Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
14 கிலோ எடை கொண்ட பூனை
 

அமெ­ரிக்­கா­வி­லுள்­ள­ ­பூ­னை­யொன்று 14 கிலோ­கிராம் (31 இறாத்தல்) எடையைக் கொண்­டுள்­ளது. நியூ ஹாம்ப்­ஷயர் மாநி­லத்தின் வோட்­ட­விலே வெலி நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் இப் பூனை வசித்து வரு­கி­றது.

 

19667at.jpg

 

8 வருட வய­தான இப் பூனைக்கு லொகான் எனப் பெய­ரிட்­டுள்­ளனர். சாதா­ரணப் பூனைகளின் 3 மடங்கு பெரிய அள­வு­டை­ய­தாக இப் பூனை உள்­ளது. இந்­த­ ஹோட்­ டலின் உரி­மை­யா­ளர்­க­ளான சுசான் புரூன்வான்ட் மற்றும் டோர் புரூன்வான்ட் தம்­ப­தி­யினர் 7 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இப் பூனையை வளர்க்க ஆரம்­பித்­தனர்.

 

தற்­போது மேற்­படி ஹோட்­டல் வளா­கத்தில் இப் பூனை அந்த ஹோட்­டலின் வாடிக்­கை­யா­ளர்­க­ளையும் வெகு­வாக கவர்ந்­துள்­ளது. இப் பூனையுடன் படம்
­பி­டித்­துக்­கொள்ள பலரும் ஆர்வம் காட்­டு­கின்­ற­னராம்.

 

19667Untitled-1.jpg

 

இப் பூனையின் அதிக பரு­ம­னுக்­கான கார­ணத்தைக் கண்­ட­றி­வ­தற்­காக அதன் இரத்­தம் பரி­சோ­திக்­கப்­பட்­ட­போ­திலும் எதுவும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

 

“மற்­றொரு பூனையுடன் சண்­டை­யிட்­ட­போது இந்த பூனை காய­ம­டைந்து ஒரு வார காலம் முறை­யாக உணவு உட்கொள்ளாமல் இருந்தது. அப்போதும் இதன் எடை குறையவில்லை என சுசான் புரூன்வான்ட் தெரிவித்துள்ளார்.

metronews.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்று சர்வதேச குடிசன தினம்

 

 

 

இன்று சர்வதேச குடிசன தினம்

சர்வதேச குடிசன தினம் இன்றாகும்.

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை உலக குடிசன தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

30 வது சரவதேச குடிசன தினம் இம்முறை அனுஸ்டிக்கப்படுகின்றது.

‘வீட்டுத்திட்ட உதவிகளுக்கு முன்னுரிமை’ எனும் தொனிப்பொருளில் இம்முறை குடிசன தினம்
அனுஸ்டிக்கப்படுகின்றது.

 

14520507_10155045513854578_6610443217496

  • தொடங்கியவர்

  14542513_1145187912196568_64858464459976

அலைகள் ஓய்வதில்லை மூலம் அறிமுகமான அந்நாளைய முன்னணி நாயகி..
அத்தனை முன்னணி கதாநாயகரோடும் கலக்கிய நடிகை ராதாவின் பிறந்தநாள்.

இப்போது தாயின் இடத்தை நிரப்ப மகள்மார் கார்த்திகா, துளசி இருவரும் ரசிகருக்கு விருந்து படைக்கின்றனர்

 
  • தொடங்கியவர்

இந்த டெக்கீஸ்களின் வெற்றி ரகசியம் இதுதான்! #WorldTechiesDay

filed.jpg

தொழில்நுட்பம் இல்லாத நம் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது. நாம் இன்று சிரமமின்றி வாழ்வதற்கு பின்னால், யாரோ ஒருவர் பட்ட சிரமங்களின் கதை இருக்கிறது. மின்விளக்குகள் முதல், நம் கையில் தவழும் ஸ்மார்ட்போன் வரை, யாரோ ஒருவரின் கண்டுபிடிப்பும், அர்ப்பணிப்பும்தான் நம் வாழ்க்கையை அழகுபடுத்துகின்றன. அப்படி நாம் வாழும் காலத்தில், உலகை திரும்பிப் பார்க்க வைத்த டெக்கீஸ்களின் சின்ன ரீவைண்ட்தான் இந்த கட்டுரை. அவர்களின் அசாத்திய வெற்றிகளுக்கு பின்னால், என்ன இருக்கிறது தெரியுமா?  

ஸ்டீவ் ஜாப்ஸ்:

steve-jobs.png

'ஆப்பிள்' என்னும் ஐ-கனியை விதைத்தவர். மாற்று சிந்தனையின் பிதாமகன். ஐ-போன், ஐ-பாட் என ஜாப்ஸின் சிந்தனைகள் வரைந்தது எல்லாமே, டெக்னாலஜியின் மாஸ்டர் பீஸ்கள். நல்ல டெக்கீயாக மட்டுமில்லாமல், ஆப்பிள் நிறுவனத்தை உலகெங்கும் கொண்டு சென்ற ஒரு சிறந்த பிசினஸ் மேன். டீ- ஷர்ட்டில் சே குவேரா என்றால், செல்போன் வால்பேப்பரில் ஸ்டீவ் ஜாப்ஸ்தான் யூத்துகளின் இன்ஸ்பிரேஷன். 56 வயதில் அவர் இறந்தபோது அவர் சொத்துமதிப்பு  2,12,000 கோடி ரூபாய். இப்படி உலகையே வாய்பிளக்க வைத்த, பல வெற்றிகளுக்கு சொந்தக் காரரான ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தித்த சறுக்கல்கள் எத்தனை தெரியுமா?

பிறந்தவுடனேயே தன் பெற்றோரால் தத்துக் கொடுக்கப்பட்டவர். ஏழ்மையின் காரணமாக கல்லூரிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டவர். இந்தியாவுக்கு வந்து இமயமலைக்கு சென்று, இறைவனைத் தேடிய ஃபிளாஷ்பேக் எல்லாம் கூட ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு உண்டு. முதன்முதலில் ஸ்டீவ் ஆப்பிளைத் தொடங்கியது சிலிக்கான் வேலியின் பிரம்மாண்ட தொழிற்சாலையில் அல்ல. அவர் வீட்டு கார் ஷெட்டில்தான். ஆப்பிள் கணினிகளை வெற்றிகரமாக விற்பனை செய்த வரலாறு மட்டுமல்ல. அதே ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து, தோல்விகளுக்கு குற்றம் சாட்டப்பட்டு துரத்தப்பட்ட வரலாறும் இவருக்கு உண்டு.  அசரவில்லை மனிதர். உடனே நெக்ஸ்ட் என்னும் கணினி நிறுவனத்தை துவங்கினார். பிக்சர் என்னும் கிராபிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். இரண்டுமே வெற்றிகரமாக அமைந்தது. ஜாப்ஸை வெளியேற்றிய ஆப்பிள், அவரின் நெக்ஸ்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. மீண்டும் தனது தாய்க் கழகத்துக்குள் வந்து சேர்ந்தார் ஜாப்ஸ். அதன் பின் நடந்தது அனைத்தும் வரலாறு. "நீங்கள் எத்தனை விஷயங்களை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதனை எப்படி செய்கிறீர்கள் என்பதே முக்கியம்" என்பது ஜாப்ஸ் உதிர்த்த வார்த்தைகள். 

லாரி பேஜ்:

larry.jpg

இந்த நூற்றாண்டின் டெக்னாலஜி அசுரனான கூகுளுக்கு உயிரூட்டியவரில் ஒருவர். 43 வயதாகும் லாரிதான், 18 வயதான கூகுளுக்கு 'டாக்டர்.வசீகரன்'. சிறுவயதிலேயே குட்டி ஐன்ஸ்டீனாக வளம் வந்தவர் லாரி. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்தான் முதன்முதலாக கூகுளின் இணை நிறுவனரான, செர்கே பிரினை சந்தித்தார். Backrub என்னும் ஆய்விற்காக செர்கே பிரினுடன் இணைந்து, தனது முதல் புராஜெக்டை செய்தார். இன்றைய கூகுளின் அடிப்படை இந்த ஆய்வுதான். பின்னர் கூகுள் தேடியந்திரத்தை இருவரும் இணைந்து உருவாக்கினர். வழக்கம் போலவே ஆரம்பத்தில் பெரிய பாய்ச்சல்கள் எதுவும் இல்லாமல், கலிபோர்னியாவின் சிறிய அறை ஒன்றில்தான் கூகுளையும் துவக்கினர். பின்னர் அலுவலகம் பெரிதானது. கூகுளின் சேவை பலருக்கும் பிடித்துப்போக, சர்ச் இன்ஜினாக கூகுள் வெளிச்சம் பெறத்துவங்கியது. சர்ச் இன்ஜினாக சொல்லி அடித்தது கூகுள். பிறகு புதிய புதிய சேவைகள், மொழிகள் என இன்று வரை அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கிறது கூகுள். நிகழ்காலத்தின் தேவைகளை மட்டும் தருவது மட்டும், சிறந்த கம்பெனியின் வேலையல்ல. எதிர்காலத்தையும் கணிக்க வேண்டிய, அவசியம் அவர்களுக்கு இருக்கிறது என்பதே லாரியின் பிசினஸ் சீக்ரட். கூகுளின் மந்திரமும் கூட!

பில் கேட்ஸ்:

bill-gates-jpg.jpg

கணினி வரலாற்றில் தவிர்க்க முடியாத நாயகன். ஆனால் நமக்கு அதிகம் இவரைத் தெரிந்தது எல்லாம், உலகின்  நம்பர் 1 பணக்காரராகத்தான். 

"நீங்கள் வெற்றியைக் கொண்டாடுவது மிக முக்கியம்தான். ஆனால் அதை விட முக்கியம் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது"

"வெற்றி என்பது மோசமான ஆசிரியர். அது புத்திசாலிகளை கூட, இனி தோல்வியே அற்றவர் என நினைக்க வைத்துவிடும்"
"ஒரு கடினமான, வேலையை செய்ய, நான் ஒரு சோம்பேறியைத்தான் தேர்ந்தெடுப்பேன். கடினமான வேலையை எப்படி எளிதாக முடிப்பது என அவனுக்குத்தான் தெரியும்"

"உலகத்தில் யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள். அதனை நீங்கள் செய்தால், உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்கிறீர்கள் என அர்த்தம்"

"வெற்றி பெறுவதற்கு தோல்விகள்தான் முதல் படி. ஆனால், முதல்முறையே தோற்றுவிட்டால், கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உங்கள் முயற்சிகளை கைவிடாமல், உழைத்தால் அந்த தோல்விகளையே வெற்றிகளாக மாற்றும், சூட்சுமம் உங்களுக்கு தெரிந்துவிடும்"

மேலே சொன்ன அனைத்துமே பில் கேட்ஸ் எங்கோ, எப்போதோ பேசிய வெற்றி மொழிகள். ஆனால் கொஞ்சம் கவனியுங்கள். உலகின் வெற்றிகரமான மனிதர் பில்கேட்ஸ்தான், தோல்விகளை இத்தனை பரிமாணங்களில் கொண்டாடுகிறார். நாம் நெகட்டிவ்வாக நினைக்கும் விஷயங்களில்தான் ஒளிந்திருக்கிறது பில் கேட்ஸின் இத்தனை பாசிட்டிவ் எனர்ஜி.

மார்க் ஸக்கர்பெர்க்:

mark.jpg

ஃபேஸ்புக்கின் நிறுவனராக, சமூக வலைத்தளங்களின் தனி ஒருவனாக மட்டுமே நமக்கு மார்க் ஸக்கர் பெர்க்கை தெரியும். ஆனால், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, மியூசிக் ப்ளேயரில் பிடித்த பாடல்களை தரம்பிரித்து கேட்கும் சினாப்ஸ் என்னும் ப்ளேயரை உருவாக்கி லைக்ஸ் அள்ளியவர். பிரபலங்களின் வரலாற்றில் இருப்பது போலவே, இவருக்கும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில்தான் கல்லூரிக்காலம். அப்போது கல்லூரியில் யார் அழகு எனக் கண்டறிய, ஃபேஷ்மேஷ் என்னும் புராகிராமை  உருவாக்கினார். இதற்காக கல்லூரியின் ஆண், பெண் விவரங்களை எல்லாம் அபேஸ் செய்ய, விசாரணையில் சென்று நின்றார் மார்க். 'படிக்குற வயசுல பண்ற வேலையா இது?' எனக் கல்லூரி கேட்க, 'சாதாரண மாணவன் கூட, திருடும் அளவுக்குத்தான் கல்லூரியின் இணையப் பாதுகாப்பு இருக்கிறதா?' என திருப்பிகேட்க, தண்டனை இல்லாமல், தப்பினார். இதற்குப்பிறகு மார்க்கின் மூளையில் எறிந்த பல்புதான் ஃபேஸ்புக். 

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்காக முதலில் உருவாக்கியதுதான் இது. 2004-ம் ஆண்டு இதனை பதிவு செய்து, ஸ்டேட்டஸ் போட்டார் மார்க். படிப்புக்கு பேஸ்புக் இடைஞ்சலாக, இருந்த நிலை மாறி, ஃபேஸ்புக்கிற்கு படிப்பு இடைஞ்சலாக மாற, படிப்பை டி-ஆக்டிவேட் செய்தார். விளைவு..ஃபேஸ்புக் ராஜ்ஜியத்தின் எல்லை, விரிவைடைந்து கொண்டே சென்றது. வெற்றியைப் பார்த்து வியந்த நிறுவனங்கள், மில்லியன்கள், பில்லியன்கள் என விலை கேட்டு வர, அனைத்து ஆப்ஷங்களுக்கும் டிஸ்லைக்ஸ் கொட்டினார் மார்க். தான் நினைத்தை அடையும் வரை, போராடினார். ஃபேஸ்புக்தான் இனி நம்பர் 1 என்று ஆனபின்பு கூட, இன்னும் ஓயவில்லை மார்க்கின் மாயாஜாலம். ஃபேஸ்புக்கை விலைக்கு கொடுக்காத மார்க்தான் பிறகு, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என பல நிறுவனங்களை ஃபேஸ்புக்கின் கீழே கொண்டுவந்தார். இளம் பில்லியனராக ஃபேஸ்புக்கில் சிரிக்கும் அவரது டி.பிக்கு பின்னால் இருப்பது கோடி ஜி.பி சிந்தனைகள்!

பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம்:

Tumblr_inline_n19k9vpY8G1qzzumw.jpg

பல பில்லினர்கள் கல்லூரிப் படிப்பே முழுதாக முடிக்காதவர்தான் பிரையன் ஆக்டனும். (என்னே ஒற்றுமை..!) பின்னர் மென்பொருள் பொறியாளராக மாறி, யாகூவில் வேலை செய்கிறார் ஆக்டன். திருப்தி இல்லை. ட்விட்டருக்கு வேலை கேட்டு அப்ளை செய்கிறார். ரிஜெக்ட் செய்கிறது ட்விட்டர். அப்படியே ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் விண்ணப்பிக்கிறார் ஆக்டன். ஃபேஸ்புக்கும் வேலை மறுக்கிறது.
ஆனால் கொஞ்சமும் துவழ வில்லை ஆக்டன். ஆப்ஸ்களுக்கான தேவை வருங்காலத்தில் அதிகம் இருப்பதாக உணர்ந்து கொள்கிறார். 2009-ல் ஜேன் கோமுடன் இணைந்து வாட்ஸ்அப்பை உருவாக்குகின்றனர். வாட்ஸ்அப் வதந்தி போல, வாட்ஸ்அப்பின் பயன்பாடும் வேகமாக பரவியது. இதன் தேவை உணர்ந்து இறுதியில் 19 பில்லியன் டாலர் கொடுத்து, வாட்ஸ்அப்பை வளைத்தது ஃபேஸ்புக். ஒரு குட்டி சினிமாவுக்கான திரைக்கதை போல, முன்பாதி தோல்வி, பின்பாதி பிரம்மாண்ட வெற்றி என தற்போது கெத்தாக வலம் வருகின்றனர் இருவரும்.

மேலே நாம் பார்த்த அனைத்து டெக்கீஸ்களுக்குப் பின்னாலும் இருப்பது வேறு எந்த மாயாஜாலமும் இல்லை. நிச்சயம் தோல்விகள்தான். தங்களது முயற்சியில், தொழிலில், வாழ்க்கையில் என எல்லா இடங்களிலும் சந்தித்த சறுக்கல்களும், சிக்கல்களுமே அவர்களை செதுக்கியிருக்கிறது. சந்தித்த எல்லா சிக்கல்களையும், சிந்தனைகளால் தூக்கி எறிந்த இவர்களின் அதே 'கெத்து' உங்களிடமும் இருக்கட்டும் ப்ரோ..#HappyTechiesDay

vikatan

  • தொடங்கியவர்
Miss Turkey 2016
 

மிஸ் துருக்கி 2016 (Miss Turkey 2016) அழகுராணி போட்டிகளின் இறுதிச் சுற்று கடந்த வாரம் சேர்கிக் நகரில் நடைபெற்றது.

 

196713.jpg

புசே இஸ்கென்டரோக்லு


 

20 பேர் கலந்து கொண்ட இப் போட்டியில் 3 சர்வதேச அழகுராணிப் போட்டி களுக்கான துருக்கிப் பிரதிநிதிகள் இப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டனர்.

 

196711.jpg

தன்சு சீலா கேகிர், டெம்லா பிகன்


 

இப் போட்டியில் புசே இஸ்கென்டரோக்லு முதலிடம் பெற்றார். எதிர் வரும் டிசெம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக அழகு ராணிப் போட்டி யில் துருக்கியின் சார்பில் அவர் பங்கு பற்றவுள்ளார்.

 

196714th--place.jpg

கெக்லா குகுரோவா

19671miss-turkey.jpg

 

இரண்டாமிடம் பெற்ற தன்சு சீலா கேகிர் பிலிப்பைன்ஸில் ஜனவரி மாதம்  நடைபெறவுள்ள மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.

 

19671Tansu-Sila-%C3%87akir---2nd-place-%

 

19671Tansu-Sila-%C3%87akir---2nd-place-%

 

3 ஆம் இடம்பெற்ற டெம்லா பிகன் போலந்தில் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள மிஸ் சுப்பர் இன்டர்நெஷனல் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.

 

19671Tansu-Sila-%C3%87akir---2nd-place-%

 

19671Tansu-Sila-%C3%87akir---2nd-place-%

 

4 ஆம் இடம்பெற்ற கெக்லா குகுரோவா ஜப்பானில் இம் மாத இறுதியில் நடை பெறவுள்ள மிஸ் இன்டர்நெஷனல் போட்டியில் துருக்கியின் சார்பில் பங்கு பற்றவுள்ளார்.

 

19671Tansu-Sila-%C3%87akir---2nd-place-%

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சுவிட்சர்லாந்து டு ஜெர்மனி – 8 நிமிடம் தான்! இதுதான் மிக குறைந்த நேர சர்வதேச விமான சேவை!

வெறும் எட்டே எட்டு நிமிடத்தில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல விமானம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால் அப்படி ஒரு விமான சேவையை ஒரு வர்த்தக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அப்படி எந்த ஊரில் இருந்து எந்த ஊர்? எவ்வளவு தொலைவு? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

14484609_1245400485518739_74770599502801

 

இந்த விமான சேவை, சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலனில்(St Gallen) இருந்து ஜெர்மனியின் பிரைட்ரிச்ஷபென்  வரை ( friedrichshafen)   என அறிவித்துள்ளது இந்த நிறுவனம். கான்ஸ்டன்ஸ் ஏரியின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு செல்லும் இந்த விமானத்தின் பாதை தொலைவு வெறும் 20 கிலோமீட்டர் மட்டுமே. இந்த விமான பயனத்திற்கு 40 யூரோக்கள் செலவாகும் என கூறப்படுகிறது. இந்த இரு ஊர்களுக்கு இடையே ரயில் வழியாக சென்றால் கூட 1 மணி நேரம்தான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் ஆஸ்திரியா, வியன்னாவில் இருந்து ஸ்லோவாக்கின் பிரட்ஸ்லாவா வரை இயக்கப்பட்ட விமானம் தான் மிக குறைந்த நேர சர்வதேச விமான சேவையாக இருந்தது. இதன் தொலைவு 50 கிலோமீட்டர் மற்றும் விமான பயண நேரம் 10 நிமிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

vikatan

  • தொடங்கியவர்

ஜேம்ஸ் எம்.புக்கானன் ஜூனியர்

 

 
james_3032255f.jpg
 

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் எம்.புக்கானன் ஜூனியர் (James M.Buchanan Jr.) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*அமெரிக்காவின் டென்னஸி மாநிலம் முர்ஃப்ரீஸ்பரோ நகரில் ஏழ்மையான குடும்பத்தில் (1919) பிறந்தார். படிப்பில் சிறந்து விளங்கினார். இளம் வயது முதலே பொருளாதாரத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். கடற்படையில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

*சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1948-ல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். டென்னஸி, புளோரிடா, வர்ஜீனியா, ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். ஜெர்மன் பொருளாதார நிபுணர் நட் விக்செல் எழுதிய கட்டுரையால் ஈர்க்கப்பட்டு, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

*உலகப் புகழ்பெற்ற பொருளாதார மேதைகளின் நூல்களைக் கற்றார். பொருளாதாரத்தின் பிரிவுகள், அமெரிக்கப் பொருளாதார நிலை குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நண்பர்களுடன் இணைந்து ‘பப்ளிக் சாய்ஸ்’ என்ற பொருளாதார இதழைத் தொடங்கினார். மற்ற நிபுணர்களுடன் இணைந்து பல நூல்கள் எழுதினார்.

*வர்ஜீனியாவில் அரசியல் பொருளாதாரம் பயிற்றுவிப்பதற்காக தாமஸ் ஜெஃபர்சன் என்ற பெயரில் கல்வி மையம் தொடங்கினார். பல மொழிகள் கற்றார். பல்வேறு இடங்களில் ஏராளமான விரிவுரைகள் ஆற்றினார்.

*தனது ஆய்வுகள், கருத்துகளைப் பரப்ப ‘கான்ஸ்டிடியூஷனல் எகனாமிக்ஸ்’ என்ற இதழைத் தொடங்கினார். அவரது கருத்துகள், விரிவுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. அரசியல் பொருளாதாரத் துறை புத்துயிர் பெற்றதில் இவரது பங்களிப்பு மகத்தானது என்று கூறப்படுகிறது.

*இவரது பொருளாதாரக் கொள்கை தார்மிகம், அரசியல், சட்ட சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது. பப்ளிக் சாய்ஸ் கல்வி மையத்தின் முதல் இயக்குநராக 1969-ல் நியமிக்கப்பட்டார். பொது நிதி, பொதுக் கடன், ஓட்டுரிமை, அரசியலமைப்பு பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

*இவர் உருவாக்கிய பொது தேர்ந்தெடுத்தல் கோட்பாடு (Public Choice Theory), உலக பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, உலகப் புகழ்பெற்றது. இதற்காக இவருக்கு 1986-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இக்கோட்பாடு பொருளாதாரத்தையும் அரசியல் முடிவெடுத்தலையும் அலசி ஆராயும் தனித்துவம் மிக்க கோட்பாடாக கருதப்பட்டது.

*பல தலைமுறை மக்களுக்காக உருவாக்கப்படும் அரசியல் அமைப்புச் சட்டமானது, அரசு, சமூகம் மற்றும் தனிப்பட்ட மக்களின் நலன்களை சமன்படுத்துவதாக உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

*அரசியல் மற்றும் அரசியல் கொள்கைகள் இடையிலான வேறுபாட்டை வகுத்தார். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ‘தி கலெக்டட் ஒர்க்ஸ் ஆஃப் ஜேம்ஸ் எம்.புக்கானன்’ என்ற பெயரில் 20 தொகுதிகள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது.

*பொருளாதாரத்தில் சமூக சிந்தனையை அறிமுகப்படுத்தியவர் என்று போற்றப்படும் இவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தின. பொருளாதாரக் களத்தில் திருப்புமுனையை உருவாக்கிய ஜேம்ஸ் எம்.புக்கானன் ஜுனியர் 94-வது வயதில் (2013) மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

ஒரு நாள்...ஒரே ஒருநாள் பாய் ஃப்ரெண்டா இருந்து பாருங்க! #boyfriendday

இன்று உலக பாய்ஃப்ரெண்ட் தினமாம். இருக்கும் கஷ்டத்தில் இதைக் கொண்டாட யாருக்கு மனது வரும்? உடனே, 'அவங்களுக்கு எல்லாம் என்ன பாஸ் குறை?' என வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள் சிங்கிள் பாய்ஸ். அட, மத்தளமாவது இரண்டு பக்கம்தான் அடிவாங்கும். பாய் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் டிரம்ஸ் மாதிரி. எல்லாப் பக்கமும் அடிபடுவார்கள். ரகம் வாரியாகப் பிரிச்சுப் பிரிச்சு அந்தக் கஷ்டங்களைச் சொல்லும் டிக்‌ஷனரிதான் ஜி இது.

கேர்ள் ஃப்ரெண்ட்களிடம்:

Unnale-15.jpg

* அல்பேனியாவில் இருந்து ஸ்பாம் மெசேஜ் வழியாக பழக்கமான கேர்ள் ஃப்ரெண்டாக இருந்தாலும் சரி, ஆண்டிப்பட்டி சந்தையில் பேரம் பேசும்போது பழக்கமான கேர்ள் ஃப்ரெண்டாக இருந்தாலும் சரி, ஒரு விஷயத்தில் பேசி வைத்தது போல ஒரேமாதிரியாக இருக்கிறார்கள். அது - வாட்ஸ்அப் லாஸ்ட் ஸீன். 'நான் தூங்கினதுக்கு அப்புறம் ஏன் ஆன்லைன் வந்தே?' என்ற கேள்வியைச் சந்திக்காத ஜென்டில்மேன் மில்க்கி வே கேலக்ஸியிலேயே இல்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. அந்தக் கேள்விக்கான க்ளைமாக்ஸ் கண்டிப்பாக வெட்டுக்குத்தாகத்தான் இருக்கும். (வெட்டு, குத்து ரெண்டுமே பாய் ஃப்ரெண்டுக்குத்தான்.) காலேஜ் குரூப்ல உயிரை வாங்குற ஆளுங்களையும், ஆபீஸ் குரூப்ல மொக்கை போடுற ஆளுங்களையும் நான் எப்படி பேபி காட்டிக்கொடுக்க?

* ரொமான்ஸில் கண்ணுக்குத் தெரியாத அமீபா சைஸில் ஒரு விதி இருக்கிறது. கேர்ள் ஃப்ரெண்ட் 'இது நல்லாருக்கா?' என எதை அனுப்பிக் கேட்டாலும் கூசாமல் 'நல்லாருக்கு' என ரெடிமேட் ரிப்ளை அனுப்பிவிட வேண்டும். தப்பித்தவறி சுமார், குப்பை போன்ற பதில்கள் வந்தால் நெற்றியில் ஒட்டப்படும் பஞ்சர்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல. டிரெஸ், மேக்கப் எல்லாம் போட்டோ அனுப்பிக் கருத்து கேட்பதுகூட பரவாயில்லை. மிளகு ரசத்தை போட்டோ எடுத்து அனுப்பி 'நல்லாருக்கா' எனக் கேட்பது எல்லாம்... இந்த அபலையை அள்ளிக்கோ கடல் மாதாவே!

* கோயில் ஆட்டிற்குக்கூட புல் மேய்வது, தழை தின்பது என பிற கமிட்மென்ட்களுக்கு வாய்ப்பிருக்கிறது. இந்த பாவப்பட்ட பாய் ஃப்ரெண்ட்களுக்கு அதற்கும் வாய்ப்பில்லை. 'என்னை விட உனக்கு வேலை முக்கியமா போச்சா?' என்பார்கள் ஒரு நேரம். 'வேலை பாக்கணும்னு பொறுப்பே இல்லை' என்பார்கள் இன்னொரு நேரம். இந்த 'வேதாளம்' டிரான்ஸ்பர்மேஷனைப் புரிந்துகொள்ள கூகுளில் பேசி மேனுவல்தான் தயார் செய்ய வேண்டும்.

பெற்றோர்களிடம்:

vip.jpg

* கஷ்டப்பட்டு கேர்ள் ஃப்ரெண்டை சமாதானப்படுத்திப் படம் பார்க்கவோ, சாப்பிடவோ சென்றிருப்போம். அந்நேரம் கரெக்டாக வீட்டில் இருந்து போன் மேல் போன் வரும். 'ஒருவேளை பின் மண்டைக்குப் பின்னால் இருந்து கேட்ச் செய்துவிட்டார்களோ' என பயம் ஹார்ட்டைக் கவ்வும். கட் செய்தாலும் திரும்பத் திரும்ப அடிப்பார்கள். பீதியோடு அட்டெண்ட் செய்தால் 'சும்மாதான் போன் பண்ணேன்' என்பார்கள். நீங்க சும்மா பேசுறதுக்கு எனக்கு ஏன் பீதியைக் கிளப்புறீங்க?

* பெண்களுக்காவது பரவாயில்லை. கல்யாணப்பேச்சை சட்டென எடுத்துவிடுவார்கள். பையன்கள் வீட்டில் நேரெதிர். சிங்கிளாய் இருக்கும்வரை 'அதுக்கென்ன அவசரம்?' என்பவர்கள் கரெக்டாக நாம் கமிட்டாகும் நேரம் பார்த்து, 'என்ன பொண்ணு பார்க்கலாமா?' என அதட்டுவார்கள். (நீங்க பார்க்கவே இல்லைனுதானய்யா நானா பாத்தேன்) கமிட்டான புதிதில் கல்யாணப் பேச்சையும் எடுக்க முடியாது. அவர்களைச் சமாளிக்க நாம் விதவிதமாய் யோசிக்க வேண்டி இருக்கும். இந்த அறிவை அறிவியலில் பயன்படுத்தியிருந்தால் கக்கத்திற்கு ஒரு நோபல் வாங்கி அடக்கியிருக்கிலாம்.

* விக்ரமன் படம் மாதிரி திவ்யமாக சென்றுகொண்டிருக்கும் லெளகீக வாழ்க்கையில் பொன்னம்பலம் மாதிரி தொடை தெறிக்க என்ட்ரி ஆவார்கள் சொந்தக்காரர்கள். 'உங்க பையனை ஒரு பொண்ணோட பாத்தேனே', ' ஃபேஸ்புக்ல அவன் ஆக்டிவிட்டீஸ் எல்லாம் சரி இல்லையே' எனப் பங்குச்சந்தை நிலவரம் போல காலை, மாலை நம் வீட்டில் அப்டேட் தருவார்கள். ஐ யம் பிரவுட் ஆப் யூ ரிலேட்டீவ்ஸ்!

நண்பர்களிடம்:

boss.jpg

* படம் பார்க்கப் போவதோ, பார்ட்டிக்குப் போவதோ, டூர் செல்வதோ கரெக்ட்டாக நமக்கு கமிட்மென்ட் இருக்கும் நாட்களில்தான் முடிவு செய்வார்கள். காரணம் சொல்லித் தப்பிக்கலாம்தான். ஆனால் அவர்கள் மட்டும் என்ஜாய் செய்வதை மனம் ஏற்றுக்கொள்ளாது. சரி, கேர்ள் ஃப்ரெண்டை தாஜா செய்யலாம் என்றால், அந்த முயற்சி வழக்கம்போல ரத்தக்காவு எல்லாம் கேட்கும். இந்தக் குழப்பத்தில் பி.பி, சுகர் உள்ளிட்ட பத்து வகையான பிராப்ளம்ஸ் வர வாய்ப்பிருக்கிறது.

* ஆளுங்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் சட்டமன்றத்தில் சந்திப்பது போல என்றாவது ஒருநாள் கேர்ள் ஃப்ரெண்டும், நம் நண்பர்களும் சந்திக்கும் வைபவம் நடக்கும். அப்போது பேச்சை வளர்க்கிறேன் பேர்வழி என நம்மைப் பற்றிய அந்தரங்கப் பிரதாபங்களை எல்லாம் டேபிளில் பந்தி வைப்பார்கள். அப்புறமென்ன... பத்து நாட்கள் பாகிஸ்தான் - இந்தியா சண்டைதான்!

* மாசக்கடைசி எல்லாம் லவ்வில் கிடையாதே. இருக்கும் கொஞ்ச நஞ்சக் காசை நம்பி அவுட்டிங் பிளான் செய்திருப்போம். சரியாக நாம் எழுவதற்கு முன் எழுந்து அந்தக் காசை துடைத்து எடுத்துச் சென்றிருப்பான் ரூம்மேட். சரி, சும்மா மீட் செய்யலாம் என்றால் அயர்ன் பண்ணி வைத்திருந்த ஒரே சட்டையையும் போட்டுச் சென்றிருப்பான். கதம் கதம்!

ஆபீஸ்மேட்களிடம்:

oru%20naal%20koothu.jpg

* வார நாட்களில் லீவ் போட்டால், பக்கத்து டீம் ஆள் வரை அனைவருக்கும் மூக்கு வியர்க்கும். 'எங்கேயாவது மாட்டுவான்' என வீம்புக்கென்றே தேடித் திரிவார்கள் போல. சதித்திட்டம் தெரியாமல் காய்ச்சல் என நம்பவைக்க ஒழுகாத மூக்கை உறிஞ்சிக்கொண்டே மறுநாள் ஆபீஸ் வந்தால் 'மீட் மீ' என மெசேஜ் அனுப்புவார் மேனேஜர். பத்த வெச்சுட்டீங்களே பரட்டைகளா!

* அவர்கள் வீட்டு வரவு செலவுக் கணக்குகளைகூட இவ்வளவு உன்னிப்பாகப் பார்க்க மாட்டார்கள். நாம் ஃபேஸ்புக்கில் சாட் செய்வதைக் குறுகுறுவென பின்னாலிருந்து எட்டிப் பார்ப்பார்கள். இதில் அடடே, சூப்பர் என ரன்னிங் கமென்ட்ரி வேறு. இந்தப் பாவத்துக்கு கருட புராண தண்டனைகூட பத்தாது மை சன்!

* முந்தைய நாள் போட்ட சண்டையை சால்வ் செய்ய ஒரே ஒருநாள் சீக்கிரம் கிளம்புவோம். 'என்ன பாஸ் அதுக்குள்ள கிளம்பிட்டீங்க?' என சரியாக சத்தம் கொடுப்பார்கள். அப்ரைசல் நேரத்தில் காதே கேட்காத மேனேஜருக்கு இது மட்டும் கரெக்ட்டாக கேட்கும். அப்புறமென்ன, 'இந்த இஸ்யூவை சால்வ் பண்ணு, அந்த டிக்கெட்டை க்ளியர் பண்ணு' என விடிய விடிய வேலை வாங்குவார். அன்பே சிவம்!

இப்படி சகல திசைகளிலும் அடிவாங்கும் அந்தப் பாவப்பட்ட ஜீவன்களை கொண்டாட ஒருநாள் எல்லாம் பத்தாது சாரே!

vikatan

  • தொடங்கியவர்

அக்.3: வில்லனாக அறிமுகமாகி நாயகனாக வலம்வந்து தற்போது குணச்சித்திர வேடங்களில் அசத்தி வரும் சத்யராஜ் பிறந்தநாள் இன்று

14542518_1245215548870566_58246263059373

  • தொடங்கியவர்

புகைப்படக் கண்களில் கடந்த வாரம்

 

கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளின் சிறந்த செய்தி புகைப்படங்கள்

லிவர்பூலில் நடைபெற்ற தொழிலாளர் கட்சி மாநாட்டின் இறுதி நாளில் தலைவர் ஜெரமி கார்பின் முக்கிய உரையாற்றுகிறார். L

 

 பிரிட்டன் தொழிலாளர் கட்சி பொது தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெரமி கார்பின் தெரிவித்திருக்கிறார். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுகின்ற வாக்காளர்களை கவனத்தில் கொள்வதன் மூலம் அதிக ஆதரவை உருவாக்க முடியும் என்று லிவர்பூலில் நடைபெற்ற தொழிலாளர் கட்சி மாநாட்டின் முடிவில் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் குடியரசு கட்சி வேட்பாளர் டோனால்ட் டிரம்போடு கைகுலுக்குகிறார்.

 

 தொலைக்காட்சி விவாதத்தில் அமெரிக்காவின் இரு முக்கிய அதிபர் வேட்பாளர்கள் வேலைவாய்ப்பு, பயங்கரவாதம் மற்றும் இனவாதம் பற்றிய கருத்துக்களோடு மோதி கொண்டனர். அதிபராக இருப்பதற்கு சரியான மனநிலை ஹிலரியிடம் இல்லை என்று குடியரசு கட்சியின் டோனால்ட் டிரம்ப் தெரிவித்த பிறகு, தனிப்பட முறையில் சொல் தாக்குதல்கள் நடைபெற்றன. அவ்வேளையில் டிரம்ப் வரி செலுத்திய விபரங்களை வெளியிட மறுப்பதை ஹிலரி சுட்டிக்காட்டினார்.

 

தென் ஆப்ரிக்காவின் கேப் டவுணில் பழமையான பெருக்கடல் போட்டியில் விரைகின்ற பாய்மரப் படகு.

 தென் ஆப்ரிக்காவின், சீமோன்ஸ் டவுன் மற்றும் மோசெல் விரிகுடாவுக்கு இடையில் நடைபெறும் 200 கி.மீ கடல் மைல் தொலைவு பாய்மரப் படகு போட்டியின்போது, ஆப்பிரிக்க கண்டத்தின் முனையில் இருக்கும் பயணத்திற்கு கடினமான அகுல்ஹாஸ் முனையை சுற்றி விரைகின்ற பாய்மரப் படகு.

வானில் மிதந்தபடி வான்குடை (பாரசூட்) மூலம் நிகழ்த்தப்பட்ட சாகசங்களை பார்த்து ஆரவாரிக்கும் பார்வையாளர்கள்.

 

 ஐந்தாவது அணுகுண்டு சோதனையை நடத்திய சில வாரங்களில், வட கொரியா , சிவிலியன் மற்றும் ராணுவ விமானங்களின் சாகசக் காட்சியை பொது மக்கள் முன்னிலையில் முதல் முறையாக வொன்சானில் நடத்திக் காட்டியது.

 

அன்தியா ஹெமில்டன் படைப்பிற்கு நடுவில் கலைக்கூடத்தின் உதவியாளர்.

 இந்த ஆண்டின் டர்னர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நான்கு ஓவியர்களில் அன்தியா ஹெமில்டன் ஒருவர். அவருடைய படைப்பு லண்டனிலுள்ள டேட் பிரிட்டன் ஓவியக் கலைக்கூடத்தின் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த ஆண்டின் வெற்றியாளர் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படுவார்.

வட்டவடிவ கம்பி சக்கரத்தில் பயிற்சி எடுக்கும் ஏரியல் இமிரி

 அமெரிக்காவின் ஷிகாகோவில் தேவாலயமாக இருந்து மாற்றப்பட்ட அலோஃப்ட் லோஃப்ட் சர்க்கஸ் பயிற்சி மற்றும் கற்பித்தல் பள்ளியில், வட்டவடிவ கம்பி சக்கரத்தில் பயிற்சி எடுக்கும் ஏரியல் இமிரி

 

 

கிராஸ் தி லன்ஸி போட்டியில் கலந்து கொண்டோர் தடைகளை தாண்டி செல்வது.

 ஜெர்மனியிலுள்ள மார்க்கலீபெர்கரில் இரண்டு நாள்கள் நடைபெற்ற கிராஸ் தி லன்ஸி போட்டியில் மூவாயிரத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்டனர்.

 

சேறு வழியாக போட்டியின் தூரத்தை கடக்கும் பங்கேற்பாளர்கள்

 வட அயர்லாந்தின் போர்டாடவுணில் புற்றுநோயாளிகளுக்கு உதவுவதற்காக நடைபெற்ற அறக்கொடை ஓட்டப்போட்டியில், வயல்கள், ஆறுகள், சேறு பகுதிகள், மண்துளைகள் மற்றும் தடைகளை தாண்டி ஓடுவதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

 

கேம்பிரிட்ஜ் கோமகன் இளவரசர் வில்லியம் மற்றம் அவரது மனைவி கேட் வில்லியம்

 கனடாவுக்கு அரச சுற்றுலா சென்றபோது, கேம்பிரிட்ஜ் கோமகன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் வில்லியம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெல்லா பெல்லாவின் ஹெயில்சுக் மக்களால் வரவேற்கப்பட்டனர். பாரம்பரிய போர்வைகளால் போர்த்தப்பட்ட அவர்கள், இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லெட்க்கான நடன ஆடைகளை பெற்றனர்.

 

ஜப்பானின் மிசாகி கிராமத்தில் தேர் தூக்கி செல்லப்படுகிறது.

 ஆண்டுதோறும் நடைபெறும் அறுவடை விழாவின்போது ஜப்பானின் மிசாகி கிராமத்தில் தேர் தூக்கி செல்லப்படுகிறது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

14572965_1245214838870637_77538719556485

அக்டோபர் 3: சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்ட ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) நினைவு தினம் இன்று..

'நாட் அல்ல நாடு'- தமிழ்நாடு பெயர் மாற்ற பின்னணி! ம.பொ.சி. நினைவுக் கட்டுரை

ma%20po%20si%20600%2044.jpg

ந்தியாவிற்கு சுதந்திரம் கைக்கெட்டும் தொலைவில் இருந்தபோது, தெலுங்கு பேசும் மக்களுக்காக தனி ஒரு மாநிலம் வேண்டும் என அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த தெலுங்கு பேசுவோரிடமிருந்து கலகக்குரல் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் கூட்டங்களில் பேசிய அந்த தலைவரை   'கிராமணியே திரும்பிப்போ...!' என அவர் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர் அந்த மக்கள்.

பொட்டி ஸ்ரீராமுலு என்ற தெலுங்கு மொழியுணர்வாளர், இந்த கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.  58 நாட்கள் உண்ணாவிரதத்துக்குப்பின் அவர் மரணமடைய, பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அவரது மரணத்துக்கு பரிசாக ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலத்தை அப்போதைய காங்கிரஸ் உருவாக்கி ஒப்படைத்தது ஆந்திர மக்களுக்கு. 1953 அக்டோபரில் ஆந்திரம் உருவானது.

'சென்னை கொண்டாட்டத்தின் நாயகன்'

மாநிலத்தை பிரித்துக்கொண்ட ஆந்திர மக்களின் அடுத்த இலக்கு சென்னை. 1956 ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்ற கோஷத்துடன், மீண்டும் ஆந்திரர்கள் சென்னையை உரிமைக் கொண்டாடி போராட்டங்களை முன்னெடுத்தனர்.
வட சென்னை ஆந்திராவின் தலைநகராகவும், தென்சென்னை 'சென்னை மாகாணத்தின்' தலைநகராகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் 'அபாய' கோரிக்கை. அரசியல் களத்தில் இது பல அதிர்வுகளை ஏற்படுத்தின. அப்போது சென்னையை காக்க தமிழகத்தில் இருந்து மீண்டும் புறப்பட்ட அந்த தலைவர். எல்லா வழிகளிலும் தனது போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து, தமிழகத்தின் தலைநகரான சென்னையை மீட்டார். இப்படி தமிழக எல்லை வரலாற்றில் தவிர்க்கவியலாத அந்த தலைவர் ம.பொ.சி என்கிற ம.பொ.சிவஞானம்.

இன்றைய ஆன்ட்ராய்டு தலைமுறைக்கு இந்த அரிய வரலாறு தெரியுமா என்பது தெரியவில்லை. அவரது நினைவுநாள் இன்று.

ma%20po%20si%20left%202.jpgதிருப்பதியும், திருத்தணியும் நம் கைவிட்டுப்போகும் நிலையில் தனது வலுவான போராட்டங்கள் மூலம் அதை முடக்கியவர் ம.பொ.சி. ஆனால் இறுதியாக திருத்தணியை மட்டுமே நம்மால் தக்கவைக்கமுடிந்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும், செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்தபோதிலும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. இப்படி தமிழர்கள் வாழ்வின் நில வளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை காக்க போராடியத் தலைவர் ம.பொ.சி. 'தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்' என சென்னையை காக்கும் போரில் இளைஞர்களை எழுச்சியடைச்செய்தவர் அவர்.

சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில், 1906  ம் ஆண்டு  ஜுன் 26 ம் தேதி பிறந்த ம.பொ.சி. மிகவும் வறுமையான சூழலினால் 3-ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார். இளம்வயதிலேயே நெசவுத் தொழிலில் கூலியாளாக வேலை செய்தார்.  பின்னர் அச்சுக் கோர்க்கும் பணியில் நீண்ட வருடங்கள் பணிபுரிந்தார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே பின்னாளில் ம. பொ. சி. என்று ஆயிற்று.

காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு,  சிறைவாசம் சென்ற ம.பொ.சிக்கு  31 வயதில் திருமணம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் சிறந்த சொற்பொழிவாளராகத் அக்காலத்தில் திகழ்ந்தார். தன் போராட்ட வாழ்வில் எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் கழித்தவர் என்ற சிறப்பு பெற்றவர் ம.பொ.சி.

1946 ம் ஆண்டில், காங்கிரஸில் இருந்தபடியே தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கி தமிழர்கள் வாழ்வுக்கான போராட்டங்களையும் வலுவாக நடத்திவந்தார். காங்கிரஸை எதிர்க்கிறவர்கள் யாரையும் தன்னுடைய எதிரியாக வரித்துக்கொண்டு அரசியல் செய்த ம.பொ.சி, ஒருகட்டத்தில் காங்கிரசின் பாட்டாளி விரோதப் போக்கு மற்றும காந்திய கொள்கைகளை கைகழுவிடும் போக்கினை கண்டு மனம் கசந்தார். அதன் விளைவாகவே தமிழரசு கழகத்தை உருவாக்கி நடத்திவந்தார்.

ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக எந்த தியாகத்தையும் செய்திடும் உறுதிமிக்கவர் ம.பொ.சி. காங்கிரஸ் ஆட்சியில் கள்ளுக்கடை மறியல் நடத்தப்பட்டது.

'மாமன் கடை முன் மறியல்'

கள்ளுத்தொழிலில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுவந்த சமயம் அது. காந்தியின் கொள்கைகளை நெஞ்சில் நிறுத்திக்கொண்டவரான ம.பொ.சி, தன் கொள்கைக்காக வீதிவிதியாக சென்று கள்ளுக்கடைகளின் முன் மறியல் செய்தார். கள்ளுக்கடைகள் மூடப்பட்டால் முதல் ஆபத்து அவரது குடும்பத்தினருக்குத்தான் என்றாலும், தன் கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை அவர்.
உச்சகட்டமாக, கள் தொழிலில் அந்நாளில் பிரபலமாக விளங்கிய அவரது தாய்மாமன் கடைமுன்னேயே மறியல் நிகழ்த்தி, உறவினர்களின் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார்.

ma%20po%20si%20600%205.jpg

1939-ம் ஆண்டு, காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி யின் புகழ்பரப்பும் பணியை செய்தார் ம.பொ.சி.. அவரது வரலாற்றை நுால்களாக எழுதி,  வ.உ.சியின் தியாகங்களை உலகறிய செய்தார் . ம.பொ.சி எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூலை தழுவித்தான் கப்பலோட்டிய தமிழன் என்னும் சிறந்த திரைப்படம் உருவானது என்பார்கள்.

ஒருமுறை வ.உ.சிக்கு சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ம.பொ.சி. நிதி உதவி கேட்டுச் சென்றபோது, கட்சியின் பெரிய மனிதர்கள் நழுவிக்கொண்டது அதிர்ச்சியளித்தது அவருக்கு. எனினும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, அன்றைய ஹாமில்டன் வாராவதி சந்தையில் வசித்த எளிய மனிதர்களிடம் கையேந்தி,  சில தொழிலாளர் சங்கங்களின் உதவியோடு அந்த சிலையை நிறுவினார்.

3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ம.பொ.சி, பின்னாளில் சங்க இலக்கியத்தில் தேர்ந்தவராக விளங்க களம் அமைத்துக்கொடுத்தது சிறைவாசம். தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரம், பாரதியின் படைப்புகள் உள்ளிட்ட இலக்கியங்களை படிக்கப் பயன்படுத்திக்கொண்டார். பாரதியின் மீது தணியாத காதல் கொண்ட ம.பொ.சி, அவரைப்பற்றி படைத்த நுால்கள் திறனாய்வுக்கு ஒப்பானவை.
1950-ல் சென்னை, ராயப்பேட்டை காங்கிரஸ் திடலில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. இதற்கு பெரும்பங்காற்றியவர் ம.பொ.சி. ரா.பி.சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வரதராசனார், காமராஜர் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களையும் மாச்சர்யங்களின்றி  அழைத்து விழாவை நடத்தினார் ம.பொ.சி. அனைத்துக்கட்சி பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட  தமிழ் கலாச்சார விழாவாக அது நடந்தேறியது.

ma%20po%20si%20600%2055.jpg

தனது தமிழரசு கழகம் மூலம், சிலப்பதிகார விழாவை தொடர்ந்து நடத்தினார். ம.பொ.சியின் தமிழ்க்கொடையை பாராட்டி,  பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவருக்கு 'சிலம்புச் செல்வர்' என்னும் பட்டத்தை வழங்கினார்.

பின்னாளில் பல காரணங்களால் அவர் காங்கிரசுடன் முரண்படநேர்ந்தது. ஆகஸ்ட் 8, 1954-ம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார். தமிழரசு கழகம் முன்னைவிட வேகம் பெற்று இயங்கியது.

'நாட் அல்ல நாடு'

அதுவரை 'மெட்ராஸ் ஸ்டேட்' என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்துக்கு, 1968-ம் ஆண்டு தமிழ்நாடு என அழகான பெயர் சூட்டப்பட்டது. இதற்கான தீர்மானத்தை அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றிய முதல்வர் அண்ணாவால் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார் ம.பொ.சி.

அதிகாரம் தந்த கவுரவத்தினால், சென்னை மாகாணத்தை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றும் பெருமையை அண்ணா அடைந்தாலும், அந்த பெயர் மாற்றத்துக்குப் பின்னணியாக இருந்த தலைவர் அவர் என்பதே அண்ணாவின் பாராட்டுக்கு காரணம். அவரின் கடந்த காலபோராட்டங்களால்தான் தமிழ்நாடு என்ற அழகுபெயர் கிடைத்தது நமது மாநிலத்துக்கு.

அதன்பின் சுவாரஸ்யமான சம்பவங்கள் உண்டு. ம.பொ.சி (1967-71 காலகட்டம்)சட்டமன்ற மேலவைத் துணைத் தலைவராக பணியாற்றியபோதுதான் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது. அது தொடர்பான தீர்மானம் சட்டமன்றத்தில் அண்ணா தலைமையில் நிறைவேற்றப்பட  இருந்த சமயம், ஒரு சிக்கல் எழுந்தது. அதாவது வட இந்தியர்களுக்கு ழகர உச்சரிப்பு வராது என்பதால், தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் tamilnad அதாவது 'டமில் நாட்'  என உச்சரிப்புக்கு வசதியாக மாற்ற ராஜாஜி, திமுக அமைச்சரவைக்கு ஆலோசனை தந்தார்.

ma%20po%20si%20600%2066.jpg

இதை ஏற்றுக்கொள்வதாக அண்ணா முடிவெடுத்தபோது ம.பொ.சி அதை எதிர்த்தார். தமிழின் அழகிய ஓசையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல் நாடு என்பது nadu என்றே ஆங்கிலத்தில் இடம்பெறவேண்டும் என வாதிட்டார். ம.பொ.சியின் உறுதியை கண்டு அப்படியே ஏற்றுக்கொண்டார் அண்ணா.

காங்கிரஸ், திமுகவுக்கு அடுத்தபடியாக திரையுலகப்பிரமுகர்கள் பலர் ம.பொ.சியின் தமிழரசு கழகத்தில் உறுப்பினர்களாகவோ அல்லது ஆதரவாளர்களாகவோ இருந்தனர். பழம்பெரும் இயக்குநர் ஏ.பி.என், அவ்வை டி.கே. சண்முகம் பிரபல தயாரிப்பாளர் ஜி.உமாபதி இன்னும்பலர்.

சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1952 முதல் 54 வரையிலும், சட்டமன்ற மேலவைத் தலைவராக 1972 முதல் 1978 வரையிலும் ம.பொ.சி பணியாற்றினார். 1986 நவம்பர் முதல் மூன்று ஆண்டு காலம் தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர்.

மேலவையை மெருகேற்றிய அறிஞர் ம.பொ.சி

1966-ல் ம.பொ.சியின் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 1972-ம் ஆண்டு மத்திய அரசு அவரது பொதுத்தொண்டை பாராட்டி “பத்மஸ்ரீ” விருதினை வழங்கி கவுரவித்தது. இது தவிர சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தினரிடமிருந்து டாக்டர் பட்டம் பெற்றார்.

தமிழக சட்டமன்ற மேலவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி, 1978 முதல் மேலவை கலைக்கப்பட்ட 86 ஆம் ஆண்டுவரை அதன் தலைவராக இருந்தார். அவர் தலைவர் பொறுப்பு வகித்த காலத்தில் மேலவை அறிஞர் பெருமக்களால் சிறப்பு பெற்று இயங்கியது.

ma%20po%20si%20kamarajar.jpg

 
 

 

தமிழ், தமிழர், தமிழகம் என தன் இறுதி மூச்சுவரை தமிழ்த்தொண்டுபுரிந்த ம.பொ.சி 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி இதேநாளில் உடல்நலம் குன்றி தனது 89 வயதில் காலமானார். 2006-ல் அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கியது

“அரசியல்வாதி ஒவ்வொருவருக்கும் முக்கிய தேவை தத்துவஞானம். தத்துவஞானம் இல்லாத அரசியல்வாதி தவறுகள் செய்ய அஞ்சமாட்டார். தத்துவஞானமானது அரசியல்வாதியின் ஆசைகளை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும். ஆசாபங்கம் ஏற்படுகின்றபோது அதனை தாங்கிக் கொண்டு தருமநெறியில் ஊன்றி நிற்கின்ற ஆற்றலை தரும். இதனை என் வாழ்க்கை அனுபவத்திலே நான் கண்டு வருகின்றேன்“ என்று ம.பொ.சி தன் வாழ்க்கை வரலாற்று நுாலில் குறிப்பிட்டார்.

இன்றைய அரசியல் நிகழ்வுகளை ம.பொ.சியின் இந்த வார்த்தைகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது ம.பொ.சி எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி என்பதை உணரமுடிகிறது.

vikatan

  • தொடங்கியவர்

போராளிகள் ஆக வேண்டாம். கொலைகாரர்கள் ஆகாமல் இருப்போம்! #WildLifeWeek

"ஒரு குழி தோண்டி, செடி நட்டு, தண்ணீர் ஊற்றி, அதை வளர்த்து உறுதியான மரமாக்காத வரையில்... நீங்கள் பேசிக் கொண்டு மட்டுமே இருக்கிறீர்கள். வேறெதுவும் செய்யவில்லை..."      - வங்காரி மாத்தாய். 

Untitled.png

 

அது ஏதோ ஒரு காடு... ஏதோ ஒரு ஊர்வன உயிரினம். ஏதோ ஓர் இடத்தில் ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது. அது கருவுற்றிருந்தது... அதன் வயிற்றில் இந்த உலகை வெகு விரைவில் காணும் ஆசையோடு சில கருக்கள் இருந்தன. அது ஒரு கல்லைக் கடந்தது... அடுத்து அங்கு இன்னொரு பொருள் இருந்தது... அது உடைபட்ட கண்ணாடி சில்லுகள் என்பது அதற்கு தெரியாது. அந்தக் கல்லை எப்படி கடந்ததோ... அதே போல் இந்தக் கண்ணாடியையும் கடக்க முற்பட்டது. ஒரு நொடி தான்... அந்தக் கண்ணாடி சில்லு அதன் வயிற்றைக் கிழித்தெறிந்தது... அதன் கரு முட்டைகள் ரத்தத்தில் மிதந்தன. அந்த உயிரின் தலைமுறைத் தொடர்ச்சி அதோடு வேரறுக்கப்பட்டது. அந்தக் கண்ணாடி பாட்டிலை அங்கு உடைத்தது யாரோவாக இருக்க வாய்ப்பில்லை... நிச்சயம் நீங்களோ, நானோ தான்.

இந்த வாரம் " வன உயிரின பாதுகாப்பு " வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்திய வனங்களின் பரப்பளவு சுருக்கப்படுகிறது, காடுகள் அழிக்கப்படுவது குறித்து எத்தனையோ கணக்குகள் இருக்கின்றன. அதை வைத்து தான் வன அழிவை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. குடிக்கும் தண்ணீர் நஞ்சானதில் இருந்து, சுவாசிக்கும் காற்றில் நச்சுத் தன்மை கலந்திருப்பது என, அனுதினமும் இயற்கைக்கு எதிராக நாம் செய்த துரோகத்திற்கான பலனை அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறோம். இந்த வருடம், " வன விலங்குகளுக்காக சேர்ந்து பணிபுரிவோம்" என்ற அடிப்படையில் "வன உயிரின பாதுகாப்பு" வாரம் கொண்டாடப்படுகிறது. 

தமிழகத்தில் 5 தேசியப் பூங்காக்கள், 15 வனவிலங்கு சரணாலயங்கள், 14 பறவைகள் சரணாலயங்கள் இருக்கின்றன. இவையனைத்தும் வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப் பட்டவை. 2013யில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சில சமூக ஆர்வலர்களின் கேள்விக்கு... "இந்தியாவில் தினம் 300க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையம், நீர்த் திட்டங்கள் போன்ற காரணங்களுக்காக அரசு காடுகளை அழிக்கிறது. மேலும், ரெசார்ட்டுகள், பண்ணை வீடுகள் கட்டுவது என பணம்படைத்தோர் தங்கள் பங்கிற்கு காடுகளை அழிக்கின்றனர். 

" காடுகள் அழிவது குறித்து இன்னும் பேசிக் கொண்டே இருப்பதில் ஏதொரு பயனும் இல்லை. இனி தொடர் வேலைகளில் இறங்குவது தான் ஒரே வாய்ப்பு. கணக்கிற்காக மரம் நடுவது... காசிற்காக வனப் பாதுகாப்பில் ஈடுபடுவது போன்று நடிப்பது என அர்த்தமற்ற செயல்கள் ஒரு போதும் நம்மைக் காக்கப் போவதில்லை. நாம் நலமாக வாழ, நம் பிள்ளைகள் நலமாக வாழ வேண்டுமென்றால் வனங்களை மேம்படுத்த முடியாவிட்டாலும் கூட, அதை தொந்தரவு செய்யாமலாவது இருக்க வேண்டும். நம் வனங்களை மீட்க இங்கு எந்தவொரு மீட்பரும் இல்லை. காடுகளைக் காக்கவும், உருவாக்கவும் வல்லமை கொண்ட ஒரே இனம் ஆதிவாசிகள் தான். அவர்களை பல காரணங்கள் சொல்லி காட்டைவிட்டு வெளியேற்றுகிறோம். 10 மரங்களை வெட்டுவதை விட மோசமானது ஓர் பூர்வகுடியை காட்டில் இருந்து வெளியேற்றுவது... தனி மனிதர்கள் திருந்தினால் மட்டுமே மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு" என்று சொல்கிறார் கோவையைச் சேர்ந்த மருத்துவரும், இயற்கை ஆர்வலருமான டாக்டர் டால்ஸ்டாய். 

காடுகளைக் காக்கும் போராளிகளாக மாறாவிட்டாலும் பரவாயில்லை, வனங்களை ரணமாக்கும் "கொலைகாரர்களாக" மாறாமல் இருக்க இந்த "வன உயிரின பாதுகாப்பு" வாரத்தில் உறுதி கொள்வோம்.      

vikatan

  • தொடங்கியவர்

 

ரோபோவின் அசாத்திய திறமை (காணொளி)

  • தொடங்கியவர்

நீதிக்கதை!

ஒரு வைத்தியரும் அவருடைய உதவியாளரும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர். குரு என்ன தேடுகிறார் என்று சீடனுக்கு தெரியாது! குருவும் சொன்னதில்லை!

சீடனின் வேலை அலைந்து திரிந்து வரும் குருவுக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை!

ஒருநாள் குரு வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே சீடனை காணவில்லை. மாறாக இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். குருவை பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து சேவித்தான். குருவுக்கு ஒன்றும் புரியவில்லை. யாரப்பா நீ என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன் குருவே நான்தான் உங்கள் சீடன். என்றான். குருவுக்கு மிகவும் குழப்பம்.

என்ன நடந்தது என்று கேட்க சீடன் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்

" குருவே! உங்களுக்காக கூழ் காய்த்து கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது. அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன் குருவே. நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன். குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளைஞனாகிவிட்டேன்" என்றான்.
குரு பதறி அடித்துபோய் " எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் " என்று கேட்க அதற்கு அந்த சீடன் "அதை தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? " என்றான். குரு நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்!

நீதி 1. (corporate moral): inform your team mates what you really looking far!

நீதி 2. (தத்துவம்) கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது : கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது!

நீதி 3. (யதார்த்தம்) பெரும்பாலும் பயன் தெரியாதவர்களிடம் தான் சில விஷயங்கள் அகப்பட்டுக்கொள்கின்றன! அவர்கள் பலனடைந்தாலும் அடுத்தவர்கள் பலனடைய விடாமல் செய்து விடுகிறார்கள்!

(Whatsapp fowarded)

Kein automatischer Alternativtext verfügbar.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை முன்பு எங்கோ படித்திருக்கின்றேன், அதில் கடைசியில் அந்தக் குரு உடனே தன் சீடனுக்கு சத்தி எடுக்க மருந்து குடுத்து அதைத்தானே குடித்து விடுகின்றார், அதனால் இப்போது குருவும் சீடனும்கூட இளமை அடைந்தனர்...!

  • தொடங்கியவர்

பாய் ஃப்ரெண்டுக்கு ஒரு தோழியின் கடிதம்! #HappyBoyFriendDay

இன்று ஆண் நண்பர்கள் தினம். இதைப் பற்றி பாய் ஃப்ரெண்டுக்கு என்ன சொல்ல... அவனுக்கு இதுவும் மற்றுமொரு நாளே. ஆனால், மற்ற சிலருக்குச் சொல்ல பல விஷயங்கள் இருக்கின்றன!
 

frnd1.png

 

'பாய்ஃப்ரெண்ட்' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், ’அட...லவ்வர்தானே!’ என்றுதானே பலரின் மனம் நினைக்கும். ரத்த சொந்தங்களிடம் கூட இல்லாத ஒரு பிணைப்பு, நண்பர்களிடம் என்றுமே உண்டு. அது எதிர்பாலினத்து நட்பு என்றால், இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும். அதுதான் இயற்கை. அதை கொண்டாடுவது அவசியம். ஆனால், அதைக் கையாளும் பக்குவம்... அதைவிட அவசியம். 

'ஆட்டோகிராஃப்' படத்தில் சிநேகா சேரனிடம், ''எல்லார் போலவும் சராசரி உறவு அமைச்சுக்க விரும்பல. நீ எனக்கு ஒரு நண்பனா, என்னோட எல்லா சுக, துக்கத்துக்கும் தோள் கொடுத்து, என்னோட எல்லா உணர்வுகளையும் பகிர்ந்துக்க, என்னோட கடைசி மூச்சு இருக்க வரைக்கும், என் கூடவே வரப்போற ஒரே ஒரு நண்பாக நீ வேணும்'' என்பார். இதுபோன்ற நட்புகள் இன்று நம்மைச் சுற்றி நிறையவே இருக்கின்றன. ஆனால், நாம் கடந்து வந்திருக்கும் எத்தனையோ கசப்பான சம்பவங்கள் ஆண்-பெண் நட்பைப் பற்றி நமக்கு நம்பிக்கை குறைத்திருக்கும். நட்பு என்பது பின்னாளில் தோன்றப்போகும் காதலுக்கான அஸ்திவாரமாகத்தான் பல திரைப்படங்களிலும் காட்டப்படுகிறது. ‘பிரியாத வரம் வேண்டும்’ திரைப்பட ஷாலினி, பிரசாந்த் நட்பு போல. இருந்தாலும், எப்போதும் நண்பர்கள், நண்பர்கள் மட்டுமே என்று சொல்லும் 'பிரியமான தோழி' பட மாதவன், ஸ்ரீதேவி ரக நட்பும் திரையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை மறந்துவிட முடியுமா?
    
ஒரு பெண்ணால், சக தோழியிடம் பகிர முடியாத விஷயங்களைக்கூட, தன் ஆண் நண்பனிடம் சுலபமாகப் பகிர முடியும். ஒரு பெண்ணுக்கு பல தோழிகள் இருந்தாலும், ஓர் ஆண் நண்பன் இருக்கும்போது, அவள் சமூகத்தை கூடுதல் தைரியத்துடன் எதிர்கொள்வாள். 

frnd4.jpg



அவள் தான் படித்ததை, பார்த்ததை, கேட்டதை, நினைத்ததை ஆண் நண்பனிடம் மணிக்கணக்கில் பகிர்ந்துகொள்வாள். 'என் நண்பன் இருக்கான்' என்ற எண்ணம் போதும், எத்தனை சவால்களையும், துணிச்சலான முடிகளையும் அவளால் எடுக்க முடியும்.

தன் மீதான நம்பிக்கை குறையும்போது எல்லாம், நண்பனின் வார்த்தைகள்தான் அவளுக்கு எனர்ஜி டானிக். ஆண்மயமானச் சமூகத்தை எப்படி எதிர்க்கொள்வது என ஓர் ஆண் நண்பனைவிட வேறு யாரால் சிறப்பாக சொல்லிக் கொடுத்துவிட முடியும்! 

வீட்டிலோ, அலுவலகத்திலோ சில சம்பவங்களால் பயங்கர டென்ஷன். அப்போதைக்கு யாரிடமாவது புலம்ப வேண்டும், கோபப்படத் தோணும். காதலனிடம் அதிகபட்சம் சில முறைகள் மட்டுமே அந்த விஷயத்தைப் பற்றி புலம்ப முடியும். அதன் பின், ’வீட்ல ஸ்ட்ரிக்ட்டா சொல்லிரு... இனி இது பத்தி பேசாதே’ என்றோ, ‘ஏன் இவ்ளோ டென்ஷனா வொர்க் பண்ற.. அந்த வேலையை விட்டுரு. வேற வேலை தேடு’ என்றோ... அந்தப் பிரச்னைக்கான தீர்வுகளை அன்பாகவோ அதிகாரமாகவோ சொல்லுவான். ஆனால், ஆண் நண்பனிடம் அப்படி இல்லை. மணிக்கணக்கில் அவனிடம் புலம்ப முடியும். புலம்பலை பொறுமையாகக் கேட்டுவிட்டு, பிரச்சனையைச் சமாளிக்க ரூட் போட்டுக் கொடுத்துவிட்டு... பின் அதற்கு ட்ரீட்டும் கேட்பான். அதோடு விடுவானா... ’இனி ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எல்லாத்துக்கும் லைக் போடனும்’ என்று சத்தியம் வாங்கிக் கொண்டு, அப்படிப் போடாவிட்டால் பஞ்சாயத்தும் கூட்டுவான். இப்படியெல்லாம் நம் டென்ஷனைக் குறைக்க நண்பனால் மட்டுமே முடியும்.

frnd3.jpg

 


காதலனிடம் நல்ல பிள்ளை வேஷம் எவ்வளவு வேண்டுமானும் போடலாம். ஆனால், நண்பனோ ‘ஹே... ச்சீ.. சீன் போடாத‘ என்று ஒரு வார்த்தையில் நம்மை ஆஃப் செய்து இயல்புக்கு கொண்டு வந்து, கம்ஃபர்ட் ஸோனில் வைத்திருப்பான். காதலனைப் பார்க்கப் போகும்போது அவ்வளவு மேக்-அப் போடுவார்கள். அந்தப் பசங்களும் அதுக்கு வெரிகுட், லைக்ஸ் போட வேண்டும். ஆனால், நண்பனைப் பார்க்க அப்படியா போவோம்? மிக கேஸூவலாக செல்வோம். ஒருவேளை மேக்-அப்புடன் சென்றாலும், அவன் கேஸுவலாக அதை கமென்ட் அடித்து காலி செய்துவிடுவான்.

காதலனிடம் கூட சொல்ல முடியாத பல விசயங்களை ஆண் நண்பர்களிடம்தானே பகிர முடியும். காதலனிடம் பேசும்போது இருவருக்கும் பிடித்த பொதுவான விஷயங்களைத்தான் மணிக்கணக்கில் பேச முடியும். ஆனால், நண்பனிடம் பெரும்பாலும் நமக்குப் பிடித்த விஷயங்கள், அவனுக்குப் பிடிக்காதவையாக இருந்தாலும் அதை வலுக்கட்டாயமாக கேட்க வைத்து, சண்டை போட்டு ஆர்பாட்டம் செய்ய முடியும்.

காதலனிடம் எப்போதும் ஒரு செல்லம், பிரியம் இருக்கும். சமயங்களில் நாம் கோபத்தில் சீறினால், அந்தச் செல்லம் ஆடிப்போகும். ஆனால் நண்பனிடம் அதீத கோபம் காட்டிய பின்னும், ‘ஸாரி நட்பே..’ என்ற ஒரு வார்த்தை போதும். அதே தோழமை தொற்றிக் கொள்ளும். ஆண் நண்பனின் நட்பு 'காதல்' செய்யாது. ஆனால் 'அன்பு' செய்யும். அதற்கு கசப்பு தெரியாது, காழ்ப்பு கிடையாது.
 
இந்த நட்பில் கோபம், சண்டைக்கு எல்லாம் குறைவு இருக்காது. பொசஸிவ்னெஸும் அதிகமாகவே இருக்கும். எதிர்பாலின நட்பில் அதுதான் சுவாரஸ்யமே. உடனே, ’நட்பு புனிதம்... அது மனதுக்குள் இருக்கும் மனிதம்... அதைச் செய்யாதீர்கள் அசுத்தம்’ என்றெல்லாம் பொங்கிப் பொரும வேண்டாம். பெண்ணுக்கும் ஆணுக்குமான நட்பு இயல்பானது, அழகானது, உண்மையானது. அந்தளவுக்கான புரிதல் போதும். இனிமேலாவது பாய் ஃபிரெண்டையும், காதலனையும் ஒரே கோட்டில் கொண்டுவராதீர்கள். ’பாய் ஃப்ரெண்ட் இருக்கா...?’ என்றோ, ‘எத்தனை பாய் ஃப்ரெண்ட்?’ என்றோ எந்தப் பெண்ணிடமும் கிண்டலாகக் கேட்காதீர்கள்.

நட்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்பவர்களைத் தவிர்த்துவிடுவோம். வாழ்க்கையின் சந்தோஷ தருணங்களில் இல்லாவிட்டாலும், துன்பங்களின் போது நமக்கு தோள் கொடுக்கும், நமது கவலைகளுக்கு காது கொடுக்கும்... ஒரு நண்பன் வாய்ப்பது வரம்.

ஆண் நண்பர்களிடம் பெண்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பெல்லாம் அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வல்ல. அதைக் காது கொடுத்துக் கேட்கும் பொறுமை மட்டுமே. பகிரும் சந்தோஷம் இரட்டிப்பாகும். பகிரும் வருத்தம் சரிபாதியாகும். இதைத்தான் ஆண் நண்பர்களிடம் கேட்கிறோம். இதைத்தான் சில நண்பர்களுக்கும் எங்களுக்குத் தருகிறார்கள்.

frnd2.png


 
இது இயல்பு. இதை சிலர் சீண்டும்போதுதான், அறிவுமதியின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. 

vikatan

  • தொடங்கியவர்

தினுசு தினுசா விளையாட்டு: கிச்சு கிச்சு தாம்பூலம்!

 

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி

குழந்தைகளே! “விளையாடலாம் வாங்க” என்று சொன்னவுடனே உற்சாகமாகியிருப்பீர்கள் இல்லையா? உங்க வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பாவிடம், அவர்கள் சின்ன வயதில் விளையாடிய விளையாட்டுகளைப் பத்தி கேட்டீர்களா? நிச்சயம் கேட்டிருப்பீர்கள். சரி, இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டின் பெயர் ‘கிச்சு கிச்சு தாம்பூலம்’.

எப்படி விளையாடுவது?

இந்த விளையாட்டை விளையாட இரண்டு பேர் போதும். விளையாடப் போற இரண்டு பேரும் எதிரெதிரே உட்கார வேண்டும். அவர்களின் முன்பக்கத்தில் ஒரு அடி அல்லது ஒண்ணே கால் அடி நீளத்துக்கு மணலை நீளவாக்கில் குவித்து வைக்க வேண்டும். இருவரில் யாராவது ஒருவர், கையிலே இரண்டு இஞ்ச் நீளமுள்ள சிறிய குச்சி ஒன்றௌ எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘கிச்சு கிச்சு தாம்பூலம்…

கிய்ய கிய்ய தாம்பூலம்..

கிச்சு கிச்சு தாம்பூலம்…

கிய்ய கிய்ய தாம்பூலம்..!’

அப்படின்னு திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே, வலது கையின் கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலின் நுனியில் பிடித்திருக்கும் குச்சியை, இடது கையாலே மறைந்துக்கொண்டு, எதிரே குவித்திருக்கும் மணலுக்குள்ளே மறைத்து வைக்க வேண்டும்.

அதுவும் எப்படித் தெரியுமா? டக்கென ஓர் இடத்தில மறைத்து வைக்கக் கூடாது. குச்சியை அப்படியே மண்ணுக்குள் முன்னும் பின்னும் கொண்டுசெல்வது போல பாவனை காட்டிக்கொண்டே, ஏதாவது ஓர் இடத்தில் வெளியே தெரியாதபடி மறைத்து வைக்க வேண்டும்.

kichu_kichu_3026002a.jpg

இப்போது, எதிரில் உட்கார்ந்திருக்கும் இன்னொருவர், அந்தக் குச்சி எங்கே ஒளிந்திருக்கிறது என ஊகம் செய்ய வேண்டும். வலது கை, இடது கை விரல்களை பின்னியபடி, சரியா அந்தக் குச்சி இருக்கும் மணல் குவியல் மேல கையை வைத்து மூடிக்கொள்ள வேண்டும்.

கையை வைத்து மூடிய இடத்தில் அந்தக் குச்சி இல்லை என்றால், மீண்டும் அந்தக் குச்சியை வைத்தவரே திரும்ப எடுத்து, மறுபடியும் விளையாட வேண்டும். கைகளை வைத்த இடத்தில் குச்சி இருந்தால், விளையாடியவர் ‘அவுட்’. அதாவது மாட்டிக்கொண்டார் என்று அர்த்தம்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்? ம்…, கொஞ்சம் பொறுங்களேன் சொல்கிறேன்.

யார் குச்சியை மறைத்து வைத்து ‘அவுட்’ஆக்கினாரோ, அவர்களின் இரண்டு கையையும் சேர்த்து முன்னாடி நீட்டச் சொல்லி, அந்தக் கைகளில் மண்ணைக் குவிக்க வேண்டும். அதன் நடுவில் அந்தக் குச்சியைச் செருக வேண்டும்.

அப்புறம், அவர்களின் கண்ணைப் பொத்திக் கூட்டிக்கொண்டு போய், எங்கேயாவது ஒரு மூலையிலே, ரகசியமான இடத்தில் மண்ணோடு குச்சியையும் சேர்த்து அப்படியே குமித்து வைக்க வேண்டும். கண்களைத் திறக்காமல் மீண்டும் பழைய இடத்துக்கே அவர்களை கூட்டி வந்துவிட வேண்டும். பிறகு, கண்களைத் திறந்துவிட்டு, “இப்ப அந்தக் குச்சி எங்கேயிருக்கு? கண்டுபிடி பார்ப்போம்?” என்று சொல்ல வேண்டும்.

குச்சியை வைத்த இடத்தைச் சரியாக அவர் கண்டுபிடித்தால், இன்னொருவர் மணலில் குச்சியை மறைத்து வைத்து மீண்டும் இந்த விளையாட்டைத் தொடரலாம்.

‘கிச்சு கிச்சு தாம்பூலம்..!’

அட! இப்பவே எல்லாரும் விளையாட தயாராகிவிட்டீர்களா?

(இன்னும் விளையாடலாம்)

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஒக்டோபர் - 05

 

1582 :  கிற­கோ­ரியின் நாட்­காட்டி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து இத்­தாலி, போலந்து, போர்த்­துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடு­களில் 1582 ஆம் ஆண்டில் ஒக்­டோபர் 5 ஆம் திகதி இல்­லாமல் போனது.

 

1789 : பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதி­னாறாம் லூயி மன்­ன­னுக்கு எதி­ராக வேர்சாய் அரண்­மனை நோக்கி அணி­தி­ரண்டு சென்­றனர்.

 

821varalaru.jpg1793 : பிரெஞ்சுப் புரட்சி: பிரான்ஸில் கிறிஸ்­தவ மதம்  தடை­செய்­யப்­பட்­டது.

 

1795 : இலங்­கையின் மன்னார் பிராந்­தி­யத்தில் ஒல்­லாந்­தர்கள் சர­ண­டைந்­த­தை­ய­டுத்து அப்­பி­ராந்­தி­யத்தை ஆங்­கி­லேயர் கைப்­பற்­றினர்.

 

1799 : கைது­செய்­யப்­பட்ட வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மனை ஆங்­கி­லே­யர்கள் கயத்­தாறு சிறை­யி­ல­டைத்­தனர்.

 

1864 : இந்­தி­யாவின் கொல்­கத்தா நக­ரத்தில் இடம்­பெற்ற சூறா­வளி நகரை முற்­றாக சேதப்­ப­டுத்­தி­யது. 60,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1905 : வில்பர் ரைட் 24 மைல்­களை 39 நிமி­டங்­களில் விமா­னத்தில் பறந்து சாதனை படைத்தார். 1908 ஆம் ஆண்­டு­வரை இச்­சா­தனை நீடித்­தது.

 

1910 : போர்த்­துக்­கலில் அர­சாட்சி முடி­வுக்கு வந்து, அது குடி­ய­ரசு நாடா­கி­யது.

 

1915 : முதலாம் உலகப் போர்: பல்­கே­ரியா போரில் இறங்­கி­யது.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: ஜேர்­ம­னியின் ஜெட் விமானம் ஒன்றை முதற் தட­வை­யாக கனே­டிய விமானப் படை­யினர் பிரான்ஸில் சுட்டு வீழ்த்­தினர்.

 

1944 : பிரான்ஸில் பெண்கள் வாக்­க­ளிக்க அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டனர்.

 

1948 : துர்க்­மே­னிஸ்தான் தலை­நகர் அஷ்­க­பாத்தல் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால்110,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1962 : முத­லா­வது ஜேம்ஸ் பொண்ட் திரைப்­ப­ட­மான 'டொக்டர் நோ' பிரிட்­டனில் வெளி­வந்­தது.

 

1974 : இங்­கி­லாந்தில் ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணு­வத்­தினர் மது­பான சாலை ஒன்றில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்­ததில் 5 பேர் கொல்­லப்­பட்­டனர். 65 பேர் காய­ம­டைந்­தனர்.

 

1978 :  ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் இலங்கைப் பிர­தி­நி­தி­யான அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் உரை­யாற்­று­வ­தற்கு முன் இலங்கைச் சட்­டத்­த­ர­ணி­யான கிருஷ்ணா வைகுந்­த­வாசன் திடீ­ரென உரை­யாற்ற ஆரம்­பித்து, இலங்கைத் தமி­ழர்­களின் பிரச்­சினை குறித்து கூறி­ய­துடன், தமி­ழீழ தேசத்தை­ தனி­நா­டாக அங்­கீ­க­ரிக்­கு­மாறு கூறி பர­பரப்பை ஏற்­ப­டுத்­தினார்.

 

1987 : விடு­தலைப் புலி­களின் சிரேஷ்ட தலை­வர்கள் 12 பேர் இந்­தியப் படையின் காவலில் இருக்­கும்­போது நஞ்­ச­ருந்தி மர­ண­மா­னார்கள்.

 

1991 : இந்­தோ­னே­ஷி­யாவின் இரா­ணுவ விமானம் ஒன்று ஜகார்த்­தாவில் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 137 பேர் கொல்லப்பட்டனர்.

 

1999 : மேற்கு லண்டனில் இடம்பெற்ற ரயில்  விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

 

2000 : யூகோஸ்லாவிய ஜனாதிபதி மிலோசேவிச்சுக்கு எதிராக தலைநகர் பெல்கிரேட்டில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

  • தொடங்கியவர்

ஈஃபில் டவரும் 11 சிதம்பர ரகசியங்களும்!

eiffel-tower-wallpaper-vintage.jpg


ஈஃபில் டவர். போன வருஷம் (2015) 70 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்ட உலக அதிசயங்கள்ல ஒன்னு. வருஷாவருஷம் அதிக சுற்றுலா பயணிகள் பார்க்குற டாப் 5 உலக சுற்றுலா ஸ்பாட்கள்ல கண்டிப்பா ஒரு இடம் ஈஃபில் டவருக்கு பார்சல் சொல்லிடலாம். அத பத்தின 11 சிதம்பர ரகசியங்கள் பாருங்களேன்.

 

1. டவர் பிளான் பார்சிலோனாவுக்கு, தப்பி வந்தது பாரிஸுக்கு :
ஆக்ச்சுவலி.... இந்த டவர ஸ்பெயின் நாட்டுல இருக்குற பார்சிலோனா நகரத்துல கட்ட, அந்த நாட்டு அரசாங்கத்துகிட்ட பிளான் காட்டப்பட்டது. இங்க இப்ப டவரும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் நீ கெளம்புன்னு சொல்லிட்டாய்ங்க. பிளான தூக்கிக்கிட்டு நேரா பாரிஸுக்கு வந்துட்டாரு. 
போச்சா சோன முத்தா....! 

collage.jpg


2. பேர மாத்துனா தான் பிளான ஏத்துக்குவேன் :
பிளானோட பிரான்ஸ் அரசாங்க அதிகாரிகள பாக்க போனார் கஸ்டவ் போனிக்ஹாவ்ஸ் (கஷ்டமா இருக்குள்ள) GUSTAVE Bönickhause. யாரப்பா நீ...ன்னு கேட்ட உடனே அவர் தன் பேர சொன்னாரு. என்ன பேருடா இது. மொதல்ல பேர மாத்து அப்புறமா பிளான பாக்கலாம்னு சொல்லிட்டாங்க பிரான்ஸ்காரங்க. நம்ம கஸ்டவ் போனிக்ஹாவ்ஸ் அந்த நொடியில் இருந்து தான் கஸ்டவ் ஈஃபில் ஆனார். 


அப்புறம் என்ன... நல்ல நாள் பாத்து, பந்தக்கால் நட்டு, அடிக்கல் நாட்டி டவர டக்கரா கட்ட ஆரம்பிச்சிட்டாரு நம்ம இன்ஜினீயர் கஸ்டவ். கடசீல அவர் பேரயே டவருக்கும் வெச்சுட்டாய்ங்க... பிரான்ஸ் பயபுள்ளங்க. அப்பவே நியூமராலஜி வொர்க் அவுட் ஆகி இருக்கு கைய்ஸ்.
(சார் எங்க அப்பா ஊர்லேர்ந்து வந்தா சாமுன்னு கூப்பிடலாம்ல.)

3. டவரு 20 வருஷம் தாங்கணும் தம்பி :
1889-ல பிரெஞ்சுப் புரட்சியோடு 100-ஆம் ஆண்டு நினைவுக்காக எக்ஸ்போ பாரிஸ் 1889ன்னு ஒரு கண்காட்சிய நடத்த பிளான் பண்ணி இருந்த பிரான்ஸ் கிட்ட தான், நம் கஸ்டவ் கஸ்டப்பட்டு அப்பாயின்ட்மென்ட் வாங்கி, டவர கட்ட பர்மிஷன் வாங்குனாரு.
" தம்பி, கஸ்டவ், டவர் 20 வருஷம் ஸ்டராங்கா இருக்குற மாதிரி கட்டுப்பா " ன்னு சொன்னாங்க. சரி 20 வருஷத்துக்கு அப்புறம் எடைக்கு போட்டு பேரீச்சம் பழம் வாங்கிருவாங்கன்னு தான் கட்டுனாரு. 

maxresdefault.jpg


4. ஈஃபில் டவர் 2 டிவி டவர் : 
1900 வாக்குல பிரான்ஸ் நேவிகாரங்க, டவர் சும்மா தான இருக்குன்னு, அதுல ரேடியோ ஆன்டனாவ ஃபிட் பண்ணிட்டாங்க. அன்னைல இருந்துதான் டவர பேரீச்சம்பழத்துக்கு போட வேண்டாம்னு பிரான்ஸ் முடிவு பண்ணுச்சு. 1940 - 44 (உலகப் போர் 2) பீரியட்ல ஜெர்மனியோட சில டிவி சேனல்கள கூட இந்த ஈஃபில் டவர் மூலமா  ஒளிபரப்புனாங்கன்னா பாத்துக்கங்களேன்.


5. உலகத்துலேயே உயரமான டவர் :
பாஸ் கத உடாதீங்க உலகத்துலேயே உயரமான டவர் & பில்டிங் புர்ஜ் கலீஃபா தான்...னு சொல்றீங்களா? பொறுங்க பாஸ், 1889 - 1930 வர நம்ம கஸ்டவ் 300 மீட்டர் உயரத்துக்கு கட்டுன இந்த ஈஃபில் டவர் தான் "உலகின் மிக உயரமான டவர் ". அதுக்கு அப்புறம் அமெரிக்காவோட க்ரிஸ்லர் பில்டிங் (Chrysler Building) இந்த பட்டத்தை பறிச்சிக்கிட்டு போச்சு. 


6. 72 அடி ஆண்டனா :
இந்த டைட்டில் வாருக்கு அப்புறம் 1957-ல டிவி ஆண்டனா வெச்சு   ஈஃபில் டவரோட உயரத்த மொதல்ல 18.7 மீட்டர் அதிகப்படுத்துனாங்க. லேட்டஸ்டா 2000-ஆம் வருஷத்துல திரும்ப டிவி சிக்னல் டவர வைக்கிறேன்னு 5.3 மீட்டர் அதிகப்படுத்திட்டாங்க. ஸோ இப்புடித்தான் 300 மீட்டர் உயரமா இருந்த டவர 324 மீட்டரா உயர்த்துனாங்க. இதுல வேடிக்கை என்ன தெரியுமா, இப்போ ஈஃபில் டவர் வெறும் டவர் தான். 08 மார்ச் 2011-ல இருந்து ஈஃபில் ட்வர்ல இருக்குற ஆண்டனாவெல்லாம் எடுத்துட்டாங்க.
 

7. சம்மர்ல சீறும் ஈஃபில் டவர் :
அதெப்புடிப்பா...? வெயில்ல இரும்பு விரிவடையும் தான. அதே தான் இங்கேயும். சம்மர்ல சுர்ர்ர்ர்ருன்னு அடிக்கிற வெயில்ல 18 - 20 சென்டி மீட்டர் விரிவடையும், வின்டர்ல அந்த 18 - 20 சென்டிமீட்டர் சுருங்கிடும். இதையே சென்னைல கட்டியிருந்தா இதான் உலகின் உயரமான பில்டிங்குன்னு ஆயிருக்கும்..


8.  ஐஸ் ஸ்கேட்டிங் அரேஞ்மென்ட் :
2005-ஆம் ஆண்டுலேர்ந்து, ஈஃபில் டவரோட முதல் தளத்துல செயற்கையா ஐஸ் ஸ்கேட்டிங் செய்ய ஏற்பாடு பண்ணி இருக்காங்க பாஸ். வர்ற டூரிஸ்ட் வாஞ்சையோட ஸ்கேட் செய்யுறத பாருங்கப்பூ

Patinoire_Tour_Eiffel_-_Ice_skating_rink

9. டவர்ல விளம்பரம் :
"சிட்ரோன்"-ன்னு ஒரு கார் கம்பெனி. இந்த கம்பெனிகாரங்க மூக்கு பொடப்பா இருந்ததால சும்மா இருக்குற இந்த ஈஃபில் டவர்ல நம்ம கம்பெனி பேர நியான் லைட்டா வெச்சு  எரியவிட்டா என்ன-ன்னு யோசிக்க, அத பிராக்டிக்கலாவும் செஞ்சிட்டாங்க. இப்படி சிட்ரோன் கம்பெனி 1925 - 1934 வரை விளம்பரம் பண்ணாங்க. அன்னைய தேதிக்கு இந்த CITROEN ங்குற நியான் வெளக்கு தான் உலகத்துலேயே பெரிய நியான் சைன் போர்டு.

citroen-eiffel-tower.jpg


10. ஃபோட்டொ புடிச்சா, ஜெயில்ல போடுவேன் :
ஈஃபில் டவரோட அழகே, அத ராத்திரியில பாக்குறது தான். ஸோ, யாராவது ஈஃபில் டவரை போட்டோ பிடிச்சி பப்ளிஷ் பண்ணீங்கன்னா, ஜெயில் போட்டுடுவேன்னு பிரான்ஸ் மிராட்டுனாங்க. கொஞ்ச நாளைக்கு பயந்த மாதிரி நடிச்சுட்டு, அப்புறம் ஃபோட்டோக்களை அள்ளி அள்ளி அப்லோடு பண்ண ஆரம்பிச்சாங்க நம்ம நெட்டிசன்ஸ். நாள பின்ன, பிரான்ஸ் கவர்மென்ட்டும், கண்டுக்காம விட்டுடுச்சு. 


11. கலர் காம்பினேஷன் :
1968-ஆம் ஆண்டு தான் ரெட்டிஷ் பிரெளன் கலர்ல இருந்த டவர இப்ப இருக்குற ஈஃபில் டவர் பிரெளனுக்கு மாத்துனாங்க. டவரோட கீழ் பகுதிகள்ள டார்க் கலர்ல பெயின்ட் பண்ணாங்க.  டவரோட உச்சத்துக்கு போக போக அதே ஈஃபில் டவர் பிரெளனோட லைட் கலர் வேரியன்டகளை அடிப்பாங்க. அதனால தான் ஈஃபில் டவர் பாரிஸ் நகரத்தோட வானத்துக்கு தகுந்தா மாதிரி அழகா இருக்கு. 7 வருஷத்துக்கு ஒரு முறை 50 - 60 டன் பெயின்ட் அடிக்கிறாங்களாம். கலக்குற சந்துரு

vikatan

  • தொடங்கியவர்

15 நொடி மின்சாரம்…2 கி.மீ பயணம்…அசத்தும் பேருந்து..!

BUS_1.jpg

லைப்பைப் பார்த்தவுடன் ஏதோ ரியல் எஸ்டேட் கம்பெனி சொல்லும் வாக்குறுதி என்று நினைத்துவிடாதீர்கள். இது முற்றிலும் உண்மை. ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பேருந்து சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய நண்பனாய் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனிவா போக்குவரத்துக்கழகம், ஜெனிவா மின்சார வாரியம் மற்றும் தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள இப்பேருந்தை 15 நொடிகள் சார்ஜ் செய்தால் போதும். இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்கும். பேருந்தின் மேற்கூரையில் சார்ஜ் செய்ய உதவும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

‘ஃபிளாஷ் சார்ஜ்’ தொழில்நுட்பம் மூலம் சார்ஜ் ஆகும் இப்பேருந்தின் பேட்டரியில், பயணிகள் பேருந்தில் ஏறியதும் சார்ஜ் ஏற்றப்படும். அந்த 15 நொடியிலேயே 600 கிலோவாட் பவர் உருவாக்கப்படும். அதைக்கொண்டு சுமார் 130 பயணிகளோடு அந்தப் பேருந்தால் 2 கிலோமீட்டர் தூரம் பயணிக்க முடியும். அதன்பிறகு பேருந்து நிறுத்தத்தில் முழுதும் சார்ஜ் செய்யப்படும். அதற்கு 4-5 நிமிடங்கள் வரை ஆகுமாம்.

எந்த ஒரு புகையையும் கக்காத இப்பேருந்து சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய வரமாக அமைந்துள்ளது. ஜெனீவாவிலுள்ள பேருந்துகள், ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கிறதாம். அந்த டீசல் பேருந்துகள் மட்டும் TOSA எனப்படும் இவ்வகை பேருந்துகளாக மாற்றப்பட்டால் ஆயிரம் டன் வரை கார்பன் டை ஆக்சைடு வாயுவின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர்.

BUS_2.jpg

2018-ம் ஆண்டு இப்பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்போது, விமான நிலையத்தை பிற நகரங்களோடு இணைக்கும் 23-வது சாலையில் இயக்கப்படுமாம். நாள் ஒன்றுக்கு 10,000 பயணிகள் இந்தப் பேருந்தை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    
இந்த மின்சாரப் பேருந்துகள் சுவிட்சர்லாந்தைவிட இந்தியாவுக்குத்தான் மிகப்பெரிய வரமாய் அமையும். ஆம். நம் நாட்டில் மட்டும் 1,50,000 டீசல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் வெளியேறும் 95 சதவிகித ‘கிரீன் ஹவுஸ்’ வாயுக்கள் சாலைப் போக்குவரத்தால் வெளியேற்றப்படுபவை. ஒரு டீசல் பேருந்துக்குப் பதிலாக மின்சாரப் பேருந்தைப் பயன்படுத்துவதால் ஆண்டொன்றிற்கு 25 டன் கார்பன்டை ஆக்சைடு வாயுவைக் கட்டுப்படுத்த முடியும். மொத்த டீசல் பேருந்துகளுக்குப் பதிலாகவும் மின்சாரப் பேருந்துகளையே பயன்படுத்தினால் ஒரு வருடத்தில் சுமார் 37 லட்சம் டன் கார்பன்டை ஆக்சைடு வாயுவை கட்டுப்படுத்த முடியுமாம்.

பாரீஸ் காலநிலை மாநாட்டில், ‘கிரீன் ஹவுஸ்’ வாயுக்களின் வெளியேற்றத்தை 33 சதவிகிதம் வரை கட்டுப்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கும் நம் நாட்டிற்கு இப்பேருந்துகள் மூலம் நல்ல வழி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடியின் ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கும் இதுவொரு மிகப்பெரிய ஊக்கமாய் அமையும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் இந்த வகைப் பேருந்துகள், போக்குவரத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vikatan

  • தொடங்கியவர்

பாரதியின் உத்வேக வார்த்தைகள்! #MorningMotivation

mahakavi_1x.jpg

புதிய ஆத்திச்சூடியில் மகாகவி பாரதி சொல்லும் உத்வேக வார்த்தைகள் இவை.. காலையை உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் தொடங்குங்கள்.

1. புதியன விரும்பு :
        நாம் எல்லோருடைய மனதிலுமே ஆழமாக பதிய வைக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயம் 'விதிகளை மீறக்கூடாது' போக்குவரத்திலும் அறம் சார்ந்த விஷயங்களிலும் விதிகளை மீறக்கூடாது என்பது சரிதான். ஆனால் எல்லா இடங்களிலும் யாரோ ஒருவரால் கட்டமைக்கப்பட்டிருக்கும் சக்ஸஸ் ஃபார்முலா என சொல்லப்படுபவைகளைத் தானே தினம் தினம் கடை பிடிக்கிறோம். இந்த வழக்கத்துக்கு ஒரு சின்ன புள்ளி வைப்போம். உங்கள் ஒவ்வொரு நாளையும் புதுமையான விஷயங்களோடு தொடங்குங்கள். ஒரு வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பது போன்ற பழமையான கருத்துகளை உடைத்தெறிந்து விட்டுப் புது புதுக் கோணங்களில் அணுகும்பொழுது உங்கள் வெற்றிகளை தீர்மானிப்பது நீங்களாக இருப்பீர்கள். எளிதாக சொல்ல வேண்டுமானால் நம்ம சக்ஸஸ் ஃபார்முலாவை நாம தான் எழுதுவோம்.

2. செய்வது துணிந்து செய் :
       ஒரு செயலை செய்யத் துவங்கும் முன் நிறைய யோசிப்பீர்களா? யோசிக்கலாம் தவறேயில்லை. ஆனால் நன்றாக யோசித்து செய்யத் துவங்கிய செயலை எந்த தயக்கமும் குழப்பங்களும் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்கிறார் பாரதி. எப்பொழுதுமே ஒரு செயலை செய்யத் துவங்குகையில் நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து நிறைய எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வரும் தான். அவ்வளவு ஏன் உங்களுக்கே கூடவும் நிறைய குழப்பங்கள் வரும். அப்படி மனத்தை தடுமாற செய்யாமல் எடுத்துக் கொண்ட காரியத்தை தைரியமாக செய்து முடிக்கப் பழகுவோம்.    

3. நேர்படப் பேசு :

        அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல உங்கள் வார்த்தைகளிலும் வெளிப்படும். உங்களிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் யார் என்பதை காட்டுவதோடு உங்கள் மன நிலையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். ஒவ்வொரு சொல்லும் நேரம் போன்று திரும்பப் பெற முடியாதது. உங்கள் எதிரில் இருப்பவர் யாராக இருப்பினும் நேர்மையாகவும் உங்கள் கருத்தை நேருக்கு நேராக வேளிப்படுத்தக் கூடியவராகவும் இருங்கள். எப்பொழுதும் பிறரை பற்றிய எதிர்மறை கருத்துகளை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்வதை தவிருங்கள்.    

4. பெரிதினும் பெரிது கேள் :
       உங்களிடம் ஒரு சின்ன கேள்வி. பொறுமையாக யோசித்து பதில் சொல்லுங்கள்.  

' உங்களுக்கு இருக்கும் பெரிய ஆசை என்ன? ' 
' யோசிச்சிங்களா? ' 

நிறைய ஆசைகள் முட்டி மோதி இருக்குமே? 
ஒன்றும் பிரச்சினையில்லை நிதானமாக ஒரு முடிவுக்கு வாருங்கள்.  இப்படி உங்கள் ஆசைகளை பற்றி யோசிக்க தொடங்கியதும் வரிசைகட்டி நின்றவைகளில் எத்தனை விஷயங்கள் உங்களுக்கானவை. எத்தனை உங்களை சுற்றியிருப்பவர்களுக்கானவை? பதிலைச் சொல்ல வேண்டாம். உங்களின் பெரும்பாலான ஆசைகளைப் போலவே அது உங்களுக்கானதானது தான். உங்கள் கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் எனச் சொல்லும் பாரதி அவை உங்களை சுற்றியிருப்பவர்களின் உரிமைகளுக்கானதாகவும் இருக்க வேண்டுமென்கிறார். அவை எளிதாக கிடைக்காத பொழுது அதற்காக கடின உழைப்பை கொடுத்துப் பெற வேண்டுமென்கிறார்.

 

 

பெரிதினும் பெரிது கேளுங்கள்..!!

vikatan

  • தொடங்கியவர்

14463079_1147087728673253_80076519355950

ஆங்கிலத் திரைப்பட புகழ்பெற்ற நாயகி, டைட்டானிக் ரோஸ் என இன்று வரை நேசிக்கப்படும் கேட் வின்ஸ்லெட்டின் பிறந்தநாள்
Happy Birthday Kate Winslet

  • தொடங்கியவர்

99p1.jpg

குளுகுளு டேராடூனில் பூத்த ஜிலுஜிலு ரோஜா. ‘மெகா மாடல்’ என்ற போட்டியில் வென்றவரை இருகரம் கூப்பி வரவேற்றார்கள் மனவாடுகள். அங்கு ‘போட்டாகுடு’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் ‘ஜேம்ஸ் பாண்ட்’, ‘செல்ஃபி ராஜா’ போன்ற படங்களில் நடித்தவரை தமிழுக்கு அழைத்து வந்தார் இயக்குநர் சரண். அவரின் ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தில் வினய்க்கு ஜோடியாக நடித்து வருபவர், அடுத்ததாக ‘ஹேரா பேரி 3’ படம் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதிக்க இருக்கிறார். கண்ணழகிக்கு இப்பவே எக்கச்சக்க ரசிகர்கள். நல்லாரும்மா!

99p2.jpg



துபாயில் பிறந்த பால் பப்பாளி. எம்.பி.ஏ முடித்துவிட்டு சினிமாக் கனவுகளோடு இந்தியா வந்தவரை முதலில் வரவேற்றது கர்நாடகம்தான். துளு மொழியில் ‘நிரல்’ என்ற படத்தில் அவர் நடிக்க, அதைப் பார்த்து பாப்பாவைக் கொத்திக்கொண்டு பறந்தது மல்லுவுட். ‘சாண்ட் சிட்டி’, ‘ரசம்’ என இரு படங்களில் அடுத்தடுத்து நடித்தவருக்கு கோலிவுட் கதவுகளும் திறந்தன. கடந்த ஆண்டு வெளியான ‘மணல் நகரம்’ படத்தில் ஏராளமான நட்சத்திரப் பட்டாளத்தோடு நடித்தவருக்கு அதன்பின் பெரிதாய் வாய்ப்புகள் இல்லை. சீக்கிரமே நிறைய படங்களில் நடிப்பார் என நம்புவோம். தமிழன் இஸ் வெயிட்டிங் தாயீ!
 

99p3.jpg


ர்நாடகாவின் குல்பர்காவில் பிறந்த குலோப் ஜாமூன். ஆங்கில இலக்கியத்தில் மாஸ்டர்ஸ் முடித்தவர் சினிமாப் பக்கம் பார்வையைத் திருப்பினார். ‘நம் ஏரியாலி ஒந்தினா’ படத்தில் அறிமுகமானவர் ‘வினாயகா கேலேயரா பலாகா’, ‘துக்ளக்’, ‘சார்மினார்’ என வரிசைகட்டி நடித்தார். பின் ஒரு சின்ன பிரேக் எடுத்தவர் இப்போது அடுத்த இன்னிங்க்ஸிற்கு ரெடி. ‘சிம்பிள் ஆக் இன்னொன்டு லவ் ஸ்டோரி’ என்ற படத்தில் நடித்துவரும் இவர், அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம். கமான் பேபி கமான் பேபி!

vikatan

  • தொடங்கியவர்

இயற்கையின் வர்ண ஜாலங்கள்!

 

 
wonder_3034293f.jpg
 

உலகில் இயற்கை அதிசயங்கள் ஏராளம் உள்ளன. மலை, பள்ளத்தாக்கு, கடல் என இந்த இயற்கை அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மனிதர்களின் வாயைப் பிளக்க வைக்கும் சில இயற்கை அதிசயங்களைப் பார்ப்போமா?

 

1_3034297a.jpg

பிலிப்பைன்சில் ‘சாக்லெட்’ என்ற பெயரில் மலைகள் உள்ளன. இங்கே சாக்லெட்களெல்லாம் கிடையாது. மலைகளை உயரமான இடத்திலிருந்து பார்க்கும்போது சாக்லெட் போலத் தெரியும் என்பதால் இந்தப் பெயர் மலைகளுக்கு வந்தது. அருகருகே அமைந்துள்ள இந்த மலைகள் ஒவ்வொன்றும் கூம்பு வடிவில் இருக்கின்றன. இங்கே இப்படி 1,268 மலைகள் கூம்பு வடிவில் உள்ளன.

 

3_3034295a.jpg

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மூர்த்தானியா எனும் சிறிய நாடு வரை சஹாரா பாலைவனம் பரவியுள்ளது. இந்தப் பாலைவனத்தில் சுமார் 25 மைல் அகலத்தில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இந்தப் பள்ளத்தை விமானத்திலிருந்து பார்க்கும்போது பிரம்மாண்டக் கண் போலத் தெரிகிறது. அதனால் இந்தப் பள்ளத்தை ‘சஹாரா கண்’ என்றே அழைக்கிறார்கள்.

 

2_3034296a.jpg

கொலம்பியாவில் உள்ள ஓர் ஏரியின் பெயர் ‘புள்ளி ஏரி’. அதாவது ‘ஸ்பாட்டட் லேக்’. இந்த ஏரியில் கோடைக்காலத்தில் பெரும்பாலான தண்ணீர் ஆவியாகி விடும். இதனால் ஏரியில் உள்ள உப்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் மட்டும் உள்ளேயே தங்கி விடும். இதன் காரணமாக, ஏரிக்குத் தண்ணீர் வந்தவுடன் அந்தத் தாதுக்கள் எல்லாம் ‘பெரும் புள்ளி’களாகத் தெரியும். அதனால், இந்த ஏரிக்கு ‘ஸ்பாட்டட் ஏரி’ என்று பெயர்.

 

4_3034294a.jpg

பெரிய குகைகளைப் பார்த்தாலே எல்லோருக்கும் பயம் வந்துவிடும். ஆனால்., சிலியில் உள்ள ஒரு குகையைப் பார்த்தால், அங்கேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். இந்தக் குகை அவ்வளவு அழகாக இருக்கிறது. குகை முழுவதுமே மார்பிள் கல்லால் ஆனது. இந்தக் குகையின் அடிப்பாகத்தில் ஓடும் பச்சை மற்றும் நீல வண்ண ஏரியின் மேல் உள்ள மார்பிள் கல்லில் பிரதிபலிப்பால் குகையே விநோதமாகக் காட்சியளிக்கிறது. இதுதான் இந்தக் குகையின் அழகுக்குக் காரணம்

tamil.thehindu.

  • தொடங்கியவர்

`பத்தவெச்சிட்டியே' போன்!

 

நம் ஊரில் பவர்கட் என்பது சர்வ சாதாரணமாகிவிட்ட ஒன்று. இரவு நேரத்தில் பவர்கட் ஆகும்போது வெளிச்சத்திற்காக மெழுகுவத்தியைப் பற்றவைக்க நெடுநேரமாகத் தேடிக்கொண்டிருப்போம். ஆனால் தேடி முடிப்பதற்குள் போன மின்சாரமே வந்துவிடும். இனி இந்தப் பிரச்னை இல்லை. உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே மெழுகுவத்தியைப் பற்றவைக்க முடியும்.

p10.jpg

உலகமே டிஜிட்டல் மயத்திற்கு மாறிவிட்ட நிலையில், லூடெல்லா என்கிற வாசனை மெழுகுவத்தி உற்பத்தி நிறுவனம் புதிதாக `ஸ்மார்ட்' மெழுகுவத்தியை வடிவமைத்துள்ளது. மெழுகுவத்தியில் என்ன ஸ்மார்ட்? அட, ஆமாங்க! இதைப் பற்றவைக்க தீக்குச்சியே தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அப்ளிகேஷன் மூலமாகவே பற்றவைக்க முடியும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இதன் சுடர்எரியும் அளவை மொபைல் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். வாசம் வேண்டுமென்றால் இயக்கவும், மற்ற நேரங்களில் அதை நிறுத்திக்கொள்ளவும் முடியும். இதில் உள்ள WiFire சென்சார்கள் மூலம் விபத்து ஏற்படாத வகையில் பயன்படுத்த முடியும். பலத்த காற்றினாலோ அல்லது குழந்தைகள் இதைத் தெரியாமல் தட்டிவிட்டாலோ விபத்து ஏற்படாத வகையில் தாமாக அணைந்துகொள்ளும் ஆப்ஷனும் இதில் உள்ளது. மேலும் இதில் டைமர் இருப்பதால் இவ்வளவு நேரம் எரிந்தால் போதுமென குறிப்பிட்ட நேரத்தையும் செட்செய்ய முடியும். குழந்தைகள் இதைப் பயன்படுத்தாமல் இருக்க சைல்ட் லாக் ஆப்ஷனும் இருக்கிறது.

சரி, இதனால் யாருக்கு என்ன பயன்? இந்நிறுவனத்தின் தலைவர் பின்னிக்ஸ் இந்தக் கேள்விக்கு, `ஆப்பிரிக்காவில் நான் பலநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். அங்கு மக்கள் கெரசின் விளக்குகளைக் கொண்டுதான் இரவு நேரத்தைச் சமாளிக்கின்றனர். இதனால் அவர்களது உடல்நலம் கெடுவதோடு, அவர்களது வருமானத்தின் கனிசமான தொகை இதில் செலவாகிறது. இந்த ஸ்மார்ட் மெழுகுவத்தியின் விற்பனையில் பெரிய பங்கை ஆப்பிரிக்க மக்களின் நலனுக்காக செலவழிக்க எங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது' என பாசிட்டிவ்வாக பதில் சொல்கிறார். `பாண்டிபஜாரில் கிடைக்குமா பாஸ்?' என அப்பாவியாகத் தேடினால், ஆன்லைனில் மட்டுமே ஆர்டர் போட முடியுமாம். அதுவும் இப்போது ஆர்டர் பண்ணினால் டெலிவரி 2017-ல்தான் கிடைக்குமாம். விலை 99 அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,600 ரூபாய்.

வெளிச்சத்துல வாழ்றவனுக்குத்தான் இருட்டைக் கண்டு பயம் இருக்கும். நாங்க இருட்டுலயே வாழ்றவங்க. போங்க பாஸ்!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.