Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பறவைகள் நேசித்த மனிதர்!

 

நவம்பர் 12 சலீம் அலி பிறந்த தினம்

 

p10a.jpg

பெங்குவின் போன்ற வெளிநாட்டுப் பறவைகள் குறித்து தெரிந்திருக்கும் நமக்கு, நம் ஊரைச் சேர்ந்த கூழைக்கடா குறித்தோ, குயில் குறித்தோ தெரிவது இல்லை. ஆனால், மும்பையின் கேத்வாடி பகுதியில் பிறந்த அந்தச் சிறுவனுக்கோ, பறவைகள் மீது தீராத காதலும் தேடலும் இருந்தது. அவரே, பின்னாளில் உலகம் வியக்கும் பறவையியல் ஆய்வாளராகவும், ‘இந்தியாவின் பறவை மனிதர்’ எனவும் அழைக்கப்பட்ட சலீம் அலி.

p10c1.jpg

1896-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி பிறந்த சலீம் அலி,  சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டார். 5 சகோதரிகள் மற்றும் 4 சகோதரர்களுடன் தாய் மாமாவின் அன்பு பராமரிப்பில் வளர்ந்தார். தாய்மாமா வேட்டைக்காரர் என்பதால், சலீம் அலிக்கும் அவருடைய தம்பி சுலைமானுக்கும் பறவைகளின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது. 10 வயதாக இருக்கும்போது, ஏர்-கன் எனப்படும் துப்பாக்கியை வாங்கித் தந்தார் மாமா. ஒரு வேட்டைக்காரனாகத்தான் வாழ்வை ஆரம்பித்தார் சிறுவன் சலீம்
அலி.

p10d.jpg

ஒருமுறை தோட்டத்தில் இருந்த குருவியின் கூட்டத்தை நோக்கி சுட்டார் சலீம் அலி. ஒரு குருவி கீழே விழுந்தது. அந்தக் குருவியின் தொண்டையில் மஞ்சள் நிறத் திட்டு இருந்தது. தனது மாமாவிடம் சென்று விளக்கம் கேட்டார். இப்படிப்பட்ட ஒரு குருவியை அவரும்  பார்த்தது இல்லை. மும்பையில் இருக்கும் இயற்கை வரலாற்றுக் கழகத்துக்குச் சென்று கேட்குமாறு சொன்னார்.

p10f.jpg

சலீம் அலி உடனே அங்கே சென்று, கெளரவ செயலாளர்  டபிள்யூ.எஸ். மிலார்ட் என்பவரைச் சந்தித்தார். ‘அது மஞ்சள் தொண்டைக் குருவி’ என்றார் அவர். இப்படித்தான் மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்துடன் சலீம் அலிக்குத் தொடர்பு ஏற்பட்டது. பல ஆண்டுகள் கழித்து, சலீம் அலியே அந்தக் கழகத்தின் புரவலராகவும் விளங்கினார்.

p11.jpg

சலீம் அலி, தனது பத்தாவது வயதிலேயே பறவைகள் குறித்த முதல் குறிப்பை எழுதினார். அவர் வசித்த வீட்டின் குதிரை லாயத்தில் உள்ள ஒரு பொந்தில் ஒரு பெண் சிட்டுக் குருவி முட்டை இட்டிருந்தது. அந்தப் பொந்தை ஓர் ஆண் குருவி பாதுகாத்துவந்தது. அவர் தன்னிடம் உள்ள துப்பாக்கியால் ஆண் குருவியைச் சுட்டார். வேறொரு ஆண் குருவி காவலுக்கு வந்தது. அதையும் சுட்டார். தொடர்ந்து 8 ஆண் குருவிகள் வந்ததாம். இதுதான் பறவைகள் குறித்து அவர் எழுதிய முதல் குறிப்பு. இந்தக் குறிப்பு, பேர்டு வாட்சர்ஸ் (Bird Watchers) என்ற இதழில் இடம்பெற்றதாக தனது சுயசரிதையில் கூறுகிறார்.

p10g1.jpg

இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் பல பறவைகளின் இறந்த மாதிரிகளை சலீம் அலிக்கு அறிமுகப்படுத்தினார் மிலார்ட். எட்வர்ட் ஹாமில்டன் என்பவர் எழுதிய ‘பம்பாயின் பறவைகள்’ (Common Birds of Bombay) போன்ற நூல்கள் சலீம் அலியின் ஆர்வத்தைத் தூண்டின. பல ஆண்டுகள் கழித்து இதே புத்தகம், ‘இந்தியாவின் பறவைகள்’ என்ற பெயரில் 1946-ம் ஆண்டு மறுபதிப்பாக  வந்தது. அதில் விளக்கக் குறிப்புகள் எழுதும் அளவுக்கு பறவையியல் துறையில் தவிர்க்க முடியாத இடத்தை அடைந்திருந்தார் சலீம் அலி.

p10h.jpg

இறந்த உயிரினங்களை உரித்துப்  பாடம் செய்தல், பராமரித்தல், குறிப்பெடுத்தல், உயிரின மாதிரிகள் தயாரித்தல் ஆகியவற்றை கற்றுக்கொண்டார் சலீம் அலி. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள், இமாலய மலைகள், ராஜஸ்தானின் பாலைவனங்கள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பனிச் சிகரங்கள், மியான்மர், நேபாளம் போன்ற அண்டை நாடுகளிலும் பறவைகள் பற்றிய தனது ஆய்வுகளை மேற்கொண்டார். பறவைகள் எங்கெங்கு செல்கின்றன, எவ்வாறு இரை தேடுகின்றன, எப்படி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன போன்ற தகவல்களைப் புத்தகங்களாக எழுதினார்.p10b1.jpg

1955-ம் ஆண்டு வெளியிட்ட ‘சிக்கிம் பறவைகள்’ (Birds of Sikim), சலீம் அலியின் குறிப்பிட வேண்டிய  நூல். 1974-ம் ஆண்டு 'இந்தியா மற்றும் பாகிஸ்தான் பறவைகள் பற்றிய கையேடு' (Handbook of Birds of India and Pakistan) என்ற 10 மாபெரும் தொகுதிகளை வெளியிட்டார். ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ என்ற அவரது சுயசரிதை, பறவையியல் ஆராய்ச்சியாளர்களுக்கு சிறந்த கையேடு.

பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற இந்தியாவின் உயரிய விருதுகளைப் பெற்றார் சலீம் அலி. நெதர்லாந்து நாட்டு அரசின் பொற்படகு விருது வழங்கப்பட்டது. காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள தேசியப் பூங்காவுக்கு சலீம் அலியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பறவைகளின் ஆராய்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சலீம் அலி, 1987-ம் ஆண்டு ஜூன் 20-ம் நாள் இயற்கை எய்தினார். அவரின் நினைவாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குருவி இனத்தை சேர்ந்த பறவைக்கு `ஸூதேரா சலீம் அலி’ (Zoothera Salim ali) எனப் பெயரிட்டுள்ளனர்.

நம் அருகே இருக்கும் ஒரு பறவையை நேசித்து பாதுகாப்பதில் இருக்கிறது, அந்த மாபெரும் மனிதன்  கண்ட கனவு.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

15110447_1186283774753648_71331702400300

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை
சானியா மிர்ஷாவின் பிறந்தநாள் இன்று.


Happy Birthday Sania Mirza

15129062_1186293348086024_12594203680967

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

நவம்பர் - 16

 

384 : போலந்தின் அர­சி­யாக 10 வயது சிறுமி  "ஜாட்­வீகா"  முடி­சூ­டினாள்.

 

1632 : சுவீ­டனின் குஸ்­டாவிஸ் அடோல்பஸ் போரில் கொல்­லப்­பட்டான்.

 

849varalaru--Benazir-Bhutto.jpg1849 : அர­சுக்கு எதி­ராகப் புரட்சி செய்­த­தாகக் குற்றம் சாட்டி ரஷ்ய எழுத்­தா­ள­ரான பியோதர் தஸ்­த­யெவ்ஸ்­கிக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது. ஆனாலும் தண்­டனை பின்னர் கடைசி நேரத்தில் கடூ­ழிய சிறைத்­தண்ட­னை­யாக மாற்­றப்­பட்­டது.

 

1885 : கன­டாவின் மேட்டிஸ் பழங்­குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தூக்­கி­லி­டப்­பட்டார்.

 

1933 : ஐக்­கிய அமெ­ரிக்­காவும் சோவியத் ஒன்­றி­யமும் இராஜ­தந்­திர உறவை ஆரம்­பித்­தன.

 

1943: ஜேர்­ம­னியின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த நோர்­வேயின் நீர் மின்­சாரக் கட்­ட­மைப்­புகள் மீது அமெ­ரிக்க விமா­னங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: ஜேர்­ம­னியின் டியூரென் நகரம் கூட்டுப் படை­களின் குண்டுத் தாக்­கு­தலில் முற்­றாக அழிந்­தது.

 

1945 : யுனெஸ்கோ நிறு­வனம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1965 : சோவி­யத்தின் வெனேரா 3 விண்­கலம் வெள்ளி கோளுக்கு செலுத்­தப்­பட்­டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முத­லா­வது விண்­கலம் இது­வாகும்.

 

1973 : நாசா மூன்று விண்­வெளி வீரர்­க­ளுடன் ஸ்கைலாப் விண்கலத்தை 484- நாள் திட்­டத்தில் விண்­ணுக்கு அனுப்­பி­யது.

 

1988 : சுமார் 10 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் பாகிஸ்­தானில் நடை­பெற்ற தேர்­தல்­களில் பெனாஸிர் பூட்டோ பிர­த­ம­ராகத் தெரி­வு­செய்­யப்­பட்டார்.

 

2002 : சார்ஸ் நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கார்ப்பரேட் உலகை கலக்க ஆறு வழிகள்! #MorningMotivation

 

கார்ப்பரேட்

கார்ப்பரேட் காம்பவுண்டுக்குள் வாழ்வதே ஒரு சவாலான விஷயம். அதை சமாளித்து அவரவர் வேலையில், கரியரில் அடுத்தடுத்த நிலைக்கு போக வேண்டுமென நினைப்பது சகஜம்தான். ஆனால், அதற்கு நம் வேலையை ஒழுங்காக செய்வது மட்டுமே போதாது. 'வேற வேற வேற" என இன்னும் சில ஸ்பெஷல்கள் வேண்டும். அந்த மாதிரி சில ஸ்பெஷல்களின் கேட்லாக்தான் இந்தப் பதிவு

1) என்ன அணிகிறீர்கள்?

     பல சமயம் நம் முகத்தை பார்க்கும் முன்னரே நாம் என்ன உடை அணிந்திருக்கிறோம் என்பதுதான் பிறர் கண்ணில் படும். ஃபார்மல் உடைகள் நீங்கள் வேலையில் கமிட் ஆன ஆசாமி என்பதை சொல்லாமல் சொல்லும். இதெல்லாம் மூட நம்பிக்கை என கார்ப்பரேட் பகுத்தறிவு பேசலாம் தான். ஆனால், பெரும்பாலான ஊழியர்களின் கணிப்பு இப்படித்தான் இருக்கும். கிரியேட்டிவ் ஆன வேலைகளில் இருப்பவர்களை தவிர, மற்றவர்கள் ஃபார்மலில் செல்வதே சேஃப். ஒரு விதத்தில் அது தரும் கான்ஃபிடென்ஸும் நமக்கு தேவைதான். அதனால், நல்லா டிரெஸ் பண்ணுங்க. நாம என்ன பவர் ஸ்டாரா?

2) பொறுப்பை கையில் எடுங்கள்

    உங்கள் மேலதிகாரிகள் 3 பேரை தேர்வு செய்யுங்கள். அவர்கள் வரலாற்றை எப்படியாவது புரட்டி பாருங்கள். இப்போது அவர்கள் கைவசம் இருக்கும் அதிகாரங்களை யாரோ ஒருவர் தாம்பால தட்டில் வைத்து அவரிடம் தந்திருக்க மாட்டார். ஒரு சிக்கலில் அவர்களாக முன்வந்து காரியங்களை கச்சிதமாக முடித்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாகவே அவர்கள் வளர்ச்சி இருந்திருக்கும். எல்லா மேனேஜருக்கும் ஒரே ஃப்ளாஷ்பேக் தான் பாஸ். அதில் அவர்கள் செய்திருக்கும் ஒரு ஒற்றுமயான விஷயம் "பொறுப்பை கையில் எடுத்தது" ஆகத்தான் இருக்கும்

3) எதையும் தள்ளி வைக்காதீர்:

    சொன்னதை செய்பவர்களை விட, சொன்ன நேரத்தில் செய்தவர்கள் தான் அதிகம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களைதான் நிறுவனமும், மேலதிகாரிகளும், கிளையண்டுகளும் விரும்புகிறார்கள். உங்கள் முதலாளி உங்களை சூப்பர் ஸ்டாராகதான் பார்க்கிறார். அதனால் நீங்க எப்படி வறீங்க, எதில் வறீங்க என்பதை எல்லாம் அவர் கவனிக்க மாட்டார். வர்ற வேண்டிய நேரத்தில் அவுட்புட்டோட வருகிறீர்களா என்றுதான் பார்ப்பார் மிஸ்டர்.சூப்பர்ஸ்டார்

4) நச் கம்யூனிகேஷன்:

உங்களுக்கு என்ன என்ன தெரியும் என்பதை உலகம் கணக்கிலே எடுத்துக் கொள்ளாது. உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என நீங்கள் சொல்கிறீர்களோ, அதை மட்டும்தான் எடுத்துக் கொள்ளும். இட்லி, தோசை, பூரி, பொங்கல் தொடங்கி வடைகறி வரைக்கும் உங்கள் மெனுவில் உள்ளதை தெளிவாக கம்யூனிகேட் செய்யும் திறமை வேண்டும். இல்லையேல், நாலு இட்லி என நிறுத்திக் கொள்வார்கள். பேச தெரிஞ்சவன் ஆள தயாராகிட்டான் என்பதை மறந்து விடாதீர்கள். கம்யூனிகேஷன் என்றதும் இங்கிலீஷ் தான என நினைத்தால் போச்சு. அது ஒரு கருவி மட்டும்தான்.

5) ஓவர் ஸ்மார்ட் உடம்புக்கு ஆகாது:

 அளவுக்கு மீறினால் ஆன்றாய்டும் டேஞ்சர்தான் ப்ரோ. வெடிச்சிடுதாம் சில சமயம். ஃபேஸ்புக் பாக்குறப்ப பாஸ் க்ராஸ் ஆனா விண்டோவ க்ளோஸ் பண்றதெல்லாம் ஸ்மமார்ட் ஆகாது சகோ. வேலையை சரியாக செய்வதும், அதை டிரான்ஸ்பரண்ட்டாக வைத்திருப்பதும் ஸ்மார்ட். அந்த லிமிட்க்குள்ள நிற்பதுதான் மிகப்பெரிய கலை. இன்னும் எளிமையாக சொல்வதென்றால், நேர்மையாக இருப்பதுதான் ஸ்மார்ட்

6) நோ சொல்ல தெரியுமா?

எல்லா அலுவலகங்களிலும் வேலைகளுக்கு பஞ்சம் இருக்காது. யாரிடமாவது அந்த வேலைகளை கொடுக்க வேண்டும் என்பது யாரோ ஒருவரின் வேலையாக இருக்கும். உங்களுக்கு அந்த வேலைகள் வந்தால், யோசியுங்க்ள். நீங்கள் அந்த சிஸ்டத்தில் இருப்பதன் தேவை என்ன? உங்களிடம் கொடுக்கப்படும் வேலை நீங்கள் செய்ய வேண்டியதா? உங்களாம் செய்ய முடியுமா? புராசஸ் படிதான் உங்களிடம் வருகிறதா என யோசியுங்கள். இல்லையெனில், அதை தவிருங்கள். பிச்சை எடுப்பதற்காக யாரும் யானையை வாங்குவதில்லை. உங்கள் மதிப்பை நீங்களே குறைத்து விடாதீர்கள். அதற்காக உங்கள் வேலையையே செய்யாமல் நோ சொன்னால், பின் விளைவுகளுக்கு யாரும் பொறுப்பல்ல.

vikatan

  • தொடங்கியவர்

‛ரசிகர்கள் சச்சின், சச்சின்னு சொல்றது எனக்கு கேட்டுட்டே இருக்கும்’ - சச்சின் ஓய்வு பெற்ற தினம் இன்று!

 

 

சச்சின்


மொத்தமே எங்கள் ஊரில் அப்போது மூன்று இடத்தில்தான் கலர் டிவி இருந்தது. அதில் ஒன்று பஞ்சாயத்து போர்டு டிவி. எப்படிப் பார்த்தாலும் அந்த டிவி இருக்கும் அறையில் அம்பது பேருக்கு மேல் அமர முடியாது. மின்விசிறி நஹி. ஒருவர் மடியில் ஒருவர் என எழுபது பேருக்கும் மேல் அடைந்திருப்போம். டே மேட்ச் என்றால் பகல் முழுக்க அங்கேயே தேவுடு காப்போம். மாலை வெளியே வரும்போது வியர்வையில் குளித்திருப்போம். டே நைட் மேட்ச் நடக்கும் சமயத்தில் பகல் முழுக்க டிவி பஞ்சாயத்து போர்டு ரூமுக்குள் இருக்கும். விளக்கு வைத்ததும் டிவியை அறைக்கு வெளியே இருக்கும் திண்ணையில் தூக்கி வைப்போம். நிலா வெளிச்சத்தில் இந்தியாவின் செகண்ட் பேட்டிங்கை ஒரு திருவிழா போல் ஊரே பார்த்து ரசிக்கும். வீட்டில் டிவி வைத்திருக்கும் கருப்பசாமி வாத்தியாரும் அதில் அடக்கம். காரணம் அவர் வீட்டில் இருந்தது பிளாக் அண்ட் ஒயிட் டிவி.

ஷேன் வார்னின் லெக் ஸ்பின்னை சச்சின் டெண்டுல்கர் டீப் மிட் விக்கெட்டில் பவுண்டரி அடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் கரன்ட் போகும். விட மாட்டோம். ரேடியாவை திருகுவோம். கமென்ட்ரி புரியாது. எண்ட் ஆஃப் தி ஓவரில் என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்தே ஸ்கோர் அப்டேட் செய்வார்கள் அண்ணன்கள். ’டெண்டுல்கர் இருக்கானாடா?’ என்பதே பெரும்பாலானாவர்களின் கேள்வியாக இருக்கும். ”இருக்கான்’ என அண்ணன் சொல்லும் பதிலில் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்போம். கரன்ட் வந்து பார்த்தால், சில நிமிடத்தில் சச்சின் அவுட்டாகி இருப்பார். துண்டை உதறிக் கொண்டு பாதி டிக்கெட் காலியாகி விடும். அதில் இளைய அண்ணனும் ஒருவன். சச்சின் பிரியன். அல்ல அல்ல வெறியன். ‛சச்சின் சதம் அடிக்க வேண்டும். இந்தியா தோற்றாலும் பரவாயில்லை‛ என்பதே அவன் தியரி. அதற்காக அவன் எந்த எல்லைக்கும் செல்வான்.

‛டெண்டுல்கர் 90 அடிச்சிட்டான்டா. நீ கிளம்பு’ என மூத்த அண்ணன் அவனை விடாப்பிடியாக வெளியேற்றுவார். அவன் பார்த்தால் சச்சின் சதம் அடிக்க மாட்டார் என்பது அவரின் சென்ட்டிமென்ட். அவன் எச்சில் விழுங்கிக் கொண்டே வெளியேறுவான். சதம் அடித்ததை சொல்லி அனுப்பினால், சிரித்தபடி ரீ என்ட்ரி கொடுப்பான். ஸ்ட்ரெய்ட் டிரைவ், கவர் ட்ரைவ், ஸ்வீப் என சச்சினின் ஒவ்வொரு ஷாட்டையும் நகலெடுப்பான். ஓபனிங் தவிர வேறு இடத்தில் இறங்க மாட்டான். ஓவர் கொடுத்தால் ஒரு ஆஃப் ஸ்பின், ஒரு லெக் ஸ்பின், ஒரு ஃபுல் டாஸ், ஒரு வைடு என சச்சின் போலவே வெரைட்டி காட்டுவான். பந்து போடும் முன் கையில் இருக்கும் காப்பை ஒருமுறை சரிசெய்து சச்சின் பவுலிங் போடுவதைப் பார்த்து, மறுநாளே அவனும் காப்பு வாங்கினான்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். பணி முடிந்து நள்ளிரவு அறைக்குள் நுழைந்ததும், எதேச்சையாக அவனை கவனித்தேன், சச்சினின் பிரியாவிடைப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் கண்களில் ஏனோ ஈரம். அவனை இக்கோலத்தில் காண்பது இதுவே முதன்முறை. திரை கட்டி நின்ற நீரை எனக்குத் தெரியாமல் துடைத்து விட்டு சொன்னான் ‛‛இதை விட வேற என்னடா பெருமை வேணும். இந்தியாவுல வேற எந்த ஸ்போர்ட்ஸ்மேனுக்கும் இப்படி ஒரு மரியாதை கிடைச்சிருக்காது’’ என பூரித்தான். டிவியில் சச்சினுக்கு பாரத ரத்னா என நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது. செய்தி சேனல் பக்கமே திரும்பாதவன், அன்று எல்லா சேனல்களையும் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டே இருந்தான். 

உயிர் நிகர் காதலி திடீரென ‛நாளைல இருந்து நம்ம பேச வேண்டாம்’ என முத்தமிட்டு பிரிந்தால் எப்படி இருக்கும்? அந்த வெறுமையை அன்று உணர்ந்தனர் சச்சின் ரசிகர்கள். இத்தனைக்கும் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியதைப் போல படக்கென விலகவில்லை. ஆற அமர ஆலோசித்து, ஓய்வை அறிவித்தார் சச்சின். அவர் வசதிப்படி, தென் ஆப்ரிக்கா சுற்றுப் பயணத்தை தள்ளி வைத்து, வெஸ்ட் இண்டீஸை டூருக்கு அழைத்து, அவர்  விருப்பப்படியே  சொந்த மண்ணான மும்பை வான்கடேவில் கடைசிப் போட்டியை நடத்தி, நன்றிக் கடன் செய்திருந்தது பி.சி.சி.ஐ. முதலும் கடைசியுமாக மகன் ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த தாயின் முன்னிலையில், தாய் மண்ணில், அமீர் கானில் இருந்து ராகுல் காந்தி வரை  எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரிக்க, வருங்கால இந்திய கிரிக்கெட்டின் தூண்களான விராட் கோஹ்லி, தோனியின் தோள்களில் ஜம்மென அமர்ந்து, கம்பீரமாகத்தான் விடைபெற்றார் சச்சின். ஆனால், ரசிகர்கன்தான் கலங்கி நின்றான். காரணம்... 

‛‛முதலில் சச்சின் மும்பைக்குச் சொந்தம், இரண்டாவது நாட்டுக்குச் சொந்தம், மூன்றாவதாகத்தான் எனக்குச் சொந்தம். இது திருமணத்துக்கு முன்பே எனக்குத் தெரியும். சச்சின் இல்லாத கிரிக்கெட்டை என்னால் நினைத்துப் பார்க்க முடியும். ஆனால், கிரிக்கெட் இல்லாத சச்சினை நினைத்துப் பார்க்க முடியாது’’.

இது, சச்சின் ஓய்வு பெற்ற தினத்தில் அவர் மனைவி அஞ்சலி சொன்னது.  கிரிக்கெட் இல்லாத சச்சினும், சச்சின் இல்லாத கிரிக்கெட்டும் இன்று நமக்கு பழகி விட்டது. ஓய்வுக்குப் பின், வெயில் படாது, உடம்பை வளைக்காது,, பவுடர் போட்ட முகத்துடன்  புசுபுசுவென அவரும் பள்ளி விழாக்களில் கலந்து கொள்கிறார். நாமும் விராட் கோஹ்லியின் கவர் ட்ரைவ் நோக்கி நகர்ந்து விட்டோம். ஆனால், அவர் ஓய்வு பெற்ற நாளில் ஒரு வெறுமை துரத்திக் கொண்டே இருந்தது.  

ட்விட்டரில் பஞ்சுமிட்டாய் என்ற பெயரில் இயங்கும் அரவிந்த் சச்சின் வெறியன். சச்சின் சின்ன வயதில் அடர்த்தியான தலைமுடியுடன் இருக்கும் புகைப்படம்தான், அரவிந்தின் அடையாளம். சச்சின் ஓய்வு பெற்ற நாளில் அவர் எப்படி இருந்தார் என கேட்டோம். ‛‛சச்சின் பேசிட்டு இருக்கும்போதே எனக்கு அழுகை வந்துருச்சு. எங்க அம்மா என்னைப் பாத்து சிரிச்சாங்க. இதுக்கெல்லாமா அழுவாங்கன்னு கிண்டல் பண்ணாங்க. ஆனா எனக்கு அழுகைதான் வந்துச்சு. எப்ப அழுதேன்னு கூட என்னால கரெக்டா சொல்ல முடியும். ஸ்பீச் முடிச்சப்ப, ‛ரசிகர்கள் சச்சின், சச்சின்...னு சொல்றது என் காதுகளில் கேட்டுட்டே இருக்கும்’னு சச்சின் முடிச்சப்ப, என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை ஒரு 20 நிமிஷம் அழுதேன். அந்த ஃபீல் எப்படி இருந்துச்சு தெரியுமா? நமக்கு நெருக்கமானவங்க யாராச்சும் செத்துப் போயிட்டா எப்படி இருக்கும். அன்னிக்கி அந்த மாதிரி ஃபீல் பண்ணேன். இனி கிரிக்கெட்டே அவ்ளோதான்னு நினைச்சேன். இனிமே யாருக்கு சப்போர்ட் பண்ண? யாருக்குமே சப்போர்ட் பண்ணக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதனால நாலு மாசம் மேட்ச் பாக்குறதையே விட்டுட்டேன்’’ என இன்னமும் ஃபீல் பண்ணுகிறார் அரவிந்த். 

அவர் மட்டுமல்ல, இதுதொடர்பாக பேசிய அனைவருமே இதே பதிலைத்தான் சொன்னார்கள். நேற்று ஐ.எஸ்.எல். போட்டியின் இடைவேளையின்போது சக நிருபரிடம் இந்த விஷயம் குறித்து பேசியபோது அவரும் அதைத்தான் சொன்னார். ‛‛சத்தியமா அழுதுட்டேன். 22 யார்டு தூரத்திலான என் 24 ஆண்டு பயணம் முடிந்ததுன்னு சொன்னப்பவே லைட்டா கண்ணைக் கட்டுச்சு. எல்லாரும் போன பிறகு பிட்ச்சை தொட்டு கும்பிட்டப்போ, கண்ணு கலங்கிருச்சு. இதுக்கு முன்னாடி ஹைதராபாத்ல ஆஸ்திரேலியாகிட்ட சச்சின் 175 அடிச்சும்  இந்தியா தோத்துருமே அப்ப அழுதேன். இது செகன்ட் டைம்’’ என நினைவலைகளில் மூழ்கினார். 

 

சச்சின்

கடைசி இன்னிங்சில் சச்சின் அவுட்டானபோது யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சதம் அடித்திருக்கலாம் என கவாஸ்கர் மட்டுமே வர்ணனையில் ஏங்கினார். ஆனால், போட்டி முடிந்து, பிரியாவிடை கொடுக்கும்போது, பேப்பரைப் பார்த்து ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லிய போதும், தனியாக சென்று பிட்ச்சை தொட்டுக் கும்பிட்டபோதும் சச்சின் ரசிகர்கள் கலங்கி விட்டனர். 

''அன்னிக்கி நான்  எங்க பெரியம்மா வீட்டுல இருந்தேன். மேட்ச் பாக்கும் போதெல்லாம் ஒண்ணும் தோணல. ஃபேர்வெல் ஸ்பீச் பாத்துட்டு இருந்தப்ப, கண்ல தண்ணி வராததுதான் குறை. என்னைப் பார்த்து அம்மா கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. எங்க அண்ணன் பாதியிலயே எந்திரிச்சு போயிட்டான். ஆக்சுவலா, நாங்க சச்சின் கடைசி டெஸ்ட்டை மும்பையில பாக்குறது மாதிரி பிளான் பண்ணி இருந்தோம். கடைசில டிவியில்தான் பாக்க முடிஞ்சது. இதையே என்னால தாங்க முடியலை’’ என்றார் ஹரிஹரன். அவர் மட்டுமல்ல சச்சினை சரமாரியாக விமர்சிப்பவர்கள் கூட அன்று லேசாக கலங்கினர். அவ்வளவு ஏன்… "சச்சின் ஓய்வை அறிவித்ததில் இருந்து நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன்''  என்றார் ஆரம்ப காலத்தில் சச்சினை ஜெராக்ஸ் எடுத்த சேவாக். 

அப்போது, ஒரு நாளிதழில் ஸ்போர்ட்ஸ் பக்கத்தை கவனித்துக் கொண்டிருந்ததால், சச்சின் ஓய்வை சிறப்பாக கவர் செய்ய வேண்டும் என முன்கூட்டியே அலுவலகம் சென்றேன். எடிட்டோரியலில் மட்டுமே டிவி இருக்கும். பிரஸ்ஸில் வேலை செய்யும் கடைநிலை ஊழியரில் இருந்து செய்தி ஆசிரியர் வரை எல்லாருமே, சச்சின் பேச்சை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தோம். பேச்சு முடிந்ததும் லே அவுட் ஆர்ட்டிஸ்ட்டில் இருந்த நண்பன் சொன்னான் ‛‛சரி சரி, கண்ணைத் துடைச்சுக்கோ. சீக்கிரம் போய் மேட்டர் ரெடி பண்ணு. பக்கம் முடிக்கனும்’’ 

ஏனெனில் நானும்....

vikatan

  • தொடங்கியவர்

நகைகள் 100கோடி...ஹெலிகாப்டருக்கு 20கோடி! காஸ்ட்லி கல்யாணத்தின் ஆச்சர்ய தகவல்கள் - படங்கள்

 

கோடி

முன்னாள் கர்நாடக அமைச்சரும் சுரங்கத் தொழில் அதிபருமான காளி ஜனார்த்தனரெட்டியின் மகள் திருமணம் இன்று பெங்களூருவில் இன்று பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. மகளின் திருமணத்தை நடத்த ரூ.200 கோடிக்கு மேல் ஜனார்த்தன ரெட்டி செலவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூரில் செங்கா ரெட்டி என்ற போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மகனாகப் பிறந்தவர் ஜனார்த்தன ரெட்டி. ஆனால், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வளர்ந்தவர்கள். கடந்த 1999-ம் ஆண்டுதான் ஜனார்த்தன ரெட்டியும் அவரது சகோதரர்கள் கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகியோர் மீடியா வெளிச்சத்துக்கு வந்தார்கள். தற்போதையை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வாராஜுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

தொடக்கத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்த ரெட்டி சகோதரர்களுக்கு கடந்த 2004-ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின்போது, சுரங்கத் தொழிலுக்கான லைசென்ஸ் கிடைத்தது. சுரங்கத் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. ஜனார்த்தனரெட்டிக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்ந்திருந்தது. கர்நாடகத்தில் எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றார் ஜனார்த்தன ரெட்டி.  தொடர்ந்து 2009-ம் ஆண்டு பெல்லாரி சுரங்க ஊழலில் சிக்கினார். இந்த வழக்கில் 2011-ம் ஆண்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது ஜாமினில் வெளிவந்துதான் மகள் பராமனியின் திருமணத்தை நடத்துகிறார்.

ff06e28b-92c0-48cb-a5b7-8bbe73e1a692_105

மணமகன் ராஜிவ் ரெட்டிக்கு 25 வயதாகிறது. பிபிஎம் பட்டதாரி. மணமகள் பிரமானிக்கு 21 வயதாகிறது. ஹைதராபத் தொழிலதிபர் விக்ரம் தேவாரெட்டியின் மகன்தான் ராஜிவ். தந்தை நடத்தும் நிறுவனத்தின் வெளிநாட்டு தொடர்புகளை கையாள்கிறார். 

இந்த திருமணத்துக்காக எத்தனை கோடி செலவு செய்யப்பட்டது. எப்படி செலவிடப்பட்டுள்ளது என்று பார்க்கலாம். எல்ஈடி திரையுடன் கூடிய திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டது. அழைப்பிதழை திறந்தவுடன் 'பிரமானி வெட்ஸ் ராஜிவ்' என்ற பாடல் திரையில் ஓடும். ரெட்டி குடும்பத்தினரும் திரையில் தெரிவார்கள். இதற்கு ரூ.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

திருமணத்துக்காக குடும்பத்தினர் அனைவருக்கும் தங்க நகைகள், பட்டுப்புடவைகள் ரூ.100 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளது. நடிகர் நடிகைகள் கலை நிகழ்ச்சிக்காக ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது. விருந்தினர்கள் வருவதற்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தவுள்ளது. இதற்காக ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது. விருந்துக்காக ரூ 20 கோடி செலவிடப்பட்டுள்ளது. திருமணத்துக்கான செட் அமைப்பது போன்ற பிற விஷயங்களுக்காக பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.

இந்த திருமணத்துக்காக தனது 10 சொத்துக்களை அடமானம் வைத்து ஜனார்த்தன ரெட்டி பணத்தை திரட்டியுள்ளார். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆந்திர, கர்நாடக மாநில பெரும் அரசியல் புள்ளிகள் நடிகர்- நடிகைகள் தொழிலதிபர்கள் முதல் நண்பர்கள், உறவினர்கள் என 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்கவுள்ளனர். 

weds_10045.jpg

இதனால் திருமணம் நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 3000 தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வி.வி.ஐ.பிக்கள் திருமணத்தில் பங்கேற்பதால் 300 போலீஸ் அதிகாரிகளும் திருமணம் நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். திருமணத்தை நடத்தி வைக்க திருப்பதி கோயிலில் இருந்து 8 புரோகிதர்கள் வந்துள்ளனர். 

திருமணம் நடைபெறும் பெங்களூரு அரண்மனை மைதானம் பெல்லாரி நகரம் போலவே மாற்றப்பட்டுள்ளது. பெல்லாரி நகரில் உள்ள காவல் பஜார், தனாப்பா பீடி தெரு, ஜனார்த்தன ரெட்டி படித்த பள்ளி ஆகியவை அரங்குக்குள் எழுப்பப்பட்டுள்ளன. இரு பிரமாண்டமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தினர் இவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். 

பெங்களூருவில் 1,500 நட்சத்திர ஹோட்டல் அறைகள் புக் செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்ல 2000 டாக்ஸிகள் விருந்தினர்களுக்காக ஓடுகின்றன. 10க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பறந்து பறந்து விருந்தினர்களை அழைத்து வரப் போகின்றன. குதிரைகள், யானைகள் போன்றவையும் விருந்தினர்களை வரவேற்க அரண்மனை முகப்பில் நிறுத்தப்படவுள்ளன.

vikatan

  • தொடங்கியவர்

உலக சகிப்புத்தன்மை தினம் #Internationaldayfortolerance

 

internatinalday_09136.jpg

உலகில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்களையும் வியந்து பாராட்டி ஏற்றுக்கொள்வதையே சகிப்புத்தன்மை என்கிறோம். இதைப் பற்றி கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.

நோக்கம்

மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும் நவம்பர் 16 அன்று யுனெஸ்கோ நிறுவனத்தால் இந்நாள்  கொண்டாடப்படுகிறது.

மேலும் யுனெஸ்கோ நிறுவனத்தின் 50-ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம் வருங்காலத் தலைமுறையினரைக் கருத்தில் கொண்டு அகில உலக அளவில் இந்நாள் கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானம் 1995-ம் ஆண்டு ஐ.நா.பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படியே ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இது வெறும் நன்னெறி, கோட்பாடு மட்டும் அல்ல. இது சட்ட திட்டங்களாக அரசியல் கோட்பாடுகளாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று இதன் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தினத்தில் மக்களிடையே சகிப்புணர்வு இல்லாததால் ஏற்படும் மோசமான விளைவுகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொருவரும் மற்றவரின் அடிப்படை உரிமை, கருத்துகள், சுதந்திரம், கலாச்சாரம், மத நம்பிக்கை போன்றவற்றை அங்கீகரிக்கவும் மதிக்கவும் வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

இவ்வகையான சகிப்புத்தன்மை ஏற்பட தனிமனிதன் மட்டுமின்றி ஒவ்வொரு அரசின், அரசியல் தீர்வும் முக்கியம். இதற்கு நமது தேசப்பிதாவான மகாத்மா காந்தியை உதாரணமாகச் சொல்லலாம்.

மனித குலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாகக் குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையாவது நம்மிடையே இருக்க வேண்டும் என்பதை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.

vikatan

  • தொடங்கியவர்
மிஸ் ஹவாய் 2017 அழகுராணி தெரிவு
 

மிஸ் ஹவாய் 2017 அழ­கு­ரா­ணி­யாக ஜூலியா குவோ தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

 

206893.jpg

 

206891.jpg

 

206892.jpg

 

பசுபிக் சமுத்­தி­ரத்­தி­லுள்ள அமெ­ரிக்கத் தீவான ஹவாயின் மிஸ் ஹவாய் யூ.எஸ்.ஏ. 2017 அழ­கு­ராணி போட்டி அண்­மையில் நடை­பெற்­றது.

 

2068914907177_1249284605133970_728879345

 

2068914910493_1249285431800554_417834254

 

2068914915294_1249284335133997_511464156

 

இதில் ஜூலி குவோ முத­லிடம் பெற்றார். எதிர்­வரும் மிஸ் யூ.எஸ்.ஏ.அழ­கு­ராணிப் போட்­டியில் ஹவாய் மாநி­லத்தின் சார்பில் ஜூலி குவோ பங்குபற்ற வுள்ளார்.

 

2068914925487_1249284708467293_915082141

 

2068914947637_1251539971575100_844793117

 

2068914955982_1249284251800672_687950799

 

2068914956381_1249284655133965_305990578

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகின் மிக அற்புதமான தேனிலவு அல்பம்: 6,200 மைல்கள் பயணித்து மனைவியை படம்பிடித்த புகைப்படக் கலைஞர் (Photos)

 

உலகின் மிக அற்புதமான தேனிலவு அல்பம்: 6,200 மைல்கள் பயணித்து மனைவியை படம்பிடித்த புகைப்படக் கலைஞர் (Photos)

கரோல் நியனார்டோவிக்ஸ் (Karol Nienartowicz) எனும் புகைப்படக் கலைஞர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

45 நாட்கள் தேனிலவுப் பயணமாக தனது மனைவியை நோர்வே மற்றும் ஸ்வீடனுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கடுமையான குளிர் காலத்தில் 6,200 மைல்கள் காரில் பயணம் செய்து, 96 மைல்கள் நடந்து, அற்புதமான இயற்கைக் காட்சிகளுடன் மனைவியைப் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

அழகான இடங்களைத் தேடி 25 கிலோ எடையைச் சுமந்துகொண்டு, ஆங்காங்கு கூடாரம் அமைத்து தங்கி, குளிரைச் சமாளித்து, 580 புகைப்படங்களை எடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வோரு இடத்திலும் மணமகள் திருமண ஆடையுடன் காட்சியளிக்கிறார்.

யாருக்கும் அதிகம் தெரியாத இடங்களுக்குச் செல்வது என்று முடிவு செய்தோம். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அதிக உழைப்பைச் செலவிட்டிருக்கிறோம். அற்புதமான தருணத்திற்காக நீண்ட நேரம் காத்திருந்தோம். குளம், குட்டை, மலை, பாறை, சகதி, காடு என்று கடினமான பயணங்களை மேற்கொண்டோம். ஆனால், இன்று உலகின் மிக அற்புதமான தேனிலவு அல்பங்களில் ஒன்று என்று இதனைப் பாராட்டும்போது, அந்தக் கஷ்டம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. எங்கள் வாழ்வில் இது மிக அற்புதமான பயணம்

என தெரிவித்துள்ளார் கரோல் நியனார்டோவிக்ஸ்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

 

http://newsfirst.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

விமானப் பயண உணவுகளை தயாரிக்கும் ரோபோக்கள்
-----------------------------------------------------------------------------------------------
விமானப் பயணம் மேற்கொள்வோரின் உணவுப் பழக்கங்கள் மற்றும் தேவைகள் அதிகமாகவும் மாறுபட்டதாகவும் இருக்கும் சூழலில், அவர்களுக்கான உணவைத் தயாரிப்பதில் பல முன்னேற்றங்கள் செய்யப்படுகின்றன.

BBC

  • தொடங்கியவர்

மனக்கவலையை விட்டொழிய குரு, சீடருக்கு உணர்த்திய கதை

 

மனதில் எழும் மனக்கவலையை விட்டொழிய குரு, சீடருக்கு உணர்த்திய கதையை கீழே பார்க்கலாம்.

 
 
மனக்கவலையை விட்டொழிய குரு, சீடருக்கு உணர்த்திய கதை
 
குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன், ‘குருவே! சில நேரங்களில் மனதில் எழும் மனக்கவலையை எப்படி களைவது?’ என்று கேட்டான். அவனைப் பார்த்த குரு, ‘இதற்கான பதிலை ஒரு கதையின் வாயிலாக உங்களுக்கு உணர்த்துகிறேன்’ என்றபடி கதையைத் தொடர்ந்தார்.

அந்தக் காட்டில் குரங்குகள் பல, கூட்டமாக இருந்தன. அவற்றில் சுட்டித்தனம் செய்யும் ஒரு குட்டிக் குரங்கும் உண்டு. ஒரு நாள் அந்தக் குட்டிக்குரங்கு, தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த பாம்பு ஒன்றைக் கண்டது. நெளிந்து, வளைந்து சென்ற அந்தப் பாம்பைக் கண்டதும், அதற்கு குதூகலமாக இருந்தது. அது ஒரு பெரிய நச்சுப் பாம்பு. குட்டிக் குரங்கானது, மெதுவாகப் போய் அந்தப் பாம்பை தன் கையில் பிடித்து விட்டது.

பிடிபட்ட பாம்பு, குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக்கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது. குட்டிக் குரங்குக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது. இதைப் பார்த்து குரங்குகள் அனைத்தும் அங்கே கூடிவிட்டன. ஆனால் எந்தக் குரங்கும், குட்டிக்கு உதவ முன்வரவில்லை.

‘ஐயய்யோ.. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு. இது கடித்தால் உடனே மரணம்தான்’ என்றது ஒரு குரங்கு.

மற்றொன்றோ, ‘அவன் தனது பிடியை விட்டதுமே, பாம்பு அவனைக் கடித்துவிடும். பாம்பிடம் இருந்து அவன் தப்பிக்கவே முடியாது’ என்றது. இப்படியே ஒவ்வொரு குரங்கும், குட்டியின் பீதியை அதிகரித்து விட்டு அங்கிருந்து அகற்று போய்விட்டன.

தன்னுடைய கூட்டமே, தன்னை கைவிட்டுவிட்டதால், விரக்தியின் உச்சத்தில் இருந்தது குட்டிக் குரங்கு. எந்த நேரமும் கடிக்கத் தயாராக சீறிக்கொண்டிருக்கும் பாம்பைப் பார்த்து பயந்தபடியே, தன் பிடியை விட்டுவிடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டது. மரண பயம் அந்தக் குரங்கை வாட்டி வதைத்தது.

‘ஐயோ.. புத்தி கெட்டுப் போய் இந்தப் பாம்பை கையால் பிடித்துவிட்டேனே’ என்று பெரிய குரலெழுப்பி புலம்பியது. நேரம் கடந்து கொண்டே இருந்தது. உணவும், நீரும் இல்லாமல் குரங்கின் உடல் சேர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தது அந்தக் குரங்கு. கண்கள் இருளத் தொடங்கின.

அந்த நேரம் பார்த்து ஒரு ஞானி அந்த வழியாக வந்தார். சொந்தங்களெல்லாம் கைவிட்ட நிலையில், இந்தத் துறவி நம்மைக் காப்பாற்றுவார் என்று அந்த குட்டிக் குரங்கு நினைத்தது. அதற்கு கொஞ்சம் நம்பிக்கையும் வந்தது.

குட்டியின் அருகில் வந்த துறவி, ‘எவ்வளவு நேரம்தான் அந்தப் பாம்பை கையில் பிடித்துக் கொண்டே கஷ்டப்படப் போகிறாய்? அதைக் கீழே போடு’ என்றார்.

குரங்கோ, ‘ஐயோ.. சுவாமி! நான் பாம்பை விட்டு விட்டால், அது என்னைக் கொன்றுவிடுமே’ என்றது.

அதற்கு துறவி, ‘பாம்பு செத்து ரொம்ப நேரமாகிவிட்டது. அதை கீழே வீசு’ என்றார். அவரது வார்த்தையைக் கேட்ட குரங்கு, பயத்துடனேயே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

துறவி சொன்னது உண்மைதான். குரங்கின் இறுகிய பிடியில் நெடுநேரம் இருந்த அந்தப் பாம்பு இறந்து போயிருந்தது. அதைப் பார்த்த பிறகுதான், அந்தக் குரங்கு குட்டிக்கு உயிர் வந்தது. பின்னர் அந்தக் குரங்கு, துறவியை நன்றியுடன் பார்த்தது. அவர், ‘இனிமேல் இதுபோன்ற முட்டாள் தனம் பண்ணாதே’ என்றபடி தன் வழியில் நடந்து போனார்.

நம்மில் பலரும் இப்படித்தான், மனக்கவலை என்ற செத்தப் பாம்பை, கையில் பிடித்து வைத்துக் கொண்டு, விட முடியாமல் கதறிக்கொண்டிருக்கிறோம். எனவே கவலையை விட்டொழியுங்கள். மகிழ்ச்சி தானாகவே வந்து சேரும் என்றார் குரு.

.maalaimalar

  • தொடங்கியவர்

உலகின் கவர்ச்சியான மனிதர் யார் தெரியுமா?

 

rock%201_21096.jpg

அமெரிக்காவின் 'பீப்பிள்' வார இதழ் இந்த ஆண்டுக்கான, உலகின் கவர்ச்சியான மனிதராக, WWE புகழ் Dwayne 'The Rock' johnson-ஐ தேர்ந்தெடுத்துள்ளது. 
ட்வெய்ன்க்கு 44 வயதாகிறது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. ஃபோர்ப்ஸ் இதழ் அவரை, ஹாலிவுட்டில் அதிகமாக சம்பாரிக்கும் நடிகர் என்றும் கூறியுள்ளது. உலகிலேயே கவர்ச்சியான மனிதர் என்று கூறப்படுவதைப் பற்றி,'எப்போது ஞாபகம் இருக்கட்டும், கவர்ச்சி என்பது 'முயன்று அதை அடைவது இல்லை'. நீங்கள் இயல்பாக இருக்கும் போது அது தானாக வரும்.' என்று கூறியுள்ளார் ட்வெயின்.

vikatan

  • தொடங்கியவர்

மனதை மயக்கும் சுற்றுலா தலங்கள் (புகைப்படத் தொகுப்பு)

 

இயற்கை எழில் மிக்க மலைப் பகுதிகள், பேரழகை உள்வாங்கியுள்ள கடற்கரைகள், ஆபத்தையும், அழகையும் ஒருங்கே கொண்டுள்ள பள்ளத்தாக்குகள், இயற்கையோடு பின்னி பிணைந்துள்ள காடுகள், ஆர்ப்பரித்து பாயும் நதிகள் என்று உலகில் ரசிப்பதற்கும், இயற்கையோடு வாசம் செய்வதற்கு ஏராளமான இடங்கள் உண்டு. அவற்றில் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

இயற்கை எழில் மிக்க யார்க்க்ஷயர்

 

இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷர் பிரதேசம், பழமைக்கும், இயற்கை எழிலுக்கும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 2014-இல் லோன்லி பிளானட் என்ற உலகப் புகழ் பெற்ற பயணப் புத்தகம் யார்க்‌ஷயரை உலக அளவில் சுற்றுலாவாசிகள் பார்ப்பதற்கு சிறந்த இடம் என்று குறிப்பிட்டுட்டுள்ளது.

ஜார்ஜியா கடற்கரை

எண்ணற்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், தேவாலயங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் கொண்ட அமெரிக்காவின் ஜார்ஜியா கடற்கரையில் கடலின் அழகை ரசிப்பதற்கும், சுற்றுலாவாசிகளின் சுதந்திரத்துக்கும் என்றும் உத்தரவாதமுண்டு.

போர்ச்சுகல் நாட்டில் உள்ள அஜோர்ஸ் பகுதி

பச்சைப் பசேலென காணப்படும் போர்ச்சுகல் நாட்டில் உள்ள அஜோர்ஸ் பகுதி, ஐரோப்பாவுக்கு வரும் சுற்றுலா பணிகளின் விருப்பமான இடமாகவும், அமைதியை விரும்புவர்களின் ஆதரவினை பெற்ற இடமாகவும் திகழ்கிறது.

சிக்கிம்

இமய மலை சாரலில் உள்ள இந்திய மாநிலமான சிக்கிம், நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு அருகே உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய மலையான கஞ்சன்ஜங்கா மலை உள்பட பல குன்றுகள் ,மலை பிரதேசங்கள் நிரம்பிய சிக்கிம், ஆண்டு தோறும் எண்ணற்ற சுற்றுலாவாசிகளை ஈர்க்கிறது.

ஆஸ்திரேலியா

கடற்கரை மற்றும் சூரிய குளியல் பிரியர்களின் அமோக ஆதரவை பெற்றது ஆஸ்திரேலிய கடற்கரைகள் தான். எந்த குறுக்கீடும் இல்லாமல் சுற்றுலாவாசிகள் கடலின் அழகோடு தங்களை மறந்து ஓய்வெடுக்க சிட்னி கடற்கரை போன்ற பல கடற்கரைகள் ஆஸ்திரேலியாவில் உள்ளன.

ஜெனீவா ஏரி

ஆல்ப்ஸ் மலையின் வடக்கே அமைந்திருக்கும் ஜெனீவா ஏரி, சுற்றுலாவாசிகளை மெய் மறக்க வைக்கும் ஸ்தலமாகும். சுவிட்ஸர்லாந்து மற்றும் பிரான்ஸ்ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவான இந்த ஏரியின் அழகியல் தன்மை காண்போரை பரவசப்படுத்தக்கூடியது.

ஸ்கெல்லிங் ரிங்

அயர்லாந்தின் ஸ்கெல்லிங் ரிங் பகுதியில் நாம் காண்பதெல்லாம் பசுமை மட்டுமே. நீண்ட மற்றும் பரந்த பாதைகளை கொண்ட இப்பகுதியில் அண்மை காலமாக சுற்றுலாவாசிகள் பெரும் எண்ணிக்கையில் படை எடுத்து வருகின்றனர்.

தென் ஆப்ரிக்க சஃபாரி

விலங்குகளை அருகில் இருந்து பார்ப்பதற்கும், காட்டில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் கூண்டுகளில் இரவு முழுவதும் தங்கியிருந்து காட்டு விலங்குகளின் செய்கைகளை இயற்கை சூழலில் கவனிப்பதற்கும் உலகின் தலை சிறந்த இடம் தென் ஆப்ரிக்க சஃபாரிகள் தான்.

கோக்கேகைரோ

உலகின் மிகவும் ஆழமான பள்ளத்தாக்குகளில் ஒன்றான பெரு நாட்டில் உள்ள கோக்கேகைரோ, மலையேற்ற பிரியர்களின் விருப்ப ஸ்தலமாகும். கண்கவர் இயற்கை அழகு மிக்க கோக்கேகைரோ சாகச பிரியர்களை நாளும் ஈர்க்கிறது.

BBC

  • தொடங்கியவர்

மிச்செல் ஒபாமாவை பற்றி 'நிறவெறி' கருத்து கூறியதால் ஏற்பட்ட நிலைமை..!

 

mich%202_18549.jpg

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை பற்றி, நிறவெறியுடன் ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதனை ஆமோதிப்பது போல், அமெரிக்காவின் வெஸ்ட் விர்ஜினியாவிலுள்ள ஒரு மேயர் கருத்திட்டிருந்தார். அவரின் செயலுக்கு பலத்த எதிர்ப்புகள் வரவே, மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.


வெஸ்ட் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள, டவுன் ஆஃப் க்லேவில் வசித்து வரும் பமெலா ராம்சே டெய்லர்,'ஒரு மாற்றத்துக்கு அழகான, கண்ணியமான முதல் குடிமகள் வெள்ளை மாளிகைக்கு வருவது புத்துணர்வாக இருக்கும். ஒரு மனிதக்குரங்கை பார்ப்பது என்னை மிகவும் சோர்வடைய வைக்கிறது.' என்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த போஸ்டை ஆமோதிப்பது போல், அந்த டவுனின் மேயர் பெவர்லி வாலிங்,'இந்த பதிவு எனது நாளை அர்த்தப்படுத்தியுள்ளது' என்று கமன்ட் செய்திருந்தார்.


இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த சம்பவத்தை எதிர்த்த பெடிஷனுக்கு, 1,70,000 பேர் ஆதரவு தெரிவிக்கவே, வாலிங் அவர் வகித்து வந்த மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

vikkatan

  • தொடங்கியவர்

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் பாடல் வீடியோ..!

 

maxresdefault_19545.jpg

நவம்பர் 11ஆம் தேதி வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் விஜய் யேசுதாஸ் பாடிய ‘அவளும் நானும்...’ பாடலின் வீடியோவை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். 

 

 

 

  • தொடங்கியவர்

 

எமோஜிகள்!
இனி ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கும் எமோஜிகள்!

BBC

  • தொடங்கியவர்

p32a.jpg

டோலிவுட்: ஷீரத் கபூர்

கென்யாவில் உதித்த பியூட்டி. மும்பையில் படிப்பை முடித்தபிறகு பாலிவுட்டில் கொரியோகிராஃபராக தன் கலைப்பயணத்தைத் தொடங்கினார். இவர் டான்ஸைப் பார்த்து அசந்த மனவாடுகள் சர்வானந்திற்கு ஜோடியாக ‘ரன் ராஜா ரன்’ தெலுங்குப் படத்தில் நடிக்க வைத்தார்கள். அது சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க, அம்மணி ராசி செம போல என ‘டைகர்’, ‘கொலம்பஸ்’ படங்களில் ஹீரோயினாக்கினார்கள். இப்போது பிஸியாக விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார் இந்த அழகி.# தமிழுக்கு வாம்மா

மல்லுவுட்: ஸ்நேகா உன்னிகிருஷ்ணன்

p32b.jpg

குருவாயூர் குல்ஃபி. டி.வி ரியாலிட்டி ஷோவில் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க, அடித்தது லாட்டரி. சேட்டன்கள் சினிமாவுக்கு ரெட் கார்பெட் விரித்து அழைத்துச் சென்றார்கள். முதலில் கமிட்டான ‘நீயும் பின்னே ஞானும்’ படம் சில காரணங்களால் தள்ளிப்போக ‘ஆக்ச்வலி’, ‘குஞ்சிராமாயணம்’ என்ற இரு படங்கள் ஹிட் என்ட்ரி! இப்போது முதலில் கமிட்டான படத்தின் ரிலீஸுக்காக வெயிட்டிங். தவிர, ‘பார்ட் டைம் ஆர்.ஜே’வாக எஃப்.எம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். #குயில் போல குரலு!

சாண்டல்வுட்: கவிதா ராதேஷ்யம்

p32c.jpg

மும்பை பால்கோவா. நடிப்புக் கல்வியை முடித்துவிட்டு குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்தவரை ‘பாஞ்ச் கண்டே மே பாஞ்ச் க்ரோர்’ என்ற இந்திப் படத்தில் நடிக்க வைத்தார்கள். அதன்பின் `காமசூத்ரா'வில் நடிக்க வாய்ப்பு வர, மறுத்துவிட்டார். பிறகு சில இந்திப் படங்களில் நடித்தவர் ‘ராகினி ஐ.பி.எஸ்’ படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். விளைவு, ‘ஜாகுவார்’, ‘அம்மா’, ‘அத்ருஷ்டா’ என வரிசையாகப் படங்கள். விலங்குகளைக் காக்க பீட்டாவுக்காக அரை நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார். #தில்லு பேபி.

vikatan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

உலகின் மிக அற்புதமான தேனிலவு அல்பம்: 6,200 மைல்கள் பயணித்து மனைவியை படம்பிடித்த புகைப்படக் கலைஞர் (Photos)

 

உலகின் மிக அற்புதமான தேனிலவு அல்பம்: 6,200 மைல்கள் பயணித்து மனைவியை படம்பிடித்த புகைப்படக் கலைஞர் (Photos)

கரோல் நியனார்டோவிக்ஸ் (Karol Nienartowicz) எனும் புகைப்படக் கலைஞர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

45 நாட்கள் தேனிலவுப் பயணமாக தனது மனைவியை நோர்வே மற்றும் ஸ்வீடனுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கடுமையான குளிர் காலத்தில் 6,200 மைல்கள் காரில் பயணம் செய்து, 96 மைல்கள் நடந்து, அற்புதமான இயற்கைக் காட்சிகளுடன் மனைவியைப் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

அழகான இடங்களைத் தேடி 25 கிலோ எடையைச் சுமந்துகொண்டு, ஆங்காங்கு கூடாரம் அமைத்து தங்கி, குளிரைச் சமாளித்து, 580 புகைப்படங்களை எடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வோரு இடத்திலும் மணமகள் திருமண ஆடையுடன் காட்சியளிக்கிறார்.

யாருக்கும் அதிகம் தெரியாத இடங்களுக்குச் செல்வது என்று முடிவு செய்தோம். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அதிக உழைப்பைச் செலவிட்டிருக்கிறோம். அற்புதமான தருணத்திற்காக நீண்ட நேரம் காத்திருந்தோம். குளம், குட்டை, மலை, பாறை, சகதி, காடு என்று கடினமான பயணங்களை மேற்கொண்டோம். ஆனால், இன்று உலகின் மிக அற்புதமான தேனிலவு அல்பங்களில் ஒன்று என்று இதனைப் பாராட்டும்போது, அந்தக் கஷ்டம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. எங்கள் வாழ்வில் இது மிக அற்புதமான பயணம்

என தெரிவித்துள்ளார் கரோல் நியனார்டோவிக்ஸ்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

 

http://newsfirst.lk

அழகிய இடங்கள் தான்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

நவம்பர் - 17 

 

1511 : ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்ஸுக்கு எதிராக அணி திரண்டன.

 

1558 : இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க, அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிஸபெத் அரசியானார்.

 

850varalru---Arnold_Schwarzenegger.jpg1796 : பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன.

 

1820 :  கெப்டன் நத்தானியல் பால்மர் அந்தார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கரானார். பால்மர் குடாநாட்டுக்கு இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.

 

1831 : ஈக்குவடோர் மற்றும் வெனிசூலா ஆகியன கிரான் கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.

 

1869 : எகிப்தில் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.

 

1873 : பெஸ்ட், பூடா, மற்றும் ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.

 

1878 : இத்தாலிய மன்னர் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது.

 

1903 : ரஷ்யாவின் சமூக ஜனநாயக தொழிற் கட்சியானது போல்ஷெவிக் (பெரும்பான்மை), மேன்ஷெவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.

 

1922 : முன்னாள் ஒட்டோமான் பேரரசின் சுல்தான் ஆறாம் மெஹ்மெட் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டார்.

 

1933 : சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய அமெரிக்கா அங்கீகரித்தது.

 

1939 : செக். நாட்டில் நாஸி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கி லிடப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

 

1950 : 14 ஆவது தலாய் லாமாவாக டென்சின் கியாட்சோ தனது 15ஆவது வயதில் திபெத்தின் அரசுத் தலைவரானார்.

 

1968 : அலெக்சாண்ட்ரொஸ் பனகோலிஸ் என்பவருக்கு கிரேக்க சர்வாதிகாரி ஜோர்ஜ் பப்படொபவுலொஸைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 

1970 : வியட்நாம் போர்: மைலாய் படுகொலைகள் தொடர்பாக அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி, விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

 

1970 : சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவிலிருந்து இயக்கக்கூடிய ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

 

1970 : டக்ளஸ் ஏங்கெல்பேர்ட் முதலாவது கணினி மௌஸ் இற்கான காப்புரிமம் பெற்றார்.

 

1982: அமெரிக்காவில் நடைபெற்ற  ரேயமான்சினியுடனான 14 சுற்றுகள் கொண்ட குத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த டுக் கூ கிம் உயிரிழந் தார். குத்துச்சண்டை போட்டி விதிகள் மறுசீரமைக்கப்படுவதற்கு இச்சம்பவம் வழிவகுத்தது.

 

1989 : பனிப்போர்: செக்கஸ்லோவாக்கியாவில் நடைபெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிஸ அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக அமைந்தது.

 

1993 : நைஜீரியாவில் இராணுவப் புரட்சியினால் ஜனாதிபதி ஏர்னஸ்ட் ஷோன்கெனின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

 

2003 : ஹொலிவூட் நடிகர் ஆர்னோல்ட் ஷ்வார்ஸனெகர் அமெரிக்காவின் கலிபோர்னிய மாநில ஆளுநரானார்.

 

2013 : ரஷ்யாவின் கஸான் விமான நிலையத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 50 பேர் உயிரிழந்தார்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

181 நாடுகளில் கால் பதித்த உலகம் சுற்றும் பெண்!

 

உலகம்

நாம் பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினாலே  'உஸ்... அப்பாடி...'  என்று டயர்டு ஆகிவிடுவோம். ஆனால் ஒரு பெண் நான் ஸ்டாப்பாக உலகத்தையே சுற்றி வருகிறார்.  இதன் மூலம் 'உலகம் சுற்றி வந்த முதல் பெண்' என்ற சாதனையையும் படைக்கவிருக்கிறார்.  அதுமட்டுமல்ல, 'குறைந்த நாட்களில் உலகின் பல நாடுகளைச் சுற்றிவந்த முதல் பெண்', 'குறைந்த வயதில் உலகைச் சுற்றி வந்த சாதனைப் பெண்' என்ற சாதனைகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். அவர்... அமெரிக்காவின் கனெக்டிகட் நகரத்தைச் சேர்ந்த 27 வயது கசண்டிரா டி பேகோல்.

ஜூலை 2015-ல் தன் பயணத்தைத் தொடங்கிய கசண்டிரா, உலகில் மொத்தமுள்ள 196 நாடுகளில் இதுவரை 181 நடுகளுக்குச் சென்றுவந்துள்ளார்.  மீதமுள்ள  15 நாடுகளை இன்னும் 40 நாட்களுக்குள்  சுற்றிவந்துவிடவேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார்.

உலகம்

'Expedition 196' என்ற பெயரில் உலகப் பயணத்தை தொடங்கினார் கசண்டிரா. இவரின் பயணச் செலவுகளை  International Institute for Peace through Tourism (IIPT) என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதுவரை கசண்டிராவின் உலகப் பயணத்துக்கு  ஆன செலவு சுமார் 2 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பு சுமார் 1.35 கோடி). இதற்காக மற்ற நிறுவனங்களிடமிருந்தும் ஸ்பான்சர்கள் கிடைத்துள்ளன.

கசண்டிரா செல்லும் ஒவ்வொரு நாட்டிலும் இரண்டு அல்லது ஐந்து நாட்கள் தங்கி, அந்தந்த நாடுகளின் சுற்றுச்சூழல், கலாச்சாரம், இயற்கை வாழிடங்கள், கல்வி, தங்கும் இடங்கள்  என்று தனது இன்ட்ராகிராமில் புரமோட் செய்துவருகிறார். 15 மாதங்களில் இவர் ஏறி, இறங்கியிருக்கும் விமானங்களின் எண்ணிக்கை... 254!

உலக சாதனை படைக்கவிருக்கும் கசண்டிராவுக்கு வாழ்த்துகள்!

vikatan

  • தொடங்கியவர்

அலப்பறை செய்த அலமாரி

 

400_08024.jpg

இன்டர்நெட்டில் நேற்று நள்ளிரவில் இருந்து ஒரு அலமாரி வைரல் ஆகி வருகிறது. படத்தில் உள்ள அலமாரியைத் திறந்தால் அதில் சரிந்திருக்கும் பீங்கான் தட்டுகள் விழுந்து உடைந்துவிடும். தட்டுகளையும் உடைக்காமல், எப்படி அலமாரியைத் திறப்பது?

இந்த குழப்பம்தான் தாய்வானைச் சேர்ந்த  Tseng Shao-Tsen என்பவருடைய நண்பர் ஒருவருக்கு வந்தது. ஃபேஸ்புக்கில் அலமாரியின் புகைப்படத்தைப் பகிர்ந்து உதவி கேட்டார். பதில் கிடைத்ததோ இல்லையோ, அலமாரியின் புகைப்படம் வைரல் ஆகிவிட்டது. 

எல்லோரையும் பல மணிநேரங்களாக குழப்பிவிட்டு, ஒரு வழியாக திறந்தார்கள்.  எளிதில் கணிக்கக்கூடியதுதான். கதவை லேசாக திறந்து, தட்டுகளைக் கையால் பிடித்துவிட்டு, பின்னர் கதவை முழுவதும் திறந்திருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

நாய் துரத்துறது, சேறு அடிக்கிறது, இங்கிலீஷ்ல டவுட் கேக்குறது...இதெல்லாம் உங்களுக்கும் நடந்துருக்கா...!?

 

காலையில் தினமும் கண் விழித்தால் ஒரு சில பிரச்னைகளோடுதான் அந்த நாளை ஆரம்பிக்க வேண்டியது இருக்கும். அந்த வகையில் நாம் அன்றாடம் சந்திக்கும் சில!!!

சோத்துலேயும் அடி வாங்கியாச்சு சேத்துலேயும் அடி வாங்கியாச்சு :

1_15353.png

நாம் இதை மழைக்காலத்தில் கண்டிப்பாக அனுபவித்து இருப்போம். என்னவென்றால் சாலையில் சிவனேன்னு நின்றுகொண்டு இருக்கும்போது கார்காரனோ பைக்காரனோ வேகமா நமது மேல் சேற்றை வாரி அடித்துவிட்டுப் போய்டுவாங்க.

முரட்டுக் குடிகாரனா இருப்பான் போல :

2_15201.png

இந்த மாதிரி கேரக்டர் ஊருக்குள்ள நிறைய சுற்றுவாங்க. சரக்கு அடித்துவிட்டுவந்து நம்மிடம் பஞ்சாயத்து பண்றதுக்கே வீட்டில் இருந்து வந்துருவாங்க. ஏதாவது முக்கியமான சோலியா வெளியில் கிளம்பிட்டு இருப்போம் வேலியில் போற ஓணானை வேட்டிக்குள்ள விட்ட மாதிரி நம்மிடம் வந்து சலசம் பண்ணுவார்கள். அவங்ககிட்ட சொல்வோமா வேணாமானு மென்னு விழுங்கிட்டு இருப்போம்.

பேருந்தில் போராட்டம் :

3_15038.png

நாம் உச்சக்கட்ட டென்ஷனாவது பேருந்தில்தான். யாருன்னே தெரியாது அவனுடைய அங்காளி பங்காளி மாதிரி நம்மகிட்ட வந்து அவன் சொந்தக்கதை சோகக் கதையெல்லாம் சொல்லிட்டு இருப்பான். நாமும் வேறு வழி இல்லாமல் ஆமாம் சாமி போட்டுக்கிட்டு இருப்போம். இவிங்க பண்றது பத்தாதுனு இந்த டிரைவர் வேற அவர் இஷ்டத்துக்கு ப்ரேக்கை மிதிச்சி மிதிச்சி குறுக்கே இருக்கிற கம்பி மேல இடி வாங்க விடுவார். அது போக மேலே தூங்கி விழும் கும்பல் வேறு.

ரேசன் கடை வரிசை :

4_15394.png

இந்தப் பிரச்னை வீட்டில் கடைசிப் பையனுக்குத்தான் வரும். 'டேய் போய் ரேசன் கடையில் அரிசி பருப்பு மண்ணெண்ணெய் எல்லாம் வாங்கிட்டு வா'னு அம்மா சொல்லப்போய் பார்த்தால், ரெண்டு கிலோ மீட்டருக்கு வரிசை நிற்கும். சரி வரிசையில் நின்று அம்புட்டையும் வாங்கிட்டுப் போவோம்னு சொல்லி நாம வாங்கப் போறப்பதான் எல்லாமே முடிஞ்சு போயிடும். கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாது.

மொழி தெரியாதவர்களிடம் படும் அவஸ்தை :

5_15339.png

இந்தக் கொடுமையானது நாம் வேறு மாநிலங்களில் இருந்துவரும் மக்களிடம் அனுபவிப்போம். முக்கியமாக இந்திப் பேசும் மக்கள் நமக்கென்றே வந்து இம்சையைக் கூட்டுவார்கள். நாம் ஒன்று சொன்னால் அதை வேறுவிதமாகப் புரிந்துகொள்வார்கள். இது போதாது என்று இன்டர்நேஷனலில் இருந்து எல்லாம் நமக்கு ஆப்பு வரும். அவர்களிடம் சொல்லிப் புரியவைப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடும்.

சம்பந்தமே இல்லாமல் யாரவது நம்மை முறைத்தல் :

6_15068.jpg

எங்காவது வெளியில் போகும்போது இந்த நிலைமை வரும். நாம் உண்டு நம் வேலை உண்டுனு இருப்போம். திடீர்னு யாராவது சம்பந்தமே இல்லாமல் நம்மை வெறிக்க வெறிக்க வெறித்தனமாகப் பார்த்துக்கொண்டு இருப்பார். ஏன் எதற்கு என்று ஒன்றும் புரியாமல் மண்டையைப் பிச்சுக்கலாம் போல் இருக்கும். கடைசிவரை எதற்கு அப்படிப் பார்த்தான் என்றே தெரியாது.

நாய் துரத்துதல் :

7_15381.png

இந்த நிலைமை வண்டியில் போய்க்கொண்டு இருக்கும்போதோ நடந்து போய்க்கொண்டு இருக்கும்போதோ நடக்கும். முக்கியமாக நைட் டியூட்டி முடித்துவிட்டு வீடு திரும்பும் மக்களுக்குக் கண்டிப்பாக நடந்து இருக்கும். நம்மளைப் பார்த்தால் அந்த நாய்க்கு  எப்படித்தான்  இருக்குமோ, இதைவிடக் கொடுமை வண்டியில் போகும்போது கீழே விழுந்தவர்களும் உண்டு. கீழே விழுந்தால்தான் அந்த நாய்க்கு ஆத்ம திருப்தி  போல.

vikatan

  • தொடங்கியவர்

புகைப்படங்களை ஸ்கேன் செய்ய புதிய App

 

ஃபோட்டோக்களை, அதன் இயல்பு தன்மை மாறாமல் ஸ்கேன் செய்வதற்கு கூகுள் நிறுவனம் 'ஃபோட்டோ ஸ்கேன்' என்ற புதிய ஆப் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் இலவசமாக கிடைக்கும். ஸ்கேன் செய்ய வேண்டிய புகைப்படங்களை ஐந்து இடங்களில் படம் பிடித்து, ஒன்றாக இணைப்பதால், இதில் வழக்கமாக ஃபோனின் மூலம் படம் பிடித்தால் வரும் 'கிளாரிங்' இருக்காது.

pho%201_20032.png


இது பற்றி கூகுள் நிறுவனம்,'பழைய ஸ்கேனர்களை வைத்து ஸ்கேன் செய்வது அதிக நேரம் எடுக்கும். நவீன ஸ்கேனர்கள் மூலம் ஸ்கேன் செய்வதால் அதிகம் பணம் செலவாகும். ஆனால், இந்த ஸ்கேனிங் ஆப் முற்றிலும் இலவசமாகவும், தரம் வாய்ந்த புகைப்படங்களை உருவாக்கும் திறனும் உடையது.'என்று கூறியுள்ளது. 

vikatan

  • தொடங்கியவர்

சென்னையில் 'டொனால்ட் டிரம்ப் தோசை'... என்ன ஸ்பெஷல்?

 

டொனால்ட் டிரம்ப்

மெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அமெரிக்காவிலேயே பலரால் நம்ப முடியவில்லை. இந்தியாவில் பலருக்கு அவரின் வெற்றி அதிர்ச்சி அளித்த நிலையில், சென்னையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் ‘டிரம்ப் தோசை’ என புதியதாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் அந்த ஹோட்டலின் உரிமையாளர். 

சி.பி. முகுந்த் தாஸ், டிரம்பின் மிகப் பெரிய ஃபேன். அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பியவர். அவரின் வெற்றியைத் தொடர்ந்து தனது ஹோட்டலில் புதிய வகை தோசையை அறிமுகப்படுத்தி, அதற்கு 'டிரம்ப் தோசை' என்று பெயரிட்டுள்ளார். இதனை ஹோட்டலுக்கு வெளியே பேனர் வைத்து விளம்பரமும் செய்துள்ளார். பேனரைப் பார்த்துவிட்டு உள்ளே வரும் வாடிக்கையாளர்கள் கேட்பது ‘வெள்ளை தோசை’(White dosa) என்று தான். 

70_14309.jpg

தோசையின் விலை 50 ரூபாய். வாழை இலையில் தோசையுடன், ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட சட்னிக்கள், சாம்பார் மற்றும் ஒரு கப் வெண்ணையுடன் பரிமாறப்படுகிறது. ட்ரம்ப்-ன் வெற்றிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த புது வகை தோசையை அறிமுகப்படுத்தியுள்ளார். அதிபர் தேர்தலின் போது பிரசாரம் மேற்கொண்ட ட்ரம்ப்-ன் பேச்சும், அவரது முக பாவங்களும் தன்னை மிகவும் ஈர்த்ததாக தெரிவித்துள்ளார் முகுந்த். 

டொனால்ட் ட்ரம்ப்

தொடக்கத்தில் 'ட்ரம்ப் தோசை' -யை அறிமுகப்படுத்தியதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. விற்பனையிலும்  பெரிய அளவில் மாறுபாடு இல்லையாம். ஹோட்டலுக்கு வெளியே விளம்பரம் செய்த பிறகும் மக்கள், இதை பெரிதாகக் கண்டு  கொள்ளவில்லை. நலம் விரும்பிகளும் இது போன்ற விளம்பரங்கள் பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று முகுந்த்-யிடம் கூறியுள்ளனர். ஆனால், சில நாட்கள் காத்திருப்போம் என முடிவெடுத்த பிறகு, மக்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாம். புதிய டிரம்ப் தோசை குறித்து ஹோட்டல் மேலாளர் விபின் புருஷோத்தமன் கூறுகையில் ‘ஒரு நாளைக்கு சராசரியாக 130 தோசைகள் வார்க்கப்பட்டு விற்பனையாகிறது.

ஒரு கலைஞராக இருந்தால், அவர்களுக்குப் பிடித்தவர்களை ஓவியமாக வரைந்து மாரியாதை செலுத்துவார்கள். ஆனால், ஒரு ஹோட்டல் உரிமையாளராக அவர் செய்ய முடிந்தது, ஒரு புதுவகை உணவை அறிமுகப்படுத்தி, அதற்கு தனக்குப் பிடித்த நபரான டிரம்ப் பெயரை வைப்பது மட்டுமே முடியும்" என்றார் .

vikatan

  • தொடங்கியவர்
ட்ரோன்கள் மூலமான உலகின் முதல் பீட்ஸா விநியோகம் நியூஸிலாந்தில் நேற்று நடைபெற்றது
 

நியூஸிலாந்திலுள்ள பீட்ஸா விற்பனை நிறுவனமொன்று ட்ரோன் எனும் ஆளில்லா சிறிய விமானம் மூலம் பீட்ஸா விநியோகம் செய்துள்ளது.

 

20717515186-01-02.jpg

 

பிரபல பீட்ஸா தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டொமினோ நிறு வன கிளையொன்றிலிருந்து, ஆக்லாந்துக்கு நகருக்கு அருகி லுள்ள வாடிக்கையாளர் ஒருவருக்கு நேற்று புதன்கிழமை பீட்ஸா விநியோகிக்கப்பட்டது.

 

ட்ரோன் மூலம் வாடிக்கையாளருக்கு பீட்ஸா விநியோகிக்கப்பட் டமை இதுவே முதல் தடவையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. டொமினோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், முதல் தடவையாக, ஆக்லாந்துக்கு வடக்கிலுள்ள வாங் காபரோரா எனும் நகரிலுள்ள வாடிக்கை யாளர் ஒருவருக்கு இரு பீட்ஸாக்கள் விநியோகிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

 

20717515187-01-02.jpg

 

மேற்படி நிறுவனத்தின் தலைவர் டொன் மேய்ஜி கருத்துத் தெரிவி க்கையில், எதிர்காலத்தில் பீட்ஸா விநியோகிப்பதில் ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறியுள்ளார்.

 

போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் போன்றவற்றை தவிர்த்து ட்ரோன்கள் பயணம் செய்யும். வாடிக்கை யாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக அவை செல்வதன் மூலம் விநியோகத்துக்கான நேரமும் குறைக் கப்படுகிறது” எனவும் டொன் மேய்ஜி தெரிவித்துள்ளார்.

.metronews.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.