Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

14203123_1118675241514502_32294472427944

ஹொலிவூட்டின் கனவுக்கன்னி, கவர்ச்சியும் திறமையும் ஒருங்கே சேர்ந்த முன்னணி நடிகை சல்மா ஹயேக்கின் பிறந்த நாள்.
Happy Birthday Salma Hayek

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

க்யூட் கில்லீஸ்!

வால்டர் ஒய்ட்

 

ரியோ ஒலிம்பிக்கை அழகாக்கிய சூப்பர் கேர்ள்ஸ் இவர்கள். ஒவ்வொருவரும் வெறும் அழகு கிளிகள் மட்டும் அல்ல, திறமையிலும் சூப்பர் கில்லீஸ். ரசிகர்களே... நோட் டவுண் ப்ளீஸ்!

p48a.jpg

அலியா முஸ்தஃபீனா

ரஷ்யாவைச் சேர்ந்த அலியா, ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்கில் நம்பர் 1 வீராங்கனை. தன்னுடைய நளினமான ஜிம்னாஸ்டிக் நடனத்தால் அத்தனை பேரையும் சொக்கவைப்பவர். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் அன்ஈவன் பார்ஸ் பிரிவில், தங்கம் உள்பட மொத்தமாக நான்கு பதக்கங்களை வென்ற சாம்பியன். இந்த முறையும் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்கள் வென்றுள்ளார். அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இரண்டாவது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை இவரே. ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட சூப்பர் அழகி என்ற நம்பர் 1 இடமும் அலியா முஸ்தஃபீனாவுக்குத்தான்.


p48b.jpg

எல்லன் ஹூக்

நெதர்லாந்து ஹாக்கி அணியின் சொத்து இவர். சீறிப்பாய்ந்து எதிர் அணியின் தடைகளை உடைத்து கோல் போடுவதில் கில்லாடி. 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கிலும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கிலும் நெதர்லாந்து அணி தங்கம் வெல்ல காரணமாக இருந்தவர் இவரே! 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் எல்லனின் அணி மண்ணைக் கவ்வியதில் இப்போது ரொம்பவே அப்செட்!


p48c.jpg

அலெக்ஸ் மோர்கன்

தலையில் எப்போதும் பேண்ட் அணிந்து ஆடும் அலெக்ஸ் மோர்கன், அமெரிக்கப் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கோல் மெஷின். இதுவரை அமெரிக்காவுக்காக
116 போட்டிகளில் விளையாடி, 69 கோல்களைப் போட்டு, எதிர் அணிகளைச் சிதறடித்திருக்கிறார். அமெரிக்க அணியை, பெண்கள் உலகக்கோப்பை சாம்பியனாக ஆக்கியதிலும் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த முறை ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்குப் பதக்கம் பெற்றுத்தர முடியாமல்போனாலும், 2012-ம் ஆண்டில் சாம்பியனாக்கியது இவரே! ஒரே ஆண்டில்
20 கோல்கள் அடித்த இளம் வீராங்கனை என்கிற சாதனையும் இவர்வசம்தான்!


p48d.jpg

ஆம்பர் ஹில்

வித்தியாசமான கண்கள், எப்போதும் புன்னகைக்கும் முகம் யாருக்குத்தான் பிடிக்காது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆம்பர் ஹில்லின் அடையாளம் இவை. பார்க்க குருவிபோல இருந்தாலும், குறிவைத்துச் சுடும் கழுகு இவர். ஒலிம்பிக் போட்டியில் புகைப்படக் கலைஞர்கள் அத்தனை பேரும் சுற்றிச் சுற்றி இவரைப் படம் எடுத்திருக்கிறார்கள். ஸ்கீட் பிரிவில் விளையாடிய இவர் பெற்றது ஐந்தாம் இடம்தான் என்றாலும், உலகக்கோப்பைப் போட்டியில் கடந்து மூன்று ஆண்டுகளாக இவர்தான் சாம்பியன்.


p48e.jpg

கோ லியூ யிங்

மலேசியாவின் சாய்னா நேவால் இவர். பேட்மின்டனின் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் உலக அளவில் மூன்றாவது ரேங்கில் இருப்பவர். ஆசியா, காமன்வெல்த் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் தொடர்ந்து தங்கம் வென்றாலும் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிதான் வென்றுள்ளார், சீனமுகம் கொண்ட இந்தச் சின்னப் பெண்.


p48f.jpg

ஜாக்குலின் கார்வலோ

பிரேசிலின் செல்லம் ஜாக்குலின். 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பிரேசில் மகளிர் வாலிபால் அணிக்கு தங்கம் பெற்றுத்தந்த சாம்பியன் இவர். சொந்த மண்ணில் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாமல்போனதில் ரொம்பவே சோகத்தில் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்ட ஜாக்குலினின் பொழுதுபோக்கு, கிறங்கடிக்கும் படங்களை இறக்கிவிட்டு, ரசிகர்களை அலறவிடுவதுதான்!


p48g.jpg

ஜேட் ஜோன்ஸ்

கால்களால் எகிறி அடிக்கும் டேக்வாண்டோ சாம்பியன் இந்த பிரிட்டன் கேர்ள். `ஹெட் ஹன்ட்டர்' என்பதுதான் இவருடைய செல்லப்பெயர். எதிராளியின் தலையைக் குறிவைத்துத் தாக்கி வீழ்த்துவது இவருடைய பாணி. ரியோ ஒலிம்பிக்கின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் இவா கால்வோவைப் புரட்டி எடுத்தவிதம் பார்ப்பவரைப்  பதறவைக்கும். ஆனால், டேக்வாண்டோ யூனிஃபார்மைக் கழட்டிவிட்டால் யாருக்குமே காதலிக்கத் தோன்றும்! ரியோவில் மட்டும் அல்ல, 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கிலும் இவர்தான் 57 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.


p48h.jpg 

ஸூசன்னா ஜோகபஸ்

செதுக்கிவைத்தது போன்ற செவ்வக முகம்கொண்டவர் ஸூசன்னா ஜோகபஸ், ஹங்கேரியின் நீச்சல் வீராங்கனை. தண்ணீரில் குதித்துவிட்டால், மீனாக மாறி, பாய்ச்சல் காட்டி, பதக்கம் வெல்லக்கூடிய பாயும் புலி எனச் சொல்லலாம். இதுவரை 2004, 2008, 2012, 2016 என நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு நீச்சல் அடித்தாலும் ஒரு பதக்கம்கூட வெல்ல முடியாமல் போய்விட்டது. ஆனால், வருடந்தோறும் எப்படியாவது தகுதிபெற்றுவிடுவார். பதக்கம் இல்லை என்றாலும் இவருக்கு ஃபேன்ஸ் மிக மிக அதிகம். ஹங்கேரியின் அழகுக்கலை விளம்பரங்களில் எல்லாம் இவருடைய முகம்தான் நிறைந்திருக்கும். 

vikatan

  • தொடங்கியவர்

 


Jaffna Boy
கனடாவிலுள்ள பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்து இங்குள்ள பெண்களை ஏறெடுத்துக்கூட பார்க்காத Jaffna Boyக்கு சந்தமாலினி என்ற பெண் மீது, பேஸ்புக் ஊடாக காதல் ஏற்படுகின்றது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வேலைக்குச் செல்வதற்காக தனக்கென சொந்த விமானத்தை உருவாக்கிய நபர்
 

செக் குடி­ய­ரசை சேர்ந்த பிரான்­டிசெக் ஹத்­ரவா என்­பவர், தான் வேலைக்குச் செல்­வ­தற்­காக சொந்த விமா­ன­மொன்றை தானே உரு­வாக்­கி­யுள்ளார்.

 

45 வய­தான ஹத்­ரவா, வனத்­து­றைக்­காக இயந்­தி­ரங்­களை தயா­ரிக்கும் நிறு­வ­ன­மொன்றில்  பணி­யாற்­று­கிறார். 

 

1899048.jpg

 

விமா­னங்கள் மீதும் அவ­ருக்கு ஆர்வம் அதிகம். தினமும் 14 நிமி­டங்கள் காரை செலுத்திக் கொண்டு தனது வேலைத்­த­ளத்­துக்கு செல்­வது நேர விரயம் என அவர் கரு­தினார். இந்­நி­லையில் தான் வேலைத்­த­ளத்­துக்குச் செல்­வ­தற்­காக தனது சொந்த விமா­ன­மொன்றை அவரே உரு­வாக்­கி­யுள்ளார். 

 

1899049.jpg

 

திறந்த கொக்பிட் (விமானி அறை) கொண்ட இந்த விமா­னத்தை நிர்­மா­ணிப்­பத்­றகு 3,700 யூரோ (சுமார் 6 லட்சம் ரூபா) செல­வா­கி­யதாம். அதி­க­பட்­ச­மாக மணித்­தி­யா­லத்­துக்கு 146 கிலோ­மீற்றர் (91 மைல்) வேகத்தில் இவ்­வி­மா­னத்தில் பயணம் செய்ய முடியும். 

 

இவ்­வி­மா­னத்தின் மூலம் வீட்­டி­லி­ருந்து தொழிற்­சா­லைக்கு செல்­வ­தற்கு 4,5 நிமிடங்கள் மாத்திரமே தேவைப்படுவதாக பிரான்டிசெக்  ஹத்ரவா தெரிவித்துள்ளார்.

 

1899047.jpg

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14102694_1118675634847796_33393986789733

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரிஸ் ட்ரேம்லெட்டின் பிறந்தநாள்
Happy Birthday Chris Tremlett

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p38a.jpg

* `டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை மேன் ஆஃப் தி சீரிஸ் விருது வென்றவர்' என்ற சாதனைப் பட்டியலில் சச்சின், ஷேவாக்கை பின்னுக்குத்தள்ளி, உலக சாதனை செய்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். 74 தொடர்களில் விளையாடி சச்சின் டெண்டுல்கர் 5 முறையும், 39 தொடர்களில் விளையாடி ஷேவாக் 5 முறையும் வென்ற மேன் ஆஃப் தி சீரிஸ் விருதை, வெறும் 13 தொடர்கள் 36 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 6 முறை வென்றிருக்கிறார் அஷ்வின். கலக்குங்க ப்ரோ!


p38b.jpg

* உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் டாப் டென் பட்டியலில் இடம்பிடித்து, சாதனை படைத்திருக்கிறார் தீபிகா படுகோன். வருடத்துக்கு 67.70 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் தீபிகா. முதல் இடத்தில் இருக்கிறார் ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ். அவரது ஆண்டு வருமானம் 308 கோடி ரூபாய். மெலிஸா மெக்கார்த்தி, ஸ்கார்லட் ஜோஹன்சன் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடிக்க, ஏஞ்சலினா ஜோலிக்கு டாப் டென்னில் இடம் இல்லை. தீபிகா ராக்ஸ்!


p38c.jpg

* `லெட்ஸ் டேக் எ செல்ஃபி பாய்ஸ்’ என ஏஞ்சலா நிக்கோல் அழைத்தால் ஒரு பய வர மாட்டான். காரணம் இதுதான்... ரஷ்யாவைச் சேர்ந்த ஏஞ்சலாவுக்குப் பொழுதுபோக்கே போட்டோக்கள் எடுப்பதுதான். ஆனால், உதட்டைக் குவித்து உம்மா செல்ஃபியோ, இரண்டு விரல்களைக் காட்டும் விக்டரி போட்டோவோ அம்மணிக்குப் பிடிக்காது. உயரமான இடங்களுக்குச் சென்று விளிம்புகளில் நின்றுகொண்டு எடுப்பதுதான் ஏஞ்சலா ஸ்டைல். இன்ஸ்டாகிராமில் இந்த டெரர் பெண்ணுக்குக் குவிகின்றன லைக்ஸும் ஹார்ட்ஸூம். டெரர் பேபி!


p38d.jpg

* `ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்டு’ நாவலுக்குப் பிறகு சேத்தன் பகத் எழுதியிருக்கும் அடுத்த புத்தகம் `ஒன் இண்டியன் கேர்ள்’. அதற்கான டீஸர் அறிவிப்புதான் விஷயமே. `ஹாய்... நான் ராதிகா மேத்தா. எனக்கு இந்த வாரத்தில் திருமணம். என் கதையைப் படிப்பதற்கு நன்றி. எதுக்கும் நான் உங்களை எச்சரிக்கறேன். உங்களுக்கு என்னை அதிகம் பிடிக்காமல் போறதுக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கு. ஒன்று... நான் நிறையப் பணம் சம்பாதிக்கறேன்; ரெண்டு... எல்லாத்துலயும் எனக்கு ஒரு கருத்து இருக்கு; மூணு... நான் இதுக்கு முன்னாடியே செக்ஸ் வெச்சிருக்கேன்’ எனத் தொடர்கிறது அந்த டீஸரில் வரும் கதை. இந்த முறை ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதியிருக்கிறார் சேத்தன் பகத். புத்தகம் அக்டோபர் 1 ரிலீஸ். செம தல!

vikatan

  • தொடங்கியவர்

14222257_1118674798181213_45460982598135

இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Ishant Sharma

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு - 22: ராயல் சல்யூட் பாட்டு

 

 
 
 
ss_2993245f.jpg
 

உலகின் மிகப் பெரிய ஆதிக்கச் சக்தியாக முன்பு விளங்கிய நாடு இங்கிலாந்து. இந்த நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா போன்ற பல காலனி நாடுகள் இருந்தன. அதனால்தான், ‘சூரியன் மறையாத' சாம்ராஜ்யம் என்று இந்த நாட்டைப் பெருமையாகச் சொன்னார்கள்.

மரியாதை சட்டங்கள், ஜனநாயக நெறிமுறைகளுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்துள்ள நாடு இங்கிலாந்து. ஆனால், மன்னர் குடும்பம் இன்னமும்கூட அங்கே இருக்கிறது. இப்பவும் அரசர் / அரசிக்குத்தான் ‘முதல் மரியாதை'. ஏன் அப்படித் தெரியுமா? பழமைக்கும் மரபுகளுக்கும் இங்கிலாந்து நாட்டு மக்கள் ரொம்ப மதிப்பு கொடுப்பவர்கள். முன்பு உலகின் மிகப் பெரிய சக்தியாக அந்த நாடு விளங்கியது அல்லவா? அந்தப் பெருமையான கடந்த காலத்தின் தொடர்ச்சியாக அரச குடும்பத்தைப் பார்க்கிறார்கள். மற்றபடி, மன்னராட்சி தொடர வேண்டும் என்பதற்காக அல்ல.

வாழ்க அரசி

அரசன் அல்லது அரசி நலமாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுவதாக இருக்கிறது இங்கிலாந்து நாட்டின் தேசிய கீதம். அதனால்தான் ‘நீண்ட நாள் வாழட்டும் அரசர் / அரசி' என்று இப்பாடல் தொடங்குகிறது. இது அதிகாரபூர்வமாக இங்கிலாந்தின் தேசிய கீதமும் அல்ல. மரபு, வழக்கத்தின் படி, தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் இங்கிலாந்தின் அரசவைப் பாடலை 'ராயல் சாங்' என்று சொல்கிறார்கள்.

இந்தப் பாடல், நியூசிலாந்து நாட்டில் இரண்டு தேசிய கீதங்களில் ஒன்றாகப் பாடப்படுகிறது. ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும்கூட ‘அரசவைப் பாடல்' பயன்படுத்தப்படுகிறது.

யார், யார்?

இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் யார் என்று உறுதியாகத் தெரியவில்லை. இருந்தாலும் ‘ஜான் புல்' என்பவர்தான் இசையமைத்தார் என்று சொல்கிறார்கள். இப்பாடலின் முதல் இசைக் கோவை, 1744-ம் ஆண்டு, ‘தெசாரஸ் மியூசிகஸ்' என்ற ஓர் இசைப் பத்திரிகையில் வெளியானது. அதற்கு அடுத்த ஆண்டே ஸ்காட்லாந்து, இங்கிலாந்து பகுதிகளில் இது பிரபலமாகிவிட்டது. இப்பாடலுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிகள் பயன்படுத்தப்படுகின்றன. பாடலின் சில வரிகள் பொதுவாகவும் பின்பற்றப்படுகின்றன.

ss1_2993256a.jpg

இப்பாடல் ஏறத்தாழ இப்படி ஒலிக்கும்:

காட் சேவ் அவர் க்ரேசியஸ் க்வீன்

லாங் லிவ் அவர் நோப்ள் க்வீன்.

காட் சேவ் அவர் க்வீன்.

சென்ட் ஹெர் விக்டோரியஸ்

ஹேப்பி அண்ட் க்ளோரியஸ்

லாங் டு ரெய்ன் ஒவர் அஸ்

காட் சேவ் த க்வீன்.

ஓ லார்ட் அவர் காட் அரைஸ்

ஸ்கேட்டர் ஹெர் எ...னிமீஸ்

அண்ட் மேக் தெம் ஃபால்

கான்....ஃபௌண்ட் தெய்ர் பா..லிடிக்ஸ்

ஃப்ரஸ்ட்ரேட் தெய்ர் நே..விஷ் ட்ரிக்ஸ்

ஆன் தீ அவர் ஹோப்ஸ் வி ஃபிக்ஸ்

காட் சேவ் அஸ் ஆல்.

தை சாயிசெஸ்ட் கிஃப்ட்ஸ் இன் ஸ்டோர்

ஆன் ஹெர் பீ ப்ளெஸ்ட் டு ப்போர்

லாங் மே ஷீ ரெய்ன்

மே ஷீ டிஃபண்ட் அவர் லாஸ் (laws)

அண்ட் எவர் கிவ் அஸ்

... காஸ்

டு சிங் வித் ஹார்ட் அண்ட் வாய்ஸ்

காட் சேவ் த க்வீன்.'

இதன் உத்தேச தமிழாக்கம்:

இறைவனே எங்கள் சீர்மிகு அரசியைப் பாதுகாவல் செய்.

நெடு நாள் வாழ்க எங்கள் புனித அரசி.

இறைவனே எங்கள் அரசியைப் பாதுகாவல் செய்.

அவளை வெற்றியின் பக்கம்,

மகிழ்ச்சி, மகிமையின் பக்கம் அனுப்பு.

எம் மீது நெடு நாள் ஆட்சி செலுத்த

இறைவனே அரசியைப் பாதுகாவல் செய்.

ஆண்டவரே எங்கள் இறைவனே எழுந்திரு

அவளது எதிரிகளைத் துகள்களாக்கு.

அவர்களை வீழச் செய்.

அவர்களது அரசியலைக் குழப்பமுள்ளதாக்கு (தோற்கடி)

நெறிகளற்ற அவர்களது தந்திரங்கள் விரக்தி அடையச் செய்.

உன் மீது எங்கள் நம்பிக்கைகளை நிலை நிறுத்தி இருக்கிறோம்.

இறைவனே எங்கள் எல்லாரையும் பாதுகாவல் செய்.

உன்னிடம் உள்ள ஆகச் சிறந்த வெகுமதிகளை

அவள் மீது பொழிவதாக அவள் ஆசீர்வதிக்கப் படட்டும்.

அவள் நெடுநாள் ஆட்சி புரியட்டும்.

எங்களின் சட்டங்களை அவள் பாதுகாக்கட்டும்

எப்போதும் எங்களுக்கு வழங்கட்டும்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

14232979_1118672334848126_18818898161002

பின்னணிப் பாடகி 'கொஞ்சம் நிலவு'புகழ் அனுபமாவின் பிறந்தநாள்.
இனிய வாழ்த்துக்கள்.
Happy Birthday Annupamaa Krishnaswami

 

  • தொடங்கியவர்

 

அவசரமான நேரத்தில் எப்படி மெழுகுதிரி செய்வது

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
எதிர்த்துப் போராடினால், பின்னடைவு புறந்தள்ளும்
 
 

article_1472706474-index.jpgவிழிப்புலன் அபாரமானது. பார்வையால் உலகம் புரிகின்றது. விழிப்புலன்களை இழந்தவர்களுக்கோ, அவர்கள் கருமங்களே விழிகள் ஆகின்றன. விரல்களால் தொட்டு உணர்ந்தே கல்வி கற்கின்றனர். தங்கள் கைகளில் பிரம்பு போன்ற கருவியைப் பிடித்தவண்ணம், மிகவும் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் நடந்து செல்கின்றனர்.

சகல புலனறிவு உள்ளவர்கள்தான் அதிகமான விபத்துகளைச் சந்திக்கின்றனர். இவர்கள் தங்கள் இஷ்டப்படி நடந்து தங்களைத் தாங்களே விபத்துக்களை உண்டுபண்ணுகின்றனர்.

ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்உணர்வும் அதீத அவதானமும் உண்டு. இது இறைவன் கொடுத்த வரம். இவர்களில் பலர் கல்வித்துறையில் எல்லையில்லா சாதனைகளையும் படைத்து வருகின்றனர். துன்பங்களையும் சோதனைகளையும் எதிர்த்துப் போராடினால், எங்கள் பின்னடைவு புறந்தள்ளும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜோசப் சில்வெஸ்டர்

 
maths_2997669f.jpg
 

இங்கிலாந்து கணிதமேதை

உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளரும், கணிதத் துறையின் பல பிரிவுகளில் முத்திரை பதித்தவருமான ஜேம்ஸ் ஜோசப் சில்வெஸ்டர் (James Joseph Sylvester) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*லண்டனில் யூதக் குடும்பத்தில் (1814) பிறந்தவர். தந்தை வியாபாரி. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, லண்டன் பல்கலைக்கழகப் பேராரிசியர் டிமார்கனிடம் பயின்றார். சிறுவயது முதலே கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

*லிவர்பூல் ராயல் இன்ஸ்டிடியூட்டில் 2 ஆண்டுகள் பயின்றார். அங்கு பல பரிசுகளை வென்றார். யூதராக இருந்ததால் சில தொல்லைகளைச் சந்திக்க நேர்ந்தது. கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் படித்தபோது, மத விதிமுறைகளை ஏற்க மறுத்ததால், பல்கலைக்கழகப் பட்டங்கள், பல பரிசுகள் மறுக்கப்பட்டன.

*இறுதியாக, டப்ளின் ட்ரினிட்டி கல்லூரியில் இவருக்கு பி.ஏ., எம்.ஏ. பட்டங்கள் பெற்றார். தேவாலயங்களின் பிடியில் இருந்து இங்கிலாந்து கல்வி நிலையங்கள் விடுபட்ட பிறகு, இவருக்கு மறுக்கப்பட்டிருந்த பட்டங்கள் கவுரவப் பட்டங்களாக வழங்கப்பட்டன.

*லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். ராயல் சொசைட்டி ஃபெலோவாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக சிறிதுகாலம் பணியாற்றிவிட்டு, மீண்டும் இங்கிலாந்து திரும்பினார். ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் புள்ளியியல் நிபுணராக சேர்ந்தார்.

*தனிப்பட்ட முறையில் சில மாணவர்களுக்கு கணிதம் கற்பித்தார். ‘கைவிளக்கேந்திய காரிகை’ என போற்றப்படும் பிரபல செவிலியர் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் இவரது மாணவி. 32-வது வயதில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.

*அப்போது, கணித மேதை கெய்லியை சந்தித்தார். அவர் மூலமாக கணித ஆய்வுகள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டனர். அணிக்கோவைகள், அணிகள், இருபடிய அமைப்புகள், எண் பிரிவினைக் கோட்பாடு, சேர்வியல் குறித்து ஆராய்ந்து புதிய கோட்பாடுகளை வகுத்தனர்.

*கிரேக்கம், லத்தீன் மொழிகளிலும் புலமை பெற்ற இவர், தனது ஆய்வுக் கட்டுரைகளை இந்த மொழிகளிலும் வெளியிட்டார். பல கணிதப் புதிர்களுக்கு விடை கண்டறிந்தார். பல இடங்களில் ஆராய்ச்சி உரைகள் நிகழ்த்தினார். கணிதத்தில் இன்றும் வழக்கில் இருக்கும் ‘டிஸ்கிரிமினன்ட்’, ‘மாட்ரிக்ஸ்’ ஆகிய பல கலைச்சொற்கள் இவர் உருவாக்கியவையே.

*வுல்விச் ராயல் மிலிட்டரி அகாடமியில் 16 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். அப்போதும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல்வேறு கணித கோட்பாடுகள், தீர்வுகளைக் கண்டறிந்தார். அமெரிக்காவில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

*அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மேத்ஸ் என்ற ஆய்விதழை 1878-ல் தொடங்கினார். கணித உலகில் இந்த இதழ் இன்றும் சிறப்பாக போற்றப்படுகிறது. தனியாகவும் பிறருடன் இணைந்தும் பல நூல்களை எழுதியுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எண் கோட்பாட்டு வல்லுநராக 70 வயதில் பணியாற்றினார்.

*கற்பித்தல், கணித ஆராய்ச்சிகளில் இறுதிவரை ஈடுபட்டுவந்த சில்வெஸ்டர் 83-வது வயதில் (1897) மறைந்தார். இங்கிலாந்து ராயல் சொசைட்டி சார்பாக கணிதவியலுக்கான சில்வெஸ்டர் பதக்கம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. பல கணிதக் கோட்பாடுகள், விளைவுகளுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

tamil.thehindu

  • தொடங்கியவர்
Bild zeigt Text
 

செப்.2: சர்வதேச தேங்காய் தினம்

தேங்காய் சிறப்புகள் மற்றும் மருத்துவ குணங்களை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த 2009 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2 ஆம் தேதியை உலகம் முழுவதும் தேங்காய் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் தென்னை மரம் இல்லாத வீடுகளை காண்பது அரிது. பாடலிபுத்ராவில் கிமு 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகஸ்தனிஸ் என்பவர் இலங்கையில் உள்ள தேங்காய் பற்றி குறிப்புகள் எழுதி வைத்து உள்ளார். தென்னயை தென்னிந்தியாவில் இருந்து தான் வட இந்தியாவிற்கு பரவி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேங்காய் தமிழர்களின் உணவிலும் மருத்துவத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. சங்க இலக்கியங்களிலும் ராமாயணம் மகாபாரதம் விஷ்ணு புராணம் போன்றவற்றிலும் தேங்காய் பற்றிய குறிப்புகள் உள்ளன. தேங்காயின் சிறப்புகளை காணலாம். தேங்காயானது தமிழர்களின் மங்களகரமான பொருட்களில் மஞ்சளுக்கு அடுத்த இடம் தேங்காய்க்கு தான். சித்த மருத்துவத்தில் தேங்காய்க்கு முக்கிய இடமுண்டு. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை இந்த தேங்காய்க்கு உண்டு. தேங்காயில் மாவுச்சத்து கொழுப்பு மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிக அளவிலும், தயமின் இரும்பு நியாசின் பாஸ்பரஸ் பொட்டா சியம் போன்ற நுண்ணிய சத்துக்கள் குறிபிட்ட அளவிலும் உள்ளன.

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இது அழகான தாடி.. அட்டாக் பண்ற தாடி! #WorldBeardDay

T%20R%20beard.jpg

பல தடைகளையும் தாண்டி ஆசை ஆசையாக தாடி வளர்க்கும் எல்லோரும் ஒரு முறை உங்கள் ஸ்டைலில் தாடியை வருடிக் கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு கொண்டாட்டத்திற்கான தருணம். உலக தாடி தினம் இன்று. ஆனா, உண்மையா சுதந்திர நாட்டில் தாடி சுதந்திரமா வளர்க்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

* அதிகமா பசங்க எல்லாருக்கும் தாடி மேல் ஆசை வர ஆரம்பிக்கறது, அப்பா ஷேவ் பண்றத பாக்கறப்போ தான். நமக்கு எப்படா தாடி வளரும், எப்படா கன்னத்துல ஜில்லட்ட தடவலாம்னு காத்துக் கெடப்போம். 

* அதில் சில பசங்க இப்போவே ஒரு ட்ரையல் பாப்போம்னு வீட்ல யாரும் இல்லாதப்போ ஷேவ் க்ரீம தடவி ப்ளேடு கீறி வீரத்தழும்பு எல்லாம் வாங்குவாங்க.  இல்லைங்கறீங்களா, கன்னத்துல தான முடியில்ல தலைல தான் மொச மொசனு வளந்து கெடக்கேனு தலைக்கு ஷேவ் க்ரீம் தடவி ட்ரயல் பார்த்து மறுநாள் மொட்டத் தலையோட ஸ்கூல் போன பசங்கள்லாம் நம்ம பயலுகதேன் பாஸ்.

* ஸ்கூல் படிச்சிகிட்டிருக்கும் நேரம் நம்ம மூஞ்சியில் தாடி முளைக்குமானு பல நேரம் டவுட்டாவே இருக்கும். சலூன் போகும் போது கிருதாவ கொஞ்சம் பெருசா வைங்கனு சொல்லி அழகுபாக்கறதில் ஆரம்பிக்கும் தாடி கனவுகள். அதை வீட்ல யாரும் பார்க்காம இருக்க காலர வெச்சு கன்னத்தைப் பொத்துனாப்புல போனதெல்லாம் வட் எ மெர்சல் மெமரீஸ்.

* ஸ்கூல் முடிக்கற நேரம். அப்ப தான் லைட்டா, குட்டியா தாடி எட்டிப் பாக்கும். ஷேவ் பண்ணா வேகமா வளரும்னு சொல்லுற புரளி எல்லாத்தையும் நம்பி ஷேவ் பண்ணா மறுபடி அந்த குட்டி எல்லாம் எட்டி பார்க்க ஒரு மாசம் காத்துக்கெடக்கணும்.

* காலேஜ் போக ஆரம்பிக்கும் போது கௌரவமா தாடினு சொல்லிக்கற அளவுக்கு வளர்ந்திருக்கும். ஆனா ஒரு அன் ஈவனா அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்னு இருக்கும். அதை, மலர் டீச்சர்கள் பாக்கலைனாலும் போச்சு, மணிமேகலைகள் பாக்கணுமேன்னு அழகா மெய்ன்டெய்ன் பண்ண ட்ரிம்மரும் கையுமா அலைஞ்சோமே நியாபகம் இல்லையா?

* கட்டக்கடைசியா நல்லா வளர்ந்து வரும் போது, நமக்கும் தாடி வளந்திருச்சுடானு கெத்தா ஒரு ஃபீல் வரும். அப்போ தான் வீட்ல இருந்து ஒரு கேள்வி தொக்கி நிக்கும், "படிக்கிற வயசுல எதுக்குடா தாடி வளர்த்துகிட்டு திரியிற? அப்பா கிட்ட சொல்லட்டா?". ஓ மை காட். தாடிக்கு படிக்கற வயசுன்னு தெரியுமா? வேலைக்கு போற வயசுன்னு தெரியுமா? 

* சரினு வீட்ட சமாளிச்சு தாடியோட தெருவரைக்கும் வந்தா, கண்டிப்பா ஒருத்தர்/ன் கேப்பார்/ன். "லவ் ஃபெயிலியரா தம்பி?". அடக் கொடுமையே தாடி வளத்தது ஒரு குத்தமாய்யா? அதுக்கு ஒரு லவ் ஸ்டோரி க்ரியேட் பண்ணி நீங்களே ப்ரேக் அப்பும் பண்ணிட்டீங்களேய்யா.

* அதோட விட்டா பரவாயில்ல, ஃப்ரெஞ்ச் பியர்ட் வெச்சா பூட்டுவாயாங்கறது, ஹெப்ஸ்டர் ஸ்டைல்ல வெச்சா ஆட்டு தாடினு கலாய்க்கறது. என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன்?

* ஆரம்பகால சினிமாக்கள் கூட வில்லன் வேடத்தில் தாடிக்காரர்களையும், ஹீரோக்களுக்கு க்ளீன் ஷேவ் பண்ணிவிட்டது. அதனால் தாடியின் மீது ஒரு நெகட்டிவ் டோன் விழுந்தது குறிப்பிட வேண்டிய விஷயம். இப்போது அது கொஞ்சம் மாறிட்டாலும் விதை நீங்க போட்டது தானே?

* இந்த உலகமே தாடி விஷயத்தில் நமக்கு சப்போர்ட் பண்ணாலும் ஒரே ஒருத்தர் மட்டும் சதி பண்ணுவார். சலூன் கடைக்காரர். நல்லா வெட்டுறவங்களும் இருக்காங்க (கத்தி வேற வெச்சுருக்காரு). ஆனா, பல சமயம் நாம ஒரு ஸ்டைல்ல மனசுல நினைச்சுகிட்டு சொன்னா அவர் ஒரு டிசைன்ல வெட்டிவிட்டு 'என்னடா எலி பிராண்டி விட்ட மாதிரி ஒரு தாடினு' எல்லாரும் கிண்டல் பண்ணும் படி விளையாடிருவார். ஆம்பளைங்க சாபம் பொல்லாதது சலூன்கார்.

* இதுக்குப் பிறகு யாரும் கேள்வி கேக்க மாட்டாங்கப்பா, கேட்டாலும் கண்டுக்கக்கூடாதுன்னு முடிவு எடுப்போம். இந்த வாட்டி தாடியில 16 புள்ளி கோலம் போடலாம்னு ட்ரிம் பண்ண ஆரம்பிப்போம். லெஃப்ட் சைடு அதிகமா இருக்கே, இப்போ ரைட் சைடு அதிகமா இருக்கேனு மாறி மாறிக் குறைச்சு தாடி இருந்த சுவடே இல்லாம ட்ரிம் பண்ணி வெச்சு, கடைசில இதுகளும் சதி பண்ணுதேனு வெறுத்துப் போய் க்ளீன் ஷேவ் பண்ணுவோம். இதெல்லாம் எவ்வளோ பெரிய ட்ராஜிடி தெரியுமா?

இவ்வளோ ஃபீல் பண்றியே யாருப்பா நீ, உனக்கென்ன அக்கறை யாருக்கும் இல்லாத அக்கறைன்னு நீங்க கேக்கலாம்... மனசத் தொட்டு சொல்லுங்க இதுல எதாவது ஒரு சம்பவமாவது உங்களுக்கு நடக்கலைனு? 

இப்போ கொஞ்சம் சீரியஸாகலாமா... டி.ஆர் ஆரம்பிச்சு மணிவண்ணன், பிரபுதேவா இவ்வளவு ஏன் பிரேமம் நிவின்பாலி வரை பலபேர் இருக்காங்க. அவங்க முகத்தைக் கூட மறந்திடலாம் ஆனா, அவங்க தாடிய மறக்க முடியுமா? தாடிங்கறது ஒழுங்கீனமோ, குறிப்பிட்ட அடையாளமோ, இன்னும் ஏன் ஸ்டைலோ கூட கிடையாது. கூடவே, மேன்லினெஸ், பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும், கான்ஃபிடென்ஸ் கொடுக்கும்னு நிறைய பேர் சொல்வாங்க. அந்த விஷயம் கூட நமக்கு வேணாம். எல்லாத்தையும் தாண்டி அது ஒவ்வொருத்தருடைய விருப்பம். 

தாடி வெச்சிருக்கவங்ககிட்ட மட்டும் இத்தனை கேள்வி கேக்குறீங்களே, க்ளீன் ஷேவ் பண்ணவங்ககிட்ட என்னிக்காவது "ஏன் நீங்க தாடியே வளர்க்க மாட்டறீங்க, லவ் சக்ஸஸ் ஆகிடுச்சா?"னு கேட்டிருக்கீங்களா.. இல்ல கேட்டிருக்கீங்களான்னேன்! 

வேலைக்காக தாடிய இழந்தவங்களுக்கும், வேகாத வெயில்ல ஆஃப்டர் ஷேவ் லோஷன் போட்டு லோல்படுறவங்களுக்கும் 'உலக க்ளீன் ஷேவ் டே' அன்னிக்கி ஒரு கட்டுரையை சமர்ப்பிப்பேன் என்று தாடியை சொறிந்துகொண்டே உறுதியளிக்கிறேன்.

vikatan

  • தொடங்கியவர்

செம்ம தீம் இது!

 

தீம் பார்க்குகள்னா தண்ணீரில் வழுக்கிக்கிட்டே போய் தரையில் விழுறதும், ரோலர் கோஸ்டரில் உட்கார்ந்து குய்யோ முய்யோனு கத்திக்கிட்டே சுத்திவர்றது மட்டும்தான்னு நினைச்சீங்களா? சில விசித்திரமான தீம் பார்க்குகளும் இருக்கு மகாஜனங்களே...

p102.jpg

p102a.jpg

கிட்ஸானியா:

உலகின் 16 இடங்களில் செயல்பட்டுவரும் ‘கிட்ஸானியா’ தீம் பார்க் பிரத்யேகமாகக் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டது. சிறுவர்களுக்கு தாம் எப்போது பெரியவர்களாவோம் என்கிற ஏக்கம் இருக்கும். அந்த ஐடியாவை அப்படியே எக்ஸிகியூட் செய்து பெரியவர்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் பொடுசுகளை வைத்தே செய்யச்சொல்லி அதற்கு சம்பளம் (செல்லாத காசுதான் பாஸ்) கொடுப்பது போலவும் இந்த தீம் பார்க் செயல்படுகிறுது. உதாரணமாகத் தீயணைப்பு வேலைகள், ஆம்புலன்ஸ், ஆபீஸ், மருத்துவமனை, கோர்ட் என எல்லாவற்றையும் மினியேச்சராக உருவாக்கி சிறுவர்களுக்கான உலகமாய் காட்சியளிக்கிறது கிட்ஸானியா. சின்ன மேட்டர்; பெத்த லாபம்!


p102c.jpg

p102b.jpg

க்ரக்கோசாரஸ் காவ்:

ஆஸ்திரேலியாவின் டார்வின் சிட்டியில் அமைந்திருக்கும் இந்த `க்ரக்கோசாரஸ் காவ் பார்க்' கொஞ்சம் விசித்திரமானது. உள்ளே நுழைந்ததும் ஸ்விம்மிங் சூட் வழங்கப்படுவதைப் பார்த்தெல்லாம் மிரண்டுவிடக் கூடது. அப்புறமும் ஆச்சர்யங்கள் முதலை வடிவில் காத்திருக்கின்றன. உங்களுக்கென பிரத்யேகமாக ஒரு கண்ணாடிக் கூண்டு வழங்கப்பட்டு, அதற்குள் இருந்தபடி முதலைகளுக்குப் பக்கத்தில் உலவித் திரியலாம். ராட்சதக் குளத்தில் வளர்க்கப்படும் முதலைகளுக்கு மிக அருகில், தண்ணீருக்குள்ளேயே போய் டாட்டா காட்டிவிட்டு வரலாம். தீம் பார்க், முதலை வளர்ப்புப் பண்ணை என டபுள்டக்கராய் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள் ஆஸ்திரேலியாக்காரர்கள். முதலை மூளைக்காரய்ங்க!


p102e.jpg

p102d.jpg

டிக்கர்லேண்ட்:

இங்கிலாந்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ‘டிக்கர்லேண்ட் தீம் பார்க்’கில் எல்லாமே வித்தியாசம்தான். உள்ளே நுழையும்போதே ஏதோ மெட்ரோ ரயில் சுரங்கப்பணி நடைபெறும் பகுதியோ எனச் சந்தேகம் வரும் அளவுக்கு மஞ்சள் கலரில் இருக்கும் இரும்புத் தண்டவாளங்களும், வாகனங்களும் வரவேற்கின்றன. பொக்லைன், ஜே.சி.பி போன்ற வாகனத்தில் பொருத்தப்பட்ட சிறிய விளையாட்டுகளும், பெரிய க்ரேனில் அமர்ந்தபடி தனியாகப் பயணிக்கும் ரோலர் கோஸ்டரும் இருக்கின்றன. பொக்லைனில் குழிதோண்டி விளையாடும் விளையாட்டு இங்கு ரொம்பவே ஸ்பெஷல். கீழே உட்கார்ந்து கையால் மண்ணைத் தோண்டுற பிள்ளைகளை பொக்லைனில் தோண்ட வெச்சு அழகு பார்க்கிறார்கள் பிரிட்டிஷ் பெற்றோர்கள். உங்க ஆசையைக் குழிதோண்டிப் புதைங்க!


p102f.jpg

லவ் லேண்ட், ஜேஜு தீவு:

தென்கொரியாவில் இருக்கும் இந்த `லவ் லேண்ட் தீம் பார்க்'கின் தீம் பற்றிக் கேட்டாலே ஆச்சர்யப்படுவீர்கள். பாலியல் தொடர்பான விஷயங்களை ஊக்கப்படுத்துவதற்காகச் செயல்படும் இந்த பார்க்கில், பரங்கிமலை ஜோதி தியேட்டர் வகையறா படங்களும் ஒளிபரப்பப் படுகின்றனவாம். கொரியப் போருக்குப் பின் இந்த இடம் ஹனிமூன் தலமாகப் பயன்பட்டுவந்தது. அதை அப்படியே காசாக்கிவிடலாம் என யோசித்தவர்கள் பூங்கா முழுவதும் கண்ணை மூடிக்கொள்ளும் அளவுக்கு ‘அந்த மாதிரி’ சிற்பங்களைத் தத்ரூபமாகச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அங்கே இருக்கும் அத்தனையும் ‘ச்சீ’ ரகம். இந்த செக்‌ஷனுக்குள்  18 வயதானவர்களுக்கு மட்டுமே அனுமதி. சிறுவர்கள் குச்சிமிட்டாயைச் சப்பிக்கொண்டே விளையாட்டுப் பகுதியில் இருக்கும் சறுக்குமரத்தில் வழுக்கி விளையாடலாம். டிக்கிலோனா விளையாட்டு இருக்குதா பாஸ்..?


p102gh.jpg

சோவியத் பங்கர்:

ஐரோப்பாவில் இருக்கும் ‘சோவியத் பங்கர்’ எனும் தீம் பார்க்கில் 1980-ல் குடிமக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை கிட்டத்தட்ட அப்படியே வாழ்ந்து பார்க்கலாம். மூச்சுவிடக்கூட முடியாத இடத்தில் ஏர் மாஸ்க் அணிந்தபடி, அதிகாரிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு ராணுவப் பயிற்சிக்குப் பழகுவார்கள். ராணுவப் பயிற்சி மையத்தில் எப்படிப்பட்டச் சூழல் நிலவுமோ அதை அப்படியே அச்சுப்பிசகாமல் இங்கே அனுபவிக்கலாம். இந்த பார்க்கில் வேலை செய்யும் அலுவலர்கள் அனைவரும் உண்மையிலேயே சோவியத் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள். திடீர் திடீரென சத்தங்களும் எழுப்பி மக்களைப் பயமுறுத்துவதால் இதயம் பலவீனமானவர்களுக்கு இங்கே அனுமதி இல்லையாம். சொந்தக் காசுல சூனியம் வெச்சுக்கிறதுனா இதுதானா?

vikatan

  • தொடங்கியவர்

ஜென் Z - டிஜிட்டல் புதுமொழிகள்!

பா.ஜான்சன், படம்: மீ.நிவேதன்

 

p56.jpg

`ஆண்ட்ராய்டு முப்பது நாள்... ஐபோன் அறுபது நாள்’ காலம் இது.  சொன்னதையே சொல்லிட்டிருந்தா பசங்க சோர்ந்துபோக மாட்டாங்களா? பழமொழியை கொஞ்சம் டிஜிட்டல் பண்ணிப்பார்க்கலாம்
வாங்க டியூட்.

red-dot.jpglogo.jpgஅடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவ மாட்டான்.
ஃபில்டர் உதவுற மாதிரி மேக்கப் கிட்கூட உதவாது.

red-dot.jpgபொறுத்தார் பூமி ஆள்வார்.
பொறுத்தார் லைக்ஸ் அள்ளுவார்.

red-dot.jpgநல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
நல்ல வீட்டுக்கு ஒரு வைஃபை.

red-dot.jpgஆள் வளர்ந்த அளவு அறிவு வளரலையே.
ஆப் வளந்த அளவுக்கு ஸ்டோரேஜ் வளரலையே.

red-dot.jpgபட்ட காலிலேயே படும்... கெட்ட குடியே கெடும்.
உடைஞ்ச ஸ்கிரீனே உடையும்... தொலஞ்ச சார்ஜரே தொலையும்.

red-dot.jpgஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது.
ஓட்ட ஹெட்செட் பாட்டுக்கு உதவாது.

red-dot.jpgதனி மரம் தோப்பாகாது.
தனி கான்டாக்ட் வாட்ஸ்அப் குரூப் ஆகாது.

red-dot.jpgஆடத் தெரியாதவனுக்கு தெரு கோணலாம்.
செல்ஃபி எடுக்கத் தெரியாதவனுக்கு செல்போன் கோணலாம்.

red-dot.jpgதிருட்டு மாங்காவுக்கு ருசி அதிகம்.
திருட்டு ஸ்டேட்டஸுக்கு லைக் அதிகம் விழும்.

red-dot.jpgஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது
மீம் போட்ட கையும், வைபரேட்ல போட்ட செல்லும் சும்மா இருக்காது.

red-dot.jpgநெருப்பில்லாமல் புகையாது
கேம் இல்லாம ஹேங்காகாது.

p56.jpg

red-dot.jpgமின்னுவதெல்லாம் பொன்னல்ல.
லைக் போடுற பொண்ணு எல்லாம் லவ்வர் இல்ல.

red-dot.jpgஅதிகம் கவனி, குறைவாகப் பேசு.
ஃபேஸ்புக் போல் கவனி, ட்விட்டர் போல் பேசு!

red-dot.jpgநிறைகுடம் தளும்பாது.
ஃப்ளைட் மோட்ல போன் வராது.

red-dot.jpgஉன் நண்பனைப் பற்றி சொல் உன்னைப் பற்றி சொல்கிறேன்.
உன் ஃபேஸ்புக் பாஸ்வேர்டு சொல்... உன்னைப் பற்றி சொல்கிறேன்.

red-dot.jpgபகல்லயே பசு மாடு தெரியாது, ராத்திரில எருமமாடா.
4-ஜிலயே போட்டோ அப்லோடு ஆகாது... 2-ஜில யூ டியூபா.

red-dot.jpgவெளக்கமாத்துக்குப் பட்டுக்குஞ்சம்.
கழுவாத மூஞ்சிக்கு ப்ரிஸ்மா.

red-dot.jpgஆசை அறுவது நாள்... மோகம் முப்பது நாள்.
ஸ்டாண்ட் பை ஒரு நாள்... நெட் யூஸ் பண்ணா அரை நாள்.

vikatan

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் வசித்துவரும் தம்பதியினர் திருமணமாகி கடந்த 52 வருடங்களாக

ஒரே நிறத்தில் ஆடை அணிந்து வருவது ஆச்ச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image result for US Surprise 52 years same dress old Couples

Image result for US Surprise 52 years same dress old Couples

 

Image result for US Surprise 52 years same dress old Couples

Image result for US Surprise 52 years same dress old Couples

 

 

Synchronized style: Donald and Nancy Featherstone from Fitchburg, Massachusetts, started dressing alike in 1980, four years after they married - they say it is the clearest way of showing that 'we're together'

  Dressed to impress: The Featherstone's unique fashion collection includes 600 custom-made outfits

Coordinated style: Mr Featherstone wears bold shirts while his wife dons dresses cut from the same fabric

Inspiration: Mrs Featherstone says that she is often drawn towards tropical fabrics that remind her of her husband's famous pink flamingo garden ornament

Meet the Featherstones: The couple outside their large Victorian home in Massachusetts

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ரொம்பவே பெரிசுதான்!

 

லகின் மிகப்பெரிய விமானமான ‘ஏர் லேண்டர்’ இன்னும் சில மாதங்களில் வானில் பறக்கத் தயாராகிறது. ஹீலியம் வாயுவைக் கொண்டு இயங்கும் இந்த விமானம், 20,000 அடி உயரம் வரை பறக்கக்கூடிய சிறப்பைப் பெற்றிருந்தாலும், தரைமட்டத்திலிருந்து மிகக் குறைவான உயரத்தில் பறக்கும்போது நம்ம ஊர் டவுன் பஸ்களைப் போல, இதன் ஜன்னல்களைத் திறந்து வைத்துக்கொண்டே காற்றும் வாங்கலாம். இங்கிலாந்தின் ஹைப்ரிட் ஏர் வெஹிக்கில்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த விமானத்தின் வெளிப்புற வடிவத்தினால் செல்லமாக ‘ஃப்ளையிங் பம்’ என அழைக்கப்படுகிறது.

p70.jpg

302 அடி நீளமுள்ள ஏர்-லேண்டர் இப்போதிருக்கும் பெரிய பயணிகள் விமானத்தைவிட 60 அடி நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத் தளவாடங்களைத் தொலைதூரங்களுக்கு எடுத்துச்செல்வதில் இந்த விமானம் முக்கியப்பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இது ஹீலியம் வாயுவை ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதால் இரண்டு வாரங்களுக்குத் தொடர்ச்சியாகக் காற்றில் ஒரே இடத்திலேயே தங்கக்கூடிய வல்லமை படைத்தது.

36 மில்லியன் டாலர் செலவில் தயாராகியிருக்கும் இந்த எந்திரப் பறவை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் சத்தமின்றிப் பறப்பதால், எதிர்கால சமுதாயத்திற்குப் பெரிதும் ஏற்ற வகையில் இருக்கும் என இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ் கூறியிருக்கிறார்.

vikatan

  • தொடங்கியவர்

உலகின் மேலே...உயரே...உச்சியிலே!

இன்று உலக உயரமான கட்டடங்கள் தினம்!  உலகின் டாப்பான சில கட்டிடங்கள்  பற்றி ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வரலாமே பிரண்ட்ஸ்! ரவுண்ட் போகும்போது 'இங்கே நின்னு செல்ஃபி எடுத்தா எப்படியிருக்கும்'னு கண்டிப்பா உங்களுக்கு தோணும். போலாம் ரைட்.  #WorldSkyscraperDay.

banana

கட்டிடம்: பர்ஜ் கலிஃபா

இடம் : துபாய்

உயரம் (அடி) : 2717

தளங்கள் : 163

கட்டியஆண்டு : 2010

  currant

கட்டிடம்: ஷாங்காய் டவர்

இடம் : சீனா

உயரம் (அடி) : 2073

தளங்கள் : 121

கட்டியஆண்டு : 2014

mango

கட்டிடம்: மக்கா ராயல் க்ளாக் டவர் ஹோட்டல்

இடம் : சவூதி

உயரம் (அடி) : 1971

தளங்கள் : 120

கட்டியஆண்டு : 2014

 

strawberries

கட்டிடம்: பிங்க் ஆன் இன்டர்நேசனல் டவர்

இடம் : சீனா

உயரம் (அடி) : 1965

தளங்கள் : 116

கட்டியஆண்டு : 2016

 

strawberries

கட்டிடம்: சி டி எஃப் ஃபைனான்ஸ் சென்டர்

இடம் : சீனா

உயரம் (அடி) : 1740

தளங்கள் : 111

கட்டியஆண்டு : 2016

 

strawberries

கட்டிடம்: லோட்டே வேர்ல்டு ட்ரேடுசென்டர்

இடம் : தென்கொரியா

உயரம் (அடி) : 1823

தளங்கள் : 123

கட்டியஆண்டு : 2016

strawberries

கட்டிடம்: ஒன்வேர்ல்டு ட்ரேடு சென்டர்

இடம் : அமெரிக்கா

உயரம் (அடி) : 1776

தளங்கள் : 104

கட்டியஆண்டு : 2014

strawberries

கட்டிடம்: சி டி எஃப் ஃபைனான்ஸ் சென்டர்

இடம் : சீனா

உயரம் (அடி) : 1740

தளங்கள் : 111

கட்டியஆண்டு : 2016

 

strawberries

கட்டிடம்: தைபே 101

இடம் : தைவான்

உயரம் (அடி) : 1671

தளங்கள் : 101

கட்டியஆண்டு : 2004

strawberries

கட்டிடம்:ஷாங்காய் வேர்ல்டு ஃபைனான்சியல் சென்டர்.

இடம் : சீனா

உயரம் (அடி) : 1614

தளங்கள் : 101

கட்டியஆண்டு : 2008

vikatan

  • தொடங்கியவர்
4 வயதில் 9ஆம் வகுப்பு 9 வயதில் காலேஜில் படிப்பு
 

4 வயதில் 9ஆம் வகுப்பு 9 வயதில் காலேஜில் படிப்பு

15 வயதில் டாக்டரேட் படிப்பு உண்மைச் சம்பவமிது

showImageInStory?imageid=294566:mr

பெத்தால் இப்படிப்பட்ட பிள்ளைகளைப்
 
showImageInStory?imageid=294566:tn
 

பெத்தால் இப்படிப்பட்ட பிள்ளைகளைப்

பெத்துக்கணும் என்று அனைவரையும் ஏங்க

வைக்கும் உண்மைச் சம்பவம் இது!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் தேஜ் பகதூர் வர்மா. அங்குள்ள பாபா சாகிப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாயா குடும்பத்தலைவி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். பெரியவள் பெயர் சுஷ்மா. வயது 15. இரண்டாவது பையன் சைலேந்திரா வயது 10. கடைக்குட்டி அனன்யா வயது 4. இந்த மூன்று குழந்தைகளையும் பார்த்துத்தான் உத்தரப் பிரதேச மாநில மக்கள் மூக்கில் விரலை வைக்கின்றனர்! அப்படி என்ன சாதித்து விட்டார்கள்?

இந்தக் குழந்தைகள் நமது வயிற்றில் பிறக்கவில்லையே என ஏங்க வைக்கும் அளவுக்கு சாதனை செய்து விட்டார்கள்.

ஒரு நாள் கடைக்குட்டி அனன்யாவை மார்க்கெட்டுக்கு அழைத்துச் செல்கிறார் அவரது தந்தை தேஜ் பகதூர் வர்மா. அப்போது எதிர்பாராத விதமாக அவரது மற்ற இரு குழந்தைகளும் படித்த செயின்ட் மீரா கல்லூரியின் ஆசிரியையைச் சந்திக்கிறார். இருவரும் குழந்தைகளின் படிப்பு பற்றி பேசிக்கொண்டிருந்த போது, அந்த ஆசிரியையின் பையிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து 'கடகட'வென வாசிக்கத் தொடங்குகிறார் அனன்யா. அந்த ஆசிரியைக்கோ பயங்கர ஷொக். என்னடா இது இன்னும் பள்ளிக்கே போகாத இந்தக் குழந்தை அசால்டாக காலேஜ் புத்தகத்தை வாசிக்கிறதே என்று ஆச்சரியம்.

உடனே தேஜ் பகதூரிடம், 'நீங்கள் நாளைக்கு அனன்யாவை அழைத்துக்கொண்டு எங்கள் பள்ளிக்கு வாருங்கள்' என்று அழைக்கிறார் அந்த ஆசிரியை. மறுநாள் சென்ற போது அனன்யாவுக்கு டெஸ்ட் வைத்துள்ளது பள்ளி நிர்வாகம். இதில் 9ஆம் வகுப்பு படிப்பதற்கான தகுதி அனன்யாவிடம் இருந்ததைக் கண்ட பள்ளி நிர்வாகத்துக்கும் பயங்கர ஷொக்.

உடனே அந்தக் குழந்தையை தங்களது பள்ளியில் 9ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்வதாகப் பள்ளி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் தன்னிடம் தற்போது வசதி இல்லாததால் அடுத்த ஆண்டு சேர்ப்பதாக கூறியிருக்கிறார் தேஜ் பகதூர். அதற்கு பள்ளி நிர்வாகமோ பீஸாவது மண்ணாவது. நீங்கள் குழந்தையை சேர்த்தால் மட்டும் போதும் என்று தெரிவிக்கவே தேஜ் பகதூருக்கு குஷி. கையோடு அட்மிஷனைப் போட்டுவிட்டுத்தான் வீட்டுக்கு வந்தார்.

4 வயதே ஆன அனன்யா 9ஆம் வகுப்பு படிக்கும் விஷயம் எப்படியோ மீடியாக்களுக்கு தெரிந்துவிட்டது. அப்புறம் என்ன... அனைத்து டி.வி.க்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் அனன்யாதான் ஹொட் டாபிக். 9ஆம் வகுப்புப் புத்தகத்தை அவர் அசால்டாக படித்துக் காட்டும் வீடீயோ தற்போது வைரலாக பரவி வருகிறது. தினமும் ஏதாவது ஒரு டி.விக்கோ, செய்தித்தாளுக்கோ பேட்டி எனப் படு பிஸியாக இருக்கிறது அனன்யாவின் குடும்பம்.

இது குறித்து அனன்யாவின் தந்தை தேஜ் பகதூரிடம் கேட்டபோது எனது மூத்த மகள் சுஷ்மா 5 வயதில் 9ஆம் வகுப்பில் சேர்ந்தாள். தற்போது 15 வயது நடந்து கொண்டிருக்கும் நிலையில் டாக்டரேட் (பி.எச்.டி) படித்துக் கொண்டிருக்கிறாள் என்று மிரட்டுகிறார்.

சரி பையன் என்ன செய்யுறான் என்று அடுத்த அஸ்திரத்தைத் தொடுத்தால், அவன் 9 வயதில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுத் தற்போது காலேஜில் படித்து வருகிறான் என்றார் கூலாக. (என்ன தலை சுற்றி மயக்கம் வருகிறதா? இன்னும் படிங்க மூர்ச்சையாகிடு வீங்க)

அது சரி உங்கள் குழந்தைகளுக்கு எப்படி இவ்வளவு அறிவு வந்தது என்று கேட்டதற்கு எல்லாம் கடவுள் கொடுத்த வரம்தான். எனது குழந்தைகளுக்கு டியூஷன் அது இதுன்னு எந்த வசதியும் நான் செய்து கொடுக்கல. அவங்க படிக்கணும்னு ஆசைப்பட்டாக்கூட நல்ல கல்வியை குடுக்க முடியாத நிலைமையில் தான் நான் இருக்கேன். அதனால் தானோ என்னவோ எனது குழந்தைகளுக்கு அபரிமிதமான அறிவை ஆண்டவனே கொடுத்துவிட்டான் என்றார்.

அனன்யாவின் தாய் சாயாவிடம் கேட்டபோது, அனன்யா எல்லாத்தையும் ஈசியா பிக் அப் பண்ணிக்குவா. வீட்ல சும்மாவே இருக்க மாட்டா. சதா ஏதாச்சும் புத்தகத்தை எடுத்துப் படிச்சுக்கிட்டே தான் இருப்பா. இராமாயணம் கூட படிச்சிருக்கான்னா பாருங்களேன். இப்பகூட அதை மனப்பாடமா சொல்லுவா. ரொம்ப சமத்து. மத்தக் குழந்தைங்க மாதிரி இதுவேணும் அது வேணும் என்று அடம்பிடிக்கமாட்டா என்கிறார் பெருமையாக. நீ என்னவாக ஆசைப்படுகிறாய் என்று அனன்யாவிடம் கேட்டால், அதைப்பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார் பெரிய மனுஷியைப் போல!

virakesari.lk

  • தொடங்கியவர்

இந்த வாரம் இதுதான் நிகழ்ந்தது...! #QuickRead #PhotoStory

FACEEE.jpg

ஆப்பிரிக்க மக்களுக்கு இணைய வசதியை அளிக்க உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் சேட்டிலைட், SpaceX ஏவுகணை தளத்தில் சோதனையில் இருந்தபோது வெடித்துச் சிதறியது. இதில் சேட்டிலைட் முழுவதும் சேதமடைந்தது.

 SAM.jpg

பேட்டரியில் உள்ள குறைபாடால், சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் வெடிப்பதாகப் புகார்கள் எழுந்ததால், சாம்சங் நிறுவனம் கடும் அதிர்ச்சிக்குள்ளானது. இந்த நிலையில், ‘‘சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்போன் வாங்கியவர்களுக்கு புது போன் தரப்படும்’’ என அந்த நிறுவனத்தின் தலைவர் கோ டாங்-ஜின் அறிவித்துள்ளார்.

GOAR.jpg

தமிழக கவர்னராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, தமிழக ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதலாகக் கவனிப்பார் என மத்திய அரசு அறிவித்தது. 

ZIKAAA.jpg

சிங்கப்பூரில் 41 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 13 பேர் இந்தியர்கள் என வெளியுறவுத் துறை உறுதிப்படுத்தி உள்ளது. ஜிகா வைரஸை தடுக்க சிங்கப்பூர் அரசு, தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

 BRAAA.jpg

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 444 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. இதற்கு முன்பு இலங்கையின் 443 ரன்களே சாதனையாக இருந்தது.

poooo.jpg

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுதல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய தொழிற்சங்கங்கள்  நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.

MAAAA.jpg

தே.மு.தி.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்த ஆவடி தொகுதி எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டர்.

VAAAAA.jpg

ஏழை மக்களுக்காக தன் வாழ்வையே அற்பணித்த அன்னை தெரசாவுக்கு, வாடிகன்  புனித பீட்டர் சதுக்கத்தில் நாளை புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த விழாவில் கலந்துக்கொள்ள Missionaries of Charity தொண்டர்கள் வாடிகன் சென்றுள்ளனர்

SIIIIII.jpg

மேற்கு வங்கத்தின் சிங்கூரில் டாட்டா கார் தொழிற்சாலைக்காக விவசாயிகள் நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என்றும், அந்த நிலங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

CHAAA.jpg 

அதிரடி நாயகன் ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளர் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் நடக்கும் விழாவில், இந்த விருதை ஜாக்கிசான் பெற்றுக்கொள்கிறார்.

 

vikatan

  • தொடங்கியவர்

 

p126a.jpg

தேசிய விளையாட்டு நாள்!

ஹாக்கியில், இந்தியாவின் சார்பில் பங்கேற்று மூன்றுமுறை தங்கப்பதக்கம் வென்றவரும்,  இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகவும் பணியாற்றிய தியான் சந்த் பிறந்தநாள், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதியில் தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளும், பயிற்சியாளருக்கு துரோணாச்சாரியார் விருதும் அன்று வழங்கப்படுகின்றன. பல்வேறு பிரபலங்களின் வாழ்த்துகளால் #Dhyanchand #NationalSportsDay போன்றவை அன்றைய நாளின் டாப் ட்ரெண்டில் இடம் பிடித்தன. `தியான் சந்திற்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவித்து கெளரவப்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. வீ ஆர் வெயிட்டிங்!


p126c.jpg

டாட்டா!

இலங்கை அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்சன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 17 ஆண்டுகளாக அந்த அணிக்காக விளையாடிவரும் தில்சனின் ஓய்வுச் செய்தி, அந்நாட்டு ரசிகர்களின் மத்தியில் பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் #thankyoudilshan என ஃபீலிங்கைக் கொட்டினர். ஆனால் சேவாக் 99 ரன்னில் இருக்கும்போது அவரைச் சதமடிக்க விடாமல், தில்சன் நோ பால் போடச்சொல்லிய சம்பவத்தை மறக்காத சேவாக் ரசிகர்கள், அவரை வாட்டியெடுத்தனர். இதனால் ட்விட்டர் பரபரப்பானது. பாவத்த!


p126b.jpg

மற்றொரு மைல் கல்!

இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த வாரம், வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனைக்கொண்டு இயங்கும் ‘ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திப் பரிசோதித்தது. இவ்வகை ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த ஆகும் செலவும், முன்பைவிட பத்துமடங்கு குறையும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தப் பரிசோதனையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது இஸ்ரோவின் மற்றுமொரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதனை அடுத்து #isro டேக்கில் குடியரசுத் தலைவர் முதல் குடிமகன்கள் வரை இஸ்ரோவைப் புகழ்ந்து தள்ளினர். சூப்பர் ஜி!


p126d.jpg

`கருத்தா' பேசவிடுங்கய்யா!

`பாகிஸ்தான் ஒரு நரகம்' என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், ‘பாகிஸ்தானிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்; அது நல்ல நாடு, நரகம் இல்லை’ என முன்னாள் எம்.பி-யும், நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்தது. அவர் மீது தேசத்துரோக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்படி என்ன அவர் தவறான கருத்தைக் கூறிவிட்டார் என நெட்டிசன்ஸ் பொங்கியெழுந்தனர். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க, #WeSupportRamya ஹேஷ்டேக் ட்ரெண்டில் களைகட்டியது.  நாட்டில் நிம்மதியா ஒரு கருத்து சொல்ல முடியுதா?


p126e.jpg

சர்ச்சையில் சட்டசபை உரை!

ஹரியானா மாநில சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக சமண மதத்துறவி தருண் சாகர் சிறப்புரை ஆற்றினார். இதிலென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? சமண மத நம்பிக்கையின்படி துறவிகள் ஆடை அணிவதில்லை. சட்டசபைக்கும் ஒட்டுத்துணிகூட இன்றி வந்த தருண் சாகர், சிறப்பு இருக்கையில் அமர்ந்து உள்ளூர் முதல் உலக அரசியல் வரை அனைத்தைப் பற்றியும் உரையாற்ற, அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கைதட்டி மகிழ்ந்தனர். இதைக் கண்டித்து எதிர்வினையாற்றியவர்களுக்கு எதிராக, `சமண மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தாதீர்' என சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதற்கு முன்னதாக மத்தியப்பிரதேச சட்டசபையிலும் தருண் சாகர் உரையாற்றியது கொசுறுச் செய்தி. ரைட்டு!


p126f.jpg

நிஜமா?!

இந்திய மதிப்பில் ரூ.251-க்கு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன் தரும் ‘ஃப்ரீடம் 251’ திட்டத்தை இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டோம். இந்நிலையில் ஜோத்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.501-க்கு Champ1 என்ற பெயரில் அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போனை அறிவித்திருக்கிறது. 2 ஜி..பி. ரேம், 8 எம்.பி. கேமரா, 16 ஜி.பி. மெமரி, இவைத் தவிர்த்து 4ஜி போன்ற வசதிகள் இதில் உள்ளதாய் அந்நிறுவனம் தெரிவிக்கிறது. `ப்ரோமோ செய்வதற்காக ஆரம்பத்தில் மட்டும்தான் இந்த விலை' என அந்நிறுவனம் தெரிவித்தாலும், `இதெல்லாம் சும்மாங்க'னு Champ1 மாடலை நெட்டிசன்ஸ் வறுத்தெடுத்து ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர். எதுதான் உண்மை?


p126g.jpg

ஆறடி ஆளு!

நடிகர், தயாரிப்பாளர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் எனப் பன்முகங்கள் கொண்ட விஷால், தனது 39-வது பிறந்தநாளை வரலட்சுமி சரத்குமார் உட்பட சில நண்பர்களுடன் கொண்டாடினார். அவரது பிறந்த நாளன்று அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘கத்திசண்டை’ படத்தில் இருந்து ‘நான் கொஞ்சம் கறுப்புதான்’ பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது. அவரது ரசிகர்மன்றங்கள் சார்பாக, பல இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில், அவரது பிறந்தநாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களும் வழங்கப்பட்டன. அடுத்தது அரசியல்தானோ?


p126h.jpg

இதெல்லாமா சேலஞ்ச்!

பாலிவுட் வட்டாரத்தில் கடந்த வாரத்தின் ஹாட் டாபிக் இந்த #BeatPeBootyChallangeதான். படத்தை ப்ரொமோட் செய்ய விமானத்தில் பெயின்ட் அடிப்பது ஒரு ரகமென்றால், A Flying Jatt படக்குழுவினர் வேறு வகையில் படத்தை ப்ரொமோட் செய்துள்ளனர்.  படத்தில் வரும் ஒரு டான்ஸ் ஸ்டெப்பை, முடிஞ்சா இதைப் பண்ணுங்க பார்க்கலாம்னு படத்தின் கதாநாயகன் டைகர் ஜெராஃப் மற்றும் நாயகி ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சோஷியல் மீடியாவில் பரப்பினர். பிரபலங்களும், நெட்டிசன்களும் தங்களது பங்குக்கு வீடியோக்களை போஸ்ட் செய்து வைரலாக்கினர். இதெல்லாம் வடிவேலு பல வருசம் முன்னாடியே பண்ணிட்டாருங்கோ!

vikatan

  • தொடங்கியவர்
அமைதியுடன் கற்பதற்கு அனுமதியுங்கள்
 
 

article_1472446062-u,9%5B.jpgஒருவர் அறிஞர், மேதாவியாக உருவாகுவதற்கு அவரது ஆசிரியர், பெற்றோர் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது.

அமைதியான சுற்றுச் சூழலும் முக்கிய காரணமாகும். எதிர்வீட்டுச் சண்டை, சதா ஒலிபெருக்கிகளின் பலத்த ஓசை போன்ற அமைதியற்ற சூழல் மாணவர்களை மட்டுமல்ல, சாதாரணமான சகல பிரஜைகளையும்; திக்குமுக்காட வைக்கின்றது.

சுற்றுப்புறத்தில் அல்லது வெளியே வாசம் செய்யும் சிலர், கல்வி கற்பவர்களைக் கண்டால் பிடிக்காத நபர்களைப் போல் விஷத்தைக் கக்குவார்கள். உதவி புரியாத உபத்திரவவாதிகள் இவர்கள்.

பொறாமையற்ற, பரந்த மனப்பான்மையுடைய நல்ல இதயம் கொண்டோர் வாழும் இடம் தூய்மையுடன் துலங்கும். பிள்ளைகள் அமைதியுடன் கற்பதற்கு அனுமதியுங்கள்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

புனிதர் பட்டம் பெறும் அன்னை தெரசாவுக்கு மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் காணிக்கை.!

sudarsan-Pattnaik-dedicates-his-latest-s

புனிதர் பட்டத்தால் சிறப்பிக்கப்படும் அன்னை தெரசாவுக்கு பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அன்னையின் மணல் சிற்பத்தை உருவாக்கி காணிக்கை செலுத்தியுள்ளார்.

virakesari

  • தொடங்கியவர்

 

சீனாவில் ஒரே இரவில் தரைமட்டமாக்கப்பட்ட மேம்பாலம்
==========================================

சீனாவின் நான்சங் நகர மேம்பாலத்தை அகற்ற அதிகாரிகள் முடிவெடுத்தனர்.அதை ஒரே இரவில் செய்து முடிக்க டஜன் கணக்கான தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தினர்.வரிசையாக நிறுத்திவைக்கப்பட்ட இயந்திரங்கள், கொஞ்சம்
கொஞ்சமாக மேம்பாலத்தை இடித்தெடுத்து தரைமட்டமாக்கின.திங்களன்று போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க, இந்த மொத்த நடவடிக்கையும் 56 மணி நேரத்தில் முடிக்கப்பட்டது.

BBC

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.