Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உலகெங்கும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் (புகைப்படத் தொகுப்பு)

Fireworks light up the London skyline and Big Ben just after midnight on January 1, 2017

லண்டன்

View of a light show on the city's iconic Arc de Triomphe monument during the New Year celebration in Paris, France

பாரிஸ்

Fireworks explode next to the Quadriga sculpture atop the Brandenburg gate during New Year celebrations in Berlin

பெர்லின்

Fireworks explode over the Kremlin, during the New Year celebration in Moscow, Russia

மொஸ்கோ

Confetti in Times Square, New York, 1 January 2017

நியு யார்க் டைம்ஸ் சதுக்கம்

People watch the fireworks exploding over Copacabana beach during the New Year's Eve celebrations in Rio de Janeiro, Brazil

பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபகபானா கடற்கரையில் நீரிலிருந்தபடி வாண வேடிக்கை நிகழ்வுகளை பார்க்கும் பொதுமக்கள்.

Fireworks explode over the ancient Parthenon temple atop Acropolis hill

கிரீஸ்

Fireworks in Dubai

துபாய்

Buddhists light candles during New Year celebrations at Jogye Buddhist temple in Seoul, South Korea

தென் கொரியா

Fireworks explode above Singapore

சிங்கப்பூர்

Fireworks illuminate the night sky over Malaysia's landmark, Petronas Towers during New Year's Eve celebrations in Kuala Lumpur, Malaysia

மலேசியாவின் கோலாலம்பூர்

Revellers take part in New Year

மேட்ரிட்

Iraqi walk past security forces as they gather at the al-Mansour square during Christmas and New Years eve celebrations in the capital Baghdad

இராக்கின் பாக்தாத் நகரம்

Fireworks illuminate the night sky over the Kenyatta International Convention Centre (KICC) during New Year

கென்யா தலைநகர் நைரோபி

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். அதில், தன்னுடைய பல எதிரிகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார்.

Donal Trump tweet: Happy new year to all, including to my many enemies and those who have fought me and lost so badly they just don't know what to do. Love!

 

North Koreans gather to watch a New Year

வடகொரியர்கள் தலைநகர் பியாங்யாங்கில் உள்ள கிம் சங் சதுக்கத்தில் கூடியுள்ள காட்சி.

_93192771_d3abf72d-34cb-4b39-9e80-b07035

உள்ளூர் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக போலந்தின் லுப்லின் பகுதியில் நடத்தப்பட்ட கண்கவர் அணிவகுப்பு நிகழ்வு.

 

BBC

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மாடல் மடோனாக்கள்!

 

 

p84a.jpg

மாடலிங்கில் மையம் கொண்டு தமிழ் சினிமாவை நோக்கி நகர்ந்து வரும் அழகுப் புயல்களின் பெர்ஷனல் லைக்ஸ் அண்ட் பிளான் பற்றிய பக்கங்கள்!

பாயல் திரிவேதி

பாயல்னா கொலுசுன்னு அர்த்தம். சென்னை வந்த நாலு வருடத்துல நல்லாவே தமிழ் பேசும் கொல்கத்தா பொண்ணு நான்.

முதல் மாடலிங் : `ப்ளஸ்டூ படிக்கும்போது பண்ணினேன். இப்போ ஜெயின் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் பி.காம் ஸ்டூடண்ட். வீட்டுக்கு ஒரே பொண்ணு. வீட்டுலேயும் செம்ம சப்போர்ட்' எனச் சொல்லும் பாயல் ஃபாக்ஸ் ஸ்டுடியோவின் காலண்டர் மாடல்.

பிடிச்ச விஷயம் : சாப்பாட்டு விஷயத்துல பானிபூரியும் காஃபியும் ஃபேவரைட், அட்வென்சர் பிடிக்கும், ஷாப்பிங். (அது விண்டோ ஷாப்பிங்கா இருந்தாலும்!)

உங்களைப் பத்தி ஒரு வார்த்தை : சின்ன கிராமத்துல இருந்து பெரிய வெளிச்சத்திற்காகக் காத்திருக்கும் ஃபிரீசியா பூ நான்.

சினிமா ஆசை : இப்போ நிதின் சத்யா ஜோடியா ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்கேன். எந்த மாதிரி கேரக்டர்னாலும் நடிக்கணும். ஆனா ஆடியன்ஸ் மனசுல பதியுற மாதிரியான கேரக்டர் பண்ணணும்.

பயோடேட்டா : வயசு 19 உயரம்  5.6 எடை 56 கிலோ

ஃபேவரைட் ஹீரோ : தனுஷ்

ஹீரோயின் : நயன்தாரா


ஸ்ரீ நிதா

p84b.jpg

‘அப்பா இன்ஜினியர். அம்மா வழியில எல்லோருமே டாக்டர், நீ மட்டும் என்ன சம்பந்தமே இல்லாம மாடலிங் எடுத்துப் பண்ற?’னு ஆரம்பத்துல கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது எனச் சொல்லும் நிதா, ஆர்.எம்.கே.வி, புரொபசனல், கொரியர், கோ-ஆப்டெக்ஸ் மாடல்.

மாடலிங் மீது விருப்பம் : `சின்ன வயசுல இருந்தே ஸ்கூல்ல மாறுவேடப் போட்டிக்கு விதவிதமான ட்ரெஸ் பண்ணிட்டுப் போனதுல இருந்தே ஒருவிதமான ஈர்ப்பு. அதுதான் என்னை மாடலிங் பக்கம் கொண்டுவந்து சேர்த்திருக்கும்'னு நம்புறேன்.

பயோடேட்டா : வயசு 20, உயரம் 5.6, எடை 50 கிலோ. மூன்றாமாண்டு இன்ஜினீயரிங் படிக்கிற சென்னைப் பொண்ணு.

முதல் மாடலிங் ஷோ : காலேஜ் ஃபேஷன் ஷோக்கள் பண்ண ஆரம்பிச்சேன். அப்படியே ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லிச் சொல்லி வெளியிலயும் மாடலிங் பண்ணிட்டு இருக்கேன்.

பிடிச்ச விஷயம்: நிறைய மனிதர்களைச் சந்திச்சுப் பேசப் பிடிக்கும். அதனால் டிராவல் பிடிக்கும்

மறக்க முடியாத நிகழ்வு : என்னோட முதல் ராம்ப்வாக் ஷோ. எல்லாத்தையும் வெளியில இருந்து பார்த்துட்டு, முதல் தடவை வாக் போகும்போது இது நமக்கான உலகம் அப்படின்னு ஒரு ஃபீல் வந்தது.

சினிமா வாய்ப்பு : நிறைய வருது. சமீபத்துல சிம்பு படத்தோட ஷூட்டிங்ல கலந்துகிட்டேன். ஆனா எக்ஸாம் செமினார்னு மாட்டிக்கிட்டதால கண்டினியூ பண்ண முடியலை. சீக்கிரமே படிப்பை முடிச்சிட்டு சினிமாதான்.

ஃபேவரைட் ஹீரோ : விக்ரம்

ஒரு தத்துவம் : நம்மனாலதான் நம்மள சந்தோஷமா வெச்சுக்க முடியும். அதனால live the moment தான்!


பவித்ரா

p84c.jpg

கோயம்புத்தூரில் பி.காம் முடித்த கையோடு மாடலிங்கில் அடியெடுத்து வைத்தவர். மாடலிங் ரியாலிட்டி ஷோ, சினிமா என பிஸி கேர்ள்.

2010ல இருந்து மாடலிங் ஆரம்பிச்சேன். மிஸ் மெட்ராஸ் 2015 அவார்டு வாங்கினேன். ஆரம்பத்துல மாடலிங்கைவிட டான்ஸ்லதான் அதிக கவனம் எடுத்தேன். அதுக்குப் பிறகு முழுநேர மாடல் ஆகிட்டேன்.

பயோடேட்டா : என்னோட உயரம் 5.2 சில நேரங்கள்ல அதுதான் பாசிட்டிவாகவும் இருக்கும். நெகட்டிவாகவும் இருக்கும். எடை, 46 கிலோ

சினிமா : faces of chennai ஷோ முடிஞ்சதும் `ஓகே கண்மணி'ல துல்கர் கூட நடிச்சேன். இப்போ `அதே கண்கள்'ல ரிப்போர்ட்டர் கேரக்டரைப்  பண்ணியிருக்கேன். சீக்கிரமே பெரிய பெரிய ரோல்லயும் எதிர்பார்க்கலாம்.

பிடிச்ச விஷயம் : எனக்கு கேமரா பிடிக்கும். அந்தக் கேமரா முன்னால பெர்ஃபார்ம் பண்றது ரொம்பப் பிடிக்கும். வீட்டுல எனக்கு நானே ஆக்‌ஷன் கட் சொல்லிட்டு நடிச்சுப் பார்ப்பேன். சாக்லேட்ஸ் ரொம்பப் பிடிக்கும். ஷாப்பிங் பிடிக்கும். சில நேரங்கள்ல தொடர்ந்து ரெண்டு நாள்கூட சினிமா பார்த்திருக்கேன்.

ஃபேவரைட் நடிகர் : தல அஜீத், சிம்பு

நடிகை : நயன்தாரா

கேரக்டர் விருப்பம் : `நானும் ரெளடிதான்', நயன்போல கேரக்டர்ஸ் பண்ணணும்!


அகிலா நாராயணன்

p84d.jpg

அமெரிக்கப் பொண்ணு! இப்போ சென்னையில ‘miss teen india USA 2015',  `miss teen india New England 2015' எனப் பல டைட்டில்களில் ரன்னர்-அப்பாகக் கலக்கியவர்!

பொழுதுபோக்கு : டான்ஸ் தான். அஞ்சு வயசுல இருந்தே கிளாசிகல் டான்ஸ் பண்ணிட்டு இருக்கேன். பாட்டு பாடுவேன்.

நெக்ஸ்ட் பிளான் : பின்னணிப் பாடகியா வரணும். அதே நேரத்துல மாடலிங்லயும் நல்ல பேர் எடுக்கணும். இப்போ ஏ.ஆர்.ரஹ்மான் சார் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கேன். படிப்பு முடிஞ்சதும் உலகம் முழுதும் பயணப்படணும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு இசையமைக்க கத்துக்கொடுக்கணும்னு நிறைய பிளான் இருக்கு.

சினிமா நடிப்பு : இப்போ நிறைய குறும்படங்கள்ல நடிக்க வாய்ப்பு வருது. சீக்கிரம் ஒரு நாள் பெரிய திரையிலயும் பார்க்கலாம்.

ஒரு தத்துவம் : follow your heart!

vikatan

  • தொடங்கியவர்

கிரிக்கெட் 10000 வாலா!

 

 

p62a.jpg

வர் நைட்டில் பிரபலமாகி விட்டார் கருண் நாயர். சென்னை கிரிக்கெட் டெஸ்டில் இங்கிலாந்து பெளலிங்கை பிரித்து மேய்ந்து அவர் அடித்த முச்சதம்தான், கிரிக்கெட் உலகின் தற்போதைய ஹாட் டாபிக். சேவாக், கருண் நாயர் மட்டுமே முச்சதம் அடித்த இந்தியர்கள். ரன்களை சிதறடித்து வெடித்த விதத்தில், கருண் நாயர் 10,000 வாலா பட்டாசு!

கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட கலாதரன் - பிரேமா தம்பதிக்கு, எட்டு மாத குறைப் பிரசவத்தில் பிறந்தவர் கருண் நாயர். நுரையீரல் பலவீனமாக இருந்ததால், பிள்ளையைப் பொத்தி பொத்தி வளர்த்தனர். தடுக்கிக் கீழே விழுந்தால்கூட கண்ணைக் கசக்கிக்கொண்டே வீட்டுக்கு வரும் அப்பாவி. `இந்த ஆட்டிட்யூட் ஆகாது. எதாவது ஸ்போர்ட்ஸ்ல சேத்து விடுங்க...’ என டாக்டர்கள் அட்வைஸ் செய்தனர். கருண்  நாயரை கிரிக்கெட் அகாடமியில் சேர்த்து விட்டார் கலாதரன்.

பூர்விகம் கேரளா, பிறந்தது ராஜஸ்தான் (கலாதரன் அப்போது அங்கு பணிபுரிந்தார்) என்றாலும், கர்நாடகாதான் கருண் நாயருக்கு எல்லாமே. பத்து வயதில் அண்டர் - 13  அணியில் இடம். படிப்படியாக ரஞ்சி அணியில் தவிர்க்க முடியாத நபர். கடந்த ரஞ்சி சீசனில் கர்நாடக அணிக்கு கேப்டன் என, அவரது கேரியரில் சீரான வளர்ச்சி. தமிழகத்துக்கு எதிராக, 2015 ரஞ்சி ஃபைனலில் 328 ரன்கள் அடித்தபோதே, இந்த 25 வயது இளைஞன்மீது ஒரு கண் வைத்தது கிரிக்கெட் உலகம். அதற்கு முன்பே, `இவன் ஒரு ரவுண்ட் வருவான்’ என கணித்தார்  டிராவிட்.

ட்ரைவ், ஸ்வீப் ஷாட் களை அசால்ட்டாக ஆடுவதோடு, பெரிதும் அலட்டிக் கொள்ளாத நாயரின் ஆட்டிட்யூட் டிராவிட்டுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கருண் நாயரை ஏலத்தில் எடுத்தார். ராஜஸ்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் கடந்த முறை டெல்லி அவரை ரூ.4 கோடிக்கு வாங்கியது. கொடுத்த காசுக்கு உருப்படியாக ஆடி, டெல்லியின் இரண்டாவது டாப் ஸ்கோரர் எனப் பெயரெடுத்தார்.

p62b.jpg

கடந்த ஜூன் மாதம், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். இந்த டூர் முடிந்து கேரளாவில் சொந்த ஊரில், கோயில் திருவிழாவுக்கு செல்வதற்காக பம்பை நதியில் படகில் சென்றபோது படகு கவிழ்ந்து, தண்ணீரில் தத்தளித்தார். அந்தப் பகுதியினர் அவரை மீட்டனர். இதை முச்சதம் அடித்த தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

கருண் நாயரின் தாய் பிரேமா சென்டிமென்ட் பேர்வழி. மும்பை டெஸ்டில் அவர் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்ததைப் பார்த்து, `இனி இவன் பேட்டிங்கைப் பார்க்க மாட்டேன்’ என்றார் பிரேமா. அவரைக் கட்டாயப்படுத்தி சென்னைக்கு அழைத்து வந்தார் கணவர். தாயின் முன்னிலையில் எல்லா சாதனைகளையும் ஒரேநாளில் படைத்து, பெற்றோரை குளிர்வித்துவிட்டார். மூன்றாவது இன்னிங்சில் டிரிபிள் செஞ்சுரி அடித்ததன் மூலம், மிடில் ஆர்டரில் ஒரு சீட்டை ரிசர்வ் செய்துவிட்டார். இனி ஒவ்வொருமுறை ரன் அடிக்கத் திணறும்போதும், இந்த முச்சதம் நினைவில் வந்து போகும்.

ஆக, இனிமேல்தான் நாயருக்கு சவால்!

vikatan

  • தொடங்கியவர்

முதன்முதலாக இலங்கையில் தந்தி சேவை தொடங்கப்பட்ட நாள்: 1-1-1858

 

இலங்கையில் 1858-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தந்தி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது கொழும்புக்கும்- கலேக்கும் இடையே முதன்முதலாக தொடங்கியது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1800 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.

 
 
 
 
முதன்முதலாக இலங்கையில் தந்தி சேவை தொடங்கப்பட்ட நாள்: 1-1-1858
 

இலங்கையில் 1858-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தந்தி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது கொழும்புக்கும்- கலேக்கும் இடையே முதன்முதலாக தொடங்கியது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1800 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது. * 1801 - பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்துப் பேரரசு இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது. * 1804 - எயிட்டி பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. * 1806 - பிரெஞ்சு குடியரசு நாள்காட்டி பாவனையிலிருந்து விலக்கப்பட்டது. * 1808 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது. * 1833 - ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகளின் மீது உரிமை கொண்டாடியது. * 1861 - போர்ஃபீரியோ டயஸ் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினான். * 1866 - யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவல்துறை அமைக்கப்பட்டது. * 1867 - ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் சின்சினாட்டி நகருக்கும் கென்டக்கியின் கொவிங்டன் நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.

* 1872 - இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. * 1872 - முதலாவது இந்திய அஞ்சல் (தபால்) சேனீ மலைச் (Mount Cenis) சுரங்கம் ஊடாக சென்றது. * 1877 - இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா டெல்லியில் அறிவிக்கப்பட்டார். * 1883 - இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. * 1886 - பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது. * 1890 - எரித்திரியா இத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது. * 1893 - ஜப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. * 1896 - இலங்கையில் முன்னர் ரொபேர்ட்சன் கம்பெனியின் பொறுப்பில் இருந்த தொலைபேசி சாதனத்தை இலங்கை அரசு கையேற்றது.

* 1899 - கியூபாவில் ஸ்பானிய ஆளுகை முடிவுற்றது. * 1901 - பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆஸ்திரேலிய பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார். * 1905 - டிரான்ஸ்- சைபீரியன் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. * 1906 - பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. * 1911 - வட மண்டலம் தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலிய நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. * 1912 - சீனக் குடியரசு அமைக்கப்பட்டது. * 1919 - ஸ்காட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில் 205 பேர் கொல்லப்பட்டனர். * 1926 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.

* 1927 - மெக்சிக்கோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர். * 1927 - துருக்கி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி 1926, டிசம்பர் 18-ற்கு அடுத்த நாள் ஜனவரி 1, 1927-க மாற்றப்பட்டது
 
 
 
 

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

புத்தாண்டு பிராத்தனையை மிஸ் செய்த எலிசபெத் ராணி

 

இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக கடந்த வாரம் நடந்த கிறிஸ்துமஸ் பிராத்தனையில் அவர் கலந்துகொள்ளவில்லை. புத்தாண்டு பிராத்தனையில் கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், புத்தாண்டை ஒட்டி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பிராத்தனையில் எலிசபெத் கலந்துகொள்ளவில்லை. அவர் சார்பஆக அவர் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். கடுமையான சளித் தொல்லையால் அவதிப்படுவதால் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார் ராணி. 

queen_01149.jpg

vikatan

  • தொடங்கியவர்

2017-ம் ஆண்டை வாண வேடிக்கைகளுடன் வரவேற்ற நாடுகள்

  • தொடங்கியவர்

வாழ்க்கையை வசப்படுத்த - 9 வழிகள்

புத்தாண்டு மகிழ்ச்சி வருடம் முழுவதும் மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும் தொடரவேண்டும் என்றால் நீங்கள் 9 விஷயங்களில் உறுதியாக இருக்கவேண்டும்.

 
 
வாழ்க்கையை வசப்படுத்த - 9 வழிகள்
 
புத்தாண்டு மகிழ்ச்சி வருடம் முழுவதும் மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும் தொடரவேண்டும் என்றால் நீங்கள் 9 விஷயங்களில் உறுதியாக இருக்கவேண்டும்.

1. உறுதிமொழி

நிறைய பேர் புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் 90 சதவீதம் பேர் அந்த உறுதியை பாதியிலேயே கைவிட்டுவிடுகிறார்கள். அதனால்தான் வெகுசிலரே திட்ட மிட்டபடி வெற்றி சிகரத்தை அடைகிறார்கள். உங்கள் உறுதிமொழி என்னவாக இருக்கும்?

இந்த வருடம் உடல் எடையை குறைப்பேன், அரசு வேலைக்குச் செல்வேன், வீடு கட்டுவேன், வண்டி வாங்குவேன், திருமணம் செய்வேன், தொழில் தொடங்குவேன், பிரச்சினைக்குரிய ஏதாவது ஒரு பழக்கத்தை கைவிடுவேன்.. என்று எதுவாகவும் இருக்கலாம். அதை குறிப்பிட்டு நீங்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த லட்சியத்தில் உறுதியாக இருங்கள்.

அந்த உறுதிமொழியில் இருந்து ஒருவர் பின்வாங்குகிறார் என்றால் அதற்கு, வழக்கமான சில பலவீனங்களே காரணம். சோம்பலும், முயற்சியின்மையுமே அதற்கு முக்கிய காரணம். உடற் பயிற்சி மேற்கொண்டு உடல் பருமனை குறைப்பேன் என்று உறுதியெடுப்பவர்கள் ஓரிரு வாரங்களுக்கு மட்டுமே அதே உற்சாகத்தில் பயிற்சி செய்கிறார்கள். பிறகு சின்னச் சின்ன தடைகளை காரணமாக காட்டி, இலக்கை கோட்டை விட்டுவிடுகிறார்கள். எனவே புத்தாண்டில் நினைத்ததை சாதிக்க உறுதிமொழியில் உறுதியாக இருங்கள்.

2. வெளிப்படைத்தன்மை

‘உடல் எடையை குறைக்க வேண்டும்’ என்பது உங்கள் உறுதிமொழி என்று வைத்துக்கொள்வோம். அது உங்கள் சொந்த விஷயம் என்றாலும், அதை வெளிப்படையாக மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதில் தவறு இல்லை. பகிர்ந்துகொள்ளும்போது உங்கள் நலம் விரும்பிகளால் அதில் உங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவ முடியும். ‘என்ன எடையை குறைச்சிடுவேன்னு சபதம் போட்டே?’ என்று எதிர்மறையாக குத்திக் காட்டிப் பேசுபவர்கூட உங்களின் லட்சியத்திற்கு உத்வேகம் தரலாம். அதனால் ஆரோக்கியமான உறுதிமொழிகளை ரகசியமாக வைக்க வேண்டியதேவையில்லை.

3. நல்ல இலக்குகள் மட்டும்

உங்கள் புத்தாண்டு உறுதிமொழிகள் தெளிவானதாக இருக்கவேண்டும். தேவையற்றதாகவும், போலி கவுரவம் கொண்டதாகவும் அது இருக்கக்கூடாது. அவசியமற்ற இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அவஸ்தை பட்டுவிடவும் கூடாது. உயர்ந்த வேலைக்கு போவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டு, இருக்கிற வேலையையும் இழந்துவிடக்கூடாது. இப்படி அதிரடியான செயல் எதிலாவது ஈடுபட்டால், வாழ்வின் அடுத்தகட்ட வளர்ச்சிகளான திரு மணம், குழந்தைப் பேறு, வீடு வாங்குதல் போன்ற எல்லா திட்டங் களிலும் நெருக்கடி ஏற்பட்டுவிடும். பின்பு வருடத்தின் முடிவில் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, தனக்கு எதுவுமே சரியாக அமையவில்லை என்று ஏங்க வேண்டியதாகிவிடும். எனவே ஒருவர் சிறந்த லட்சியத்தை இலக்காக கொண்டு செயல்படுவது தவ றல்ல, ஆனால் தனது திறனறிந்து செயல்படுவது முக்கியமாகும்.

4. எளிமையே பெருமை

வாழ்க்கைக்கு எளிமை தேவை. அதுபோல் உங்கள் புத்தாண்டு உறுதிமொழியிலும் எளிமை தென்படவேண்டும். உங்களுக்கு தேவையான வீடோ, வாகனமோ, விலைஉயர்ந்த பொருட்களோ வாங்கவேண்டும் என்று தீர்மானிக்கும்போது, அது உங்களுக்கு அத்தியாவசியமானதாக இருக்கவேண்டும். அடுத்தவர்களை பார்த்து, அடுத்த வீட்டைப்பார்த்து ஆசைப்பட்டு அதை வாங்க தீர்மானிக்கக்கூடாது. பகட்டாக, படோபடாபம் காட்டிக் கொள்வதற்காக வரவுக்கு மீறி செலவு செய்வது வாழ்க்கையை இக்கட்டில் கொண்டுபோய்விட்டுவிடும்.

5. மூழ்கினால் முத்தெடுக்கலாம்...

கடற்கரையில் கால்கடுக்க நின்றால் கிளிஞ்சல்கள் மட்டுமே கிடைக்கும். முத்துகள் கிடைப்பதில்லை. மூழ்கினால்தான் முத்தெடுக்க முடியும். இலக்கை நோக்கிய முயற்சிகளில் மூழ்கிப் போனால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. திட்டமிட்டுவிட்டு, அந்த இலக்கை அடைய கடுமையாக உழைக்கவேண்டும். உழைப்பில் மூழ்குவதை புத்தாண்டின் சுவாசமாகக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

6. ஒத்திப்போடவேண்டாம்

எடுத்த உறுதிமொழியை இன்றே நடைமுறைப்படுத்த முயற்சிசெய்யுங்கள். நாளை தொடங்கப் போவதாக ஒத்திப்போடவேண்டாம். எப்போது முடிவெடுத்து தயாராகிவிட்டீர்களோ, அது எந்த தினமாக இருந்தாலும் வேலையை தொடங்கிவிடவேண்டியதுதான். நல்ல தொடக்கம்தான் சிறந்த முடிவைத் தரும். எப்போதும் தயார் நிலையில் இருப்பதே வெற்றிக்கு அடிப்படை என்பதை சிந்தனையில் பதிய வையுங்கள்.

7. குடும்ப ஒருங்கிணைப்பு

உங்களை எப்போதும் தனிநபராக நினைத்துக்கொண்டிருக்காதீர்கள். உங்களுக்கு பின்னால் ஒரு குடும்பமும், சமூகமும் இருக் கிறது என்பதை கருத்தில்கொள்ளுங்கள். உங்கள் லட்சியத்திற்கு பின்னால் தாய், தந்தை, துணைவியர், நட்பு, உறவு, பணியாளர்கள், ஆசிரியர்கள் என்று எவ்வளவோ பேரின் பங்களிப்பு நேரடியாகவும், மறைமுகமாகவும் தேவைப்படும். எனவே அவர்களுடன் நட்புறவுடன் தொடர்பில் இருப்பது உங்கள் லட்சிய வெற்றியை எளிதாக்கும். அதுபோல் உங்கள் லட்சியமும், வெற்றியும் உங்களுக்கோ, குடும்பத்திற்கோ மட்டுமல்ல சமூகத்திற்கும் பயன்படவேண்டும். அதற்கு தகுந்தவாறு உங்கள் புத்தாண்டு உறுதிமொழி அமையட்டும்.

8. கொண்டாடுங்கள்

இலக்கு முக்கியம்தான் அதற்காக கொண்டாட்டங்களை புறம்தள்ள வேண்டாம். ஏனெனில் வெற்றியே கொண்டாட்டத்திற்காகத்தான். எனவே இலக்கின் இடையேயும் கொண்டாட்டங்களில் களிப்புறுங்கள். அது சோம்பலை நீக்கி உங்களை இலக்கை நோக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கும்.

9. மாற்றமே நிலையானது

எதுவும் நிலையானதல்ல, வெற்றியும் நிரந்தரமானதல்ல. சாதனைகள் முறியடிக்கப்படக்கூடியவையே. எனவே தோல்வியில் முடங்கிப்போவதும், வெற்றியில் கர்வம் கொள்வதும் வேண்டாம். மாற்றங்களை ஏற்றுக்கொள்ள, மாற்றங்களுக்கு ஏற்ப ஈடு கொடுக்க, மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் எதையும் தாங்கி நிலைத்து நிற்கலாம். ‘எதையும் தாங்குவேன்’ என்ற உறுதிமொழியை இன்றே இப்போதே எடுத்துக்கொள்ளுங்கள்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பிபிசி தமிழின் சிறந்த வனவிலங்கு யு டியூப் காணொளிகளின் தொகுப்பு

 
 

பிபிசி தமிழின் யு டியூப் பக்கத்தில் கடந்த ஆண்டு பதிவேற்றப்பட்ட வனவிலங்கு தொடர்பான காணொளிகளின் சிறப்பு தொகுப்பு.

அழியும் ஆபத்தில் பனிச்சிறுத்தைகள்

மத்திய ஆசியாவில் சட்டவிரோத வேட்டையால் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பனிச்சிறுத்தைகள் கொல்லப்படுகின்றன. ட்ராஃபிக் இண்டர்நேஷனல் என்ற வனவிலங்கு கண்காணிப்பு அமைப்பின் புதிய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு வாரமும் நான்கு பனிச்சிறுத்தைகள் கொல்லப்படுகின்றனவாம். தற்போது உலகில் வெறும் நான்காயிரம் பனிச்சிறுத்தைகளே எஞ்சியுள்ளன.

இங்கிலாந்தின் தென்கடலோரம் அதிகாலையில் தனது நாயை நடத்திச் சென்ற டேவ் மாட், இந்த துள்ளிக்குதிக்கும் மானை படம்பிடித்தார். ப்ரவுன் சீ தீவில் இருந்த இந்த ஜப்பானிய சிகா இன மான், கடலில் நீந்தி டார்சட் கரைக்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

 

கலிபோர்னியாவில் குடும்பத்துடன் நீராடிய கரடியார்

கரடிகளுக்கும் கோடை காலம் உச்ச நிலையில் தான் உள்ளது போலும்! ஒரு கரடிக் குடும்பம் கலிஃபோர்னியாவில் உள்ள டோஹோ ஏரியின், போப் கரையில், எவரையும் பொருட்படுத்தாது சாவகாசமாக வந்து நீராடிச் செல்கிறது.

விலங்குகளின் பூசணி விளையாட்டு

அமெரிக்காவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஹாலோவின் பண்டிகையையொட்டி ஓரேகான் மிருக காட்சி சாலையில் இருக்கும் விலங்குகளுக்கு பூசணியில் வைத்து உணவளிக்கப்பட்டது. அதை உண்பதற்கும் பெரிய பூசணிக்காய்களை உருட்டி விளையாடுவதற்கும் விலங்குகள் போட்டி போட்டு ஆர்வம் காட்டின.

 

குங் ஃபூ பாண்டா

சீனாவின் நான்சங் மிருகக்காட்சி சாலையில் 120 கிலோ எடை கொண்ட மேலிங் என்ற இந்த பாண்டாவை இந்த நபர் சீண்டியுள்ளார். தனது பெண் தோழிகளை கவருவதற்காக இதை அந்த நபர் செய்ததாக கூறப்படுகிறது. பாண்டா அவருடன் செல்லமாக சண்டையிட்டதால் அவருக்கு காயம் ஏற்படவில்லை. பாண்டாவுக்கும் எந்த காயமும் இல்லை. எப்படியோ தப்பித்து வெளியே ஓடிவிட்டார் அந்த நபர்.

 

பாசமுள்ள சகோதரன் - காணொளி

காயமடைந்த சகோதரியை விட்டுச் செல்லாமல் இரண்டு நாட்கள் உறையவைக்கும் குளிரில் தண்டவாளத்தில் வாழ்ந்த நாய்.

 

கனடா கரடிகளின் கண்கவர் நடனம்

குளிர்காலம் முடிந்து இளவேணிற்காலம் துவங்கும்போது கனடா கரடிகள் மரங்களைச் சுற்றிவந்து வித்தியாசமான நடனமாடுவது ஏன்? விடை தருகிறது பிபிசியின் இந்த காணொளி.

 

அநாதையான 200 யானைக்குட்டிகளின் "தாயுமானவர்"

சட்டவிரோத யானைத் தந்த வணிகத்துக்காக வேட்டையாடுபவர்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க யானைகள் கொல்லப்படுகின்றன. இதனால், பல யானைக்குட்டிகள் அனாதைகளாவதுடன், தனித்து உயிர் வாழ முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றன.

குட்டி குரங்கும் ஆட்டு மந்தையும் : காணொளி

இந்த காணொளியில் வரும் குரங்கு குட்டியானது எப்போதும் ஆட்டு மந்தை உடனே இருக்கிறது. காரணம் என்ன ?

 

 

 

  • தொடங்கியவர்
1959 : சந்திர மண்டலத்துக்கான முதலாவது செய்மதியான லூனா 1 ஏவப்பட்டது
 

1492 : ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனடா சரணடைந்தது.

 

1757 : இந்தியாவின் கல்கத்தா நகரை பிரிட்டன் கைப்பற்றியது.

 

875varalaru1.jpg1782 :  கண்டி இராச்சியத்தின் இரண்டாவது நாயக்க வம்ச மன்னரான கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன்  இறந்தார். 

 

1793 : ரஷ்யாவும் பிரஸ்யாவும் (தற்போதைய ஜேர்மனியின் ஒரு பிராந்தியம்) போலந்தை பங்கிட்டன.

 

1893 : வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

 

1905 : ரஷ்யக் கடற்படையினர் சீனாவின் போர்ட் ஆதரில் ஜப்பானியரிடம் சரணடைந்தனர்.

 

1921 : ஸ்பெயினின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதால் 244 பேர் கொல்லப்பட்டனர்.

 

1941 : இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனின் வேல்ஸில் லாண்டாஃப் தேவாலயம் ஜேர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது.

 

1942 : இரண்டாம் உலகப் போரில் பிலிப்பைன்ஸின்  மணிலா நகரம் ஜப்பானியரினால் கைப்பற்றப்பட்டது.

 

1955 : பனாமாவின் ஜனாதிபதி ஜோசே அன்ரோனியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.

 

1959 : சந்திரமண்டல ஆய்வுத்திட்டத்தின் முதலாவது செய்மதியான லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.

 

1971 : கிளாஸ்கோவில் கால்பந்தாட்ட மைதானம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் உட்பட 66 பேர் கொல்லப்பட்டனர்.

 

1982 : சோமாலிய அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர்.

 

1999 : அமெரிக்க விஸ்கொன்சின் மாநிலத்தில் தாக்கிய பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் கொல்லப்பட்டனர்.

 

2006 : மன்னாரில் இலுப்பைக் கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.

 

2006 : அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் சுரங்கமொன்றில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் பலியாகினர்.

 

2008 : விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

 

2016 : சவூதி அரேபியாவில் ஷியா மதப் பிரசாரகர் ஷேய்க் நிம்ர் அல் நிம்ர் உட்பட 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

.metronews.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஹாப்பி நியூ இயர் பாடல்களில் இதையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? #HappyNewYear2017

ஹாப்பி

 

ஆங்கிலப் புத்தாண்டு ஆன இன்று, தமிழ் சினிமாவில் வந்த புத்தாண்டு பாடல்களை நினைவுகொண்டு ஜாலியாக புத்தாண்டை ஆரம்பிப்போமா? இந்தக் கட்டுரையின் முடிவில் இதில் எந்தெந்த பாடல்கள் உங்களின் ஃபேவரைட் என்பதும், இதில் எவையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் கமென்டில் பதிவு செய்ய தயங்காதீர்கள், மறக்காதீர்கள்.

1.  நல்லோர்கள் வாழ்வை (சங்கிலி திரைப்படம்) :-

1976 ஆம் ஆண்டு வெளியான கலிச்சரன் என்ற ஹிந்திப்படத்தின் ரீமேக் தான் சங்கிலி திரைப்படம். சிவாஜி கணேசன், பிரபு, ஸ்ரீப்ரியா, நம்பியார், மேஜர் சுந்தர் ராஜன் என பல நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்த படம் இது. இந்த படத்தில் வரும் நியூ இயர் பாடல்  தான் 'நல்லோர்கள் வாழ்வை காக்க' பாடல் . எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் இப்போதும் பார்ட்டி மூட், பாசிட்டிவ் மூட்  தரும். 

 

 

பாடல் தொடக்க வரிகள் : -

நல்லோர்கள் வாழ்வை காக்க, நமக்காக  நம்மை காக்க 

ஹேப்பி நியூர்!

சமுதாய சிந்தனை சேர, அநியாய கொள்கைகள் மாற, மனிதாபிமானம் வாழ . மகத்தான உள்ளமும் கூட, 

பிறந்து, சிறந்து, வளர்ந்து வாழவே ! 

2.  ஹாப்பி நியூ இயர் பிறந்தது, பிறந்தது :- (பகைவன் திரைப்படம்)

1997 ஆகஸ்டில் அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் பகைவன். ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், வி.சுந்தர் தயாரிப்பில் வெளிவந்த படம் இது. இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். ரஞ்சிதா, நாகேஷ், கே .எஸ்.ரவிகுமார், விவேக், சத்யராஜ் என  நட்சத்திரப் பட்டாளங்கள் இந்த படத்தில் இருந்தனர் . துள்ளலான ஹாப்பி நியூ இயர் பிறந்தது பிறந்தது பாடல் அப்போது கொஞ்ச நாள் ரேடியோக்களில் ஓடிக்கொண்டிருந்தது, ஓரிரண்டு ஆண்டுகள் இந்த பாடலும் புத்தாண்டு தினத்தில் பாடப்பட்டுக் கொண்டிருந்தது ஆனால், நாளடைவில் காணாமல் போனது. 

 

 

பாடல் தொடக்க  வரிகள் : -

ஹாப்பி நியூ இயர் பிறந்தது, பிறந்தது 

வாழக்கையில் பிறந்தது, வாலிபனை எடு 

கனவுக்கும் வாழ்க்கைக்கும் கை கலப்பு தேவையில்லை, 

வா வாழ்ந்திடு!

துயரங்கள், கவலைகள், தோல்விகள், விரக்திகள்

அனைத்துக்கும் இன்று முதல் விடுமுறை கொடு.

இன்டர்நெட் காலம் இது, இதயங்கள் நெருங்கட்டும் 

நீ மாறிடு!

3.  ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே (உன்னை   நினைத்து)

விக்ரமன் இயக்கத்தில்  சூர்யா, லைலா, ஸ்னேகா நடித்து  2002 ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது. தமிழில் ஹிட் அடித்து, பின்னர் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்துக்கு  தமிழக அரசு விருதுகளும் கிடைத்தன. ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே என்ற பாடலை  சிற்பி இசையமைத்திருந்தார். இந்த பாடல் அப்போதே ஹிட் தான். இன்னமும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அவ்வப்போது இந்த பாடலும் சில இடங்களில் ஒலிக்கிறது.

 

 

பாடல் தொடக்க  வரிகள் : -

ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே,

அன்பைச் சொல்லி, ஆசை உள்ளம் துள்ளுதே!

சூரியகாந்தி பூ போல முகம் மாறுதே!  சுகம் சேருதே!

ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே,

அன்பைச் சொல்லி, ஆசை உள்ளம் துள்ளுதே!

4. புத்தாண்டின் முதல் நாள் இது (இசை) :-

2015 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்து, இசையமைத்து வெளிவந்த திரைப்படம் இசை. நீண்ட காலம் கழித்து தமிழில் ஒரு கொண்டாட்டமான  புத்தாண்டு பாடல் என்ற அடைமொழியுடன் வந்தது இது.  மதன் கார்க்கியின் வரிகளில், எஸ்.ஜே.சூர்யா இசையமைப்பில் வெளிவந்த இந்த படம் நல்ல ரிவ்யூக்களை பெற்றது. இந்த பாட்டில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பாடலை பாடியதும் எஸ்.ஜே.சூர்யா தான்.

 

 

பாடல் தொடக்க வரிகள் :-

 புத்தாண்டின் முதல் நாள் இது 

புதிதான இசை பூத்தது

ஒளி வெள்ளம் வானத்தை தாக்குது 

நானென்பது நாம் என்றானது 

நாமென்பது நாடு என்றானது 

வரும் நாளும், நமதென்றானது 

5. ஹாப்பி ஹாப்பி நியூயரு (கவண்):-

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், டி.ஆர்.ராஜேந்தர் ஆகியோர் நடிப்பில் உருவாக்கி வரும் படம் கவண்.  ஹாப்பி, ஹாப்பி பாடலை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்கள். ஹிப்ஹாப்  தமிழா இந்த பாடலை இசையமைத்திருக்கிறார். டி.ஆர். ராஜேந்தர் மற்றும் ஹிப் ஹாப் தமிழா இணைந்து இந்த பாடலை பாடியிருக்கின்றனர். டி.ஆரின் வாய்ஸுக்காகவே பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

பாடல் தொடக்க வரிகள் :-

ஹாப்பி ஹாப்பி நியூயரு , பிரச்சனையெல்லாம் ஓவரு 

ஓயாம வேலை செஞ்சா கிழிஞ்சிடும்டா டிராயரு 

ஹே, ஹாப்பி ஹாப்பி நியூயரு, பிரச்சனை வேணாம் போயிரு 

யார் என்ன சொன்னா என்ன? இஷ்டம் போல நீ இரு

ஹாப்பி, ஹாப்பி,  ஹாப்பி, ஹாப்பி 

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப ஹாப்பி 

6. இளமை இதோ இதோ (சகலகலா வல்லவன்) :-

1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான படம் இது. 1983 முதல் 2016 வரை 33 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து புத்தாண்டு என்றாலே தமிழர்களுக்கு இந்த பாடல் நினைவுக்கு வராமல் இருக்காது.

இந்த பாடலுக்கு இசையமைக்கும் போது இளையராஜாவுக்கு இவ்வளவு ஹிட் அடிக்குமா இல்லையா எனத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் அந்த அளவுக்கு எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத  பாடல் இது. நம் தலைமுறையினர்  2117 வது புத்தாண்டுக்கு கூட இந்த பாடலுக்கவே ஆட்டம் போடுவார்கள்  என தாராளமாக நம்பலாம். இவ்வளவு காலமாக, இந்த புத்தாண்டு பாடலை மிஞ்சும் வகையில் ஒரு பாடல் கூட வரவே இல்லை. இதில் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் மேலே உள்ள பாடல்வரிகளைப் போல, இதில் புத்தாண்டை வரவேற்கும் வரிகளோ, தன்னம்பிக்கையை தூண்டும் விதமான வரிகளோ இருக்காது. துவக்கத்தில் கணீர்குரலில் எஸ்பிபி-யின் விஷ் யூ எ ஹாப்பி நியூ இயர் உற்சாகத்தைத் தர, அப்புறம் வரும் அந்த அதகள இசை  ஓர் ஆண்டுக்கான பூஸ்ட் அப்-பைத் தரும்! 

பஞ்சு அருணாசலம் எழுதி, எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் சகலகலா வல்லவன், கமல் நடித்து மெகா சூப்பர் ஹிட் ஆனது இந்தப் படம். இளையாஜாவின் இசையில், எஸ்.பி.பி  குரலில் இந்த பாட்டை இன்னுமொரு முறை இப்போது கேளுங்களேன்.

 

என்னது. வரிகளா? படிக்கறப்பவே மனப்பாடமா மைண்டுக்குள்ள ஓடிருக்கும்தானே? அப்பறம் என்ன? ஹேப்பி நியூ இயர்  பாஸ்! 

  • தொடங்கியவர்

பாலிவுட்டை ஓரங்கட்டிய டி.வி அழகிகள்!

 

p74a.jpg

ணையத்தில் நடத்தப்படும் பெரும்பாலான வாக்கெடுப்பில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது ஒவ்வொரு மூலையிலும் முடங்கிக் கிடக்கும் ஏடிஎம். மெஷினைப் போல சாதாரண விஷயம். ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ஈஸ்டர்ன் ஐ’ நாளிதழ் நடத்திய செக்ஸியான ஆசியப் பெண்களுக்கான வாக்கெடுப்பில், வெள்ளித்திரை கவர்ச்சிக் கன்னிகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகித்துள்ளனர் சின்னத்திரை நடிகைகள்.

p74b.jpg

ஆசியா மற்றும் பாலிவுட் சார்ந்த செய்திகளைப் பிரத்யேகமாக வெளியிடும் இந்த ‘ஈஸ்டர்ன் ஐ’ நாளிதழ் சமீபத்தில் ஆசியாவைச் சேர்ந்த டாப்-10 செக்ஸியான பெண்கள் யாரெனத் தேர்ந்தெடுப்பதற்காக இணையத்தில் சர்வே ஒன்றை நடத்தியது. முதலிடத்தைத் தீபிகா படுகோனும், அடுத்த இடத்தை பிரியங்கா சோப்ராவும் பிடித்தனர். இதில் நான்கு சின்னத்திரை நடிகைகள் தேர்வானது ஆச்சர்யம் என்றால், முன்னணி நடிகைகளைவிடவும் சிலர் அதிக வாக்குகள் பெற்றிருப்பது அடுத்த ஆச்சர்யம்.

p75a.jpgp75b.jpg

இந்தி தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் பலருக்கும் பரிச்சயமான முகமாக மாறியிருப்பதுதான் இதற்குக் காரணம் என்கிறது சர்வே நடத்திய நாளிதழ். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இணைந்து தயாரித்திருக்கும் ‘ஜமாய் ராஜா’ என்ற தொலைக்காட்சித் தொடரின் கதாநாயகி நியா சர்மா. இவர் அலியா பட், கத்ரினா கைஃப், சோனம் கபூர் போன்ற ஹாட் பியூட்டிகளை விடவும் செக்ஸியான பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது. சின்னத்திரையில் ஆரம்பத்தில் சின்னச்சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தவர் அதன்பின் சீரியல் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். ஒரு சீரியலில் புற்றுநோயால் பாதித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மொட்டை போட்டுக்கொண்டு நடித்து பலரையும் பிரமிக்க வைத்தவர் இவர். சின்னத்திரையில் `மொட்டைத்தலையுடன் நடித்த முதல் (மற்றும் ஒரே) நடிகை' என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் இந்த 25 வயது கியூட் நடிகை.

p76a.jpg

p76b.jpg

டப்பிங் சீரியல்கள் வரவால் நான்காம் இடத்தைப் பிடித்துள்ள ‘மதுபாலா’ திரஷ்டி தாமி, ஆறாம் இடத்தைப் பிடித்துள்ள சனயா இரானி போன்றவர்களைத் தமிழகமே அறியும். பாலிவுட்டில் தொடர்ந்து ஹிட்களை கொடுத்துக்கொண்டிருக்கும் நடிகை அலியா பட் இந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தையே பிடித்துள்ளார். ‘ஹாட் கேக்’ கத்ரினா கைஃப் ஏழாம் இடத்தையும், ‘ஒல்லி பெல்லி’ நடிகை சோனம் கபூர் எட்டாம் இடத்தையுமே பிடித்துள்ளனர். இவர்களைப் பின்னுக்குத் தள்ளி சின்னத்திரை நடிகைகள் வாக்கெடுப்பில் முன்னிலை வகித்ததுதான் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. ஏன் என்றால் இந்த வாக்கெடுப்பில் லட்சக்கணக்கான பேர் வாக்களித்துள்ளனர்.

‘நாகினி’யாக நடித்துப் பசங்களையும் சீரியல் பார்க்க வைத்த மெளனி ராய், இந்த லிஸ்ட்ல இல்லைன்னா எப்படித்தான் நம்புறது? அடப் போங்க பாஸ்!

vikatan

  • தொடங்கியவர்

விஞ்ஞானிகளுக்கெல்லாம் விஞ்ஞானி!

 

 
அல் ஹாசன்
அல் ஹாசன்
 
 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அராபிய விஞ்ஞானி ஒருவர் இருந்தார். ஒளியியல், வானியல், கணிதம் ஆகிய துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை அவர் செய்திருக்கிறார். ஆனால், அவருடைய பெயர் நாம் அதிகம் கேள்விப்படாத பெயர்களுள் ஒன்றாகவே இப்போதுவரை இருக்கிறது.

ஒளி விலகல் (refraction), ஒளி வண்ணங்களாக நிறப்பிரிகை அடைவது (dispersion) போன்றவற்றை கண்டுபிடித்தது யார்? ஐசக் நியூட்டன் கண்டறிந்தார் என்றுதானே பாடப் புத்தகங்களில் படிக்கிறோம். ஆனால், நியூட்டனுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே அதைப் பற்றி அந்த அராபிய விஞ்ஞானி விளக்கியுள்ளார். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? அதுமட்டுமல்ல, இயற்பியலில் இன்றைக்கு ஒரு பிரிவாகத் திகழும் ‘ஒளியியல்' பற்றி தனி புத்தகமே அப்போது எழுதியுள்ளார். அவர்தான் அல் ஹாசன்.

இஸ்லாமிய பொற்காலம்

அல் ஹாசன் அல்லது அபு அலி அல் ஹாசன் என்ற பெயரைக் கொண்ட அவருடைய பின் பாதிப் பெயர் இப்ன் அல் ஹேதம். கி.பி. 965-ல் இராக் நகரமான பாஸ்ராவில் பிறந்தார். பண்டைய இராக்கில் அவர் பிறந்தாலும், தற்போது எகிப்தில் உள்ள கெய்ரோவில்தான் அவர் பெரும்பாலும் வாழ்ந்தார். ஐரோப்பியர்கள் இருண்ட காலத்தில் தளர்ந்துபோயிருந்தார்கள். அப்போது, அராபியர்கள் பொற்காலத்தில் இருந்தனர். அந்தக் காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட இஸ்லாமிய விஞ்ஞானச் சிந்தனையாளர்தான் அல் ஹாசன்.

இஸ்லாமிய நாகரிகத்தின் பொற்காலம் என்றழைக்கப்படும் காலகட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறை சார்ந்த ஆராய்ச்சிகள் உச்சத்தில் இருந்தன. ஸ்பெயினில் இருந்து சீனாவரை பரவியிருந்த நிலப்பரப்பில், அந்தக் காலத்தில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின. அவற்றில் பல இன்றைக்கும் நமக்குப் பயனளிக்கின்றன. ஆனால், அவை போதிய அளவுக்குப் பாராட்டையோ அங்கீகாரத்தையோ பெறவில்லை.

al_hasan_2_3109450a.jpg

பார்வையும் கேமராவும்

ஒளி நம்முடைய கண்ணுக்குள் ஊடுருவுவதால்தான், நம்மால் பார்க்க முடிகிறது. இதை முதன்முதலில் சொன்னவர் அல் ஹாசன். ஒளி ஊடுருவும் தன்மையை நம் கண் இழக்கும்போது, பார்வையை இழந்துவிடுகிறோம். அதற்கு முன்னதாக விஞ்ஞானிகள் யூக்ளிடும் தாலமியும் கண்ணிலிருந்து ஒளி வெளிப்படுவதாகவே கூறியிருந்தார்கள்.

நமது கண் செயல்படும் முறையையும் அவர் விளக்கியுள்ளார். ஒரு ஊசித்துளை கேமராவைப் போலவும் (pinhole camera), இருட்டறையில் போடப்படும ஒரு துளை எதிர்ப்புறம் உள்ள காட்சியை அப்படியே பிரதிபலிப்பதைப் போல (camera obscura) நமது கண் செயல்படுவதை அல் ஹாசன் விளக்கினார். இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே பிற்காலத்தில் ஒளிப்படக் கருவிகள் (camera) கண்டறியப்பட்டன. இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் கையில் வைத்திருக்கும் கைபேசியில் செயல்படும் கேமராவரை, அல் ஹாசன் விளக்கிய தத்துவத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன. இப்படியாக நம்முடைய பார்வை, பார்வையியல், ஒளியியல் (optics) போன்றவற்றைப் பற்றி அல் ஹாசன் விரிவாக ஆராய்ந்தார்.

ஒளியியலின் தந்தை

தண்ணீர், எண்ணெய் போன்ற அடர்த்தியான ஊடகங்களில் ஒளி மெதுவாக நகர்வதால்தான் ஒளி விலகல் (refraction) ஏற்படுகிறது என்று மிகச் சரியாக அல் ஹாசன் விளக்கியிருக்கிறார். ஒளி வண்ணங்களாக நிறப்பிரிகை அடைவது (dispersion) பற்றிகூட விளக்கம் தந்துள்ளார். அவருடைய பரிசோதனை முறைகளும் ஒரு கொள்கையைப் பரிசோதித்துப் பார்க்கும் முறையும் நவீன அறிவியல் முறையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பிரதிபலித்தன.

ஒளியைப் பற்றிய தன்னுடைய ஆராய்ச்சிகளைப் பற்றி ‘கிதாப் அல்-மனாசிர்’ (Kitab al-Manazir) என்ற புகழ்பெற்ற புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார். அது ‘De Aspectibus’ என்ற பெயரில் லத்தீனில் 12-ம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டது. புகழ்பெற்ற விஞ்ஞானி ரோஜர் பேகன் அந்தப் புத்தகத்தை சுருக்கி வெளியிட்டிருக்கிறார். வானியலில் 'கோள்களின் இயங்குமுறை' தொடர்பாக அல் ஹாசன் அளித்த விளக்கம், யோஹான்னஸ் கெப்ளருக்கு (16-ம் நூற்றாண்டு) உத்வேகம் அளித்தது.

ஐரோப்பிய மறுமலர்ச்சி கால விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் அல் ஹாசன் புத்தகம் பெரும் தாக்கம் செலுத்தியது. இன்றைக்கு ‘நவீன ஒளியியலின் தந்தை' என்று அவர் போற்றப்படுகிறார். நவீன அறிவியல் முறைகளை முதன்முதலில் பயன்படுத்தியவராகவும் அவர் கருதப்படுகிறார். உலகின் முதல் நவீன விஞ்ஞானியும் அவரே.

al_hasan_3_3109449a.jpg

வீட்டுச்சிறை

அல் ஹாசனின் வாழ்க்கையில் சில தடுமாற்றங்களும் இருந்தன. அந்தக் காலத்தில் நைல் நதியில் அடிக்கடி வெள்ளம் வந்துகொண்டிருந்தது. அதை நிறுத்தும் திறமை தன்னிடம் இருப்பதாக அல் ஹாசன் அதீத தன்னம்பிக்கையுடன் கூறினார். அந்த நிலப்பகுதியை ஆண்டுவந்த மாட் காலிப், அதை செயல்படுத்திக் காட்டுமாறு அல் ஹாசனை அழைத்தார். நைல் நதி வெள்ளத்தை நிறுத்துவது சாத்தியமில்லை என்பதைப் பின்னர்தான் அல் ஹாசன் உணர்ந்தார். இதனால் தனக்கு தண்டனை கிடைக்குமோ என பயந்து மனநிலை தவறியதைப் போல நடிக்க ஆரம்பித்தார். இதன் காரணமாக 1011-ம் ஆண்டிலிருந்து அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். 1021-ல் காலிப் இறந்த பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், வீட்டுச் சிறையில் இருந்த காலத்தை அல் ஹாசன் வீணடிக்கவில்லை. அறிவியல் பரிசோதனைகள் செய்வதிலும், புத்தகங்களை எழுதுவதிலும் நேரத்தைச் செலவிட்டார். அவருடைய புகழ்பெற்ற ஒளியியல் தொடர்பான புத்தகம் வீட்டுச்சிறையில் இருந்த காலத்தில்தான் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

புத்தாண்டில் கிடைத்தது கூடுதலாக ஒரு நொடி ?

பூமியின் சுழற்சியில் ஏற்பட்டுள்ள வேகக் குறைப்பை சமாளிக்கும் விதமாக இந்த ஆண்டின் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் நொடியானது, கடிகாரம் 23.59.60 என்று நள்ளிரவில் பதிவானபோது, புதிய 2017 ஆம் ஆண்டை காலதாமதிக்கும் விதமாக ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

பெண்களே சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்

பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகைகளுக்கும், துணிகளுக்கும் மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் தான்.

 
 
 
 
பெண்களே சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்
 
இன்றைய பெண்கள் தங்களின் அழகிலும், உடைகளை அணிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகைகளுக்கும், துணிகளுக்கும் மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் தான்.

தான் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது புடைவைகளோ மிகவும் புது வரவாகவும், புது டிசைன்களிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நாம் அணிந்து செல்லும் உடைகளை வைத்தே நமக்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆகவே மற்றவர்களின் முன் நம்மை பெருமையாகவும், அடுத்தவர்களை திரும்பி பார்க்க வைப்பதும் நம்முடைய ஆடைகள் தான்.

ஒரு சிலர் அதிக ஆடம்பர டிசைன்களை விரும்பமாட்டார்கள். தான் உடுத்தும் சுடிதார் மற்றவர்களை கவர வேண்டும். ஆனால் நிறைய டிசைன்கள் இருக்க கூடாது என்று தான் எண்ணுவார்கள். ஒரு சிலர் அதிக வேலைப்பாடுகள் இருந்தால் தான் பிடிக்கும். முதலில் நாம் எடுக்கும் சுடிதார் கலர் நம்முடைய டிசைன்களுக்கு ஒத்துவருமா ”? என்று பாருங்கள்.

அதை விட்டுட்டு, தேவையில்லாமல் டிசைன்களுக்கு ஆசைப்பட்டால், என்னதான் அதிக விலை கொடுத்து வாங்கியிருந்தாலும், மற்றவர்களின் முன் உங்களை “ டல்லாக ” தான் காட்டும். எனவே அதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். முதலில் கருப்பு நிறமாக உள்ளவர்கள், “ லைட் நிறத்தில் உள்ள ஸ்டோன் வேலைப்பாடுகள் செய்த சுடிதாரை தேர்ந்தெடுக்கலாம்.

லைட் கிரீன், எலுமிச்சை நிறத்தில் உள்ள மஞ்சள் கலர், லைட் வைலட், லைட் சாண்டில், ஒயில் அல்லது ஏதாவது காமினேஷன் கலர் இது மாதிரி “ லைட் நிறத்தில் உள்ள சுடிதார்களை தேர்வு செய்யுங்கள். கொஞ்சம் கலராகவோ அல்லது மாநிறமாகவோ உள்ளவர்கள் மெரூன், இங்க் புளூர், பிங்க் கலர், ஆஷ் கலர், ஒயிட் அல்லது ஏதாவது காமினேஷன் கலரை தேர்வு செய்யலாம்.

கலராக உள்ளவர்களுக்கு “ டார்க் கலரில் எந்த நிறவகையான சுடிதார்கள் போட்டாலும் அழகாக தெரியும். பெரும்பாலும் நிறத்திற்கு ஏற்றார்போல் தேர்வு செய்வதை காட்டிலும், அவரவர் உடல் வாகுக்கு தகுந்தாற்போல் சுடிதார்களை எடுக்க வேண்டும். குண்டாக உள்ளவர்கள் காட்டன் சுடிதார் அணிந்தால், அது மேலும் அவர்களை குண்டாகத்தான் காட்டும்.

அதற்கு பதில், அவர்கள் நிறைய ஆடம்பர வேலைப்பாடுகள் செய்யாத சிம்பிளாக உள்ள சல்வார்களை போட்டாலே அழகாக தெரியும். ஒல்லியாக உள்ளவர்கள் கொஞ்சம் அதிக வேலைபாடுகள் செய்த காட்டன் அல்லது சில்க் காட்டன் சுடிதார் தேர்வு செய்யலாம். அது அவர்களை சற்று குண்டாக காட்டும். அதுமட்டுமல்லாமல் இப்போது சம்மர் தொடங்கி விட்டது.

எனவே இத்தகைய நேரத்தில், சிந்தடிக் வகை சுடிதார்களை உபயோகிக்க வேண்டாம். அதுமட்டுமல்ல, என்னதான் சுடிதார்களை தேர்வு செய்தாலும், அவர்கள் தைக்கும் முறை அந்த துணியின் அழகை கெடுத்து விடுகிறது. முடிந்தவரையில், சுடிதார்களை அம்பர்லா மாடலில் தைத்தால், பார்ப்பதற்கு பூக்கள் விரிந்திருப்பது போன்று அழகாக தெரியும். தேர்வு செய்யும் சுடிதாரை, நாம் அழகாக தெரிய தைக்கும் முறையும் மிக மிக அவசியம்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

தங்கத்துல பீட்ஸா பாத்துருக்கீங்களா?

மார்க்கரீட்டா, மெரினாரா போன்ற பீட்ஸா வகைகளை எல்லாம் கேள்விப்பட்டிருப்போம். தங்க பீட்ஸா? அதுவும் 24 கேரட்டில்? நியூயார்க்கில் இருக்கும் இண்டஸ்ட்ரி பீட்ஸா என்ற கடையில் நீங்கள் தங்கத் துகள்கள் தூவப்பட்ட அந்த பீட்ஸாவை டேஸ்ட் செய்யலாம். பிரான்ஸில் இருந்து இறகுமதி செய்யப்பட்ட மூலப் பொருட்களால் தயாராகும் இந்த பீட்ஸாவின் விலை 2000 டாலர்கள். அதாவது ஒரு துண்டுக்கு சுமார் 250 டாலர்கள்.  இரண்டு நாட்களுக்கு முன்பே ஆர்டர் செய்ய வேண்டுமாம்.

 

pizza_23274.jpg

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

ட்ரம்ப் கட்டிய அமெரிக்க தாஜ்மஹாலின் இன்றைய நிலையென்ன?

அமெரிக்க அதிபராகப்போகும் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியில் வாழ்வது எப்படி இருக்கும்?
அதிபராகத் தேர்வாகியிருப்பவரின் ஆட்சித்திறன் குறித்து அட்லாண்டிக் நகரில் அவ்வளவு நல்ல பெயர் இல்லை.
காரணம் அட்லாண்டிக் நகரில் ட்ரம்பின் வர்த்தக முயற்சிகள் எல்லாமே தொடர் தோல்வியில் முடிந்தன.
லாஸ் வேகாஸுக்குப் போட்டியாக சூதாட்ட மற்றும் களியாட்ட விடுதிகளின் சாம்ராஜ்ஜியத்தை அவர் அந்த

  • தொடங்கியவர்

தொப்பையை வேகமாக குறைக்கும் 4 யோகாசனம்

இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் தவறாமல் பின்பற்றினால்,தொப்பையை வேகமாக குறைக்க முடியும்.

 
 
தொப்பையை வேகமாக குறைக்கும் 4 யோகாசனம்
 
இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் காலையில் தவறாமல் பின்பற்றினால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்க முடியும்.

புஜங்காசனம்

இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம் தண்டுவடத்தையும் வலிமையாக்கும்.

முதலில் குப்புறப்படுத்து, இரு உள்ளங்கைகளையும் மார்பு பகுதிக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி, மூச்சை உள்ளிழுத்தவாறு முகத்தையும், உடலையும் உயர்த்த வேண்டும். இந்நிலையில் 15-30 நொடிகள் இருக்க வேண்டும். பின் மூச்சை வெளிவிட்டவாறு பழைய நிலைக்கு திரும்பவும். இப்படி ஒரு நாளைக்கு 5 முறை செய்ய வேண்டும்.

தனுராசனம்

தனுர் என்றால் வில். வில்லைப் போல் உடலை வளைத்து செய்வதால், இந்த ஆசனத்தின் பெயர் தனுராசனம் என்று வந்தது. இந்த ஆசனத்தின் மூலம் அடிவயிற்று தசைகள் நல்ல நிலையைப் பெறும். மேலும் இந்த ஆசனத்தினால் வயிற்றுக் கொழுப்புக்களும், தொடையில் உள்ள கொழுப்புக்களும் கரையும் மற்றும் செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை அகலும்.

இந்த ஆசனத்திற்கு குப்புறப்படுத்து, இரண்டு கைகளாலும் கணுக்காலைப் பிடித்து, உடலை வில் போன்று வளைக்க வேண்டும். இப்படி 5 முறை செய்ய வேண்டும்.

நாகாசனம்

இந்த யோகாசனம் தட்டையான வயிற்றைப் பெற உதவும் மற்றும் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு மற்றும் கால் தசைகள் வலிமைப் பெறும்.

இந்த ஆசனத்திற்கு முதலில் தரையில் படுத்து, பின் மூச்சை உள்ளிழுத்தவாறு மேல் உடலையும், கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். முடிந்த வரை 45 டிகிரி கோணத்தில் உடலைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்நிலையில் 15 நொடிகள் இருந்து, பின் மூச்சை வெளியே விட்டவாறு பழைய நிலைக்கு திரும்புங்கள்.

பவனமுக்தாசனம்

இந்த யோகாசனத்தினால் குடலுக்கு மசாஜ் செய்தது போன்று இருப்பதோடு, வயிற்று அமிலத்தை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், முதுகு வலியைக் குறைக்கவும், அடிவயிறு, தொடை, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து அழகாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

பவனமுக்தாசனம் செய்வதற்கு தரையில் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு, தலையால் முழுங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி 03

 

1431 : பிரெஞ்சு வீராங்­க­னை­யான 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்­யப்­பட்டு பியேர் கவுச்சோன் ஆய­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார்.

 

1496 : இத்­தா­லிய அறிஞர் லியொ­னார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்­திரம் ஒன்றை சோத­னை­யிட்டார். எனினும் அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

 

876varalau-03-01-2017-Flash-Airlines-6041833 : ஆர்­ஜென்­டீ­னா­வுக்கு அரு­கி­லுள்ள போக்­லாந்து தீவு­களை பிரித்­தா­னியா கைப்­பற்­றி­யது.

 

1870 : புரூக்ளின் பாலம் கட்­டு­மானப் பணிகள் ஆரம்­ப­மா­யின.

 

1888 : 91 செ.மீ முறிவுத் தொலை­நோக்கி முதன்­மு­றை­யாக கலி­போர்­னி­யாவில் உப­யோ­கிக்­கப்­பட்­டது. இதுவே அந்­நே­ரத்தில் உலகின் மிகப் பெரும் தொலை­நோக்கி ஆகும்.

 

1921 : துருக்கி ஆர்­மே­னி­யா­வுடன் அமைதி உடன்­பாட்­டிற்கு ஒப்­புக்­கொண்­டது.

 

1925 : இத்­தா­லியின் ஆட்சி அதி­காரம் முழு­வதும் தன்­னிடம் உள்­ள­தாக முசோ­லினி அறி­வித்தார்.

 

1932 : இந்­தி­யாவில் மகாத்மா காந்தி மற்றும் வல்­லபாய் பட்டேல் ஆகி­யோரை பிரித்­தா­னியர் கைது செய்­தனர்.

 

1947 : அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற அமர்வு முதற்­த­ட­வை­யாக தொலைக்­காட்­சியில் காண்­பிக்­கப்­பட்­டது.

 

1956 : ஈபிள் கோபு­ரத்தில் ஏற்­பட்ட தீயினால் கோபு­ரத்தின் மேற்­ப­குதி சேத­ம­டைந்­தது.

 

1957 : முத­லா­வது மின்­க­டி­கா­ரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்­பனி அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

 

1958 : மேற்­கிந்­தியத் தீவு­களின் கூட்­ட­மைப்பு அமைக்­கப்­பட்­டது.

 

1959 : அலாஸ்கா, ஐக்­கிய அமெ­ரிக்­காவின் 49ஆவது மாநி­ல­மா­னது.

 

1961 : கியூ­பா­வு­ட­னான ராஜ­தந்­திர உற­வு­களை அமெ­ரிக்க அரசு முறித்­துக்­கொண்­டது.

 

1961: பின்­லாந்தில் இடம்­பெற்ற விமான விபத்தில் 25 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1966 : இந்­தியப் பிர­தமர் லால் பகதூர் சாஸ்­தி­ரிக்கும் பாகிஸ்தான் ஜனா­தி­பதி அயூப்­கா­னுக்கும் இடையில் பேச்­சு­வார்த்­தைகள் அப்­போ­தைய சோவியத் யூனி­யனின் ஒரு குடி­ய­ர­சாக இருந்த  உஸ்­பெ­கிஸ்­தானின் தாஷ்கெண்ட் நகரில் ஆரம்­ப­மா­யின.

 

1974 : யாழ்ப்­பா­ணத்தில் நான்­கா­வது உலகத் தமி­ழா­ராய்ச்சி மாநாடு ஆரம்­ப­மா­னது.

 

1977 : அப்பிள் கணினி நிறு­வனம் கூட்­டுத்­தா­ப­ன­மாக்­கப்­பட்­டது.

 

1990 : பனா­மாவின் முன்னாள் ஜனா­தி­பதி மனுவேல் நொரி­யேகா அமெ­ரிக்கப் படை­க­ளிடம் சர­ண­டைந்தார்.

 

1993: ஆயு­தக்­கு­றைப்பு தொடர்­பான ஒப்­பந்­தத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி  ஜோர்ஜ் எச்.டபிள்­யூ. புஷ், ரஷ்ய ஜனா­தி­பதி பொரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெ­ழுத்­திட்­டனர்.

 

1994 : ரஷ்­யாவின் இர்­கூத்ஸ்க்கில் இருந்து புறப்­பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் உயிரிழந்தனர். 

 

1995 : இலங்கை அரசு, விடுதலைப் புலிகள்  பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.

 

2004 : எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததால் அதில் பயணம் செய்த 148 பேரும் உயிரிழந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜனவரி 3: வீரபாண்டிய #கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று

15826856_1355038434554943_21398670236152

 

வியாபார நோக்கிலே இந்தியாவிற்குள் காலூன்றி நம்மை ஆள நினைத்த வெள்ளையர்களுக்கு எமனாய் திகழ்ந்த வீரத்தின் விளைநிலம் தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறிப்பிடத்தக்கவர். பாஞ்சாலங்குறிச்சியில் 1760-ஆம் ஆண்டு ஜனவரி 3-ல் திக்குவிசய கட்டபொம்முவுக்கும் ஆறுமுகத்தம் மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈஸ்வரவடிவு, துரைக்கண்ணு என இரு சகோதரிகளும் இருந்தனர்.

அழகிய வீரபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஓட்டப் பிடாரம் பகுதியில் ஆட்சிசெய்த ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு
இருந்தார். பிறகு, 1791-ல் வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை ஏறினார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் திருநெல்வேலிச் சீமை, கிழக்கு இந்தியக் கம்பெனியின் அதிகார வரம்புக்குள்
வந்தது.

1797-ல் ஆலன்துரை என்ற ஆங்கிலேயேர் பாஞ்சாலங் குறிச்சிக்கு வந்தார். அவரைப் போரில் கட்டபொம்மன் தோற்கடித்தார். அதன் தொடர்ச்சியாக, கப்பம் கட்ட மறுத்த கட்டபொம்மனிடம்
ஆங்கிலேய கலெக்டர் ஜாக்சன் விளக்கம் கேட்டார்.

'அந்நியனுக்குக் காவடி தூக்குவதைவிட, தூக்குக் கயிறே மேல்’ என்ற மன உறுதியுடன் நெஞ்சை நிமிர்த்தித் தண்டனையை ஏற்றுக்கொண்ட கட்டபொம்மன், அக்டோபர் 16, 1799-ல் கயத்தாறு
என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.

vikatan

  • தொடங்கியவர்

பிளாஸ்டிக் டப்பிலேயே வளர்ந்து வாழ்ந்து இறந்த 19 வயதுப் பெண்!

பிளாஸ்டிக்

'ஒரு மளிகைக் கடை நடத்த வேண்டும்' - இதுதான் மாற்றுத்திறனாளி ரஹ்மா ஹருனாவின் விருப்பமாக இருந்தது. அது நிறைவேறாமலேயே மறைந்துவிட்டார், இயற்கையின் பிழையாக வாழ்ந்த ரஹ்மா, பிளாஸ்டிக் டப்பிலேயே வளர்ந்து வாழ்ந்தார்.

நைஜீரிய நாட்டில் உள்ள லஹதின் மகோலே கிராமத்தில், ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் ரஹ்மா. ஆரோக்கியமான குழந்தையாகப் பிறந்தவரின் உடல் வளர்ச்சி, ஆறு மாதங்களோடு அப்படியே நின்றுபோனது. 19 வயது வரை, முகமும், மன வளர்ச்சியும் வளர்ந்து வந்தாலும், உடல் வளர்ச்சி மட்டும் ஆறு மாதங்களோடு நின்றுபோன விசித்திரத்துக்கு, மருத்துவர்களிடமும் பதில் இல்லை. 'வெளிநாடுகளில் கொண்டு சென்று மேற்கொண்டு சிகிச்சை செய்யலாம் என்றால் போதிய பண வசதி இல்லை' என பெற்றோர் கூறுகிறார்கள். ஒரு ப்ளாஸ்டிக் டப்பிற்குள் வைத்துவிடும் உடலே, ரஹ்மாவுடையது.

ரஹ்மாவின் குடும்பத்தினர் அவரின் நிலையை எண்ணி மிகவும் வருந்தினாலும், அவருக்கு தங்களால் அதிகபட்சமாகக் கொடுக்க முடிந்த அன்பையும், அக்கறையையும், பராமரிப்பையும் கொடுத்தனர். அவர் உடற் குறைபாட்டை காரணம் சொல்லி அவரை வீட்டிலேயே முடக்கி வைக்காமல், ஒரு ப்ளாஸ்டிக் டப்பில் ரஹ்மாவை வைத்து, அவர் விரும்பிய இடங்களுக்கு எல்லாம் அவரை எடுத்துச் சென்றனர். ''நான் எப்போதும் என் சகோதரிக்கு உதவிசெய்வேன். ரஹ்மாவை பிளாஸ்டிக் டப்பில் வைத்து உறவினர்களின் வீட்டுக்கும், வெளியிலும் அழைத்துச் செல்வது என அவருக்கு உதவி செய்வேன்'' என்று ரஹ்மாவின் இளைய சகோதரன் கூறுகிறான்.

வெளியில் செல்லும்போது  தன்னை ஆச்சர்யமாக வந்து பார்க்கும் மக்களிடம் எல்லாம் ரஹ்மா சிரித்துப் பேசியபோது, அவர் குடும்பத்தினருக்கு அது ஆறுதலாக இருந்தது.

 

 

சுயபச்சாதாபம் இல்லாத ரஹ்மா, எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பது அவரின் சிறப்பு.  'எங்கள் பகுதி மக்களுக்கு அவசரத்துக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கக்கூடிய வகையில் ஒரு மளிகைக் கடை ஆரம்பிக்க வேண்டும்' என்று தன் ஆசையை 'டெலிகிராஃப்' பத்திரிகையிடம் அவர் சொன்னபோது, உலகம் இன்னும் கண்கள் விரித்து அவரைப் பார்த்தது. அவருக்கு உதவும் எண்ணத்துடன், அவர் குடும்பத்துக்கு உணவு, உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி சிலர் உதவினர்.

ஆச்சர்ய மனுஷியாக, ஆச்சர்ய குழந்தையாக ஒரு வாழ்க்கை வாழ்ந்த வந்த ரஹ்மா, இப்போது நம்முடன் இல்லை. சென்ற கிறிஸ்துமஸ் நாளன்று, அவர் உடலைப் விட்டுப் பிரிந்தது உயிர். இணைய உலகம் ரஹ்மாவின் பிரிவில் கலங்கிப்போனது!

.vikatan

  • தொடங்கியவர்

பிரிட்டனில் விரைவில் இந்த பவுண்ட் செல்லாது..!

Pound_600_13037.jpg

பிரிட்டனின் பயன்பாட்டில் இருக்கும் பணம் பவுண்ட். 1.3 பில்லியன் பவுண்ட்கள் மதிப்புள்ள நாணயங்கள் பிரிட்டனில் புழக்கத்தில் உள்ளன. இதில், '1 பவுண்ட்' நாணயங்களின் மதிப்பு 43.3 கோடி. தற்போது இந்த பழைய ஒரு பவுண்ட் நாணயங்களுக்கு பதிலாக புதிய ஒரு பவுண்ட் நாணயங்களை வெளியிடவுள்ளது பிரிட்டன் அரசு. அக்டோபர் 15 வரை பழைய நாணயங்களை மாற்றிக்கொள்ள பிரிட்டன் மக்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது பிரிட்டனில் புழக்கத்தில் இருக்கும் பழைய 1 பவுண்ட் நாணயங்கள், 1983-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாக ஒரு பவுண்ட் நாணயத்தைப் புழக்கத்தில் விடுவதற்கு காரணம், போலி பவுண்ட்களை புழக்கத்திலிருந்து குறைப்பதற்குத்தான் என்று கூறப்படுகிறது. வரும் மார்ச் மாதத்தில் புதிய புவுண்ட்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

vikatan

  • தொடங்கியவர்

‘வீரையன்’ படத்தின் டிரெய்லர்..!

Veeraiyan movie trailer

‘அழகர்சாமியின் குதிரை’, ‘ரம்மி’, ‘சென்னை-28’ போன்ற படங்களில் நடித்த ‘இனிகோ’ பிரபாகரன் கதாநாயகனாகவும், ஷைனி கதாநாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘வீரையன்’. சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி, ‘ஆடுகளம்’ நரேன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பரீத் இயக்கியுள்ளார். சமீபத்தில் இசை வெளியிடப்பட்ட இந்த படத்தின் டிரெய்லரை, தற்போது வெளியிட்டுள்ளனர். 

 

 

  • தொடங்கியவர்

ஐஸ்லாந்து நாட்டின் அபூர்வக் குழந்தை

இவரின் அபூர்வத்தன்மை என்ன?

  • தொடங்கியவர்
பாரம்பரிய புத்தாண்டுக் குளியல்
 

புத்தாண்டுத் தினத்தில் கடும் குளிரான காலநிலையில் திறந்தவெளியில் நீராடுவது பல நாடுகளில் பாரம்பரியமாகவுள்ளது.

 

1743BC2051400000578-4079934-Swimmers_wor

 

1743BC115EF00000578-4079934-Batman_was_e

 

174716160-01-02.jpg

 

நேற்று முன்தினம் பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம் ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் மக்கள் குளியலில் ஈடுபடுவதை படங்களில் காணலாம்.

 

174716183-01-02%281%29.jpg

 

174716722-01-02.jpg

 

174716763-01-02.jpg

 

174716940-01-02.jpg

 

174716991-01-02.jpg

 

174Lyme-Lunge.jpg

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வேலு நாச்சியார்

velu_3112388f.jpg
 
 
 

தன் வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றிகொண்டு, சிவகங்கைச் சீமையின் ராணியாக முடிசூட்டிக்கொண்ட வீரப் பெண்மணி வேலு நாச்சியார் (Velu Nachiyar) பிறந்த தினம் இன்று (ஜனவரி 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ராமநாதபுரம் அடுத்த சக்கந்தி என்ற ஊரில் (1730) பிறந்தார். விஜயரகுநாத செல்லதுரை சேதுபதி மன்னரின் ஒரே மகள் இவர். சிறு வயதிலேயே துணிச்சலும் எதற்கும் அஞ்ஞாத நெஞ்சுரமும் கொண்டிருந்தார்.

* கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது மொழிகளையும் கற்றறிந்தார்.

* சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரை 16-வது வயதில் மணந்து, பட்டத்து ராணியானார். வடுகநாதர் ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்ட மறுத்ததால், ஆங்கிலேயப் படையின் உதவியோடு நவாபின் படைகள் சிவகங்கை மீது போர் தொடுத்தன. காளையார்கோவிலில் இருந்த மன்னர் வடுகநாதரை திடீரென்று தாக்கிக் கொன்று, காளையார்கோட்டையை தங்கள்வசப்படுத்தினர்.

* சின்ன மருது, பெரிய மருது தளபதிகளின் துணையோடு தப்பிச் சென்று ஹைதர் அலியின் உதவியை நாடினார் ராணி. இவரது வீரம், விவேகத்தை மெச்சிய ஹைதர் அலி அவருக்கு உதவினார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சி கோட்டை, அய்யம்பாளையம் என இடம் மாறி மாறி முகாமிட்டு ஆங்கிலேயரை அடித்து விரட்ட தக்க தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்.

* ஆங்கிலப் படையை அழித்து, நவாபை வீழ்த்தி, சிவகங்கைச் சீமையில் தங்கள் அனுமன் கொடியை மீண்டும் பறக்க விடுவது என்று சபதமேற்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, சேனாதிபதிகள் மருது சகோதரர்களை அழைத்துக்கொண்டு குறுநில மன்னர்களை ஒன்றுசேர்த்துப் போராடப் பல இடங்களுக்கும் சென்றார்.

* எப்படி அவர்களைத் தாக்கி வீழ்த்த வேண்டும் என்ற உத்திகளை வகுத்தார். 1780-ல் ஹைதர் அலியின் படையைத் தலைமை ஏற்று நடத்திச் சென்றார். தன் படைகளை மூன்றாகப் பிரித்து, மும்முனைத் தாக்குதல் நடத்தி வெற்றி வாகை சூடினார்.

* விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும் ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். வேலு நாச்சியாரும் அவரது மகளிர் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் புகுந்து, திடீர் தாக்குதல் நடத்தினர். கோட்டையைக் கைப்பற்றினர்.

* சரித்திரப் புகழ்வாய்ந்த இந்த வெற்றி கிடைத்தபோது இந்த வீரமங்கைக்கு 50 வயது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர்தான்! ஆங்கிலேயேரின் கொடி இறக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்டது. சிவகங்கை அரசியாகப் பதவியேற்றார்.

* இவரது ஆட்சியில் சிவகங்கை பல்வேறு வகையிலும் வளர்ச்சி அடைந்தது. படையெடுப்புகளால் சிதைந்த கோட்டைகளைச் சீரமைத்தார். விவசாயத்தை விரிவுபடுத்தினார். ஆறுகளை அகலப்படுத்தினார். துணைக் கால்வாய்கள் தோண்டப்பட்டன. கோயில்களைச் செப்பனிட்டார்.

* இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்ட வீராங்கனை வேலு நாச்சியார் உடல்நலக் குறைவால் 66-வது வயதில் (1796) மறைந்தார். இவரது பெயரில் 2008-ல் தபால் தலை வெளியிடப்பட்டது.

tamil.thehindu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.