Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

குழந்தைகள் டி.வி பார்ப்பதைக் குறைப்பது இவ்வளவு ஈஸியா? #MustReadParents

டிவி பார்க்கும் அண்ணன் தங்கை

'தோ ஒரு நாள் என் குழந்தை அழுதானேனு டிவி பார்க்கவிட்டேன். அது என்னடானா... இப்ப தொடர்கதையா மாறி, எனக்கும் என் கணவருக்கும் தினமும் சண்டை வர்றதே குழந்தைகள் டிவி பார்க்கிறதை வைச்சுதான்" என்பது போன்ற உரையாடல்கள், குமுறல்கள் உங்கள் வீடுகளிலும் எழுகிறதா... அப்படியெனில் உங்களுக்காகதான் இந்த கட்டுரை.

'படிப்படியாக டி.வி பார்க்கும் பழக்கத்தை எப்படி குறைக்கலாம். அதில் இருந்து அவர்களுடைய கற்பனைத் திறன்களை மழுங்கடிக்காமல்குழந்தைகள் நல பயிற்சியாளர் வேள் பாரி வெளிக்கொணர்வது எப்படி?' என்பது பற்றி ஆலோசனைகள் தருகிறார் குழந்தைகளுக்கான தன்னம்பிக்கை பயிற்சி பட்டறைகள் நடத்தும் வேள்பாரி.

''குழந்தைகள் ஏன் டி.வி பார்க்கிறார்கள்? ஏனெனில் அவர்களுக்கு அது பிடித்திருக்கிறது. அப்படியெனில் உங்கள் வீட்டுச் சூழலை அவர்களுக்கு பிடித்தது போல மாற்றுங்கள். குழந்தைகள் டி.வி பார்க்காமல் இருக்க வேண்டும் என்று பெற்றோரான நீங்கள் நினைத்தால், முதலில் நீங்கள் டி.வி பார்க்கக் கூடாது.

இன்றில் இருந்து ஒரு வாரத்துக்கு டி.வி பார்க்கின்ற நேரத்தை நிறுத்துங்கள்; அல்லது டி.வி கனெக்‌ஷனை கட் செய்து விடுங்கள். இப்படி செய்வதற்கு முன்பு குழந்தைகளுடன் சேர்ந்து சில டி.வி பார்க்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என்பதை திட்டமிடுங்கள். அவற்றையும் உங்கள் பார்வையில் பார்க்காமல், குழந்தைகளிடம் கேட்டு தீர்மானியுங்கள்.

கதை சொல்லுதல், அவர்களுக்கு பிடித்த ஸ்பைடர் மேன் அல்லது பார்ஃபி டாலுடன் சேர்ந்து நீங்களும் விளையாடுவது, கண்ணாமூச்சி, கிராப்ட் வொர்க் செய்தல், பூங்காவுக்கு சென்று விளையாடுவது, ரூம் கிளீனிங், பாரம்பரிய விளையாட்டுகள், கதை சொல்வது, புத்தகம் படிப்பது, நூலகம் அழைத்துச் செல்வது, கார்டனிங், சமையல்... என வெரைட்டியாக அவர்களுக்கு பிடித்தது போல திட்டமிடுங்கள். மாலை நேரத்தில் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாட அனுமதியுங்கள். குழு விளையாட்டு மூலம் குழந்தைகளின் பல திறன்கள் மேம்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். படிப்பினால் அவர்களது குட்டி மூளைக்குள் கொட்டிக் கிடக்கும் டென்ஷன்களும் காலியாகிவிடும்.  

நிச்சயம் டி.வி இல்லாத ஒரு வார கால அனுபவம், உங்கள் வீட்டையே நல்ல மாற்றத்துக்கு உட்படுத்தியிருக்கும். தேங்கிக் கிடந்த வேலைகள் முடிந்திருக்கும். வீடு எல்லோருக்கும் பிடித்த இடமாக மாறியிருக்கும். டிவி இல்லாமலும் ஜாலியாக இருக்க குழந்தைகள் பழகியிருப்பார்கள். டி.வி பார்க்காமல் குழந்தைகள் இருக்க பழகிக் கொண்டால், அதை அப்படியே தொடருங்கள். இல்லையென்றால் சாப்பிடும் சிறிது நேரம் மட்டும் என சொல்லி அதன்படி நடக்க குழந்தைகளை பழக்கலாம். குழந்தைகளோடு அமர்ந்து அந்த நேரத்தில் மட்டும் பெற்றோரும் டிவி பார்க்கலாம். மற்ற நேரங்களில் குழந்தைகள் தங்களது பணிகளை செய்து கொள்ள உதவியாக இருக்க வேண்டும். டிவி பார்க்கும் கூடுதல் நேரத்தை கட் செய்து விட்டு அந்த நேரத்தில் படி படி என திணிப்பதும் அவர்களை வெறுப்பில் தள்ளும். டிவி பார்க்காத நேரத்தில் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்ய பழக்கப்படுத்தலாம். பெற்றோர் மாறினால் குழந்தைகளும் மாறுவார்கள். வீட்டில் உள்ள அனைவருமே குழந்தைகளுக்காக தாங்கள் டிவி நேரத்தை தியாகம் செய்ய தயாராகுங்கள். குழந்தைகள் உலகம் குதூகலம் ஆகும்’’ என்கிறார் வேள்பாரி. 

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

THE MOST ROMANTIC OMELETTE
Wouldn't you just love if someone made breakfast like this?

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட, தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்..! #FoodAlert

சிலருக்குக் காலையில் எழுந்ததுமே வயிற்றைக் கிள்ளுவது மாதிரி இருக்கும். கிடைக்கிற எதையாவது எடுத்துச் சாப்பிட்டு, பசி போக்குவது அவர்கள் வழக்கமாகவும் இருக்கும். பசி எடுக்காமலேயே எதையாவது சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். வெறும் வயிற்றில் இப்படிக் கண்டதையும் சாப்பிடுபவர்கள் கவனிக்க..! இப்படிச் சாப்பிடும் உணவுகள் ஒருவேளை நமக்கு நன்மை அளிக்கலாம். மாறாக, வேறு பிரச்னைகளையும்கூட ஏற்படுத்திவிடலாம். வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை.... கூடாதவை என்னென்ன உணவுகள் என்று பார்க்கலாம்!

 

வெறும் வயிற்றில்

 

எதைச் சாப்பிடலாம்? 

கோதுமையில் தயாரான உணவு... சிறப்பு! 

காலைக் கடன்களை முடித்து, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி எல்லாம் செய்த பிறகு, டிஃபனுக்கு நல்ல தேர்வு கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தி, பூரி, தோசை முதலியன. சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள பாசிப் பருப்பில் செய்த `தால்’ கூடுதல் சிறப்பு. நம் உடலுக்கு நாள் முழுக்கத் தேவையான புரோட்டீன், வைட்டமின்கள், இரும்புச்சத்து அத்தனையும் கிடைக்கும். 

kothumai_12162.jpg

 

கேழ்வரகு கூழ்... கேடு தராது!

`ராகி’ என சொல்லப்படும் கேழ்வரகின் சிறப்பைச் சொல்லிக்கொண்டே போகலாம். எடைக் குறைப்புக்கு உதவும்; சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். கொழுப்பைக் குறைக்கும். கேழ்வரகில் புரோட்டீன்களும் அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. ரத்தசோகை தீர்க்க உதவும். செரிமானத்துக்கு நல்லது. பிறகென்ன... கேழ்வரகு கூழை மருத்துவர் ஆலோசனையுடன் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 

332836_12006.jpg

 

முட்டைக்குச் சொல்லலாம் வெல்கம்! 

வேக வைத்த முட்டையை, காலை டிஃபனோடு சாப்பிடுவது அவ்வளவு நல்லது. முட்டையின் வெள்ளைப்பகுதியில் உள்ள அதிகமான புரதச்சத்து, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைத் தூண்டும். அதோடு, அன்றைய தினத்துக்கு நமக்குத் தேவையான கலோரிகளும் கிடைத்துவிடுவதால், மேலும் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தை வரவழைக்காது.  

shutterstock_35469682_12523.jpg

தர்பூசணிக்கு தலை வணங்கலாம்!


வெறும் வயிற்றில் தாராளமாகச் சாப்பிடலாம். நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்களை அழிக்கும் தன்மையுள்ளது; வைட்டமின் ஏ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எல்லாம் இதில் இருக்கின்றன. நம் ஆரோக்கியம் காக்கக்கூடிய நீர்ச்சத்துள்ளது தர்பூசணி. எல்லா நாட்களிலும் தர்பூசணி கிடைப்பதில்லை என்பதால், கிடைக்கும் நாட்களில் வாங்கிப் பயன்படுத்தலாம். 

shutterstock_116265958_12150.jpg


கோதுமை பிரெட்டுக்கு `ஓ’ போடலாம்! 


கிரீன் டீ, கோதுமை பிரெட் ஸ்லைஸ் இரண்டு... காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட அருமையான காம்பினேஷன். கோதுமை பிரெட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும், குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட்டும் நம் உடலுக்கு சக்தி தருபவை. நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்கச் செய்பவை.  


எதைச் சாப்பிடக் கூடாது! 

பேக்கரி ஐட்டங்கள் வேண்டாமே!

முதல் நாள், `ஈவினிங்க் ஸ்நாக்ஸுக்கு ஆகும்’ என வெஜிடபுள் பஃப்ஸ், எக் பஃப்ஸ் போன்ற எதையாவது வாங்கிவைத்திருப்போம். அவற்றில் ஒரு பகுதி சாப்பிடாமல் மீதமாகியிருக்கும். பார்ப்பதற்கு அழகாகவும், உண்ண வேண்டும் என்கிற வேட்கையைத் தூண்டுவிதத்திலும்கூட அவை இருக்கலாம். சிலருக்கு, முக்கியமாக இல்லத்தரசிகளுக்கு, `இவை வீணாகிப் போய்விடுமே’ என்கிற கவலை வரும். அதனாலேயே, காலையில் அதை வெறும் வயிற்றில் உள்ளே தள்ளுவதற்குத் தயாராக இருப்பார்கள். பேக்கரியில் தயாராகும் இதுபோன்ற மாவுப் பண்டங்களில் `ஈஸ்ட்’ சேர்ப்பார்கள். அது, நம் வயிற்று ஒழுங்கை பாதிக்கும்; எரிச்சலை ஏற்படுத்தும்; வாயுத்தொல்லையை ஏற்படுத்திவிடும். எனவே, இவற்றைத் தவிர்க்கவும். 

shutterstock_121353745_12542.jpg

ஸ்வீட்ஸுக்குச் சொல்லலாம் 'நோ’!
சிலருக்கும் இனிப்போடு அன்றைய நாளைத் தொடங்குவது பிடிக்கும். அதற்காக, லட்டில் தொடங்கி ராஜஸ்தான் ஹல்வா வரை, விதவிதமாகப் பொளந்துகட்டுவார்கள். உண்மையில், வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிடாமல் நாளைத் தொடங்குவதே, அன்றைய தினத்தை இனிமையாக்கும் என்பதை மனதில் கொள்க. சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், வெறும் வயிற்றில் நாம் எடுத்துக்கொள்ளும் இனிப்புகளில் இருக்கும் சர்க்கரை, உடலின் இன்சுலின் சுரப்பைக் கடுமையாகப் பாதிக்கும்; அது கணையத்துக்கு மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி, சர்க்கரைநோய் தொடங்கி பெரிய உடல்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எச்சரிக்கை. 

yogurt_12429.jpg

தயிர், யோகர்ட்... தவிர்க்கவும்!
`முதல் நாள் ராத்திரியே உறைக்கு ஊற்றி, காலையில் தயிரில் லேசாக சர்க்கரை தூவி, ஜில்லுனு சாப்பிடுற சுகம் இருக்கே. அது அலாதியானது’ என்கிற ரகமா நீங்கள்? தயிரோ, யோகர்ட்டோ தவிர்த்துவிடுங்கள் பாஸ்... குறிப்பாக டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரைநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள். ஏனென்றால், இதில் கொழுப்பைக் கூட்டும், சர்க்கரையை சேர்க்கும் காரணிகள் உள்ளன. நல்ல குணங்கள் சில இருந்தாலுமே, டயட்டில் இருப்பவர்களுக்கு யோகர்ட், தயிர் வெறும் வயிற்றில் வேண்டவே வேண்டாம். 

shutterstock_114314737_12159.jpg

 

தக்காளிக்குத் தடை போடலாம்!
`சமையலறைக்குப் போனோமா, ஒரு தக்காளியை நறுக்கித் துண்டுகளைச் சாப்பிடுவோமா...’ என வெறும் வயிற்றில் அமிலம் கரைப்பவர்களும் நம்மில் உண்டு. ஆம்... இது உண்மையும்கூட. தக்காளி நல்லதுதான். அது வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பல கூட்டுப்பொருட்கள் (Ingredients) நிறைந்தது, மறுப்பதற்கில்லை. ஆனால், வெறும் வயிற்றில் சாப்பிடும்போது,  வயிற்றில் அசிடிட்டியை ஏற்படுத்திவிடும். இது தொடர்ந்தால், கேஸ்ட்ரிக் அல்சர் வரை வந்து அவதிப்பட நேரிடும். 

banana_12486.jpg

வாழைப்பழம்
காலையில் ஒரு வாழைப்பழத்தைப் பிய்த்துப்போட்டு, தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அவர்களுக்காக ஒரு செய்தி... வாழைப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. வெறும் வயிற்றில் வாழைப்பழத்தைச் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் சேரும். ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரிக்கும். ஆக, ரத்தத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு சமநிலையில் இருக்காது. இது, இதயத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்; இதய நோய்களை வரவழைத்துவிடும். 

vikatan.

  • தொடங்கியவர்
பொறுமையுடன் நிறை மாந்தராக உயர்ந்திடுக
 

article_1483504576-ghfjgi.jpgசகிப்புத்தன்மை என்பதே மனோபலத்தின் ஆழமான அடையாளம்தான். தன்னம்பிக்கை மிகையாக உள்ளவர்களே, சகிப்புத்தன்மை கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.  

தனது குறிக்கோளை அடைய மௌனமாக இருப்பவன் என்றும் தனது மனோபலத்தில் நம்பிக்கையுடையவனாவான். மாறாத திடசிந்தனையுடன், எடுத்த நல்ல காரியங்களைச் சிரத்தையுடன் முடிப்பான்.  

மேற்படி சிந்தனையினை மனத்தில் இருத்தினால், பொறுமையுடன் கூடிய சகிப்புத்தன்மையும் பிறர்செய்த தவறுகளை மன்னிக்கும் இயல்பும் தானாகவே சுரக்கும்.  

தேசத்தலைவர்களின் மாபெரும் வெற்றிக்கு, இந்தச் சகிப்புத்தன்மையே கைகொடுத்துள்ளது. மேலும், எல்லா அறிஞர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் எடுத்த காரியத்தை சகிப்புத்தன்மையுடன் ஏற்று, இடர் களைந்து வெற்றியீட்டியுள்ளார்கள். 

சதா சஞ்சலமான நிலையினை நிரந்தரமாகக் கொண்டவர்களுக்குப் பொறுமை எது? பொறுமையுடன் நிறை மாந்தராக உயர்ந்திடுக. 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஹலோ செல்ஃபி கிங்/குயின்.. உங்களுக்கு அது வந்திருச்சு! #HighAlert

செல்ஃபி

ங்ககிட்ட ஸ்மார்ட்போன் இருக்கா? அதுல செல்ஃபி எடுக்குற பழக்கம் இருக்கா? ஒரு நாளைக்கு எத்தனை போட்டோ எடுப்பீங்க? அந்த போட்டோஸை நண்பர்களுக்கு அனுப்பி கருத்து கேட்குற பழக்கம் இருக்கா? அப்போ கொஞ்சம் கவனமா செயல்பட வேண்டிய நேரம் இது. செல்ஃபி எடுக்குறது ஒரு போதைப்பழக்கம் போன்றதுனு நாம கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதுக்காக ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்னு சொன்னா நம்புவீங்களா? இந்த மாதிரி  பிரச்னைக்கு ‘செல்ஃபிசைடு’ங்குற பெயர் பயன்படுத்தபடுகிறது.

'செல்ஃபிசைடு' (Selficide) என்றால் என்ன?

தொடர்ச்சியாக கவனத்தை ஈர்க்கும்படி போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து, அதை மொபைல் போனில் படமாக எடுத்து, நண்பர்களுக்கு பகிர்வது, அப்படி பகிர்ந்த போட்டோக்களுக்கு நண்பர்களிடம் இருந்து கருத்து கேட்பதே செல்ஃபிசைடு என்று சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி கண்ணாடி பார்ப்பது, அவ்வப்போது செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அப்படிப்பட்டவர்களை செல்ஃபி எடுக்கும்போது தொந்தரவு செய்தால் மிகவும் கோபப்படுவாங்க... உணவு, தூக்கமின்றி போட்டோக்கள் எடுத்துக் கொண்டே இருப்பாங்க..

செல்ஃபிசைடால் பாதிக்கப்பட்ட பெண்கள் 

கடந்த இரண்டு மாதங்களில் மூன்று பெண்கள், செல்ஃபிசைடால் பாதிக்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி பல்கலைக்கழத்தில் படிக்கும் 18 வயதான ஸ்வேதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காது,மூக்கு,தொண்டை நிபுணரிடம் மூக்கு அறுவைச் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனை சென்றுள்ளார். பரிசோதனைக்குப் பிறகு, மூக்கில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மருத்துவர் அந்தப் பெண்ணை மனநல மருத்துவரிடம் நிபுணரிடம் அனுப்பியுள்ளார். இதுபோன்ற பிரச்னை என்று மருத்துவமனையை அணுகியவர்களில், ஸ்வேதா முதல் பெண் அல்ல. ஏற்கெனவே, 2 பெண்கள் இதே பிரச்னையைக் குறிப்பிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை தவிர, வேறு தனியார் மருத்துவமனையில், இதே பிரச்னையால் 3 பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எய்ம்ஸில் அனுமதிக்கப்படுள்ள பெண்கள் மூவருமே வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு மிகவும் கர்வத்தோடு இருந்துள்ளனர். அவர்கள் தங்களது உடல் அழகைத் தெரிந்து கொள்வதற்காக, அடிக்கடி செல்ஃபி எடுத்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த ஆர்வமே, அவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்படக் காரணமாகியது. ஸ்வேதாவை பரிசோதனை செய்த டாக்டர் நந்தகுமார் கூறுகையில், “அவர் பதிவேற்றும் புகைப்படங்களுக்கு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் எந்த மாதிரியான வரவேற்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். செல்ஃபி மோகத்தால் கல்லூரி வகுப்புகளைக் கூட அவர் பல நாட்கள் தவிர்த்துள்ளார். புதிய வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களை இந்த பிரச்னை அதிகம் தாக்குகிறது. அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

செல்ஃபி

மொபைலில் அதிகம் மூழ்கியிருப்போருக்கு அதீத கோபம், வெறுப்பு, தூக்கமின்மை, பதற்றம், தலைவலி, மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலர் தங்களுக்கு கோபம், தனிமை உணர்வு, மன அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் தவிக்கிறார்கள். ‘அமெரிக்க மனோதத்துவ சங்க’ ஆய்வின்படி, 60 சதவிகிதம் அளவுக்கு பெண்களே இந்த பிரச்னைக்கு ஆளாகி உள்ளார்கள் என்று தெரிய வந்துள்ளது. 

செல்ஃபி என்ற பெயரில் எந்த கோணத்தில் புகைப்படம் எடுக்கிறோம் என்ற தீவிரத்தை உணராமல், சில பெண்கள், தங்களை சிறுமைப்படுத்தக்கூடிய வகையில் மிகமோசமான புகைப்படங்களை எடுப்பதுடன், அவற்றை தோழிகளுக்கும், காதலனுக்கும் உணர்ச்சிவசப்பட்டு அனுப்பி விடுகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ அதுபோன்ற புகைப்படங்கள், மற்றவர்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அப்போதுதான் தாங்கள் செய்தது தவறு என்று அந்தப் பெண்கள் உணர்கிறார்கள். ஆனால், தங்களின் மோசமான புகைப்படம் சமூகவலை தளங்களிலோ அல்லது இணைய தளத்திலோ பரவுவதால், சம்பந்தப்பட்ட பெண்கள், மிகுந்த மன உளைச்சலை எதிர்கொள்கிறார்கள். முன்பெல்லாம் முகம் பார்க்கும் கண்ணாடி முன்பு அதிகநேரம் நின்று கொண்டிந்தவர்கள், தற்போதைய கால கட்டத்தில், நினைத்த இடத்தில், நினைத்த நேரம் மொபைல் போனில் செல்ஃபி எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

போட்டோக்கள் எடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். நம்முடைய அழகை நாமே பார்த்துக் கொள்ள ஓரிரு போட்டோக்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதுவே  மோசமான பழக்கமாக‌ மாறிவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிலும் சிலர், விபரீத செல்ஃபிக்கள் எடுக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அதுபோன்ற பழக்கம் சில நேரங்களில் விபத்தாக மாறி, நம் வாழ்க்கையையே விபரீதமாக்கி விடும் பேராபத்து உண்டு என்பதை உணர வேண்டும். எனவே., அளவோடு புகைப்படம் எடுத்துக் கொள்வோம். செல்ஃபிசைடு பாதிப்பிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வோம்!

vikatan

  • தொடங்கியவர்
1974 : யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது 11 பேர் கொல்லப்பட்டனர்
 

வரலாற்றில் இன்று

ஜனவரி - 10

 

1475 : மோல்டோவியாவின் மூன்றாம் ஸ்டீபன் ஒட்டோமான் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தான்.

 

1645 : லண்டனில் முதலாம் சார்ள்ஸ் மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக பேராயர் வில்லியம் லாவுட் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.

 

881varalaru1.jpg1806 : தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர்.

 

1810 : நெப்போலியன் போனபார்ட் தனது முதல் மனைவி ஜோசப்பினை விவாகரத்து செய்தார். 

 

1840 : ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

 

1861 : அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.

 

1863 : உலகின் மிகப் பழமையான சுரங்க ரயில் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.

 

1920 : முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர கூட்டு நாடுகள் தமது முதலாவது கூட்டத்தை ஆரம்பித்தன. வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

 

1924 : பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

 

1946 : ஐ.நா. பொதுச்சபையின் முதலாவது கூட்டம் லண்டனில் நடைபெற்றது. 51 நாடுகள் பங்குபற்றின.

 

1962 : பெருவில் தாக்கிய சூறாவளியில் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

 

1974 : யாழ்ப்பாணத்தில் 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு மற்றும் அதன் விளைவாக மின் கம்பி அறுந்து வீழ்ந்ததால் 11 பேர் கொல்லப்பட்டனர்.

 

1984 : 117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.

 

1985: நிக்கரகுவாவில் சான்டிஸ்னிட்டா டேனியல் ஒர்டிகா ஜனாதிபதியானார். 

 

1989 : அங்கோலாவில் இருந்து கியூபா படைகள் வெளியேற ஆரம்பித்தன.

 

1995 : உலக இளையோர் நாள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம்பெற்றது.

 

2001 : விக்கிப்பீடியா நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது பின்னர் 5 நாட்களின் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.

 

2005 : தெற்கு ஆஸ்திரேலியாவில் அயர் குடாநாட்டில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தனர்.

 

2007 : ஆபிரிக்க நாடான கினியாவில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின. இதன் விளைவாக ஜனாதிபதி லான்சனா இராஜினாமா செய்தார்.

 

2013 : பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் சுமார் 270 பேர் காயமடைந்தனர்.

 

2015 : பாகிஸ்தானின் கராச்சி நகரில் எரிபொருள் தாங்கி வாகனமொன்றும் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதால் 62 பேர் உயிரிழந்தனர்.

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கின்னஸ் சாதனை படைத்த நாய்!

ஜப்பானில் 11 வயது பீகில் என்ற இனைத்தைச் சேர்ந்த நாய் ஒன்று தன் உரிமையாளர் மகொடோ குமாங்கை உடன் சேர்ந்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது. இருவரும் சேர்ந்து ஒரு நிமிடத்தில் 58 முறை ஸ்கிப்பிங் செய்து ரிக்கார்டு படைத்துள்ளனர். இதற்கு முன் இவர்களே 51 முறை ஸ்கிப்பிங் செய்து ரிக்கார்டு படைத்திருந்தனர். தற்போது இந்த சாதனையை இவர்களே முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Most-skips_06402.jpg

'புரின்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நாய் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறது. மகொடோ வீசிய 14 மினி ஃபுட்பால்களை கோல் விழச்செய்யாமல் தடுத்து சாதனைப் படைத்திருக்கிறது. அதுமட்டும் அல்ல, ஒரு பெரியப் பந்தின் மீது நின்று 10 மீட்டர் தூரத்தை 10.39 வினாடிகளில் கடந்ததற்காக, மார்ச்  2016-ல் கின்னஸ் சாதனைப் படைத்து அசத்தியுள்ளது.

vikatan

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person, Bart
 

ஜனவரி 10: யேசுதாஸ் எனும் மகா கலைஞன்! - பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

ஒரு மலையாள நடிகர் தன் பேட்டியில், முதன் முதலில் தன்னுடைய வாய்ஸ் டெஸ்ட்க்காக திருவனந்தபுரம் ரேடியோ ஸ்டேஷன் சென்ற பொது அவர்களால் நிராகரிக்கப்பட்டவர். பின்னாளில் அவர்களே இவரை இவர் இல்லத்தில் சென்று காணும் நிலை ஏற்பட்டது என்று சொல்லியிருந்தார். அவர் சொன்ன இவர் கே,ஜே.யேசுதாஸ்.

கட்டசேரி ஜோசப் யேசுதாஸ், கேரள மாநிலம் கொச்சியில் 1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி பிறந்தவர்.

முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில் எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடலின் மூலம் அறிமுகமானார். அந்தப்பாடலே வரவேற்புப் பெற்றதென்றாலும், எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் படத்தில் இவர் பாடிய விழியே கதை எழுது பாடல் இவருக்குப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்ததென்று சொல்கிறார்கள்.

தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே உட்பட ஏராளமான இனியபாடல்களைப் பாடி தமிழ்மக்களின் வாழ்வில் பிரிக்கமுடியாதவராகவே மாறிப்போனார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், என்.டி.ராமாராவ், அமிதாப், சஞ்சீவ் குமார், சத்யன், பிரேம் நசீர், மம்மூட்டி, மோகன்லால் உள்பட இந்தியாவின் பிரபல நடிகர்கள் பலருக்கும் பாடல்களைப் பாடியுள்ளார்.

திரை இசை, கர்நாடக இசை, பன்மொழிப் பாடல்கள் மட்டுமின்றி தெய்வீகப் பாடல்களாலும் நம்மை எல்லாம்வசீகரித்து ஆட்கொண்ட இவர், 17 மொழிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் இசை வேள்வியையே நடத்திக் காட்டியிருக்கிறார். சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளை 43 முறையும்வென்றவர். போகாத நாடில்லை, பாடாத மொழியில்லை, பெறாத விருதில்லை எனும் வகையில் இவரது சாதனை சரித்திரம் விரிகிறது.

1968ல் சோவியத் அரசின் அழைப்பின் பேரில் கலாசாரத் தூதராக ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கஜகஸ்தான் வானொலியில் இவர் பாடிய ரஷ்ய மொழிப் பாடல் அந்நாட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. புகழ்பெற்ற லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால் (2001), சிட்னி ஓபரா ஹவுஸ் (2006) அரங்குகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் இவரைத் தேடி வந்தது. 1965ல் இந்தியா - சீனா இடையே போர் நடந்தபோது, நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டியவர், டெல்லியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அதை நேரில் வழங்கி அவரது பாராட்டுகளைப் பெற்றார். தமது திரை வாழ்வில் வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்து இசைப் பயணத்தை தொடர்ந்து வரும் அவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், ரஷ்யன், அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 50,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடி ஈடு இணையற்ற சாதனையாளராக விளங்கி வருகிறார்.

சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் என்ற வகையில், ஏழு முறை தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார். மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். 1975 -ல் பத்மஸ்ரீ விருதும் 2002 -ல் பத்மபூஷண் விருதும் பெற்றிருக்கிறார். திரையிசையுடன்,கர்நாடக இசைக்கச்சேரிகள்பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.

இவ்வளவு சாதனைகளைப் படைத்திருந்தாலும் 1977 இல் வெளியான அந்தமான் காதலி படத்தில், அந்தமானைப் பாருங்கள் அழகு..., நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்... ஆகிய இரு பாடல்களையுமே யேசுதாஸும் வாணி ஜெயராமும் பாடியிருந்தனர். இவற்றில் இரண்டாவது பாடலான நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்.. திருக்கோயிலே ஓடிவா.. என்ற வரிகளைப் பாடும்போது, திருக்கோயிலை 'தெருக்கோயிலே' என உச்சரித்திருப்பார் யேசுதாஸ். இது பலத்த விமர்சனத்துக்குள்ளானது. பத்திரிகைகள் மட்டுமின்றி சில கவிஞர்களும் கூட இதனைக் கண்டித்தனர். ஆனால் யேசுதாஸ் இதற்கு எந்த பதிலும் அளித்ததில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக விமர்சிக்கப்பட்ட இந்த உச்சரிப்பை, தனது திரையுலகப் பயணத்தின் 50 வது ஆண்டில் திருத்திக் கொண்டார் யேசுதாஸ். சென்னையில் கடந்த 2015 ஜனவரியில் நடந்த இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பாடினார் யேசுதாஸ். அப்போது திருக்கோயிலே.. வரி வந்தபோது சட்டென்று நிறுத்திய அவர், "ரொம்பப் பேர், ரொம்ப வருஷமா இந்தப் பாட்டில் என்னுடைய உச்சரிப்பைக் குறை கூறி வந்தனர். இப்போதும் சிலர் சொல்கிறார்கள்.

அந்த உச்சரிப்பு தவறுதான் என ஒப்புக் கொள்கிறேன். காரணம் அப்போது நான் தமிழுக்குப் புதிது. அப்போதுதான் கற்க ஆரம்பித்தேன். அந்தப் பாடல் பாடும்போது இசையமைப்பாளர் எம்எஸ்வியோ, பாடலாசிரியர் கண்ணதாசனோ அங்கில்லை. வேறு வேலையில் இருந்தார்கள். உதவியாளர்கள் எல்லாம் சாப்பிடப் போயிருந்தார்கள். அதனால் என் உச்சரிப்பை யாரும் கவனிக்கவில்லை. அப்படியே ரெக்கார்ட் ஆகி வந்துவிட்டது. இப்போது, இந்த மேடையில் அந்தத் தவறை திருத்திக் கொள்கிறேன்,' என்று கூறி, திருக்கோயிலே ஓடி வா.. என சரியான உச்சரிப்புடன் பாடினார்.

செயற்கரிய பல சாதனைகளுக்குப் பிறகும், தான் செய்தது பிழை என்பதை உணர்ந்து பொதுமேடையில் அதை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தது, அவர் செய்த சாதனைகளிலேயே பெரிய சாதனை என்று பலராலும் பாராட்டுப் பெற்றார்.

vikatan

  • தொடங்கியவர்

இயற்கையின் காதலன்...புலிகளின் காவலன்...நாம் நன்றி சொல்ல வேண்டிய பீட்டர் ஜாக்சன்!

இந்திய புலி indian tiger

மது நாட்டின் தேசிய விலங்கான புலிகளைப் பாதுகாக்க இந்தியாவில் வசிக்கின்ற நாம், எந்த அளவிற்கு  விழிப்புணர்வோடும் ஆர்வத்தோடும் இருக்கின்றோம் என நம்மை நாமே வினவினால், மிஞ்சும் பதில் மௌனமே! நமக்கு  இல்லாத இந்த அக்கறை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத வெளிநாட்டினர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா..? இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, இந்தியாவிலேயே களப்பணி ஆற்றிய சிறப்பு மிக்கவர் பன்னாட்டு பத்திரிகையாளர் பீட்டர் ஜாக்சன். இவரை ஏன் நாம் தற்போது நினைவு கூற வேண்டும் தெரியுமா? விடை கட்டுரையின் கடைசி வரிகளில்...

இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ஜாக்சன் தனது 5௦-வது வயதில் இந்தியா வந்தார். இவர் ஒரு பத்திரிகையாளர் மட்டுமல்ல. இயற்கை ஆராய்ச்சியாளர், இயற்கை பாதுகாப்பாளர், புலிகளின் பாதுகாவலர் எனப் பன்முகம் கொண்டவர்தான் பீட்டர் ஜாக்சன். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஜாக்சன் இயற்கை சார்ந்த பல்வேறு கழகங்களையும், சங்கங்களையும் நிறுவியும் அதில் பல்வேறு ஆர்வலர்களை தன்னுடன் இணைத்தும் உள்ளார். குறிப்பாக டெல்லி பறவைகள் கண்காணிப்பு கழகத்தின் செயலாளர் ஆனார். அது மட்டுமல்லாது இவர் இந்திரா காந்தியின் நெருங்கிய நண்பர். இவரோடு இணைந்து இந்திராகாந்தியும் இயற்கை பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தார்.மேலும் ஜாக்சன் நிறுவிய தேசிய இயற்கை பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

பீட்டர் ஜாக்சன்

பின்னர் சுவிட்சர்லாந்தின் WWF(World Widelife Fund) இயக்கத்தில் சேர்ந்தார். இந்த இயக்கத்தின் நோக்கம் வன விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாப்பதாகும். அதன் பின் பத்து வருடங்களுக்குப் பிறகு இந்தியா வந்த இவர் போர்பந்தரில் செந்நாரை இனங்கள் அழிக்கப்பட்டு வருவதை அறிந்து அதனை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டார். இவருக்கு இயற்கையை தவிர்த்து பல்வேறு விஷயங்களிலும் நாட்டம் இருந்தது. குறிப்பாக பூனை சார்ந்த  விஷயங்களையும், பறவை சார்ந்த விஷயங்களையும் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பினார்.

செந்நாரைகளை பாதுகாப்பதற்காக இவர் செந்நாரை குத்தகைதாரர்கள் என்னும் இயக்கத்தை ஏற்படுத்தினார். இதன் மூலம் செந்நாரைகள் பாதுகாக்கப்படும் எனவும் நம்பினார். அதன் பின் உலக அளவில் IUCN என்கிற புலிகள் பாதுகாப்பு இயக்கத்தில் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள புலிகள் பாதுகாக்கப்பட உதவினார். இந்தியாவைப் போலவே மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் புலிகளின் எண்ணிகையை அதிகரிப்பதற்காக இவரை தூதராக அழைத்தனர். இந்தியாவில் புலிகளின் எண்ணிகையை அதிகரித்ததில் இவரின் பங்கு முக்கியமானது எனலாம். அதுமட்டுமின்றி ஹரியானா மற்றும் குஜராத்தில் இயற்கையை பாதுகாக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். இதுதவிர இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியும் சாதனை படைத்துள்ளார். தனது நண்பர்களின் துண்டுதலின் பேரில் இவர் சிகரத்தை கடந்துள்ளார். பந்த்ரா காடுகளில் அதிக அளவில் வசிக்கின்ற மலையன் புலிகளை பாதுகாக்க இவர் பெரும் முயற்சி மேற்கொண்டார்.மேலும் மலையன் புலிகளின் மேல் அதிக அளவில் காதல் கொண்டு இருந்தார். இவரது நினைவாக மலையன் புலிகளுக்கு "பீட்டர் ஜாக்சனி" என்று பெயர் சூட்டியுள்ளனர்.

பீட்டர் ஜாக்சனி

இவர் சலீம் அலி மற்றும் பீட்டர் ஸ்காட் விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த இரண்டு விருதுகளும் வன விலங்குகள் மற்றும் பறவைகளின் பாதுகாவலர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இவர் மட்டுமின்றி இவரது மனைவியும் இவரோடு இணைந்து இயற்கையை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அவருக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார்.

இத்தகைய புகழ்பெற்ற பீட்டர் ஜாக்சன் அவரது 90-வது வயதில், மிகுந்த நாள் படுக்கையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 8- ம் தேதி மரணமடைந்தார். இவர் இந்தப் பூவுலகை விட்டு மறைந்து ஒரு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. நமது நாட்டின் தேசிய விலங்கான புலிகளின் மீது அன்பும், அக்கறையும் செலுத்திய உன்னத மனிதர் பீட்டர் ஜாக்சன். அவரை நாம் நினைவு கூர்வதோடு, அவர் செய்த பணிகளையும், புலிகளைக் காப்பதற்கான நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். அதுவே அந்தப் புலிகளின் காதலனுக்கு நாம் செலுத்தும் சரியான நன்றியாக இருக்கும். 

vikatan

  • தொடங்கியவர்

பலூன் பொம்மைகளில் பலே வருமானம்!

பலூன்

திருமண விழாக்களில் கலந்துகொள்பவர்களுக்கு...தேங்காய்ப் பை, சில்வர் தட்டு என அவரவர் வசதிக்கு ஏற்ப தாம்பூலப்பை வழங்கப்படுவது நம்முடைய மரபு. கோவையில் பல இடங்களில் தாம்பூலப்பையோடு பலூன் ஸ்கல்ப்சரை இணைத்துத் தருகிறார்கள். அதற்கு பின்னால் இருப்பவர், நாகலட்சுமி. அதென்ன பலூன் ஸ்கல்ப்சர்? அவரிடமே பேசினோம்.

 

பலூன்

''சின்ன வயசுல எல்லாரையும் போலதான் எனக்கும் பலூன்னா அவ்ளோ புடிக்கும். பள்ளிப்படிப்பு முடிஞ்சதுமே கல்யாணம். என் ஆசைக்கு தீனி போடுற மாதிரி என் கணவர், 'நீ பலூன் ஸ்கல்ப்சர் செய்யலாமே'னு  ஐடியா கொடுத்தார். பலூனை வெச்சு குழந்தைங்க சந்தோஷமா விளையாடுங்கனு தெரியும். அதை வெச்சு எப்படி பிஸினஸ்னு குழம்பிட்டேன்.

என் கணவர் மெஜீஷியன், வெளிநாடுகள்ல இந்த கலை எப்படி பிரபலமாகிட்டு வருதுங்கிறதைச் சொல்லி புரியவெச்சார். என் கணவர்தான்  பலூன் ஸ்கல்ப்சர் கத்துக்கொடுத்தார். நானும் என்னோட கற்பனைத் திறனை வெச்சு இன்னும் கிரியேட்டிவா யோசிச்சேன். ஆரம்பத்துல, பக்கத்து வீட்டுக் குழந்தைகளோட பிறந்த நாளுக்கு, பலூன்ல  பொம்மைகள் செய்து  கொடுத்து சந்தோஷப்படுத்தினேன். அதைப் பார்த்த மத்த குழந்தைங்களும் 'நமக்குப் பிறந்தநாள் வரும்போது அக்காவுக்கு சாக்லேட் கொடுத்தா, பலூன் பொம்மை செஞ்சு தருவாங்க'னு நினைக்கிற அளவுக்கு அவங்க  மனசுல இடம்பிடிச்சேன்.

அடுத்து, தெரிஞ்சவங்களோட திருமண விழாக்களுக்கு வர்ற குழந்தைகளுக்கு பலூன் பொம்மைகள் செஞ்சு கொடுத்தேன். அது பலரையும் ஈர்க்க, பெரியவங்க அவங்க வீட்டு கல்யாணம், வீட்டு விசேஷத்துக்கு என்னை கூப்பிட ஆரம்பிச்சாங்க. நாளாக நாளாக ஒரு விழாவுக்கு பலூன் பொம்மைகள் செய்ய இவ்வளவு தொகைனு நிர்ணயம் பண்ணினேன். அதன் மூலமா வர்ற வருமானம் சந்தோஷத்தைக் கொடுக்கிறதோட என் கற்பனைத் திறன் வளர இடம் கொடுக்குது.

பலூன்

நல்லா  படிச்ச, திறமையுள்ள பெண்கள்கூட  கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்கு போறதை நிறுத்திடுறாங்க. ஆனா என் கணவர், திருமணத்துக்குப் பிறகு எனக்குள்ள இருந்த கிரியேட்டிவிட்டியைத்  தூண்டினார். என்னோட படிப்பை கல்லூரி அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கார். ஆமா, பி.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். இப்போ, பலூன் ஸ்கல்ப்சருக்கு வரவேற்பு கூடியிருக்கு. படிப்பு, பகுதி வருமானம்னு வாழ்க்கை சந்தோஷமா போகுது" என்கிறார் நாகலட்சுமி, பலூனில் பொம்மைகள் செய்தபடி.

  • தொடங்கியவர்

சிகப்பு பாண்டாக்குட்டிகளின் பனிச்சருக்கு விளையாட்டு!

முதன்முதலில் உறைபனியைப் பார்க்கும் மூன்று மாத சிகப்பு பாண்டாக்குட்டிகளின் உற்சாக விளையாட்டு.....

  • தொடங்கியவர்
காற்சட்டை அணியாமல் ரயிலில் பயணம்
 

பல நாடுகளில் நேற்று முன்தினம் ரயில் பயணிகள் பலர் காற்சட்டை அணியாமல் பயணம் செய்தனர்.

 

1762017-01-08T124309Z_726505159_RC1B89BD

 

1762017-01-08T142406Z_186239364_RC16201A

 

1762017-01-08T142432Z_847007184_RC1E84C8

 

வருடாந்தம் ஜனவரி மாதத்தில் ஒருநாள் "காற்சட்டை அணியாமல் ரயிலில் பயணம் செய்யும் தினம்"அனுஷ்டிக்கப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு நியூயோர்க் கில் இந் நடவடிக்கை ஆரம்பமாகியது.

 

1764096.jpg

 

176752727-01-02.jpg

 

176752763-01-02.jpg

 

அமெரிக்கா, பிரிட்டன், போலந்து முதலான நாடுகளில் நேற்று முன்தினம்  கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பலர் காற்சட்டை அணியாமல் ரயிலில் பயணம் செய்தனர்.

 

176752905-01-02.jpg

 

176752999-01-02.jpg

 

176753002-01-02.jpg

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen

ஜனவரி 10: நடிப்பால் மிரட்டிய ஆர். எஸ். மனோகர் நினைவு தினம் இன்று

 
  • தொடங்கியவர்

உலகின் பழமையான மரத்தை வீழ்த்திய புயல்.!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் உலகின் பழமையான மரம் இன்று புயலின் காரணமாக முறிந்து விழுந்தது.`சுரங்க மரம்' என்று அழைக்கப்படும் அந்த மரத்திற்கு வயது ஆயிரத்திற்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. பலநூறு ஆண்டுகளாக கலிபோர்னியாவின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்கிய அந்த மரம், இன்று வீசிய பலமான புயலால் அடியோடு விழுந்தது.

உலகின் பழமையான மரத்தை வீழ்த்திய புயல்.!

இந்த பிரமாண்ட மரமானது 100அடி உயரமும் 22 அடி அகலும் கொண்டது. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மின்னல் கதிர்களைக்கொண்டு இந்த மரத்தில் துளையிடப்பட்டு சுற்றுலாவாசிகளின் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. கலிபோர்னியாவின் பல்வேறு பகுதிகளைக் குலைத்துபோட்ட அந்தப்புயலுக்கு 'பைன் ஆப்பிள் எக்ஸ்பிரஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

vikatan.

  • தொடங்கியவர்

இறந்தவர்களின் எலும்பில் சூப் வைத்து குடிக்கும் யானோமமி இனத்தவர்கள்


இறந்தவர்களின் எலும்பில் சூப் வைத்து குடிக்கும் யானோமமி இனத்தவர்கள்
 

இறந்தவர்களுக்காக வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமான சடங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும் யானோமமி இன மக்கள் இறந்தவர்களின் சடலத்தை சூப் வைத்து குடிக்கின்றனர்.

யாரேனும் இறந்துவிட்டால் அவர்களைப் புதைப்பது அல்லது எரிப்பது ஆகிய இரண்டு முறைகள் தான் உலகளவில் அதிகமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

அப்படி, எரிக்கப்பட்ட உடலில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை இந்து மதத்தினர் ஆன்மீக அடிப்படையில் சில சடங்குகள் செய்து கடலில் கரைத்துவிடுவார்கள்.

ஆனால், பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும் யானோமமி இன மக்களின் சடங்கு முறைகள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இவர்கள் தங்களது இன மக்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடலை எரித்து, சாம்பல் மற்றும் எலும்பினை எடுத்து காய்கறிகள் போட்டு சூப் வைத்து குடிக்கிறார்கள்.

மேலும், தங்களுடைய இனத்தையே சாப்பிடுவதை பாரம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள்.

மரணம் என்ற ஒன்று நிகழக்கூடாது, அப்படி நிகழ்ந்தாலும் அவர்கள் தம்முடன் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என யானோமமி இனத்தவர்கள் நம்புகின்றனர்.

இறந்தவர்களின் சாம்பல் மற்றும் எலும்பில் சூப் வைத்துக் குடிப்பதால் அவர்கள் தம்முடனேயே வாழ்கிறார்கள் என்பது இம்மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

பெண்கள் பார்க்க வேண்டிய கொரியன் சினிமாக்கள்!

 

சினிமாவைப் பொறுத்தவரை ஆண்கள் வைத்ததுதான் சட்டம். அது ஹாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி. பல தடைகளைத் தாண்டித்தான் பெண்களை முன்னிறுத்தும் சினிமாக்கள் உலகமெங்கிலும் வெளியாகின்றன. அப்படிப் பெண்களை மையமாக வைத்து கொரிய மொழியில் வெளியாகி உலகம் முழுக்க சூப்பர் ஹிட்டடித்த படங்களின் லிஸ்ட் இது...

62p1.jpg

Bedevilled :

கொரிய இயக்குநர் கிம் கி டுக்குக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் பட்டறையில் இருந்து வெளிவந்த ஜாங் செல் சோ இயக்கிய படம் இது. பரபரப்பான சியோல் நகரத்தில் மூச்சு முட்டும் சூழலில் வாழ்கிறாள் ஹே ஓன். ஸ்ட்ரெஸ் அதிகமாக, ஓய்வு வேண்டி, தான் சிறுவயதில் வளர்ந்த தீவில் இருக்கும் ஊருக்குச் செல்கிறாள். அங்கே அவளின் பால்யகால நண்பியைச் சந்திக்கிறாள். அந்த நண்பிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் கதையும் அதன் விளைவுகளுமே படம். 2010-ல் வெளியான இந்த த்ரில்லர் படம் கலெக்‌ஷனில் ரெக்கார்ட்களை  எத்தித் தள்ளியது. கூரையைப் பிய்க்கும் அளவுக்கு கலெக்‌ஷன்.

62p2.jpg

The Housemaid :

பிளாக் அண்ட் ஒயிட் காலத்து பிளாக்பஸ்டர். 1960-ல் வெளியான லேண்ட்மார்க் சினிமா. மனைவி, இரு குழந்தைகள் என அழகான குடும்பம் டோங் சிக் கிம்முக்கு. கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு உதவி செய்ய ஒரு வேலைக்காரியைப் பணிக்கு அமர்த்துகிறான் டோங். அது மொத்தக் குடும்பத்துக்கும் வினையாகிறது. தொடர் உயிர்பலிகள், திருப்பங்கள் என திக்திக் திரைக்கதையை அமைத்திருந்தார் இயக்குநர் கிம் கி யங். ஆல்டைம் சிறந்த கொரியப் படம் இது என சண்டை போடாமல் ஒத்துக்கொள்கிறார்கள் விமர்சகர்கள்.

62p3.jpg

Mother :

வயதான விதவைத் தாய் ஒருவரால் என்ன செய்ய முடியும்? என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் எனப் பொட்டில் அடித்து உணர்த்தியது இந்தப் படம். அமைதியான சிறு நகரம் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்படுகிறாள் ஓர் இளம்பெண். சாட்சி சூழ்நிலைகளை வைத்து டோ ஜூன் என்ற இளைஞன் தான் கொலைகாரன் என முடிவுக்கு வருகிறார்கள். தன் மகனை நிரபராதி என நிரூபிக்க சோலோவாக்ப் போராடு கிறார் டோ ஜூனின் அம்மா! க்ளை மாக்ஸ் என்ன என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!

62p5.jpg

Han Gong-ju :

தென்கொரிய மக்கள் மறக்க நினைக்கும் மிர்யாங் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். 41 பள்ளி மாணவர்கள் சேர்ந்து ஏறக்குறைய 11 மாத காலம் உடன் படித்த ஏராளமான பள்ளி மாணவிகளைத் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய பகீர் சம்பவம்தான் அந்த மிர்யாங் பயங்கரம். அந்தப் பயங்கரத்தால் பாதிக்கப்பட்ட கோங் ஜூ அதிலிருந்து மீள வேறு ஊருக்குச் செல்கிறாள். அங்கும் சிக்கல்கள் சுழன்று அடிக்க, எப்படித் தப்பிக்கிறாள் என்பதுதான் கதை. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இதன் வசூல் இருந்தது என ஒப்புக்கொள்கிறார்கள் விமர்சகர்கள்.

62p4.jpg

Lady Vengeance :

கொரியாவில் கொண்டாடப் படும் இயக்குநரான பார்க் சான் வூக்கின் தெறி ஹிட் படம். Sympathy for Mr. Vengeance, Oldboy ஆகிய பட வரிசையில் வெளியான மூன்றாவது பாகம். செய்யாத கொலைக்காக தண்டனை அனுபவித்த லீ க்யூம் ஜா என்ற பெண், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்துப் பழிவாங்க முடிவு செய்கிறாள். அதன் நீட்சிதான் மிச்சக்கதை. ரிலீஸுக்கு முன்பே பல திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்ததும். மூன்று பாகங்களில் கலெக்‌ஷனை அள்ளி அள்ளிக் கொட்டிய படம் இதுதான்.

62p6.jpg

Harmony :

முழுக்க முழுக்க ஸ்க்ரீனில் பெண்கள் மட்டுமே தெரியும் படம் இது. தன்னை வாட்டி வதைக்கும் கணவனைக் கொன்றுவிடுகிறாள் ஹோங் ஜியோங் ஹை. கர்ப்பமாய் இருக்கும் ஹோங்கை பத்தாண்டுகள் சிறையில் அடைக்கிறார்கள். அங்கேயே அவளுக்குக் குழந்தை பிறக்கிறது. விதிகளின்படி அது தத்துக் கொடுக்கப்படுகிறது. சிறையில் பிற கைதிகளுடன் சேர்ந்து ஓர் இசைக்குழு தொடங்க முயல்கிறாள் ஹோங். அதில் வென்றால் அவள் குழந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். முடிவைப் படம் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க மக்களே!

62p7.jpg

The Handmaiden :

இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் சினிமா. எரோடிக் த்ரில்லர் என்பதால் வயது வந்தவர்களுக்கு மட்டும். ‘ஃபிங்கர்ஸ்மித்’ என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். பல கோடி ரூபாய் சொத்துக்கு ஒரே வாரிசான ஹிடோகோவை ஏமாற்றித் திருமணம் செய்ய முடிவெடுக்கிறான் ஒருவன். அதற்காக ஒரு பணிப்பெண்ணை அவளிடம் வேலைக்கு அனுப்புகிறான். அதன்பின் நடக்கும் திடீர் சடீர் திருப்பங்கள்தான் கதை. விமர்சகர்களும் ரசிகர்களும் படத்தைக் கொண்டாடித் தள்ளினார்கள்.

vikatan

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்

ரமணிசந்திரன் நாவல் போல ரொமாண்டிக்காக அசத்தும் பூடான் மன்னரின் காதல் கதை!

 

 
King_and_Queen_of_Bhutan

 

பூடான் அரசர் ஜிக்மே கேசர் காதலி   ஜெட்சனை  மணந்தது  2010-ஆம் ஆண்டு என்றாலும்,  இருவருக்கும்   ஆண் குழந்தை  பிறந்தது   சென்ற ஆண்டுதான். ஜிக்மே கேசர் -  ஜெட்சன்  காதல் உலகப் பிரசித்தி பெற்றது.  சுவாரஸ்யமானது. நீண்ட காலம்  நீண்டிருந்த காதல்  இன்றைக்கும் தொடர்கிறது.

பூடான் ராணியான  ஜெட்சன்  நல்ல அழகு.  உலகில் பல நாடுகளில் இருக்கும் ராணிகளில்  வயதில்  சின்னவர்.  ஜெட்சன்  அரச குடும்பத்தினைச் சேர்ந்தவரல்ல.  சாதாரண  குடும்பத்தில்  பிறந்தவர். இவர் பூடான் ராணியாவதற்கு காரணம்   தீராக் காதல் தான்.

ஜெட்சனின் தந்தை விமான  பைலட்.  அம்மா  இல்லத்தரசி. இருவரும் பழைமை விரும்பிகள்.   ஜெட்சனின் தந்தை  மகளை இந்தியாவில் படிக்க வைத்தார். பூடானைவிட,  இந்தியாவில் கல்வித் தரம் உயர்வாக இருப்பதுதான் காரணம். இந்தியாவில் பள்ளிப் படிப்பைப் படித்த ஜெட்சனுக்கு விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்தது.

பள்ளியில்  கூடைப்பந்து விளையாட்டின் அணித்தலைவராக இருந்தார். இதுதவிர ஓவியம் வரைவது, பள்ளிகளில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதிலும்  ஜெட்சன் அதிக ஆர்வம்  காட்டி வந்தார். பள்ளியில் நடக்கும் கலைப் போட்டிகளில்  பரிசுகள்  பெற்று வந்த   ஜெட்சன்   ஆங்கிலம்,  இந்தி  மொழிகளில் சரளமாகப் பேசும் திறமையை வளர்த்துக் கொண்டார். 

இந்தியாவில்  பள்ளிப் படிப்பு   முடிந்த பிறகு  கல்லூரியில் சேர இங்கிலாந்து போனார். அங்கு  பன்னாட்டு உறவுகள்   குறித்து  படிக்க ஆரம்பித்தார்.  ஆனால், படிப்பைத்   தொடர முடியாமல் போனது. திருமணம் படிப்பிற்குத் தடையாக நின்றது.  

அப்போது ஜெட்சனுக்கு  வயது 21.  ஜெட்சனைத்  திருமணம்  செய்து கொள்ளப் போகிறவர் பூடான் மன்னர்   என்ற  செய்தியைக் கேட்ட பூடான்  மக்கள்  ஆச்சரியம்  அடைந்தார்கள்.  இந்த ஆச்சரியம் ஜெட்சன்   படித்த  கல்லூரியிலும்  எதிரொலித்தது.   

"ஒரு நாட்டின் மன்னர்  சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த  பெண்ணைத்   திருமணம்  செய்து கொள்ளப் போகிறாரே'' என்று   தங்களுக்குள்  பேசிக் கொண்டார்கள்.  

மன்னர், ஜெட்சனிடம் மயங்கிய  காதல் கதை  அப்போது யாருக்கும் தெரியாது.

பூடான் மன்னர் கேசர் தனது குடும்பத்தினருடன் பூடானின்  தலைநகரான   திம்புவில்    சுற்றுலா  சென்றிருந்த போது  தற்செயலாக   ஜெட்சனை சந்தித்துள்ளார். 

அப்போது  கேசருக்கு  வயது 17, ஜெட்சனுக்கு வயது ஏழு. பார்க்க லட்சணமாக இருந்த  ஜெட்சனிடம்  கேசர்  சும்மா பேசியிருக்கிறார்.  ஜெட்சனும்   எந்த தயக்கமும் இல்லாமல்   பேச,  கேசருக்கு   ஜெட்சனை மிகவும் பிடித்துப் போனது. 

ஜெட்சனின் சாதுர்யமான   பேச்சிலும்,  அசாதாரண  அழகிலும் மயங்கிய கேசர், ஜெட்சன்  சிறுமி என்பதை  மறந்து, " நீ தான் எனக்கு  மனைவியாக வரவேண்டும்..  நீ  வளர்ந்து பெரிய பெண்ணாக  ஆனதும்   உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் அதுவரை உனக்காகக் காத்திருப்பேன்''. என்று  மனம் நெகிழ  கேசர்  சொல்ல..  எல்லாம்  புரிந்தது மாதிரி   ஜெட்சன்  தலையை  ஆட்டி வைத்தார்.  

பள்ளிப் படிப்பை முடித்த  ஜெட்சன்,  இங்கிலாந்தில்  கல்லூரிப் படிப்பை தொடரும் போது  கேசரின்  காதலைப்   ஒரு புரிதலுடன்   ஏற்றுக் கொண்டு பரஸ்பரம் காதலிக்கத் தொடங்கினார்.  

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்   இவர்களது காதல் கதையின்  குட்டு உடைப்பட்டது.  பூடானின்  மிக  முக்கியச்  செய்தியாக  மாறியது. 
திருமணம்  படு கோலாகலமாக நடந்தது. பூடான் குடிமக்களை தனது திருமணத்திற்கு  அழைத்திருந்தார் அரசர்.  திருமணம்  நடந்த போது  கேசருக்கு வயது  31.. 

திருமணத்திற்குப்  பிறகு  பொது நிகழ்ச்சிகளில்  ஜெட்சனைப்  புகழ்ந்து   கேசர் பேசியதும்,  ஜெட்சனின்  கரங்களைப் பற்றியவாறு  பொது மக்களுக்கு காட்சி தந்ததும்,  பூடானில்  பரபரப்பாக  பேசப்பட்ட விஷயங்கள். 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

பொய்மையாளர் அபத்தமாக உரை புனைவார்
 
 

article_1484106373-kathali.jpgமனிதர்களின் மனோபாவம் சில சமயங்களில் வேடிக்கையாக மாறுதலடையும். எவருடனாவது தர்க்கம் செய்யும்போது, தவறுதலாக ஒரு கருத்தைச் சொல்லுவார்கள். அது தவறுதான் எனத் தெரிந்தும்கூட, சொன்ன தவறான கருத்தைத் தெரிந்தும் அதனை விட்டுக் கொடுக்காமல் அதுவே சரி என வாதிடுவார்கள். 

இதனைச் செவிமடுப்போருக்கு எரிச்சலும் கோபமும் வந்தால் ஆச்சரியமில்லை. உண்மையை ஒப்புக்கொள்ள மறுப்பதால் அவர் பொய்மையை விரும்புகின்றவர் ஆகின்றார். மேலும் நம்பிக்கையற்றவர், நாணயமற்றவர் எனும் கருத்தைப் பிறருக்குள் ஏற்படுத்தி விடுகின்றார். 

பேசுவதெல்லாம் வெறும் பேச்சாய் அமையக்கூடாது. எப்பொழுதும் வாயினால் சொல்லும் வாக்கு உள்மனதோடும் சம்பந்தப்பட்ட விடயம் ஆகும். நெரிய நெஞ்சில் இருந்து உதிர்க்கப்படுபவை சுத்தமானது. பொய்மையாளர் அபத்தமாக உரை புனைவார்.  

நல்லதைப் பேசினால் நல்லதே நடக்கும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

டிசம்பர் - 11

 

1055 : கிழக்கு ரோமானிய இராஜ்­­ய­மான பைசண்டைன் பேர­ர­சி­யாக தியோ­டோரா  முடி சூடினார்.

 

1569 : இங்­கி­லாந்தில் முத­லா­வது லொத்தர் சீட்­டி­ழுப்பு பதி­வா­கி­யது.

 

1693 : சிசி­லியில் எட்னா எரி­மலை வெடித்­த­தை­ய­டுத்து இடம்­பெற்ற பாரிய பூகம்பம், சிசிலி மற்றும் மோல்ட்­டாவின் பல பகு­தி­களை அழித்­தது.

 

882varalru-bangaladesh.jpg1779 : மணிப்­பூரின் மன்­ன­ராக சிங்-தாங் கோம்பா முடி­சூ­டினார்.

 

1782 : பிரித்­தா­னியர் சேர் எட்வேர்ட் ஹியூஸ் மற்றும் சேர் ஹெக்டர் மன்ரோ தலை­மையில் திரு­கோ­ண­ம­லையைக் கைப்­பற்­றினர்.

 

1787 : யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்­கோள்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

 

1851 : சீனாவில் குயிங் அர­சிற்­கெ­தி­ராக ஹொங் க்சியூகான் என்­பவர் தலை­மையில் தாய்பிங் என்ற இரா­ணுவக்குழு ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1861 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: அல­பாமா ஐக்­கிய அமெ­ரிக்­காவில் இருந்து வில­கி­யது.

 

1878 : முதற்­த­ட­வை­யாக போத்­தலில் அடைத்து பால் விற்­கப்­பட்­டது.

 

1922 : நீரி­ழி­வுக்கு மருந்­தாக மனி­தரில் இன்­சுலின் முத ன்­மு­தலில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1942 : இரண்டாம் உலகப் போரில் நெதர்­லாந்­துக்கு எதி­ராக ஜப்பான் போர் பிர­க­டனம் செய்­தது. 

 

1942 : இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலா­லம்­பூரைக் கைப்­பற்­றி­யது.

 

1943 : ஐக்­கிய அமெ­ரிக்­காவும் ஐக்­கிய இராச்­சி­யமும் சீனாவின் மீதான நில உரி­மையை இழந்­தன.

 

1946 : என்வர் ஹோக்ஸா அல்­பே­னி­யாவின் சர்­வா­தி­கா­ரி­யாகத் தன்னை அறி­வித்து அதனைக் குடி­ய­ர­சாக்­கினார்.

 

1962 : பெருவில் இடம்­பெற்ற சூறா­வளி கார­ண­மாக 4,000 பேருக்கு மேல் இறந்­தனர்.

 

1972 : கிழக்கு பாகிஸ்தான் பங்­க­ளாதேஷ் எனப் பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது.

 

1998 : அல்­ஜீ­ரி­யாவில் நூற்­றுக்கும் மேற்­பட்ட மக்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

2007 : செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவு­கணைச் சோத­னையை சீனா நடத்தியது.

 

2013 : இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
டொனால்ட் ட்ரம்ப் சாயலில் பிரமாண்ட சேவல் பொம்மைகள் சீனாவில் தயாரிப்பு
 

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள டொனால்ட் ட்ரம்பின் சாயல் கொண்ட பிர­மாண்ட சேவல் பொம்­மைகள் சீனாவில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றின் உயரம் 5 மீற்­றர்கள் (16 அடிகள்)  ஆகும்.

 

21737758057-01-02.jpg

 

ஸேஜியாங் மாநி­லத்தின் ஜியாஸிங் நக­ரி­லுள்ள தொழிற்­சா­லை­யொன்றில் இந்த பொம்­மைகள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன.  இந்த சேவல்­களின் தலை டொனால்ட் ட்ரம்ப்பின் சிகை­ய­லங்­காரப் பாணியில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. 

 

21737758060-01-02.jpg

 

அத்­துடன் டொனால்ட் ட்ரம்ப்பின் கையைப் போன்று சேவலின் இறக்­கைகள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன. 

 

ஏதிர்­வரும் 28 ஆம் திகதி சீன புத்­தாண்டு பிறப்பு ஊர்­வ­லங்­ களில் இந்த பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட வுள்ளன.

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முணுமுணுக்கும் பாடலின் முதல் வார்த்தை அந்த தினத்தையே புதிதாக்குமே!

பாடலின்

காலையில் அவசர அவசரமாக சமையல் செய்யும்போதும் வேலைக்கு புறப்படும்போதும் ஷேர் ஆட்டோவில் முண்டியடித்து ஏறும்போதும்கூட ஏதாவது ஒரு பாடலை உதடுகளில் முணுமுணுத்துக்கொண்டே இருப்போம். நான்கைந்து முறை பாடிய பிறகே யோசிப்போம், இந்த பாடல், ஏன் இப்படிப்  திரும்பத்  திரும்ப பாட வைத்தது என்று. வீட்டில் யாராவது பாடியிருப்பார்கள் அல்லது  தூரத்தில் அந்தப் பாடல் ஒலித்திருக்கலாம். எப்படி இருந்தாலும் அந்தப் பாடல், மிகவும் பிடித்தப் பாடலாக இருப்பதால்தான் உங்கள் உதடுகளில் இடம் பிடித்திருக்கும். அந்தப் பாடலை நாள்முழுவதும் பாடாமல் இருக்க முடியாது. அப்படியான அந்த  பாடலின் முதல் வார்த்தையை வைத்தே அந்தத் தினத்தை இன்னும் சிறப்பாக்கலாமா?

 

 

உதாரணத்துக்கு 'புத்தம் புது காலை; பொன்நிற வேளை...' என்ற பாடல் என வைத்துக்கொள்வோம். இதன் முதல் வார்த்தை 'புத்தம்'. அதனால் அலுவலகம் செல்லும்போது புதிய பொருள் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்து, இதுவரை திறந்துகூட பார்த்திராத புத்தகம் ஒன்றை பயணத்தின்போது படிக்க எடுத்துச் செல்லுங்கள். புத்தகம் இல்லையெனில் இதுவரை அணியாது வைத்திருக்கும் காதணி போன்ற ஏதேனும் ஓர் ஆபரணத்தை அணிந்துகொள்ளுங்கள். மேலுறை பிரிக்காத ஸ்டிக்கர் பொட்டு என்றாலும் கூட ஓகே.

‘புத்தம்’ என்ற சொல்லின் முதல் எழுத்து பு - அந்த எழுத்தின் வரிசையில் 'ப' வரும். அதனால் பச்சை நிற உடை உடுத்திக்கொள்ளுங்கள். பச்சை உங்களுக்குப் பிடிக்காத நிறம் எனில் நீங்கள் எடுத்துச் செல்லும் பொருட்களில் ஏதேனும் ஒன்றை பச்சை நிறத்தில் அமைத்துக்கொள்ளுங்கள்.

புதிய பொருள் ஒன்று வாங்க திட்டமிடுங்கள். பெரிய செலவுகள் வைக்கும் பொருட்கள் என்று இல்லை. அழகான கர்சீப் வாங்கினால்கூட போதும். அதேபோல குழந்தைக்கும், கணவருக்கும் இதுவரை அவர்களிடம் இல்லாத புத்தம் புது பொருளைப் பரிசளியுங்கள். என்ன இது தீடீரென்று? என அவர்கள் கேட்டால் இந்தப் பாடலைப் பாடிக்காட்டுங்கள்.

புத்தம் சொல்லின் முதல் எழுத்து பு - ஆங்கிலத்தில் p. உங்களின் செல்போனில் அந்த எழுத்தில் உள்ள, அதிக நாட்கள் பேசாத தோழிக்கு போன் செய்து பேசுங்கள். p வரிசையில் யாருமில்லை எனில் புத்தம் என்பதை New என மொழிபெயர்த்து N வரிசையில் உள்ள தோழிகளிடம் பேசுங்கள்.

உங்கள் அலுவலகத்தில் பலரோடு பழகாமல் இருந்திருப்பீர்கள். இன்றைக்கு இந்தப் பாடலைக் கொண்டாடும் விதமாய் புத்தம் புதியதாய் யாரோடாவது நீங்களே சென்று நண்பராகுங்கள். உங்கள் உணவைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

புதிய ஆசை ஒன்றை உருவாக்கி, அதை நிறைவேற்றிக்கொள்ளுங்கள். படிக்கும்போது வேடிக்கையாக இருக்கலாம். வீட்டில் கணவர் அல்லது பிள்ளையின் டூ வீலர் இருக்கும். அதை ஓட்டிப் பார்க்கும்  எண்ணம் வந்தே இருக்காது. இன்று அந்த ஆசையை உருவாக்கி, கணவரிடம் சொல்லி கற்றுக்கொடுக்கச் சொல்லி சிறிது தூரம் ஓட்டிப் பாருங்கள்.

வழக்கமாக மல்லிகை பூக்களைச் சூடிக்கொள்பவர் எனில், வேறு புது வகை பூக்களைத் தேர்ந்தெடுங்கள்... இப்படி இன்னும் இன்னும்....

ஒரு பாட்டு தவறுதலாக பாடியதால் இவ்வளவும் செய்ய வேண்டுமா என யோசிக்க வேண்டாம். அந்தப் பாடல் உங்களுக்கு மிகப் பிடித்தது. அதைக் கொண்டாடுகிறீர்கள். உண்மையில் உங்களின் வழக்கமான ஒரு நாளை மாற்றி, புதிய பொருட்கள், புதிய வழி, புதிய ஆசை என அந்தத் தினத்தையே கொண்டாடுகிறீர்கள். நமது வழக்கமான நடவடிக்கைகளைக் கொஞ்சம் மாற்றுவதன் மூலம் அதிக உற்சாகத்தைத் தரும் எனில் முயற்சித்துத்தான் பாருங்களேன்.

vikatan

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 4 Personen, Personen, die stehen und Text

ஜெமினியில் அறிமுகமாகி கவர்ச்சியால் கலக்கிய நடிகை கிரணின் பிறந்தநாள்

 
  • தொடங்கியவர்

ஸ்டம்ப்பை தொடணும்னா என்னை தாண்டிதான் போகணும் - ஹேப்பி பர்த்டே ராகுல் டிராவிட் !

லகின் தலைசிறந்த கிளாஸிக் கிரிக்கெட்டர்களில் மிகமிக முக்கியமானவர் ராகுல் டிராவிட். கிரிக்கெட்டில் டிராவிட்டை விட அணிக்கு மிகச்சிறந்த தற்காப்பு வீரர் யார் என சல்லடை போட்டுத் தேடினாலும், இன்னமும் யாரும் அகப்படவில்லை. அயல்நாடுகளில் இந்திய அணிக்கு அடிவாங்குவதுதான் பழக்கமாகவும், அதுவே வழக்கமாகவும் இருந்தது. அப்போது எதிர்த்து திருப்பியடித்து இந்தியாவை தலைநிமிரச் செய்தவர் டெண்டுல்கர். இன்னொரு பக்கம் எதிரணியின் அடிகளை வாங்கி, அவர்களை சோர்வடையச் செய்து,  அந்நிய மண்ணில் இந்திய அணி தலைகுனிவைச் சந்திக்காமல் காப்பாற்றிய பெருமை டிராவிட்டுக்கே உண்டு. ஏனோ எதிர்த்து அடித்தவருக்கு கிடைத்த மரியாதை, பல போட்டிகளில் இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றிய மகத்தான வீரனுக்கு உரியநேரத்தில் கிடைக்கவில்லை.

ராகுல் டிராவிட்

டிராவிட் எனச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது, எவ்வளவு அடிவாங்கினாலும் எதிர்த்து நில், தலைகுனியாதே என்பதுதான். அதிவேகப் பந்துவீச்சோ, மிதவேகப் பந்துவீச்சோ,  ஆஃப் ஸ்பின்னோ, லெக் ஸ்பின்னோ, பவுன்சரோ, அபாரமான ஸ்விங்கோ எதுவும் இந்தச் சுவரை தகர்க்கவே முடியாது, 'என்னைத் தாண்டி தொடுறா பாக்கலாம்' என உறுதியாக நின்றவர் டிராவிட். இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பது உலகின் அத்தனை கிரிக்கெட்டர்களுக்கம் இருக்கும் மிகப்பெரிய கனவில் ஒன்று. இங்கிலாந்து மண்ணில் பந்து தாறுமாறாக ஸ்விங் ஆகும். பேட்டிங்கிற்கு அத்தனை சிறப்பானதாக இல்லாத களத்தில் தாக்குப்பிடிப்பதற்கும், ரன் சேர்ப்பதற்கும் மிகப்பெரிய மனவலிமை அவசியம். அப்படிப்பட்ட மண்ணில்தான் ட்ராவிட்டின் டெஸ்ட் அத்தியாயம் தொடங்கியது.

ஐந்து வருடங்களாக கர்நாடக அணி சார்பில் ரஞ்சி போட்டிகளில் ஆடிய அனுபவமிருந்தும், சர்வதேசப் போட்டிகளில் ட்ராவிட்டால் சரியான தொடக்கத்தைத் தர முடியவில்லை. 1996-ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்திய அணிகள் சிங்கப்பூரில் மோதிய முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில், வினோத் காம்ப்ளிக்குப் பதிலாக ட்ராவிட் களமிறங்கினார். இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக மோதிய இரண்டு போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தார் ட்ராவிட். கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில்தான் ட்ராவிட் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார்.

சீனியர் வீரர்களுக்குக் கல்தா கொடுப்பதும், புதிய வீரருக்கு வாய்ப்பு தரப்படுவதும் குதிரைக்கொம்பாக இருந்த காலகட்டம் அது. அதே போட்டியில் இந்திய அணி சார்பாக இரு இளம் வீரர்கள் அறிமுகம் ஆகினர். ஒருவர் செளரவ் கங்குலி, மற்றொருவர் ராகுல் ட்ராவிட்.  சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக களமிறங்கிய ட்ராவிட் 95 ரன்களில் களத்தில் நின்றார். தனது அறிமுகப் போட்டியிலேயே டெஸ்ட் சதமடித்த வீரர் என்ற பெருமையைப் பெற ட்ராவிட்டிற்கு, இன்னும் ஐந்து ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கிறிஸ் லூயிஸ் வீசிய பந்து, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ரஸ்செல் கைக்குச் சென்றது. அம்பயர் அவுட் தராதபோதும், களத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினார் ஜென்டில்மேன் ட்ராவிட்.

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம். இதற்கு ரசிகர்களை விட வெறியர்களே அதிகம். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதினாலோ, அரை இறுதியில் இந்திய அணி ஆடுகிறது என்றாலோ மவுன்ட் ரோடு வெறிச்சோடும். டார்கெட்டை முடிக்க வேண்டிய அலுவலகத்தில் கிரிக்கெட் மேட்ச் ஓடும். மொபைல்களில் ஸ்கோர் காட்டும் தளங்களை விரல்கள் மேயும். நூறு கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் இருந்து, 11 பேர் மட்டுமே தேசத்தின் பிரதிநிதிகளாக விளையாட வேண்டிய நிர்பந்தம். கொஞ்சம் சொதப்பினாலும், ஒட்டுமொத்த அணியின் வெற்றியைப் பாதிக்கும் என்பதால் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வீரர்கள் விளையாட வேண்டும். அணியில் நிலைத்திருக்க இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். ட்ராவிட் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பின், ஒரு போட்டியைக்கூடத் தவறவிடாமல் மொத்தம் 94 போட்டிகள் தொடர்ந்து அணியில் விளையாடினார் என்றால், அவரது அயராத உழைப்புதான் அதற்குக் காரணம்.

கடைசிவரை களத்தில் விடாப்பிடியோடு நிற்கும் ட்ராவிட்டின் ஆட்டத்துக்கு ஒரேயொரு போட்டியை உதாரணமாகச் சொல்லலாம். 2011-ம் ஆண்டு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி. நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா சார்பில் சதமடித்த ஒரே வீரர் ட்ராவிட் மட்டுமே. மொத்தம் 3 சதங்களை அவர் அடித்திருந்தார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கி சதமடித்ததோடு இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இத்தொடரின் நான்காவது போட்டி பேட்டிங்கிற்குச் சாதகமான ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்களை மட்டுமே இழந்து 591 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி. ஷேவாக் உடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார் ட்ராவிட். அனைத்து வீரர்களும் குறைவான ரன்களுக்கு பெவிலியன் திரும்பிக்கொண்டிருக்க, ட்ராவிட் இன்னொரு பக்கம் நங்கூரமிட்டு நின்றார்.
 

ஓவல் மைதானத்தில் டிராவிட்டின் பார்ட்னர்ஷிப் பங்களிப்பு

300 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்து ஃபாலோ-ஆன் ஆட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதில் ட்ராவிட் சேர்த்த 146 ரன்களும் அடக்கம். இந்திய அணி முதல் இன்னிங்ஸை முடித்துத் திரும்புகையில், ஜென்டில்மேன் ரசிகர்கள் என்ற பெருமையைப் பெற்ற இங்கிலாந்து ரசிகர்கள் எழுந்து நின்று ட்ராவிட்டிற்கு மரியாதை அளித்தனர். துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி இறுதிவரை களத்தில் நின்றதோடு, பிரேக் முடிந்து அடுத்த இன்னிங்ஸ் ஆட்டத்தைத் துவங்கி பார்ப்போர் அனைவரையும் வியக்கவைத்தார் ட்ராவிட். டெஸ்ட் போட்டியில் அதிகப் பந்துகளைச் சந்தித்த வீரர் என்ற பெருமையும் ட்ராவிட்டையே சேரும். ஒவ்வொரு பந்தையும் மிகுந்த கவனத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலையில், அவர் தனது டெஸ்ட் வாழ்வில் மொத்தம் 31,258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியின் ஆடம் கில்கிறிஸ்ட், இலங்கையின் குமார் சங்கக்கரா போன்ற வீரர்களின் வரவிற்குப் பின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாகவும் இருப்பதன் அவசியத்தை மற்ற அணிகள் உணரத் தொடங்கியிருந்தன. நயன் மோங்கியாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவருக்குப் பதிலாக தற்காலிக விக்கெட் கீப்பராகக் களம் இறங்கி இரண்டு விக்கெட்கள் விழக் காரணமாக அமைந்தார். பள்ளியில் விளையாடும் போதிலிருந்தே விக்கெட் கீப்பராக விளையாடிய அனுபவம் அவருக்கு இருந்ததால், இப்பணியை அவரால் சிறப்பாகச் செய்ய முடிந்தது. பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பர் என்ற கூடுதல் பொறுப்பும் ட்ராவிட்டிற்கு வந்து சேர்ந்தது. தனக்குத் தரப்பட்ட எந்தப் பொறுப்பையும் ட்ராவிட் உதறித்தள்ளிவிடவில்லை. மோதிப் பார்த்துவிடுவது என்பதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு தன்னை அதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பிருந்தும், அதைத் தவிர்த்துவிட்டு இந்திய 'ஏ' அணியின் பயிற்சியாளராக ட்ராவிட் பொறுப்பேற்றுக் கொண்டார். இளம் வீரர்களின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பதில் வல்லவர் என்பதால் ட்ராவிட்டிற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பயிற்சியாளராக இருந்த ட்ராவிட். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முச்சதம் கண்ட கருண் நாயர், ரஹானே, சாம்சன் ஆகியோர் ட்ராவிட் கண்டெடுத்த இளம் வீரர்கள். இவர்கள் மட்டுமின்றி இந்திய அணிக்கு எதிர்காலத்தில் சிறந்த வீரர்களைக் கண்டறிந்து அவர்களைத் தகுதிப்படுத்தும் பொறுப்பும் தற்போது ட்ராவிட் வசம்தான் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் இந்திய கிரிக்கெட்டைச் செதுக்கும் சிற்பியின் பொறுப்பு டிராவிட் வசம் உள்ளது.

தனது முழுமையான அர்ப்பணிப்பைத் தந்து, கடைசிவரை போராடிப் பார்க்கும் குணம்கொண்ட இந்திய அணியின் சுவர் ராகுல் ட்ராவிட்டிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

vikatan

  • தொடங்கியவர்
சீனாவில் ரஷ்ய கலைஞர்கள் நடனம்
 

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற விழாவொன்றில் ரஷ்ய நடனக் கலஞர்கள் நடனமாடுவதை படங்களில் காணலாம்.

 

175d02788e9b6d419d58c9615.jpg

 

175d02788e9b6d419d58cc71b.jpg

 

பெய்ஜிங்கின் தியான்கியோ அரங்கில் புத்தாண்டு தினத்தன்று இந் நிகழ்வு நடைபெற்றது.

 

175Untitled-1.jpg

 

175wires_1483290696615_middle.jpg

 

metronews.lk.

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.