Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மனிதனின் தவறைத் திருத்திய இயற்கை! (Photos)


மனிதனின் தவறைத் திருத்திய இயற்கை! (Photos)
 

ரஷ்யாவின் உஸுரி வளைகுடா மிக அழகானதோர் பகுதி.

ஒரு காலத்தில் அருகில் இருந்த தொழிற்சாலைகளிலிருந்து தேவையற்ற கண்ணாடிப் போத்தல்கள் இந்தக் கடற்கரையில் அளவுக்கு அதிகமாகக் கொட்டப்பட்டன.

உடைந்த கண்ணாடிகள் நிரம்பிய பகுதி என்பதால், மனிதர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

காலங்கள் சென்றன. கூர்மையான உடைந்த கண்ணாடி துண்டுகள் எல்லாம் நீரால் அரிக்கப்பட்டு, கூழாங்கற்களைப் போன்று வழவழப்பாகி விட்டன.

சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை என்று அத்தனை கண்ணாடித் துண்டுகளும் தற்போது கற்கள் போல உருமாறி, கரைக்கு வந்து சேர்கின்றன.

கடற்கரை முழுவதும் வண்ணக் கண்ணாடிக் கற்களால் அழகாகக் காட்சியளிக்கிறது.

இந்தப் பகுதியைக் காண்பதற்காக உள்நாட்டிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் செல்கின்றனர்.

கரைகளில் ஒதுங்கும் கண்ணாடிக் கற்களை சேகரிப்பதற்கும் சற்றுத் தொலைவில் உறைந்திருக்கும் பனிப்பாறைகளைப் புகைப்படம் எடுப்பதற்கும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

மனிதன் செய்த தவறை அழகாய்த் திருத்தியிருக்கிறது இயற்கை!

 

123

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

ஆலன் ஹட்ஜ்கின்

 
aalan_3128358f.jpg
 
 
 

மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரி இயற்பியலாளர் சர் ஆலன் லாயிட் ஹட்ஜ்கின் (Sir Alan Lloyd Hodgkin) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷயர் பகுதியில் உள்ள பான்பரி என்ற இடத்தில் (1914) பிறந்தார். ராணுவத்தில் பணியாற்றிய தந்தை ஒரு போரில் உயிரிழந்தார். அப்போது இவருக்கு 4 வயது.

* அறிவியலில் அதிக ஆர்வமும், திறனும் கொண்டிருந்தார். தந்தைவழி உறவினர்கள் பலரும் வரலாற்று அறிஞர்கள் என்பதால், வரலாற்றிலும் அதிக நாட்டம் ஏற்பட்டது. பள்ளிக்கல்விக்குப் பிறகு, எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது.

* வரலாற்றைவிட, இயற்கை வரலாற்றிலேயே கூடுதல் ஆர்வம் இருந்ததால், டிரினிட்டி கல்லூரியில் உயிரியல், வேதியியல் கற்றுத் தேர்ந்தார். விலங்கியல் ஆசிரியர் அறிவுறுத்தியதால் கணிதம், இயற்பியலையும் கற்றுக்கொண்டார். அப்போது, கல்லூரி சோதனைக்கூடத்தில் ஒருசில ஆய்வுகளை மேற்கொண்டார். விலங்குகளின் நரம்பு அமைப்புகள் குறித்தும் ஆராய்ந்தார்.

* முதலில் ஆராய்ச்சி மாணவராகவும், பின்னர் டிரினிட்டியின் ஃபெல்லோவாகவும் ஆய்வுகள் மேற்கொண்டார். அங்கு பல அறிவியல் அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நியூயார்க் ராக்ஃபெல்லர் நிறுவன சோதனைக்கூடத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்பும் தேடிவந்தது.

* 1938-ல் கேம்பிரிட்ஜ் திரும்பினார். 2-ம் உலகப்போரின்போது, ராணுவத்தில் இணைந்தார். ரேடார் கருவியை மேம்படுத்தும் ஆய்வில் முக்கியப் பங்காற்றினார். இரவு நேரங்களில் போரிடுவதற்கேற்ப, ரேடார் ஸ்கேனிங், டிஸ்ப்ளே அமைப்புகளை மேம்படுத்தினார். போர் முடிந்து, மீண்டும் கேம்பிரிட்ஜ் திரும்பியதும் உடலியல் சோதனைக்கூட ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

* அங்கு ஏற்கெனவே பணியாற்றிவந்த சகாக்களுடன் இணைந்து உயிரினங்களின் அயனி இயக்கங்கள், நரம்பு இழைகள் குறித்து ஆராய்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரிஇயற்பியல் பேராசிரியராக 17 ஆண்டுகளும், பிறகு லீசெஸ்டர் பல்கலைக்கழக வேந்தராக 13 ஆண்டுகளும் பணியாற்றினார். நீண்டதூரப் பயணம், மீன்பிடித்தல் ஆகிய இரண்டும் அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.

* நரம்பு இழைகளின் ரசாயன, மின் பண்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். மூளையின் நரம்பு செல்கள் இடையே நரம்பு இழைகள் மூலம் மின்தூண்டுதல்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் ரசாயன செயல்பாடுகள் குறித்த கண்டுபிடிப்புக்காக சர் ஜான் எக்கல்ஸ், ஆண்ட்ரூ ஃபீல்டிங் ஹக்ஸ்லி ஆகிய இருவருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசை 1963-ல் பெற்றார்.

* இவர் கண்டறிந்த, நரம்பு செல் சவ்வுகளின் உயிரி மின் தூண்டுதல்களை விவரிக்கும் தொடர் மின் முனைவு மாற்றம் இவரது பெயரிலேயே ‘ஹட்ஜ்கின் சுழற்சி’ எனப்படுகிறது. அதீத உணர்வுத் தூண்டல் காரணமாக நரம்பு சவ்வு முறிவு ஏற்படுவதைக் கண்டறிய இது உதவியது. ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* ராயல் சொசைட்டியின் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணியாற்றினார். பல நூல்களை எழுதி வெளியிட்டார். மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராகவும் செயல்பட்டார். ராயல் சொசைட்டியின் காப்ளே பதக்கம் வென்றார். 1972-ல் சர் பட்டம் பெற்றார்.

* அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பல்வேறு அறிவியல் அமைப்புகளின் உறுப்பினராகவும் செயல்பட்டார். பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கின. உயிரி இயற்பியல் களத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கிய ஆலன் லாயிட் ஹட்ஜ்கின் 84-வது வயதில் (1998) மறைந்தார்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

ட்வீட்டி மகிழ்ந்த சச்சின், சேவாக்!

Sachin,Sehwag

அண்மையில் சச்சின் மற்றும் சேவாக் டெல்லியில் சந்தித்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து, சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், 'டெல்லியில், கடவுளின் தரிசணம் கிடைத்தது'. என இருவரும் எடுத்த புகைப்படத்துடன் ஸ்டேட்டஸ் தட்டினார். அதேபோல், சச்னினும், 'ஹரே சேவாக், உங்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி' என ட்வீட்டியுள்ளார். பேட்டிங்கில் இணைந்து அசத்திய இருவரும், இணைந்து ட்வீட் செய்தது வைரலாகி வருகிறது.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die sitzen

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்னைக்கு என்ன கதை வெச்சிருக்கார் மிஸ்டர் K? #MorningMotivation

 

மிஸ்டர் K

 ’சுந்தர்  ஃப்ரெண்ட்தானே அவன்? ரொம்ப செல்ஃபிஷாத்தான் இருப்பான்... எதுக்கும் பார்த்துப் பழகு’

’ப்ச்.. அவளும் அவ நடையும். கொஞ்சம் அகங்காரம் பிடிச்சவளா இருப்பா போல!’

‘அந்த கம்பெனில எல்லா மேனேஜருமே முசுடாத்தான் இருப்பாங்க. பார்த்து இரு’ 

‘அந்தக் கடைல சர்வீஸ் கேவலமாத்தான் இருக்கும். வேணாம் விடு’

மேல இருக்கற நாலு உரையாடல்லயும் உள்ள ஒற்றுமை என்னன்னு கவனிச்சீங்களா? இல்லையா? இன்னொருக்காகூட படிங்க. 

என்ன பாய்ண்ட்னு கண்டுபிடிச்சாச்சா? ஆம். எல்லாத்துக்கும் இருக்கற ஒற்றுமை; ‘முன் முடிவுகள்’.

ஒரு விஷயம், அல்லது நபர் பற்றி நாமா ஒரு இமேஜ் க்ரியேட் பண்ணிக்கறது. அது பாஸிடிவா இருந்தா.. வெரிகுட். பெரிய தப்புக்கு வழிவகுக்காது. நமக்கு ஒரு ஏமாற்றமா, பாடமா அமையலாம். ஆனா நெகடீவான இமேஜ் வைக்கறது.. ரொம்பவே தப்புன்னு ஆய்வு முடிவுகள் சொன்னாதான் நம்புவீங்களா?

Attitude அதாவது ஒருத்தருடைய மனப்பான்மை, பழக்க வழக்கம் சம்பந்தமான ஆய்வுகள் மேற்கொள்றவங்க, இந்த முன்முடிவுகள் எடுக்கற ஆசாமிகளை ‘Judgmental Behavior’ உள்ளவங்கனு சொல்றாங்க. அது மட்டுமில்லாம, 'அந்த நடத்தை உள்ளவங்களை Red Flag போட்டு மார்க் பண்ணி வெச்சுக்கோங்க. அவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க'ன்னும் சொல்றாங்க. ஆக, நாம அப்படி இருந்தா, நம்மளைத் திருத்திக்கறது ரொம்பவும் நன்மை பயக்கும்.

ஒருத்தரைப் பத்தி முன்முடிவுகள் எடுக்கறது எதுனாலனு நச்னு நாலு பாய்ண்ட்ல சொல்லிருக்காங்க பெரியவங்க. 


1.  தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை

ஒரு மனிதன், தன் குடும்பத்துல, அலுவல்கள்ல, சுய விருப்புகள்லதான் நெனைச்சத அடைய முடியலைனா, தெரிஞ்சோ, இல்லை  தெரியாமலோ முன் முடிவுகள் எடுக்கற ஆளா இருப்பார். உதாரணத்துக்கு ஆஃபீஸ்ல ஒருத்தருக்கு ப்ரமோஷன் கிடைச்சா, கிடைக்காதவங்க ‘அவன் எதாச்சும் பண்ணித்தான் அந்த போஸ்டுக்குப் போயிருப்பான்னு’ பேசறது.  

2. பொறாமை

இதுக்கு உதாரணமே வேண்டாம்.  யாராவது சந்தோஷமா இருந்தா, ஜாலியா இருந்தா, ஜெயிச்சா பொறமைல இந்த Judgmental ஆசாமிகள்கிட்ட இருந்து கமெண்ட் வரும்.

3. ரொம்ப கறார் ஆசாமிகள்

இது கொஞ்சம் புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கலாம். ஆனா யோசிச்சா புரியும். எல்லாம் தன் கண்ட்ரோல்ல இருக்கு, தான் செய்யறதெல்லாமே சரினு நெனைக்கற ஆசாமிகள்ல பலரும் இந்த முன்முடிவுகளோட கமெண்ட் பண்ற ஆளாத்தான் இருப்பாங்க.

4. சார்பு நிலை உள்ளவங்க

இது ரொம்ப சிம்பிள். ஒருத்தருக்கு அல்லது ஒரு விஷயத்துக்கு சாதகமா பேசணும்னு முடிவெடுக்கறவங்க நிச்சயம் இப்டித்தான் இருப்பாங்க.         

மேல இருக்கற 4 பாய்ண்ட்ஸும் நம்ம கிட்ட இருந்தா, யோசிச்சுக்கறதும், திருத்திக்கறதும் ரொம்ப முக்கியம்.  இந்த மாதிரி நடத்தை உள்ளவங்களால நீங்க பாதிக்கறதா இருந்தா, அவங்ககிட்ட இதையெல்லாம் படிச்சுக் காமிச்சு, ‘பாருங்க இப்டி இருக்கறது தப்பு’னு சொல்லுங்க. ஓகேவா?

-------------------------------------------

தை டைப் பண்ணிட்டு உட்கார்ந்திருக்கறப்ப மிஸ்டர் K வந்தான். ‘என்னடா டைப் பண்ணிட்டிருக்கனு கேட்டுட்டு, பூராத்தையும் படிச்சான். கெக்கபிக்கனு சிரிச்சான்.

“ஏண்டா சிரிக்கற?”

“இல்ல... ப்ரீ ஜட்ஜ்மெண்டல் தப்புன்ற. அப்றம் அதுலயே அப்டி ப்ரீ ஜண்ட்மெண்டலா இருக்கறவங்க, இந்த மாதிரி ஆளுகதான்னு நீயே ப்ரீ ஜட்ஜ்மெண்ட் பண்ற”

“ப்ச்.. அது நான் பண்ல. பல ஆய்வுகள்.. ஆராய்ச்சிகள் சொல்றது. சைகலாஜிகல் ரிசர்ச்லாம் என்ன சொல்லுதுன்னா...”

நான் சொல்லச் சொல்ல.. ‘கம்னு இரு’ அப்டினு சைகை காட்டினான். எதுவோ யோசிச்சான். சொல்ல ஆரம்பிச்சான்:

“ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல, டிரெய்ன்ல ஒரு பெரியவரும், 25 வயசு இருக்கற அவர் பையனும் ஏர்றாங்க. கம்பார்ட்மெண்ட்ல கணிசமான கூட்டம். அந்த மகன், எல்லாரையும் வெறிச்சு வெறிச்சுப் பார்க்கறான். ரயில் ஜன்னலெல்லாம் எட்டி எட்டிப் பார்க்கறான். மேல இருக்கற ஃபேனை பார்க்கறான். சங்கிலியைத் தொட்டுப் பார்க்கறான். பெட்டில இருந்தவங்க, ‘தம்பி... அது அபாயச்சங்கிலி.. தொடக்கூடாது’னு கத்த, அவன் அப்பா, அவனைத் தொட்டுக் கூப்டு பக்கத்துல உட்கார வைக்கறார். 

ரயில் நகருது. ஸ்டேஷனெல்லாம் தாண்டி, வெட்ட வெளில ரயில் ஸ்பீட் எடுக்க ஆரம்பிக்குது. இந்தப் பையன் ஜன்னல்கிட்ட போய் உட்கார்ந்து பார்த்துட்டு, “அப்பா.. அப்பா.. மரம்லாம் பின்னாடி நகருதுப்பா.. இங்க வாங்க.. இங்க பாருங்க”னு கத்தறான். எதிர்ல உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் முகம் சுளிக்கறார். ‘என்னடா இவ்ளோ பெரிய பையனா இருந்துட்டு இப்டி பிஹேவ் பண்றான். லூசா இருப்பான் போல’னு நினைக்கறார். 

கொஞ்ச நேரத்துல, அதே விண்டோ வழியா மேல பார்த்தவன் இன்னும் கொஞ்சம் அதிக சத்தத்துல கத்தறான்.  “அப்பா.. அங்க பாருங்க. மேகம்லாம் கூடவே வருது. ஐஐஐ... செமயா இருக்குப்பா”னு கத்தறான். இப்ப அந்தப் பெரியவர் பொறுமை இழக்கறாரு.

“யோவ்.. உன் பையனை எதாச்சும் நல்ல டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயா.. எதைப்பார்த்தாலும் ஆஆஆனு வாயப்பொளந்து பார்த்துகிட்டு... கூச்சல் போட்டுகிட்டு.. ச்சே”னு சொல்லிடறாரு.

அப்பா அமைதியா “ஸாரிங்க பெரியவரே”னு சொல்லிட்டு பையனைக் கூப்டு தன் பக்கத்துல உட்கார வெச்சுக்கறார். பையனும், மெதுவா “ஸாரிப்பா”ங்கறான் அப்பாவைப் பார்த்து. “ச்சே.. ச்சே.. நீ ஏன்பா ஸாரி சொல்ற?”னு தன் பையனைப் பார்த்து சொல்லிட்டு, பெரியவர்கிட்ட திரும்பறார் அப்பா. சொல்றார்;

“டாக்டர்கிட்ட இருந்துதாங்க வர்றோம். டிஸ்சார்ஜ் ஆகி, இன்னைக்குத்தான் வெளில வர்றான்.  அவனுக்கு 4 வயசுல போன கண்பார்வை, இப்பதான் திரும்ப கெடைச்சிருக்கு. அதான் எதப்பார்த்தாலும் உற்சாகமா கத்தறான். அவன் சார்புல நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்”

மொத்த கம்பார்ட்மெண்டும் அமைதியாகிடுது. முன்முடிவோட அவனைத் திட்டின பெரியவர் கண்கள்ல கண்ணீர் வழிஞ்சுட்டிருந்துச்சு”


மிஸ்டர் K, கதையைச் சொல்லி முடிச்சுட்டு என்னைப் பார்த்தான். நான் பேச்சு வராம உட்கார்ந்துட்டிருந்தேன். 

“இப்டி சிம்பிளா கதைல சொல்லிட்டா படிக்கறவங்க இந்த நாள் இனிய நாள்னு நாலு பேர்கிட்ட ஷேர் பண்ணுவாங்க...  வர்ட்டா..? நெக்ஸ்ட் மீட் பண்றேன்”

vikatan

  • தொடங்கியவர்

உலகின் பிரபல பாப் பாடகரான பாப் மார்லி பிறந்த தினம் (பிப்.6, 1945)

யமேக்கா ரெகே இசைக்கலைஞரும், இசைப் பாடகருமான பாப் மார்லி 1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் ஜமைக்காவில் பிறந்தார். உலகில் பல ரெகே இசைக் கலைஞர்களின் ஆல்பங்களில் இவருடைய ஆல்பங்கள்தான் அதிகம் விற்றவை. த வெய்லர்ஸ் இசைக்குழுவின்

 
 
 
 
உலகின் பிரபல பாப் பாடகரான பாப் மார்லி பிறந்த தினம் (பிப்.6, 1945)
 
யமேக்கா ரெகே இசைக்கலைஞரும், இசைப் பாடகருமான பாப் மார்லி 1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் ஜமைக்காவில் பிறந்தார். உலகில் பல ரெகே இசைக் கலைஞர்களின் ஆல்பங்களில் இவருடைய ஆல்பங்கள்தான் அதிகம் விற்றவை. த வெய்லர்ஸ் இசைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ராஸ்த ஃபாரை இயக்கத்தில் இவரும் முக்கியமானவர் ஆவார்.


மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.

1938 - ஆஸ்திரேலியா, சிட்னியில் பொண்டாய் கடற்கரையில் எழுந்த கடல் அலைகள் 300 பேர்களைக் கொன்றது.

1951 - நியூஜெர்சியில் பயணிகள் ரெயில் ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் கொல்லப்பட்டனர். 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

1952 - இரண்டாம் ஜார்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட 7 நாடுகளுக்கு அரசியானார்.

1958 - ஜெர்மனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைடெட் உதைபந்தாட்ட அணியின் 8 பேர் கொல்லப்பட்டனர்.

1959 - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

1996 - அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

2000 - டார்ஜா ஹலோனென் பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்.

2004 - மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சர்ச் இஞ்சின் க்ரியேட்டர்... ஆப்ஸ் டெவலப்பர்... டெக் டீச்சர்..12வயதில் இத்தனையுமா?

ஆண்ட்ராய்டு ஆப்ஸ்

10 வயதுடைய சிறுவர்களுக்கு கம்ப்யூட்டரில் அதிகபட்சமாக தெரிந்த வேலை என்பது, பெரும்பாலும் பெயின்ட் செய்வது, பின் பால் கேம் விளையாடுவதாக இருக்கு. ஆனால் தன்னுடைய ஒன்பதாவது வயதில் உலகின் கேட்ஜட் தயாரிப்பில் முதல் நிறுவனமான ஆப்பிளுக்கு ஓர் ஆப்பை டிசைன் செய்தவர், டான்மி பக்‌ஷி.

கனடாவில் வாழும் இந்தியர்களான டான்மி குடும்பத்தினர் 2004-ஆம் ஆண்டு, அங்கே குடியமர்ந்தனர். டான்மியின் தந்தை புனீட் பக்‌ஷி ஒரு ட்ரக் கம்பெனியில் ஆண்ட்ராய்டு டெவலப்பராக வேலைசெய்து வருகிறார். 'ஐந்து வயதிலேயே டான்மி கம்ப்யூட்டரின் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பான். எப்போதும் கம்யூட்டரை பற்றிய சிந்தனையும் ஆண்ட்ராய்டு டெவலிப்பிங்-கின் மீது கொண்ட ஈடுபாடும்தான் அவன் உலகின் மிக இளமையான ஆப் டெவலப்பராக காரணம்' என கண்கள் மிளிர்கிறார் டாம்னியின் தந்தை.

தன்னுடைய ஒன்பதாவது வயதில் வாய்ப்பாடு கணக்கை எளிமையாக, அதே சமயம் ஜாலியாக படிப்பதற்காக டான்மி ஒரு ஆப்பை உருவாக்கினார். இதை முதலில் பப்ளிஷ் செய்ய ஆப்பிள் நிறுவனம் முன்வரவில்லை. ஒரு சில நிராகரிப்புகளுக்குப் பிறகு 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் ப்ராண்டுடன் ஐ-யூஸர்களுக்காக அது வெளியிடப்பட்டது.

அதன் பின் கோட் ப்ரோக்ராமிங்கில் தன் முழு நேரத்தையும் செலவிட ஆரம்பித்த டான்மிக்கு இப்போது இருக்கும் அனைத்து ப்ரோக்ராமிங் மொழிகளும் அத்துப்படி. கடந்த ஜூலை மாதம் பெங்களூருவில் உள்ள 'ஐ.பி.எம் டெவலப்பர் கனெக்ட்'டில் 'ஆஸ்க் டான்மி' எனும், தான் உருவாக்கிய உலகின் முதல் வெப் அடிப்படையிலான 'NLQA (Natural Question Answering System)'ன் 8 பாயின்ட்டுகள் கொண்ட வழிமுறைகளை IBM WATSON’S COGNITIVE CAPABLITIES-ன் அடிப்படையில் விளக்கியுள்ளார்.

டான்மி பக்‌ஷி



இந்த 8 பாயின்ட் கொண்ட அடிப்படைகள் ஒரு நபர், நிறுவனம், ஓர் இடம் மற்றும் தேதிகளுக்கான கேள்விகளுக்கு மிகச் சரியான தகவலை மட்டுமே விடையாக தரும். மேலும் 'டான்மி டீச்சஸ்' எனும் தன்னுடைய யூடியூப் சேனலில் ஆயிரக்கணக்கான சப்ஸ்க்ரைபர்-க்கு ஆண்ட்ராய்டு ப்ரோக்ராமிங் குறித்த வகுப்புகளையும் சந்தேகங்களையும் விளக்கி வருகிறார் டான்மி.

ப்ரோக்ராமிங் தவிர்த்து அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்டுள்ள டான்மி, 'இன்னும் நிறைய ஆப்கள் உருவாக்க வேண்டும், நிறைய ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் உருவாக வேண்டும்' என்று கூறுகிறார்.

டான்மிக்கு கம்ப்யூட்டர் தாண்டியும் பல விஷயங்களில் ஈடுபாடு அதிகம். நண்பர்களோடு பைக்கிங் செல்வது, டேபிள் டென்னிஸ் ஆடுவது மிகவும் பிடிக்கும். இந்த இரண்டும் தனது புரோகிராமிங் மூளையை இன்னும் செம்மைப்படுத்துவதாக சொல்கிறார் டான்மி. எழுதுவதும் டான்மியின் திறமைகளில் ஒன்று. IOS ஆப்ஸ் உருவாக்கும் சிறுவயது டெவலப்பர்களுக்காக ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். ஹலோ ஸ்விஃப்ட் (Hello swift) என்ற அந்தப் புத்தகமும் ஹிட்.

தற்போது ஆப்பிள் ஐ-போன் இல்லாமல் ஐ-வாட்ச்சை உபயோகப்படுத்தக்கூடிய முயற்சியிலும், தன்னுடைய 'ஆஸ்க் டான்மி' எனும் தகவல் தேடும் சேர்ச் இன்ஜினில் நிறைய முன்னேற்றங்களை கொண்டுவர முயற்சி செய்து வருவதாக கூறுகிறார் டான்மி. 100%  துல்லியமான சேர்ச் இன்ஜினை கொண்டு வருவதும், வியாபாரங்களுக்கு கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் இருந்து பெறுவதற்காக ஒரு ஆப் தயாரிப்பதும் தான் தன்னுடைய தற்போதைய ஆய்வு எனக் குறிப்பிட்டுள்ளார் டான்மி. 

பெஸ்ட் விஷஸ் ப்ரோ!

vikatan

  • தொடங்கியவர்

திங்கள் கிழமையை இப்படியும் எதிர்கொள்ளலாம் பெண்களே!

திங்கள் கிழமை

 
'ஞாயிற்றுக்கிழமை' என்றவுடனே மனம் சந்தோஷப்படுவதுபோலவே திங்கள் கிழமை என்று சொன்னவுடனே சட்டென்று ஒரு சுணக்கம் வந்துவிடும். நேற்று ரிலாக்ஸாக இருந்த உடலை, மனதை மீண்டும் சுறுசுறுப்புக்குக் கொண்டு வருவது எளிதல்ல. பெண்களும் இதில் விதிவிலக்கு இல்லையே. பெண்களுக்கு ஞாயிறன்றும் வீட்டு வேலைகள் அதிகளவிலிருந்தாலும்  நம்முடைய கணவருக்கு, நம்முடைய பிள்ளைகளுக்கு என அந்த வேலைகளையும் செய்யும்போது அந்த வேலை சுமையாக தெரிந்திருக்காது. அதனால் பெண்களுக்கும் திங்கள்  சோர்வு படர்ந்த பொழுதாகத்தான் விடியும்.

சரி, அதற்காக காலண்டரில் திங்கள் கிழமையே இல்லை என்று அறிவித்துவிட முடியாது அல்லவா. அதனால் அதை எதிர்கொள்வதில் வித்தியாசம் காட்டி அசத்தலாம் பெண்களே!

வாரத்தின் ஒரு நாள்தான்:  இன்று திங்கள் கிழமை என்பதை கொஞ்சம் மாற்றி, வாரத்தின் முதல் நாள், எனவே உற்சாகத்தோடு வரவேற்போம் என எண்ணுங்கள். மேலும், திங்கள் கிழமையும் வாரத்தின் ஒரு நாள்தான், செவ்வாய்கிழமை எப்படி புறப்படப் போகிறமோ அதேபோல இன்றைக்கும் என நினையுங்கள். இது நம்மை நாமே பழக்கிக்கொள்ளும் ஒரு வகை மனப் பயிற்சிதான். அதனால், பழகப்பழக இது நம் வசமாகும்.

சோம்பலை அனுமதியுங்கள்:  திங்கள் கிழமை என்றதுமே சோம்பலை விரட்ட வேண்டும் என நினைத்து, ரொம்ப சீக்கிரமே எழுந்திருத்தல் தொடங்கி எல்லாவற்றிலும் பரப்பரப்பு காட்டுவீர்கள். அது தேவையற்ற பதற்றத்தைத்தான் தரும். எனவே அதைத் தவிர்த்து, இன்று சோம்பலாகத்தான் இருக்கும் என ஒத்துக்கொள்ளுங்கள். அதைத் தவிர்க்காமல் ஆனாலும் குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க முடியும் எனும் நம்பிக்கையும் கொள்ளுங்கள்.

விளையாட்டு 

புதிய விளையாட்டு: பெண்களுக்கு திங்கள் கிழமையின் பெரும் வேலையே, குழந்தைகளைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதுதான். ஏனென்றால் நேற்று விடுமுறை நாள் என்பதால் இரவில் அதிக நேரம் டிவி பார்த்துகொண்டு, காலையில் எழுந்திருக்க நேரம் கடத்துவார்கள். அதனால், புதிய விளையாட்டுகளை இன்றிலிருந்து தொடங்குங்கள். முதல் நாளே, அந்த விளையாட்டைப் பற்றி சுவாரஸ்யமாக சொல்லி வைத்துவிடுங்கள். காலையில், உறங்கும் பிள்ளைகளின் காதில் மெதுவாக அந்த விளையாட்டின் பெயரைச் சொன்னதும் துள்ளி எழுவார்கள். அப்படிச் செய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று நீங்கள் புதிய விளையாட்டுகளைத் தேடித் தெரிந்துகொள்வீர்கள். இரண்டு, நீங்களும் குழந்தைகளுடன் விளையாடி புத்துணர்ச்சியாவீர்கள். 

நேரம் மிச்சமாக்கும் சமையல்: வழக்கமாக பெண்களின் திட்டமிடலைக் காலி செய்வது சமையல்தான். பருப்பு வேகவில்லை. குக்கர் விசில் அடிக்க லேட்டாவது... என ஒவ்வொரு நாளையும் டென்சனாக்குவது சமையல்தான். அதனால், திங்கள் கிழமையில் விரைவாக செய்யும் உணவு வகைகளை மட்டுமே செய்யுங்கள். காலை ஒரு வகையும் மதியத்திற்கு ஒன்றும் எனச் செய்யாமல், இரண்டுக்கும் சேர்த்து ஒரே வகை உணவைச் சமைக்கலாம். வீட்டினர் கேட்டால், 'Monday Special' என்று சொல்லுங்கள். இரண்டு வாரங்கள் கழித்து, அவர்கள் இதற்கு பழகி விடுவார்கள். அல்லது சமையல் செய்ய உதவிகள் செய்ய முன் வருவார்கள். இரண்டில் எதுவானாலும் நல்லதுதான்.

அலுவலகம் செல்வோர்: அலுவலகம் செல்லும் பெண்களுக்கு, வீட்டினரைத் தயார் செய்வது, தான் புறப்படுவது என இரட்டைச் சுமை. அதனால், அலுவலகத்தில் குவிந்திருக்கும் வேலைகளை வீட்டிலேயே நினைக்காதீர்கள். இதுபோலதானே சனிக்கிழமையும் இருந்தது. சமாளித்துக்கொள்ளலாம் என்று தயாராகுங்கள். அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு சென்றாலே முக்கால் பகுதி டென்சன் குறைந்து விடும். அதற்கு என்ன செய்யலாம் என்பதை மட்டும் திட்டமிடுங்கள். 

தித்திக்கும் இனிப்பாகட்டும் திங்கள் கிழமை.  

vikatan

  • தொடங்கியவர்

வைரலாகும் ட்ரம்ப் கார்ட்டூன்!

Der Spiegel's Trump Cartoon

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் குடியுரிமைக் கொள்கைக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனி நாட்டில் 'Der Spiegel' என்ற வார பத்திரிகை ஒன்று, அமெரிக்க சுதந்திர தேவி சிலையின், தலைப் பகுதியை வெட்டி, ரத்தம் வடியும் கத்தியுடன் ட்ரம்ப் நிற்கும் கார்ட்டூன் ஒன்றை, தனது அட்டைப் படமாக வெளியிட்டுள்ளது. 'ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது' என்ற கருத்தில் இந்த கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த கார்ட்டூன் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கோஹ்லிக்கு அதிக லைக்ஸ் வாங்கித் தந்த தோனி பேபி! #HBDZivaDhoni

பேபி

ஃபேஸ்புக் பிரபலம், செலிபிரிட்டி. இவ்வளவு ஏன் ஃபேஸ்புக் ஓனர் மார்க் சக்கர்பெர்க் இவுங்களோட ஃப்ரோஃபைல் பிக்சரை விட இந்த பேபி ஃபோட்டோக்கு தான் லைக்ஸ் பிச்சுக்குது. ஆமாங்க தோனியோட குழந்தை ஸிவாவுக்கு தான் இந்த பெருமை. இதுவரை தோனி தன்னோட ஃபேஸ்புக் பக்கத்தில் நான்கு முறை ஸிவாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 


 

Bild könnte enthalten: 1 Person, Innenbereich

 


 

14449803_1794518027438085_76921400088937

 


 

Bild könnte enthalten: 1 Person, Bart und Sonnenbrille

 


 

12745701_1710957145794174_84102352775471

 


எல்லாமே லைக்ஸ் மழை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு முறை ஸிவாவின் புகைப்படத்தை ஃப்ரோஃபைல் பிக்சராக வைத்த தோனிக்கு இரண்டு முறையுமே மில்லியன் லைக்ஸ் ஹிட் தான். இது மட்டுமல்ல ஸிவாவின் இன்னொரு புகைப்படமும் ஃபேஸ்புக் வைரல் தான். 4.6 மில்லியன் லைக்ஸுடன் இந்திய கேப்டன் விராட் கோலியுடன்  ஸிவா எடுத்துக் கொண்ட‌ புகைப்படம் தான் சென்ற வருடத்தில் விராட் கோலியின் அதிகம் லைக் செய்யப்பட்ட போட்டோ.


 

Bild könnte enthalten: 3 Personen, Bart, Nahaufnahme und Innenbereich

 


அனுஷகா ஷர்மாவுக்காக அவர் கோவப்பட்டது, 3 இரட்டை சதங்கள் என மாஸ் காட்டினாலும் தெறி ஹிட் அடித்தது செல்ஃபி வித் ஸிவா தான்.  இரண்டாவது பிறந்த நாளை இன்று கொண்டாடும் ஸிவாவின் பர்த்டே மிகவும் ஸ்பெஷல்.

ஸிவா பிறந்த போது உலகக் கோப்பைக்காக தோனி ஆஸ்திரேலியாவில் இருந்தார். ''ஐஅம் ஆன் நேஷனல் ட்யூட்டி'' எனக்கூறி ஸிவாவை ஒன்றரை மாதம் கழித்தே பார்த்தார் மிஸ்டர் கூல். தனது ஓய்வு நேரத்தை ஸிவாவுடன் கழிப்பதும், வித்தியாசமான கெட்டப்புகளில் புகைப்படம் எடுப்பதும் தோனியின் தலையாய வேலை.


A very happy birthday to this little angel. #ziva pic.twitter.com/YAzgRKhHKR

— Sushant Singh Rajput (@itsSSR) 6 February 2017

ட்விட்டரில் பிரபலங்கள் பலரும் ஸிவாவுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். தோனியின் சுயசரிதை படமாக்கப்பட்ட போது அதில் ஹீரோவாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது ட்விட்டர் பக்கத்தில் லிட்டில் ஏஞ்சல் என ஸிவாவுடனான புகைப்படத்தை ட்விட்டியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரோஹித் ஷர்மா என செல்ஃபி வித் ஸிவா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, முசெளரியில் தோனி மற்றும் சாக்ஷியுடன் ஹாப்பி பர்த்டே கொண்டாடுகிறார் ஸிவா...

ஹாப்பி பர்த்டே பேபி...

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 3 Personen, Sportler und Text

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் இளம் முன்னணி துடுப்பாட்ட வீரர் டரன் பிராவோவின் பிறந்தநாள்.
இப்போது கிரிக்கெட் சபையுடனான மோதல் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருக்கிறார்.

Happy Birthday Darren Bravo

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சொந்த தோலை விற்ற நபர் : அருங்காட்சியகப் பொருளாக மாறிய விசித்திரம்

 

தனது தோலில் குத்தப்பட்டுள்ள பச்சைகளை காட்சிப்படுத்துவதற்காக, தோலை ஒரு அருங்காட்சியக ஏற்பாட்டாளருக்கு  விற்பனை செய்துள்ள நிகழ்வு சுவிற்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. 

_93887087_6e494ff4-1a3c-317a-b4e1-f99c8c

சுவிற்சர்லாந்தின் ஷுரிச்நகரில் வசித்து வரும் 40 வயதான டிம்ஸ்டெய்னர் என்பவர்,  தனது தோலில் அதிக பச்சை குத்திக் கொள்வதில் ஈடுபாடுடையவராவார் .

_93887093_eb4d0684-945e-441f-b919-09512b

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு,  ஜெர்மனியில் அருங்காட்சியக ஏற்பாட்டாளராகவுள்ள, ரிக் ரெயின்கிங்கி என்பவரிடம் தனது பச்சை குத்திய தோலை விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் ரிக் ரெயின்கிங்கியின் ஏற்பாட்டில் அருங்காட்சியகம் எங்கு நடந்தாலும்,  அங்கு டிம் ஸ்டெய்னரின்  பச்சை குத்திய தோலானது காட்சி பொருளாக காண்பிக்கப்படுகிறது.

_93880782_timmon2010.jpg

_93887088_tim-2006---now_23868410893_o.j

மேலும் தற்போது தற்காலிக காட்சி பொருளாக இருக்கும் அவரது தோல், அவர் இறந்த பிறகு நிரந்தரமாக ரிக் ரெயின்கிங்கியின் காட்சிக்கூடத்திற்கு கொடுக்கப்படுவதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளார். அத்தோடு உலகில் அழியா புகழை பெறுவதற்காகவே தான் இதை செய்ததாக அவர் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

500 வருடங்களாக இயங்கிவரும் 'மகளிர் மட்டும்' மார்க்கெட்!

மகளிர்

பொதுவாக, மார்கெட்டில் இருக்கும் கடைகளில் பெரும்பாலும் ஆண்களைத்தான் பார்க்க முடியும். அங்கும் இங்குமாக அமர்ந்திருக்கும் சில பெண்களும் காணக் கிடைக்கலாம். ஆனால் ஒரு மார்க்கெட்டை 500 வருடங்களுக்கும் மேலாக முழுக்க முழுக்க மகளிர் மட்டுமே நடத்தி வருகிறார்கள் என்றால் ஆச்சர்யம்தானே?!

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் அமைந்திருக்கிறது அந்த 'ஒன் அண்ட் ஒன்லி பெண்கள்' நடத்தும் மார்க்கெட். இங்கு வெயில், குளிர் என்று பாராமல் கடுமையாக உழைத்து தங்கள் குடும்பங்களை காப்பாற்றிவருகிறார்கள் அந்த பெண் வியாபாரிகள்.

6_11053.jpg

'இமா கெயித்தேல் (Ima keithel)'... இதுதான் மார்க்கெட்டின் பெயர். 'இமா' என்றால் அம்மா. 'கெயித்தேல்' என்றால் பஜார். உப்பு, மிளகாய் முதற்கொண்டு பருப்பு வகைகள், பழங்கள், மீன்கள், துணிமணிகள், கைவினைப் பொருட்கள் என சகல பொருட்களையும் இங்கு பெண்கள் விற்பனை செய்கிறார்கள். பூதக்கண்ணாடி கொண்டு தேடினாலும் விற்பனை செய்யும் ஓர் ஆணைக்கூட கண்ணில் பார்க்கமுடியாது.

மணிபூரின் 'மைத்தி' சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் நடத்தும் இந்த மார்க்கெட், ஆசியாவிலேயே மிகப் பெரிய பெண்கள் மார்க்கெட். பரம்பரை பாரம்பர்யமாக கடைகளை நடத்திவரும் இவர்களுக்கு பின் உள்ள கதையை அறிய, நாம் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

4_11399.jpg

16-ம் நூற்றாண்டு முதல் இருந்தே இந்த மார்க்கெட் நடத்தப்பட்டு வருகிறது. அந்தக் காலகட்டத்தில் 'மைத்தி' பிரிவைச் சேர்ந்த ஆண்கள், மன்னர்களிடமே பணியில் இருந்ததாலும், பெரும்பாலும் சீனா, பர்மா உடனான போர்களில் ஈடுபட்டு வந்ததாலும் வீட்டுக்கு வருவது அரிதாகிவிட்டது. அதனால் குடும்ப பாரத்தைப் பெண்களே சுமக்க நேரிட்டது.

குடும்பத்தைக் காப்பாற்ற விவசாயம் செய்த 'மைத்தி' பெண்கள், விளைந்த அரிசி, காய்கறிகளையும் தாங்களே சந்தைக்குச் சென்று விற்க ஆரம்பித்தார்கள். அப்படி அவர்கள் தங்களுக்கு மட்டுமேயான வியாபாரத் தளமாக ஒரு சந்தையை உருவாக்கினார்கள். வியாபார நுட்பம், ஒற்றுமை, கடின உழைப்பு என அவர்கள் உருவாக்கியதுதான் இந்த மார்க்கெட்.

இப்போது இந்த மார்க்கெட்டில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. கடையை நடத்தும் பெண்களுக்கு திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்பது இவர்களின் நிபந்தனை. அவரவர் குடும்ப வம்சாவழிகள் தவிர, வேற்று வியாபாரிகள் யாருக்கும் இங்கு கடை வைக்க பெரும்பாலும் அனுமதி வழங்கப்படுவதில்லை. 90% 'மைத்தி' இனப் பெண்களும், 10% இதர இனப் பெண்களும் இங்கு கடை வைத்திருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் இந்த மார்க்கெட்டை அரசாங்கம் காலி செய்தது. தங்களுக்கென்று ஓர் இடம் வேண்டும் என்று இந்தப் பெண்கள் ஒற்றுமையுடனும் வலிமையுடனும்  போராட, அரசாங்கமே இவர்களுக்காக புதிய கட்டடம் கட்டித்தந்தது. தற்போது இந்தப் புதுக் கட்டடத்தில்தான் 'இமா கெயித்தேல்' மார்க்கெட் இருக்கிறது.

'எங்கள் வாழ்வாதாரம் நிறைவாக இருக்கிறது. எந்த ஒரு பிரச்னை வந்தாலும் நாங்கள் ஒற்றுமையாகத்தான் போராடுவோம்' என்று யுடியூப் வீடியோக்களில் பேசுகிறார்கள் இந்த மார்க்கெட் பெண்கள். 'சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் இந்த மார்க்கெட்டை வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள் என்றால் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையே காரணம்' என்று இவர்களைப் புகழ்கிறார்கள் மணிப்பூர்வாசிகள்.

இது மகளிர் மட்டும் வெற்றி!

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
சின்னம்மா சின்னம்மா... ஓ.பி.எஸ் எங்கேம்மா..?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?1f602.png?
 
  • தொடங்கியவர்

ஓட்ட பந்தயத்தில் அசத்திய பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர்

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

100p1.jpg

twitter.com/Kozhiyaar: வளரும் வரை அக்காவின் தியாகமும், வளர்ந்த பிறகு அண்ணனின் தியாகமும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல!

twitter.com/minimeens: எல்லாத்தையும் மேலே ஒருத்தன் பார்த்துட்டேதான் இருக்கான்கிறதை, சில வீடியோ பார்க்கிறப்ப நம்பத்தான்வேண்டியிருக்கு!

twitter.com/kalasal: முகம் தெரியாத நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதைவிட, முகம் தெரியாத எதிரிகள் இருக்கிறார்கள் என்பதுதான் இணையத்தின் சுவாரஸ்யமே!

100p2.jpg

twitter.com/Kozhiyaar :  `என் கணவர் என்னை நல்லா பார்த்துக்குறார்' என்பதற்கு, `நான் என்ன சொன்னாலும் கேக்குதுபா அந்த லூஸு' எனப் பொருள்கொள்ளவும்.

twitter.com/twittornewton:  படிக்கும்போது வீட்டில் அரசியல், சினிமா பேசியது இல்லை. ஆனால், இப்போது தந்தையிடம் இருந்து லேட்டெஸ்ட் மீம்ஸ் வாட்ஸ்அப்பில் வருகிறது. #ஸ்மார்ட்போன்

twitter.com/aroobii_: பகடி செய்வதின் மூலம், அவசர அவசரமாகக் குரூரங்களைக் கடந்துவிடவே சமூக வலைதளங்கள் உங்களைப் பழக்குகிறது என்பதை எப்போதேனும் யோசித்திருக்கிறீர்களா?

100p3.jpg

twitter.com/kalasal: சசிகலா கும்பிடுற மாதிரி இருக்க, போட்டோஸ் எல்லாமே `கோபால் என்னை மன்னித்துவிடுங்கள் கோபால்'ங்கிற மாடுலேஷன்லயே இருக்கு.

twitter.com/BoopatyMurugesh:  தமிழ்நாடு மீனவர்களை, தமிழ்நாடு காவல் துறையிடம் இருந்தே காப்பாற்ற முடியலை. இதுல எப்படி இலங்கை ராணுவத்திடம் இருந்து எல்லாம் காப்பாத்துறதோ தெரியலை.

twitter.com/NamVoice: அன்று களத்தில் இருந்து சுடச்சுட வந்த வீடியோ எல்லாம் மாஃபிங்காம். ஒரு வாரம் கழிச்சு போலீஸ் வெளியிடுற வீடியோ எல்லாம் ஆதாரமாம்.

100p4.jpg

twitter.com/kalasal: நீங்கள் உங்களை யாரிடம் எல்லாம் நிரூபித்துக்கொண்டிருக் கிறீர்களோ, அவர்களிடம் எல்லாம் தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.

twitter.com/aroobii_: தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை, `ஐயோ பாவம், துரோகம் செய்யும் அளவுக்கு என்ன வெறுமையோ' எனப் பரிதாபப்படும் அளவுக்குச் சிலரைப் பக்குவப்படுத்திவிடுகிறது இந்த வாழ்வு.

twitter.com/g4gunaa: சீப்பை ஒளிச்சு வைச்சாச்சு. இனிமே கல்யாணம் எப்படிப் பண்றீங்கன்னு பார்த்துர்றேன்டான்னு யோசிச்சு, மெரினாவுல போராட்டம் பண்ணத் தடை போட்டிருக்காங்கபோல ;)

twitter.com/ikrthik: இருசக்கர வாகனத்தில் முன்னமர்த்துகையில், மகளின் தலை சாலை மறைக்கிறது, இப்படித்தான் தெரிந்துகொள்கிறேன் அவள் வளர்ந்துவருவதை!

vikatan

  • தொடங்கியவர்

 

ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் அரிதாக நடந்த பனிப்பொழிவு

ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் பனிப்பொழிவு நடைபெற்று வருகிறது; ஜெபெல் ஜைஸ் மலையில் வெப்பநிலை -2 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியது.

  • தொடங்கியவர்

ட்ரம்ப்புக்கு எதிராக இணைந்த மைக்ரோசாப்ட்,ஆப்பிள்..!

ட்ரம்பை எதிர்த்து மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள்

சிரியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்கா வருவதற்கு தடை உத்தரவு போட்டு அதிரவைத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்த தடை உத்தரவை கண்டித்து உலகம் முழுவதுமிருந்து கன்டன குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த தொழில் நுட்ப நிறுவணங்கள் இணைந்து  ட்ரம்ப் விதித்த தடைக்கு எதிராக சட்ட ஆவணம் ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். 'இந்த தடையின் மூலம்  தங்களது வணிகம் பாதிக்கப்படும்' என ஆப்பிள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், பேஸ்புக்,ட்விட்டர் , கூகுள் போன்ற 97 தொழில் நுட்ப நிறுவனங்கள் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளன. அமேசான், டெஸ்லா போன்ற சில முன்னனி நிறுவனங்கள் இதில கையெழுத்திடவில்லை.

 

 

ஜெயம் ரவி நடித்துள்ள 'வனமகன்' படத்தின் டீசர்..!

vanamagan_02314_17351.jpg

'போகன்', 'டிக் டிக் டிக்' பட வேலைகளை முடித்து விட்டு, ஜெயம் ரவி இயக்குநர் விஜய் இயக்கத்தில் வனமகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இன்று இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

...

தமிழறிஞர் மணவை முஸ்தபா மறைந்தார்

manavai mustafa

தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார். இவர் எழுதிய 'இசுலாமும் சமய நல்லிணக்கமும்' எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும் இவர் எழுதிய ' மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்' எனும் நூல் 1996-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன. அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் மணவை முஸ்தபா நிறுவி உள்ளார்.  கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி, கணினி களஞ்சிய பேரகராதி, செம்மொழி உள்ளும் புறமும், தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் உள்பட ஏராளமான நூல்களை இயற்றியிருக்கிறார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒரு பெரியவர் சொன்ன கதை இது

article_1486443304--9po.jpgஒரு பெரியவர் சொன்ன கதை இது. திருமணமாகியும் பல வருடங்களாகக் குழந்தை பிற்காமையினால் ஓர் ஆச்சிரமத்திலிருந்து ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்தனர். 

சில வருடங்களுக்குள் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் இந்தத் தம்பதியினர், ‘எமக்குத்தான் குழந்தை பிறந்துவிட்டதே’ என எண்ணி, வளர்த்த பிள்ளையை அதே ஆச்சிரமத்தில் மீண்டும் சேர்த்து விட்டனர். 

ஆனால், துர்அதிஷ்டவசமாக அவர்களுக்குப் பிறந்த பிள்ளை இறந்துவிட்டது. அவர்கள் மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்வதற்காக வைத்தியரிடம் சென்றனர், தாய்மையாகும் பாக்கியம் இனிமேல் கிடையாது என, வைத்தியர் கையை விரித்துவிட, மீண்டும் அதே ஆச்சிரமத்துக்குச் சென்று, முன்னர் ஒப்படைத்த குழந்தையை மீண்டும் பெற்றுக்கொண்டனர் 

அந்தப் பிள்ளை இவர்களிடம் கேட்ட முதற்கேள்வி, “அம்மா, தம்பிப்பாப்பா சுகமாக இருக்கிறானா”? தூய அன்பின் வியாபகம் எங்கே இருக்கின்றது பார்த்தீர்களா?

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வெற்றி மட்டுமல்ல.. இவைகளிலும் கவனம் இருக்கட்டும்! #TransformationTuesday

"வெற்றி"... இந்த நிமிஷம் உலகத்துல பெரும்பாலானவர்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் வார்த்தை. இந்த நிமிஷம் மட்டுமில்ல வாழ்க்கையோட அனைத்து நிமிடங்களையும் "வெற்றி" என்ற இலக்கை அடையறதுக்காகத்தான் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வெற்றிதான் வாழ்வின் ஒரே இலக்கா?, வெற்றி மட்டும்தான் நம் வாழ்க்கையா?. நம் வாழ்க்கையில நம்மை விட முக்கியமான விஷயம் எதுவுமில்லை. ஒரு சின்ன புன்னகையோடு இதைப் படிக்கத தொடங்குங்கள்...

வெற்றி வேண்டாம் சிரிப்பு போதும்

உடல் ஆரோக்கியம்:

உங்க வாழ்க்கைக்கு நீங்கதான் ராஜா. உங்க திறமைய, தகுதிய வேறு யாரும் சொல்லித்தான் நீங்க உணர்ந்துக் கொள்ளணும் என்பதில்லை. ‘நாம ஃபிட்டா இல்லையோ?’ உங்களப் பற்றி நீங்களே தாழ்வா நினைச்சுக்குற உணர்வ முதல்ல விரட்டுங்க. உங்க உடம்பு மேல முதலில் நீங்கதான் அக்கறையா இருக்கணும். அதுக்காக அவசியமான டயட், அத்யாவசிய உடற்பயிற்சினு கொஞ்சம் மெனெக்கெடலாமே. உடல் ஆரோக்கியத்தோட நிறுத்திட்டு, மன ஆரோக்கியத்தை கைவிட்டுடக் கூடாது. இதையெல்லாம் பின்பற்றி உங்களது கனவுகளை நோக்கி ஆரோக்கியமாக பயணியுங்கள். ஏனெனில் உங்களது கனவுகளே அழகான உலகத்தை உங்களுக்கு அளிக்கும்.

உள்ளத்தில் புத்துணர்ச்சி:

நாள் முழுவதும் உங்களைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களது இயல்பிற்கேற்ப உங்களை நீங்களே புத்துணர்வு செய்து கொள்ளுங்கள். பாடல் கேட்பது மிகவும் பிடிக்குமெனில், உங்களுக்குப் பிடித்த பாடல்களை கேளுங்கள். இல்லை புத்தகப்பிரியர் எனில் அதில் மூழ்குங்கள். இயற்கையை விரும்புபவர் எனில் இயன்ற அளவு இயற்கையை ரசித்துக் கொண்டே நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

 நல்லெண்ணங்கள்:

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்னு நாம பள்ளிக்காலத்தில் படித்திருப்போம். உங்களைச் சுற்றி நல்ல பழக்கங்கள் கொண்ட மனிதர்களை வைத்திருங்கள். நல்லெண்ணங்கள் நமக்கு தைரியத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும். அது உங்களை உற்சாகமூட்டும். உங்களை சுற்றி நடக்கின்ற அனைத்து விஷயங்களையும் உள்வாங்கி, நல்லதை அதிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களிடம் சமூகத்தின் மீதான அன்பும், அக்கறையும் ஊற்றெடுக்கும்.

வெற்றி வேண்டாம் சிரிப்பு போதும்

 சுயநம்பிக்கை :

மனதிற்குள்ளே ஒரு தோல்வியை எண்ணி நீங்களே உங்களை வருத்திக்கொள்ளாதீர்கள். எதிர்மறையாகவும், தரக்குறைவாகவும் உங்களை நீங்களே வரையறுக்காதீர்கள். தெரியாமல் நீங்கள் தவறு இழைக்கும்போது, உங்களை நீங்களே சிறிது கேலி செய்து கொள்ளுங்கள். அது தவறு மீதான குற்றவுணர்ச்சியை குறைக்கும். தன்னம்பிக்கையூட்டும் வாசகங்களை உங்கள் மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டே இருங்கள். அவை உங்களுக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும்.

எதிர்மறை எண்ணங்கள் :

உங்களது முயற்சிக்கு சுற்றியிருப்பவர்கள் பேசும் எதிர்மறையான எண்ணங்களை உங்கள் செவிக்குள் ஏற்றாதீர்கள். எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையையும் அழித்து விடும். எப்போதும் புன்னகைத்திருங்கள்.

மன்னிப்பு :

‘மன்னிக்குறவன் மனுஷன்... மன்னிப்பு கேட்குறவன் பெரிய மனுஷன்..." ,"விருமாண்டி" அன்னலட்சுமி சொன்ன இந்த புது மொழி, நிச்சயம் நல்வாழ்க்கைக்கான வழி. மன்னிக்கப் பழகுங்கள், மன்னிப்பு கேட்கவும் பழகிக் கொள்ளுங்கள். இதயம் கனமற்று நிம்மதியாக இருக்கும். 

சுயபரிசோதனை :

உங்களை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள். நாம் செய்கின்ற செயல் சரிதானா? இதனால் யாராவது பாதிக்கப்படுகிறார்களா? என அனைத்து கோணங்களையும் ஆராய முயலுங்கள். அப்போது தெளிவாக எந்த முடிவையும் உங்களால் சுயமாக எடுக்க முடியும். இந்த சுயபரிசோதனை பெரிய முடிவுகளுக்கு மட்டுமல்ல, வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பும்போது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டோமா என்பதிலும் இருக்கலாம்.

வெற்றி வேண்டாம் சிரிப்பு போதும்

நானே எனக்கு தோழன் :

உங்களுடைய முதல் நெருங்கிய தோழராக நீங்களே இருங்கள். இது எவ்வித எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டதாக அமையும். எப்போதும் உங்களை பற்றி அதிகமாக தெரிந்தவர் நீங்களே என்பதே மறவாதீர்கள். எனவே உங்களிடமே உங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

வெற்றிக் கணக்குகளை விட்டுத் தள்ளுங்கள். சிரிப்பை அதிகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி நிகழும் ஆச்சர்ய கணங்களைத் தவற விடாதீர்கள். உங்களை நீங்களே காதலிக்கத் தொடங்குங்கள். இதோ... அழகான நாளில் காலடி எடுத்து வைக்கிறீர்களே!!!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

22 வருடங்களாக சாக்கடையிலே வசித்து வரும் தம்பதியர்! (படங்களுடன்)

 

வாழ்க்கையில் என்னதான் இருந்தாலும் ‘போதாது, போதாது’ என்று கூறுபவர்கள் ஒரு சாரார் என்றால், இருப்பதை வைத்துத் திருப்திப்பட்டுக்கொள்பவர்கள் இன்னொரு சாரார். கொலம்பியாவின் மிகுவெல் ரெஸ்ட்ரெப்போ - மரியா கார்ஸியா தம்பதியினர் இதில் இரண்டாவது வகையினர்.

4_Sewer1.jpg

கொலம்பியாவின் போதைப்பொருள் சாம்ராஜ்யமாக விளங்கும் மெடலினில் இவ்விருவரும் சந்தித்துக்கொண்டனர். காரணம், போதைப்பொருள்தான்! 

பயங்கர போதைப்பொருள் பாவனையாளர்களாக இருந்த இருவரும், ஒரு கட்டத்தில் ஒருவர் இல்லாமல், இன்னொருவரால் வாழ முடியாது என்பதைப் புரிந்துகொண்டார்கள். அப்போது முதலே இருவரும் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுபட்டு சாதாரண வாழ்க்கை வாழ விரும்பினர்.

4_Sewer2.jpg

என்றாலும், இவர்களுக்கு சொந்த பந்தம் யாரும் கிடையாது. போதைப்பொருள் பாவனையாளர்களாகவே அறியப்பட்ட இவர்களுக்கு எந்தவித உதவியையும் செய்துதர யாரும் முன்வரவில்லை. எனவே, தமக்கான வாழ்க்கையைத் தாமே அமைத்துக்கொள்ள விரும்பினர். அதற்கு அவர்களுக்குக் கிடைத்த ஒரே இடம், சாக்கடை!

4_Sewer3.jpg

வீதியின் தூர்ந்துபோன நிலத்தடி வடிகால் ஒன்றைக் கண்டுபிடித்து அதற்குள் தமது வாழ்க்கையைத் தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரம், தண்ணீர் போன்ற அனைத்து வசதிகளும் அவர்களது ‘வீட்டுக்குள்’ வர ஆரம்பித்தன.

4_Sewer4.jpg

இப்போது அந்தச் சாக்கடையே அவர்களது வீடாக மாறிவிட்டது. கடந்த 22 ஆண்டுகளாக இந்தச் சாக்கடைக்குள் தான் இவர்கள் வசித்து வருகிறார்கள்.

4_Sewer5.jpg

விசேட தினங்களின்போது மற்றவர்கள் போலவே இவர்களும் தமது வீட்டை மின்விளக்குகளால் அலங்கரித்துக்கொள்கின்றனர். எனினும், நிலத்துக்கடியில் இருப்பதால் யாராலும் அதைப் பார்க்க முடியாது என்று கூறும் இவர்களுக்குக் காவலாக ஒரு நாயையும் வளர்த்து வருகிறார்கள் இத்தம்பதியினர்!

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

மணிக்கு 45,000 மைல் வேகத்தில் பாய்ந்து சென்ற விண்கல்..! - வைரல் வீடியோ

அமெரிக்காவில் விண்கல்

அமெரிக்க நாட்டின் மத்தியமேற்குப் பகுதியில் உள்ளது இலினாய்ஸ் மாநிலம். இங்கு நேற்றிரவு வானில் விண்கல் தென்பட்டிருக்கிறது. பச்சை நிறத்தில் பிரகாசமாய் வானில் பாய்ந்து சென்று மிச்சிகன் ஏரியில் விழுந்த விண்கல்லை பலரும் கண்களால் பார்த்து ஆச்சரியமடைந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 'மினி வேன்' அளவில் இருந்த அந்த விண்கல் வானில் பாய்ந்து சென்ற அந்தக் காட்சி காவலர் ஒருவரது கார் கேமராவில் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோக் காட்சிதான் தற்போதைய யூ-டியூப் வைரல்.

இதுபற்றி அமெரிக்க மீட்யார் சொசைட்டி ஆப்ரஷேன் மேனஜர் மைக் ஹான்க்லி கூறுகையில், " இதுவரை விண்கல்லைப் பார்த்ததாக 200-க்கும் மேற்பட்டோர் எங்களுக்குத் தகவல்கள் அனுப்பியுள்ளனர். மினி வேன் அளவில் இருந்த அந்த விண்கல் மணிக்கு 45,000 மைல் வேகத்தில் வீழ்ந்திருக்கிறது" என்றார்.

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தோனி, ட்ரம்ப், சின்னம்மா - இவங்களுக்கும் 7 -ம் நம்பருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு!

இந்த 7- ங்கிற நம்பருக்கும் 2017-க்கும் அப்படி என்னதான் பஞ்சாயத்தோ தெரியலை. ஒருவேளை 2017-க்குள் ஏழு இருக்கிறதாலோ என்னவோ அதுவும்கூடத் தெரியலை.. ஆமாங்க. வருசம் பொறந்ததுல இருந்து எங்கிட்டுப் பார்த்தாலும் அந்த ஏழாம் நம்பரை வெச்சித்தான் பிரச்னை ஓடிக்கிட்டு இருக்குனா பாருங்களேன். சும்மா சாம்பிளுக்காக சில மேட்டர்....!

* எப்பவும் ஆட்டத்தைக் கடைசி ஆளாக நின்னு முடிச்சு வைக்கிறவர் இந்த தோனி. ஆனா அவருதான் இந்த ஏழாம் நம்பர் கான்டெஸ்ட்டை முதல் ஆளாக நின்னு கொடியை அசைச்சு துவக்கி வெச்சிருக்காருன்னு நினைக்கிறேன். ஆமா மக்களே. ஏற்கெனவே டெஸ்ட் போட்டியில இருந்து ரிட்டையர்டு ஆகியிருந்த தோனி திடீர்னு ஜனவரி 4-ந்தேதி ஒன் டே கேப்டன்ஸியில இருந்தும் விலகுறேன்னு சொன்னதும் ஓவர் நைட்டில் வைரலோ வைரல் ஆனது அந்த மேட்டர். போகாதீங்க தல, மக்களின் கேப்டன், மிஸ் யூ தோனின்னு ஆளாளுக்கு நெட் பக்கம் வந்து கொட்ட சோசியல் மீடியாவே ஒரே தோனி மயமாக ஆயிடுச்சு. அதுலேயும் சில பேர் தோனி விலகினதுக்கு கோஹ்லிதான் காரணம், கிரிக்கெட் போர்டுதான் காரணம், அதிலேயும் சில பேர் இல்லையில்லை சசிகலாதான் காரணம்னு காது, மூக்கு, தொண்டை எல்லாம் வெச்சுப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஆமா தோனி ஜெர்ஸி நம்பர் 7 தானே?

தோனி 7

* அடுத்த மேட்டர் ஊர் உலகமே அறிஞ்ச, யார்ரா இவய்ங்க இந்தக் கழட்டு கழட்டுறாய்ங்க என தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப் பார்க்க வெச்ச ஜல்லிக்கட்டுப் போராட்டம்தான். குறிப்பா சொல்லணும்னா மெரினாவுல நடந்த 7 நாள் போராட்டம்தான் எல்லாத்துக்கும் ஹைலைட். நோட் பண்ணுங்க பாஸ் ஏழு நாள் போராட்டம். ஆங்க்.. கவர்மென்ட்டையே  கையைப் பிசைய வெச்சு, கண்ணைப் பிதுங்க வெச்சதோட இவங்க பண்றதை எல்லாம் பார்த்தா ஃபியூச்சர்ல ஆட்சி நடத்துறதுங்கிறதே ரொம்ப டேஞ்சர் போலன்னு ஷங்கர் பட ஸ்டைலில் அரசியல்வாதிகளோட வயித்துல புளியையே கரைச்சுக் குழம்பைக் கொதிக்க வெச்சிருக்குதுனு சொன்னா அதுல ஆச்சர்யமே இல்லை.

* அடுத்த மேட்டரும் அதே ஜல்லிக்கட்டுப் பிரச்னை மூலமா வந்ததுதான். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை வெச்சு அரசியல் பண்ணப் பார்க்கிறாங்க. உள்ளே புகுந்து குட்டையைக் குழப்புற அந்த ஏழு அமைப்புகளையும் தடை பண்ணனும்னு பா.ஜ.க.-வின் எச். ராஜா சொல்ல பத்திக்கிச்சு மேட்டர். ஏழு அமைப்புல உங்க கட்சிதான் முதல் அமைப்பு பாஸுன்னு அந்த குரூப் ஆதரவாளர்கள் பதில் சொல்ல களமே ரணகளமாகிடிச்சு. எவ்வளவோ அமைப்புகள் இருந்தாலும் அவர் வாயில எதுக்கு கரெக்டா 7 அமைப்புனு வரணும். அப்படின்னா ஏதோ இருக்குதுதானே மக்களே?

* லோக்கல்ல மட்டும்தான் இப்படி நடந்துட்டு இருக்குதான்னு நினைச்சா இன்டர்நேசனல் லெவல்லேயும் நடந்துகிட்டு இருக்கு மக்களே. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் நம்ம ஊரு முதல் நாள், முதல் கையெழுத்து மாதிரி முதல் அறிக்கையாக ட்ரம்ப் அறிவிச்சு உலக நாடுகளையே அலற  வெச்சார். அது என்னான்னா குறிப்பிட்ட 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு விசா கிடையாதுங்கிற அறிவிப்புதான். இப்போ அந்த அறிவிப்புக்கே அங்கே இடைக்காலத் தடை விதிச்சிருக்குறதுங்கிறது வேற மேட்டர். ஆனா அந்த ஏழு நாடுகளுக்கு விதிச்ச தடை அறிவிப்பால் அமெரிக்காவே டப்ஸ்டெப்ஸ் டான்ஸ் மாதிரி ஆட்டம் கண்டுடுச்சு.

7

* சரி இத்தோட இந்த ஏழாம் நம்பர் விஷயம் முடிஞ்சிடும்னு பார்த்தா, இப்ப ஒண்ணு லேட்டஸ்ட்டா நடந்திருக்கு. ஆமா சசிகலா 7-ந்தேதி தமிழ்நாட்டுக்கு முதல்வர் ஆகிறார்னு சொன்னாங்க. ஒரு பக்கம் சசிகலா ஆதரவாளர்கள் எல்லாம் ஸ்வீட் எடு கொண்டாடுன்னு திரிஞ்சிட்டு இருக்கும்போது, பொண்ணைத் தூக்கினாதான் கல்யாணம் நிற்குமா மாப்பிளையைத் தூக்கினாலும் நிற்கும்லங்கிற கணக்கா முதல்வருக்குப் பதவியேற்று வைபவம் நடத்துற ஆளுநர் எங்கேயோ எஸ்கேப் ஆகிட்டாரு. இப்போ 7-ந்தேதி பிளானே சல்லி சல்லியா நொறுங்கிக் கிடக்கு. ஆக்சுவலா இப்போ நாட்டுல என்னதான்டா நடந்துட்டு இருக்குன்னு அவங்களுக்கும் புரியலை. மக்களுக்கும் புரியலைங்கிறதுதான் உண்மையான நிலவரம்.

ஹ்ம்ம்ம். இன்னும் என்னென்ன மேட்டர்லாம் இந்த ஏழாம் நம்பரை வெச்சு நடக்கக் காத்திருக்குதோ யாருக்குத் தெரியும். ( அப்புறம் இந்த ஏழாம் நம்பர் கட்டுரையையும் நீங்க அந்த 7-ம் தேதிதான் படிச்சுட்டு இருக்கீங்கங்கிறதையும் மறந்துடாதீங்க மக்களே...!)

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காதலிக்கு மஞ்சள் ரோஸ் குடுக்கலாமா? #RoseDay

ரத்தம் சிந்த வைக்கும் முட்கள்... அதை ஜாக்கிரதையாகக் கடந்தால் கையை வருடும் அந்த மென்மையான இதழ்கள். சிவப்பான அந்த நிறம். சிவப்பு இதழ்களுக்கு நடுவே மஞ்சள் மகரந்தங்கள். உலகின் காதல் அடையாளமான "ரோஜா"வின் அடையாளம் இது தான். 

பிப்ரவரி... காதல் மாதம். காதலர்களுக்கான மாதம். இந்த மாதத்தில், காதல் வாரம் 7ம் தேதி தொடங்கி 14 ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு காதல் அடையாளத்தோடு கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று "ரோஜா"க்கள் தினமாகத் தொடங்குகிறது. ரோஜாவில் தொடங்கும் இந்த காதல் பயணம் வேலண்டைன் தின முத்தத்தில் தன் அன்பின் எல்லையை அடைகிறது.

வண்ண ரோஜாக்கள் சொல்லும் சேதிகள்...

ரோஜா

ரோஜா தினத்தின் கதை என்ன?:

கிரேக்கப் புராணங்களில், "ஈரோஸ்" என்பவர் காதல் கடவுளாக கொண்டாடப்படுகிறார். அவரின் காதல் துணையான வீனஸிற்கு பிடித்த மலர் சிவப்பு ரோஜா. காதல் கடவுளின் காதலிக்கே பிடித்த ரோஜாவை நாம் கொண்டாடாமல் இருந்திட முடியுமா?. இதன் காரணமாகவே மனித காதலில் ரோஜாக்கள் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. அந்த ரோஜாக்களை தினம் எடுத்து நாம் கொண்டாடுகிறோம்.

இந்த ரோஜா தினத்தில் என்ன செய்யலாம்?
 
ஓர் அழகான சிவப்பு ரோஜாவை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் அழகான உறவை, ரோஜாவின் உணர்வோடு கலந்து கவிதையாக்குங்கள். காதலிக்கு பெரும் காதலோடு அதைக் கொண்டு போய் கொடுங்கள். ரோஜாக்களின் வரலாறு கொஞ்சம் நீளம், நிறைய அழகு! அவை காதலின் சின்னங்கள்; அழகின் அடையாளங்கள்; யுத்தத்தின் அமைதி; பூமியில் காதலை தோற்றுவித்தது.. பூமியையே காதலில் திளைக்கவைத்தது!  

உலகம் முழுவதும் இந்த நாளில் காதலர்களின் கைகளில் இந்த ரோஜாக்கள் இந்நேரம் தவழ்ந்து கொண்டிருக்கும். ரோஜாக்கள் காதலர்களின் கைகளில் சேர வேண்டும் என்ற ஆசையில், காதலில், பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும். செடிகளுடனான தன் காதலை முறித்து, மனிதரின் காதலுக்காக தியாகிக்கிறது இந்த ரோஜாக்கள். காதலைக் கொண்டாடும் ஒவ்வொரு தருணத்திலும், ரோஜாக்களும் கொண்டாடப்படுகின்றன. 

ரோஜா தினம் Rose

 

மனித உறவுகளுக்கும், மனித உணர்வுகளுக்கும் நெருக்கமான விஷயமாக இருக்கிறது இது. அதன் ஒவ்வொரு வண்ணமும், ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.  

சிகப்பு சொல்கிறது :  நான் உன்னைக் காதலிக்கிறேன்
மஞ்சள் சொல்கிறது :  நீ என் வாழ்விற்கு மகிழ்வைத் தருகிறாய். நாம் நண்பர்களாக இருப்போம்.
பிங்க் சொல்கிறது :  எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது.
ஆரஞ்ச் சொல்கிறது :  நான் உன்னை நினைத்து பெருமைக் கொள்கிறேன்.
நீலம் சொல்கிறது :  நீ... நான் அடைய முடியாத ஒரு கனவாக இருக்கிறாய். 

வாருங்கள்... உங்களுக்கான ரோஜாவைத் தேர்ந்தெடுங்கள். உங்களைப் போலவே காதல் மழையில் நனைய காத்திருக்கும் உங்கள் காதலிக்கு, காதலனுக்கு  ரோஜாக்களைக் கொடுத்திடுங்கள். உண்மையான காதல் வாசத்தினை பரப்பிடுங்கள்.  இனிய ரோஜா தின வாழ்த்துகள்..! 

இப்பச் சொல்லுங்க.. லவ்வருக்கு யெல்லோ ரோஸ் குடுப்பீங்களா?

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.