Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஒக்டோபர் - 26

 

1640 : ஸ்கொட்­லாந்­துக்கும் இங்­கி­லாந்து முதலாம் சார்ல்ஸ் மன்­ன­னுக்கும் இடையில் சமா­தான ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

 

836park-chung-hee-1.jpg1776 : அமெ­ரிக்கப் புரட்­சிக்கு ஆத­ரவு திரட்டும் நோக்கில் பெஞ்­சமின் பிராங்­கிளின் பிரான்ஸ் புறப்­பட்டார்.

 

1859 : பிரிட்­டனின் வேல்ஸ் பிராந்­திய கடற்­ப­கு­தியில் றோயல் சார்ட்டர் என்ற கப்பல் கவிழ்ந்­ததில் 459 பேர் இறந்­தனர்.

 

1876 : இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையே ரயில் சேவையை ஆரம்­பிப்­ப­தற்­கான தீர்­மானம் பிரித்­தா­னிய அர­சரால் மேற்­கொள்­ளப்­பட்­டது.

 

 1905 : சுவீ­ட­னிடம் இருந்து நோர்வே சுதந்­திரம் பெற்­றது.

 

1917 : முதலாம் உலகப் போர்: இத்­தாலி கபொ­ரேட்டொ என்ற இடத்தில் ஜேர்­மனி மற்றும் ஆஸ்­தி­ரியா நாடு­க­ளுடன் மோதி கடும் தோல்­வியைத் தழு­வி­யது.

 

1917 : முதலாம் உலகப் போர்: பிரேஸில் போரில் குதித்­தது.

 

1947 : இந்­தி­யா­வுடன் காஷ்­மீரை இணைப்­ப­தற்கு காஷ்மீர் மகா­ராஜா சம்­ம­தித்தார்.

 

1947 : ஈராக்­கி­லி­ருந்து பிரித்­தா­னிய இரா­ணுவம் வெளி­யே­றி­யது.

 

1955 : ஆஸ்­தி­ரி­லி­யா­வி­லி­ருந்து கடைசி கூட்­டுப்­படை துருப்­புகள் வெளி­யே­றின. ஆஸ்­தி­ரியா அணி­சேரா நாடாக தன்னை அறி­வித்­தது.

 

1956 : ரஷ்ய இரா­ணுவம் ஹங்­கே­ரியை முற்­று­கை­யிட்­டது.

 

1977 : பெரி­யம்மை நோய் தாக்­கிய கடைசி நோயாளி சோமா­லி­யாவில் அடை­யாளம் காணப்­பட்டார். உலக சுகா­தார அமைப்பு இத்­தி­னத்தை பெரி­யம்­மையின் கடைசி நாளாக அறி­வித்­தது.

 

1979 : தென் கொரிய ஜனா­தி­பதி பார்க் சோங்-ஹீ, இரா­ணுவத் தள­பதி கிம் ஜே-கியூ என்­ப­வரால் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

 

1984 : "பேபி ஃபே" (ஸ்டெஃபானி ஃபே) எனும் அமெ­ரிக்க குழந்­தைக்கு பபூன் என்ற மனிதக் குரங்­கி­லி­ருந்து பெறப்­பட்ட இதயம் பொருத்­தப்­பட்­டது. இச்­சத்­தி­ர­சி­கிச்­சையின் பின் இக்­கு­ழந்தை 21 நாட்கள் உயிர் வாழ்ந்­தது.

 

1994 : ஜோர்­தானும் இஸ்­ரேலும்  சமா­தான ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­டன.

 

1995 : பலஸ்­தீன இஸ்­லா­மிய ஜிஹாட் இயக்­கத்தின் தலைவர்  ஃபாதி ஷிக்­காகி, மால்­டாவில் உள்ள விடுதி ஒன்றில் இஸ்­ரே­லியன் மொசார்ட் அமைப்­பி­னரால் கொல்­லப்­பட்டார்.

 

2000 : ஐவரி கோஸ்ட் டின் ஜனா­தி­பதி ரொபேர்ட் கூயெய் பத­வி­யி­றக்­கப்­பட்டு லோரெண்ட் குபாக்போ புதிய ஜனா­தி­ப­தி­யானார்.

 

2001 : ஐக்­கிய அமெ­ரிக்கா "அமெ­ரிக்க தேசப் பற்று சட்­டத்தை" நிறை­வேற்­றி­யது.

 

2002 : மொஸ்­கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்­னியா தீவி­ர­வா­திகள் மூன்று நாட்­க­ளாகப் பிடித்து வைத்­தி­ருந்த பணயக் கைதிகள் விவ­காரம் முடி­வுக்கு வந்­தது. 150 பணயக் கைதி­களும் 50 தீவி­ர­வா­தி­களும் கொல்­லப்­பட்­டனர்.

 

metronews.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பிரிட்டன் பிரதமர் கொண்டாடிய தீபாவளி

பிரிட்டன் பிரதமர் தெரசா மே, இந்திய பிரதிநிதிகளுடன் தீபாவளியைக் கொண்டாடினார். அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் இருக்கும், விளக்கை ஏற்றி கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, அங்கு கூடியிருந்த இந்தியர்கள் மத்தியில் பேசுகையில், 'தீபாவளி நம் தேசத்தின் முக்கிய பங்கு வகிக்கிறது.' என்று கூறினார்.

May%202%20400_11290.jpg


அவர் மேலும் இந்தியாவுடனான உறவு குறித்து பேசுகையில், 'நான் அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பிரதமராக பதவியேற்றதில் இருந்து ஐரோப்பாவைத் தவிர்த்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போகும் முதல் நாடு இந்தியா. இந்த பயணம், நம் இரு நாட்டு உறவுகளுக்கான கொண்டாட்டமாக இருக்கும்' என்றும் கூறினார்.

vikatan

  • தொடங்கியவர்
நெதர்லாந்தில் 'கடற்கன்னிகளுக்கான' நீச்சல் பயிற்சிப் பாடசாலை
2016-10-26 12:29:29

நெதர்லாந்தில் கடல்கன்னிகளாக விரும்புபவர்களுக்காக கடல்கன்னி நீச்சல் பயிற்சிப் பாடசாலையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. “பிரின்சஸ் ஏரியெல் எனும் கடற்கன்னி பாத்திரம்” இடம்பெற்ற த லிட்டில் மேர்மெய்ட் எனும் ஹொலிவூட் திரைப்படம்  1989 ஆம் ஆண்டு வெளியாகியது.

 

20219380409-01-02.jpg

 

அதன்பின் இருபது வருடங்களுக்கு மேலாக பல இளம் பெண்களும் ஆண்களும் கடற்கன்னியாக வேண்டுமென்ற ஆவலை வெளிப்படுத்தினர். இத்தகைய நபர்களின் கனவை நனவாக்குவதற்கும் உதவும் ஒரு முயற்சியாக நெதர்லா ந்தில் கடற்கன்னி பயிற்சிப் பாடசாலையை யுவதியொருவர் ஸ்தாபித்துள்ளார்.

 

27 வயதான மேரிஜிக் எனும் யுவதி, கடல்கன்னி வேடம் அணிந்து பிரபல மானவர். கிறிஸ்டல் எனும் கடற்கன்னியாக இவர் அறியப்பட்டவர். இப் பாட சாலையில்  மாணவ, மாணவிகள் கடற்கன்னி வேடம் அணிந்து நீச்சல் பயிற்சி களில் ஈடுபடுகின்றனர்.

 

20219381501-01-02.jpg

 

பாதங்கள் இணைத்துக் கட்டப்பட்ட நிலையில் நீந்துவதற்கு இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. நெதர்லாந்தில் கடற்கன்னிகளுக்கான முதலாவது தொழிற்சார் பாடசாலை என இது வர்ணிக்கப்படுகிறது.

 

இது குறித்து மேரிஜிக் கூறுகையில், “இந்த நீச்சல் முற்றிலும் நுட்பம் சார்ந்தது. கால்களை இணைத்துக் கொண்டு முழங்கால்களை அதிகம் மடிக்காமல், வயிற் றுத் தசைகளைப் பயன்படுத்தி டொல்பின் போன்று நீந்துவதற்குப் பழக வேண் டும்” என அவர் கூறியுள்ளார்.

 

20219381500-01-02.jpg

 

கடற்கன்னியின் வால் போன்று உருவம் கொண்ட 15 கிலோ நீச்சல் உடை யொன்றை அணிந்து கொண்டு நீந்துவதற்கு  “கடற்கன்னி” கிறிஸ்டல் பயிற்சி யளிக்கிறார்.

 

இவ்வாறு கடற்கன்னி போல் நீந்தப் பழகுவதற்கு பல வாரங்கள் அல்லது பல மாத கால பயிற்சிகள் தேவைப்படலாம் என அவர் கூறுகிறார். கடற்கன்னி வேடத்தில் நீச்சல் குளத்தில் தான் விரும்பும் இடமெல்லாம் தன்னால் நீந்திச் செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

“அது ஒரு அற்புமான அனுபவம். தண்ணீரில் நான் மேலும் அழகாக தோற்ற மளிப்பதாக உணர்கிறேன்” எனவும் கிறிஸ்டல் தெரிவித்துள்ளார்.

metronews.lk

  • தொடங்கியவர்

14711304_1166519206730105_74826720306021

மைனா மூலம் மனத்தைக் கவ்வி தமிழின் முன்னணி நடிகையாக மாறிய அமலா பாலின் பிறந்தநாள்.

Happy Birthday Amala Paul

  • தொடங்கியவர்

திருக்குறளுக்கு ஒரு ட்ரெண்டி உரை! #WednesdayWisdom

569462547_23500.jpg

பேஸ்புக்கில் பக்கம்பக்கமாக ஸ்டேட்டஸ் போட்டு சொல்லவேண்டிய மிகமுக்கிய கருத்துகளை இரண்டு வரி ட்வீட்டுகளாக கொடுத்தவர் திருவள்ளுவர். என்றைக்குமே எக்ஸ்பைர் ஆகாத  குறளடிகளில், இன்றைய ட்ரெண்டிற்கான சில சாம்பிள் உரை இதோ! 


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு.  #423 


இன்றைய இணையசூழலில் யார் எதைவேண்டுமானாலும் கிளப்பிவிடலாம். அதில் பல நம் காதுகளையும் எட்டலாம். வாட்ஸ்ஆப்பில் வரும் அனைத்தையும் நம்பும் சிகமணியாக இல்லாமல், உண்மை என்னவென்று கண்டுபிடிப்பதே உணமையான புத்திசாலித்தனம்.இல்லைன்னா அப்பல்லோ மாதிரி கேஸ்களில் மாட்டவாய்ப்புண்டு பாஸ்! 


பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின். #292 


ஆயிரம் பொய்சொல்லி கல்யாணம் பண்ணலாம்னு சொல்றமாதிரி, யாரையும் பாதிக்காத நன்மைக்காக பொய் சொல்வது தவறில்லை. கோ கிளைமாக்ஸ்ல கே.வி ஆனந்த் இதைதான் சொல்லவருகிறார்! 


அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது 
அஞ்சல் அறிவார் தொழில்.#428 


பயப்படவேண்டிய முக்கியமான விஷயங்களுக்கு “பயமா எனக்கா? நாங்கலாம் சுனாமிலயே ஸ்விமிங்க போடுறவைங்க"னு வெட்டிவசனம் பேசாம, பயப்பட்டு சிறந்த தீர்வு என்னவென்று கண்டுபிடிப்பதே செம்ம கெத்து! ஒகேவா சுனாமி பாய்ஸ்? 


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.#151 


இப்போலாம் நீங்க சின்னதா வளர்ந்துட்டா கூட, கழுவி ஊத்துறதுக்குனு,  யூடியூப்லையும், ட்விட்டர்லையும் நாலு பேர் கண்டிப்பா கிளம்பி வருவாங்க. அவங்க மேல கோபப்படாம பொறுமையா இருங்க. என்னைக்கும் சூரியன் நாயை பார்த்து திருப்பிகுலைக்காது. 

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு.#786 


பேஸ்புக்கில் மட்டும் போலியாக ஸ்மைலி அனுப்புவது உண்மையான நட்பில்லை, இருவர் மனதிலும் அதே ஸ்மைல் நிலைபெற்றிருப்பதே உண்மையான நட்பாம். பேஸ்புக்கில் போலி அக்கௌன்ட்களும் அதிகம் ப்ரோ, ஜாக்கிரதை! 

காதல் அவரிலர் ஆகநீ நோவது 
பேதைமை வாழியென் நெஞ்சு#1242 


நாம் காதலிக்கும் பையனோ/பொண்ணோ நம்மிடம் காதல் இல்லாமல் இருக்க, நாம் மட்டும் அவர்களை நினைத்து பீல் பண்ணுவது நம்முடைய அறியாமை தானாம்! நோட் பண்ணுங்க சூப் பாய்ஸ்! 


இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.#100 


இங்கிலீஷ்னாலும் சரி, தமிழ்னாலும் சரி நல்ல வார்த்தைகள் ஆயிரம் இருந்தும் நுனிநாக்கில் WTF, STF போன்ற வார்த்தைகளை வைத்துகொண்டே அலைவது , ப்ரீ வை-ஃபை இருக்கும்போதும் மொபைல் டேட்டா யூஸ்பண்றதுக்கு சமம்! 

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று.#108 


லைக் பண்ணவன மறக்காம இருக்கணும், ட்ரோல் பண்ணவன உடனே மறந்துறணும். 

  • தொடங்கியவர்

14608715_1166521610063198_65366184219666

அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதியாக வரும் வாய்ப்புக் கொண்ட ஹிலாரி கிளின்டனின் பிறந்தநாள்.
இவர் அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியாக இருந்தவர்.
அமெரிக்காவின் உள்துறை ராஜாங்க செயலாளராகவும் கடமையாற்றியவர்.
Happy Birthday Hillary Clinton

அமெரிக்க அதிபர் தேர்தலின் முதல் பெண் வேட்பாளர் ஹிலரி பிறந்தநாள்!

hillar102016_12429.jpg

இவர் ஐக்கிய அமெரிக்காவின் 42ஆவது குடியரசுத் தலைவரான பில் கிளின்டனின் மனைவி ஆவார். 1993 முதல் 2001 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் "முதல் சீமாட்டி" என்னும் பட்டத்துடன் இருந்த பெருமைக்கு உரியவர்.

இவர்  அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றியவர். அமெரிக்க செனட் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2008 ல் நடந்த  அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் சார்பாக  தலைவராக தேர்வாக  வேட்பாளராக போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார்.

இலினொய் மாநிலத்தைச் சேர்ந்த இவர்  1973 ஆம் ஆண்டு யேல் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக பணியாற்றினார். 1983, 1992 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவின் 100 திறமை மிக்க  வழக்கறிஞர்களுள் ஒருவராகவும் அறிவிக்கப்பட்டார். 1979 முதல் 1981 வரையும், 1983 முதல் 1992 வரையும் ஆர்கன்சஸ் மாநிலத்தின் முதன் பெண்மணியாக  குழந்தைகளின் பராமரிப்புத் தொடர்பான பல நிறுவனங்களிலும் பணிபுரிந்தார்.

ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்மணியாக  கொள்கைகளில் முன்னணியில் இருந்து செயல்பட்டார். 1994 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிகாவின் செனட் அவை அங்கீகாரம் மறுத்த கிளின்டன் சுகாதாரத் திட்டம் (Clinton health care plan) இவரது முக்கிய பங்களிப்பாகும். குழந்தைகள் நல பாதுகாப்புத் திட்டத்தையும் உருவாக்கினார்.

அமெரிக்காவில் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளரும் இவரே ஆவார் . "ஹேப்பி பர்த்டே ஹிலரி"!!!.

vikatan

  • தொடங்கியவர்

4 வயதில், 7 மொழிகள் பேசி அசத்தும் ரஷ்யச் சிறுமி!

baby1_13503.jpg

நான்குவயதில்தான் குழந்தைகள் A,B,C,D கற்க ஆரம்பித்திருப்பார்கள். ஆனால் 7 மொழிகளில் பேசி உலகையே பிரமிக்கவைத்திருக்கிறார் ரஷ்ய தலைநகரான மாஸ்கோவைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி பெல்லா தெவ்யாகிண்டா. சமீபத்தில் ரஷ்யா டி.வி சேனல் நடத்திய டேலென்ட் ஷோவில் பங்குகொண்ட பெல்லா, ரஷ்யா, ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மனி, சீனா மற்று அரபு மொழிகளில் பேசி அரங்கத்தில் அதிர்வலைகளை ஏற்படித்தியிருக்கிறார்.

7 விதமான மொழிகளைப் பேசக்கூடிய பிரதிநிதிகள் மேடையில் வரிசையாக நின்றுகொண்டு, பெல்லாவை அழைத்து தனித்தனியாக ஒவ்வொரு மொழியிலும் கேள்விகள் கேட்டனர். அந்தந்த மொழியை நன்றாகப் புறிந்துகொண்ட பெல்லா, டக் டக்கென்று பதில் அளித்து நடுவர்களை ஆச்சரியப்படுத்தி நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தார். ''ஒருவர் ஏதேனும் மற்ற மொழியை கற்று பேசவேண்டும் என்றால் வருடக்கணக்கில் பிடிக்கும். அப்போதும் தட்டுத் தடுமாரித்தான் பேசுவார்கள். ஆனால் பெல்லா, இந்த சிறுவயதிலேயே இத்தனை மொழிகள் பேசுகிறாரே, அவரால் மட்டும் எப்படி முடிந்தது'' என்று நடுவர்கள் பெல்லா அம்மாவிடம் கேட்டனர். அதற்கு ''முதலில் பெல்லாவுக்கு நானும் அவங்க அப்பாவும் ஆங்கிலம் கற்றுத்தர ஆரம்பித்தோம். அப்போது பெல்லாவுக்கு வயது இரண்டு.

baby_13241.jpg

நாங்கள் சொல்லிக் கொடுப்பதை டக் டக்னு பிடித்துக்கொண்டார். அவளிடம் இருக்கும் ஆர்வத்தைக் கண்டு பிரமித்தோம், பிறகு மெதுவாக மற்ற மொழிகளை கற்றுத்தரவேண்டும் என்று தீர்மானித்தோம். அப்பவே ரஷ்ய மொழியோடு ஆங்கிலமும் பேச ஆரம்பித்துவிட்டார். பிறகு மற்ற மொழிகளுக்கு டியூஷன் வைத்து கற்றுத்தர ஆரம்பித்து நான்கு வயதிலேயே ஏழு மொழிகளை கற்று ஆச்சர்யப்படவைத்தார் பெல்லா.

தற்போது ரஷ்யா தவிர மற்ற மொழிகளை கற்க ஆறு மணி நேரம் செலவிடுகிறார். காலையில் 10 மணி ஆரம்பித்து 1 மணிவரையிலும், மறுபடியும் 5 மணி முதல் 8 மணிவரையிலும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வருகிறார். பிள்ளைகள் இவ்வளவு வகுப்புகள் கற்கவேண்டும் என்றால் முடியாத காரியம். ஆனால் பெல்லாவின் மெமரி பவர் கண்டு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் அசந்துபோகிறார்கள். அதுமட்டும் அல்ல சாதாரண மாணவர்களைப் போல் பள்ளி பாடங்களைப் படித்தும் மற்ற மாணவர்களோடு ஓடி ஆடி விளையாடி வருகிறார்.

ஏழு மொழிகளை பேசிய சிறுமியின் வியக்கவைக்கும் சாதனையைக் கண்டு நடுவர்களையும், பார்வையாளர்களையும் பிரமிக்கச் செய்த பெல்லா, அடுத்த லெவலுக்கு செலக்ட் ஆகியிருகிறார். இதில் வெற்றி பெற்றால் பெல்லாவுக்கு 20,000 டாலர்கள் பரிசாக கிடைக்கும். தற்போது யூட்யூபில் பெல்லாவின் அசத்தல் வீடியோதான் வைரல். அக்டோபர் 18-ம் தேதி வெளியான இந்த வீடியோ இதுவரை ஒன்றரை லட்சம் பேர் பார்த்து அசந்துள்ளனர்.

vikatan

  • தொடங்கியவர்

14566184_1166514816730544_10793947986553

அழகு நடிகை அசினின் பிறந்தநாள்.
மலையாளத்திலிருந்து தமிழில் வந்து வெற்றிக்கொடி நாட்டி, பின்னர் தமிழிலிருந்து ஹிந்திக்குச் சென்று அங்கும் முன்னணி இடம் பெற்ற திறமையுள்ள நடிகை.

வாழ்த்துக்கள் அசின்.

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம் 06: தீயை அணைக்கும் பூதம்

 

 
thee_3058527f.jpg
 

தீபாவளி வந்துவிட்டது. பட்டாசு வெடிக்கும்போது பக்கத்திலேயே வாளி நிறைய தண்ணீர் வைத்துக்கொள்ள அம்மா, அப்பா சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். கம்பி மாத்தாப்புகளைக் கொளுத்தி அணைப்பதற்காக அப்படிச் சொல்வார்கள் அல்லவா? மத்தாப்புகளை அணைக்க மட்டுமல்ல, தீ விபத்து ஏற்படும்போதும் தண்ணீரை ஊற்றி அணைக்கவும் செய்கிறோம். தண்ணீர் மிகச் சிறந்த தீயணைப்பான்.

பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றில் நெருப்பு தனித்துவம் மிக்கது. எப்படி? ஏனென்றால் நெருப்பை நாம் உருவாக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். மற்ற எந்த பஞ்சபூத சக்திகளையும் நம்மால் உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. அதனால்தான் பல மதங்களின் வழிபாடுகளில் நெருப்பு முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகத் திகழ்கிறது.

பாரசீகத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது ஜொராஸ்ட்ரிய மதம். இந்தச் சமயமும்கூட, ‘அகூர மஸ்தா’ என்ற தீ வழிபாட்டைப் பிரதானமாகக் கொண்டிருந்தது. வரலாற்றில் நெருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், மனித குல வாழ்வு வேறு பக்கம் திசை மாறியது.

தண்ணீர் காட்டும் நெருப்பு

சரி, நெருப்பின் மீது நீரை ஊற்றியவுடன் நெருப்பு அணைந்துவிடுகிறது அல்லவா? அங்கு என்ன விதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? கேள்வி எளிமையானதுதான்! ஆனால், கொஞ்சம் நுட்பமானது!

உண்மையில் நெருப்புக்கு நீர் பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது என்று நினைக்கிறோம். ஆனால், அறிவியல்படி நெருப்புதான் நீருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எரியும் பொருளின் மீது நீர் பட்டவுடன் அது நீராவியாக மாறுகிறது. இந்த நீராவி எரியும் பொருளிலிருந்து பெருமளவு வெப்பத்தை உள்வாங்கிக்கொள்கிறது. நெருப்பிலிருந்து வெப்பம் நீராவிக்குச் சென்றுவிடுவதால் முதலில் எரிதல் மங்கிக் குறைகிறது.

தீப்பற்றி எரியும்போது அவ்வளவு வெப்பத்தையும் நீராவி விழுங்கிவிடுமா என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.

குளிர்ந்த நீரைக் கொதிக்க வைப்பதற்கு எவ்வளவு வெப்பம் தேவைப்படுமோ, அதுபோல ஆறு அல்லது ஏழு மடங்கு வெப்பம், நீரை நீராவியாக மாற்ற தேவை. அப்படியானால், கற்பனை செய்துகொள்ளுங்கள் நீராவி எவ்வளவு வெப்பத்தை உறிஞ்சிக்கொள்ளும் என்று.

முதலில் நீராவி வெப்பத்தை உறிஞ்சிக்கொண்டவுடன் தீ தன்னுடைய சக்தியை இழந்துவிடுகிறது. உடனே எரிதலைக் குறைத்துக்கொள்ளத் தொடங்குகிறது. இதோடு முடிந்துவிடுவதில்லை. நெருப்பைச் சுற்றிலும் பல நூறு கனமீட்டர் இடத்தை நீராவி அடைத்துக்கொள்கிறது (ஒரு கன அடி தண்ணீர், நீராவியாக மாறினால்தான் அது நூறு கன அடி இடத்தை அடைத்துக்கொள்ளும் சக்தி படைத்தது).

இப்படி நெருப்பைச் சுற்றிலும் நீராவி சூழ்ந்துகொள்வதால் எரிதலுக்குத் துணைபுரியும் ஆக்சிஜன், நெருப்பை நெருங்க விடாமல் கவசம் போல சூழ்ந்துகொள்கிறது. எனவே எரிதல் முற்றிலுமாக நின்றுபோகிறது.

தீயணைப்பான்கள்

இந்த அறிவியல்தான் தீயணைப்பான் கருவிகள் தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் தீயை அணைக்கப் பயன்படும் தீயணைப்பான் கருவிகளில் நீருடன் வெடிமருந்தைக் கலந்து வைத்திருந்தார்கள். வெடிமருந்து சீக்கிரம் தீப்பிடித்து நீரை, நீராவியாக மாற்றி தீயை அணைக்க உதவியது.

தீயணைப்பான்கள் மனித குலத்துக்கு ஏதோ ஒரு வகையில் பக்க விளைவை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளன. தீயணைப்பான் கருவியில் கார்பன்-டை-ஆக்சைடு பயன்படுத்தப்பட்டால் மனிதர்களுக்கு நேரடியாகவே மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். ப்ளோரோ கார்பன்களைப் பயன்படுத்தினால் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுகிறது.

தற்போது பெரும்பாலும் சோடியம் கார்பனேட் கரைசல் தீயணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.

தீயணைப்பானின் அடிப்பகுதியில் சோடியம் கார்பனேட் கரைசலும், மேல் பகுதியில் நீர்த்த கந்தக அமிலமும் இருக்கும். தீயணைப்பானின் மூடியை உடைத்துப் பயன்படுத்தும்போது சோடியம் கார்பனேட் கரைசலும், நீர்த்த கந்தக அமிலமும் சேர்ந்து கார்பன்-டை-ஆக்ஸைடு உருவாகித் தீயை அணைக்கிறது.

தீயை அணைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்றுதானே நினைக்கிறீர்கள். ‘ஒரு விஷயம் தீ மாதிரி பரவுகிறது’ என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. அப்படியென்றால் தீ பெரிய விஷயம்தானே! தீயை அணைப்பதும் பெரிய விஷயம்தான்!

 

(காரணங்களை அலசுவோம்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

“ஒரு-ஷூ கடை” - காணொளி
ஷூவுக்கும், நீரிழிவுக்கும் என்ன தொடர்பு?

BBC

  • தொடங்கியவர்

14639680_1471849656164774_85954771855915

  • தொடங்கியவர்

14732345_10153829076050163_1753405098827

14725610_10153829076740163_2925982165032

14691121_10153829076845163_6369864164989

சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

14705636_10153829076875163_8652335488184

சிங்கப்பூர் அரசின் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்டுள்ள மெட்ரோ நிலையம்

14695498_10153829076710163_1588258156969

சிங்கப்பூரில் உள்ள பிரதான மெட்ரோ ரயில் நிலையமொன்று தீபாவளி கொண்டாட்டத்திற்காக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள காட்சி

14642133_1144979572246479_38555822934913
 
14642159_1144980082246428_37785608695132
 
14681743_1144980498913053_27638101487966
 
14724476_1144980615579708_44092823073306
 
14725518_1144981048912998_48603346798246
 
14642377_1144981165579653_68887414776945
 

BBC

  • தொடங்கியவர்

ராணுவத்தினர் அர்ச்சகராக இருக்கும் இமயமலை கோயில்...!

hanuman-tokeeee_15110.jpg

வ்வொரு மதத்துக்கும், அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்களே பூசாரிகளாகவும், மதபோதகர்களாகவும் இருப்பார்கள். ஆனால், இங்கே உள்ள ஓர் இந்துக் கோயிலுக்கு அனைத்து மதத்தினரும் பூசாரிகளாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள இமயமலை மலையில் அமைந்திருக்கும் ரம்மியமான அனுமன் கோயில் ‘அனுமன் டோக்’. இது வடக்கே சீனா, கிழக்கே நேபாள், மேற்கே பூட்டான் என இந்தியாவின் சர்வதேச எல்லைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது. வருடம் முழுவதும் பக்தர்கள் வந்துகொண்டிருக்கும் இந்தக் கோயிலுக்குள் நுழைய எந்த மதப் பாகுபாடும் கிடையாது. காரணம், இந்தக் கோயிலைப் பராமரித்து, பூசாரிகளாக இருப்பது சாதி, மத பேதமில்லா இந்திய ராணுவத்தினர்.

ஒருமுறை அனுமன், ராமனின் சகோதரரான லட்சுமணனைக் காப்பாற்ற... ‘சஞ்சீவி’ மலையை எடுத்துக்கொண்டு பறந்தபோது, இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடத்தில் அவர், சிறிதுநேரம் தங்கியிருந்ததாகப் புராணக் கதைகள் கூறுகின்றன. அதன் நினைவாக உள்ளூர் மக்கள், ஒரு கல்லைவைத்து அனுமனை வழிபட்டு வந்தனர். பின்னர், 1950-களில் அதற்காகத் தனியாக ஒரு கோயில் கட்டப்பட்டது. அது, கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தினரின் பராமரிப்பில் உள்ளது. உலகிலேயே மூன்றாவது உயரமான மலை என்று போற்றப்படும் இமயமலையில் உள்ள கஞ்சன்ஜங்கா சிகரத்தில், 7,200 அடி உயரத்தில் அனுமன் டோக் கோயில் வட கிழக்குக் கட்டடக் கலையுடன் அமைந்துள்ளது. மலைக் கோயிலின் அழகு, உலகம் முழுவதில் இருந்தும் பக்தர்களை ஈர்க்கிறது. இமயமலையில் இருந்து 360 டிகிரி கோணத்தில் இந்தக் கோயிலைப் பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

hhhhtwww_15349.jpg

இந்திய ராணுவத்தில், ‘கறுப்புப் பூனை - 17’ மலைப் பிரிவில் பணியாற்றுபவர், நாகர்கோவிலைச் சேர்ந்த சஜின்குமார். பிறப்பால், இவர் ஒரு கிறிஸ்தவர். இருந்தாலும், இந்த அனுமன் கோயில் பூசாரியாகவும் அவர் உள்ளார். இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் திலகமிட்டு வரவேற்று, இனிப்புகள் வழங்கிவரும் அவர், ‘‘இப்போது நான் பார்க்கும் பூசாரி வேலைகளை... முன்பு, முஸ்லிம் படைவீரர் ஒருவர் செய்துவந்தார். ‘மதத்தைவிடத் தேசியவாதமே மேலானது’ என்ற தத்துவத்துடன் பணியாற்றி வருகிறோம். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் புனிதநீர் மற்றும் பிரசாதம் வாங்கத் தயங்குவதில்லை’’ என்கிறார் உற்சாகமாய்.

மலையேற்றம் செய்பவர்களுக்கும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் வழிகாட்டும் பணி, புனித நீர் மற்றும் பிரசாதம் கொடுத்து வாழ்த்தும் பணி முதலியவற்றைச் சீருடை அணிந்த ராணுவ வீரர்களே செய்துவருகின்றனர்.

நாட்டு ஒற்றுமைக்கு ராணுவ வீரர்களே முதல் உதாரணம்!

vikatan

  • தொடங்கியவர்
நல்ல மாற்றங்கள் போற்றுதலுக்குரியதே!
 
 

article_1477457352-jkgyoll.jpgஸ்திரமில்லாத மனோநிலையுடன் வாழுபவர்களின் பேச்சுக்களில் நிதானம் இருக்காது. தாம் சொன்ன பேச்சையே தாங்களே மறுத்துரைப்பார்கள். கேட்டால் எப்போது அப்படிச் சொன்னேன் என்பார்கள் அல்லது அப்போது அப்படித் தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன் என்று சொல்லிவிடுவார்கள். 

நெஞ்சத்தை நிமிர்ந்த நிலையில் வைத்திருப்பதும் சுலபமானது அல்ல; பேசும்முன் யோசிக்க வேண்டும். நிதானமாக நெஞ்சை அதன் உறுதியுடன் வைத்திருக்க ஆத்மீக நாட்டம் அவசியமாகும்.  

இதயத்தை ஆசுவாசப்படுத்த உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் யோகாசனத்தில் ஈடுபடுதல் நல்லது. நல்ல நூல்களைப் படித்தால் எண்ணங்களும் செம்மைபெறும்.  

எவருமே குறை சொல்லக் கேட்டு வாழ்வதைவிடத் தங்களின் கருமையைக் களைவதே பிரதானமானது. நல்ல மாற்றங்கள் போற்றுதலுக்குரியதே! 

  • தொடங்கியவர்

முஸ்லிம் காதலர்களை சேர்த்து வைத்தது சிவன் கோயில்.!

 

islam_wedding.jpg

சிவன் கோயிலில்  இஸ்­லா­மிய காதல் ஜோடி  ஒன்று திரு­மணம் செய்­து­கொண்ட சம்­பவம் பீகாரில் இடம்­பெற்­றுள்­ளது. 

கிராமப் பகு­தியை சேர்ந்த முஹ­மது சோஹன் மற்றும் நியு­ருஷா ஆகிய இரு­வரும் காத­லித்து வந்­துள்­ளனர். இவர்கள் இரு­வ­ரது காத­லுக்கும் இவர்­க­ளது குடும்­பத்தார் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர்.

இதனால், வீட்டை விட்டு வெளி­யே­றிய இக்­காதல் ஜோடி  அப்­ப­கு­தியில் உள்ள சிவன் கோயிலில், ஊர் பஞ்­சா­யத்துத் தலைவர் சுதீர் குமார் சிங் மற்றும் ஊர்ப் பொது­மக்கள் உத­வி­யுடன் இஸ்­லா­மிய முறைப்­படி திரு­மணம் செய்து கொண்­டனர். 

சிவன் கோயிலில் தங்கள் காதல் திரு­மணம் நடந்­துள்­ளதால் அள­வில்­லாத மகிழ்ச்­சியில் இருப்­பதால், தங்கள் மகிழ்ச்­சியைக் கொண்­டாடும் வித­மாக ஒவ்­வொரு ஆண்டும் சிவன்­கோ­யி­லுக்குச் செல்ல வேண்டும் என அவர்கள் உறுதி எடுத்­துள்­ளனர்.

virakesari.lk/

  • தொடங்கியவர்

உங்கள் வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்! #MorningMotivation

 

234763-You-Create-Your-Own-Opportunities

"ரு நாள், ஒரே ஒரு நாள் நீ முதல்வரா இருந்துப்பாருன்னு" முதல்வன் படத்துல ரகுவரன் அர்ஜுன்கிட்ட சவால் விடுவாரே அப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு அமைஞ்சா என்ன செய்விங்க? அட முதல்வரா கூட வேணாங்க. அலுவலகத்திலோ கல்லூரியிலோ எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு நண்பர்கள் தின விழாவை நடத்த வேண்டும் என்பது போன்ற ஒரு பொறுப்பு உங்களுக்கு கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். என்ன செய்வோம்?  நம்மில் நிறைய பேர் நமக்கெதுக்குங்க வம்பு என அந்த பொறுப்பிலிருந்து தப்பவே பார்ப்போம். அதற்கு நாம் சொல்லும் காரணங்கள்

"நம்ம வேலை கெட்டுடும்"

"இவங்க கொடுக்குற சம்பளத்துக்கு இத வேற செய்யணுமா?"

"நாம மட்டும் தனியா தெரிவோம்" என்பதாகத்தான் இருக்கும்.

இதில் "நம்ம வேலை கெட்டுடும்" என்ற டயலாக்கை தினமும் நினைத்துப்பார்த்து வேலை செய்தால் போதும். உங்கள் அலுவலகத்தில் உங்களை யாருமே அடிச்சுக்க முடியாது தானே!? 

வாய்ப்புகள் எல்லா நேரமும் வந்து நம் வீட்டு கதவை தட்டிக் கொண்டு இருக்காது. நமக்கான வாய்ப்புகளை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தற்போதிருக்கும் இடத்திலிருந்து அடுத்தக் கட்டத்தை நோக்கிய முயற்சியை மேற்கொண்டு கொண்டே இருக்க வேண்டும்.

யாரோ ஒருவரால் உங்களுக்கான வாய்ப்புகளும் உங்கள் வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களும் உருவாக்கப்படுவதை விடவும் உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கி கொள்வது தான் சிறந்த பலனைத் தரும்.

வ்வொரு நாளும் இன்று வேறு ஒரு உச்சத்தைத் தொட வேண்டும் என்றோ, புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள கொள்ள வேண்டும் என்ற மனநிலையுடன் உற்சாகமாக தொடங்குங்கள். 

மேலோட்டமாகவும், அதுவரையில் அனுபவத்திடாத ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் பொழுது எப்போதுமே மனதில் ஒரு சின்ன தயக்கம் இருக்கத்தான் செய்யும். அந்த தயக்கத்துக்கு அடி பணிந்தால் வாய்ப்புகள் கை நழுவிப் போகத்தான் செய்யும்.  தைரியமாக கெத்தாக ஒவ்வொரு வாய்ப்பையும் பற்றிக்கொண்டு செயல்பட ஆரம்பியுங்கள்.

ரகுவரன் விட்ட சவாலை ஏற்காமல் பின் வாங்குவது போன்ற ஒரு காட்சி படத்தில் வந்திருந்தால். முதல்வனை அவ்வளவு ரசித்திருக்க மாட்டோம் அல்லவா? ஆம், ஒவ்வொரு வாய்ப்பையும் பற்றிக் கொண்டு போராடுபவனைத்தான் உலகம் விரும்பும்!

vikatan

  • தொடங்கியவர்

14856056_1167411996640826_13658889335676

Happy Birthday Kumar Sangakkara
சங்காவுக்கு இன்று பிறந்தநாள்...

உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும்,
இலங்கையின் மிகச்சிறந்த கண்ணியமான, கனவான் தன்மை மிக்க அற்புத கிரிக்கெட் வீரருமான அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற குமார் சங்கக்கார அவர்களுக்கு  இனிய பிறந்த வாழ்த்துக்கள்.

உலகெங்கும் ரசிகர்களைக் கொண்டுள்ள சங்கா ICC மக்கள் தெரிவு விருதை இரு தடவை தன் வசப்படுத்திய பெருமைக்குரியவரும், பல சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளவரும் ஆவார்.

சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ள சங்கா இன்னமும் உலகளாவியரீதியில் பல்வேறு தொழில்சார் லீக் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடிவருகிறார்.

 

 

சாதனை நாயகன் சங்காவுக்கு இன்று பிறந்த நாள்

FB_IMG_1477543116497.jpg

சாதனை நாயகன் சங்காவுக்கு இன்று பிறந்த நாள்.

இலங்கை கிரிக்கெட் அணியில் பதினைந்து வருடங்களாக தனக்கென்று ஒரு முத்திரை பதித்து, பல சாதனைகளைப் புரிந்து, சிறந்த ஒரு விளையாட்டு வீரன் என்ற நற்பெயரினை எதிரணி வீரர்களிடமிருந்து கேட்ட ஒரு வீரர் தான் குமார் சங்கக்காரா.

சர்வதேசப் போட்டிகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி, இந்தியாவிற்கு எதிரான கொழும்பில்(2015) இடம்பெற்ற டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஓய்வளித்தார்.

தென்னாபிரிக்க அணிக்கெதிராக 2000 ஆண்டளவில் தனது டெஸ்ட் அறிமுகத்தை சர்வதேச கிரிக்கெட்டில் தடம்பதித்திருந்தார். அதே ஆண்டிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக, ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அறிமுகமாகியிருந்தார்.

தனது 22வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்து, தனது இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியிலே தென்னாபிரிக்க அணிக்கெதிராக 85 ஓட்டங்களைப் பெற்று, ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார். தனது பத்தாவது டெஸ்டில் கன்னிச் சதத்தினைக் கடந்தாலும், அதற்கு முதல் இரு தடவை 90 களில் ஆட்டமிழந்து சென்றிருந்தார்.

கிரிக்கெட்டிலே தனக்கு சரியான இணைப்பாட்டங்களை மகேல ஜெயவர்த்தனவுடன் துடுப்பெடுத்தாடி, பல போட்டிகளின் வெற்றியை இலங்கை அணிக்கு இவர்கள் இருவரும் பெற்றுக் கொடுத்திருந்தனர். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 624 ஓட்டங்கள் எனும் மாபெரும் ஓட்ட எண்ணிக்கையை இணைப்பாட்டமாக இவர்கள் இருவரும் SSC மைதானத்தில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக தமக்குள்ள பகிர்ந்திருந்தனர்.

134 டெஸ்ட் போட்டிகளில் 233 இன்னிங்ஸ்களில் விளையாடி, 57.14 எனும் மிகச் சிறந்த சராசரியுடன், 12400 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதே போல 404 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 380 இன்னிங்ஸ்களில் விளையாடி, 41.99 எனும் சிறந்த சராசரியுடன், 14234 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இதுவரை ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இரண்டவதாகாவும், டெஸ்ட் போட்டிகளில் ஐந்தாவது இடத்திலும் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் உள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முறையே, 319 மற்றும் 169 ஓட்டங்களை அதிக பட்ச ஓட்டங்களாகப் பெறுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 8000,9000,11000 மற்றும் 12000 ஓட்டங்களை அதிவேகமாகப் பெற்றுக் கொண்ட வீரராவார்.
2005ம் ஆண்டிலே சர்வதேச ஒருநாள் போட்டிகளின் உலக பதினொருவர் அணியில் சங்காவின் பெயர் தெரிவு செய்யப்பட்டது.

2006 இலே பங்களாதேஷ் அணிக்கெதிரான சுற்றுலாவிலே முதல்தடவையாக உதவி அணித்தலைவராக தனது அடுத்த கட்ட பொறுப்பை ஏற்றார். நான்கு தடவைகள் தொடர்ச்சியாக 100 க்கு மேற்பட்ட ஒட்டங்களைப் பெற்ற முதலாவது வீரராவார்.
தனது 31வது வயதிலே இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சங்கா இதுவரை அணித்தலைவராக 15 டெஸ்ட் போட்டிகளில் தலைமைதாங்கி, 5 வெற்றிகளையும் 7 வெற்றிதோல்வியற்ற முடிவுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் 45 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தலைமை தாங்கி 27 போட்டிகளில் வெற்றியை இலங்கை அணிக்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

2011 சர்வதேச உலககிண்ண ஒருநாள் போட்டிகளில் இறுதிப் போட்டி வரை அணிக்குத் தலைமை தாங்கி, தோல்வியடைந்த பின்னர், தனது தலைமைப் பதவியிலிருந்து விலகி விக்கெட் காப்பாளராகவும், சிறந்த துடுப்பாட்ட வீரராகாவும் சிறந்து விளங்கினார்.

2014 இன் உலககிண்ண இருபதுக்கு இருபது இறுதி போட்டியில் இந்திய அணிக்கெதிராக 33 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து, இலங்கை அணி இருபதுக்கு இருபது கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணியாக அமைந்தார்.
2015 உலககிண்ண ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பங்களாதேஷ் அணிகெதிராக 400வது போட்டியில் விளையாடி, தனது 22வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

டொன் பிரட்மனுக்கு அடுத்ததாக 11 இரட்டைச் சதங்களை டெஸ்டில் சங்கா பெற்றுள்ளார். பதினான்கு தடவைகள் 190க்கு மேற்பட்ட ஓட்டங்களை டெஸ்டில் கடந்துள்ளார். இதுவரை மஹேல ஜெயவர்த்தனாவோடு மூன்றாம் விக்கெட்டிற்காக 5890 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

2014ம் ஆண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 4 சதங்கள் 9 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 1438 ஓட்டங்களைப் பெற்று அந்த ஆண்டில் அதிக ஓட்டங்களைக் கடந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 38 சதங்களைக் கடந்துள்ளார். தான் விளையாடிய எட்டு அணிகளுக்கு எதிராகவும் தனது சதத்தினைப் பதிவு செய்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி சார்பில் 14,000 ஓட்டங்களைக் கடந்த முதலாவது வீரராகவும், மொத்த ஓட்டங்களில் வரிசையில் இரண்டாவதாகவும் உள்ளார். 93 தடவைகள் அரைச்சதங்களைக் கடந்துள்ளார்.சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 501 தடவை எதிரணி வீரர்களின் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். 2014ம் ஆண்டில் 28 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 4 சதங்கள் 8 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 1256 ஓட்டங்களைப் பெற்று அந்த ஆண்டில் அதிக ஓட்டங்களைக் கடந்துள்ளார்.

2014ம் ஆண்டில் மூன்றுவிதமான போட்டிகளிலும் அதிக ஓட்டங்களைக் கடந்து சாதனைப் பட்டியலிலுள்ளார். 2015ம் ஆண்டு உலகக் கிண்ண சர்வதேச போட்டிகளில் விளையாடி, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்ரேலிய மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கெதிராக நான்கு தொடர்ச்சியான போட்டிகளில் சதத்தினைக் கடந்திருந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 25 சதங்களைக் கடந்துள்ளார்.

Wisden Leading Cricketer எனும் விருதினை 2011 மற்றும் 2014களில் இருதடவைகள் பெற்றுக் கொண்டிருக்கிறார். ICC ஒருநாள் போட்டிகளில் 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில் பெற்றுக் கொண்டார். மேலும் ICC சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதையும்,ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதையும் 2012 இலும் உயர் விருதுகளைப் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டின் ஓய்வுக்குப் பின்னர் இங்கிலாந்தின் சர்ரே கழகத்துக்காக ஆடிவரும் சங்கா, தனது நண்பனான மஹேலவுடன் சேர்ந்து காலி,கராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதி சேகரிப்பு எனும் மனித நேயத்தொண்டிலும் சங்கா தன்னை ஈடுபடுத்தியுள்ளார் .

அதனை விட ICC அறிவிக்கும் குழுக்களில் எப்படியும் சங்காவின் பெயர் நிச்சயம் இருந்தது என்பது, சங்கா விளையாடும் காலத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.
இன்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடும் சங்காவிற்கு  வாழ்த்துக்கள்!!!!

14876650_1375377689147990_55929863895513

One of the greatest batsmen of all time. 14,234 in ODIs (2nd highest ever), 12,400 in Tests (5th highest ever), 1,382 in T20Is (3rd highest Sri Lankan). He also holds the record for most ODI wicketkeeping dismissals with a stunning 482 for Sri Lanka Cricket.

Happy Birthday to one of the game's true legends, Kumar Sangakkara!

  • தொடங்கியவர்

தெருநாய்களுக்காக திருமணம் செய்யாமல் வாழும் சென்னைப் பெண்!

dogs_14210.jpg

சென்னை மந்தவெளிப் பகுதி லாலத் தோட்டம் காலணியில் மரத்தடியில் ஒரு சில்வர் பிளேட் இருக்கிறது. இதே போல், பல சில்வர் பிளேட்கள் மரத்தடிக்கு மரத்தடி வரிசையாக அந்த பகுதியில் காணப்படுகின்றன. அந்த சில்வர் பிளேட்டுகளை பின்தொடர்ந்து சென்றால், ஒரு வீடு வருகிறது. வீட்டுக்குள் நுழைந்தால் ஷீரடி சாய்பாபாவின் புகைப்படம்தான் முதலில் நம்மை வரவேற்கிறது. வீட்டுக்குள்ளும் வெளியேவும் கண் தெரிந்தும் தெரியாமலும் கால் ஒடிந்தும் ஓடியாமலும் தத்தி.. தத்தி நடக்கும் நாய்கள் நிரம்பி காணப்படுகின்றன. அவற்றை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

இந்த நாய்களை பராமரித்து வருபவரின் பெயர் மீனா. ஒரே மனுஷி... இத்தனை தெருநாய்களை கடந்த பதினேழு ஆண்டுகளாக பராமரித்து வருவது மிகுந்த ஆச்சரியத்தை தந்தது. சென்னயில் 'டாக் லவர்ஸ்' ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அவர்களிடம்  இருந்து மீனா சற்று வித்தியாசமானவராகத் தெரிந்தார். பொழுது போக்குக்காகவோ அல்லது நமது விருப்பத்திற்காக செல்ல நாய்கள் வளர்ப்பதற்கும் தெருநாய்களுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?.

ஆம்... இந்த தெருநாய்களை பராமரிப்பதற்காக மீனா திருமணம் கூட செய்துக் கொள்ளவில்லையாம். அவரது உறவினர்கள் பலர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் மறுத்துவிட்டார். தற்போது 36 வயதான மீனா, ''கணவர் என்று வந்து விட்டால், அவர் நிச்சயம் எனது நாய்களை விரும்பமாட்டார். எனக்கும் எனது நாய்களுக்கும் குறுக்கே யார் வந்தாலும் அதனை என் மனம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை'' என் தீர்க்கமாக கூறுகிறார்.

இத்தனைக்கும் மீனாவுக்கு தெருநாய்களுக்கு ஆதரவாக செயல்படும்  தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியும் கிடையாது.  உண்மையைச் சொல்லப் போனால், அப்படியெல்லாம் என்ஜிஓக்கள் இருப்பதே மீனாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. மந்தவெளிப் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் ஒருவர் மட்டும் மீனாவுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

தினமும் காலையில் தனது வீட்டு உணவு வகைககைளத் தயாரிக்கும் மீனா, அவற்றை எடுத்துச் சென்று மயிலை கபாலீஸ்வரர் கோயில் பகுதியில் விற்பனை செய்கிறார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தன்னை நம்பியிருக்கும் ஜீவன்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறார்.

தனது நாய்களுக்காக அவர் சினிமாவுக்கு கூட போவதில்லை. வீட்டை விட்டு எங்கும் நகர்வதில்லை. இது குறித்து மீனா, ''காலையில் எனது வேலை முடிந்தவுடன் வீட்டை விட்டு எங்கும் போவதில்லை. இங்கிருக்கும் நாய்களில் ஒன்று அரை குறை பார்வையுடன் இருந்தது. தற்போது அது முற்றிலும் பார்வை இழந்துவிட்டது. அதனால் எங்கும் நகர்ந்து செல்ல முடியவில்லை. மற்ற நாய்களை அதனை கடித்து விடக் கூடாது என்பதற்காக அதன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. ஒரே ஒரு முறை எனக்கு அப்பென்டிக்ஸ் அறுவை சிகிச்சை நடந்த போது, எனது நாய்களை விட்டு 10 நாட்கள் பிரிந்து இருந்தேன். மற்றபடி ஒரு கணம் கூட பிரிந்தது இல்லை  என்னை நம்பி வாழும் ஜீவன்கள். என் மீது அளவற்ற அன்பை காட்டுகின்றன. அந்த அன்புடனேயே நான் வாழ்ந்து விட்டுப் போகிறேனே'' என்கிறார் .

மனுஷி!

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று
ஒக்டோபர் - 27

 

837var.jpg939 :  இங்­கி­லாந்தின் மன்­ன­ராக முதலாம் எட்மண்ட் முடி சூடினார்.


1275 : நெதர்­லாந்தின் ஆம்ஸ்­டர்டம் நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.


1795 : ஸ்பானியக் குடி­யேற்­ற­ நா­டு­க­ளுக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யே­யான எல்­லை­களை வரை­ய­றுக்கும் உடன்­ப­டிக்கை ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் ஸ்பெயி­னுக்கும் இடையில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.


1806 : பிரெஞ்சுப் படை­யினர் ஜேர்­ம­னியின் பேர்லின் நக­ரினுள் நுழைந்­தனர்.


1807 : பிரெஞ்சு ஸ்பானியப் படைகள் போர்த்­துக்­கலைக் கைப்­பற்­றின.


1810 :  முன்னாள் ஸ்பானியக் குடி­யேற்ற நாடான மேற்கு புளோ­ரி­டாவை ஐக்­கிய அமெ­ரிக்கா தன்­னுடன் இணைத்துக் கொண்­டது.


1870 : 140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்ஸ் நகரில் இடம்­பெற்ற போரில் பிரஷ்­யா­விடம் சர­ண­டைந்­தனர்.


1891 : ஜப்­பானில் 8.0 ரிச்சர் அளவு பூகம்பம் ஏற்­பட்­டதில் 7000 பேருக்கு மேல் கொல்­லப்­பட்­டனர்.


1904 : நியூ­யோர்க்கில் முத­லா­வது சுரங்க ரயில் பாதை திறக்­கப்­பட்­டது. இதுவே ஐக்­கிய அமெ­ரிக்­காவின் மிகப் பெரிய  சுரங்கப் பாதை ஆகும்.


1924 : சோவியத் ஒன்­றி­யத்தில் உஸ்பெக் சோவியத் குடி­ய­ரசு  அமைக்­கப்­பட்­டது.


1953 : தெற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் ஈமியூ ஃபீல்ட் என்ற இடத்தில் டோட்டெம் 2 என்ற பிரித்­தா­னிய அணு­வா­யுதச் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது.


1958 : பாகிஸ்தான் முத­லா­வது ஜனா­தி­பதி இஸ்­கண்டர் மிர்ஸா, இரா­ணுவப் புரட்சி ஒன்றில் பத­வியில் இருந்து நீக்­கப்­பட்டு ஜெனரல் அயூப் கான் ஆட்­சியைக் கைப்­பற்­றினார்.


1961:  நாசா நிறு­வனம் தனது முத­லா­வது சட்டர்ன் 1 விண்­க­லத்தை விண்­ணுக்கு ஏவி­யது.


1961 : மௌரிட்­டா­னியா, மொங்­கோ­லியா ஆகி­யன ஐ.நாவில் இணைந்­தன.


1962 : கியூபா ஏவு­கணை நெருக்­கடி: ஐக்­கிய அமெ­ரிக்­காவின்  விமானம் ஒன்று கியூ­பாவில் சுட்டு வீழ்த்­தப்­பட்­டது.


1971 : கொங்கோ  குடி­ய­ரசு சயீர் எனப் பெயர் மாற்­றப்­பட்­டது.   (1997 இல் மீண்டும் அதன் பெயர் கொங்கோ ஜன­நா­யகக் குடி­ய­ரசு என மாற்­றப்­பட்­டது.)


1979 : செயின்ட் வின்சென்ட் கிரெ­னேடின்ஸ் ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து சுதந்­திரம் பெற்­றது.


1981 : சோவியத் நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்று  சுவீ­டனின் கிழக்குக் கரையில் மூழ்­கி­யது.


1982 : யாழ்ப்­பாணம், சாவ­கச்­சேரி பொலிஸ் நிலையம் விடு­தலைப் புலி­களால் தாக்­கப்­பட்­டது.


1991 : துருக்­மெ­னிஸ்தான், சோவியத் ஒன்­றி­யத்­திடம் இருந்து சுதந்­திரம் பெற்­றது.


1991 : போலந்தில் 1936 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் முதற்­த­ட­வை­யாக சுதந்­தி­ர­மான தேர்­தல்கள் இடம்­பெற்­றன.


1999 : ஆர்­மீ­னி­யாவில் நாடா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் பிர­தமர் வஸ்ஜென் சர்­ஜி­ஸியன் உட்­பட 8 பேர் கொல்­லப்­பட்­டனர்.


2005 : பாரிஸில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு வன்முறைகள் ஆரம்பமாகின.


2007 : கொங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் கொல்லப்பட்டு 100 பேர் காயமடைந்தனர்.

metronews.lk

  • தொடங்கியவர்

நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லரை கேப்டன் டோணி நேற்றைய ராஞ்சி ஒரு நாள் போட்டியில் ரன் அவுட் செய்த விதம் அனைவரையும் மிரள வைத்து விட்டது.

சொந்த ஊரில் வைத்து இந்திய அணி தோற்றது டோணிக்கு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்காதுதான். ஆனால் அவரது விக்கெட் கீப்பிங் நேற்று அத்தனை ரசிகர்களையும் துள்ள வைத்து விட்டது.
 

Dhoni stuns Ross with his smart stumping

அதுவும் திரும்பிப் பார்க்காமல் பின்னால் கூட பந்தை வீசி ஸ்டம்பிங் செய்த அவரது லாவகம் அத்தனை பேரையும் மிரள வைத்து விட்டது. டோணிக்கு தலைக்குப் பின்னாலும் ஒரு கண் இருக்கே என்று பலரும் புளகாங்கிதம் காட்டி விட்டனர் சமூக வலைதளங்களில்.

 

டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் நேற்று நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா சேசிங்கில் சற்று கோட்டை விட்டதால் தோல்வியைத் தழுவ நேரிட்டது. ஆனால் நியூசிலாந்து அணி பேட்டிங்கின்போது டோணி கலக்கி விட்டார்.

 

நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. 46வது ஓவரின்போது ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தை அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார் ராஸ் டெய்லர். ஒரு ரன் எடுத்த அவர் 2வது ரன்னுக்காக திரும்பி வந்தார். அவர் கிரீஸை நெருங்கி விட்டார். ஆனால் அதற்குள் பந்து டோணி கைக்கு வந்து சேர்ந்திருந்தது.

வாங்கிய பந்தை அப்படியே திரும்பிக் கூட பார்க்காமல் ஸ்டம்ப்பை நோக்கி வீசினார் டோணி. என்ன ஆச்சரியம் சரியாக பைல்ஸைத் தட்டிச் சென்றது பந்து. ராஸ் டெய்லர் மயிரிழையில் ரன் அவுட் ஆனார். ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். டோணியே கூட தான் ரன் அவுட் செய்ததை நம்ப முடியவில்லை.

 

http://matchcentre.starsports.com/common/socialmedia/star/gifs/cricket/runoutoct26.gif

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14590073_1167414509973908_19283443109087

தமிழ்த் திரையுலகின் அற்புத நடிகர்களில் ஒருவரான, என்றும் மார்க்கண்டேயன் நடிகர் சிவக்குமாரின் பிறந்தநாள் இன்று.

இரு முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி ஆகியோரின் தந்தை என்பது இன்னொரு பெருமை இந்த அடக்கமான நடிகருக்கு.

சிவக்குமார் ஒரு அற்புதமான ஓவியர் மற்றும் ஆழமான இலக்கிய அறிவுகொண்ட சொற்பொழிவாளரும் கூட.

நடிகர் சிவகுமாரின் 50 ஆண்டு டைரி குறிப்பு #HBDSivakumar

sivakumar1027_10517.jpg

நாள் தவறாமல் டைரி எழுதும் பழக்கம் உள்ள சிவகுமார், தான் நடிக்க வந்த 1965-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரையிலான இந்த 50 ஆண்டுகளில், ஆண்டுக்கு ஒரு சம்பவத்தை தன் டைரியில் இருந்து புரட்டித்தருகிறார்...

dot3%281%29.jpg1965, ஜூன் 19: ஏவி.எம்-ன் 'காக்கும் கரங்கள்’ வெளியீடு. இன்று மாலை 4.50 மணி அளவில், தமிழகம் எங்கும் என்னைத் திரையில் பார்த்துக்கொண்டிருப்பார்கள். 6'x5.5' அளவு அறையில் 7 ஆண்டு தங்கி ஓவியம் படித்த ஓர் இளைஞன் நடிகனாக, உலகுக்கு அறிமுகம் ஆகிறான்.

dot3%281%29.jpg1966, அக்டோபர் 6: அறிஞர் அண்ணா தலைமையில் என் நாடகம். திரு.சீனி.சோமு என்ற விளம்பர டிசைனர் எழுதி இயக்கிய நாடகம் 'அடல்ட்ஸ் ஒன்லி’. அண்ணாமலை மன்றத்தில் அரங்கேற்றம். அண்ணா தலைமை. மேஜர் சுந்தர்ராஜன், சோ, கல்யாண்குமார், வெண்ணிற ஆடைமூர்த்தி... நாடகம் பார்த்துப் பாராட்டினர்.

dot3%281%29.jpg1967, ஜனவரி 12: கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துவரும் எம்.ஜி.ஆர் அவர்கள் ராமாவரம் தோட்டத்தில் சுடப்பட்டார்.

p97a.jpg

dot3%281%29.jpg1968 செப்டம்பர் 2: 'அம்மன் தாலி’ நாடக அரங்கேற்றம். 'நாடகத்தில் நடிப்பைப் பயின்றாலொழிய திரையுலகில் கால் ஊன்ற முடியாது’ என சுகி சுப்ரமணியம் அவர்களின் புதல்வர் எம்.எஸ்.பெருமாள் கல்கியில் எழுதியிருந்த குறுநாவலை நாடகமாக்கி மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் இன்று அரங்கேற்றம் செய்தேன்.

dot3%281%29.jpg1969, அக்டோபர் 19: விகடன் தீபாவளி மலருக்காக 'நட்சத்திர சமையல்’ நிகழ்ச்சி.  திருமதி.சௌகார் ஜானகி வீட்டில் நடைபெற்ற இதில் முத்துராமன்-வி.கோபால கிருஷ்ணனுடன் நானும் கலந்துகொண்டேன். நடிகைகள் ராஜஸ்ரீ, கிருஷ்ணகுமாரி, ஷீலா, சிவகாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

dot3%281%29.jpg1970, டிசம்பர் 8: சொந்த வீடு வாங்கினேன். 1958 ஜூனில் சென்னை வந்து 7 ஆண்டுகள் ஓவியம் பயின்று, இரண்டு ஆண்டுகள் திரையுலகில் குருவிபோல் சேர்த்து 40 ஆயிரம் ரூபாயில், மூன்றாயிரம் சதுர அடியில் தி.நகரில் இப்போது குடியிருக்கும் எண்.17, கிருஷ்ணா தெரு வீட்டை விலைக்கு வாங்கினேன்.

dot3%281%29.jpg1971, மார்ச் 6: 'அம்மன் தாலி’ நாடக பொன்விழா. இரண்டரை ஆண்டுகள் சென்னை உள்ளிட்ட தமிழக முக்கிய நகரங்களுக்கு சிவா டூரிஸ்ட் பஸ்ஸில் நாடகக் கலைஞர்கள், உபகரணங்களுடன் சென்று நாடகங்கள் நடத்தி, இன்று ஏ.பி.என் அவர்கள் தலைமையில் ஜெமினி, நாகேஷ் போன்றோர் கலந்துகொள்ள என்.கே.டி கலா மண்டபத்தில் நடைபெற்றது.

dot3%281%29.jpg1972, ஜனவரி, 31: பருந்துப் பார்வையில் பம்பாய் ஓவியம். என்.எஸ்.என் தியேட்டரில் மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் குழுவுடன் பம்பாய் சென்று, கிங் சர்க்கிளில் உள்ள ஷண்முகானந்தா ஹாலில் தங்கி, நாடகங்களில் நடித்துவிட்டு - இன்று 2:30-க்கு தொடங்கி 6:15-க்குள் இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டடத்தின் 25-வது மாடியில் இருந்து, பம்பாயின் அழகை பென்சில் ஸ்கெட்ச் செய்தேன்.

p97b.jpg

dot3%281%29.jpg1973, மே, 18: பாண்டிச்சேரியில் 'சொந்தம்’ நாடகம். பாண்டியில் இருந்து கான்ட்ராக்டர் பஸ் அனுப்பாததால் நாடகக் குழுவினர் திண்டிவனம் - மரக்காணம் -சூணாம்பேடு வழி செல்லும் ரூட் பஸ்ஸில் பாண்டி சென்று நாடகம் நடத்திவிட்டு, அரசு பஸ்ஸில் மேஜரும் நானும் சென்னை திரும்பினோம்.

dot3%281%29.jpg1974, ஜூலை 1: சிவகுமார் - லட்சுமி திருமணம். கோவை, அவினாசி-புளியம்பட்டி சாலையில் தண்டுக்காரன் பாளையத்தில் 5,000 பேர் அமர்வதற்கு ஏற்ப வேலு மணியம்மாள் பந்தல் போட்டுத்தர, சென்னையில் இருந்து விசேஷ ரயில் பெட்டியில் மேஜர் நாடகக் குழு, பத்திரிகையாளர்கள் இரவே வந்து இறங்க, ஜாம் ஜாம் என்று திருமணம். உச்சிமோந்து ஆசி கூறவேண்டிய தாயார், காலில் அடிபட்டு தனியாக கிராமத்தில் இருந்தார்.

dot3%281%29.jpg1975, ஜூலை 23: ஆண் குழந்தை பிறந்தது. மயிலாப்பூர் கல்யாணி நர்சிங்ஹோமில் இன்று அதிகாலை 2:51 மணிக்கு என் துணைவி ஆண் மகவைப் பெற்றெடுத்தார். (அந்த 'சரவணன்’தான் இன்று சூர்யா!)

dot3%281%29.jpg1976, அக்டோபர் 11: பம்பாய் விமான விபத்து. இன்று இரவு பம்பாயில் இருந்து சென்னை புறப்பட்ட விமானம் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்த சில நொடிகளில் தீப்பற்றி கீழே விழுந்ததில், அதில் பயணம் செய்த 95 பேரும் எரிந்து சாம்பல் ஆயினர். என் 'பத்ரகாளி’ பட கதாநாயகி ராணிச்சந்திராவும், அவரது தாயார் மற்றும் மூன்று சகோதரிகளும் தீக்கு இரையானார்கள்.

dot3%281%29.jpg1977, நவம்பர் 14: நாகையைத் தாக்கியது புயல். இன்று வங்கக் கடலில் இருந்து வீசிய புயல் நாகப்பட்டினம், திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரைப் பறித்துவிட்டது. தயாராருடன் கோட்டைக்குச் சென்று புயல் நிவாரண நிதியாக ரூ.10,000-க்கான செக்கை எம்.ஜி.ஆர் அவர்களிடம் கொடுத்தேன்.

dot3%281%29.jpg1978, அக்டோபர் 10: சிறைக் கைதிகளுக்கு உணவு. நாடு சுதந்திரம் அடைந்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைவுகூரும் வகையில், சிறை அதிகாரி பகவதி முருகன் அவர்கள் முன்னிலையில் சிறையில் அடைபட்டு இருக்கும் சகோதரர்களுக்கு (2,700 பேர்) உணவு வழங்கினேன்.

dot3%281%29.jpg1979, மே 26: 100-வது பட விழா. 14 வயதுவரை 14 திரைப்படங்களே பார்த்த சிறுவன் கதாநாயகனாகி 14 ஆண்டுகளில் 100 படங்களில் நடித்து முடித்தேன். முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் 100 தயாரிப்பாளர்களுக்கும் கேடயம் கொடுத்து என் தாயார் ஆசியுடன் 'சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யைத் தொடங்கிவைத்தார்.

p99a.jpg

dot3%281%29.jpg1980, செப்டம்பர் 25: கே.பி.சுந்தராம்பாள் அம்மையார் இறுதிப் பயணம். 1934-ல் ஒரு லட்சம் சம்பளம் வாங்கி 'நந்தனார்’ படத்தில் நடித்தவர். 'ஒளவையார்’ படத்தில் நடிக்க 4 லட்சம் பெற்றவர். 64 வயதில் 'காரைக்கால் அம்மையாராக’ நடித்து எனக்காக ஒரு பாடல் பாடியவர். கொடுமுடி கோகிலம் கே.பி.எஸ் விடைபெற்றுக் கொண்டார்.

dot3%281%29.jpg1981, அக்டோபர் 16: ஊட்டியில் இருந்து முத்துராமன் உடல் சென்னைக்கு. 'ஆயிரம் முத்தங்கள்’ படப்பிடிப்புக்கு வந்த முத்துராமன் கால்ஃப் காட்டேஜில் இருந்து பிராணவாயு குறைவாக இருந்த மூடு பனியில் 'ஜாக்கிங்’ செய்யப்போய், மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார். ஐ.ஜி.பரமகுரு அவர்கள் உதவியுடன் ஊட்டி மருத்துவமனை வேனில் உடலை வைத்து, 12 மணி நேரம் பயணம் செய்து, அதிகாலை 3 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.

dot3%281%29.jpg1982, மார்ச் 12: இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் 27-வது மாநாடு நுவராலியாவில் நடைபெற்றது. ஜனாதிபதி ஜெயவர்த்தனே கலந்துகொண்டார். அமைச்சர் தொண்டைமான் அவர்கள் ஏற்பாட்டில் திருமதி மனோரமாவுடன் நானும் சென்று, வாலி அவர்கள் எழுதிய 'இந்தியா டுடே’ நாடகத்தின் ஒரு பகுதியில் நான் பாரதி, மனோரமா கண்ணம்மாவாக 15,000 பேர் முன்னிலையில் நடித்தோம்.

dot3%281%29.jpg1983, நவம்பர் 20: டாக்டர் எம்.ஜி.ஆருக்குப் பாராட்டு. பாரதிராஜா, பஞ்சு அருணாசலம், பாக்யராஜ் ஏற்பாட்டில், டாக்டர் பட்டம் பெற்ற எம்.ஜி.ஆருக்கு நேரு ஸ்டேடியத்தில் பாராட்டு விழா. 10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. சிவாஜி சிறப்புப் பேச்சாளர்.

dot3%281%29.jpg1984 பிப்ரவரி 24: தலைக்கு மேலே விமானம். கோவை பீளமேடு விமான நிலைய ரன்வேயில் நான் கார் சவாரி செய்ய, தலைக்கு மேலே கிளைடர் விமானத்தில் ராதிகா பறந்து வருவதுபோல 'நிலவு சுடுவதில்லை’ படத்தின் 'பாரிஜாதம் பகலில் பூத்ததோ’ பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சிறுவயதில், தலைக்குமேலே 100 அடி உயரத்தில் கிராமத்தில் போர் விமானங்கள் பறந்தபோது, செடிக்குள் பதுங்கியது நினைவுக்கு வந்தது.

dot3%281%29.jpg1985 பிப்ரவரி 4: அமெரிக்காவில் இருந்து எம்.ஜி.ஆர் வந்தார். பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களுக்குச் சிகிச்சை பெற, அள்ளி எடுத்து வேனில் ஏற்றி அமெரிக்க புரூக்லின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர், சிகிச்சை முடிந்து துள்ளி நடந்துவந்து கோடிக்கணக்கான இதயங்களில் பால் வார்த்தார்.

p99b.jpg

dot3%281%29.jpg1986 ஜூலை 1: மதுரையில் 'சிந்து பைரவி’ 200-வது நாள் விழா. இந்தப் படத்தில் பங்குபெற்ற பலருக்கு தேசிய விருதுகள் கிடைத்தன. படைப்பாளி பாலசந்தருக்கும் கொடுத்திருக்க வேண்டும். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்ந்த ஒரு காட்டுவாசி இளைஞனை, ஜே.கே.பி. என்ற கர்நாடக சங்கீத வித்வானாக நடிக்கவைத்த கே.பி சாருக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.

dot3%281%29.jpg1987 அக்டோபர் 4: 'இது ராஜபாட்டை அல்ல’ நூல் வெளியீடு. நான் ஜூனியர் விகடனில் 45 வாரங்கள் தொடராக எழுதிய தமிழ்த் திரைப்பட வரலாறு, வாசகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. அகிலனின் தவப்புதல்வன் கண்ணன், 'தமிழ் புத்தகாலயம் மூலம் முதல் நூலாகக் கொண்டுவந்தார்.  

dot3%281%29.jpg1988 நவம்பர் 15: கலைஞர் வருகை. பதவியில் இருந்தபோதும் இல்லாதபோதும் என்றும் தமிழ் மக்களால் மறக்கமுடியாத அரசியல் தலைவர், தமிழைக் கொண்டாடுபவர், நினைவாற்றல் மிக்கவர், தளராத உழைப்புக்குச் சொந்தக்காரர் கலைஞர் அவர்கள் ராசாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோருடன் எங்கள் இல்லம் வந்து 90 மணித்துளிகள் என் ஓவியங்களை ரசித்துப் பார்த்தார்.

dot3%281%29.jpg1989 அக்டோர் 25: அன்னையார் இறைவனடி சேர்ந்தார். என்னை ஈன்றெடுத்து, வறுமை தெரியாமல் வளர்த்து, என் விருப்பப்படி ஓவியக்கலை படிக்கவைத்து, நடிகனாக 25 ஆண்டுகள் பார்த்து உச்சிமோந்த அந்த தெய்வம் இறைவனடி சேர்ந்தது. முதல்வர் கலைஞர், சிவாஜி, ராஜ்குமார் தொடங்கி பலதுறை பெருமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

dot3%281%29.jpg1990, அக்டோபர் 27: ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் 60-ம் ஆண்டு மணிவிழா. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் சினிமாவின் வரலாற்றைத் தொகுத்து வைத்திருக்கும் நடமாடும் என்சைக்ளோபீடியா ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு கலைவாணர் அரங்கில் மணிவிழா.

dot3%281%29.jpg1991 ஜூன் 14: 1974-ல் தீவிபத்தில் காலமான நடிகர் சசிகுமார் 10 வயது தாண்டாத 2 குழந்தைகளை விட்டுச் சென்றார். அவர்களின் படிப்புக்கு திரையுலக முக்கிய புள்ளிகள் உதவினோம். இன்று வளர்ந்துவிட்ட அவர் மகள் துர்கேஷ் நந்தினி-சுப்ரமணியம் திருமணம் பெசன்ட் நகரில். குழந்தைகளை வாழ்த்திவிட்டு 30 ஆண்டுகளாக மவுனவிரதம் இருக்கும் சசிகுமாரின் தந்தை பேராசிரியரிடம் ஆசிபெற்றேன்.

dot3%281%29.jpg1992 அக்டோபர் 4: சிட்னியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு. எண்மோர் தியேட்டரில் வசந்தமாலை நிகழ்ச்சி. 'தாகம் நாட்டிய நாடகம்’, சிட்னி ஈழத்தமிழர் கழக கலைக்குழு நிகழ்ச்சி. 'நான் கண்ட திரையுலகம்’ பற்றி கடைசியில் 1 மணி நேரம் பேசினேன்.

dot3%281%29.jpg1993 அக்டோர் 8: 'மேஸ்ட்ரோ’ இளையராஜாவுக்குப் பாராட்டு. 1813-ல் துவக்கப்பட்டு 180 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வரும் லண்டன் ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழு பல மேதைகளின் சிம்பொனியை வாசித்துள்ளது. ஜான் ஸ்காட் கண்டக்டராக இருந்து இளையராஜாவின் சிம்பொனியை ஒலிப்பதிவு செய்தார். காமராஜர் அரங்கில் சிவாஜி தலைமையில் இன்று பாராட்டு விழா.

dot3%281%29.jpg1994 ஜூன் 22: எல்.வி.பிரசாத் மறைவு. ஆந்திராவில் பிறந்து, பம்பாய் ஸ்டுடியோ வாட்ச்மேனாக வாழ்க்கையைத் தொடங்கி, இந்தியாவின் முதல் பேசும் படம் 'ஆலம் ஆரா’வில் தலைகாட்டி 15 ஆண்டு அனுபவத்துடன் சென்னை வந்து 'கிருகப்பிரவேசம்’ படத்தில் கதாநாயகனாக நடித்து, டைரக்ட் செய்து, 'சம்சாரம்’, 'சௌகார்’, 'கல்யாணம் பண்ணிப்பார்’, 'மனோகரா’, 'மங்கையர் திலகம்’, 'மிஸ்ஸியம்மா’, 'இதயக் கமலம்’ இயக்கி தென்இந்தியாவின் மிகப் பெரிய படைப்பாளியாக விளங்கிய எல்.வி.பிரசாத், 86 வயதில் விடை பெற்றார்.

p103a%281%29.jpg

dot3%281%29.jpg1995 ஜூலை 31: இலங்கை ஈடன் ஓட்டலில் படப்பிடிப்பு. ராதிகா உடன் நடித்த 'மீண்டும் மீண்டும் நான்’, தொலைக்காட்சி தொடர். மனோபாலா இயக்கம். கொழும்பில் இருந்து தெற்கே 60 கி.மீ தூரத்தில் களுதறை தாண்டி காலி ரோட்டில் பேருவலையை அடுத்து வருகிறது ஈடன் ஓட்டல். ரிசப்ஷன் லாபியின் அழகு ஒன்று போதும் அந்த ஓட்டல் பெருமை சொல்ல.

dot3%281%29.jpg1996 ஜூலை 20: வாலியின் அவதார புருஷன் வெளியீடு. கவியரசு கண்ணதாசனும் பட்டுக்கோட்டையாரும் கப்பல் விட்டுக்கொண்டிருந்த திரைக்கடலில், படகு விட்ட வாலி,  அவர்களைவிட அதிக ஆண்டு வாழ்ந்து அதிக பாடல்கள் எழுதியவர். இது, கம்பராமாயணத்தைப் படித்து கம்பன் வார்த்தைகளைப் பயன்படுத்தாத உரை நடைக் கவிதை நூல்.

dot3%281%29.jpg1997 ஜூலை 15: சிவாஜிக்கு பால்கே விருது. இந்தியாவின் பெருமைக்கு உரிய திரைப்பட விருதான பால்கே விருதினை இன்று மாலை குடியரசுத் தலைவரிடம் உலகின் ஒப்பற்ற நடிகர்களில் முதன்மையான சிவாஜி பெற்று, அந்த விருதுக்குப் பெருமை சேர்த்தார். செப்டம்பர் 6: 'நேருக்கு நேர்’ படத்தில் சூர்யா அறிமுகம்.

dot3%281%29.jpg1998 மார்ச் 27: 'காதலுக்கு மரியாதை’ 100-வது நாள் விழா. 'உயிருக்குயிராகக் காதலித்தவர்கள் பெற்றோருக்காக தங்கள் காதலைத் தியாகம் செய்ய - பின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற ஜோடி தேடி, தோற்று, மீண்டும் காதலர்களை இணைத்துவைக்கும் ஃபாசிலின் அற்புதப் படம்.

dot3%281%29.jpg1999 ஜூலை 1: 25-வது ஆண்டு திருமண நாள். எதிர்காலத்தில் தாடி வளர்த்து ஏதாவது கோயில் மடங்களில் சாமியாராக முடங்கிக் கிடப்பேன் என்று நம்பினேன். ஆனால் என்னைச் சகித்துக்கொண்டு, என் விருப்பப்படியே என்னை வாழவிட்டு, என்னோடு 25 ஆண்டுகள் வாழ்ந்த பெண்மணியைப் பார்த்து மலைக்கிறேன்.

dot3%281%29.jpg2000 ஜூலை 31: கன்னட ராஜ்குமார் கடத்தப்பட்டார். எங்கள் இளையமகன் கார்த்தி நியூயார்க்கை அடுத்த பிங்காம்டன் பல்கலையில் படிக்க இன்று இரவு அமெரிக்கா பயணமானான். இதே இரவு தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் தாளவாடியை அடுத்த கஞ்சனூர் பண்ணை வீட்டில் இருந்து கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார்.

dot3%281%29.jpg2001 மே 29: 'பூவெல்லாம் உன் வாசம்’ கடைசி நாள் படப்பிடிப்பு. 36 ஆண்டுகள் பெரிய திரையில் நடித்து பொறுமையின் சிகரமான தமிழ் மக்களை என் நடிப்பின் மூலம் சோதித்தது போதும் என, இன்றுடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள முடிவுசெய்தேன்.

dot3%281%29.jpg2002 ஜனவரி 4: அண்ணாமலை தொடர் படப்பிடிப்பு. அம்பாசமுத்திரத்தை அடுத்து உள்ள கைலாசநாதர் கோயிலில் படப்பிடிப்பு.  லண்டன் நண்பர் உமாகாந்தன் கொண்டுவந்த பென்டாக்ஸ் காமிராவால், கைலாசநாதர் கோயிலை பல கோணங்களில் புகைப்படம் எடுத்தேன்.

dot3%281%29.jpg2003 நவம்பர் 9: வெள்ளி விழா நாயகன் சத்யராஜுக்கு பாராட்டு. 25 ஆண்டுகள் திரையுலகில் பவனிவந்த சத்யராஜுக்கு அவருடைய நண்பர்கள், கோவை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து பாராட்டு விழா. கமல்ஹாசன், விஜயகாந்த், மணிவண்ணன், வடிவேலு, டைரக்டர் கே.எஸ்.ரவிகுமாருடன் நானும் கோவை சென்று வாழ்த்தினேன்.

dot3%281%29.jpg2004 ஜூன் 18: இசைக்குயில் எம்.எஸ்.ஸுடன் சந்திப்பு. தெய்வீகக் குரல் அரசி 'சேவாசதனம்’ படத்தில் கே.சுப்ரமணியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, 'சகுந்தலை’, 'மீரா’ படங்களில் தன் இனிய குரலால் தமிழ் மக்களை வசீகரித்த எம்.எஸ் அம்மாவின் பாதம் தொட்டு வணங்க, என் மகள் பிருந்தாவை அழைத்துச் சென்றேன். 'சாதகம் செய்துகொண்டே இரு. பயிற்சிதான் குரு’ என்றார்.

dot3%281%29.jpg2005 ஜூன் 30: இளையராஜா சிம்பொனியில் திருவாசகம். 100 ஆண்டுகளுக்கு முன் ஜி.யு.போப், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இப்போது இளையராஜா திருவாசகத்தை 'அரேபோரியோ’ முறையில் உருவாக்கியுள்ளார். ஆஸ்கர், கிராமி விழாக்களில் வாசிப்பவர்கள் இளையராஜாவுடன் கைகோத்துச் செய்தனர். வைகோவின் உரை உச்சம்.

dot3%281%29.jpg2006 செப்டம்பர் 11: கலைஞர் தலைமையில் சூர்யா-ஜோதிகா திருமணம். 'பராசக்தி’ வசனகர்த்தாவாக என் இதயங்களில் இடம்பிடித்தவர் 5-வது முறை தமிழக முதல்வராகி மணமக்களை வாழ்த்த வந்தார். உலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைய தலைமுறையினர், அவரவர் நாட்டில் உள்ள தெய்வீகத் தலங்களுக்குச் சென்று, இந்த ஜோடி வாழ்வாங்கு வாழ பிரார்த்தனை செய்த அன்பை, இணையதளத்தில் பார்த்து மலைத்தேன்.

dot3%281%29.jpg2007 டிசம்பர் 29: எம்.ஆர்.ராதா 100-வது ஆண்டு விழா. தி.க-வில் உறுப்பினராகாமல், பெரியாரை ஒப்பற்ற தலைவராகவும் பகுத்தறிவுச் சிந்தனைகளை வாழ்வின் வேதமாகவும் ஏற்றுக்கொண்டு, நாடகத்தின் மூலம் பல எதிர்ப்புகளை, தடைச் சட்டங்களைத் தாண்டி, அந்தச் சிந்தனைகளை மக்களுக்குக் கொண்டுசேர்த்தவர். 'ஒழுங்கா ஓவியம் படித்து உருப்படற வழியைப் பாரு. கூத்தாடி வேலைக்கு வராதே’ என்று எனக்கு அறிவுரை செய்தவர். பிப்ரவரி 23: 'பருத்தி வீரன்’ வெளியீடு. கார்த்தி அறிமுகம்.

dot3%281%29.jpg2008 செப்டம்பர் 19: பாட்டி பேச்சியம்மாள் (108) இயற்கை எய்தினார். குடியிருந்த வீட்டை தானே பெருக்கி, சானமிட்டு திண்ணை மெழுகி, கைத்தடி பிடிக்காமல் கொல்லைப்புறம் சென்று குவளையில் தண்ணீர் மொண்டு ஊற்றி, புடலை கொடியை முளைக்கவைத்து, மூக்குக் கண்ணாடியின் துணை இன்றி அரிசியில் கல் பொறுக்கி, மருந்து, மாத்திரை, ஊசி நெருங்கவிடாமல் 108 வயது வாழந்த பாட்டி பேச்சியம்மாள், சூர்யா - ஜோதிகாவை வாழ்த்தி 2 ஆண்டு கழித்து விண்ணுலகம் பயணமானார்.

p106a.jpg

dot3%281%29.jpg2009 ஜனவரி 28: 100 பாடல்களில் கம்பராமாயண உரை. ஈரோடு தண்டல் வேளாளர் மகளிர் மேல்நிலைப் பளியில் புத்தகக் காட்சியில் கம்பராமாயணத்தில் 100 பாடல்களை எடுத்துக்கொண்டு நிகழ்த்திய உரை எனக்கு, மேடைப் பேச்சாளன் என்ற அங்கீகாரத்தை அளித்தது.

dot3%281%29.jpg2010 செப்டம்பர் 21: டாக்டர் கலாம் சந்திப்பு. சன் டி.வி-க்கு விசேஷப் பேட்டி எடுக்க டெல்லி சென்று டாக்டர் கலாம் அவர்களைச் சந்தித்தேன். பேட்டி எடுக்கும்போது என் குடும்பத்தையும் குழந்தைகளையும் வாழ்த்தி என் ஓவியங்களையும், 'கம்பன் என் காதலன்’ உரையையும் நெகிழ்வுடன் பாராட்டினார்.

dot3%281%29.jpg2011 ஜூலை 8: முதல்வர் ஜெயலலிதா என் இல்லம் வருகை. 40 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் நடித்த சக கலைஞரை மதிக்கும் வகையில் முதல்வர் ஜெ. வீடு வந்து கார்த்தி-ரஞ்ஜினியை மனமார வாழ்த்திச் சென்றார்.  

p106b.jpg

dot3%281%29.jpg2012 ஜூலை 12: சூர்யாவின் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி கடைசி நாள். பிறந்தது முதல் 30 வருஷமாகப் பேசிய வார்த்தைகளைவிட, 100 மடங்கு பேசி, மௌன சாமியார் வாயாடியாகவும் தன்னைக் காட்டிக்கொள்ள முடியும் என்று சூர்யா நிரூபித்த நிகழ்ச்சி.

dot3%281%29.jpg2013 ஜனவரி 11: கார்த்தி-ரஞ்சனிக்கு மகள் பிறந்தாள். வெள்ளைச் சேலை-வியர்வை-வெயிலில் பாடுபட்டு கருத்துப்போன உடம்பு... இப்படித்தான் என் தாயாரை நான் பார்த்திருக்கிறேன். கணவன் விட்டுப்போன குழந்தைகளைக் காப்பாற்ற, காட்டில் அலைந்தே அவர் வாழ்க்கை கழிந்துவிட்டது. கார்த்தியின் மகள் உமையாள் வடிவில் என் தாய் பிறந்து பாசத்தைப் பொழிகிறாள்.

p107a.jpg

dot3%281%29.jpg2014 ஜூலை 24: 80 வயது ஜே.கே., 91 வயது கோபுலு பாராட்டு விழா. கார்ட்டூன், கேரிகேச்சர், தாண்டி புராண, சரித்திர கால மன்னர்கள், மக்கள், இக்கால மக்களின் நடை, உடை, பாவனைகளை கோபுலு அளவுக்கு ஓவியம் தீட்டியவர்கள் தமிழகத்தில் இல்லை. ஜெயகாந்தன் போல விளிம்பு நிலை மனிதர்களின் எளிய, கொடிய வாழ்க்கையை தன் பேனா மூலம் இலக்கியமாக்கிய எழுத்தாளரும் இல்லை. அன்று கௌரவிக்கப்பட்ட விகடன் பாலன், ஜெயகாந்தன், கோபுலு மூவருமே இன்று இல்லை!

p107b.jpg

 

dot3%281%29.jpg2015 அக்டோபர் 10: மனோரமா மறைந்தார். நகைச்சுவை, குணச்சித்திரம் என வெவ்வேறு கதாபாத்திரங்களில் 1,000 படங்களுக்கு மேல் நடித்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற 'ஆச்சி’ மனோரமா நம்மை விட்டு மறைந்தார்!

vikatan

  • தொடங்கியவர்

சுறாவை கட்டித் தழுவ விரும்பும் பில் கேட்ஸ் !

billgates_12193.png

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ”கொசுவுக்கு முத்தமிடுவதை காட்டிலும்  சுறாவை கட்டித் தழுவி விடலாம்” என தனது இணையத்தில் தெரிவித்துள்ளார்.

2015-ம் ஆண்டில் மட்டும், 1.5 மில்லியன் மக்கள் விலங்குகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்ற ஆய்வு சமீபத்தில் வெளியானது. இதைப்பற்றி கருத்து தெரிவித்துள்ள பில்கேட்ஸ், “திறன் மிக்க  சிங்கத்தால் 100 பேர் தான் கொல்லப்பட்டுள்ளனர். நீர்யானைகளால் சுமார் 500 பேர் இறந்துள்ளனர். முதலைகளால் 1000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் கொசுக்களால் 8,30,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொசுக்கள் நோய்கள் பரப்புவதில் பெரிய விலங்குகளை காட்டிலும் கொடியது. எனவே கொசுக்களை முத்தமிடுவதை காட்டிலும் சுறாவை கட்டித்தழுவுவது மேல்”, என தெரிவித்துள்ளார். 

vikatan

  • தொடங்கியவர்

பிறந்த நாள் கொண்டாடும் உலகின் வயதான உராங்குட்டான்

541942-puan_17240.jpg

ஆஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சியகத்தில் உள்ள 60 வயது ’உராங்குட்டான்’ குரங்கு,  உலகின் வயதான  உராங்குட்டான் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
’பான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பெண் உராங்குட்டான், இன்று தனது 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மேலும் உராங்குட்டானின் பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 

Grumpy Perth orangutan is declared world's oldest

 

Cvu-CufUEAEuxxy.jpg

அழிந்து வரும் உயிரினமான உராங்குட்டான் குரங்குகள் பெர்த் மிருகக்காட்சியகத்தில் தான் அதிகமாக காணப்படுகிறது. பான் பிறந்த நாளை வெகு விமர்சையாக காட்சியக அதிகாரிகள் கொண்டாடி வருகின்றனர். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

“மியாவ், மியாவ் இசை“ - காணொளி
இந்த இசை உங்களுக்கானதா? பாருங்க.

BBC

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சங்கா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.