Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

WR_20170211222817.jpeg

உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்ணாக கருதப்படும் எகிப்து நாட்டை சேர்ந்த இமான் அகமது மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். மருத்துவமனைக்கு அழைத்துவர கிரேன் மூலமாகவே இறக்கப்பட்டார்.

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கைதிகள் இல்லாததால் அகதிகள் இல்லமாக மாறிய சிறைச்சாலை! 

 

 

கைதிகளை அடைப்பதற்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் அதிகமாக இருந்தும், கைதிகள் இல்லாததால் குறித்த கட்டிடங்கள் மறுவாழ்வு இல்லமாகவும், அகதிகளின் இல்லமாகவும் மாற்றப்பட்டு வரும் சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. 

hotel-lujo4-a.jpg

நெதர்லாந்தில் உள்ள சிறைகளில் கைதிகளே இல்லை. ஏனெனில் அங்கு குற்றங்கள் நடைபெறாததால் கைதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் கடந்த 20 வருடங்களாகவே அந்நாட்டில் 75 சதவீதமான சிறைகள், கைதிகள் இல்லாததால் பயனற்ற முறையில் இருந்துள்ளது. அதனால் குறித்த சிறைகள் முன்னாள் கைதிகளின் மறுவாழ்வு நிலையமாகவும், அகதிகள் இல்லமாகவும் மாறியுள்ளது. 

muhammed-muheisen-netherlands-prisons-2.

இந்நிலையில் பெல்ஜியம், நோர்வே ஆகிய நாடுகளிலுள்ள சிறைகளில் கைதிகள் கூட்டம், அதிகமாக இருப்பதனால் கைதிகள் இல்லாமல் இருக்கும் நெதர்லாந்து சிறைகளை, வாடகைக்கு எடுத்து அங்கு தமது கைதிகளை சிறை வைத்து வருகின்றனர்.

10Dutch2-superJumbo.jpg

அத்தோடு நார்ஜெர் ஹவன் சிறையை, நோர்வே 3 வருடங்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளது. அதற்காக வருடமொன்றிக்கு சுமார் 400 கோடி வாடகை வழங்குவதற்கு, ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் குறித்த சிறையில் அந்நாட்டின் 750 இற்கும் மேற்பட்ட கைதிகளை தங்கவைத்துள்ளது. 

article-urn-publicid-ap.org-ba89ced41589

நெதர்லாந்து ஹர்லெம் சிறை, அகதிகளின் கால்பந்தாட்ட மைதானமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலைமைகள் தொடரும் பட்சத்தில், இன்னும் 4 வருடங்களில் அந்நாட்டின் 2600 சிறை காவலர்கள், வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெல்ஜியம், இங்கிலாந்து, ஹெய்ட்டிஇ இத்தாலி, அமெரிக்கா மற்றும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறைகளில், கைதிகள் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

11.02.1990: 27 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு நெல்சன் மண்டேலா விடுதலை ஆன நாள் இன்று! 

 

 
nelsen_mandela

 

மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.

நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.

தொடக்கத்தில் வன்முறையற்ற போராட்ட வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர்.

மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: 'சி3'- சோட்டா பீமும் துரைசிங்கமும்!

 

 
2_3131351f.jpg
 
 
 

சூர்யா- ஹரி கூட்டணியில் வெற்றிப்படமாக அமைந்த சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் 'சி3', அனுஷ்கா மற்றும் ஸ்ருதி ஹாசனின் நடிப்பில் வெளிவந்துள்ளது.

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையின் நடுவே வெளியாகியுள்ள இப்படம் குறித்த நெட்டிசன்கள் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

vigneshvicky ‏@vigneshvicky341

2037-ல இதே மாதிரி ஒரு பிரச்சினை தமிழ்நாட்டுக்கு வரும் போது சிங்கம் 23ல சூர்யா நடிச்சுட்டு இருப்பாரு...

அமைதி ஹமீது ‏@shahulhmeedmd

சி3... ஹரி சும்மா தெறிக்கவிட்டு இருக்காப்ல... தியேட்டர்ல பார்க்க ஒர்த்தான படம். #Singam3

TrendsWood ‏@Trendswoodcom

ரஜினிக்கு ஒரு பாட்ஷா போல சூர்யாவுக்கு இந்த சிங்கம், வெறித்தனமான நடிப்பு .

Karthick ‏@SrtSuriya

சிங்கம்

சிங்கம் 2

சிங்கம் 3

இதுக்கெல்லாம் மொரட்டுத்தனமான தைரியம் வேணும், அது என் தலைவன் கிட்ட நிறையவே இருக்கு!

Modulu ‏@ashokcommonman

சூர்யா now: என்னோட சி3 ரிலீஸ் ஆகிற நேரத்திலதான் இந்த மாதிரி அரசியல் டிவிஸ்டுலா நடக்கணுமா?

முரளிகண்ணன் ‏@muralikkannanr

டோலக்பூர் மகாராஜாவுக்கு எப்படி சோட்டா பீமோ அதுபோல, உள்துறை அமைச்சர் விஜயகுமாருக்கு துரை சிங்கம்.

Gurubaai Yuvaniac ‏@ItsGurubaai

சிங்கம் 3 இல்லை. சிங்கம் 30 வந்தாலும் படம் சக்கை போடு போடும். காரணம் ஹரி! #JetSpeed

Vel murugan ‏@velm446

தமிழக காவல் துறையின் நேர்மை, கடமை இதல்லாம் சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும் போல.. #சிங்கம்_3 செம.

காற்றின் நண்பன் ‏@rajsenthil615

சிங்கம் கூட அப்பப்ப தான் தாவுது; ஆனா சிங்கம்னு பெயர வச்சிகிட்டு இப்படி தாவறார்.

ரஞ்சித் விக்ரம் ‏@ranjithvikram19

இந்த வசனம் மட்டும் மனதில் பதிந்து விட்டது. #சிங்கம் 3.

"பொண்டாட்டி பொசசிவ்வா இல்லைன்னா வாழ்க்கை போரடிச்சிடும்!"

VetrivelMurugan ‏@vetrivelm6942

சிங்கம் படம் பார்த்தேன். படம் சூப்பராக இருக்கு; சண்டைக் காட்சிகள், வசனங்கள் தூள் பறக்குது. சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்.

3_3131350a.jpg

Rajendra kumar ‏@Rajendr71811156

சிங்கம் 3 - எக்சலன்ட் ஸ்பீட் லாஜிக். ஹரியின் புத்திசாலித்தனமான கதை, திரைக்கதை, வசனம். இயக்குனரை மீறாத சூர்யா ரசிக்க வைக்கிறார்.

Arshad Khan

சிங்கம் 3 படம் ஆரம்பிச்சதும் போலீஸ் ஜீப்ல தூக்கி நம்மள போட்டு கரகரகரன்னு சுத்திவிட்டு இன்டர்வெல்ல வண்டி பத்து நிமிஷம் நிக்கும், டீ சாப்பிடுறவங்கெல்லாம் சாப்டுக்கலாம்குறாங்க...

இன்டர்வெல் முடிஞ்சு திரும்ப நீங்க வந்து வண்டில ஏறுனா இல்ல இல்ல இப்போ ப்ளைட்ல ஆஸ்திரேலியா போறோம்னு கூட்டிட்டு போயி அங்க வாடகை கார் எடுத்து கரகரகரகரகரன்னு சுத்தி காமிச்சிட்டு திருப்பி ஆந்திரால கூட்டிட்டு வந்து உட்றாங்க... திரும்பவும் ஆந்திராவுல ஜீப் ரொம்ப நேரம் சுத்திட்டு பெட்ரோல் தீந்ததும் இறக்கி விடுறாங்க...

எனக்கு ஆக்‌ஷன் மூவிதான் பிடிக்கும்... எனக்கு பைட் படம்னா உசுரு.. நா சண்டை படம்னா தேடித்தேடி பார்ப்பேன்னு சொல்றவங்க படத்துக்கு போங்க... நடுமண்டைல உருட்டுக்கட்டையால நங்குனு அடிச்ச ஒரு இதமான உணர்வு கிடைக்கும்.. வாழ்த்துக்கள்...

அன்புச்செல்வன் ‏@Itzrajaa

சிங்கம் 3- பாஸ்ட் பார்வேர்ட் வச்சு பாத்த மாதிரி இருக்கு.

Ajith | Rinesh ‏@Rineshraja

இந்த மூணாவது சிங்கம் படத்துலயாவது அனுஷ்கா புள்ளைய சூர்யா கல்யாணம் பண்ணாரான்னு என் அம்மாச்சி கேக்கறாங்க.

vimal ‏@vimalselvaraju

நாட்ல எவ்வளவோ புதுமைலாம் நடக்குது.... சாமி 2ல சூர்யாவும் சிங்கம் 4ல விக்ரமும் நடிச்சா என்ன??? சக்கரைப்பொங்கலும் வடைகறியும் மொமண்ட்.

Ksuresh Suresh

சிங்கம் 3- தியேட்டரில் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் கத்த அவசியமே இல்லை. அதையும் சூர்யாவே செய்துவிட்டார்.

1_3131352a.jpg

Jeevakanthan Miraj

சூர்யா + ஹரியின் மற்றுமோர் அக்மார்க் கமர்ஷியல் வேட்டை 'சி3'. படத்தின் வேகம், அனல் தெறிக்கும் பஞ்ச் வசனங்கள், ஆக்க்ஷன் காட்சிகள். சூர்யாவின் நடிப்பு, டயலாக் டெலிவரி என எல்லாம் சிறப்பு... கமர்ஷியல் ரசிகர்களுக்கு மிகச்சிறப்பு..

Suresh Eav

வேகம், இன்னும் வேகம், அதைவிட வேகம் அப்படி ஒரு படம்தான் சி3. தமிழ்நாட்டோட பேவரிட் போலிஸ் சிங்கம் இப்ப என்ன பண்ணபோறார்னு பாத்தா, கண்டம் விட்டு கண்டம் போய் தப்பு பண்ணவன பாஞ்சு புடிக்கிறாரு.

போலிஸ் கதை, வில்லனை புடிக்கணும் அப்படின்னு இல்லாம அதுல ஒரு அழகான குடும்பம், காதல், துரோகம், வேகம், சொல்லியடிக்கிற திரைக்கதை அப்படினு இருந்ததாலதான் சிங்கம் பெரிய வெற்றி பெற்றது, அதுல சி3க்கும் இடம் நிச்சயம்.

வேகமாக கதை சொல்லணுமேன்னு சும்மா ஏனோதானோ கதை பண்ணாம ஒவ்வொரு சீனுக்கும் டீடெய்ல் வச்சு, டெக்னிக்கலாகவும், பிரிலியண்ட்டாகவும் கதை சொன்ன ஹரிக்கு வாழ்த்துக்கள். நிஜமான போலிஸ கண்ணுல நிறுத்துற ஒரு ஹீரோ அப்படினு சூர்யாவை சொல்லலாம். நீங்க இல்லைனா இந்த கேரக்டர வேற யாரும் பண்ணமுடியாது.

திருஷ்டி பொட்டா சூரி மொக்க காமெடி, சுருதி மொக்க சீன்ஸ், ஆவரேஜ் பாடல்கள், காது வலிக்கிற அளவுக்கு கத்திட்டே இருக்கிறது. ஆனாலும் நிச்சயமா ரொம்......ப காலத்துக்கு பிறகு நரம்பு புடைக்கவைக்கிற மாதிரி ஒரு பக்கா கமர்சியல் ஆக்சன் படம். #நிச்சயவெற்றி.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

ஆப்ரகாம் லிங்கன் பிறந்த தினம் (பிப்.12- 1809)

ஆப்ரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் இவரும் ஒருவர். 1860-ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார். ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க, தென் மாநிலப் பிரிவினைக் கருத்தாளர்களை எதிர் கொண்டு உள்நாட்டுப் போர்

 
 
 
 
ஆப்ரகாம் லிங்கன் பிறந்த தினம் (பிப்.12- 1809)
 
ஆப்ரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் இவரும் ஒருவர். 1860-ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார்.

ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க, தென் மாநிலப் பிரிவினைக் கருத்தாளர்களை எதிர் கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர். இவர் 1863-ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865-ல் ஐக்கிய அமெரிக்காவின் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார்.

இவருடைய தலைவருக்கான பண்புகளை அறிய இவர் நடத்திய உள்நாட்டுப் போர், மற்றும் அடிமை முறையை எதிர்த்து இவர் நாட்டு மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்து வகையில் எழுப்பிய குரலும் முக்கியமானவை. கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு எனப் புகழ்பெற்ற இவர் ஆற்றிய உரை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

உள்நாட்டுப் போர் முடியும் தருவாயில் தென் மாநிலங்களுடன் கடுமையாக இல்லாமல் இணக்கமான முறையில் அமெரிக்க ஒன்றியத்தை நிறுவ முயன்றார். இவர் அடிமை முறையை ஒழிப்பதில் ஒரு சிறிதும் தளர்வில்லாமல் உறுதியாக இருந்ததை ஒரு சிலர் கடுமையாக சாடினார்கள். ஆனால் வேறு சிலர் இவர் போதிய விரைவுடன் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்றும், அடிமை முறையை போற்றிய தென் மாநிலங்களிடம் உள்நாட்டுப்போரின் இறுதியில் போதிய அளவு கடுமையாக நடந்துகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

இறுதியில் 1865 இவர் வாஷிங்டன் டி.சி. யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

உங்கள் மொபைலிலேயே அழகழகாய் புகைப்படம் எடுக்க ‘நச்’சென்று 7 டிப்ஸ்! #MobilePhotography

புகைப்படம்

ஒரு நல்ல புகைப்படம் எடுத்து அதைப் பார்த்து மகிழ ஆசையா?  டிஎஸ்எல்ஆர் கேமரா இல்லையா? உண்மையாக நாம வாழ்க்கைல சந்திக்கிற நிறைய சந்தர்பங்களை டிஎஸ்எல்ஆர் வெச்சு எடுக்க முடியாது. ஆனா இந்த மொபைல்போன் அந்த தருணத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் அதுவே பார்க்க கொஞ்சம் நல்ல இருந்தா...த நேம் இஸ் மொபைல் போட்டோகிராபி. உங்க மைண்ட் வாய்ஸ் கேட்டுடுச்சு.. “தம்பி..   கொஞ்சம் ஐடியாஸ்..”  அதானே?

1.எப்பொழுதும் தயாராக இருங்கள்:

Photography

உங்கள் மொபைலில் கேமராவை உடனே ஓபன் செய்யும் விதமாக ஷார்ட்கட் வைத்து கொள்ளுங்கள். நல்ல தருணங்களை மிக சுலபமாக மிஸ் செய்ய வாய்ப்புண்டு! ஒரு காட்சியை எடுக்கலாம், எடுக்க வேண்டாம் என்று யோசிக்கும் தருவாயில் அது நம்மைக் கடந்து சென்றுவிடும். ஆகையால் கிளிக் செய்ய ஒரு போதும் இரண்டாவது எண்ணம் வேண்டாம். பின் மொபைலை எப்பொழுதும் சார்ஜ் செய்ய மறக்க வேண்டாம்.  லென்ஸ்யும் பளிச்சென வைத்து கொள்ளுங்கள்.

2. உங்கள் மொபைலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:

உங்கள் மொபைல் கேமராவின் சாதக பாதகங்களை அறிந்து வைத்து கொள்ளுங்கள்.உதாரணத்துக்கு சில மொபைல்போன் கேமரா இரவு நேர போட்டோகளுக்கு சரி வராது என்றால் பகல் நேரத்தில் மட்டும் புகைப்படம் எடுக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெளிச்சம் தான் போட்டோகிராபியின் முக்கிய அம்சம்.. இருந்தாலும் சில காட்சியமைப்புகள் அதை உடைத்துத் தள்ளும்.  

3. ஒரே விதமான ஸ்டைலில் சிக்க வேண்டாம்:

மொபைல் போட்டோகிராபி

நிறைய பேர் ஒரே விதமான புகைப்படங்களை எடுப்பதை பார்த்து இருப்போம். படத்தின் நிறத்தில்கூட மாற்றமிருக்காது. அந்தத் தவறை ஒரு போதும் நீங்கள் செய்ய வேண்டாம்.யார் கூறியது உங்களுக்கு லேண்ட் ஸ்கேப் போட்டோகிராபிதான் நன்றாக வரும் என்று? அதைத் தகர்த்து எறியுங்கள்.புது விதமான ஆங்கிள்களை முயற்சி செய்து பார்க்கவும். உதாரணமாக இன்செக்ட் வ்யூ.. அதாவது ஒரு பூச்சி நம்மை எப்படி எங்கு இருந்து பார்க்குமோ, அங்கு கேமராவை வைப்பது. இப்படி நிறைய ஆங்கிள்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு டிஎஸ்எல்ஆர் கேமரா போக முடியாத இடத்திற்கு நம்மை மொபைல் கேமரா கொண்டு செல்லும் என்பதை மறக்க வேண்டாம்.

4. டிஜிட்டல் ஜும்(Zoom) செய்ய வேண்டாம்:

எப்பொழுதும் தவறியேனும் போட்டோ எடுக்கும் பொழுது டிஜிட்டல் ஜும்(Zoom) செய்ய வேண்டாம். இது உங்களது போட்டோவின் தரத்தை முழுமையாக பாதிக்கும்.நம்மிடம் இருப்பது மொபைல் போன்தான் டிஎஸ்எல்ஆர் கேமரா இல்லை, ஆகையால் முடிந்தவரை... நீங்கள் முன்னே சென்று ஃபோட்டோ எடுங்கள்.. ஃபோட்டோகிராஃபியில் முன்னே செல்வீர்கள்

5.மேக் இட் சிம்பிள்:

மொபைல் ஃபோட்டோகிராஃப்பி


நீங்கள் செய்யும் ஒவ்வொரு காட்சியமைப்பையும் சிம்பிளாக வைத்து கொள்ளுங்கள். வெற்றிடங்களைப்  பயன்படுத்துங்கள். உதாரணமாக வானம், சுவர். அதை வைத்து உங்கள் சப்ஜெக்டை முன் நிறுத்தவும். நிழல்களை மறக்க வேண்டாம்.  இது படத்திற்கு மேலும் வலு சேர்க்கும். அதே போலத்தான் கருப்பு வெள்ளை இமேஜ்களும். இவற்றின் மேல் எப்பொழுதும் ஓர் ஈர்ப்பு இருக்கும். முக்கியமாக கதை சொல்லும் படங்களே சிறந்த ஒன்றாக இருக்கும். எதையும் எடுக்கிற கோணத்தில் எடுத்தால் ஏதோ ஒரு கதை சொல்லும். மேலே உள்ள புகைப்படத்தின் பூட்டுகள் சொல்லும் கதையை நினைத்துப் பாருங்கள்.

6. எடிட்டிங்கும் முக்கியமான ஒன்றுதான்:

போட்டோகிராபி

நீங்கள் பார்க்கும் சிறந்த புகைப்படங்கள் என கருதும் அனைத்துமே சிறிதாவது எடிட்டிங் செய்யப்பட்டதுதான். மொபைல் போட்டோகிராபிக்கும் இது பொருந்தும். எடிட்டிங் என்றால் இன்ஸ்டாகிராம் ஃபில்டர்களை படத்தின் மீது போடுவது இல்லை.
உங்கள் படங்களில் உள்ள சிறிய வெளிச்சத் தட்டுப்பாடு போன்றவற்றை நிவர்த்தி செய்ய சில ஆப்ஸ்கள் உதவியாக இருக்கும். அவற்றைக் கண்டுபிடித்து,  பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

7. பிரின்ட் செய்து பார்க்கவும்:

மொபைல்

நீங்கள் எடுத்த புகைப்படத்தின் மீது நம்பிக்கை வைத்து அதை பிரின்ட் செய்து பார்க்கவும். அதை உங்கள் நண்பர்களுக்கு அளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக அறைச் சுவர்களில் நீங்கள் எடுத்த படங்களை ஒட்டி வையுங்கள். இது புகைப்படங்களை மொபைல் திரையில் பார்க்கும் அனுபவத்தை விட மிகவும், வேறொரு அனுபவம்  தரும். நம்மையும் உற்சாகப் படுத்திக்கொண்டே இருக்கும்.  

DSLRல எடுத்தா மட்டும் இல்ல, மொபைல்ல எடுத்தும் நம்ம ரசனைகளை மேம்படுத்திக்கலாம். அதற்கான தன்முனைப்பு முக்கியம். ஏதாவது ஒரு வகைல சமூக வலைதளங்கள்ல பகிர்வது, தனி ஃபோல்டர்ல சேமிச்சு வெச்சு, நண்பர்கள்கிட்ட காமிக்கறதுனு பகிர்தல் இருந்துட்டே இருந்தா இன்னமும் உத்வேகமா இருக்கும். 

இதைப் படிச்சு முடிச்சதுமே, உங்க மொபைல்ல செமயா ஒரு அஞ்சு ஃபோட்டோ எடுக்கணும். செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

126p1.jpg

சின்னம்மா முதல்வர்

பிப்ரவரி 5-ம் தேதி கூடிய அ.தி.மு.க கட்சிக் கூட்டத்தில், முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை முதல்வர் பொறுப்பேற்கவும் அழைப்பு விடுத்தார். சசிகலா முதல்வராகப் பதவி ஏற்பார் என அந்தக் கட்சியில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்திய அளவில் #sasikala என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. ஆனால், சசிகலா முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார் என்ற செய்தி பரவியதை அடுத்து நெட்டிசன்ஸ் வெவ்வேறு வகையில் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவிக்கத் தொடங்கினர். சசிகலா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக எல்லோரும் பேசத் தொடங்கியதை அடுத்து #TNSaysNo2Sasi என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியது. இந்த டேக் ட்ரெண்ட் ஆகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே #sasikala டேக்கை பின்னுக்குத் தள்ளி இந்திய அளவில் முன்னிலை வகிக்க ஆரம்பித்தது. இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்தில் உள்ள மக்களும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். இந்த டேக்குடன் #AIADMK #SasikalaNatarajan #Chinnamma என்பதும் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. அட!

126p2.jpg

சாமி 2

‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகம் ரிலீஸுக்குப் பிறகு டைரக்டர் ஹரி, ‘சாமி 2’ படத்தைத் தொடங்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து #Saamy2 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியது. விக்ரம் ரசிகர்களின் ட்வீட்களால் நிரம்பி வழிய ஆரம்பித்தது இந்த ஹேஷ்டேக். `முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும்!' என்று ஹரி தெரிவித்திருந்தார். முதல் பாகத்தைத் தயாரித்த ‘கவிதாலயா ஃபிலிம்ஸ்’ நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. விக்ரமைத் தவிர பிற நடிகர்கள் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. சாமியின் வேட்டை தொடரும். சாமி ஆட்டம்!

126p3.jpg

விவேகம்

அஜித் - சிவா ஜோடியின் மூன்றாவது படமாக ‘விவேகம்’ வெளிவர இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அஜித் சிக்ஸ் பேக்குடன் தோன்றியிருந்தார். கையில் சிவப்பு நிற கிளவுஸும், மிலிட்டரி பேன்ட்டும் அணிந்து சிக்ஸ் பேக்குடன் அவர் இருந்த ஃபர்ஸ்ட் லுக் இரண்டு தினங்களுக்கு ட்ரெண்டிங்கிலேயே இருந்தது. அஜித்தின் இந்த மாஸ் ட்ரான்ஸ்ஃபர்மேஷனை அஜித்தின் ரசிகர்களே எதிர்பார்க்காத காரணத்தால் பலருக்கும் அந்த லுக் அதிர்ச்சியாக இருந்தது. இந்திய திரையுலக செலிப்ரிட்டிகள் பலர் ‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஷேர் செய்து வாழ்த்து கூறியிருந்தனர். #vivegam என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. தலடா!

126p4.jpg

காற்று வெளியிடை

பிப்ரவரி 2-ம் தேதி  மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில், கார்த்தி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் சிங்கிள் ட்ராக் ‘அழகியே’ வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ஃபேஸ்புக், ட்விட்டர் என சோஷியல் மீடியாவின் அனைத்துத் தளங்களிலும் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியது. பட்டிதொட்டி எங்கும் இருந்த ரஹ்மான் ரசிகர்கள் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய்’ என ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர். கார்த்திக்கின் குட்டிப் பையன் லுக்கும், ‘மேரி மீ மேரி மீ’ என்ற ஜாலி வரிகளும் கொண்டு ஜென் இசட்டை மொத்தமாகக் கவரும் வண்ணம் இந்த பாடல் இருந்ததால், #Azhagiye ஹேஷ்டேக் `நச்’ ட்ரெண்டில் இடம் பிடித்தது. இந்தப் பாடல் வெளிவந்த சில நாள்களில் படத்தின் அடுத்த பாடலான  #Vaan வெளியிடப்பட்டது. இந்த ‘வான்’ பாடலும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. அழகியே..!

126p6.jpg

அஸ்வின் ட்வீட்

சமீபகாலமாக அரசியல் அல்லாத பிரபலங்கள் அரசியல் குறித்து சமூக வலைதளங்களில் பேசுவது அதிகமாகிக் கொண்டே வருகிறது. கமல், `ஆர்.ஜே’ பாலாஜி என சினிமா பிரபலங்கள் தொடங்கி, தற்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினும் சூசகமா தன்னுடைய ட்வீட் ஒன்றில் அரசியல் பேசியுள்ளார். பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து ‘திடீர்’ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சசிகலா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து சசிகலா தலைமையிலான ஆட்சி சில காலமே நீடிக்கும் என்றும், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் பலரும் கருத்துகள் கூறத் தொடங்கினர். அப்போது கிரிக்கெட் வீரர் அஸ்வினும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு 234 வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தயாராக இருங்கள்’ என்று கூறினார். தமிழ்நாட்டில் இருக்கும் 234 சட்டமன்றத் தொகுதிகளை மறைமுகமாகக் குறிப்பிட்டே அஸ்வின் இதைக் கூறியுள்ளார் என்று அவருடைய பேச்சு ட்ரெண்ட் ஆகத் தொடங்கியது. ட்விட்டரில் #Ashwin என்ற டேக் ட்ரெண்ட் அடித்தது. க்ளீன் போல்ட் ப்ரோ.

126p5.jpg

ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார். இந்த நிகழ்வு #TrumpPressConference என்று உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஓர் அயல்நாட்டுப் பத்திரிகையாளரின் கேள்விக்கு ட்ரம்ப் பதில் அளிக்காமல் அவரை காவலர்கள் மூலம் வெளியேற்றினார். இதையடுத்து ட்ரம்ப் ஹேஷ்டேக்கில் அவருக்கு கடுமையான கண்டனங்கள் வெளிவரத் தொடங்கின. தவிர, பத்திரிகையாளர் சந்திப்பில் ‘அமெரிக்காவுக்கும் மெக்சிகோவிற்கும் இடையில் சுவர் எழுப்பப்போகிறேன்’ என்று ட்ரம்ப் கூறியதும் சர்ச்சையில் இடம்பிடித்தது. அதற்கு, #TRUMPWALL என்ற ஹேஷ்டேக் உலகளவில் முதல் இடம் பிடித்தது. அன்பே சிவம்... லவ் இஸ் காட்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

குரங்கிலிருந்து பிறந்தவர்கள் நாமென்று சொன்ன டார்வின் பிறந்ததினம் இன்று! #Darwin


Darwin
 

"நீயும், உன் குடும்பத்தினரும் தான் குரங்கிலிருந்து வந்தவர்கள்"

இப்படி அந்த மனிதரைப் பார்த்து கூச்சலிட்டது அந்த பெருங்கூட்டம்.

"நல்லவேளை உங்களைப் போன்ற  மனிதர்களிடமிருந்து அவர் வந்தவரில்லை" என்று பதில் சொல்லிவிட்டு அந்த மனிதரை அழைத்துச் சென்றார் அவர் நண்பர்.

பின்னர் அந்த கூட்டத்தினர் நீளத்  தாடியும்,புடைத்த மூக்கையும் கொண்ட அந்த இயற்கை காதலனின் தலையை, ஒரு குரங்கின் உடலில் பொருத்தியது போல் கார்ட்டூன் வரைந்தார்கள்.

அவர் என்ன செய்தார் ? 

தன் வாழ்நாளையே அர்பணித்து அவர் கண்டறிந்த ஓர் அறிவியல் உண்மையைக் கூறினார்.

அந்த உண்மையின் பெயர் "பரிணாமக் கொள்கை"

இப்போது அவர் பெயரில் ஏராளமான கல்லூரிகளும்,பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு துறைமுகத்திற்கும், ஆண்டிஸ் மலைத் தொடரின் ஒரு மலைக்கும் இவர் பெயர் சூட்டப்படிருக்கிறது. ஆம்,   துறைமுகம், கல்லூரிகளுக்கெல்லாம் சூட்டப்பட்ட பெயர்  சார்லஸ் டார்வின்.

டார்வின்

1831 ல் இங்கிலாந்தின் டோவனிலிருந்து  தென்அமெரிக்காவிற்குப் புறப்பட்ட பீகில் கப்பலுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்லித் தீரவேண்டும்.அந்த கப்பலில் தான் டார்வின் தன் நான்கு ஆண்டுகளை செலவளித்து உலகைச் சுற்றினார்.

உலகின் பெரும்பாலான அறிவியல் மனிதர்கள்,அவர்களின் குழந்தைப்பருவத்தில்  எப்படி  அழைக்கப்பட்டார்களோ, அப்படியே டார்வினும் மக்கு என்று  அழைக்கப்பட்டார். பின்வந்த காலங்களில் அவர் வாயுக்களை வைத்து ஆய்வுகளை செய்து கொண்டிருந்ததால் அவர் நண்பர்கள் அவரை "Gas" என்று அழைத்தார்கள். 

தந்தையான ராபர்ட் டார்வின் "பட்லர்"  ஸ்கூலில் படிக்கவைத்தும் டார்வின் செய்து கொண்டிருந்தவை  மீன் பிடிப்பது, வேட்டையாடுவது, பூச்சிகளையும், முட்டைகளையும் சேகரிப்பது ,மிக முக்கியமாய் எலிகளை பிடித்து இம்சை செய்வது.

8 வயதிலேயே அம்மாவை இழந்த டார்வினை , ராபர்ட் கொஞ்சம் கிடுக்குப்பிடியாக வளர்த்தார்.தன்னைப் போலவே டாக்டராக்கி ஸ்டெதஸ்கோப் மாட்ட நினைத்தவருக்கு, கையில் பூச்சியை வைத்துக் கொண்டு இருக்கும் மகனைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியவில்லை.கடைசியாக மதகுருவாக மாற்ற நினைத்தார்.டார்வினும் மதகுருவாக மாறி கேம்ப்ரிட்ஜை விட்டு வெளியே வரும் போது, கேம்ப்ரிட்ஜின் தாவரவியல் பேராசிரியர்  ஹென்ஸ்லோ , பீகில் கப்பலில் சம்பளமில்லாமல் இயற்கை வல்லுனராக பணியாற்ற டார்வின் பெயரைப் பரிந்துரைத்தார்.

ஒரு அப்பா , சம்பளமில்லாத  வேலைக்கு அதுவும் நாம் ஆசைப்பட்ட வேலைக்கு  இந்த காலத்திலேயே ஒத்துக் கொள்ளமாட்டார்கள் தானே..!

அந்த காலத்தில் கடல்பயணம் என்பதெல்லாம் உயிருக்கு உத்தரவாதமில்லாத செயல்.

பீகில் கப்பலின் கேப்டன் பிட்ஸ்ராய் இன்னொரு குண்டை தூக்கிப் போட்டார்."இது போன்ற மூக்கு இருப்பவர்கள் கடல்பயணத்தை எதிர்கொள்ள மாட்டார்கள்" என்று.

எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு முழு அர்பணிப்புடன் இறங்கிய டார்வின் எப்படிப்பட்டவர் தெரியுமா? இரு வகையான பூச்சிகளை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் போது, இன்னொரு பூச்சி கிடைத்தால் கையில் வைத்திருந்த ஒன்றை வாயில் போட்டுக் கொள்வார். அப்படி அவர் வாங்கிய கடிகள் பல. 

அடிமை முறையை பெரிதும் வெறுத்த டார்வின் கப்பலில் வேலை பார்த்த வேலைக்காரர்களுக்காக பிட்ஸ்ராயிடம் சண்டை போட்டுக் கொண்டே , ஒவ்வொரு தீவிலும் இறங்கி உயிரினங்களையும்,பாறைகளையும், மண்வகைகளையும் ஆய்வு செய்வார். இரண்டு ஆண்டுகளில் திரும்ப நினைத்தவர்கள் வந்து சேர நான்கு ஆண்டுகளானது.

1839 ல் "Voyage Of the Beagles" புத்தகத்தை வெளியிட்ட டார்வினின் கருத்துக்கள் பரவலாகப் பேசப்பட்டது.

இந்த வருடத்தில் டார்வின் இன்னொரு சேட்டை செய்தார்.அவரின் திருமணம் திட்டமிடப்பட்ட  ஜனவரி26 ல் ராயல் சொசைட்டி அவரை உறுப்பினராக சேர அழைப்பு விடுக்கவும், இவர்  திருமணத்தைத் தள்ளிவைத்து விட்டு அந்த நிகழ்விற்குப் போய்வந்தார்.

மதகுரு ஒருவரை, ஒரு கப்பல் பயணம் உலக ஆன்மீகவாதிகள் எதிர்க்கும் மாபெரும் பகுத்தறிவாளர் ஆக்கியது நல்ல ட்விஸ்ட்  தானே !

"ஆறு நாட்களில் ,ஆறு நிலைகளில் கடவுள் உயிரினங்களைப் படைத்தார்"

 "எருதுகளின் சாணங்களிலிருந்து பூச்சிகள் உருவானது" 

இது போன்று அன்று உலவிய  ஃபேண்டசி கருத்துக்களை, உடைத்தெறிந்து, 1859 ல் டார்வின் எழுதிய "The Origin Of Species " பேசிய கருத்துக்கள் அவரின் பேராசிரியர் முதல் அனைத்து ஆன்மீகவாதிகளையும் சீற்றம் கொள்ளவைத்தது. அதன் பிறகுதான் அத்தனை எதிர்ப்புகளும் அவரை சூழ்ந்து கொண்டது.

குறைந்த ஆதரவை வைத்துக்  கொண்டு,மிகப் பெரிய எதிர்ப்பை சமாளித்து தான்  உழைப்பு கொட்டிய கொள்கையை நிலைநாட்ட எத்தனை உறுதி தேவைப்பட்டிருக்கும்? 1882 ,ஏப்ரல் 19 ல் இதய நோயால் இறக்கும் முன் இந்த பரிணாமத் தச்சன் ,அவர் மனைவியிடம் கடைசியாய் கூறிய வார்த்தைகள்,

 "எனக்கு இறப்பதில் பயம் சிறிதளவு கூட இல்லை.நீ எத்தனை அன்பான நல்ல மனைவி !!"

அவ்வளவு அன்பான இனிய மனிதராகவும் வாழ்ந்தார் சார்லஸ் டார்வின்.

இன்றும் அமெரிக்காவில் எதிர்க்கப்படும் அறிவியல் உண்மையை இருநூறு ஆண்டுகளுக்கு முன்  பேசிய டார்வினிடம் நாம் கற்றுக் கொள்ள ஆகச்சிறந்த ஒன்று இருக்கிறது. உலகமே எதிர்த்து நின்றாலும் நம் உழைப்பை நாம் நம்ப வேண்டும்

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

பயணங்கள் - செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை... சில டிப்ஸ்! #TravelTips

பயணங்கள்

ம் வாழ்வில் முக்கியமான பங்கை வகிப்பது பயணங்கள் தான். இந்தியாவிற்குள் பயணித்தாலும் சரி, வெளி நாட்டிற்கு பயணித்தாலும் சரி, ஒவ்வொரு பயணமும் வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஒன்றை நமக்கு கற்று கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றன. பயணத்தின் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க சில விஷயங்களை செய்ய வேண்டும், முக்கியமாக சில விஷயங்களை செய்யாமல் இருக்க வேண்டும். அவை என்னவென்ற தொகுப்பே இது.

ஹோட்டல் :

ஹோட்டல்
 

நாம் எந்த ஹோட்டலில் இருக்க போகிறோம் என்பது நம் பயணத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்படுத்தலாம் அல்லது கெடுத்து விடலாம். எனவே, நாம் எந்த ஊருக்கு செல்கிறோமோ அந்த ஊரின் சுற்று வட்டாரங்களில் விசாரித்து சரியான ஹோட்டலை தேர்வு செய்ய வேண்டும். அந்த ஊரின் தன்மையை புரிந்து கொள்ள ஹோட்டல் நிர்வாகி உதவியாக இருப்பார்.

மொழி :

ஒவ்வொரு ஊரிலும் பேசப்படும் மொழியை முழுமையாக கற்று கொள்வது இயலாதது. எனினும் ‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா’ என்று தவறாக ஓரிரு வார்த்தைகளை பேசினாலும் அது நகைச்சுவையான அனுபவமாக அமையும். சில நேரங்களில் அடியையும் வாங்கி தரும். எனவே சரியான நபரிடம் தேவையான வார்த்தைகளை கேட்டறிந்து பேசுங்கள்.

உடை :

உடை

பயணத்தின் போது செல்லும் நாட்டிற்க்கு ஏற்ப உடை அணிவது அவசியம். சென்ற ஊரின் உடை மிக அந்நியமாக இருந்தாலும், அதை அணிந்து நடக்க தெரியாமல் நடந்து அதில் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று பயணத்தை முழுமையாக ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். சுவிட்சர்லாந்து சென்று வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் என்ன இருக்கிறது?  

நடத்தை:

ஒரு திரைப்படத்தில் விவேக் சிங்கப்பூர் சென்று இந்தியாவில் செய்வது போல் கோவில் சுவரில் கிறுக்குவார். அதற்காக அவருக்கு காவலரிடமிருநது அடி கிடைக்கும். உங்கள் ஊரின் சட்டத்தை போலவே அனைத்து ஊர்களிலும் இருக்காது. எனவே, உள்ளூர் மக்களின் வாழ்க்கைக்கு எந்த இடையூறும் விளைவிக்காமல் பயணம் செய்வது நல்லது.

உள்ளூர் பொருட்கள்:

ஒவ்வொரு பயணத்திலும் நினைவாக அவ்வூரின் பொருட்கள் ஏதாவது வாங்கி வாருங்கள். வீட்டை அலங்கரிக்கும் பொருளோ, அல்லது அவ்வூரின் உணவு பொருளோ. பயணத்தின் நினைவிற்கு மனதில் ஒரு நீங்காத இடத்தை அது பெற்றுத்தரும்.

பயணங்கள்

உள்ளூர் வழிகாட்டி:

நீங்கள் செல்லும் ஊரில் ஓர் உள்ளூர் வழிகாட்டியை உடன் அழைத்து செல்லுங்கள். சுற்றுலாத் தலங்களை பார்ப்பது மட்டுமன்றி அந்த தலத்தின் வரலாறை அவர் கூறுவார். அப்படியா? என்று ஆச்சரியப்பட்டு வாயை பிளக்க, ஊரின் வரலாற்றை தெரிந்த ஒரு வழிகாட்டி அவசியம். பெரும்பாலும் கோயில்களில் கைடு இருப்பார்கள். ஊர் சுற்ற என்றால் அந்த ஊரைப் பற்றித் தெரிந்த ஒரு நண்பனை அழைத்துக் கொண்டு சுற்றுவது நலம்.

இயற்கை :

இது உங்கள் பயணத்தின் அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் மற்றவர்களின் அனுபவத்தையும் மேம்படுத்த மிக முக்கியம். இயற்கைக்கு தீங்கு விளைவிக்காமல் பயணம் செய்யுங்கள். பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி எறிவது போன்றவற்றை செய்ய வேண்டாம். சுற்றுலா தளத்தின் பெருமையை பாதுகாப்பது பயணிகளின் கடமை.

’பயணத்திற்காக தான் புகைப்படம், புகைப்படத்திற்காக பயணமல்ல’

புகைப்படம்

உங்கள் பயணத்தின் நினைவாக சில புகைப்படங்கள் தேவை தான் என்றாலும், புகைப்படங்கள் எடுப்பதையே பயணம் முழுவதும் செய்யாதீர்கள். அது சரியான பயணமாக இருக்காது. பயணத்தை அனுபவிப்பதற்கு இடையிடையே ஓரிரு படங்கள் எடுத்துக்கொள்வது தவறில்லை. ஆனால் படம் எடுப்பதற்காகவே சில அரிய நிகழ்வுகள், காட்சிகளை தவற விட்டுவிடாதீர்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
4000 கலோரி காலை உணவை உட்­கொள்ளும் போட்டி
 

4000 கலோரி கொண்ட காலை உணவை உட்­கொள்ளும் போட்­டியை இங்­கி­லாந்தில் உண­வகம் ஒன்று நடத்­து­கி­றது.

 

22278nintchdbpict000299420186.jpg

 

சுமர்செட் பிராந்­தி­யத்­தி­லுள்ள ட்ரீட் கபே எனும் இந்­நி­று­வனம் வரு­டாந்தம் இப்­போட்­டியை நடத்­து­கி­றது. 43 வகை உண­வுகள் இந்த உணவுத் தட்டில் அடங்­கி­யுள்­ளன.

 

இது­வரை ஏரா­ள­மான ஆண்­களும் பெண்­களும் இப்­போட்­டியில் பங்­கு­பற்­றிய போதிலும்,  21 வய­தான ஜேம்ஸ் கொக்ஸ் எனும் இளைஞர் மாத்­தி­ரமே இந்த உண­வுகள் முழு­வ­தையும் உட்­கொண்டு முடித்­துள்­ளாராம்.

 

22278nintchdbpict000299420874.jpg

 

அவர், 36 நிமி­டங்கள், 21 விநா­டி­களில் இந்த உண­வுத்­தட்டை காலி செய்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

16266241_10155498717004578_5372975377773

  • தொடங்கியவர்

நியூசிலாந்தில் சுமார் 400 திமிங்கலங்கள் கரையொதுங்கின: காரணம் கண்டறியப்படவில்லை (Photos)


நியூசிலாந்தில் சுமார் 400 திமிங்கலங்கள் கரையொதுங்கின: காரணம் கண்டறியப்படவில்லை (Photos)
 

நியூசிலாந்தின் சவுத் தீவுப் பகுதியின் வடக்கே உள்ள கோல்டன் பே பிராந்தியக் கடற்கரையில் 400 க்கும் அதிகமான திமிங்கலங்கள் அலையில் அடித்துவரப்பட்டு கரையொதுங்கியுள்ளன.

கரையொதுங்கிய திமிங்கலங்களில் குறைந்தது 250 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கரையொதுங்கியவை அனைத்தும் பைலட் வகை திமிங்கலங்கள் எனவும், உயிருடன் உள்ள திமிங்கலங்களைக் காப்பாற்ற தன்னார்வத் தொண்டர்களும் மக்களும் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தன்னார்வத் தொண்டர்களால் சுமார் 50 திமிங்கலங்கள் வரை மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளன.

நேற்று இரவு முதல் இவை கரையொதுங்கி வரும் நிலையில், இன்று அதிகாலை வேளையில் அவற்றை பிரதேச மக்கள் கண்ணுற்று, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான திமிங்கலங்கள் இவ்வாறு கரையொதுங்கியமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

நியூசிலாந்தில் 1918 ஆம் ஆண்டில் சதம் தீவுப் பகுதியில் ஆயிரக்கணக்கான திமிங்கலங்கள் இவ்வாறு கரையொதுங்கியிருந்தன.

அதன் பின்னர், 1985 ஆம் ஆண்டில் ஆக்லேண்டில் சுமார் 450 திமிங்கலங்கள் கரையொதுங்கியிருந்தன.

 

http://newsfirst.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: காற்றைக் கவரும் காந்தம்

 

 
 
balloon2_3129871f.jpg
 
 
 

காந்தங்களைப் பற்றிய ஆராய்ச்சியும், காந்தக் கவர்ச்சியும் மீதான ஆர்வமும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன. காந்தம் என்றாலே ‘கவர்ச்சி விசை’ அல்லது கவர்ந்திழுக்கும் என்று அர்த்தம். அதனுடைய கவர்ந்திழுக்கும் தன்மை காரணமாகவே அதற்கு ‘காந்தம்’என்று பெயர். அப்படிப்பட்ட ஆற்றல் பெற்றவர்களை ‘காந்தன்’என்றும் அழைப்பார்கள்.

வைரக் கல், நவரத்தினக் கல் என்று நகை செய்யும் கற்களை நாம் கொண்டாடுகிறோம். இல்லையா? சீனர்கள் காந்தத்தை ‘உறவுக் கல்’என்று உரிமையோடு கொண்டாடுகிறார்கள். வீட்டில் இருக்கும் தாத்தா வாஞ்சையோடு தங்கள் உறவுகளை அரவணைத்துக் கொள்கிறார் அல்லவா? அதுபோல, காந்தம் இரும்புத் துகள்களை ஈர்த்துக்கொள்வதால் அதை உறவுக் கல் என்று அழைப்பதாகக் காரணம் சொல்கிறார்கள் சீனர்கள்.

உறவுக் கல் என்றால் உற்றார், உறவினர்கள் மட்டுமல்ல ஊரார்களையும் கொஞ்ச வேண்டுமல்லவா? ஆனால், காந்தம் இரும்பை மட்டும்தானே சொந்தம் கொண்டாடுகிறது. மற்ற எந்தப் பொருட்களையும் கவர்ந்திழுப்பதில்லையே, அது எப்படி உறவுக் கல்?

உண்மையில் காந்தம் இரும்பை மட்டுமல்ல, வேறு பல பொருட்களையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றது. ஒரு வலிமைமிக்க காந்தம் காற்றைக்கூடக் கவர்ந்திழுக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? காற்றை மட்டுமல்ல தண்ணீரைக்கூடத், தன் பக்கம் இழுக்கும் ஆற்றல் பெற்றதுக் காந்தம்.

எப்படி? என்ன காரணம்?

காந்தங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்று காந்தங்களைப் பற்றிய படிப்பு தனித்துறையாகவே வளர்ந்திருக்கிறது. மேலும் காந்தங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இயற்கைக் காந்தங்கள் சக்தி குறைந்தவை. அவற்றின் கவர்ந்திழுக்கும் ஆற்றலும் குறைவு. காந்தங்களின் இந்தக் குறைந்த அளவு கவர்ந்திழுக்கும் சக்தி பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆச்சரிய மூட்டுவதாக இருந்திருக்கிறது. குறைந்த அளவு சக்தியைப் பார்த்தே ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள் என்றால் இன்றைய செயற்கைக் காந்தங்களின் சக்தியைப் பார்த்தால் மிரண்டு போயிருப்பார்கள்.

இன்று செயற்கை முறையில் உருவாக்கப்படும் காந்தங்கள் பல டன் எடையுள்ள இரும்புப் பொருட்களைத் தூக்கக்கூடிய சக்தி படைத்தவை.

இரும்புத் துண்டுகளுக்கு நான்கு புறமும் சுற்றப்பட்டுள்ள இரும்புக் கம்பியின் மூலம் மின்சாரம் பாய்ச்சப்பட்டுச் செயற்கைக் காந்தங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் செயற்கைக் காந்தங்கள் அதிக சக்தி கொண்டவை.

இந்தச் செயற்கைக் காந்தங்கள்தான் காற்றுத் துகள்களைக்கூட இழுக்கும் சக்தி படைத்தவை. காற்றுத் துகள்களை எப்படி ஈர்க்கும்? அதை எப்படி நம்புவது ?

மிக மெல்லிய பலூனுக்குள் ஆக்சிஜனை நிரப்பி அதை வலிமை யான இரண்டு செயற்கைக் காந்தங் களுக்குள் வைத்துப் பாருங்கள். அந்த பலூனுக்குள் இருக்கும் ஆக்சிஜன் காந்தத்தின் கவர்ச்சியால் பாதிக்கப்படும். உள்ளே இருக்கும் ஆக்சிஜன் பாதிக்கப்படுவதால் பலூன் தன்னுடைய வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். பலூனின் இரண்டு புறங்களிலும் உள்ள காந்தங்களின் இடைவெளியைக் கூட்டும் போதோ அல்லது குறைக்கும் போதோ பலூனின் உருவம் மாறுவதை நீங்கள் பார்க்க முடியும். ஒரு கட்டத்தில் வலிமையான இந்தக் காந்தங்களின் விசையால் ஆக்சிஜன் வேகமாகக் கவரப்படுவதால் பலூன் வெடித்துவிடும்.

செயற்கைக் காந்தம் காற்றைக்கூட ஈர்க்கிறது என்றால், அதற்குக் காரணம் அதிகமான அதன் கவர்ந்திழுக்கும் திறன்தான்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

தனிமையைத் தவிர்ப்பது எப்படி? #HealthTips

தனிமை வரமா, சாபமா? உறவுகளைப் பிரிந்து வாழ்பவர்களையும், பிள்ளைகளைப் பிரிந்து முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களையும் விசாரித்தால், அது எத்தனைக் கொடூரமானது என்பது தெரியும். `தனிமை... தவம்’ என வேண்டுமானால் சொல்லிப் பார்த்துக்கொள்ளலாம். அது வேலைக்காகாது; தனிமையில் இனிமை காண முடியாது என்பதே நிஜம். ஒரு மனிதனின் ஆற்றலைப் போக்கி, அவனைப் பலவீனமாக்கும் சக்தி இதற்கு உண்டு. எனவே தனிமை தவிர்ப்போம் வாருங்கள்!

தனிமை தவிர்

சிலர் தாமாகவே தனிமையில் ஆழ்ந்துவிடுவார்கள். அதற்கு இன்றைய வாழ்க்கைச் சூழல், பணிச்சுமை, குடும்பப் பிரச்னைகள், சமூகப் பிரச்னைகள் எனப் பல காரணங்கள் உள்ளன. அப்படித் தனிமைப்படும் மனிதர்களின் வகைகள், தனிமையைத் தவிர்ப்பது எப்படி என்பதையெல்லாம் விளக்குகிறார் மனநல மருத்துவர் ராமானுஜம்...   

தனிமையை அடிப்படையாகக்கொண்டு மனிதர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் அகத் தனிமையாலும், மற்றொரு வகையினர் புறத் தனிமையாலும் பாதிக்கப்பட்டவர்களாக வாழ்ந்துவருகிறார்கள்.

அகத் தனிமையினரும் புறத் தனிமையினரும்!

ஸ்கூல், காலேஜ், பிறகு வேலை என்று வாழ்க்கையில் பல்வேறு பரிணாமங்களை எடுத்தாலும்கூட அகத் தனிமையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் ஒட்டாமலேயே வாழ்க்கையை நடத்துபவர்களாக இருப்பார்கள். இவர்கள், வெறுமையை அதிகமாக உணர்வதால், மனச்சோர்வுடன் (Depression) காணப்படுவார்கள். மற்றவர்களுடன் அதிகம் பழகுவதைத் தவிர்ப்பார்கள்.

அகத் தனிமையினருக்கு நேர் எதிரான வாழ்க்கையை நடத்துபவர்கள் புறத் தனிமையினர். நண்பர்கள், உறவுகள் என அனைவரும் வேண்டும் என நினைப்பார்கள். இவர்களின் பெரிய குறையே பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ எனும் கேள்வியுடனேயே வாழ்க்கையை நகர்த்துவதுதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பிறரின் சொல்லைக் கேட்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள்.

இவர்களைத் தவிர நோயாளிகளும், ஆளுமைப் பண்பு உள்ளொடுங்கியவர்களும், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும் தனிமையை அதிகமாக விரும்புபவர்களாக இருக்கிறார்கள்.

இப்படித் தனிமை உணர்வு தொடரும்போது மனச்சோர்வு தொடங்கி மனச்சிதைவு (Schizoid) வரை பல்வேறு உள நோய்களுக்கு (Psychosis) உள்ளாக நேரிடும். இது தனிமனித வாழ்க்கையில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் காரணமாகிவிடும்.

தனிமையைத் தவிர்க்க சில வழிமுறைகள்!

* ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் கிடைக்கும் மெய்நிகர் உறவுகளுக்குப் பதிலாக, உண்மையிலேயே நம் நலம் விரும்பும் உறவுகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.

* எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும்போது உடனடியாக அவற்றைத் தவிர்த்துவிட்டு, நேர்மறையான எண்ணங்களைக் கொண்டு வருவதன் மூலம் தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்கலாம்.

* பேசும்போது பிறரின் கண்களைப் பார்த்துப் பேசுவதன் (Eye Contact) மூலம் தயக்கங்களைத் தவிர்த்து, உறவுகளை மேம்படுத்தி, தனிமையைத் துரத்த முடியும்.

* மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள். அவர்களின் குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

தனிமை

* தனிமை துரத்தும்போது, சில மனப்பயிற்சிகளில் ஈடுபடலாம். நீங்கள் எதிர்பார்ப்பவற்றை மனக் காட்சியாக (கற்பனை) உருவாக்கிப் பாருங்கள். நல்ல பலன் தரும். 

* நாமெல்லாம் சமூக விலங்குகள். எனவே, சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்திக்கொள்ள சமூக சேவை, சமூகக் காரியங்கள் மற்றும் சமூகக் குழுக்களுடன் இணைந்து செயல்படுவது ஆகியவற்றில் நம்மை ஈடுப்படுத்திக்கொள்ளலாம்.

* தினமும் உங்களுக்காக சில மணி நேரங்களை ஒதுக்குங்கள். அது உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் இருப்பதாக இருக்கட்டும். வீட்டில் உள்ளவர்களுடன் பயனுள்ள வழியில் அந்த நேரத்தைச் செலவழியுங்கள்.

* குழு விளையாட்டுகளில் கலந்துகொள்ளுங்கள். விளையாட்டு நம்முடைய ஈகோவை விரட்டி, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை அதிகரிக்கச் செய்யும்.

இவை தவிர, தனிமையில் இருந்து விடுபட நல்ல புத்தகங்கள், இலக்கியங்களை வாசியுங்கள். மனதுக்கு உற்சாகம் அளிக்கும் நல்ல இசையைக் கேளுங்கள். முடிந்தால், முறைப்படி பாடவோ, இசைக்கருவி மீட்டும் கலையையோ கற்றுக்கொள்ளுங்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா இருவரின் கார் என்ன... எவ்வளவு விலை வித்தியாசம் தெரியுமா? #OPSvsSasikala #VikatanExclusive

இப்போதைக்கு ஓபிஎஸ்-ஸும், விகேஎஸ்-ஸும்தான் (அதாங்க.. வி.கே. சசிகலா) ட்ரெண்ட்! இந்த நேரத்தில் ரஜினியின் ‘எந்திரன் 2.0’ படம் டீஸர் ரிலீஸானால்கூட நெட்டில் வைரல் ஆகாதுபோல! 

 

சசிகலா கார்

சிரித்துக் கொண்டே இருக்கிறார்; பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்; எளிமையாக இருக்கிறார் என்று முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தைப் பற்றி பாஸிட்டிவ் கமென்ட்கள் வருவதுபோல், கார் விஷயத்திலும் எளிமையாகவே இருக்கிறார் ஓபிஎஸ். சாதாரண கவுன்சிலர்களெல்லாம் படா படா ஃபார்ச்சூனர், எண்டேவர் கார்களில் வரும்போது, இனோவா கிரிஸ்டாவைப் பயன்படுத்துகிறார் ஓ. பன்னீர் செல்வம். 

இந்த இனோவா, ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராக இருந்தபோது வாங்கியது. ஜெயலலிதா ஆவடிக்கு வருகிறார் என்றால், அடையாறில் இருந்தே கான்வாய் கார்கள் ஊர்வலமாக வர ஆரம்பித்துவிடும். ஓ. பன்னீர் செல்வத்தின் இனோவாவைச் சுற்றி, சொற்பமான கார்கள் மட்டுமே கான்வாயாக வர, ஆளுநரைச் சந்தித்து விட்டு வந்தார். 

 

சசிகலா கார்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இதற்கு நேர்மாறு; தாறுமாறு! ஜெயலலிதா போலவே கைகூப்பி, ஜெ. போலவே சேலை உடுத்தி, ஜெ.போலவே கையசைத்து என்று முழுசாக ஜெயலலிதாவாகவே மாறிவிட்ட சசிகலாவின் நடவடிக்கைகள் நாமறிந்ததே! ஜெ. இறந்த பிறகு போயஸ் கார்டனில் ஆஃப் ஆகிக் கிடந்த அவரின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிரேடோ கார், இப்போது மீண்டும் உயிர்த்தெழுந்து ‘வ்வ்ர்ர்ரூம்’ என மெரீனா பீச் போகிறது; ஆளுநரைச் சந்தித்துவிட்டு வருகிறது; மன்னார்குடி செல்கிறது.

7 சீட்டர் காரான இதில், தனது தோழி உயிருடன் இருந்தபோது பின் பக்க சீட்டில் பவ்யமாக அமர்ந்து வந்த சசிகலா, இப்போது ஜெயலலிதா அமர்ந்த அதே முன் சீட்டில், மக்களுக்கு... ஸாரி.. தொண்டர்களுக்கு... ஸாரி... அமைச்சர்களுக்குக் கைகாட்டியபடி முழு சந்திரமுகியாகவே மாறிவிட்டார். ஜெ.வின் பொதுச் செயலாளர் பதவி, முதல்வர் பதவி, போயஸ் கார்டன், கொடநாடு என்று எல்லாம் தனக்குத்தான் என்று இருக்கும் சசிகலா வசம்தான்... ஜெ.வின் பிரேடோ காரும்!

இரவு 7.30 மணிக்கு ஜெ.வின் அதே லேண்ட்க்ரூஸர் பிரேடோவில் ஆளுநரைச் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் சசிகலா. இனிமேல் பொதுப் பிரச்சாரங்கள் மற்றும் கட்சிப் பணிகளுக்கும் (!?) இதே பிராடோதான் பலிகடா! சரி; இந்த காரின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு சின்ன ட்ரெய்லர்!

* கம்பீரம்தான் இந்த லேண்ட்க்ரூஸர் பிரேடோ காரின் ப்ளஸ். சண்டைக்குத் தயாராகும் WWF வீரனைப்போல் புஜபல பராக்கிரமசாலி போலவே இருக்கும் இந்த டிஸைன் ஜெயலலிதாவுக்கு ரொம்பவும் பிடித்துப்போய் விட்டதாம். ‘கொழுக் மொழுக்’ டிஸைனில் இருக்கும் செடான் கார்களைவிட, ரஃப் அண்ட் டஃப்பான எஸ்யூவிக்கள்தான் ஜெ.வின் ஃபேவரைட். அவரின் கம்பீரமான தோற்றத்துக்காகவே இந்த கம்பீரமான கார் செலெக்ட் செய்யப்பட்டதாம்.

 

ஜெயலலிதா கார் சசிகலா வசம்

 

* இதன் கட்டுமானம், நிச்சயம் வேறு எந்த கார்களிலும் இல்லாதது. ஹோட்டல்களில் உயர்தர சைவம்/அசைவம் எப்படியோ, அதேபோல் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது அனைத்தும் உயர்தர உலோகம். ஹம்மர் போன்ற கார்களில் இருப்பதுபோன்ற கட்டுறுதியான லேடர் சேஸி ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கிறது பிராடோ. கிட்டத்தட்ட 2990 கிலோ (கிராஸ்) எடை கொண்ட இதை வைத்து, லாரியையே நெட்டித் தள்ளும் அளவுக்கு இதன் பில்டு குவாலிட்டி அத்தனை ஸ்ட்ராங். 

* ஏற்கெனவே இந்த காரில் மிக்ஸி, கிரைண்டர் தவிர அத்தனை வசதிகளும் உண்டு. இது முதல்வரின் கார் என்பதால், எக்ஸ்ட்ராவாக புல்லட் புரூஃப் கண்ணாடியும் பாடி பேனலும் பொருத்தப்பட்டு பீரங்கிபோல் வடிவமைத்திருக்கிறார்கள். மேலும் இந்த காரில் அடிப்படைப் பாதுகாப்பு வசதிகளான ABS, டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், (மலை ஏற்றத்தில் கார் கீழே இறங்காமல் அப்படியே நிற்கும்) 7 காற்றுப் பைகள், ESP போன்றவை கொண்ட இது, 4 வீல் டிரைவ் கார். 4 வீல்களுக்கும் பவர் கொப்புளிக்கும் இந்த காரில் மலையேறுவது, சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆவது மாதிரி ரொம்ப ஈஸி.

* 3000 சிசியும், 4 சிலிண்டரும் கொண்ட காரான இதில் 171bhp பவர், 41kgm டார்க், 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ், (காரின் அடிப்பாகத்துக்கும் தரைக்கும் உண்டான இடைவெளி) 220 மிமீ. மேடு பள்ளங்கள், ஸ்பீடு பிரேக்கர்களில் கார் தட்டுவதெல்லாம்... சான்ஸே இல்லை!

* எஸ்யூவிக்கள் உயரமாக இருக்கும் என்பதால், ஏறி இறங்க வசதியாக காரின் பக்கவாட்டில் ஃபுட் கிளாடிங் இருக்கும். இது முன்னாள் முதலமைச்சர் காராச்சே! பல பவுன்சர்கள் ஏறி நின்றாலும் தாங்கும் வண்ணம் ரயிலில் இருப்பதுபோல் ஸ்ட்ராங்கான ஃபுட் கிளாடிங் இதில் இருக்கிறது. இதில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி ஏந்தி நின்று கொண்டே பயணிக்கும் வண்ணம் அகலமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஃபுட் கிளாடிங்ஸ்.

* இந்த காரின் டீசல் டேங்க் கொள்ளளவு 87 லிட்டர் . இதன் மைலேஜ், லிட்டருக்கு கிட்டத்தட்ட 3.5 முதல் 4 கி.மீதான். 

* வாயை மூடிக் கேட்கவும். இந்த காரின் ஆன்ரோடு விலை 1.25 கோடி ரூபாய். பாதுகாப்புச் செலவுகளுக்காக கூடுதலாக  ஜஸ்ட் 1 கோடி ஆகியிருக்கும்.  ஆக மொத்தம் தோராயமாக ரெண்டே கால் கோடியைத் தொட்டிருக்கும். சரி... இந்நேரம் ஓ. பன்னீர்செல்வத்தின் இனோவா கிரிஸ்டா விலையை  கூகுள் பண்ணியிருப்பீர்கள். 27 லட்சம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 3 Personen

இன்றையநிலை

  • தொடங்கியவர்

நைட்டியா இது...?! ஆச்சர்யப்படுத்துகிறார்கள் மாணவிகள்! #TrendyNighty

மாணவிகள்

மிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பெண்களின் பகல் உடையாக மாறிப் போயிருக்கிறது ‘நைட்டி’. எல்லா வயதுக்கும் ஒரே ஸ்டைல். தாய்மை காலத்தில் பயன்படுத்தும் நைட்டியில் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. பல ஆண்டுகளாக ஒரே ஸ்டைலில் வரும் நைட்டியின் மீது அடங்காத வெறுப்பில் இருக்கும் பெண்கள் அனேகம்பேர்.  சிக்கென்ற உடல்வாகு உள்ள இளம் பெண்கள், நைட்டியின் மீது இருக்கும் கடுப்பால், பனியன் கிளாத்தில் வரும் நைட் சூட்டுக்கு மாறி விட்டனர். அது நைட்டி போல் இல்லை. கொஞ்சம் விலை கூடுதல். 'நைட் சூட்' எல்லோருக்கும் ஏற்ற விலையில் இல்லை. காட்டன் பீல்... அதே சமயம் கொஞ்சம் ஸ்டைலா நைட்டி கிடைக்காதா என்ற தமிழ்நாட்டுப் பெண்களின் புலம்பல் திருப்பூர் நிப்டி நிட் வேர் பேஷன் இன்ஸ்டியூட்  மாணவிகள் காதில் விழ..இதோ டிரெண்டி நைட்டிகளை உருவாக்கி பேஷன் உலகத்தை பரபரப்பாக்க இருக்கிறார்கள்

எம்.பி.ஏ. இன் அப்பாரல் பிசினஸ் முதலாம் ஆண்டு மாணவிகளின் பியூஷன் இது. சில நாட்கள் பேஷன் ஆகப் போகிறது. அனுப்பிரியா, சந்தியா, வாசுகி, தனுஸ்ரீ, கீர்த்தனா, வைஷ்ணவி ஆகிய ஆறு பேரும் விடியவிடிய விழித்திருந்து கண்டறிந்த டிசைன்கள்தாம் இவை. டிசைனிங், கட்டிங், ஸ்டிச்சிங் என அனைத்திலும் களம் இறங்கி கலக்கியுள்ளனர். இவர்களது டிரெண்டி நைட்டிகளுக்கு உயிர்கொடுத்த மாடல்களை உற்சாகமாக கிளிக்கி, உங்கள் பார்வைக்கு ஆச்சர்யமாக்கு வித்தையைக் கொடுத்தது காஸ்ட்யூம் டிசைனிங்கில் முதலாம் ஆண்டு படிக்கும் சௌமியா.

நைட்டியோட ஸ்டைலையே மாத்திட்டீங்களே எப்படி ?
''நைட்டிய வெறுக்க பொதுவா என்னென்ன காரணங்கள்னு பெண்களோட மனக்கதவுகளைத் தட்டினோம். அங்கிருந்து வந்திருந்த மனக்குமுறல்கள்தான் டிசைன்களாக உருவெடுத்தது. ‘‘தோள் முதல் கால் வரை ஒரே மாதிரியான பீல். குனிந்து, நிமிர்ந்து வேலை பார்க்க முடியலை. திடீர்னு வீட்டுக்கு விருந்தினர் வந்துட்டா ஷாலையோ, டவலையோ தேடி ஓட வேண்டியிருக்கு. அப்போதைக்கு தப்பிச்சாலும், அசெளகரியமா இருக்கு. காட்டன் நைட்டி டிரான்ஸ்பெரன்டா இருக்கிறதும் ஒரு மாதிரி பீல் தருது. விடுமுறை நாட்கள்ல வீட்டு வேலைகளுக்கு இடையில டக்குனு எங்காவது கிளம்பனும்னா மறுபடியும் டிரஸ் பண்ற அவஸ்தை இருக்கே அச்சச்சோ கொடுமை. வீட்டில் இருக்கும் போது நைட்டிதான் பெட்டர். இத்தனை சங்கடங்களோட நைட்டிய சகிச்சுக்க வேண்டியிருந்தது’’ இது மாதிரியான கருத்துகள்தான் எங்களை புது வித நைட்டியா வந்திருக்கு"

நைட்டி

நியூ ஸ்டைல் நைட்டியில என்னென்ன ஸ்பெஷல்?

* போரடிக்கும் ஸ்டைல மாற்ற நைட்டிக்கான பேப்ரிக்கே புதுசு. காட்டன் கசங்கும், சுருங்கும், நாள்ப்பட கலர் மங்கும். இதெல்லாம் டெனிம்ல இல்ல எப்பவும் பெண்களை ஃப்ரெஷ்ஷா காட்டும்.

* டெனிம்னாலே ஜீன்ஸ் போல ஹார்டா இருக்கும்ன்ற எண்ணமே வேண்டாம். இது மெல்லிய டெனிம் கிளாத். ரொம்ப சாப்ட், வெயிட்லெஸ்ஸாவும் இருக்கும். போட்டுக்கிட்டா உடலோட சினேகமாயிடும்.

* கழுத்து , கை, பாட்டம்னு லேஸ் வைத்து, மேச் பண்ணியதில் டிசைனும் புதுசு. இந்த நைட்டிய போட்டுகிட்டா யூத்தா ஃபீல் பண்ணலாம்.

* டெனிம்ல பிளெயினோட, பிரின்டட் கிளாத் ரொம்பவே அழகுக்கு அழகு சேர்க்குது. வெரைட்டியா நைட்டி போட்டு அசத்தலாம்.  

* கசங்காது, சுருங்காது, டிரான்ஸ்பரன்டா இருக்காது வழக்கமான நைட்டியில் இருக்கும் சங்கடங்கள் இதில் இருக்கவே இருக்காது.

* உட்கார்ந்து, எழுந்து எந்த வேலையும் செய்யலாம். டெனிம் கிளாத், எதற்கும் வளைந்து கொடுக்கும். பரபர வேலைக்கு இடையில் டென்சன் இல்லாமல் இயங்கலாம்.

* சண்டே சமையலுக்கு இடையில் டக்குன்னு வெளிய கிளம்பனுமா? வேற என்ன டிரெஸ் பண்றதுன்னு யோசிக்கவே தேவையில்லை. டிராவல், டிரைவிங் எல்லா நிலையிலும் இந்த நைட்டி ரொம்ப கம்போர்டா இருக்கும். பார்க்கும் பலரையும் பொறாமைப்பட வைக்கும்.

* நியூ ஸ்டைல் நைட்டியை அயர்ன் செய்தும் போடலாம். துவைத்த பின் விரைவில் உலர்ந்து விடும். பராமரிப்பதும் ரொம்ப எளிது.

* பெண்கள் தங்களோட உடல் வாகுக்கு ஏற்ப ஃபிட்டாக தைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் குண்டாக இருப்பவர்களையும் ஒல்லியாகக் காட்டும் உபயம் இதில் உண்டு.

* வீட்டுக்கு விருந்தினர் வந்தால் இனி ஷாலையோ, டவலையோ தேடி ஓட வேண்டியதில்லை. உங்கள் ஸ்டைலையே மாற்றப் போகும் நைட்டி இது.

* வெஸ்டர்ன் ஸ்டைல் எல்லாம் இதில் சாத்தியம். நைட்டியை ஷார்ட்டாக தைத்து, லெகினுடன் மேட்ச் செய்யலாம். வரும் காலத்தில் டிரெண்டி பெண்களின் சாய்ஸ் இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்லும் அவர்களின் டிசைன் நிச்சயம் சொல்ல வைக்கிறது வாவ்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சட்டசபைக் கட்டிடங்கள்

எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கிச் சொல்கின்றன என்றொரு சொற்றொடர் ஆங்கிலத்தில் வழக்கத்தில் உள்ளது. ரோம் நகரம் என்பது ஆட்சிக்கான தலைமையிடமாகக் கொண்டால் அதன் மெய்ப்பொருளைத் தமிழ்நாட்டு மக்கள் இப்போது செய்திகளாகக் கண்டும் கேட்டும் வருகிறார்கள்.

கூட்டாட்சித் தத்துவ ஆட்சி முறையைக் கொண்டது இந்தியா. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாட்சி முறை இது. மத்திய அரசப் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நாடாளுமன்றம் இருப்பதுபோல மாநில ஆட்சிப் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டமன்றங்கள் இருக்கின்றன. மாநிலங்களுக்கும் தனித்த உரிமைகள் இருக்கின்றன. கப்பற்படை, விமானப்படை, தரைப்படை, அணுசக்தி, கனிம வளங்கள், வெளியுறவு, குடியுரிமை வழங்கல், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான, கப்பல் போக்குவரத்துகள், காப்பீட்டுக்

கழகங்கள், மக்கள்தொகை, தொலைபேசி, அஞ்சல் துறை, பங்கு வர்த்தகம், வர்த்தக உரிமம், பண அச்சடிப்பு உள்ளிட்ட 97 துறைகளில் மத்திய அரசுக்கு உரிமை இருப்பது போல, காவல் துறை, பொதுச் சுகாதாரம், விவசாயம், நகராட்சி, வர்த்தகச் சந்தை, சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணங்கள், கேளிக்கை வரி, வேளாண்மை வரி, நில, கட்டட வரி உள்ளிட்ட 64 துறைகளில் மாநில அரசுகளுக்கும் தனித்த உரிமை உள்ளது.

மத்திய அரசின் இந்தப் பணிகளைச் செயல்படுத்துவதற்கான செயல் அலுவலகம் (Secretariat)

இருப்பதுபோல மாநில அரசுகளுக்கும் செயல் அலுவலங்கள் இருக்கின்றன. இந்தச் செயல் அலுவலகங்களும் சட்டசபையும் பெரும்பாலும் ஒருங்கிணைந்துதான் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆங்கில ஆட்சியில் முக்கியமான கோட்டையாக விளங்கிய செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான் இன்றைக்குத் தமிழ்நாடு மாநில அரசின் தலைமைச் செயலகமாகச் செயல்பட்டு வருகிறது. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் இந்தியாவின் பழமையான சட்டமன்றக் கட்டிடங்களுள் விசேஷமானது. இந்தியாவிலுள்ள இதுபோன்ற விசேஷமான செயலக, சட்டசபைக் கட்டிடங்களின் ஒளிப்படத் தொகுப்பு இது.

bangalore_3130845f.jpg
கர்நாடக சட்டமன்றக் கட்டிடம்

 

chandigarh_3130844f.jpg
சண்டிகர் சட்டமன்றக் கட்டிடம்
 
kerala_3130843f.jpg
கேரள சட்டமன்றக் கட்டிடம்
 
maharashtra_3130842f.jpg
மஹாராஷ்டிர சட்டமன்றக் கட்டிடம்
 
rajasthan_3130841f.jpg
ராஜஸ்தான் சட்டமன்றக் கட்டிடம்
TN_3130840f.jpg
தமிழ்நாடு சட்டமன்றக் கட்டிடம்
 
tripura_3130839f.jpg
திரிபுரா சட்டமன்றக் கட்டிடம்
up_3130838f.jpg
உத்தரப்பிரதேச சட்டமன்றக் கட்டிடம்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஓ.பன்னீர் சிங் தோனி!

 

6p1.jpg

`தன்மானத் தமிழர்' ஓ.பி.எஸ் - `தங்கத் தலைவன்' தோனி இருவருமே இன்றைய தேதியில் மிக மிக முக்கியமான செலிப்பிரிட்டிகள். என்னதான் ஏரியா வேற வேற என்றாலும், இவர்கள் இருவருக்கும் இடையில் எக்கச்சக்கமான ஒற்றுமைகள் இருக்கின்றன என்பது ஒரு மத்தியான வேளையில் `சின்னம்மா சபதம்' படம் பார்த்தபோது உறைத்தது. அந்த அரிய கண்டுபிடிப்புகள் உங்கள் பார்வைக்கு...

 அதிகம் கிரிக்கெட் பார்க்காத வெளிநாட்டு ரசிகர்கள் தோனிதான் இந்திய அணியின் கேப்டன் எனச் சொன்னால் நம்பவே மாட்டார்கள். காரணம், வேர்ல்ட் கப் ஜெயித்த கேப்டன் என்ற பெருமையோ, பந்தாவோ அவருக்கு இருக்கவே இருக்காது. இந்த எளிமை விஷயத்தில் தோனி பரங்கிமலை என்றால், ஓ.பி.எஸ் பழநிமலை. நான்தான் முதல்வர் என்பதை ஓ.பி.எஸ்ஸே நம்ப மாட்டார். பணிவுன்னா பணிவு... அப்படி ஒரு பணிவு!

* எவ்வளவு பெரிய கோப்பையானாலும் சரி, ஜெயிக்கும் வரைதான் தோனி நட்ட நடுவில் இருப்பார், கொண்டாட்டங்களிலோ, கோப்பை வாங்கும் தருணத்திலோ தோனி எப்போதும் ஒதுக்குப்புறம்தான். ஓ.பிஎஸ்ஸும் அப்படியே. தமிழ்நாடே அதிர்ந்து குலுங்கும் போராட்டமாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க-வே உடையப்போகும் அபாயமானாலும் சரி... ஓ.பி.எஸ் இருக்கும் இடமே தெரியாது. அமைதியே வடிவாய் ஒதுங்கியிருப்பார்.

* தோனியின் ஸ்பெஷலே கெட்டப் சேஞ்ச்தான். சடை முடியோடு ஒரு சீஸன், சம்மர் கட்டில் ஒரு சீஸன், சால்ட் அண்ட் பெப்பெரில் ஒரு சீஸன்... என வெரைட்டி காட்டி வெளுத்து வாங்குவார். ஓ.பி.எஸ் அடிக்கடி கெட்டப் மாற்றுவதில்லை என்றாலும், வெரைட்டி நிச்சயம் உண்டு. கொஞ்ச காலம் வெள்ளை வெளேரென தாடி வைத்து சுற்றிக்கொண்டிருந்தார். அப்புறம் ட்ரிம் செய்த தாடியோடு கொஞ்சநாள். இப்போது க்ளீன் ஷேவ்.

* மொத்த நாடும் கம்மென தூங்கத் தயாராகும்போது திடீரென, `கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்' என்பார். `ஓய்வு பெறுகிறேன்' என்பார். இந்தத் திடீர் திடீர் அறிவிப்புகள் தோனி ஸ்பெஷல். ஓ.பி.எஸ்ஸும் இதே மாதிரிதான். ஓ.பி.எஸ்தான் இனி பவர் ப்ளேயர் என எல்லோரும் எதிர்பார்க்கும்போது, `சின்னம்மா சரணம்' என அறிவிப்பு விடுவார். `சாஃப்ட்டா டீல் பண்ணுவார்' என எதிர்பார்க்கும்போது போலீஸை விட்டு அடித்து விரட்டுவார். புரியாத புதிர் பாஸ் நீங்க!

* என்னதான் கோப்பைகள் பல வென்ற கேப்டனாக இருந்தாலும் இவருக்கு எதிரிகள் அணி நிர்வாகத்திலேயேதான். `வயசாயிடுச்சு, கோஹ்லிக்கு வழிவிடுங்க', `ஃபார்ம்ல இல்லை, ரிட்டையர்் ஆகிடுங்க' என குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அதேபோல் ஓ.பி.எஸ் என்னதான் சாஃப்ட் சி.எம்-மாக இருந்தாலும், `செல்லாது செல்லாது... சின்னம்மாவுக்கு வழிவிடுங்க' என சொந்தக் கட்சியிலேயே வேட்டு வைப்பார்கள்.

* தோனிக்கும் சரி, ஓ.பி.எஸ்ஸுக்கும் சரி... சென்னையின் ஒரு குறிப்பிட்ட ஏரியாதான் செம ராசி. அது சேப்பாக்கம்! அதுநாள் வரை கேப்டனாக இருந்த தோனி லோக்கல் தல ஆனது சேப்பாக்கத்தின் சூப்பர் கிங்ஸுக்கு கேப்டனான பின்னர்தான். அதேபோல வெறும் அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் முதலமைச்சரானதும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருக்கும்போதுதான். (என்ன, லாஜிக் இடிக்குதா? நீங்க ரொம்ப லேட்டு பாஸு. முதல்ல இருந்தே அது இடிச்சுக்கிட்டுதான் இருக்கு!)

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பழைய டூத் பிரஷை இப்படியும் பயன்படுத்தலாமே!

டூத் பிரஷ்
ற்கள் தேய்க்கப் பயன்படுத்தும் டூத் பிரஷ் தேய்ந்து போனதும் அவற்றை தூக்கி எறிந்து விடாமல் பயனுள்ள வகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். எப்படி என்று பார்க்கலாம்.

1. சுவர்களில் கிறுக்கலா?
குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கிரேயான்ஸ், சாக்குக் கட்டிகள்  மூலமாக குழந்தைகள் கிறுக்கி வைத்திருந்தால் அதை வெறும் துணியால் துடைத்தால் சுத்தமாக போகாது. அந்த சமயத்தில் பழைய டூத் பிரஷால் அதை தேய்த்து துடைத்தால் சட்டென போய்விடும்.

2. நகைகளை பளிச்சென ஆக்கலாம்!
தங்கமோ,வெள்ளியோ, கவரிங் நகைகளோ அவற்றை சுத்தம் செய்யாமல் அணிவதால் தோல் வியாதிகள் ஏற்படுவதுடன் நகைகளும் மங்கலாக இருக்கும். சிறிதளவு தண்ணீரில் சோப்பு பவுடரைப் போட்டு அதில் நகைகளை மூழ்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து நகைகளில் இடுக்குகளை மென்மையாக டூத் பிரஷால் தேய்க்கும் போது நகைகள் சுத்தமாகிப் பளிச்சிடும்.

3. கதவு,ஜன்னல் இடுக்குகளில் அழுக்கா?
கதவு மற்றும் ஜன்னல் இடுக்குகளில் ஒட்டடை, அழுக்கு சேர்ந்திருக்கும். பூ வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகளின் ஓரங்களில் இருக்கும் அழுக்கை சாதாரணமாக துடைப்பது கஷ்டம். இடுக்கான இடங்களில் பிரஷ் மூலம் தேய்க்க அழுக்கு போய்விடும்.

4. பளபளக்கும் காலணிகள்!
ஷூ, செருப்பு முதலான காலணிகளை சோப்பு நீரால் தொட்டு பிரஷால் தேய்த்து துடைத்தால் அழுக்குகள் நீங்கி பளிச்சென ஆகிவிடும். நன்கு சுத்தம் செய்த பின் ஷூ பாலிஷ் போடும் போது ஷூக்கள் பளபளக்கும்.

 

பிரஷ்

5. புருவம், மீசை அழகாக!
என்னதான் புருவம், மீசை இவற்றை நேர்த்தியாக வைத்திருந்தாலும் அவற்றை பிரஷ் செய்ய தவறிவிடுகிறோம். தவறாமல் சுத்தமான பிரஷால் அவற்றை சரி செய்யும் போது புருவம், மீசை அழகாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.

6. நகங்களை சுத்தமாக்க!
நக இடுக்குகளில் இருக்கும் அழுக்கின் மூலமாக நோய்த் தொற்று ஏற்படலாம். அதனால் நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். வெதுவெதுப்பான நீரில் நகங்களை சிறிது நேரம் வைத்து பின்னர் பிரஷால் மெதுவாக நக இடுக்குகளில் சுத்தம் செய்ய நகங்கள் பளிச்சென அழகாகும்.

7. ஹேர் டை அப்ளை செய்ய!
தலைமுடிக்கு ஹேர் டை அப்ளை செய்ய பிரஷை பயன்படுத்தும்போது சீராக தலைமுடியில் பரவுவதுடன் கைகளில் கறை ஏற்படாமல் தடுக்கும். ஆதலால், ஹேர் டைக்கு இதுவே பெஸ்ட் சாய்ஸ்.

8. வாகன இடுக்குகள் சுத்தமாக்க!
டூவீலர் மற்றும் கார்களில் கைகள் நுழையாத பகுதிகளில் பிரஷை விட்டு சுத்தம் செய்யலாம். செயினுக்கு எண்ணெய் போடுவதென்றால் பிரஷ் சீராக தடவ உதவும். கார் டேஷ் போர்டுகளில் உள்ள குறுகலான பகுதிகளியும் சுத்தம் செய்யலாம்.

9. கேஸ் அடுப்பு, சிம்னி, மைக்ரோவேவ் சுத்தம் செய்ய!
எண்ணெய் பசை படித்த கேஸ் ஸ்டவ் பர்னர்கள், சிம்னி இவற்றை சுத்தம் செய்ய பிரஷை  பயன்படுத்தலாம். சமையல் சோடா, சோப்பு பவுடர் இரண்டையும் கலந்து வெந்நீரில் நனைத்த பிரஷால் தொட்டு தேய்க்க, எண்ணெய் பசை கொண்ட பகுதிகள் பளிச்சென காணாமல் போய்விடும்.

10. பெயிண்டிங் பண்ணலாம்!
சில இடங்களில் திக்கான டீட்டெயிலிங் தேவைப்படும் இடங்களில் பிரஷில் தொட்டு பெயிண்ட் செய்யும் போது ஓவியம் வித்தியாசமாகவும், விரைவாகவும் முடிந்துவிடும். பேஸ்ட்  பயன்படுத்தி வரையும் போது மீண்டும் பிரஷை பயன்படுத்த வேண்டாம் என்று நினைக்கும் போது பழைய பிரஷ்கள் கைகொடுக்கும்.

11.சீப்பை சுத்தமாக்க!
அடிக்கடி அழுக்காகும் ஒரு பொருள் சீப்பு. அதை சுத்தம் செய்வதற்குள் படாத பாடுபடுவோம். சூடான நீரில் சோப்பு பவுடரை கலந்து அதில் சீப்பை மூழ்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து பிரஷால் சீப்புகளின் இடுக்கில் வைத்து தேய்க்க சீப்பு புதிது போலாகிவிடும்.

12. டைல்ஸ் இடுக்குகளில் அழுக்கு போக!
இரண்டு டைல்ஸ்கள் ஒன்று சேரும் இடத்தில் அழுக்குகள் கோடு போல காட்சித் தரும். என்ன தான் மாப் போட்டுத் துடைத்தாலும் அழுக்குகள் போகாது. அதனால் டைல்ஸ் சுத்தம் செய்யும் ஆசிட்டை பிரஷால் தொட்டு இடுக்கில் தேய்த்து துடைத்தால் தரை புத்தம் புதிதாய் ஜொலிக்கும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கறுப்புடா!

 

105p11.jpg

நாட்டுக் கோழி, பிராய்லர் கோழி, வடிவேலு சொல்லும் போண்டாக் கோழி வரை அனைத்தையும் ஒரு கை பார்த்திருக்கிறோம். கறுப்புக் கோழி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா பாஸ்? நம் ஊர் கலர் சாயத்தில் முக்கியெடுத்துக் கொஞ்சநாள் கழித்து பல்லிளிக்கும் டுபாக்கூர் கோழி அல்ல. நிஜமாகவே இது கரு கரு கருப்பாயிதான்.

Ayam cemani என்ற இந்த வகைக் கோழிகளுக்கு இந்தோனேஷியாதான் பூர்வீகம். இதன் ஜீனில் உள்ள நிறக்குறைபாடு காரணமாக இந்தக் கோழி இனமே அட்டைக் கறுப்பு கலரில்தான் பிறக்கிறது. கோழிகளின் கறியும் கறுப்புதான். இந்த ஸ்பெஷல் கலர் காரணமாகவே இவற்றை மதச் சடங்குகளில் பயன்படுத்துகிறார்கள் இந்தோனேஷிய மக்கள்.

105p21.jpg

இந்தோனேஷியாவில் இருந்து மெள்ள மெள்ள நெதர்லாந்து, ஜெர்மனி, செக் குடியரசு எனப் பல நாடுகளுக்குப் பரவியது இந்தக் கோழியினம். உலகம் முழுவதும் வித்தியாசமான உயிரினங்களை வளர்ப்பதற்காகவே ஒரு பணக்காரக் கூட்டம் உண்டு. அவர்களின் லிஸ்ட்டில் இந்தக் கோழிக்கு முதல் இடம் என்பதால் சும்மா எல்லாம் இந்தக் கோழியை நீங்கள் வாங்கிவிட முடியாது. பிறந்து சிலமணி நேரமேயான இந்த வகை கோழிக்குஞ்சுக்கு இருபதாயிரம் தொடங்கி லட்சக்கணக்கில் விலை நிர்ணயிக்கிறார்கள் கள்ளச்சந்தை வி.ஐ.பி-க்கள்.

  • தொடங்கியவர்

பழங்களை இனி ஸ்கேன் செய்து பார்த்து வாங்கலாம்: புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது!


பழங்களை இனி ஸ்கேன் செய்து பார்த்து வாங்கலாம்: புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது!
 

ஏதேனும் பழ வகைகளை இனி சாப்பிடும் முன் அதனுள் புழு அல்லது பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஸ்மார்ட்போன் கொண்டு நேரடியாகப் பார்க்க முடியும்.

ஃபிரான்ஹோஃபர் ஃபேக்ட்ரி ஆப்பரேஷன் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் ஹாக்ஸ்பெக்ஸ் மொபைல் (HawkSpex mobile) எனும் செயலியை உருவாக்கியுள்ளனர்.

இந்த செயலி பொருட்களை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்து அதனுள் இருப்பதைக் கண்டறிய வழி செய்கிறது.

உதாரணமாக, அப்பிள் ஒன்றை ஸ்கேன் செய்ய வேண்டுமெனில் ஹாக்ஸ்பெக்ஸ் செயலியை ஸ்மார்ட்போனில் ஓபன் செய்து பழத்தை ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்டதும் அப்பிள் பழத்தில் இருக்கும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் மற்றும் அதன் உறுப்புக்கள் ஸ்மார்ட்போன் திரையில் தெரியும்.

சந்தையில் ஏற்கனவே பல்வேறு ஸ்கேனிங் சாதனங்கள் இருந்தாலும் இவை ஸ்மார்ட்போனில் கூடுதலாக பிரிசம் ஒன்றை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே வேலை செய்யும். ஆனால் இந்த செயலி இருந்தாலே போதுமானது, இத்துடன் ஸ்மார்ட்போன் கேமரா மட்டும் கொண்டு ஸ்கேன் செய்யலாம்.

இந்த செயலியைக் கொண்டு உணவு வகைகளின் தரம் மற்றும் விவசாயம் சார்ந்த பயன்பாடுகளைப் பெற முடியும்.

இந்த செயலி வணிகப் பயன்பாட்டிற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://newsfirst.lk

 

  • தொடங்கியவர்
உலகில் மிக நீளமான வாலையுடைய நாய்
 

article_1485499478-13.jpg

உலகில் மிக நீளமான வாலையுடைய நாயென்ற பெயரை, “கியோன்”  என்றழைக்கப்படும் ஐரிஸ் வுல்பவுன்ட் வர்க்க நாய் பெற்றுக்கொண்டுள்ளது.

இதற்கான கின்னஸ் சான்றிதழையும், கியோன் தன்வசப்படுத்தியுள்ளது.

பெல்ஜியம், வெஸ்டெர்லோ மாகாணத்தில் வசித்து வரும் குடும்பமொன்று, ஐரிஸ் வுல்பவுன்ட் வர்க்க நாயொன்றை வளர்த்து வருவதுடன், அதற்கு கியோன் என்றும் பெயரிட்டுள்ளனர்.

ஐரிஸ் வுல்பவுன்ட் வர்க்க நாய்களின் வால் எப்போதும் நீளமாகக்  காணப்படும். ஆனால், கியோனின் வாலானது, அதன் வர்க்க  நாய்களுடன் ஒப்பிடும்போது, மிக நீளமாகக் காணப்படுவதாக கியோனின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கியோனின் வாலின் நீளம், 76.8 சென்றி மீற்றர் என அளவிடப்பட்டுள்ளது. இத்தகைய நீளமான வாலையுடை கியோன், முந்தைய சாதனையையும் முறியடித்துள்ளது.  

இதற்கு முன்பு சாதனை நிகழ்த்திய நாயின் வாலைவிட,  கியோனின் வால் 4.5 சென்றி மீற்றர் நீளமுடையது என, கின்னஸ் சாதனை நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

article_1485499491-12.jpg

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தாய் கைவிட்டுச்சென்ற குழந்தையின் உயிரை காப்பாற்றிய நாய்..!

 

தாயினால் கைவிடப்பட்டு சென்ற 2 வயது சிறுவனின் உயிரை, கடும் பனிப்பொழிவு நிறைந்த குளிரிலிருந்து, நாயொன்று இரண்டு நாட்களாக காப்பாற்றிய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

image_1486743429_94042397.jpg

ரஷ்யாவின் ஹலடாய் பகுதியில் உள்ள கிராமத்தில், தயொருவர் தனது இரண்டு வயது மகனை கடும் பனிப்பொழிவு மிகுந்த காலநிலையில், உணவேதும் இல்லாதவாறு விட்டுச் சென்றுள்ளார்.

3D0DD08000000578-4212316-image-a-3_14867

குளிர் காக்கும் உடைகள் எதுவும் அணியப்படாத சிறுவன், குளிரில் கடுமையாக பாதிக்கப்பட்டவே, சேவியர் என்ற பெயருடைய நாய், குறித்த சிறுவனை தனது உடல் வெப்பத்தால், இரண்டு நாட்கள் பாதுகாத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

3D0DD07A00000578-4212316-image-a-2_14867

இந்நிலையில் அயலவர்கள், சிறுவன் உணவில்லாமல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்து சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர். 

குறித்த சிறுவனின் தாய், நான்கு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த நிலையில், பொலிஸார் குழந்தையை பராமரிக்காத குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

தமிழக அரசியல் நிலை: கொந்தளிப்பிலும் குதூகலிக்கும் மீம்கள்

 
 

அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி காரணமாக தமிழகம் பரபரப்பாக இருக்கும் சூழலில், இதனை நையாண்டி செய்து இணையத்தில் மீம்கள் பல பரவி வருகின்றன. அதில் சிலவற்றை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.

 

மீம் தொகுப்பு

மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைCHENNAI MEMES மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைKUMARAN

 

மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைTROLL MAFIA மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைTROLL MAFIA

 

மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைEIPM மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைEIPM

 

மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைEIPM மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைVIRAT

 

மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைTAMIL MEME மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைMANIMARAN

 

மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைTWITTER மீம் தொகுப்புபடத்தின் காப்புரிமைBIOSCOPE

 

http://www.bbc.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.