Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கட்டிடக் கலைக்கான நகரங்கள்

 

 
final_3128058f.jpg
 
 
 

கட்டிடக் கலை இன்று நாம் எண்ணிப் பார்க்க முடியாத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. பாரிஸ் போன்ற நகரம் பிரெஞ்சுக் காலக் கட்டிடக் கலையின் அருங்காட்சியமாக இன்றும் விளங்கிவருகிறது. பாரிஸ் நகரம் கலைகளுக்கான நகரமாகவும் கொண்டாடப்பட்டுவருகிறது. அதே போல அந்நகரில் பரவலாக இருக்கும் அந்தக் காலக் கட்டிடங்கள் அதன் கலையம்சத்தைப் பறைசாற்றி வருகின்றன. அதுபோல பிரெஞ்சுக் கட்டிடக் கலைஞர் லே காபுர்சியர் உருவாக்கிய சண்டிகரும் அப்படியான நகரங்களுள் ஒன்று. திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரமான சண்டிகர், முன்னுதாரண நகரமாகவும் திகழ்கிறது. இதுபோல உலகம் முழுவதும் கட்டிடக் கலை மீது ஆர்வம் உள்ளவர்களின் விருப்பமான நகரங்கள் குறித்த ஒளிப்படத் தொகுப்பு:

pho_3128038a.png

சிகாகோ - அமெரிக்கா

pho2_3128040a.png

சான்டா ஃபே - அமெரிக்கா

pho3_3128041a.png

துபாய், ஐக்கிய அரபு நாடுகள்

pho4_3128042a.png

பார்சிலோனா - ஸ்பெயின்

photo_5_3128043a.png

பாரிஸ் - ஃபிரான்ஸ்

ph6_3128044a.png

ரோம் - இத்தாலி

ph7_3128046a.png

சண்டிகர் - இந்தியா

ph8_3128048a.png

பீஜிங், சீனா

 

tph9_3128050a.png

இஸ்தான்புல், துருக்கி

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக புற்றுநோய் தினம்!

World Cancer day

மக்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக, இன்று உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். மக்களுக்கு புற்று நோய் குறித்த விழிப்பு உணர்வு இல்லாததே, இதற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். 

  • தொடங்கியவர்

நண்பர்கள் முதல் நல்ல வேலை அமைவது வரை இது முக்கியம் ப்ரோ... #YouthTips

கல்லூரியில் படிக்கும்போது நாம் சந்திக்கும் எவராக இருந்தாலும், இந்த திறமை இருந்தால் எளிதில் அவர்களை எதிர்கொள்ளலாம். கம்யூனிகேஷன் ஸ்கில்லில் இது ஒரு முக்கிய அங்கம். Listening... புது நண்பர்கள், காதலி, புரஃபசர் என்று ஆரம்பித்து வேலைக்கு சேரும் நேர்முகத் தேர்வு வரை, கீழே இருக்கும் டிப்ஸ்களை மனதில் நிறுத்திக் கொண்டால், ஆல் இஸ் வெல் ப்ரோ...

வேலைக்கு தகவல் தொடர்பு திறன் முக்கியம்

பேசுபவர் கண்ணைப் பார்த்து கேட்பது

இது அனைவரும் கேள்விப்படும் இயல்பான விஷயமாக தெரியலாம். ஆனால், எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கிறோம் என்பது கேள்விக்குறி தான். உங்கள் குழந்தை ஏதாவது கேட்கும் போது இரண்டு நிமிடம் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்க்காமல் அவர்களின் முகத்தைப் பார்த்து பேசுவதுண்டா? அல்லது உங்களின் பாஸ் ஏதாவது கோவமாக கூறும் பொழுது அவரின் முகத்தையாவது பார்ப்பதுண்டா? இது கேட்கும் ஆற்றலின் மிக முக்கியமான நுணுக்கம்.

 

கேட்டு கவனியுங்கள், ஆனால் முறைக்காதீர்கள்

சிலருக்கு இந்த பழக்கம் உண்டு. தாங்கள் கேட்கிறோம் என்பதை பேசுபவருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக உடலை நிமிர்த்தி கூர்ந்து கவனிப்பது போல முறைத்துப் பார்ப்பார்கள். இது அவர்கள் கவனிக்கிறார்கள் என்பதை விட, அவர்கள் கோவமாக இருக்கிறார்கள் என்ற அறிகுறியைத்தான் பேசுபவருக்குத் தரும். எனவே, நீங்கள் கவனிக்கிறீர்கள் என்று வெளியே தெரிய வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யும் எதுவும் நன்றாக தோன்றாது. எனவே இயற்கையாக கேட்பது போலவே கேட்கலாம்.

மனதை திறந்து கேளுங்கள்

ஒருவர் பேசும் முதல் வரியிலேயே அவர் என்ன நோக்கத்துடன், எதற்காக பேசுகிறார்  என்பதை அறிய இயலும் என்பது உண்மை. ஆனாலும், அதனை வெளிக்காட்டுவதோ, அதனால் ஒரு முடிவுக்கு வந்து அதை பற்றி நினைப்பதோ கூடாது. கடைசி வரை பேசுவதை கேட்டுவிட்டுத்தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதே போல், ஒருவர் பேசுவதற்கு முன்னரே, முன் முடிவுக்கு வந்து விடக்கூடாது. அது நமக்கு கேட்கும் சுதந்திரத்தைத் தராமல் பறித்துவிடும்.

தகவல் தொடர்பு திறன்

ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம்

ஒருவர் பேசுவதை கேட்கும் பொழுது ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்தல் மிக அவசியம். ஏனென்றால், எந்த வார்த்தையில் பேச்சின் முக்கியமான நுணுக்கம் இருக்கும் என்பது தெரியாது. பேச்சின் முக்கியமான கட்டம் கடந்து விட்டதாக எண்ணி கவனிக்காமல் இருப்பது, அல்லது அதற்கு முன்னால் பேசியதை பற்றி நினைப்பது என்பது தவறு. கவனிக்காமல் இருந்தால் பேசுபவரின் பேச்சைக் குறிக்கிட்டு பேசத் தோன்றும்.

 

பேசும்போது கேள்வி கேட்பதை தவிர்க்கவும்

ஒருவர் பேசும் பொழுது குறுக்கிட்டு தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டாம். அது பேசுபவரின் தன்னம்பிக்கையை குறைப்பது மட்டும் அல்லாமல், உரையாடலுக்கு ஒரு கசப்பான அனுபவத்தைத் தரும். எப்பொழுதும், பேச்சை முழுமையாக கேட்டு, அதில் கேள்விகள் இருந்தால் அவற்றை எழுதி வைத்துக்கொண்டு, பேச்சு முடிந்த பின் கேட்கவேண்டும். இது உரையாடலை ஒரு நல்ல அனுபவமாக மாற்றும்.

தேவையில்லாத கேள்விகள் வேண்டாம்

ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கேள்வி எழுப்ப வேண்டும் என்பதற்காக கேள்வி எழுப்புவது தவறு. உண்மையான கேள்விகள் இருந்தால் மட்டும் கேட்க வேண்டும், அதுவும் பேச்சு முடிந்த பிறகு. அடிக்கடி கேள்விகளை எழுப்புவது உங்களின் புத்திக் கூர்மையை காட்டாது என்பதை மிகத் தெளிவாக புரிந்துக் கொள்வது அவசியம். அது நீங்கள் ஆர்வத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள் என்றுதான் சொல்லும்.

தகவல் தொடர்பு திறன்

பேசுபவரின் மனநிலையை புரிந்து கொள்வது

ஒருவர் ஒரு விஷயத்தை உங்களிடம் கூறுகிறார் என்றால், மேடையிலேயோ அல்லது தனிப்பட்ட முறையிலேயோ, அவரின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். ஆவர் கூற வரும் கருத்தை சரியாக உள்வாங்கிக்கொள்ள உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை அது அள்ளித்தரும். இதனால் நீங்கள் சரியாக கவனிப்பது மட்டுமின்றி பேசுபவருக்கு தேவையான கருத்தை கூறுவதிலும் வல்லமை பெறுவீர்கள்.

கருத்துகளை அன்பாக சொல்வது

இப்படி பேசி இருக்கலாம், அப்படி பேசி இருக்கலாம் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றுவதுதான். ஆனால், அதனை மனம் நோகும்படி கூறாமல், மென்மையான முறையில் கூறுவது அவசியம்.

 அவ்வளவு தான் நண்பர்களே, கேட்பதற்கு தயாராகுங்கள்!

vikatan.

  • தொடங்கியவர்

'மூணரை லட்சம் தோசை..' 'ரெண்டரை லட்சம் தோசை...'- மகளிர் மட்டும் டீசர்!

Magalir mattum

ஜோதிகா நடிப்பில் 'மகளிர் மட்டும்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. இன்று அப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசருக்கு உள்ளேயே ஒரு குட்டி 'தோசை' கதை சொல்லப்பட்டு இருக்கிறது.  'குற்றம் கடிதல்' படத்தின் மூலம் தேசிய விருது வாங்கிய பிரம்மா இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தான் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஜோ... வி ஆர் வெயிடிங்...

 

 

  • தொடங்கியவர்

'நம்புங்கள்... நம்மால் முடியும்!' உலகப் புற்றுநோய் தினம் சிறப்புப் பகிர்வு

 

உயிரைப் பறிக்கக்கூடிய கொடிய நோய்ப் பட்டியலில் முதலில் இருப்பது புற்றுநோயே..! உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி உலகப் புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றையச் சூழலில் புற்றுநோய்க்கான சிகிச்சைகளும் மருந்துகளும் புதிது புதிதாக கண்டறியப்பட்டு வருகின்றன. ஆனாலும், ஆண்டொன்றுக்கு இந்தியாவில் 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்; ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.  

புற்றுநோய்

 

பொதுவாக, 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களே புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு, உலக சுகாதார நிறுவனம், `2030-ம் ஆண்டுக்குள் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பைப் பாதி அளவாகக் குறைப்போம்’ என்று உறுதிமொழி எடுத்து உள்ளது.  
இனி, புற்றுநோய்க்கான அறிகுறிகள், அதைத் தவிர்க்கப் பின்பற்றவேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்!

புற்றுநோய்... பொதுவான அறிகுறிகள்!

வாய், நுரையீரல், சிறுநீரகம், ரத்தம், தோல், மார்பகம்... என உடலின் எந்த உறுப்பிலும் புற்றுநோய் உண்டாகலாம். நோய் வரும் உறுப்பைப் பொறுத்து, அவற்றின் அறிகுறிகள் மாறுபடும். பொதுவாக,

* மூச்சுவிடுவதில் சிரமம்.

* ரத்தம் கலந்து சளி வருவது.

* நீண்ட நாட்களாக தொடர் இருமல் இருப்பது.

* செரிமானம் தாமதமாவது.

* புண் அல்லது அல்சர் குணமாகாமல் இருப்பது.

* உணவு விழுங்குவதில் சிரமம்.

* அதீதப் பசி, சோர்வு, கவலை மற்றும் அதிக அளவுக்கு எடை குறைவது ஆகியவை புற்றுநோய்க்கான அறிகுறிகள்!


புற்றுநோயைக் கண்டறிய... 

மேலே காணும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 

* மாதம் ஒரு முறை உடல் எடையைப் பரிசோதித்து , உடலைச் சீராகப் பராமரிக்க வேண்டியது அவசியம். 

* 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரின் ஆலோசனைப்படி உடல் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

தடுக்க... தவிர்க்க!

* உடலை உறுதி செய்யும் வேலை அல்லது உடற்பயிற்சிகளை தினசரி செய்யலாம். உடற்பயிற்சியோடு யோகா செய்யலாம். இதமான வெயிலில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

*  சீரான, ஆழ்ந்த தேவையான அளவு தூக்கம் வேண்டும்.

* கார்பனேட்டட் குளிர்பானங்கள், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

* புகைப்பிடிப்பது, புகைபிடிப்பவரின் அருகில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். 

* பூச்சிக்கொல்லி தெளித்த உணவைத் தவிர்க்கலாம்.

* அழகுசாதனப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவை அடைத்து எடுத்துச் செல்வதையும், அவற்றைச் சாப்பிடுவதையும் தவிர்க்கவும்.

உலக அளவில் புற்றுநோய் பாதிப்புகளைக் குறைக்க, ஒவ்வொரு தனிமனிதனும் தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும். அதற்காகவே, உலக சுகாதார நிறுவனம், `நம்மால் முடியும்... என்னால் முடியும்’ (We can... I can) என்ற கருப்பொருளை அறிவித்திருக்கிறது. அதற்காக இன்றைய தினத்தில் நாமும் உறுதி எடுப்போம்! நம்மால் முடியும்... என்னால் முடியும்!

vikatan

  • தொடங்கியவர்

குட்டி இளவரசரின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் பூட்டான் குடிமக்கள் (புகைப்படத் தொகுப்பு)

 

பூட்டானின் குட்டி இளவரசரின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வெளியிடப்பட்ட புகைப்படங்களால் ரசிகர்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Crown Prince Jigme Namgyel Wangchuck
 

பாரம்பரிய அரசு குடும்பத்தின் மஞ்சள் நிற அங்கியை அணிந்தபடி, மிகவும் கவர்ச்சிகரமான புன்னகையை உதிர்க்கும் பூட்டானின் குட்டி டிராகன் இளவரசர் தனக்கு பிடித்தமான கார் பொம்மையுடன் போஸ் கொடுக்கிறார். பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று அவருக்கு ஒரு வயது ஆகிறது.

Countryside in Bhutan

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த குட்டி இமாலய ராஜ்ஜியமானது பூமியிலே மகிழ்ச்சியான இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பூட்டனில் மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு அரசு வம்சத்தில் குழந்தை பிறப்பை கொண்டாடும் வகையில் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் மரங்கள் நடப்பட்டன.

 
Crown Prince Jigme Namgyel Wangchuck

ஊடகங்களுக்கான பூட்டானின் ராயல் அலுவலகம் தேர்ந்தெடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள , யெல்லோ இணைய தளம், இந்த பிரத்யேக காலண்டர் புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்வது இலவசம் என்றும், இது பலருடைய இதயங்களை உருக வைக்கும் என்றும் கூறியுள்ளது.

Crown Prince Jigme Namgyel Wangchuckபடத்தின்

''எல்லா குழந்தைகளும் அழகுதான் ஆனால் பூட்டானின் குட்டி இளவரசர் என்னுடைய இதயத்தை திருடிவிட்டார்'' என்று ஃபேஸ்புக்கில் ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Bhutan's royal familyபடத்தின்

அரசர் ஜிக்மே கெசார் நம்கெய்ல் வாங்சக் பூட்டானை ஆட்சி செய்து வருகிறார். உலகிலே இளைய அரசர்களில் அவரும் ஒருவர்.

Bhutan's Queen Jetsun Pema with royal baby

அரச குடும்பத்தின் வாழ்க்கை குறித்த அரிய துளிகள் என்று முன்பு கருதப்பட்ட விஷயங்களை தற்போது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் கணக்குகள் பூட்டான் குடிமக்களுக்கு வழக்கமாக வழங்கி வருகின்றன.

Bhutan's royal family

குட்டி இளவரசரின் வளர்ச்சியை பார்ப்பதற்கு தாங்கள் பெருமை கொள்வதாக அரசு மாளிகையில் உள்ள பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-38859067

  • தொடங்கியவர்

இணையத்தைக் கலக்கும் ட்ரம்ப் பேத்தியின் சீன மொழிப் பாடல்!

ட்ரம்ப் பேத்தி

மெரிக்கா அதிபரான டொனால்டு ட்ரம்ப், தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் சீனா இறங்கியிருப்பதாக கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார் ட்ரம்ப். ஆனால், சீனமொழியில் நியூஇயர் பாடலை பாடி சீனர்களை அதிபரவசத்துக்கு உள்ளாக்கியிருக்கிறாள் ட்ரம்பின் பேத்தி அர்பெல்லா. சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது அவளது வீடியோ.

சீனாவில் லூனர் புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி பல நாட்டு தலைவர்களின் வாழ்த்துக்களால் சீன மக்கள் மனம் நிறைந்து போயிருக்கிறார்கள். ஆனால் மரியாதை நிமித்தமாக கூட ட்ரம்ப் தன் வாழ்த்தை சீன தலைவர்களுக்கோ, மக்களுக்கோ தெரிவிக்கவில்லை என்பதுதான் விநோதமே. அமெரிக்காவில் உள்ள சீன தூதரகத்தில் லூனர் புத்தாண்டுக்கான விழா சீறும் சிறப்புமாக களைகட்டியுள்ளது. இத்தனை களேபரங்களுக்கு நடுவில் தன் தாத்தாவையே அசைத்து பார்த்திருக்கிறாள் ஐந்து வயதான அவருடைய பேத்தி அர்பெல்லா குஷ்னர்.

பிப்ரவரி 1-ம் தேதி, அமெரிக்காவில் உள்ள சீன தூதரகத்துக்கு தன் அம்மா இவாங்காவுடன் சென்ற அர்பெல்லா, பாரம்பரிய சீன பொம்மையோடு விளையாடியபடியே சீன மொழியில்,  புத்தாண்டு வாழ்த்துப் பாடலை பாடி அசத்தியுள்ளார். இச்செய்தியை 'China Daily'' இதழ் வெளியிட்டது. அதுபோக தன் மகள் பாடிய சீன மொழிப்பாடலை இவாங்கா தன் ட்விட்டரில் வெளியிட வைரலாகிக் கொண்டிருக்கிறது.

சீன மொழியை கனகச்சிதமாக அர்பெல்லா உச்சரித்துள்ளதாக சமூகவலைதளங்களில் சீனர்கள் புகழாரம் சூட்டி வருகிறார்கள். புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காத ட்ரம்பை சீன மக்கள் விமர்சித்து வரும் வேளையில், ஒரே ஒரு பாட்டு மூலம் சீனர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறாள் அர்பெல்லா.

 

ஏற்கெனவே சென்ற வருடம் அர்பெல்லா சீன பாரம்பர்ய உடை அணிந்து கொண்டு, சீன மொழியில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இந்த பாடலை ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, இவாங்கா தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். அந்த பாடலும் சீன மக்களிடையே மிகுந்த வரவேற்பை பேற்றது. மிகவும் இனிமையாக பாடியுள்ளதாக அர்பெல்லாவுக்கு பாராட்டுக்கள் குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தாத்தா பகை, பேத்தி நட்பு.. பலே நடக்கட்டும் குட்டி சாம்ராஜ்ஜியம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: உலகம் சுற்றும் வெட்டுக்கிளி

 
Desktop_3126038f.jpg
 
 
 

அதிவேகப் போக்குவரத்து வசதிகள் வந்துவிட்டன. இன்று நம்மால் நினைத்த நேரத்தில் நாடு விட்டு நாடு போக முடிகிறது. காலையில் இந்தியாவில் டிஃபன், மதியம் சிங்கப்பூரில் சாப்பாடு, இரவு உணவுக்கு ஆஸ்திரேலியா போய்விட முடியும். அதே நேரம், எந்த ஒரு வாகன வசதியும் இல்லாமல் நம்மால் எவ்வளவு தூரம் நடக்க முடியும்? பாதயாத்திரை செல்பவர்கள்கூட ஒரு நாளைக்கு 15 முதல் 25 கிலோமீட்டர் தூரம்தான் நடக்கிறார்கள். வேகமாக ஓடுகிற நாய்கூடக் கொஞ்ச தூரம் ஓடினாலே மூச்சிரைக்கப் படுத்துக்கொள்கிறது.

அப்படியானால், ஒரு பூச்சி எவ்வளவு தூரம் போகும்? அதிகபட்சம் நம் வீட்டைச் சுற்றும். விட்டில் பூச்சி என்றால் விளக்கில் விழுந்து இறந்துவிடும். மீறிப் போனால் ஜன்னலுக்கு வெளியே போய்ப் புதருக்குள் பதுங்கிவிடும். இவைதான் பூச்சிகளைப் பற்றிய நமது கணிப்பு.

ஆனால் ஒரு பூச்சி, கண்டம் விட்டுக் கண்டம் போகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ‘லோகஸ்ட்’ என்று ஒரு வகை வெட்டுக்கிளிதான் கடல்களைக் கடந்து கண்டம் விட்டுக் கண்டம் இடம்பெயர்கிறது. குறைந்தபட்சம் 100 முதல் 200 கிலோ மீட்டர் வரை தினமும் பயணம் செய்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான உணவு மற்றும் விவசாய நிறுவனம் இந்தப் பூச்சியைத் தொடர்ந்து கவனித்துவருகிறது. ஏன் இவ்வளவு தூரம் அது பயணிக்கிறது? ஐ.நா.வின் அமைப்பு இதை ஏன் கவனிக்கிறது? ‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளியின் முக்கியத்துவம்தான் என்ன?

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், முக்கியத்துவம் எல்லாம் எதுவும் இல்லை.

பயம்தான் காரணம்.

‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளி தனியாக இருந்தால் பிரச்சினை இல்லை. கூட்டமாகச் சேர்ந்துவிட்டால் சிக்கல்தான். மழைக்குப் பிறகு போதுமான ஈரப்பதம் இருக்கும்போது, நம்மூரில் உற்பத்தியாகும் ஈசல் போல இந்த ‘லோகஸ்ட்’ உற்பத்தியாகிறது. ஆப்பிரிக்கக் காடுகளில் கடுமையான வறட்சியைத் தொடர்ந்து மழை பெய்யும். மண் ஈரமாகும்போது, இந்த ‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் எண்ணிக்கையில் சொல்ல முடியாத அளவுக்கு உற்பத்தியாகும். அதிலும் ஆப்பிரிக்கப் பாலைவனங்களில் உற்பத்தியாகும் ‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் ரொம்ப ஆபத்தானவை.

ஒரு சதுர கிலோமீட்டரில் 4 கோடி முதல் 8 கோடிவரை ‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் உற்பத்தியாகின்றன. வண்டுகள் மாதிரி மண்ணில் உற்பத்தியாகி நகரும் இந்த வெட்டுக்கிளிகள், இறக்கைகள் முளைத்தவுடன் கூட்டம் கூட்டமாகப் பறக்க ஆரம்பிக்கின்றன.

இப்படி உற்பத்தியாகிக் கூட்டம் கூட்டமாகப் பறப்பதே பெரிய இடையூறுதான். இதைவிட ஒரு பேராபத்து, இவை உண்ணும் உணவு. பூக்கள், இலைகள், பழங்கள் ஆகியவற்றை இந்த வெட்டுக்கிளிகள் உணவாகச் சாப்பிடுகின்றன. ஆப்பிரிக்க விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்திருக்கும் உணவுப் பொருட்களை இவை சர்வ சாதாரணமாக அழித்துவிடுகின்றன. நாசம் என்றும் ஆபத்து என்றும் இவற்றைச் சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது.

ஆறு மாதங்கள் வரை உயிர் வாழும் இந்த வெட்டுக்கிளிகள் உணவுப் பயிர்களை அழித்ததால், பலமுறை ஆப்பிரிக்க நாடுகளில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

2003-ம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் வழக்கத்துக்கு மாறாகப் பெய்த மழையால் 10 கோடிக்கும் அதிகமான பூச்சிகள் உருவாயின. பல லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட உணவுப் பயிர்கள் அழிந்துபோயின. இதனால்தான் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய நிறுவனம், இந்த ‘லோகஸ்ட்’வெட்டுக் கிளிகளைக் கவனிக்கிறது. கட்டுப்படுத்து வதற்கான முயற்சிகளுக்கு உதவியும் செய்கிறது.

ஆப்பிரிக்கக் காடுகளிலும் பாலைவனங்களிலும் உற்பத்தியாகும் இந்த ‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள், கடலுக்கு மேலே 2,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் சக்தி படைத்தவை. வழக்கமாக, ஆப்பிரிக்காவுக்கு, அரேபியத் தீபகற்பத்திற்கும் இடையே உள்ள செங்கடல் பகுதியைக் கடந்து ஆசியாவுக்குள் நுழைகின்றன. இங்கும் பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன.

எவ்வளவோ முயற்சிகள் எடுக்கப்பட்டும், மனித குலத்தால் இந்த வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்பூச்சிகளைச் சேகரித்து பாப்கார்ன் மாதிரி பொறித்துச் சாப்பிடும் பழக்கம் மனிதர்களுக்கு இருந்திருக்கிறது. இது மட்டும்தான், இப்பூச்சிகளை மனிதன் வெற்றி கொண்ட ஒரே விஷயம்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

“தலைகீழாகத்தான் குடிப்பேன்!”

 

லக மக்களிடையே கவனத்தைப் பெறவும், வித்தியாசமான முயற்சிகள் மூலம் சாதனை நிகழ்த்தவும் விரும்புவது மனிதர்களின் இயல்பு. அப்படித்தான் இந்த இங்கிலாந்துக்காரரும் வித்தியாசமான கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். சைமன் பெர்ரி என்னும் 24 வயது இளைஞர்தான் அவர். `அப்படி அவர் என்ன பண்ணிட்டார்'னு கேட்கிறீங்களா?

p83.jpg

246 அடி உயரத்திலிருந்து கயிற்றில் தொங்கியபடி கீழே இருக்கும் டீயில் பிஸ்கட்டை நனைத்துச் சாப்பிட்டிருக்கிறார். ஒருமுறை அல்ல... இப்படியே மேலே ஏறுவதும், கீழே இறங்குவதுமாய் டீ முழுவதும் காலியாகும்வரை பிஸ்கட்டை நனைத்துச் சாப்பிட்டுவிட்டு, கின்னஸ் புத்தக நிர்வாகிகளிடம் சான்றிதழை வாங்கியிருக்கிறார். ‘பசிச்சா பன்னை வாங்கித்தின்னு... அதுக்கு ஏன்யா இம்புட்டு அக்கப்போரு பண்றே?’ எனக் கலாய்ப்பவர்களிடம், “இதை நிகழ்த்தி முடிப்பதற்குள் பலகட்ட பயிற்சிகள் செய்யவேண்டியிருந்தது. அவ்வளவு எளிதில் தலைகீழாகப் பறந்து வர முடியாது” என்கிறார் பெருமிதத்தோடு!

பிஸ்கட் மூழ்கலையா பாஸு...?

vikatan

  • தொடங்கியவர்

வெள்ளை அரசைப் பணிய வைத்த 'கறுப்பு' தேவதை ரோசா பார்க்ஸ் #BirthdayMemories

ரோசா பார்க்ஸ்

மனிதர்களுக்குள் பேதம் பார்த்து பழகுவது அல்லது விலக்குவது எனும் பழக்கம் இன்றைய நாகரிக உலகிலும் உள்ளது. இதில் முன்னேறிய நாடு, முன்னேறாத நாடு என்கிற வேறுபாடு இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதங்களில் பாகுபாடு பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கறுப்பினர், வெள்ளையர் எனும் பிரிவினை வாதத்தில் கறுப்பினர் அனுபவித்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. அந்தக் கொடுமைக்கு எதிராக போராடியவர்களில் முக்கியமானவர் ரோசா பார்க்ஸ்.

1913 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதியன்று, அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் ரோசா பார்க்ஸ். (முழுப்பெயர் ரோசா லூசி மெக்காலி) இவரின் தந்தை தச்சு வேலை செய்துவந்தவர். ரோசாவின் சிறு வயதிலேயே அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டனர். அதனால் அம்மா மற்றும் பாட்டியுடன் வளர்ந்தார். பள்ளி படிப்பு முடிந்து, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது குடும்பச் சூழல் காரணமாக படிப்பை முழுமையாக முடிக்கவியலாமல் ஆனது. 1932 ஆம் ஆண்டு ரேமண்ட் பார்க்ஸ் என்பவரைத் திருமணம் செய்த பின், கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். ரேமண்ட் பார்க்ஸ் முடி திருத்தும் தொழில் செய்துவந்தார். இருவரும் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர் முன்னேற்றச் சங்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். அதற்கான போராட்டங்களிலும் கலந்துகொண்டனர்.

ரோசா பார்க்ஸ் சிறுவயதிலிருந்தே கறுப்பினர்கள் கடுமையான ஒடுக்குதலுக்கு உள்ளாவதை பார்த்தே வளர்ந்தார். கறுப்பின மக்கள் வசிக்க ஒதுக்குப் புறமான இடம், அனைத்துப் பேருந்துகளில் பயணம் செய்ய முடியாத சூழல், பயணம் செய்யும் பேருந்துகளில் வெள்ளையர் ஏறி விட்டால், இவர்கள் இறக்கி விடப் படுவர். ஆனால் இது சட்டப்படியானது அல்ல. 1900 -ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பேருந்துகளில் இருக்கைகளில் இரு இனத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டம் இருந்தது. ஆனால், அது நடைமுறையில் செயல்முறைதான் படுத்துவதில்லை.

ரோசா பார்க்ஸ்

1943 ஆம் ஆண்டு, மழை நாள் ஒன்றில் ரோசா பார்க்ஸ் பேருந்தில் ஏறி, முன் வரிசை இருக்கையில் உட்கார்ந்தார். ஆனால், பேருந்தின் ஓட்டுநர் பின்னிருக்கைகளில் அமரச் சொன்னார். ரோசா பார்க்ஸூம் எழுந்து, மெதுவாக பின்னிருக்கை நோக்கி நடந்தார். அதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் ஓட்டுநர் பேருந்திலிருந்து இறக்கி விட்டார். கடும் வேதனையோடு வீட்டுக்குச் சென்றார்.

இந்தச் சம்பவம் நடந்து, 12 ஆண்டுகள் கழித்து 1955 ஆம் ஆண்டில் இதேபோல ஒரு சூழல் ஏற்பட்டது. வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்ப பேருந்தில் ஏறி, இருக்கையில் அமர்ந்தார் ரோஸா பார்க்ஸ். அமெரிக்கர்கள் ஏறியதும் இவரை எழுந்திருக்க சொல்லி ஓட்டுநர் கூறினார். ஆனால், முந்தைய சம்பவத்தின்போது அமைதியாக இருந்த ரோசா பார்க்ஸ், தற்போது ஓட்டுநர் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை.  'பயணத்திற்கான டிக்கெட் எடுத்துள்ளேன். அதனால் இறங்க மாட்டேன்' என்று  கூறி மறுத்தார். ஓட்டுநர் கோபத்தின் உச்சிக்கே சென்று கத்திக்கொண்டிருந்தார். ஆனால், அதைக் கண்டு கொஞ்சமும் கலக்கமில்லாமல் இருக்கையில் இன்னும் வசதியாக அமர்ந்து கொண்டார். எதுவும் செய்ய முடியாமல், ஓட்டுநர் காவல் துறையினரை அழைத்தார். காவலர்களோ, சட்டத்தின் படி நடந்துகொள்ளாமல், விதிகளை மீறியதாக கூறி ரோசா பார்க்ஸைக் கைது செய்தனர்.

ரோசா பார்க்ஸ் கைது செய்யப்பட்ட செய்தி அமெரிக்கா முழுக்க பரவியது. பல ஆண்டுகளாக தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராட துணிந்தனர் கருப்பின மக்கள். ஆனாலும் அதை அறப் போராட்டமாகவே செய்ய முடிவெடுத்தனர். மான்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பு’ எனும் புகழ்பெற்ற போராட்டம் தொடங்கியது. பேருந்துகளைப் புறக்கணித்து டாக்ஸிகளில் சென்றனர். அதற்கு பணம் இல்லாதவர்கள் நடந்து சென்றனர். பேருந்தில் சென்று படிக்கும் நிலையில் உள்ள குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப வில்லை.

இந்தப் போராட்டம் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கும் இங்குமாக தனித்தனியாக சிதறி போராடிக் கொண்டிருந்தவர்களை அமெரிக்காவின் மிகப் பெரும் தலைவர் மார்டின் லூதர் கிங் ஒருங்கிணைத்து போராட்டத்தின் வலிமையைக் கூட்டினார். ஏராளமான பேச்சு, துண்டறிக்கை என போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. மக்களின் புறக்கணிப்பால் பேருந்துகள் காலியாக சென்றன. ஒரு பயணிக்கூட ஏறாத பேருந்துகளும் ஓடின. அரசுக்கான வருமானம் குறைந்தது.

ரோசா பார்க்ஸ் மீது வழக்கு நடந்து கொண்டிருந்ததால் அவரின் வேலை பறிபோனது. அவர் அதைப் பற்றி கவலைக் கொள்ளவில்லை. கருப்பினத்தவருக்கு உரிய மரியாதையோடு இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரைக் கொலை செய்துவிடப் போவதாக பல தரப்புகளிலிருந்து வந்த மிரட்டல்களை அவர் பொருட்படுத்தக் கூட வில்லை.

1956 ஆம் ஆண்டு நவம்பர் 13 -ம் நாள் ரோசா பார்க்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளிவந்தது. அவரைக் கைது செய்தது தவறு என்று அழுத்தமாக சொன்னது தீர்ப்பு. போராட்டக்காரர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அர்ப்பணிப்பு மிகுந்த போராட்டத்தின் வெற்றியாக கொண்டாடினார்கள். அதன்பின், டிசம்பர் 20 வரையிலும் தொடர்ந்த போராட்டத்தின் காரணமாக, நிறப்பாகு பாடு சட்டத்தை ரத்து செய்து, பணிந்தது வெள்ளை அரசு.

‘ரோசா பார்க்ஸ்: மை ஸ்டோரி’ (rosa parks my story ) எனும் பெயரில் தன் சுய சரிதையை எழுதினார். 'Mighty times the legacy of Rosa parks' எனும் தலைப்பில் இவரைப் பற்றிய ஆவணப் படம் எடுக்கப்பட்டது.

ரோசா பார்க்ஸின் பிறந்த தினம் மட்டுமல்ல, அவரைக் கைது செய்த டிசம்பர் 1-ஆம் தேதியும் ரோசா பார்க்ஸ் தினமாக கொண்டாடப் படுகிறது.

vikatan

  • தொடங்கியவர்

ஃபேஸ்புக் ஏன் நீலநிறம், லோகோவில் இருந்த ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் யார்? #HBDfacebook

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கை தெறிக்கவிட்ட மீம்ஸ்கள்

ஃபேஸ்புக்குக்கு இன்று 13வது பிறந்தநாள். தனது டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கிறது. ஃபேஸ்புக்கில் இருக்கும் அத்தனை வசதிகள் பற்றியும், நல்லது கெட்டது பற்றியும் நிறைய படித்துவிட்டோம். ஃபேஸ்புக் நிறுவனம் பற்றியும், அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெக் பற்றியும் அதிகம் தெரிந்திராத விஷயங்களை பற்றி பார்ப்போம்.

1) ஃபேஸ்புக்குக்கு நீல நிறத்தை மார்க் எதற்கு தேர்வு செய்தார் தெரியுமா? மார்க்குக்கு colour blindness பிரச்னை இருக்கிறதாம். அவரால் பச்சை- சிவப்பு நிறங்களை சரியாக பார்க்க முடியாது. யெஸ். பிசாசு படம் நினைவுக்கு வருகிறதா? அதே பிரச்னைதான். அதனால் தான் நீல நிறத்துக்கு டபுள் ஒகே சொல்லியிருக்கிறார் மார்க்.

2) 2006ல் ஒரு கிராதகன் இருந்தான். க்றிஸ் புட்நாம் என்ற அந்த ஹேக்கர், ஃபேஸ்புக்கை ஹேக் செய்து, ஆயிரக்கணக்கான புரஃபைல்களை MySpaceன் புரொபைல்கள் போலவே மாற்றிவிட்டான். கோவப்பட்டு மார்க், சண்டையெல்லாம் போடவில்லை. நீதிமன்றம் ஏறவில்லை. “வாடா என் செல்வமே” என அழைத்து வேலைக்கு சேர்த்துக் கொண்டார். ”அதாம்லே சக்கர்பெர்க்கு” என உச்சி முகர்ந்தது டெக் உலகம்.

3) ஃபேஸ்புக்கின் ஆரம்பக் காலக்கட்டத்தில், அதாவது 2004ல் அது thefacebook.com தான். பின்னர், Theக்கு கல்தா கொடுத்துவிட்டு, facebook.com ஆனது. ஃபேஸ்புக்கின் முதல் லோகோவில் ஒரு மனிதன் சோகமுகத்துடன் இருப்பார். அது யார் தெரியுமா? ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் அல் பேசினோ தான்.

4) மார்க் ரொம்ப பாசிட்டிவான நபர். அதனால்தான் ஃபேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டனே கிடையாது. எப்போதும், எல்லோரும் பாஸிட்டிவாக இருக்க வேண்டும் என நினைப்பவர் மார்க். சமீபத்தில் வந்திருக்கும் ஆங்க்ரீ எமோஜி கூட, அந்த ஸ்டேட்டஸ் சொல்லும் விஷயத்துக்கு எனதான் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், டிஸ்லைக் அப்படி இல்லாமல், எழுதியவரையே டிஸ்லைக் செய்வது போலிருக்கும் என்பதால் டிஸ்லைக் பட்டனை டிஸ்லைக் செய்துவிட்டார் மார்க்.

mark

5)ஃபேஸ்புக்கின் சில டேட்டாவை கேட்டால் 2ஜி மொபைல் போல தலை சுற்றுகிறது. ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 1,00,000 புதிய ஃப்ரெண்ட்ஸ் ரெக்வெஸ்ட் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் அஞ்சு லட்சம் லைக்ஸ் போடப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் ஒன்றரை லட்சம் மெஸெஜ் அனுப்படுகின்றன. அதில் எத்தனை பேக் ஐடி அனுப்புகிறது என்பது மட்டும் தான் மார்க்குக்கு தெரியாது.

6) ஒரு முறை மூச்சை இழுத்து விடுங்க. இப்போது ஃபேஸ்புக்குக்கு புதிதாக 16 பேர் வந்திருக்கிறார்கள். இந்த வரியை படிப்பதற்குள் அந்த கணக்கு 32 ஆகியிருக்கும். இப்போது 48....

7) ஆண்களிடம் சம்பளம் கேட்க கூடாது. பெண்களிடம் வயதை கேட்க கூடாது என்பது தான் மார்க்கின் கொள்கை போல. 1984ல் பிறந்தவன் என கெத்தாக சொல்கிறது சக்கர்பெர்கின் ஃபேஸ்புக் பக்கம். ஆனால், அவர் மனைவி பிரிஸில்லாவின் பக்கத்தில் பிறந்த வருடத்தை காணவில்லை.

8) மார்க்குக்கு புகைப்படங்கள் மீது ஆரம்பத்தில் ஆர்வம் இருந்ததில்லை. ஃபேஸ்புக்கில் ஃபோட்டோஸ் ஷேர் செய்யும் வசதிகள் தொடக்கத்தில் இல்லை. மார்க்கின் நண்பர் ஷான் பார்க்கர் தான் இதை சொன்னாராம். வேண்டாவெறுப்பாக சேர்த்த மார்க், அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து “வாவ்டா” என நண்பனுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். இன்று, மார்க்கே ஸ்டேட்டஸ் போட்டாலும் ஒரு ஃபோட்டோவையாவது சேர்த்துவிடுவார்.

9) "இந்த நாள் நண்பர்களை கொண்டாட வேண்டிய நாள். ஃபேஸ்புக்கின் பிறந்தநாள்.  நீங்கள் ஃபேஸ்புக்கை கொண்டாட வேண்டாம். நட்பை கொண்டாடுவோம். இன்றைய தினத்தில் நண்பனைக் கொண்டாடுவோம்" என்கிறார் மார்க். அதனால்தான் இன்று ஃபேஸ்புக்கில் Friend's day வீடியோ உங்களுக்கும் வந்திருக்கிறது.

Happy birthday facebook..!

vikatan

  • தொடங்கியவர்

இதுதான் கடைசி ட்ரான்ஸ்ஃபார்மஸ் படமாம்!

 

 

 

 

ஜூன் மாதம் வெளியாக இருக்கும் 'ட்ரான்ஸ்ஃபார்மஸ்: தி லாஸ்ட் நைட்' திரைப்படம்தான் தன்னுடைய கடைசி 'ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்' படமாக இருக்கும் என இயக்குநர் மைக்கேல் பே கூறியுள்ளார். சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் பௌல் ட்ரெய்லரில் சர் அந்தோணி ஹாப்கின்ஸைப் பார்க்கலாம். ஆப்டிமஸ் ப்ரைம் இப்போது வில்லன்!

மகள் திருமணத்துக்காக பரோல் கேட்கும் நளினி!

nalini_600_1_17325.jpg

தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டு வேலூர் சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் நளினி மனு அளித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நளினி. இவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு தந்தை சங்கரநாராயணன் மறைவால் நளினி பரோலில் வந்தார். முருகன்- நளினி தம்பதிக்கு ஹரித்ரா என்ற பெண் இருக்கிறார். இவர் லண்டனில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஹரித்ரா திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்தில் கலந்து கொள்ள பரோல் கேட்டு நளினி, வேலூர் சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளார்.

15 வயது சிறுமி தில்லியில் பலாத்காரம்

rape-sexual-violence-women_650x400_41480

15 வயது சிறுமி, சட்டிஸ்கரில் தவறான ரயில் ஏறி புது தில்லிக்கு வந்துவிட்டார். வந்த சிறுமியை ஒருவருக்கொருவர் கணிசமான தொகைக்கு விற்று, தொடர்ந்து பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இத்தனையும் ஒரு பெண்னின் துணையோடு செய்திருக்கிறார்கள். தில்லி  பெண்கள் ஆணையம் அந்த சிறுமியை மீட்டு இருக்கிறது. 

பெண்கள் ஆனையத்துக்கு தகவல் கிடைத்த உடன் ஹிமாயூன் கோபுரம் பகுதியில் இருந்து சிறுமியை மீட்டனர். சிறுமியின் மீது வன்முறை தொடரப்பட்டவர்களை கைது செய்யுமாறு சன்லைட் காலனி வட்டார காவல் துறையிடம் பெண்கள் ஆணையம் புகார் அளித்தது. சிறுமிக்கு தற்போது தில்லி எய்ம்ஸில், மருத்துவ சிகிச்சைகளும், மனநலத்திற்கான கவுன்சிலிங்குகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்சட்த வழக்கின் குற்றவாளிகளாக சராய் கலே கான், அஃப்ராஸ், பப்பு யாதவ் போன்றவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டிருக்கிறது. 

மார்ச் 1-ம் தேதி முதல் பழைய ஸ்கைப் இயங்காது மக்களே!

மார்ச் ஒன்றாம் தேதி முதல் லேட்டஸ்ட் ஸ்கைப் வெர்ஷன் மட்டுமே இயங்கும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. விண்டோஸ் மற்றும் மேக்கில் பழைய வெர்ஷன் ஸ்கைப் மென்பொருள் மார்ச் 1-ம் தேதி முதல் இயங்காது. லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்வது மட்டுமே ஒரே வழி. 

 

400_17029.jpg

லேட்டஸ்ட் வெர்ஷனில் உள்ள புதிய வசதிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

99p1.jpg

கேரளாவில் பிறந்தாலும் வளர்ந்தது எல்லாம் நம்ம ஈரோட்டில்தான். அங்கே ஸ்கூலிங் முடித்துவிட்டு சென்னை வந்து இன்ஜினீயரிங் கோர்ஸில் சேர்ந்தார். அப்போது 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் சின்ன ரோல் கிடைக்க, அதன் மூலம் தெலுங்கிலும் கால் பதித்தார். பின்னர் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் ஒரு ரோல். அங்கிருந்து கன்னட தேசத்துக்குப் பயணம். `தசாவலா', `நம்ம பூதாத்மா' போன்ற கன்னடப் படங்களில் நடித்தவர் ஃபஹத் ஃபாசிலின் `மான்சூன் மாங்கோஸ்' படத்திலும் நடித்தார். இப்போது அடுத்தப் பட ரிலீஸுக்காக வெயிட்டிங்.

99p2.jpg

திருச்சூரில் பிறந்த துளசிச் செடி. ஸ்கூல் முடித்த கையோடு அனுபம் கெர் தலைமையில் நடிப்புப் பயில மும்பை பறந்தார். சைடு கேப்பில் மிஸ் கேரளா போட்டியிலும் பங்கேற்றார். மாளவிகாவின் புகைப்படங்களைப் பார்த்த வினீத் ஸ்ரீனிவாசன் `மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' படத்தில் இவரை நடிக்க வைத்தார். அதன்பின் வரிசையாக 'இன்னானு ஆ கல்யாணம்', `மகரமஞ்சு', `மை ஃபேன் ராமு' என லிஸ்ட் கட்டி நடித்தார். நடுவே ஒரு கன்னடப்படத்திலும் தலைக் காட்டியவரை `என்ன சத்தம் இந்த நேரம்' என்ற தமிழ்ப்படத்தில் நடிக்க அழைத்து வந்தார்கள். ஆனால், படம் சத்தமே தெரியாமல் காணாமல் போக, அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக வெயிட்டிங். அம்மணி டான்ஸிலும் கில்லி.

99p3.jpg

பூர்வீகம் கொல்கத்தா என்றாலும், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கனடாவில். மிஸ் வேர்ல்ட் கனடா போட்டியில் மிஸ் போட்டோஜெனிக் பட்டத்தை வென்றவர், அங்கிருக்கும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். டிகிரி முடித்துவிட்டு அனுபம் கெர்ரின் நடிப்புப் பள்ளியில் பயிற்சிபெற வந்தவருக்கு `கிஸ்' என்ற தெலுங்குப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் `உலா' என்ற தமிழ்ப்படத்திலும் வந்து போனார். பின்னர் `ஜோரு', `அசுரா' போன்ற தெலுங்குப் படங்களில் நடித்தவர் பாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை.

  • தொடங்கியவர்

அப்பல்லோ 14 விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய நாள் (பிப்.5- 1971)

அமெரிக்காவால் சந்திரனில் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் 1971-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி அலன் ஷெப்பர்ட், ரூசா, எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1597 - ஜப்பானின் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலர் ஜப்பானின் புதிய அரசால் ஜப்பானிய சமுகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்ச்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். * 1649 - ஸ்காட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில்

 
 
 
 
அப்பல்லோ 14 விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய நாள் (பிப்.5- 1971)
 
அமெரிக்காவால் சந்திரனில் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது.  இந்த விண்கலம் 1971-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி அலன் ஷெப்பர்ட், ரூசா, எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1597 - ஜப்பானின் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலர் ஜப்பானின் புதிய அரசால் ஜப்பானிய சமுகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்ச்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். * 1649 - ஸ்காட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது. * 1778  தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது மாநிலமானது.

*1782 - ஸ்பானியர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்து மினோர்க்கா தீவைக் கைப்பற்றினர். *1782 - ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

கருவிலேயே கலைந்திருப்பான்... இன்று கால்பந்து உலகை ஆள்கிறான்... #HBDCR7

மெஸ்சி கால்பந்து உலகின் ஜாம்பவான். அவரது காலத்திலேயே அவரை மிஞ்சி ஒருவன் நான்கு முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை ( FIFA Ballon d'Or ) வாங்குகிறான் எனில், நிச்சயம் அவன் லெஜெண்ட்தானே? ஆம், கிறிஸ்டியானோ ரொனால்டோ (CR7) கால்பந்து உலகின் பீஷ்மர். போர்ச்சுகல் நாட்டின் முகவரி, தூதுவர், அடையாளம், ஐகான் எல்லாமே.

கால்பந்து உலகின் ஜாம்பவான் ரொனால்டோ

ரொனால்டோவைப் பெற்றெடுக்க அவர் தாயை விட, போர்ச்சுகல்தான் பெரும் தவம் செய்திருக்க வேண்டும். இது அதீத மிகைப்படுத்துதல் அல்ல. எங்கே… ரொனால்டோ தவிர்த்து, உலகெங்கும் தெரிந்த ஒரு போர்ச்சுகல் பிரபலத்தின் பெயரைச் சொல்லுங்கள் பார்க்கலாம். முடியாதல்லவா? அர்ஜென்டினா எனில் மெஸ்சிக்கு முன்னதாக மாரடோனாவின் பெயர் உச்சரிக்கப்படும். இவர்கள் இருவரையும் சேகுவாரா பீட் செய்துவிடுவார். ஆம் சே பிறந்த மண் அர்ஜென்டினா. அமைதி அமைதி. இது மெஸ்சியை தூற்றும் கட்டுரை அல்ல. போலவே, ரொனால்டோ அடித்த கோல்கள், கிளப் மற்றும் போர்ச்சுகல் அணிக்காக அவர் நடத்திய ராஜாங்கம், வென்ற கோப்பைகள், வாங்கிய விருதுகள் பற்றிய கட்டுரையும் அல்ல. அப்புறம்…?

ஜோஸே மொரினியோ, மான்செஸ்ட் யுனைடெட் அணியின் மேனேஜர். கால்பந்து உலகம் மதிக்கும் பயிற்சியாளர். இவரும் போர்ச்சுகல். நாக்கில் இருந்து வார்த்தைகளுக்குப் பதில் அனலைக் கக்கும் மொரினியோ ஒருமுறை, ரொனால்டோவின் இனத்தை வெளிப்படையாக விமர்சித்திருந்தார். பின்னர் வருத்தம் தெரிவித்தது வேறு விஷயம். ஆனால், இன்று ரெனோல்டோ, தன்னால்  போர்ச்சுலுக்குப் பேர் வாங்கித் தந்து அந்தப் பயிற்சியாளருக்குப் பதில் அளித்திருக்கிறார்.

இப்போதிருக்கும் போர்ச்சுகல் கால்பந்து அணியை விட பல மடங்கு சிறந்தது லூயிஸ் ஃபிகோ காலத்து அணி. அவர்களால் தேசிய அணிக்காக பெரிய அளவில் கோப்பை வெல்லமுடியவில்லை. ஆனால், ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி 2016ல் யூரோ கோப்பை சாம்பியன். இதற்கு ரொனால்டோ மட்டுமா காரணம்? நிச்சயமாக இல்லை. சொல்லப் போனால் ஃபைனலில் ரொனால்டோ 15 நிமிடத்திற்கு மேல் களத்திலேயே நிற்கவில்லை. காரணம் காயம். அவரால் பெஞ்சில் நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார முடியவில்லை. காலில் கட்டுப்போட்டபடி டெக்னிக்கல் லைனில் நின்று பயிற்சியாளர் அவதாரம் எடுத்தார் ‛உன்னால் முடியும், உன்னால் மட்டுமே முடியும்’ என, ஒவ்வொரு வீரனையும் உசுப்பேத்தினார். வியூகம் அமைத்தார். அதை எக்ஸ்கியூட் செய்தார். கோப்பையும் வென்றார். காலங்காலமாக போர்ச்சுகல் வீரர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். ஆடாமலே ஜெயித்தார். இது எல்லோராலும் முடியாது. தன்னை அவமதித்த ஆசிரியர் மீது சேரைத் தூக்கி வீசி எறியும் குணம் படைத்தவரால் மட்டுமே முடியும். அது ரொனால்டோவால் மட்டுமே முடியும்.

ரொனால்டோ

இப்படி ரொனால்டோவால் மட்டுமே சாத்தியப்படும் விஷயங்கள் பல. 2013 சாம்பியன்ஸ் லீக் தொடரில் ரியல் மாட்ரிட் – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதல். ஒரு கட்டத்தில் லெஃப்ட் விங்கர் டி மரியா கொடுத்த கிராஸை, அந்தரத்தில் பறந்து, காற்றில் ரெண்டு செகண்ட் மிதந்து, படு ஃபோர்ஸாக ஒரு முட்டு முட்டுவார் ரொனால்டோ. பந்து கோல் கம்பத்தின் வலது மூலையில் தெறித்து கோல்போஸ்டுக்குள் விழும். ஒட்டுமொத்த அரங்கமும் விக்கித்து நிற்கும். கால்பந்தை உன்னிப்பாக கவனிக்கும் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், ‛நான் பார்த்த பெஸ்ட் ஹெட்டர் கோல் அதுதான்’ என்று.

அப்போது மான்செஸ்ட் யுனைடெட் பயிற்சியாளராக இருந்தவர் சர் அலெக்ஸ் பெர்குசன். பயிற்சியாளர்களில் துரோணர். அவரால், இந்த கோலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் கோல் அடித்தது அவர் சிஷ்யன். ரொனால்டோ அவர் வளர்த்த பையன். ரியல் மாட்ரிட்டுக்குச் செல்லும் முன் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் ரொனால்டோவை செதுக்கியவர் பெர்குசன். இருக்கட்டும். அதற்காக, வளர்த்த கிடா மார்பில் முட்டுவதை தாங்க முடியுமா? தனக்கு எதிராக கோல் அடிப்பதைத்தான் ஏற்க முடியுமா? தோல்வியைத்தான் பொறுத்துக் கொள்ள முடியுமா?

ஆட்டம் முடிந்ததும் நேராக டிரெஸிங் ரூம் சென்றார். டிஃபண்டர் எவ்ராவிடம் ‛அதான் கிராஸ் வருதே. அவன் ஜம்ப் பண்ணுவான்னு தெரியும். அந்த கிராஸைத் தடுத்திருக்கலாம்ல’ என ரெய்டு விட்டார். கோபத்தில் அப்படிச் சொன்னாரே தவிர, மீண்டும் மீண்டும் ரீப்ளே பார்த்தபோதுதான், அவருக்கே நாம் பேசியது எவ்வளவு அபத்தம் என்று தெரிந்தது. ‛ஜம்ப் செய்யும்போது ரொனால்டோவின் முழங்கால்கள், எவ்ராவின் தலைக்கு மேலே இருந்தன. அப்படி ஜம்ப் செய்யும்போது யாரால்தான் என்ன செய்து விட முடியும்’ என சமாதானம் அடைந்தார் பெர்குசன்.

கூடைப்பந்து வீரர்களையும் மிஞ்சும் ஜம்ப், சமயத்தில் உசைன் போல்ட்டை மிஞ்சும் ஓட்டம், லெஃப்ட், ரைட் என இரு கால்களிலும் புல்லட் வேகத்தில் பறக்கும் ஷாட், பந்து காலில் அகப்பட்டதும் மின்னல் வேகத்தில் டிரிபிளிங், சொடுக்குப் போடும் நேரத்தில் ஹெட்டர் கோல், திகைக்க வைக்கும் செட் பீஸ் கோல் என சகல விதத்திலும் ஒரு ஃபுட்பால் வீரனுக்குரிய, கம்ப்ளீட் பேக்கேஜ் ரொனால்டோ. உடம்பையும் அதற்கேற்ப வைத்திருப்பார். இல்லையென்றால் இத்தனை சாகசங்கள் சாத்தியப்படுமா என்ன? 32 வயதுக்காரனின் உடம்பா அது. சான்ஸே இல்லை. இப்படியே மெயின்டன் செய்தால், அவர் சொன்னதுபோல 40 வயது வரை விளையாடலாம். யாரும் நெருங்க முடியாது.

ரொனால்டோவின் பியூட்டியே அவரது கன்சிஸ்டன்ஸி. நம்பர்-1 என்பதை விட அதைத் தக்க வைப்பது கடினம். 22 வயதில் இருந்து இன்னும் ரேஸில் நம்பர்-1. மெஸ்சி அவ்வப்போது ஜொலித்து, காயத்தில் சிக்குவார் (மீண்டும் அமைதி). ரொனால்டோ அப்படி அல்ல. உடம்பை வைத்துதான் தொழில் என்பதால் அதற்கு கூடுதல் அக்கறை காட்டுவார். அவரது தொடைகளை கவனித்திருக்கிறீர்களா? பயிற்சியின்போது வேண்டுமென்றே கால் சட்டையை தொடை வரை மடித்து விட்டு, வேடிக்கை காட்டுவார். பளிங்கு போல இருக்கும். இப்படி இருந்தால்தான் அப்படி ஜம்ப் செய்ய முடியும். காற்றில் ரெண்டு செகண்ட் நிற்க முடியும்.

ரொனால்டோ

கால்பந்து வீரன் களத்தில் இரண்டு மணி நேரம் பம்பரமாக சுழல வேண்டுமெனில், மீதமுள்ள 22 மணி நேரம் அதற்கேற்ப உழைக்க வேண்டும். ரொனால்டோவைப் போல உடம்பு மீது அக்கறை கொண்ட வீரரைப் பார்க்க முடியாது. ‛இரவு 2 மணிக்கு ஐஸ் பாத் எடுப்பார். பயற்சிக்கு முதல் ஆளாக வந்து கடைசி ஆளாக வெளியேறுவார். இதுதான் அவரது சக்சஸ் சீக்ரெட்’ என்றார் ஒருமுறை பெர்குசன். ‛ஐ ஆம் தி பெஸ்ட்’ எனச் சொல்வது மட்டுமல்ல, அதை செயல்படுத்த எல்லா வழிகளிலும் மெனக்கிடுபவர் ரொனால்டோ.

ஆங், இதுவும் ரொனால்டோவால் மட்டுமே முடியும். யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், ஃபுட்பால் பிளேயர் என்பதைத் தாண்டி ரொனால்டோ ஒரு பிளே பாய். மளிகைக் கடை பட்டியல் போல நீளும் அவரது கேர்ள் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட். கல்யாணம் ஆகவில்லை. குழந்தை உண்டு. அப்பன் இருந்தும், அம்மா யாரெனத் தெரியாமல் வளர்வது ரொனால்டோவின் குழந்தை மட்டுமாகத்தான் இருக்கும். ‛எனக்கு தந்தை ஆக வேண்டும் என ஆசை இருந்தது. குழந்தை பெற்றுக்கொண்டேன். ஆனால், என் மகனின் தாய் யார் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரம் வரும்போது என் மகனிடம் மட்டும் அதைச் சொல்வேன். அவனும் புரிந்து கொள்வான் என நம்புகிறேன்’ என விளக்கம் சொன்னார்.

ஜூனியர் ரொனால்டோ மட்டுமா? கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிறப்பும் விசித்திரமானது. CR7 வயிற்றில் இருக்கும்போது, அந்த கருவைக் கலைக்க நினைத்தாராம் அவர் தாய். ஆம், கருவிலேயே கலைக்க நினைத்த குழந்தைதான் இன்று கால்பந்து உலகை ஆள்கிறது.

#HBDCR7

vikatan

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் வைரலாகும் ஃபெமினிஸ விளம்பரம்!

ஆடி காரின் ஃபெமினிஸ விளம்பரம் அமெரிக்காவில் பிரபலமாகத் தொடங்கியுள்ளது. தொடக்கத்தில் இந்த விளம்பரத்தை விமர்சித்தவர்கள் கூட தறபோது வரவேற்கத் தொடங்கியுள்ளனர்.  கார் ரேசில் தனது பெண் குழந்தையை ஏற்றிவிடும் தந்தை, போட்டியை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். போட்டியில் தனது பெண்ணைத் தவிர மற்ற அனைவரும், சிறுவர்கள். போட்டி தொடங்குகிறது. ஆண்களை முந்தி சிறுமி போடியில் வெற்றி பெறுகிறாள். பின்னர் அவளது தந்தையுடன் ஆடி காரில் பயணிக்கிறாள்.  

screenshot-47_07123.png

பல வருடங்கள் கழித்து நண்பர்களை சந்தித்து உருகிய ஜாக்கி சான்!

ஜாக்கி சான் தனது 'ஜே.சி ஸ்டன்ட் டீம்' உறுப்பினர்களைப் பல வருடங்களுக்குப் பின்னர் பார்க்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது. அங்கு குழுமி இருந்த பலரும் இந்தக் காட்சியக் கண்டு ஆராவாரம் செய்தனர். புராஜெக்ட் ஏ, ஆர்மர் ஆஃப் காட், போலீஸ் ஸ்டோரி, டிராகன் லார்டு உள்ளிட்ட படங்களில் தனது ஸ்ட்ன்ட் குழுவுடன் ஜாக்கி சான் நடித்த காட்சிககள் விழாவில் திரையிடப்பட்டன. தங்களது வாழ்வில் சகோதரர் ஜாக்கி, என்ன மாற்றங்களைக் கொண்டுவந்தார் என மூத்த ஸ்டன்ட் கலைஞர்கள் ஒவ்வொருவராக விளக்கினர். திடீரென ஸ்டன்ட் டீமில் உள்ள அனைவரும் ஜாக்கியின் முன் தோன்றி இன்பஅதிர்ச்சி கொடுத்தபோது, ஜாக்கி கண்ணீர் மல்க அனைவரையும் தழுவிக்கொண்டார். 40 வருடங்கள் தன் திரைவாழ்க்கையின் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொண்டமைக்காக, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

 

jackie-chan-would-really-like-to-see-som

கிண்டலுக்கு ஆளான ட்ரம்பின் ஆலோசகர்!

மெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் தாக்குதல் நடத்தியதற்காக ஒபாமா அதிபராக இருந்தபோது 6 மாதங்கள், ஈராக் நாட்டவர்கள் உள்ளே நுழையத் தடை விதித்து இருந்தார். ட்ரம்பின் 90 நாள் தடை உத்தரவை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது ஆலோசகர் கெல்லியான் கன்வே ஒபாமாவின் செயலை பச்சை பந்து கொலை- 'பவுலிங் கிரீன் மெசக்கர்' (Bowling Green massacre) என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒபாமா ஆதரவாளர்கள் டுவிட்டரில் கன்வேவைக் கிண்டலடித்து வருகிறனர். அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  பச்சைப் பந்தை அடித்து எதிர்பாராமல் மற்றொருவருக்கு அடிபடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். வேடிக்கையான இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகியுள்ளது.   

kellyanne_conway_06337.jpg

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்

 

 
 
 
1_3127168f.jpg
 
 
 

7_3127162a.jpg

6_3127163a.jpg

5_3127164a.jpg

4_3127165a.jpg

3_3127166a.jpg

2_3127167a.jpg

 

tamil.thehindu

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p56a.jpg

red-dot.jpg `ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்ளப்போவது இல்லை' என அறிவித்திருக்கிறார் பிரபல ஈரானிய நடிகை தாரனே அலிதூஸ்தி. `ஈரான் நாட்டு மக்களுக்கு, விசா கொடுப்பது இல்லை' என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முடிவை அடுத்து, அந்நாட்டு மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். இந்த நிலையில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான இறுதிப் பட்டியலில் நாமினேட் ஆகியுள்ளது ஈரான் திரைப்படமான `தி சேல்ஸ்மேன்'. அஸ்கார் ஃபர்காதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் அலிதூஸ்தி. அவருடைய இந்த அறிவிப்புக்கு, ஈரானில் மட்டும் அல்ல... ஹாலிவுட்டிலும் அமோக ஆதரவு. நிமிர்ந்து நில்!

p56b.jpg

red-dot.jpg`சென்னை 28 பார்ட்-3’ எடுக்கும் வெறியில் இருக்கிறது வெங்கட் பிரபு டீம். மூன்றாவது பார்ட்டில், நிச்சயம் ஒரு கிரிக்கெட் வீரர் நடிப்பார். அவர் வேறு  யாரும் அல்ல, ரவிச்சந்திரன் அஷ்வின்தான் என உற்சாகத்தில் இருக்கிறது அந்த டீம். அஷ்வினும் சினிமா டயலாக்குகளை மனப்பாடம் செய்து, டப்ஸ்மாஷ்களில் லைக்ஸ் அள்ளிவருகிறார். அஷ்வின் ராக்ஸ்!

 red-dot.jpgதமிழ்நாட்டுக்கு `ஜல்லிக்கட்டு' போல, கர்நாடகாவுக்கு `கம்பலா' என்ற எருமைப்பந்தயம். கடலோரக் கிராமங்களில் நடக்கும் இந்த விளையாட்டுக்கு, மிகப் பழைமையான வரலாறு உண்டு. ஆனால்  விலங்குகள் நல அமைப்புகள், ஜல்லிக்கட்டைப் போலவே அந்தப் போட்டிக்கும் தடை வாங்கின. ஆனாலும் தடைகளை மீறி கம்பலாவை நடத்தியுள்ளனர் கன்னடத் தேசத்து விவசாயிகள். கூடவே ஹூப்ளியிலும் கம்பலா தடையை நீக்கக் கோரி போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டுப் போராட்டத்தைப் பார்த்து, அதே மாதிரியான பெரிய போராட்டத்தை முன்னெடுக்க ரெடியாகிவிட்டது கர்நாடகா. கும்பலா போராடுங்க!

p56c.jpg

 red-dot.jpgகிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக 62 கிலோ எடையிலேயே இருக்கிறார் ராகுல் காந்தி. இந்த ஃபிட்னஸுக்குக் காரணம், ராகுல் காந்தியின் வொர்க்அவுட் மோகம். ஜிம், ஃபிட்னஸ் சென்டர், ஸ்விம்மிங் என்றெல்லாம் இல்லை. எப்போது நேரம் கிடைத்தாலும், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி என்பதைக் கட்டாயமாக வைத்திருக்கிறார் ராகுல். நள்ளிரவு நேரம் என்றால்கூட, ஒரு மணி நேரம் வாக்கிங், ஜாகிங்கை மிஸ்பண்ணாமல் பார்த்துக்கொள்கிறார் ராகுல். நட ராசா!

red-dot.jpgஹ்ருத்திக் ரோஷன் நடித்த `காபில்' படம் வெளியான அதே நாளில்தான் ஷாரூக் கானின் `ராயீஸ்' படமும் வெளியானது. ஷாரூக் கான், தன்னுடைய பாலிவுட் பலத்தால் அதிக தியேட்டர்களைப் பிடித்துவைத்துக்கொள்ள, `காபிலு'க்குப் போதிய அளவில் தியேட்டர் கிடைக்கவில்லை. இதனால், கோபமடைந்துவிட்டார் ஹ்ருத்திக்கின் அப்பா ராகேஷ் ரோஷன். `சரியான தியேட்டர்கள் கிடைக்காததால், எனக்கு 150 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம். பாலிவுட், அறமற்ற அசுத்தமான இடமாக மாறிவிட்டது. இங்கே நட்புக்கு இடம் இல்லை. இன்று திரைக்கு முன்னால் கைகுலுக்கிவிட்டு, முதுகில் குத்துகிறார்கள்' என்று கடுப்பு ஸ்டேட்டஸ் போட, `டோன்ட்வொரி பப்பா' என அப்பாவுக்கு ஆறுதலாக கமென்ட் போட்டிருக்கிறார் ஹ்ருத்திக். பாசக்கார ஃபேமிலி!

p56d.jpg

red-dot.jpgதான் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். பெங்களூரு பல்கலைக்கழகம் அளித்த கௌரவ டாக்டர் பட்டத்தை `வேண்டாம்' என வாங்க மறுத்துவிட்டார். கூடவே `நான் விளையாட்டுத் துறை குறித்து ஆய்வு நடத்திய பிறகு, டாக்டர் பட்டம் பெற்றுக்கொள்கிறேன்' என்றும் கூறி, அடுத்தடுத்து அபார சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். ஆல்வேஸ் அசத்தல்!

vikatan

  • தொடங்கியவர்
 

‛ஏதாவது ஒரு குரலைக் கேட்க வேண்டும் போலிருந்தது...’ - ஊர்சுற்றியின் அனுபவம்

ஓர் ஊர்சுற்றிக் கதை: 

பனி பொழிந்து கொண்டிருந்தது. அதையும் ஊடுருவி சில வண்டிகளின் விளக்கு வெளிச்சம். என் கருப்பு காரின் ஜன்னல்களை முழுமையாக மூடித் தான் வைத்திருந்தேன். இருந்தும், மிக மெல்லிய சந்துகளின் வழி, உள் ஊடுருவிய அந்த திருட்டுக் காற்று எனக்குப் பெரும் குளிர் கொடுத்தது. இதோடு 133வது தடவையாக அந்தப் பாடல் ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த ஆடியோ பிளேயரில் சிடி மட்டும் தான் போட முடியும். வண்டியில் வேறு சிடியும் இல்லை. இந்த சிடியில் மொத்தம் 11 பாடல்கள். அதுவே தான் திரும்ப, திரும்ப பாடிக் கொண்டிருந்தது. ஆனால், ஏனோ... எனக்கு அந்தப் பாடல்கள் போரடிக்கவில்லை. என் ஆடியோ பிளேயருக்கு அது பிடிக்கவில்லை. சிடியை தேய்த்துவிட்டது. பாடகரின் குரல் கொஞ்சம் விகாரமாகியிருந்தது.

ஊர்சுற்றி

பல நாள் உறக்கமின்மை அதன் எதிர்வினையைக் காட்டத் தொடங்கியிருந்தது. இனி சில நொடிகளேனும் கூட இதை ஓட்ட முடியாது என்ற நிலையை எட்டினேன். 

என் வண்டியை ஓரம் கட்ட இடப் பக்க இன்டிகேட்டரைப் போட்டேன். அது பனிப்புகைக்கு சிவப்பு வண்ணத்தைக் கொடுத்தது. புரியாத மொழியில் நீல வண்ணத்தில் ஏதோ எழுதியிருந்தது. தரையில் விரித்து வைக்கப்பட்டிருந்த அந்த இரும்பு போர்டுக்கு அருகில் "Hot Tee - Rs.8" என்று கோணல் மாணலான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு பேப்பர் தொங்கிக் கொண்டிருந்தது. வண்டியை விட்டு இறங்கி, நெருங்கிப் போனேன்.

பாய்லரில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. பாய்லரின் தலையில் அழுக்கேறிய வெள்ளைத் துணி கட்டப்பட்டிருந்தது. சூடு கையில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக இருக்கலாம். அது பார்க்க, ஒரு பஞ்சாபியின் தலையில் இருக்கும் டர்பன் போலிருந்தது. பஞ்சாபிகளுக்கு மட்டும் அத்தனை அடர்த்தியாக முடியும், மீசையும், தாடியும் எப்படி வளர்கிறது என்ற சந்தேகமும் சம்பந்தமில்லாமல் அந்த சமயம் எனக்குத் தோன்றியது. 

கடையில் யாருமேயில்லை. கொஞ்சம் காலை எக்கி, தலையை நீட்டி எட்டிப் பார்த்தேன். நீல நிற பிளாஸ்டிக் சேர் ஒன்று, சில நிமிடங்களுக்கு முன்பு தான் அதிலிருந்து ஒருவர் எழுந்து போனதை நினைத்து ஆசுவாசம் அடைந்துக் கொண்டிருந்தது. கடையின் முன்பகுதியை நிரப்பியிருந்த கண்ணாடி பாட்டில்கள் களைப்பாகக் காணப்பட்டன. அதிலிருந்த சில பிஸ்கெட்களும், கேக்குகளும் மரணத்தின் தருவாயில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தன. அதில் சில மரணமடைந்தும் இருந்தன.

டீ குடிப்பதோ, பிஸ்கெட் சாப்பிடுவதோ என் நோக்கமல்ல. டீ குடிக்கும் பழக்கமும் எனக்கில்லை. ஆனால், தானே மூடிக் கொள்ளும் என் கண்களை சில நிமிடங்களேனும் திறந்து வைக்க நான் யாருடனாவது பேசியாக வேண்டும். நான் எதனோடாவது பேசியிருக்கலாம் தான். நானும் பேசினேன் தான். ஆனால், எனக்கு என்னுடன் யாராவது பேச வேண்டும் போலிருந்தது. ஏதாவது ஒரு குரலை நான் கேட்க வேண்டும். அந்த விகாரமாகிப் போயிருந்த பாடகரின் குரல் மட்டுமே என் தலையில் ஓடிக் கொண்டிருந்தது. வேறு குரல் வேண்டும். என் காதுகளின் வழி புகும் அந்தக் குரல் என் தூக்க கலக்கத்தைப் போக்க வேண்டும். 

ஊர்சுற்றிஅந்தக் கடையில் யாருமில்லை. ஆனால், பாய்லரில் இருந்து வந்துக் கொண்டிருந்த புகை, சுற்றத்தில் யாரோ இருக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்த்தியது. அடிக்கும் குளிருக்கு பாய்லரின் ஆவி வெதுவெதுப்பாக இருந்தது. நின்று கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் நகர்ந்தன... அல்ல... ஒரு நிமிடத்திற்குள் இருக்கும் சில நொடிகள் நகர்ந்தன.

திடீரென , கடையின் பின்பக்கத்தில் இருந்து வேக நடையில் அவன், என் முன் வந்து நின்றான். அவன் தலைக் குளித்து பல நாட்களாகியிருக்கும் என்று நினைக்கிறேன். செம்பட்டை முடி, சுருள் கொண்டிருந்தது. முகம் கடுமையாக இருந்தது. அரும்பு மீசை தான். ஆனால், அதையே அவன் முறுக்கிவிட்டிருந்தான். "என்ன வேண்டும்?" என்பதை பார்வையிலேயே கேட்டான். ஏதாவது குரலைக் கேட்க வேண்டுமென்று இருந்த எனக்கு, அது கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்தது. 

அவன் தலை தாண்டி தெரிந்த மஞ்சள் நிற பிளாஸ்டிக் பார்டர் கொண்ட சிலேட்டில், "Hat Baatam Milk"" என்று எழுதியிருந்தது. 

"ஒரு பாதாம் பால்..." நீண்ட நேர அமைதிக்குப் பின் பேசியதால், என் குரல் எனக்கே புதியதாக இருந்தது. 

பதில் ஏதும் சொல்லவில்லை அவன் . என்னை அவ்வளவாக கவனிக்கவும் இல்லை. கவரில் தொங்கிக் கொண்டிருந்த அந்த பேப்பர் கப்பை எடுத்தான். எனக்கு கண்ணாடி டம்ளரில் வேண்டும் என்று சொல்ல நினைத்தேன். ஆனால், சொல்லவில்லை. சில அடிகள் நடந்து, சில நொடிகள் கடந்து என் வண்டியைப் பூட்டிவிட்டு திரும்பினேன். அதற்குள் பாதாம் பால் தயாராக இருந்தது.

வட்டங்களுக்குள் வட்டங்களாக நிறைந்திருந்த அந்த பாட்டிலின் மூடியில், சில வட்டங்களை மறைத்தபடி அந்த பேப்பர் கப் உட்கார்ந்திருந்தது. 

சூடே இல்லை தான். ஆனால், சுவையாக இருந்தது. எப்படியும் பதில் சொல்ல மாட்டான் என்பதால் "எவ்வளவு?" என்று சைகையில் கேட்டேன். "பத்து" என்று விரல்களைக் காட்டினான்.

20 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். அவன் கட்டைவிரலில் தடினமான கட்டு கட்டியிருந்தான். அதன் உச்சியில் மஞ்சள் நிறமாய் இருந்தது. அது குறித்து அவனிடம் கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், எதுவும் கேட்கவில்லை. 

காசை வாங்கிக் கொண்டு சில்லறையைக் கொடுத்தான். நான் சில நிமிடங்கள் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். தன் சிவப்பு நிற ஸ்வெட்டரைக் கழற்றினான். உள்ளே காவி நிற பனியன் அணிந்திருந்தான். அதை அந்த நீல சேரின் சாய்வில் தொங்கவிட்டுவிட்டு, கையில் கருப்பு நிற உறையிட்ட சின்ன பைபிளை எடுத்து படிக்கத் தொடங்கினான்.

அவனைப் பற்றிய நினைப்புடன் வண்டியில் ஏறினேன். வண்டியைக் கிளப்பினேன். அந்த பாடகரின் குரல் பாடத் தொடங்கியது. பனி அதிகமாகியிருந்தது. கொஞ்சம் அசந்தேன். எதிரே வந்த லாரியின் ஹாரன் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். வேகமாக லாரியை நோக்கி போய்க் கொண்டிருந்த என் வண்டியை இடது பக்கமாக திருப்பி, ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினேன். சில நொடி பெரு மூச்சிற்குப் பிறகு, அப்படியே தூங்கிப் போனேன். 

             - ஊர் சுற்றி.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

எல்லாமே சாதனைகள்தான்!

 
கடல் பசு
கடல் பசு
 
 

கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஏராளமான சாதனைகள் தொகுக்கப்பட்டிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்தானே. 2017-ம் ஆண்டுக்கான சாதனை புத்தகத்தில் குழந்தைகள் பிரிவில் நிறைய சாதனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாதனையும் ஒவ்வொரு வகையின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா?

வயதான கடல் பசு

உலகிலேயே மிகவும் வயதான ஆவுனியா (Dugong) அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கிறது. ஸ்னூட்டி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் ஆவுனியாவின் வயது 68 ஆண்டுகள்.

 

சாகச கக்கரம்

wheel_3126033a.jpg

வெறும் சக்கரத்தைக் கொண்டு வண்டி ஓட்ட முடியுமா? ‘முடியும்’ என்று சாதித்திருக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த கெவின் ஸ்காட். மோனோவீல் என்றழைக்கப்படும் சக்கரத்தில் உட்கார்ந்தபடி இவர் மணிக்கு 98 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றிருக்கிறார்.

 

வானளாவிய வாய்

mouth_3126035a.jpg

சிலர் வாயைத் திறந்தாலே, அண்ட சராசரமும் தெரிகிறது என்று கேலி செய்வார்கள். ஜெர்மனியைச் சேர்ந்த பெர்ன்ட் ஸ்மிட் வாயும் அந்த ரகம்தான். இவர் வாயைத் திறந்தால் 8.8. செ.மீ. அளவுக்கு இருக்கிறது. அதில் ஒரு ஆப்பிள் பழத்தைக்கூட சர்வ சாதாரணமாக நுழைத்துவிடுகிறார் இந்த மனிதர்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, steht und Text

 
 
ஹிந்தி திரையுலகின் சிறப்புக்குரிய நடிகர் அபிஷேக் பச்சன் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அமிதாப்பின் புதல்வர், ஐஸ்வர்யா ராயின் கணவர் என்பது அபிஷேக்கின் இன்னுமொரு இணையில்லா அடையாளங்கள்.

Happy Birthday Abhishek Bachchan

Bild könnte enthalten: 1 Person, Text

 
 
இலங்கை நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமைக்குரியவர்
இராஜவரோதயம் சம்பந்தன் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இலங்கையின் சிரேஷ்ட தமிழ் அரசியல் தலைமையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும். அனுபவம் வாய்ந்த அடையாள அரசியல்வாதிக்கு
தமிழ் மக்களின் சார்பில்  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தீவுகள் பலவிதம்!

 

ஜெர்சி தீவு
ஜெர்சி தீவு
 
 

# இந்தியாவில் உள்ள லட்சத் தீவுக்கு லட்சக்கணக்கில் உள்ள தீவு என்று அர்த்தம். ஆனால், இருப்பதோ 36 தீவுகள்தான். அதிலும் மக்கள் 10 தீவுகளில்தான் வசிக்கிறார்கள். கடலுக்கடியில் நீளும் சாக்கோஸ்லக்காதீவ் மலைத்தொடரின் வெளியே தெரியும் மலையின் உச்சிப் பகுதிகளே இந்தத் தீவுகள்.

lakshadeep_3126020a.jpg

# உலகில் உள்ள அழகான தீவுகளில் மொரிஷியஸ் தீவும் ஒன்று. இது ஆப்பிரிக்கக் கண்டத்துக்குப் பக்கத்தில் உள்ளது. இந்தத் தீவின் நீளம் மொத்த நீளமே 65 கி.மீ.தான். அகலம் 45 கி.மீ.. மொத்த நிலப்பரப்பு 2045 சதுர கி.மீ.

# இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையே ஜெர்ஸி என்ற தீவு உள்ளது. ஜெர்ஸி பசு, ஜெர்ஸி துணி போன்றவை இந்தப் பெயராலேயே அழைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

# கிழக்கு கரீபியக் கடலில் பிரிட்டனுக்குச் சொந்தமாக 60 தீவுக் கூட்டங்கள் உள்ளன. இவற்றை ‘வெர்ஜின் தீவுகள்’ என அழைக்கிறார்கள். இதில் மிகப் பெரியது டார்டோலா தீவு.

# வெர்ஜின் தீவுகளில் சில தீவுகள் தனியாருக்குச் சொந்தமானவை. ரிச்சர்ட் பிரான்சன் என்பவருக்கு மாஸ்லுய்டோ, நெக்கர் என இரண்டு தீவுகள் சொந்தம். இங்கு வரிச் சலுகைகள் அதிகம் என்பதால் பணக்காரர்கள் இங்கே போட்டிபோட்டுக்கொண்டு தீவுகளை விலைக்கு வாங்குகிறார்கள்.

virgin_3126019a.jpg

 

tamil.thehindu.

  • தொடங்கியவர்

உலகின் பழமையான எமோஜி இது தானாம்!

World oldest Emoji

கடந்த 1635ம் ஆண்டிலேயே எமோஜிக்களின் பயன்பாடு இருந்துள்ளது. சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான எமொஜி பயன்பாடு தற்போது ஸ்லோவாகியா நாட்டில் உள்ள ஸ்ட்ராசோவ் மவுண்டெயின்ஸ் எனும் கிராமத்தில்  கண்டறியப்பட்டுள்ளது.  பழைய ஆவணங்களை ஆய்வு செய்து கொண்டிருந்த வழக்கறிஞர், தற்செயலாக  முகவடிவிலான எமோஜியை பழைய ஆவணம் ஒன்றில் கண்டுள்ளார். இந்த செய்தி தீ போல பரவி, தற்போது உலகிலேயே பழமையான எமோஜி இது தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Press Trust of India Verifizierter Account @PTI_News

 
 
 

World's oldest #emoji - a smiley face scrawled in a legal document dating back to 1635 - discovered in Slovakia.

 

http://www.vikatan.com

ட்விட்டரில் ட்ரெண்டான #TNSaysNo2Sasi

fd_17127.jpg

சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே சமூகவலைதளங்களை இதுகுறித்து போஸ்ட்கள் ஆக்கிரமித்து வருகின்றன. இந்நிலையில் நெட்டிசன்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். குறிப்பாக #TNSaysNo2Sasi என்ற # டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

  • தொடங்கியவர்

நெய்மர் - பார்சிலோனாவின் வருங்காலம், பிரேசிலின் எதிர்காலம் #HBDNeymar

2014 ஜூன், கால்பந்தின் பிறப்பிடமாய்க் கருதப்படும் பிரேசில் மண்ணில் அரங்கேறியது உலகக்கோப்பைக் கால்பந்துத் திருவிழா. ஒவ்வொரு அணியும் பல்வேறு இலக்குகளோடு களம் காண, சொந்த மண்ணில் கோப்பை வெல்ல வேண்டும் என்ற தீராத் தாகம் பிரேசில் மக்களிடம். அந்தத் தாகத்தைத் தீர்க்கப்போகும் ஆபத்பாந்தவனாய் தெரிந்த ஒரே உருவம் – நெய்மர். நூற்றுக்கணக்கான போட்டிகளில் விளையாடிய, 30 வயதைத் தாண்டிய மாபெரும் அனுபவசாலியல்ல. வெறும் 22 வயது வாலிபன். ஆனால் ஒட்டுமொத்த தேசத்தின் கனவையும் சுமந்திருந்தான் அந்த இளைஞன். அந்தக் கனவுகள் அவன் மீது திணிக்கப்படவில்லை. தனது அசாத்திய திறமையால், கால்பந்து மைதானத்தில் காட்டிய மாயாஜாலத்தால் அனைத்து பிரேசில் மக்களையும் கனவு காண வைத்தான் அந்த இளைஞன்.

தன் மீதான அழுத்தமும் எதிர்பார்ப்பும் அளவு கடந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். தன் மக்கள் அவனிடம் இன்னும் எதிர்பார்க்க வேண்டும் என்று முதல் போட்டியிலேயே அறைகூவல் விட்டான் நெய்மர். 1-0 என குரோஷியா அணியிடம் பின்தங்கியிருந்த பிரேசில் அணியை 2 கோல்கள் அடித்து வெற்றி பெற வைத்த நெய்மர், உலகக்கோப்பைக் கனவை தன் மக்கள் மனதில் மேலும் ஆழமாய்ப் பதித்தான். கொலம்பியாவுடனான காலிறுதியில் காயப்பட்டு நெய்மர் விழுந்த நொடி, ஒரு தேசத்தின் கனவே சுக்குநூறாகியது. கண்ணீரோடு நெய்மர் வெளியேறியபோது மொத்த பிரேசிலும் கண்ணீர் வடித்தது. அந்தப் போட்டியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தாலும் எந்த பிரேசிலியனாலும் அந்த வெற்றியைக் கொண்டாட முடியவில்லை. இனி நெய்மர் அரையிறுதியில் ஆடப்போவதில்லை. கோப்பை? அந்தக் கேள்விக்குறி ஜெர்மனி அணியிடம் பெற்ற 7-1 தோல்வியால் நிதர்சனமானது.

நெய்மர் - பிரேசிலின் எதிர்காலம்

அந்த மாபெரும் தோல்வி எத்தனையோ விஷயங்களை உணர்த்தியிருக்கலாம். ஆனால் அது உணர்த்திய அசைக்க முடியாத உண்மை – நெய்மர் தான் பிரேசில் கால்பந்தின் எதிர்காலம் என்பது. அடுத்த ஆண்டே இந்து உண்மை மீண்டும் புலப்பட்டது. தென்  அமெரிக்கப் போட்டியான கோபா அமெரிக்கா தொடரில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டான் நெய்மர்;  வெளியேறியது பிரேசில். 2016 கோபா அமெரிக்கா – ஒலிம்பிக்கில் விளையாடும் பொருட்டு அணியில் நெய்மர் இல்லை – லீக் சுற்றோடு மீண்டும் நடையைக் கட்டியது பிரேசில். நெய்மர் அணியின் இதயமாகிவிட்டான்.

5 உலகக் கோப்பை வென்று அசாத்திய சாதனை படைத்த பிரேசில் அணியால், ஒரு ஒலிம்பிக் தங்கம் வெல்ல முடியவில்லை என்ற மாபெரும் ஏக்கம் இருந்தது. மீண்டும் பிரேசில் மண்ணிலேயே தொடர். மக்களின் மனதில் அதே ஏக்கம். அந்த ஏக்கத்திற்கான பதில் அதே நெய்மர். இம்முறை இறுதிப்போட்டி வரை தாக்குப்பிடித்துவிட்டான் கேப்டன் நெய்மர். தங்கம் தேடி வந்துவிட்டது. மொத்த தேசத்தின் கனவையும் தனி ஒருவனாய் நிறைவேற்றி கால்பந்து மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை மட்டும் கொண்டதல்ல என்று உலகிற்குப் பாடம் புகட்டினான். அதுவும் நிச்சயம் உண்மை தான்.

உலகின் மாபெரும் கிளப்பான பார்சிலோனா அணி, மெஸ்ஸி என்னும் ஜாம்பவானால் வெற்றிகள் கூடுகிறது. இது கால்பந்து ஞானம் அதிகம் இல்லாத சராசரி ரசிகன் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும் கருத்து. ஆனால் ஜாவி, இனியஸ்டா போன்றவர்களே பின்னிருந்து மெஸ்ஸியை இயக்கினார்கள். பார்சிலோனாவின் வெற்றிகளில் மெஸ்ஸிக்கு நிகரான பங்கு அவர்களுக்கும் உண்டு. தற்போது அரேபியாவில் விளையாடி வருகிறார் ஜாவி. இனியஸ்டாவும் நீண்ட நாள்கள் நிலைக்கப்போவதில்லை. ஆனால் MSN என்னும் புதிய மூவர் படையை அடையாளம் கண்டுவிட்டது பார்சிலோனா. மெஸ்ஸி, சுவாரஸ், நெய்மர் ஆகிய இந்த மூவேந்தவர்கள் தான் பார்காவின் நாடி. ஜாவியும் இனியஸ்டாவும் செய்ததை இன்று நெய்மரும் சுவாரசும் செய்கிறார்கள்.

ஆனால் நெய்மர் ஜாவியைப் போலவோ அல்லது இனியஸ்டாவைப் போலவோ வெறும் உந்து சக்தியாக மட்டும் இருக்கப்போவதில்லை. அவன் ஆளப்பிறந்தவன். அடுத்த மெஸ்ஸி, நெய்மர் தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. பார்சிலோனா அணி வருங்காலத்தில் நெய்மர் என்னும் வீரனை மையமாய் வைத்தே உருவாகும். அணியால் வாங்கப்படும் ஒரு புது வீரன் கூட, நெய்மருக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பதைப் பொருத்தே வாங்கப்படுவான். நெய்மர் நிச்சயம் பார்சிலோனாவின் வருங்காலம்.

இந்தக் கூற்றை வெறுமனே சொல்லிவிடவில்லை. சில வீரர்களைப் போல் வெறும் ஒரு பொசிஷனில் மட்டுமே ஆடக்கூடிய வீரன் அல்ல நெய்மர். ஸ்டிரைக்கராக, இடது விங்கராக, வலது விங்கராக ஏன் நடுகள வீரராகக் கூட நெய்மரால் விளையாட முடியும். அது எந்த ஒரு அணிக்கும் மிகப்பெரிய சொத்து. அப்படிப்பட்ட ஒரு வீரன் கால்பந்து அரங்கை அலங்கரிக்கவே பிறந்தவன்.

நெய்மர் பிரேசிலின் எதிர்காலம்

நெய்மரிடம் உள்ள ஒரே பிரச்னை, அவர் குணம். அவரின் செயல்பாடு. தன் நடவடிக்கைகளால் அடிக்கடி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் நெய்மர். இதைப் பல்வேறு முன்னணி வீரர்களும் சாடுகின்றனர். இளம் வயதில் இப்படியான குணம் நல்லதல்ல என்பது அவர்களின் கருத்து. இருக்கலாம். வெறும் 22 வயதில் ஒரு தேசத்தின் கனவை சுமந்தவன் எத்தனை அழுத்தம் சந்திக்க வேண்டி வரும். களத்தில் எத்தனை சவால்களை முறியடிக்க வேண்டும். இப்படியான வீரர்கள் ஆக்ரோஷத்துடன்  செயல்படுவது வழக்கம் தான். உதாரணம் நம் விராத் கோஹ்லி!

ஆனால் அடிப்படையில் நெய்மர் மிகவும் இளகிய மனம் கொண்டவர். 19 வயதில் ஒரு மகனுக்குத் தந்தையானவர். இந்த வயதிலும் குழந்தைகள் மீதான நெய்மரின் பார்வை நம்மை பிரமிக்க வைக்கும். தென்னாப்பிரிக்க அணியுடனான ஒரு போட்டிக்குப் பிறகு மைதானத்திற்குள் ஒரு சிறுவன் ஓடி வந்துவிட்டான். பாதுகாவலர்கள் அவனைப் பிடிக்க வருகையில், அந்தச் சிறுவனை அள்ளிச்சென்று தன் சக வீரர்களோடு வைத்து அவனை உற்சாகப்படுத்தினார் நெய்மர். மைதானமே மெய்சிலிர்த்துப் போனது.

நெய்மரின் திறமை சந்தேகத்திற்கிடமில்லாதது. பிரேசில் அணி, பார்சிலோனா கிளப் இரண்டுக்கும், நெய்மர் மிகப்பெரிய சொத்து. அதையும் தாண்டி நெய்மர் கால்பந்தின் எதிர்காலமும் கூட. அடுத்த தலைமுறை கால்பந்து ரசிகர்களுக்கு நெய்மர் தான் எல்லாமே. இனி வரும் இளம் கால்பந்து வீரர்களுக்கு நெய்மர் தான் ரோல் மாடல். நெய்மர் – கால்பந்தின் குழந்தை.

கால்பந்தின் ஜாம்பவான்களுக்கெல்லாம் ஜாம்பவானான பீலே இந்த வாரம், “கிறிஸ்டியானோ ரொனால்டோவைவிட நெய்மரே சிறந்த வீர்ர்” என்று கூறினார். சக நாட்டவர் என்பதால் கூறினாரா? இல்லை இது உண்மையா?, யார் சிறந்தவர் என்ற வாதமே வேண்டாம். ரொனால்டோ நிகழ்காலத்தின் வெளிச்சம். நெய்மர் நாளைய நம்பிக்கை. இன்று அவ்விருவருக்குமே பிறந்த நாள். எதிர்காலத்தில் பீலேவின் கூற்றைப்போல் ரொனால்டோவின் சாதனைகளை நெய்மர் மிஞ்சுவார் என்று இப்பிறந்த நாளில் அவரை வாழ்த்துவோம்.

ஹேப்பி பர்த் டே நெய்மர்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சசிகலா தேர்வு குறித்து இணையத்தில் பிரபலமாகும் மீம்களின் தொகுப்பு

 

தமிழகத்தின் முதல்வராக அ.தி.மு.க பொது செயலாளர் வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்கள் வைரலாக பரவும் மீம்களின் தொகுப்பு.

நிஜமாகிய நிழல் : அ.தி.மு.கவில் அன்றும், இன்றும் (ஓர் ஒப்பீடு - புகைப்படத் தொகுப்பு)

மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைTWITTER

முதலமைச்சராக ஒப்புக்கொண்டது ஏன்? - சசிகலா விளக்கம்

' முதல்வராக நான் பொறுப்பேற்க வேண்டுமென வற்புறுத்தியவர் ஓ. பி.எஸ்.தான்'- சசிகலா

மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைTWITTER

தமிழக முதல்வராகிறார் சசிகலா

சசிகலா நியமனத்திற்கு விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைTWITTER

நிஜமாகிய நிழல் : அ.தி.மு.கவில் அன்றும், இன்றும் (ஓர் ஒப்பீடு - புகைப்படத் தொகுப்பு)

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: அரசியல் மாற்றத்துக்கு அச்சாரமா?

மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைYTFOI FACEBOOK

சசிகலா முன் உள்ள சவால்கள் என்ன?

ஜெயலலிதா - சசிகலா தோழமை (புகைப்படத் தொகுப்பு)

மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைTWITTER

ஆடை, அலங்காரம்: ஜெயலலிதா பாணியில் சசிகலா

அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா

மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைFACEBOOK

ஜெயலலிதா இடத்தில் சசிகலா ( புகைப்படத் தொகுப்பு)

நாஞ்சில் சம்பத் மனம் மாறியது எப்படி?

மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைTWITTER

சம்மதம் தெரிவித்தார் சசிகலா

அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா நியமனம்

மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைFACEBOOK மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைTWITTER மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைTWITTER

 

http://www.bbc.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.