Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

’இதுக்கு 85 வழிகளா?’ - சின்ன விஷயத்துக்காக செம ஹிட் அடித்த புத்தகம்!

tie%20600_21398.jpg

ஒன்றுமே இல்லாத விஷயமாக நாம் நம்பும் ஒரு கான்செப்டினை வைத்து புத்தகம் ஒன்று ஹிட் அடிக்க முடியுமா? முடியவே முடியாது என்பார்கள் புத்தகப் ப்ரியர்களும், இலக்கியம் சார்ந்தவர்களும். 

ஆனால், அப்படிப்பட்ட கான்செப்டில் உருவான ஆங்கில மொழிப் புத்தகம் ஒன்று வரலாற்றில் கன்னாபின்னாவென்று ஹிட் அடித்திருக்கிறது. நம்புங்கள்....’டை கட்டுவது எப்படி’ என்பதைச் சொல்லிக் கொடுக்கும் புத்தகம்தான் அது.

தாமஸ் ஃபிங், யோங்க் மாவோ ஆகிய இருவரும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கல்வியில் தீவிரமாகவிருந்தனர். ஆராய்ச்சி படிப்பு என்றால் சும்மாவா? என்ன தியரி சப்மிட் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்த இருவருக்குமே, கணித சூத்திரங்கள் மீது ஆர்வம் அதிகம்.

tiee%201_21589.jpg

இயற்பியலில் திறமையானவராக இருந்தாலும், தாமஸ் ஃபிங்குக்கும் கணிதத்தில் ஒரு தனி கிரேஸ். பேப்பருக்காக யோசிக்கும்போதுதான் இருவருக்குமே ஒரு செம கான்செப்ட் கையில் கிடைத்தது.

தினமும்தான் கல்லூரிக்கும், வேலைக்கும் டை கட்டிக் கொண்டு போகிறோம். ஆனால், அதை எத்தனை விதங்களில் சரியாகக் கட்ட முடியும் என்று யோசித்திருக்கிறோமா? என்று மண்டையில் ஆணி அடித்த கணக்காய் தோன்றியதுதான் தாமதம், இருவரும் கணிதச் சூத்திரங்களையெல்லாம் உருட்டி, புரட்டி ‘தி 85 வேஸ் டூ டை எ டை' (The 85 ways to tie a tie) என்றொரு ஆய்வு முடிவினை தெள்ளத் தெளிவாக எழுதி முடித்தனர். ஆளுக்கொரு பேப்பரையும் ஆசிரியர்களுக்கு முன்வைத்தனர். 

பேராசிரியர்களிடமும், ஆய்வாளர்களிடமும் அந்த ஆய்வுப் பேப்பர்களுக்கு அதிரிபுதிரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவும், 1999 ஆம் ஆண்டு வாக்கில் ‘ஃபோர்த் எஸ்டேட்’ பதிப்பகம் மூலமாக புத்தகமாகவும் வெளியிட்டனர். 

கணிதக் கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஆண்கள் மத்தியில் புத்தகத்துக்கு ஏகபோகமாக வரவேற்பு குவியவும், மேலும் 9 மொழிகளில் வெளியாகி சாதனை படைத்தது இந்தப் புத்தகம். 

இத்தனை வருடங்கள் கடந்த போதிலும், இன்றைக்கும் கூட டை கட்டுவதில் யாருக்கேனும் சற்றே சந்தேகம் ஏற்பட்டால், தக்க சமயத்தில் கைகொடுக்கிறது இந்த எவர்க்ரீன் கான்செப்ட் புக். உங்களுக்கும் டை கட்டறது கஷ்டமா இருக்கா பாஸ்? உடனே தயங்காம இந்தப் புக்கை படிச்சுடுங்க!

vikatan

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

R.K.Laxman: மொழிகளைத் தாண்டி அனைவரையும் கவர்ந்த அற்புதமான கலைஞர்!

மொழிகளைத் தாண்டி அனைவரையும்  கவர்ந்த அற்புதமான கலைஞர்கள் உருவாவது அபூர்வம். p11b.jpgஅப்படி உருவான ஒருவர்... ராசிபுரம் கிருஷ்ணசாமி லஷ்மண்; சுருக்கமாக ஆர்.கே.லஷ்மண். அவரது 'காமன் மேன்’ - இந்தியனின் மனசாட்சி. காலை செய்திதாளில் பார்க்கும் அவரது கார்ட்டூன், அந்த நாள் முழுவதும் நம்மைக் கலகலப்பாக வைத்திருக்கும். அவரின் பிறந்த தினம் இன்று(அக்.:24)

dot.jpgஒருமுறை பிரதமர் நேருவைக் கிண்டல் செய்து ஒரு கார்ட்டூனைப் போட்டுக்கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார் லஷ்மண். அடுத்த நாள் காலை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு போன். மறுமுனையில் பேசியவர், பிரதமர் நேரு. 'உங்கள் கார்ட்டூனை நான் மிகவும் ரசித்தேன். அதில் என்னை நீங்கள் நகைச்சுவையாகச் சித்திரித்திருந்த விதம் அருமை. எனக்கு நீங்கள் வரைந்த அந்த ஓவியத்தை என்லார்ஜ் செய்து தர முடியுமா? நான் அதை ஃப்ரேம் செய்துவைத்துக்கொள்ள விரும்புகிறேன்’ எனக் கேட்டார்.   

dot.jpgநேருவுக்கு இருந்த அந்த நகைச்சுவை உணர்வு, அவரது மகள் இந்திரா காந்தியிடம் இல்லை. நெருக்கடி காலத்தின்போது, இந்திராவை நேரில் சந்தித்தார். 'சுதந்திரமாக கார்ட்டூன் போடுவதில் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது’ என லஷ்மண் சொல்ல... 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என அதட்டலாகப் பதில் சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார் இந்திரா. அதனால் இந்தியாவைவிட்டு சில காலம் வெளியே இருக்கவேண்டிய சூழல். இந்திரா தேர்தலை அறிவித்த நேரம், நாடு திரும்பினார். அதன் பிறகு பிரதமராக வந்த மொரார்ஜி தேசாயும் ஆர்.கே.ல‌ஷ்மணின் கார்ட்டூன்களை நகைச்சுவை விமர்சனங்களாக எடுத்துக்கொள்ளவில்லை.

p11a.jpg 

dot.jpg'காமன் மேன்’ - சாமானிய இந்தியன்தான் லஷ்மண் கார்ட்டூன்களின் ஆதர்ச அடையாளம். அந்த 'காமன் மேன்’ உருவம் ல‌ஷ்மணின் சிந்தனையில் அத்தனை சுலபமாகப் பிறந்துவிடவில்லை. 'இந்தியன் எப்படி இருப்பான்?’ என ஒரே ஒரு சித்திரம் மூலம் வரைந்து காட்டிவிட முடியாது. ஏனெனில், சிலர் தாடி வைத்திருப்பார்கள்; சிலர் பெரிய மீசை வைத்திருப்பார்கள். வட இந்தியர்கள் ஒருவிதமாக ஆடை உடுத்துவார்கள். தென் இந்தியர்கள் வேறு மாதிரி உடை உடுத்துவார்கள். அதனால் காமன் மேனை உருவாக்க ஆரம்பத்தில் நான் நிறையவே சிரத்தை எடுக்கவேண்டியிருந்தது’ எனச் சொல்லியிருக்கிறார் ல‌ஷ்மண். பூனாவில் இருக்கும் ஒரு கல்லூரியில் இவரது சாமானியனுக்கு, 10 அடி உயரத்தில் சிலை ஒன்று அமைத்திருக்கிறார்கள்.

p11c.jpg

dot.jpg எத்தனையோ இந்தியப் பிரதமர்களை ல‌ஷ்மண் வரைந்திருக்கிறார் என்றாலும், அவருக்குப் பிடித்தமானவர் தேவகவுடா. அவர் பிரதமராக இருந்த சமயத்தில் பல முக்கியமான கூட்டங்கள் நடக்கும்போது, அசதி காரணமாகத் தேவகவுடா தூங்கிவிடுவார். அதை வைத்து லஷ்மண் அவரை தன் கேலிச் சித்திரங்களில் செம ஓட்டு ஓட்டியிருக்கிறார். ஒருமுறை லஷ்மணைச் சந்திக்க வேண்டும் என தேவகவுடா கூப்பிட்டு அனுப்பினார். ஆனால், அந்தச் சந்திப்பின்போதும் தேவகவுடா சற்று கண் அயர்ந்ததுதான் ஹைலைட்.

dot.jpg பிற்காலத்தில் மகசேசே விருதை பெற்றிருந்தாலும், ஆரம்பக் கட்டத்தில் லஷ்மணுக்கு ஓவியம் வரைவதற்கான திறமை போதாது என, பம்பாயின் ஜெ.ஜெ ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் நிராகரித்ததாம். அதனால், தத்துவத்தின் பக்கம் அவரது கவனம் திரும்பியது. மைசூர் மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார். அந்தக் காலத்தில்தான் மக்கள் கூடும் பார்க், மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன் என சென்று, கண்களில் படும் காட்சிகளை மணிக்கணக்கில் ஓவியங்களாகத் தீட்டி பயிற்சி எடுத்தார். சிறுசிறு பத்திரிகைகளில் ஓவியம் வரையும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவரது அண்ணன் ஆர்.கே.நாராயணும், தன் ஆங்கில நாவல்களுக்கு ஓவியம் வரையும் வாய்ப்புகளை இவருக்குக் கொடுத்தார்.

dot.jpgபட்டப் படிப்பை முடித்துவிட்டு, இந்துஸ்தான் டைம்ஸில் வேலைக்குச் சேரும் முடிவோடுp11d.jpgடெல்லி சென்றார் லஷ்மண். 'இத்தனை இளம் வயதில் கார்ட்டூனிஸ்ட் ஆக முடியாது’ என அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். மும்பையின் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் பத்திரிகையின் கதவுகளைத் தட்டி வேலை கேட்க... இவரது திறமையைக் கண்டுகொண்ட அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், 'இதுதான் உன் ஸீட்... போய் உட்கார்ந்துகொள்’ என ஒரு ஸீட்டைக் காட்டினார். அவர் காட்டிய ஸீட்டுக்குப் பக்கத்து ஸீட்டில் உட்கார்ந்திருந்தவர் யார் தெரியுமா? பால் தாக்கரே.

சிறிது காலத்திலேயே லஷ்மணுக்கும் பத்திரிகை நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஒருநாள் திடீரென வேலையை உதறிவிட்டு வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அன்று பஸ் ஸ்ட்ரைக் என்பதால்... வெகுதூரம் போக முடியவில்லை. அதனால் எதிரில் இருந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் உள்ளே சென்று வேலை கேட்டார். டைம்ஸோடு இப்படி ஆரம்பித்த பந்தம், அரை நூற்றாண்டு தாண்டி செழித்து வளர்ந்தது.

dot.jpgஎந்தச் சூழ்நிலையிலும் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிபடுவதை அனுமதிக்கவே மாட்டார். பாபர் மசூதி இடிப்புச் சம்பவம் இந்தியா எங்கும் கலவரங்களைப் பற்றவைக்க, வட இந்தியாவில் வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தும் போக்கு வாடிக்கையானது. அதைக் கண்டிக்கும் விதமாக ல‌ஷ்மண் ஒரு கார்ட்டூன் வரைந்தார். அதில் சிலர் ரயில்கள், கார்கள் போன்றவற்றைத் தீயிட்டுக் கொளுத்திக்கொண்டிருக்க, ஒருவன் இரு சக்கர வாகனம் ஒன்றைக் கொளுத்தவே திணறிக்கொண்டிருப்பான். அவனிடம், 'என்னடா ராம பக்தன்னு சொல்ற. இதைக்கூட உன்னால் கொளுத்த முடியலையா?’ எனச் சலித்துக்கொள்வார்கள் சகாக்கள். இந்த கார்ட்டூனுக்கு இந்து அமைப்புகளிடம் கடும் ஆட்சேபம் கிளம்பியது. மன்னிப்புக் கேட்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால், எதற்கும் வளைந்துகொடுக்கவில்லை லஷ்மண். அந்த கார்ட்டூனுக்காக வழக்கை எதிர்கொண்டவர் நீதிமன்றம் சென்றபோது, எதிர்தரப்பு வழக்குரைஞரே லஷ்மணிடம் ஆட்டோகிராப் வாங்கியிருக்கிறார். அந்த வழக்குப் பின்னர் நீர்த்துப்போனது!  

dot.jpgலஷ்மணுக்கு, காகங்களை வரைய மிகவும் பிடிக்கும். 'காகங்களைப் போன்ற புத்திசாலிப் பறவைகளே இல்லை’ என வியந்து பேசுவார். 2003-ம் ஆண்டில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த லஷ்மண், என்றும் தன் ரசிகர்களைவிட்டுப் பிரிய மாட்டார். காகங்களும், காக்காய்ப் பிடிக்கும் அரசியல்வாதிகளும் இருக்கும் வரை இவரின் கேலிச்சித்திரங்கள் மக்களின் மனதில் நிழலாடிக்கொண்டுதான் இருக்கும்!

14732220_1265435560181898_45677884769351

vikatan

  • தொடங்கியவர்

14691153_1164719866910039_20106565100638

தனது சிரிப்பினாலேயே பல சினிமா ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட நடிகை லைலாவின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

விகடனுக்குக் கொம்பு முளைத்த கதை! - இரு பெரும் ஓவியர்களிடையே நடந்த சுவையான மோதல்!

 

p226aa.jpg

விகடனாருக்கு உச்சிக்குடுமியைத் தவிர எக்ஸ்ட்ராவாக ஒன்றை வரையும் எண்ணம் 1933-ம் ஆண்டு டிசம்பரில் மாலிக்குத் தோன்றியிருக்கிறது. 10.12.33 தேதியிட்ட இதழில் ‘என்ன - எங்கே - எப்போது?’ என்ற பகுதிக்கு முதல்முறையாக மாலி வரைகிறார். ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் பகுதி இது. இதற்காக மாலி வரைந்துள்ள விகடனாரை, அறிவின் கூர்மைக்கோ, பேனாவின் கூர்மைக்கோ அடையாளம் காட்ட விரும்புகிறார். குடுமியைக்கூட பேனாவாகக் காட்டியிருப்பதைப் பார்க்கலாம்.

11.3.34 தேதியிட்ட இதழில், விகடனார் பங்குபெறும் ஒரு முழுப்பக்க அரசியல் கார்ட்டூனை மாலி வரைந்திருக்கிறார்.

அதற்கு அடுத்த (18.3.34) இதழில் ‘ஓஹோ!

p226a.jpg

மாணாக்கரே!’ என மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் கட்டுரையில்தான் முதன்முதலாக விகடனுக்குக் கொம்பு முளைக்கிறது. முதலில் குறிப்பிட்ட ‘என்ன - எங்கே - எப்போது?’ என்ற பகுதியில் உச்சிக்குடுமியைக் கூர் பேனா முனையாகக் காட்டியதில் இருந்து ‘மாலி’ விகடனுக்குப் புதுப்பொலிவு தரும் சிந்தனையில் இருந்திருக்கிறார். மூன்று மாதங்கள் கழித்து இந்தக் கொம்பு வரைந்திருக்கிறார். தலையில் முடி (குடுமி!) பேனாவாகவே மாறிய பிறகு, இனி என்ன பிரச்னை? பேனா - கொம்பாகிறது!

p226b.jpg

அதே இதழில் தனது  கற்பனையில் உருவான கொம்பு அல்லது ஆன்ட்டெனாவை விகடனுக்குப் பொருத்துவதை உறுதிசெய்கிறார். ‘என்ன விசேஷம்?’ என்ற தலைப்பில் வெளியாகும் நடப்பு சேதிகளுக்கு ‘விகடனாரும் நிருபரும்’ டெலிபோனில் பேசுவதைப் பார்க்க, விகடனாருக்கு ஆன்ட்டெனா!

p226c.jpg

மார்க்கன் வேறுவிதம்!

ஆனால், விகடனாருக்கு ஒரு வித்தியாசத் தோற்றம் தருவதில் கடைசிவரையில் மார்க்கனுக்கு விருப்பம் இல்லை போலும்!

இரண்டு இதழ்களுக்குப் பிறகு 8.4.34 தேதியிட்ட இதழில் மார்க்கன் ஒரு கார்ட்டூனில் விகடனாரை வரைகிறார். இதில் ஆன்ட்டெனா இல்லை. குடுமிக்கு அடையாளமான முடிதான்.

இதற்காக மாலி தன் வழியை மாற்றிக் கொள்ளவில்லை. 29.4.34 தேதியிட்ட இதழில் அரசியல் உலகத்தில், ஆன்ட்டெனாவுடன்கூடிய ஆசிரியர் விகடனார், நிருபருக்குக் கோபாவேசமாக ஏதோ உத்தரவு போடுகிறார்.

p226d.jpg

அடுத்த 6.5.34 தேதியிட்ட இதழில் ஆன்ட்டெனாவுடன் விகடனாரை ஒரு கார்ட்டூனில் காட்சி தரச் செய்கிறார் மாலி.

‘மார்க்கன் விடவில்லை. 3.6.34 தேதியிட்ட இதழில் அவர் வரையும் கார்ட்டூனில் ஆன்ட்டெனா இல்லாத விகடனார்.

p226e.jpg

திடீரென என்ன ஆயிற்றோ, இவர்கள் கருத்து மாறுபாட்டில் (?) Anti Climax ஆக 15.7.34 தேதியிட்ட இதழில் ‘விகடன் பேச்சு’ப் பகுதியில் மாலி படம் வரைகிறார். அதில் கொம்பு இல்லாத விகடனார் காட்சி தருகிறார்.

அதில் ஆன்ட்டெனா போடாவிட்டாலும், தனது கற்பனையைக் கைகழுவிவிடவில்லை மாலி.

p226g.jpg

அதே இதழில், ‘நேயர்கள் விகடம்’ பகுதியில் மாலி முதல்முறையாக புதுப்படம் வரைகிறார். அதில் உள்ள விகடனார் தலையில் இருப்பது ஆன்ட்டெனா மாதிரியும் தெரிகிறது; முடி போலவும் இருக்கிறது.

p226h.jpg

போராட்ட முடிவு!

13.1.35 தேதியிட்ட இதழில் இந்தப் போராட்டம் முற்றுப்பெறுகிறது. அந்த இதழில் ‘விகடன் ரேடியோ’ என்ற புதுப் பகுதியில், மாலியின் படம். ஆன்ட்டெனாவுடன் விகடனார். இதன் பிறகு கொம்பு முளைத்த விகடனாரை, தன்னைப் பொறுத்தவரை மாலி உறுதிசெய்துவிட்டார். 24.3.35 தேதியிட்ட இதழில் ‘பாலர் மலர்’ அட்டையிலும் நன்றாகத் தெரியுமாறு கொம்பு அல்லது ஆன்ட்டெனா போடுகிறார் மாலி. ஆனால், மார்க்கன் ஆன்ட்டெனா இல்லாமலேயே போடுவது தொடர்கிறது.

p226j.jpg

27.10.35 தேதியிட்ட இதழில் முக்கிய மாறுதல் நடக்கிறது. அதுவரை பொருளடக்கம் பகுதியில் இருந்து வந்த பாரதமாதா படம் நீக்கப்பட்டு, ‘விகடனார்’ அந்த இடத்தில் அமர்கிறார். மாலியின் அந்தப் படத்தில் ஆன்ட்டெனா தெரியாவிட்டாலும், அதை விகடன் நிருபர் கையால் பிடித்திருப்பது தெரிகிறது.

p226k.jpg

ஆசிரியர் யார்?

8.12.35 தேதியிட்ட இதழில், விகடன் தீபாவளி மலர் பற்றிய வாசகர் விமர்சனக் கடிதங்கள் வெளியாகியுள்ளன. அந்தத் தீபாவளி மலரில் மற்ற பத்திரிகைகளின் ஆசிரியர் படங்கள் வெளிவந்துள்ளன. ‘உங்கள் படம் எங்கே?’ என்று வாசகர்கள் விகடன் ஆசிரியரைக் கேட்டிருக்கிறார்கள். ‘ஒவ்வொரு வாரமும் விகடன் அட்டை மேல் என்னைப் பார்த்துவரும் தோஷத்தினால் என் முகமே மறந்துவிட்டது போலும். எதற்கும் என் அருமை திருவுருவத்தை வெளியிட்டிருக்கிறேன்’ என்று சொல்லி மாலியின் ‘வெட்கப்படும்’ விகடனாரை வெளியிட்டிருக்கிறார். ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன், பத்திரிகையில் தன் படம் வெளியிட விரும்பியது கிடையாது. அதற்கு ரொம்பவும் கூச்சப்படுவார்.

p226m.jpg

இரட்டைக் கொம்பு!

1.3.36 தேதியிட்ட இதழில் மாலியின் கார்ட்டூனில் ஒரு புது முயற்சி நடக்கிறது.விகடனார் வருகிறார் அதில். பின்னால் உச்சிக் குடுமியுடன், முன்னால் - இரண்டு கொம்புகள் - அதாவது, இரண்டு ஆன்ட்டெனா. புது முயற்சி செய்திருக்கிறார் மாலி.

p226n.jpg

ஆனால், இது ஒரே ஓர் இதழில்தான். `நன்றாக இல்லை' என முடிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். பிறகு, ‘மாலி’ இரட்டைக் கொம்பு வம்புக்குப் போகவில்லை.

இதற்குப் பிறகு (21.6.36 தேதியிட்ட இதழில் மார்க்கன் அல்லாத ஒருவர் ஆன்ட்டெனா இல்லாமல் கார்ட்டூனில் விகடனைப் போட்டது தவிர) ஒரு ஆன்ட்டெனாவுடன்கூடிய மாலியின் விகடனார், நன்றாக நிலைநிறுத்தப்பட்டு விட்டார். பிறகு மாற்றமே இல்லை.

தனித்தன்மை உள்ளவர், மக்கள் எண்ணங்களை உடனே கிரக்கிக்கும் ஆற்றல் உள்ளவர் என்பதைக் காட்ட, விகடனாருக்கு மாலி வரைந்த ஆன்ட்டெனா, அவருக்குக் கம்பீரத்தைச் சேர்த்துவிட்டது. குடுமி மறைந்து ஒரேயடியாகப் போயிற்று.

கொம்பு முளைத்த விகடனாருக்கு, வாசகர்கள் மத்தியில் தொடர்ந்து அமோக ஆதரவு வந்தது. ஆகவே, அதற்குப் பிறகு கொம்போடு விளையாடவோ, அதில் மாற்றம் செய்யவோ யாரும் துணியவில்லை!

vikatan

  • தொடங்கியவர்
மிஸ் லெபனான் 2016 அழகுராணி
 

மிஸ் லெபனான் 2016 அழ­கு­ரா­ணி­யாக சான்டி தாபெத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். மிஸ் லெபனான் 2016 போட்­டியின் இறுதிச்சுற்று லெப­னானின் ஜோனி நகரில் நேற்­று ­முன்­தினம் இரவு நடை­பெற்­றது.

 

20177369766-01-02.jpg

 

201771.jpg

 

201772.jpg

 

201773.jpg

 

20177369742-01-02.jpg

 

20177369744-01-02.jpg

 

14 பேர் இதில் பங்­கு­பற்­றினர். இவர்­க­ளில சான்டி தாபெத் முத­லிடம் பெற்றார். எதி ர்­வரும் உலக அழ­கு­ராணி போட்­டி யில் லெபனான் சார்­பாக இவர் பங்­கு­பற்­ற­வுள்ளார். 

 

20177369745-01-02.jpg

 

மெரிபெல் தராபே இரண்­டா­மி­டத்­தையும் அன்ட்­ரியா ஹெய்கல் 3 ஆம் இடத்­தை யும் பெற்­றனர். ட்ரேஸி ரஸ்­கல்லா 4 ஆம் இடத்­தையும் ஹெலா மெர்ஹேப் 5 ஆம் இடத்தையும் பெற்றனர்.

 

20177369747-01-02.jpg

metronews.lk

  • தொடங்கியவர்

14716161_1265425356849585_50538550679440

அண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் !

s_s_r%20250.jpgணர்ச்சிகரமான நடிப்பாலும், கணீர் குரலாலும் தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய எஸ்.எஸ். ராஜேந்திரனின் நினைவு தினம் இன்று.

60 களில் எம். ஜி. ஆர், சிவாஜி என்ற மாபெரும் ஆளுமைகள் கொடிகட்டிப்பறந்தபோது, அவர்களிடமிருந்து தனித்து, தன் திறமையை வெளிப்படுத்தி, தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த சாதனையாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

மதுரையை அடுத்த சேடப்பட்டியில் 1928-ம் வருடம் பிறந்த ராஜேந்திரனுக்கு, சிறுவயதிலேயே நாடகங்களின் மீது காதல். கல்வித்துறையில் பணியாற்றி வந்த அவரது தந்தை சூரியநாராயணனுக்கு, மகனை அரசுப் பணியில் சேர்க்க வேண்டும் என்பது ஆசை. வெற்றி என்னவோ ராஜேந்திரனுக்குதான் கிடைத்தது. தனது 6 வயதில் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார்.

தென்னிந்தியாவின் சிறந்த நாடக கலைக்கூடமாக திகழ்ந்த பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பயிற்சி பெற்றார். பின் அவரது தனிப்பட்ட குரல்வளத்தால் வெகுசீக்கிரத்தில் 'பால அபிமன்யு' என்ற நாடகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் தரப்பட்டது. தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சில வருடங்களில் அங்கிருந்து விலகி, நாடக உலகில் அப்போது புதுமைகளை புகுத்திவந்த பிரபல டி.கே.எஸ் சகோதரர்களின் நாடக மன்றத்தில் இணைந்தார். பின்னர் நாடக உலகிலிருந்து திரையுலகிற்கு நுழைந்தார்.

சிவாஜிகணேசனின் முதல்படமான 'பராசக்தி'தான் இவருக்கும் முதல் படம். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படத்தில் ராஜேந்திரனுக்கு, நாயகன் சிவாஜியின் அண்ணன்  வேடம் தரப்பட்டது. தெள்ளிய தமிழில் கணீர் குரலோடு ஞானசேகரன் என்ற பாத்திரத்தில் வெளிப்பட்ட இவரின் நடிப்பு,  சிவாஜிக்கு அடுத்தபடியாக யார் இந்த நடிகன் என்று ரசிகர்களால் பேசப்பட்டது. அடுத்தடுத்து பல படங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார். எஸ்.எஸ். ஆர்.

s_s_r%20600%202.jpg

'முதலாளி', 'தலைகொடுத்தான் தம்பி',  'எதையும் தாங்கும் இதயம்', 'குமுதம்', 'ரத்தக்கண்ணீர்', 'கை கொடுத்த தெய்வம்', 'பச்சை விளக்கு', 'குலதெய்வம்', 'தை பிறந்தால் வழிபிறக்கும்', 'தெய்வப்பிறவி', ராஜாராணி', 'காஞ்சித்தலைவன்', 'ராஜா தேசிங்கு', 'ரங்கூன் ராதா' என பல படங்கள் அவருக்கு புகழைத் தந்தன. கருணாநிதி கதை வசனத்தில் உருவான 'பூம்புகார்' அவரது சிறந்த திரைப்பட வரிசையில் ஒன்று. 'சிவகங்கை சீமை' திரைப்படத்தில் இவரது கணீர் குரல் வசனங்கள் அப்போது பிரபலம்.

பொதுவாக திரையுலகில் பிரபலமடைந்த பின் தனித்துவமான கதாநாயகனாக நடிப்பதையே பலரும் விரும்புவர். ஆனால் பிரபலமான கதாநாயகனான பின்பும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது கதாநாயகனாக தன் சக நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார். அந்த படங்களில் தமிழ் உச்சரிப்பாலும், கணீர் குரலாலும் தனித்து தெரிந்தார் எஸ். எஸ். ஆர்.  வீரம், சோகம், அழுகை, நகைச்சுவை என எந்த பாத்திரமானாலும் தன் தனித்த நடிப்பால் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு வரவேற்பை பெற்றவர் ராஜேந்திரன்.

அவரைப்போன்று தமிழை தெளிவாக உச்சரித்தவர்கள் அன்றைய திரையுலகில் சொற்பமே. இயல்பில் திராவிட கொள்கையில் ஈர்ப்பு கொண்டவரான அவர், ஈரோட்டில் 'சந்திரோதயம்' நாடகம் நடத்த வந்த அண்ணாவுடன் பேசும் வாய்ப்பு கிடைக்க, அது இன்னமும் தீவிரமானது. பின்னாளில் திமுகவில் இணைந்தார்.

s_s_r%20600%2033.jpg

அண்ணாவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த எஸ்.எஸ். ராஜேந்திரன், அவரையே தன் அரசியல் குருவாக ஏற்று இறுதிவரை அவரை கொண்டாடி மகிழ்ந்தவர். திமுக முதன்முறை போட்டியிட்ட 1957 தேர்தலில், தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வெற்றி கிட்டவில்லை. வெறுமனே உறுப்பினராக இல்லாமல், கட்சி மேடைகளில் அண்ணா புகழ்பாடி கட்சியை வளர்த்த அவர், திமுவிற்காக நாடகங்கள் நடத்தி நிதி திரட்டிக்கொடுத்திருக்கிறார்.

தன் இல்லத்தில் எந்த நிகழ்வானாலும் அண்ணா இன்றி நடத்தமாட்டார். தான் கட்டிய இல்லத்திற்கு அண்ணாவின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.

உச்சகட்டமாக தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு ஆதரவாக பகுத்தறிவு கொள்கையில் கொண்ட தீவிர பற்றின் காரணமாக புராண, இதிகாச படங்களில் இனி நடிப்பதில்லையென ஒருநாள் அறிவித்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்திய அறிவிப்பு. காரணம், அப்போது புகழின் உச்சத்தில் அவர் இருந்தார். இதனாலேயே தமிழ்த்திரையுலகின் லட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றார்.

s_s_r%20600%204.jpg

திரையுலகில் 50 களில் துவங்கி 60 களின் இறுதிவரை இருபெரும் ஆளுமைகளின் மத்தியில் தன்னிகரில்லாத நடிகனாக திகழ்ந்த ராஜேந்திரன், இந்தியாவில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த முதல் நடிகர் என்ற புகழுக்குரியவர். 1962- ம் ஆண்டு தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். திரையுலகில் தன்னோடு இணைந்து பல படங்களில் நடித்த  பிரபல நடிகை விஜயகுமாரியுடன் காதல் வயப்பட்டு, அவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணம் நிலைக்கவில்லை. சில வருடங்களில்  குழந்தை பிறந்த கையோடு, இருவரும் மனமொத்து பிரிந்தனர்.

திரையுலகில் பிரபலமாகியிருந்தபோதே தனது பெயரில் நாடக மன்றம் ஒன்றை துவக்கி, அதில் திறமையான நடிகர்கள் பலருக்கும் வாய்ப்பளித்தவர் எஸ்.எஸ்.ஆர். அவரது நாடக மன்றம் பல பிரபலமான கதைகளை நாடகமாக அரங்கேற்றியது. அண்ணாவின் 'ஓர் இரவு', 'சந்திரமோகன்', மு.கருணாநிதி எழுதிய 'அம்மையப்பன்' ஆகிய நாடகங்களை நடத்தினார். திரையுலகில் அவரால் பலர் ஏற்றம் பெற்றனர். அவர்களில் சமீபத்தில் மறைந்த மனோரமா மற்றும் நடிகர் முத்துராமன் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழகத்தில் அறிமுகமாகி, பின்னாளில் கேரளாவில் பிரமலமடைந்த ஷீலா இவரது அறிமுகமே. அண்ணாவின் மறைவிற்கு பின் தி.மு.க.வில் அவருக்கு எதிராக எழுந்த சிக்கல்களால், ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி, எம். ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். 1980 -ம் ஆண்டு தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வென்றார். அந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

s_s_r%20600%203%281%29.jpg

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவருக்கான அரசியல் களம் தெளிவற்ற நிலையில் போனது.  தி.மு.க., அ.தி.மு.க என இரு கழகங்களிலும் தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாமல், வேறு வழியின்றி அரசியலிலிருந்து ஒதுங்கினார் எஸ். எஸ். ஆர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

முதன்முறை சட்டமன்ற உறுப்பினரான எஸ்.எஸ்.ஆரை சந்தித்து வாழ்த்து சொன்ன சிவாஜி, “சம்பிரதாயமாத்தான் உங்களை வாழ்த்தறேன். பதவி, அதிகாரம்னு சினிமாவிலிருந்து ஒதுங்கிடாதீங்க. அதெல்லாம் வயசான பின்னாடி பார்த்துக்கலாம். திரும்பவும் நடிக்க வந்திடணும்” என்றார் வாஞ்சையாக. தொழில்முறை போட்டியாளரிடமும் அவர் பேணிய ஆரோக்கியமான நட்புக்கு இது சான்று.

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான 'முதலாளி'  எஸ்.எஸ்.ஆருக்கு திருப்புமுனை கொடுத்த திரைப்படம். மேகலா பிக்சர்ஸ் தயாரித்த 'மறக்க முடியுமா' திரைப்படத்தில் தன் சொந்த சகோதரியையே யார் எனத் தெரியாமல் பெண்டாள முயற்சிக்க,  அப்போது அவள் தன் கழுத்தை அறுத்துக்கொள்வாள். அப்போது எஸ்.எஸ்.ஆர் வெளிப்படுத்தும் உணர்ச்சிவயப்பட்ட நடிப்பை வேறு எந்த நடிகரிடத்தும் எதிர்பார்க்க முடியாதது. வெளிப்படங்களில் வாய்ப்பு குறைந்தபோது, தன் சொந்தப்பெயரில் படம் தயாரித்து நடித்தார் எஸ்.எஸ்.ஆர்.

s_s_r%20600%205.jpg

திரையுலகில் அடுத்த தலைமுறை நடிகர்களாலும் நேசிக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆர், அவர்கள் விரும்பி அழைத்தபோது அவர்களின் படங்களில் நடித்தார்.

தம் இறுதிநாளில் ஞாபக மறதி நோயால் சிரமப்பட்ட அவர், எம். ஜி. ஆர் ரசிகர்கள் ஏற்பாடு செய்த ஒரு மேடையில் கருணாநிதியை புகழ்ந்து பேசி சங்கடப்பட்டுப்போனார். காரணம் எல்லா காலங்களிலும் தனக்கு எதிரிகளாக யாரையும் வரித்துக்கொண்டு அரசியல் செய்யாமல், தனித்துவமாக விளங்கிய அவரது குணம். திரையுலகில் பந்தா இல்லாமல், சக நடிகர்களுடன் போட்டி மனப்பான்மையின்றி இணைந்து பணியாற்றியது அவரது சிறந்த குணத்திற்கு சான்று. ஒரு வகையில் அரசியலில் அவர் முழு வெற்றி பெறாததற்கும் அதுவே காரணம் எனலாம்.

s_s_r%2060000000.jpg

திரையுலகில் எத்தனை புகழோடு விளங்கினாலும் அண்ணாவை நேசித்த தன் சக திரைக்கலைஞர்களைபோல  எஸ்.எஸ்.ஆர் அரசியலில் பெரும் உயரத்தை எட்டி பிடிக்க முடியாமல் போனதற்கு காரணம் ஒன்று உண்டு. அது, அண்ணாவை அவர் நிஜமாய் நேசித்ததுதான்!

vikatan

  • தொடங்கியவர்

14712707_1164722456909780_27505524389274

ஹிந்தியுலகின் கவர்ச்சிப் புயல்..
தசாவதாரம் மூலமாகத் தமிழிலும் கலக்கிய மல்லிகா ஷெராவத்தின் பிறந்தநாள்.
Happy Birthday Mallika Sherawat

 
  • தொடங்கியவர்

இந்த டி-சர்ட் என்ன விலை தெரியுமா பாஸ்?

14805411_1444170092278351_2138228466_n%2


கொஞ்சம் ட்ரெண்டியான ஜீன்ஸ் பேண்ட் போட்டாலே, என்னயா கிழிஞ்ச பேண்ட்டை? போட்ருக்கனு நம்ப ஜனங்கள் நக்கலடிப்பார்கள். ஆனால் பெங்களூரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் நம்ம போகி பண்டிகைக்கு எரிக்கும் நிலையில் உள்ள ஒரு டி-சர்ட்டை விற்பனைக்கு வைத்துள்ளனர். பல ஓட்டைகளுடன் இருக்கும் இந்த டி-சர்ட்டின் விலை ரூ.1,799 ஒன்லி. இதைத்தொடர்ந்து இது தொடர்பாக மீம்ஸ் மழைகளை பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt im Freien
 

ஓர் இளம் தம்பதிக்குள் சிறு வாக்குவாதம். மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனைக் கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், "தம்பி! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் மனைவியைக் கடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டார்.

"ஒண்ணுமில்லை அங்கிள். சும்மாதான். நானும்கூட வந்து சாமான் வாங்கணுமாம், எனக்கே அசதியா இருக்கு. இந்த லேடீஸே இப்படிதான் அங்கிள். சும்மா கடுப்பேத்திகிட்டு..."

முதியவர் சிறு புன்னகையோடு, " தம்பி! முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் மனைவியோடதான் போவேன். ஆனா இப்ப அவங்க இறந்து 5 மாசமாச்சி.
எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. ரெண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒண்ணாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம். எங்களோட 3 பிள்ளைங்களும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். என் மனைவிக்குத் துர்திஷ்டவசமா சர்க்கரை, ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான்தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்.

இப்ப அவங்க இல்லை, நான் ரொம்ப தனிமையா உணர் றேன். என் பகல்கள் ரொம்ப நீளமாகிடுச்சு, இரவுகள் ரொம்பவே வெறுமையாச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு. அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது.

அவங்க மொபைல் நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க...

முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்... இப்ப நான் அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்...

சமையலறைக்குத் தனியா போறேன், சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சித் தர அவங்க இல்லை... கோயிலுக்கு இப்ப ஒண்ணா போக அவங்க இல்லை...'' என்றார் விழியோரம் நீர் தேங்க...

சில நிமிடங்களுக்குப் பிறகு அவரே தொடர்கிறார்...

''அதான் தம்பி, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், அதிகமாக போற்றணும். இன்னிக்குத் தினமும் என் மனைவியோட கல்லறைக்குப் போறேன். எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாம்மா? இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.
சரி தம்பி, நான் வரேன்...''

புறப்பட்ட பெரியவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் அந்த இளம் கணவன். பேரங்காடிக்கு உள்சென்று மனைவியைத் தேட ஆரம்பித்தான்.
ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும், நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது.

புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, hi sir how r u? Nice to meet u என்கிறோம். இடையில் இருமல், தும்மல் வந்தால் கூட, I'm sorry sir என்கிறோம். பேச்சுக்கிடையில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம். அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும். அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது. ஆனாலும், எவ்வளவு மரியாதை தருகிறோம்?

வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற மனைவியை கணவன் மதிக்கிறானா? இல்லை மனைவிதான் கணவனை மதிக்கிறாளா? பதில் 100 க்கு 90 சதவிகிதம் 'இல்லை'தான்.

மனைவி ஆசையாகச் சமைத்துப் பரிமாறுவதை பிரமாதம்னு கணவன் பாராட்டுறதுமில்லை, அசதியா வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, 'ரொம்ப வேலையா? காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்'னு மனைவியும் சொல்றதில்லை.
இதெல்லாம் சொல்லணும். அப்படி ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அமெரிக்க விருதைத் தட்டிச் சென்ற இந்திய வம்சாவளி மாணவி!

maanasa2_11596.jpg

 

அமெரிக்காவில், டிஸ்கவரி எஜுகேஷன் எனும்  நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் இளம் விஞ்ஞானிகளைக் கண்டெடுப்பதற்காக பள்ளி மாணவர்களுடைக்கு இடையேயான நேஷனல் பிரிமியர் அறிவியல் போட்டியை (Nation’s premier science competition )  நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு போட்டியிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் முதலிடத்தைப் பிடித்து 2016 ஆண்டிற்கான 'டாப் யங் சைன்டிஸ்ட்' என்ற பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 13 வயது மானசா மெண்டு (Maanasa Mendu).

manasa%201_11210.jpg



5 முதல் 8-ம் கிரேடு வரை படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி சுற்றுக்கு பத்துப் பேர் தேர்வானார்கள். இதில் ஐந்து பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

மினசோட்டாவில் நடைப் பெற்ற இறுதிப் போட்டியில் காற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாதனத்தை கண்டுபிடித்தற்காக மானசா முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அவருக்கு 25 ஆயிரம் டாலர்கள் பரிசு கிடைத்தது. ஓஹியோ மாகாணத்தில், மேசன் நடுநிலைப் பள்ளியில் (Mason Middle School) 8-ம் கிரேடு படித்துவரும் மாணவி

இந்தச் சாதனத்தை கண்டுபிடிக்க என்ன காரணம் என்று நடுவர்கள் கேட்டதற்கு, ''ஒருதடவை இந்தியாவிற்கு சென்றேன் அங்கு பல ஊர்களில் சுத்தமான குடிநீர் குறிப்பாக மின்சாரம் என அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்காக ஒரு தீர்வாக என்ன செய்யலாம் என்ற யோசனையில் வந்ததுதான் இந்த ஐடியா' என்றார் மானசா.

பரிசாக கிடைத்த பணத்தை, அடுத்தக் கட்ட புதிய பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப் போகிறேன் என்று சொல்லும் மானசா, தன்னோடு இறுதி சுற்றில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதத்தில்,  ''இது முதல் படிதான். நாம் கடக்கவேண்ட தூரம் இன்னும் ஆயிரக்கணக்கான மைல் இருக்கிறது. கண்டுபிடிப்புகளை நேசியுங்கள் அடுத்த முறை நிச்சயம் உங்களில் ஒருவர் 'டாப் யங் சைன்டிஸ்ட்' ஆகமுடியும்'' எனச் சொன்னதும் அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது. அமெரிக்க விருதை இந்தியர்கள் பெற்று நமது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதில் மானசாவும் இணைந்தார்.

தன் கண்டுபிடிப்பு பற்றி மானசாவின் வீடியோ...

 

இந்தியாவை மனதில் ஏந்திநிற்கு இளம் விஞ்ஞானி மானசாவுக்கு வாழ்த்துகளைப் பகிர்வோம்!

vikatan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

இந்த டி-சர்ட் என்ன விலை தெரியுமா பாஸ்?

14805411_1444170092278351_2138228466_n%2


கொஞ்சம் ட்ரெண்டியான ஜீன்ஸ் பேண்ட் போட்டாலே, என்னயா கிழிஞ்ச பேண்ட்டை? போட்ருக்கனு நம்ப ஜனங்கள் நக்கலடிப்பார்கள். ஆனால் பெங்களூரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் நம்ம போகி பண்டிகைக்கு எரிக்கும் நிலையில் உள்ள ஒரு டி-சர்ட்டை விற்பனைக்கு வைத்துள்ளனர். பல ஓட்டைகளுடன் இருக்கும் இந்த டி-சர்ட்டின் விலை ரூ.1,799 ஒன்லி. இதைத்தொடர்ந்து இது தொடர்பாக மீம்ஸ் மழைகளை பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

image.jpg

  • தொடங்கியவர்
மௌனமாகவே ஓரிரு வார்த்தைகளை உதிர்க்கும் பேர்வழிகள்
 
 

article_1476941148-hjgui.jpgதீயவர்களிடம் நீங்கள் ஏதாவது சிறு உதவிகளைக் கோரினும் அவர்கள் அதற்குப் பிரதியீடாகப் பெரும் விலை ஒன்றைக் கேட்பார்கள். விலை என்பது காசு மட்டும் என்பதல்ல; அது பாரதூரமான பின்விளைவுகளை உண்டுபண்ணும் செயலாகவும் இருக்கலாம். 

தீயவர்களில் பலரகங்கள் உண்டு. அதிகாரத் தொனியில் பேசும் ஒரு ரகம்; மௌனமாகவே ஓரிரு வார்த்தைகளை உதிர்க்கும் பேர்வழிகள்; இனிக்க இனிக்கப் பேசியே ஆட்களைக் கவிழ்ப்பவர்கள் என ஏகப்பட்ட குணாம்சங்களுடன் தீயவர்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். 

எனவே, எங்களுக்கான தேவைகளை எங்கள் முயற்சியினூடாகவே செய்வோமாக!  

உதவிகேட்க உரிமையுள்ள பண்புள்ளவர்களைத் தேவை ஏற்படின் அணுகலாம்.

  • தொடங்கியவர்

வெற்றிக்குத் தேவை திறமையா உழைப்பா... உங்கள் சாய்ஸ் என்ன? #TuesdayThoughts

talent-vs-hard-work.jpg

திறமைக்கும் உழைப்புக்குமான போட்டி ஆதி காலம் தொட்டே நடந்து வரும் ஒன்றுதான். திறமை என்பது ஒருவரின் பிறவிக்குணம். உழைப்பு அவரது சாய்ஸ். வெறும் திறமையுடன் இருந்த யாருக்கும் வெற்றிகள் கிடைத்தது கிடையாது. அப்படி என்றால், உழைத்தால் மட்டும் கிடைக்குமா? உழைப்பு ஒருவரின் சின்னச் சின்ன திறமையைக் கூட வெளிச்சம் போட்டு காட்டும். திறமையும் உழைப்பும் ஸ்மார்ட் போனும் சார்ஜரும் போல என சொல்லலாம். சார்ஜர் இல்லாமல் ஸ்மார்ட்ஃபோன் கதை முடிந்துவிடும். ஆனால், வெறும் சார்ஜரும் வேலைக்காகாது

திறமை என்பது ஒரு ரேஸை ஆரம்பிப்பது போல. ஆனால், உழைப்புதான் அதை முடித்து வைக்கும்.

மூக்கு சிந்துவதை வைத்தே ஒருவரின் குணாதிசயங்களைக் கண்டுபிடிப்பது வரை ஆராய்ச்சிகள் செய்கிறார்கள். இதை விடுவார்களா? அதிகம் உழைத்தவர்கள் தான் எல்லா துறைகளிலும் உச்சம் தொட்டிருப்பதாக சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சச்சின், கோலியில் தொடங்கி ரஜினி, தனுஷ் வரை நீங்கள் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்.

டிரெண்டிங்காக நாம் சிவகார்த்திகேயனை எடுத்துக் கொள்ளலாம். சிறு வயது முதலே மற்றவர்களை எண்டெர்டெயின் செய்யும் திறமை சிவாவுக்கு இருந்தது. அவர் என்ன செய்தார்? கிடைக்கும் மேடைகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டார். அந்த மேடைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். அங்கே கொஞ்சம் அங்கீகாரம் கிடைத்ததும், தொலைக்காட்சிக்கு முயன்றார். அதில் மிமிக்ரி மூலம்தான் வென்றார். அவரிடம் கொடுக்கப்பட்ட அடுத்த அசைன்மென்ட், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது. அதற்கு பயிற்சி எடுத்து பின்னி எடுத்தார் சிவா. அதன்பின் அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க், ஜோடி நெம் 1.

டான்ஸையும் கற்க வேண்டும். அதற்கும் தயாராய் இருந்தார் சிவா. "இத பண்ணுப்பா" என்றால் அதை முடிந்த அளவு கற்றுக்கொண்டு களம் இறங்கி களமாடுவது சிவாவின் வழக்கம். எப்போதும், எங்கும், எதிலும் அதுதான் சிவா. சிவாவின் திறமையை உழைப்பு வெளிக்காட்டியது. பயணத்தை விரைவாக்கியது; எளிதாக்கியது. 

இந்தத் தியரியை நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் அப்ளை செய்து பார்க்கலாம்.

இளையராஜாவுக்கு இல்லாத திறமையா? அவர் ஏன் தினமும் 18 மணி நேரம் உழைக்க வேண்டும்.

உழைப்பு இல்லாத திறமை, அந்த திறமைக்கு ஒருவர் செய்யும் தீங்கு. திறமை இல்லாத உழைப்பு, அது கைகூட வேண்டும் என்ற அவா.

உங்கள் திறமைகளை அடையாளம் காணுங்கள். அதில் உழைப்பைக் கொட்டுங்கள். வெற்றி உங்களை தேடி வரும்.

வாழ்த்துகள்!

vikatan

  • தொடங்கியவர்

14729131_1164724576909568_32643402836883

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர், சகலதுறை வீரர், இலங்கை அணிக்காக விளையாடிய மிகச் சில தமிழ் வீரர்களில் ஒருவர் ரஸல் ஆர்னல்டின் பிறந்தநாள்.

இப்போது அனைவரும் ரசிக்கும் நேர்முக வர்ணனையாளர்களில் ஒருவராக விளங்குகிறார்.
Happy Birthday Russel Arnold

  • தொடங்கியவர்

14572347_1266430443415743_40603177120205

ஓவியர் பாப்லோ பிகாசோ பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு

ஸ்பெயின் நாட்டின் தெருவில் பல ஓவியங்களை அந்த இளைஞன் கடை விரித்து இருந்த பொழுது ,"என்ன பைத்தியக்காரத்தனம் இது ?" எனதான் ஊரே சிரித்தது.ஓவியம் என்பது இருப்பதை இருக்கிற மாதிரி வரைவது தான் ஓவியம் என்பதை உடைத்து பல்வேறு தளங்களில் ஓவியத்தை பயணம் போக வைத்தான் அந்த இளைஞன் . தனக்கு தோன்றியதை ஓவியமாக வடித்து தள்ளிய உண்மைக் கலைஞன் அவர்.

இளம் வயதில் அப்பாவுடன் ஸ்பெயினில் காளைச்சண்டைகள் பார்க்க போனது அவரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை உண்டு செய்தது. அவருடைய ஓவியங்களில் தொடர்ந்து காளைச்சண்டைகள் தோன்றிக்கொண்டே இருந்தன. காலையில் பதினோரு மணிக்கு பொறுமையாக எழுந்துவிட்டு இரவு மூன்று மணி வரை ஓவியங்கள் வரைகிற குணம் அவருக்கு இருந்தது. எப்படி தொன்னூறு வயதிலும் இத்தனை ஆர்வத்தோடு இயங்குகிறீர்கள் என்று கேட்கப்பட்ட பொழுது ,"சிலர் இளவயதிலேயே முதியவர் போல உணர்கிறார்கள். நான் இந்த வயதில் முப்பது வயது இளைஞனாக தொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கிறேன் !" என்றார்

picaco1.jpg

அரசியல் கட்சிகளின் பெயர்கள் கூட தெரியாமலே இயங்கிக்கொண்டு இருந்தார் அவர்.  அவரின் ஓவியங்கள் 1936 க்கு முன்னர் அரசியல் சார்ந்து வரையபட்டதே இல்லை. பாசிஸ சக்திகள் குறிப்பாக ஹிட்லரின் படைகள் அமைதி தவழ்ந்த எண்ணற்ற பொதுமக்கள் இருந்த கார்னிகா நகரத்தை தாக்கி உயிர்களை குடித்து வெறியாட்டம் போட்ட பொழுது தான் பிகாசோ கோபப்பட்டார். அரசு ஒரு ஓவியம் வரையச்சொல்லி ஏற்கனவே கேட்டிருந்தது. எல்லா கோபத்தை, அவர்களின் வெறியாட்டத்தை ஓவியத்தில் அப்படியே கொண்டுவந்தார். பற்றியெரியும் நெருப்பும்,அதில் சிக்கிக்கொண்ட பெண்ணும் என்று அவர் அப்படியே காட்சிப்படுத்திய விதம் உலகம் முழுக்க போருக்கு எதிரான அடையாளமானது.

அதிகம் பொருள் ஈட்டிய அவர் தான் இறக்கிற வருடத்தில் கூட இருநூறு ஓவியங்கள் வரைந்தவர் அவர். அவர் நாட்டை ஜெர்மனி பிடித்துக்கொண்ட பொழுது பிரான்ஸ் தேசத்தில் தஞ்சம் புகுந்து அங்கேயே இருந்தார்;அவரை அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா போகச்சொன்ன பொழுது கம்பீரமாக மறுத்தார் . அங்கே இருந்தே தைரியமாக ஓவியங்கள் வரைந்தார் .

அவர் எண்ணற்ற ஓவியங்கள் வரைந்தாலும் அதில் சிலவற்றை மட்டுமே விற்பனைக்கு
விடுவார். எண்ணற்ற ஓவியங்கள் ஒரே சமயத்தில் சந்தைக்கு வந்தால் அவரின்
மார்கெட் போய்விடும் என்கிற தெளிவு அவருக்கு இருந்தது. பிரான்ஸ்
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிக்கொண்டு இருந்தார் அவர்.
ஸ்டாலின் இறந்த பொழுது அவரை இளைஞராக காண்பித்து ஓவியம் தீட்டி இருந்தார்
இவர்.

பிரான்ஸ் தேசத்தை ஜெர்மனி பிடித்துக்கொண்ட பொழுது இவர் அங்கேயே
இருந்தாரில்லையா ? அப்பொழுது ஒரு ஜெர்மானிய ராணுவ அதிகாரி இவரைப்பார்க்க
வந்தார். கார்னிகாவை கண்களை விரித்து பார்த்துவிட்டு ,"இந்த ஓவியத்தை நீ
தானே வரைந்தாய் ?" என்று கோபத்தோடு கேட்ட பொழுது பிகாஸோ சலனமே இல்லாமல்
தீர்க்கமாக ,"இல்லை இதை நீங்கள் தான் வரைந்தீர்கள் !" என்றார். எல்லாமும்
கலையாகுமா என்றொரு இளைஞன் கேட்ட பொழுது ஒரு மிதிவண்டியின் இருக்கை அதன்
ஹாண்டில் பார் இரண்டையும் சேர்த்து ஒரு காளையின் தலையை உருவாக்கிவிட்டு
"முடியும் !" என்றார் அவர்.

ஒரு நாளைக்கு பலமணிநேரம் நின்றுகொண்டே வரையும் குணமும் இருந்தது. அமைதிக்கான அடையாளமாக புறாவை பிரபலப்படுத்தியதும் அவரே ; அதே சமயம் கொரியப்படுகொலைகள்,'போரும்,அமைதியும்' என்று போரின் தீங்குகளுக்கு எதிராக
ஓவியங்கள் தீட்டி கலை மூலம் அமைதிக்காக குரல் கொடுத்தார் அவர்.

picaco2.jpg

மரபை மீறும் ஆவேசம் அவரிடம் இருந்ததுபெரும்பாலான நவீன ஓவியங்கள் குறிப்பாக அவருடைய ஓவியங்கள் புரியவில்லை எனக்கேட்ட பொழுது  "உங்கள் வீட்டின் அருகில் உள்ள மரத்திலிருந்து குயில்  கீதத்தை கூவுதல் மூலம் கசிய விடுகிற பொழுது அதன் அர்த்தம் புரிகிறதா உங்களுக்கு ? உங்கள் வீட்டின் கண்ணாடியில் வழிந்து மென்மையாக படிகிறதே பனித்துளி, அதை எந்த பொருளில் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ? ஒவ்வொரு நாளும் மேகம் புதுப்புது வடிவம் எடுக்கிறதே அதற்கு என்ன பொருள் ?. வெயிலை, இரவை, மழையை எப்படி புரிந்து வைத்திருக்கிறீர்கள்.எல்லாவற்றிலும் மனதார கரைந்திடுங்கள் .எல்லாவற்றின் ஊடாகவும் நீங்கள் இருப்பதை உணரத் துவங்குங்கள் உலகின் காட்சிகளும்.அதன் வனப்பும் உங்களுக்குப் புரியத் துவங்கினால் நவீன ஓவியங்கள் தானே புரியத் துவங்கிடும் ".

கியூபிசம் எனும் ஓவிய பாணி அவரால் உருவானது .பைத்தியம் என்ற அதே உலகம்
,"நவீன ஓவியத்தின் தந்தை !"என அவரை ஏற்றுக்கொண்டது.பாப்லோ பிகாசோ எனும்
மாபெரும் கலைஞரின் பிறந்தநாள் இன்று (அக்.25, 1881)

vikatan

  • தொடங்கியவர்

14650557_1470832726266467_13928918079486

  • தொடங்கியவர்

திருப்பதி ஏழுமலையானுக்கு இஸ்லாமிய பக்தர் வழங்கிய காணிக்கை!

223_14218.jpg


 வெங்கடேசப் பெருமாளுக்கு, அதிகாலை முதல் நள்ளிரவு வரை பலவிதமான ஆர்ஜித சேவைகள் நடைபெறுகின்றன. அவற்றில் முக்கியமானது 'அஷ்டதள பாத பத்மாராதனை' சேவை. இந்த சேவை தொடங்கப்பட்ட விதமே ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியாகும்.
'அஷ்டதள பாத பத்மாராதனை' எனப்படும் இந்த ஆர்ஜித சேவை திருமலையில் 1984-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணிக்கு நடைபெறுகின்றது.


ஏழுமலையானின் 108 அஷ்டோத்திரங்களும் உச்சரிக்கப்பட்டு ஒவ்வொரு நாமத்துக்கும் ஒரு மலர் என வேங்கடவனின் பாதத்தில் சமர்ப்பிக்கப்படும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தங்கத்துக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது அர்ச்சனை செய்ததை மீண்டும் பயன்படுத்தலாம். வில்வத்துக்கும் நிர்மால்ய தோஷம் கிடையாது!
திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்குரிய பூஜையில் 108 தங்கத் தாமரைப் பூக்களை நன்கொடையாக வழங்கியவர் ஒரு இஸ்லாமிய பக்தரென்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லாவா? ஆனால் அவர் வைத்த வேண்டுகோளின்படியே செவ்வாய்கிழமைதோறும் 'அஷ்டதள பாதாள சேவை' இன்றளவும் நடைபெற்று வருகிறது. 


புராண இதிகாச காலத்தில் ஆதிசேஷன் கபில மகரிஷியிடம் இந்த அஷ்டதள பாத பூஜையைப் பற்றிக் கூறி இருக்கிறார் என்று கூறுகிறது வெங்கடேஸ்வர மகாத்மியம். பிரம்ம தேவன், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்களுடன் மற்றும் தேவதா கணங்களுடன் தேவகங்கையில் பூக்கும் தங்கத்தாமரைப் பூக்களைக்கொண்டு வெங்கடேசப் பெருமாளுக்கு இந்தப் பூஜையை செய்தாராம். இதில் மனம் மகிழ்ந்த வெங்கடேசப் பெருமாள், பிரம்ம தேவனுக்கு லோக கல்யாண வரத்தை வழங்கினார். இப்போது இந்த 108 நாமவளி பூஜையை நாம் செய்தால், 16 வகையான ஐஸ்வர்யங்களும், நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் ஞானமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


ஒருமுறை ஹைதராபாத்திலிருந்து வந்த ஷேக் மஸ்தான் என்கிற ஒரு இஸ்லாமியர் திருப்பதிக்கு வந்து ஏழு மலைகளையும் நடந்தே கடந்து சென்று திருமலையை அடைந்தார். அங்குள்ள அர்ச்சகர்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கவே அதைக் கேட்ட அர்ச்சகர்கள் திடுக்கிட்டு ஆச்சர்யமுற்றனர்.

217_15149.jpg

திருமலை திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளிடம் அவரை அழைத்துச் சென்றனர். அவர்கள் தேவஸ்தான செயல் அலுவலரிடம் (E.O) அனுப்பி வைத்தனர். அவரை சந்தித்தவர், “ஐயா என் பெயர் ஷேக் மஸ்தான். நான் குண்டூரைச் சேர்ந்த சிறிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் பின்பற்றும் வழக்கப்படி தினமும் காலை எங்கள் வீட்டில் உள்ள ஏழுமலையான் படத்தின் முன்பு ஒன்றாக கூடி, சுப்ரபாதம் பாடுவோம். எந்தவித தவறும் இன்றி, வெங்கடேஸ்வர ஸ்தோத்திரம், மங்களா சாசனம் ஆகியவற்றையும் பாடுவோம். “எங்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ஒவ்வொரு செவ்வாய் அன்றும் ஏழுமலையான் முன்பு ஸ்ரீனிவாச அஷ்டோத்திரத்தை சொல்லி வருகிறோம் (அஷ்டோத்திர சத என்பது இறைவனின் திருநாமத்தைப் போற்றிக் கூறும் 108 முறை போற்றுவது). இதுதவிர, எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் பூக்களை இந்த அஷ்டோத்திரம் கூறும்போது ஒவ்வொன்றாக ஸ்ரீநிவாசனுக்கு அர்பணிப்போம்.  

இதுபோன்றதொரு தருணத்தில் எங்கள் முப்பாட்டனார் காலத்தில், பக்தர்கள் இதே போன்ற சேவையை ஏழுமலையானுக்கு செய்ய, தங்கத்தினாலான 108 பூக்களை அவனுக்கு (சொர்ண புஷ்பம்) காணிக்கையாக தருவதாக வேண்டிக்கொண்டார்கள். ஆனால், எங்கள் நிதிநிலைமை ஒத்துழைக்காததால் 108 பூக்களில் சில பூக்களை மட்டும்தான் என் கொள்ளுத் தாத்தாவால் சேர்க்க முடிந்தது. அவருக்கு பிறகு என் தாத்தா சிறிதளவு பூக்களைச் சேர்த்தார். பின்னர் என் அப்பா தன் காலத்தில் சிறிதளவு பூக்கள் சேர்த்தார். இப்போது நான் என் காலத்தில் அதை நிறைவு செய்திருக்கிறேன்” என்று கூற, அச்சரியத்துடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தேவஸ்தான செயல் அலுவலர், “என்ன, நீங்கள் 108 தங்கப் பூக்களைச் சேர்த்துவிட்டீர்களா?'' என்றார்.

 

 

திருப்பதி திருமலையின் அழகிய தரிசனத்தை இந்த வீடியோவில் காணவும்

“ஆம்!” என்ற ஷேக் மஸ்தான்,  “ஐயா… மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் பூக்களைச் சேர்த்திருக்கிறோம். ஒவ்வொரு பூவும் 23 கிராம் எடையுள்ளது!” (கிட்டத்தட்ட ஒரு பூவும் மூன்று சவரன். 108 பூக்களின் மொத்த எடை சுமாராக இரண்டரை கிலோ)
“நாங்கள் உங்கள் அனைவரையும் கைகூப்பி கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த ஏழைகளிடமிருந்து ஸ்ரீநிவாசனுக்கு அன்புக் காணிக்கையாக இந்த மலர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை அஷ்டோத்திரம் சொல்லும்போதோ அல்லது வேறு ஏதேனும் சேவையின்போதோ பயன்படுத்தவேண்டும் என்பதே. எங்கள் கோரிக்கையைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டால், எங்கள் குடும்பத்தினர் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம். இந்த வேண்டுதலை நிறைவேற்றுவதன் மூலம் எங்கள் தாத்தாவின் ஆன்மா நிச்சயம் சாந்தியடையும். இதுதான் நான் சொல்ல விரும்பியது. இப்போது முடிவை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்” என்று சொல்லி முடித்தார்.
சற்று நேர அமைதிக்குப்பின் செயல் அலுவலர், “எவ்வித நிபந்தனையுமின்றி ஏழுமலையானுக்கு நீங்கள் கொண்டுவந்திருக்கும் காணிக்கையை ஏற்றுக்கொள்கிறோம். வெங்கடேசப் பெருமாள் சேவையில் பயன்படுத்துவோம் என்று உறுதியளித்தார். அதன்படியே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணி அளவில், திருமலையில் அஷ்டதள பாத பத்மாராதனை எனப்படும் ஆர்ஜித சேவை துவக்கப்பட்டது.

1984-ல் திருமலையில் ஏழுமலையான் சந்நிதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இன்றளவும் நடக்கிறது.
திருமலை தேவஸ்தானத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றிய இந்த ஆர்ஜித சேவை, காலங்காலமாக ஏழுமலையான் மீது பக்தி செலுத்தி வந்த ஒரு குடும்பத்தின் கோரிக்கையையும் நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, ஜாதி மத பேதமின்றி அனைவரையும் அந்த ஏழுமலையான் ரட்சித்து வருகிறான் என்பதையும் பறைசாற்றுகிறது.

vikatan

  • தொடங்கியவர்

ட்விட்டரில் 'பல்பு' வாங்கிய சோயப் அக்தர்

எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பாகிஸ்தானிய பெண்னான சாமினா பயிக்-வுடன் புகைப்படம் எடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் பாகிஸ்தானின் முன்னால் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். அவர் புகைப்படத்துடன், சாமினாவைச் சந்தித்த தருணத்தை விவரித்து ஆங்கிலத்தில் எழுதி இருந்தார். ஒரே பிரச்னை, அவர் ஆங்கிலத்தில் என்ன எழுதி இருந்தார் என்பது தான் யாருக்கும் விளங்கவில்லை. விடுவார்களா, நம் மக்கள். இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் சேர்ந்து வறுத்தெடுத்து விட்டனர்.

Shoib%201_16379.JPG

பின்னர், அந்த ட்வீட்டை சரியான ஆங்கிலத்தை விவரித்து ரீ-ட்வீட் செய்திருந்தார். இம்முறை, புரியும்படி. கீழே, இரண்டு ட்வீட்களின் படங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களே பாருங்களேன்.

Shoaib%202_16572.JPG

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

ஒக்டோபர் -25

 

1147 : முதலாம் அஃபொன்சோ தலை­மையில் போர்த்­து­கே­யர்கள் லிஸ்பன் நகரைக் கைப்­பற்­றினர்.

 

1415 : அஜின்கோர்ட் நகரில் இடம்­பெற்ற போரில் இங்­கி­லாந்தின் ஐந்தாம் ஹென்­றியின் படைகள் பிரான்ஸைத் தோற்­க­டித்­தன.

 

616 : டச்சு கடற்படைக் கப்டன் டேர்க் ஹார்ட்டொக், அவுஸ்­தி­ரே­லி­யாவில் கால்­ப­தித்த இரண்­டா­வது ஐரோப்­பி­ய­ரானார்.  மேற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் டேர்க் ஹார்ட் டொக் தீவு அவரது பெயரால் அழைக்­கப்­ப­டு­கிறது.

 

835bindunuwewa5.jpg1760 : மூன்றாம் ஜோர்ஜ் பெரிய பிரித்­தா­னி­யாவின் மன்­ன­ரானார்.

 

1900 : தென்­ ஆ­பி­ரிக்­காவின் டிரான்ஸ்வால் மாநி­லத்தை ஐக்­கிய இராச்­சியம் இணைத்­துக்­கொண்­டது.

 

1918 : அலாஸ்­காவில் பிரின்சஸ் சோஃபியா என்ற கப்பல் மூழ்­கி­யதால் 353 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

924 : இந்­தி­யாவில்  பிரித்­தா­னி­யரால் சுபாஷ் சந்­திரபோஸ் கைது செய்யப்பட்டார்.

 

1935 : ஹெயிட்­டியில் சூறா­வளி மற்றும் வெள்ளம் கார­ண­மாக 2,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1936 : ஹிட்லர் மற்றும் முசோ­லினி இணைந்து ரோம்- பேர்லின்  என்ற கூட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­தினர்.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: பிலிப்­பைன்ஸில் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் ஜப்­பா­னுக்கும் இடையில் வர­லாற்றின் மிகப்­பெ­ரிய கடற்­சமர் இடம்­பெற்­றது.

 

1945 : இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கூட்டு நாடு­க­ளிடம் சர­ண­டைந்­ததைத் தொடர்ந்து சீனக் குடி­ய­ரசு தாய்­வானை இணைத்துக் கொண்­டது.

 

1962 : ஐ.நா.வில் உகண்டா இணைந்­தது.

 

1962 : தென்­னா­பி­ரிக்­காவில் நெல்சன் மண்­டேலாவுக்கு 5 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறைக்கு அனுப்­பப்­பட் டார்.

 

1971 : ஐ.நா­வி­லி­ருந்து சீனக் குடி­ய­ரசு வெளி­யேற்­றப்­பட்டு, மக்கள் சீன குடி­ய­ரசு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

 

1983 : ஐக்­கிய அமெ­ரிக்­காவும் அதன் கரி­பியன் கூட்டு நாடு­களும் கிர­னா­டாவை முற்­று­கை­யிட்டு அதனைக் கைப்­பற்­றின.

 

1991 : யூகோஸ்­லா­விய இரா­ணுவம் ஸ்லோவே­னி­யாவில் இருந்து முற்­றாக வெளி­யே­றி­யது.

 

2000 : பண்­டா­ரவளை, பிந்­து­னுவெவ சிறையில் இடம்­பெற்ற தாக்­கு­தலில் தமிழ் கைதிகள் 26 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2007 : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது இரட்டை அடுக்கு விமானம் ஏர்பஸ் ஏ380 தனது முதலாவது சேவையை சிட்னிக்கு ஆரம்பித்தது.

 

2009 : ஈராக் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 155 பேர் பலியானதுடன் 721 பேர் காயமடைந்தனர்.

 

metronews.lk

  • தொடங்கியவர்

 

“உயிர் காக்கும் நாய்கள்” - காணொளி
ஆபத்திலிருந்து காப்பாற்றும் மீட்புதவியாளர்களாய்.....

  • தொடங்கியவர்

தீபாவளியை நிஜமாகவே ‘ஹாப்பி தீபாவளி’ ஆக்கும் 10 விஷயங்கள்!

diwali_15217.jpg

பொங்கலுக்கும் தீபாவளிக்கும் இருக்கும் வித்தியாசங்களே குறைந்து கொண்டு வருகின்றன. எல்லா பண்டிகை நாட்களும் ஒரே டெம்ப்ளேட்டில் அடங்கிவிடுவது பெரும் சோகம்.   இதற்கு நடுவில் பண்டிகை நாட்களை பெரும் சுமையாக கருதும் ஆட்களும் அதிகமாகிக் கொண்டு வருகின்றனர். அதை தவிர்க்க, பண்டிகைகளை சந்தோஷத்துடன் கழிக்க, கொஞ்சம் திட்டமிட்டால் போதும். 

1. ப்போதுமே தொடர் விடுமுறை நாட்களில் நாம் சந்திக்கும் முக்கியப் பிரச்சினை அலைமோதும் கூட்டம். கடைத் தெருக்கள், பேருந்து நிலையங்கள் போன்ற நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு குழந்தைகள், முதியவர்களை அழைத்துச் செல்வதை தவிருங்கள்.

 Chennais-traditional-shopping-districts2

2. தீபாவளிக்கு முதல் நாள் இரவில் ஊருக்கு கிளம்புபவராக இருந்தால், முடிந்த வரையில் மாலையே பேருந்து நிலையத்துக்கு சென்று விடுவது நல்லது.. சென்னை போன்ற நகரங்களில் இருந்து கிளம்புபவராக இருந்தால் உங்கள் ஊருக்கு எந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து கிளம்பப் போகிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது அவசியம். 

3. தீபாவளி என்றாலே இனிப்பு, புத்தாடை, பட்டாசு என களைகட்டும். குழந்தைகளுக்கு புத்தாடைகள் எடுக்கும் பொழுது எளிதில் நெருப்பினால் உருகக்கூடிய நைலான் வகை துணிகளைத் தவிருங்கள். அதற்குப் பதில் காட்டன் துணிகளை அணிந்து கொள்ள வைக்கலாம். ஒரு வாளியில் தண்ணீரும்,மணலும், முதலுதவி பெட்டியும் தயாராக வைத்திருங்கள்.பட்டாசு வெடிக்கும் பொழுது பெரியவர்கள் துணை அருகில் அவசியம் இருக்க வேண்டும்.  

4. தீபாவளியில் தவிர்க்கவே முடியாத ஒரு விஷயம் என்றால் அது பட்டாசு தான். ஆனால் இந்த கொண்டாட்டங்களுக்கு இடையே நம் வீட்டு செல்லப் பிராணிகளை மறந்து விடுவோம். சாதாரணமாக மனிதர்களின் கேட்கும் திறனை விட விலங்குகளின் கேட்கும் திறன் ரொம்பவே அதிகம். ஒரு சின்ன சத்தம் கூட அவைகளுக்கு துல்லியமாக கேட்கும். முடிந்த வரையில் அதிக ஒலி எழுப்பாத பட்டாசுகளை தேர்ந்தெடுங்கள். செல்லப் பிராணிகளை சத்தம் கேட்காத அறைகளில் விடுங்கள். தீபாவளியை உங்கள் சுற்றத்தோடு கொண்டாடும் அதே நேரம் உங்கள் செல்லப்பிராணிகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். 

5. பேருந்து, ரயில்களில் முன் பதிவில்லாமல் பயணம் செய்ய நேர்ந்தால் கூட்ட நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு ஏறுவதை தவிர்க்க வேண்டும். அப்படி அவசரத்தில் ஏறும்பொழுது நம்மையே அறியாமல் விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஏனென்றால் இது எல்லோருக்குமான தீபாவளி தானே பாஸ்.

20-happy-diwali.preview_15187.jpg

6. தீபாவளி நேரத்திலும் சரி மற்ற நேரங்களிலும் சரி பட்டாசை தவிர்த்து தீபாவளி கொண்டாடும் பல்வேறு முன்மாதிரி கிராமங்கள் தமிழகத்தில் உள்ளன. பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடும் பழக்கம் ஆரம்பத்திலிருந்தே நம்மிடம் இருப்பதால் பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாடுவது என்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் காற்றில் நச்சு கலக்கும், நம் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பட்டாசுகளை வெடித்து தான் ஆக வேண்டுமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். 

7. தீபாவளிக்கு ஊருக்கு செல்ல திட்டமிடும் பொழுது ஒரு நாள் முன்னதாகச் செல்லும் வகையிலும், திரும்புவதையும் ஒரு நாள் முன்னதாகவே இருக்குமாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இப்படி முறையாக திட்டமிட்டப் பயணத்தால் பண்டிகையை நிறைவாக டென்ஷன் இல்லாமல் கொண்டாடிய திருப்தி இருக்கும். 

8.ல்லா நேரமும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பிலேயே உலாவிக் கொண்டு இருக்க பழக்கமாகி விட்டோம். அதை இந்த தீபாவளியில் தவிர்த்து உங்கள் குடும்பத்தோடு பேசிக்கொண்டும் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்யும் அம்மாக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளையும் செய்து அவர்களின் வொர்க் பிரஷரையும் குறையுங்கள் பாஸ். அதுதான் நிஜமான ஹாப்பி தீபாவளி. 

9. ரண்டு பேர் ஒன்றாக எங்கேயாவது சென்றாலே செல்பி எடுத்து அப்லோடி விடுவோம். குடும்பத்தோடு ஒன்றாக கொண்டாடும் தீபாவளியில் சும்மா இருப்போமா என்ன?. ஆனால் பட்டாசை கையில் பற்ற வைத்துக் கொண்டு செல்பி தட்டுவது. புஸ்வானத்தை தலையில் வைத்து எடுப்பது போன்ற விளையாட்டுகள் வேண்டாமே. அம்மா செய்து கொடுத்த இனிப்பை சாப்பிட்டபடி எடுக்கும் செல்பிக்கு மட்டுமே லைக்ஸ் என்ற உறுதிமொழியை ஏற்போம் : 

diwali%201_15084.jpg       

10.ல்லா நாட்களிலும் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக போடும் படங்களையும். திரைக்கு வந்து சில நாட்களே ஆன படங்களையும் பார்க்கத்தான் போகிறோம். தீபாவளி சமயத்தில் நாலு பெட்டிக்குள் உங்கள் நாளை தொலைத்து விடாமல். குடும்பத்தோடு ஓய்வு நேரத்தை செலவிடுங்கள். நெடுநாள் சந்திக்காத உறவினர் வீட்டுக்கோ, நண்பர்களின் வீட்டுக்கோ ஒரு திடீர் விசிட் அடித்து சர்ப்ரைஸ் சந்தோஷம் கொடுத்துப் பாருங்களேன். இந்த தீபாவளி உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் மறக்க முடியாத நாளாக இருக்கும்!

 

vikatan

  • தொடங்கியவர்

ஹம்மரில் தோனி...வாவ் சொன்ன கீவிஸ்

gp_19109.jpg

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதும் நான்காவது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் நாளை நடக்கிறது. இதற்காக இரு அணியினரும் ராஞ்சிக்கு சென்ற போது, கேப்டன் தோனி மட்டும் தனது ஹம்மர் காரில் ரைட் அடித்துள்ளார். அப்போது பஸ்ஸில் வந்து கொண்டிருந்த நியூஸி., அணியின் டாம் லதன் மற்றும் ராஸ் டெய்லர் ஹம்மரில் வந்த தோனியை பார்த்து வாவ் என ரியாக்ட் செய்துள்ளனர். இந்த ஃபோட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

_19330.jpg

vikatan

  • தொடங்கியவர்

 

இரண்டு முறை பிறந்த குழந்தை!

BBC

  • தொடங்கியவர்

ஷாருக்-கவுரியின் 25 வருட பயணம்

sharuk_19128.png

ஷாருக்கான் மற்றும் கவுரி கான் இன்று 25 ஆவது திருமண தினத்தை பெருமகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். 

ஷாருக்கானின் வளர்ச்சிக்கு காரணமான கவுரி கான், உள்ளறை அலங்காரத்தை தொழில்ரீதியாக செய்துகொண்டிருக்கும் பிரபல பெண்களில் குறிப்பிடத்தக்கவர். 

vikatan

  • தொடங்கியவர்

தெக்கத்தி சினிமா ரசிகர்களின் திரிலோக நாயகிகள் இவர்கள்!

மல்லுவுட்: தீப்தி சதி

p99b.jpg

கொச்சியில் பிறந்த கொழுக்மொழுக் பேபி. மாடலாகத் தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர், 2012-ல் `மிஸ் கேரளா' பட்டம் வென்றார். அப்போது அவருக்கு வயது 18. அதன்பின் `நேவி குயின்', `மிஸ் டேலன்டட்' என எக்கச்சக்க அழகிப் போட்டிகளில் வென்றார். சும்மா இருப்பார்களா சேட்டன்கள்? `நீ - நா' என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தார்கள். அதன்பின் தெலுங்கு, கன்னடத்தில் வெளியான `ஜாகுவார்' படத்தில் நடித்தார். கதக், பரதநாட்டியம் கூடவே சங்கீதமும் தெரியும். நீச்சலடிக்க ஆரம்பித்தால் சுறாவுக்கே சவால் விடுவார். #ஆல் இன் ஆல் அழகி!

டோலிவுட்: ஷீனா ஷகாபடி

p99.jpg

இந்தக் குளுகுளு வெண்ணிலா அறிமுகமானது `தேரே சாங்' என்ற பாலிவுட் படத்தில். வெள்ளந்தி முகம், வெள்ளாவியில் வெளுத்த நிறம் என்பதால் ரசிகர்களுக்குப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது. `பிண்டாஸ்' என்ற படம் மூலம் ஆந்திரவாலாக்களிடம் அறிமுகமானவருக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகள் பிரேக். பின்னர் பழைய ஃபார்முக்கு வந்தவர் கன்னடம், தெலுங்கு, இந்தி என மாறி மாறி வெளுத்து வாங்கினார். இப்போது அடுத்த பிரேக். நல்ல வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார். #சீக்கிரமே...

சாண்டல்வுட்:  நிதி சுப்பையா

p99a.jpg

குடகு மாவட்டத்தில் பிறந்த ஹோம்மேட் சாக்லேட். இன்ஜினீயரிங் படிப்பைப் பாதியில் விட்டவர் சினிமா உலகில் கால் வைத்தார். முதல் பிரேக் `ஃபேர் அண்ட் லவ்லி' விளம்பரத்தில் நடித்ததன் மூலம் கிடைத்தது. `அபிமானி' என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானவர், `பஞ்சாரங்கி', `வீரபாகு', `அண்ணா பாண்ட்' என வரிசையாக கல்லா கட்டினார். இவற்றின் மூலம் பாலிவுட் வாய்ப்புகளும் குவிய, `ஓ மை காட், `அஜாப் கசாப் லவ்' என அங்கேயும் வெளுத்து வாங்கினார். அம்மணிக்கு இந்த ஆண்டு மட்டும் நான்கு படங்கள். #மயில் காட்டுல மழை!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.