன்ட், சுடிதார் உள்ளிட்ட உடைகள், காலணிகள் அனைத்தையும் தனித்தனியாக போட்டோ எடுத்து, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு ஃபோல்டரில் சேமிக்கவும்.

p62a.jpgMy Dressing - Fashion closet

இந்த `ஆப்'பை ஓபன் செய்து, தனித்தனியாக ஃபோல்டர்களில் சேமிக்கப்பட்டுள்ள உடைகளில் பிடித்தவற்றை தேர்வுசெய்து, அதன் பின்புல நிறத்தை மாற்றி மேட்சிங் பார்க்கலாம். ஃபேஸ்புக், ட்விட்டர், இ-மெயில் என தோழிகளின் அக்கவுன்ட்களுக்குப் பகிர்ந்து கருத்துக் கேட்கும் வசதியும் உள்ளது.

p62b.jpgCluise - wardrobe assistant

ஒரு பக்கா ‘பெர்சனல் ஸ்டைலிஸ்ட் அசிஸ்டன்ட்’ என்று இந்த `ஆப்'பை சொல்லலாம். ஏனெனில், இது உங்கள் ஆடைகளை வகைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், காலநிலைக்கு ஏற்ற உடை எது என்று தினமும் தெரிவிக்கும். மேலும் உலகளவிலான ட்ரெண்டிங் ஆடைகள் மற்றும் டிசைனர்களின் அப்டேட்களையும் அறியலாம். இதில் ஆடைகளின் செகண்ட் ஹேண்ட் சேல் ஆப்ஷனும் உள்ளது. அதாவது, நீங்கள் ஓரிருமுறை பயன்படுத்திய அல்லது பர்ச்சேஸ் செய்துவிட்டு சைஸ், கலர் போன்றவை பொருந்தாததால் மீண்டும் விற்க நினைக்கும் ஆடைகளை, இந்த `ஆப்'பின் வாடிக்கையாளர்களிடையே விற்கலாம், மற்றும் நீங்களும் அதுபோல் மற்றவர்களிடமிருந்து வாங்கலாம் (பேமென்ட் வசதி, இந்தியாவில் விரைவில் செயல்படுத்தப்படவிருக்கிறது)!

p62c.jpgChicisimo outfit ideas planner

‘நாளைக்குக் காலேஜ்ல/ஆபீஸ்ல முக்கியமான நிகழ்ச்சி. ட்ரெண்டியா டிரெஸ் தேர்ந்தெடுக்கணுமே..!’ என்று குழப்பமா? விடுங்கள் கவலையை! பெண்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப், இதைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பெண்களிடமிருந்து உங்களுக்குப் பல்வேறு ஃபேஷன் ஐடியாக்களைப் பெற்றுத் தரும். நீங்களும் உங்கள் ஆடைப் பரிந்துரைகள் மற்றும் ஆல்பம்களை மற்ற பெண்களுடன் ஷேர் செய்து கமென்ட்ஸ் பெறலாம்!

p62d.jpgSmart Closet - My Style Book

ஆடைகளை மேட்ச் செய்து பார்ப்பது மட்டுமல்லாமல், கல்ச்சுரல்ஸ், செமினார், அவுட்டிங் என எந்தெந்த ஆடையை எப்போது அணியலாம் என்று இந்த `ஆப்'பில் உள்ள பிரத்யேகக் கேலண்டரில் குறித்துவைத்துக்கொள்ளலாம்; நண்பர்களுக்கும் பகிரலாம்.

p62e.jpgPolyvore Style: Fashion to Buy

இந்த ஆப், ஆடைகளுக்கான ஒரு சமூக வலைத்தளம்போல செயல்படுகிறது. அதாவது இதில் உங்கள் ஆடைகளுக்கான பரிந்துரைகள் கிடைக்கப்பெறுவதோடு, மார்க்கெட்டில் உள்ள ட்ரெண்டிங் ஆடைகளைப் பார்க்கலாம், வாங்கலாம் மற்றும் அதற்கான பிறரின் கமென்ட்ஸையும் பெறலாம். மேலும், இதில் உள்ள ஆயிரக்கணக்கான பிராண்டட் மற்றும் டிசைனர் ஆடைகளில் உங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்வு செய்து, பிறகு வாங்குவதற்கென அந்தப் புகைப்படங்களை சேமித்துவைக்கலாம். இதே ஆப் லிங்க்கில் உள்ள உங்கள் நண்பர்கள் யாராவது அதைப் பார்க்க நேர்ந்தால், அதை உங்களுக்குப் பரிசளிக்கும் வாய்ப்பும் உண்டுதானே?!


ங்கள் மொபைலில் உள்ள ப்ளே ஸ்டோரில் (Play Store) ஆப்களின் பெயரை டைப் செய்து தரவிறக்கம் (Dowunload) செய்து அவற்றைப் பயன்படுத்தலாம்.

vikatan

  • தொடங்கியவர்

மிஸ் ஶ்ரீ லங்கா

 

 

மிஸ் ஶ்ரீ லங்கா

 

தெரண ஊடக வலையமைப்பின் அனுசரணையில், ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் தெரண மிஸ் ஶ்ரீ லங்கா புவி அழகி (Derana Miss Sri Lanka for Miss Earth 2016) போட்டி வஸ்கடுவை - சிற்றஸ் ஹோட்டலில் நேற்று (31) இடம்பெற்றது.

இதில் 2016ம் ஆண்டிற்கான தெரண மிஸ் ஶ்ரீ லங்கா புவி அழகியாக திமந்தி எதிரிரட்ன மகுடம் சூட்டிக் கொண்டார்.

இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பிலிபைன்ஸில் நடைபெறவுள்ள உலக புவி அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி திமந்தி எதிரிரட்ன கலந்து கொள்ள உள்ளார்.

இந்த நிகழ்வில், 2015ம் ஆண்டுக்கான புவி அழகி (மிஸ் ஏர்த்) ஏஞ்சலியா ஒன்க் (Angelia Ong) மிஸ் ஶ்ரீ லங்கா பட்டம் வென்ற அழகிக்கு கிரீடம் சூடியமை விஷேட அம்சமாகும்.

http://tamil.adaderana.lk

  • தொடங்கியவர்

எதிர்த்துப் போராடினால், பின்னடைவு புறந்தள்ளும்
 
 

article_1472706474-index.jpgவிழிப்புலன் அபாரமானது. பார்வையால் உலகம் புரிகின்றது. விழிப்புலன்களை இழந்தவர்களுக்கோ, அவர்கள் கருமங்களே விழிகள் ஆகின்றன. விரல்களால் தொட்டு உணர்ந்தே கல்வி கற்கின்றனர். தங்கள் கைகளில் பிரம்பு போன்ற கருவியைப் பிடித்தவண்ணம், மிகவும் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் நடந்து செல்கின்றனர்.

சகல புலனறிவு உள்ளவர்கள்தான் அதிகமான விபத்துகளைச் சந்திக்கின்றனர். இவர்கள் தங்கள் இஷ்டப்படி நடந்து தங்களைத் தாங்களே விபத்துக்களை உண்டுபண்ணுகின்றனர்.

ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்உணர்வும் அதீத அவதானமும் உண்டு. இது இறைவன் கொடுத்த வரம். இவர்களில் பலர் கல்வித்துறையில் எல்லையில்லா சாதனைகளையும் படைத்து வருகின்றனர். துன்பங்களையும் சோதனைகளையும் எதிர்த்துப் போராடினால், எங்கள் பின்னடைவு புறந்தள்ளும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
தீயினால் லண்டன் அழிந்ததை விளக்குவதற்காக 17 ஆம் நூற்றாண்டு கால லண்டனை பிரதி பலிக்கும் சிற்பம்
 

லண்டன் நகரில் 120 மீற்றர் நீளத்தில், பலகைகளால் பாரிய சிற்பமொன்று உருவாக்கப் பட்டுள்ளது. 17 ஆம் நூற்றாண்டின் லண்டன் நகர தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் இச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

189562016-08-30T155418Z_870053797_LR1EC8

 

189562016-08-30T154849Z_1717203733_LR1EC

 

189562016-08-30T154919Z_105606730_LR1EC8

 

1666 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய தீயினால் லண்டனின் பெரும் பகுதி அழிந் ததை விளக்கும் வகையில் இச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
லண்டன் களியாட்ட விழாவில்....
 

கரீபியன் பிராந்திய நாடுகளின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் நோட்டிங் ஹில் களியாட்ட விழா லண்டனில் கடந்த ஞாயிறு, திங்கள் தினங்களில் நடைபெற்றன.

 

1592016-08-29T122759Z_735948227_LR1EC8T0

 

1592016-08-29T123332Z_1512549706_LR1EC8T

 

1592016-08-29T122433Z_68531315_LR1EC8T0Y

 

159_2016-08-28T134218Z_174753459_LR1EC8S

 

வருடாந்தம் நடைபெறும் இவ் விழா ஐரோப்பாவின் மிகப் பெரிய வீதிக் களி யாட்ட விழாக்களில் ஒன்றாக விளங்குகிறது.

 

159_042720-01-02.jpg

 

159_2016-08-29T123332Z_1512549706_LR1EC8

 

159_042874-01-02.jpg

 

இம் முறை டைபெற்ற விழாவில் நடனக் கலைஞர்களும் பார்வை யாளர்கள் சிலரும் நடனமாடுவதை படங்களில் காணலாம்.

 

.metronews

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

கால்பந்தாட்டம்: தோற்றவரை தேற்றிய வெற்றி வீரர்கள்
============================================

சிறுவர்களுக்கான உலகக் கால்பந்து போட்டியில் தோல்வியடைந்த ஜப்பானிய அணி வீரர்கள் கவலையில் அழுதனர். ஆனால் அவர்களை தோற்கடித்த பார்சிலோனா அணியினர் அவர்களுக்கு ஆறுதல் கூறியது நெஞ்சை நெகிழவைத்தது.

BBC

  • தொடங்கியவர்

பிரேக் அப் படலத்தையும் ஈஸியா கடக்கலாம் - ட்ரை பண்ணுங்க ஜி!

break%20up.jpg

பிரேக் அப்பா? பசங்க உடனே தாடி வளர்த்து கையில் பாட்டிலோட கெட்ட வார்த்தைகள் புலம்பித் திரியணும், பொண்ணுங்க சோகமா மூலையில் முடங்கி அழுது தீர்க்கணும்; இதுதான் தமிழ் சினிமா புண்ணியத்தில் பிரேக் அப்பிற்கு பிந்தைய லைஃப் ஸ்டைலாகப் பதிய வைக்கப்படுகிறது. ஆனால் அப்படித்தான் இருக்க வேண்டுமென்பது இல்லை. கல்வி, வேலை போல காதலும் ஒரு ப்ராசஸ்தான். எல்லாம் முடிந்தது என முடங்கிவிட அதில் ஒன்றுமே இல்லை. பிரேக் அப்பிற்குப் பின் செய்ய வேண்டிய விஷயங்கள் என ஒரு பட்டியல் இருக்கிறது. அதைச் செய்தாலே நீங்கள் பழைய ஃபார்மிற்கு வந்துவிடுவீர்கள். முயற்சி செய்துதான் பாருங்களேன்.

நோ சென்டிமென்ட்ஸ்:

பழைய விஷயங்களைக் கிண்டிக் கிச்சடி செய்வதில் இனி பலனே இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தயவு தாட்சண்யம் பார்க்காமல் உங்கள் எக்ஸ் காதலனை/காதலியை எல்லா சோஷியல் மீடியாக்களிலும் ப்ளாக் செய்துவிடுங்கள். உங்கள் காதல் சம்பந்தமான பொருட்கள், பரிசுகளையும் நீங்கள் நார்மலாகும்வரை யாரிடமாவது கொடுத்துவைப்பது பெட்டர். 'நாம ஏன் ஃப்ரெண்ட்ஸா இருக்கக் கூடாது?' போன்ற முயற்சிகள் வேண்டாம். பிரேக் அப்பிற்கு பின்னான நட்புப் படலத்திற்கு எக்கச்சக்க மெச்சூரிட்டி தேவை. ரிஸ்க் எடுத்து பழைய நினைவுகளுக்குள் சிக்கிவிடாதீர்கள்.

ரெமோ டு இருமுகன்:

ஒரு கெட்டப் சேஞ்ச் உங்களுக்கு அளிக்கும் எனர்ஜியை எத்தனை டம்ளர் பூஸ்ட்டாலும் ஈடு செய்ய முடியாது. புது ஹேர்ஸ்டைல் மாற்றிக்கொள்ளுங்கள். ஷாப்பிங் சென்று பார்த்து வைத்திருந்த காஸ்ட்யூம்களை அள்ளி வந்துவிடுங்கள். உங்கள் வெளித்தோற்றத்தில் நீங்கள் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள்கூட உங்கள் மனதை உற்சாகமாக மாற்றலாம். கண்ணாடியில் பார்க்கும்போது இதைக் கட்டாயம் உணர்வீர்கள். 

வட்டத்திற்கு வெளியே:

உங்களுக்கு என ஒரு கம்ஃபர்ட் ஸோன் இருக்கும். அதை உடைத்து வெளியே வாருங்கள். இதுவரை செய்யத் தயங்கிய, பயந்த சில விஷயங்களை முயற்சித்துப் பாருங்கள். அது பாரா கிளைடிங் போன்ற அட்வென்ச்சராகவும் இருக்கலாம், மிட்நைட் பார்ட்டி போன்ற கலர்ஃபுல் அனுபவமாகவும் இருக்கலாம். அந்த அனுபவம் தரும் பரவசம் பழைய விஷயங்களை மறக்கடிக்கும்.

travel.jpg

ஊர் சுற்றி:

எந்த விதக் காயத்திற்கும் சிறந்த மருந்து பயணம்தான். முடிந்த அளவு தனியாகச் செல்ல முயற்சி செய்யுங்கள். இதுவரை சென்றிராத இடமாக இருந்தால் பெட்டர். தனியாக இருக்கும்போது பழைய நினைவுகளை மூளை ஃப்ளாஷ்பேக் ஓட்டிப் பார்க்கும். அதைத் தடுக்க, முடிந்தவரை புது இடத்தோடு ஒன்றிவிடுங்கள். சும்மா உட்கார்ந்து மனிதர்களை வேடிக்கை பார்க்கும் சுகமே ஸ்பெஷல் ஜி!

வெளுத்துக்கட்டு:

சாப்பாடு போன்ற சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் இருக்கவே முடியாது. பற்றிப் படர்ந்திருக்கும் ஹோட்டல்களில் இதுவரை நீங்கள் டேஸ்ட் செய்திடாத மெனுவை தேடித் தேடிச் சாப்பிடுங்கள். கொஞ்ச நாளைக்கு இதை ஒரு வழக்கமாகவே வைத்திருங்கள். கொஞ்சம் செலவாகும்தான். ஆனால் பெஸ்ட் ஐடியா இது. சிறிது நாட்களிலேயே 'பாய்ஸ்' செந்தில் போல பெரிய டேட்டா பேஸ் உங்களுக்குள் உருவாகி இருக்கும். நாலெட்ஜ் இஸ் வெல்த்!

புத்தம் புது கமிட்மென்ட்:

அதற்குள் இன்னொரு கமிட்மென்ட்டா என எகிறாதீர்கள். லவ் மட்டுமே கமிட்மென்ட் இல்லை. தினமும் வொர்க் அவுட்டோ இல்லை அலுவலகத்தில் கூடுதல் பொறுப்போ ஏதோவொன்றை புதுப் பழக்கமாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அந்தப் பழக்கம் உங்கள் ஸ்ட்ரெஸை குறைப்பதாக இருக்க வேண்டும். மண் லாரி போல ஓவர்லோடு ஏற்றினால் அப்புறம் மூளை தண்ணீர் இல்லாத டெல்டா மாவட்டம் போல ஆகிவிடும்.

book.jpg

கொஞ்சம் படிங்க பாஸ்:

புத்தகம் வாசிப்பவராக இருந்தால் பிரேக் அப் காலவெளியை சுலபமாகக் கடக்கலாம். மனதை அதிகம் பாதிக்காத எளிமையான சப்ஜெக்ட்களைப் படியுங்கள். நான் ஃபிக்‌ஷன், சயின்ஸ் ஃபிக்‌ஷன், ஹியூமர் எனக் கொட்டிக்கிடக்கின்றன ஜானர்கள். புக் வேண்டாம் ஜி, படம்தான் நம்ம சாய்ஸ் என்பவர்கள் லவ் சப்ஜெக்ட் தவிர்த்து வேறு ஜானர்கள் ட்ரை செய்வது நலம். லவ்தான் வேண்டும் என்றால் அதுவே உங்களுக்கு ஹாரராகிவிடலாம். ஜாக்கிரதை.

vikatan

  • தொடங்கியவர்

 

சென்னையில் பிரபலமடைந்துவரும் ‘செல்ஃபீ’ பொம்மைகள்

ஸ்மார்ட் ஃபோன்களை வைத்து, தன்னைத் தானே படம் பிடிக்கும் "செல்ஃபீ" எனப்படும் புகைப்பட முறை பிரபலம் அடைந்துள்ளது போல, தங்கள் உருவம் கொண்ட சிறிய சிலையை வடிவமைத்துக் கொள்ளும் முறை தற்போது சென்னையில் வர்த்தகமயமாகியுள்ளது.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று... தனிநாயகம் அடிகளார் நினைவு தினம்

History fb

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய தனிநாயகம் அடிகளின் நினைவு தினம் இன்று.

தமிழ் மொழியையும், அதன் இலக்கியச் செழுமையையும் உலகில் பரப்பும் நோக்கோடு பல நாடுகள் பயணம் செய்து ஒரே ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட பேருரைகளை நிகழ்த்தி சாதனை புரிந்தவர் இவர். இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில், ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு, சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு 1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி பிறந்தார். ஈழத் தமிழறிஞரான இவரை வண.சேவியர் தனிநாயகம் என்றும் அழைக்கப்படுவார்.

தனிநாயகம் அடிகள் தமிழ், ஆங்கிலம், எசுப்பானியம், உரோம மொழி, போர்ச்சுகீசியம், பெரஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடுவதிலும், சொற்பொழிவாற்றுவதிலும் வல்லவர். ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ் பற்றி ஆராய்ச்சி செய்தார்.

தனிநாயகம் அடிகள் தூத்துக்குடியில் பணியாற்றிய காலத்தில் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பினை நிறுவி 1952 ஆண்டில் ‘தமிழ்க் கல்ச்சர்’ (Tamil Culture) என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951 – 1959 வரை இருந்தார். இந்த இதழ் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் வரை சென்றடைந்தது.

1961ஆம் ஆண்டு சென்னையில் ‘தமிழ் பண்பாட்டுக் கழகம்’ என்ற அமைப்பினை தோற்றுவித்தார். 1964 ஆம் ஆண்டு உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலினார். இந்த நிறுவனம் உலக அளவில் தொடர்ச்சியாக 8 உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தியது.

 

இவர் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொதுச்செயலாளராக இருந்து கோலாலம்பூரில் நடந்த முதல் மாநாட்டில் பல உலக நாடுகளின் தமிழ் ஆய்வாளர்களை வரவழைத்து வெற்றிகரமாக நடத்தினார். தனிநாயகம் அடிகளார் போர்த்துகலில் கண்டறிந்த Arte da Lingua Malabar என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கண கையேடு ஆகும்.

தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு 1549 இல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்து தமிழ் மொழியை விளக்குகிறது. இந்த கையேட்டை ஜீன் ஹைன் என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழுக்காக ஓயாது பல தொண்டாற்றிய தனிநாயகம் அடிகளார் 1860 ஆம் ஆண்டு செப்டம்பர்-1ம் தேதி உயிர் நீத்தார்.

http://tv.puthiyathalaimurai.com/

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

வீடு, ஆபீஸ், அரட்டை, டீ, காபி, டிபன், டின்னர்... ஒருநாள் வாழ்க்கை உங்களுக்கு எப்படிப் போகுதுனு யோசிச்சுப் பாருங்க. `எனக்கு ஒரு பிரச்னையும் கிடையாது. ஐ ஆம் பெர்ஃபெக்ட்'னு மீசை முறுக்குறவங்களை விட்டுடுங்க. ரிலாக்ஸாப் பார்க்க வேண்டிய வேலையை இழுத்துப்போட்டு செய்றதும், இழுத்துப்போட்டு செய்ற வேலையை ரிலாக்ஸா முடிக்கிறதும்னு நம்மை இஷ்டத்துக்கும் ஆட்டிப்படைக்கிறது நம்ம மூளைதானே? அந்த மூளை எந்த கண்டிஷன்ல இருக்குனு தெரிஞ்சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி நம்ம வேலை, பழக்கவழக்கத்தை மாத்திக்கிட்டா? எல்லாம் சுபம். இதோ... நமது மூளை எப்போதெல்லாம் சுறுசுறுப்பாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்ட  `மூ-கியூ' அப்ளிகேஷன்!

p38.jpg

இங்கிலாந்தைச் சேர்ந்த உளவியல் வல்லுனர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து, அதில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். கேள்விகள் எல்லாமே உங்களைப் புரிந்துகொள்ளும் விதமான கேள்விகளாக இருக்கும் என்பதால்,  `சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை' என்று சபதம் எடுத்துக்கொண்டு கீ-பேடில் கை வைக்கவும். பிறகு? உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்விகளை உள்ளடக்கிய, இந்தப் பரீட்சையை ஐந்து முறைகள் எழுத வேண்டும். நீங்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில்  `உங்களுக்கான ரிப்போர்ட் இது' என எடுத்து நீட்டும் இந்த அப்ளிகேஷன். இப்போதைக்கு ஐ-போன்களில் மட்டுமே இருக்கும் இந்த அப்ளிகேஷன், கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு மொபைலுக்கும் வரும்.

p38a.jpg

பிறகென்ன? உங்கள் மூளை உற்சாகமாக இருக்கும் நேரம் எது? ரொம்பச் சோர்வாக இருக்கும் நேரம் எது? எந்த நேரத்தில் உங்கள் மூளை மிகச்சிறப்பாக வேலை பார்க்கிறது? என எண்ணற்ற தகவல்களைக் கொடுக்கும். போதாதா? உங்களுக்கு எரிச்சலூட்டும் வேலைகளை உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தில் தொடங்கலாம். சட்டென முடியும் வேலைகளை, மூளை கொஞ்சம் மந்தமாக இருக்கும்போது செய்யலாம். அவ்ளோ ஏன்? 'உனக்கு மூளை இருக்கா இல்லையா?'னு யாராவது திட்டினா,  `இருக்கிறதுனாலதான்டா ரிப்போர்ட் வருது'னு மொக்கையான பன்ச் பேசலாம்!

டவுன்லோடு லிங்க் : https://itunes.apple.com/in/app/moo-q/id1012982181?mt=8

vikatan

  • தொடங்கியவர்

சேலை கட்டிய பெண்களின் லண்டன் போராட்டம் - 40 ஆண்டுகள்

தொழில்துறை உறவுகள் குறித்து, ஆசிய பெண்களுக்கும் அவர்களது நிறுவன முதலாளிகளுக்கும் இடையில் லண்டனில் நடந்த முக்கிய மோதலாக கருதப்படும் ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவு இது.

BBC

  • தொடங்கியவர்
நீயா? அல்லது நானா?
 

article_1472791457-fight.jpgஓர் அற்ப விடயத்திற்காகப் பிறருடன் சவால் விடுவது வேடிக்கையான போக்குத்தான். அரசாங்கம் ஒரு கொள்கையைப் பிரகடனம் செய்வதுபோல், பலருக்கும் சத்தமிட்டுச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.

ஒருவர் மீதுள்ள கோபத்தினாலேயே சத்தமிடுவதும், நீயா? அல்லது நானா? என்று சொல்லித் தங்கள் சவாலைப் பிரகடனப்படுத்தித் திருப்தியடைகின்றார்கள்.

தமக்கு, அநாசயமாகப் பிறர் துன்பத்தை ஏற்படுத்தும்போது, எவராயினும் மனதளவில் பாதிப்புக்குள்ளாவது இயற்கைதான். எனினும் கூடியவரை உணர்ச்சிவசப்படாது நேய மனப்பாண்மையுடன் எவரையும் மன்னிப்பது தெய்வீகப் பண்பாகும்.

எவரது கோபம் நியாயமற்றதோ, அதனை உதாசீனம் செய்து பாராமுகமாக இருப்பதே எமக்கான பலமாகும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14141962_1117657408282952_36024831403745

 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர், விக்கெட் காக்கும் துடுப்பாட்ட வீரரான முஷ்பிக்குர் ரஹீமின் பிறந்த நாள்.
Happy Birthday Mushfiqur Rahim

 
  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

செப்டெம்பர் - 02

 

கி.மு. 47  : எகிப்திய அரசி ஏழாம் கிளியோபெட்ரா தனது மகன் சிசேரியனை அரசனாக்கினாள்.

 

கி.மு. 31 : கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டேவியனின் படைகள் மார்க் அந்தனி மற்றும் கிளியோபெட்ராவின் படைகளைத் தோற்கடித்தனர்.

 

8011952-SLFP.jpg1666 : லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித போல் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.

 

1752 : கிரகரியின் நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

1792 : பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற கலவரங்களில் மூன்று ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றுக்கும் அதிகமான குருமார்கள் கொல்லப் பட்டனர்.

 

1806 : சுவிட்ஸர்லாந்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 457 பேர் உயிரிழந்தனர்.

 

1870 : பிரான்ஸில் செடான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரஷ்யப் படையினர் பிரான்ஸின் மன்னனான மூன்றாம் நெப்போலியனையும் அவரின் படையினர் 100,000 பேரையும் கைது செய்தனர்.

 

1885 : அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள், வெளிநாட்டு சீனத் தொழிலாளர்களைத் தாக்கி அவர்களில் 28 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தினர். பல நூற்றுக் கணக் கானோர் நகரைவிட்டு ஓட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

 

1898 : பிரித்தானிய மற்றும் எகிப்தியப் படைகள் சூடானிய பழங்குடியினரைத் தாக்கி அந்நாட்டில் பிரித்தானிய மேலாண்மையை ஏற்படுத்தினர்.

 

1935 : அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 423 பேர் கொல்லப் பட்டனர்.

 

1945 : இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் சரணடைந்தது.  இதற்கான ஆவணத்தில் டோக்கியோ வளைகுடாவில் "மிசூரி" எனும் அமெரிக்கக் கப்பலில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஷிகேமிட்ஸு கையெழுத்திட்டார். 

 

801japan.jpg1945 : பிரான்ஸின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதாக வியட்நாம் அறிவித்தது. வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் (வடக்கு வியட்நாம்) ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.

 

1946 : பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட இந்தியாவில் ஜவஹர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.

 

1951 : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா  ஸ்தாபித்தார்.

 

1958 : அமெரிக்காவின் விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

 

1969 : ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தன்னியக்கப் பணம் வழங்கி இயந்திரம் நியூயோர்க்கில் அமைக்கப்பட்டது.

 

1970 : சந்திரனுக்கான அப்பல்லோ 15, அப்பலோ 19 பயணத்திட்டங்களை விண்வெளிப் பயணத் திட்டம் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது.

 

1990 : மோல்டோவாவின் ஒரு பகுதியான திரான்ஸ்னிஸ்திரியா பிராந்தியம், தன்னிச்சையாக வெளியேறி தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது. ஆனாலும் இதனை சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பசோவ் ஏற்கவில்லை. இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.

 

1992 : நிக்கராகுவாவில் இடம்பெற்ற பூகம்பத்தில் குறைந்தது 116 பேர் உயிரிழந்தனர்.

 

1996 : பிலிப்பைன்ஸ் அரசுக்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

 

1998 : சுவிட்ஸர்லாந்து விமானமொன்று கனடாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 229 பேரும் உயிரிழந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
முகவரியில்லாமல், வரைபடம், குறிப்புகளை கொண்ட கடிதத்தை உரியவரிடம் சேர்ப்பித்த தபால் ஊழியர்
 

கடித உறை­யொன்றில் பெயர், முக­வரி எழு­தப்­ப­டாமல், கையால் வரை­யப்­பட்ட வரை­படம் மற்றும் குறிப்­புகள்  மாத்­தி­ரமே காணப்­பட்ட போதிலும், ஐஸ்­லாந்து தபால்­து­றை­யினர் அக்­க­டி­தத்தை உரி­ய­வ­ரிடம் சேர்ப்­பித்­துள்­ளனர்.

 

ஐஸ்­லாந்தின் போர்­டர்­டலுர் நக­ரி­லுள்ள கெத்­தரின் காடூ ஒஸ்­டென்பெல் எனும் பெண், தனது வீட்­டுக்கு வந்த அக்­க­டி­தத்தைக் கண்டு பெரும் வியப்­ப­டைந்தார். 

 

1898145.jpg

 

அக்­க­டி­தத்தில் பெயர் முக­வரி எதுவும் இருக்­க­வில்லை. வரை­ப­டமும் சில குறிப்­பு­களும் இருந்­தன. 'நாடு: ஐஸ்­லாந்து, பெயர்: போர்­டர்­டலுர் நகரில் குதி­ரைப்­பண்­ணை­யொன்றில் 3 பிள்­ளை­களைக் கொண்ட ஐஸ்­லாந்து, டேனிஷ் தம்­ப­தி­யொன்று' என அதில் எழு­தப்­பட்­டி­ருந்­தது.

 

மேற்­படி டேனிஷ் (டென்மார்க்) பெண் சுப்­பர்­மார்க்கெட் ஒன்றில் பணி­யாற்­று­பவர் எனவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

 

இந்தக் குறிப்­புகள், வரை­ப­டத்தின் மூலம் மேற்­படி கடிதம் கெத்­த­ரி­னுக்கு உரி­யது என்­பதை தபால் ஊழியர் கண்­ட­றிந்து அவ­ரிடம் ஒப்­ப­டைத்­துள்ளார். 

 

இக்­க­டிதம் சுற்­றுலா பயணி ஒரு­வரால் அனுப்­பப்­பட்­ட­தாகும். அச்­சுற்­றுலா பயணி மேற்­படி குடும்­பத்­தி­ன­ருடன் தங்கியிருந்து சென்ற போதிலும் அத்தம்பதியினரின் பெயர்களை அவர் மறந்துவிட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
Bild zeigt 1 Person , Bart und Nahaufnahme
 

ஒளி தந்தவரின் (ஹோசிமின்) நினைவு நாள் இன்று!

வியட்நாமின் விடுதலைக்கு களமாடிய ஹோசிமின்னுக்கு பெற்றோர் வைத்த பெயர் சிங்சுங். ஆனால் தங்கள் நாட்டை ஒளியேற்ற வந்தவர் என்பதாக குறிக்கும் ஹோசிமின் என்று மக்கள் அழைத்த

பெயரான ஹோசிமின் என்பதே வரலாற்றில் நிலைத்து நின்று விட்டது.

ஹோசிமின் சிறுவனாக இருந்தபோது வியட்நாமை பிரான்ஸ் ஆண்டு கொண்டிருந்தது. அங்கு போராடிக்கொண்டிருந்த கெரில்லா குழுக்களுக்கு ஹோசிமின் தனது சிறு வயதிலேயே சிறுசிறு உதவிகள்

செய்து தன்னை தொடர்பு படுத்திக்கொண்டிருக்கிறார். அந்த சிறுவயதிலேயே வியட்நாமை அந்நியரிடமிருந்து விடுதலை பெறச்செய்யவேண்டும் எனும் கனல் ஹோசிமின் உள்ளத்தில்

எரிந்துகொண்டிருந்தது. பிரான்ஸின் பெரும்படையை எதிர்கொள்ளமுடியாமல் பிரான்ஸைப் பற்றி அறிந்துகொள்ள அந்த நாட்டிற்கே சென்று அங்கு ஒரு கடையில் வேலை பார்த்துக்கொண்டே தான் வந்த வேலையையும் செய்துவந்தார்.

அந்த சூழலில் ஜப்பானிய படைகள் வியட்நாமில் நுழைந்து பிரான்ஸை விரட்ட, மக்கள் மகிழ்ச்சியில் இருந்தபோது ஹோசிமின் தனது நாட்டிற்கு திரும்பி வந்தார். வந்ததும் மக்களை எச்சரித்தார்.

'நமக்கான மூக்கணாங்கயிறுதான் மாறியிருக்கிறதே தவிர, விடுதலை கிடைக்கவில்லை' என்றார். ஜப்பானிய படை இவரைக் கைதுசெய்ய தேட, காட்டிற்குள் தங்கி பெரும்படையை நிர்மாணித்தார். தக்க

சமயத்தில் ஜப்பான் படையை வீழ்த்தி, உடனே தேர்தல் நடத்த மக்கள் இவரையே தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

அதற்கு பின் பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற நாடுகளில் தாக்குதல்களை வெற்றிகரமாக சமாளித்து வியட்நாமை சுதந்திர பூமியாக்கிய ஹோசிமினின் நினைவு நாள் இன்று!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.